அத்தியாயம் – 19
அசுரனாகிய ஹிரண்யாட்சனைக் கொல்லுதல்
பதம் 3.19.1 : ஸ்ரீ மைத்ரேயர் கூறினார்: படைப்புக் கடவுளாகிய பிரம்மாவின், பாவ காரணத்திலிருந்து விடுபட்ட, அமிழ்தம் போன்ற இனிமையான வார்த்தைகளைக் கேட்ட பிறகு, பகவான் மனமாறச் சிரித்து, அன்பு நிறைந்த பார்வையுடன் அவரின் வேண்டுதலை ஏற்றுக் கொண்டார்.
பதம் 3.19.2 : பிரம்மாவின் மூக்குத் துளையிலிருந்து பிறந்த பகவான், அவரின் முன்னால் பயமின்றி, வீறாப்பு நடை நடந்த அசுரனாகிய ஹிரண்யாட்சனின் முகவாய்க் கட்டையை நோக்கித் தன் கதாயுதத்தால் குறிவைத்தார்.
பதம் 3.19.3 : அசுரனின் கதையால் தாக்கப்பட்டு, எப்படியோ பகவானின் கையிலிருந்து கதை நழுவிக் கீழே விழுந்தது. சுழன்று கொண்டே அது கீழே விழும்போது மிகவும் ஒளி விட்டுத் திகழ்ந்தது. கதாயுதம் ஒளிவிட்டுப் பிரகாசித்த காட்சி மிகவும் அற்புதமாக இருந்தது.
பதம் 3.19.4 : ஆயுதமின்றி இருந்த தன் எதிரியை, எந்தத் தடங்கலும் இல்லாமல் அடிக்க அசுரனுக்கு மிகச் சிறந்த வாய்ப்பு இருந்த போதிலும், அவன் போரின் விதியை மதித்தான். அதன் மூலம் பகவானின் கோபத்தைக் கிளறினான்.
பதம் 3.19.5 : பகவானின் கதை கீழே பூமியில் விழுந்த போது, அதைப் பார்த்துக் கொண்டிருந்த தேவர்கள், முனிவர்கள் ஆகியோரிடமிருந்து அபாய் அறிவிப்பொலி எழுந்தது. அசுரனின் அன்புடனான நேர்மையை முழுமுதற் கடவுள் ஒப்புக் கொண்டார். அதனால் அவருடைய சுதர்சன் சக்கரத்தை வணங்கி வரவழைத்தார்.
பதம் 3.19.6 : பகவானின் கைகளில் அந்தச் சக்கரம் சுழல ஆரம்பித்த பொழுது, பகவானுக்கு எல்லாத் திசைகளிலும் மனநிறைவு தரும்படியான அவரின் வைகுண்டத் தொண்டர்களின் தலைவன், ஹிரண்யாட்சனாகப் பிறந்தவன். திதியின் இழிந்த மகனுடன் அவர் நெருங்கிப் போரிடும் போது எல்லாத் திசைகளிலிருந்தும், விநோதமான உணர்ச்சிகள் வானூர்தியிலிருந்து பார்த்தவர்களிடமிருந்து வெளிப்படுத்தப்பட்டன. அவர்களுக்கு பகவானின் மெய்மையைப் பற்றி எந்தச் சிந்தனையும் இருக்கவில்லை. “உங்களுக்கு வெற்றி உண்டாகட்டும்; அவனை விரைவாக ஒழித்து விடும்படி வேண்டுகிறோம். அவனுடன் மேலும் விளையாட வேண்டாம்” என்று கூறினார்கள்.
பதம் 3.19.7 : தாமரை இதழ்கள் போன்ற கண்களையும், சுதர்சன சக்கரத்தை ஆயுதமாகவும் கொண்டு, பரமபுருஷ பகவான் தனக்கு முன்னால் நிலையாக நின்று கொண்டிருப்பதைக் கண்டபொழுது, அசுரனுடைய புலன்கள் கடுஞ்சினத்தால் பொங்கின. அவன் மிகுந்த சீற்றத்துடன் தன் உதட்டைக் கடித்துக் கொண்டு, பாம்பு போல் பிறத் தொடங்கினான்.
பதம் 3.19.8 : அச்சந்தரத்தக்க கொம்புகளை உடைய அசுரன், பரமபுருஷ பகவானை கண்களால் எரித்துவிடுவது போல் உற்றுப் பார்த்தான். வானில் பாய்ந்து, தன் கதையைப் பகவானுக்குக் குறிவைத்து, அதே சமயத்தில் “நீ அழிந்தாய்” என்று கூக்குரலிட்டான்.
பதம் 3.19.9 : ஓ. புனித விதுரனே, எதிர் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது, எல்லா வேள்வியின் அவிர்ப்பாகத்தைப் பெறுபவரும், காட்டுப் பன்றி யின் வடிவிலிருந்தவருமாகிய பகவான், விளையாட்டாக, தன் இடது திருவடியால் அந்தக் கதையைக் கீழே தள்ள, அது சூறாவளியின் வேகத்துடன் அவனை நோக்கி வந்தது.
பதம் 3.19.10 : பகவான் பின்னர் கூறினார்: “என்னை வெற்றி கொள்ள நீ ஆர்வத்துடன் இருப்பதால், உன் ஆயுதத்தை எடுத்துக் கொண்டு, மீண்டும் முயற்சி செய்”. இந்தச் சொற்களால் அறைகூவல் விடப்பட்ட அசுரன் தன் கதையை பகவானுக்குக் குறிபார்த்து எய்யும் போது மீண்டும் ஒருமுறை பலமாகக் கர்ஜித்தான்.
பதம் 3.19.11 : கதை தன்னை நோக்கிப் பறந்து வருவதைக் கண்டதும், தான் நின்ற இடத்திலேயே பகவான் உறுதியாக நின்று, பறவைகளின் அரசனான கருடன், பாம்பைப் பிடிப்பது போல, அந்தக் கதையை எளிதாகப் பிடித்தார்.
பதம் 3.19.12 : அவன் வீரம் இவ்வாறு அழிந்து, அசுரனின் செருக்கு குலைந்து, அவன் முகம் வெளிறினான். பரமபுருஷ கவான் கதையைக் கொடுத்த பொழுது, அவன் அதனைத் திருப்பி எடுத்துக் கொள்ள விரும்பவில்லை.
பதம் 3.19.13 : அவன் இப்போது நெருப்பு போல் ஒளிவிட்டுத் திகழும் ஒரு குலாயுதத்தை எடுத்துக் கொண்டு, எல்லா வேள்விகளையும் அனுபவிப் பவராகிய பகவானுக்கு எதிராகச் சுழற்றி எறிந்தான். அது எப்படி இருந்ததென்றால், தவத்தையும் தீய நோக்கோடு ஒரு பிராமணனுக்கு எதிராக உபயோகிப்பவனின் செயலைப் போன்றிருந்தது.
பதம் 3.19.14 : வலிமை மிக்க அகரனால், பலத்துடன் சுழற்றி விடப்பட்ட சூலாயுதம், பறந்த வானின் ஒளி வீசித் திகழ்ந்தது. ஆயினும், ஒரு சமயம் இந்திரன் கருடனின் இறகை வெட்டியது போல, கூர்மையான முனையுடைய விளிம்பைக் கொண்ட தன்னுடைய சுதர்ஸன சக்கரத்தால் பகவான் அந்தச் சூலாயுதத்தைத் துண்டுகளாக ஆக்கினார்.
பதம் 3.19.15 : பகவானின் சக்கரத்தால் தன்னுடைய சூலாயுதம் பொடியாகிப் போனதைக் கண்டு, அசுரன் சீற்றமடைந்தான். அதனால், அவன், பகவானை நோக்கி முன்னேறி, சத்தமாக கர்ஜித்துக் கொண்டு, ஸ்ரீவத்ஸம் என்ற மச்சத்தைத் தாங்கிய பகவானின் அகன்ற மார்பில் தன் கடினமான கை முஷ்டியால் அடித்தான். பின்னர் அவன் பார்வையிலிருந்து மறைந்தான்.
பதம் 3.19.16 : ஓ விதுரனே, முதல் காட்டுப் பன்றியாகத் தோன்றிய பகவான், அசுரனால் இந்த முறையில் அடிக்கப்பட்டும். யானை பூ மாலைகளால் தாக்கப்பட்டதைப் போல, தன் உடம்பில் எங்கும் சிறிது கூட எந்தவித அதிர்ச்சியையும் அவர் உணரவில்லை.
பதம் 3.19.17 : அசுரன், யோகமாயாவின் தலைவராகிய பரமபுருஷ பகவானுக்கு எதிராக, பல மாய வித்தைகளை ஏவினான். இதைப் பார்த்தவுடன், மக்கள் பயத்திற்கு ஆளாகி, இந்த அண்டத்தின் முடிவு காலம் நெருங்கி விட்டது என்று நினைத்தார்கள்.
பதம் 3.19.18 : எல்லாத் திசைகளிலிருந்தும் அச்சம் விளைவிக்கக் கூடிய காற்று வீச ஆரம்பித்தது, தூசியையும் புயலையும் வாய்ப்பாகக் கொண்டு இருளைப் பரப்பியது. எல்லா மூலைகளிலிருந்தும், இயந்திரத் துப்பாக்கிகளால் தூக்கி எறியப்பட்டது போல, கற்கள் தூக்கியெறியப்பட்டன.
பதம் 3.19.19 : விண்வெளியில் மேகக் கூட்டங்கள் இருளுடன் மிக அதிகமாகக் காணப்பட்டன. உடன் மின்னலும் இடியும் சேர்ந்து வந்ததால் வானின் கண் உள்ள ஒளிப்பிழம்புகள் எல்லாம் மறைந்தன. வானிலிருந்து சீழ், முடி, குருதி, மலம், சிறுநீர் மற்றும் எலும்புகள் மழையாகப் பெய்தன.
பதம் 3.19.20 : ஓ பாவம் இழைக்காத விதுரனே, மலைகள் பலப்பல ஆயுதங்களை வெளியேற்றின. மற்றும், தலை முடியைத் தளரத் தொங்கவிட்டுக் கொண்டு, சூலாயுதங்களை ஏந்திக் கொண்டு நிர்வாணப் பெண் பேய்கள் தோன்றின.
பதம் 3.19.21 : கொடிய, நாகரிகமற்ற வார்த்தைகள், முரட்டுத்தனமான யக்ஷ, ராக்ஷஸக் கூட்டங்களால் கூறப்பட்டன. அவர்கள் கால்நடையாகவோ, குதிரைகள், யானைகள் அல்லது தேர்களின் மீதோ அணிவகுத்துச் சென்றார்கள்.
பதம் 3.19.22 : வேள்விகளால் தனிப்பட்ட முறையில் மகிழ்பவராகிய பகவான், அசுரனால் வெளியிடப்பட்ட மந்திர சக்திகளைச் சிதறடிக்கும் வல்லமை வாய்ந்த, தன் அன்பிற்குரிய சுதர்சனச் சக்கரத்தை ஏவினார்.
பதம் 3.19.23 : அந்த நேரத்தில் ஹிரண்யாக்ஷனின் அன்னை திதியின் இதயத்தில் திடீரென்று ஒரு நடுக்கம் பரவியது. அவள் தன் கணவர் காஸ்யபரின் சொற்களை நினைவு கூர்ந்தாள். அவல் மார்புகளிலிருந்து இரத்தம் வழிந்தது.
பதம் 3.19.24 : அசுரன், அவனுடைய மந்திர சக்திகள் எல்லாம் சிதறடிக்கப் பட்டதைப் பார்த்தபொழுது, அவன் மீண்டும் கேசவனாகிய பரமபுருஷ பகவானுக்கு, முன்னால் வந்தான், மிகுந்த கோபத்துடன், பகவானைத் தன் கரங்களுக்குள் அனைத்து, அவரை நெருக்கிக் கொல்ல முயற்சித்தான். ஆனால் அவன் வியப்பு அடையும்படி பகவான் அவன் கைகள் ஏற்படுத்திய வட்டத்துக்கு வெளியில் நின்று கொண்டிருப்பதைக் கண்டான்.
பதம் 3.19.25 : அசுரன் இப்பொழுது தன்னுடைய கடினமான முஷ்டியால் பசுவா னைத் தாக்க ஆரம்பித்தான். ஆனால் பகவான் அதோக்ஷஜர், மருதத்தின் பிரபுவாகிய இந்திரன், அசுரனாகிய உருத்திரனை அடித்தது போல, அவன் காதின் வேர்ப்பகுதியில் அறைந்தார்.
பதம் 3.19.26 : எல்லாவற்றையும் வெல்பவராகிய பகவானால் மோசமாகத் தாக்கப் பட்ட அசுரனின் உடல் உருளத் தொடங்கியது. அவனுடைய விழிகள், விழிப் பள்ளத்திலிருந்து பிதுங்கி வெளியில் வந்தன. அவன் கைகளும் கால்களும் முறிந்தன. அவன் தலைமுடி சிதறியது. ஒரு பெரிய மரம் காற்றால் வேருடன் விழுவதைப் போல, அவன் கீழே விழுந்து இறந்தான்.
பதம் 3.19.27 : உதட்டைப் பற்களால் கடித்துக் கொண்டு, அச்சம் தரத்தக்க கொம்புகளையுடைய அசுரன் பூமியில் விழுந்து கிடப்பதைக் காண அஜனும் (பிரம்மாவும்,) பிறரும் அந்த இடத்திற்கு வந்து சேர்ந்தார்கள். அவனுடைய முகத்தில் இருந்த ஒளி மங்கவில்லை. பிரம்மா வியந்து பாராட்டிக் கூறினார். “ஓ. அருள்தன்மை பெற்ற இத்தகைய மரணத்தை யாரால் பெற முடியும்?”
பதம் 3.19.28 : பிரம்மா தொடர்ந்தார்: பொய்யான ஜடவுலக உடல்களிலிருந்து விடுதலையை விரும்பி, தனியிடத்தில் அமர்ந்து அறிவு சார்ந்த மெய் மறந்த நிலையில் யோகிகள் பகவானைத் தியானிப்பர். அந்தப் பசுவானுடைய பாதத்தின் முன்புறத்தால் அசுரன் தாக்கப்பட்டான். பகவானது முகபாவத்தை உற்று பார்த்த நிலையிலேயே, திதியின் தலை சிறந்த பிள்ளையாகிய இவன் மனித வாழ்க்கையாகிய புயலில் இருந்து தூக்கியெறியப்பட்டான்.
பதம் 3.19.29 : பகவானின் இந்த இரண்டு அந்தரங்கப் பணியாளர்களும் அவரால் சபிக்கப்பட்ட பின் அசுர குலத்தில் பிறக்க வேண்டும் என்று விதிக்கப் பட்டவர்கள். அது மாதிரி, சில பிறவிகள் எடுத்தபின், அவர்கள் தங்களின் சொந்த நிலைக்குத் திரும்புவர்.
பதம் 3.19.30 : தேவர்கள் பகவானை அழைத்தார்கள். எல்லா வணக்கங்களும் உங்களுக்கு உரித்தாகுக. நீங்கள் எல்லா வேள்விகளையும் அனுபவித்து மகிழ்பவர். நீங்கள் இந்த உலகைப் பாதுகாக்க வேண்டும் என்ற தூய்மையான எண்ணத்தின் காரணமாக காட்டுப் பன்றியின் வடி வத்தை ஏற்றுக் கொண்டீர்கள். அதிர்ஷ்டவசமாக, உலகங்களுக்குத் தொல்லையாக இருந்த இந்த அசுரன் உங்களால் கொல்லப்பட்டான். நாங்களும், பகவானே, உங்கள் தாமரைப் பாதங்களில் வழிபாடு செய்து கொண்டு, தொல்லையின்றி இருக்கிறோம்.
பதம் 3.19.31 : ஸ்ரீ மைத்ரேயர் தொடர்ந்தார் அச்சம் தரும் தோற்றமுடைய அசுரனாகிய ஹிரண்யாட்சனைக் கொன்ற பிறகு, காட்டுப் பன்றி உயிரினத்துக்கு மூலமாகிய பகவான் ஹரி, குறுக்கீடு இல்லாத எப்போதும் விழாக்கள் நடைபெறுகின்ற, தன்னுடைய இருப்பிடம் திரும்பினார். பகவான், பிரம்மாவால் தலைமை தாங்கப்பட்ட எல்லா தேவர்களாலும் போற்றப் பெற்றார்.
பதம் 3.19.32 : மைத்ரேயர் தொடர்ந்தார்: என் அன்பான விதுரனே, பரமபுருஷ பகவான் முதலில் காட்டுப் பன்றி அவதாரமாக இறங்கி வந்து, ஈடு இணையற்ற வல்லமை பெற்ற அசுரனை, ஒரு விளையாட்டுப் பொருள் போலக் கருதிக் கொன்றார் என்பதை நான் உனக்கு விளக்கினேன். நான் என் முன்னோரான ஆன்மீக குருவிடமிருந்து கேட்ட வண்ணமே, இது என்னால் வர்ணிக்கப்பட்டுள்ளது.
பதம் 3.19.33 : ஸ்ரீ சூத கோஸ்வாமி தொடர்ந்தார்: என் அன்பான பிராமணனே, பகவானின் சிறந்த பக்தன் ஆகிய விதுரன் பரமபுருஷ பகவானின் பொழுதுபோக்கு (விளையாட்டு) பற்றிய வருணனையைக் கேட்டதால் உன்னதமான இன்பத்தை அடைத்தார். இதை முனிவர் கௌஷரவரின் (மைத்ரேயர்) ஆதாரபூர்வமான செய்திகளிலிருந்து கேட்டு, மகிழ்ச்சி அடைந்தார்.
பதம் 3.19.34 : ஸ்ரீவத்ஸம் என்ற மச்சம் கொண்ட மார்புடைய பகவானின் விளையாடலைக் கேட்பதைப் பற்றி என்ன பேசுவது என்றும் இறவாத புகழுடைய பக்தர்களின் செயல்கள் பற்றிக் கேட்டாலும் கூட, மக்கள் உன்னத இன்பம் பெறுவார்கள்.
பதம் 3.19.35 : பரமபுருஷ பகவான், யானைகளின் அரசன் ஆகிய கஜேந்திரன் முதலையால் தாக்கப்பட்டபோது, பகவானின் தாரமை போன்ற திருவடிகளைத் தியானம் செய்ய அந்த யானையை அதிலிருந்து இறைவன் விடுவித்தார். அந்த நேரத்தில் அந்த யானையுடன் வந்த பெண் யானைகள் அழுதன. பகவான் அவற்றுக்கு, வர இருந்த ஆபத்திலிருந்தும் காப்பாற்றினார்.
பதம் 3.19.36 : சிறந்த குருவாகிய பரமபுருஷ பகவானுக்குத் தன் தொண்டினைச் செய்யாத நன்றியுள்ள ஆத்மா இவ்வுலகில் இருக்கிறதா? பாதுகாப் பிற்காக, தனிப்பட்ட முறையில் பசுவானைச் சரணம் அடையும் குறை யில்லாத பக்தர்களால் பகவானை எளிதாக மகிழச் செய்ய இயலும். ஆயினும் நேர்மையற்ற மனிதனால் இறைவனின் சினத்தைத் தணிவித்தல் மிகவும் கடினமாகும்.
பதம் 3.19.37 : ஓ பிராமணர்களே, முதன் முதலாக பகவான் காட்டுப் பன்றியின் வடிவத்தில் தோன்றி உலகை விடுவித்ததற்காக, அசுரனாகிய ஹிரண்யாக்ஷனைக் கொன்ற அற்புதமான வர்ணனையைக் கேட்பவர், சொல்பவர் அல்லது இன்பம் அடைபவர், யாவரோ அவர்கள் ஒரு பிராமணனைக் கொன்றிருந்தாலும் கூட, உடனே பாவச் செயல்களின் முடிவிலிருந்து விடுபடுவார்கள்.
பதம் 3.19.38 : இந்த மிகவும் புனிதமான காதை அதீதமான நன்மை, செல்வம், புகழ், நீண்ட ஆயுள் மற்றும் ஒருவர் விரும்பும் எல்லாப் பொருள்களையும் அள்ளித் தருகிறது. போர்க்களத்தில், இது ஒருவனின் உயிர்நிலையான புலன்களின் பலத்தையும், அவற்றின் செயலையும் அதிகரிக்கிறது. ஓ அன்பான ஸெளனகரே, வாழ்வின் மரணத் தறுவாயில் இருக்கும் ஒருவர் இதைக் கேட்டால், அவர் பகவானின் உயர்ந்த இருப்பிடத்திற்குக் கொண்டு செல்லப்படுவார்.