அத்தியாயம் – 18
வராக பகவானுக்கும்
அசுரனான ஹிரண்யாட்சனுக்கும் இடையை போர்
பதம் 3.18.1
மைத்ரேய உவாச
ததே வ மாகர்ண்ய ஜலேஷா- பாஷிதம்
மஹா- மனாஸ் தத் விகணய்ய துர்மத:
ஹரேர் விதித்வா கதிம் அங்க நாரதாத்
ரஸாதலம் நிர்விவிஷே த்வராந்வித:

மைத்ரேய- மாமுனிவர் மைத்ரேயர்; உவாச- கூறினார்; தத்- அந்த; ஏவம்-இவ்வண்ணம்; ஆகர்ண்டி-கேட்ட; ஜலேஈஷாட—நீர் மண்டலத்தைக் கட்டுப்படுத்துபவர், வருணன்; பாஷிதம்-சொற்கள்; மஹாமனா—செருக்கு; தத்-அந்தச் சொற்கள்; விகண்ய்ய—சிறிதளவே கவனம் செலுத்தப்பட்டமையின்; துர்மத—பொய்யான புகழுடைய; ஹரே- பரமபுருஷ பகவானின்; விதித்வா – கற்றுக்கொண்டு; கதிம்- இருக்குமிடத்தை; அங்க – ஓ அன்பான விதுரனே; நாரதாத்- நாரதரிடமிருந்து; ரஸாதலம்-கடலின் ஆழத்திற்கு; நிர்விவிஷே- நுழைந்து; த்வராந்தவித-மிகுந்த வேகத்துடன்.

மைத்ரேயர் தொடர்ந்தார்: பொய்யான புகழும், செருக்கும் உடைய தைத்யன் வருணனின் சொற்களில் சிறிதளவே கவனம் செலுத்தினான். ஓ! அன்பு விதுரனே, அவன் நாரதரிடமிருந்து பரமபுருஷ பகவானின் இருப்பிடத்தை அறிந்து கொண்டு, கடலின் ஆழத்தை வெகு விரைவாக அணுகினான்.

பதம் 3.18.2
ததர்ஷா தத்ராபிதிம் தரா-தரம்
ப்ரோந்தியமானாவநிமக்ர- தம்ஷ்ட்ரயா
முஷ்ணந்தம் அக்ஷணா ஸ்வ-ருசோ ருண-ஸ்ரியா
ஜஹாஸ சாஹோ வந-கோசரோ ம்ருக:

ததர்ஷச-அவன் பார்த்தான்; தத்ர:- அங்கு; அபிஜிதம்-வெற்றி நிறைந்த; தரா-பூமி; தரம்- தாங்கி; ப்ரோந்தியமான-மேல் நோக்கி உயர்த்திக் கொண்டு; அவநிம்-பூமி; அக்ர தம்ஷ்ட்ரயா—அவருடைய கொம்பின் நுனியில்; முஷ்ணந்தம்-குறைக்கின்ற; அக்ஷணா—அவர் கண்களுடன்; ஸ்வ ருச- ஹிரண்யாட்சனின் ஒளி; அருண-சிவந்த; ஸ்ரியா- ஒளி மையம்; ஜஹாஸ்—அவன் சிரித்தான்; ச- மற்றும்; அஹோ-ஓ; வந-கோசர:— நிலத்திலும் நீரிலும் வாழ்கிற; மிருக- விலங்கு.

அங்கு, தன் கொம்புகளின் நுனியில் பூமியைத் தாங்கிக்கொண்டு, ஒளிபொருந்திய சிவந்த கண்களுடன் கூடிய பரமபுருஷ பகவானை, அவருடைய வராக அவதாரத்தால் அந்த அசுரன் கண்டான். பின் அசுரன் சிரித்துக்கொண்டே நீரிலும் நிலத்திலும் வாழும் விலங்கு என்றான்.

பதம் 3.18.3
ஆஹைநம் ஏ அஞ்ஞ மஹீம் விமுஞ்சமோ
ரஸௌகஸாம் விஸ்வ-ஸ்ருஜேயம் அர்பிதா
ந ஸ்வஸ்தி யாஸ்யஸ்யநயா மமேக்ஷத:
ஸூராதமாஸாதித -ஸூகராக்ருதே

ஆஹ-ஹிரண்யாட்சன் கூறினான்; ஏனம்-பகவானுக்கு; ஏஹி- வந்து சண்டையிடு; அஞ்ஞ-ஓ முட்டாளே; மஹீம்-பூமி; விமுஞ்ச- கொடுத்தல்; நோ- எங்களுக்கு; ரஸௌகஸாம்—கீழுள்ள நிலப்பரப்பை வாழும் இடமாகக் கொண்டவர்கள்; விஸ்வஸ்ர்ஜா—அண்டத்தைப் படைப்பவரால்; இயம் – இந்தப் பூமி; அர்பிதா—காக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது; ந-இல்லை; ஸ்வஸ்தி- யாஸ்யஸி-நீ போவாய்; அநயா-இதனுடன்; மமேக்ஷத—தான் பார்க்கும்பது; ஸூராதம- தேவர்களில் கீழானவரே; ஆஸாதித – எடுத்தும்; ஸூகராக்குதே- காட்டுப்பன்றி வடிவம்.

அசுரன் பகவானை அழைத்தான்: ஓ தேவர்களில் சிறந்தவரே, காட்டுப்பன்றியின் வடிவத்தில் இருப்பவரே, நான் கூறுவதைக் கேளுங்கள். கீழுலகில் வாழ்பவர்களும் இந்த பூமியும் எங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. நீங்கள் இதை என் முன்னிலையில் இருந்து எடுக்க இயலாது, என்னால் காயம் அடையாதீர்கள்.

பதம் 3.18.4
த்வம் ந: ஸபத்னைரபவாய கிம் ப்ருதோ
யோ மாயயா ஹந்த்யஸூரான் பரோக்ஷஜித்
த்வாம் யோகமாயா- பலமல்ப பௌருஷம்
ஸம்ஸ்தாப்ய மூட ப்ரம்ருஜே ஸூஹ்-ருச்சுக:

த்வம் – நீ; ந – எங்களை; ஸபத்னந – எங்கள் எதிரிகளால்; அபலாய் – கொல்வதற்காக; கிம் – அதுவா; ப்ருத- காத்து வருதல்; ய – அவர் மாயயா- வஞ்சனையால்; ஹந்தி- கொல்லல்; அஸூரான்- அசுரர்கள்; பரோக்ஷஜித் – மறைந்திருந்து கைப்பற்றியவர்; த்வாம் – நீ; யோகமாயாபலம் – யாருடைய வலிமை தடுமாறச் செய்யும் சக்தியோ; அல்பபௌருஷம்-யாருடைய பலம் குறைவானதோ; ஸம்ஸ்தாப்ய- கொன்ற பிறகு; மூட- முட்டாள்; ப்ரம் ருஜே- நான் துடைப்பேன்; ஸூஹ்ருச்சுக—உறவினர்கள் துயரம்.

நீ கயவன், நீ எங்களைக் கொல்வதற்காக, எங்கள் எதிரிகளால் பேணிக் காக்கப்பட்டாய், மற்றும் நீ சில அகரர்களை மறைந்திருந்து கொன்றாய், ஓ முட்டாளே உன் சக்தி எல்லாம் வெறும் மாயம், அதனால் இன்று உன்னைக் கொல்வதன் மூலம் என் உறவினர்களுக்கு வாழ்வு அளிக்கிறேன்.

பதம் 3.18.5
த்வயி ஸம்ஸ்திதே கதயா ஸீர்ண- ஸீர்ஷண்ய
அஸ்மத் -புஜச்யுதயா- யே ச துப்யம்
பலிம் ஹரந்த்யர்ஷயோ யே ச தேவா:
ஸ்வயம் ஸர்வே ந பவிஷ்யந்த்ய மூலா:

த்வயி- நீ; ஸம்ஸ்திதே- கொல்லப்படும் பொழுது; கதயா- கதையினால்; ஸீர்ண —- நொறுங்கி; ஸீர்ஷணி- மண்டை ஓடு: அஸ்மத் புஜ–என் கையிலிருந்து; ச்யுதயா-வெளியேறி; யே—அவர்கள்;ச- மற்றும்; துப்யம்—உங்களுக்கு; பலிம்-காணிக்கைகள்; ஹரத்தி- கொடுத்தல்; ரிஷய-முனிவர்கள்; யே-அவர்கள்; ச – மற்றும்; தேவா- தேவர்கள்; ஸ்வயம்-தானாகவே; ஸர்வே-எல்லா; ந-இல்லை; பவிஷ்யந்தி-வாழும்; அமூலா—வேர்கள் இன்றி.

அசுரன் தொடர்ந்தான்: என் கையினால் சுழற்றி எறியப்பட்ட கதையினால் உன் மண்டையோடு நொறுங்கி, நீ கொல்லப்பட்டு விழும் போது, பக்தியினால் உனக்கு வேள்வியும், நைவேந்யமும் தரும் தேவர்களும், முனிவர்களும், வேரற்ற மரங்கள் போல் தானாகவே வீழ்ந்து விடுவார்கள்.

பதம் 3.18.6
ஸ தும்ய மாறோ ரிதுருத்த- தோமரைர்
தம்ஷ்ட்ராக்ர-காம் காமுபலக்ஷ்ய பீதாம்
தோதம் மிருந்நிரகாத் அம்பு-மத்யாத்
க்ராஹாஹதி: ஸக-ரேணுர்யதே ப:

ஸ- அவர்; துத்யமானா-வேதனைப்பட்டு; அரி-எதிரியால்; துருத்த -தீய வார்த்தைகளால்; தோமரை-ஆயுதங்களால்; தம்ஷ்ட்ராக்ர- அவருடைய கொம்புகளின் முனையில்; காம் – அமைத்துக்கொண்டு; காம்- இந்த பூமி; உபலக்ஷ்ய- பார்த்துக்கொண்டு; பீதாம்- அச்சம் அடைந்து; தோதம்- வலி; ம்ருஷ்ந்- தாங்கிக் கொண்டு; நிரகாத்- அவர் வெளியில் வந்தார்; அம்புமதியாத்- நீரின் நடுவிலிருந்து ; க்ராஹ— முதலையால்; ஆஹத்- தாக்கப்பட்டு; ஸகரேணு-பெண் யானையுடன்; யதா -போல; இபஹ-ஒரு யானை.

அசுரனின் அம்பு போல் தைக்கும் தீய சொற்களால் பகவான் வேதனைப்பட்ட போதிலும், அந்த வேதனையைத் தாங்கிக் கொண்டார். ஆனால் அவருடைய கொம்புகளின் நுனியில் இருந்த பூமி அச்சப் படுவதைக் கண்டு, ஒரு ஆண் யானை, தன் பெண் யானையுடன் ஒரு முதலையால் தாக்கப்படும் பொழுது எவ்வாறு வீறிட்டுக் கொண்டு எழுமோ அதுபோல, அவர் நீரிலிருந்து எழும்பினார்.

பதம் 3.18.7
தம் நிஹஸரந்தம் ஸலிலாதநுத்ருதோ
ஹிரண்ய- கேஸா த்விரதம் யதா ஜஷ:
கராலதம்ஷ்ட்ரோ ஸநி – நிஸ்வநோ ப்ரவீத்
கத – ஹ்ரியாம் கிம் த்வஸ்தாம் விகர்ஹிதம்

தம் – அவரை; நிஹஸரந்தம் – வெளியில் வந்து; ஸலிலாத் – நீரிலிருந்து; அநுத்ருத-துரத்தி; ஹிரண்ய – கேஸா:- தங்க முடி கொண்டு; த்விரதம்—யானை; யதா-போல; ஜஷ-முதலை; கரால தம்ஷ்ட்ரா-பயந்தரத்தக்க பற்கள் கொண்டு; அஸ்நி- நிஸ்வந- இடிபோல் முழங்கி; அப்ரவீத்—அவன் கூறினான்; கதஹ்ரியாம்- வெட்கம் இல்லாதவர்களுக்கு; கிம் – என்ன; து—உண்மையில்; அஸதாம்-ஈனர்களுக்கு; விகர்ஹிதம்-அவதூறு சொல்லல்.

தங்கமயமான முடியைக் கொண்ட தலையும், பயம் தரும் கொம்புகளும் உடைய அகரன், முதலை யானையைத் துரத்துவது போல, நீரிலிருந்து எழும் பகவானைத் துரத்தினான். இடி போல் முழங்கிக் கொண்டு அவன் கூறினான் : அறைகூவல் விடுக்கின்ற எதிரியின் முன்னால் இருந்து ஓட உனக்கு வெட்கமாக இல்லையா? வெட்கமற்ற உயிரினங்களுக்குப் பழி என்று எதுவும் கிடையாது.

பதம் 3.18.8
ஸ காமுதஸ்தாத்ஸலிலஸ்ய கோசரே
விந்யஸ்ய தஸ்யாமததாத் ஸவ – ஸத்வம்
அபிஷ்டுதோ விஸ்வ – ஸ்ருஜா ப்ரஸூநைர்
பூர்யமாணோ விபுதை: பஸ்யதோ ரே:

ஸ – பகவான்; காம்- பூமி; உதஸ்தாத்- மேற்பரப்பில்; ஸலிலஸ்ய- நீரின்; கோசரே-அவரின் பார்வைக்குள்; விந்யஸ்ய-வைத்து; தஸ் யாம்- பூமிக்கு; அததாத்-அணிவித்தார்;ஸ்வ-அவருடைய சொந்த; ஸத்வம்-வாழ்தல்; அபிஷ்டுத-புகழ்ந்து; விஸ்வஸ்ருஜா-பிரம்மா வினால் (அண்டத்தின் படைப்பாளர்); ப்ரஸூநைர்-பூக்களால்; ஆபூர்யமாண — திருப்தியடைந்து; விபுதை—தேவர்களால்; பஸ்யத- பார்க்கும் போது; அரே-எதிரி.

பகவான், பூமியை, நீரின் மேற்பரப்பில் தன்னுடைய பார்வைக்குள் வைத்து தன்னுடைய சக்தியை, நீரின் மேல் மிதக்கும் சக்தியாக மாற்றி அவளுக்கு அதைக் கொடுத்தார். எதிரி பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது, அண்டத்தைப் படைப்பவராகிய பிரம்மா, பகவானைப் போற்றினார். மற்ற தேவர்கள் அவர்மீது பூமாரி பொழிந்தார்கள்.

பதம் 3.18.9
பராநுஷக்தம் த பநீயோபகல்பம்
மஹா – கதம் காஞ்சன – சித்ர – தம்ஸம்
மர்மாண்ய பீக்ஷ்ணம் ப்ரதுதந்தம் துருக்தை:
ப்ரசண்ட – மந்யு: ப்ரஹஸம்ஸ்தம் பபாஷே

பரா—பின்னாலிருந்து; அநுஷக்தம்- மிகவும் நெருக்கமாகப் பின் பற்றிய ; தபநீய உபகல்பம் -மிகுதியான தங்க நகைகளை ]jkஉடைய; மஹா கதம்- சிறந்த கதையினால்; காஞ்சன—தங்க மயமான; சித்ர-அழகிய; தம்ஸம்- போர்க்கவசம்; மர்மாணி-மனத்தினுள்; அபீக்ஷ்ணம் — தொடர்ந்து; ப்ரதுதந்தம்—துளைக்கும்; துருக்தை:- தீய சொற்களால்; ப்ரசண்ட-பயங்கரமான; மந்யு-கோபம்; ப்ரஹஸந்-சிரித்து; தம்- அவனிடம்; பபாஷே—அவர் கூறினார்.

உடலில் நகைகளும், வளைகளும், அழகிய தங்கத்தாலான போர்க்கவசமும் தரித்த அசுரன் பகவானை, சிறந்த கதையுடன் பின்னாலிருந்து துரத்தினான். பகவான், அவனுடைய துளைக்கும் தீயசொற்களைப் பொறுத்துக் கொண்டார். ஆயினும் அவனுக்குப் பதில் கூற, அவருடைய பயங்கரமான கோபத்தை வெளிப்படுத்தினார்.

பதம் 3.18.10
ஸ்ரீ-பகவானுவாச
ஸத்யம் வயம் போ வன – கோசரா ம்ருகா
யுஷ்மத் – விதான் ம்ருகயே க்ராம ஸிம்ஹான்
ந ம்ருத்யு – பானஸ: ப்ரதிமுக்த்தஸ்ய வீரா
விகத்தனம் தவ க்ருஹ்நந்தி அபத்ர

ஸ்ரீ பகவான் உவாச-பரமபுருஷ பகவான் கூறுகிறார்; ஸத்யம்- உண்மை; வயம்—நாக்ஙள்; போஒ; வனகோசர—காட்டில் குடியிருக்கும்; ம்ருகா—உயிரினங்கள்; யுஷ்மத் விதான் -உன்னைப் போல்; ம்ருகயே – கொல்ல நான் தேடுகிறேன்; க்ராம் ஹிம்ஹான்- நாங்கள்; ந-இல்லை; ம்ருத்யு பான்ஸ -மரணத்தின் பிடிப்பினால்; ப்ரதிமுகத்தஸ்ய – பிடிக்கப்பட்டவர்; வீரா-நாயகர்கள்; விகத்தனம் – வம்பு பேசுதல்; தவ- உன்னுடைய; க்ருஹ்நந்தி- தகவல் எடுத்துக்கொண்டு; அபத்ர ஓ- கேலி செய்பவனே.

பரமபுருஷ பகவான் கூறினார் உண்மையில், நாங்கள் காட்டில் குடியிருக்கும் உயிரினங்கள், உங்களைப் போல நாங்கள் நாய்களை வேட்டையாடுவதற்காகத் தேடிக் கொண்டிருக்கிறோம். மரணத்தின் பிடியிலிருந்து விடுதலை பெற்றவர் நீங்கள் ஈடுபட்டிருக்கும் வம்புப் பேச்சைக் கேட்டு அஞ்சமாட்டார். ஏனெனில் நீங்கள் மரண விதியினால் கட்டுண்டு இருக்கிறீர்கள்.

பதம் 3.18.11
ஏதே வயம் ந்யாஸ் – ஹரா ரஸௌகஸாம்
கத-ஹ்ரியோ கதயா த்ராவிதாஸ்தே
திஷ்டாமஹே தாபி கதஞ்சிதாஜௌ
ஸ்தேயம் கவ யாமோ பலிநோத்பாத்ய வைரம்

ஏதே- நாங்களே; வயம்- நாங்கள்; ந்யாஸ—பொறுப்பு; ஹரா- திருடர்கள்; ரஸௌகஸாம் -ரஸா தலத்தில் குடியிருப்பவர்கள்; கத-ஹ்ரிய-வெட்கமற்ற; கதயா- கதையினால்; த்ராவிதா- பின்தொடர்ந்து; தே-உன்னுடைய; திஷ்டாமஹே-நாங்கள் தங்கு வோம்; அதாபி-எனினும்; சுதஞ்சித்- எப்படியாவது; ஆஜௌ- போர்க்களத்தில்; ஸ்தேயம்-நாங்கள் அவசியம் தங்கவேண்டும்; க்வ -எங்கு; யாம-நாங்கள் போகலாமா; பலிநா – பலம் வாய்ந்த எதிரியுடன்; உத்பாத்ய—படைக்கப்பட்டு; வைரம்- பகை.

உறுதியாக நாங்கள் ரஸா தலத்தில் வாழ்பவர்களின் பாதுகாப்பைத் திருடி விட்டோம். மற்றும் வெட்கமெல்லாம் இழந்து விட்டோம். உன்னுடைய பலம் பொருந்திய கதாயுதத்தினால் தாக்கப்பட்டாலும் கூட, நான் சிறிது நேரம் இந்த நீரிலேயே தங்குவேன், ஏனென்றால், சக்தி வாய்ந்த எதிரியுடன் பகைமை உருவாக்கின பின்பு, எனக்குச் செல்ல வேறு இடம் இல்லை.

பதம் 3.18.12
த்வம் பத்ரதானாம் கில யூதபாதிபோ
கடஸ்வ நோ ஸ்வஸ்தய ஆஸ்வநூஹ:
ஸம்ஸ்தாப்ய சாஸ்மான் ப்ரம்புஜாஸ்கு ஸ்வகானாம்
ய: ஸ்வாம் ப்ரதிஞ்ஞாம் நாதிபிபர்த்யஸப்ய:

த்வம் -நீ; பத்ரதானாம்- காலாட்படை வீரர்கள்; கில-உண்மையில்; யூதப—தலைவர்களின்; அதிப- படைத்தலைவன்; கடஸ்வ- முயற்சி எடுத்தல்; ந-எங்களுடைய; அஸ்வஸ்தயே- தோல்விக்கு; ஆஸு- நினைப்பூட்டல்; அதுஹ- முக்கியத்துவம் இன்றி; ஸம்ஸ்தாப்ப- கொல்லப்பட்டு; சமற்றும்; அஸ்மான்—எங்களை; ப்ரம்ருஜ- துடைத்து; அஸ்கு-கண்ணீர்; ஸ்வகாளாம்- உன்னுடைய நெருங்கிய உறவினர்களின்; ய:-அவன்; ஸ்வாம்—அவனுடைய; ப்ரதிஞ்ஞாம் – உறுதிமொழி; ந-இல்லை; அதிபிபர்த்தி- நிறைவேற்றுதல்; அஸப்ய:- பேரவையில் அமரத் தகுதியில்லாத.

நீ பல காலாட்படை வீரர்களுக்குத் தலைவனாக இருக்கலாம். இப்போது எங்களைத் தூக்கி எறிவதற்கு முயற்சியும் எடுக்கலாம். உன் முட்டாள் தனமான பேச்சை விட்டுவிட்டு, எங்களைக் கொல்வதன் மூலம் உன்னுடைய நெருங்கிய உறவினர்களின் கவலையைத் துடைத்து விடு. ஒருவன் செருக்குடையவனாக இருக்கலாம். இருந்த போதிலும், அவன் தன் உறுதிமொழியை நிறைவேற்றத் தவறினால், அவன் அவையில் அமரத் தகுதி இல்லாதவனாகிறான்.

பதம் 3.18.13
மைத்ரேய உவரச
ஸோதிக்ஷிப்தோ பகவதா ப்ரலப்தஸ்ச ருஷா ப்ருஸம்
ஆஜஹரோல்பணம் க்ரோம் க்ரீட்யமானோ ஹி -ராடிய

மைத்ரேய-பெரிய முனிவர் மைத்ரேயர்; உவாச-கூறினார்; ஸ –தீயவன்; அதிக்ஷிப்த—அவமதிப்புக்குள்ளாகி, பகவதா – பரம புருஷபகவான்; ப்ரவப்த-கேலிக்கு ஆளாகி; ச – மற்றும்; ருஷா – கோபம்; ப்ருஸம்-சிறந்த; ஆஜஹார-சேர்த்து; உல்பணம்- சிறந்த க்ரோதம்:- கோபம்; க்ரீட்யமான-விளையாடி; அஹிராத்:- பெரிய நாகம்; இவ- போல.

ஸ்ரீ மைத்ரேயர் கூறினார்: பரமபுருஷ பகவானால் அறைகூவல் விடப்பட்ட தீயவன் கோபமும் கலக்கமும் மிக்கவனாய், சீண்டப்பட்ட நாகம் போல கோபத்தால் துடித்தான்.

பதம் 3.18.14
ஸ்ருஜந்நாமர்ஷித: ஸ்வாஸாந் மந்யு –ப்ரசலிதேந்திரிய:
ஆஸாத்ய தரஸா தைத்யோ கதயாயஹநத் தரிம்

ஸ்ருஜர்-கொடுத்து; அமர்ஷித-கோபம் கொண்டு; ஸ்வாஸாந்- மூச்சுகளுடன்; மந்யு-கோபத்தால்; ப்ரசலித-கலங்கி; இந்த்ரிய- புலன்கள்; ஆஸாத்ய-தாக்கி; தரஸா-விரைவில்; தைத்ய-தீயவன்; கதயா—கதையுடன்; ந்யஹநத்—அடித்து; ஹரிம்- பகவான் ஹரி.

அசுரன் வெகு கோபத்துடன் சீறிக்கொண்டு, அவனது எல்லாப் புலன்களும் கோபத்தால் துடிக்க, விரைவாக பகவானின் மேல் பாய்ந்து, அவரைத் தன் சக்தியுள்ள கதையால் ஓர் அடி அடித்தான்.

பதம் 3.18.15
பகவாம்ஸ்து கதா-வேகம் விஸ்ருஷ்டம் ரிபுணோரஸி
அவஞ்சயத்திரஸ்சீநோ யோகாரூட இவாந்தகம்

பகவான்—பகவான்; து-எப்படியாவது; கதாவேகம்- கதையால் அடித்து; விஸ்ருஷ்டம்- தூக்கியெறிந்து; ரிபுணா-எதிரியால்; உரஸி- அவர் மார்பில்; அவாஞ்சயத்- தப்பி; திரஸ்சீந -விலகி; யோகாரூட – நிறைவேற்றப்பட்ட; இவ-போல; அந்தகம்-மரணம்.

தவம் நிறைவேறிய யோகி மரணத்திலிருந்து சாமர்த்தியமாகத் தப்பிப்பது போல, பகவான் தன் மார்பைக் குறிவைத்து எதிரியின் கதையிலிருந்து கடுமையாக வரவிருந்த அடியிலிருந்து விலகி எப்படியோ தப்பினார்.

பதம் 3.18.16
புநர்கதாம் ஸ்வாமாதாய ப்ராம யந்தமபீக்ஷ்ணஸ:
அப்யதாவத் தரி:க்ருத்த ஸம்ரம்பாத் தஷ்ட-தச்சதம்

புநர்- மீண்டும்; கதாம்-கதை; ஸ்வாம்- அவருடைய; ஆதாய- எடுத்துக்கொண்டு; ப்ராமயந்தம்-சுழற்றல்; அபீஷ்ணஸ-மீண்டும்; அப்யதாவத் -சந்திக்க விரைந்து; ஹரி:- பரமபுருஷ பகவான்; க்ருத்த— கோபம்; ஸம்ரம்பாத்-சீற்றம்; தஷ்ட-பிடித்து; தச்சம்—அவனுடைய உதடு.

பரமபுருஷ பகவான் இப்பொழுது அவருடைய கோபத்தை வெளிப்படுத்தி, அசுரனைச் சந்திக்க விரைந்தார். அசுரன் சீற்றத்தில் தன் உதட்டைக் கடித்துக்கொண்டு, தன் கதையை தூக்கிக் கொண்டு, மீண்டும் அதை வேகமாகச் சுழற்றினான்.

பதம் 3.18.17
ததஸ்ச கதயாராதம் தக்ஷிணாஸ்யாம் ப்ருவி ப்ரபு:
ஆஜக்னே ஸ து தாம் ஸௌம்ய கதயா கோவிதோ ஹனத்

தத-பிறகு; ச- மற்றும்; கதயா – தன் கதையுடன்; அராதிம் – எதிரி: தக்ஷிணஸ்யாம் வலப்பக்கத்தில்; ப்ருவி-புருவத்தில்: ப்ரபு- பகவான்; ஆஜக்நே—அடித்து; ஸ-பகவான்; து.-ஆனால்; தாம்- கதை; ஸௌம்ய—ஓ மேலான விதுரனே; கதயா-அவன் கதையுடன்; கோவித-நிபுணர்; அஹதத்- அவரைக் காப்பாற்றிக் கொண்டான்.

பிறகு, பகவான், அவருடைய கதையினால் பகைவனின் வலப்புறப் புருவத்தில் அடித்தார். ஆனால்,ஒ மேலான விதுரனே அசுரன் சண்டை விடுவதில் நிபுணன் ஆகையால், அவன் தன் கதையின் பக்குவமான இயக்கத்தால் தன்னைக் காத்துக் கொண்டான்.

பதம் 3.18.18
ஏவம் கதாப்யாம் குர்வீப்யாம் ஹர்யக்ஷோ ஹரிரேவ ச
ஜிகீஷயா ஸீஸம்ரப்தாவ் அந்யோந்யம் அபிஜக்நது

ஏலம்-இந்த விதத்தில்; கதாப்யாம் – அவர்களின் கதைகளுடன்; குர்வீப்யாம்- பெரிய; ஹர்யரே-தீயோன் ஹர்யக்ஷ்ன் (ஹிரண் யாக்ஷன்); ஹரி-பசுவான் ஹரி; இவ-உறுதியாக; ச-மற்றும்; ஜிகீஷயா- வெற்றியை விரும்பி; ஸுஸம்ரப்த-சினமூட்டி; அந்யோந்யம்- ஒருவருக்கொருவர்; அபிஜக்நது-அடித்துக் கொண்டனர்.

இந்த விதத்தில், அசுரனான ஹர்யக்ஷனும், பரமபுருஷ பகவானும், வெற்றியை விரும்பி, இருவரும் சினம் கொண்டு, தங்கள் கதைகளால் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டனர்.

பதம் 3.18.19
ததோய: ஸ்ப்ருதோஸ் திக்ம -கதாஹதாங்கயோ:
க்ஷதாஸ்த்ரவ -க்ரண -விவ்ருத்த- மந்ய்வோ :
விசித்ர-மார்க்காம்ஸ் சரதோர்ஜிகீஷயோ
வ்யபாதிலாயாமிவ ஸூஷ்மிணோர்ம்ருத:

தயோ-அவர்களுக்கு; ஸ்ப்ருதோ-போரிடும் இருவரும்; திக்ம- கூர்மையான; கதா—கதைகளால்; ஆஹத – புண்பட்டு; அங்கயோ- அவர்களின் உடல்கள்; சுதஆஸ்ரவ-புண்ணிலிருந்து குருதி வெளி வந்து; க்ராண-நாற்றம்; விவ்ருத்த-அதிகமாகி; மந்ய்வோ-கோபம்; விசித்ர-பலவித; மார்கான் -படைகளின் திட்டமிட்ட நடைமுறை; சரதோ- செயல்படுத்தும்; ஜிகீஷயா—வெல்ல விரும்பி; வ்யபாத்— போலத் தோன்றியது: இலாயாம் – பசுவுக்காக (அல்லது பூமி); இவ- போல; ஜிகிஷ்மினோ—இரு காளைகளில்; ம்ருத-போராடுதல்.

போரிடும் இருவருக்கும் இடையில் நல்ல போட்டி இருந்தது. இருவருக்கும் அவர்களின் கூர்மையான கதைகளால் ஏற்பட்ட காயங்கள் அவர்களின் உடல்களில் இருந்தன. மற்றும் குருதியிலிருந்து வந்த நாற்றத்தால் மேலும் மேலும் சீற்றம் கொண்டனர். வெற்றி பெறும் ஆர்வத்தால், அவர்கள் பலவிதமான போரிடும் முறைகளைக் கையாண்டனர். ஒரு பசுவுக்காக இரு காளைகள் புரியும் போரை ஒத்திருந்தது, அவர்கள் இருவருக்கும் இடையில் நிகழ்ந்த போர்.

பதம் 3.18.20
தைத்யஸ்ய யஞ்ஞாவயவஸ்ய மாயா-
க்ருஹீத -வாராஹ தநோர்மஹாத்மந:
கௌரவ்ய மஹ்யாம் த்விஷதோர்விமர்தனம்
தித்ர்க்ஷுரா காத்ர்ஷிபிர்வ்ருத: ஸ்வராட்

தைத்யஸ்ய-தீயோனின்; யஞ்ஞ ஆவயவஸ்ய- முழுமுதற் கடவுளின் (அவர் உடலில் யஞ்ஞம் ஒரு பகுதி); மாயா—அவர் ஆற்றலின் வழியே; க்ருஹீத—ஊகிக்கப்பட்டது; வாராஹ-காட்டுப் பன்றியின்; தநோ-அவரின் வடிவம்; மஹாத்மந – பரமபுருஷ பகவானின்; கௌரவ்ய-ஓ விதுரனே (குருவின் சந்ததி); மஹ்யாம்-உலகிற்காக; த்விஷதோ-இரு எதிரிகளில்; விமர்தனம்—சண்டை; தித்ர்க்ஷீர—பார்க்க ஆர்வம் கொண்டு; ஆகாத்-வரும்; ரிஷிபி-முனிவர்களால்; வ்ருத- உடன் போதல்; ஸ்வராத்—பிரம்மா.

குரு மரபினைச் சார்ந்தவரே அண்டத்தில் அதிக சுதந்திரம் பெற்ற பிரம்மதேவர். தன்னைப் பின்பற்றுபவர்களுடன் வந்து, காட்டுப்பன்றி வடிவத்தில் தோன்றிய பரமபுருஷ பகவானுக்கும் அசுரனுக்கும் இடையில் பூமிக்காக நடந்த பயங்கரச் சண்டையை அவர் கண்ணுற்றார்.

பதம் 3.18.21
ஆஸந்த – ஸௌண்டீ ரமபே தஸாத்வஸம்
க்ருத -ப்ரதீகார மஹார்ய -விக்ரமம்
விலக்ஷ்ய தைத்யம் பகவான் ஸஹஸ்ரணீர்
ஜகாத நாரயெணமாதி ஸீகரம்

ஆஸந்த—அடைந்து; ஸௌண்டீரம் – பலம்; அபேத -முற்றிலும் அழிந்த; ஸாத்வஸம்-பயம்; க்ருத-உருவாக்கி; ப்ரதீகாரம் – எதிர்ப்பு; ஆஹார்ய-எதிர்க்க இயலாத; விக்ரமம்-சக்தி கொண்டு; விலக்ஷ்ய – பார்த்துக் கொண்டு; தைத்யம்—தீயோன்; பகவான் – வணங்கத்தக்க ப்ரம்மா; ஸஹஸ்ரணீர்—ஆயிரக்கணக்கான முனிவர்களின் தலைவர்; ஜகாத—அழைத்து; நாராயணம் – பகவான் நாராயணர்; ஆதி- முதன்மையான; ஸூகரம்-காட்டுப் பன்றியின் வடிவுடன்.

ஆயிரக்கணக்கான முனிவர்களுக்கும், தத்துவ ஆய்வாளர்களுக்கும் தலைவராகிய பிரம்மா போர் நடக்கும் இடத்தை அடைந்த பிறகு, யாராலும் சண்டையிட முடியாத அளவிற்கு ஈடு இணையற்ற சக்தியை அடைந்த அசுரனைப் பார்த்தார். பிறகு, பிரம்மா முதன் முதலாக, காட்டுப் பன்றியின் வடிவமெடுத்த நாராயணரை கீழ்வருமாறு வேண்டினார்.

பதங்கள் 3.18.22 – 3.18.23
ப்ரம்வோவாச
ஏவு தே தேவ தேவாநாம் அஸ்க்ரி -மூலம் உபேயுஷாம்
விப்ராணாம் ஸௌரபேயீணாம் பூதானாம் அப்யநாகஸாம்

ஆக்ஸ் -க்ருத்பய -க்ருத்துஷ் க்ருதஸ்மத்ராத்வரோஸீர:
அந்வேஷந்நப்ரதிரதோ லோகாஞடதி கண்டக:

ப்ரம்ம உவாச-பிரபு பிரம்ம கூறினார்; ஏவு-இந்தத் தீயோன்; தே-உங்களுடைய; தேவ-ஓ பகவானே; தேவாதாம்-தேவர்களுக்கு: அங்க்ரிமூலம் உங்களுடைய திருவடிகள்; உபேயுஷாம்- அடைந்தவர்களுக்கு; விப்ராணாம்-பிராமணர்களுக்கு; ஸௌர பேயீணாம்—பசுக்களுக்கு; பூதானாம் – சாதாரண வாழும் பொருள் களுக்கு; அபி – கூட; அநாகஸாம்—அப்பாவி; ஆகஸ் க்ருத்—சினமூட்டுபவர்; பயக்ருத்—பயத்தின் மூலம்; துஷ்க்ருத்-தவறு செய்பவர்; அஸ்மத்- என்னிடமிருந்து ; ராத்வர-வரத்தைப் பெற்று ; அஸூர—தீயவன்; அந்வேஷந்-தேடிக்கொண்டு; அப்ரதிரத—சரியான போரிடுபவர் இன்றி; லேகான்—அண்டம் முழுவதிலும்; அடதி—அவன் அலைந்தான்; கண்டக:-எல்லாருக்கும் தொல்லையாக இருந்தான்.

பிரபு பிரம்மா கூறினார்: என் அன்பு பகவானே, இந்தக் கயவன் தேவர்களுக்கும், பிராமணர்களுக்கும், பசுக்களுக்கும், மற்றும் அப்பழுக்கில்லாதப் பாதங்களை வணங்கி அடிமையாக இருப்பவர் களுக்கும் தொடர்ந்து தொல்லை தருகிறான். அவர்களை அநாவசியமாக அலைக்கழித்து, அவர்களது பயத்திற்குக் காரணமாக இருக்கிறான். என்னிடமிருந்து பெற்ற வரம் காரணமாக, அவன் தீயவனாகி, எப்போதும் போரிடத் தகுந்தவரைத் தேடிக் கொண்டு, இந்தச் சிறுமைச் செயலுக்காக, அண்டம் முழுவதும் அலைந்து கொண்டிருக்கிறான்.

பதம் 3.18.24
மைநம் மாயாவிநம் த்ருப்தம் நிரங்க்ருஸம் அஸத்தமம்
ஆக்ரீட பாலவத் தேவ யநாஸீவிஷ முத்திதம்ஷ

மா-செய்யாதே; ஏநம் – அவளை; மாயா விநம் – மாயவித்தையில் சிறந்தவனை; திருப்தம்—செருக்கு நிறைந்த: நிரஸ்குஸம் – தன்னிறைவான; அஸத் தமம்- மிகவும் கொடுமை வாய்ந்த; ஆக்ரீட -உடன் விளையாட; பாலவத் -குழந்தை போல; தேவ—ஓ பகவானே; யதா-ஒப்பாக; ஆஸூவிஷம்-பாம்பு; உத்திதம்-எழுப்பி.

பிரம்மதேவர் தொடர்ந்தார்: என் அன்பு பகவானே, பாம்பு போன்ற தீயவனும், மாய வித்தையில் சேர்ந்தவனும், கொடியவனும், தன்னைப் பாதுகாத்துக் கொள்பவனும் ஆன, இந்தக் கயவனுடன் விளையாடத் தேவையில்லை.

பதம் 3.18.25
ந யாவதேஷ வர்தேத ஸ்வாம் வேலாம் ப்ராப்ய தாருண:
ஸ்வாம் தேவ மாயாம் -ஆஸ்தாய தாவஸ் ஜஹ்யகம் அச்யுத

ந யாவத்-முன்பு: ஏஷ -இந்தக் கயவன்; வர்தேத—அதிகமாகலாம்; ஸ்வாம்-அவனுடைய; வேலாம்-தீய நேரம்; ப்ராப்ய-அடைந்து; தாருண—வல்லமை மிக்க; ஸ்வாம்-உன்னுடைய; தேவ – ஓ பகவானே; மாயாம்—உன் ஆற்றல்; ஆஸ்தாய-உபயோகித்து; தாவத்- உடனே; ஜஹி- கொல்ல; அகம் பாவமான; அச்யுத-தவறிழைக்காத.

பிரம்மா தொடர்ந்தார்: என் அன்பு பகவானே, நீங்கள் தவறு செய்யாதவர். தயவு செய்து தீய காலம் வருவதற்கு முன் இந்தப் பாவமிக்க கயவனைக் கொல்லுங்கள். அவன் தனக்குச் சாதகமான, வல்லமை மிக்க அணுகுமுறையைத் தருவதற்கு முன் கொல்லுங்கள். நீங்கள் சந்தேகம் அற்ற உங்கள் அந்தரங்க சக்தியால் அவனைக் கொல்ல முடியும்.

பதம் 3.18.26
ஏஷா கோரதமா சந்த்யா சசம்பட் -கரீ ப்ரபோ
உபஸர்பதி ஸர்வாத்மன் ஸூராணாம் ஜயம் ஆவஹ

ஏஷா-இந்த: கோர தமா-இருளான; சந்த்யா – மாலை நேரம்; லோக—இந்த உலகம்; சம்பட்கரீ—அழிக்கும்; ப்ரபோ—ஓ பகவானே; உபஸர்பதி—அணுகிக் கொண்டு; ஸர்வாத்மன்-ஓ ஆத்மாக்களின் ஆத்மாவே; ஸூராணாம்—தேவர்களுக்கு; ஜயம்—வெற்றி; ஆவஹ- கொண்டு வரும்.

என் பகவானே, இவ்வுலகை மறைக்கின்ற மாலைநேர இருள் சுற்றிலும் வேகமாகச் சூழ்ந்து கொண்டு வருகிறது. நீங்கள் எல்லா ஆத்மாக்களின் பேராத்மாவாக இருப்பதால் கருணையுடன் அந்த அசுரனைக் கொன்று தேவர்களுக்கு வெற்றியைத் தாருங்கள்.

பதம் 3.18.27
அநுநைஷோ பிஜிந்நாம யோகோ மௌஹுர்திகோ ஹ்யகாத்
ஸிவாய நஸ்த்வம் ஸூஹ்ருதாம் ஆஸூ நிஸ்தர துஸ்தரம்

அதுநா – இப்போது; ஏஷா- இந்த; அபிஜித் நாம – அபிஜித் என்று அழைக்கப்படும்; யோக-உகந்த; மௌஹுர்திகா – நேரம்; ஹி – உண்மையில்; அகாத்-ஏறக்குறைய கடந்தது; ஸீவாய்-நன்மைக்காக; நீ எங்களின்; த்வம்—நீ; ஸூஹ்ருதாம்-உன் நண்பர்களின்; ஆஸு – விரைவாக; நிஸ்தர—ஒழித்துவிடு; துஸ்தரம் – வல்லமை மிக்க எதிரி.

அபிஜித் எனப்படும், வெற்றி வாய்ப்பு தரும், நண்பகலில் தொடங்கிய, நல்ல நேரம் கடந்து கொண்டு இருக்கிறது. ஆதலால் உங்களுடைய தோழர்களின் நன்மைக்காக, இந்த வல்லமை மிக்க எதிரியை ஒழித்து விடுங்கள்.

பதம் 3.18.28
திஷ்ட்யா த்வாம் விஹிதம் ம்ருத்யும் அயம் ஆஸாதித: ஸ்வயம்
விக்ரம்யைநம் ம்ருதே ஹத்வா லோகானாதேஹி ஸர்மணி

திஷ்ட்யா-அதிர்ஷ்டவசமாக; த்வாம்- உங்களிடம்; விஹிதம் – விதித்தமை; ம்ருத்யும் – மரணம்; அயம்-இந்தக் கயவன்; ஆஸாதித- வந்திருக்கிறான்; ஸ்வயம்-இசைவுடன்; விக்ரம்ய – உங்களுடைய வீரத்தை; ஏநம்—அவனை; ம்ருதே- மற்போரில்; ஹத்வா-கொன்று; லோகான்— உலகங்கள்; ஆதேஹி- நிலைநிறுத்துதல்; ஸர்மணி- அமைதியில்.

இந்த அசுரன் நம் அதிர்ஷ்டவசமாக, தானாகவே இசைந்து உங்களிடம் வத்திருக்கிறான். அவன் மரணம் உங்களால் விதிக்கப் பட்டது. ஆதலால், உங்கள் வழிகளை வெளிப்படுத்தி, மற்போரில் அவனைக் கொன்று, உலகங்களில் அமைதியை நிலை நாட்டுங்கள்.


ஸ்ரீமத் பாகவதம், மூன்றாம் காண்டத்தின் “வராகப் பிரபுவுக்கும் அசுரன் ஹிரண்யாட்சனுக்கும் இடையே போர்” எனும் தலைப்பைக் கொண்ட பதினெட்டாவது அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றன.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare