அத்தியாயம் – 17
அண்டத்தின் அனைத்துத் திசைகளிலும்
ஹிரண்யாட்சனின் வெற்றி
பதம் 3.17.1
மைத்ரேய உவாச
நிஷாம்யா-புவா கீதம் காரணம் சங்க்கயோஜ்ஹிதா:
தத: சர்வே நியவர்த்தந்த த்ரிதிவாய திவௌ:
மைத்ரேய-முனிவர் மைத்ரேயர்; உவாச-கூறுகிறார்; நிஷாம்ய- கேட்டபொழுது; ஆத்மபுவா-பிரமனால்; கீதம்—விளக்கம்; காரணம்- காரணம்; சங்க்கய-பயத்திலிருந்து; உஜ்ஹிதா-விடுபட்டனர்; தத- பிறகு; சர்வே-அனைவரும்; நியாவர்த்தந்த -திரும்பினர்; திரிதிவாய -தேவலோகங்களுக்கு; திவௌகஸ-தேவர்கள். (மேலுலகத்தை வாழும் இடமாகக் கொண்டவர்கள்)
ஸ்ரீ மைத்ரேயர் கூறினார்: மேலுலகைத் தாங்கள் வாழும் இடமாகக் கொண்ட தேவர்கள், இருள் சூழ்ந்து இருப்பதற்கான காரணத்தை, விஷ்ணுவுக்குப் பிறந்த பிரமன் மூலம் கேட்டலும் தத்தம் பயத்திலிருந்து விடுபட்டார்கள். பின்னர் தங்களுடைய உலகங்களுக்குத் திரும்பிச் சென்றார்கள்.
பதம் 3.17.2
திதிஸ் து பர்த்துர் ஆதேஷாத் அபத்ய-பரிசங்க்கிணீ
பூர்ணே வர்ஷச-தேஸாத்வீபுத்ரௌ ப்ரஸீஷிவே யமௌ
திதி- திதி; து-ஆனால்; பர்த்து:—அவள் கணவனின்; ஆதேஷாத்- கட்டளைப்படி; அபத்ய—அவள் குழந்தைகளிடமிருந்து; பரிசங்க்கினீ— தொல்லை தருமூ என்ற சந்தேகத்துடன்; பூர்ணே- முழுமையாக; வர்ஷ சதே-நூறு ஆண்டுகளுக்குப் பின்; ஸாத்வீ -நன்னடத்தையுள்ள பெண்; புத்ரௌ —இரு பிள்ளைகளை; ப்ரஸீஷிவே—பெற்றெடுத்தாள்; யமௌ-இரட்டையர்கள்.
நல்லொழுக்கம் உள்ளவளாகிய திதி, பின்னால் இவ்வாறு நடக்கும் என்று அவள் கணவன் கூறியபடியே, தன் கருவிலிருக்கும் குழந்தைகளால் தேவர்களுக்குத் துன்பம் உண்டாகும் என்று சந்தேகப்பட்டாள். நூறு வருட கர்ப்ப காலத்திற்குப் பின் இவள் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்தாள்.
பதம் 3.17.3
உத்பாதா பஹவஸ்தர நிபேதுர்ஜாய மானயோ:
திவி புவ்யந்தரிக்ஷே ச லோகஸ்யோரு-பயாவஹா:
உத்பாதா:-இயற்கைத் தொல்லைகள்; பஹவ-நிறைய; தத்ர- அங்கு; நிபேது:-நடந்தது; ஜாயமானயோ:-அவர்கள் பிறப்பினால்; திவி – மேலுலகில்; புவி-பூவுலகில்; அந்தரிக்ஷே -வெளியிடத்தில்; ச- மற்றும்; லோகஸ்ய-உலகில்; உரு-மிகுந்த; பயாவஹா:-பயம் ஏற்பட்டது.
இந்த இரு அசுரர்களின் பிறப்பினால், மேலுலகிலும், பூவுலகிலும், இரு உலகங்களுக்கு இடையிலும், பயம் தரத்தக்க வியக்கத்தக்க தீய அறிகுறிகள் தோன்றின.
பதம் 3.17.4
ஸஹாசலா புவஸ்சேலுர் திஷா: சர்வா ப்ரஸஸ்வலு:
ஸோல் காஸ் சாஷானய: பேது: கே தவஸ்சார்தி- ஹேதவ:
சஹா—உடன்; அசலா:-மலைகள்; புவ:-பூமியுடன்; சேலு:- குலுங்கின; திஷா:- திசைகள்; சர்வா:-எல்லாம்; ப்ரஜஜ்வது:– தீ போல் ஒளிர்ந்தன; ச:-உடன்; உல்கா:-மின்னல்கள்; ச-மற்றும்; அசாயை-இடிகள்; பேது-விழுந்தன; கேதவ:- வால் நட்சத்திரம்; ச:- மற்றும்; ஆர்திஹேதவ—எல்லாத் தீய அறிகுறிக்கான காரணம்.
பூமியிலுள்ள மலைகளும் நடுங்கும் படியான நில நடுக்கம் ஏற்பட்டது. மற்றும் எங்கு பார்த்தாலும் தீ பரவியது போல் தோற்றமளித்தது. பல தீய அறிகுறி தரும் கோள்களான சனி போன்றவை தோன்றின. உடன் வால் நட்சத்திரங்களும் மின்னல்களும் இடிகளும் ஏற்பட்டன.
பதம் 3.17.5
வவௌ வாயு: ஸூது: ஸ்பர்ஷா: பூத்-காரா நீரயந் முஹூ:
உந்மூலயத்நக- பதீந் வாத்யாநீகோ ரஜோ-த்வஜ
வவெள-வீசின; வாயு- காற்று; ஸூது: ஸ்பர்ஷா -மேனிக்கு இன்பம் அளிக்காத; பூத்காராந்-சீறும் ஒலி; நீரயந்- வெளியிடுதல்; முஹீ – மீண்டும் மீண்டும்; உந்மூலயந்—வேருடன்; நகபதீந் – பெரிய மரங்கள்; வாத்ய-சுழல் காற்று; அநீகோ—படைகள்; துவஜ — கொடிகள்.
பெரிய மரங்களையும் வேருடன் சாய்க்கக் கூடியதும் மீண்டும் மீண்டும் சீறும் ஒலியுடன் உடலுக்கு இன்பமளிக்காததும் ஆகிய காற்று வீசியது. அது சுழல் காற்றைப் படையாகவும், தூசியைக் கொடியாகவும் கொண்டிருந்தது.
பதம் 3.17.6
உத்தஸத் – தடி-ம்போத- கடயா நஷ்ட- பாகணே
வ்யோம்நி ப்ரவிஷ்ட- தமஸா நஸ்ம வ்யாத் தஸ்யதே பதம்
உத்தஸத் – சுத்தமாகச் சிரித்தல்; தடித்-மின்னல்; அம்போத-மேகங்களால்; கடயா—புகை மூட்டத்தால்; நஷ்ட-இழந்தது; பாகணே- ஒளி தருபவை; வியோம்நி- ஆகாயத்தில்; ப்ரவிஷ்ட-மூடப்பட்டது; தமஸா-இருளால்; ந-இல்லை; ஸ்மவ்யாத்ல்யதே-பார்க்க முடிந்தது; பதம் – எல்லா இடத்தில்.
வானின் கண் உள்ள ஒளி தரும் பொருட்கள் எல்லாம் மேக மூட்டங்களால் சூழப்பட்ட போது, அதிலிருந்து மின்னல் சிரிப்பு போல் பளீரென்று வெளிப்பட்டது. இருள் எல்லா இடங்களிலும் பரவியதால் எந்தப் பொருளையும் பார்க்க இயலவில்லை.
பதம் 3.17.7
சுக்ரோஷ விமனா வார்திர் உதூர்மி: க்ஷுமிதோதர:
ஸோதபானாஸ்ச ஸரிதஷ சுக்ஷுபு – பு: ஷாஷ்சு-பங்கஜா:
சுக்ரோஷ- உரத்து ஓலமிடுதல்; விமனா—துன்பத்தால் பரிதவித்தல்; வார்தி-கடல் (சமுத்திரம்); உதூர்மி-உயர்ந்த அலைகள்; க்ஷுமித- கலங்கியது; உதரே-உள்ளே இருக்கும் உயிரினங்கள்; ஸஉதபானா- கிணறுகள், ஏரிகளில் உள்ள நீரானது; ச-மற்றும்; ஸரித-நதிகள்; சுக்ஷுபு—கலங்கின ; ஷாஷ்க-வாடின; பங்கஜா-தாமரை மலர்கள்.
சமுத்திரம் துன்பத்தால் பரிதவிப்பது போல், தன் பெரிய அலைகளுடன் உரத்து ஓலமிட்டது. அதில் வாழும் உயிரினங் களிடையில் குழப்பம் ஏற்பட்டது. நதிகளும், கிணறுகளும், ஏரிகளும் கலங்கின. தாமரை மலர்கள் வாடின.
பதம் 3.17.8
முஹு: பரிதயோ பூவன் ஸராஹ்வோ: ஷாஷ-ஸூர்யயோ:
நிர்காதா ரத-நிர்ஹாதா விவரேப்ய: ப்ரஜஜ்நிரே
முஹு-மீண்டும் மீண்டும்; பரிதய: ஒளி வட்டங்கள்; அபூவன்- தோன்றின; ஸராஹ்வோ- கிரகணத்தின் போது; ஷாஷ—சந்திரனில்; ஸூர்யோ-சூரியனில்; நிர்ஹாதா-இடிமுழக்கம்; ரதநிர்ஹாதா—தேர் ஓடும்போது எழும் சத்தம் போல்; விவரேப்ய மலைக்குகைகளிலிருந்து; ப்ரஜஜ்திரே-உருவாயின.
சந்திர, சூரிய கிரகணங்களின் போது சந்திர, சூரியனைச் சுற்றி எழும் ஒளி வட்டம் மீண்டும் மீண்டும் தோன்றியது. விண்ணில் மேகங்கள் இல்லாமல் இடி முழக்கம் கேட்டது. அது மலைக் குகைகளிலிருந்து தேர்கள் வெளிவந்தால் என்ன சத்தம் எழுமோ, அதை ஒத்திருந்தது.
பதம் 3.17.9
அந்தர்-க்ராமேஷீ முகதோ வமந்த்யோ வஹ்நிம் உல்பணம்
ஸ்ருகாலோ லூக -டங்காரை: ப்ரணேதுர் அஷாவம் ஷிவா:
அந்தர்-உட்பகுதியில்; க்ராமேஷீ-கிராமங்களில்; முகத-வாயிலி ருந்து; வமந்த்ய – உமிழ்ந்தன; வாஹ்மிந்-தீ; உல்பணம்-அச்சம் தரத்தக்க; ஸ்ரூகல – ஓநாய்கள்; உலூக-ஆந்தைகள்; தங்காரை- அவற்றின் அலறல்களுடன்; ப்ரணேது—அவற்றிற்கான அதிர்வுகளை உருவாக்கின. அஷிவம்- ஊளையிட்டன; ஷிவம்-பெண் ஒநாய்கள்.
கிராமங்களில் உட்பகுதியில் பெண் ஓநாய்கள் ஊளையிட்டன. அவற்றின் வாயிலிருந்து அவை தீயை உமிழ்ந்தன. ஓநாய்களும் ஆந்தைகளும் இவைகளுடன் சேர்ந்து அலறின.
பதம் 3.17.10
சங்கீத வத்ரோ தவனத் உந்நமய்ய ஷிரோதராம்
வ்யமுஞ்சன் விவிதா வாசோ க்ராம- ஸிங்ஹாஸ் ததஸ் தத:
சங்கீதவத்-பாடுவது போலவும்; ரோதனவத்-அழுவது போலவும்: உந்தமய்ய-உயர்த்தி; ஷிரோதரம் கழுத்தை; வியமுஞ்சன் – வெளி யிட்டன; விவிதா-பலவித; வாசோ-குரல்களில்; கிராம ஸிங்கஹா— நாய்கள்; ததஸ்தத—இங்கும் அங்கும்.
நாய்கள் இங்கும் அங்கும் ஓடி, பாடுவது போலவும், அழுவது போலவும் பலவிதக் குரல்களில், தங்கள் கழுத்தை நிமிர்த்திக் கொண்டு குரைத்தன.
பதம் 3.17.11
கராஸ் ச கர்கனஷீச: க்ஷத்த: குரைர்க் நந்தோ தரா-தலம்
கார்கார ரபஸா மத்தா: ப்ரயதாவன் வரூயஷீ:
கரா- கழுதைகள்; ச- மற்றும்; கர்கனஷீ- கடினமான; கூத்த- ஓ விதுரா; குரை—அதன் குளம்புகளுடன்; க்நந்தோ-படும்படி; தரா- தலம்-பூமியின் மேற்பரப்பில்; கார்கார—கத்தி; ரபஸா-கடுமையாக; மத்தா—பைத்தியம்; பர்யதாவல்—இங்கும் அங்கும் ஓடின; வரூயஷீ-மந்தையாக.
ஓ விதுரனே! மந்தை மந்தையாக, கழுதைகள் தரையின் மேல் தங்களின் கடினமான குளம்புகள் படும்படியாக, கடுமையாகக் கத்திக் கொண்டு இங்கும் அங்கும் ஓடின.
பதம் 3.17.12
ருதந்தோ ராஸயத்-ரஸ்தா நீடாதுத்பதன் ககா:
கோஷே ரண்யே ச பஷாவ: ஷிக்ருந்-மூத்ர மகுர்வத்
ருதந்தா:- அச்சம் காரணமாகக் கதறல்; ரஸ்பா – கழுதைகளால்; த்ரஸ்தா-பயந்து; நீடா-கூட்டிலிருந்து; உதபதன்-பறந்தன; ககா :- பறவைகள்; கோஷே – மாட்டுத் தொழுவத்தில்; அரண்யே-காட்டில்; ச – மற்றும்; பஷீவ:- கால்நடைகள்; ஷிக்ருத்-சாணம்: மூத்ரம்-சிறு நீர்; அகுர்வத்:- போயின.
கழுதைகளின் கத்தலால் அச்சமுற்ற பறவைகள், அதன் காரணமாகக் கதறிக் கொண்டு கூட்டை விட்டுப் பறந்து போயின. அதன் விளைவால் மாட்டுத் தொழுவத்திலும், காடுகளிலும் உள்ள கால்நடைகள் சாணமும் சிறுநீரும் கழித்தன.
பதம் 3.17.13
காவோ த்ரஸந்தஸ்ருக் -தோஹாஸ் தோயதா: பூய-வர்ஷிண:
வ்யருதந்தேவ-லிங்கானி த்ருமா: பேதுர்விநாநில
காவ-பசுக்கள்; அத்ரஸந்-பயந்தன; அஸ்ருக்—இரத்தம்; தோஹா- விளைச்சல்; தோயதா—மேகங்கள்; பூய-சீழ்; வர்ஷிண-மழை பெய்தல்; வியருதந்:- கண்ணீர் வடித்தன; தேவலிங்கானி-கடவுளர்களின் சிலைகள்; திருமா-மரங்கள்; பேது-கீழே விழுந்தன; விநா- இல்லாமல்; அநிலம்-காற்று அடித்தல்.
பசுக்கள், பயந்து போய், பாலுக்குப் பதிலாகக் குருதியைப் பொழிந்தன. மேகங்கள் மழைக்குப் பதிலாகச் சீழை வடித்தன. கோயில்களில் இருந்த கடவுளர்களின் சிலைகள் கண்ணீர் வடித்தன. பலத்த காற்று எதும் அடிக்காமலேயே மரங்கள் கீழே விழுந்தன.
பதம் 3.17.14
க்ரஹான் புண்யதமாநந்யே பகணாம்ஸ்சாபி தீபிதா:
அதிசேருர்வக்-ரகத்யா யுயுதுஸ்ச பரஸ்பரம்
க்ரஹான்-கோள்கள்; புண்ய தாமத்-மிகவும் உகந்த; ஆநயே- பிற (பின்னால் வரும் தீமையைக் காட்டும் கோள்கள்); பகணார்—சுடர் ஒளி வீசுபவை; ச-மற்றும்; அபி—உடன்; தீபிதா-ஒளி காட்டும்; அதிசேரு-மேலே கவிந்திருந்தது; வக்ரகத்யா-பின்நோக்கிச் செல்லும் வழி; யுயுது-சண்டைக்கு வந்தன; ச-மற்றும்; பரஸ்பரம்:- ஒன்றுடன் ஒன்று.
தீய அறிகுறி காட்டும் கோள்களான செவ்வாய் மற்றும் சனி போன்றவை, மிகவும் உகந்த கோள்களான புதன், வியாழன் மற்றும் வெள்ளி போன்ற பற்பல நட்சத்திரக் கூட்டங்களை விட அதிக ஒளியுடனும் மேம்பட்டும் சுடர்விட்டும் ஒளிர்ந்தன. பின்நோக்கிச் செல்வது போல் தோன்றினும், இக்கோள்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன.
பதம் 3.17.15
த்ருஷ்ட்வாந்யாம்ஸ்ச மஹோத்பாதான் அதத்-தத்வ-ரித: ப்ரஜா:
ப்ரம்ம- புத்ரான் ந்ருதே பீதா மேநிரே விஸ்வ-ஸம்ப்ஸவம்
த்ருஷ்ட்வா-பார்த்த பிறகு; அந்யாந் – மற்றவர்கள்; ச-மற்றும்; மஹா-சிறந்த; உத்பாதான்-தீய அறிகுறி; அதத் தத்வ விதா:- இரகசியத்தை அறிந்து கொள்ளாமல் (ஆற்றல் வாய்ந்தவற்றின்); ப்ரஜா— மக்கள்; பிரம்ம புத்ரான்- பிரம்மாவின் புத்திரர்கள் (நான்கு பிள்ளைகள்); ருதே:- தவிர்த்து; பீதா-பயத்துடன்; மேநீரே-எண்ணம்; விஸ்வ- ஸம்ப்லவம்:- அண்டத்தின் சேர்மான ஆக்கச் சிதைவு.
பல தீய காலங்களின் அறிகுறிகளைக் குறிப்பிட்டதும், திதியின் பிள்ளைகளான ஜயன் விஜயனின் பிறப்பையும் வீழ்ச்சியையும் அறிந்த பிரம்மாவின் நான்கு புதல்வர்களைத் தவிர, அனைவரும் பயத்தால் பீடிக்கப்பட்டனர். அவர்கள் இந்த ஆற்றல்களின் இரகசியத்தையும் அறியவில்லை. ஆயினும் இந்தப் பிரபஞ்சம் உருக்குலையப் போகிறது என்று எண்ணினார்கள்.
பதம் 3.17.16
தாவாதி-தைத்யௌ ஸஹஸா வ்யஜ்யமானாத்ம-பௌருஷௌ
வவ்ருதாதே ஷ்ம-ஸாரேண காயேனாத்ரி-பதீ இவ
தாவ் -அந்த இரண்டு; ஆதிதைத்யௌ – படைப்பின் தொடக்கத்தில் இருந்த தீய சக்திகள்; ஸஹஸா-விரைவாக; வியஜ்யமான-வெளிப் படையான அமைப்பு; ஆத்மா-சொந்தம் (தன்னுடைய); பௌருஷ -வீரம்; வவ்ருதாதே-வளர்ந்தன; அஷ்மஸாரேண—இரும்பை ஒத்த; காயேன—உடலமைப்புகளுடன்; அத்ரி பதீ-இரு பெரிய மலைகள்; இவ- போன்ற.
முன் காலத்தில் தோன்றிய இந்த இரு அசுரர்களும் விரைவில் அசாதாரணமான உடல் உறுப்புகளுடன் வெளிப்பட்டனர். அவர்களின் உடலமைப்புகள் இரும்பைப் போல் விளங்கி, அவை இரண்டும், இரண்டு பெரிய மலைகளைப் போல் வளர ஆரம்பித்தன.
பதம் 3.17.17
திவி-ஸ்ப்ருஷொள ஹேம-கிரீட -கோடிபிர்
நிரூத்தகா-ஷ்டௌ ஸ்புரதங்கதா- பூஜௌ
காம் கம்பயந்தௌ சரணை: பதே பதே
கட்யா ஸீகாஞ்ச்யார்கமதீத்ய தஸ்தது:
திவிஸ்பர்ஷொன-வானைத் தொடுதல்; ஹேம-தங்கமயமான; கிரீட—அவர்களின் கிரீடங்கள்; கோடிபிர்- தலைக் கொண்டை (முடி); நிரூத்த-மறைத்தல்; காஷ்டௌ:- திசைகள்; ஸ்புரத்- ஒளி மிக்க; அங்கதா—கடகங்கள்; புஜௌ—கைகளில்; காம்- பூமி; கம்பயந்தௌ-குலுங்குதல்; சரணை:-அவர்களின் பாதங்களுடன்; பதே பதே-ஒவ்வொரு அடியிலும்; கட்யா-அவர்களின் இடுப்புகளுடன்; ஸுகாஞ்ச்யா-அழகாக அலங்கரிக்கப்பட்ட மேகலைகளுடன்; அர்கம்—சூரியன்; அதீத்ய – மேம்படுதல்; தஸ்தது—அவர்கள் நின்றனர்.
அவர்களின் உடல்கள், அவர்களுடைய கொண்டையுடன் கூடிய தங்க கிரீடங்களுடன் வானை முத்தமிடும் அளவிற்கு உயரமாக விளங்கின. அவர்கள் எல்லாத் திசைகளிலும் பார்வையை மறைத்தார்கள்; ஒவ்வொரு அடியிலும் பூமி குலுங்கும்படி நடந்தார்கள். அவர்களின் கைகள் ஒளிபொருந்திய கடகங்களால் அலங்கரிக்கப்பட்டன. அவர்கள் தங்களின், சிறந்த, அழகிய மேகலைகளால் சுற்றப்பட்ட தங்களின் இடுப்புகளால் சூரியனையும் மறைத்து விடும்படி நின்றார்கள்.
பதம் 3.17.18
ப்ரஜாபதிர்நாம தயோரகார்ஷீத்
ய: ப்ராக் ஸ்வ-தேஹாத்யம யோரஜாயத்
தம் வை ஹிரண்யகஷிபும் விது: ப்ரஜா
யம் தம் ஹிரண்யாக்ஷம் ஆஸுத் ஸாக்ரத:
ப்ரஜாபதி—காஸ்யபர்; நாம—பெயர்கள்; தயோ-இரண்டில்; அகார்ஷீத்-கொடுத்து; ய-யார்; ப்ராக்-முதல்; ஸ்வதேஹாத்—அவர் உடலிலிருந்து; யமயோ-இரட்டையர்களில்; அஜாயத-வழங்கப் பட்டது; தம்—அவைன; வை- உண்மையாகவே; ஹிரண்ய கசிபும்- ஹிரண்யகசிபு; விது-தெரிந்து; ப்ரஜா-மக்கள்; யம்-யாருடைய; தம்-அவனை; ஹிரண்யாக்ஷம்- ஹிரண்யாட்சன்; அசூத-பிறப்பு கொடுத்து ; ஸா—அவள் (திதி); அக்ரத-முதல்.
வாழும் உள்பொருள்களைப் படைப்பவரான காஸ்யபர், ப்ரஜாபதி அவரின் இரட்டைப் பிள்ளைகளுக்குப் பெயர் சூட்டினார். திதியின் கருவில் உருவான முதல் பிள்ளைக்கு ஹிரண்யகசிபு என்றும், முதலில் பிறந்த பிள்ளைக்கு ஹிரண்யாட்சன் என்றும் பெயர் சூட்டினார்.
பதம் 3.17.19
சக்ரே ஹிரண்யகஷிபுர் தோர்ப்யாம் ப்ரம்மா-வரேண ச
வசே ஸ-பாலால் லோகாம்ஸ்த்ரீந் அருதோ-ம்ருத்யுருத்தத:
சக்ரே – உருவாக்கப்பட்ட; ஹிரண்யகஷிபு-ஹிரண்யகசிபு; தோர் ப்யாம் – அவன் இரண்டு கைகளினால்; ப்ரம்ம-வரேண-பிரம்மாவின் ஆசியினால்; ச—மற்றும்; வசே – அவரின் ஆட்சியின் கீழ்; ஸபாலான்- காப்பவர்களுடன்; லோகான்—உலகங்கள்: த்ரீன்-மூன்று; அகுத ம்ருத்யு— எதனாலும் மரணத்திற்கு அஞ்சாமை; உத்தத-செருக்கடைந்து.
மூத்த குழந்தை ஹிரண்யகசிபு, பகவான் பிரம்மாவிடமிருந்து பெற்ற ஆசியினால் மூன்று உலகங்களிலும், யாரிடமிருந்தும் மரணத்திற்கு அஞ்சாதவனாக இருந்தான். தான் பெற்ற ஆசியால் அவன் கர்வமும் செருக்கும் அடைந்து, மூன்று சூரிய மண்டலங்களையும் தன் ஆட்சியின் கீழ் கொண்டு வந்தான்.
பதம் 3.17.20
ஹிரஷ்யாக்ஷோனுஜஸ் தஸ்ய ப்ரிய: ப்ரீதி-க்ருதந்வஹம்
கதாபாணிர்திவம் யாதோ யுயுத்ஸுர்ம்ருகயந் ரணம்
ஹிரண்யாக்ஷ- ஹிரண்யாட்சன்; அனுஜன்- தம்பி; தஸ்ய- அவனுடைய; ப்ரிய-அன்பான; ப்ரீதிக்குத் -மகிழ்ச்சியளிக்கத் தயாரான; அனு அஹம்- தினமும்; கதாபாணி – கையில் கதையுடன்; திவம் – மேலுள்ள கோள்களுக்கு; யாத – பயணம் செய்தான்; யுயுத்ஸு – சண்டையிட விருப்பமுள்ள; மிருகயந் -விரும்புதல்; ரணம்-போர்.
அவன் இளைய சகோதரன், ஹிரண்யாட்சன், தன் செயல்களால் அவனுடைய மூத்த சகோதரனை எப்போதும் திருப்தி செய்யத் தயாராக இருந்தான். ஹிரண்யாட்சன், தன் தோளில் ஒரு கதையைச் சுமந்து கொண்டு, ஹிரண்யகசிபுவைத் திருப்தி செய்ய மட்டுமே, போர் உணர்ச்சி கொண்டு அண்டம் முழுவதும் பயணம் செய்தான்.
பதம் 3.17.21
தம் வீக்ஷ்ய து:ஸஹஜவம் ரணத் -காஞ்சன -நூபுரம்
வைஜயந்தயா ஸ்ரஜா ஜூஷ்டம் அம்ஸ-ந்யஸ்-தம ஹா-கதம்
தம்—அவனை; வீக்ஷ்ய – பார்த்தும்; து: ஸஹ- கட்டுப்படுத்தக் கடினமான; ஜவம்- மனநிலை; ரணத்—கணகண ஒலி; காஞ்சன— தங்கம்; நூபுரம் -கழல்கள்; வைஜயந்த்யஸ்ரஜா—வைஜயந்தி மாலையுடன்; ஜூஷ்டம்- அலங்கரிக்கப்பட்ட; அம்ஸ-அவன் தோளில்; நியஸ்த-தாங்கி; மஹாகதம் பெரிய கதை.
ஹிரண்யாட்சனின் மனநிலையைக் கட்டுப்படுத்தல் அரிது. அவன் தன் கால்களில் தங்கத்தாலான, கணகண என்று மணி ஒலி எழுப்பக் கூடிய கழல்களை அணிந்திருந்தான். பெரிய மாலை அவன் கழத்தை அலங்கரித்தது. அவன் தனது தோளில் ஒரு கதாயுதத்தைத் தாங்கியிருந்தான்.
பதம் 3.17.22
மனோ- வீர்ய- வரோத்ஸிக்தம் அஸ்ருண்யம் அருதோ -பயம்
பீதா நிலில்யிரே தேவாஸ் தார்க்ஷ்ய- த்ரஸ்தா இவாஹய
மனோவீர்ய-உடல், மன வலிமையால்; வர – வரத்தினால்; உத் ஸிக்தம்-செருக்கு ; அஸ்ருண்யம்-கண்காணிக்கப்படாதவனாக; அகுத- பயம் யாரிடமும் பயமின்றி; பீதா-பயந்து; நிலில்யிரே—அவர்களை மறைத்து; தேவா-தேவர்கள்; தார்க்ஷ்ய-கருடன்; த்ரஸ்தா-பயந்து; இவ-போல: அஹய-பாம்புகள்.
அவனுடைய மன வலிமை மற்றும் உடல் வலிமையுடன் அவன் பெற்ற வரமும் அவனைக் கர்வம் கொள்ளச் செய்தது. அவன் யாரிடமிருந்தும் மரணத்திற்கு அஞ்சவில்லை. அவனைக் கண்காணிக்கவும் எதுமில்லை. எனவே தேவர்கள் அவனைப் பார்த்த கணமே, பாம்புகள் கருடனிட முள்ள அச்சத்தால் தங்களை மறைத்துக் கொள்வதைப் போல, தங்களை மறைத்துக் கொண்டார்கள்.
பதம் 3.17.23
ஸ வை திரோஹிதான் த்ருஷ்ட்வா மஹஸா ஸ்வேன தைத்ய-ராட்
ஸேந்ராந் தேவ-கணான் க்ஷ பான் அபஷ்யன் வ்யந்தத் ப்ருசம்
ஸ—அவன்; வை-உண்மையாகவே; திரோஸிதான்-மறைந்து போன; த்ருஷ்ட்வா-பார்த்ததும்; மஹஸா – வல்லமையால்; ஸ்வேன- அவனுடைய; தைத்யராத்- தீய சக்திகளின் தலைவன்; ஸஇந்த்ரான்- இந்திரனுடன்; தேவ கணான்-தேவர்கள்; க்ஷீபான் – வெளியூட்டிய; அபஷ்யன்-காணாமல்; வியந்தத்-முழங்கிய (கர்ஜித்த); பிருசம்-சத்தமாக.
முன்னமேயே அதிகார போதையில் இருந்த இந்திரனும், மற்ற தேவர்களும் அசுரர் தலைவனாகிய ஹிரண்யாட்சனின் வலிமையின் முன்பு காணாமல் போய் விட்டதைப் பார்த்ததும், அந்தத் தலைவன் சத்தமாகக் கர்ஜித்தான்.
பதம் 3.17.24
ததோ நிவ்ருத்த: க்ரீடிஷ்யந் கம்பீரம் பீம-னிஸ்வனம்
விஜகாஹே மஹா-ஸத்வோ வார்திம் மத்த இவ த்விப:
தத-பிறகு; நிவ்ருத்த—திரும்பினான்; க்ரீடிஷ்யந் – விளையாட்டு க்காக; கம்பீரம்-ஆழம்; பீம நிஸ்வனம்- பயங்கரமான ஒலி உருவாக்கி; விஜகாஹே -தலைகிழாகப் பாய்ந்து மூழ்குதல்; மஹா ஸத்வா- வல்லமை பொருந்திய ஆள்; வார்திம்-கடலில்; மத்த-சீற்றத்தில்; இவ -போல; தீவிப-ஒரு யானை.
வானுலகத்திற்குரிய அரசிலிருந்து திரும்பிய பிறகு, சிற்றமுள்ள ஒரு யானையைப் போன்ற வல்லமையுள்ள அந்த அசுரன் மேலும் பயங்கரமாகக் கர்ஜித்துக் கொண்டு, விளையாட்டாக அலை மோதும் ஆழ்கடலில் தலைகீழாகப் பாய்ந்தான்.
பதம் 3.17.25
தஸ்மித் ப்ரவிஷ்டே வருணஸ்ய சைனிகா
யாதோ- கணா: சந்ந-திய: ஸஸாத்வஸா:
அஹநியமானா அபி தஸ்ய வர்சிஸா
ப்ரதரஷிதா தூரதரம் ப்ரதுத்ருதுவு:
தஸ்மிந் ப்ரவிஷ்டே – அவன் கடலில் நுழைந்த பொழுது; வருணஸ்ய-வருணனின்; சைனிகா—பாதுகாப்பாளர்கள்; யாதா கணா – நீர்வாழ் உயிரினம்; சந்ததிய-அழுத்தப்பட்ட; ஸஸாத்வஸா- பயத்துடன்; அஹத்யமான-அடிக்கப்படாமல்; அபி—கூட; தஸ்ய- அவனுடைய வர்சிஸா-சிறப்பினால்; ப்ரதர்ஷிதா-தாக்கப்பட்டு; தூரதரம்-வெகுதூரம்; ப்ரதுத்ருதுவு—அவர்கள் வேகமாக ஓடினார்கள்.
அவன் கடலில் நுழைந்த பொழுது, வருணனின் கணங்களாகிய (படைகள்) நீர்வாழ் உயிரினங்கள் எல்லாம் பயத்தால் அதிர்ந்து போய் வெகுதாரம் ஓடின. இவ்வகையில் ஹிரண்யாட்சன் எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் தன் சிறப்பைக் காண்பித்தான்.
பதம் 3.17.26
ஸ வர்ஷ-பூகாநுததௌ மஹா-பலா
ஸ்சரத்மஹோர்மீஞ்ச்வஸதேரிதாந் முஹீ:
மௌர்வ்யாபிஜக்னே கதயா விபாவரீ
மாஸேதிவாம்ஸ் தாத புரீம் ப்ரதேசஸ:
ஸ-அவன்; வர்ஷபுகாந்த- பல ஆண்டுகளுக்கு; உததௌ- கடலில்; மஹா-பல வல்லமை மிக்க; சரந்—அசைந்து; மஹார்மீந்- மிகப் பெரிய அலைகள்; ச்வஸ்ந-காற்றால்; இரிதாந்-சுண்டப்பட்டு; முஹீ – மீண்டும் மீண்டும்; மௌர்வ்ய-இரும்பு; அபிஜக்னே- அவன் அடித்தான்; கதயா—அவன் கதையுடன்; விபாவரீம் விபாவரீ ஆஸேதிவான் – அடைந்தான்; தாத -ஓ அன்பு விதுரனே; புரீம்- தலைநகர்; ப்ரசேதஸ-வருணனின்.
பலப்பல ஆண்டுகளாகக் கடலில் அலைந்த வல்லமை மிகுந்த ஹிரண்யாட்சன் காற்றால் தூண்டப்பட்ட மிகப் பெரிய அலைகளைத் தன் இரும்புக் கதையால் தாக்கிக் கொண்டே சென்று வருணனின் தலைநகராகிய விபாவரீயை அடைந்தான்.
பதம் 3.17.27
தத்ரோபலப்யாஸுர-லோக-பாலகம்
யாதோ-கணாநாம் ருஷபம் ப்ரசேதஸம்
ஸ்மயந் ப்ரலப்தும் ப்ரணிபத்ய நீசவ்
ஜகாத மே தேஹாதிராஜ ஸம்யுகம்
தத்ர—அங்கு; உபலப்ய—அடைந்து; அசுரலேக—அசுரர்கள் வாழும் -இடத்தில்; பாலகம்—காப்பாளர்; யாதோகணாநாம்—நீர் வாழ் உயிரினங்களின்; ருஷபம்-இறைவன்; ப்ரசேதஸம்—வருணன்; ஸ்மயந் -புன்னகை; ப்ரலப்தும்- கேலி செய்து; ப்ரணிபத்ய-தலைவணங்கி; நீசவத் – கீழ்க்குலத்தில் பிறந்தவன் போல்; ஜகாத-அவன் கூறினான்; மே-எனக்கு; தேஹி-கொடு; அதிராஜ-ஓ தெய்வமே; ஸம்யுகம்— போர்.
பொதுவாக அசுரர்கள் உறையும் இடமாகிய அண்டத்தின் கீழ்ப்பகுதிகளின் காப்பாளனாகவும், நீர் வாழ் உயிரினங்களின் தெய்வமுமாகிய வருணனின் இருப்பிடம் விபாவரீ ஆகும். அங்கு ஹிரண்யாட்சன், வருணனின் அடிகளில் வீழ்த்து, கீழ்க்குலத்தவன் போல, அவனை கேலி செய்யும் பொருட்டு, புன்னகையுடன், ‘ஓ, மேலான இறைவனே என்னுடன் போர் செய்யலாமே” என்று கூறினான்.
பதம் 3.17.28
த்வம் லோக-பாலோ திபதிர் ப்ருஹ-ச்ரவா
வீர்யாபஹோ துர்மதவீரமா-நிநாம்
விஜித்ய லோகே கில- தைத்ய- தானவான்
யத்ராஜஸூயேன புராயஜத் ப்ரபோ
த்வம்—நீ (வருணன்); லோகபால-தோளின் பாதுகாவலன்; அதிபதி -அரசன்; ப்ருஹச்ச்ரவா—விரிந்த (பரந்த) புகழ்; வீர்ய-பலம்; அபஹ- குறைந்து; துர்மத-செருக்கின்; வீரமாநிநாம்—அவர்களைப் பெரிய நாயகர்களாக நினைத்துக் கொண்டு; விஜித்ய-பிடித்துக்கொண்டு; லோகே-உலகில்; அகில-எல்லாம்; தைத்ய-அசுரர்கள்; தானவான்- தானவர்கள்; யத்-பிறப்பிடம்; ராஜஸூயேன் ராஜௗயே – யாகத்துடன்; புரா-முன்னால்; அயஜத்-வணங்கி; ப்ரபோ – ஓ இறைவா.
நீயே எல்லாக் கோளங்களின் பாதுகாவலன். மிகுந்த புகழுடைய அரசன். செருக்கும், இறுமாப்பும் நிறைந்த வீரர்களை நசுக்கிவிட்டு, உலகிலுள்ள தைத்யர்கள், தானவர்களை வென்றுவிட்டு, நீ ஒரு சமயம் இறைவனுக்கு ராஜசூய யாகத்தை நடத்தினாய்.
பதம் 3.17.29
ஸ ஏவம் உத்சிக்த்த-மதேன வித்விஷா
த்ருதம் ப்ரலப்தோ பகவான் அபாம் பதி:
ரோஷம் ஸமுத்தம் பரமயந் ஸ்வயா தியா
வ்யவோசத அங்கோபரமம் கதா வயம்
ஸ-வருணன்; ஏவம்- இவ்வண்ணம்; உத்சிக்த-செருக்கடைந்து; மதேன-தற்பெருமை; வித்விஷா எதிரியினால்; த்குதம்-ஆழமாக; ப்ரலப்த- கேலி செய்யப்பட்ட; பகவான் – வணக்கத்திற்குரிய; அபாம்— நீரின்; பதி-இறைவன்; ரோஷம்-கோபம்; ஸமுத்தம்- உருவான; பரமயந்—கட்டுப்படுத்தி; அங்க—ஓ அன்பானவனே; உபரமம்- போரிலிருந்து ஒதுங்கியிருக்கும்; கதா—சென்ற; வயம்-நாங்கள்.
எல்லையற்ற தற்பெருமை கொண்ட எதிரியின் கேலிக்கு ஆளான, நீர்மண்டலத்தின் வணக்கத்திற்கு உரிய இறைவன் சினம் கொண்டான். அதனால் ஏற்பட்ட வடுவின் காரணமாக, தன் உள்ளார்ந்த சினத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு, “ஓ அன்பானவனே வயது முதிர்ந்து சண்டையிட இயலாமல் உள்ள யாம் போரிலிருந்து ஒதுங்கி இருக் கிறோம்” என்று பதிலுரைத்தான்.
பதம் 3.17.30
பஸ்யாமி நாந்யம் புருஷாத்புராதனாத்
ய: ஸம்புகே த்வாம் ரண-மார்சு- கோவிதம்
ஆராதயிஷ்யத்ய ஸூரர்பேஹி தம்
மனஸ்விநோ யம் க்ருணதே பவாத்ருஷகா:
பஸ்யாமி – நான் பார்க்கிறேன்; நா – இல்லை; அந்யம்- மற்ற; புருஷாத் – அவரை விட; புராதனாத்- மிகப் பழமையான; ய:- யார்; ஸம்யுகே-போரில்; த்வாம்—உனக்கு; ரணமார்க-போர்த் தந்திரங்களில்; கோவிதம்- மிகவும் திறமையான; ஆராதயிஷ்யதி— திருப்தி தருவது; அஸுரர்ஷ்ப—அசுரர்களின் தலைவனே; இஹி-அணுகுதல்; தம் – அவனை: மனஸ்விந-நாயர்கள்; யம்- எவருடைய (யாரை); க்ருணதே-புகழ்ந்து: பவாத்ருஷகா—உன்னைப் போல்.
நீ போரில் மிகுந்த திறமையுள்ளவன். மிகவும் பழமையானவராகிய பகவான் விஷ்ணுவைத் தவிர, போரில் உனக்குச் சமானமாக யாரையும் நான் காணவில்லை. அதனால், அசுரர்களின் தலைவனே, உன்னைப் போன்ற நாயகர்களும் புகழ்ச்சியாகக் குறிப்பிடும் விஷ்ணு பகவானை அணுகுவாயாக.
பதம் 3.17.31
தம் வீரம் ஆராத் அபிபத்ய விஸ்மய:
ஷயிஷ்யஸே வீர-ஷயே ஸ்வபீர் வ்ருத:
யஸ் த்வத் விதானாம் அஸ்தாம் ப்ரஸாந்தயே
ரூபாணி தத்தே ஸத்- அநுக்ரஹேச்சயா
தம்- அவனை; வீரம்-சிறந்தநாயகன்; ஆராத்- விரைவாக; அபிபத்ய- அடைந்த; விஸ்மய-செக்கிலிருந்து விடுபட்டு; ஷயிஷ்யஸே- நீ கீழே விழுவாய்; வீரஷயே-போர்க்களத்தில்; ஸ்வபி – நாய்களால்; வ்ருத-சூழப்பட்டு; ய—அவர்; த்வத்—உன்னைப் போல்; அஸதாம்- அநீதி நிறைந்தவர்கள்; ப்ரஸாந்தயே- பூண்டோடு அழிப்பதற்காக; ரூபாணி- வடிவங்கள்; தத்தே—அவர் ஊகித்து; சத்—நற்குணமுடைய; அநுக்ரஹ-அவர் அருளைக் காட்ட; இச்சயா-ஆசையுடன்.
வருணன் தொடர்ந்தார்: நீ அவரை அடைந்தவுடன் உன் செருக்கிலிருந்து உடனடியாக விடுபட்டு, போர்க்களத்தில் கீழே விழுவாய். நாய்களால் சூழப்பட்டு, நீங்காத் துயரில் ஆழ்வாய். உன்னைப் போன்ற கொடியவர்களைப் பூண்டோடு அழிப்பதற்காகவும், நல்லவர்களுக்குத் தன் அருளை வழங்குவதற்காகவும் வராகம் போன்ற பல அவதாரங்களை விஷ்ணு மேற்கொள்கிறார்.
ஸ்ரீமத் பாகவதம், மூன்றாம் காண்டத்தின், “அண்டத்தின் அனைத்துத் திசைகளிலும் ஹிரண்யாட்சனின் வெற்றி ” எனும் தலைப்பைக் கொண்ட பதினேழாம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றன.