அத்தியாயம் – 17
அண்டத்தின் அனைத்துத் திசைகளிலும்
ஹிரண்யாட்சனின் வெற்றி
பதம் 3.17.1 : ஸ்ரீ மைத்ரேயர் கூறினார்: மேலுலகைத் தாங்கள் வாழும் இடமாகக் கொண்ட தேவர்கள், இருள் சூழ்ந்து இருப்பதற்கான காரணத்தை, விஷ்ணுவுக்குப் பிறந்த பிரமன் மூலம் கேட்டலும் தத்தம் பயத்திலிருந்து விடுபட்டார்கள். பின்னர் தங்களுடைய உலகங்களுக்குத் திரும்பிச் சென்றார்கள்.
பதம் 3.17.2 : நல்லொழுக்கம் உள்ளவளாகிய திதி, பின்னால் இவ்வாறு நடக்கும் என்று அவள் கணவன் கூறியபடியே, தன் கருவிலிருக்கும் குழந்தைகளால் தேவர்களுக்குத் துன்பம் உண்டாகும் என்று சந்தேகப்பட்டாள். நூறு வருட கர்ப்ப காலத்திற்குப் பின் இவள் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்தாள்.
பதம் 3.17.3 : இந்த இரு அசுரர்களின் பிறப்பினால், மேலுலகிலும், பூவுலகிலும், இரு உலகங்களுக்கு இடையிலும், பயம் தரத்தக்க வியக்கத்தக்க தீய அறிகுறிகள் தோன்றின.
பதம் 3.17.4 : பூமியிலுள்ள மலைகளும் நடுங்கும் படியான நில நடுக்கம் ஏற்பட்டது. மற்றும் எங்கு பார்த்தாலும் தீ பரவியது போல் தோற்றமளித்தது. பல தீய அறிகுறி தரும் கோள்களான சனி போன்றவை தோன்றின. உடன் வால் நட்சத்திரங்களும் மின்னல்களும் இடிகளும் ஏற்பட்டன.
பதம் 3.17.5 : பெரிய மரங்களையும் வேருடன் சாய்க்கக் கூடியதும் மீண்டும் மீண்டும் சீறும் ஒலியுடன் உடலுக்கு இன்பமளிக்காததும் ஆகிய காற்று வீசியது. அது சுழல் காற்றைப் படையாகவும், தூசியைக் கொடியாகவும் கொண்டிருந்தது.
பதம் 3.17.6 : வானின் கண் உள்ள ஒளி தரும் பொருட்கள் எல்லாம் மேக மூட்டங்களால் சூழப்பட்ட போது, அதிலிருந்து மின்னல் சிரிப்பு போல் பளீரென்று வெளிப்பட்டது. இருள் எல்லா இடங்களிலும் பரவியதால் எந்தப் பொருளையும் பார்க்க இயலவில்லை.
பதம் 3.17.7 : சமுத்திரம் துன்பத்தால் பரிதவிப்பது போல், தன் பெரிய அலைகளுடன் உரத்து ஓலமிட்டது. அதில் வாழும் உயிரினங் களிடையில் குழப்பம் ஏற்பட்டது. நதிகளும், கிணறுகளும், ஏரிகளும் கலங்கின. தாமரை மலர்கள் வாடின.
பதம் 3.17.8 : சந்திர, சூரிய கிரகணங்களின் போது சந்திர, சூரியனைச் சுற்றி எழும் ஒளி வட்டம் மீண்டும் மீண்டும் தோன்றியது. விண்ணில் மேகங்கள் இல்லாமல் இடி முழக்கம் கேட்டது. அது மலைக் குகைகளிலிருந்து தேர்கள் வெளிவந்தால் என்ன சத்தம் எழுமோ, அதை ஒத்திருந்தது.
பதம் 3.17.9 : கிராமங்களில் உட்பகுதியில் பெண் ஓநாய்கள் ஊளையிட்டன. அவற்றின் வாயிலிருந்து அவை தீயை உமிழ்ந்தன. ஓநாய்களும் ஆந்தைகளும் இவைகளுடன் சேர்ந்து அலறின.
பதம் 3.17.10 : நாய்கள் இங்கும் அங்கும் ஓடி, பாடுவது போலவும், அழுவது போலவும் பலவிதக் குரல்களில், தங்கள் கழுத்தை நிமிர்த்திக் கொண்டு குரைத்தன.
பதம் 3.17.11 : ஓ விதுரனே! மந்தை மந்தையாக, கழுதைகள் தரையின் மேல் தங்களின் கடினமான குளம்புகள் படும்படியாக, கடுமையாகக் கத்திக் கொண்டு இங்கும் அங்கும் ஓடின.
பதம் 3.17.12 : கழுதைகளின் கத்தலால் அச்சமுற்ற பறவைகள், அதன் காரணமாகக் கதறிக் கொண்டு கூட்டை விட்டுப் பறந்து போயின. அதன் விளைவால் மாட்டுத் தொழுவத்திலும், காடுகளிலும் உள்ள கால்நடைகள் சாணமும் சிறுநீரும் கழித்தன.
பதம் 3.17.13 : பசுக்கள், பயந்து போய், பாலுக்குப் பதிலாகக் குருதியைப் பொழிந்தன. மேகங்கள் மழைக்குப் பதிலாகச் சீழை வடித்தன. கோயில்களில் இருந்த கடவுளர்களின் சிலைகள் கண்ணீர் வடித்தன. பலத்த காற்று எதும் அடிக்காமலேயே மரங்கள் கீழே விழுந்தன.
பதம் 3.17.14 : தீய அறிகுறி காட்டும் கோள்களான செவ்வாய் மற்றும் சனி போன்றவை, மிகவும் உகந்த கோள்களான புதன், வியாழன் மற்றும் வெள்ளி போன்ற பற்பல நட்சத்திரக் கூட்டங்களை விட அதிக ஒளியுடனும் மேம்பட்டும் சுடர்விட்டும் ஒளிர்ந்தன. பின்நோக்கிச் செல்வது போல் தோன்றினும், இக்கோள்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன.
பதம் 3.17.15 : பல தீய காலங்களின் அறிகுறிகளைக் குறிப்பிட்டதும், திதியின் பிள்ளைகளான ஜயன் விஜயனின் பிறப்பையும் வீழ்ச்சியையும் அறிந்த பிரம்மாவின் நான்கு புதல்வர்களைத் தவிர, அனைவரும் பயத்தால் பீடிக்கப்பட்டனர். அவர்கள் இந்த ஆற்றல்களின் இரகசியத்தையும் அறியவில்லை. ஆயினும் இந்தப் பிரபஞ்சம் உருக்குலையப் போகிறது என்று எண்ணினார்கள்.
பதம் 3.17.16 : முன் காலத்தில் தோன்றிய இந்த இரு அசுரர்களும் விரைவில் அசாதாரணமான உடல் உறுப்புகளுடன் வெளிப்பட்டனர். அவர்களின் உடலமைப்புகள் இரும்பைப் போல் விளங்கி, அவை இரண்டும், இரண்டு பெரிய மலைகளைப் போல் வளர ஆரம்பித்தன.
பதம் 3.17.17 : அவர்களின் உடல்கள், அவர்களுடைய கொண்டையுடன் கூடிய தங்க கிரீடங்களுடன் வானை முத்தமிடும் அளவிற்கு உயரமாக விளங்கின. அவர்கள் எல்லாத் திசைகளிலும் பார்வையை மறைத்தார்கள்; ஒவ்வொரு அடியிலும் பூமி குலுங்கும்படி நடந்தார்கள். அவர்களின் கைகள் ஒளிபொருந்திய கடகங்களால் அலங்கரிக்கப்பட்டன. அவர்கள் தங்களின், சிறந்த, அழகிய மேகலைகளால் சுற்றப்பட்ட தங்களின் இடுப்புகளால் சூரியனையும் மறைத்து விடும்படி நின்றார்கள்.
பதம் 3.17.18 : வாழும் உள்பொருள்களைப் படைப்பவரான காஸ்யபர், ப்ரஜாபதி அவரின் இரட்டைப் பிள்ளைகளுக்குப் பெயர் சூட்டினார். திதியின் கருவில் உருவான முதல் பிள்ளைக்கு ஹிரண்யகசிபு என்றும், முதலில் பிறந்த பிள்ளைக்கு ஹிரண்யாட்சன் என்றும் பெயர் சூட்டினார்.
பதம் 3.17.19 : மூத்த குழந்தை ஹிரண்யகசிபு, பகவான் பிரம்மாவிடமிருந்து பெற்ற ஆசியினால் மூன்று உலகங்களிலும், யாரிடமிருந்தும் மரணத்திற்கு அஞ்சாதவனாக இருந்தான். தான் பெற்ற ஆசியால் அவன் கர்வமும் செருக்கும் அடைந்து, மூன்று சூரிய மண்டலங்களையும் தன் ஆட்சியின் கீழ் கொண்டு வந்தான்.
பதம் 3.17.20 : அவன் இளைய சகோதரன், ஹிரண்யாட்சன், தன் செயல்களால் அவனுடைய மூத்த சகோதரனை எப்போதும் திருப்தி செய்யத் தயாராக இருந்தான். ஹிரண்யாட்சன், தன் தோளில் ஒரு கதையைச் சுமந்து கொண்டு, ஹிரண்யகசிபுவைத் திருப்தி செய்ய மட்டுமே, போர் உணர்ச்சி கொண்டு அண்டம் முழுவதும் பயணம் செய்தான்.
பதம் 3.17.21 : ஹிரண்யாட்சனின் மனநிலையைக் கட்டுப்படுத்தல் அரிது. அவன் தன் கால்களில் தங்கத்தாலான, கணகண என்று மணி ஒலி எழுப்பக் கூடிய கழல்களை அணிந்திருந்தான். பெரிய மாலை அவன் கழத்தை அலங்கரித்தது. அவன் தனது தோளில் ஒரு கதாயுதத்தைத் தாங்கியிருந்தான்.
பதம் 3.17.22 : அவனுடைய மன வலிமை மற்றும் உடல் வலிமையுடன் அவன் பெற்ற வரமும் அவனைக் கர்வம் கொள்ளச் செய்தது. அவன் யாரிடமிருந்தும் மரணத்திற்கு அஞ்சவில்லை. அவனைக் கண்காணிக்கவும் எதுமில்லை. எனவே தேவர்கள் அவனைப் பார்த்த கணமே, பாம்புகள் கருடனிட முள்ள அச்சத்தால் தங்களை மறைத்துக் கொள்வதைப் போல, தங்களை மறைத்துக் கொண்டார்கள்.
பதம் 3.17.23 : முன்னமேயே அதிகார போதையில் இருந்த இந்திரனும், மற்ற தேவர்களும் அசுரர் தலைவனாகிய ஹிரண்யாட்சனின் வலிமையின் முன்பு காணாமல் போய் விட்டதைப் பார்த்ததும், அந்தத் தலைவன் சத்தமாகக் கர்ஜித்தான்.
பதம் 3.17.24 : வானுலகத்திற்குரிய அரசிலிருந்து திரும்பிய பிறகு, சிற்றமுள்ள ஒரு யானையைப் போன்ற வல்லமையுள்ள அந்த அசுரன் மேலும் பயங்கரமாகக் கர்ஜித்துக் கொண்டு, விளையாட்டாக அலை மோதும் ஆழ்கடலில் தலைகீழாகப் பாய்ந்தான்.
பதம் 3.17.25 : அவன் கடலில் நுழைந்த பொழுது, வருணனின் கணங்களாகிய (படைகள்) நீர்வாழ் உயிரினங்கள் எல்லாம் பயத்தால் அதிர்ந்து போய் வெகுதாரம் ஓடின. இவ்வகையில் ஹிரண்யாட்சன் எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் தன் சிறப்பைக் காண்பித்தான்.
பதம் 3.17.26 : பலப்பல ஆண்டுகளாகக் கடலில் அலைந்த வல்லமை மிகுந்த ஹிரண்யாட்சன் காற்றால் தூண்டப்பட்ட மிகப் பெரிய அலைகளைத் தன் இரும்புக் கதையால் தாக்கிக் கொண்டே சென்று வருணனின் தலைநகராகிய விபாவரீயை அடைந்தான்.
பதம் 3.17.27 : பொதுவாக அசுரர்கள் உறையும் இடமாகிய அண்டத்தின் கீழ்ப்பகுதிகளின் காப்பாளனாகவும், நீர் வாழ் உயிரினங்களின் தெய்வமுமாகிய வருணனின் இருப்பிடம் விபாவரீ ஆகும். அங்கு ஹிரண்யாட்சன், வருணனின் அடிகளில் வீழ்த்து, கீழ்க்குலத்தவன் போல, அவனை கேலி செய்யும் பொருட்டு, புன்னகையுடன், ‘ஓ, மேலான இறைவனே என்னுடன் போர் செய்யலாமே” என்று கூறினான்.
பதம் 3.17.28 : நீயே எல்லாக் கோளங்களின் பாதுகாவலன். மிகுந்த புகழுடைய அரசன். செருக்கும், இறுமாப்பும் நிறைந்த வீரர்களை நசுக்கிவிட்டு, உலகிலுள்ள தைத்யர்கள், தானவர்களை வென்றுவிட்டு, நீ ஒரு சமயம் இறைவனுக்கு ராஜசூய யாகத்தை நடத்தினாய்.
பதம் 3.17.29 : எல்லையற்ற தற்பெருமை கொண்ட எதிரியின் கேலிக்கு ஆளான, நீர்மண்டலத்தின் வணக்கத்திற்கு உரிய இறைவன் சினம் கொண்டான். அதனால் ஏற்பட்ட வடுவின் காரணமாக, தன் உள்ளார்ந்த சினத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு, “ஓ அன்பானவனே வயது முதிர்ந்து சண்டையிட இயலாமல் உள்ள யாம் போரிலிருந்து ஒதுங்கி இருக் கிறோம்” என்று பதிலுரைத்தான்.
பதம் 3.17.30 : நீ போரில் மிகுந்த திறமையுள்ளவன். மிகவும் பழமையானவராகிய பகவான் விஷ்ணுவைத் தவிர, போரில் உனக்குச் சமானமாக யாரையும் நான் காணவில்லை. அதனால், அசுரர்களின் தலைவனே, உன்னைப் போன்ற நாயகர்களும் புகழ்ச்சியாகக் குறிப்பிடும் விஷ்ணு பகவானை அணுகுவாயாக.
பதம் 3.17.31 : வருணன் தொடர்ந்தார்: நீ அவரை அடைந்தவுடன் உன் செருக்கிலிருந்து உடனடியாக விடுபட்டு, போர்க்களத்தில் கீழே விழுவாய். நாய்களால் சூழப்பட்டு, நீங்காத் துயரில் ஆழ்வாய். உன்னைப் போன்ற கொடியவர்களைப் பூண்டோடு அழிப்பதற்காகவும், நல்லவர்களுக்குத் தன் அருளை வழங்குவதற்காகவும் வராகம் போன்ற பல அவதாரங்களை விஷ்ணு மேற்கொள்கிறார்.