அத்தியாயம் – 11
அணுவிலிருந்து தொடங்கும் காலக்கணிதம்
பதம் 3.11.1
மைத்ரேய உவாச
சரம: ஸத்-விசேஷாணாம் அனேகோ ‘ஸம்யுத: ஸதா
பரமாணு: ஸ விஜ்ஞேயோ ந்ருணாம் ஐக்ய-ப்ரமோ யத:

மைத்ரேய: உவாச-மைத்ரேயர் கூறினார்; சரம:-இறுதி; ஸத் – விளைவு: விசேஷாணாம் – அடையாளங்கள்; அனேக:-எண்ணற்றவை; அஸம்யுத:- கலப்பற்ற; ஸதா — எப்பொழுதும்; பரம- அணு:-பரம் அணுக்கள்; ஸ:—அந்த; விஜ்ஞேய:- புரிந்து கொள்ளப்படும்; ந்ருணாம்-மனிதர்களின்; ஐக்ய- ஒன்றாதல்; ப்ரம:தவறாக; யத:- அதிலிருந்து.

உலகப் பொருள்களின் இறுதிக் கூறு பிரிக்க முடியாதது என்பதோடு ஓர் உடலினுள் அது உருவாவதும் இல்லை. இதுவே அணு என்று அழைக்கப்படுகிறது. அனைத்து வடிவங்களும் அழிக்கப்பட்டப் பிறகும் அது எப்பொழுதும் கண்களுக்குப் புலனாகாத தனித்தன்மையுடையதாயிருக்கிறது. இவ்வணுக்களின் கூட்டினாலேயே இப்பூதவுடல் ஆனது. ஆயினும் இது சாதாரண மனிதனால் தவறாகப் புரிந்துகொள்ளப்படுகிறது.

பதம் 3.11.2
ஸத ஏவ பதார்தஸ்ய ஸ்வரூபாவஸ்திதஸ்ய யத்
கைவல்யம் பரம-மஹான் அவிசேஷோ நிரந்தர:

ஸத:-ஆற்றல் மிக்க தோற்றத்தின்; ஏவ – உறுதியாக; பத- அர்தஸ்ய-பூத உடல்களின்; ஸ்வரூப- அவஸ்திதஸ்ய-ஊழி இறுதிக் காலத்தில் கூட அதே வடிவத்தில் இருக்கும்; யத்—அந்த; கைவல்யம்- ஐக்கியம்; பரம-உயர்ந்த; மஹான்—அளவற்ற; அவிசேஷோ— வடிவங்கள்; நிரந்தர:-நிரந்தரமானது.

கண்ணுக்குப் புலனாகின்ற இந்த உலகின் உறுதி நிலையாக இருப்பவை அணுக்களேயாகும். பல்வேறு உடல்களை உருவாக்காது அவை தமது சுயரூபத்தில் இருக்கும்பொழுது அளவற்ற ஒருமையுடையனவென்று அழைக்கப்படுகின்றன. பூதவுடல்களைப் பொறுத்த வரையில் பல்வேறு வடிவங்கள் நிச்சயம் இருக்கின்றன. ஆனால் அணுக்கள் தாமே ஒரு முழுத் தோற்றத்தினை உருவாக்குகின்றன.

பதம் 3.11.3
ஏவம் காலோ ‘பி அனுமித:
ஸௌக்ஷ்ம்யே ஸ்தௌல்யே ச ஸத்தம
ஸம்ஸ்தான-புக்த்யா பகவான்
அவ்யத்தோ வ்யக்த-புக் விபு:

ஏவம்-இவ்வாறு; கால:-காலம்: அபி-மேலும்; அனுமித- அளவிடப்படும்;ஸௌக்ஷ்ம்யே- நுண்மையின் (சூக்கும); ஸ்தௌல்யே-பூத வடிவங்கள் (ஸ்தூலம்); ச-மேலும்; ஸத்தம—ஓ. சிறந்தவனே; ஸம்ஸ்தான -அணுக்களின் கலப்பில்; புக்த்யா- சலனத்தினால்; பகவான் – முழுமுதற் கடவுள்; அவ்யக்த: – வெளிப்படாதது; வ்யக்த-புக்— பௌதிக அசைவுகள் அனைத்தையும் கட்டுப்படுத்துகின்ற; விபு:-சிறந்த சக்தி.

அணுக்களின் அணைப்பினால் ஆகிய உடல்களின் வளர்ச்சியினை அளப்பதின் மூலம் ஒருவன் காலத்தைக் கணக்கிடலாம். காலமே அனைத்துமான முழுமுதற் கடவுளான ஹரியின் சக்தியாக விளங்குகிறது. அவர் இந்தப் புற உலகின் பார்வைக்குப் புலனாகாதவராக இருந்த போதிலும் உலக அசைவுகள் அனைத்தையும் அவரே கட்டுப்டுத்துகிறார்.

பதம் 3.11.4
ஸ கால: பரமாணுர் வை யோ புங்க்தே பரமாணுதாம்
ஸதோ ‘விஸேஷாபுக் யஸ் து ஸ கால: பரமோ மஹான்

ஸ:-அந்த; கால:- நித்தியக் காலம்; பரம-அணு:-அணு; வை – உறுதியாக; ய:-அந்த; புங்க்தே – கடந்து செல்லும்; பரம – அணுதாம்-ஓர் அணுவின் இடைவெளி; ஸத: – ஒட்டுமொத்தக் கூட்டு; அவிஸேஷ – புக் – இரண்டற்றக் காட்சியின் வழியே கடந்து செல்லும்; ய: து—அது; ஸ:—அந்த; கால:-காலம்; பரம:-உயர்ந்து; மஹான்- பெரிய.

அணுவினுடைய காலம் என்பது, அது பரவியுள்ள இடத்தின் அளவைப் பொருத்ததாகும். கண்ணுக்குப் புலப்படாத ஒட்டுமொத்த அணுக்கள் பரவியுள்ள அனைத்து இடங்களையும் கடந்ததே மகாகாலம் ஆகும்.

பதம் 3.11.5
அணுர் த்வெள பரமாணு ஸ்யாத் த்ரஸரேணுஸ் த்ரய ஸ்ம்ருத:
ஜாலார்க-ரஷ்மி-அவகத: கம் ஏவானுபதன் அகாத்

அணு:-இரு அணுக்கள்; த்வெள-இரண்டு; பரம- அணு – அணுக்கள்; ஸ்யாத்-ஆகிறது; த்ரணுரேணு:-ஆறு அணுக்கள்; த்ரய- மூன்று; ஸ்ம்ருத:-கருதப்படுகிறது; ஜால-அர்க—ஜன்னல் திரையின் துளைகளின் வழியே வரும் சூரிய ஒளி; ரஷ்மி-கதிர்களினால்; அவகத:- அறியப்படுகிறது; கம் ஏவ-வானை நோக்கி; அனுபதன் அகாத்- மேலே செல்கிறது.

காலத்தின் பிரிவுகள் பின்வருமாறு கணக்கிடப்படுகின்றன. இரு அணுக்கள் சேர்த்து ஓர் இரட்டை அணுவாகிறது. இவ்விரட்டையணுக்கள் மூன்று சேர்ந்து அறுவணுவாகிறது. இவ்வறுவணுவானது ஜன்னல் திரையின் துளைகளின் வழியே வரும் சூரிய ஒளியில் காணப்படுவதாகும். இவ்வறுவணுவானது வானை நோக்கிச் செல்வதை ஒருவன் தெளிவாகக் காணலாம்.

பதம் 3.11.6
த்ரஸரேணு-த்ரிகம் புங்கதே ய: கால: ஸ திருடி ஸ்ம்ருத:
ஸத-பாகஸ் து வேத: ஸ்யாத் தைஸ் த்ரிபிஸ் து லவ: ஸ்ம்ருத:

த்ரஸரேணு-த்ரிகம்—ஆறு அணுக்கள் மூன்றின் கூட்டினால்; புங்க்தே – இணைவதற்காக அவை எடுத்துக் கொள்ளும் நேரம்; ய:- அந்த; கால:- கால அளவு; ஸ:-அது; த்ருடி:-த்ருடி எனப்படுகிறது; ஸத-பாக:-ஒரு நூறு திருடிகள்; து-ஆனால்; வேத:- வேதம் எனப்படும்; ஸ்யாத்- இது நேர்கிறது; தை:-இவற்றினால்; த்ரிபி:-மூன்று தடவைகள்; து-ஆனால்; லவ:லவ; ஸ்ம்ருத: – என்றழைக்கப்படுகிறது.

மூன்று திரஸரேணுக்கள் சேர்வதற்கானக் காலம் த்ருடி
என்றழைக்கப்படுகிறது. இவ்வாறு நூறு த்ருடிகள் சேர்ந்து ஒரு வேதம் ஆகும். மூன்று வேதங்கள் ஒரு லவ ஆகும்.

பதம் 3.11.7
நிமேஷஸ் த்ரி-லவோ ஜ்ஞேய ஆம்நாதஸ் தே த்ரய க்ஷண
க்ஷணான் பஞ்ச விது காஷ்டாம் லகு தா தஸ பஞ்ச ச


நிமேஷ:- “நிமேஷ” எனப்படும் காலத்தின் அளவு: த்ரி—லவ: -மூன்று லவக்களின் கால அளவு: ஜ்ஞேய-அறியப்படுகிறது; ஆம்நாத: -என்றழைக்கப்படுகிறது; தே-அவைகள்; த்ரய:-மூன்று; க்ஷண: – க்ஷணம் எனப்படும் கால அளவு; க்ஷணான்—இக்க்ஷணங்கள்; பஞ்ச— ஐந்து: விது:-ஒருவன் புரிந்து கொள்ள வேண்டும்; காஷ்டாம் – ஒரு காஷ்டா என்றழைக்கப்படும் காலத்தின் அளவு: லகு-லகு என்றழைக்கப்படும் கால அளவு; த:-அவை; தஷ பஞ்ச—பதினைந்து; ச- மேலும்.

மூன்று லவக்களின் கால அளவானது ஒரு நிமேஷம் ஆகும். மூன்று நிமேஷங்கள் இணைந்து வரும் கால அளவு ஒரு க்ஷணம் ஆகும். ஐந்து க்ஷணங்கள் இணைந்து ஒரு காஷ்டா ஆகிறது. பதினைந்து காஷ்டாக்கள் சேர்ந்தால் அது ஒரு லகுவாகும்.

பதம் 3.11.8
லகூனி வை ஸமாம்னாதா தஸ பஞ்ச ச நாடிகா
தே த்வே முஹுர்த: ப்ரஹர: ஷட் யாம: ஸப்த வா ந்ருணாம்

லகூனி – இந்த லகுக்கள் (ஒவ்வொன்றும் இரண்டு நிமிடங்களை உடையதாகும்), வை-சரியாக ; ஸமாம்னாதா—அழைக்கப்படுகிறது; தஸ பஞ்ச-பதினைந்து; ச-மேலும்; நாடிகா- ஒரு நாடிகை; தே- அவற்றின்; த்வே-இரண்டு: முஹூர்த:—ஒரு கணம்; ப்ரஹர: – மூன்று மணிகள்; ஷட்-ஆறு; யாம:-இரவு அல்லது பகலின் நான்கில் ஒரு பகுதி: ஸப்த- ஏழு; வா-அல்லது; ந்ருணாம்- மனிதர் தம் கணக்கு.

பதினைந்து லகுக்கள் சேர்ந்து ஒரு நாடிகையை உருவாக்குகின்றன. இந்தாடிகையானது தண்டம் என்றும் அழைக்கப்படுகிறது. இரு தண்டங்கள் சேர்ந்து ஒரு முகூர்த்தமாகும். ஆறு அல்லது ஏழு தண்டங்கள் சேர்ந்து மனிதர்கள் கணக்கிடும் ஒரு பகல் அல்லது ஓர் இரவில், நான்கில் ஒரு பகுதியினை உருவாக்குகின்றன.

பதம் 3.11.9
த்வாதஸார்த-பலோன்மானம் சதுர்பிஸ் சதுர்-அங்குலை:
ஸவர்ண மாஷை: க்ருத-ச்சித்ரம் யாவத் ப்ரஸ்த-ஜல-ப்லுதம்

த்வாதஸ- அர்த—ஆறு; பல-அளவின் எடை; உன்மானம்-அளக்கின்ற பானை; சதுர்பி:-நான்கின் எடையினால்; சது:- அங்குலை:-நான்கு அங்குலங்கள்; ஸ்வர்ண- தங்கத்தின்; மாஷை:- கனத்தின்; க்ருத—சித்ரம்- ஓர் துளை உண்டுபண்ணி; யாவத்—அது வரை; ப்ரஸ்த-ஒரு பிரஸ்த அளவு; ஜல-ப்லுதம்—நீரினால் நிரப்பப்பட்ட..

ஒரு நாடிகை அல்லது ஒரு தண்டத்தினை அளப்பதற்கான பானையானது ஆறு பலம் (பதினான்கு அவுன்ஸ்) எடையில் தாமிரத்தினால் செய்யப்படுதல் வேண்டும். அப்பானையினுள் நான்கு மாஷ எடையும் நான்கு விரற்கடை (நான்கு அங்குலம்) நீளமும் கொண்ட ஒரு தங்கக் கம்பியை இணைத்துத் துளையிட்டு பானையில் நீர் நிரம்பி வழிவதற்கு ஆகக்கூடிய நேரமே தண்டம் என்றழைக்கப்படுகிறது.

பதம் 3.11.10
யாமாஸ் சத்வாரஸ் சத்வாரோ மர்த்யானாம் அஹனீ உபே
பக்ஷ: பஞ்ச-தஸஹானி ஸுக்ல: க்ருஷ்ணஸ் ச மானத

யாம:-மூன்று மணி நேரங்கள்; சத்வார:-நான்கு; சத்வார: – நான்கும்; மர்த்யானாம்-மனிதர்களின்; அஹனீ-பகற்பொழுதின் கால அளவு: உபே-பகலும் இரவும்; பக்ஷ: -இரு வாரங்கள்: பஞ்ச-தஸ- பதினைந்து; அஹானி- நாட்கள்; ஸுக்ல;—வெண்மை; க்ருஷ்ண: -கருமை; ச -மேலும்; மானத —அளக்கப்பட்டது.

நான்கு பிரஹரஸ்கள் உள்ளதாக கணக்கிடப்படுகின்றன. இதனை யாமம் என்றும் அழைத்தனர். இது மனிதர்களுக்கான பகலில் நான்கும் இரவில் நான்கும் ஆகும். இதுபோன்று பதினைந்து பகலும் பதினைந்து இரவும் சேர்ந்து இரண்டு வார காலம் ஆகும். இவ்வாறு ஒரு மாதத்தில் இரு இரண்டு வார காலங்கள் வெண்மையென்றும் (சுக்கில) கருமை என்றும் (கிருஷ்ண) இருக்கின்றன.

பதம் 3.11.11
தயோ ஸமுச்சயோ மாஸ பித்ரூணாம் தத் அஹர்-நிஷம்
த்வௌ தாவ் ருது: ஷட் அயனம் தக்ஷிணம் சோத்தரம் திவி

தயோ–அவற்றின்; ஸமுச்சய:- கூட்டுத்தொகை: மாஸ:- மாதம்; பித்ரூணாம்- பித்ருலோகத்தின்; தத்—அது (மாதம்): அஹ:- நிஷம்— இரவும் பகலும்; த்வௌ-இரண்டு; தௌ-மாதங்கள்; ருது:-பருவம்; ஷட்- ஆறு; அயனம்—ஆறுமாதங்களில் சூரியன் செய்யும் பயணம்; தக்ஷிணம்- தென்திசை; ச-மேலும்; உத்தரம்-வடதிசை; திவி- வானத்தில்.

இவ்வாறு இரு இரண்டு வாரங்கள் சேர்ந்தது ஒரு மாதம் ஆகும். இம்மாதம் பித்ரு லோகத்தில் ஒரு முழு பகலும் ஒரு முழு இரவும் கொண்டதாகும். இது போன்ற இரண்டு மாதங்கள் கொண்டது ஒரு ருது அல்லது பருவம் ஆகும். சூரியன் தெற்கிலிருந்து வடக்கிற்குப் பயணம் செய்யுங்காலம் ஆறு மாதங்கள் ஆகும்.

பதம் 3.11.12
அயனே சாஹனீ ப்ராஹுர் வத்ஸரோ த்வாதஸ ஸ்ம்ருத:
ஸம்வத்ஸர-ஸதம் ந்ரூணாம் பரமாயுர் நிரூபிதம்

அயனே-இச்சூரிய பயணம் (ஆறு மாதங்கள்); ச-மேலும்: அஹனீ-தேவர்களின் ஒரு நாள்; ப்ராஹு:- என்று கூறப்படுகிறது; வத்ஸர:- ஒரு வருடம்; த்வாதஸ-பன்னிரெண்டு மாதங்கள்; ஸ்ம்ருத:-என்றழைக்கப்படுகிறது; ஸம்வத்ஸர- ஸதம்—நூறு வருடங்கள்; ந்ரூணாம் -மனிதர்களின்; பரம-ஆயு:-ஆயுட்காலம் நிரூபிதம் – கணக்கிடப்படுகிறது.

இவ்வாறு சூரியனின் உத்தராயனம் மற்றும் தக்ஷிணாயனம் என்றும் இரண்டும் சேர்ந்து தேவர்களுக்கு ஒர் இரவும் ஒரு பகலுமாகும். இதுவே மனிதர்களுக்கு ஒரு வருடமாகும். மனிதர்களுக்கு ஆயுட்காலம் நூறு வருடங்களாகும்.

பதம் 3.11.13
க்ரஹர்க்ஷ-தாரா-சக்ர-ஸ்த: பரமாணுவ்-ஆதினா ஜகத்
ஸம்வத்ஸராவஸானேன பர்யேதி அநிமிஷோ விபு:

க்ரஹ-பாதிக்கின்ற சந்திரன் போன்ற கிரகங்கள்; ருக்ஷ -அஸ்வினி போன்ற நட்சத்திரங்கள்; தாரா-விண்மீன்; சக்ர- ஸ்த:- கோளப்பாதையில்; பரம-அணு-ஆதினா— அணுக்களுடன் சேர்ந்து; ஜகத்-முழுப் பிரபஞ்சம்; ஸம்வத்ஸர -அவஸானேன-ஒரு வருடத்தின் இறுதியில்; பர்யேதி- அதன் கோள்ப் பாதை முடிகிறது; அநிமிஷ: -நித்தியக்காலம்; விபு:-எல்லாம் வல்லவர்.

பரம்பொருளின் கட்டளை என்னும் நித்திய காலத்தில் நம்மைப் பாதிக்கும் கிரகங்கள், நட்சத்திரங்கள், ஒளிக்கோளங்கள் மற்றும் அணுக்கள் போன்ற இப்பிரபஞ்சத்திலுள்ள அனைத்தும் தத்தமக்குரிய கோளப் பாதைகளில் சுழல்கின்றன.

பதம் 3.11.14
ஸம்வத்ஸர: பரிவத்ஸர இடா-வத்ஸர ஏவ ச
அநுவத்ஸரோ வத்ஸரஸ் ச விதுரைவம் ப்ரபாஷ்யதே

ஸம்வத்ஸர:-சூரியனின் கோளப் பாதை; பரிவத்ஸர: பிருஹஸ்பதியின் சுற்று; இடா—வத்ஸர:-விண்மீன்களின் கோளப் பாதை; ஏவ-அவற்றைப் போன்று; ச-மேலும்; அநுவத்ஸர: -சந்திரனின் கோளப் பாதை; வத்ஸர:-ஒரு வருடம்; ச-மேலும்; விதுர—ஓ விதுரரே; ஏவம்- இவ்வாறு; ப்ரபாஷ்யதே—அவை சொல்லப்பட்டிருக்கின்றன.

வான மண்டலத்தில் உள்ள சூரியன், சந்திரன், விண்மீன் மற்றும் ஒளிக்கோளங்களுக்கு ஐந்து வெவ்வேறு வகையான பெயர்களுடைய தனித்தனிக் கோளப் பாதைகள் இருக்கின்றன. அவை ஒவ்வொன்றிற்கும் சொந்தமான ஸம்வத்ஸரங்களும் உள்ளன.

பதம் 3.11.15
ய: ஸ்ருஜ்ய-ஸக்திம் உருதோச்வஸயன் ஸ்வ-ஸக்த்யா
பும்ஸோ அப்ரமாய திவி தாவதி பூத-பேத:
காலாக்யயா குணமயம் க்ரதுபிர் விதன்வம்ஸ்
தஸ்மை பலிம் ஹரத வத்ஸர-பஞ்சகாய

ய:- எவர்; ஸ்ருஜ்ய-படைப்பின்; ஸக்திம்- விதைகள்;உருதா-பல்வேறு வழிகளில்; உச்வஸயன்- எழுச்சியூட்டுகிறார்; ஸ்வ-ஸக்த்யா—அவரது சுயசக்தியால்;பும்ஸ:உயிர்வாழியின்; அப்ரமாய- இருளை விரட்டுவதற்கு; திவி—பகற்பொழுதில்; தாவதி- அசைதல்; பூத-பேத:- பிற பௌதிக வடிவத்திலிருந்து வேறான; கால-ஆக்யயா-நித்தியக் காலம் என்னும் பெயரில்; குண-மயம்- பௌதிக விளைவுகள்: க்ரதுபி:-அர்ப்பணிப்பதினால்; விதன்வன்- விரிவுபடுத்துதல்; தஸ்மை-அவருக்கு: பலிம்- அர்ப்பணிப்பதற்கானப் பொருட்கள்; ஹரத-ஒருவன் அர்ப்பணிக்க வேண்டும்; வத்ஸர- பஞ்சகாய-ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை அர்ப்பணிக்க வேண்டும்.

ஓ, விதுரரே, சூரியன் தனது அளவற்ற வெம்மையினாலும், ஒளியினாலும் அனைத்து உயிர்களுக்கும் புத்துணர்ச்சி தருகிறார். உலகப் பற்றின் மாயையிலிருந்து விடுவிப்பதற்காக அவர் உயிர்களின் வாழ்நாள் காலத்தைக் குறைக்கிறார். மேலும் தேவலோகத்திற்கு நம்மை அழைத்துச் செல்லும் பாதையினை விரிவுபடுத்தவும் செய்கிறார். அவர் இவ்வாறு தனது கோளப் பாதையில் மிகுந்த விசையுடன் சுழல்கிறார். ஆகையினால் அனைவரும் அவரை ஐந்து வருடங்களுக்கொரு முறை உரிய வழிபாட்டுப் பொருட்களுடன் வணங்குவதில் மூலம் தமது மரியாதையினைச் செலுத்துதல் வேண்டும்.

பதம் 3.11.16
விதுர உவாச
பித்ரு-தேவ-மனுஷ்யாணாம் ஆயு: பரம் இதம் ஸ்ம்ருதம்
பரேஷாம் கதிம் ஆசக்ஷ்வ யே ஸ்யு: கல்பாத் பஹிர் வித:

விதுர: உவாச-விதுரர் கூறினார்; பித்ரு-பித்ருலோகம்; தேவ- தேவலோகங்கள்; மனுஷ்யாணாம்-மனிதர்களின்; ஆயு:-ஆயுள்; பரம் – இறுதி; இதம்—அவர்களது அளவு; ஸ்ம்ருதம்- கணக்கிடுதல்; பரேஷாம் – மேலான உயிர்வாழிகள்; கதிம்-ஆயுட்காலம்; ஆசக்ஷ்வ— அன்புடன் கணக்கிட்டு; யே—அவர்கள் அனைவரின்; ஸ்யு: இருக்கின்ற; கல்பாத்-கல்பத்திலிருந்து; பஹி:-மேலாக; வித:- கற்றறிந்த சான்றோர்களின்.

விதுரர் கூறினார்: நான் இப்பொழுது, மண்ணுலகு, விண்ணுலகு மற்றும் தேவ லோகத்தைச் சேர்ந்த அனைவரின் ஆயுட்காலமும் என்னவென்று அறிந்து கொண்டேன். மேலும் எனக்கு கல்ப காலத்தையும் தாண்டி வாழும் சிறந்த கற்றறிந்த உயிர்களின் வாழ்நாள் காலத்தைப் பற்றி அருள் கூர்ந்து விளக்குவீராக.

பதம் 3.11.17
பகவான் வேத காலஸ்ய கதிம் பகவதோ நனு
விஸ்வம் விசக்ஷதே தீரா யோக-ராத்தேன சக்ஷுஷா

பகவான்-ஓ, ஆன்மீகச் சக்தியில் நிகரற்றவரே, வேத-நீர் அறியும்; காலஸ்ய-நித்தியக் காலத்தின்; கதிம்- இயக்கம்: பகவத:-முழுமுதற் கடவுளின்; நனு-உண்மையில்; விஸ்வம்-முழு பிரபஞ்சமும்; விசக்ஷதே-காணல்;தீர:- தன்னுணர்வு பெற்றோர்; யோக-ராத்தேன— தெய்வீகப் பார்வையினால்; சக்ஷுஷா- விழிகளினால்.

ஓ.ஆன்மீக ஆற்றல் மிக்கவரே, முழுமுதற் கடவுளின் கட்டுப்படுத்தும் வடிவமாக விளங்கும் நித்திய காலத்தின் அசைவுகளை உம்மால் அறிந்து கொள்ளக்கூடும். நீர் தன்னுணர்வு பெற்றவராதலினால் உமது தெய்வீகப் பார்வையின் சக்தியினால் நீர் எதையும் காணமுடியும்.

பதம் 3.11.18
மைத்ரேய உவாச
க்ருதம் த்ரேதா த்வாபரம் ச கலிஸ் சேதி சதுர்-யுகம்
திவ்யைர் த்வாதஸபிர் வர்ஷை: ஸாவதானம் நிரூபிதம்

மைத்ரேய: உவாச-மைத்ரேயர் கூறினார்; க்ருதம்–சத்திய யுகம்; த்ரேத–திரேதாயுகம்; த்வாபரம்–துவாபரயுகம்; ச-மேலும்; கலி- கலியுகம்; ச-மேலும்; இதி-இவ்வாறு; சது:- யுகம் -சதுர்யுகங்கள்:திவ்யை:- தேவர்களின் ; த்வாதஸபி:-
பன்னிரெண்டு; வர்ஷை: ஆயிரக்கணக்கான வருடங்கள்; ஸ – அவதானம்- ஏற்றதாழ; நிரூபதம்- உறுதிப்படுத்தப்படுதல்.

மைத்ரேயர் கூறினார்: ஓ, விதுரரே, சதுர் யுகம் எனப்படுவது சத்ய யுகம், திரேதாயுகம், துவாபரயுகம் மற்றும் கலியுகம் என்றழைக்கப்படுகிறது. இந்நான்கு யுகங்களின் மொத்த வருடங்கள் பன்னிரெண்டாயிரம் தேவ வருடங்களுக்கு இணையானதாகும்.

பதம் 3.11.19
சத்வாரி த்ரீணி த்வே சைகம் க்ருதாதிஷு யதா-க்ரமம்
ஸங்க்யாதானி ஸஹஸ்ராணி த்வி-குணானி ஸதானி ச

சத்வாரி – நான்கு; த்ரீணி-மூன்று; த்வே-இரண்டு; ச-மேலும்; ஏகம்- ஒன்று; க்ருத-ஆதிஷு-சத்திய யுகத்தில்; யதா -க்ரமம்— அதைத் தொடர்ந்து மற்றவைகளும்; ஸங்க்யாதானி – எண்ணிக்கை; ஸஹஸ்ராணி-ஆயிரங்கள்; த்வி-குணானி—இரு தடவை; ஸதானி- நூற்றுக்கணக்கில்; ச-மேலும்.

சத்திய யுகமானது 4,800 தேவ வருடங்களுக்குச் சமமானதாகும்; திரேதாயுகம் என்பது 3,600 தேவ வருடங்களுக்குச் சமமாகும்; துவாபரயுகம் 2,400 தேவ வருடங்களுக்கும், கலியுகம் 1,200 தேவ வருடங்களுக்கும் இணையானவையாகும்.

பதம் 3.11.20
ஸந்த்யா-ஸந்த்யாம்ஸயோர் அந்தர் ய: கால: ஸத-ஸங்க்யயோ:
தம் ஏவாஹுர் யுகம் தஜ்-ஞா யத்ர தர்மோ விதீயதே

ஸந்த்யா – ஒரு யுகத்தின் முன்புள்ள காலம்; ஸந்த்யா—அம்ஸயோ: ஒரு யுகத்தின் பின்புள்ள காலம்: அந்த:-இடையில்; ய:-அந்த; கால: காலம்;ஸத-ஸங்க்யயோ:- நூற்றுக்கணக்கான வருடங்கள்: தம்- ஏவ- அக்காலம்; ஆஹு:-அழைப்பர்; யுகம்- யுகம்; தத்- ஜ்ஞா:- தேர்ந்த வானநூல் வல்லுநர்கள்; யத்ர-அங்கே; தர்ம: சமயநெறி, விதீயதே – நிறைவேற்றப்படுகிறது.

இரண்டு யுகங்களின் முடிவிற்கும் ஆரம்பத்திற்கும் உள்ள இடைப்பட்டக் காலமானது பல நூறு வருடங்கள் என்று மேலே குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதனை யுக – சந்தி என்று அழைப்பர் தேர்ந்த வானநூல் வல்லுநர்கள். இக்கால கட்டத்திலேயே, சமயத்தின் பல்வேறு அறநெறிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

பதம் 3.11.21
தர்மஸ் சதுஷ்-பான் மனுஜான் க்ருதே ஸமநுவர்ததே
ஸ ஏவான்யேஷ்வ் அதர்மேண வ்யேதி பாதேன வர்ததா

தர்ம:-சமயநெறி; சது:-பாத்- முற்றிலும் நான்கு பக்கம்; மனுஜான் -மனிதஇனம்; க்ருதே – சத்தியயுகத்தில்; ஸமநுவர்ததே-முறையாக காக்கப்பட்டது; ஸ:-அந்த: ஏவ-உறுதியாக; அன்யேஷு—பிறவற்றில்; அதர்மேண-சமயத்திற்குப் புறம்பான பாதிப்பினால்; வ்யேதி— குறைந்தது: பாதேன- ஒரு பாகத்தினால்; வர்ததா- படிப்படியாக உயர்ந்தது.

ஓ. விதுரரே, சத்திய யுகத்தில் மனித இனம் சமய அறநெறிகளை முறையாகக் காத்து வந்தது. ஆனால் பிற யுகங்களில் சமயத்திற்குப் புறம்பான அதர்மங்களை அனுமதித்ததினால் சமய தர்மத்தின் ஒரு பகுதி படிப்படியாகக் குறைந்தது.

பதம் 3.11.22
த்ரி-லோக்யா யுக-ஸாஹஸ்ரம் பஹிர் ஆப்ரஹ்மணோ தினம்
தாவதி ஏவ நிஸ தாத யன் நிமீலதி விஸ்வ-ஸ்ருக்

த்ரி-லோக்யா:-மூன்று லோகங்களின்; யுக-நான்கு யுகங்கள்;ஸாஹஸ்ரம்-ஓராயிரம்; பஹி:-மேலே; ஆப்ரஹ்மண:-பிரம்ம லோகத்திற்கு; தினம்- ஒருநாள்; தாவதீ- இதுபோன்ற (காலம்); ஏவ- உறுதியாக; நிஷா-இரவில்; தாத- ஓ. அன்பிற்குரியோனே; யத்-ஏனென்றால்;நிமீலதி— துயில்வதற்குப் போகிறார்; விஷ்வ- ஸ்ருக்-பிரம்ம தேவர்.

இம்மூன்று லோகங்களுக்கும் மேலாக, (சொர்க்கம், மர்த்யம், மற்றும் பாதாளம்) நான்கு யுகங்களையும் ஆயிரத்தினால் பெருக்கி வரும் வருடங்கள் பிரம்ம லோகத்தில் ஒரு பகலாகும். இது போன்றக் காலமே பிரம்ம தேவருக்கு ஒர் இரவும் ஆகும். அவ்விரவில் பிரபஞ்சத்தினைப் படைத்தவர் துயில்வதற்குச் செல்கிறார்.

பதம் 3.11.23
நிஸாவஸான ஆரப்தோ லோக-கல்போ அநுவர்ததே
யாவத் தினம் பகவதோ மனூன் பூஞ்ஜம்ஸ் சதுர்-தஸ

நிஸா – இரவு; அவஸானே- முடிவில்; ஆரப்த:-இருந்து தொடங்குதல்; லோக -கல்ப:-மீண்டும் மூவுலகைப் படைப்பதற்கானது; அநுவர்ததே-தொடர்கிறது; யாவத்—அதுவரை; தினம் -பகல்: பகவத:-பகவானின் (பிரம்மதேவர்); மனூம்-மனுக்கள்.பூஞ்ஜன்- மூலம் வெளிவருகிறது;சது:தஸ- பதினான்கு.

பிரம்ம தேவரின் இரவு முடிந்தவுடன், அவரது பகற்காலத்தில் மூன்று லோகங்களின் படைப்பும் மீண்டும் துவங்குகிறது. அவை தொடர்ந்து மனித குலத்தின் தந்தையராகக் கருதப்படும் பதினான்கு மனுச் சக்கரவர்த்திகளின் ஆயுட்காலம் வரையில் இருக்கும்.

பதம் 3.11.24
ஸ்வம் ஸ்வம் காலம் மனுர் புங்க்தே ஸாதிகாம் ஹி ஏக – ஸப்ததிம்

ஸ்வம் – சுயம்; ஸ்வம்- பொருத்து; காலம்—ஆயுட்காலம்; மனு:- மனு: புங்கதே-அனுபவிக்கிறார்; ஸ-அதிகாம்- சற்று அதிகமாக ; ஹி-உறுதியாக ; ஏக-ஸப்ததிம்—எழுபத்தியொன்று.

ஒவ்வொரு மனுவின் ஆயுட்காலமும் எழுபத்தியோரு சதுர் யுகங்களுக்கு சற்று
அதிகமானதாகும்.

பதம் 3.11.25
மன்வந்தரேஷு மனவஸ் தத்-வம்ஸ்யா ருஷய: ஸுரா:
பவந்தி சைவ யுகபத் ஸுரேஸாஸ் சானு யே ச தான்

மனு-அந்தரேஷு—ஒவ்வொரு மனுவின் இறுதிக் காலத்திற்குப் பிறகு: மனவ:-பிற மனுக்கள்; தத்- வம்ஸ்யா:—அவர்களின் சந்ததியினரும்; ருஷய:-சப்தரிஷிகளும்; ஸுரா:-பகவானின் பக்தர்களும்; பவந்தி—மலர்ந்து; ச—ஏவ—அவர்கள் அனைவரும் கூட: யுகபத்- ஒரே சமயத்தில்; ஸுர-ஈஸா:-இந்திரனைப் போன்ற தேவர்கள்; ச-மேலும்; அனு-பின்பற்றுவோம்; யே-அனைவரும்; ச- கூட; தான்— அவர்கள்.

ஒவ்வொரு மனுவின் இறுதிக் காலத்திற்குப் பிறகு, வரிசைக் கிரமத்தில் அடுத்த மனு வருகிறார். அவர் தமது சந்ததியினருடன் சேர்ந்து பல்வேறு உலகங்களை ஆள்கிறார்; ஆயினும் சப்தரிஷிகளும், இந்திரனைப் போன்ற தேவர்களும் அவர்களது அடியவர்களான கந்தர்வர்கள் போன்ற அனைவரும் மனுவுடனேயே தோன்றுகின்றனர்.

பதம் 3.11.26
ஏஷ தைனன்-தின: ஸர்கோ ப்ராஹ்மஸ் த்ரைலோக்ய-வர்தன:
திர்யன்- ந்ரு-பித்ரு-தேவானாம் ஸம்பவோ யத்ர கர்மபி:

ஏஷ:-இப்படைப்புக்கள் அனைத்திலும்; தைனம்-தின: தினமும்; ஸர்க:-படைத்தல்; ப்ராஹ்ம:-பிரம்ம தேவரின் நாட்களில், த்ரைலோக்ய வர்தன:-மூன்று லோகங்களின் சுழற்சி: திர்யக்- மனிதர்களைக் காட்டிலும் இழிந்த விலங்குகள்; ந்ரு – மனித இனம்; பித்ரு- பித்ரு லோகத்தைச் சேர்ந்தவர்கள்; தேவானாம் -தேவர்களின்; ஸம்பவ:- தோற்றம்; யத்ர—-அங்கே ; கர்மபி:-கர்ம வினைகளின் பலன்களுக்கேற்ப.

பிரம்ம தேவரின் பகற்பொழுதில் சொர்க்கம், மர்த்யம், பாதாளம் என்னும் மூவுலகங்களும் படைக்கப்படுகின்றன. இவ்வுலகங்களின் சுழற்சியில் விலங்குகள், மனிதர்கள், தேவர்கள் மற்றும் பித்ருக்கள் போன்றோர் தத்தம் கர்ம வினைகளின் பலன்களுக்கேற்பத் தோன்றவும் மறையவும் செய்கின்றனர்.

பதம் 3.11.27
மன்வந்தரேஷு பகவான் பிப்ரத் ஸத்வம் ஸ்வ-மூர்திபி:
மன்வ ஆதிபிர் இதம் விஸ்வம் அவதி உதித-பெளருஷ:

மனு—அந்தரேஷு—ஒவ்வொரு மனுவின் மாற்றத்திலும்; பகவான் -முழுமுதற் கடவுள்; பிப்ரத்-வெளிப்படுதல்; ஸத்வம்—அவரது அகச் சக்தி; ஸ்வ- மூர்திபி:- அவரது பல்வேறு அவதாரங்களினால்; மனு- ஆதிபி: -மனுக்கள் போன்று; இதம்—இந்த; விஸ்வம்- பிரபஞ்சம்; அவதி- காப்பது; உதித-வெளிப்படுத்துதல்; பௌருஷ:-தெய்வீகச்சக்திகள்.

ஒவ்வொரு மனுவும் மாறும்பொழுதும் முழுமுதற் கடவுள் தனது அகச் சக்தியின் மூலம் பல்வேறு அவதாரங்களாக அதாவது மனுக்கள் போன்றும், பிறரைப் போன்றும் தோன்றுகிறார். இவ்வாறு அவர் தமது வெளிப்படுத்தப்பட்ட சக்தியினால் இப்பிரபஞ்சத்தைக் காக்கின்றார்.

பதம் 3.11.28
தமோ-மாத்ராம் உபாதாய ப்ரதிஸம்ருத்த-விக்ரம:
காலேனானுகதாஸேஷ ஆஸ்தே தூஷ்ணீம் தினாத்யயே

தம:- தமோ குணம் அல்லது இரவின் காரிருள்: மாத்ராம்- முக்கியமற்றப் பகுதி மட்டும்; உபாதாய-ஏற்றுக்கொண்டு; ப்ரதிஸம்ருத்த—விக்ரம:- தோன்றுகின்ற அனைத்துச் சக்திகளையும் நிறுத்தி வைத்து; காலேன-நித்திய காலத்தின் வழியாக; அநுகத- இணைதல்; அஸேஷ:- எண்ணிலடங்கா உயிர்கள்; ஆஸ்தே- இருத்தல்; தூஷ்ணீம்- அமைதியாக; தின— அத்யயே – பகலின் இறுதியில்.

பகல் நேரம் முடியும்போது தமோ குணத்தின் மறு பிரதியாகிய இருளோடு பிரபஞ்சத்தின் அந்த ஆற்றல் மிகுந்த பகல் இணைகிறது. நித்தியக் காலத்தின் பாதிப்பினால் எண்ணிலடங்கா உயிர்கள் அம்மாற்றத்தில் இணைந்து பின்னர் எல்லாம் அமைதியில் ஆழ்கின்றன.

பதம் 3.11.29
தம் ஏவான்வ் அபி தீயந்தே லோகா பூர்-ஆதயஸ் த்ரய:
நிஸாயாம் அநுவ்ருத்தாயாம் நிர்முக்த-ஸஸி-பாஸ்கரம்

தம் — அந்த ; ஏவ—உறுதியாக; அனு—அதன் பின்னர்; அபி தீயந்தே -பார்வையிலிருந்து மறைகின்றன; லோகா:-உலகங்கள்; பூ:-ஆதய: பூ: புவ: ஸ்வ: என்னும் மூன்று லோகங்கள்; த்ரய:-மூன்று; நிஸாயாம்- இரவில்; அநுவ்ருத்தாயாம் – சாதாரண; நிர்முக்த-ஒளியின்றி; ஸஸி- சந்திரன்; பாஸ்கரம்-சூரியன்.

பிரம்ம தேவரின் இரவு ஆரம்பிக்கும்பொழுது மூன்று உலகங்களும் மறைகின்றன. ஒரு சாதாரண இரவு போன்று சூரியனும், சந்திரனும் ஒளியின்றி விளங்குகின்றன.

பதம் 3.11.30
த்ரி-லோக்யாம் தஹ்யமானாயாம்
ஸக்த்யா ஸங்கர்ஷணாக்னினா
யாந்தி ஊஷ்மணா மஹர்லோகாஜ்
ஜனம் ப்ருக்வ்-ஆதயோ அர்திதா:

த்ரி-லோக்யாம்-மூன்று லோகங்களின் கோளங்கள்; தஹ்யமானாயாம் -எரிந்து சாம்பலாகும்;ஸக்த்யா— சக்தியினால்;ஸங்கர்ஷண— சங்கர்ஷணரின் வாயினின்று; அக்னினா—தீயினால்;கொடுமையினால்;மஹ:- லோகாத்-மகரலோகம்; ஜனம் – ஜனலோகத்திற்கு: ப்ருகு-பிருகு முனிவர்; ஆதய:- மற்றும் பிறரும், அர்திதா:-மிகுந்த துயருற்று.

இவ்வழிவானது சங்கர்ஷணரின் வாயினின்று வரும் தீயினால் ஏற்படுகிறது. அதனால் பிருகு போன்ற மாமுனிவர்களும் பிறகும், மூவுலகங்களிலும் எரியும் தீயின் வெம்மை தாளாது மகரலோகத்தை விட்டு ஜனலோகத்திற்கு இடம் பெயர்வர்.

பதம் 3.11.31
தாவத் த்ரி-புவனம் ஸத்ய: கல்பாந்தைத்த-ஸிந்தவ:
ப்லாவயந்தி உத்கடாடோப சண்ட-வாதேரிதோர்மய:

தாவத் – பிறகு: த்ரி-புவனம்- மூன்று லோகங்களும்; ஸத்ய: – அதன் பின்னர் உடனடியாக; கல்ப-அந்த—அழிவின் ஆரம்பத்தில்; எதித-பெருகும்; ஸிந்தவ:- எல்லாக் கடல்களும்; ப்லாவயந்தி – வெள்ளப் பெருக்கு; உத்கட-வலிமையான; ஆடோப-கொந்தளிப்பு; சண்ட- சண்ட (சூறை); வாத-மாருதத்தினால் (காற்று); ஈரித- வீசும்; ஊர்மய:-அலைகள்.

அழிவின் ஆரம்பத்தில் கடல்கள் எல்லாம் கொந்தளித்துப் பொங்கும். புயற்காற்று வன்மையுடன் வீசும். கடலின் அலைகள் மூர்க்கமாகத் தாக்கும். கணப் பொழுதில் மூவுலகங்களும் நீரினால் நிரப்பப்படும்.

பதம் 3.11.32
அந்த: ஸ தஸ்மின் ஸலில ஆஸ்தே ‘னந்தாஸனோ ஹரி:
யோக-நித்ரா-நிமீலாக்ஷ: ஸ்தூயமானோ ஜனாலயை:

அந்த:—உள்ளே; ஸ:- அந்த ; தஸ்மின்—அதனில்: ஸலிலே- வெள்ளத்தில் ; ஆஸ்தே-அங்கே: அனந்த—அனந்தன்; ஆஸன: -படுக்கையில்; ஹரி:-பகவான்; யோக-யோகம்; நித்ரா—நித்திரை; நிமீல அக்ஷ:- விழிகள் மூடி; ஸ்தூயமான:-புகழப்படுவார்; ஜன -ஆலயை:—ஜன லோகத்தைச் சேர்ந்தவர்கள்.

முழுமுதற் கடவுளான பரமபுருஷ பகவான் அப்பிரளய வெள்ளத்தின் மீது அனந்தனைப் படுக்கையாகக் கொண்டு அதன்மீது விழிகள் மூடி அரிதுயில் கொண்டிருப்பார். அப்பொழுது ஜனலோகத்தைச் சேர்ந்தவர்கள் தமது கரங்களைக் குவித்து அவரது புகழ்தனைப் போற்றிக் கொண்டிருப்பர்.

பதம் 3.11.33
ஏவம்- விதைர் அஹோ-ராத்ரை: கால-கத்யோபலக்ஷிதை:
அபக்ஷிதம் இவாஸ்யாபி பரமாயுர் வய:-ஸதம்

ஏவம்- இவ்வாறு ; விதை:- முறையினால்;அஹ:-நாட்கள்; ராத்ரை: -இரவுகளினால்; கால-கத்யா—காலத்தின் வளர்ச்சி; உபலக்ஷிதை:- இதுபோன்ற அறிகுறிகளினால்; அபக்ஷிதம்-முடிவுறுகிறது; இவ- போன்று; அஸ்ய—அவனது; அபி—இருந்தாலும்; பரம ஆயு: வய:- வருடங்கள்; ஸதம்—நூறு வருடங்கள்.

பிரம்ம தேவர் உள்ளிட்ட அனைத்து உயிர்களின் ஆயுட்காலமும் இம்முறையில் முடிவடைகிறது. ஒருவனது ஆயுள் ஒவ்வொரு உலகின் காலத்திற்கேற்ப நூறு வருடங்கள் நீடித்திருக்கிறது.

பதம் 3.11.34
யத் அர்தம் ஆயுஷஸ் தஸ்ய பரார்தம் அபிதீயதே
பூர்வ: பரார்தோ ‘பக்ராந்தோ ஹி அபரோ ‘த்ய-ப்ரவர்ததே

யத்—அந்த; அர்தம்-அரை; ஆயுஷ:-ஆயுட்காலத்தின்; தஸ்ய- அவரது ; பரார்தம்- ஒரு பரார்தம்; அபிதீயதே- அழைக்கப்படுகிறது; பூர்வ: பூர்வத்தில்; பர- அர்த:-ஆயுட் காலத்தின் அரைப் பகுதி; அபக்ராந்த:-கழிந்து விட்டது; ஹி-உறுதியாக; அபர:-பிற்பகுதி; அத்ய—இந்த யுகத்தில்; ப்ரவர்ததே-ஆரம்பமாகும்.

பிரம்ம தேவரின் ஆயுட்காலமான நூறு வருடங்கள் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. அதன் முதற் பகுதி ஏற்கெனவே முடிந்துவிட்டது. இரண்டாம் பகுதி இப்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

பதம் 3.11.35
பூர்வஸ்யாதௌ பரார்தஸ்ய ப்ராஹ்மோ நாம மஹான் அபூத்
கல்போ யத்ராபவ” ப்ரஹ்மா ஸப்த-ப்ரஹ்மேதி யம் விது:

பூர்வஸ்ய – முதற் பகுதியில்; ஆதௌ—ஆரம்பத்தில்; பர – அர்தஸ்ய-உயர்ந்த பகுதியின்; ப்ராஹ்ம:-பிராம- கல்பம்: நாம- என்ற பெயரில்; மஹான்-மிகச் சிறந்தவர்; அபூத்-தோன்றியது; கல்ப:-கல்பத்தில்; யத்ர—அப்பொழுது; அபவத்- தோன்றினார்; ப்ரஹ்மா- பிரம்மதேவர்; ஸப்த-ப்ரஹ்ம – சப்த பிரமம் எனப்படும் வேத ஒலிகள்; யம்-அது; விது:அறியப்படுகிறது.

பிராம கல்பம் எனப்படும் பிரம்ம தேவரின் முதற் பகுதியின் ஆரம்பத்தில் பிரம்மதேவர் தோன்றினார். அப்பொழுது அவருடன் சேர்த்து வேதங்களும் தோன்றின.

பதம் 3.11.36
தஸ்யைவ சாந்தே கல்போ ‘பூத் யம் பாத்மம் அபிசக்ஷதே
யத் தரேர் நாபி-ஸரஸ ஆஸீஸ் லோக-ஸரோருஹம்

தஸ்ய-பிரம்ம கல்பத்தின்; ஏவ-உறுதியாக; ச—மேலும்; அந்தே— இறுதியில்; கல்ப:– கல்பம்; அபூத்-ஆரம்பமாகிறது; யம்-அது; பாத்மம்- பாத்மம்; அபிசக்ஷதே-எனப்படும்; யத்-அதில்; ஹரே:- முழுமுதற்கடவுள்; நாபி-நாபிச்சுழியில்; ஸரஸ:- நீர்த்தேக்கத்தினின்று; ஆஸீத் அங்கு; லோக-பிரபஞ்சத்தின்; ஸரோருஹம் -தாமரை.

முதல் “ப்ராஹ்ம – கல்பத்தினை” அடுத்து வருவது பாத்ம – கல்பம் எனப்படும். ஏனெனில் இக்கல்பத்திலேயே முழுமுதற் கடவுளான ஹரியின் நாபிச்சுழி என்னும் குளத்திலிருந்து பிரபஞ்சத் தாமரையானது மலர்ந்தது.

பதம் 3.11.37
அயம் து கதித: கல்போ த்விதீயஸ்யாபி பாரத
வாராஹ இதி விக்யாதோ யத்ராஸீச் சூகரோ ஹரி:

அயம்- இந்த; து-ஆனால்; கதித:-அறியப்படுகிற; கல்ப—: இப்போதைய கல்பம்; த்விதீய-இரண்டாம் பகுதி: அபி-நிச்சயமாக; பாரத—ஓ, பரத குலத் தோன்றலே; வாராஹ:-வாராஹ; இதி- இவ்வாறு; விக்யாத:-கொண்டாடப்படுகிறது; யத்ர—அதில்; ஆஸீத்- தோன்றினார்; ஸூகர:-பன்றி வடிவில்; ஹரி:-முழுமுதற் கடவுள்.

ஓ, பரதக்குலத் தோன்றலே, பிரம்ம தேவரின் ஆயுளின் இரண்டாம் பகுதியின் ஆரம்பம் வாராஹ கல்பம் என்றழைக்கப்படுகிறது. ஏனெனில் அக்கல்பத்தில் தான் முழுமுதற் கடவுள் வராகமாக அவதரித்தார்.

பதம் 3.11.38
காலோ ‘யம் த்வி-பரார்தாக்யோ நிமேஷ உபசர்யதே
அவ்யாக்ருதஸ்யானந்தஸ்ய ஹி அநாதேர் ஜகத்-ஆத்மன:

கால:-நித்தியக் காலம்; அயம்- இந்த (பிரம்மதேவனின் ஆயுட்காலத்தின் அடிப்படையில் கணக்கிடப்பட்டது); த்வி—பரார்த— ஆக்ய: – பிரம்ம தேவரின் ஆயுளின் இரு அரைப்பகுதிகளினால்; நிமேஷ: – ஒரு விநாடிக்கும் குறைவானது; உபசர்யதே-என்று கணக்கிடப் படுகிறது; அவ்யாக்ருதஸ்ய— மாற்றமில்லாத ஒருவர்; அனந்தஸ்ய—அளவற்ற; ஹி-உறுதியாக; அநாதே: தொடக்கமில்லாத ; ஜகத்- ஆத்மன:-ஜகத்தின் ஆத்மா ஆவார்.

பிரம்ம தேவரின் ஆயுளின் இருபகுதிகளும் சேர்ந்தால் அதுவே மாற்றமில்லாதவரும், அளவற்றவரும், ஜகத் காரணருமான முழுமுதற் கடவுளுக்கு ஒரு நிமேஷம் (விநாடிக்கும் குறைவான நேரம்) ஆகும்.

பதம் 3.11.39
காலோ ‘யம் பரமாண்வ்-ஆதிர் த்வி-பரார்தாந்த ஈஸ்வர:
நைவேஸிதும் ப்ரபுர் பூம்ந ஈஸ்வரோ தாம-மானினாம்

கால:- நித்தியக் காலம்; அயம்- இந்த; பரம- அணு—அணு; ஆதி:-ஆதியிலிருந்து; த்வி—பரார்த- காலத்தின் இரு உயர் அளவுகள்: அந்த:-இறுதிக்கு; ஈஸ்வர:- கட்டுப்படுத்துபவர்; ந-இல்லை; ஏவ— உறுதியாக; ஈஸிதும்- கட்டுப்படுத்துவதற்கு: ப்ரபு:-திறனுடையவர் பூம்ந:- பரம்பொருளின்; ஈஸ்வர:-கட்டுப்படுத்துபவர்; தாம – மானினாம்—உடல் உணர்ச்சி கொண்டோர்.

அணுவில் தொடங்கி பிரம்ம தேவரின் ஆயுட்காலத்தின் இரு பெரும் பிரிவுகள் வரை உள்ள பல்வேறு பரிமாணங்களையும் கட்டுப்படுத்துவது நிச்சயம் நித்தியக் காலமேயாகும். இக்காலத்தையும் கட்டுப்படுத்துபவர் பரம்பொருளேயாவார். காலம் சத்திய லோகம் உள்ளிட்டப் உள்ளிரபஞ்சத்தின் பிற தேவ லோகங்களில் உள்ள உடல் உணர்வுடையவர்களை மட்டுமே கட்டுப்படுத்துகிறது.

பதம் 3.11.40
விகாரை: ஸஹிதோ யுக்தைர் விசேஷாதிபிர் ஆவ்ருத:
ஆண்டகோஸோ பஹிர் அயம் பஞ்சாஸத்-கோடி-விஸ்திருத:

விகாரை:- பூதங்களின் மாற்றத்தினால்; ஸஹித:-அத்துடன்; யுத்தை:-ஒன்றோடொன்று இணைந்து: விசேஷ-தோற்றங்கள்: ஆதிபி:-அவற்றினால்; ஆவ்ருத:-அளவுடையது; ஆண்ட-கோஷ:- பிரபஞ்சம்; பஹி:- வெளியே; அயம்-இந்த; பஞ்சாஸத்- ஐம்பது; கோடி-கோடிகள்; விஸ்த்ருத: -விஸ்தீரணமுடையதாகும்.

இவ்வியல்பிற்குரிய நடப்பு உலகமானது நான்கு கோடி மைல்கள் விஸ்தீரணமுடையதாகும். மேலும் அது எண்வகைப் பூதங்கள் இணைந்து பதினாறு வகை மூலக்கூறுகளாக மாறி உள்ளும் புறமும் பின்வருமாறு இருக்கிறது.

பதம் 3.11.41
தஸோத்தராதிகைர் யத்ர ப்ரவிஷ்ட: பரமாணுவத்
லக்ஷ்யதே ‘ந்தர்-கதாஷ் சான்யே கோடிஸோ ஹி அண்ட-ராஸய:

தஸ-உத்தர-அதிகை:-பத்து மடங்கு பருமனுடையது; யத்ர- அதில்; ப்ரவிஷ்ட:- நுழைகிறது; பரம- அணு – வத்- அணுக்களைப் போன்றது; லக்ஷ்யதே- இவை (பிரபஞ்சக் கூட்டங்கள்) தோன்றுகின்றன; அந்த:- கதா:-ஒருங்கே வருகின்றன; ச-மேலும்; அன்யே- பிறவற்றில்; கோடிஸ:- ஒருங்கிணைதல்; ஹி-ஆக; அண்ட ராஸயா:- பிரபஞ்சங்களின் மிகப்பெரிய கலப்பு.

பிரபஞ்சமெங்கும் நிறைந்திருக்கும் மூலப்பொருட்களின் அடுக்குகளானது ஒவ்வொன்றும் முன்பை விடப் பத்து மடங்குப் பருமன் அதிகமுடையதாகும். இவ்வாறு பிரபஞ்சங்கள் அனைத்தும் ஒருங்கிணைந்து காணப்படுவதானது அணுக்களின் மிகப்பெரிய கலப்பினைப் போல் காட்சியளிக்கிறது.

பதம் 3.11.42
தத் ஆஹுர் அக்ஷரம் ப்ரஹ்ம ஸர்வ-காரண-காரணம்
விஷ்ணோர் தாம பரம் ஸாக்ஷாத் புருஷஸ்ய மஹாத்மன:

தத்—அந்த; ஆஹு:-கூறப்படுகிறது; அக்ஷரம்- குற்றமற்ற; ப்ரஹ்ம- உயர்ந்த; ஸர்வ-காரண-காரணம் அனைத்துக் காரணங்களுக்கும் மூலகாரணம்; விஷ்ணோ:-தாம விஷ்ணுவின் ஆன்மீக உறைவிடம்; பரம்-பரமம்; ஸாக்ஷாத்- சந்தேகமின்றி; புருஷஸ்ய-புருஷ அவதாரத்தின்; மஹாத்மன:-மகா விஷ்ணுவின்.

ஆதலினால் முழுமுதற் கடவுளான ஸ்ரீ கிருஷ்ணரே அனைத்துக் காரணங்களுக்கும் மூல காரணமாக விளங்குகின்றார். இவ்வாறு விஷ்ணுவின் ஆன்மீக உறைவிடமாவது எந்தவித சந்தேகத்திற்கும் இடமின்றி அழியாத தன்மை உடையதாகும். மேலும் இது அனைத்துத் தோற்றங்களுக்கும் மூலமாக விளங்கும் மகாவிஷ்ணுவின் உறைவிடமுமாகும்.


ஸ்ரீமத் பாகவதம், மூன்றாம் காண்டத்தின், “அணுவிலிருந்து தொடங்கும் காலக்கணிதம்” எனும் தலைப்பைக் கொண்ட பதினொன்றாம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றன.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare