அத்தியாயம் – 10
படைப்பின் பிரிவுகள்
பதம் 3.10.1
விதுர உவாச
அந்தர்ஹிதே பகவதி ப்ரஹ்மா லோக-பிதாமஹ:
ப்ரஜா: ஸஸர்ஜ கதிதா தைஹிகீர் மானஸீர் விபு:
விதுர:உவாச – ஸ்ரீவிதுரர் கூறினார்: அந்தர்ஹிதே-மறைந்த பின்னர்; பகவதி-முழுமுதற் கடவுளின்: ப்ரஹ்மா-முதலில் படைக்கப்பட்ட உயிர்; லோக-பிதாமஹ-அனைத்துலக வாசிகளின் தாத்தா: ப்ரஜா— பிரஜைகள்; ஸஸர்ஜ-படைத்தல்; கதிதா:- எத்தனை; தைஹிகீ:— அவரது உடலிலிருந்து: மானஸீ:-அவரது மனதிலிருந்து; விபு:-சிறந்த.
ஸ்ரீ விதுரர் கூறினார்: ஓ, மாமுனிவரே, அனைத்துலகப் பிரஜைகளின் தாத்தாவான பிரம்ம தேவர், முழுமுதற் கடவுள் மறைந்த பிறகு தனது உடலிலிருந்தும், மனதிலிருந்தும் எவ்வாறு உயிர்களின் உடல்களைப் படைத்தார் என்பதை எனக்கு அருள் கூர்ந்து உரைக்கமாட்டீரா!
பதம் 3.10.2
யே ச மே பகவன் ப்ருஷ்டாஸ் த்வய்ய அர்தா பஹுவித்தம
தான் வதஸ்வானுபூர்வ்யேண சிந்தி ந: ஸர்வ-ஸம்ஸயான்
யே-அவையெல்லாம்; ச-மேலும்; மே-என்னால்; பகவன்-ஓ, வலிமை மிக்கவரே; ப்ருஷ்டா:-வினவுதல்; த்வயி—உமக்கு; அர்தா: – நோக்கம்; பஹு-வித்-தம-ஓ, கல்வியில் சிறந்தவரே; தான்-அவைகள் எல்லாவற்றையும்; வதஸ்வ—அருள் கூர்ந்து விளக்குவீராக; அனுபூர்வ்யேன- தொடக்கத்திலிருந்து முடிவு வரை; சிந்தி- அன்புடன் நீக்குவீராக; ந:-எனது; ஸர்வ-எல்லா; ஸம்ஸயான்- சந்தேகங்களையும்.
ஓ, கல்வியிற் சிறந்தவரே, அன்புடன் எனது சந்தேகங்கள் அனைத்தையும் நீக்கி, நான் வினவிய அனைத்தையும் தொடக்கத்திலிருந்து இறுதி வரை விளக்கியருள்வீராக.
பதம் 3.10.3
ஸூத உவாச
ஏவம் ஸஞ்சோதிதஸ் தேன க்ஷத்ரா கௌஷாரவிர் முனி:
ப்ரீத: ப்ரத்யாஹ தான் பரஸ்னான் ஹ்ருதி-ஸ்தான் அத பார்கவ
ஸூத: உவாச-ஸ்ரீ சூத கோஸ்வாமி கூறினார்; ஏவம்-இவ்வாறு; ஸஞ்சோதித:–புத்துணர்ச்சி கொண்டு; தேன-அவரால்; க்ஷத்ரா -விதுரரால், கௌஷாரவி:–குஷாரரில் மைந்தன்; முனி:–மாமுனிவர்; ப்ரீத:–மகிழ்ச்சியுற்று: ப்ரத்யாஹ- பதில் கூறினார்; தான்—அவை; ப்ரஸ்னான்- கேள்விகள்; ஹ்ருதி-ஸ்தான்-அவரது இதயத்தின் உள்ளிருந்து; அத–இவ்வாறு: பார்கவ:–ஒ பிருகுவின் மைந்தனே.
சூத கோஸ்வாமி கூறினார்: பிருகுவின் மைந்தனே, மைத்ரேய மாமுனிவர் விதுரரின் இக்கேள்விகளினால் புத்துணர்ச்சி கொண்டவரானார். எல்லாம் அவர் இதயத்தினுள்ளே இருந்தன. ஆகையினால் அவர் அக்கேள்விகளுக்கான பதில்களை ஒன்றன்பின் ஒன்றாகக் கூறத் தொடங்கினார்.
பதம் 3.10.4
மைத்ரேய உவாச
விரிஞ்சோ ‘பி ததா சக்ரே திவ்யம் வர்ஷ-ஸதம் தப:
ஆத்மனி ஆத்மானம் ஆவேஸ்ய யதாஹ பகவான் அஜ:
மைத்ரேய: உவாச-மைத்ரேய மாமுனிவர் கூறினார்; விரிஞ்ச: -பிரம்மதேவர்; அபி-கூட; ததா—இவ்விழி முறையில்; சக்ரே -செய்யப்பட்ட; திவ்யம்—தேவ; வர்ஷ – ஸதம் – நூறு வருடங்கள்; தப: – தவம்; ஆத்மனி—பகவானுக்கு; ஆத்மானம்- தன்னையே; ஆவேஸ்ய-ஈடுபடுதல்; யதா—ஆஹ—உரைத்தபடி; பகவான்- முழுமுதற் கடவுள்; அஜ:-பிறக்காத.
கல்வியிற் சிறந்த மைத்ரேய மாமுனிவர் கூறினார்: ஓ, விதுரரே, முழுமுதற் கடவுளின் அறிவுரைக்கேற்ப பிரம்மதேவர் நூறு தேவ வருடங்கள் தன்னைத் தவத்தில் ஈடுபடுத்திப் பின்னர் பகவானின் பக்தித் தொண்டில் இணைத்துக் கொண்டார்.
பதம் 3.10.5
தத் விலோக்யாப்ஜ-ஸம்பூதோ வாயுனா யத்- அதிஷ்டித:
பத்மம் அம்பாஸ் ச தத்-கால – க்ருத-வீர்யேண கம்பிதம்
தத் விலோக்ய-அதனைப் பார்த்தல்; அப்ஜ-ஸம்பூத:-அவரது பிறப்பின் ஆதார இடம் தாமரை மலர்; வாயுணா-காற்றினால்; யத்— அந்த; அதிஷ்டித:-அதன் மீது அமர்ந்திருந்த அவர்; பத்மம்-தாமரை; அம்ப:-தண்ணீர்; ச-மேலும்; தத்-கால-க்ருத—அது நித்தியக் காலத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டது; வீர்யேண—அதன் இயல்பான வேகத்தினால்; கம்பிதம்- நடுங்குதல்.
அதன்பிறகு பிரம்ம தேவர் தான் அமர்ந்திருந்த தாமரை மலரும், அத்தாமரை மலருக்கு ஆதாரமாக விளங்கிய நீரும் வலிமையான சூறைக் காற்றினால் ஆடுவதைக் கண்டார்.
பதம் 3.10.6
தபஸா ஹி ஏதமானேன வித்யயா சாத்ம-ஸம்ஸ்தயா
விவ்ருத்த-விஜ்ஞான-பலோ ந்யபாத் வாயும் ஸஹாம்பஸா
தபஸா—தவத்தினால்; ஹி—உறுதியாக ; ஏதமானேன-அதிகரித்தது; வித்யயா-உன்னத அறிவினால்; ச – மேலும்; ஆத்ம-தன்னில்; ஸம்ஸ்தயா-நிலைபெற்றிருத்தல்; விவ்ருத்த – முதிர்தல்: விஜ்ஞான – நடைமுறை அறிவு; பல:- பலம்; ந்யபாத்-பருகினார்; வாயும்-காற்று; ஸஹ அம்பஸா—நீருடன் சேர்த்து.
நெடிய தவமும் தன்னுணர்வு பெறுவதற்கான மிக உயர்ந்த அறிவும் நடைமுறை அறிவில் பிரம்ம தேவரை முதிர்ச்சியடையச் செய்திருந்ததினால், அவர் அச்சூறைக் காற்றை நீருடன் சேர்த்துப் பருகினார்.
பதம் 3.10.7
தத் விலோக்ய வியத்-வ்யாபி புஷ்கரம் யத்-அதிஷ்டிதம்
அனேன லோகான் ப்ராக்-லீனான் கல்பிதாஸ்மீதி அசிந்தயத்
தத்- விலோக்ய—அதனைக் கண்டு; வியத்-வ்யாபி-எங்கும் பரந்து பட்ட; புஷ்கரம்–தாமரை; யத்-அந்த; அதிஷ்டிதம்–அவர் அமர்ந்திருந்த; அனேன-இதனால்; லோகான்—அனைத்து உலகங்களும்; ப்ராக்-லீனான் -முன்னர் அழிவின்பொழுது இணைந்திருந்த; கல்பிதா அஸ்மி – நான் படைப்பேன்; இதி-இவ்வாறு; அசிந்தயத்- அவர் சிந்தித்தார்.
பின்னர் அவர் தான் அமர்ந்திருந்த தாமரையானது, பிரபஞ்சம் முழுவதும் பரந்து விரிந்திருந்ததைக் கண்டார். இதே தாமரையில் முன்னர் இணைந்திருந்த அனைத்து உலகங்களையும் எவ்வாறு படைப்பது என்று அவர் ஆழ்ந்து சிந்திக்கலானார்.
பதம் 3.10.8
பத்ம-கோஸம் ததாவிஸ்ய பகவத்-கர்ம-சோதித:
ஏகம் வ்யபாங்க்ஷீத் உருதா த்ரிதா பாவ்யம் த்வி-ஸப்ததா
பத்ம – கோஸம் — தாமரையின் இதழ் அடுக்கு; ததா-பிறகு; ஆவிஸ்ய–புகுந்து; பகவத்—முழுமுதற் கடவுளினால்; கர்ம -செயல்களில்; சோதித:- தூண்டப் பெற்றதினால்; ஏகம்-ஒன்று: வ்யபாங்க்ஷீத் -பிரிக்கப்படுதல்; உருதா-பெரிய பிரிவு; த்ரிதா -மூன்று பிரிவுகள்; பாவ்யம்- அடுத்துப் படைப்பதற்கான தகுதி; த்வி- ஸப்ததா—பதினான்கு பிரிவுகள்.
இவ்வாறு முழுமுதற் கடவுளின் தொண்டில் ஈடுபட்டிருந்த பிரம்ம தேவர் தாமரையின் இதழ் அடுக்கினுள் புகுந்து கொண்டார். அது பிரபஞ்சம் எங்கும் பரந்து விரிந்திருந்ததனால் அவர் முதலில் அதை மூன்று பிரிவுகளாகவும் பின்னர் பதினான்கு பிரிவுகளாகவும் பிரித்தார்.
பதம் 3.10.9
ஏதாவான் ஜீவ-லோகஸ்ய ஸம்ஸ்தா-பேத: ஸமாஹ்ருத:
தர்மஸ்ய ஹி அநிமித்தஸ்ய விபாக: பரமேஷ்டி அஸௌ
ஏதாவான்- இதுவரையில்; ஜீவ-லோகஸ்ய-உயிர்வாழிகள் வசிக்கும் உலகங்கள்; ஸம்ஸ்தா-பேத:–உறைவிடத்தின் பல்வேறு சூழ்நிலைகள்; ஸமாஹ்ருத:-முற்றிலும் செய்யப்பட்டது; தர்மஸ்ய -சமயத்தின்; ஹி-உறுதியான; அநிமித்தஸ்ய-அளவற்ற; விபாக: -முதிர்ந்த நிலை; பரமேஷ்டி-பிரபஞ்சத்தின் மிக உயர்ந்த சான்றோர்; அஸௌ—அது.
பிரம்ம தேவர் இப்பிரபஞ்சத்திலேயே மிகவுயர்ந்த சான்றோர் ஆவார். இதற்குக் காரணம், முதிர்ந்த உன்னத ஞானத்தில் பகவானுக்கு அவர் செய்த காரணமற்றப் பக்தித் தொண்டேயாகும். ஆதலினால் அவர் பல்வேறு வகையான உயிர்கள் வசிப்பதற்காகப் பதினான்கு உலகப் பிரிவுகளைப் படைத்தார்.
பதம் 3.10.10
விதுர உவாச
யதாத்த பஹு-ரூபஸ்ய ஹரேர் அத்புத-கர்மண:
காலாக்யம் லக்ஷ்ணம் ப்ரஹ்மம் யதா வர்ணய ந: ப்ரபோ
விதுர: உவாச-விதுரர் கூறினார்; யதா—உள்ளவாறு; ஆத்த- நீர் கூறியிருக்கின்ற; பஹு-ரூபஸ்ய-பல்வேறு வடிவங்களைக் கொண்ட; ஹரே:- பகவானின்; அத்புத -அற்புதம்: கர்மண:-செயற்படுவோர்; கால — காலம்; ஆக்யம்-நாமத்தின்; லக்ஷணம்—அடையாளம்; ப்ரஹ்மன்-ஓ, கற்றறிந்த அந்தணரே; யதா-போன்று; வர்ணய-அருள் கூர்ந்து விளக்குவீர்; ந-எமக்கு; ப்ரபோ- ஓ பிரபுவே.
மைத்ரேயரிடம் விதுரர் வினவினார்: ஓ, பிரபுவே, ஓ, கற்றறிந்த முனிவரே, அற்புதச் செயல் செய்யும் முழுமுதற் கடவுளின் மற்றொரு வடிவமான நித்திய காலத்தைப் பற்றி அருள்கூர்ந்து விளக்குவீராக. நித்திய காலத்தின் அடையாளங்கள் என்ன? அருள் கூர்ந்து அதை விளக்க வேண்டுகிறேன்.
பதம் 3.10.11
மைத்ரேய உவாச
குண — வ்யதிகராகாரோ நிர்விஸேஷோ ‘ப்ரதிஷ்டித:
புருஷஸ் தத்-உபாதானம் ஆத்மானம் லீலயாஸ்ருஜத்
மைத்ரேய: உவாச-மைத்ரேயர் கூறினார்; குண—வ்யதிகர—ஜட இயற்கைக் குணங்களின் எதிரெதிர் செயல்கள்; ஆகார:-ஆதாரம்; நிர்விஸேஷ:-மாற்றமின்றி; அப்ரதிஷ்டித:—அளவற்ற; புருஷ: – பரமபுருஷர்; தத்—அந்த; உபாதானம்-கருவி; ஆத்மானம்—பௌதிகப் படைப்பு; லீலயா—லீலைகள்; அஸ்ருஜத்-படைக்கப்பட்டது.
மைத்ரேயர் கூறினார்: என்றும் அழியாத காலம் என்பது உலக இயற்கையின் முக்குணங்களின் செயல் மற்றும் எதிர் செயல்களுக்கு ஆதாரமாக ஆதியிலிருந்து இருப்பதாகும். அது மாறாதது என்பதோடு அளவற்றதுமாகும். மேலும் அது பௌதிகப் படைப்பில் முழுமுதற் கடவுளின் லீலைகளுக்காக, அவரது கருவியாகச் செயல்படுகின்றது.
பதம் 3.10.12
விஸ்வம் வை ப்ரஹ்ம-தன்-மாத்ரம் ஸம்ஸ்திதம் விஷ்ணு-மாயயா
ஈஸ்வரேண பரிச்சின்னம் காலேனாவ்யக்த-மூர்தினா
விஸ்வம்-பௌதிகக் காட்சி; வை – உறுதியாக :ப்ரஹ்ம -பரம்பொருள்; தத்- மாத்ரம்- அதே போன்று; ஸம்ஸ்திதம்—இருத்தல்; விஷ்ணு-மாயயா-விஷ்ணுவின் சக்தியினால்; ஈஸ்வரேண- முழுமுதற் கடவுளினால்; பரிச்சின்னம்- தனியே பிரிந்த; காலேன- நித்தியக் காலத்தினால்; அவ்யக்த –வெளிப்படாதது; மூர்தினா- அத்தன்மையினால்.
இப்பிரபஞ்சத் தோற்றமானது காலப்போக்கில் பரமபுருஷ பகவானிடமிருந்து உலகியல் சக்தியாகத் தனியே பிரிக்கப்பட்டதாகும். காலமானது உருவெளித் தோற்றமற்ற, பகவானின் அருவத் தன்மையாகும். இது, பகவானின் உருவமற்ற வெளிப்பாடாக இருக்கிறது என்பதோடு பகவான் விஷ்ணுவினுடைய செல்வாக்கின் உலகியல் சக்தியின் கீழும் இருக்கிறது.
பதம் 3.10.13
யதேதானீம் ததாக்ரே ச பஸ்சாத் அபி ஏதத் ஈத்ருஸம்
யதா-அதே போன்று; இதானீம் – இப்பொழுதும்; ததா- முன்பிருந்தது; அக்ரே-ஆரம்பத்திலும்; ச-மேலும்; பஸ்சாத்-இறுதியிலும்; அபி-மேலும்; ஏதத் ஈத்ருஷம்-இதே போன்று தொடர்ந்திருக்கும்.
இப்பிரபஞ்சத் தோற்றமானது இப்போதிருக்கின்ற நிலையிலேதான் கடந்த காலத்திலும் இருந்தது. இனி வருங்காலத்திலும் தொடர்ந்து இப்படியேதான் இருக்கப் போகிறது.
பதம் 3.10.14
ஸர்கோ நவ-விதஸ் தஸ்ய ப்ராக்ருதோ வைக்ருதஸ் து ய:
கால-த்ரவ்ய-குணைர் அஸ்ய த்ரி – வித: ப்ரதிஸங்க்ரம:
ஸர்க:-படைத்தல்; நவ-வித:-ஒன்பது வெவ்வேறு வகையான; தஸ்ய-இதன்; ப்ராக்ருத:-பௌதிகம்; வைக்ருத:—ஜட இயற்கையின் குணங்களினால்; து-ஆனால்; ய:-அந்த; கால-நித்தியக் காலம்; த்ரவ்ய—திரவியம்; குணை:- குணங்கள்; அஸ்ய-இதன்; த்ரி-வித:-மூன்று வகைகள் ; ப்ரதிஸங்க்ரம:-அழித்தல்.
குணங்கள் ஒன்றினோடொன்று இணைந்து செயற்படும் வினைத் தொடர்புகளினால் இயற்கையிலேயே விளைந்த ஒன்றினைத் தவிர மேலும் ஒன்பது வகையான படைப்புக்கள் இருக்கின்றன. காலத்தினாலும், உலகியல் காரணங்களாலும், ஒருவனது தொழிலின் இயல்புகளினாலும் ஏற்படும் அழித்தல் மூன்று வகையாகும்.
பதம் 3.10.15
ஆத்யஸ் து மஹத: ஸர்கோ குண-வைஷம்யம் ஆத்மன:
த்விதீயஸ் து அஹமோ யத்ர த்ரவ்ய-ஜ்ஞான-க்ரியோதய:
ஆத்ய:-முதலில்; து—ஆனால்; மஹத:-பகவானிடமிருந்து வெளிப்பட்ட மொத்தமும்; ஸர்க:-படைத்தல்; குண-வைஷம்யம் – ஜடக் குணங்களின் வினைத் தொடர்புகள்; ஆத்மன:- பரம்பொருளின்; த்விதீய:-இரண்டாவது; து-ஆனால்; அஹம:-ஆணவம்; யத்ர –அங்கே; த்ரவ்ய-பௌதிக ஆக்கக் கூறுகள்: ஜ்ஞான-பௌதிக அறிவு; க்ரியா -உதய:-செயல்களின் விழிப்பு (தொழில்).
ஒன்பது படைப்புக்களில் முதலாம் படைப்பு மஹத் தத்துவம் அல்லது பொருட்களது ஆக்கக் கூறுகளின் கூட்டு மொத்தம் ஆகும். அங்கே பகவானின் முன்னிலையில் குணங்கள் ஒன்றினோடொன்று வினைத் தொடர்புகள் கொள்கின்றன. இரண்டாம் படைப்பில் ஆணவம் பிறந்தது. அதிலிருந்து பௌதிக ஆக்கக் கூறுகள், உலகியல் அறிவு மற்றும் உலகியற் செயல்கள் தோன்றின.
பதம் 3.10.16
பூத-ஸர்கஸ் த்ருதீயஸ் து தன்-மாத்ரோ த்ரவ்ய-ஸக்திமான்
சதுர்த ஐந்த்ரிய: ஸர்கோ யஸ் து ஜ்ஞான-க்ரியாத்மக:
பூத-ஸர்க:-ஜடப் படைப்பு; த்ருதீய:-மூன்றாம்; து—ஆனால்; தத் – மாத்ர:- புலன் உணர்வு; த்ரவ்ய மூலகங்களின் ஸக்திமான் – படைப்பாளி; சதுர்த:-நான்காவது; ஐந்த்ரிய:-புலன்கள் விஷயத்தில்; ஸர்க:- படைப்பு: ய:-அந்த; து-ஆனால்; ஜ்ஞான—பெறப்படும் அறிவு; க்ரியா-தொழில்; ஆத்மக:-அடிப்படையில்.
புலன் உணர்வுகள் மூன்றாம் படைப்பில் தோற்றுவிக்கப்பட்டன. இவற்றிலிருந்தே ஐம்புலன்கள் தோன்றின. நான்காவது படைப்பு அறிவு மற்றும் தொழில் திறமையின் படைப்பாகும்.
பதம் 3.10.17
வைகாரிகோ தேவ-ஸர்க: பஞ்சமோ யன் மயம் மன:
ஷஷ்டஸ் து தமஸ: ஸர்கோ யஸ் த்வ் அபுத்தி-க்ருத: ப்ரபோ
வைகாரிக:- நற்குணங்களின் எதிரெதிர் செயல்; தேவ-தேவர்கள் அல்லது கட்டுப்படுத்தும் தெய்வங்கள்; ஸர்க:-படைப்பு; பஞ்சம: -ஐந்தாம் ; யத்—அது; மயம்- மொத்த கூட்டுத்தொகை; மன:-மனம்; ஷஷ்ட:- ஆறாம்; து-ஆனால்; தமஸ:- இருளின்; ஸர்க:- படைப்பு; ய:-அது; து—ஆனால்; அபுத்தி—க்ருத:-முட்டாளாக்கும்; ப்ரபோ: -ஆசிரியரின்.
ஐந்தாவது படைப்பு என்பது நற்குணங்களின் எதிரெத செயல்களினால் ஆனக் கட்டுப்படுத்தும் தேவர்களாவர், அதில் மனமே ஒட்டுமொத்தச் சாரமாகும். ஆறாவது படைப்பு உயிர்ப் பொருளின் அறியாமை இருளாகும், இதுவே ஒருவனை முட்டாளாகச் செயல்படச் செய்யும்.
பதம் 3.10.18
ஷட் இமே ப்ராக்ருத: ஸர்கா வைக்ருதான் அபி மே ஸ்ருணு
ரஜோ-பாஜோ பகவதோ லீலேயம் ஹரி-மேதஸ:
ஷட் – ஆறு; இமே – இவையெல்லாம்; ப்ராக்ருதா:-பௌதிகச் சக்தியின்; ஸர்கா:-படைப்புக்கள்; வைக்ருதான்-பிரம்மாவின் துணைப்படைப்பு; அபி—கூட; மே-என்னிடமிருந்து: ஸ்ருணு- கேட்பாயாக; ரஜ:-பாஜ:-ரஜோ குணத்தின் அவதாரம் (பிரம்மா); பகவத:- சிறந்த சக்திவாய்ந்த; லீலா-லீலை; இயம் – இந்த; ஹரி- முழுமுதற் கடவுள்; மேதஸ:-இது போன்ற அறிவுள்ள ஒருவர்.
மேலே கூறப்பட்டப் படைப்புக்கள் அனைத்தும் பகவானின் புறச்சக்தியினால் ஆன இயற்கைப் படைப்புக்களாகும். இப்பொழுது ரஜோ குணத்தின் அவதாரமான பிரம்ம தேவரால் படைக்கப்பட்டப் படைப்புக்களைப் பற்றி அறிவாயாக. படைப்பினைப் பொருத்த மட்டிலும் அவரது அறிவு முழுமுதற் கடவுளுக்கு இணையானதாகும்.
பதம் 3.10.19
ஸப்தமோ முக்ய-ஸர்கஸ் து ஷட்-விதஸ் தஸ்துஸாம் ச ய:
வனஸ்பதி – ஒஷதி-லதா த்வக்ஸாரா வீருதோ த்ருமா:
ஸப்தம:- ஏழாவது; முக்ய-கொள்கை; ஸர்க:- படைப்பு; து-உண்மையில்; ஷட்-வித:-ஆறு வகையாகும்; தஸ்துஸாம் -அசையாதவையாகும்; ச-மேலும்; ய:- அவை; வனஸ்பதி – மலர்களில்லாத கனிமரங்கள்; ஒஷதி-பழம் பழுக்கும் வரை மட்டுமே இருக்கும் மரங்கள் மற்றும் செடிகள்; லதா-கொடிகள்; த்வக்ஸாரா:- குழல் செடிகள்; வீருத: – துணை வலுவில்லாதக் கொடிகள்; த்ருமா:- பூக்களும் கனிகளும் உடைய மரங்கள்.
ஏழாவது படைப்பு என்பவை அசையாத உயிர்களாகும். அவை ஆறு வகைப்படும்: பூக்களில்லாத கனிமரங்கள், பழம் பழுக்கும் வரை மட்டுமுள்ள மரங்கள், செடிகள், கொடிகள், குழல் செடிகள், துணை வலுவற்றக் கொடிகள், பூக்களும், கனிகளும் உடைய மரங்கள் போன்றவையாம்.
பதம் 3.10.20
உத்ஸ்ரோதஸஸ் தம:- ப்ராயா அந்த:- ஸ்பர்ணா விஸேஷிண:
உத்ஸ்ரோதஸ:-அவை தம் வாழ்வாதாரத்தை மேல் நோக்கியே தேடின; தம:-ப்ராயா:-பெரும்பாலும் உணர்வற்றவை; அந்த: – ஸ்பர்ஷா: – உள்ளுணர்ச்சி சிறிது உண்டு; விணேஷிண:-பல்வகைத் தோற்றங்கள்.
அசையாத அனைத்து செடிகளும் மரங்களும் தம் வாழ்வாதாரத்திற்கு மேல்நோக்கியே நிற்கின்றன. அவைபெரும்பாலும் உணர்ச்சியற்றவையே. ஆயினும் அவற்றிற்கு வலி உணர்ச்சி உண்டு. அவை பல்வகை வண்ண வேறுபாடுடையவைகளாக காட்சியளிக்கின்றன.
பதம் 3.10.21
திரஸ்சாம் அஷ்டம: ஸர்க: ஸோ ‘ஷ்டாவிம்ஸத்-விதோ மத:
அவிதோ பூரி-தமஸோ க்ராண ஜ்ஞா ஹ்ருதி அவேதின:
திரஸ்சாம்- இழிந்த விலங்குகளின் படைப்பு: அஷ்டம: – எட்டாவது; ஸர்க:-படைப்பு; ஸ: – அவை; அஷ்டாவிம்ஷத் – இருபத்தெட்டு; வித:-வகைகள்; மத:-கருதுதல்; அவித: – நாளை பற்றிய அறிவு இன்றி; பூரி-இயல்புடையவன்; தமஸ:-அறியாமை; க்ராண- ஜ்ஞா:—தமக்குத் தேவையானவற்றை சுவாசத்தினாலேயே முகர்ந்து அறியும்; ஹ்ருதி அவேதின:-நினைவாற்றல் இதயத்தில் சிறிதே உண்டு.
எட்டாவது படைப்பானது இழிந்த உயிர்ப்பொருள்களாகும். அவை பல்வேறு வகைகளாகும். அவற்றின் எண்ணிக்கை இருபத்தெட்டாகும். அவையனைத்தும் அறிவில்லாதவை. அறியாமை மிக்க இயல்புடையன. அவை தமது தேவைகளை சுவாசத்தின் மூலம் முகர்ந்து அறிந்து கொள்கின்றன. ஆயினும் அவை மனதில் இருத்தி எதனையும் நினைவில் வைத்துக் கொள்ள முடியாதவை.
பதம் 3.10.22
கௌர் அஜோ மஹிஷ: க்ருஷ்ண: ஸூகரோ கவயோ ருரு:
த்வி – ஸபா: பஸவஸ் சேமே அவர் உஷ்ட்ரஸ் ச ஸத்தம
கௌ:- பசு; அஜ:-ஆடு; மஹிஷ:- எருமை; க்ருஷ்ண:-ஒரு வகையான மான்; ஸூகர:-பன்றி; கவய:-விலங்கின் ஒருவகை ; ருரு:- மான்; த்வி – ஸபா:-இரு குளம்புகள் உடையன; பஸவ:-விலங்குகள்; ச -மேலும்; இமே – இவையனைத்தும்; அவி:-செம்மறியாடு; உஷ்த்ர:- ஓட்டகம்; ச-மேலும் ; ஸத்தம—ஓ, தூய்மையானவனே.
ஓ, தூய்மையான விதுரரே, கீழ்நிலை விலங்குகளான பசு, வெள்ளாடு, எருமை, கிருஷ்ண மான், பன்றி, கவய மிருகம், மான், செம்மறியாடு, மற்றும் ஒட்டகம் போன்றவற்றிற்கு பாதங்களில் இரு குளம்புகள் உண்டு.
பதம் 3.10.23
கரோ ‘ஷ்வோ ‘ஷ்வதரோ கௌர: ஸரபஸ் சமரீ ததா
ஏதே சைக-ஸபா; க்ஷத்த: ஸ்ருணு பஞ்ச-நகான் பஸூன்
கர:- கழுதை; அஷ்வ:-குதிரை: அஷ்வதர:-கோவேறுக் கழுதை; கௌர:- வெண்ணிற மான்; ஸரப:-காட்டெருமை; சமரீ- காட்டுப் பசு; ததா -இவ்வாறு; ஏதே-இவையனைத்தும்; ச-மேலும்; ஏக -ஒன்றே ஒன்று; ஸபா:-குளம்பு; க்ஷத்த:- ஓ, விதுரனே; ஸ்ருணு- அறிவாயாக; பஞ்ச- ஐந்து; நகான் —நகங்கள்; பஸூன்—மிருகங்கள்.
குதிரை, கோவேறுக் கழுதை, கழுதை, வெண்ணிற மான், கௌரம், ஸரபம் என்னும் காட்டெருமை, காட்டுப் பசு இவையனைத்தும் பாதங்களில் ஒரே ஒரு குளம்பு மட்டுமே உடையன. இப்பொழுது என்னிடமிருந்து கால்களில் ஐந்து நகங்களையுடைய விலங்குகளைப் பற்றி அறிவாயாக.
பதம் 3.10.24
ஸ்வா ஸ்ருகாலோ வ்ருகோ வ்யாக்ரோ
மார்ஜார: ஸஸா-ஸல்லகௌ
ஸிம்ஹ: கபிர் கஜ: கூர்மோ
கோதா ச மகராதய:
ஸ்வா-நாய்; ஸ்ருகால:- நரி; வ்ருக: -ஓநாய்; வ்யாக்ர—புலி, மார்ஜார :-பூனை; ஸஸ-முயல்; ஸல்லகௌ- ஸஜாரு-உடலில் முட்களையுடையது ; ஸிம்ஹ:-சிங்கம்; கபி:-குரங்கு: கஜ:-யானை; கூர்ம: – ஆமை; கோதா-கோஸாப (நான்கு கால்களையுடைய பாம்பு): ச -மேலும்; மகர—ஆதய:-முதலை மற்றும் பிற.
நாய், குள்ளநரி, புலி, ஓநாய், பூனை, முயல், ஸஜாரு, சிங்கம், குரங்கு, யானை, ஆமை, முதலை, கோஷாபம் போன்றவற்றிற்குப் பாதங்களில் ஐந்து நகங்கள் உண்டு. இவை “பஞ்ச நகங்கள்” என்றழைக்கப்படுகின்றன.
பதம் 3.10.25
கங்க-க்ருத்ர-பக-ஸ்யேன – பாஸ-பல்லூக-பர்ஹிண:
ஹம்ஸ-ஸாரஸ-சக்ராஹ்வ- காகோலூகாதய: ககா:
கங்க-கொக்கு; க்ருத்ர-கழுகு; பக-நாரை; ஸ்யேன-பருந்து; பாஸ- பாஸம்; பல்லூக- பல்லூகம்; பர்ஹிண:-மயில்; ஹம்ஸ- அன்னம்; ஸாரஸ-ஸாரஸம்; சக்ராஹ்வ— சக்கரவாகம்; காக- காகம்: உலூக-ஆந்தை; ஆதய :- மற்றும் பிறவும்; ககா:-பறவைகள்.
கொக்கு, கழுகு, நாரை, பருந்து, பாஸம், பல்லூகம், மயில், அன்னம், ஸாரஸம், சக்கரவாகம், காக்கை, ஆந்தை போன்றவை பறவை இனங்கள்.
பதம் 3.10.26
அர்வாக்-ஸ்ரோதஸ் து நவம: க்ஷத்தர் ஏக-விதோ ந்ருணாம்
ரஜோ ‘திகா: கர்ம-பரா துஹ்கே ச ஸுக-மானின:
அர்வாக்-கீழ்முகமாக; ஸ்ரோத:-உணவுப்பாதை; து-ஆனால்; நவம:-ஒன்பதாவது; க்ஷத்த:-ஒ, விதுரரே; ஏக—வித:-ஓர் இனம்; ந்ருணாம் – மனித இனத்தின்; ரஜ:-ரஜோ குணம்; அதிகா:-மிக முக்கியமானது; கர்ம – பரா:—உழைப்பதற்கான விருப்பம்: துஹ்கே-துக்கத்தில்; ச-ஆனால்;ஸுக —சுகம்: மானின்: நினைப்பது.
ஒரே இனமும், தங்கள் உண்பனவற்றைக் கீழ்முகமாகக் செலுத்தித் தமது வயிற்றில் வைத்துக் கொள்பவர்களுமான மனிதர்கள் ஒன்பதாவது சுழற்சியில் படைக்கப்படுகின்றனர். மனித இனம் ரஜோ குணத்தையே மிகவும் முக்கியத் தன்மையாகக் கொண்டிருக்கிறது. துன்பமயமான வாழ்க்கைக்கு நடுவிலும் எல்லா வழியிலும் மிக்க மகிழ்ச்சியுடையோராகத் தம்மைக் கருதுபவர்கள் மனிதர்களேயாவர்.
பதம் 3.10.27
வைக்ருதாஸ் த்ரய ஏவைதே தேவ-ஸர்கஸ் ச ஸத்தம
வைகாரிகஸ் து ய: ப்ரோக்த: கெளமாரஸ் தூபயாத்மக:
வைக்ருதா:-பிரம்மாவின் படைப்புக்கள்; த்ரய-மூன்று வகையானவை: ஏவ-உறுதியாக; ஏதே—இவையெல்லாம்; தேவ -ஸர்க:தேவர்களின் தோற்றம்; ச-மேலும்; ஸத்தம—ஓ. மிகச் சிறந்த விதுரரே; வைகாரிக:—இயற்கையினால் படைக்கப்பட்ட தேவர்கள்; து—ஆனால்; ய:-அது; ப்ரோக்த:-இதற்கு முன்னர் விளக்கப்ப
ட்டது; கௌமார:-நான்கு குமாரர்கள்; து-ஆனால்; உபய—ஆத்மக:-இரண்டு வழிகளிலும் (வைக்ருதா மற்றும் ப்ராக்குதா என்பவை).
ஓ, சிறந்த விதுரரே, இறுதியான இம்மூன்று படைப்புக்களும், தேவர்களின் படைப்பும் (பத்தாவது படைப்பு) வைக்ருத படைப்புக்கள் என்றழைக்கப்படுகின்றன. இவை முன்னர் குறிப்பிடப்பட்டிருக்கும் ப்ராக்ருத (இயற்கை) படைப்புக்களிலிருந்து வேறுபட்டவையாகும். குமாரர்களின் தோற்றம் இவ்விரண்டிலுமே உண்டு.
பதங்கள் 3.10.28 – 3.10.29
தேவ-ஸர்கஸ் சாஷ்டோ-விதோ விபுதா: பிதரோ அஸுரா:
கந்தர்வாப்ஸரஸ: ஸித்தா யக்ஷ – ரக்ஷாம்ஸி சாரணா:
பூத-ப்ரேத-பிஸாசாஸ் ச் வித்யாத்ரா: கின்னராதய:
தஸைதே விதுராக்யாதா: ஸர்காஸ் தே விஸ்வ-ஸ்ருக்-க்ருதா:
தேவ ஸர்க:-தேவர்களின் படைப்பு: ச-மேலும்; அஷ்ட- வித:—எட்டு வகையானவை; விபுதா:-தேவர்கள்; பிதர:-பித்ருக்கள்; அஸுரா: – அசுரர்கள்; கந்தர்வ-தேவலோகத்தின் தேர்ச்சி பெற்றக் கலைஞர்கள்; அப்ஸரஸ:-அப்சரஸ்கள்; ஸித்தா: -சித்தர்கள், இவர்கள் யோகசித்தியில் சிறந்தவர்கள்; யக்ஷ – யக்ஷர்கள், இவர்கள் சிறந்த பாதுகாவலர்கள்; ரக்ஷாம்ஸி—அரக்கர்கள்; சாரணா:-சாரணர், வானுலக இசைக் கலைஞர்கள்; பூத-பூத கணங்கள்; ப்ரேத-பிரேதங்கள் துர்தேவதைகள்; பிஷாசா:-பிசாசுகள்; ச-மேலும்; வித்யாதரா;- வித்யாதரர்கள்; கின்னர—கின்னரர்கள் மனித சக்திக்கு மேற்பட்டவர்கள்; ஆதய:- மற்றும் பிறரும்; தஷ ஏதே—இவை பத்தும் (படைப்புக்கள்); விதுர-ஓ. விதுரனே; ஆக்யாதா:-விளக்கப்பட்டது; ஸர்கா:- படைப்புக்கள்; தே-உனக்கு; விஸ்வ – ஸ்ருக் – பிரபஞ்சப் படைப்பாளி (பிரம்மா); க்ருதா: – அவரால் செய்யப்பட்டது.
தேவர்களின் படைப்பானது எட்டு வகைப்படும். அவை: (1) தேவர்கள், (2) பித்ருக்கள், (3) அசுரர்கள், (4) கந்தர்வர்கள் மற்றும் அப்சரஸ்கள் அல்லது தேவதைகள் (5) யக்ஷர்கள் மற்றும் இராட்சதர்கள், (6) சித்தர்கள், சாரணர்கள் மற்றும் வித்தியாதரர்கள் (7) பூதங்கள், பிரேதாக்கள் மற்றும் பிசாசுகள், (8) கின்னரர்கள் என்னும் மனித சக்திக்கு மேற்பட்டவர்களும், வானத்து இசைக் கலைஞர்கள் போன்றவர்களாவர். இவர்கள் அனைவருமே பிரபஞ்சத்தினைப் படைத்த பிரம்ம தேவரால் படைக்கப்பட்டவர்களே.
பதம் 3.10.30
அத: பரம் ப்ரவக்ஷ்யாமி வம்ஸான் மன்வந்தராணி ச
ஏவம் ரஜ:- ப்லூத: ஸ்ரஷ்டா கல்பாதிஷ்வ் ஆத்மபூர் ஹரி:
ஸ்ருஜதி அமோக-ஸங்கல்ப ஆத்மைவாத்மானம் ஆத்மனா
அத:-இங்கே; பரம்-பின்னர்; ப்ரவக்ஷ்யாமி-நான் விளக்குவேன்; வம்ஷான்—வம்சத்தினர்; மன்வந்தராணி-பல்வேறு மனுக்களின் வருகை; ச-மேலும்; ஏவம்-இவ்வாறு; ரஜ:-ப்லுத— ரஜோ குணத்தினால் நிரப்பப்பட்டு; ஸ்ரஷ்டா-படைப்பவர்; கல்ப- ஆதிஷு- வெவ்வேறு கல்பங்களில்; ஆத்ம-பூ;- தனது வருகை; ஹரி:-முழுமுதற் கடவுள்; ஸ்ருஜதி -படைக்கிறார்; அமோக—தோல்வியற்ற; ஸங்கல்ப:- சங்கல்பம், உறுதி; ஆத்ம ஏவ-அவர் தாமாக; ஆத்மானம்—அவரது; ஆத்மனா—அவரது சுயச்சக்தி.
இப்பொழுது நான் மனுக்களின் பரம்பரையினரைப் பற்றி விளக்கப் போகிறேன். படைப்பவரும், முழுமுதற் கடவுளது ரஜோ குணத்தின் அவதாரமாக வந்தவருமான பிரம்ம தேவர், பகவானின் சக்தியின் துணையினால் பிரபஞ்சச் செயல்களை ஒவ்வொரு கல்பத்திலும் மிகுந்த விருப்பத்துடன் படைக்கின்றார்.
ஸ்ரீமத் பாகவதம், மூன்றாம் காண்டத்தின், “படைப்பின் பிரிவுகள்” எனும் தலைப்பைக் கொண்ட, பத்தாம் அத்தியாயத்திற்கான பக்திவேதாந்தப் பொருளூரைகள் இவ்வாறு நிறைவு பெறுகின்றன.