அத்தியாயம் – 1
விதுரரின் கேள்விகள்
பதம் 3.1.1 : சுகதேவ கோஸ்வாமி கூறினார்: சிறந்த பக்தரான விதுர மகாராஜன் தனது செழிப்புடைய வீட்டைத் துறந்து, வனம் புகுந்தபின், இக்கேள்வியை தவத்திரு மைத்ரேய ரிஷியிடம் கேட்டார்.
பதம் 3.1.2 : பாண்டவர்களின் வசிப்பிடத்தைப் பற்றிச் சொல்ல வேறென்ன இருக்கிறது? அனைத்திற்கும் இறைவனான பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், உமது அமைச்சராக செயற்பட்டார். அந்த வீட்டைத் தமது சொந்த வீடாகவே பாவித்து, அதற்குள் செல்வார். ஆனால் துரியோதனன் வீட்டைப் பற்றி அவர் சிறிதும் கவலைப்படவில்லை.
பதம் 3.1.3 : சுகதேவ கோஸ்வாமியிடம் அரசர் கேட்டார்: துறவியான விதுரருக்கும், தவத்திரு மைத்ரேய முனிவருக்கும் நிகழ்ந்த சந்திப்பும், உரையாடலும், எங்கு, எப்பொழுது நிகழ்ந்தது? பிரபுவே, தயவுசெய்து இதை எங்களுக்கு விளக்கிக் கூறுங்கள்.
பதம் 3.1.4 : துறவியான விதுரர், பகவானின் மிகச்சிறந்த தூய பக்தராவார். எனவே, தவத்திரு மைத்ரேய ரிஷியிடம் அவர் கேட்ட கேள்விகள் மிக உயர்ந்த நோக்கம் உள்ளவையாகவும், கற்றறிந்த பண்டிதர்களால் அங்கீகரிக்கப்பட்டவையாகவும் இருந்திருக்க வேண்டும்.
பதம் 3.1.5 : ஸ்ரீ சூத கோஸ்வாமி கூறினார்: உயர்ந்த அனுபவமுள்ளவரும், மகாமுனிவருமான சுகதேவ கோஸ்வாமி, அரசரிடம் திருப்தியடைந்தார். இவ்வாறு கேள்வி கேட்ட அரசரிடம் அவர் கூறினார்; “இவ்விஷயங்களை கவனமாகக் கேளும்!”
பதம் 3.1.6 : ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்: திருதராஷ்டிர மகாராஜன், நேர்மையற்ற தன் மகன்களை ஆதரிப்பதற்காக, பாவ ஆசைகளால் கவரப்பட்டு குருடானார். இவ்வாறாக தன் தம்பி மகன்களான பாண்டவர்களைக் கொல்வதற்காக அவர் அரக்கு மாளிகைக்கு தீ மூட்டினார்.
பதம் 3.1.7 : புண்ணிய புருஷராகிய யுதிஷ்டிர மகாராஜனுடைய மனைவியான திரௌபதியின் கேசத்தை துச்சாதனன் பற்றி இழுத்ததால், அவளது ஸ்தனங்களிலிருந்த குங்குமம் அவளது கண்ணீரால் கரைந்தோடியது. எனினும் துச்சாதனனின் வெறுக்கத்தக்க அச்செயலை அரசர் தடுக்கவில்லை.
பதம் 3.1.8 : பகைவர் இல்லாமல் பிறந்தவரான யுதிஷ்டிரர், சூதாட்டத்தில் அநியாயமாக தோற்கடிக்கப்பட்டார். ஆனால் சத்திய விரதத்தை ஏற்றிருந்ததால் அவர் வனம் சென்றார். நாளடைவில் திரும்பி வந்த அவர், இராஜ்யத்தில் தமக்குச் சேர வேண்டிய பாகத்தை திருப்பிக் கொடுக்கும்படி வேண்டினார். ஆனால் மாயைக்கு அடிமைப்பட்டிருந்த திருதராஷ்டிரர் அதற்கு மறுத்து விட்டார்.
பதம் 3.1.9 : அர்ஜுனனால், ஜகத் குருவான பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் ராஜசபைக்கு தூதனுப்பப்பட்டார். அவரது வார்த்தைகள் (பீஷ்மரைப் போன்ற) சிலருக்குத் தூய அமுதமாக இருந்தபோதிலும், கடந்த புண்ணிய பலன்களை முற்றிலும் இழந்துவிட்ட மற்றவர்களுக்கு அது அப்படி இருக்கவில்லை. அரசன் (திருதராஷ்டிரர் அல்லது துரியோதனன்) பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் வார்த்தைகளுக்கு அவ்வளவு முக்கியத்துவம் அளிக்கவில்லை.
பதம் 3.1.10 : இரகசிய ஆலோசனைக்காக தன் மூத்த சகோதரரால் (திருதராஷ்டிரர்) அழைக்கப்பட்டு அரண்மனை சென்ற விதுரர், சரியான ஆலோசனைகளை வழங்கினார். விதுரரின் உபதேசங்கள் பிரபலமானவையும், கைதேர்ந்த அமைச்சர்களால் ஏற்கப்பட்டவையுமாகும்.
பதம் 3.1.11 : (விதுரர் கூறினார்:) எதிரிகள் இல்லாதவரும் உங்களுடைய குற்றங்களினால் விளைந்த அளவிட முடியாத துன்பங்களை பொறுத்துக் கொண்டவருமான யுதிஷ்டிரருக்கு உரிமையுள்ள பாகத்தை இப்பொழுது நீங்கள் திருப்பிக் கொடுத்துவிடவேண்டும். அவர் தன் தம்பிகளுடன் காத்திருக்கிறார். அவர்களுக்கிடையில் பாம்பைப் போல் சீறிக்கொண்டு, பழிவாங்கும் எண்ணத்துடன் பீமனும் இருக்கிறார். அவரிடம் உங்களுக்கு அச்சமுண்டு என்பதில் சந்தேகமில்லை.
பதம் 3.1.12 : பரமபுருஷரான பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், பாண்டவர்களைத் தமது உறவினர்களாக ஏற்றுக் கொண்டுள்ளார். உலக மன்னர்களெல்லாம். பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை ஆராதிக்கின்றனர். அவர் தமது குடும்ப அங்கத்தினர்களான, யது வம்ச அரசர்களுடனும், இளவரசர்களுடனும் தமது அரண்மனையில் வாழ்கிறார். எண்ணற்ற அரசர்களை வென்ற அவர்களுக்கு அவர்தான் பகவான்.
பதம் 3.1.13 : குற்றமே வடிவான துரியோதனனை உங்களுடைய நல்ல மகனென்றெண்ணி அவனை நீங்கள் உங்களுடைய மகனாகப் பராமரித்து வருகிறீர்கள். ஆனால் அவன் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் விரோதம் கொண்டவனாக இருக்கிறான். இவ்வாறாக கிருஷ்ண பக்தனல்லாத ஒருவனை நீங்கள் பராமரிப்பதால் சர்வ மங்களங்களையும் நீர் இழந்துவிட்டவராக இருக்கிறீர். இந்த துரதிர்ஷ்டமான நிலையிலிருந்து உடனே உங்களை விடுவித்துக் கொண்டு, உமது குடும்பத்திற்கு நன்மை செய்வீராக.
பதம் 3.1.14 : கற்றவர்களால் கண்ணியமுடையவராகக் கருதப்படும் விதுரர், இவ்வாறு பேசிக் கொண்டிருக்கும்பொழுது, உதடுகள் துடிதுடிக்க, கோபம் பொங்கியவனாய் காணப்பட்ட துரியோதனன், அவரை அவமானப்படுத்தினான். துரியோதனுடன் அவனுடைய தம்பிமார்களும், கர்ணனும், அவனுடைய மாமனான சகுனியும் இருந்தனர்.
பதம் 3.1.15 : இந்த தாசியின் மகனை இங்கு வரச் சொன்னது யார்? கபடனான இவன் யாருடைய பிச்சையால் வளர்ந்தானோ, அவர்களுக்கு எதிராகவே செயற்படுகிறான். உயிர் மட்டும் உடையவனாக அவனை உடனே அரண்மனையிலிருந்து வெளியேற்றுங்கள்.
பதம் 3.1.16 : இவ்வாறு காதுகளில் பாய்ந்த கொடிய சொல் அம்புகளால், இதயத்தில் தாக்கப்பட்ட போதிலும், விதுரர் மனம் கலங்காமல் வில்லை வாயிலில் வைத்துவிட்டு, தமையனின் அரண்மனையை விட்டு வெளியேறினார். புறச் சக்தியின் செயல்கள் மேலானவை என்று கருதிய அவர், அதற்காக வருத்தப்படவில்லை.
பதம் 3.1.17 : விதுரர் தமது பக்தியினால், புண்ணியமுள்ள கௌரவர்கள் பெற்ற நற்பயன்களைத் தானும் பெற்றார். அஸ்தினாபுரத்தை விட்டு வெளியேறியபின், பகவானின் தாமரைப் பாதங்களாக விளங்கும் பல புண்ணிய ஸ்தலங்களை அவர் தஞ்சமடைந்தார். பக்தி வாழ்வின் மிகவுயர்ந்த நிலையை அடையும் விருப்பத்துடன் பகவான் ஆயிரக்கணக்கான திவ்ய ரூபங்களில் எங்கெங்கு கோயில் கொண்டுள்ளாரோ, அப்புனித ஸ்தலங்களுக்கெல்லாம் அவர் யாத்திரை செய்தார்.
பதம் 3.1.18 : அவர் சதா கிருஷ்ணரையே நினைத்துக் கொண்டு, அயோத்யா, துவாரகை மற்றும் மதுரா போன்ற பல்வேறு புண்ணிய ஸ்தலங்களுக்கு தனியாக யாத்திரை செல்லத் துவங்கினார். இவ்வாறாக காற்று, குன்று, பழத்தோட்டம், நதி மற்றும் ஏரி ஆகியவை பாவமில்லாமல் தூய்மையாக உள்ள இடங்களுக்கும், எல்லையற்றவரின் திருவிக்கிரகங்கள் ஆலயங்களை அலங்கரிக்கும் இடங்களுக்கும், அவர் தீர்த்த யாத்திரையை மேற்கொண்டு முன்னேறிச் சென்றார்.
பதம் 3.1.19 : இவ்வாறு பூமியில் சஞ்சரித்து வரும் வேளையில், பரமபுருஷரான ஹரியை மகிழ்விக்கும் கடமைகளை மட்டுமே அவர் செய்து வந்தார். அவரது கடமைகள் தூயவையாகவும், சுதந்திரமானவையாகவும் இருந்தன. அவர் சிகையை வாராமலும், உறங்குவதற்குப் படுக்கை இல்லாமலும், ஒரு துறவியைப்போல் உடை அணிந்து காணப்பட்ட போதிலும் புண்ணிய தீர்த்த ஸ்தலங்களில் நீராடுவதன் மூலம் எப்பொழுதும் புனிதமடைந்தவராகவே காணப்பட்டார். இவ்வாறாக அவரது பற்பல உறவினர்களால் காணப்படாதவராக இடையறாது சஞ்சரித்து வந்தார்.
பதம் 3.1.20 : இவ்வாறாக, பாரத பூமியில் தீர்த்தயாத்திரையை மேற்கொண்டிருந்த அவர், பிரபாஸ க்ஷேத்திரத்திற்குச் சென்றார். அப்பொழுது உலகச் சக்கரவர்த்தியாக இருந்த யுதிஷ்டிர மகாராஜன், ஒரே படைபலத்தைக் கொண்டு ஒரு கொடியின் கீழ் உலகை ஆண்டு வந்தார்.
பதம் 3.1.21 : தீர்த்த யாத்திரையை மேற்கொண்டு பிரபாஸம் என்ற தலத்திற்கு அவர் வந்தார். அங்கு, மூங்கில்களின் உராய்வினால் உண்டாகும் தீ ஒரு காடு முழுவதையும் எரித்து விடுவதைப் போலவே, முரட்டுத்தனத்தினால் தன் உறவினர்கள் அனைவரும் மடிந்ததை அவர் கேள்விப்பட்டார். பிறகு அவர் சரஸ்வதி நதியோரம் மேற்குப் புறத்தை நோக்கிச் சென்றார்.
பதம் 3.1.22 : சரஸ்வதி நதிக் கரையில் பதினோரு தீர்த்த யாத்திரை ஸ்தலங்கள் உள்ளன. அவை, 1. திரிதம், 2. உசனா, 3. மனு, 4. பிருது, 5. அக்னி, 6. அஸிதம், 7. வாயு, 8. சுதாஸம், 9. கோ, 10. குஹம் மற்றும் 11. சிராத்ததேவம். விதுரர் அத்தீர்த்த ஸ்தலங்களை எல்லாம் தரிசித்து, முறையாக தம் கடமைகளை நிறைவேற்றினார்.
பதம் 3.1.23 : மாமுனிவர்களாலும் தேவர்களாலும் நிறுவப்பட்டவையும், பரம புருஷரான விஷ்ணுவின் அநேக ரூபங்களைக் கொண்டவையுமான வேறு பல ஆலயங்களும் கூட அங்கு இருந்தன. இந்த ஆலயங்கள் பகவானின் முக்கிய சின்னங்களால் பொறிக்கப்பட்டு இருந்தன. அவை, மூல முழுமுதற்கடவுளான பகவான் ஸ்ரீ கிருஷ்ணரையே எப்பொழுதும் ஒருவருக்கு நினைவூட்டின.
பதம் 3.1.24 : அதன்பிறகு செல்வம் கொழிக்கும் சுரத், சௌவீரம் மற்றும் மத்ஸ்யம் என்ற மாகாணங்களையும், குருஜாங்கலம் எனப்படும் மேற்கத்திய மாகாணத்தையும் கடந்து சென்ற அவர், இறுதியாக யமுனைக் கரையை அடைந்தார். அங்கு பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் மிகச் சிறந்த பக்தரான உத்தவரை எதிர்பாராமல் சந்தித்தார்.
பதம் 3.1.25 : பிறகு, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் நித்திய தோழரும், முன்பு பிருகஸ்பதியின் சிறந்த மாணவருமான அவரை (உத்தவரை), உணர்ச்சி பொங்க, பேரன்புடன் விதுரர் தழுவிக் கொண்டார். பிறகு விதுரர் பரமபுருஷரான ஸ்ரீ கிருஷ்ணரின் குடும்பத்தைப் பற்றி அவரிடம் விசாரித்தார்.
பதம் 3.1.26 : (பகவானின் நாபிக் கமலத்திலிருந்து பிறந்தவரான) பிரம்மாவின் வேண்டுகோளுக்கு இணங்க அவதரித்தவர்களும், அனைவரையும் உயர்த்தி உலக ஐசுவரியத்தைச் செழிப்படையச் செய்தவர்களுமான மூல முழுமுதற் கடவுள்கள், சூரசேனரின் அரண்மனையில் நலமாக உள்ளனரா (என்று கூற வேண்டுகிறேன்).
பதம் 3.1.27 : குருக்களின் மிகச் சிறந்த நண்பரும், உதார குணமுள்ளவரும், தம் சகோதரிகளுக்கு ஒரு தந்தையைப் போன்றவரும், தம் மனைவிகளை எப்பொழுதும் மகிழ்ச்சிப்படுத்துபவருமான என் மைத்துனர் நலமா?
பதம் 3.1.28 : உத்தவா, யதுக்களின் சேனாதிபதியும், முற்பிறப்பில் காம தேவனாக இருந்தவருமான பிரதியும்னர் நலமா? பிராமணர்களை திருப்திப்படுத்திய ருக்மிணி, அவர்களின் ஆசியால் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் மூலமாக அவரை புத்திரனாகப் பெற்றாள்.
பதம் 3.1.29 : நண்பனே, சாத்வத, விருஷ்ணி, போஜ மற்றும் தாசார வம்சத்தினரின் அரசரான உக்ரசேனர் நலமா? அவர் அரியாசனத்தில் அமரும் நம்பிக்கையையே இழந்து, தமது இராஜ்யத்திலிருந்து வெகு தூரம் சென்ற போதிலும், பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் மீண்டும் அரியாசனத்தில் அமர்த்தினார்.
பதம் 3.1.30 : நற்குணவானே, சாம்பன் நலமா? அவர் பரமபுருஷரின் புத்திரரை ஒத்திருக்கிறார். முற்பிறப்பில் சிவபெருமானுடைய மனைவியின் கர்ப்பத்தில் கார்த்திகேயனாகப் பிறந்த அவர், இப்பொழுது, கிருஷ்ணரின் நோன்பு வளமுடைய மனைவியான ஜாம்பவதியின் கர்ப்பத்தில் பிறந்திருக்கிறார்.
பதம் 3.1.31 : உத்தவா, அர்ஜுனனிடமிருந்து போர் நுணுக்கங்களைக் கற்றவரும், பெருந் துறவிகளாலும் அடையப்படுவதற்கு மிகக் கடினமான உன்னத கதியை அடைந்தவருமான யுயுதானன் நலமா?
பதம் 3.1.32 : பரமபுருஷரிடம் சரணாகதி அடைந்த ஆத்மாவும், சுபல்கரின் புத்திருமான அக்ரூரர் நலமா? ஒருமுறை பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் அடிச்சுவடுகள் தெருப் புழுதியில் பதிந்து கிடப்பதைக் கண்ட அவர் ஆனந்தப் பரவசத்தினால் மூர்ச்சித்து தரையில் விழுந்தார்.
பதம் 3.1.33 : வேதங்கள் யாக நோக்கங்களுக்குரிய களஞ்சியமாக விளங்குகின்றன. அதைப்போலவே, தேவர்களின் தாயைப் போல் தேவக-போஜ மகாராஜனின் மகளும் பரமபுருஷரை தன் கர்ப்பத்தால் கருவுறச் செய்தாள். அவள் (தேவகி) நலமா?
பதம் 3.1.34 : தூய பக்தர்களின் எல்லா ஆசைகளையும் நிறைவேற்றுபவரும், பழங்காலத்திலிருந்து ரிக் வேதத்திற்குக் காரணமானவர் என கருதப்படுபவரும், மனதை சிருஷ்டித்தவரும், விஷ்ணுவின் நான்காவது விரிவங்கமுமான அனிருத்தர் நலமா?
பதம் 3.1.35 : சாந்தமானவரே, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரையே தங்களுடைய ஆத்மாவாக ஏற்றுக் கொண்டவர்களும், தவறாமல் அவரது வழியைப் பின்பற்றுபவர்களுமான இருதீகன், சாருதேஷ்ணர், கதன், மற்றும் சத்யபாமாவின் புதல்வர் முதலான மற்றவர்கள் நலமா?
பதம் 3.1.36 : மேலும், சமயக் கோட்பாடுகளுக்கேற்ப யுதிஷ்டிர மகாராஜன் இப்பொழுது இராஜ்யத்தைப் பரிபாலிக்கிறாரா என்பதைப் பற்றியும் நான் கேள்வியெழுப்ப விரும்புகிறேன். கிருஷ்ணரும், அர்ஜுனனும் யுதிஷ்டிரரின் இரு கரங்களைப் போலிருந்து அவரைப் பாதுகாத்து வந்ததால், துரியோதனன் முன்பு பொறாமைத் தீயில் கருகிக்கொண்டிருந்தான்.
பதம் 3.1.37 : வெல்ல முடியாதவனான, நாகம் போன்ற பீமன், பாவிகளின் நீண்ட நாள் விரோதத்தை பழிதீர்த்துக் கொண்டானா? போர்க்களத்தில் பீமன் அடியெடுத்து வைத்தபொழுது அவனுடைய கதாயுதத்தின் அற்புதமான சுழற்சியைக்கூட எதிரிகளால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
பதம் 3.1.38 : காண்டீவம் என்ற பெயரைக்கொண்ட வில்லை உடையவனும், எதிரிகளை அழிப்பதில், இரத வீரர்களுக்கிடையில் எப்பொழுதும் பிரபலமானவனுமான அர்ஜுனன் நலமா? ஒரு சமயம் வேடனைப் போல் பொய் வேடத்தில் வந்த சிவபெருமானை அர்ஜுனன் அம்புகளால் மூடி அவரைத் திருப்திப்படுத்தினான்.
பதம் 3.1.39 : தங்கள் சகோதரர்களால் காக்கப்பட்டு வரும் இரட்டைச் சகோதரர்கள் நலமா? வஜ்ராயுதத்தை உடையவரான இந்திரனின் வாயிலிருந்து கருடன் அமுதைப் பறித்ததைப் போலவே, எதிரியான துரியோதனனின் பிடியிலிருந்து தங்களுக்குச் சேரவேண்டிய இராஜ்யத்தைப் பறித்துக்கொண்ட பிருதாவின் புத்திரர்களால் அவர்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றனர்.
பதம் 3.1.40 : பிரபுவே, பிருதா இன்னும் உயிருடனிருக்கிறாளா? தந்தையை இழந்த தன் குழந்தைகளுக்காக மட்டுமே அவள் வாழ்ந்து வந்தாள் இல்லையெனில், வில்லம்புகளின் உதவியாலேயே தனியாக நான்கு திக்குகளையும் வென்ற மிகச்சிறந்த சேனாதிபதியான பாண்டு மகாராஜன் இல்லாமல், அவள் உயிர் வாழ்வது சாத்தியமல்ல.
பதம் 3.1.41 : நற்குணவானே, தன் சகோதார் மரணமடைந்ததும் அவருக்கெதிராகப் புரட்சி செய்த அவருக்காக (திருதராஷ்டிரருக்காக) நான் மிகவும் வருந்துகிறேன். அவர் தன் சொந்த மகன்களின் செயல் முறையைப் பின்பற்றியதால், அவரது உண்மை நண்பனாக இருந்த நானும் என் சொந்த வீட்டை விட்டு அவரால் விரட்டப்பட்டேன்.
பதம் 3.1.42 : பிறர் அறியாமல் உலகம் முழுவதிலும் பிரயாணம் செய்த நான் இதைக்கண்டு ஆச்சரியப்படுகிறேன். இந்த ஜட உலக மனிதனின் செயல்களைப் போலவே காணப்படும் பரமபுருஷரின் செயல்கள் மற்றவர்களை குழப்பத்தில் ஆழ்த்துகிறது. ஆனால் அவரது கருணையால் அவரது பெருமையை நான் அறிந்திருப்பதால், எல்லா வகையிலும் நான் மகிழ்ச்சியுடன் இருக்கிறேன்.
பதம் 3.1.43 : குருக்கள் எல்லாவகையான பாவங்களையும் செய்திருந்த போதிலும், மற்ற அரசர்கள் தங்களது படை பலத்தினால், மூவகைப் பொய் அகங்காரங்களின் தூண்டுதலின் கீழ், பூமியில் இடையறாது கலகம் விளைவித்து வந்த போதிலும், பகவானாக இருந்தும், துன்புறுபவர்களின் துன்பத்தைப் போக்குவதில் எப்பொழுதும் விருப்பமுள்ளவராக இருந்தும், அவர் (ஸ்ரீ கிருஷ்ணர்) குருக்களைக் கொல்வதிலிருந்து விலகியே இருந்தார்.
பதம் 3.1.44 : பகவான் தோன்றியது கயவர்களை அழிப்பதற்காகவேயாகும். அனைவரும் புரிந்து கொள்வதற்காகவே உன்னதமான அவரது செயல்கள் நிகழ்த்தப்படுகின்றன. இல்லையெனில், இயற்கைக் குணங்களுக்கெல்லாம் மேற்பட்டவரான பகவான், பூமிக்கு வரவேண்டிய அவசியம் என்ன இருக்கிறது?
பதம் 3.1.45 : எனவே, நண்பனே, தீர்த்த யாத்திரை ஸ்தலங்களில் புகழப்பட வேண்டியவரான, பகவானின் பெருமைகளைக் கூற வேண்டுகிறேன். அவர் பிறப்பற்றவர் என்ற போதிலும், பிரபஞ்சம் முழுவதிலுமுள்ள சரணடைந்த அரசர்களின்மீது கொண்ட தனிப்பெரும் கருணையினால் தோன்றுகிறார். அவர்களுடைய நன்மைக்காகத்தான் தூய பக்தர்களான யதுக்களின் வம்சத்தில் அவர் தோன்றினார்.