அத்தியாயம் – 8
பரீட்சித்து மகாராஜனின் கேள்விகள்
பதம் 2.8.1
ப்ரஹ்மணா சோதிதோ ப்ரஹ்மன் குணாக்யானே குணஸ்ய ச
யஸ்மை யஸ்மை யதா ப்ராஹ நாரதோ தேவ-தர்சன:

ராஜ:—மகாராஜன்; உவாச-விசாரித்தார்; ப்ரஹ்மணா-பிரம்ம தேவரால்; சோதித:- உபதேசிகப்படும்; ப்ரஹ்மன்—-சுற்றறிந்த பிராமணரே (சுகதேவ கோஸ்வாமி); குண—ஆக்யானே—உன்னதமான குணங்களை விவரிப்பதில்; அகுணஸ்ய-பௌதிக குணங்களற்றவரான முகவானின்; ச-மேலும்; யஸ்மை யஸ்மை—மேலும் யாரை; யதா- இயன்றளவு; ப்ராஹு-விவரித்தார்; நாரா:- நாரத முனி; தேவ தர்சன-தேவ தரிசனத்திற்கு நிகரானவர்.

பரீட்சித்து மகாராஜன் சுகதேவ கோஸ்வாமியிடம் விசாரித்தார்: நாரத முனி பேசுவதைக் கேட்டவர்கள் பிரம்ம தேவரால் உபதேசிக்கப்பட்டவர்களுக்கு ஈடான அதிர்ஷடசாலிகளாவர். அத்தகைய நாரதர் பௌதிக குணங்களற்றவரான பகவானின் திவ்யமான குணங்களை எவ்விதம் விவரித்தார்? மேலும் யார் முன்னிலையில் அவர் பேசினார்?

பதம் 2.8.2
எதத் வேதிதும் இச்சாமி தத்வம் தத்வ-விதாம் வர
ஹரேர் அத்புத-வீர்யஸ்ய கதா லோக-ஸுமங்களா;

ஏதத் — இதை; வேதிலும்-அறிய; இச்சாமி-நான் விரும்புகிறேன்; தத்வம்-உண்மை; தத்வ-விதாம்-பரம சக்தியத்தைப் பற்றி நன்கு கற்றறிந்தவர்களின்; வர-மிகச் சிறந்தவரே; ஹரே:-பகவானின்: அத்புத—வீர்யஸ்ய-அற்புத சக்திகளைப் படைத்திருக்கும் ஒருவனின்; கதா—வரலாறு; லோக-எல்லா கிரகங்களுக்கும்; ஸுமங்களா: மங்களம்.

அரசர் கூறினார்: அற்புத சக்திகளைப் பெற்றுள்ள பகவானைப் பற்றிய வரலாறு, எல்லாக் கிரகங்களுக்கும் நிச்சயமாக, மங்களம் அளிப்பவையாகும். அவற்றை நான் அறிய விரும்புகிறேன்.

பதம் 2.8.3
கதயஸ்வ மஹாபாக யதாஹம் அகிலாத்மனி
க்ருஷ்ணே நிவேஸ்ய நிஹ்ஸங்கம் மனஸ் த்யக்ஷ்யே கலேவரம்

கதயஸ்வ-தயவு செய்து தொடர்ந்து பேசவும்: மஹாபாக-பெரும் பாக்கியசாலியே; யதா-இயன்றளவு; அஹம்- நான்: அகில ஆத்மனி-பரமாத்மாவிடம்; க்ருஷ்ணே-பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம்: நிவேஸ்ய-வைத்து; நிஹ்ஸங்கம்- ஜடக்குணங்களிலிருந்து விடுபட்டு; மன:- மனம்; த்யக்ஷ்யே-கைவிடக் கூடும்; கலேவரம் — உடல்.

பெரும் பாக்கியசாலியாள சுகதேவ கோஸ்வாமியே, தயவு செய்து ஸ்ரீமத் பாகவத்தைத் தொடர்ந்து சொல்லும்படி வேண்டுகிறேன். இதனால் பரமாத்மாவாகிய பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் என் மனதை நான் பதிக்க முடியும். இவ்வாறு ஜடக் குணங்களிலிருந்து முற்றிலும் விடுபட்ட நிலையில், இவ்வுடலை என்னால் கைவிட முடியும்.

பதம் 2.8.4
ஸ்ருண்வத: ச்ரத்தயா நித்யம் க்ருணதஸ் ச ஸ்வ-சேஷ்டிதம்
காலேன நாதிதீர்கேண பகவான் விசதே ஹ்ருதி

ஸ்ருண்வத்:- செவி சாய்ப்பவர்களில்; ச்ரத்தயா-சிரத்தையுடன்; நித்யம்- ஒழுங்காக, எப்பொழுதும்; க்ருணத:- விஷ்யத்தை கருத்திற் கொண்டு; ச-தவிரவும்; ஸ்வ- சேஷ்டிதம் ஒருவரது சொந்த முயற்சியின் மூலமாக உறுதியுடன்; காலேன-ஆயுள்; ந- இல்லை; அதி-தீர்கேண மிகவும் நீடிக்கச் செய்யப்பட்ட காலம்; பகவான்- பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்; விசதே-தோன்றுகிறது; ஹ்ருதி—ஒருவரின் இதயத்திற்குள்.

ஸ்ரீமத் பாகவத்தை ஒழுங்காகக் கேட்பவர்களும், இவ்விஷயத்தை எப்பொழுதும் முக்கியமானதாக ஏற்றுக் கொள்பவர்களும், முழுமுதற் கடவுளான ஸ்ரீ கிருஷ்ணரை விரைவில் தங்களது இதயங்களில் எழுந்தருளச் செய்வர்.

பதம் 2.8.5
ப்ரவிஷ்ட: கர்ண-ரந்ரேண ஸ்வானாம் பாவ-ஸரோருஹம்
துனோதி சமலம் க்ருஷ்ண: ஸலிலஸ்ய யதா சரத்

ப்ரவிஷ்ட:-இவ்வாறு உள்ளே புகுந்து; கர்ண—ரந்ரேண செவித் துவாரங்களின் மூலமாக; ஸ்வானாம்—ஒருவரின் முக்தியடைந்த நிலைக்கேற்ப; பாவ-இயல்பான உறவு; ஸர:–ருஹம் தாமரை மலர்; துனோதி.–தூய்மைப்படுத்துகிறது; சமலம்-காமம், கோபம், பேராசைமற்றும் விருப்பம் போன்ற பௌதிக குணங்கள்; க்ருஷ்ண: பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்; ஸலிலஸ்ய—நீர்த்தேக்கங்களின்; யதா—அது இருந்ததைப் போலவே; சரத்—இலையுதிர் காலம்.

பரமாத்மாவான பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் “சபத்” அவதாரமாக (ஸ்ரீமத் பாகவதத்தின் வடிவில்), தன்னுணர்வு பெற்ற ஒரு பக்தனின் இதயத் தாமரைக்குள் புகுந்து, நீரின் கலக்கத்தை இலையுதிர்க்கால மழை போக்குவதைப் போல், பௌதிக சகவாசத்தால் விளைந்த காமம், கோபம், லோபம் (பேராசை) முதலான அழுக்குகளைப் போக்கி விடுகிறார்.

பதம் 2.8.6
தௌதாத்மா புருஷ: க்ருஷ்ண – பாத – மூலம் ந முஞ்சதி
முக்த – ஸர்வ – பரிக்லேச: பாந்த: ஸ்வ -சரணம் யதா

தௌத- ஆத்மா-இதயம் தூய்மைப்படுத்தப்பட்டவர்; புருஷ: ஜீவராசி; க்ருஷ்ண-பரமபுருஷ பகவான்; பாதமூலம்-தாமரைப் பாதங்களின் புகலிடம்; ந- ஒருபொழுதும் இல்லை; முஞ்சதி- கைவிடுகிறார்; முக்த-முக்தியடைந்த; ஸர்வ-எல்லா; பரிக்லேச: வாழ்வின் அனைத்து துன்பங்களின்; பாந்த:-பிரயாணி: ஸ்வ-சரணம் அவனது சொந்த வசிப்பிடத்தில்; யதா-அது இருந்தைப்போல்.

பக்தித் தொண்டு முறையால் இதயம் ஒரு முறை தூய்மை அடையப் பெற்ற தூய பக்தரொருவர் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் தாமரைப் பாதங்களை ஒருபொழுதும் கைவிடுவதில்லை. ஏனெனில், துன்பம் நிறைந்த ஒரு பிரயாணத்திற்குப் பின் வீட்டில் திருப்தியுடன் இருக்கும் ஒரு பிரயாணியைப் போல், அவரை பக்தித் தொண்டு பூரண திருப்தியடையச் செய்கிறது.

பதம் 2.8.7
யத் அதாது-மதோ ப்ரஹ்மன் தேஹாரம்போ ‘ஸ்ய தா துபி;
யத்ருச்சயா ஹேதுனா வா பவந்தோ ஜானதே யதா

யத்-உள்ளவாறு; அதாது-மத:– பௌதிக தன்மையைக் கொண்டிராமல்; ப்ரஹ்மன்; ப்ரஹ்மன்-கற்றறிந்த பிராமணரே; தேஹ- ஜடஉடல்; ஆரம்ப:-அதன் ஆரம்பம்: அஸ்ய- ஜீவராசியின்:தாதுபி- ஜடத்தால்; யத்ருச்சயா-காரணமற்ற தற்செயலாக; ஹேதுனா-ஏதோ சில காரணத்தால்; வா-இரண்டிலொன்று; பவந்த:- தாங்கள், ஜானதே-தாங்கள் அதை அறிந்திருப்பதைப் போல்; யதா-எனவே என்னிடம் அறிவிப்பீராக.

கற்றறிந்த பிராமணரே, உன்னதமான ஆத்மா ஜட உடலிலிருந்து வேறுபட்டதாகும். அவன் தனது உடலை தற்செயலாகப் பெறுகிறானா? அல்லது ஏதேனும் சில காரணத்தால் பெறுகிறானா? இதைத் தாங்கள் அறிந்திருப்பதால், அன்புடன் இதை விளக்கியருள வேண்டுகிறேன்.

பதம் 2.8.8
ஆஸீத் யத்-உதராத்-பத்மம் லோக-ஸம்ஸ்தான-லக்ஷணம்
யாவான் அயம் வை புருஷ இயத்தாவயவை: ப்ருதக்
தாவான் அஸாவ் இதி ப்ரோக்த: ஸம்ஸ்தாவயவவான் இவ

ஆஸீத்-அது வளர்ந்ததைப் போல்; யத் உதராத்- யாருடைய வயிற்றிலிருந்து; பத்மம்-தாமரைப் பூ; லோக-உலகம்; ஸம்ஸ்தான்- சூழ்நிலை; லக்ஷணம்—அதைப் பெற்றிருக்கும்; யாவான்- அது இருந்ததைப் போல்; அயம் – இது ; வை- நிச்சயமாக; புருஷ: பரமபுருஷ பகவான்; இயத்தா-அளவு; அவயவை:-உருவங்களால்; ப்ருதக்—வேறுபட்டது; தாவான்—ஆகையால்; அஸௌ-அந்த; இதி-ப்ரோக்த:- இது இவ்வாறு கூறப்பட்டுள்ளது; ஸம்ஸ்தா-சூழ்நிலை; அவயவவான்—உருவம்; இவ-போன்ற.

யாருடைய வயிற்றிலிருந்து தாமரைத் தண்டு முளைத்ததோ, அந்த பரமபுருஷ பகவான், அவரது சுய மனோபலத்திற்கும், அளவிற்கும் ஏற்ற ஒரு பிரம்மாண்டமான உடலைப் பெற்றிருப்பாரயின், பின் அவரது உடலுக்கும், சாதாரண ஜீவராசிகளின் உடலுக்கும் உள்ள வேறுபாடு என்ன?

பதம் 2.8.9
அஜ: ஸ்ருஜதி பூதானி பூதாத்மா யத்-அனுக்ரஹாத்
தத்ருசே யேன தத்-ரூபம் நாபி-பத்ம-ஸமுத்பவ:

அஜ:- பௌதிக உற்பத்தி ஸ்தானம் இல்லாமல் பிறந்தவர்; ஸ்ருஜதி-படைக்கிறார்; பூதானி-பௌதிகமான முறையில் பிந்தவர்கள் அனைவரும்; பூத-ஆத்மா—ஜடத்தாலான ஒருடலைப் பெற்றுள்ள; யத்-யாருடைய; அனுக்ரஹாத்—அவரது கருணையால்; தத்ருசே- காண முடிந்தது; யேண-யாரால்; தத்ரூபம்—அவரது உடலின் வடிவம்; நாபி – நாபி; பத்ம-தாமரைப் பூ ; ஸமுத்பவ:- அதிலிருந்து பிறந்ததால்.

பௌதிக மூலத்திலிருந்து பிறக்காமல், பகவானின் நாபியிலிருந்து வெளிவரும் தாமரைப் பூவில் பிறந்தவரான பிரம்மாவே, பௌதிக பிறவியேற்கும் அனைவரையும் படைப்பவராவார். பகவானின் கருணையால் அவரது ரூபத்தை பிரம்மாவால் காண முடிந்தது.

பதம் 2.8.10
ஸ சாபி யத்ர புருஷோ விஸ்வ-ஸ்திதி-உத்பவாப்யய:
முக்த்வாத்ம-மாயாம் மாயோ: ஸேதே ஸர்வ-குஹாசய:

ஸ:-அவர்; ச-தவிரவும்; அபி-அவரை உள்ளவாறு; யத்ர- எங்கு; புருஷ:- முழுமுதற் கடவுள்; விஸ்வ- ஜட உலகங்கள்: ஸ்திதி-பராமரிப்பு; உத்பவ-சிருஷ்டி; அப்யய:-அழிவு; முக்த்வா—தொடப்படாமல்; ஆத்ம- மாயாம்-சுய சக்தி; மாயா ஈச:- அனைத்து சக்திகளுக்கும் இறைவன்; சேதே-சயனித்திருக்கிறார்; ஸர்வ-குஹா சய:-அனைவரது இதயத்திலும் சயனித்தருப்பவர்.

எல்லோர் இதயங்களிலும் பரமாத்மாவாக இருப்பவரும், சர்வ சக்திகளுக்கும் இறைவனாக இருந்தும், அவரது பகிரங்க சக்தியால் தொடப்படாதவராக இருப்பவருமான பரமபுருஷரைப் பற்றியும் தயவு கூர்ந்து விளக்கியருள வேண்டும்.

பதம் 2.8.11
புருஷாவயவைச் லோகா: ஸபாலா: பூர்வ-கல்பிதா:
லோகைர் அமுஷ்யாவயவா: ஸ-பாலைர் இதி கஸ்ரும

புருவு-விஸ்வ ரூபம் (விராட்-புருஷர்); அவயவை: உடலின் வெவ்வேறு பாகங்களால்; லோக:- கிரக அமைப்பு; ஸ-பாலா-அதனதன் ஆளுனர்களுடன்; பூர்வ முன்பு; கல்பிதா: விவாதிக்கப்பட்ட; லோகை:-வெவ்வேறு கிரக அமைப்புக்களால், அமுஷ்ய- அவரது; அவயவா:-உடலின் வெவ்வேறு பாகங்கள்; ஸ-பாலை:-ஆளுனர்களுடன்; இதி-இவ்வாறாக; கஸ்ரும-நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.

கற்றறிந்த பிராமணரே, பிரபஞ்சத்தின் அனைத்து கிரகங்களும், அவற்றின் ஆளுனர்களும் விராட்-புருஷரின் பிரம்மாண்டமான உடலின் வெவ்வேறு பாகங்களில் அமைந்திருப்பதாக முன்பு விவரிக்கப்பட்டது. அதை நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் அவற்றின் உண்மை நிலையென்ன? அதை தயவுகூர்ந்து விளக்கிக் கூறுவீரா?

பதம் 2.8.12
யாவான் கல்போ விகல்போ வா யதா காலோ ‘னுமீயதே
பூத-பவ்ய-பவச்-சப்த ஆயுர்-மானம் ச யத் ஸத:

யாவான்-உள்ளவாறு: கல்ப: படைப்பிற்கும், அழிவிற்கும் இடைப்பட்ட காலம், விகல்ப:-இரண்டாம் பட்சமான படைப்பு மற்றும் அழிவு: வா-ஏதேனும் ஒன்று; யதா-அதைப் போலவே: நில- காலம்; அனுமீயதே—அளக்கப்படுகிறது; பூத-இறந்தகாலம்: பவ்ய—எதிர்காலம்: பவத்—நிகழ்காலம்; சப்த- ஓசை; ஆயு:—ஆயுள்;
மானம்-அளவு: ச-மேலும்; யத்-எது; ஸ்த: எல்லா கிரகங்களிலும் உள்ள அனைத்து ஜீவராசிகளின்.

மேலும் படைப்பு மற்றும் அழிவு ஆகியவற்றிற்கு இடைப்பட்ட காலம், இரண்டாம்பட்சமான படைப்புக்களின் ஆயுள், அத்துடன் கடந்த, நிகழ் மற்றும் எதிர் காலங்களின் தன்மை ஆகியவற்றையும் அதுமட்டுமல்லாமல், பிரபஞ்சத்தின் வெவ்வேறு கிரகங்களிலுள்ள தேவர்களையும், மனிதர்களையும் போன்ற ஜீவராசிகளின் ஆயுட்காலத்தையும் கூட தயவு செய்து விளக்க வேண்டுகிறேன்.

பதம் 2.8.13
காலஸ்யானுகதிர் யாது லக்ஷ்யதே ந்வீ ப்ருஹதி அபி
யாவத்ய: கர்ம-கதயோ யாத்ருசீர் த்விஜ-ஸத்தம

காலஸ்ய-நித்திய காலத்தின்; அனுகதி: ஆரம்பம்; யாது— அவர்களைப் போல்; லஷ்யதே-அனுபவமுள்ள; அண்வீ-சிறிய; ப்ருஹதீ-பெரிய; அபி-ஆயினும்; யாவத்ய :- அதுவரையில்; கர்ம கதய:- செயலாற்றப்படுவதற்கு ஏற்ப; யாத்ருசீ:-அது இருக்கக் கூடும்; த்விஜ-ஸத்தம-அனைத்து பிராமணர்களிலும் புனிதமானவரே.

பிராமணர்களின் புனிதமானவரே, ஆயுள் நீண்டும், குறுகியும் உள்ளதன் காரணத்தையும், காலத்தின் ஆரம்பம் மற்றும் அதைத் தொடர்ந்த செயலின் போக்கு ஆகியவற்றையும் கூட தயவு செய்து விவரிக்க வேண்டும்.

பதம் 2.8.14
ய்ஸ்மின் கர்ம-ஸமாவாயோ யதா யேனோபக்ருஹ்யதே
குணானாம் குணீனாம் சைவ பரிணாமம் அபீப்ஸதாம்

யஸ்மின்-எந்த; கர்ம-செயல்கள்; ஸமாவாய:-சேகரிப்பு; யதாட- இயன்ற வரையில்; யேன- எதனால்; உபக்ருஹ்யதே-ஏற்கின்றது; குணானாம்- வெவ்வேறு ஜட இயற்கைக் குணங்களின்; குணினாம்- ஜீவராசிகளின்; ச-தவிரவும்: ஏவ- நிச்சயமாக; பரிணாமம் -நேரிடிக்கூடிய; அபீப்ஸதாம்-ஆசைகளின்.

மேலும், வெவ்வேறு ஜட இயற்கைக் குணங்களின் அளவிற்கேற்ப உண்டாகும் பலன்கள், எவ்வாறு தேவர்கள் முதற்கொண்டு மிகவும் அற்பமான ஜீவன்கள் வரையிலான, வேறுபட்ட ஜீவராசிகளை உயர்வடையவோ அல்லது இழிவடையவோ செய்கின்றன என்பதையும் அன்புடன் விளக்குவீராக.

பதம் 2.8.15
பூ-பாதாள்-ககுப்-வ்யோம-க்ரஹ-நக்ஷத்ர-பூப்ருதாம்
ஸரித்-ஸமுத்ர-த்வீபானாம் ஸம்பவஸ் சைதத்-ஓகஸாம்

நக்ஷத்ர-நட்சத்திரங்கள்; ஸமுத்ர-சமுத்திரம்; பூபாதாள்—பூமிக்கடியில்; ககுப்—சுவர்க்கத்தின் நான்கு பக்கங்கள்: வ்யோம்-ஆகாயம்; பூப்ருதாம்-மலைகளின்; க்ரஹ-கிரகங்கள்; ஸரித்- நதி; தீவிபானாம்- தீவுகளின்; ஸம்பவ:- தோற்றம்; ச- தவிரவும் ; ஏதத்- அவற்றின்; ஓகஸாம்—வாசிகளின்.

பிராமண சிரேஷ்டரே, பிரபஞ்சம் முழுவதிலுமுள்ள கோளங்கள் சுவர்க்கத்தின் நான்கு திசைகள், ஆகாயம், கிரகங்கள், நட்சத்திரங்கள், மலைகள், நதிகள், கடல்கள் மற்றும் தீவுகள் ஆகியவையும் அவற்றின் வேறுபட்ட வாசிகளும் எவ்வாறு படைக்கப்படுகின்றன என்பதையும் தயவு செய்து விளக்கியருளுங்கள்.

பதம் 2.8.16
ப்ரமாணம் அண்ட-கோங்ஸ்ய பாஹ்யாப்ஹ்யந்தர-பேதத:
மஹதாம் சானுசரிதம் வர்ணாஸ்ரம-வினிஸ்சய:

ப்ரமாணம் – பரம்பு மற்றும் அளவு; அண்ட-கோங்ஸ்ய-பிரபஞ்சத்தின்; பாஹ்ய-புறவெளி; அப்யந்தர- உள்வெளி; பேத்த- பிரிவின் மூலமாய்: மஹதாம்- மகாத்மாக்களின்; ச-தவிரவும்: அனுசரிதம்-குணமும், செயல்களும்; வர்ண-சமூகப்பிரிவுகள்: ஆஸ்ரம ஆன்மீக பிரிவுகள்; வினிஸ்சய:- குறிப்பாக விளக்கவும்.

பிரபஞ்சத்தின் உள்வெளியையும், புறவெளியையும் அவற்றின் பிரிவுகளுக்கேற்ப விளக்கவும். அத்துடன் மகாத்மாக்களின் குணம் மற்றும் செயல்களையும், மேலும் சமூக மற்றும் ஆன்மீக பிரிவினர்களின் செயல் முறைகளையும் கூட தயவு செய்து விளக்குவீராக.

பதம் 2.8.17
யுகானி யுக-மானம் ச தர்மோ யஸ் ச யுகே யுகே
அவதாரனுசரிதம் யத் ஆஸ்சர்யதமம் ஹரே:

யுகானி—வெவ்வேறு யுகங்கள்; யுக -மானம்- ஒவ்வொரு யுகத்தின் ஆயுள்; ச-அத்துடன்; தர்ம:-குறிப்பிட்ட வர்ணாஸ்ரம கடமை; ய- ச- மேலும் எது; யுகே யுகே-யுகந்தோறும் அல்லது குறிப்பிட்ட யுகத்தில்; அவதார—அவதாரம்: அனுசரிதம்-மேலும் அவதாரங்களின் நடவடிக்கைகள்; யத்-எது; ஆஸ்சர்யதமம்- மிகவும் அற்புதமான செயல்கள்; ஹரே:-பரம புருஷரின்.

சிருஷ்டியிலுள்ள யுகங்களையும், அவற்றின் வெவ்வேறு ஆயுட்காலத்தையும் தயவு செய்து விவரிக்க வேண்டுகிறேன். அத்துடன், வெவ்வேறு யுகங்களில் அவதரிக்கும் பகவானின் வெவ்வேறு செயல்களைப் பற்றியும் கூறுவீராக.

பதம் 2.8.18
ந்ருணாம் ஸாதாரணோ தர்ம: ஸவிசேஷஸ் ச யாத்ருஸ:
ஸ்ரேணீனாம் ராஜர்ஷீணாம் ச தர்ம: க்ருச்ரேஷு ஜீவதாம்

ந்ருணாம்-மனித சமூகத்தின்; ஸாதாரண:-பொதுவான; தர்ம- சமய ஒற்றுமை; ஸ- விசேஷ:-விசேஷமான; ச-தவிரவும்; யாத்ருங்:—அவை உள்ளவாறு; ஸரேணீணாம்-பிரத்தியேகமான மூன்று வகுப்புக்களின்; ராஜர்ஷணம்-புனிதமான மன்னர்களின்; ச-தவிரவும்; தர்ம-வர்ணாஸ்ரம கடமை; க்ருச்சேரஷு-துயருற்ற சூழ்நிலைகளின் விஷயத்தில்: ஜீவதாம்—ஜீவராசிகளின்.

மனித சமூகத்தின் பொதுவான சமய ஒற்றுமைகளை ஏற்படுத்தக் கூடியது என்னவாக இருக்கும்? மேலும் மக்களின் வர்ணாஸ்ரம பற்றியும், கடமைகளைப் பற்றியும், சமூக மற்றும் அரசாளும் பிரிவினரைப் பற்றியும், துன்பத்தில் உள்ளவனுக்குரிய மதக் கடமைகளையும் தயவு செய்து விவரிக்க வேண்டும்.

பதம் 2.8.19
தத்வானாம் பரிஸங்க்யானம் லக்ஷணம் ஹேது-லக்ஷணம்
புருஷாராதன-விதிர் யோகஸ்யா த்யாத்மிகஸ்ய ச

தத்வானாம்-படைப்பை உருவகப்படுத்தும் மூலப் பொருட்களின்; பரிஸங்க்யானம்—அத்தகைப் மூலப் பொருட்களுடைய எண்ணிக்கையின்: லக்ஷணம்- அறிகுறிகள்; ஹேது—லக்ஷணம் காரணங்களின் அறிகுறிகள்; புருஷ்–பகவானின்; ஆராதன -பக்தித்தொண்டின்; விதி:- விதிகள்; யோகஸ்ய-யோகப் பயிற்சியின்; அத்யாத்மிகஸ்ய- பக்தித் தொண்டை நோக்கி அழைத்துச் செல்லும் ஆன்மீக வழிகள்; ச- தவிரவும்.

படைப்பின் மூலப் பொருட்கள், அவற்றின் எண்ணிக்கை, அவற்றிற்குரிய காரணங்கள், அவற்றின் வளர்ச்சி, அத்துடன் பக்தித் தொண்டின் முறை மற்றும் யோக சக்திகளின் முறை ஆகியவற்றையும் அன்புடன் விளக்குவீராக.

பதம் 2.8.20
யோகேஸ்வரைஸ்வர்ய-கதிர் லிங்க – பங்கஸ்து யோகினா
வேதோபவேத – தர்மாணாம் இதிஹாஸ புராணயோ:

யோக- ஈஸ்வர-யோக சக்திகளுடைய அதிபதியின்; ஐஸ்வர்ய— ஐசுவரியம்; கதி:- முன்னேற்றம்; லிங்க-உடல்; பங்க:- துறவு; து-ஆனால்; யோகினாம் -யோகிகளின்; வேத-உன்னத அறிவு; உபவேத-வேதத்திற்கு ஏற்புடைய மறைமுகமான அறிவு:தர்மாணாம்-மத நம்பிக்கையின்: இதிஹாஸ-இதிகாசம்: புராணயோ:-புராணங்களின்.

மகா யோகிகளின் ஐசுவரியங்கள் யாவை? முடிவாக அவர்களால் உணர்ப்படுகிறது என்ன? பக்குவமடைந்த யோகி எப்படி சூட்சும உடலிருந்து தன்னை பிரித்துக் கொள்கிறான்? இதிகாசம் மற்றும் பிற்சேர்க்கையான புராணங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய வேத இலக்கியங்களின் அடிப்படை அறிவு என்ன?

பதம் 2.8.21
ஸம்ப்லவ ஸர்வ-பூதானாம் விக்ரம ப்ரநிஸங்கிரம:
இஷ்டா-பூர்தஸ்ய காம்யானாம் த்ரி-வர்கஸ்ய ச யோ விதி:

ஸ்ம்ப்லவ:- பக்குவமான வழி அல்லது முழுமையான அழிவு: ஸர்வ-பூதானாம்—அனைத்து ஜீவராசிகளின்: விக்ரம்:-விசேஷ சக்தி அல்லது சூழ்நிலை: ப்ரதிஸங்கக்ரம் :- முடிவான அழிவு: இஷ்டாட- வேதச சடங்குகளை நிறைவேற்றல்; பூர்தஸ்ய-புண்ணிய கருமங்கள்: காம்யானாம்- பொருளாதார முன்னேற்றத்திற்கான சடங்குகள்: த்ரி வர்கஸ்ய-மதம், பொருளாதார முன்னேற்றம், மற்றும் புலன் திருப்தி எனப்படும் மூன்று வழிகள்; ச- தவிரவும்; ய:- எதுவாயினும்: விதி: விதிமுறைகள்.

ஜீவராசிகள் எப்படி உற்பத்தி செய்யப்படுகின்றனர், எப்படி பராமரிக்கப்படுகின்றனர், மேலும் அவர்கள் அவர்கள் எப்படி அழிக்கப்படுகின்றனர் என்பதையெல்லாம் தயவு செய்து என்னிடம் விளக்கிக் கூறுவீராக. பகவானிடம் பக்தித் தொண்டாற்றுவதால் விளையும் நன்மை, தீமைகளைப் பற்றியும் எனக்குக் கூறுவீராக. ஸ்மிருதி சாஸ்திரங்களின் வேதச் சடங்குகளும், கட்டளைகளும் யாவை? மேலும் மதம், பொருளாதார முன்னேற்றம் மற்றும் புலன் திருப்தி ஆகியவற்றிற்குரிய செயல் முறைகள் யாவை?

பதம் 2.8.22
யோ வானுசாயினாம் ஸர்க: பாஷண்டஸ்ய ச ஸம்வப:
ஆத்மனோ பந்த-மோக்ஷௌ ங் வ்யவஸ்தானம் ஸ்வ-ரூபத:

ய -அவ்வெல்லா; வா- ஏதேனுமொன்று; அனுசாயினாம்- பகவானின் உடலில் கலந்து விட்ட; ஸர்க:-படைப்பு: பாஷண்டஸ்ய- நாத்திகர்களின்; ச-மேலும்: ஸம்பவ:- தோற்றம்; ஆத்மன-ஜீவராசிகளின்; பந்த- பந்தப்பட்ட; மோக்ஷெள-மோட்சமடைந்து; ச-தவிரவும்; வ்யவஸ்தானம்—அமையப் பெற்று; ஸ்வ- ரூபத: பந்தப்படாத ஒரு நிலையில்.

பகவானின் உடலோடு ஐக்கியப்பட்டுள்ள ஜீவராசிகள் எப்படி படைக்கப்படுகின்றன என்பதையும், இவ்வுலகில் நாஸ்திகர்கள் எப்படி தோன்றுகின்றனர் என்பதையும், பந்தப்படாத ஜீவராசிகள் எப்படி வாழ்கின்றனர் என்பதையும் தயவு செய்து விளக்குவீராக.

பதம் 2.8.23
யதாத்ம–தந்த்ரோ பகவான் விக்ரீட்தி ஆத்ம-மாயயா
விஸ்ருஜ்ய வா யதா மாயாம் உதாஸ்தே ஸாக்ஷிவத் விபு:

யதா-அவ்வாறு; ஆத்ம தந்த்ர:-சுதந்திரமான; பகவான்- முழுமுதற் கடவுள்: விக்ரீடதி-அவரது லீலைகளை அனுபவிக்கிறார்; ஆத்ம-மாயயா—அவரது அந்தரங்க சக்தியால்; விஸ்ருஜ்ய-கைவிட்டு;வா-அவ்வாறே; யதா-அவர் விரும்புவதைப் போல்: மாயாம்- பகிரங்க சக்தி: உதாஸ்ரே- எஞ்சியிருக்கிறார்; ஸாக்ஷிவத்- சாட்சியைப் போலவே; விபு:-சர்வ வல்லமையுடையவர்.

சுதந்திரமுள்ளவரான முழுமுதற் கடவுள் அவரது லீலைகளைத் தமது அந்தரங்க சக்தியின் மூலமாய் அனுபவிக்கிறார். அழிவுக் காலத்தில் அவற்றை பகிரங்க சக்தியிடம் விட்டுவிட்டு, அனைத்திற்கும் சாட்சியாக மட்டுமே எஞ்சியிருக்கிறார்.

பதம் 2.8.24
ஸர்வம் ஏதச் ச பகவான் ப்ருச்சதோ மே’ னுபூர்வச:
தத்வதோ ர்ஹஸி உதாஹர்தும் ப்ரபன்னாய மஹா-முனே

ஸர்வம் -இவ்வெல்லா; ஏத்த—விசாரணைகள்; ச-என்னால் கேட்க இயலாதவற்றையும்; பகவான்-மகா முனிவரே; ப்ருச்சத: வேள்வியுடையவரின்; மே–நான்; அனுபூர்வா:–ஆரம்பத்திலிருந்து: ததீவுக:- உண்மைக்கு ஏற்றவாறே: அர்ஹஸி-அன்புடன் விவரிக்கப்படுமாக; உதாஹர்தும்-நீர் அறிவிக்கப்போவதைப் போல்; ப்ரபன்னாய்-சூழப்பட்டுள்ள ஒருவர்; மஹாமுனே-மகாமுனிவரே.

பகவானின் பிரதிநிதியாகிய மகா முனிவரே, உங்களிடம் நான் கேட்ட கேள்விகளுக்கும், எனது விசாரணையின் ஆரம்பத்திலிருந்து என்னால் விசாரிக்கப்படாமல் விடுபட்டுப்போன கேள்விகளுக்கும் விடையளித்து என்னைத் திருப்திபடுத்துவீராக. நான் உங்களிடம் சரணாகதியடைந்த ஆத்மாவாகையால், இவ்விஷயத்தில் பூரண அறிவை எனக்குப் புகட்ட வேண்டுகிறேன்.

பதம் 2.8.25
அத்ர ப்ரமாணம் ஹி பவான் பரமேஷ்டீ யதாத்ம-பூ:
அபரே சானுதிஷ்டந்தி பூர்வேஷாம் பூர்வ-ஜை: க்ருதம்

அத்ர-இவ்விஷயத்தில்; ப்ரமாணம்-ஆதாரபூர்வமான உண்மைகள்: ஹி_நிச்சயமாக; பவான்—தாங்கள்; பரமேஷ்டீ-பிரபஞ்சத்தைப் படைத்தவரான பிரம்மா; யதா—அவ்வாறு; ஆத்ம-பூ-நேரடியாக பகவானிடமிருந்து பிறந்தவர்; அபரே-பிறர்; ச-மட்டுமே; அனுதிஷ்டந்தி—-பின்பற்ற வேண்டும் என்பதற்காக; பூர்வேஷாம்- வழக்கம் என்பதற்காக; பூர்வ-ஜை:- முந்தைய தத்துவவாதியால் பரிந்துரைக்கப்ட்ட அறிவு; க்ருதம்-நிறைவேற்றியதால்.

மகாமுனிவரே, நீங்கள் முதல் ஜீவராசியான பிரம்மாவுக்கு நிகரானவர். முந்தைய தத்துவவாதக் கற்பனையாளர்களால் பின்பற்றப்படுவதைப் போல், வழக்கமாக இருந்துவருவதை மட்டுமே மற்றவர்கள் பின்பற்றுகின்றனர்.

பதம் 2.8.26
ந மே’ஸ்வ: பராயந்தி ப்ரஹ்மன் அனசனாத் அமீ
பிபதோ’ ச்யுத-பீயூஷம் தத் வாக்ய-அப்தி வினிஹ்ஸ்ருதம்

ந-ஒருபொழுதும் இல்லை; மே-என்னுடைய; அஸவ: வாழ்வு: பராயந்தி-சோர்வடைந்து; ப்ரஹ்மன்—கற்றறிந்;த அனசனாத் அமீ_உபவாசத்தினால்; பிபத:- நான் கொண்டிருப்பதால்; அச்யுத-குறையற்றவரின்; பீயூஷம்- அமிர்தத்தை; தத்-உங்கள்; வாக்ய-அப்தி- கடலளவு பேச்சு; வினிஹ்ஸ்ருதம்- அதிலிருந்து பாய்ந்தோடும்.

கற்றறிந்த பிராமணரே, கடல் போன்ற தங்களுடைய பேச்சிலிருந்து பெருகியோடும், பரமபுருஷரின் அமிர்தம் போன்ற செய்தியை நான் பருகிக் கொண்டிருப்பதால், எனது உபவாசத்தின் காரணமாக எவ்விதமான சோர்வையும் நான் உணரவில்லை.

பதம் 2.8.27
ஸூத உவாச
ஸ உபாமன் த்ரிதோ ராஜ்னா கதாயாம் இதி ஸத்-பதே:
ப்ரஹ்மராதோ ப்ருசம் ப்ரீதோ விஷ்னுராதேன ஸம்ஸதி

ஸூத: உவாச-ஸ்ரீல சூத கோஸ்வாமி கூறினார்; ஸ;-அவர் (சுகதேவ கோஸ்வாமி); ராஜ்னா- அரசனால்; உபாமன்த்ரித-இவ்வாறு விசாரிக்கப்பட்டதால்; கதாயாம் – விஷயங்களில்; இதி-இவ்வாறாக; ஸத்-பதே:- மிகவுயர்ந்த உண்மையின்; ப்ரஹ்ம-ராத:-சுகதேவ கோஸ்வாமி; ப்ருசம்-மிகவும்; ப்ரீத:- திருப்தியடைந்தார்; விஷ்ணு ராதேன-பரீட்சித்து மகாராஜனால்; ஸம்ஸதி-கூட்டத்தில்.

சூத கோஸ்வாமி கூறினார்: இவ்வாறாக பக்தர்களுக்கிடையில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரைப் பற்றிய விஷயங்களைப் பேச பரீட்சித்து மகாராஜனால் அழைக்கப்பட்டதால், சுகதேவ கோஸ்வாமி மிகவும் திருப்தியடைந்தார்.

பதம் 2.8.28
ப்ராஹ பாகவதம் நாம புராணம் ப்ரஹ்ம- ஸம்மிதம்
ப்ரஹ்மணே பகவத்-ப்ரோக்தம் ப்ரஹம-கல்ப உபாகதே

ப்ராஹ—அவர் கூறினார்; பாகவதம்-பகவத் விஞ்ஞானம்; நாம- நாமத்தின்; புராணம்-புராணம்; ப்ரஹ்ம ஸம்மிதம்- வேதங்களுக்கு முதலில் இணங்க; ப்ரஹ்மணே-பிரம்ம தேவரிடம்; பகவத்-ப்ரோக்தம் பகவானால் பேசப்பட்டது; ப்ரஹ்ம – கல்பே-பிரம்மா படைக்கப்பட்ட யுகம்; உபாகதே-சரியாக ஆரம்பத்தில்.

பரீட்சித்து மகாராஜனின் கேள்விகளுக்கு இவ்வாறாக விடையளிக்கத் துவங்கிய அவர் பகவத் விஞ்ஞானமும், வேத அநுபந்தமுமான ஸ்ரீமத் பாகவத புராணம் வேதங்களுக்குச் சமமானதென்றும், பிரம்மா பிறந்தபொழுது அவருக்கு பகவானாலேயே முதலில் உபதேசிக்கப்பட்டது என்றும் கூறினார்.

பதம் 2.8.29
யத் யத் பரீக்ஷித் ருஷப: பாண்டூனாம் அனுப்ருச்சதி
ஆனுபூர்வ்யேண தத் ஸர்வம் ஆக்யாதும் உபசக்ரமே

யத் யத்— எதையெல்லாம்; பரீக்ஷித்-அரசன்; ருஷப:-மிகச் சிறந்த; பாண்டூனாம்- பாண்டு வம்சத்தில்: அனுப்ருச்சதி- விசாரித்துக் கொண்டே இருக்கிறாரோ; ஆனுபூர்வ்யேண-துவக்கத்திலிருந்து முடிவு வரை; தத்-அவ்வெல்லா; ஸர்வம் முழுமையாக; ஆக்யாதும்- விவரிக்க; உபசக்ரமே- தம்மை தயார்படுத்திக் கொண்டார்.

பரீட்சித்து மகாராஜன் தம்மிடம் கேட்ட கேள்விகள் அனைத்திற்கும் விடையளிக்க அவர் தம்மை தயார் செய்துகொண்டார். பரீட்சித்து மகாராஜன் பாண்டுக்களின் வம்சத்திலேயே மிகவும் சிறந்தவராவார். இதனால் சரியான கேள்விகளை சரியான நபரிடம் அவரால் கேட்க முடிந்தது.


ஸ்ரீமத் பாகவதம், இரண்டாம் காண்டத்தின், “பரீட்சித்து மகாராஜனின் கேள்விகள்” எனும் தலைப்பைக் கொண்ட எட்டாம் அத்தியாயம் இவ்வாறு நிறைவுபெறுகின்றது.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare