அத்தியாயம் – 7
அவதாரங்களும், அவர்களின் குறிப்பிட்ட கடமைகளும்
பதம் 2.7.1
ப்ரஹ்மோவாச
யத்ரோத்யத: க்ஷிதி தலோத்தரணாய பிப்ரத்
க்ரௌடீம் தனும் ஸகல-யக்ஞ-மயீம் அனந்த:
அந்தர்-மஹார்ணவ உபாகதம் ஆதி-தைத்யம்
தம் தம்ஷ்ட்ரயாத்ரிம் இவ வஜ்ர-தரோ தரா

ப்ரஹ்மா உவாச-பிரம்ம தேவர் கூறினார்; யத்ர-அப்பொழுது; உத்யத்:– முயன்றார்; க்ஷிதி- தல -பூமி; உத்தரணாய-மேலே தூக்குவதற்காக; பிப்ரத்-மேற்கொண்டார்; கிரெளாம்-லீலைகளை; தனும்-உருவம்; ஸகல-ங்கல; யக்கு-மயீம்—அனைத்தையும் உள்ளடக்கிய யக்ஞங்கள்; அனந்த;-எல்லையற்றவர்; அந்தர்— பிரபஞ்சத்திற்குள்; மஹா-அர்ணவே-மகா கர்பக் கடல்; உபாகதம்— இடத்தை அடைந்து; ஆதி-முதலாவதான; தைத்யம்—அசுரன்; தம் அவனைதம்ஷ்ட்ரயா-கோரைப்பல்லால்; அத்ரிம்— பறக்கும் மலைகள்; இவ – போன்ற ; வஜ்ர-தரோ;இடி மின்னல்களை ஆள்பவர்; தார-கிழித்தார்.

பிரம்மதேவர் கூறினார்: அளவற்ற சக்தி படைத்தவரான பலவான், கர்போதகம் என்றழைக்கப்படும், மகா சமுத்திரத்திற்குள் மூழ்கடிக்கப்பட்ட பூமியை மேலே தூக்குவதற்காகவும், லீலை புரிவதற்காகவும் காட்டுப் பன்றியின் உருவத்தை மேற்கொண்டார்.

பதம் 2.7.2
ஜாதோ ருசேர் அஜனயத் ஸுயமான் ஸுயக்ஞ
ஆகூதி ஸுனுர் அமரான் அத தக்ஷிணாயாம்
லோகத்ரயஸ்ய மஹதீம் அஹரத் யத் ஆர்திம்
ஸ்வாயம்புவேன மனுனா ஹரி இதி அனூக்த:

ஜாத-பிறந்தார்; ருசே:-பிரஜாபதியின் மனைவி மூலம்: அஜனயத்— பெற்றெடுத்தான்; ஸுயமான்—சுயமனைத் தலைமையாகக் கொண்ட; ஸுயக்ஞ:-சுயக்ஞன்; ஆகூதி ஸூனு- ஆகூதியின் மகனுடைய; அமரான்-தேவர்கள்; அத—இவ்வாறாக; லோக-கிரக-குறைத்தால்; தக்ஷிணாயாம்-மனைவி தட்சிணையிடம்; யத்—அவ்வெல்லா; ஆர்திம்- துன்பங்கள்; ஸ்வாயம்புவேன-ஸ்வயம்புவ மனு; மனுனா— மனித குலத்தந்தையசால்; ஹரி-ஹரி; இத- இவ்வாறாக ; அனூக்த: பெயர்கொண்ட.

பிரஜாபதி, தமது மனைவியான ஆகூதியின் மூலமாக முதலில் சுயக்ஞனை மகனாகப் பெற்றார், பிறகு சுயக்ஞன்,சுயமனை தலைமையாகக் கொண்ட தேவர்களை, தமது தட்சிணையின் மூலமாகப் பெற்றெடுத்தார். இந்திர மனைவியான தேவனான சுயக்ஞன், மூன்று கிரக அமைப்புக்களிலும் (மேல், கீழ் மற்றும் மத்திய) உள்ள பெருந்துன்பங்களைக் குறைந்தார். இதனால் பிற்காலத்தில் அவர், சீரிய மனிதகுலத் தந்தையான சுயம்புவ மனுவால் “ஹரி” என்றழைக்கப்பட்டார்.

பதம் 2.7.3
ஜக்ஞே ச கர்தம் – க்ருஹே த்விஜ தேவஹூத்யாம்
ஸ்த்ரீபி: ஸமம் நவபிர் ஆத்ம – கதிம் ஸ்வ- மாத்ரே
ஊசே யயாத்ம – சமலம் குண ஸங்க – பங்கம்
அஸ்மின் வி தூய கபிலஸ்ய கதிம் ப்ரபேதே

ஜக்ஞே-பிறந்தார்; ச-தவிரவும்; கர்தம்-கர்தமர் என்ற பிரஜாபதி ; க்ருஹே-வீட்டில்;தீவிஜ-பிராமணரே; தேவஹுதியின் கருப்பையில்: ஸ்த்ரீபி:-பெண்களால்; ஸமம்-குழப்பட்டு; நவபி:-ஒன்பது பேரால்; ஆத்மகதிம்- ஆன்மீகத்தன்னுணர்வு; ஸ்வமாத்ரே-அவரது சொந்த தாயாரிடம்; ஊசே-கூறினார்; யயா-எதனால்; ஆத்ம -சமலம் திரைகள்; குண ஸங்க—இயற்கைக்குணங்களோடு உறவு கொண்டுள்ள; பங்கம்-சேறு; அஸ்மின்—இதே -ஆத்ம பிறவி; விதூய- கழுவப்பட்டு; கபிலஸ்ய—பகவான் கபிலரின்; கதிம்-முக்தி; ப்ரபேதே—அடைந்தார்.

பகவான் பிறகு கபில அவதாரமாகத் தோன்றினார். அவர் பிரஜாபதி பிராமணரான கர்தமருக்கும், அவரது மனைவியான தேவஹுதிக்கும் மகனாகப் பிறந்தார். அவரோடு ஒன்பது பெண்கள் ( சகோதரிகள்) பிறந்தனர் தம் தாயாரிடம் அவர் ஆத்ம ஞானத்தைப் பற்றி பேசினார். இதனால், அப்பிறவியிலேயே, அவள் ஜடக் குணங்களின் களங்கத்திலிருந்து முற்றிலும் தூய்மையடைந்து, கபில மார்கம் எனப்படும் முக்தியை அடைந்தாள்.

பதம் 2.7.4
அத்ரேர் அபத்யம் அபிகாங்க்ஷத ஆஹ துஷ்டோ
தத்தோ மயாஹம் இதி யத் பகவான் ஸ தத்த:
யத் – பாத – பங்கஜ – பராக-பவித்ர- தேஹா
யோகர்த்திம் ஆபுர் உபயீம் யது – ஹைஹயாத்யா:

அத்ரே- அத்ரி முனிவரின்; அபத்யம்- முடிவு; அபிகாங்க்ஷத- அதற்காக பிரார்த்தனை செய்து; ஆஹ—அதைக் கூறினார்; துஷ்ட-திருப்தியடைந்து ; தத்த;-அளித்து; மயா-என்னால்; அஹம்- நான்; இதி-இவ்வாறாக; யத்—ஏனெனில்; பகவான்-முழுமுதற் கடவுள்; ஸ:-அவர்; தத்து:-தத்தாத்ரேயர்; யத் பாத-அவருடைய பாதங்கள் ; பங்கஜ தாமரை; பராக-புழுதி; பவித்ர-தூய்மையடைந்தனர்; தேஹா:-உடல்; யோக-யோகம் ; ருத்திம்- ஐசுவரியம்; ஆபு-பெற்றனர்; உபயீம் — இரு லோகங்களுக்காகவும்; யது—யது வம்சத்தின் தந்தை; ஹைஹய ஆத்யா:-மேலும் போன்ற ஹைஹய மகாராஜனைப் பிறரும்.

மகா முனிவரான அத்ரி குழந்தைப் பேறுக்காக பிரார்த்தனை செய்தார். அவரிடம் திருப்தியடைந்த பகவான், தத்தாத்ரேயர் என்ற நாமத்துடன், அத்ரியின் மகனாக அவதரிக்கப் போவதாக வாக்களித்தார். மேலும் பகவானுடைய தாமரைப் பாதங்களின் கருணையால், பல யதுக்கள் மற்றும் ஹைஹயர்கள் முதலானவர்கள் மிகவும் தூய்மையடைந்து, ஜட மற்றும் ஆன்மீக வரங்களைப் பெற்றனர்.

பதம் 2.7.5
தப்தம் தபோ விவித – லோக – ஸீஸ்ருக்ஷயா மே
ஆதௌ ஸனாத் ஸ்வ – தபஸ; ஸ சது: – ஸனோ பூத்
ப்ராக் – கல்ப – ஸம்ப்லவ வினஷ்டம் இஹாதம் – தத்வம்க்ஷ
ஸம்யக் ஜகாத முனயோ யத் அசக்ஷதாத்மன்

தப்தம்- தவங்களை மேற்கொண்டதால்; தப:-விரதம்; விவித லோக- வெவ்வேறு கிரக அமைப்புக்கள்; ஸிஸ்ருக்ஷயா-சிருஷ்டிக்க விருப்பங்கொண்டு; மே-என்னுடைய; ஆதெள-முதலில் ; ஸனாத்- முழுமுதற் கடவுளிடமிருந்து ; ஸ்வ- தபஸ்- எனது சொந்த தவத்தின் பயனாய்: ஸ- அவர் (பகவான்); சது:-ஸன:—ஸனத்குமாரர், ஸனகர், ஸனந்தனர் மற்றும் ஸனாதனா என்ற நான்கு பிரம்மச்சாரிகள்; அபூத்— தோன்றினார்; ப்ராக் – முந்தைய ; கல்ப-சிருஷ்டி; ஸம்ப்லவ வெள்ளத்தால் மூழ்கடிக்கப்பட்டு; வினஷ்டம்- அழிக்கப்பட்டது; இஹ இந்த ஜட உலகில்; ஆத்ம-உயிர்; தத்வம்—உண்மை; ஸம்யக்— முழுமையாக; ஜகாத தோற்றமளித்தது; முனய:-முனிவர்கள்; யத எது; அசக்ஷத—தெளிவாகக் கண்டனர்; ஆத்மன்—ஆத்மா.

வெவ்வேறு கிரக அமைப்புக்களை சிருஷ்டிப்பதற்காக நான் தவங்களையும், விரதங்களையும் மேற்கொள்ள வேண்டியிருந்தது. இதனால் திருப்தியடைந்த பகவான் நான்கு சனகாதி முனிவர்களாக (சனகர், சனத்குமாரர் சனந்தனர் மற்றும் ஸனாதனா) அவதரித்தார். முந்தைய சிருஷ்டியில் ஆன்ம ஞானம் அழிக்கப்பட்டது. ஆனால் நான்கு குமாரர்கள் அதை மிகத் தெளிவாக விளிக்கிக் கூறியதால் முனிவர்களுக்கு உண்மை தெளிவாகப் புலப்படுவதாயிற்று.

பதம் 2.7.6
தர்மஸ்ய தக்ஷ – துஹிதரி அஜனிஷ்ட மூர்த்யாம்
நாராயணோ நர இதி ஸ்வ – தப: – ப்ரபாவ:
த்ருஷ்ட்வாத்மனோ பகவதோ நியமாவலோபம்
தேவ்யஸ்து அனங்க – ப்ருதனா கடிதும் ந சேகு:

தர்மஸ்ய-தர்மரின் (மதக் கொள்கைகளின் ஆளுனர்); தக்ஷ- பிரஜாபதிகளில் ஒருவரான தட்சன்; துஹிதரி-மகளிடம்; அஜனிஷ்ட- பிறந்தார்; மூர்த்யாம்—மூர்த்தி எனும் பெயரைக்கொண்ட; நாராயண:- நாராயண; நர:-நான்; இதி- இவ்வாறாக; ஸ்வ -தப;-சொந்த தவங்கள்; ப்ரபாவ:-பலம்; த்ருஷ்ட்வா—காண்பதன் மூலமாக; ஆத்மன-அவருக்குச் சொந்தமான; பகவத: முழுமுதற் கடவுளின்; தியம—அவலோபம்—சபதத்தை உடைப்பதற்காக; தேவ்ய:— சுவர்கலோக அழகிகள்; து—ஆனால்; அனங்க—ப்ருதனா: மன்மதனின் சகா; கடிதும்- நிறைவேற; ந- ஒருபொழுதும் இல்லை: சேகு- சாத்தியமாக்கப்பட்டது.

அவரது சொந்த தவ, விரதங்களின் முறையைக் காட்டுவதற்காக, நாராயணர், தரன் எனும் இரட்டை ரூபங்களில் அவர் தோன்றினார். அவர் தட்சனின் மகளும், தர்மனின் மனைவியுமான மூர்த்தியின் கருப்பையில் தோன்றினார். மன்மதனின் தோழிகளான சுவர்க்கலோக சுந்தரிகள், அங்கு சென்று அவரது தவத்தை உடைக்கமுயன்று தோல்வியடைந்தனர். ஏனெனில் முழுமுதற் கடவுளான அவரிடமிருந்து தங்களைப் போன்ற பல சுத்தரிகள் வெளியாகிக் கொண்டு இருப்பதை அவர்கள் கண்டனர்.

பதம் 2.7.7
காமம் தஹத்தி க்ருதினோ நனு ரோஷ-த்ருஷ்ட்யா
ரோஷம் தஹந்தம் உத தே ந தஹந்தி அஸஹ்யம்
ஸோ ‘யம் யத் அந்தாம் அலம் ப்ரவிசன் பிபேதி
காம: கதம் நு புனர் அஸ்யா மன: ஸ்ரயேத

காமம்- காமம்; தஹந்தி-தண்டிக்க; க்ருதின்:-மகா பராக்கிரமம் வாய்ந்தவர்கள்; நனு—ஆனால்; ரோஷ த்ருஷ்ட்யா—கோபமான பார்வையால்; ரோஷம்- கோபம்; தஹந்தம்-கட்டுப்படுத்தப்பட்டு; உத-ஆயினும்; தே—அவர்கள்; ந- முடியாது; தஹந்தி—வெல்; அஸஹ்யம்—பொறுக்கமுடியாத; ஸ:-அந்த; அயம்—அவரை; யத் -ஏனெனில்; அந்தரம்-தமக்குள்: அலம்-ஆனால்; ப்ரவிசன்- நுழையும்; பிபேதி-அச்சமடைகிறது; காம:-காமம்; கதம்- எப்படி; நு-உண்மையில்; புன : மீண்டும்; அஸ்ய-அவரது; மன :-மனம்; ஸ்ரயேத– அவரிடம் புகலிடம் கொள்ள.

சிவ பெருமானைப் போன்ற பராக்கிரமசாலிகள் தங்களின் கோபப்பார்வையால் காமத்தை வென்று அதை முறியடித்துள்ளனர். இருப்பினும் கட்டுப்படுத்த முடியாத கோப விளைவுகளிலிருந்து அவர்களால் விடுபட முடியவில்லை. இத்தகைய கோபத்திற்கு பகவானின் இதயத்தில் இடமில்லை. அவர் இவற்றுக்கெல்லாம் மேற் பட்டவராவார். எனவே அவரது மனதில் காமம் எவ்வாறு உறைவிடம் கொள்ளும்?

பதம் 2.7.8
வித்த: ஸபத்னி – உதித – பத்ரிபிர் அந்தி ராஜ்னோ
பாலோ ‘பி ஸன் உபகதஸ் தபஸே வனானி
தஸ்மா அதாத் த்ருவ – கதிம் க்ருணதே ப்ரஸன்னோ
திவ்யா: ஸ் துவந்தி முனயோ யத் உபரி – அதஸ்தாத்

வித்த:- அதனால் கொடுமைபடுத்தப்பட்டு; ஸபத்னி- இரண்டாம் மனைவி; உதித—அவரால் கூறப்பட்ட; பத்ரிபி:-கூரிய சொற்களால்; அந்தி- சற்றுமுன்; ராஜன்:-ராஜனின்; பால:-சிறுவனொருவன்; அபி-ஆயினும்; ஸன்- அவ்வாறு இருப்பதால்; உபகத:- மேற்கொண்டான்; தபஸே-கடுந்தவங்கள்; வனானி—அடர்ந்த காட்டில்; தஸ்மை-எனவே; அதாத்-பரிசாக அளித்தார்; த்ருவ கதிம்- துருவ லோகத்திற்குச் செல்லும் ஒரு வழியை ; க்ருணதே-வேண்டப்பட்டதால்; ப்ரஸன்ன—திருப்தியுற்று; திவ்யா:-மேலுலக வாசிகள்; யத்—அதன் பயனாக; உபரி-மேல்; அதஸ்தாத்-கீழ்.

துருவன், ஒரு சிறுவனாக இருந்தும், தன் தந்தையான அரசரின் இரண்டாவது மனைவியால் கடுஞ்சொற்களால் அவமானப்படுத்தப் பட்டதால், காட்டில் கடுந்தவத்தை மேற்கொண்டார். அவருடைய பிரார்த்தனையில் திருப்தியடைந்த பகவான், பெரும்முனிவர்களால் வழிபாடு செய்யப்பட்டுவரும் துருவ லோகத்தை அவருக்களித்தார்.

பதம் 2.7.9
யத் வேனம் உத்பத – கதம் த்விஜ – வஜ்ர
நிஷ்ப்லுஷ்ட – பௌருஷ – பகம் திரயே பதந்தம்
த்ராத்வார்திதோ ஜகதி புத்ர – பதம் ச லேபே
துக்தா வஸூனி வஸுதா ஸ்கலானி யேன

யத்—அப்பொழுது; வேனம்-வேன மகாராஜனிடம்: உத்பத சுதம் தர்மத்தின் வழியிலிருந்து விலகிச் சென்று: த்விஜ-பிராமணர்களின்: வாக்ய-சாபச் சொற்கள்; வஜ்ர-இடி மின்னல்: நிஷ்ப்லுஷ்ட-அதனால் எரிக்கப்பட்டு; பெளருஷ- சிறப்புடைய செயல்கள்: பகம்- ஐசுவரியம்: நிரயே-நரகத்திற்குள்: பதந்தம்-கீழ்நோக்கிச் சென்றான்; த்ராத்வா-விடுவித்ததன் மூலம்; அர்தித்:—அதற்காக அவ்வாறு வழிபட்டு; ஜகதி- உலகின் மீது; புத்ர-பதம்- புத்திரனின் நிலை: ச-அத்துடன்; லேபே-பெற்றார்; துக்தா-பயன்படுத்திக் கொண்டார்; வஸூனி-விளைச்சல்: வஸுதா-பூமி; ஸகலானி— எல்லா வகையான; யேன- எவரால்.

வேன மகாராஜன் தர்மத்தின் பாதையிலிருந்து விலகிச் சென்றான். பிராமணர்களும் வஜ்ர சாபத்தின் மூலமாக அவனைத் தண்டித்தனர். இதனால் வேன மகராஜன் அவனது நற்கருமங்களுடனும், ஐசுவரியத்துடனும் எரிக்கப்பட்டு, நரகத்திற்கு அனுப்பப்பட்டான். பகவான் தமது அசாதாரணமான கருணையால், அவனுடைய மகனாக, பிரூது என்ற பெயருடன் வந்தவதரித்து, சாபத்துக்குள்ளான வேன மகாராஜனை நரகத்திலிருந்து விடுவித்தார். மேலும் விவசாயத்திற்காக அவர் பூமியை நன்கு பயன்படுத்திக் கொண்டார்.

பதம் 2.7.10
நாபேர் அஸாவ் ருஷப ஆஸ ஸுதேவி – ஸூனுர்
யோ வை ங்சார ஸம – த்ருக் – ஸம – ஜட – யோக – சர்யாம்
யத் பாரமஹம்ஸ்யம் ருஷயா: பதம் ஆமனந்தி
ஸ்வஸ்த: ப்ரசாந்த காண: பரிமுக்த – ஸங்க:

நாபே:- நாபி மகாரஜனால்; அசௌ -பரமபுருஷர்; ருஷப: ரிஷபர்; ஆஸ-ஆனார்; ஸுதேவி-சுதேவி; ஸூனு:—அவரது மகன்; ய: யார்; வை – நிச்சயமாக; ங்சார-இயற்றினார்; ஸம த்ருக் – சம நிலையுடைய ; ஜட- ஜட ; யோக-சர்யாம்-யோகத்தை நிறைவேற்றல்; யத் – எது; பாரமஹம்ஸ்யம்-பூரணத்துவத்தின் மிகவுயர்ந்த நிலை; ருஷய:- கற்றறிந்த முனிவர்கள்; பதம்-சூழ்நிலை; ஆமனந்தி-ஏற்றுக் கொள்கிறது; ஸ்வஸ்த:-சுய திருப்தியடைந்த நிலை; ப்ரசாந்த- நிறுத்தி வைக்கப்பட்ட; கரண:- ஜடப்புலன்கள்; பரிமுக்த-பூரண முக்தியடைந்த; ஸங்க:-ஜடக்களங்கம்.

நாபிராஜனின் மனைவியான சுதேவியின் மகனாகத் தோன்றிய பகவான் ரிஷபதேவர் என்றறியப்பட்டார். மனதை சமநிலைப்படுத்துவதற்காக அவர் பௌதிகமான யோக முறையை மேற்கொண்டார். இந்நிலையும் கூட முக்தியின் பூரணத்துவ நிலையென ஏற்றுக் கொள்ளப்படுகிறது. இந்நிலையில் ஒருவர் தமக்குள் நிலைபெற்று, பூரண திருப்தியடைகிறார்.

பதம் 2.7.11
ஸத்ரே மமாஸ பகவான் ஹய – சீரஷாதோ
ஸாக்ஷாத் ஸ யக்ஞ – புருஷஸ் தபனீய – வர்ண:
சந்தோமயோ மகமயோ ‘ கில-தேவதாத்மா
வாசொ பபூவுர் உசதீ: ஸ்வஸதோ ‘ ஸ்ய நஸ்த:

ஸத்ரே-யாகச் சடங்கில்; மம-என்னுடைய; ஆஸ-தோன்றினார்; பகவான்- பரமபுருஷர்; ஹய-சீரஷா—அவரது குதிரையைப் போன்ற தலையுடன்; அத-இவ்வாறாக; ஸாக்ஷாத்-நேரடியாக; ஸ:-அவர்; யக்ஞ – புருஷ:-யாகச் சடங்குகளால் திருப்தியடைபவர்; தபனீய- பொன்நிறம்; வர்ண:-வர்ணம்; சந்த:-மய:-வேத மந்திரங்களின் சொரூபி; மக-மய:-யாகங்களின் சொரூபி; அகில-இருப்பவை அனைத்தும்; தேவதா-ஆத்மா—தேவர்களின் ஆத்மா; வாச: ஓசைகள்; பபூவு- காதால் கேட்கக்கூடியதாகிறது; உசதீ:-செவியுற மிகவும் இன்பமளிக்கிறது; ஸ்வஸது:-சுவாசிக்கும் பொழுது; அஸ்ய- அவரது; நஸ்த:- நாசித்துவாரங்களின் வழியாக.

என்னால் (பிரம்மா) இயற்றப்பட்ட ஒரு யாகத்தில், பகவான் ஹயக்கிரீவ அவர் அவதாரமாகத் தோன்றினார். யாக பொன்னிற மேனியுடையவரும், வேத சொரூபியான சொரூபியும், தேவர்களுக்கெல்லாம் பரமாத்மாவுமாவார். அவர் சுவாசித்தபொழுது, வேத மந்திரங்களின் இனிமையான ஓசைகளனைத்தும் அவரது நாசித் துவாரங்களிலிருந்து வெளிவந்தன.

பதம் 2.7.12
மதஸ்யோ யுகாந்த – ஸமயே மனுனோபலப்த:
க்ஷோணிமயோ நிகில -ஜீவ -நிகாய-கேத:
விஸ்ரம்ஸிதான் உரு- பயே ஸலிலே முகான் மே
ஆதாய தத்ர விஜஹார ஹ வேத-மார்கான்

மத்ஸ்ய:-மச்சாவதாரம்; யுக-அந்த யுக அந்த யுகத்தின் முடிவில்; ஸமயே – அச்சமயம்; மனுனா—வைவஸ்த மனுவாக இருக்கப் போகிறவர்; உப லபத்:-காணப்படும்; க்ஷேமய: மண்ணுலகங்கள் வரையுள்ள; நிகில-அனைத்து; ஜீவ-ஜீவராசிகள்; நிகாய – கேத:-அவைகளுக்குப் பாதுகாப்பு: விஸ்ரம்ஸிதான்- அதிலிருந்து வெளிப்படும்; உரு – பெரும்; பயே- பயத்தால்; ஸலிவே-நீரில்; முகாத்-வாயிலிருந்து; மே-என்னுடைய; ஆதாய— மேற்கொண்டதால்; தத்ர-அங்கு; விஜஹரா-அனுபவித்தார்; ஹ- நிச்சயமாக; வேத-மார்கான்—அனைத்து வேதங்கள்.

யுகத்தின் முடிவில், வைவஸ்வத மனுவாக வரப்போகும் சத்ய விரதன் என்பவர், மச்சாவதாரத்தை ஏற்றுள்ள பகவானே, மண்ணுலகங்கள் வரையுள்ளன எல்லா ஜீவராசிகளுக்கும் புகலிடமாவார் என்பதைக் காண்பார். யுகத்தின் முடிவில் உண்டாகும் பரந்த பிரளய நீரல் எனக்கேற்படும் பயத்தினால், எனது (பிரம்மாவின்) வாயிலிருந்து வேதங்கள் வெளிவருகின்றன. அப்பரந்த நீரை பகவான் அனுப்விப்பதோடு, வேதங்களையும் பாதுகாக்கிறார்.

பதம் 2.7.13
க்ஷுரோததாவ் அமா – தானவ – யூதபானாம்
உன்மத்னதாம் அம்ருத – லப்தய ஆதி – தேவ:
ப்ருஷ்டேன கச்சப – வபுர் விததார கோத்ரம்
நித்ராக்ஷணோ ‘த்ரி – பரிவர்த -கஷாண- கண்டு:

க்ஷுர-பால்; உததௌ-கடலில்; அமர- தேவர்கள்; தானவ- அசுரர்கள்; யூத-பானாம்- இரு சைனியங்களையும் சேர்ந்த தலைவர்களின்; உன்மத்னதாம்- கடையும் பொழுது; அம்ருத-அமிர்தம்; லப்தய-அடைவதற்காக; ஆதி-தேவ:-ஆதிபுருஷர்; ப்ருஷ்டேன- முதுகெலும்பால்; கச்சப- ஆமை; வபு:-உடல்; விததார-ஏற்றார்; கோத்ரம்-மந்தார மலை; நித்ராக்ஷண:-அரைத் தூக்கத்தில் இருக்கும் பொழுது; அத்ரி-பரிவர்த-மலையை உருட்டி; கஷாண-சொறிதல்; கண்டு:- அரிப்பு.

ஆதிபுருஷர் பிறகு, மத்தாக இயங்கிக் கொண்டிருந்த மந்தார மலைக்கு சுழலச்சாக இருந்து செயற்படுவதற்காக, ஆமை அவதாரத்தை மேற்கொண்டார். தேவர்களும், அசுரர்களும் அமிர்தத்தை பிரித்தெடுப்பதற்காக மந்தார மலையைப் பாவித்து பாற்கடலைக் கடைந்தனர். மலை முன்னும், பின்னுமாக அசைந்து ஆமையின் முதுகை வருடியது. அப்பொழுது அரைத்தூக்கத்திலிருந்த அவர் ஓர் அரிப்புணர்வை அனுபவித்தார்.

பதம் 2.7.14
த்ரை – பிஷ்டபோரு -பய-ஹா ஸ ந்ருஸிம்ஹ ரூபம்
க்ருத்வா ப்ரமத் ப்ருகடி – தம்ஷ்ட்ர- கரால – வக்த்ரம்
தைத்யேந்ரம் ஆக கதயாபிபதந்தம் ஆராத்
ஊரெள நிபாத்ய விததார நகை: ஸ்புரந்தம்

த்ரை – பிஷ்டப-தேவர்கள்; உரு-பய-ஹா-பெரும் பயத்தை அழிப்பவர்; ஸ:-அவர் (பரமபுருஷர்); ந்ருஸிம்ஹு-ரூபம் நரசிம்ஹ அவதாரத்தை ஏற்று; க்ருத்வா-அவ்வாறு செய்து; ப்ரமத்-உருட்டுவதால்; ப்ரு-குடி-கண்ணிமைகள்; தம்ஷ்ட்ர-பற்கள்; கரால- மிகவும் பயங்கரமான; வக்த்ரம்-வாய்; தைத்ய-இந்ரம—அசுரர்களின் அரசன்; ஆக-உடனடியாக; கதயா—கையில் கதையுடன்; அபிபதந்தம்- கீழே விழும்பொழுது; ஆராத்- அருகில்; ஊரௌ- தொடைகளின் மீது; நிபாத்ய-வைத்து; விததார- கிழித்தார்; நகை- நகங்களால்; ஸ்புரந்தம்- எதிர்க்கும்பொழுது.

தேவர்களின் பெரும் பயத்தைப் போக்குவதற்காக முழுமுதற் கடவுள், நரசிம்ஹ அவதாரத்தை ஏற்றார். அசுரர்களின் (ஹிரண்யகசிபு ) தன் கையில் ஒரு கதாயுதத்துடன் பகவானை எதிர்த்த அரசன் பொழுது, அவனைத் தமது தொடைமீது கிடத்தி, தமது நகங்களால் பகவான் அவனை கிழித்துக் கொன்றார். அச்சமயம் பகவான் தமது கண்ணிமைகளை கோபத்துடன் உருட்டி, அவரது பயங்கரமான பற்களையும், வாயையும் காட்டியருளினார்.

பதம் 2.7.15
அந்த: ஸரஸி உரு – பலேன பதே க்ருஹீதோ
க்ராஹேண யூத – பதிர் அம்புஜ – ஹஸ்த ஆர்த:
ஆஹேதம் ஆதி – புருஷாகில – லோக – நாத
தீர் – ச்ரவ: ச்ரவண – மங்கள – நாமதேய

அந்த-ஸரஸி—நீருக்குள்; உரு-பலேன— அதிக பலத்தால்; பதே- கால்; க்ருஹீத:-பற்றிக் கொள்ளப்படும்; க்ராஹேண—முதலையால்; யூத-பதி:- யானைகளுக்குத் தலைவனின் (கஜேந்திரனின்); அம்புஜ- ஹஸ்த- கையில் ஒரு தாமரைப் பூவுடன்; ஆர்த:—பெரிதும் துன்புறுத்தப்பட்டது; ஆஹ-கூறியது; இதம்- இதைப்போன்று ; ஆதி புருஷ- அனைத்தையும் அனுபவிப்பவரான ஆதி புருஷர்; அகில லோக-நாத- அகில லோக நாயகன்; தீர்த ச்ரவ- ஒரு புண்ணிய தீர்த்தத்தைப் போன்ற புகழுடையவர்; ச்ரவண—மங்கள—நாமத்தைக் கேட்பதால் உண்டாகும் சர்வ மங்களம்; நாம-தேய-பாடுவதற்கு யோக்கியதையுள்ள அவரது புனித நாமம்.

அதிக பலம் வாய்ந்த முதலையொன்று, ஆற்றில் தன் காலை கவ்விக் கொண்டதால், யானைகளின் தலைவன், பெருந்துன்பத்திற்குள்ளானது. அது தன் தும்பிக்கையில் ஒரு தாமரைப் பூவை பற்றியெடுத்துக் கொண்டு பகவானிடம் பின்வருமாறு கூறியது: “அனைத்தையும் அனுபவிப்பவரான ஆதி புருஷரே, லோகநாயகரே, முக்தியளிப்பவரே, ஒரு புண்ணிய தீர்த்தத்தைப் போன்ற புகழுடையவரே, பாடிப் பரவுவதற்கு யோக்கியதை உடையதான தங்களது புனித நாமத்தைக் கேட்பதாலேயே அனைவரும் தூய்மையடைகின்றனர்.”

பதம் 2.7.16
ஸ்ருத்வா ஹரிஸ் தம் அரணார்தினம் அப்ரமேயஸ்
சக்ராயுத: பதகராஜ-புஜாதிருட:
சக்ரேண நகர-வதனம் வினிபாட்ய தஸ்மாத்
தஸ்தே ப்ரக்ருஹ்ய பகவான் க்ருபயோஜ்ஜஹார

ஸ்ருத்வா- செவியுறுவதால்; ஹரி:-முழுமுதற் கடவுள்; தம்- அவரை; அரண-அர்தினம்- உதவியை எதிர் நோக்கியிருக்கும் ஒருவர்; அப்ரமேய:- அளவற்ற சக்தி படைத்த பகவான் ; சக்ர-சக்கரம் ; ஆயுத-தமது ஆயுதத்தை ஏந்தியவாறு; பதக-ராஜ-பறவைகளின் ராஜன் (கருடன்); புஜ—அதிரூட-அதன் இறக்கைகளின் மேல் அமர்ந்து; சக்ரேண -சக்கரத்தால்; நக்ர— வதனம்-முதலையின் வாய்; வினிபாட்ய-இரண்டாகத் துண்டித்து ; தஸ்மாத்- முதலையின் வாயிலிருந்து; தஸ்தே- கைகளில்; ப்ரக்ருஹ்ய- தும்பிக்கையைப்பற்றி; பகவான்-பரமபுருஷர்; க்ருபயா-அகாரணமான கருணையால்; உஜ்ஜஹார—அதை விடுவித்தார்.

யானையின் வாக்கு மூலத்தைக் கேட்ட பரமபுருஷர், அதற்குத் தமது உதவி உடனடியாக தேவைப்படுகிறது என்பதை உணர்ந்து, தமது சக்கரத்தை ஏந்தி, ஆயுதபாணியாய், பறவைகளின் ராஜனாகிய கருடனின் இறக்கைகளின் மேல் அமர்ந்தபடி உடனே அவ்விடத்தில் தோன்றினார். பிறகு முதலையின் வாயை சக்கரத்தால் பல கூறுகளாக வெட்டித் தள்ளிய பகவான் யானையின் தும்பிக்கையை பற்றித்தூக்கி, அதைக் காப்பாற்றினார்.

பதம் 2.7.17
ஜ்யாயான் குணைர் அவரஜோ ‘பி அதிதே: ஸுதானாம்
லோகான் விசக்ரம இமான் யத் அதாதியக்ஞ:
க்ஷ்மாம் வாமனேன் ஜக்ருஹே த்ரிபத-ச்சலேன
யாச்னாம் ருதே பதி சரன் ப்ரபுபிர் ந சால்ய:

ஜ்யாயான்- மிகச் சிறந்த ; குணை :- குணங்களால்; அவரஜ்: உன்னதமானவர்; அபி—அவர் அத்தகையவராயினும்; அதிதே:- அதி தியின்; ஸுதானம்—(ஆதித்யர்கள் எனப்படும்) எல்லா மகன்களையும் விட; லோகான்—எல்லா லோகங்களும் ; விசக்ரமே-மிஞ்சிவிட்டது; இமான்-இப்பிரபஞ்சத்தில்; யத்-யாரொருவர்; அத—எனவே; அதியக்ஞ:-பரமபுருஷ பகவான்; க்ஷ்மாம்—எல்லா நிலங்களும்; வாமனேன்- வாமன அவதாரத்தில்; ஜக்ருஹே- ஏற்றுக் கொண்டார்; த்ரிபத-மூன்றடிகள்; சலேன-பாசாங்கு செய்வதன் மூலமாய்; யாச்னாம்—யாசித்து; ருதே-இல்லாமல்; பதிசரன்- சரியான வழியை மீறி; ப்ரபுபி:- அதிகாரிகளால் ; ந-ஒருபோதும் இல்லை; சால்ய-பறிக்கப்பட்டு விட.

பௌதிக குணங்களுக்கெல்லாம் மேற்பட்டவரான பகவான், அதிதியின் இளைய மகனாகத் தோன்றிய போதிலும், ஆதித்தியர்கள் எனப்படும் அதிதி புத்திரர்களின் நற்குணங்களையெல்லாம் அவர் மிஞ்சியவராக இருந்தார். பிரபஞ்சத்திலுள்ள எல்லா கிரகங்களையும் முக்குணங்களையும் அவர் கடந்தவராக இருப்பதால், அவரே பரமபுருஷ பகவானாவார். மூன்றடி நிலத்தை யாசிக்கும் பாவனையில், பலி மகாராஜனின் எல்லா நிலங்களையும் அவர் எடுத்துக்கொண்டார். ஒருவருக்கு உரிமையான உடைமையை யாசித்துப் பெறாமல், அதை எடுத்துக்கொள்ள எந்த அதிகாரிக்கும் உரிமையில்லை என்ற காரணத்தால் மட்டுமே அவர் அவ்வாறு யாசித்தார்.

பதம் 2.7.18
நார்தோ பலேர் அயம் உருக்ரம-பாத-சௌசம்
ஆப: சிகா-த்ருதவதோ விபுதாதிபத்யம்
யோ வை ப்ரதிஸ்ருதம் ருதே ந சிகீர்ஷத் அன்யத்
ஆத்மானம் அங்க மனஸா ஹரயே ‘பிமேனே

ந -ஒருபோதும் இல்லை; அர்த:-அதனுடன் ஒப்பிடும் பொழுது எந்த மதிப்பும்; பலே:- பலத்தின்; அயம்-இந்த; உருக்ரம-பாத – செளசம்- முழுமதற் கடவுளின் பாதத்தைக் கழுவிய நீர்; ஆப:-நீர்; சிகா—த்ருதவத:-அதைத் தன் தலைமீது வைத்துக்கொண்டவரின்; விபுத- அதிபத்யம்-தேவர்களின் இராஜ்யத்தைவிடவும் மேன்மையான; ய:யாரொருவர்; வை – நிச்சயமாக; ப்ரதிஸ்ருதம்- வாக்குறுதிக்குத் தகுந்தபடி; ருதே ந-அதைத் தவிர; சிகீர்ஷத்- முயன்றார்;- அன்யத்—வேறெதுவும்; ஆத்மானம்-அவரது சொந்த உடலையும்; அங்க—ஓ நாரதா; மனஸா—அவரது மனதுக்குள்; ஹரயே- பரமபுருஷரிடம்; அபிமேனே—அர்ப்பணித்தார்.

பகவானின் தாமரைப் பாதங்களைக் கழுவிய நீரைத் தம் தலை மீது தெளித்துக் கொண்ட பலி மகாராஜன், தமது ஆன்மீக குருவால் தடை விதிக்கப்பட்டிருந்தும், தமது வாக்குறுதியைத் தவிர வேறெதையும் நினைக்கவில்லை. பகவானின் மூன்றாவது அடிக்காக அவர் தமது சொந்த உடலையே அர்ப்பணித்தார். இத்தகைய சிறப்புவாய்ந்த அரசனுக்கு, தமது வலிமையால் கைப்பற்றிய சுவர்க்கலோக இராஜ்யமும் கூட மதிப்புடையதாகத் தெரியவில்லை.

பதம் 2.7.19
துப்யம் ச நாரத ப்ருசம் பகவான் விவ்ருத்த
பாவேன ஸாது பரிதுஷ்ட உவாச யோகம்
ஞானம் ச பாகவதம் ஆத்ம-ஸதத்வ-தீபம்
யத் வாஸுதேவ-சரணா விதுர் அஞ்சஸைவ

துப்யம்- உன்னிடம்; ச- தவிரவும்; நாரத-ஓ நாரத; ப்ருசம்— மிகவும் நன்றாக; பகவான்-முழுமுதற் கடவுள்; விவ்ருத்த- விருத்தியடைந்த; பாவேன—உன்னத அன்பால்; ஸாது-சாதுவான தாங்கள்; பரிதுஷ்ட:-திருப்தியடைந்து; உவாச- விளக்கினார்; யோகம்- தொண்டு; ஞானம் – அறிவு ; ச—அன்றியும்; பாகவதம்—பகவானைப் பற்றிய விஞ்ஞானமும், அவரது பக்தித் தொண்டும்; ஆத்ம- ஆத்மா; ஸ-தத்வ- எல்லா விவரங்களுடனும் ; தீபம்-இருளிலுள்ள தீபத்தைப் போலவே; யத்—எதுவொன்று; வாஸுதேவ- சரணா:-பகவான் வாகதேவனிடம் சரணடைந்துள்ள ஆத்மாக்கள்; விது – அவற்றை அறிகின்றனர்; அஞ்சஸா-பரிபூரணமாக; ஏவ—உள்ளவாறு.

நாரத, பரமபுருஷர் ஹம்ஸாவதாரமாகத் தோன்றி, பகவத் விஞ்ஞானத்தையும், அவரது உன்னத அன்புத் தொண்டையும் உனக்கு தெளிவாகப் போதித்தார். உனது பக்தித் தொண்டின் ஆழத்தைக்கண்டு அவர் பெரிதும் திருப்தியடைந்தார். முழுமுதற் கடவுளான பகவான் வாசுதேவனிடம் சரணாகதியடைந்துள்ள ஆத்மாக்களால் இவ்விஞ்ஞானம் நன்கு அறிந்துணரப்படுகிறது.

பதம் 2.7.20
சக்ரம் ச திக்க்ஷு அவிஹதம் தசஸு ஸ்வ- தேஜோ
மன்வந்தரேஷு மனு – வம்ங் – தரோ பிபர்தி
துஷ்டேஷு ராஜஸு தமம் வ்யததாத் ஸ்வ – கீர்திம்
ஸத்யே த்ரி – ப்ருஷ்ட உசதீம் ப்ரதயம்ஸ் சரித்ரை:

சக்ரம்-பகவானின் சுதர்சன சக்கரம்; ச-அத்துடன்; திக்க்ஷு — எல்லா திசைகளிலும்; அவிஹதம்—நிறுத்தப்பட்டுவிடாமல்; தசஸு-பத்து திக்குகள்; ஸ்வதேஜ:-சுய வலிமை; மன்வந்தரேஷு-மனுவின் வெவ்வேறு அவதாரங்களில்; மனு வம்சதர:-மனு வம்சத்தின் சந்ததியாக: பிபர்தி-ஆட்சி புரிகிறார்; துஷ்டே-துஷ்டர்களிடம்; ராஜஸு—அந்த வகையைச் சேர்ந்த அரசர்களின் மீது: தமம்-கீழ்ப்படிய; வ்யததாத்- இயற்றினார்; ஸ்வ-கீர்திம்—சுய கீர்த்திகள்; ஸத்யே- சத்ய லோகத்தில்; த்ரி—ப்ருஷ்டே-மூன்று கிரக அமைப்புக்கள்; உசதீம்- பெருமை வாய்ந்த; ப்ரதயன்—நிலை நிறுத்தினார்; சரித்ரை: சிறப்பியல்புகள்.

மனுவின் அவதாரத்தில், பகவான் மனு வம்சத்தினரின் சந்ததியாகத் தோன்றினார். அவர் துஷ்ட அரசர்களை, தமது சக்தி வாய்ந்த சக்கராயுத்ததினால் அடக்கியாண்டார். அவரது ஆட்சி, எதிர்ப்பற்றதாகவும், பெரும் புகழுக்குரியதாகவும் இருந்தது. அவரது புகழ் மூன்று லோகங்களிலும் பரவியதுடன், அவற்றிற்கும் மேற்பட்ட சத்யலோக கிரக அமைப்பிலும் பரவியது. இக்கிரக அமைப்பு, பிரபஞ்சத்தில் மிகவும் உயர்ந்த நிலையில் இருப்பதாகும்.

பதம் 2.7.21
தன்வந்தரிஸ் ச பகவான் ஸ்வயம் ஏவ கீர்திர்
நாம்னா ந்ருணாம் புரு – குஜாம் ருஜ ஆசு ஹந்தி
யக்ஞே ச பாகம் அம்ருதாயுர் – அவாவருந்த
ஆயுஷ்ய – வேதம் அனுசாஸ்தி அவதீர்ய லோகே

தன்வந்திரி;-தன்வந்தரி அவதாரம்; ச-மேலும்: பகவான்-பாமபுருஷர்: ஸ்வயம்-ஏவ-அவரே தாமாக; கீர்தி:–கீர்த்தி சொரூபம். நாம்னா- என்ற பெயரால்; ந்ருணாம் புரு-ருஜாம்-நோய்வாய்ப்பட்ட ஜீவராசிகளின்: குஜ:-நோய்கள்; ஆசு- மிக விரைவாக; ஹந்தி- குணப்படுத்துகிறார்; யக்ஞே-யாகத்தில்; ச-தவிரவும்: பாகம்-பங்கு; அம்ருத-அமிர்தம்: ஆயு:—வாழ்நாள்; அவ—இருந்து: அவருந்தே- பெருகிறார்; ஆயுஷய-வாழ்நாளின்; வேதம்-அறிவு: அனுசாஸ்தி- நடத்துகிறார்; அவதீர்ய-அவதரிக்கும்; லோகே-பிரபஞ்சத்தில்.

தன்வந்தரியின் அவதாரத்தை ஏற்ற பகவான், எப்பொழுதும் நோய் வாய்பட்டுக் கிடக்கும் ஜீவராசிகளைத் தமது புகழ்பெற்ற இந்த அவதாரத்தின் மூலமாக வெகு விரைவாக குணப்படுத்தி விடுகிறார். அவரால்தான் தேவர்கள் நீண்ட ஆயுளைப் பெறுகின்றனர்: இவ்வாறு நித்தியமாக புகழப்படுபவரான பகவான், யாகங்களிலும் தமக்குரிய பாகத்தைப் பெற்றார். மருத்துவ விஞ்ஞானத்தை அல்லது மருந்தைப் பற்றிய அறிவை பிரபஞ்சத்தில் ஆரம்பித்து வைத்தவரும் அவரே.

பதம் 2.7.22
க்ஷத்ரம் க்ஷயாய விதினோபப்ருதம் மஹாத்மா
ப்ரஹ்ம – திருக் உஜ்ஜித – பதம் நரகார்தி லிப்ஸு
உத்தந்தி அஸாவ் அவனிகண்டகம் உக்ர – வீர்யஸ்
த்ரி: ஸப்த – க்ருத்வ – உருதார – பரஸ்வதேன

க்ஷத்ரம்-ராஜ வம்சம்; க்ஷயாய-குறைக்க வேண்டும் என்பதற்காக; விதினா-விதியால்; உபப்ருதம்- விகிதத்தில் பெருக்கமடைந்தது; மஹாத்மா-மகரிஷி பரசுராமரின் உருவிலுள்ள பகவான்; ப்ரஹ்ம திருக்-பிரம்மத்திலுள்ள முடிவான உண்மை; உஜ்ஜித பதம்- பரம சத்தியத்தின் பாதையைக் கைவிட்டவர்கள்; நரக-ஆர்தி லிப்ஸுட- நரத்தில் துன்பம் அனுபவிக்க விருப்பங்கொண்டு; உத்தநதி- பிடுங்குகிறார்; அஸெள-அவ்வெல்லா; அவனி கண்டகம்- உலகிலுள்ள முட்கள்; உக்ர-வீர்ய:-பயங்கர சக்தி வாய்ந்த; த்ரி:-ஸப்த-மூவேழு (இருபத்தொரு) தடவைகள்; க்ருத்வ- செய்தார் ; உருதார-மிகவும் கூர்மையான; பரஸ்வதேன-பெரும் கோடரியால்.

க்ஷத்ரியர்கள் என்று அழைக்கப்படும் ஆட்சி புரியும் நிர்வாகிகள் நரகத்தில் துன்பத்தை அனுபவிக்க விரும்பி பகவானை அடையும் பாதையிலிருந்து வழிதவறிச் சென்றனர். அப்போது பகவான் பரசுராம ரிஷியாகத் தோன்றி, பூமியில் முட்களாகக் காணப்பட்ட தேவையில்லாத அரசர்களை அழித்தார். இவ்வாறு கூர்மையான தமது கோடரியால் க்ஷத்ரியர்களை அவர் மூவேழு தடவைகள் வேருடன் அழித்தார்.

பதம் 2.7.23
அஸ்மத்-ப்ரஸாத ஸுமுக; கலயா கலேச
இஷ்வாகு-வம்ஸ அவதீர்ய குரோர் நிதேசே
திஷ்டன் வனம் ஸ-தயிதானுஜ ஆவிவேச
யஸ்மின் விருத்ய தங்-கந்தா ஆர்திம் ஆர்ச்சத்

அஸ்மத்- பிரம்மா முதற்கொண்டு அற்பமான எறும்பு வரையுள்ள நமக்கு: பிரஸாத-அகாரணமான கருணை; ஸுமுக—அவ்வாறு விருப்பங்கொண்டு; கலயா- அவரது விரிவங்களுடன்; கலேச -சர்வ சக்திகளுக்கும் பகவான்; இக்ஷ்வாகு-சூரிய வம்சத்தைச் சேர்ந்த இக்ஷ்வாகு மகாராஜன்; வம்சே- வம்சம்; அவதீர்ய—அவதரித்ததன் மூலமாக: குரோ-தந்தையின் அல்லது ஆன்மீக குருவின்; நிதேசே- அவரது ஆணையின் கீழ், திஷ்டன்—அந்நிலையில் இருந்ததால்; வளம்-வனத்தில்; ஸதயிதா.— அனுஜ- அவரது மனைவியுடனும் தம்பியுடனும்; ஆவிவேச- புகுந்தார்; யஸ்மின்-யாரை, விருத்ய- எதிர்த்ததால்: தச- கந்தா- பத்துத்தலைகளுடன் ராவணன்; ஆர்திம்— பெருந்துன்பம்; ஆர்ச்சத்—அடைந்தான்.

பகவான், பிரபஞ்சத்திலுள்ள ஜீவராசிகளிடமுள்ள அகாரணமான கருணையால், தமது அம்சங்களுடன் இக்ஷ்வாகு மகாராஜனின் வம்சத்தில் தோன்றினார். தமது அந்தரங்க சக்தியான சீதையின் பதியாகத் தோன்றிய அவர் தந்தை தசரத மகாராஜனின் ஆணைக்குக் கீழ்படிந்து, மனைவியுடனும், தம்பியுடனும் வனம் புகுந்து, பல ஆண்டுகள் அங்கு வாழ்ந்து வந்தார். பெரும் பௌதிக சக்தி படைத்தவனான பத்துத்தலை ராவணன் பகவானுக்கெதிராக மிகப் பெரிய குற்றத்தைச் செய்ததால், முடிவில் கொல்லப்பட்டான்.

பதம் 2.7.24
யஸ்மா அதாத் உததிர் ஊட-பயாங்க-வேபோ
மார்கம் ஸபதி அரி-புரம் ஹரவத் திதக்ஷோ:
தூரே ஸுஹ்ருன்-மதித-ரோஷ்-ஸுசொண-த்ருஷ்ட்யா:
தாதப்யமான – மகரோரக-நக்ர-சக்ர:

யஸ்மை-ஏவரிடம்; அதாத்-கொடுத்தது; உத்தி- இந்து மகா சமுத்திரம்; ஊட-பய-பயந்தால் பீடிக்கப்பட்டு; அங்க-வேப்- உடல் நடுக்கம்; மார்கம்- வழி; ஸபதி-விரைவில்; அரி—புரம் பகைவனின் நகரம்; ஹரவத்- ஹரனுடையதைப் (மஹாதேவன்) போன்ற; திதக்ஷோ-எரித்து சாம்பலாக்கிவிட விருப்பங்கொண்டு; தூரே-நீண்ட தூரத்தில்; ஸுஹ்ருத்—உற்ற நண்பன்; மதித—அதனால் துன்பமடைந்து; ரோஷ- கோபத்தில்; ஸுசொன—பழுத்துச் சிவந்த; த்ருஷ்ட்யா—அத்தகைய பார்வையால்; தாதப்யமான-உஷ்ணத்தால் எரிகின்றன; மகர—சுறா மீன்கள்; உரக—பாம்புகள்; நக்ர-முதலைகள்; சக்ர:-வட்டம்.

தூரத்திலுள்ள தமது அந்தரங்க தோழியின் (சீதா) பிரிவால் துயருற்ற பகவான் ராமச்சந்திரர், (சுவர்க்கலோக இராஜ்யத்தை எரித்து விட விரும்பிய) ஹரனுடையதைப் போன்ற, சிவந்த கண்களுடன், ராவணனின் நகரத்தின் மீது பார்வையைச் செலுத்தினார். மகா சமுத்திர வாசிகளான சுறா மீன்கள், பாம்புகள் மற்றும் முதலைகளைப் போன்ற நீர்வாழ்வன, பகவானின் கோபமான பழுத்துச்சிவந்த கண்களின் உஷ்ணத்தால் எரிக்கப்பட்டன. இதனால் பயம் கொண்டு நடுங்கிய மகா சமுத்திரம் அவருக்கு வழி விட்டது.

பதம் 2.7.25
வக்ஷ:- ஸ்தல – ஸ்பர்ச – ருக்ன – மஹேந்ர – வாஹ
தந்தைர் விடம்பித – கருப்ஜுஷு ஊட – ஹாஸம்
ஸத்யோ ‘ஸுபி: ஸஹ வினேஷ்யதி தார – ஹர்துர்
விஸ்பூர்ஜிதைர் தனுஷ உச்சரதோ ‘ திஸைன்யே

வக்ஷ-ஸ்தல-மார்பு: ஸ்பர்ச-அதனால் தொடப்பட்டு; ருக்ன- உடைந்த; மஹா இந்ர-சுவர்க்கத்தின் அரசன்; வாஹ-வாகனம்: தந்தை:- தும்பிக்கையால்: விடம்பித பிரகாசமாக்கியது; ககுப் ஜுஷு:- இவ்வாறாக எல்லா திசைகளுக்கும் சேவையாற்றி; ஊட ஹாஸம்-சிறப்பின் வசப்பட்டு; ஸத்ய:-திடீரென்று: அஸுபி: உயிரால்; ஸஹ-அதனுடன்; வினேஷ்யதி- கொல்லப்பட்டான்; தார — ஹர்து:-மனைவியை கடத்திச் சென்றவனின்; விஸ்பூர்ஜிதை: வில்லன் கலகலவென்ற ஓசையால்; தனுஷ்:-வில்: உச்சரத:-வேகமாக உலாவியவாறு; அதிஸைன்யே-இரு புறங்களையும் சேர்ந்த சண்டை செய்யும் வீரர்களின் நடுவில்.

ராவணன் போரில் ஈடுபட்டிருந்தபொழுது, சுவர்க்க ராஜனான இந்திரனை தூக்கிச்சென்ற யானையின் தும்பிக்கை, ராவணனின் மார்போடு மோதி சின்னாபின்னமாக உடைந்தது. இவ்வாறு உடைந்து சிதறிய பாகங்கள் எல்லா திசைகளையும் பிரகாசமாக்கின. எனவே ராவணன் தனது வீரத்தில் கர்வம் கொண்டு, தன்னை எல்லா திசைகளையும் கைப்பற்றுபவன் என்றெண்ணி போர் புரியும் வீரர்களின் மத்தியில் சுற்றித் திரிய ஆரம்பித்தான். சந்தோஷத்தால் ஆட்கொள்ளப்பட்ட அவனது சிரிப்புடன், முழுமுதற் கடவுளான ராமச்சந்திரருடைய வில்லோசையும் சேர்ந்து கேட்டது. ஆனால் இந்த ஒசைகள் நின்றபொழுது, ராவணனின் மூச்சுக் காற்றும் நின்றது.

பதம் 2.7.26
பூமே: ஸுரேதர – வரூத – விமர்திதாயா:
க்லேச -வ்யயாய கலயா ஸித – க்ருஷ்ண – கேச:
ஜாத: கரிஷ்யதி ஜனானுபலக்ஷ்ய – மார்க:
கர்மாணி சாத்ம – மஹிமோபனிபந்தனானி

பூமே:- முழு உலகின்; ஸுர—இதர-தெய்வீகமானவர்களைத் தவிர மற்றவர்கள்; வரூத-போர் வீரர்கள்: விமர்திதாயா:-சுமையால் துன்பமடைந்து; க்லேச துன்பங்கள்; வ்யயாய-குறைக்க வேண்டுமெனும் விஷயத்திற்காக; சுலயா—அவரது விரவங்கத்துடன்; ஸித க்ருஷ்ண —அழகியது மட்டுமல்லாமல் கருமையானதுமாகும்; கேச: இத்தகைய கேசங்களுடன்; ஜாத:-தோன்றி; கரிஷ்யதி- செயற்படுவார்; ஜன—பொது ஜனங்கள்; அனுபலக்ஷ்ய- காணக்கூடியது அரிதாகும்; மார்க:-வழி; கர்மாணி—செயல்கள்; ச-தவிரவும்; ஆத்மா-மஹிமா -பகவானின் சொந்த மகிமைகள்: உபனிபந்தனானி-அதற்குச் சம்பந்தமுள்ள.

நாத்திகர்களான அரசர்களின் போர் பலத்தால் உலகம் அதிக சுமையேற்றப்படும் பொழுது, உலகின் துன்பத்தை குறைப்பதற்காக பகவான் தமது விரிவங்கத்துடனும் அவதரிக்கிறார். இப்படி அவதரிக்கும் பகவான் கருமையான அழகிய கேசத்துடன் கூடிய தமது சுய உருவில் வருகிறார். மேலும் அவரது உன்னதமான பெருமைகளை பரப்புவதற்காக, அவர் அசாதாரணமான முறையில் செயல்படுகிறார். அவர் எவ்வளவு பெருமை வாய்ந்தவர் என்பதை ஒருவராலும் மதிப்பிட முடியாது.

பதம் 2.7.27
தோகேன ஜீவ-ஹரணம் யத் உலூகி-காயாஸ்
த்ரை-மாஸிகஸ்ய ச பதா சகடோ ‘பவ்ருத்த:
யத் ரிங்கதாந்தர-கதேன திவி-ஸ்ப்ருசொர் வா
உன்மூலனம் து இதரதார்ஜுனயோர் ந பாவ்யம்

தோகேன- ஒரு குழந்தையால்; ஜீவஹரணம்- ஒரு ஜீவராசியைக் கொல்லுதல்; யத்-எதுவொன்று; உலூகி-காயா:-ஒரு ராக்ஷஸியின் உடலை மேற்கொண்டாள்; த்ரை-மாஸிகஸ்ய- மூன்று மாதங்கள் மட்டுமே நிரம்பிய ஒருவர்; ச-தவிரவும்; பதா-காலால்; சகட: அபவ்ருத்த:-வண்டியைக் கவிழ்த்தார்; யத்-யாரொருவர்; ரிங்கதா- தவழ்ந்து செல்லும்பொழுது; அந்தர கதேன-வெற்றி கொள்ளப்பட்டு; திவி- ஆகாயத்தில் உயரமாக; ஸ்ப்ருசொ:- தொட்டுக் கொண்டு; வா- இரண்டிலொன்று; உன்மூலனம்-வேருடன் பிடுங்கி எறிந்து; து-ஆனால்; இதரதா-தவிர வேறு எவரேனும்; அர்ஜுனயோ:- இரு அர்ஜுன மரங்களின்; ந பால்யம்-சாத்தியமானதாக இல்லை.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்தான் பரமபுருஷர் என்பதில் ஐயமில்லை, இல்லையெனில் அவர், தமது தாயாரின் மடியில், மூன்று மாதங்களே நிரம்பியவராக இருக்கும்பொழுது தமது பாதத்தால் ஒரு வண்டியைக் கவிழ்ப்பதும், தவழ்ந்து செல்லும் குழந்தையாக இருக்கும்பொழுது, ஆகாயத்த்தை தொடும் அளவிற்கு உயரமாக வளர்ந்திருந்த இரு அர்ஜுன மரங்களை வேருடன் பிடுங்கி எறிவதும் எப்படி சாத்தியமாகும்? பகவானைத் தவிர வேறெவராலும் இத்தகைய செயல்களைச் செய்வது சாத்தியமல்லை.

பதம் 2.7.28
யத் வை வ்ரஜே வ்ரஜ – பசுன் விஷதோய – பீதான்
பாலாமஸ் து அஜீவயத் அனுக்ரஹ – த்ருஷ்டி – வ்ருஷ்ட்யா
த்ச் – கத்தயே ‘தி – விஷ – வீர்ய – விலோல – ஜிஹ்வம்
உச்சடயிஷ்யத் உரகம் விஹரன் ஹ்ரதின்யாம்

யத்-யாரொருவர்; வை-நிச்சயமாக; வ்ரஜே-பிருந்தாவனத்தில்; வ்ரஜ-பகுன்—அதனுடைய மிருகங்கள்; விஷ- தோய-விஷம் தோய்ந்த நீர்; பீதான்-பருகியவர்கள்; பாலான—இடைச்சிறுவர்கள்; து-தவிரவும்; அஜீவயத்—உயிர்ப்பித்தார்; அனுக்ரஹ—த்ருஷ்டி கருணை மிக்க பார்வை; வ்ருஷ்ட்யா-பொழிவுகளின் மூலமாய்; தத்- அந்த; சுத்தயே—சுத்தப்படுத்துவதற்காக; அதி—அளவு கடந்த முறையில் ; விஷவீர்ய-மிகவும் சக்தி வாய்ந்த விஷம்; விலோல்- ஒளிந்திருக்கும்; ஜிஹ்வம்- அத்தகையதொரு நாவையுடையவர்; உச்சாடயிஷ்த்- கடுமையாகத் தண்டித்தார்; உரகம்- பாம்பை ; விஹான்-அதை மகிழ்ச்சியாக எண்ணி; ஹ்ரதின்யாம் – ஆற்றில்.

மேலும் இடைச் சிறுவர்களும், அவர்களது மிருகங்களும் யமுனை நதியின் விஷம் தோய்ந்த நீரைப் பருகிய பொழுது, தமது கருணைமிகுந்த பார்வையால் (தமது பிள்ளைப் பிராயத்தில்) பகவான் அவர்களை உயிர்ப்பித்தார். பிறகு யமுனா நதியின் நீரை தூய்மைப்படுத்துவதற்காக விளையாட்டாக அதற்குள் குதித்து, விஷத்தைக் கக்கிக்கொண்டு அங்கு பதுங்கியிருந்த காளிய நாகத்தை அவர் தண்டித்தார். பரமபுருஷரைத் தவிர வேறெவரால் இத்தகைய வீர பராக்கிரமங்களைச் செய்ய முடியும்?

பதம் 2.7.29
தத் கர்ம திவ்யம் இவ யன் நிசி நிஹ்சயானம்
தாவாக்னினா கசி-வனே பரிதஹ்யமானே
உன்னேஷ்யதி வ்ரஜம் அதோ ‘வஸிதாந்த-காலம்
நேத்ரே பிதாப்ய ஸபலோ ‘நதிகம்ய-வீர்ய:

தத்-அந்த ; கர்ம-செயல்; திவ்யம்—அமானுஷ்யமான; இவ – போல்; யத்—எது; நிசி-இரவில்; நிஹ்சயானம்-கவலையில்லாமல் உறங்கினர்; தாவ-அக்நினா—காட்டுத் தீயின் கண்கூசும் ஒளியால்; சுசி வனே—வறண்ட காட்டில்; பரிதஹ்யமானே—தீ பற்றிக் கொண்டதால்; உன்னேஷ்யதி—காப்பாற்றுவார்; வ்ரஜம்—வ்ரஜபூமியின் எல்லா வாசிகளை; அத:-அதனால்; அவஸித—நிச்சயமாக; அந்த—காலம்— வாழ்வின் அந்திம காலம்; நேத்ரே-கண்களின் மேல்; பிதாப்ய-மூடிக் கொள்வதாலேயே; ஸ -பல:- பலதேவருடன்; அனதிகம்ய- புரிந்து கொள்ள முடியாத; வீரிய:-தீரம்.

பகவான் காளிய நாகத்தைத் தண்டித்த அன்றிரவில், விரஜபூமி வாசிகள் கவலையின்றி உறங்கிக் கொண்டிருக்கும்பொழுது, உலர்ந்த இலைகளின் காரணமாக காட்டில் தீ பற்றிக் கொண்டது. இதனால் விரஜவாசிகளனைவரும் உறுதியாக மரணத்தை சந்திக்கப் போகிறார்கள் என்று தோன்றியது. ஆனால் பகவான், பலராமருடன், தமது கண்களை மூடிக் கொண்டதன் மூலமாக அவர்களைக் காப்பாற்றினார். பகவானின் உன்னதமான லீலைகள் இத்தகையவையாகும்.

பதம் 2.7.30
க்ருஹ்ணீத யத் யத் உபயந்தம் அமுஷ்ய மாதா
கல்பம் ஸுதஸ்ய ந து தத் தத் அமுஷ்ய மாதி
யஜ் ஜ்ரும்பதோ ‘ ஸ்ய வதனே புவனானி கோபீ
ஸம்வீக்ஷ்ய சங்கித-மனா: ப்ரதிபோதிதாஸீத்

க்ருஹ்ணீத-மேற்கொள்வதன் மூலம்; யத் யத்—எதுவானாலும்; உபபந்தம் – கட்டுவதற்குரிய கயிறுகள்; அமுஷ்ய—அவரது; மாதா- தாய்; கல்பம் -கயிறுகள்; ஸுதஸ்ய-தன் மைந்தனின்; ந-இல்லை; து-ஆயினும்; தத் தத்-சீக்கிரத்தில்; அமுஷ்ய-அவரது; மாதி- போதுமானதாக இருந்தது; யத்-எதுவொன்று; ஜ்ரும்பத:-வாயைத் திறக்கிறார்; அஸ்ய-அவருடைய; வதனே -வாயில்; புவனானி- உலகங்கள்; கோபீ-இடையர் குலப் பெண்; ஸம்வீக்ஷ்ய-அவ்வாறு அதைக் கண்டு; சங்கித-மனா:-மனதில் சந்தேகத்துடன்; ப்ரதி— போதிதா- வேறொரு வழியில் நம்பிக்கை கொண்டாள்; ஆஸ்த்- அவ்வாறு செய்யப்பட்டது.

இடையர் குலப் பெண் (கிருஷ்ணரின் வளர்ப்புத் தாய், யசோதை) தமது மைந்தனின் கரங்களைக் கயிறுகளால் கட்ட முயன்றபொழுது, கயிற்றின் நீளம் எப்பொழுதும் போதாததாகவே இருந்ததைக் கண்டாள், இறுதியாக அவள் தம் முயற்சியைக் கைவிட்ட பொழுது, பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் உடனே தமது வாயைத் திறந்தார். அதற்குள் எல்லாப் பிரபஞ்சங்களும் அமைந்திருப்பதைக் கண்டு அவளது மனதில் வேறு வகையாகப் புரிந்து கொண்டாள்.

பதம் 2.7.31
நத்தம் ச மோஷ்யதி பயாத் வருணஸ்ய பாசாத்
கோபான் பிலேஷு பிஹிதான் மய-ஸுனுனா ச
அஹ்னி அப்ருதம் நிசி ச யானம் அதிஸ்ரமேண
லோகம் விகுண்டம் உபனேஷ்யதி கோகுலம் ஸ்ம

நந்தம்- நந்த மகாராஜனை (கிருஷ்ணரின் தந்தை); ச- அன்றியும்; மோக்ஷ்யதி-காப்பாற்றுகிறார்; பயாத்—அந்த பயத்திலிருந்து: வருணஸ்ய-நீர் தேவனான வருணனின்: பாசாத்- பிடியிலிருந்து; கோபான்.-இடையர்கள்; பிலேஷு-மலைக்குகைகளில்; பிஹிதான்- வைக்கப்பட்ட; மய-ஸுனுனாமயனின் மகனால்; ஏ -தவிரவும்: அஹ்னி அப்ருதம் – பகல் நேரத்தில் அதிகமாக ஈடுபட்டிருப்பதால்: நிரி- இரவில்; சயானம்-கீழே படுத்திருந்தனர்; அதிஸ்ரமேண—கடின உழைப்பின் காரணத்தால்; லோகம்-கிரகம்: விகுண்டம்-ஆன்மீக வானம்: உபனேஷ்யதி—அவர் அளித்தார்; கோகுலம்- மிகவுயர்ந்த கிரகம்; ஸ்ம-நிச்சயமாக.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், தமது வளர்ப்புத் தந்தையான நந்த மகாராஜனை வருண தேவனின் பயத்திலிருந்து காப்பாற்றினார். மேலும் மயனின் மகனால் மலைக் குகைகளில் அடைத்து வைக்கப்பட்ட இடைச்சிறுவர்களையும் விடுவித்தார். மேலும், பிருந்தாவன வாசிகள் பகல் நேரத்தில் கடுமையாக உழைத்ததால் இரவில் ஆழ்ந்து உறங்கினர். பகல் நேரத்தில் அவர்கள் கடுமையாக உழைத்ததால், ஆன்மீக வானிலுள்ள மிகவுயர்ந்த கிரகத்திற்கு உயர்த்தப்படும் சன்மானத்தை பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அவர்களுக்கு அளித்தார். உன்னதமான இச்செயல்கள், அவர் கடவுள்தான் என்பதை சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கின்றன.

பதம் 2.7.32
கோபைர் மகே ப்ரதிஹதே வ்ரஜ – விப்லவாய
தேவே ‘பிவர்ஷதி பசூன் க்ருபயா ரிரக்ஷு:
தர்தோச்சிலீந்ரம் இவ ஸபத் – தினானி ஸபத் –
வர்ஷோ மஹீத்ரம் அனகைக – கரே ஸலீலம்

கோபை:-இடையர்களால்; மகே-சுவர்க்க ராஜனுக்கு ஒரு யாகத்தைச் செய்வது; ப்ரதிஹதே—நிறுத்தப்பட்டதால்; வ்ரஜ – விப்லவாய -கிருஷ்ணரின் லீலைகளுக்குரிய இடமான, விரஜபூமியின் வாழ்வை முற்றிலும் அழித்துவிடுவதற்காக; தேவே —சுவர்க்க ராஜனால் ; அபிவர்ஷதி- கடும் மழையைப் பொழிந்து; பசூன்-மிருகங்கள்; க்ருபயா—அவர்கள் மீதுள்ள அகாரணமான கருணையால்; ரிரக்ஷு-அவர்களைக் காப்பாற்ற விரும்பினார்: தர்த-மேலே தூக்கிப் பிடித்தார்; உச்சலீந்ரம்- ஒரு குடையைப் போல் பிடுங்கியெடுத்தார்; இவ-அதைப் போலவே: ஸபத் – தினானி- தொடர்ந்து ஏழு நாட்களாக: ஸபத் – வர்ஷ-அவர் ஏழு வயதே நிரம்பியவராக இருந்தும்; மஹீத்ரம்- கோவர்தன மலையை; அனக-களைப்படையாமல்; ஏக-கரே-ஒரு கரத்தில் மட்டுமே: ஸலீலம்-விளையாட்டுத்தனமாக

பிருந்தாவனத்து இடையர்கள், கிருஷ்ணரின் யோசனைப்படி, சுவர்க்க ராஜனான இந்திரனுக்கு யாகமியற்றுவதை நிறுத்தினர். இதனால் விரஜபூமி எனப்படும் நிலம் முழுவதும் ஏழு நாட்களாக தொடர்ந்து பெய்த கடும் மழையால் அடித்துக்கொண்டு போய்விடக்கூடிய அபாயம் ஏற்பட்டது. அப்பொழுது பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், ஏழு வயதே நிரம்பியவராக இருப்பினும், தமது தனிப்பெருங்கருணையினால், கோவர்தனம் எனப்படும் மலையை ஒரே கரத்தால் மேலே தூக்கிப் பிடித்தார். நீரின் பலமான தாக்குதலிருத்து மிருகங்களைக் காப்பாற்றுவதற்காகவே இதை அவர் செய்தார்.

பதம் 2.7.33
க்ரீடன் வனே நிசி நிசாகர – ரஸ்மி – கௌர்யாம்
ராஸோன்முக: கல – பதாயத – மூர்ச்சிதேன
உத்தீபித – ஸ்மர – ருஜாம் வ்ரஜ – ப்ருத் – வதூனாம்
ஹர்துர் ஹரிஷ்யதி சிரோ தனதானுகஸ்ய

க்ரீடன்——அவரது லீலைகளில் ஈடுபட்டிருந்த பொழுது; வனே – விருந்தாவனக் காட்டில்; நிசி-இரவில் சுறுசுறுப்புடன்; நிசாகர- சந்திரன்; ரஸ்மி-கௌர்யாம-வெண்மையான நிலவொளி; ராஸ-உன்முக-உடன்நடனமாட விருப்பங்கொண்டு; கல-பதாயத -— இனிய பாடல்களுடன்; மூர்ச்சிதேன-மற்றும் காதுக்கினிய வாத்தியம்; உத்தீபித-விழிப்புறச் செய்தார்; ஸ்மர-ருஜாம்-பாலுறவு ஆசைகளை; வ்ரஜ-ப்ருத்—விரஜ பூமியின் வாசிகள்; வதூனாம்-மனைவிகளின்; ஹர்து:- கடத்தல்காரர்களின்; ஹரிஷ்யதி – அழிப்பார்; சிர:-தலை; தனத—அனுகஸ்ய-செல்வந்தரான குபேரனுடைய ஆளின்.

பகவான், தமது ராஸ-லீலையில், இனிய பாடல்களால் பிருந்தாவன வாசிகளுடைய மனைவியரின் பாலுறவு ஆசைகளைத் தூண்டுவதில் ஈடுபட்டிருந்தார். அப்பொழுது சுவர்க்கத்தின் பொருளாளருடைய (குபேரன்) ஆளான, சங்கசூடன் என்ற அசுரன் அந்த இள நங்கைகளைக் கடத்திச் சென்றான். இதனால் பகவான் அவனுடைய தலையைத் துண்டித்தார்.

பதங்கள் 2.7.34 – 2.7.35
யே ச ப்ரலம்ப – கர – தர் துர – கேசி – அரிஷ்ட
மல்லேப கம்ஸ – யவனா: கபி – பௌண்ட்ரகாத்யா:
அன்யே ச சால்வ – குஜ பல்வல் – தந்தவக்ர
ஸப்தோக்ஷ சம்பா – விதூரத – ருக்மி – முக்யா:

யே வா ம்ருதே ஸமிதி – சாலின ஆத்த – சாபா:
காம்போஜ – மத்ஸ்ய – குரு – ஸ்ருஞ்சய – கைகயாத்யா:
யாஸ்யந்தி அதர்சனம் அலம் பல – பார்த – பீம
வ்யாஜாஹ்வயோன ஹரிணா நிலயம் ததீயம்

யே-அவ்வெல்லா; ச-முழுவதும்; ப்ரலம்ப-பிரலம்பன் எனும் அசுரன்; கர-தேனுகாசுரன்; தர்துர-பகாசுரன்; கேசீ-கேசீ எனும் அசுரன்; அரிஷ்ட-அரிஷ்டாசுரன்; மல்ல கம்சனின் ஒரு மல்யுத்த வீரன்; இப-குவலயபீடன்;கம்ஸ- மதுராபுரி மன்னனும், கிருஷ்ணரின் தாய் மாமனுமான கம்சன்; யவனா:-பாரசீகம் மற்றும் அதன் அண்டை நாடுகளின் மன்னர்கள்; கபி-துவிவிதன்; பெளண்ட்ரக-ஆத்யா: பௌண்ட்ரகனும், பிறரும்; அன்யே-பிறர்; ச-எவ்வளவுக்கெள்ளவு: சால்வ—சால்வன் எனும் அரசன்; குஜ-நரகாசுரன்; பல்வல-பல்வலன் எனும் அரசன்; தந்தவக்ர-கிருஷ்ணரோடு போட்டியிட்டு மடிந்த சிசுபாலனின் சகோதரன்; ஸப்தோக்ஷ—சப்தோக்ஷன் எனும் அரசன்; சம்பர- சம்பரன் எனும் அரசன்; விதூரத-விதூரதன் எனும் அரசன்; ருக்மி – முக்யா:-துவாரகையில் கிருஷ்ணரது முதல் ராணியான ருக்மிணியின் சகோதரன்; யே-அவ்வெல்லா; வா-ஏதேனும் ஒன்று; ம்ருதே-போர்க்களத்தில்; ஸமிதி-சாலின:-அனைவரும் சக்தி வாய்ந்தவர்கள்; ஆத்த-சாபா:-விற்களும், அம்புகளும் கொண்ட ஆயுத பாணியாய்; காம்போஜ-காம்போஜ தேசத்து அரசன்; மத்ஸ்ய- துவர்பங்கத்தின் அரசன்; குரு—திருதராஷ்ட்ரரின் மகன்கள்; ஸ்ருஞ்சய- சிருஞ்சயன் எனும் அரசன்; கைகய—ஆத்யா- கேகய நாட்டு அரசனும், மற்றவர்களும்; யாஸ்யந்தி- அடைவார்கள்; அநர்சனம்—அருவமான பிரம்மஜோதியில் இரண்டறக் கலத்தல்; அலம்—அதைப்பற்றி கூற என்ன இருக்கிறது; பார்த—அர்ஜுனன்; பல- கிருஷ்ணரின் அண்ணனான பலதேவர்; பீம- இரண்டாவது பாண்டவரான பீமன்; வ்யஜா-ஆஹ்வயேன-பொய்யான பெயர்களால்; ஹரிணா—பகவான் ஸ்ரீஹரியால்; நிலயம்-இருப்பிடம்; ததீயம்—அவருடைய.

அசுர குணம் படைத்தவர்களான பிரலம்பன், தேனுகன், பகன், கேசீ, அரிஷ்டன், சாணூரன், முஷ்டிகன், குவலயபீட யானை, கம்சன், யவனன், நாகாசுரன் மற்றும் பௌண்ட்ரகன் ஆகியோரும், பெருந் தளபதிகளான சால்வன், துவிவத குரங்கு மற்றும் பல்வலன் ஆகியோரும், தந்தவக்ரன், ஏழு எருதுகள், சம்பரன், விதூரதன் மற்றும் ருக்மீ ஆகியோரும், அதைப்போலவே காம்போஜன், மத்ஸ்யன், குரு, சிருஞ்சயன் மற்றும் கேகயன் போன்ற பெரும் போர் வீரர்களும், பகவான் ஸ்ரீ ஹரியுடன் நேரடியாகவோ அல்லது அவரது சார்பாக உள்ள பலதேவர், அர்ஜுனன் மற்றும் பீமனைப் போன்றோருடனோ பெரும் பலத்துடன் போர் புரிவார்கள். இவ்வாறு கொல்லப்படும் அசுரர்கள் அருவமான பிரம்மஜோதியையோ அல்லது வைகுண்ட லோகத்திலுள்ள, பகவானின் சொந்த வசிப்பிடத்தையோ அடைவார்கள்.

பதம் 2.7.36
காலேன மீலித – தியாம் அவம்ருஸ்ய ந்ரூணாம்
ஸ்தோகாயுஷாம் ஸ்வ – நிகமோ பத தூர- பார:
ஆவிர்ஹிதஸ் து அனுயுகம் ஸ ஹி ஸத்யவத்யாம்
வேத – த்ருமம் விட -பசொ விபஜிஷ்யதி ஸ்ம

காலேன்-நாளடைவில்: மீலித- தியாம்—புத்தியில் தாழ்தவர்களின்; அவம்ருஸ்ய- கஷ்டங்களை கருத்திற் கொண்டு; ந்ரூணாம்- மனித வர்க்கத்தின்; ஸ்தோக-ஆயுஷாம்- குறுகிய ஆயுள் கொண்டவர்களின்; ஸ்வ- நிகம:- அவரால் தொகுக்கப் பட்ட வேத இலக்கியங்கள், பத-அப்படியே; தூர-பார:-மிகவும் கஷ்டம்; ஆவிர் ஹித:—அவ்வாறு தோன்றி; து—ஆனால்; அனுயுகம்— யுகத்தைப் பொறுத்தவரை: ஸ:-அவர் (பகவான்); ஹி- நிச்சயமாக, ஸத்யவத்யாம்—சத்யவதியின் கருவில்; வேத- த்ருமம்-கல்ப- விருக்ஷமான வேதங்களின்; விட-பச-கிளைகளின் பிரிவால்; விபஜிஷ்யதி-பாகங்களாக பிரிப்பார்; ஸ்ம-அது இருந்ததைப் போல்.

சத்யவதியின் மகனாக (வியாஸதேவர்) பகவான் அவதரித்தார். தாம் தொகுத்த வேத இலக்கியங்கள், குறுகிய ஆயுள் கொண்டவர்களும், புத்தியில் தாழ்ந்தவர்களுமான மனிதர்களுக்கு மிகவும் கடினமாக இருக்கும் என்று அவர் கருதுவார். இதனால் தனிப்பட்டயுகத்தின் சூழ்நிலைகளுக்கேற்ப, வேத அறிவெனும் மரத்தை அவர் வெவ்வேறு கிளைகளாகப் பிரிப்பார்.

பதம் 2.7.37
தேவ- த்விஷாம் நிகம – வர்த்மணி நிஷ்டிதானம்
பூர்பிர் மளேன விஹிதாபிர் அத்ருஸ்ய – தூர்பி:
லோகான் க்னதாம் மதி – விமோஹம் அதிப்ரலோபம்
வேஷம் விதாய பஹு பாஷ்யத ஒளபதர்ம்யம்

தேவ-த்விஷாம்-பகவத் பக்தர்களிடம் பொறாமை கொண்டவர்களின்; நிகம—வேதங்கள்; வர்த்மனி-அவ்வழியில்: நிஷ்டிதானாம்- நல்ல நிலையில் இருப்பவர்களின்; பூர்பி:- விண்வெளிக் கப்பல்களால்; மயேன-மிகப் பெரும் விஞ்ஞானியான மயனால் செய்யப்பட்ட; விஹிதாபி:—அவனால் செய்யப்பட்டது; அத்ருஸ்ப தூர்பி:- வானில் காணப்படாமால்; லோகான்—வெவ்வேறு கிரகங்கள்; க்னதாம்- கொலைகாரர்களின்; மதி-விமோஹம்-மனக்குழப்பம்;அதிப்ரலோபம்-மிகவும் கவர்ச்சியான; வேக்ஷம்- உடை; விதாய- அப்படிச் செய்து; பஹு பாஷ்யதே-மிகவும் அதிகமாகப் பேசுவார்கள்: ஔபதர்ம்யம்-கீழான சமயக் கொள்கைகள்.

நாத்திகர்கள் விஞ்ஞானபூர்வமான வேத அறிவை நன்கு கற்றுணர்ந்த பின், மிகப் பெரும் விஞ்ஞானியான மயனால் சிறந்த முறையில் கட்டப்பட்டு தயாரிக்கப்பட்ட விண்வெளிக் கண்களுக்குப் புலப்படாதவாறு ஆகாயத்தில் கப்பலிலமர்ந்து, பறந்து, வெவ்வேறு பகவான் கிரகவாசிகளை நாசப்படுத்துவார்கள். அப்போது புத்தராகத்தோன்றி, கவர்ச்சியாக உடையுடுத்தி தம்மை அலங்கரித்துக் கொள்வதன் மூலமாக அவர்களின் மனங்களை குழம்பச் செய்து, கீழான சமயக் கொள்கைகளைப் பற்றி பிரச்சாரம் செய்வார்.

பதம் 2.7.38
யர்ஹி ஆலயேஷு அபி ஸதாம் ந ஹரே: கதா ஸ்யு:
பாஷண்டினோ த்விஜ ஜனா வ்ருஷலா ந்ருதேவா:
ஸ்வாஹா ஸ்வதா வஷட் இதி ஸ்ம கிரோ ந யத்ர
சாஸ்தா பவிஷ்யதி கலேர் பகவான் யுகாந்தே

யர்ஹி—அது நிகழும்பொழுது; ஆலயேஷு- அவர்களின் வசிப்பிடத்தில்: அபி—அப்பொழுதும்; ஸதாம்- நாகரிகமடைந்த, மேன்மக்கள் : ந- இல்லை; ஹரே:-முழுமுதற் கடவுளின்; கதா- விஷயங்கள்: ஸ்யு:-நிகழும்; பாஷண்டின:-நாத்திகர்கள்; த்விஜ-ஜனா- தங்களை மூன்று மேல் வகுப்புக்களைச் (பிராமணர்கள், க்ஷத்ரியர்கள் மற்றும் வைஸ்யர்கள்) சேர்ந்தவர்களென கூறிக் கொள்பவர்கள்; வ்ருஷலா:-தாழ்ந்த வகுப்பைச் சேர்ந்த சூத்திரர்கள்; ந்ரு-தேவா;- அரசாங்க அதிகாரிகள்; ஸ்வாஹா-யாக மந்திரங்கள்; ஸ்வதா—யாகத்திற்குத் தேவையான பொருட்கள்; வஷத்- யாக பீடம்; இதி-ஸ்ம-இவ்வெல்லா; கிர:- வார்த்தைகள்; ந-ஒரு போதும் இல்லை; யத்ர—எந்த இடத்திலும்; சாஸ்தா-தண்டிப்பவர்; பவிஷ்யதி- தோன்றுவார்; கலே:-கலி யுகத்தின்; பகவான்- முழுமுதற் கடவுள்; யுக—அந்தே – அதன் இறுதியில்.

அதன் பின், கலியுகத்தின் இறுதியில், மூன்று உயர் பிரிவுகளைச்சேர்ந்த பெயரளவேயான முனிவர்கள் மற்றும் மரியாதைக்குரிய மேன்மக்களின் வசிப்பிடங்களிலும் கூட பகவானைப் பற்றிய விஷயங்கள் பேசப்படாது. அப்பொழுது சூத்திர வகுப்பிலிருந்து அல்லது அவர்களை விடக் கீழான வகுப்பிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் மந்திரிகளின் கைகளுக்கு ஆட்சி மாற்றப்பட்டுவிடும். யாகத்தைப் பற்றிய உள் விவரங்களை யாருமே அறிந்திருக்க மாட்டார்கள். அச்சமயத்தில் பகவான் அனைவரையும் தண்டிக்கும் பரம அதிகாரியாகத் தோன்றுவார்.

பதம் 2.7.39
ஸர்கே தபோ ‘ஹம் ருஷயோ நவ யே ப்ரஜேசா:
ஸ்தானே த தர்ம-மக-மனு-அமராவனீசா:
அந்தே து அதர்ம-ஹர-மன்யு-வசாஸுராத்யா
மாயா-விபூதய இமா: புரு – சக்தி – பாஜ :

ஸர்கே-படைப்பின் துவக்கத்தில்; தப: தவம்; அஹம்- நான்; ருஷய- ரிஷிகள்; நவ-ஒன்பது; யே- ப்ரஜேசா :-உற்பத்தி செய்யப் போகிறவர்கள்; ஸ்தானே-படைப்பைக் காப்பதற்கு நடுவே; அத- நிச்சயமாக; தர்ம-மதம்; மக- பகவான் விஷணு: மனு -மனித குலத் தந்தை; அமர- காக்கும் தொழிலின் விவகாரங்களை பிரதிநிநிகளாக இருந்து ஆட்சிபுரியும் தேவர்கள்; அவனீசா:-மேலும் வெவ்வேறு கிரகங்களின் அரசர்கள்; அந்தே-இறுதியில்; து-ஆனால்; அதர்ம- அதர்மம்; ஹர- சிவபெருமான்; மன்யு-வச- கோபத்திற்கு அடிமைப்பட்ட; அஸுர—ஆதியா- பக்தர்களின் பகைவர்களான, நாத்திகர்கள்; மாயா-சக்தி: விபூதய:—சக்தி வாய்ந்த பிரநிதிகள்,:- இமா—அவர்களனைவரும்; புரு சக்தி-பாஜ: பரம சக்தி படைத்த பகவானின்.

படைப்பின் துவக்கத்தில் தவமும், நானும் (பிரம்மா), இனவிருத்தி செய்யும் பெரும் ரிஷிகளான, பிரஜாபதிகளும் இருக்கிறோம்; பிறகு, படைப்பைக் காக்கும் வேளையில், பகவான் விஷ்ணு, ஆளும் சக்திகளைப் பெற்ற தேவர்கள், மற்றும் கிரகங்களின் அரசர்கள் ஆகியோர் உள்ளனர். ஆனால் இறுதியில் அதர்மமும், பிறகு சிவபெருமானும் மற்றும் கோபம் கொண்ட நாத்திகர்கள் போன்றவர்களும் இருக்கின்றனர். இவர்களனைவரும், பரம சக்தி வாய்ந்தவரான பகவானுடைய வெவ்வேறு சக்திகளின் பிரதிநிதிகளாவர்.

பதம் 2.7.40
விஷ்ணோர் து வீர்ய-கணனாம் கதமோ ‘ர்ஹதீஹ
ய: பார்திவானி அபி கவிர் விமமே ரஜாம்ஸி
சஸ்கம்ப ய: ஸ்வ-ரஹஸாஸ்கலதா த்ரி-ப்ருஷ்டம்
யஸ்மாத் த்ரி-ஸாம்ய-ஸதனாத் உரு-கம்பயானம்

விஷ்ணோ:-பகவான் விஷ்ணுவின்: து-ஆனால்; வீர்ய-தீரம்: கணனாம்- கணக்கிடும் விஷயத்தில்; கதம- வேறு யார்; அர்ஹதி- அதைச் செய்யமுடியும்; இஹ-இவ்வுலகில்; ய-யாரொருவர்: பார்திவானி-அணுக்கள்: அபி–தவிரவும்; கவி:- பெரும் விஞ்ஞானி; விமமே- எண்ணிவிடக் கூடும்: ரஜாம்ஸி-அணுக்கள்; சஸ்கம்ப-பற்றமுடியும்; ய-யாரொருவர்; ஸ்வ–ரஹஸா—அவரது சொந்த பாதத்தால்; அஸ்கலதா-தடுக்கப்பட்டுவிடாமல்; த்ரி-ப்ருஷ்டம்-மிகவுயர்ந்த கிரக வெளி: யஸ்மாத்- எதனால்; த்ரி-ஸாம்ய-முக்குணங்களின் நடுநிலை: ஸதனாத்-அந்த இடம் வரை; உரு-கம்பயானம் மிகவும் ஊக்கத்துடன் அசையும்.

விஷ்ணுவின் வீரத்தை யாரால் முழுமையாக விவரிக்க முடியும்? பிரபஞ்சத்தின் அணுக்களனைத்தையும் எண்ணிவிடக் கூடியவனாக இருந்தாலும், அத்தகைய விஞ்ஞானியாலும் அதை செய்ய முடியாது. ஏனெனில், திரிவிக்ரமன் எனும் அவரது ரூபத்தில் தமது பாதத்தை, முயற்சியில்லாமலேயே மிகவுயர்ந்த கிரகமான சத்யலோகத்துக்கும் அப்பால், மூன்று ஜட இயற்கைக் குணங்களின் முடிவு (திரை) வரை பகவான் உயர்த்தினார். இதனால் அனைத்தும் அசைந்தன.

பதம் 2.7.41
நாந்தம் விதாமி அஹம் அமீ முனயோ ‘க்ர – ஜாஸ் தே
மாயா பலஸ்ய புருஷஸ்ய குதோ ‘வரா யே
காயன் குணான் தச – சதானன ஆதி – தேவ:
சேஷோ ‘துனாபி ஸமவஸ்யதி நாஸ்ய பாரம்

ந -ஒருபோதும் இல்லை; அந்தம்-முடிவு; விதாமி-எனக்குத் தெரியும்; அஹம்—நான்; அமீ-மேலும் அவர்களனைவரும்; முனய- சிறந்த முனிவர்கள்; அக்ரஜா-உனக்கு முன் பிறந்த; தே-நீ; மாயா பலஸ்ய—சர்வசக்தி படைத்தவரின்; புருஷ்ஸ்ய-முழுமுதற் கடவுளின்; குத- மற்றவர்களைப் பற்றிக் கூற என்ன இருக்கிறது ; அவரா:-நமக்குப் பின் பிறந்த; யே-அவர்கள்; காயன்-பாடுவதன் மூலம்; குணான்- குணங்கள்; தசசத- ஆனன;—ஆயிரம் முகங்களைக் கொண்டவர்; ஆதி-தேவ:-பகவானின் முதல் அவதாரம் ; சேஷ : சேஷன் எனப்படும்; அதுனா—இதுவரை; அபி—அவரும் கூட; ஸமவஸ்யதி—அடைய முடியும்; ந—இல்லை; அஸ்ய—அவருடைய; பாரம்-எல்லை.

நானோ அல்லது உனக்கு முன் பிறந்த முனிவர்களோ சர்வ வல்லமை படைத்த முழுமுதற் கடவுளை முழுமையாக அறிந்திருக்கவில்லை. எனவே நமக்குப் பின் பிறந்த மற்றவர்களால் அவரைப் பற்றி எதைத் தெரிந்துகொள்ள முடியும்? பகவானின் முதல் அவதாரமான சேஷனுக்கு ஆயிரம் முகங்களுள்ளன. பகவானின் இத்தனை முகங்களுடன் சேஷன் விவரித்துக் கொண்டிருந்தாலும், அக்குணங்களைப் பற்றிய அறிவின் எல்லையை அவராலேயே அடைய முடியவில்லை.

பதம் 2.7.42
யேஷாம் ஸ ஏஷ பகவான் தயயேத் அனந்த:
ஸர்வாத்மனாஸ்ரித-பதோ யதி நிர்வ்யலீகம்
தே துஸ்தராம் அதிதரந்தி ச தேவ-மாயாம்
நைஷாம் மமாஹம் இதி தீ: ஸ்வ-ஸ்ருகால-பக்ஷ்யே

யேஷாம்- அவர்களுக்கு மட்டுமே; ஸ:-பகவான்; ஏஷ:-அந்த; பகவான்-பரமபுருஷர்; தயயேத்—அவரது கருணையை அளிக்கிறார்; அனந்த:-எல்லையற்ற சக்தி; ஸர்வ—ஆத்மனா— எதையும் ஒதுக்கி விடாமல், அனைத்து வழிகளின் மூலமாகவும்; ஆஸ்ரித-பத- சரணடைந்த ஆத்மா; யதி:- நிர்வ்யலீகம் — இத்தகைய சரணாகதி உண்மையானதாக இருக்குமானால்; தே—அவர்கள் மட்டுமே; துஸ்தராம்-கடக்க முடியாத; அதிதரந்தி-கடக்க முடியும்; ச-மற்றும் உடைமைகள்; தேவ-மாயாம்-பகவானின் பல்வேறு சக்திகள்; ந-இல்லை; ஏஷாம்—அவர்களுடைய; மம- என்னுடைய: அஹம்- நான்;இதி—இவ்வாறாக;தீ:-உணர்வுள்ள: ஸ்வ-நாய்கள்; ஸ்ருகால- குள்ள நரிகள்; பக்ஷக்ஷ்யே-சாப்பிடும் விஷயத்தில்.

ஆனால் பகவானுடைய தொண்டில் தூய சரணாகதி அடைவதன் மூலம், முழுமுதற் கடவுளான பரமபுருஷரின் விசேஷ அனுக்கிரகத்தைப் பெறுபவரால் கடக்க முடியாத அஞ்ஞானக் கடலைக் கடந்து, பகவானைப் புரிந்து கொள்ள முடியும். ஆனால் இறுதியில் நாய்களாலும், குள்ள நரிகளாலும் புசிக்கப்படும் இவ்வுடலில் பற்றுக் கொண்டிருப்பவர்களால் அதைச் செய்ய முடியாது.

பதங்கள் 2.7.43 – 2.7.45
வேதாஹம் அங்க பரமஸ்ய ஹி யோக-மாயாம்
யூயம் பவஸ் ச பகவான் அத தைத்ய-வர்ய:
பத்னீ மனோ: ஸ ச மனுஸ் ச தத்-ஆத்மஜாஸ் ச
ப்ராசீனபர்ஹிர் ருபுர் அங்க உத த்ருவஸ் ச

இக்ஷ்வாகுர் ஜல-முககுந்த-விதேஹ-காதி
ரகு-அம்பரீஷ-ஸ்கரா கய – நாஹுஷாத்யா
மாந்தாத்ர்-அலர்க- சததனு-அனு-ரந்திதேவா
தேவவ்ரதோ பலிர் அமூர்த்தரயோ திலீப:

சௌபரி-உதங்க – சிபி – தேவல பிப்பலாத
ஸாரஸ்வதோத்தவ-பராசர-பூரிஷேணா:
யே ‘ன்யே விபீஷண-ஹனூமத்-உபேந்ரதத்த
பார்தார்ஷ்டிஷேண-விதுர-ஸ்ருததேவ-வர்யா:

வேத- அதை அறி; அஹம்-நான்; அங்க-ஓ நாரத; பரமஸ்ய-பரமனின்; ஹி-நிச்சயமாக; யோக மாயாம்-சக்தி; யூயம்-நீ; ப-சிவன்: ச-மேலும்; பகவான்-மிகச் சிறந்த தேவன்; அத-அவ்வாறே; தைத்ய-வர்ய:-நாத்திகக் குடும்பத்தில் பிறந்தவரும், பகவானின் மிகச் சிறந்த பக்தருமான, பிரகலாத மகாராஜன்; பத்னீ—சதரூபா; மனோ- மனுவின்; ஸ:-அவன்; ச- தவிரவும்; மனு- சுயம்புவ மனு; ச- மேலும்; தத்- ஆத்ம- ஜா- ச-மற்றும் பிரியவிரதன், உத்தானபாதன், தேவஹுதி ஆகியோரைப் போன்ற அவரது சந்ததியினர்; ப்ராசீனபர்ஹி: பிராசீனபப்ஹி; ருபு-ருபு; அங்க:-அங்கன்; உத-அவரும் கூட; த்ருவ:-துருவன்; ச-மேலும்; இக்ஷ்வாகு-இக்ஷ்வாகு; ஜல-ஜலன்; முசுகுந்த-முசுகுந்தன்; விதேஹ-ஜனக மகாராஜன்; காதி-காதி; ரகு- ரகு; அம்பரீஷு-அம்பரீஷர்; ஸகரா-சகரா; கய-கயன்; நாஹுஷ- நாகுஷன்; ஆத்யா:-போன்றவர்கள்; மாந்தாத்ரு-மாந்தாதா; அலாக்- அலர்கன்; சததனு—சததனு; அனு—அனு; ரந்திதேவா:-ரந்திதேவர்; தேவவ்ரத:- பீஷ்மர்: திலீப்-திலீபன்; ஸௌபரி-சபரி; உதங்க-உதங்கன்; சிபி-சிபி; தேவல- தேவலர்; பிப்பலாத-பிப்பலாதன்; ஸாரஸ்வத-சாரஸ்வதன்; உத்தவ-உத்தவர்: பராசர-பராசரர்: பூரிஷேணா- பூரிஷேணர்: யே- அவர்கள்; அன்யே-மற்றவர்கள்: விபீஷண- விபீஷணன்: ஹனும- ஹனுமான்; உபேந்ர—தத்த- சுகதேவ கோஸ்வாமி: பார்த—அர்ஜுனன்; ஆர்ஷ்டிஷேண—அர்ஷ்டிஷேணன்: விதுர-விதுரன்; ஸ்ருததேவ- சுருததேவர்; வர்யா-முதன்மையான.

சரணடைந்த ஓ நாரத, பகவானின் சக்திகள் அறியப்பட முடியாதவையாகவும், அளவிட முடியாதவையாகவும் இருப்பினும், நாம் ஆத்மாக்களாக இருப்பதால், அவர் எப்படி யோகமாயா சக்திகளின் மூலமாக செயற்படுகிறார் என்பதை அறிவோம். அதைப் போலவே, சர்வ சக்தி படைத்த சிவன், நாத்திக குடும்பத்தில் பிறந்த பிரகலாத மகாராஜன், சுயம்புவ மனு, அவரது மனைவி சதரூபா, அவரது மகன்களும், மகள்களுமான பிரியவிரதன், உத்தானபாதன், ஆகூதி, தேவஹுதி மற்றும் பிரஸூதி போன்றவர்கள், பிராசீனபர்ஹி, ரிபு, வேனின் தந்தையான அங்கன், துருவ மகாராஜன், இக்ஷ்வாகு, ஜலன், முசுகுந்தன், ஜனக மகாராஜன், காதி, ரகு, அம்பரீஷர், சகரன், கயன், நாகுஷன், மாந்தாத், அலர்கன், சததன்வே, அனு, ரந்திதேவர், பீஷ்மர்,பலி,அமூரத்தரயன், திலீபர், சபரி, உதங்கர், சிபி, தேவலர், பிப்பலாதன், சாரஸ்தன், உத்தவர், பராசரர், பூரிஷேணன், விபீஷணன், ஹனுமான், சுகதேவ கோஸ்வாமி, அர்ஜுனன், ஆர்ஷ்டிஷேணன், விதுரர் மற்றும் கருததேவர் முதலானவர்களும் கூட பகவானின் சக்திகளை அறிந்துள்ளனர்.

பதம் 2.7.46
தே வை விதந்தி அதிதரந்தி ச தேவ-மாயாம்
ஸ்த்ரீ-சுத்ர-ஹுண-சபரா அபி பாப-ஜீவா:
யதி அத்புத-க்ரம-பராயண-சுல-சிக்ஷாஸ்
திர்யக்-ஜனா அபி கிம் உ ஸ்ருத-தாரணா யே

தே-அத்தகையவர்கள்; வை- சந்தேகத்திற்கு இடமின்றி ; விதந்தி— அறிவர்; அதிதரந்தி—கடந்து விடுகின்றனர்; ச- தவிரவும்;தேவ மாயாம்-பகவானின் மறைக்கும் சக்தி ; ஸ்தீரீ-பெண்களைப் போன்றோர்; சூத்ர- தொழிலாளர் பிரிவினர்; ஹுண—மலைவாசிகள்; சபரா- சபரர்கள், அல்லது சூத்திரர்களை விட கீழ்ப்பட்டவர்கள்; அபி-ஆயினும்; பாப ஜீவா-பாவிகளான ஜீவராசிகள்; யதி- நிபந்தனையின் பேரில்; அத்புத்-க்ரம- அற்புதமான செயல்ணீளைச் செய்தவன்; பராயண—பக்தர்களாக இருப்பவர்கள்; சீல-நடத்தை; சிக்ஷா-அவர்களால் பயிற்றுவிக்கப்பட்டு; திர்யக்- ஜனா-மனிதர்களாய் இல்லாதவர்களும் கூட; அபி-தவிரவும்; கிம்- என்ன; உ-என்று பேசுவது; ஸ்ருத-தாரணா- பகவானைப் பற்றி கேள்விப்பட்டதனால் அவரைப் பற்றிய கருத்தை ஏற்றுக் கொண்டவர்கள்; யே-அவர்கள்.

பெண்கள், தொழிலாளர் பிரிவினர், மலைவாசிகள், மற்றும் சைபீரியா வாசிகளைப் போன்ற பாவ வாழ்வை மேற்கொண்டுள்ளவர்களும், மற்றும் பறவைகளும், மிருகங்களும் கூட, சரணாகதியடைந்த ஆத்மாக்களாக இருந்தால், பகவானின் தூய பக்தர்களிடம் சரணடைவதாலும், அவர்களுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றி பக்தித் தொண்டில் ஈடுபடுவதாலும், பகவத் விஞ்ஞானத்தை அறிந்து, மாயா சக்தியின் பிடியிலிருந்து விடுபட்டு முக்தியடைய முடியும்.

பதம் 2.7.47
சஸ்வத் ப்ரஸாந்தம் அபயம் ப்ரதிபோத-மாத்ரம்
சுத்தம் ஸமம் ஸத்-அஸத: பரமாத்ம-தத்வம்
சப்தோ ந யத்ர புரு-காரகவான் க்ரியார்தோ
மாயா பரைதி அபிமுகே ச விலஜ்ஜமானா
தத் வை பதம் பகவத: பரமஸ்ய பும்ஸோ
ப்ரஹ்மேதி யத் வி துர் அஜஸ்ர-சுகம் விசோகம்

சஸ்வத்–நித்தியம்; ப்ரசாந்தம்—தொல்லை இல்லாமல்: அபயம்– பயமில்லாமல்; ப்ரதிபோத-மாத்ரம்-ஜடப் பாகத்துக்கு எதிரான ஒருணர்வு; சுத்தம்-பரிசுத்தமான; ஸமம்- காரண, விளைவுகளின்; பரமாத்ம தத்வம்- மூல காரணத்தின் அடிப்படையான உண்மை;- சப்த -கற்பனையான ஓசை: ந இல்லை; யத்ர- எங்கிருக்கிறதோ அங்கு; புரு காரகவான்-பலன் கருதும் செயல்களில் முடிவடையும்; க்ரியா—அர்த:—யாகத்தின் விஷயத்திற்காக; மாயா-மாயை; பரைதி—தூரமாகப் பறந்து விடுகிறது; அபிமுகே-முன்னிலையில்; ச—அன்றியும்; விலஜ்ஜமானா—அதனால் வெட்கமடைந்து; தத்—அது ; வை—நிச்சயமாக; பதம்—இறுதி கட்டம்; பகவத:-முழுமுதற் கடவுளின்; பரமஸ்ய – பரமனின்; பும்ஸ: நபரின்: ப்ரஹ்ம-பரிபூரணமானவர்; இதி—இவ்வாறாக யத்—எது; விது:-என்றறியப்படும்; அஜஸ்ர—எல்லையற்ற; ஸுகம்—ஆனந்தம்; விசோகம்-விசனமற்ற.

பரபிரம்மம் என்று உணரப்படுகிறது, துன்பமில்லாத பரம் நிலை அளவற்ற ஆனந்தத்தை பூரணமாகக் கொண்டதாகும். இது, பரம அனுபவிப்பாளரான, முழுமுதற் கடவுளின் முடிவான நிலை என்பதில் சந்தேகமில்லை. அவர் எல்லாத் தொல்லைகளிலிருந்தும், பயத்திலிருந்தும் நித்தியமாக விடுபட்டவரும், பரிபூரண உணர்வுடையவரும், பரிசுத்தமானவரும், சமநிலையுடையவருமாவார். எல்லாக் காரண, விளைவுகளுக்கும் மூல காரணமான அவருக்குள் பலன் நோக்குக் கருமங்களுக்கான யாகமுமில்லை, அவருக்குள் மாயா சக்தி நிற்பதுமில்லை.

பதம் 2.7.48
ஸத்ருயன் நியம்ப யதயோ யம-கர்த-ஹேதிம்
ஜஹ்யு: ஸ்வராட் இவ நிபான-கனித்ரம் இந்ர:

ஸ்க்ருயக்- செயற்கையான மனக்கற்பனை அல்லது தியானம்; நியம்ய- அடக்கும்; யதய:-யோகிகள்: யம கர்த ஹேதிம்- ஆன்மீகமான பண்பாட்டு முறை: ஜஹ்யு:-கைவிடப்படுகின்றன; ஸ்வராட்- பூரண சுதந்திரம்; இவ—அவ்வாறு; நிபான-கிணறு; கனித்ரம்- தோண்டுவதற்கான சிரமம்; இந்ர:-மழைக்கு அதிபதியான தேவன்.

அத்தகைய உன்னதமான ஒரு நிலையில், யோகிகளாலும் அனுஷ்டிக்கப்படும் செயற்கையான ஞானிகளாலும், மனக் கட்டுப்பாடோ, மனக் கற்பனையோ அல்லது தியானமோ தேவையில்லை. சுவர்க்க ராஜனான இந்திரன் ஒரு கிணற்றைக் தோண்டும் சிரமத்தை கைவிடுவதைப் போல், இத்தகைய முறைகளை ஒருவன் கைவிடுகிறான்.

பதம் 2.7.49
ஸ ஸ்ரேயஸாம் அபி விபுர் பகவான் யதோ ஸ்ய
பாவ-ஸ்வபாவ-விஹிதஸ்ய ஸத: ப்ரஸித்தி:
தேஹே ஸ்வ-தாது-விகமே’னுவிசீர்யமாணே
வ்யோமேவ தத்ர புருஷோ ந விசீர்யதே’ ஜ:

ஸ:- அவர்; ஸ்ரேயஸாம்-சர்வ மங்களம்; அபி- தவிரவும்; விபு-அதிகாரி; பகவான்- முழுமுதற் கடவுள்; யத:-ஏனெனில்; அஸ்ய – ஜீவராசியின்; பாவ- இயல்பான குணங்கள்; ஸ்வ-பாவ-இயல்பான சுபாவம்; விஹிதஸ்ய-செயல்கள்; ஸத:-அனைத்து நற்செயல்கள்; ப்ரஸித்தி:-முடிவான வெற்றி: தேஹே- உடலின்: ஸ்வ- தாது- உருவகப்படுத்தும் மூலப் பொருட்கள்; அனு-பிறகு; விசீர்யமாணே-கைவிட்டு; விகமே- அழிக்கப்பட்டு; வ்யோம்-ஆகாயம்; இவ-போன்று; தத்ர- அதன் காரணமாக; புருஷ:-ஜீவராசி; ந- ஒருபோதுமில்லை; விசீர்யதே-அழிக்கப்படுகிறது; அஜ:-பிறவாத தன்மையின் காரணமாக.

ஜீவராசியின் ஜட அல்லது ஆன்மீகச் செயல்களுக்கு பலன்களை அளிப்பவர். பகவானேயாகையால், அந்த முழுமுதற் கடவுளே மங்களகரமான அனைத்திற்கும் பரம அதிகாரியும், முடிவான நன்மையளிப்பவருமாவார். ஒவ்வொரு தனிப்பட்ட ஜீவராசியும் பிறப்பற்றவனென்பதால் பௌதிக மூலப் பொருட்களைக் கொண்ட உடலின் அழிவுக்கும் பிறகும், உடலினுள் உள்ள காற்றைப் போல், ஜீவராசி அப்படியே இருக்கிறான்.

பதம் 2.7.50
ஸோ ‘யம் தே பிஹிதஸ் தாத பகவான் விஸ்வ-பாவன:
ஸமாஸேன ஹரேர் நான்யத் அன்யஸ்மாத் ஸத்-அஸச் ச யத்

ஸ— அந்த; அயம்- அதே; தே-உன்னிடம்; அபிஹிதா- என்னால் விளக்கப்பட்டு; தாத-எனதருமை மைந்தனே; பகவான்-முழுமுதற் கடவுள்: விஸ்வ-பாவன்:-தோன்றியுள்ள உலகங்களின் சிருஷ்டிக் கர்த்தா; ஸமாஸேன்-சுருக்கமாக; ஹரே:-பகவானாகிய ஹரி இல்லாமல்; ந-ஒருபோதும் இல்லை; அன்யஸ்மாத்—அதன் காரணமாக இருப்பதால்; அன்யத்-வேறெதுவும்; ஸத்-தோற்று விக்கப்பட்ட; அஸத்-தோற்றத்திற்கு வராத; ச-மேலும்; யத்- என்ன இருந்தாலும்.

அருமைப் புதல்வனே, தோன்றியுள்ள உலகங்களையெல்லாம் படைத்தவர் பகவானேயாவார். அவரைப் பற்றி இப்பொழுது நான் சுருக்கமாக விளக்கினேன். ஹரியை அல்லது பகவானைத் தவிர தோற்றுவிக்கப்பட்ட மற்றும் தோற்றுவிக்கப்படாத வேறெந்த காரணங்களும் இல்லை.

பதம் 2.7.51
இதம் பாகவதம் நாம யன் மே பகவதோதிதம்
ஸங்ரஹோ ‘யம் விபூதீனாம் த்வம் ஏதத் விபுலீ குரு

இதம் — இந்த; பாகவதம்-பகவத் விஞ்ஞானம்; நாம-பெயரின்; யத்—எதுவொன்று; உதிதம்—போதித்தார்; மே- என்னிடம்; ஸங்ரஹ:-அவரது சேமிப்பு; பகவதா- பரமபுருஷரால்; அயம்- அவருடைய; விபூதீனாம்—பலவிதமான சக்திகளின்; த்வம்—நீ; ஏத்த-இந்த பகவத் விஞ்ஞானத்தை; விபுலீ-பெருகச் செய்; குரு—அதைச் செய்.

ஓ நாரதா, பகவத் விஞ்ஞானமாகிய இந்த ஸ்ரீமத் பாகவதம், பரமபுருஷ பகவானால் என்னிடம் சுருக்கமாக பேசப்பட்டது. மேலும் இது அவரது பலவிதமான சக்திகளின் சேர்க்கைகயைப் பற்றியதாகும். தயவு செய்து நீயே இவ்விஞ்ஞானத்தை விரவாகக் கூறு.

பதம் 2.7.52
யதா ஹரௌ பகவதி ந்ருணாம் பக்திர் பவிஷ்யதி
ஸர்வாத்மனி அகிலாதாரே இதி ஸங்கல்ப்ய வர்ணய

யதா—எவ்வளவுக்கெவ்வளவு; ஹரௌ – முழுமுதற் கடவுளிடம்; பகவதி- பகவானிடம்; ந்ரூணாம் – மனிதர்களுக்கு; பக்தி:- பக்தித் தொண்டு; பவிஷ்யதி—ஞானம் பெறுவர்; ஸர்வ-ஆத்மனி- பரிபூரண முழுமை; அகில—ஆதாரே புருஷர்; இதி-இவ்வாறாக; ஸங்கல்பய- திடமான நோக்கத்தின் மூலமாக; வர்ணய—விளக்கிக் கூறு.

தயவு செய்து உறுதியுடனும், முழுமுதற் கடவுளான ஹரியிடம் உன்னதமான பக்தித்தொண்டை மனிதர்கள் விருத்தி செய்து கொள்வதற்குச் சாத்தியாமான முறையிலும் இந்த பகவத் விஞ்ஞானத்தை விளக்கிக் கூறுவாயாக. பகவான் ஹரியே அனைத்து ஜீவராசிகளிலும் பரமாத்மாவாகவும், அனைத்து சக்திகளுக்கும் மூல பிறப்பிடமாகவும் இருக்கிறார்.

பதம் 2.7.53
மாயாம் வர்ணாயதோ ‘முஷ்ய ஈஸ்வரஸ்யானுமோதத:
ஸ்ருண்வத:ஸ்ரத்தயா நித்யம் மாயயாத்மா ந முஹ்யதி

மாயாம்–பகிரங்க சக்தியின் விவகாரங்களை; விவரிக்கும் பொழுது; அமுஷ்ய-பகவானின்; வர்ணயத: ஈஸ்வரஸ்ய பகவானின்; அனுமோதத:-இவ்வாறு மதிப்பிட்டு; ஸ்ருண்வத: இவ்வாறு செவியுற்று; ஸ்ரத்தயா—பக்தியுடன்; நித்யம்- காலந் தவறாமல்; மாயயா -மாயா சக்தியால்; ஆத்மா—ஜீவராசி; ந- ஒரு போதுமில்லை; முஹ்யதி-மாயைக்கு உட்படுகின்றது.

பகவான் தமது செயல்களை, அவரது வெவ்வேறு சக்திகளைக் கொண்டு ஆற்றும் போதனைகளுக்கு ஏற்பவே விவரிக்கவும், பாராட்டவும், கேட்கவும் வேண்டும். இது பக்தியுடனும், மரியாதையுடனும் செய்யப்படுமானால், ஒருவன் பகவானின் மாயச் சக்தியிலிருந்து விடுபடுவது நிச்சயம்.


ஸ்ரீமத் பாகவதம், இரண்டாம் காண்டத்தின், “குறித்த காலத்தில் தோன்றும் அவதாரங்களும், அவர்களின் குறிப்பிட்ட கடமைகளும்” எனும் தலைப்பைக் கொண்ட ஏழாம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றது.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare