அத்தியாயம் – 7
அவதாரங்களும், அவர்களின் குறிப்பிட்ட கடமைகளும்
பதம் 2.7.1 : பிரம்மதேவர் கூறினார்: அளவற்ற சக்தி படைத்தவரான பலவான், கர்போதகம் என்றழைக்கப்படும், மகா சமுத்திரத்திற்குள் மூழ்கடிக்கப்பட்ட பூமியை மேலே தூக்குவதற்காகவும், லீலை புரிவதற்காகவும் காட்டுப் பன்றியின் உருவத்தை மேற்கொண்டார்.
பதம் 2.7.2 : பிரஜாபதி, தமது மனைவியான ஆகூதியின் மூலமாக முதலில் சுயக்ஞனை மகனாகப் பெற்றார், பிறகு சுயக்ஞன்,சுயமனை தலைமையாகக் கொண்ட தேவர்களை, தமது தட்சிணையின் மூலமாகப் பெற்றெடுத்தார். இந்திர மனைவியான தேவனான சுயக்ஞன், மூன்று கிரக அமைப்புக்களிலும் (மேல், கீழ் மற்றும் மத்திய) உள்ள பெருந்துன்பங்களைக் குறைந்தார். இதனால் பிற்காலத்தில் அவர், சீரிய மனிதகுலத் தந்தையான சுயம்புவ மனுவால் “ஹரி” என்றழைக்கப்பட்டார்.
பதம் 2.7.3 : பகவான் பிறகு கபில அவதாரமாகத் தோன்றினார். அவர் பிரஜாபதி பிராமணரான கர்தமருக்கும், அவரது மனைவியான தேவஹுதிக்கும் மகனாகப் பிறந்தார். அவரோடு ஒன்பது பெண்கள் ( சகோதரிகள்) பிறந்தனர் தம் தாயாரிடம் அவர் ஆத்ம ஞானத்தைப் பற்றி பேசினார். இதனால், அப்பிறவியிலேயே, அவள் ஜடக் குணங்களின் களங்கத்திலிருந்து முற்றிலும் தூய்மையடைந்து, கபில மார்கம் எனப்படும் முக்தியை அடைந்தாள்.
பதம் 2.7.4 : மகா முனிவரான அத்ரி குழந்தைப் பேறுக்காக பிரார்த்தனை செய்தார். அவரிடம் திருப்தியடைந்த பகவான், தத்தாத்ரேயர் என்ற நாமத்துடன், அத்ரியின் மகனாக அவதரிக்கப் போவதாக வாக்களித்தார். மேலும் பகவானுடைய தாமரைப் பாதங்களின் கருணையால், பல யதுக்கள் மற்றும் ஹைஹயர்கள் முதலானவர்கள் மிகவும் தூய்மையடைந்து, ஜட மற்றும் ஆன்மீக வரங்களைப் பெற்றனர்.
பதம் 2.7.5 : வெவ்வேறு கிரக அமைப்புக்களை சிருஷ்டிப்பதற்காக நான் தவங்களையும், விரதங்களையும் மேற்கொள்ள வேண்டியிருந்தது. இதனால் திருப்தியடைந்த பகவான் நான்கு சனகாதி முனிவர்களாக (சனகர், சனத்குமாரர் சனந்தனர் மற்றும் ஸனாதனா) அவதரித்தார். முந்தைய சிருஷ்டியில் ஆன்ம ஞானம் அழிக்கப்பட்டது. ஆனால் நான்கு குமாரர்கள் அதை மிகத் தெளிவாக விளிக்கிக் கூறியதால் முனிவர்களுக்கு உண்மை தெளிவாகப் புலப்படுவதாயிற்று.
பதம் 2.7.6 : அவரது சொந்த தவ, விரதங்களின் முறையைக் காட்டுவதற்காக, நாராயணர், தரன் எனும் இரட்டை ரூபங்களில் அவர் தோன்றினார். அவர் தட்சனின் மகளும், தர்மனின் மனைவியுமான மூர்த்தியின் கருப்பையில் தோன்றினார். மன்மதனின் தோழிகளான சுவர்க்கலோக சுந்தரிகள், அங்கு சென்று அவரது தவத்தை உடைக்கமுயன்று தோல்வியடைந்தனர். ஏனெனில் முழுமுதற் கடவுளான அவரிடமிருந்து தங்களைப் போன்ற பல சுத்தரிகள் வெளியாகிக் கொண்டு இருப்பதை அவர்கள் கண்டனர்.
பதம் 2.7.7 : சிவ பெருமானைப் போன்ற பராக்கிரமசாலிகள் தங்களின் கோபப்பார்வையால் காமத்தை வென்று அதை முறியடித்துள்ளனர். இருப்பினும் கட்டுப்படுத்த முடியாத கோப விளைவுகளிலிருந்து அவர்களால் விடுபட முடியவில்லை. இத்தகைய கோபத்திற்கு பகவானின் இதயத்தில் இடமில்லை. அவர் இவற்றுக்கெல்லாம் மேற் பட்டவராவார். எனவே அவரது மனதில் காமம் எவ்வாறு உறைவிடம் கொள்ளும்?
பதம் 2.7.8 : துருவன், ஒரு சிறுவனாக இருந்தும், தன் தந்தையான அரசரின் இரண்டாவது மனைவியால் கடுஞ்சொற்களால் அவமானப்படுத்தப் பட்டதால், காட்டில் கடுந்தவத்தை மேற்கொண்டார். அவருடைய பிரார்த்தனையில் திருப்தியடைந்த பகவான், பெரும்முனிவர்களால் வழிபாடு செய்யப்பட்டுவரும் துருவ லோகத்தை அவருக்களித்தார்.
பதம் 2.7.9 : வேன மகாராஜன் தர்மத்தின் பாதையிலிருந்து விலகிச் சென்றான். பிராமணர்களும் வஜ்ர சாபத்தின் மூலமாக அவனைத் தண்டித்தனர். இதனால் வேன மகராஜன் அவனது நற்கருமங்களுடனும், ஐசுவரியத்துடனும் எரிக்கப்பட்டு, நரகத்திற்கு அனுப்பப்பட்டான். பகவான் தமது அசாதாரணமான கருணையால், அவனுடைய மகனாக, பிரூது என்ற பெயருடன் வந்தவதரித்து, சாபத்துக்குள்ளான வேன மகாராஜனை நரகத்திலிருந்து விடுவித்தார். மேலும் விவசாயத்திற்காக அவர் பூமியை நன்கு பயன்படுத்திக் கொண்டார்.
பதம் 2.7.10 : நாபிராஜனின் மனைவியான சுதேவியின் மகனாகத் தோன்றிய பகவான் ரிஷபதேவர் என்றறியப்பட்டார். மனதை சமநிலைப்படுத்துவதற்காக அவர் பௌதிகமான யோக முறையை மேற்கொண்டார். இந்நிலையும் கூட முக்தியின் பூரணத்துவ நிலையென ஏற்றுக் கொள்ளப்படுகிறது. இந்நிலையில் ஒருவர் தமக்குள் நிலைபெற்று, பூரண திருப்தியடைகிறார்.
பதம் 2.7.11 : என்னால் (பிரம்மா) இயற்றப்பட்ட ஒரு யாகத்தில், பகவான் ஹயக்கிரீவ அவர் அவதாரமாகத் தோன்றினார். யாக பொன்னிற மேனியுடையவரும், வேத சொரூபியான சொரூபியும், தேவர்களுக்கெல்லாம் பரமாத்மாவுமாவார். அவர் சுவாசித்தபொழுது, வேத மந்திரங்களின் இனிமையான ஓசைகளனைத்தும் அவரது நாசித் துவாரங்களிலிருந்து வெளிவந்தன.
பதம் 2.7.12 : யுகத்தின் முடிவில், வைவஸ்வத மனுவாக வரப்போகும் சத்ய விரதன் என்பவர், மச்சாவதாரத்தை ஏற்றுள்ள பகவானே, மண்ணுலகங்கள் வரையுள்ளன எல்லா ஜீவராசிகளுக்கும் புகலிடமாவார் என்பதைக் காண்பார். யுகத்தின் முடிவில் உண்டாகும் பரந்த பிரளய நீரல் எனக்கேற்படும் பயத்தினால், எனது (பிரம்மாவின்) வாயிலிருந்து வேதங்கள் வெளிவருகின்றன. அப்பரந்த நீரை பகவான் அனுப்விப்பதோடு, வேதங்களையும் பாதுகாக்கிறார்.
பதம் 2.7.13 : ஆதிபுருஷர் பிறகு, மத்தாக இயங்கிக் கொண்டிருந்த மந்தார மலைக்கு சுழலச்சாக இருந்து செயற்படுவதற்காக, ஆமை அவதாரத்தை மேற்கொண்டார். தேவர்களும், அசுரர்களும் அமிர்தத்தை பிரித்தெடுப்பதற்காக மந்தார மலையைப் பாவித்து பாற்கடலைக் கடைந்தனர். மலை முன்னும், பின்னுமாக அசைந்து ஆமையின் முதுகை வருடியது. அப்பொழுது அரைத்தூக்கத்திலிருந்த அவர் ஓர் அரிப்புணர்வை அனுபவித்தார்.
பதம் 2.7.14 : தேவர்களின் பெரும் பயத்தைப் போக்குவதற்காக முழுமுதற் கடவுள், நரசிம்ஹ அவதாரத்தை ஏற்றார். அசுரர்களின் (ஹிரண்யகசிபு ) தன் கையில் ஒரு கதாயுதத்துடன் பகவானை எதிர்த்த அரசன் பொழுது, அவனைத் தமது தொடைமீது கிடத்தி, தமது நகங்களால் பகவான் அவனை கிழித்துக் கொன்றார். அச்சமயம் பகவான் தமது கண்ணிமைகளை கோபத்துடன் உருட்டி, அவரது பயங்கரமான பற்களையும், வாயையும் காட்டியருளினார்.
பதம் 2.7.15 : அதிக பலம் வாய்ந்த முதலையொன்று, ஆற்றில் தன் காலை கவ்விக் கொண்டதால், யானைகளின் தலைவன், பெருந்துன்பத்திற்குள்ளானது. அது தன் தும்பிக்கையில் ஒரு தாமரைப் பூவை பற்றியெடுத்துக் கொண்டு பகவானிடம் பின்வருமாறு கூறியது: “அனைத்தையும் அனுபவிப்பவரான ஆதி புருஷரே, லோகநாயகரே, முக்தியளிப்பவரே, ஒரு புண்ணிய தீர்த்தத்தைப் போன்ற புகழுடையவரே, பாடிப் பரவுவதற்கு யோக்கியதை உடையதான தங்களது புனித நாமத்தைக் கேட்பதாலேயே அனைவரும் தூய்மையடைகின்றனர்.”
பதம் 2.7.16 : யானையின் வாக்கு மூலத்தைக் கேட்ட பரமபுருஷர், அதற்குத் தமது உதவி உடனடியாக தேவைப்படுகிறது என்பதை உணர்ந்து, தமது சக்கரத்தை ஏந்தி, ஆயுதபாணியாய், பறவைகளின் ராஜனாகிய கருடனின் இறக்கைகளின் மேல் அமர்ந்தபடி உடனே அவ்விடத்தில் தோன்றினார். பிறகு முதலையின் வாயை சக்கரத்தால் பல கூறுகளாக வெட்டித் தள்ளிய பகவான் யானையின் தும்பிக்கையை பற்றித்தூக்கி, அதைக் காப்பாற்றினார்.
பதம் 2.7.17 : பௌதிக குணங்களுக்கெல்லாம் மேற்பட்டவரான பகவான், அதிதியின் இளைய மகனாகத் தோன்றிய போதிலும், ஆதித்தியர்கள் எனப்படும் அதிதி புத்திரர்களின் நற்குணங்களையெல்லாம் அவர் மிஞ்சியவராக இருந்தார். பிரபஞ்சத்திலுள்ள எல்லா கிரகங்களையும் முக்குணங்களையும் அவர் கடந்தவராக இருப்பதால், அவரே பரமபுருஷ பகவானாவார். மூன்றடி நிலத்தை யாசிக்கும் பாவனையில், பலி மகாராஜனின் எல்லா நிலங்களையும் அவர் எடுத்துக்கொண்டார். ஒருவருக்கு உரிமையான உடைமையை யாசித்துப் பெறாமல், அதை எடுத்துக்கொள்ள எந்த அதிகாரிக்கும் உரிமையில்லை என்ற காரணத்தால் மட்டுமே அவர் அவ்வாறு யாசித்தார்.
பதம் 2.7.18 : பகவானின் தாமரைப் பாதங்களைக் கழுவிய நீரைத் தம் தலை மீது தெளித்துக் கொண்ட பலி மகாராஜன், தமது ஆன்மீக குருவால் தடை விதிக்கப்பட்டிருந்தும், தமது வாக்குறுதியைத் தவிர வேறெதையும் நினைக்கவில்லை. பகவானின் மூன்றாவது அடிக்காக அவர் தமது சொந்த உடலையே அர்ப்பணித்தார். இத்தகைய சிறப்புவாய்ந்த அரசனுக்கு, தமது வலிமையால் கைப்பற்றிய சுவர்க்கலோக இராஜ்யமும் கூட மதிப்புடையதாகத் தெரியவில்லை.
பதம் 2.7.19 : நாரத, பரமபுருஷர் ஹம்ஸாவதாரமாகத் தோன்றி, பகவத் விஞ்ஞானத்தையும், அவரது உன்னத அன்புத் தொண்டையும் உனக்கு தெளிவாகப் போதித்தார். உனது பக்தித் தொண்டின் ஆழத்தைக்கண்டு அவர் பெரிதும் திருப்தியடைந்தார். முழுமுதற் கடவுளான பகவான் வாசுதேவனிடம் சரணாகதியடைந்துள்ள ஆத்மாக்களால் இவ்விஞ்ஞானம் நன்கு அறிந்துணரப்படுகிறது.
பதம் 2.7.20 : மனுவின் அவதாரத்தில், பகவான் மனு வம்சத்தினரின் சந்ததியாகத் தோன்றினார். அவர் துஷ்ட அரசர்களை, தமது சக்தி வாய்ந்த சக்கராயுத்ததினால் அடக்கியாண்டார். அவரது ஆட்சி, எதிர்ப்பற்றதாகவும், பெரும் புகழுக்குரியதாகவும் இருந்தது. அவரது புகழ் மூன்று லோகங்களிலும் பரவியதுடன், அவற்றிற்கும் மேற்பட்ட சத்யலோக கிரக அமைப்பிலும் பரவியது. இக்கிரக அமைப்பு, பிரபஞ்சத்தில் மிகவும் உயர்ந்த நிலையில் இருப்பதாகும்.
பதம் 2.7.21 : தன்வந்தரியின் அவதாரத்தை ஏற்ற பகவான், எப்பொழுதும் நோய் வாய்பட்டுக் கிடக்கும் ஜீவராசிகளைத் தமது புகழ்பெற்ற இந்த அவதாரத்தின் மூலமாக வெகு விரைவாக குணப்படுத்தி விடுகிறார். அவரால்தான் தேவர்கள் நீண்ட ஆயுளைப் பெறுகின்றனர்: இவ்வாறு நித்தியமாக புகழப்படுபவரான பகவான், யாகங்களிலும் தமக்குரிய பாகத்தைப் பெற்றார். மருத்துவ விஞ்ஞானத்தை அல்லது மருந்தைப் பற்றிய அறிவை பிரபஞ்சத்தில் ஆரம்பித்து வைத்தவரும் அவரே.
பதம் 2.7.22 : க்ஷத்ரியர்கள் என்று அழைக்கப்படும் ஆட்சி புரியும் நிர்வாகிகள் நரகத்தில் துன்பத்தை அனுபவிக்க விரும்பி பகவானை அடையும் பாதையிலிருந்து வழிதவறிச் சென்றனர். அப்போது பகவான் பரசுராம ரிஷியாகத் தோன்றி, பூமியில் முட்களாகக் காணப்பட்ட தேவையில்லாத அரசர்களை அழித்தார். இவ்வாறு கூர்மையான தமது கோடரியால் க்ஷத்ரியர்களை அவர் மூவேழு தடவைகள் வேருடன் அழித்தார்.
பதம் 2.7.23 : பகவான், பிரபஞ்சத்திலுள்ள ஜீவராசிகளிடமுள்ள அகாரணமான கருணையால், தமது அம்சங்களுடன் இக்ஷ்வாகு மகாராஜனின் வம்சத்தில் தோன்றினார். தமது அந்தரங்க சக்தியான சீதையின் பதியாகத் தோன்றிய அவர் தந்தை தசரத மகாராஜனின் ஆணைக்குக் கீழ்படிந்து, மனைவியுடனும், தம்பியுடனும் வனம் புகுந்து, பல ஆண்டுகள் அங்கு வாழ்ந்து வந்தார். பெரும் பௌதிக சக்தி படைத்தவனான பத்துத்தலை ராவணன் பகவானுக்கெதிராக மிகப் பெரிய குற்றத்தைச் செய்ததால், முடிவில் கொல்லப்பட்டான்.
பதம் 2.7.24 : தூரத்திலுள்ள தமது அந்தரங்க தோழியின் (சீதா) பிரிவால் துயருற்ற பகவான் ராமச்சந்திரர், (சுவர்க்கலோக இராஜ்யத்தை எரித்து விட விரும்பிய) ஹரனுடையதைப் போன்ற, சிவந்த கண்களுடன், ராவணனின் நகரத்தின் மீது பார்வையைச் செலுத்தினார். மகா சமுத்திர வாசிகளான சுறா மீன்கள், பாம்புகள் மற்றும் முதலைகளைப் போன்ற நீர்வாழ்வன, பகவானின் கோபமான பழுத்துச்சிவந்த கண்களின் உஷ்ணத்தால் எரிக்கப்பட்டன. இதனால் பயம் கொண்டு நடுங்கிய மகா சமுத்திரம் அவருக்கு வழி விட்டது.
பதம் 2.7.25 : ராவணன் போரில் ஈடுபட்டிருந்தபொழுது, சுவர்க்க ராஜனான இந்திரனை தூக்கிச்சென்ற யானையின் தும்பிக்கை, ராவணனின் மார்போடு மோதி சின்னாபின்னமாக உடைந்தது. இவ்வாறு உடைந்து சிதறிய பாகங்கள் எல்லா திசைகளையும் பிரகாசமாக்கின. எனவே ராவணன் தனது வீரத்தில் கர்வம் கொண்டு, தன்னை எல்லா திசைகளையும் கைப்பற்றுபவன் என்றெண்ணி போர் புரியும் வீரர்களின் மத்தியில் சுற்றித் திரிய ஆரம்பித்தான். சந்தோஷத்தால் ஆட்கொள்ளப்பட்ட அவனது சிரிப்புடன், முழுமுதற் கடவுளான ராமச்சந்திரருடைய வில்லோசையும் சேர்ந்து கேட்டது. ஆனால் இந்த ஒசைகள் நின்றபொழுது, ராவணனின் மூச்சுக் காற்றும் நின்றது.
பதம் 2.7.26 : நாத்திகர்களான அரசர்களின் போர் பலத்தால் உலகம் அதிக சுமையேற்றப்படும் பொழுது, உலகின் துன்பத்தை குறைப்பதற்காக பகவான் தமது விரிவங்கத்துடனும் அவதரிக்கிறார். இப்படி அவதரிக்கும் பகவான் கருமையான அழகிய கேசத்துடன் கூடிய தமது சுய உருவில் வருகிறார். மேலும் அவரது உன்னதமான பெருமைகளை பரப்புவதற்காக, அவர் அசாதாரணமான முறையில் செயல்படுகிறார். அவர் எவ்வளவு பெருமை வாய்ந்தவர் என்பதை ஒருவராலும் மதிப்பிட முடியாது.
பதம் 2.7.27 : பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்தான் பரமபுருஷர் என்பதில் ஐயமில்லை, இல்லையெனில் அவர், தமது தாயாரின் மடியில், மூன்று மாதங்களே நிரம்பியவராக இருக்கும்பொழுது தமது பாதத்தால் ஒரு வண்டியைக் கவிழ்ப்பதும், தவழ்ந்து செல்லும் குழந்தையாக இருக்கும்பொழுது, ஆகாயத்த்தை தொடும் அளவிற்கு உயரமாக வளர்ந்திருந்த இரு அர்ஜுன மரங்களை வேருடன் பிடுங்கி எறிவதும் எப்படி சாத்தியமாகும்? பகவானைத் தவிர வேறெவராலும் இத்தகைய செயல்களைச் செய்வது சாத்தியமல்லை.
பதம் 2.7.28 : மேலும் இடைச் சிறுவர்களும், அவர்களது மிருகங்களும் யமுனை நதியின் விஷம் தோய்ந்த நீரைப் பருகிய பொழுது, தமது கருணைமிகுந்த பார்வையால் (தமது பிள்ளைப் பிராயத்தில்) பகவான் அவர்களை உயிர்ப்பித்தார். பிறகு யமுனா நதியின் நீரை தூய்மைப்படுத்துவதற்காக விளையாட்டாக அதற்குள் குதித்து, விஷத்தைக் கக்கிக்கொண்டு அங்கு பதுங்கியிருந்த காளிய நாகத்தை அவர் தண்டித்தார். பரமபுருஷரைத் தவிர வேறெவரால் இத்தகைய வீர பராக்கிரமங்களைச் செய்ய முடியும்?
பதம் 2.7.29 : பகவான் காளிய நாகத்தைத் தண்டித்த அன்றிரவில், விரஜபூமி வாசிகள் கவலையின்றி உறங்கிக் கொண்டிருக்கும்பொழுது, உலர்ந்த இலைகளின் காரணமாக காட்டில் தீ பற்றிக் கொண்டது. இதனால் விரஜவாசிகளனைவரும் உறுதியாக மரணத்தை சந்திக்கப் போகிறார்கள் என்று தோன்றியது. ஆனால் பகவான், பலராமருடன், தமது கண்களை மூடிக் கொண்டதன் மூலமாக அவர்களைக் காப்பாற்றினார். பகவானின் உன்னதமான லீலைகள் இத்தகையவையாகும்.
பதம் 2.7.30 : இடையர் குலப் பெண் (கிருஷ்ணரின் வளர்ப்புத் தாய், யசோதை) தமது மைந்தனின் கரங்களைக் கயிறுகளால் கட்ட முயன்றபொழுது, கயிற்றின் நீளம் எப்பொழுதும் போதாததாகவே இருந்ததைக் கண்டாள், இறுதியாக அவள் தம் முயற்சியைக் கைவிட்ட பொழுது, பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் உடனே தமது வாயைத் திறந்தார். அதற்குள் எல்லாப் பிரபஞ்சங்களும் அமைந்திருப்பதைக் கண்டு அவளது மனதில் வேறு வகையாகப் புரிந்து கொண்டாள்.
பதம் 2.7.31 : பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், தமது வளர்ப்புத் தந்தையான நந்த மகாராஜனை வருண தேவனின் பயத்திலிருந்து காப்பாற்றினார். மேலும் மயனின் மகனால் மலைக் குகைகளில் அடைத்து வைக்கப்பட்ட இடைச்சிறுவர்களையும் விடுவித்தார். மேலும், பிருந்தாவன வாசிகள் பகல் நேரத்தில் கடுமையாக உழைத்ததால் இரவில் ஆழ்ந்து உறங்கினர். பகல் நேரத்தில் அவர்கள் கடுமையாக உழைத்ததால், ஆன்மீக வானிலுள்ள மிகவுயர்ந்த கிரகத்திற்கு உயர்த்தப்படும் சன்மானத்தை பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அவர்களுக்கு அளித்தார். உன்னதமான இச்செயல்கள், அவர் கடவுள்தான் என்பதை சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கின்றன.
பதம் 2.7.32 : பிருந்தாவனத்து இடையர்கள், கிருஷ்ணரின் யோசனைப்படி, சுவர்க்க ராஜனான இந்திரனுக்கு யாகமியற்றுவதை நிறுத்தினர். இதனால் விரஜபூமி எனப்படும் நிலம் முழுவதும் ஏழு நாட்களாக தொடர்ந்து பெய்த கடும் மழையால் அடித்துக்கொண்டு போய்விடக்கூடிய அபாயம் ஏற்பட்டது. அப்பொழுது பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், ஏழு வயதே நிரம்பியவராக இருப்பினும், தமது தனிப்பெருங்கருணையினால், கோவர்தனம் எனப்படும் மலையை ஒரே கரத்தால் மேலே தூக்கிப் பிடித்தார். நீரின் பலமான தாக்குதலிருத்து மிருகங்களைக் காப்பாற்றுவதற்காகவே இதை அவர் செய்தார்.
பதம் 2.7.33 : பகவான், தமது ராஸ-லீலையில், இனிய பாடல்களால் பிருந்தாவன வாசிகளுடைய மனைவியரின் பாலுறவு ஆசைகளைத் தூண்டுவதில் ஈடுபட்டிருந்தார். அப்பொழுது சுவர்க்கத்தின் பொருளாளருடைய (குபேரன்) ஆளான, சங்கசூடன் என்ற அசுரன் அந்த இள நங்கைகளைக் கடத்திச் சென்றான். இதனால் பகவான் அவனுடைய தலையைத் துண்டித்தார்.
பதங்கள் 2.7.34 – 2.7.35 : அசுர குணம் படைத்தவர்களான பிரலம்பன், தேனுகன், பகன், கேசீ, அரிஷ்டன், சாணூரன், முஷ்டிகன், குவலயபீட யானை, கம்சன், யவனன், நாகாசுரன் மற்றும் பௌண்ட்ரகன் ஆகியோரும், பெருந் தளபதிகளான சால்வன், துவிவத குரங்கு மற்றும் பல்வலன் ஆகியோரும், தந்தவக்ரன், ஏழு எருதுகள், சம்பரன், விதூரதன் மற்றும் ருக்மீ ஆகியோரும், அதைப்போலவே காம்போஜன், மத்ஸ்யன், குரு, சிருஞ்சயன் மற்றும் கேகயன் போன்ற பெரும் போர் வீரர்களும், பகவான் ஸ்ரீ ஹரியுடன் நேரடியாகவோ அல்லது அவரது சார்பாக உள்ள பலதேவர், அர்ஜுனன் மற்றும் பீமனைப் போன்றோருடனோ பெரும் பலத்துடன் போர் புரிவார்கள். இவ்வாறு கொல்லப்படும் அசுரர்கள் அருவமான பிரம்மஜோதியையோ அல்லது வைகுண்ட லோகத்திலுள்ள, பகவானின் சொந்த வசிப்பிடத்தையோ அடைவார்கள்.
பதம் 2.7.36 : சத்யவதியின் மகனாக (வியாஸதேவர்) பகவான் அவதரித்தார். தாம் தொகுத்த வேத இலக்கியங்கள், குறுகிய ஆயுள் கொண்டவர்களும், புத்தியில் தாழ்ந்தவர்களுமான மனிதர்களுக்கு மிகவும் கடினமாக இருக்கும் என்று அவர் கருதுவார். இதனால் தனிப்பட்டயுகத்தின் சூழ்நிலைகளுக்கேற்ப, வேத அறிவெனும் மரத்தை அவர் வெவ்வேறு கிளைகளாகப் பிரிப்பார்.
பதம் 2.7.37 : நாத்திகர்கள் விஞ்ஞானபூர்வமான வேத அறிவை நன்கு கற்றுணர்ந்த பின், மிகப் பெரும் விஞ்ஞானியான மயனால் சிறந்த முறையில் கட்டப்பட்டு தயாரிக்கப்பட்ட விண்வெளிக் கண்களுக்குப் புலப்படாதவாறு ஆகாயத்தில் கப்பலிலமர்ந்து, பறந்து, வெவ்வேறு பகவான் கிரகவாசிகளை நாசப்படுத்துவார்கள். அப்போது புத்தராகத்தோன்றி, கவர்ச்சியாக உடையுடுத்தி தம்மை அலங்கரித்துக் கொள்வதன் மூலமாக அவர்களின் மனங்களை குழம்பச் செய்து, கீழான சமயக் கொள்கைகளைப் பற்றி பிரச்சாரம் செய்வார்.
பதம் 2.7.38 : அதன் பின், கலியுகத்தின் இறுதியில், மூன்று உயர் பிரிவுகளைச்சேர்ந்த பெயரளவேயான முனிவர்கள் மற்றும் மரியாதைக்குரிய மேன்மக்களின் வசிப்பிடங்களிலும் கூட பகவானைப் பற்றிய விஷயங்கள் பேசப்படாது. அப்பொழுது சூத்திர வகுப்பிலிருந்து அல்லது அவர்களை விடக் கீழான வகுப்பிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் மந்திரிகளின் கைகளுக்கு ஆட்சி மாற்றப்பட்டுவிடும். யாகத்தைப் பற்றிய உள் விவரங்களை யாருமே அறிந்திருக்க மாட்டார்கள். அச்சமயத்தில் பகவான் அனைவரையும் தண்டிக்கும் பரம அதிகாரியாகத் தோன்றுவார்.
பதம் 2.7.39 : படைப்பின் துவக்கத்தில் தவமும், நானும் (பிரம்மா), இனவிருத்தி செய்யும் பெரும் ரிஷிகளான, பிரஜாபதிகளும் இருக்கிறோம்; பிறகு, படைப்பைக் காக்கும் வேளையில், பகவான் விஷ்ணு, ஆளும் சக்திகளைப் பெற்ற தேவர்கள், மற்றும் கிரகங்களின் அரசர்கள் ஆகியோர் உள்ளனர். ஆனால் இறுதியில் அதர்மமும், பிறகு சிவபெருமானும் மற்றும் கோபம் கொண்ட நாத்திகர்கள் போன்றவர்களும் இருக்கின்றனர். இவர்களனைவரும், பரம சக்தி வாய்ந்தவரான பகவானுடைய வெவ்வேறு சக்திகளின் பிரதிநிதிகளாவர்.
பதம் 2.7.40 : விஷ்ணுவின் வீரத்தை யாரால் முழுமையாக விவரிக்க முடியும்? பிரபஞ்சத்தின் அணுக்களனைத்தையும் எண்ணிவிடக் கூடியவனாக இருந்தாலும், அத்தகைய விஞ்ஞானியாலும் அதை செய்ய முடியாது. ஏனெனில், திரிவிக்ரமன் எனும் அவரது ரூபத்தில் தமது பாதத்தை, முயற்சியில்லாமலேயே மிகவுயர்ந்த கிரகமான சத்யலோகத்துக்கும் அப்பால், மூன்று ஜட இயற்கைக் குணங்களின் முடிவு (திரை) வரை பகவான் உயர்த்தினார். இதனால் அனைத்தும் அசைந்தன.
பதம் 2.7.41 : நானோ அல்லது உனக்கு முன் பிறந்த முனிவர்களோ சர்வ வல்லமை படைத்த முழுமுதற் கடவுளை முழுமையாக அறிந்திருக்கவில்லை. எனவே நமக்குப் பின் பிறந்த மற்றவர்களால் அவரைப் பற்றி எதைத் தெரிந்துகொள்ள முடியும்? பகவானின் முதல் அவதாரமான சேஷனுக்கு ஆயிரம் முகங்களுள்ளன. பகவானின் இத்தனை முகங்களுடன் சேஷன் விவரித்துக் கொண்டிருந்தாலும், அக்குணங்களைப் பற்றிய அறிவின் எல்லையை அவராலேயே அடைய முடியவில்லை.
பதம் 2.7.42 : ஆனால் பகவானுடைய தொண்டில் தூய சரணாகதி அடைவதன் மூலம், முழுமுதற் கடவுளான பரமபுருஷரின் விசேஷ அனுக்கிரகத்தைப் பெறுபவரால் கடக்க முடியாத அஞ்ஞானக் கடலைக் கடந்து, பகவானைப் புரிந்து கொள்ள முடியும். ஆனால் இறுதியில் நாய்களாலும், குள்ள நரிகளாலும் புசிக்கப்படும் இவ்வுடலில் பற்றுக் கொண்டிருப்பவர்களால் அதைச் செய்ய முடியாது.
பதங்கள் 2.7.43 – 2.7.45 : சரணடைந்த ஓ நாரத, பகவானின் சக்திகள் அறியப்பட முடியாதவையாகவும், அளவிட முடியாதவையாகவும் இருப்பினும், நாம் ஆத்மாக்களாக இருப்பதால், அவர் எப்படி யோகமாயா சக்திகளின் மூலமாக செயற்படுகிறார் என்பதை அறிவோம். அதைப் போலவே, சர்வ சக்தி படைத்த சிவன், நாத்திக குடும்பத்தில் பிறந்த பிரகலாத மகாராஜன், சுயம்புவ மனு, அவரது மனைவி சதரூபா, அவரது மகன்களும், மகள்களுமான பிரியவிரதன், உத்தானபாதன், ஆகூதி, தேவஹுதி மற்றும் பிரஸூதி போன்றவர்கள், பிராசீனபர்ஹி, ரிபு, வேனின் தந்தையான அங்கன், துருவ மகாராஜன், இக்ஷ்வாகு, ஜலன், முசுகுந்தன், ஜனக மகாராஜன், காதி, ரகு, அம்பரீஷர், சகரன், கயன், நாகுஷன், மாந்தாத், அலர்கன், சததன்வே, அனு, ரந்திதேவர், பீஷ்மர்,பலி,அமூரத்தரயன், திலீபர், சபரி, உதங்கர், சிபி, தேவலர், பிப்பலாதன், சாரஸ்தன், உத்தவர், பராசரர், பூரிஷேணன், விபீஷணன், ஹனுமான், சுகதேவ கோஸ்வாமி, அர்ஜுனன், ஆர்ஷ்டிஷேணன், விதுரர் மற்றும் கருததேவர் முதலானவர்களும் கூட பகவானின் சக்திகளை அறிந்துள்ளனர்.
பதம் 2.7.46 : பெண்கள், தொழிலாளர் பிரிவினர், மலைவாசிகள், மற்றும் சைபீரியா வாசிகளைப் போன்ற பாவ வாழ்வை மேற்கொண்டுள்ளவர்களும், மற்றும் பறவைகளும், மிருகங்களும் கூட, சரணாகதியடைந்த ஆத்மாக்களாக இருந்தால், பகவானின் தூய பக்தர்களிடம் சரணடைவதாலும், அவர்களுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றி பக்தித் தொண்டில் ஈடுபடுவதாலும், பகவத் விஞ்ஞானத்தை அறிந்து, மாயா சக்தியின் பிடியிலிருந்து விடுபட்டு முக்தியடைய முடியும்.
பதம் 2.7.47 : பரபிரம்மம் என்று உணரப்படுகிறது, துன்பமில்லாத பரம் நிலை அளவற்ற ஆனந்தத்தை பூரணமாகக் கொண்டதாகும். இது, பரம அனுபவிப்பாளரான, முழுமுதற் கடவுளின் முடிவான நிலை என்பதில் சந்தேகமில்லை. அவர் எல்லாத் தொல்லைகளிலிருந்தும், பயத்திலிருந்தும் நித்தியமாக விடுபட்டவரும், பரிபூரண உணர்வுடையவரும், பரிசுத்தமானவரும், சமநிலையுடையவருமாவார். எல்லாக் காரண, விளைவுகளுக்கும் மூல காரணமான அவருக்குள் பலன் நோக்குக் கருமங்களுக்கான யாகமுமில்லை, அவருக்குள் மாயா சக்தி நிற்பதுமில்லை.
பதம் 2.7.48 : அத்தகைய உன்னதமான ஒரு நிலையில், யோகிகளாலும் அனுஷ்டிக்கப்படும் செயற்கையான ஞானிகளாலும், மனக் கட்டுப்பாடோ, மனக் கற்பனையோ அல்லது தியானமோ தேவையில்லை. சுவர்க்க ராஜனான இந்திரன் ஒரு கிணற்றைக் தோண்டும் சிரமத்தை கைவிடுவதைப் போல், இத்தகைய முறைகளை ஒருவன் கைவிடுகிறான்.
பதம் 2.7.49 : ஜீவராசியின் ஜட அல்லது ஆன்மீகச் செயல்களுக்கு பலன்களை அளிப்பவர். பகவானேயாகையால், அந்த முழுமுதற் கடவுளே மங்களகரமான அனைத்திற்கும் பரம அதிகாரியும், முடிவான நன்மையளிப்பவருமாவார். ஒவ்வொரு தனிப்பட்ட ஜீவராசியும் பிறப்பற்றவனென்பதால் பௌதிக மூலப் பொருட்களைக் கொண்ட உடலின் அழிவுக்கும் பிறகும், உடலினுள் உள்ள காற்றைப் போல், ஜீவராசி அப்படியே இருக்கிறான்.
பதம் 2.7.50 : அருமைப் புதல்வனே, தோன்றியுள்ள உலகங்களையெல்லாம் படைத்தவர் பகவானேயாவார். அவரைப் பற்றி இப்பொழுது நான் சுருக்கமாக விளக்கினேன். ஹரியை அல்லது பகவானைத் தவிர தோற்றுவிக்கப்பட்ட மற்றும் தோற்றுவிக்கப்படாத வேறெந்த காரணங்களும் இல்லை.
பதம் 2.7.51 : ஓ நாரதா, பகவத் விஞ்ஞானமாகிய இந்த ஸ்ரீமத் பாகவதம், பரமபுருஷ பகவானால் என்னிடம் சுருக்கமாக பேசப்பட்டது. மேலும் இது அவரது பலவிதமான சக்திகளின் சேர்க்கைகயைப் பற்றியதாகும். தயவு செய்து நீயே இவ்விஞ்ஞானத்தை விரவாகக் கூறு.
பதம் 2.7.52 : தயவு செய்து உறுதியுடனும், முழுமுதற் கடவுளான ஹரியிடம் உன்னதமான பக்தித்தொண்டை மனிதர்கள் விருத்தி செய்து கொள்வதற்குச் சாத்தியாமான முறையிலும் இந்த பகவத் விஞ்ஞானத்தை விளக்கிக் கூறுவாயாக. பகவான் ஹரியே அனைத்து ஜீவராசிகளிலும் பரமாத்மாவாகவும், அனைத்து சக்திகளுக்கும் மூல பிறப்பிடமாகவும் இருக்கிறார்.
பதம் 2.7.53 : பகவான் தமது செயல்களை, அவரது வெவ்வேறு சக்திகளைக் கொண்டு ஆற்றும் போதனைகளுக்கு ஏற்பவே விவரிக்கவும், பாராட்டவும், கேட்கவும் வேண்டும். இது பக்தியுடனும், மரியாதையுடனும் செய்யப்படுமானால், ஒருவன் பகவானின் மாயச் சக்தியிலிருந்து விடுபடுவது நிச்சயம்.