அத்தியாயம் – 6
புருஷ - சூக்தம் நிலை நாட்டப்பட்டது
பதம் 2.6.1
ப்ரஹ்மோவாச
வாசாம் வஹ்னேர் முகம் க்ஷேத்ரம் சந்தஸாம் ஸப்த தாதவ:
ஹவ்ய-கவ்யாம்ருதான்னானாம் ஜிஹ்வா ஸர்வ-ரஸஸ்ய ச

ப்ரஹ்மா உவாச-பிரம்ம தேவர் கூறினார்; வாசாம்- குரலின்; வஹ்னே.- நெருப்பின்; முகம்—வாய்; க்ஷேத்ரம்—உற்பத்தி ஸ்தானம்; சந்தஸாம்—காயத்ரீயைப் போன்ற வேத மந்திரங்களின்; ஸப்த-ஏழு: தாதவ:- தோல் உட்பட மற்ற ஆறு அடுக்குகள்; ஹவ்யகவ்ய— தேவர்களுக்கும், முன்னோர்களுக்கும் உரிய நிவேதனங்கள்; அம்ருத- மனிதர்களுக்குரிய உணவு; அன்னானாம்—எல்லா வகையான உணவு வகைகளின்; ஜிஹ்வா-நாக்கு; ஸர்வ-எல்லா; ரஸஸ்ய-எல்லா வகையான சிறந்த ஆகாரங்களிலும்; ச-மேலும்.

பிரம்ம தேவர் கூறினார்: விராட் புருஷரின் (பகவானின் பிரபஞ்ச ரூபம்) வாய், குரலின் பிறப்பிடமாகும். நெருப்பு அதை ஆளும் மூர்த்தியாகும். அவரது தோலும் மற்ற ஆறு அடுக்குகளும் வேத மந்திரங்களின் உற்பத்தி ஸ்தானங்களாகும். மேலும் தேவர்கள், முன்னோர்கள் மற்றும் பாமர மக்கள் ஆகியோருக்குரிய வெவ்வேறு உணவு வகைகளுக்கு பிறப்பிடமாக இருப்பது அவரது நாக்காகும்.

பதம் 2.6.2
ஸர்வாஸூனாம் ச வாயோஸ் ச தன்-நாஸே பரமாயணே
அஸ்வினோர் ஓஷதீனாம் ச க்ராணோ மோத-ப்ரமோதயோ:

ஸர்வ- எல்லா; அஸூனோம்—வெவ்வேறு வகையான உயிர்க்காற்று: ச-மேலும்: வாயோ:—காற்றின்; ச-அன்றியும்; தத்— அவரது ; நாஸே -மூக்கில்: பரம ஆயணே—உன்னதமான உற்பத்தி ஸ்தானத்தில்: அஸ்வினோ-தேவர்களான அஸ்வினி குமாரர்களின்; ஓஷதீனாம்— எல்லா மூலிகைகளிலும்; ச-அன்றியும்; க்ராண – அவரது முகரும் சக்தி; அத்திமோத-இன்பம்; ப்ரமோதயோ—சிறப்பான விளையாட்டு.

அவரது நாசித்துவாரங்கள், நம் சுவாசத்திற்கும் மற்றெல்லா காற்றுகளுக்கும் பிறப்பிடங்களாகும். அவரது முகரும் சக்தி, தேவர்களான அஸ்வினி குமாரர்களையும், எல்லா வகையான மருந்து மூளிகைகளையும் உண்டு பண்ணுகிறது. அவரது சுவாசம் எல்லா வகையான வாசனைகளையும் உண்டாக்குகிறது.

பதம் 2.6.3
ரூபாணாம் தேஜஸாம் சக்ஷுர் திவ: ஸூர்யஸ்ய சாக்ஷிணீ
கர்ணௌ திசாம் ச தீர்தானாம் ஸ்ரோத்ரம் ஆகாச-சப்தயோ:

ரூபாணாம்-எல்லா வகையான உருவங்களுக்கும்; தேஜஸாம்— ஒளியூட்டக்கூடிய அனைத்திலும்; சக்ஷு:-கண்கள்; திவ:-மினுக்கும் பொருள்: ஸூர்யஸ்ய-சூரியனின்; ச-கூட; அக்ஷிணீ_கண்விழிகள்; கர்ணௌ-காதுகள்; திசாம்—அனைத்து திசைகளின்; ச-மேலும்; தீர்தானாம்—அனைத்து வேதங்களிலும்; ஸ்ரோத்ரம்—கேட்பதற்குரிய புலன்; ஆகாச-ஆகாயம்; சப்தயோ:-அனைத்து ஓசைகளிலும்.

அவரது கண்கள் எல்லா வகையான உருவங்களுக்கும் உற்பத்தி ஸ்தானங்களாக இருக்கின்றன. அவை மினுமினுப்பாகவும், பிரகாசிப்பவையாகவும், உள்ளன. அவரது கண்விழிகள் சூரியனைப் போன்றும், சுவர்க்க லோகங்களைப் போன்றும் உள்ளன. அவரது செவிகள் எல்லாப் புறங்களிலிருந்தும் கேட்பதுடன், வேதங்களுக்கும், அவை பாதுகாப்பு இடங்களாகவும் உள்ளன. மேலும் அவரது கேட்கும் புலன் ஆகாயத்திற்கும் எல்லா வகையான ஓசைகளுக்கும் பிறப்பிடமாகும்.

பதம் 2.6.4
தத்-காத்ரம் வஸ்து-ஸாராணாம் ஸௌபகஸ்ய ச பாஜனம்
த்வக் அஸ்ய ஸ்பர்ச-வாயோஸ் ச ஸர்வ-மேதஸ்ய சைவ ஹி

தத்—அவரது; காத்ரம்-உடலின் வெளிப்பரப்பு: வஸ்து ஸாராணாம்—அனைத்திலும் உள்ள சாராம்சம் அல்லது அடிப்படை உண்மை; ஸௌபகஸ்ய-எல்லா மங்களகரமான சந்தர்ப்பங்களிலும்; ச-மேலும்; பாஜனம்—உற்பத்தி ஸ்தானம்; த்வக்-தோல்: அஸ்ய- அவரது; ஸ்பர்ச-ஸ்பரிசம்; வாயோ:-அசையும் காற்றுகளின்; ச-மேலும்; ஸர்வ—எல்லா வகையான; மேதஸ்ய-யாகங்களின்; ச-மேலும்: ஏவ-நிச்சயமாக; ஹி-அதே போன்று.

அவரது உடலின் வெளிப்பரப்பானது, எல்லா சாராம்சங்களுக்கும், அடிப்படை உண்மைகளுக்கும், மங்களகரமான சந்தர்ப்பங்களுக்கும் உற்பத்தி ஸ்தானமாக இருக்கிறது. அவரது தோல், அசையும் காற்றைப் போன்ற எல்லா வகையான ஸ்பரிச உணர்வுகளுக்கும் பிறப்பிடமாக இருப்பதுடன், எல்லா வகையான யாகங்களை இயற்றும் இடமாகவும் உள்ளது.

பதம் 2.6.5
ரோமாணி உத்பிஜ்ஜ-ஜாதீனாம் யைர் வா யக்ஞஸ் து ஸம்பருத:
கேச-ஸ்மஸ்ரு-நகானி அஸ்ய சிலா லோஹப்ர-வித்யுதாம்

ரோமாணி-உடலிலுள்ள ரோமங்கள்; உத்பிஜ்ஜ-காய்கறிகள்; ஜாதீனாம்—இராஜ்யங்களின்; யை:-எதனால்; வா—இரண்டிலொன்று; யக்ஞ:-யாகங்கள்; து-ஆனால்; ஸம்ப்ருத:-குறிப்பாக உதவும்; கேச-தலைமுடி; ஸ்மஸ்ரு-முகத்தின் உரோமம்; நகானி—நகங்கள், அஸ்ய—அவரது; சிலா- கற்கள்; லோஹ-உலோகங்கள்; அப்ர- மேகங்கள்; வித்யுதாம்-மின்சாரம்.

அவரது உடலிலுள்ள ரோமங்கள் எல்லா வகையான தாவரங்களுக்கும் காரணமாக உள்ளன. குறிப்பாக யாகங்களுக்குத் தேவையான பொருட்களாக உபயோகப்படும் மரங்களுக்கு அவை காரணமாக உள்ளன, அவரது தலை மீதும், முகத்தின் மீதும் உள்ள ரோமங்கள் மேகங்களின் பிறப்பிடமாக உள்ளன. மேலும் அவரது நகங்கள், மின்சாரம், கற்கள் மற்றும் உலோகங்கள் ஆகியவற்றிற்குப் பிறப்பிடங்களாகும்.

பதம் 2.6.6
பாஹவோ லோக-பாலானாம் ப்ராயச: க்ஷேம-கர்மணாம்

பாஹவ:-கரங்கள்; லோக -பாலானாம்–கிரகங்களைப் பரி பாலனம் செய்துவரும் மூர்த்திகளான தேவர்களின்; ப்ராயச:-ஏறத்தாழ எப்பொழுதும்; க்ஷேக்ஷ்ம கர்மணாம்- பாமர மக்களின் தலைவர்களாய் இருந்து அவர்களைப் பாதுகாப்பவர்களின்.

பகவானின் கரங்கள், சிறந்த தேவர்களுக்கும், ஜீவராசிகளை காப்பவர்களான பிற தலைவர்களுக்கும் உரிய பிறப்பிடங்களாகும்.

பதம் 2.6.7
விக்ரமோ பூர் புவ: ஸ்வஸ் ச க்ஷேமஸ்ய சரணஸ்ய ச
ஸர்வ-காம-வரஸ்யாபீ ஹரேஸ் சரண ஆஸ்பதம்

விக்ரம-முன் செல்லும் அடிகள்; பூ: புவ:- தாழ்ந்த மற்றும் உயர்திரகங்களின்; ஸ்வ—மேலும் சுவர்க்கத்தின்; ச-கூட; க்ஷேமஸ்ய- நம்மிடமுள்ள அனைத்தின் பாதுகாப்புக்காகவும்; சரணஸ்ய-பயமற்ற நிலையின்; ச-மேலும்; ஸர்வ-காம -நமக்கு தேவைப்படுவது எல்லாம்; வரஸ்ய-அனைத்து வரங்களிலும்; அபி-அதே போன்று; ஹரே:- பகவானின்; சரண:- தாமரைப் பாதங்கள்; ஆஸ்பதம் -புகலிடம்.

இவ்வாறாக பகவானின் முன்னேறும் அடிகள், மேல், கீழ் மற்றும் ஸ்வர்க்க லோகங்களுக்கும், நமக்குத் தேவையான அனைத்திற்கும் புகலிடமாகும். அவரது தாமரைப் பாதங்கள் எல்லா வகையான பயத்திலிருந்தும் பாதுகாப்பு வழங்கக் கூடியதாகும்.

பதம் 2.6.8
அபாம் வீர்யஸ்ய ஸர்கஸ்ய பாஜன்யஸ்ய ப்ரஜாபதே:
பும்ஸ: சிஸ்ன உபஸ்தஸ் து ப்ரஜாதி-ஆனந்த-நிர்வ்ருதே:

அபாம்-நீரின்; வீர்யஸ்ய-விந்தின்; ஸர்கஸ்ய-உற்பத்தி செய்யக் கூடியதன்; பாஜன்யஸ்ய-மழைகளின்; செய்ய ப்ரஜாபதே:- சிருஷ்டி கர்த்தாவின்; பும்ஸ:- பகவானின்; சிஸ்ன-புறப்பாலுறுப்புக்கள்; உபஸ்த: து-புறப்பாலுறுப்புக்கள் அமைந்திருக்கும் இடம்; ப்ரஜநி இன விருத்தி செய்வதால்; ஆனந்த- ஆனந்தம்; நிர்வ்ருதே;-காரணம்.

பகவானின் பாலுறுப்புக்களிலிருந்து நீர், விந்து, ஸ்தானங்கள், மழை மற்றும் சந்ததியை உற்பத்தி செய்பவர்கள் ஆகியவை தோன்றுகின்றன. அவரது பாலுறுப்புக்கள், சந்ததி உற்பத்தியால் விளையும் துன்பத்தை மறக்கடிக்கக் கூடிய சுகத்திற்கு காரணமாக விளங்குகின்றன.

பதம் 2.6.9
பாயுர் யமஸ்ய மித்ரஸ்ய பரிமோக்ஷஸ்ய நாரத
ஹிம்ஸாயா நிச்ருதேர் ம்ருத்யோர் நிரயஸ்ய குதம் ஸ்ம்ருத:

பாயு:-மலத்துவாரம்; யமஸ்ய – மரணதேவன்; மித்ரஸ்ய- மித்ரனின்; பரிமோக்ஷஸ்ய-மலத்துவாரத்தின்; நாரத-ஓ நாரதா ; ஹிம்ஸாயா:-பொறாமையால்; நிச்ருதே-துரதிர்ஷ்டத்தின்; ம்ரூத்யோ:-மரணத்தின், நிரயஸ்ய -நரகத்தின்; ஸ்ம்ருத: அறியப்படுகிறது. குதம் – மலக்குடல்;

ஓ நாரதா, பகவானுடைய பிரபஞ்ச உருவின் மலத்துவாரம், மரண தேவனான மித்திரனின் வசிப்பிடமாகும். பகவானின் மலத்துவாரமும், மலக்குடலும், பொறாமை, துரதிர்ஷ்டம், மரணம், நரகம் போன்றவைகளுக்குரிய இடங்களாகும்.

பதம் 2.6.10
பராபூதேர் அதர்மஸ்ய தமஸஸ் சாபி பஸ்சிம:
நாட்யோ நத-நதீனாம் ச கோத்ராணாம் அஸ்தி-ஸம்ஹதி:

பராபூதே:-ஏமாற்றத்தின்; அதர்மஸ்ய-அதர்மத்தின்; தம்ஸ -அறியாமையின்; ச-மேலும்; அபி—அவ்வாறே; பஸ்சிம:-முதுகு; நாட்ய:- குடல்களின்; நத-பெரும்நதிகளின்; நதீனாம்-சிற்றாறுகளின்; ச-அன்றியும்; கோத்ராணாம்-மலைகளின்; அஸ்தி— எலும்புகள்; ஸம்ஹதி:- குவியும்.

பகவானின் முதுகு எல்லா வகையான ஏமாற்றம், அறியாமை மற்றும் அதர்மம் ஆகியவற்றுக்குரிய இடமாகும். அவரது இரத்தக் குழாய்களிலிருந்து பெரும் நதிகளும், சிற்றாறுகளும் பாய்ந்தோடுகின்றன. அவரது எலும்புகளின் மீது பெரும் மலைகள் குவிந்துள்ளன.

பதம் 2.6.11
அவ்யக்த-ரஸ-ஸிந்தூனாம் பூதானாம் நிதனஸ்ய ச
உதரம் விதிதம் பும்ஸோ ஹ்ருதயம் மனஸ: பதம்

அவ்யக்த-அருவாம்சம்; ரஸ-ஸிந்தூனாம் -கடல் மற்றும் சமுத்திர நீரின்; பூதானாம்—ஜட உலகில் பிறவி எடுப்பவர்களின்; நிதனஸ்ய- அழிவின்;ச-அன்றியும்; உதரம்—அவரது வயிறு; விதிதம்-நுண்ணறிவு படைத்தவர்களால் அறியப்படுகிறது; பும்ஸ:- மகா புருஷரின்; ஹ்ருதயம் – இதயம்; மனஸ:-சூட்சும உடலின்; பதம்-இடம்.

பகவானின் அருவ அம்சம் சமுத்திரங்களின் இருப்பிடமாகும். அவரது வயிறு பௌதிக அழிவுக்குட்பட்ட ஜீவராசிகளின் இளைப்பாறும் இடமாகும். அவரது இதயம் சூட்சுமமான ஜட உடல்களைக் கொண்ட ஜீவராசிகளின் வசிப்பிடமாகும். நுண்ணறிவு படைத்தவர்கள் இதை இவ்வாறு அறிகின்றனர்.

பதம் 2.6.12
தர்மஸ்ய மம துப்யம் ச குமாராணாம் பவஸ்ய ச
விக்ஞானஸ்ய ச ஸத்வஸ்ய பரஸ்யாத்மா பராயணம்

தர்மஸ்ய-சமயக் கொள்கைகளின், அல்லது யமராஜனின்; மம- என்னுடைய; துப்யம்—உன்னுடையதின்; ச-மேலும்; குமாராணாம்— நான்கு குமாரர்களின்; பவஸ்ய-சிவ பெருமான்; ச-மேலும்; விக்ஞானஸ்ய-உன்னத அறிவின்; ச – அன்றியும்; ஸத்வஸ்ய-உண்மையின்; பரஸ்ய-மகாபுருஷரின்;ஆத்மா—உணர்வு; பராயணம் நம்பியிருக்கிறது.

தவிரவும், நான், நீ மற்றும் நான்கு பிரம்மச்சாரிகளான சனகர், சனாதனர், சனத் குமாரர் மற்றும் சனந்தனர் ஆகியோருடைய சமயக் கொள்கைகளின் இருப்பிடமாக அந்த மகா புருஷரின் உணர்வு இருக்கின்றது. அதே உணர்வுதான் உண்மைக்கும், உன்னத அறிவிற்கும் கூட இருப்பிடமாகும்.

பதங்கள் 2.6.13 – 2.6.16
அஹம் பவான் பவஸ் சைவ த இமே முன்யோ ‘க்ரஜா:
ஸுராஸுர-நரா நாகா: ககா-ம்ருக ஸரீஸ்ருபா:

கந்தர்வாப்ஸரஸோ யக்ஷா ரக்ஷோ-பூத-கணோரகா:
பசவ: பிதர: சித்தா வித்யாதராஸ் சாரணா த்ருமா:

அன்யே ச விவிதா ஜீவா ஜல-ஸ்தல-நபௌகஸ:
க்ரஹர்க்ஷ-கேதவஸ் தாராஸ் தடித: ஸ்தனயித்னவ:

ஸர்வம் புருஷ ஏவேதம் பூதம் பவ்யம் பவச் ச யத்
தேனேதம் அவ்ருதம் விஸ்வம் விதஸ்திம் அதிதிஷ்டதி

அஹம்- நான்: பவான்-நீ; பவ:-சிவ பெருமான்; ச-கூட; ஏவ- நிச்சயமாக; தே -அவர்கள்; இமே- எல்லா; முன்ய:- மகாமுனிவர்கள்; அக்ர-ஜா:- எனக்கு முன்பாகப் பிறந்த ; ஸுர—தேவர்கள்; அஸுர— அசுரர்கள்; நரா:-மனிதர்கள்; நாகா:- நாக லோக வாசிகள்; ககா- பறவைகள்; ம்ருகா-மிருகங்கள்; ஸரீஸ்ருபா:-ஊர்வன; கந்தர்வ- அப்ஸரஸ; யக்ஷா:, ரக்ஷ:-பூத-கண-உரகா: பசவ: பிதர:, ஸித்தா ;வித்யாதரா:, சாரணா:-வேறுபட்ட கிரகங்களின் வாசிகளும் ; திருமா: தாவர இனம்; அன்யே-மற்றும் பலர்; ச-தவிரவும், விவிதா: பல்வேறு வகைகளின்; ஜீவா:-ஜீவராசிகள்; ஜல-நீர்; ஸ்தல-நிலம்: இய-ஓகஸ்-ஆகாய வாசிகள், அல்லது பறவைகள்; க்ரஹ-சிறிய கிரகங்கள்: ருக்ஷ-செல்வாக்குள்ள நட்சத்திரங்கள்; கேதவ-வால் நட்சத்திரங்கள்; தாரா- ஒளி தரும் கிரகங்கள்; நடித- மின்னல்; ஸ்தனத்வை-இடியோசை; ஸர்வம்- அனைத்தும்; புருஷ-முழு முதற் கடவுள்; ஏவ இதம்- நிச்சயமாக இவை அனைத்தும்; பூதம்- படைக்கப்பட்ட அனைத்தும்; பவ்யம்- சிருஷ்டிக்கப்பட இருப்பவை; பவத்- கடந்த காலத்தில் சிருஷ்டிக்கப்பட்டவை அனைத்தும்; ச -தவிரவும்: யத்-எதெல்லாம்; தேன் இதம்—இதெல்லாம் அவராலேயே; ஆவ்ருதம்-மூடப்பட்டு; வில்வம்-பிரபஞ்சத்தை உள்ளடக்கக் கூடிய; விதஸ்திம் – அரை முழம்; அதிதிஷ்டதி-அமைத்திருக்கிறது.

என்னிலிருந்து (பிரம்மா) துவங்கி, நீ, பவன் (சிவன்) உனக்கு முன் பிறந்த பெரும் முனிவர்கள், தேவர்கள், அசுரர்கள், நாகர்கள், மனிதர்கள், பறவைகள், மிருகங்கள் மற்றும் ஊர்வன போன்றவை, மேலும் பிரபஞ்சங்களிலுள்ள கிரகங்கள், நட்சத்திரங்கள், சிறிய கிரகங்கள், ஒளிரும் கிரகங்கள், மின்னல், இடி போன்றவை, மேலும் வெவ்வேறு கிரக அமைப்புக்களின் வாசிகளான சுந்தர்வர்கள், அப்சரர்கள், யக்ஷர்கள், ரக்ஷர்கள், பூதகணங்கள், உரகர்கள், பசுக்கள், பிதாக்கள், சித்தர்கள், வித்யாதரர்கள், சாரணர்கள் போன்றவர்கள், உட்பட மற்றெல்லா வகையான ஜீவராசிகள், மேலும் மற்றெல்லா பொருட்கள் வரையுள்ள அனைத்தும் கடந்த, நிகழ் மற்றும் எதிர் காலமெனும் எல்லாக் காலங்களிலும் பகவானின் பிரபஞ்ச ரூபத்தால் மூடப்பட்டுள்ளன. பகவான் ஒன்பது அங்குலங்களைக்கடந்துவிடாத ஓர் உருவில் நித்தியமாக வாழ்பவராகவும், மேற்குறிப்பிட்ட அனைத்திற்கும் மேற்பட்டவராகவும் இருப்பினும் அவர் அனைத்தையும் தமக்குள் அடக்கிக் கொண்டுள்ளார்.

பதம் 2.6.17
ஸ்வ-திஷ்ண்யம் ப்ரதபன் ப்ராணோ பஹிஸ் ச ப்ரதபதி அசௌ
ஏவம் விராஜம் ப்ரதபம்ஸ் தபதி அந்தர் பஹி: புமான்

ஸ்வ-திஷ்ண்யம்-ஒளிக்கதிர்: ப்ரதபன்-விரிவடைவதன் மூலமாக; ப்ராண:-உயிர்ச் சக்தி; பஹி:-வெளியேயுள்ள; ச-மேலும்; ப்ரதபதி-பிரகாசமாக்கியது; அசௌ- சூரியன்; ஏவம்- அதைப்போலவே; விராஜம்-பிரபஞ்ச உருவம்; ப்ரதபன்—அதன் விரிவின் மூலமாக; தபதி-உற்சாகமூட்டுகிறார்; அந்த:- உட்புறமாக; பஹி:- வெளிப்புறமாக; புமான்-பரமபுருஷர்.

சூரியன் அதன் ஒளிக்கதிர்களை விரிவடையச் செய்வதன் மூலமாக, உட்புறத்தையும் வெளிப்புறத்தையும் ஒளிமயமாக்குகிறது; அதுபோலவே, பரமபுருஷ பகவான் தமது பிரபஞ்ச ரூபத்தை விரிவடையச் செய்வதன் மூலமாக, படைப்பிற்கு உள்ளேயும், வெளியேயும் உள்ள அனைத்தையும் பராமரிக்கிறார்.

பதம் 2.6.18
ஸோ ‘ம்ருதஸ்யாபயஸ்யேஸோ மர்த்யம் அன்னம் யத் அத்யகாத்
மஹிமைஷ ததோ ப்ரஹ்மன் புருஷஸ்ய துரத்யய:

அவர் (பகவான்): அம்ருதஸ்ய- மரணமற்ற நிலையில்; அபயஸ்ய-பயமற்ற நிலையில்: ஈச-ஆள்பவர்; மர்தியம்- மடியும்: அன்னம்-பலன் நோக்குக் கருமம்; யத்- பெற்றுள்ளான்; அந்யகாத்- அப்பால் சென்றுவிட்ட; மஹிமா-மகிமைகள்; ஏஷ:- அவரது : தத-எனவே: ப்ரஹ்மன்—ஓ பிராமண நாரதா: புருஷஸ்ய- பரம புருஷரின்; துரத்யய:-அளவிட முடியாதது.

பரமபுருஷர், மரணம் மற்றும் அச்சமின்மை ஆகிய நிலைகளை ஆள்பவராகவும், ஜட உலக செயல் விளைவுகள் மற்றும் மரணம் ஆகியவற்றிற்கு மேற்பட்டவராகவும் உள்ளார். எனவே ஓ நாரதா, ஓ பிராமணா, பகவானின் பெருமைகளை அளந்தறிவது கடினம்.

பதம் 2.6.19
பாதேஷு ஸர்வ-பூதானி பும்ஸ: ஸ்திதி-பதோ விது:
அம்ருதம் க்ஷேமம் அபயம் த்ரி-மூர்த்னோ ‘தாயி மூர்தஸு

பாதேஷு- நான்கில் ஒரு பாகத்தில்; ஸர்வ-எல்லா; பூதானி- ஜீவராசிகள்; பும்ஸ:-பரமபுருஷரின்; ஸ்திதி-பத:-அனைத்து ஜட செல்வங்களுக்கும் ஊற்று; விது:-நீ அறிய வேண்டும்; அம்ருதம்- மரணமற்ற கதி; சேசுமம் – முதுமை, நோய் போன்ற கவலைகளிலிருந்து விடுபட்ட நிலை; அபயம்—பயமற்ற நிலை; த்ரி—மூர்த்ன:-மூன்று உயர்கிரக அமைப்புகளுக்கு அப்பால்; அதாயி—இருக்கும்; மூர்தஸுட- ஜடத் திரைகளுக்கப்பால்.

எதில் எல்லா ஜீவராசிகளும் உயிர் வாழ்கின்றனவோ, அந்த நான்கிலொரு பகுதி கொண்ட பகவானின் சக்தியில், எல்லா பௌதிகச் செல்வங்களும் உறைகின்றன. மரணம், பயம், முதுமை மற்றும் நோய் ஆகிய கவலைகளிலிருந்து விடுபட்டுள்ள பகவானின் இராஜ்யம், மூன்று உயர்கிரக அமைப்புகளுக்கும், பௌதிக அடுக்குகளுக்கும் (திரை) அப்பாற்பட்டதாகும்.

பதம் 2.6.20
பாதாஸ் த்ரயோ பஹிஸ் சாஸன் அப்ரஜானாம் ய ஆஸ்ரமா:
அந்தஸ் த்ரி-லோக்யாஸ் து அபரோ க்ருஹ-மேதோ ‘ப்ருஹத்-வ்ரத:

பாதா:த்ரய:-பகவானுடைய சக்தியின் நான்கில் மூன்று பாகங்களைக் கொண்ட உலகம்; பஹி:-இவ்வாறாக அதற்கப்பால் அமைந்துள்ளது; ச-மேலும்; ஆஸன்—இருந்த: அப்ரஜானாம்- மறுபிறவியை அடையக் கூடாதவர்களின்; யே-அவர்கள்; ஆஸ்ரமா:-வாழ்வின் சமூக நிலை; அந்த:- உள்ளே: த்ரி -லோக்யா-மூவுலகங்களின்: து—ஆனால்; அபர:-மற்றவர்கள்: க்ருஹ- மேத- குடும்ப வாழ்வில் பற்று கொண்டுள்ள; அப்ருஹத்வ்ரத:-பிரம்மச்சரிய விரதத்தை முறையாகப் பின்பற்றாமல்.

பகவானின் சக்தியில் முக்கால் பாகத்தைக் கொண்ட ஆன்மீக உலகம் இந்த ஜட உலகிற்கப்பால் அமைந்துள்ளது. அது பிறப்பற்றவர்களுக்குரிய உலகாகும். குடும்ப வாழ்வில் பற்றுடையவர்களும், பிரம்மச்சரிய விரதத்தை முறையாகப் பின்பற்றாதவர்களுமான, பிறர் மூன்று ஜட உலகங்களிலேயே வாழ வேண்டும்.

பதம் 2.6.21
ஸ்ருதி விசக்ரமே விஸ்வன் ஸாசனானசனே உபே
யத் அவித்யா ச வித்யா ச புருஷஸ் தூபயாஸ்ரய:

ஸ்ருதீ- ஜீவராசிகளின் விதி; விசக்ரமே-முழுமையாக வாழ்கிறார்; விஸ்வன்- எங்கும் பரவியுள்ள முழுமுதற் கடவுள்; ஸாசன- அடக்கியாளும் செயல்கள்; அனசனே – பக்தித் தொண்டிலுள்ள செயல்கள்; உபே-இரண்டும்; யத்-என்ன; அவித்யா-அறியாமை; ச-அத்துடன்; வித்யா-உண்மையான அறிவு; ச-மேலும்; புருஷ-பரமபுருஷர்; து—ஆனால்; உபய—அவர்கள் இருவருக்கும்: ஆஸ்ரய- எஜமானர்.

சர்வ வியாபகமுள்ளவரான முழுமுதற் கடவுள், அவரது சக்திகளின் மூலமாக, ஆட்சி புரியும் செயல்களுக்கும், பக்தித் தொண்டிற்கும் எஜமானராவார். எல்லா சூழ்நிலைகளிலும் அறியாமைக்கும், உண்மை அறிவிற்கும் அவரே முடிவான எஜமானராக இருக்கிறார்.

பதம் 2.6.22
யஸ்மாத் அண்டம் விராட் ஜக்ஞே பூதேந்ரிய-குணாத்மக:
தத் த்ரவ்யம் அத்யகாத் விஸ்வம் கோபி: ஸூர்ய இவாதபன்

யஸ்மாத் -யாரிடமிருந்து; அண்டம்-பிரபஞ்ச கோளங்கள்; விராட்-மேலும் பிரம்மாண்டமான பிரபஞ்ச ரூபம்; ஜக்ஞே- தோன்றியது; பூத-மூலப்பொருட்கள்; இந்ரிய-புலன்கள்; குண ஆத்மக:- குணத்தைத் தழுவிய; தத்-த்ரவ்யம்-பிரபஞ்சங்கள் மற்றும் பிரபஞ்ச ரூபம் போன்றவை; அத்யகாத்-கடந்துள்ளது; விஸ்வம்— எல்லாப் பிரபஞ்சங்களும்; கோபி:-கதிர்களால்; ஸூர்ய-சூரியன்; இவ-போன்று; ஆதபன்- வெளியிடப்பட்டுள்ள கதிர்களும், வெப்பமும்.

முழுமுதற் கடவுளிடமிருந்து, பிரபஞ்ச கோளங்கள், மற்றும் பௌதிக மூலப் பொருட்கள், குணங்கள், புலன்கள் ஆகியவற்றுடன் கூடிய பிரபஞ்ச ரூபம் ஆகியவை உற்பத்தியாகின்றன. இருப்பினும், சூரியன் அதன் கதிர்கள் மற்றும் வெப்பம் ஆகியவற்றிலிருந்து பிரிந்திருப்பதைப் போலவே, அத்தகைய ஜடத் தோற்றங்களில் இருந்து அவர் பிரிந்திருக்கிறார்.

பதம் 2.6.23
யதாஸ்ய நாப்யான் நலினாத் அஹம் ஆஸம் மஹாத்மன:
நாவிதம் யக்ஞ-ஸம்பாரான் புருஷாவயவான் ருதே

யதா—அச்சமயம்; அஸ்ய—அவரது; நாப்யாத்-நாபியிலிருந்து; நலினாத்-தாமரைப் பூவிலிருந்து; அஹம்-நான்; ஆஸம்-பிறந்தேன்; மஹா-ஆத்மன:—புகழுக்குரியவரின்; ந அவிதம்- தெரியவில்லை; யக்ஞ-யாகத்துக்குரிய; ஸம்பாரான்-பகுதிப் பொருட்கள்; புருஷ0 பகவானின்; அவயவான்—சொந்த உடலுறுப்புக்கள்: ருதே-, தவிர.

இந்த மகா புருஷருடைய (மஹா-விஷ்ணு) நாபிக் கமலத்திலிருந்து நான் பிறந்த பொழுது, இப்புருஷருடைய அங்கங்களைத் தவிர அவரை ஆராதிப்பதற்குரிய எந்த பொருளும் என்னிடம் இருக்கவில்லை.

பதம் 2.6.24
தேஷு யக்ஞஸ்ய பசவ: ஸவனஸ்பத்ய: குசா:
இதம் ச தேவ-யஜனம் காலஸ் சோரு-குணான்வித:

தேஷு— அத்தகைய யாகங்களில்; யக்ஞஸ்ய-யாகச்சடங்கின்; பசவ:-மிருகங்கள் அல்லது யாகத்துக்குரிய பொருட்கள்; வனஸ்பத்ய:-பூக்கள் மற்றும் இலைகளுடன் கூடிய; குசா:-புல்; இதம் — இவையனைத்தும்; ச-அவ்வாறே; தேவ யஜனம் – பலிபீடம்; கால -பொருத்தமான காலம் ; ச – அவ்வாறே; உரு-சிறந்த; குண – அன்வித:-தகுதியுள்ள.

யாகச் சடங்குகளை நிறைவேற்றுவதற்கு, மலர்கள், இலைகள்,வைக்கோல், யாகபீடம் மற்றும் உகந்த காலம் (வசந்த காலம்) போன்ற யாகப் பொருட்கள் தேவைப்படுகின்றன.

பதம் 2.6.25
வஸ்தூனி ஓஷத்ய: ஸ்னேஹா ரஸ-லோஹ-ம்ருதோ ஜலம்
ருசோ யஜூம்ஷி ஸாமானி சாதுர்-ஹோத்ரம் ச ஸத்தம

வஸ்தூனி-பாத்திரங்கள்; ஓஷத்ய:-தானியங்கள்; ஸ்னேஹா: நெய்; ரஸ-லோஹு-ம்ருத:-தேன், தங்கம் மற்றும் மண்; ஜலம்—நீர்; ருச:- ரிக் வேதம்; யஜூம்ஷி-யஜுர் வேதம்; ஸாமானி-சாம வேதம்; சாது-ஹோத்ரம்-நிறைவேற்றும் நால்வர்; இவையனைத்தும்; ஸத் தம-புண்ணியவானே.

பாத்திரங்கள், தானியங்கள், நெய், தேன், தங்கம், மண், நீர், ரிக்வேதம், யஜுர்வேதம், சாமவேதம் மற்றும் நான்கு வேதியர்கள் ஆகியவை யாகத்தை நிறைவேற்றுவதற்குத் தேவையான பிற பொருட்களாகும்.

பதம் 2.6.26
நாம-தேயானி மந்த்ராஸ் ச தக்ஷிணாஸ் ச வ்ரதானி ச
தேவதானுக்ரம: கல்ப: ஸங்கல்பஸ் தந்த்ரம் ஏவ ச

நாம- தேயானி-தேவர்களின் நாமங்களை எழுந்தருளச் செய்தல்; மந்த்ரா:-ஒரு குறிப்பிட்ட தேவருக்கு அர்ப்பணம் செய்யப்பட வேண்டிய பிரத்தியேகமான மந்திரங்கள்; ச-மேலும்; தக்ஷிணா:-வெகுமானம்; ச-மேலும்; வ்ரதானி- விரதங்கள்; ச-மேலும்; தேவதா-அனுக்ரம- ஒவ்வொரு தேவராக; கல்ப-பிரத்தியேகமான சாஸ்திரம்; ஸங்கல்ப- பிரத்தியேகமான நோக்கம்; தந்த்ரம்- ஒரு குறிப்பிட்ட முறை; ஏவ -அவைகள் உள்ளவாறு; ச-தவிரவும்.

தேவர்களின் வெவ்வேறு நாமங்களை எழுந்தருளச் செய்வது எஞ்சியுள்ள தேவைகளில் ஒன்றாகும். இதை, குறிப்பிட்ட நோக்கங்களுக்காக தேர்வு செய்யப்பட்ட முறைகளுடனும், குறிப்பிட்ட சாஸ்திரத்திற்கு இணங்கவும் நிறைவேற்ற வேண்டும்.

பதம் 2.6.27
கதயோ மதயஸ் சைவ ப்ராயஸ்சித்தம் ஸமர்பணம்
புருஷாவயவைர் ஏதே ஸம்பாரா: ஸம்ப்ருதா மயா

கதய-முடிவான இலக்கை (விஷ்ணு) நோக்கி முன்னேற்றம்;மதய-தேவர்களை வழிபடுதல்; ச- அவ்வாறே ; ஏவ- நிச்சயமாக; ப்ராயஸ்சித்தம்-ப்ராயஸ்சித்தம் (நஷ்ட ஈடு); ஸமர்பணம்- முடிவான நிவேதனம்; புருஷ-முழுமுதற் கடவுள்; அவயவை:-முழுமுதற் கடவுளின் அவயங்களிலிருந்து; ஏதே-இந்த ஸம்பாரா பொருட்கள்: ஸம்ப்குதா-ஏற்பாடு செய்யப்பட்டன; மயா—என்னால்.

இவ்வாறாக யாகத்திற்குத் தேவையான பொருட்களை முழுமுதற் கடவுளின் சொந்த உடலுறுப்புக்களிலிருந்தே நான் ஏற்பாடு செய்ய வேண்டியதாயிற்று. தேவர்களின் நாமங்களை ஏழுந்தருளச் செய்வதன் மூலமாக, முடிவான இலக்காகிய, விஷ்ணுவை படிப்படியாக அடைய முடிந்தது. இவ்வாறாக பிராயச்சித்தமும், முடிவான நிவேதனமும் முற்றுப்பெற்றன.

பதம் 2.6.28
இதி ஸம்ப்ருத-ஸம்பார புருஷாவயவைர் அஹம்
தம் ஏவ புருஷம் யக்ஞம் தேனைவாயஜம் ஈஸ்வரம்

இதி – இவ்வாறாக; ஸம்ப்ருத-நிறைவேற்றினேன்; ஸம்பார: என்னை ஆயத்தப்படுத்திக் கொண்டு; புருஷ-முழுமுதற் கடவுள்; அவயவை:- பின்னப்பகுதிகளால்; அஹம்-நான்; தம் ஏவ-அவரிடம்; புருஷம் – முழுமுதற் கடவுள்; யக்ஞம்-யாகங்கள் அனைத்தையும் அனுபவிப்பவர்; தேன ஏவ-அவை அனைத்தாலும்; அயஜம்- வழிபட்டேன்; ஈஸ்வரம்-பரம ஆளுனரை.

இவ்வாறாக யாகத்தை அனுபவிப்பவரான, பரமபுருஷரின் உடலுறுப்புக்களிலிருந்து யாகத்தை நிறைவேற்றுவதற்குரிய பொருட்களை நான் படைத்தேன். பிறகு பகவானை திருப்திப்படுத்துவதற்காக யாகத்தையும் நான் நிறைவேற்றினேன்.

பதம் 2.6.29
ததஸ் தே ப்ராதர இமே ப்ரஜானாம் பதயோ நவ
அயஜன் வ்யக்தம் அவ்யக்தம் புருஷம் ஸு-ஸமாஹிதா:

தத:- அதன்பின்; தே-உன்னுடைய; ப்ராதர:-சகோதரர்கள்; மே- இந்த; ப்ரஜானாம்—ஜீவராசிகளின்; பதய:-எஜமானர்கள்; நவ – ஒன்பது; அயஜன்—இயற்றினர்; வ்யக்தம்—தோற்றுவிக்கப்பட்ட; அவ்யக்தம் – தோற்றுவிக்கப்படாத ; புருஷம் – புருஷர்கள்; ஸமாஹிதா:- முறையான சடங்குகளுடன்.

எனதருமை மகனே, அதன் பின், ஜீவராசிகளின் தலைவர்களான உன்னுடைய ஒன்பது சகோதரர்கள், தோன்றியும் தோன்றாமலும் உள்ள புருஷர்களை திருப்திப்படுத்துவதற்காக, முறையான சடங்குகளுடன் யாகத்தை நிறைவேற்றினர்.

பதம் 2.6.30
ததஸ் ச மனவ: காலே ஈஜிரே ருஷயோ ‘பரே
பிதரோ விபுதா தைத்யா மனுஷ்யா: க்ரதுபிர் விபும்

தத:- அதன்பின்; ச-அன்றியும்; மனவ:-மனித குலத்தந்தைகளான மனுக்கள்; காலே-உரிய காலத்தில்; ஈஜிரே-வழிபட்டனர்; ருஷய: சிறந்த முனிவர்கள்; அபரே-பிற; பிதர:-முன்னோர்கள்; விபுதா: பண்டிதர்கள்; தைத்யா:-தேவர்களின் சிறந்த பக்தர்கள்; மனுஷ்யா: மனிதகுலம்; க்ரதுபி-விபும்-பரமபுருஷரை மகிழ்விப்பதற்காக மேற்கொள்ளப்படும் யாகங்களால்.

அதற்குப்பின், மனிதகுலத் தந்தைகளான மனுக்கள், சிறந்த முனிவர்கள், முன்னோர்கள், கற்றறிந்த பண்டிதர்கள், தைதியர்கள், மனித குலத்தினர் ஆகியோர் பரமபுருஷரை மகிழ்விப்பதற்கான யாகங்களை இயற்றினர்.

பதம் 2.6.31
நாராயணே பகவதி தத் இதம் விஸ்வம் ஆஹிதம்
க்ருஹீத-மாயோரு-குண: ஸர்காதாவ் அகுண: ஸ்வத:

நாராயணே-நாராயணரிடம்; பகவதி-முழுமுதற் கடவுளான; தத் இதம்- இந்த ஜடத் தோற்றங்கள் அனைத்தும்; விஸ்வம்-எல்லா பிரபஞ்சங்களும்; ஆஹிதம்—அமைந்துள்ளன; க்ருஹீத- ஏற்றுக் கொண்டதால்; மாயா- ஜட சக்திகள்; உரு குண:-பெரும் சக்தி வாய்ந்த; ஸர்க-ஆதௌ-படைத்தல், காத்தல் மற்றும் அழித்தல் ஆகியவற்றில்; அகுண- ஜடக் குணங்களிடம் கவர்ச்சி இல்லாமல்; ஸ்வத:- சுய தேவை பூர்த்தியுடன்.

எனவே ஜடப் பிரபஞ்சங்களின் எல்லாத் தோற்றங்களும் அவரது சக்திவாய்ந்த பௌதிக சக்திகளில் அமைந்திருக்கின்றன. அவர் பௌதிக குணங்களால் ஒரு பொழுதும் கவரப்படாதவராக இருப்பினும், பௌதிக சக்திகளை ஏற்றுக் கொண்டுள்ளார்.

பதம் 2.6.32
ஸ்ருஜாமி தன்-நியுக்தோ ‘ஹம் ஹரோ ஹரதி தத்-வச:
விஸ்வம் புருஷ-ரூபேண பரிபாதி த்ரி-சக்தி-த்ருக்

ஸ்ருஜாமி-சிருஷ்டிக்கிறேன்; தத்—அவருடையதால்; நியுக்த- நியமனம்; அஹம்_நான்; ஹர:-சிவபெருமான்; ஹரதி-அழிக்கிறார்; தத்—வச:-அவருடைய கட்டுப்பாட்டின் கீழ்; விஸ்வம்- மொத்த பிரபஞ்சமும்; புருஷ-முழுமுதற் கடவுள்; ரூபேண-அவரது நித்திய ரூபத்தின் மூலமாக; பரிபாதி-பாதுகாக்கிறார்; த்ரி- சக்தி-த்ருக்-மூன்று சக்திகளை ஆள்பவர்.

அவரது விருப்பத்தால், நான் சிருஷ்டிக்கிறேன், சிவபெருமான் அழிக்கிறார். அவரது நித்தியமான முழுமுதற் கடவுளின் ரூபத்தில் அவர் அனைத்தையும் காக்கிறார். அவரே இம்மூன்று சக்திகளையும் அடக்கியாளும் சக்தி பெற்றவராவார்.

பதம் 2.6.33
இதி தே ‘பிஹிதம் தாத யதேதம் அனுப்ருச்சஸி
நான்யத் பகவத: கிஞ்சித் பாவ்யம் ஸத்-அஸத்-ஆத்மகம்

இதி—இவ்வாறாக; தே-உன்னிடம்; அபிஹிதம் – விளக்கினேன்; தாத-எனதருமை மகனே; யதா—அவ்வாறு; இதம்- இவை அனைத்தையும்; அனுப்ருச்சஸி-நீ விசாரணை செய்ததைப் போல; ந-இல்லவேயில்லை; அன்யத்-வேறெதுவும்; பகவத: முழுமுதற் கடவுளுக்கு அப்பால்; கிஞ்சித்-ஒன்றுமில்லை; பாவ்யம்-என்றென்றும் கற்பிக்கப்பட வேண்டியது; ஸத்-காரணம்; அஸத்-விளைவு; ஆத்மகம்—எனும் விஷயத்தில்.

எனதருமை மைந்தனே, எதை எல்லாம் நீ என்னிடமிருந்து விசாரனை செய்தாயோ, அவற்றை எல்லாம் உனக்கு நான் விளக்கிக் கூறினேன். மேலும் (ஜட மற்றும் ஆன்மீக உலகங்களில், காரணமாகவோ அல்லது விளைவாகவோ உள்ள) அனைத்துமே பரமபுருஷ பகவானின் தயவையே நம்பியுள்ளன என்பதை உறுதியாக நீ அறிய வேண்டும்.

பதம் 2.6.34
ந பாரதீ மே ‘ங்க ம்ருஷோபலக்ஷ்யதே
ந வை க்வசின் மே மனஸோ ம்ருஷா கதி:
ந மே ஹ்ருஷீகாணி பதந்தி அஸத்-பதே
யன் மே ஹ்ருதௌத்கண்ட்யவதா த்ருதோ ஹரி:

ந- ஒருபோதும் இல்லை; பாரதீ -கூற்றுகள்; மே – மனது : அங்க-ஓ நாரத; ம்ருஷா-பொய்; உபலக்ஷ்யதே-என்று நிரூபிக்க; ந-ஒருபோதும் இல்லை; வை- நிச்சயமாக; க்வசித்-எந்தேரத்திலும்; மே- என்னுடைய ; மனஸ்:- மனதின்; ம்ருஷா- பொய்: கதி- முன்னேற்றம்; ந—அல்லது; மே- எனது; ஹ்ருஷீகாணி_புலன்கள்; பதந்தி- பங்கம்; அஸத்-பதே-நிலையற்ற ஜடத்தில்; யத்- ஏனெனில்; மே- எனது; ஹ்ருதா-இதயம்; ஒளட்கண்ட்யவதா— பெரும் ஆர்வத்தால்; த்ருத:- பற்றிக்கொண்டு; ஹரி:-பரமபுருஷ பகவான்.

ஓ நாரதா, பரமபுருஷ பகவானாகிய ஹரியின் தாமரைப் பாதங்களை நான் பெரும் சிரத்தையுடன் பற்றிக் கொண்டிருப்பதால், நான் கூறுவதனைத்தும் இதுவரை பொய்யென நிரூபிக்கப்பட்டதே இல்லை. என் மனதின் முன்னேற்றமும் இதுவரை தடைப்பட்டதில்லை. நிலையற்ற பற்றினால் எனது புலன்கள் ஒருபோதும் இழிவடைந்ததே இல்லை.

பதம் 2.6.35
ஸோ ‘ஹம் ஸமாம்னாயமயஸ் தபோமய:
ப்ரஜாபதீனாம் அபிவந்தித:பதி:
ஆஸ்தாய யோகம் நிபுணம் ஸமாஹிதஸ்
தம் நாத்யகச்சம் யத ஆத்ம-ஸம்பவ:

ஸ: அஹம் – நான் (சக்தி வாய்ந்த பிரம்மா); ஸமாம்னாய – மய:- சீடப் பரம்பரையின் வேத ஞானத்தில்; தப:-மய:- எல்லாத் தவங்களையும் வெற்றிகரமாகப் பின்பற்றி; அபிவந்தித—வழிபாட்டுக்கு உரிய; பதி-எஜமானர்; ஆஸ்தாய—வெற்றிகரமாகப் பயின்று; ப்ரஜாபதீனாம் -ஜீவராசிகளின் முன்னோர்கள் அனைவரிலும்; யோகம்—யோக சக்திகளை; நிபுணம்-பெரும் நிபுணன்; ஸமாஹித:-தன்னுணர்வு பெற்ற; தம்-பரமபுருஷர்; ந-இல்லை; அத்யகச்சம்- சரியாக புரிந்து கொண்டு; யத:- எவரிடமிருந்து ; ஆத்ம- ஆத்மா; ஸம்பவ-உற்பத்தி செய்யப்பட்ட.

நான் சீடப் பரம்பரையின் வேத ஞானத்தில் பூரணத்துவம் பெற்ற சக்தி வாய்ந்த பிரம்மா என்று அறியப்பட்டிருப்பினும், மேலும் எல்லாத் தவங்களையும் நான் செய்திருப்பதுடன், யோக சித்திகளிலும், தன்னுணர்விலும் நிபுணனாய் இருப்பினும், ஜீவராசிகளின் முன்னோர்களால் நான் அவ்வாறு ஏற்றுக் கொள்ளப்பட்டு இருப்பினும், அவர்கள் என்னிடம் மரியாதைக்குரிய வணக்கங்களை சமர்ப்பித்த போதிலும் என் பிறப்பிற்கு மூலமாகிய பகவானை நான் இன்னமும் அறிந்து கொள்ள முடியாமல் இருக்கிறேன்.

பதம் 2.6.36
நதோ ‘ஸ்மி அஹம் தச்-சரணம் ஸமீயுஷாம்
பவச்-சிதம் ஸ்வஸ்தி அயனம் ஸுமங்களம்
யோ ஹி ஆத்ம-மாயா-விபவம் ஸ்ம பர்யகாத்
யதா நப: ஸ்வான்தம் அதாபரே குத:

நத:- என் வணக்கங்களை சமர்ப்பிக்கிறேன்; அஸ்மி-இருக்கிறேன்; அஹம்-நான்; தச்-பகவானுடைய; சரணம்-பிதங்கள்; ஸமீயுஷாம்- சரணடைந்த ஆத்மாவின்; பவத்-சிதம்- பிறவிச் சக்கரத்தை தடுத்த நிறுத்துவது; ஸ்வஸ்தி—அயனம்-எல்லா இன்பத்தையும் கண்டறிதல் ; ஸுமங்களம் — சர்வ மங்களம்; ய:-யார் ஒருவன்; ஹி-அதே போன்று; ஆத்ம-மாயா-சொந்த சக்திகள்; விபவம்-சக்தி; ஸ்ம-நிச்சயமாக பர்யகாத்—மதிப்பிட முடியாது; யதா—அதைப் போலவே; நப:ஆகாயம்; ஸ்வ-அன்தம்-அதன் சொந்த வரம்பு ; அத-எனவே; அபரே-பிறர்; குத:- எவ்வாறு.

எனவே அவரது (பகவான்) பாதங்களில் நான் சரணாகதியடைவது எனக்கு மிகவும் நன்மை பயக்கக் கூடியதாகும். அது மட்டுமே ஒருவரை பிறவிச் சக்கரத்தின் துன்பங்களிலிருந்து விடுவிக்கக் கூடியதாகும். இத்தகைய சரணாகதி சர்வ மங்களம் பொருந்தியது மட்டுமல்லாமல், ஒருவன் எல்லா இன்பங்களையும் உணரவும் அவனுக்கு உதவுகிறது. ஆகாயத்தால் கூட அவன் சொந்த பரப்பளவை மதிப்பிட முடியாது. ஆகவே தமது சொந்த எல்லைகளை பகவானாலேயே மதிப்பிட முடியவில்லை என்றால் பிறரால் என்ன செய்ய முடியும்?

பதம் 2.6.37
நாஹம் ந யூயம் யத்- ருதாம் கதிம் விதுர்
ந வாமதேவ: கிம் உதாபரே ஸுரா:
தன் மாயயா மோஹித-புத்தயஸ் து இதம்
வினிர்மிதம் சாத்ம-ஸமம் விசக்ஷ்மஹே

ந-இல்லை; அஹம்- நான்; ; யூயம்— மகன்களான நீங்கள் அனைவரும்; யத்-யாருடைய; ருதாம்-உண்மையான; கதிம்- அசைவுகள்; விது:-அறிவர்; ந-அல்லது; வாமதேவ:-சிவ பெருமான். கிம்-என்ன; உத— வேறு; தத்—அவருடையதால்; அபரே-பிறர்; மாயயா-மாயா சக்தியால்; ஸுரா:—தேவர்கள்; மோஹித- குழப்பமடைந்து; புத்தய-இத்தகைய அறிவுடன்; து-ஆனால்; இதம் – இந்த; வினிர்மிதம்-சிருஷ்டிக்கப்பட்டது; ச-அன்றியும்; ஆத்மஸமம்-ஒருவருடைய சொந்த ஆற்றலின் காரணமாக; விசக்ஷ்மஹே-அறிவர்.

சிவபெருமானோ, நீயோ அல்லது நானோ ஆன்மீக ஆனந்தத்தின் எல்லைகள் ஆராய்ந்தறிய முடியாதென்றால், மற்ற தேவர்களால் படைக்கப்பட்ட எப்படி முடியும்? மேலும் பரமபுருஷரின் மாயையான புறச் சக்தியால் நாமனைவரும் குழப்பம் அடைந்திருப்பதால், இப்பிரபஞ்சத்தை மட்டுமே நம்முடைய தனிப்பட்ட ஆற்றலுக்கு ஏற்றவாறு நம்மால் காண முடியும்.

பதம் 2.6.38
யஸ்யாவதார-கர்மாணி காயந்தி ஹி அஸ்மத்-ஆதய:
ந யம் விதந்தி தத்வேன தஸ்மை பகவதே நம:

யஸ்ய-எவருடைய; அவதார—அவதாரம்; கர்மாணி-செயல்கள்; காயந்தி புகழப்படுகிறதோ; ஹி-உண்மையில்; அஸ்மத் ஆதய- நம்மைப் போன்றவர்கள்; ந-இல்லை; யம்- யாரை; விதந்தி- அறிகிறோமோ; தத்வேன—அவரை உள்ளவாறு ; தஸ்மை-அவரிடம்; பகவதே- முழுமுதற் கடவுளான ஸ்ரீ கிருஷ்ணரிடம் ; நம :- மரியாதைக் குரிய வணக்கங்கள்.

பகவானை உள்ளவாறு பூரணமாக அறிவது கடினம் என்றாலும், யாருடைய அவதாரங்களையும், செயல்களையும் நாம் போற்றிப் புகழ்கிறோமோ, அப்பரமபுருஷரை மரியாதையுடன் வணங்குவோமாக.

பதம் 2.6.39
ஸ ஏஷ ஆத்ய: புருஷ: கல்பே கல்பே ஸ்ருஜதி அஜ:
ஆத்மாத்மனி ஆத்மனாத்மானம் ஸ ஸம்யச்சதி பாதி ச

ஸ-அவர்; ஏஷ:அதே; ஆத்ய:-மூலமுழுமுதற்கடவுள்: புருஷ- கோவிந்தன் அல்லது பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் ஒரு விரிவங்கமாகிய மஹா-விஷ்ணு அவதாரம்; கல்பே கல்பே- ஒவ்வொரு யுகத்திலும்; அஜ:-பிறப்பற்றவர்; ஆத்மா-ஆத்மா;
ஆத்மனி-ஆத்மாவின் மீது; ஆத்மனா-ஆவரது சொந்த சொரூபத்தால்; ஸ்குஜூதி-படைக்கிறார்; ஆத்மானம்-அவரே; ஸ-அவர்; ஸம்யச்சதி-கிரகித்துக் கொள்கிறார். பாதி-பாதுகாக்கிறார்; ச-தவிரவும்.

அந்த மூல முழுமுதற் கடவுளாகிய, பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், முதல் அவதாரமான மஹா-விஷ்ணுவாக விரிவடைந்து இப்பிரபஞ்சத்தை சிருஷ்டிக்கிறார். ஆனால் அவர் பிறப்பற்றவராவார். இருந்தாலும் அவருக்குள் சிருஷ்டியும் நிகழ்கிறது. மேலும் ஜடப் பொருள் மற்றும் தோற்றங்கள் ஆகிய அனைத்தும் அவரேயாகும். அவற்றை அவர் சில காலம் பராமரித்த பின், மீண்டும் அவற்றை தமக்குள் கிரகித்துக் கொள்கிறார்.

பதங்கள் 2.6.40 – 2.6.41
விசுத்தம் கேவலம் ஞானம் ப்ரத்தயக் ஸம்யக் அவஸ்திதம்
ஸத்யம் பூர்ணம் அனாதி-அந்தம் நிர்குணம் நித்யம் அத்வயம்

ரூஷே விதந்தி முனய: ப்ரசாந்தாத்மேந்ரியாசயா:
யதா தத் ஏவாஸத்-தர்கைஸ் திரோதீயேத விப்லுதம்

விசுத்தம்- எவ்விதஜடக்களங்கமும் இல்லாமல்; கேவலம்- தூயதும், பூரணமானதும்; ஞானம்-அறிவு; ப்ரத்தயக்- எங்கும் பரவியுள்ளவர்; ஸம்யக்-முழுமையாக; அவஸ்திதம்—அமைந்துள்ளது; ஸத்யம்- உண்மை; பூர்ணம்–பூரணம்; அனாதி-அநாதியாக (துவக்கமில்லாமல்); அந்தம்- அதைப்போலவே முடிவும் இல்லாமல்; நிர்குணம்- ஜடக் குணங்களற்ற; நித்யம்-நித்தியமானவர்; அத்வயம்—இணையற்றவர்; ரூஷே-ஓ நாரத சிறந்த ரிஷியே; விதந்தி-மட்டுமே அவர்களால் அறிய முடியும்; முனய:—சிறந்த முனிவர்கள்; ப்ரசாந்த- சாந்தமடைந்த; ஆத்ம-ஆத்ம; இந்ரிய-புலன்கள்; ஆசயா-தஞ்சமடைந்த; யதா- அவ்வேளை; தத்—அது; ஏவ—நிச்சயமாக; அஸத்-நிரூபிக்க முடியாத; தர்கை:—-தர்க்கங்கள்; திர- தீயேத-மறைந்து விடுகிறார்; விப்லுதம்-நிலை குலையச் செய்த.

முழுமுதற் கடவுள் எல்லா ஜடக்களங்கங்களிலிருந்தும் விடுபட்டவராக இருப்பதால், அவர் தூய்மையானவராவார். அவர் பரம சக்தியாகவும், முழுமையும், பூரணமும் கொண்ட அறிவு சொரூபமாகவும் விளங்குகிறார். அவர் ஆரம்பமும், முடிவும் இல்லாதவரும், இணையற்றவரும், எங்கும் பரவி இருப்பவரும் ஆவார். ஓ நாரத, சிறந்த ரிஷியே, பெரும் முனிவர்கள் ஜட ஆசைகளிலிருந்து முற்றிலும் விடுபட்டு, புலன்களின் தொல்லையற்ற நிலையை அடையும் பொழுது பகவானை அவர்களால் அறிய முடியும். இல்லையெனில், அர்த்தமற்ற தர்க்கங்களால் அனைத்தும் நிலைகுலைந்து பகவான் நம் பார்வையிலிருந்து மறைந்து விடுகிறார்.

பதம் 2.6.42
ஆத்யோ ‘வதார: புருஷ: பரஸ்ய
கால: ஸ்வபாவ: ஸத்-அஸன்-மனஸ் ச
த்ரவ்யம் விகாரோ குண இந்ரியாணி
விராட் ஸ்வராட் ஸ்தாஸ்னு சரிஷ்ணு பூம்ன:

ஆத்ய:-முதல்; அவதார:—அவதாரம்; புருஷ:- காரணார்ணவசாயி விஷ்ணு, பரஸ்ய-பகவானின்; கால:- காலம்; ஸ்வபாவ:வெளி; ஸத்—விளைவு; அஸத்-காரணம்; மன:- மனம்; த்ரவ்யம்-மூலப் பொருட்கள்; விகார:-ஜட அகங்காரம்; குண- இயற்கைக் குணங்கள்; இந்திரியாணி-புலன்கள்; விராட்-மொத்தமான முழு உடல்; ஸ்வராட்-கர்போதகசாயீ விஷ்ணு; ஸ்தாஸ்னு-அசைவற்ற; சரிஷ்ணு—அசையக் கூடிய; பூம்ன:-பரம புருஷரின்.

பரமபுருஷரின் முதல் அவதாரம் காரணார்ணவசாயி விஷ்ணு ஆவார். நித்திய காலம், விண்வெளி, காரண விளைவுகள், மனம், மூலப் பொருட்கள், ஜட அகங்காரம், இயற்கைக் குணங்கள், புலன்கள், பகவானின் விஸ்வரூபம், கர்போதகசாயீ விஷ்ணு மற்றும் அசைவன அசையாதன எனும் பிரிவுகளிலுள்ள ஜீவராசிகள் ஆகிய அனைத்திற்கும் அவரே எஜமானராவார்.

பதங்கள் 2.6.43 – 2.6.45
அஹம் பவோ யக்ஞ இமே பிரஜேசா
தக்ஷாதயோ யே பவத்-ஆதயஸ் ச
ஸ்வர்லோக-பாலா: ககலோக-பாலா
ந்ருலோக-பாலாஸ் தளலோக-பாலா:

கந்தர்வ-வித்யாதர-சாரணேசா
யே யக்ஷ-ரக்ஷோரக-நாக-நாதா:
யே வா ருஷீணாம் ருஷபா: பித்ரூணாம்
தைத்யேந்ர-ஸித்தேஸ்வர-தானவேந்ரா:
அன்யே ச யே ப்ரேத-பிசாச- பூத
கூஷ்மாண்ட-யாதோ-ம்ருக-பக்ஷி-அதீசா:

யத் கிஞ்ச லோகே பகவன் மஹஸ்வத்
ஓஜ:-ஸஹஸ்வத் பலவத் க்ஷமாவத்
ஸ்ரீ- ஹ்ரீ- விபூதி -ஆத்மவத் அத்புதார்ணம்
தத்வம் பரம் ரூபவத் அஸ்வ-ரூபம்

அஹம்- நான் (பிரம்மாஜி); பவ:-சிவ பெருமான்; யக்ஞ —பகவான் விஷ்ணு: இமே-இவையனைத்தும்; பிரஜா-ஈசா:-ஜீவராசிகளின் தந்தை: தக்ஷ- ஆதய:-தட்சன், மரீசி, மனு முதலானவர்கள்; யே-அந்த; பவத்-நீ; ஆதய-ச- மற்றும் பிரம்மச்சாரிகள் (சனகாதி முனிவர்கள்); ஸ்வர்லோக-பாலா:-சுவர்க்க லோகங்களின் தலைவர்கள்; ககலோக-பாலா:-விண்வெளிப் பயணிகளின் தலைவர்கள்; ந்ருலோக-பாலா:-மனிதகுலத் தலைவர்கள்; தளலோக பாலா:-கீழ் உலகங்களின் தலைவர்கள்; கந்தர்வ-கந்தர்வலோக வாசிகள்; வித்யாதர-வித்யாதர கிரக வாசிகள்; சாரண— ஈசா— சாரணர்களின் தலைவர்கள்; யே- அவ்வாறே பிறரும்; யக்ஷ- யக்ஷர்களின் தலைவர்கள்; நாக-நாதா:-நாகலோகத்தின்(பூமிக்குக் கீழே இருப்பது) தலைவர்கள்; ரக்ஷ-ராட்சஸர்கள்; உரக- பாம்புகள்; யே-பிறர்; வா-தவிரவும்; ருஷீணாம் -ரிஷிகளின்; ருஷபா:- தலைவன்; பித்ரூணாம்-முன்னோர்களின்; தைத்ய இந்ர – ராட்சஸர்களின் தலைவர்கள்; சித்த -ஈஸ்வர-சித்த லோகங்களின் தலைவர்கள்; (விண்வெளி சஞ்சாரிகள்); தானவ இந்ரா:-ஆரியர் அல்லாதவர்களின் தலைவர்கள்; ச-தவிரவும்; அன்யே- அவற்றைத் தவிர; யே- அந்த; ப்ரேத- சவங்கள்; பிசாச-பிசாசுகள் (துர்தேவதை); பூத- பூதம்; கூஷ்மாண்ட – ஒரு விசேஷமான வகையைச் சேர்ந்த பிசாசு; யாத:- நீர்ப்பிராணிகள்; ம்ருக- மிருகங்கள்; பக்ஷி—அதீசா:-ராட்சஸ கழுகுகள்; யத்-எதுவும்; கிம் ச- மற்றும் அனைத்தும்; லோகே- உலகில்; பகவத்- பகம் அல்லது அசாதாரண சக்தி படைத்த; மஹஸ்வத்-விசேஷ அளவு கொண்ட; ஓஜ:-ஸஹஸ்வத்-விசேஷமான புலன் மற்றும் மனோபலம்; பலவத்-பலத்தைப் பெற்றுள்ள; க்ஷமாவத்-மன்னிப்பைப் பெற்றுள்ள; ஸ்ரீ-அழகு; ஹ்ரீ-பாவச் செயல்களால் வெட்கமடைந்து; விபூதி- செல்வங்கள்; ஆத்மவத்-புத்தியைப் பெற்றிருக்கும்; அத்புத- அற்புதமான; அர்ணம்- இனம்; தத்வம்-குறிப்பிட்ட உண்மை; பரம்—உன்னதமான; ரூபவத்-போன்றுள்ள ரூபம்; அஸ்வ- ரூபம் – ராட்சஸர்களின் தலைவர்கள்; சித்த-ஈஸ்வர-சித்த லோகங்களின் தலைவர்கள்; (விண்வெளி சஞ்சாரிகள்); தானவ இந்ரா:-ஆரியர் அல்லாதவர்களின் தலைவர்கள்; ச-தவிரவும்; யே- அந்த; பூத- பூதம்; அன்யே – அவற்றைத் தவிர; ப்ரேத- சவங்கள்; கூஷ்மாண்ட – ஒரு விசேஷமான வகையைச் சேர்ந்த பிசாசு; பிசாச-பிசாசுகள்(துர்தேவதை); நீர்ப்பிராணிகள்; ம்ருக- மிருகங்கள்; பக்ஷி—அதீசா:-ராட்சஸ கழுகுகள்; யத்-எதுவும்; கிம் சமற்றும் அனைத்தும்; லோகே உலகில்; பகவத் பகம் அல்லது அசாதாரண சக்தி படைத்த; மஹஸ்வத்-விசேஷ அளவு கொண்ட; ஓஜ:-ஸஹஸ்வத்-விசேஷமான புலன் மற்றும் மனோபலம்; பலவத்-பலத்தைப் பெற்றுள்ள; க்ஷமாவத்-மன்னிப்பைப் பெற்றுள்ள; ஸ்ரீ-அழகு; ஹ்ரீ-பாவச் செயல்களால் வெட்கமடைந்து; விபூதி- செல்வங்கள்; ஆத்மவத்-புத்தியைப் பெற்றிருக்கும்; அத்புத- அற்புதமான; அர்ணம்- இனம்; தத்வம்-குறிப்பிட்ட உண்மை; பரம்—உன்னதமான; ரூபவத்-போன்றுள்ள ரூபம்; அஸ்வ- ரூபம் – பகவானின் ரூபமல்ல.

நான் (பிரம்மா), சிவ பெருமான், பகவான் விஷ்ணு, ஜீவராசிகளை உற்பத்தி செய்யும் தட்சன் மற்றும் பிரஜாபதியைப் போன்றவர்கள், நீங்கள் (நாரதரும் குமாரர்களும்), இந்திரன், சந்திரனைப் போன்ற சுவர்க்கலோக தேவர்கள், பூலோக, மண்ணுலகங்களின் தலைவர்கள், மற்றும் கந்தர்வ வித்யாதர, சாரண லோகங்களின் தலைவர்கள்; யக்ஷர்கள், ரக்ஷர்கள் மற்றும் உரகர்களின் தலைவர்கள், சிறந்த முனிவர்கள், பெரும் அசுரர்கள், பெரும் நாத்திகர்கள், விண்வெளிப் பயணிகள், உயிரற்ற உடல்கள், பிசாசுகள், சைத்தான்கள், பூதங்கள், கூஷ்மாண்டர்கள், பெரும் நீர்ப்பிராணிகள், வலிமையுள்ள மிருகங்கள் மற்றும் சக்தி வாய்ந்த பறவைகள் போன்றவை பகவானின் விசேஷ தன்மையாகவும், அல்லது ரூபமாகவும் தோன்றக்கூடும். உருவத்துடனோ அல்லது உருவற்ற நிலையிலோ உள்ள ஐசுவரியம், மனோ பலம் மற்றும் நிலையான பலம், வலிமை, மன்னிப்பு, அழகு, அடக்கம், மற்றும் நன்நடத்தை ஆகியவை பகவானின் விசேஷமான தன்மையாகவும், அவரது ரூபமாகவும் தோன்றக் கூடும், ஆனால் உண்மையில் அவை பகவானுடைய உன்னதமான ஆற்றலில் ஒரு துணுக்கு மட்டுமேயாகும்.

பதம் 2.6.46
ப்ராதான்யதோ யான் ருஷ ஆமனந்தி
லீலாவதாரான் புருஷஸ்ய பூம்ன:
அபீயதாம் கர்ண- கஷாய-சோஷான்
அனுக்ரமிஷ்யே த இமான் ஸுபேசான்

ப்ராதான் யது:-முக்கியமாக; யான்—அவ்வெல்லா; ருஷே-நாரத; ஆமனந்தி-வழிபாடு: லீலா—-லீலைகள்; அவதாரான்-அவதாரங்கள்; புருஷஸ்ய-முழுமுதற் கடவுளின்; பூம்ன:-பரமன்; அபீயதாம்-உன்னால் சுவைத்து அனுபவிக்கப் படுவதற்காக; கர்ண— செவிகள்; கஷாய—அழுக்காறு: சோஷான்-ஆவியாக மாறுவது; அனுக்ரமிஷ்யே-ஒவ்வொன்றாகக் கூறுவேனாக; தே—அவர்கள்; இமான்- என் இதயத்தில் அவை உள்ளவாறு: ஸுபேசான்- கேட்பதற்கு இன்பமளிக்கும்.

ஓ நாரதா, பகவானின் உன்னதமான லீலா-அவதாரங்களைப் பற்றி இப்பொழுது ஒவ்வொன்றாக நான் கூறுகிறேன். அவர்களின் லீலைகளைக் கேட்பதால், செவிகளில் சேர்ந்துள்ள அழுக்காறுகள் மறையும், இந்த லீலைகள் கேட்பதற்கு இனிமையானவையும் சுவைத்து அனுபவிக்கப்பட வேண்டியவையும் ஆகும் என்பதால், அவை என் இதயத்தில் உள்ளன.


ஸ்ரீமத் பாகவதம், இரண்டாம் காண்டத்தின், “புருஷ சூக்தம் நிலை நாட்டப்பட்டது” எனும் தலைப்பைக் கொண்ட ஆறாம் அத்யாயம் இவ்வாறாக நிறைவு பெறுகின்றது.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare