அத்தியாயம் – 5
சர்வ காரணங்களுக்கும் மூல காரணம்
பதம் 2.5.1
நாரத உவாச
தேவ-தேவ நமஸ் தே ‘ஸ்து பூத-பாவன பூர்வஜ
தத் விஜானீஹி யஜ் ஞானம் ஆத்ம-தத்வ-நிதர்சனம்
நாஉவாச-ஸ்ரீநாரதர் கூறினார்; தேவ-எல்லா தேவர்களிலும்; தேவ- தேவன்; நம-வணக்கங்கள்; தே-உம்மிடம் அவ்வாறு; அஸ்து— இருக்கும் : பூதபாவன—அனைத்து ஜீவராசிகளையும் சிருஷ்டிப்பவர்; பூர்வஜ-முதன் முதலில் பிறந்தவர்; தத் விஜானீஹி—தயவு செய்து அந்த அறிவை விளக்குவீராக; யத் ஞானம்- எந்த அறிவு: ஆத்ம-தத்வ- உன்னதமான; நிதர்சனம்—திட்டமாக வழிகாட்டும்.
ஸ்ரீ நாரத முனி பிரம்மதேவரிடம் வினவினார்; தேவர்களுக்கெல்லாம் தலைமையானவரே, முதன் முதலாகப் பிறந்த ஜீவராசியே, எனது பணிவான வணக்கங்களை தங்களுக்கு நான் சமர்ப்பிக்கிறேன். தனிப்பட்ட ஆத்மா மற்றும் பரமாத்மா ஆகியவற்றின் உண்மையை அறிய வழிகாட்டும் அவ்வுன்னத அறிவை தயவு செய்து எனக்குக் கூறுவீராக.
பதம் 2.5.2
யத் ரூபம் யத் அதிஷ்டானம் யத: ஸ்ருஷ்டம் இதம் ப்ரபோ
யதி ஸம்ஸ்தம் யத் பரம் யச் ச தத் தத்வம் வத தத்வத:
யத்-என்ன: ரூபம்-தோற்றங்களின் அறிகுறிகள்; யத்- என்ன; அதிஷ்டானம்-சூழ்நிலை: யத:- எங்கிருந்து; ஸ்ருஷ்டம் -படைக்கப்பட்ட; இதம்- இவ்வுலகம்; ப்ரபோ-தந்தையே: எதில்- ஸம்ஸ்தம் பாதுகாக்கப்படுகிறது: யத்- என்ன; கட்டுப்பாட்டின் கீழ்: யத்-என்னென்ன; ச-மேலும்; தத்-இதன்; தத்வம்-அறிகுறிகள்: வத -தயவு செய்து விளக்குவீராக; தத்-த்வத- உண்மையாக.
எனது அன்புள்ள தந்தையே, படைக்கப்பட்ட இவ்வுலகின் அறிகுறிகளை தயவு செய்து உள்ளபடி விவரிப்பீராக. அதன் பின்னணிச் சூழல் என்ன? அது எவ்வாறு சிருஷ்டிக்கப்பட்டது? அது எவ்வாறு காக்கப்படுகிறது? மேலும் இவையனைத்தும் யாருடைய கட்டுப்பாட்டின் கீழ் நடைபெறுகின்றன?
பதம் 2.5.3
ஸர்வம் ஹி ஏதத் பவான் வேத பூத-பவ்ய-பவத்-ப்ரபு:
கராமலக-வத் விஸ்வம் விக்ஞானாவஸிதம் தவ
ஸர்வம்—அனைத்தும்; ஹி_சந்தேகமின்றி, ஏதத்-இது; பவான்- தாங்கள்: வேத -அறிவீர்; பூத-சிருஷ்டிக்கப்பட்ட அல்லது பிறந்துள்ள அனைத்தும்; பவ்ய-தற்பொழுது சிருஷ்டிக்கப்படவிருக்கும் அனைத்தும்; பவத்- தற்பொழுது சிருஷ்டிக்கப்படும் அனைத்தும்; ப்ரபு-அனைத்திற்கும் எஜமானரான தாங்கள்; கர- ஆமலக-வத்- உள்ளங்கை நெல்லிக்கனி போல; விஸ்வம்-பிரபஞ்சம்; விஞ்ஞான அவஸிதம்-விஞ்ஞான பூர்வமாக உமது அறிவிற்கு உட்பட்ட; தவ- உங்களது.
தந்தையே, கடந்த காலத்தில் என்னவெல்லாம் படைக்கப்பட்டதோ, எதிர்காலத்தில் என்னவெல்லாம் படைக்கப்படுமோ, அல்லது நிகழ்காலத்தில் என்னவெல்லாம் படைக்கப்படுகின்றனவோ, அது மட்டுமின்றி பிரபஞ்சத்திலுள்ள அனைத்தும் உமது உள்ளங்கை நெல்லிக்கனியாக இருப்பதால், இவையனைத்தையும் விஞ்ஞான பூர்வமாக தாங்கள் அறிந்திருக்கிறீர்கள்.
பதம் 2.5.4
யத் விக்ஞானோ யத்-ஆதாரோ யத்-பரஸ் த்வம் யத்-ஆத்மக:
ஏக: ஸ்ருஜ ஸி பூதானி பூதைர் ஏவாத்ம-மாயயா
விக்ஞானே—அறிவின் பிறப்பிடம்;யத்—ஆதார-யாருடைய பாதுகாப்பின் கீழ்; யத் பர- யாருக்குக் கீழ்ப்படிந்து: த்வம்- தாங்கள்; யத்-ஆத்மக-எவ்வளவு ஆற்றலுடன்; ஏக:-தனியாக; ஸ்ருஜஸி- நீங்கள் படைக்கிறீர்கள்; பூதானி—ஜீவ ராசிகளை; பூதை: ஜட மூலம் பொருட்களின் உதவியுடன்; ஏவ-நிச்சயமாக; ஆத்ம-ஆத்மா; மாயயா-ஆற்றலால்.
எனதன்புத் தந்தையே, உமது அறிவின் பிறப்பிடம் எது? யாருடைய பாதுகாப்பின் கீழ் தாங்கள் இருக்கிறீர்கள்? மேலும் யாருக்கும் கீழ்ப்படிந்து தாங்கள் செயற்படுகிறீர்கள்? உமது உண்மையான நிலை என்ன அனைத்து ஜீவராசிகளையும், பௌதிக மூலப் பொருட்களையும் உமது சொந்த சக்தியால் தனித்து நின்றே சிருஷ்டிக்கிறீர்களா?
பதம் 2.5.5
ஆத்மன பாவயஸே தானி ந பராபாவயன ஸ்வயம்
ஆத்ம-சக்திம் அவஷ்டபய ஊர்ணனாபிர் இவாக்லம:
ஆத்மன (ஆத்மனி)-தானாக: பாவயஸே-வெளிப்படுத்துகிறது; தானி-அவ்வெல்லா; ஸ்வயம்——நீங்கள்; ந-இல்லை; பராபாவயன-தோற்கடிக்க; ஆத்மசக்திம்- சுயமாக பெற்ற சக்தி; அவஷ்டபய-பயன்படுத்தப்பட்ட; ஊர்ண – நாபி:-சிலந்தி; இவ-போன்று: அக்லம-உதவியில்லாமல்.
சிலந்தி அதனுடைய கூட்டின் வலைப்பின்னலை மிகச் சுலபமாக உண்டாக்கி, பிறரால் வெற்றி கொள்ளப்படாமல் தனது படைக்கும் ஆற்றலை வெளிப்படுத்துவதைப் போலவே நீங்களும் உங்களுடைய சுய சக்தியைப் பயன்படுத்தி பிறரின் உதவியின்றி சிருஷ்டிக்கிறீர்கள்.
பதம் 2.5.6
நாஹம் வேத பரம் ஹி அஸ்மின் நாபரம் ந ஸமம் விபோ
நாம- ரூப -குணைர் பாவ்யம் ஸத்-அஸத் கிஞ்சித் அனயத:
ந-இல்லை: அஹம்-நான்; வேத-அறிகிறேன்; பரம்-உயர்ந்தது; ஹி- அதற்காக; அஸ்மின்-இவ்வுலகில்; ந—அதுவுமில்லை; அபரம்- தாழ்ந்தது; ந- அல்லது; ஸமம்-சமமானது; விபோ-மிகச் சிறந்தவரே; நாம—பெயர்: ரூப-இயல்புகள்; குணை:-தகுதியால்; பாவ்யம்- படைக்கப்பட்டவை அனைத்தும்; ஸத்—நிலையான; அஸத்- நிலையற்ற; கிஞ்சித்-அல்லது அதைப் போன்ற எதுவும்; அனயத- வேறெந்த மூலத்தில் இருந்தும்.
ஒரு குறிப்பிட்ட பொருளின் பெயர், இயல்பு மற்றும் அம்சம் ஆகியவற்றால் நாம் புரிந்து கொள்ளக்கூடிய உயர்ந்தது, தாழ்ந்தது அல்லது சமமானது, நிலையானது அல்லது நிலையற்றது போன்ற எதுவும் உம்மைத்தவிர வேறெந்த மூலத்திலிருந்தும் படைக்கப்படவில்லை. எனவே தாங்கள் மிகச் சிறந்தவராவீர்.
பதம் 2.5.7
ஸ பவான் அசரத் கோரம் யத் தப: ஸுஸமாஹித:
தேன கேதயஸே நஸ் த்வம் பரா-சங்காம் ச யச்சஸி
ஸ:-அவர்;பவான்—நீங்கள்;அசரத்—மேற்கொண்டீர்கள்; கோரம்- கடும்; யத்- தப:-தியானம்; ஸுஸமாஹித:-பூரண ஒழுக்கத்துடன்; தேன—அக்காரணத்திற்காக; கேதயஸே- துன்பம் தருகிறது; ந- நாங்கள்; த்வம்-நீங்கள்; பரா- முடிவான உண்மை; சங்காம்- சந்தேகங்கள்; ச-மேலும்; யச்சஸி— எங்களுக்கு ஒரு வாய்ப்பை வழங்கி.
சிருஷ்டியின் விவகாரத்தில் நீங்கள் பெரும் சக்தி வாய்ந்தவராக இருந்தாலும், நீங்கள் மேற்கொண்ட கடுந்தவங்களை நாங்கள் எண்ணிப் பார்க்கும் பொழுது, உம்மைவிட அதிக சக்திபடைத்த வேறோருவர் இருப்பதைப் பற்றிய ஆச்சரியத்தால் நாங்கள் திகைப்படைகிறோம்.
பதம் 2.5.8
ஏதன் மே ப்ருச்சத: ஸர்வம் ஸர்வ-க்ஞ ஸகலேஸ்வர
விஜானீஹி யதைவேதம் அஹம் புத்யே ‘னுசாஸித:
ஏதத்—அவையனைத்தையும்; மே- என்னிடம்; ப்ருச்சத-கேள்வியுடைய: ஸர்வம்-விசாரிக்கப்பட்ட அனைத்தும்; ஸர்வக்ஞ-அனைத்தையும் அறிந்தவர்; ஸகல- சகலமும்; ஈஸ்வர-ஈஸ்வரன்: விஜானீஹி- அன்புடன் விளக்குவீராக; யதா—அவ்வாறு; ஏவ-உள்ளவாறு; இதம்—இது; அஹம்-நான்; புத்யே-புரிந்து கொள்ள முடியும்; அனுசாஸித-இப்பொழுதுதான் உம்மிடமிருந்து கற்றுக் கொள்கிறேன்.
எனதன்புள்ள தந்தையே, நீங்கள் அனைத்தையும் அறிந்தவர். அனைவரையும் ஆள்பவரும் நீரே. எனவே உங்களிடம் நான் விசாரித்ததை தயவு செய்து எனக்கு உபதேசிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு உமது சீடனாக இருந்து இதை என்னால் அறிந்து கொள்ள முடியும்.
பதம் 2.5.9
பிரஹ்மோவாச
ஸம்யக் காருணிகஸ்யேதம் வத்ஸ தே விசிகித்ஸிதம்
யத் அஹம் சோதித: பகவத்-வீர்ய-தர்சனே
பிரஹ்மோவாச-பிரம்ம தேவர் கூறினார்; ஸம்யக்-பூரணமாக; காருணி-கஸ்ய-மிகவும் கொண்டவனான உனது; வத்ஸ-எனதன்புள்ள சிறுவனே; தே-உனது; விசிகித்ஸிதம்- ஆராய்ச்சி; யத்—எதனால்; அஹம்- நான்; சோதித:-ஊக்கம் அளிக்கப்பட்டேன்; ஸௌம்ய-நற்குணவானே; பகவத்-பகவானின், வீர்ய—வீரியம்; தர்சனே—அவ்விஷயத்தில்.
பிரம்மதேவர் கூறினார்: எனதன்புள்ளசிறுவனே நாரத, அனைவரிடமும் கருணை கொண்டு (நான் உட்பட) இக்கேள்விகளை நீ கேட்டிருக்கிறாய். சர்வ வல்லமை பொருந்திய முழுமுதற் கடவுளின் மகத்துவங்களை ஆழமாகக் காண்பதற்கு உன்னால் நான் ஊக்கம் அளிக்கப்பட்டேன்.
பதம் 2.5.10
நானருதம் தவ தச் சாபி யதா மாம் ப்ரப்ரவீஷி போ:
அவிக்ஞாய பரம் மத்த ஏதாவத் த்வம் யதோ ஹி மே
ந – இல்லை; அன்ருதம்- தப்பு; தவ-உன்னுடைய; தத்-அது; ச-மேலும்; அபி—நீ குறிப்பிட்டது போல்; யதா—எனும் விஷயத்தில்; மாம்-என்னுடைய; ப்ரப்ரவீஷி-_நீ விவரித்ததைப் போல; போ- என் மகனே; அவிக்ஞாய-அறியாமல்; பரம்-பரமன்; மத்த-எனக்கும் மேலே; ஏதாவத் -நீ பேசியவை அனைத்தும்; த்வம்-நீ; யத:- எனும் காரணத்திற்காக; ஹி-நிச்சயமாக; மே-என்னைப் பற்றி.
என்னைப் பற்றி நீ பேசியதில் எதுவுமே தப்பில்லை. ஏனெனில் எனக்கும் மேலே இருக்கும் பரம சத்தியமான, முழுமுதற் கடவுளை ஒருவன் உணர்ந்திருந்தாலொழிய சக்தி வாய்ந்த எனது செயல்களை காண்பவன் மாயையால் கவரப்படுவது உறுதி.
பதம் 2.5.11
யேன ஸ்வ-ரோசிஷா விஸ்வம் ரோசிதம் ரோசயாமி அஹம்
யதார்கோ ‘க்னிர் யதா ஸொமோ யதர்க்ஷ்-க்ரஹ-தாரகா:
யேன-எவரால்; ஸ்வ-ரோசிஷா-அவரது சுய பிரகாசத்தால்; விஸ்வம்—அனைத்து லோகங்களும்; ரோசிதம் -உள்ளூர் படைக்கப் பட்டுவிட்டன; ரோசயாமி—தோன்றுகின்றன; அஹம்-நான்; யதா- அவ்வளவு; அர்க:-சூரியன்; அக்னி-நெருப்பு; யதா—அவ்வாறு; ஸோம:-சந்திரன்; யதா—மேலும் அவ்வாறு ; ருக்ஷ—ஆகாயம்; க்ரஹ- செல்வாக்குள்ள கிரகங்கள்; தாரகா:-நட்சத்திரங்கள்.
சூரியன் தன் நெருப்பை வெளிப்படுத்தும் பொழுது சந்திரன் ஆகாயம், செல்வாக்குள்ள கிரகங்கள் மற்றும் மினுக்கும் நட்சத்திரங்கள் ஆகியவையும் தங்களுடைய பிரகாசத்தை வெளிப்படுத்துகின்றன. அதைப் போலவே, பகவானின் (பிரம்ம ஜோதி எனப்படும்) சுயப் பிரகாசத்தைக் கொண்டு அவரால் படைக்கப்பட்ட என்னுடைய படைப்புத் தொழிலை நான் செய்கிறேன்.
பதம் 2.5.12
தஸ்மை நமோ பகவதே வாஸுதேவாய தீமஹி
யன்-மாயயா துர்ஜயயா மாம் வதந்தி ஜகத்-குரும்
தஸ்மை-அவரிடம்; நம:- என் வணக்கங்களை சமர்ப்பிக்கிறேன். பகவதே-முழுமுதற் கடவுளிடம்; வாஸுதேவாய-பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம்; தீமஹி—அவரை தியானித்து; யத்-யாருடையதால், மாயயா-சக்திகள்; துர்ஜயயா- வெல்ல முடியாத; மாம்-என்னிடம்: வதந்தி-அவர்கள் கூறுகின்றனர்; ஜகத்—உலகம்; குரும்—எஜமானர்.
பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் (வாசுதேவனின்) வெல்லுதற்கரிய சக்தி நானே பரம ஆளுனர் என்று அழைக்குமாறு அவர்களைத் (புத்தியில் தாழ்ந்த பிரிவினரை) தூண்டுகிறது. அந்த முழுமுதற் கடவுளை தியானித்து என் வணக்கங்களை சமர்ப்பிக்கிறேன்.
பதம் 2.5.13
விலஜ்ஜமானயா யஸ்ய ஸ்தாதும் ஈஷா-பதே ‘முயா
விமோஹிதா விகத்தந்தே மமாஹம் இதி துர்திய:
விலஜ்ஜமானயா—வெட்கத்திற்கு உள்ளான ஒருவரால்; யஸ்ய- எவருடைய; ஸ்தாதும்- இருக்க; ஈஷா-பதே -முன் புறம்; அமுயா-குழப்பம் அடையச் செய்யும் சக்தியால்; விமோஹிதா- குழப்பம் அடைந்திருப்பவர்கள்; விகத்தந்தே-அர்த்தமற்ற பேச்சைப் பேசுகின்றனர்; மம-இது என்னுடையது; அஹம்—அனைத்தும் நானே; இதி—இவ்வாறாக அவதூறு பேசி; துர்திய:-இவ்வாறாக தீய எண்ணங்கொண்டு.
பகவானின் மாயா சக்தி, தனது தாழ்ந்த நிலையைக் குறித்து வெட்கம் அடைந்திருப்பதால், அவளால் உயர்ந்த ஸ்தானத்தை ஏற்க முடியவில்லை. ஆனால் அவளால் குழப்பத்திற்கு ஆளானவர்கள், “நான்”, “எனது” என்று எண்ணங்களில் ஆழ்ந்திருப்பதால் எப்பொழுதும் அர்த்தமற்ற பேச்சிலேயே ஈடுபட்டுள்ளனர்.
பதம் 2.5.14
த்ரவ்யம் கர்ம ச காலஸ் ச ஸ்வபாவோ ஜீவ ஏவ ச
வாஸுதேவாத் பரோ ப்ரஹ்மன் ந சான்யோ ‘ரீதோ ‘ஸ்திதத்வத:
த்ரவ்யம்-மூலப்பொருட்கள் (நிலம், நீர், நெகுப்பு, சுாற்று மற்றும் ஆகாயம்): கர்ம- சேர்க்கை; உ-மேலும்; கால-நித்திய காலம்: ச-மற்றும்; ஸ்வபாவ- உள்ளுணர்வு அல்லது சுபாவம்; ஜீவ-உயிர்வாழி; ஏவ- நிச்சயமாக: ச-மேலும்: வாஸுதேவாத்- வாசுதேவனிடம் இருந்து; பர-பிரிக்கப்பட்ட பகுதிகள்: ப்ரஹ்மன்- பிராமணரே; ந -எப்பொழுதுமில்லை; ச-மற்றும்; அன்ய-பிரிந்த: அர்த- மதிப்பு: அஸ்தி-உள்ளது; தத்வத- உண்மையாக.
படைப்பின் ஐந்து அடிப்படையான கூட்டுப் பொருட்கள், நித்திய காலத்தால் ஏற்படுத்தப்பட்ட சேர்க்கை, மற்றும் தனிப்பட்ட ஜீவராசிகளின் சுபாவம் அல்லது உள்ளுணர்வு ஆகிய இவை அனைத்தும் முழுமுதற் கடவுளான வாசுதேவனிடமிருந்து பிரிந்து வந்த பின்னப் பகுதிகளாகும். அவற்றில் உண்மையாக வேறெந்த மதிப்பும் இல்லை.
பதம் 2.5.15
நாராயண-பரா வேதா தேவா நாராயணங்கஜா:
நாராயண-பரா லோகா நாராயண-பரா மகா:
நாராயண-பரமபுருஷர்; பரா-அவரே காரணம்; வேதா-அறிவு; தேவா:-தேவர்கள்; நாராயண-முழுமுதற் கடவுள்; அங்கூட ஜா:-உதவிக்கரங்கள்; நாராயண-முழுமுதற் கடவுள்; பரா-எ னும் காரணத்திற்காக; லோகா-கிரகங்கள்; நாராயண –பரம புருஷர்; பா -அவரை திருப்தி செய்வதற்காகவென்றே; மகா:—எல்லா யாகங்களும்.
வேத இலக்கியங்கள் பரமபுருஷரால் இயற்றப்பட்டவையும், அவரை அறிவதற்கென்றே உள்ளவையும் ஆகும். அவரது (பகவான் உடலின் பாகங்களாக உள்ள தேவர்களும் கூட அவருக்குத் தொண்டு செய்வதற்கென்றே இருப்பவர்களாவர். வெவ்வேறு கிரகங்களும் கூட அவருக்காகவே உள்ளன. மேலும் அவரை மகிழ்விக்கவே பல்வேறு யாகங்களும் செய்யப்படுகின்றன.
பதம் 2.5.16
நாராயண-பரோ யோகோ நாராயண-பரம் தப:
நாராயண-பரம் ஞானம் நாராயண-பரா கதி:
நாராயண-பர -நாராயணரை அறிவதற்காகவே; யோக:மன ஒருமை; நாராயண-பரம்-நாராயணரை அடையும் நோக்கத்திற்காகவே; தப-தவம்; நாராயண-பரம்- நாராயணரின் க்ஷணத் தோற்றத்தை உணர்வதற்காகவென்றே; ஞானம்—உன்னத அறிவைப் பற்றிய பண்பாடு; நாராயன்-பரா-நாராயணரின் ராஜ்யத்திற்குள் முத்திக்கான வழி முற்றுப் பெறுகிறது; கதி- முன்னேற்றப் பாதை.
பல வகையான தியானம் அல்லது யோகம் போன்றவை நாராயணரை உணர்வதற்கென்றே இருப்பவையாகும். நாராயணரை நோக்கத்திற்காகவே எல்லா தவங்களும் அடையும் இயற்றப்படுகின்றன. உன்னத அறிவும் நாராயணரின் க்ஷண நேரக் காட்சியை பெறுவதற்காக இருப்பதாகும். இறுதியாக முக்தி என்பது நாராயணரின் ராஜ்யத்திற்குள் நுழைவு பெறுவதாகும்.
பதம் 2.5.17
தஸ்யாபி த்ரஷ்டுர் ஈசஸ்ய கூட- ஸ்தஸ்யாகிலாத்மன:
ஸ்ருஜ்யம் ஸ்ருஜாமி ஸ்ருஷ்டோ ‘ஹம் ஈக்ஷயைவாபிசோதித:
தஸ்ய–அவரது; அபி-நிச்சயமாக: த்ரஷ்டு:-காண்பவரின்; ; ஈசஸ்ய- ஆளுனரின்; கூட- ஸ்தஸ்ய——அனைவருடைய புத்திக்கும் மேற்பட்டவராக இருப்பவரின்; அகில- ஆத்மன:–பரமாத்மாவின்; ஸ்ருஜ்யம்- ஏற்கனவே படைக்கப்பட்டிருப்பது; ஸ்ருஜாமி- நான் கண்டுபிடிக்கிறேன்; ஸ்ருஷ்ட:- படைக்கப்பட்ட; அஹம்—நான்; ஈக்ஷயா -துரிதமான பார்வையால்; ஏவ-அது போலவே: அபிசோதித:– அவரால் ஊக்கம் அளிக்கப்படும்.
அவரால் ஊக்கமளிக்கப்படுவதால் மட்டுமே, பரமாத்மாவாக எங்கும் பரவியுள்ள அவரது (நாராயணர்) பார்வையின் கீழ் ஏற்கனவே அவரால் படைக்கப்பட்டுவிட்டதை நான் கண்டு பிடிக்கிறேன். நானும் அவரால் படைக்கப்பட்டவனே.
பதம் 2.5.18
ஸத்வம் ரஜஸ் தம இதி நிர்குணஸ்ய குணாஸ் த்ரய:
ஸ்திதி-ஸர்க-நிரோதேஷு க்ருஹீதா மாயயா விபோ:
ஸத்வம்– சத்வ குணம்; ரஜ:-ரஜோ குணம்; தம:-தமோ குணம்; இதி-இவையெல்லாம்; நிர்குணஸ்ய-தெய்வீகத்தின்; குணா-திரய:-முக்குணங்களாகும்; ஸ்திதி-பராமரிப்பு: ஸர்க—படைப்பு; நிரோதேஷு-அழிவில்; க்ருஹீதா-ஏற்றுக் கொண்ட; மாயயா-பகிரங்க சக்தியால்; விபோ:-பரமனின்.
பரமபுருஷரின் தூய ஆன்மீக உருவம் எல்லா பௌதிக குணக்களுக்கும் மேலானதாகும். இருப்பினும் ஜட உலகை படைத்து, காத்து, அழிப்பதற்காக அவர் தமது பகிரங்க சக்தியின் வாயிலாக சத்வம், ரஜ தமஸ் எனும் ஜட இயற்கைக் குணங்களை ஏற்கிறார்.
பதம் 2.5.19
கார்ய-காரண-கர்த்ருத்வே த்ரவ்ய-ஞான-க்ரியாஸ்ரயா:
பத்னன்தி நித்யதா முக்தம் மாயினம் புருஷம் குணா:
கார்ய-விளைவு; காரண—காரணம்; கர்த்ருத்வே-செயல்களில்; திரவ்ய-பொருள்; ஞான- அறிவு; க்ரியா ஆஸ்ரயா:-அத்தகைய தோற்றுவிக்கப்பட்ட; பத்னன்தி-சூழ்நிலைகள்; நித்யதா-நித்தியமாக; முக்தம்—உன்னதமான; மாயினம்- ஜட பாதிப்படைந்து; புருஷம்-ஜீவராசி; குணா:- ஜடக் குணங்கள்.
ஜட இயற்கையின் இம்மூன்று குணங்கள், தொடர்ந்து பொருள், அறிவு மற்றும் செயல்களாகவும் உருவெடுத்திருக்கின்றன. இதனால் இக்குணங்கள், நித்தியமான உன்னதத் தன்மையைக் கொண்ட ஜீவராசியைக் காரண, விளைவு எனும் சூழ் நிலைகளில் புகுத்தி, அத்தகைய செயல்களுக்கு அவனையே பொறுப்பேற்கச் செய்கின்றன.
பதம் 2.5.20
ஸ ஏஷ பகவால் லிசைகஸ் த்ரிபிர் ஏதைர் அநோக்ஷஜ:
ஸ்வலக்ஷித-கதிர் ப்ரஹ்மன் ஸர்வேஷாம் மம சேஸ்வர:
ஸ;—அவர்; ஏஷூ-இந்த; பகவான்-பரமபுருஷர்; லிசைக-அறிகுறிகளால்; த்ரிபி:-மூன்றால்; ஏதை:—இவை அநோக்ஷஜ:-பரமபுருஷர்; ஸு அலக்ஷித-உண்மையில் காணப்பட முடியாத; கதி -அசைவு: ப்ரஹ்மன்–நாரதரே; ஸர்வேஷாம்- அனைவரின்; மம-எனது: ச-அவ்வாறே; ஈஸ்வர:-ஆளுனர்.
பிராமண நாரதா, மேற்குறிப்பிட்ட இயற்கையின் முக்குணங்களின் காரணத்தால், பரமபுருஷர், ஜீவராசிகளுடைய ஜடப் புலன்களின் அறிவாற்றலுக்கு அப்பாற்பட்டவராக இருக்கிறார். ஆனால் என்னை உட்பட அனைவரையும் ஆள்பவர் அவரேயாவார்.
பதம் 2.5.21
காலம் கர்ம ஸ்வபாவம் ச மாயேசோ மாயயா ஸ்வயா
ஆத்மன் யத்ருச்சயா ப்ராப்தம் விபுபூஷுர் உபாததே
காலம்-நித்திய காலம்; கர்ம-ஜீவராசியின் விதி: ஸ்வபாவம்- இயற்கை; ச-மேலும்; மாயா- சக்தி; ஈச -ஆளுனர்; மாயயா- சக்தியால்; ஸ்வயா-அவரது சொந்த: ஆத்மன் (ஆத்மனி)-அவரது ஆத்மாவில்; யத்ருச்சயா-சுதந்திரமாக: ப்ராப்தம்- ஆழ்ந்திருப்பதால்; விபுபூஷு-வேறாகக் காட்சியளிக்கும்; உபாததே- மீண்டும் படைக்கப்படுவதற்காக கொள்ளப்பட்ட.
இவ்வாறாக எல்லாச் சக்திகளையும் ஆள்பவரான பகவான் தமது சுய சக்தியால், நித்தியமான காலம், அனைத்து ஜீவராசிகளின் விதி மற்றும் அவரவர்களுக்குரிய இயற்கை ஆகியவற்றைப் படைக்கிறார். அவர்களை அவர் தனித்தனியாக தமக்குள் ஐக்கியப்படுத்திவிடுகிறார்.
பதம் 2.5.22
காலாத் குண-வ்யதிகர: பரிணாம ஸ்வபாவத:
கர்மணோ ஜன்ம மஹத: புருஷாதிஷ்டிதாத் அபூத்
காலத்- நித்திய காலத்திலிருந்து; குண—வ்யதிகர:-பிரதி விளைவால் உண்டாகும். குணங்களின் உருமாற்றம்; உருமாற்றம்; ஸ்வபாவத:-இயற்கையிலிருந்து; பரிணாம கர்மண:-செயல் களின் ஜன்ம-படைப்பு: மஹத:-மஹத்-தத்வத்தின்; புருஷ அதிஷ்டிதாத்-பகவானின் புருஷ அவதாரங்களின் காரணத்தால்: அபூத்—அது நிகழ்ந்தது.
முதல் புருஷரின் (காரணார்ணவசாயீ விஷ்ணு) அவதாரத்திற்குப் பிறகு, “மஹத்-தத்வம்”, அல்லது ஜடப் படைப்பின் அடிப்படைக் கொள்கைகள் உண்டாயின. பிறகு காலம் தோன்றியது. மேலும் காலப் போக்கில் முக்குணங்கள் தோன்றின. இயற்கை என்பது முக்குணங்களின் தோற்றங்களாகும். அவை செயல்களாக உருமாறுகின்றன.
பதம் 2.5.23
மஹதஸ் து விகுர்வாணாத் ரஜ:-ஸத்வோபப்ரும்ஹிதாத்
தம-ப்ரதானஸ் து அபவத் த்ரவ்ய-ஞான-க்ரியாத்மக:
மஹத-மஹத் தத்வத்தின், து-ஆனால்; விகுர்வாணாத்- உருமாற்றம் செய்யப்படும். ரஜ:—பௌதிகமான ரஜோ குணம்: ஸத்வ- சத்வ குணம்; உபப்ரும்ஹிதாத்- அதிகரிக்கப்படுவதால்; தம- தமோ குணம்: ப்ரதான.-முக்கியமானதாக இருப்பதால்; அபவத்-திகழ்ந்தது: தீரவ்ய-ஜடம்; ஞான-பௌதிக அறிவு: ஆதிம—மேலோங்கியுள்ள ஜடச் செயல்கள்.
“மஹத்-தத்வம்” சலனமடைவதால் ஜடச் செயல்கள் உண்டாகின்றன. முதலாவதாக சத்வ மற்றும் ரஜோ குணங்களின் உருமாற்றர் உண்டாகின்றன. பிறகு தமோ (அறியாமை) குணத்தின் காரணத்தால் ஜடம், அதன் அறிவு, மற்றும் பௌதிக அறிவின் பல்வேறு செயல்வ ஆகியவை நிகழத் துவங்குகின்றன.
பதம் 2.5.24
ஸோ ‘ஹங்கார இதி ப்ரோக்தோ விகுர்வன் ஸமபூத் த்ரிதா
வைகாரிகஸ் தைஜஸஸ் ச தாமஸஸ் சேதி யத்-பிதா
த்ரவ்ய-சக்தி: க்ரியா-சக்திர் ஞான-சக்திர் இதி ப்ரபோ
ஸ: அதே பொருள்; அஹங்கார—அகங்காரம்; இதி-இவ்வாறாக; ப்ரோக்த.- கூறப்பட்ட; விகுர்வன்-உருமாற்றப்படுவதால்; ஸமபூத்- தோற்றுவிக்கப்பட்டது; த்ரிதா-மூன்று அம்சங்களில்; வைகாரிக: சத்வ குணத்தில்; தைஜஸ:-ரஜோ குணத்தில்; ச-மேலும்; தாமஸ: தமோ குணத்தில்; ச-மேலும்; இதி— இவ்வாறாக; யத்– எது: பிதா- பிரிக்கப்பட்டு; த்ரவ்ய-சக்தி:-ஜடத்தை விருத்தியாக்கும் சக்திகள்; க்ரியா-சக்தி-படைப்பை உண்டு பண்ணும் சக்தி: ஞான சக்தி- வழிகாட்டும் புத்தி; இதி—இவ்வாறாக; ப்ரபோ-ஓ எஜமானரே.
இவ்வாறாக, சுயநலம் கருதும் பௌதிக அகங்காரம், மூன்று அம்சங்களில் உருமாற்றம் செய்யப்பட்டு, சத்வம், ரஜஸ், தமஸ் எணும் முப்பிரிவுகளாக அறியப்படுகிறது. அப்பிரிவுகள், ஜடத்தை விருந்தியாக்கும் சக்திகள், ஜட படைப்பைப் பற்றிய அறிவு, மற்றும் அத்தகைய பௌதிகச் செயல்களை வழி நடத்தும் புத்தி ஆகியவை ஆகும். நாரதா, இதைப் புரிந்து கொள்வதற்குரிய முழு தகுதியை நீ பெற்றிருக்கிறாய்.
பதம் 2.5.25
தாமஸாத் அபி பூதாதேர் விகுர்வாணாத் அபூன் நப:
தஸ்ய மாத்ரா குண: சப்தோ லிங்கம் யத் திரஷ்ட்ரு திருஸ்யயோ:
தாமஸாத் -பொய் அகங்காரம் எனும் இருளிலிருந்து; அபி- நிச்சயமாக; பூத-ஆதெ-மூலப் பொருட்களின்; விகுர்வாணாத்- உருமாற்றத்தின் காரணத்தால்; அபூத்- உண்டாக்கப்படுகிறது. நப-வானம், தஸ்ய-அதன்; மாத்ரா- சூட்சும வடிவம்: குண- இயல்பு: சப்த- ஓசை; லிங்கம்- சிறப்பியல்புகள்; யத்-அதனுடைய; த்ரஷ்ட்ரூ-காண்பவன்; த்ருஸ்யயோ:-காணப்படுவதன்.
ஐந்து மூலப் பொருட்களில் முதலாவதான ஆகாயம், பொய் அகங்காரத்தின் இருளிலிருந்து உற்பத்தி செய்யப்படுகிறது. காண்பவன் காட்சியோடு தொடர்பு கொண்டிருப்பதைப் போலவே, ஓசை ஆகாயத்தின் சூட்சும வடிவமாக இருக்கிறது.
பதங்கள் 2.5.26 – 2.5.29
நபஸோ த விகுர்வாணாத் அபூத் ஸ்பர்ச-குணோ ‘நில’
பராண்வயாச் சப்தவாம்ஸ் ச ப்ராண ஓஜ: ஸஹோ பலம்
வாயோர் அபி விகுர்வாணாத் கால-கர்ம-ஸ்வபாவாத:
உதபத்யத தேஜோ வை ரூபவத் ஸ்பார்ச-சப்தவத்
தேஜஸஸ் து விகுர்வாணாத் ஆஸீத் அம்போ ரஸாத்மகம்
ரூபவத் ஸ்பர்சவச் சாம்போ கோஷவச் ச பரான்வயாத்
விசேஷஸ் து விகுர்வாணாத் அம்பஸோ கந்தவான் அபூத்
பரான்வயாத் ரஸ-ஸ்பர்ச சப்த-ரூப-குணான்வித:
நபஸ:- ஆகாயத்தின்; அத—இவ்வாறாக; விகுர்வாணாத்- உருமாற்றப்பட்டு: அபூத்—உண்டாக்கப்பட்டது; ஸ்பர்ச-ஸ்பரிசம்; குண:-குணம்; அநில:- காற்று; பர-முந்தைய ; அன்வயாத் -தொடர்ச்சியின் மூலமாக; சப்தவான்— ஓசைநிரம்பிய; ச-மேலும்; ப்ராண:-உயிர்; ஓஜ:-புலன் உணர்வு; ஸஹ:-தடிப்பு; பலம்-பலம்: வாயோ:-காற்றின்; அபி-மேலும்; விகுர்வாணாத்- உருமாற்றத்தால்; உதபத்யத- உண்டாக்கப்பட்டது; கால— காலம்; கர்ம—கடந்த காலத்தின் பிரதி விளைவு; ஸ்வபாவாத-இயற்கையின் அடிப்படையில்; தேஜ:- நெருப்பு; வை – தகுந்தவாறு; ரூபவத்—உருவத்துடன்; ஸ்பார்ச-ஸ்பரிசம்; சப்தவத்-ஓசையுடனும்; தேஜஸ:-நெருப்பின்; து-ஆனால்; விகுர்வாணாத்—உருமாற்றப்படுவது குறித்து; ஆஸீத்’ அவ்வாறு நிகழ நேர்ந்தது; அம்ப:-நீர்; ரஸ ஆத்மகம்—சாறு கொண்டே: ரூபவத்-உருவத்துடன்; ஸ்பர்சவத்—ஸ்பரிசத்துடன்; ச-மேலும்; அம்ப:-நீர்; கோஷவத்- ஓசையுடன்; ச-மேலும்; பர-முந்திய; அன்வயாத்-தொடர்ச்சியால்; விசேஷ:-பல வகைப்பட்ட நிலை; து—ஆனால்; விகுர்வாணாத்-உருமாற்றத்தால்; அம்பஸ:- நீரின்; கந்தவான்-வாசனையுள்ள; அபூத்- மாற்றமடைந்து; பர-முந்திய; அன்வயாத்- தொடர்ச்சியால்; ரஸ—சாறு ; ஸ்பர்ச-ஸ்பரிசம்; சப்த- ஓசை; ரூப-குண-அன்வித:-குணத்தைத் தழுவிய.
ஆகாயம் உருமாற்றப்பட்டுள்ளதால், காற்று ஸ்பரிசத்தின் தன்மையுடன் உண்டாக்கப்பட்டு உள்ளது. மேலும், முந்திய தொடர்பால் காற்று, ஓசையாலும், ஆயுளின் அடிப்படைக் கொள்கைகளான: புலன் உணர்வு, மனோ சக்தி மற்றும் உடல் வலிமை ஆகியவற்றாலும் நிரப்பப்பட்டதாக உள்ளது. நாளடைவில் காற்று உருமாற்றப்படும் பொழுது, நெருப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நெருப்பு ஸ்பரிச உணர்வு மற்றும் ஓசைஆகியவற்றுடன் கூடிய வடிவத்தை ஏற்கிறது. நெருப்பும் உருமாற்றப்படுவதால், சாறும், சுவையும் நிறைந்த நீர் தோன்றுகிறது. முந்தியவைகளைப் போன்று, இதற்கும் வடிவமும், ஸ்பரிசமும் இருப்பதுடன், இது ஓசையால் நிரப்பப்பட்டதாகவும் உள்ளது. மேலும் நீர், நிலத்தின் மீதுள்ள பலவகைப்பட்ட பொருட்களின் உருமாற்றமாக இருப்பதால், வாசனையுள்ளதாகக் காணப்படுகிறது. முந்தியதைப் போலவே, இதுவும் முறையே சாறு, ஸ்பரிசம், ஓசை மற்றும் வடிவம் ஆகிய தன்மைகள் நிரம்பியதாக ஆகிறது.
பதம் 2.5.30
வைகாரிகான் மனோ ஜக்ஞே தேவா வைகாரிகா தச
திக்-வாதார்க-ப்ரசேதோ ‘ஸ்வி-வஹ்னீந்தரோயேந்ர-மித்ர-கா:
வைகாரிகாத்-சத்வ குணத்திலிருந்து; மன:-மனம்; ஜக்ஞே- உற்பத்தி செய்யப்படுகின்றன; தேவா-தேவர்கள்; வைகாரிகா- சத்வ குணத்தில்; தச-பத்து; திக்-திசைகளை ஆள்பவர்; வாத-காற்றை கட்டுப்படுத்துபவர்: அர்க-சூரியன்; ப்ரசேத-வருணன்; அஸ்வி- அஸ்வினி குமாரர்கள்; வஹ்னி—அக்னி தேவன்; இந்ர-சுவர்க்கத்தின் அரசன்; உபேந்ர-சுவர்க்கத்தின் மூர்த்தி; மித்ர-பன்னிரண்டு
ஆதித்தியர்களில் ஒருவர்; கா:-பிரஜாபதி பிரம்மா.
சத்வகுணத்திலிருந்து மனம் உற்பத்தி செய்யப்பட்டு தோற்றமளிக்கிறது. அவ்வாறே உடல் அசைவுகளை கட்டுப்படுத்துபவர்களான பத்து தேவர்களும் தோன்றுகின்றனர். அத்தகைய தேவர்கள்: – திக்குகளை ஆள்பவர், காற்றை ஆள்பவர், சூரிய தேவன், தக்ஷ பிரஜாபதியின் தந்தை அஸ்வினி குமாரர்கள், அக்னி தேவன், சுவர்க்க ராஜன், சுவர்க்கத்தின் வழிபாட்டுக்குரிய மூர்த்தி, ஆதித்தியர்களின் தலைவர் மற்றும் பிரஜாபதி பிரம்மா ஆகியோராவர். இவர்கள் அனைவரும் தோற்றமளிக்கின்றனர்.
பதம் 2.5.31
தைஜஸாத் து விகுர்வாணாத்
இந்ரிபாணி தசாபவன்
ஞான-சக்தி: க்ரியா-சக்திர்
புத்தி:ப்ராணஸ் ச தைஜசௌ
ஸ்ரோத்ரம் தீவக்-கிராண-த்ருக்-ஜிஹ்வா
வாக்-தோர்- மேட்ராசரி-பாயவ:
தைஜஸாத்- தீவிர அகங்காரத்தால்; து-ஆனால்; விகுர்வாணாத்- உருமாற்றம்; இந்ரிபாணி-புலன்கள்; தச-பத்து: அபவன்-உற்பத்தி செய்யப்படுகிறது; ஞான-சக்தி: அறிவைத் திரட்டுவதற்குரிய ஐம்புலன்கள், க்ரியா சக்தி-ஐந்து செயற்புலன்கள்; புத்தி.-புத்தி; ரொண-உயிர்ச் சக்தி: ச-மேலும்; தைஜசௌ-ரஜோ குணத்தின் அனைத்து உற்பத்திப் பொருட்கள்; ஸ்ரோத்ரம்-கேட்கும் புலன்; த்வக் -ஸ்பரிசத்திற்குரிய புலன்; க்ராண—நுகரும் புலன்; த்ருக்—காணும் புலன்: ஜிஹ்வா:-சுவைப் புலன்; வாக்-பேச்சுப் புலன்; தோ: தொடுவதற்குரிய புலன்; மேட்ர-புற பாலுறுப்புக்கள்; அசரி-கால்கள்; பாயவ:— மலம் கழிப்பதற்குரிய புலன்.
ரஜோ குணத்தின் தொடர்ந்த உருமாற்றத்தால், செவி, தோல், மூக்கு, கண்கள், வாய், கைகள், புற பாலுறுப்புக்கள், கால்கள் மற்றும் மலத்துவாரம் போன்ற புலனுறுப்புக்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவற்றோடு புத்தியும், உயிர்ச் சக்தியும் உற்பத்தியாகின்றன.
பதம் 2.5.32
யதைதே ‘ஸங்கதா பாகா பூதேந்ரிய-மனோ-குணா:
யதாயதன-நிர்மாணே ந சேகுர் ப்ரஹ்ம-வித்தம
யதா—இருக்கும் அளவும்; ஏதே- இவ்வெல்லா; அஸங்கதா: இணைக்காமல்; பாவா:—அவ்வாறு நிலைப்பெற்றிருந்த; பூத- மூலப் பொருட்கள்; இந்ரிய-புலன்கள்; மன:-மனம்; குணா:இயற்கைக் குணங்கள்; யதா—அது வரைக்கும்; ஆயதன—உடல்; நிர்மாணே-உருவாக்கப்படுவதில்; ந சேகு:-சாத்தியமானதாக இல்லை; ப்ரஹ்ம- வித்- தம-உன்னத அறிவை நன்கு அறிந்துள்ள நாரதா.
ஆன்மீகிகளில் மிகச் சிறந்த நாரதா, மூலப் பொருட்கள், புலன்கள், மனம் மற்றும் இயற்கைக் குணங்கள் ஆகிய இவற்றைப் பொருந்தும்படி இணைக்காத வரை உடல் எனப்படும் வடிவங்களை உருவாக்க முடியாது.
பதம் 2.5.33
ததா ஸம்ஹத்ய சான்யோன்யம் பகவச்-சக்தி-சோதிதா:
ஸத்-அஸத்வம் உபாதாய சோபயம் ஸஸ்ருஜுர் ஹி அத:
ததா—அவ்வெல்லா; ஸம்ஹத்ய-இணைக்கப்பட்டு ; ச- தவிரவும்; அன்யோன்யம்-ஒன்றுக்கொன்று; பகவத்-முழுமுதற் கடவுளால்; சக்தி- சக்தி; சோதிதா:- உபயோகிக்கப்படும்; ஸத்- அஸத்வம்-முக்கியமானதும், இரண்டாந்தரமானதும்; உபாதாய-ஏற்றுக் கொள்வதன்; ச-அன்றியும்: உபயம் -இரண்டையும்; ஸஸ்ருஜு-தோன்றியது: ஹி-நிச்சயமாக; அத:-இப்பிரபஞ்சம்.
இவ்வாறக பரமபுருஷ பகவானுடைய சக்தியின் வலிமையால் இவையனைத்தும் ஒன்றாக இணைக்கப்பட்ட பொழுது, சிருஷ்டி உபசிருஷ்டி ஆகியவற்றின் மூலமாக, இப்பிரபஞ்சம் தோன்றியது என்பதில் சந்தேகமில்லை.
பதம் 2.5.34
வர்ஷ-பூக-ஸஹஸ்ரந்தே தத் அண்டம் உதகே சயம்
கால-கர்ம-ஸ்வபாவ-ஸ்தோ ஜீவோ ‘ஜீவம் அஜீவயத்
வர்ஷ-பூக-பல ஆண்டுகள்; ஸஹஸ்ர அந்தே-ஆயிரக்கணக்கான ஆண்டுகளின்; தத்-அந்த; அண்டம்-பிரபஞ்ச கோளம்; உதகே- காரண ஜலத்தில்; சயம்-மூழ்கடிக்கப்பட்டு: கால-நித்திய காலம்; கர்ம-செயல்; ஸ்வபாவ ஸ்த: இயற்கையின் குணங்களுக்கு ஏற்ப; ஜீவ:-ஜீவராசிகளின் பகவான்; அஜீவம்-இயக்கமற்றது; அஜீவயத்— இயக்கப்பட்டது.
இவ்வாறாக பிரபஞ்சங்கள் அனைத்தும் ஆயிரக்கணக்கான யுகங்களாக நீருக்குள் (காரண கடலினுள்) மூழ்கிக் கிடந்தன. ஜீவ ராசியின் இறைவனான பகவான் அவை ஒவ்வொன்றிலும் புகுந்து, அவற்றைச் சுறுசுறுப்பாக இயங்கும்படி செய்தார்.
பதம் 2.5.35
ஸ ஏவ புருஷஸ் தஸ்மாத் அண்டம் நிர்பித்ய நிர்கத:
ஸஹஸ்ரோர்வ்-அங்ரி-பாஹு-அக்ஷ:ஸஹஸ்ரானன-சீர்ஷவா
ஸ-அவர்(பகவான்); புருஷ:-பரமபுரு பகவான்; தஸ்மாத்-பிரபஞ்சத்திற்கு உள்ளிருந்து; அண்டம்-ஹிரண்யகர்பம்; ஏவ-அவராக; நிர்பித்ய-பாகங்களாக பிரித்து; நிர்கத:-வெளியே வந்தார்; ஸஹஸ்ர -ஆயிரக்கணக்கான; ஊரு -தொடை; அங்ரி- கால்கள்; பாஹு-கரங்கள்; அக்ஷ:-கண்கள்; ஸஹஸ்ர-ஆயிரக்கணக்கான ; ஆனன— வாய்கள்; சீர்ஷவான்—தலைகளோடும்.
பகவான் (மஹாவிஷ்ணு), காரணஜலத்தில் பள்ளி கொண்டிருந்தாலும், அதிலிருந்து வெளியேறி, தம்மை ஹிரண்யகர்பராக பிரித்துக் கொண்டு ஒவ்வொர் பிரபஞ்சத்திற்குள்ளும் புகுந்து, ஆயிரக்கணக்கான கால்கள், கரங்கள், வாய்கள் மற்றும் தலைகள் முதலியவைகளைக் கொண்ட விராட் ரூபத்தை மேற்கொண்டார்.
பதம் 2.5.36
யஸ்யேஹாவயவைர் லோகான் கல்பயந்தி மனீஷிண:
கட்ய-ஆதிபிர் அத: ஸப்த ஸப்தோர்த்வம் ஜகனாதிபி:
யஸ்ய-யாருடைய; கற்பனை செய்து இஹ-பிரபஞ்சத்தில்; அவயவை:-உடல் உறுப்புக்களால்; லோகான் – அனைத்து கிரகங்களும்; கல்பயந்தி- கற்பனை செய்து கொள்கின்றனர்; மனீஷிண:- மிகச் சிறந்த தத்துவவாதிகள்; கடி-ஆதிபி:-இடுப்பிலிருந்து கீழே; அத:-கீழ் நோக்கி; ஸப்த-ஏழு அமைப்புக்கள்; ஸப்த ஊர்தம் மற்றும் மேல் நோக்கிய ஏழு அமைப்புக்கள்; ஜகன ஆதிபி:-முன் பக்கம்.
பிரபஞ்சத்திலுள்ள முழு கிரக அமைப்புக்களும், பகவானுடைய பிரபஞ்ச உடலின் மேலும், கீழும் உள்ள வெவ்வேறு அங்கங்களின் தோற்றங்கள் என்று சிறந்த தத்துவவாதிகள் கற்பனை செய்து கொள்கின்றனர்.
பதம் 2.5.37
புருஷஸ்ய முகம் ப்ரஹ்ம க்ஷத்ரம் ஏதஸ்ய பாஹவ:
ஊர்வோர் வைஸ்யோ பகவத: பதப்யாம் சூத்ரோ வ்யஜாயத
புருஷஸ்ய-பரமபுருஷ பகவானின்; முகம்- வாய்; ப்ரஹ்ம க்ஷத்ரம்-ராஜ வகுப்பு; ஏதஸ்ய-அவரது; பாஹவ: ஊர்வோ:- தொடைகள்; வைஸ்ய:-வர்த்தகர்களாவர்;
பகவத:-பகவானின்; பதப்யாம்-அவரது கால்களிலிருந்து; சூத்ர: தொழிலாளி வகுப்பினர்; வ்யஜாயத-உண்டானது.
பிராமணர்கள் அவரது (பகவான்) வாயையும், க்ஷத்ரியர்கள் அவரது கரங்களையும், வைசியர்கள் அவரது இடையையும் பிரதிநிதிக்கின்றனர். சூத்திரர்கள் அவரது கால்களிலிருந்து பிறக்கின்றனர்.
பதம் 2.5.38
பூர்லோக: கல்பித: பத்ப்யாம் புனர்லோகோ ‘ஸ்ய நாபித:
ஹ்ருதா ஸ்வர்லோக உரஸா மஹர்லோகோ மஹாத்மன:
பூ:-பூமியின் படுகை வரை மேல் நோக்கியுள்ள கீழான கிரக அமைப்புக்கள்; லோக:-கிரகங்கள்; கல்பித:- அது அவ்வாறு கூறப்படுகிறது; பத்ப்யாம்- கால்களிலிருந்து; புவ:- மேற்புறத்து; லோக:- கிரக அமைப்புக்கள்; அஸ்ய-அவரது (பகவான்); நாபித: நாபி அமைந்துள்ள வயிற்றுப் பாகத்திலிருந்து; ஹ்ருதா—இதயத்தால்; ஸ்வர்லோக:-தேவர்களால் ஆக்ரமிக்கப்பட்டுள்ள கிரக அமைப்புக்கள்; உரஸா-மார்பால்; மஹர்லோக:-பெரும் முனிவர்களாலும், ஞானிகளாலும் ஆக்ரமிக்கப்பட்டுள்ள கிரக அமைப்பு மஹா ஆத்மன: பரமபுருஷ பகவானின்.
பூமிப் படுகை வரையுள்ள, கீழான கிரக அமைப்புக்கள், அவரது (பகவான்) பாதங்களில் அமைந்திருப்பதாக கூறப்படுகிறது. லோகத்திலிருந்து துவங்கும் மத்திய கிரக அமைப்புக்கள், அவரது நாபியில் புவர் அமைந்திருக்கின்றன. மேலும் தேவர்களாலும், சீரிய நற்பண்புகள் கொண்ட முனிவர்களாலும், ஞானிகளாலும் ஆக்ரமிக்கப்பட்டுள்ள இன்னும் மேலான கிரக அமைப்புக்கள், பரம புருஷரின் மார்பில் அமைந்துள்ளன.
பதம் 2.5.39
க்ரீவாயாம் ஜனலோகோ ‘ஸ்ய தபோலோக: ஸ்தன-த்வயாத்
மூர்தபி: ஸத்யலோகஸ் து ப்ரஹ்மலோக: ஸனாதன:
க்ரீவாயாம்-கழுத்து வரையுள்ள; ஜனலோக:-ஜனலோகம்; தபோலோக- தபோலோகம் எனப்படும் கிரக அமைப்பு; ஸ்தன-த்வயாத்- மார்பிலிருந்து துவங்கி; ஸத்யலோக- சத்யலோகம் எனப்படும் கிரக அமைப்பு; து—ஆனால்; அஸ்ய-அவரது; மூர்தபி:- தலையால்;. ப்ரஹ்மலோக:-ஆன்மீக உலகங்கள்: ஸனாதன:— நித்தியமான.
பகவானுடைய மார்பின் முற்பகுதியிலிருந்து அவரது பிரபஞ்ச உருவத்தின் கழுத்து வரை ஜனலோகம் மற்றும் தபோலோகம் என்ற பெயர்களைக் கொண்ட கிரக அமைப்புக்கள் அமைந்துள்ளன. ஆனால் மிக உயர்ந்த கிரக அமைப்புக்கள் அமைந்துள்ளன. ஆனால் மிக உயர்ந்த கிரக அமைப்பான சத்யலோகம், அவ்வுருவத்தின் தலை மீது அமைந்துள்ளது. ஆனால் ஆன்மீக கிரகங்கள் நித்தியமானவையாகும்.
பதங்கள் 2.5.40 – 2.5.41
தத்-கட்யாம் சாதனம் க்லுப்தம் ஊருப்யாம் விதளம் விபோ:
ஜானுப்யாம் ஸுதளம் சுத்தம் ஜங்காப்யாம் து தலாதளம்
மஹாதளம் து குல்பாப்யாம் ப்ரபதாப்யாம் ரஸாதளம்
பாதாளம் பாத-தளத இதி லோகமய: புமான்
தத்—அவருடையதில்; கட்யாம்-இடுப்பு; ச-அன்றியும், அதனம்- பூமிக்குக் கீழேயுள்ள முதல் கிரக அமைப்பு: க்லுப்தம்— அமைந்திருக்கிறது; ஊருப்யாம்—தொடைகளின் மீது; விதளம்-கீழே உள்ள இரண்டாவது கிரக அமைப்பு; விபோ:-பகவானின் ஜானுப்யாம்-கணுக்கால்களின் மீது; ஸுதளம்—கீழுள்ள மூன்றாவது கிரசு. அமைப்பு; சுத்தம்- தூய்மையடைந்த; ஜங்காப்யாம்-கணுக்களின் மீது; து-ஆனால்; தலாதளம்-கீழுள்ள நான்காவது கிரக அமைப்பு; மஹாதளம்- கீழுள்ள ஐந்தாவது கிரக அமைப்பு; து -ஆனால்; குல்பாப்யாம்-கெண்டைக்கால்களின் மீது அமைந்துள்ளது; பிரபதாய்யாம்- பாதங்களின் மேல் அல்லது முன்புறத்தில்; ரஸாதளம்— கீழுள்ள ஆறாவது கிரக அமைப்பு: பாதாளம்- கீழுள்ள ஏழாவது கிரக அமைப்பு; பாத தளத:-பாதங்களின் கீழ்ப்புறத்தில் அல்லது உள்ளங்கால்களில்; இதி- இவ்வாறாக; லோக-மய -கிரக அமைப்புக்கள் நிறைந்ததாக உள்ளது; புமான்- பகவான்.
எனதருமைப் புதல்வனே நாரதா, மொத்தமுள்ள பதினான்கு கிரக அமைப்புக்களில், ஏழு, கீழான கிரக அமைப்புக்கள் எவை என்பதை என்னிடமிருந்து அறிவாயாக. அதளம் என்றறியப்படும் முதல் இரக அமைப்பு இடுப்பின் மீது அமைந்துள்ளது. இரண்டாவதான, விதளம், முழங்கால்களின் மீதும்; நான்காவதான, தலாதளம், முழங்காலுக்கும் கணுக்காலுக்கும் இடைப்பட்ட பாகத்திலும், ஐந்தாவதான, மகாதளம், கணுக்கால்களின் மீதும்; ஆறாவதான், ரஸாதளம் பாதங்களின் மேற்பகுதியிலும், மற்றும் ஏழாவதான, பாதாளம், உள்ளங்கால்களிலும் அமைந்திருக்கின்றன. இவ்வாறாக பகவானின் விராட்-ரூபம், எல்லா மைப்புக்களாலும் நிரப்பப்பட்டுள்ளது.
பதம் 2.5.42
பூர்லோக: கல்பித: பத்ப்யாம் புவர்லோகோ ‘ஸ்ய நாபித:
ஸ்வர்லோக: கல்பிதோ மூர்தனா இதி வா லோக-கல்பனா
பூர்லோக:- பாதாளத்திலிருந்து மண்ணுலகம் வரையுள்ள அனைத்து கிரக அமைப்புகளும்; கல்பித:-கற்பனை செய்யப்பட்ட; பத்ப்யாம்- கால்களின் மீது அமைந்துள்ள; புவர்லோக:-புவர் லோகம் எனப்படும் கிரக அமைப்பு: அஸ்ய-பகவானுடைய பிரபஞ்ச ரூபத்தின்; நாபித- நாபிக்கு வெளியே; ஸ்வர்லோக:-சுவர்க்க ஆரம்பமாகும் மேல் கிரக அமைப்பு; கல்பித:- கற்பனை செய்யப்பட்ட; மூர்தனர்-மார்பிலிருந்து தலை வரை; இதி- இவ்வாறாக; வா-இரண்டிலொன்று; லோக—கிரக அமைப்புக்கள்; கல்பனா—கற்பனை.
மற்றவர்கள் முழு கிரக அமைப்பையும் மூன்று பிரிவுகளாக பிரிக்கக் கூடும். அவை கால்களிலுள்ள (பூமி வரையுள்ள) கீழான கிரக அமைப்புக்கள், நாபியின் மேலுள்ள மத்திய கிரக அமைப்புக்கள், மற்றும் பரமபுருஷரின் மார்பிலிருந்து தலை வரையுள்ள மேல் கிரக அமைப்புக்கள் (சுவர்லோகம்) என்பனவாகும்.
ஸ்ரீமத் பாகவதம், இரண்டாம் – காண்டத்தின், “சர்வ காரணங்களுக்கும் மூல காரணம்” எனும் தலைப்பைக் கொண்ட ஐந்தாம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றது.