அத்தியாயம் – 5
சர்வ காரணங்களுக்கும் மூல காரணம்
பதம் 2.5.1 : ஸ்ரீ நாரத முனி பிரம்மதேவரிடம் வினவினார்; தேவர்களுக்கெல்லாம் தலைமையானவரே, முதன் முதலாகப் பிறந்த ஜீவராசியே, எனது பணிவான வணக்கங்களை தங்களுக்கு நான் சமர்ப்பிக்கிறேன். தனிப்பட்ட ஆத்மா மற்றும் பரமாத்மா ஆகியவற்றின் உண்மையை அறிய வழிகாட்டும் அவ்வுன்னத அறிவை தயவு செய்து எனக்குக் கூறுவீராக.
பதம் 2.5.2 : எனது அன்புள்ள தந்தையே, படைக்கப்பட்ட இவ்வுலகின் அறிகுறிகளை தயவு செய்து உள்ளபடி விவரிப்பீராக. அதன் பின்னணிச் சூழல் என்ன? அது எவ்வாறு சிருஷ்டிக்கப்பட்டது? அது எவ்வாறு காக்கப்படுகிறது? மேலும் இவையனைத்தும் யாருடைய கட்டுப்பாட்டின் கீழ் நடைபெறுகின்றன?
பதம் 2.5.3 : தந்தையே, கடந்த காலத்தில் என்னவெல்லாம் படைக்கப்பட்டதோ, எதிர்காலத்தில் என்னவெல்லாம் படைக்கப்படுமோ, அல்லது நிகழ்காலத்தில் என்னவெல்லாம் படைக்கப்படுகின்றனவோ, அது மட்டுமின்றி பிரபஞ்சத்திலுள்ள அனைத்தும் உமது உள்ளங்கை நெல்லிக்கனியாக இருப்பதால், இவையனைத்தையும் விஞ்ஞான பூர்வமாக தாங்கள் அறிந்திருக்கிறீர்கள்.
பதம் 2.5.4 : எனதன்புத் தந்தையே, உமது அறிவின் பிறப்பிடம் எது? யாருடைய பாதுகாப்பின் கீழ் தாங்கள் இருக்கிறீர்கள்? மேலும் யாருக்கும் கீழ்ப்படிந்து தாங்கள் செயற்படுகிறீர்கள்? உமது உண்மையான நிலை என்ன அனைத்து ஜீவராசிகளையும், பௌதிக மூலப் பொருட்களையும் உமது சொந்த சக்தியால் தனித்து நின்றே சிருஷ்டிக்கிறீர்களா?
பதம் 2.5.5 : சிலந்தி அதனுடைய கூட்டின் வலைப்பின்னலை மிகச் சுலபமாக உண்டாக்கி, பிறரால் வெற்றி கொள்ளப்படாமல் தனது படைக்கும் ஆற்றலை வெளிப்படுத்துவதைப் போலவே நீங்களும் உங்களுடைய சுய சக்தியைப் பயன்படுத்தி பிறரின் உதவியின்றி சிருஷ்டிக்கிறீர்கள்.
பதம் 2.5.6 : ஒரு குறிப்பிட்ட பொருளின் பெயர், இயல்பு மற்றும் அம்சம் ஆகியவற்றால் நாம் புரிந்து கொள்ளக்கூடிய உயர்ந்தது, தாழ்ந்தது அல்லது சமமானது, நிலையானது அல்லது நிலையற்றது போன்ற எதுவும் உம்மைத்தவிர வேறெந்த மூலத்திலிருந்தும் படைக்கப்படவில்லை. எனவே தாங்கள் மிகச் சிறந்தவராவீர்.
பதம் 2.5.7 : சிருஷ்டியின் விவகாரத்தில் நீங்கள் பெரும் சக்தி வாய்ந்தவராக இருந்தாலும், நீங்கள் மேற்கொண்ட கடுந்தவங்களை நாங்கள் எண்ணிப் பார்க்கும் பொழுது, உம்மைவிட அதிக சக்திபடைத்த வேறோருவர் இருப்பதைப் பற்றிய ஆச்சரியத்தால் நாங்கள் திகைப்படைகிறோம்.
பதம் 2.5.8 : எனதன்புள்ள தந்தையே, நீங்கள் அனைத்தையும் அறிந்தவர். அனைவரையும் ஆள்பவரும் நீரே. எனவே உங்களிடம் நான் விசாரித்ததை தயவு செய்து எனக்கு உபதேசிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு உமது சீடனாக இருந்து இதை என்னால் அறிந்து கொள்ள முடியும்.
பதம் 2.5.9 : பிரம்மதேவர் கூறினார்: எனதன்புள்ளசிறுவனே நாரத, அனைவரிடமும் கருணை கொண்டு (நான் உட்பட) இக்கேள்விகளை நீ கேட்டிருக்கிறாய். சர்வ வல்லமை பொருந்திய முழுமுதற் கடவுளின் மகத்துவங்களை ஆழமாகக் காண்பதற்கு உன்னால் நான் ஊக்கம் அளிக்கப்பட்டேன்.
பதம் 2.5.10 : என்னைப் பற்றி நீ பேசியதில் எதுவுமே தப்பில்லை. ஏனெனில் எனக்கும் மேலே இருக்கும் பரம சத்தியமான, முழுமுதற் கடவுளை ஒருவன் உணர்ந்திருந்தாலொழிய சக்தி வாய்ந்த எனது செயல்களை காண்பவன் மாயையால் கவரப்படுவது உறுதி.
பதம் 2.5.11 : சூரியன் தன் நெருப்பை வெளிப்படுத்தும் பொழுது சந்திரன் ஆகாயம், செல்வாக்குள்ள கிரகங்கள் மற்றும் மினுக்கும் நட்சத்திரங்கள் ஆகியவையும் தங்களுடைய பிரகாசத்தை வெளிப்படுத்துகின்றன. அதைப் போலவே, பகவானின் (பிரம்ம ஜோதி எனப்படும்) சுயப் பிரகாசத்தைக் கொண்டு அவரால் படைக்கப்பட்ட என்னுடைய படைப்புத் தொழிலை நான் செய்கிறேன்.
பதம் 2.5.12 : பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் (வாசுதேவனின்) வெல்லுதற்கரிய சக்தி நானே பரம ஆளுனர் என்று அழைக்குமாறு அவர்களைத் (புத்தியில் தாழ்ந்த பிரிவினரை) தூண்டுகிறது. அந்த முழுமுதற் கடவுளை தியானித்து என் வணக்கங்களை சமர்ப்பிக்கிறேன்.
பதம் 2.5.13 : பகவானின் மாயா சக்தி, தனது தாழ்ந்த நிலையைக் குறித்து வெட்கம் அடைந்திருப்பதால், அவளால் உயர்ந்த ஸ்தானத்தை ஏற்க முடியவில்லை. ஆனால் அவளால் குழப்பத்திற்கு ஆளானவர்கள், “நான்”, “எனது” என்று எண்ணங்களில் ஆழ்ந்திருப்பதால் எப்பொழுதும் அர்த்தமற்ற பேச்சிலேயே ஈடுபட்டுள்ளனர்.
பதம் 2.5.14 : படைப்பின் ஐந்து அடிப்படையான கூட்டுப் பொருட்கள், நித்திய காலத்தால் ஏற்படுத்தப்பட்ட சேர்க்கை, மற்றும் தனிப்பட்ட ஜீவராசிகளின் சுபாவம் அல்லது உள்ளுணர்வு ஆகிய இவை அனைத்தும் முழுமுதற் கடவுளான வாசுதேவனிடமிருந்து பிரிந்து வந்த பின்னப் பகுதிகளாகும். அவற்றில் உண்மையாக வேறெந்த மதிப்பும் இல்லை.
பதம் 2.5.15 : வேத இலக்கியங்கள் பரமபுருஷரால் இயற்றப்பட்டவையும், அவரை அறிவதற்கென்றே உள்ளவையும் ஆகும். அவரது (பகவான் உடலின் பாகங்களாக உள்ள தேவர்களும் கூட அவருக்குத் தொண்டு செய்வதற்கென்றே இருப்பவர்களாவர். வெவ்வேறு கிரகங்களும் கூட அவருக்காகவே உள்ளன. மேலும் அவரை மகிழ்விக்கவே பல்வேறு யாகங்களும் செய்யப்படுகின்றன.
பதம் 2.5.16 : பல வகையான தியானம் அல்லது யோகம் போன்றவை நாராயணரை உணர்வதற்கென்றே இருப்பவையாகும். நாராயணரை நோக்கத்திற்காகவே எல்லா தவங்களும் அடையும் இயற்றப்படுகின்றன. உன்னத அறிவும் நாராயணரின் க்ஷண நேரக் காட்சியை பெறுவதற்காக இருப்பதாகும். இறுதியாக முக்தி என்பது நாராயணரின் ராஜ்யத்திற்குள் நுழைவு பெறுவதாகும்.
பதம் 2.5.17 : அவரால் ஊக்கமளிக்கப்படுவதால் மட்டுமே, பரமாத்மாவாக எங்கும் பரவியுள்ள அவரது (நாராயணர்) பார்வையின் கீழ் ஏற்கனவே அவரால் படைக்கப்பட்டுவிட்டதை நான் கண்டு பிடிக்கிறேன். நானும் அவரால் படைக்கப்பட்டவனே.
பதம் 2.5.18 : பரமபுருஷரின் தூய ஆன்மீக உருவம் எல்லா பௌதிக குணக்களுக்கும் மேலானதாகும். இருப்பினும் ஜட உலகை படைத்து, காத்து, அழிப்பதற்காக அவர் தமது பகிரங்க சக்தியின் வாயிலாக சத்வம், ரஜ தமஸ் எனும் ஜட இயற்கைக் குணங்களை ஏற்கிறார்.
பதம் 2.5.19 : ஜட இயற்கையின் இம்மூன்று குணங்கள், தொடர்ந்து பொருள், அறிவு மற்றும் செயல்களாகவும் உருவெடுத்திருக்கின்றன. இதனால் இக்குணங்கள், நித்தியமான உன்னதத் தன்மையைக் கொண்ட ஜீவராசியைக் காரண, விளைவு எனும் சூழ் நிலைகளில் புகுத்தி, அத்தகைய செயல்களுக்கு அவனையே பொறுப்பேற்கச் செய்கின்றன.
பதம் 2.5.20 : பிராமண நாரதா, மேற்குறிப்பிட்ட இயற்கையின் முக்குணங்களின் காரணத்தால், பரமபுருஷர், ஜீவராசிகளுடைய ஜடப் புலன்களின் அறிவாற்றலுக்கு அப்பாற்பட்டவராக இருக்கிறார். ஆனால் என்னை உட்பட அனைவரையும் ஆள்பவர் அவரேயாவார்.
பதம் 2.5.21 : இவ்வாறாக எல்லாச் சக்திகளையும் ஆள்பவரான பகவான் தமது சுய சக்தியால், நித்தியமான காலம், அனைத்து ஜீவராசிகளின் விதி மற்றும் அவரவர்களுக்குரிய இயற்கை ஆகியவற்றைப் படைக்கிறார். அவர்களை அவர் தனித்தனியாக தமக்குள் ஐக்கியப்படுத்திவிடுகிறார்.
பதம் 2.5.22 : முதல் புருஷரின் (காரணார்ணவசாயீ விஷ்ணு) அவதாரத்திற்குப் பிறகு, “மஹத்-தத்வம்”, அல்லது ஜடப் படைப்பின் அடிப்படைக் கொள்கைகள் உண்டாயின. பிறகு காலம் தோன்றியது. மேலும் காலப் போக்கில் முக்குணங்கள் தோன்றின. இயற்கை என்பது முக்குணங்களின் தோற்றங்களாகும். அவை செயல்களாக உருமாறுகின்றன.
பதம் 2.5.23 : “மஹத்-தத்வம்” சலனமடைவதால் ஜடச் செயல்கள் உண்டாகின்றன. முதலாவதாக சத்வ மற்றும் ரஜோ குணங்களின் உருமாற்றர் உண்டாகின்றன. பிறகு தமோ (அறியாமை) குணத்தின் காரணத்தால் ஜடம், அதன் அறிவு, மற்றும் பௌதிக அறிவின் பல்வேறு செயல்வ ஆகியவை நிகழத் துவங்குகின்றன.
பதம் 2.5.24 : இவ்வாறாக, சுயநலம் கருதும் பௌதிக அகங்காரம், மூன்று அம்சங்களில் உருமாற்றம் செய்யப்பட்டு, சத்வம், ரஜஸ், தமஸ் எணும் முப்பிரிவுகளாக அறியப்படுகிறது. அப்பிரிவுகள், ஜடத்தை விருந்தியாக்கும் சக்திகள், ஜட படைப்பைப் பற்றிய அறிவு, மற்றும் அத்தகைய பௌதிகச் செயல்களை வழி நடத்தும் புத்தி ஆகியவை ஆகும். நாரதா, இதைப் புரிந்து கொள்வதற்குரிய முழு தகுதியை நீ பெற்றிருக்கிறாய்.
பதம் 2.5.25 : ஐந்து மூலப் பொருட்களில் முதலாவதான ஆகாயம், பொய் அகங்காரத்தின் இருளிலிருந்து உற்பத்தி செய்யப்படுகிறது. காண்பவன் காட்சியோடு தொடர்பு கொண்டிருப்பதைப் போலவே, ஓசை ஆகாயத்தின் சூட்சும வடிவமாக இருக்கிறது.
பதங்கள் 2.5.26 – 2.5.29 : ஆகாயம் உருமாற்றப்பட்டுள்ளதால், காற்று ஸ்பரிசத்தின் தன்மையுடன் உண்டாக்கப்பட்டு உள்ளது. மேலும், முந்திய தொடர்பால் காற்று, ஓசையாலும், ஆயுளின் அடிப்படைக் கொள்கைகளான: புலன் உணர்வு, மனோ சக்தி மற்றும் உடல் வலிமை ஆகியவற்றாலும் நிரப்பப்பட்டதாக உள்ளது. நாளடைவில் காற்று உருமாற்றப்படும் பொழுது, நெருப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நெருப்பு ஸ்பரிச உணர்வு மற்றும் ஓசைஆகியவற்றுடன் கூடிய வடிவத்தை ஏற்கிறது. நெருப்பும் உருமாற்றப்படுவதால், சாறும், சுவையும் நிறைந்த நீர் தோன்றுகிறது. முந்தியவைகளைப் போன்று, இதற்கும் வடிவமும், ஸ்பரிசமும் இருப்பதுடன், இது ஓசையால் நிரப்பப்பட்டதாகவும் உள்ளது. மேலும் நீர், நிலத்தின் மீதுள்ள பலவகைப்பட்ட பொருட்களின் உருமாற்றமாக இருப்பதால், வாசனையுள்ளதாகக் காணப்படுகிறது. முந்தியதைப் போலவே, இதுவும் முறையே சாறு, ஸ்பரிசம், ஓசை மற்றும் வடிவம் ஆகிய தன்மைகள் நிரம்பியதாக ஆகிறது.
பதம் 2.5.30 : சத்வகுணத்திலிருந்து மனம் உற்பத்தி செய்யப்பட்டு தோற்றமளிக்கிறது. அவ்வாறே உடல் அசைவுகளை கட்டுப்படுத்துபவர்களான பத்து தேவர்களும் தோன்றுகின்றனர். அத்தகைய தேவர்கள்: – திக்குகளை ஆள்பவர், காற்றை ஆள்பவர், சூரிய தேவன், தக்ஷ பிரஜாபதியின் தந்தை அஸ்வினி குமாரர்கள், அக்னி தேவன், சுவர்க்க ராஜன், சுவர்க்கத்தின் வழிபாட்டுக்குரிய மூர்த்தி, ஆதித்தியர்களின் தலைவர் மற்றும் பிரஜாபதி பிரம்மா ஆகியோராவர். இவர்கள் அனைவரும் தோற்றமளிக்கின்றனர்.
பதம் 2.5.31 : ரஜோ குணத்தின் தொடர்ந்த உருமாற்றத்தால், செவி, தோல், மூக்கு, கண்கள், வாய், கைகள், புற பாலுறுப்புக்கள், கால்கள் மற்றும் மலத்துவாரம் போன்ற புலனுறுப்புக்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவற்றோடு புத்தியும், உயிர்ச் சக்தியும் உற்பத்தியாகின்றன.
பதம் 2.5.32 : ஆன்மீகிகளில் மிகச் சிறந்த நாரதா, மூலப் பொருட்கள், புலன்கள், மனம் மற்றும் இயற்கைக் குணங்கள் ஆகிய இவற்றைப் பொருந்தும்படி இணைக்காத வரை உடல் எனப்படும் வடிவங்களை உருவாக்க முடியாது.
பதம் 2.5.33 : இவ்வாறக பரமபுருஷ பகவானுடைய சக்தியின் வலிமையால் இவையனைத்தும் ஒன்றாக இணைக்கப்பட்ட பொழுது, சிருஷ்டி உபசிருஷ்டி ஆகியவற்றின் மூலமாக, இப்பிரபஞ்சம் தோன்றியது என்பதில் சந்தேகமில்லை.
பதம் 2.5.34 : இவ்வாறாக பிரபஞ்சங்கள் அனைத்தும் ஆயிரக்கணக்கான யுகங்களாக நீருக்குள் (காரண கடலினுள்) மூழ்கிக் கிடந்தன. ஜீவ ராசியின் இறைவனான பகவான் அவை ஒவ்வொன்றிலும் புகுந்து, அவற்றைச் சுறுசுறுப்பாக இயங்கும்படி செய்தார்.
பதம் 2.5.35 : பகவான் (மஹாவிஷ்ணு), காரணஜலத்தில் பள்ளி கொண்டிருந்தாலும், அதிலிருந்து வெளியேறி, தம்மை ஹிரண்யகர்பராக பிரித்துக் கொண்டு ஒவ்வொர் பிரபஞ்சத்திற்குள்ளும் புகுந்து, ஆயிரக்கணக்கான கால்கள், கரங்கள், வாய்கள் மற்றும் தலைகள் முதலியவைகளைக் கொண்ட விராட் ரூபத்தை மேற்கொண்டார்.
பதம் 2.5.36 : பிரபஞ்சத்திலுள்ள முழு கிரக அமைப்புக்களும், பகவானுடைய பிரபஞ்ச உடலின் மேலும், கீழும் உள்ள வெவ்வேறு அங்கங்களின் தோற்றங்கள் என்று சிறந்த தத்துவவாதிகள் கற்பனை செய்து கொள்கின்றனர்.
பதம் 2.5.37 : பிராமணர்கள் அவரது (பகவான்) வாயையும், க்ஷத்ரியர்கள் அவரது கரங்களையும், வைசியர்கள் அவரது இடையையும் பிரதிநிதிக்கின்றனர். சூத்திரர்கள் அவரது கால்களிலிருந்து பிறக்கின்றனர்.
பதம் 2.5.38 : பூமிப் படுகை வரையுள்ள, கீழான கிரக அமைப்புக்கள், அவரது (பகவான்) பாதங்களில் அமைந்திருப்பதாக கூறப்படுகிறது. லோகத்திலிருந்து துவங்கும் மத்திய கிரக அமைப்புக்கள், அவரது நாபியில் புவர் அமைந்திருக்கின்றன. மேலும் தேவர்களாலும், சீரிய நற்பண்புகள் கொண்ட முனிவர்களாலும், ஞானிகளாலும் ஆக்ரமிக்கப்பட்டுள்ள இன்னும் மேலான கிரக அமைப்புக்கள், பரம புருஷரின் மார்பில் அமைந்துள்ளன.
பதம் 2.5.39 : பகவானுடைய மார்பின் முற்பகுதியிலிருந்து அவரது பிரபஞ்ச உருவத்தின் கழுத்து வரை ஜனலோகம் மற்றும் தபோலோகம் என்ற பெயர்களைக் கொண்ட கிரக அமைப்புக்கள் அமைந்துள்ளன. ஆனால் மிக உயர்ந்த கிரக அமைப்புக்கள் அமைந்துள்ளன. ஆனால் மிக உயர்ந்த கிரக அமைப்பான சத்யலோகம், அவ்வுருவத்தின் தலை மீது அமைந்துள்ளது. ஆனால் ஆன்மீக கிரகங்கள் நித்தியமானவையாகும்.
பதங்கள் 2.5.40 – 2.5.41 : எனதருமைப் புதல்வனே நாரதா, மொத்தமுள்ள பதினான்கு கிரக அமைப்புக்களில், ஏழு, கீழான கிரக அமைப்புக்கள் எவை என்பதை என்னிடமிருந்து அறிவாயாக. அதளம் என்றறியப்படும் முதல் இரக அமைப்பு இடுப்பின் மீது அமைந்துள்ளது. இரண்டாவதான, விதளம், முழங்கால்களின் மீதும்; நான்காவதான, தலாதளம், முழங்காலுக்கும் கணுக்காலுக்கும் இடைப்பட்ட பாகத்திலும், ஐந்தாவதான, மகாதளம், கணுக்கால்களின் மீதும்; ஆறாவதான், ரஸாதளம் பாதங்களின் மேற்பகுதியிலும், மற்றும் ஏழாவதான, பாதாளம், உள்ளங்கால்களிலும் அமைந்திருக்கின்றன. இவ்வாறாக பகவானின் விராட்-ரூபம், எல்லா மைப்புக்களாலும் நிரப்பப்பட்டுள்ளது.
பதம் 2.5.42 : மற்றவர்கள் முழு கிரக அமைப்பையும் மூன்று பிரிவுகளாக பிரிக்கக் கூடும். அவை கால்களிலுள்ள (பூமி வரையுள்ள) கீழான கிரக அமைப்புக்கள், நாபியின் மேலுள்ள மத்திய கிரக அமைப்புக்கள், மற்றும் பரமபுருஷரின் மார்பிலிருந்து தலை வரையுள்ள மேல் கிரக அமைப்புக்கள் (சுவர்லோகம்) என்பனவாகும்.