அத்தியாயம் – 3
தூய பக்தித் தொண்டு இதயத்தின் மாற்றம்
பதம் 2.3.1
ஸ்ரீ – சுக உவாச
ஏவம் ஏதன் நிகதிதம் ப்ருஷ்தவான் யத் பவான் மம
ந்ருணாம் யன் ம்ரியமாணானாம் மனுஷ்யேஷு மனீஷிணாம்

ஸ்ரீ சுக உவாச- ஸ்ரீசுகதேவ கோஸ்வாமி கூறினார்; ஏவம்— ஆகையால்; ஏதத்-இவ்வெல்லா; நிகதிதம்- பதில் அளித்துள்ளேன்; ப்ருஷ்தவான்-நீர் விசாரணை செய்தது போல்; யத்மரியமாணானாம்- மரண வாயிலில்; மனுஷ்யேஷு-மனிதருக்கிடையில்; மனீஷிணாம்- மதி நுட்பமுள்ளவர்களின்.

ஸ்ரீசுகதேவ கோஸ்வாமி கூறினார்: பரீட்சித்து மகாராஜனே, மரணத்தின் வாயிலில் உள்ள மதி நுட்பமுள்ள மனிதனின் கடமையைப் பற்றிய உமது விசாரணைக்கு ஏற்றவாறு நானும் பதில் கூறியிருக்கிறேன்.

பதங்கள் 2.3.2 – 2.3.7
ப்ரஹ்ம-வர்சஸ-காமஸ் து யஜேத ப்ரஹ்மண: பதிம்
இந்ரம் இந்ரிய காமஸ் து ப்ரஜா-காம: ப்ரஜாபதீன்

தேவீம் மாயாம் து ஸ்ரீ-காமஸ் தேஜஸ்-காமோ விபாவஸும்
வஸு காமோ வஸுன் ருத்ரான் வீர்ய-காமோ ‘த வீர்யவான்

அன்னாத்ய-காமஸ் த்வ் அதிதிம் ஸ்வர்க-காமோ’ திதே: ஸுதான் விஸ்வான் தேவான் ராஜ்ய-காம: ஸாத்யான் ஸம்ஸாதகோ விசாம்

ஆயுஷ்-காமோ ‘ஸ்விநௌ தேவெள புஷ்தி-காம இலாம் யஜேத் ப்ரதிஷ்தா-காம: புருஷோ ரோதஸீ லோக-மாதரௌ

ரூபாபிகாமோ கந்தர்வான் ஸ்த்ரீ-காமோ ‘ப்ஸ்ர உர்வசீம்
ஆதிபத்ய-காம: ஸர்வேஷாம் யஜேத பரமேஷ்தினம்

யக்ஞம் யஜேத் யசஸ்-காம: கோச-காம: ப்ரசேதஸம்
வித்யா-காமஸ் து கிரிசம் தாம்பத்யார்த உமாம் ஸதீம்

ப்ரஹ்ம-வரம்பற்ற ; வர்சஸ- பிரகாசம்; காம்: து-ஆனால் அவ்வாறு ஆசைப்படும் ஒருவன்; யஜேத-வழிபடுகிறான்; ப்ரஹ் மண:- வேதங்களின்; பதிம்—எஜமானர்; இந்ரம்—சுவர்க்கத்தின் அரசன்; இந்ரின— காம:து-ஆனால் வலிமைமிக்க புலன் உறுப்புக்களை விரும்புகிறவன்; ப்ரஜா—காம:-பல குழந்தைகளை விரும்புகிறவன்; ப்ரஜாபதீன்— பிரஜாபதிகள்; தேவீம்—தேவதை; மாயாம்- ஜட உலகின் எஜமானியிடம்; து-ஆனால்; ஸ்ரீ காம:-அழகை விரும்புபவன்; தேஜ:-பலம்; காம:-அவ்வாறு ஆசைப்படுபவன்; விபாவஸும்- அக்னிதேவன்; வஸுகாம:- -செல்வத்தை வேண்டுபவன்; வஸுன் -வஸு எனப்படும் தேவன்; ருத்ரான்-சிவபெருமானின் விரிவங்கங்களான ருத்ரர்கள்; வீர்ய-காம்:-வலிமை மிக்க தேகத்தை விரும்புகிறவன்; அத-எனவே; வீர்யவான் -மிகவும் சக்திபடைத்த; அன்ன அதய-தானியங்கள்; காம: அவ்வாறு ஆசைப்படுபவன்; து-ஆனால்; அதிதிம்-தேவர்களின் தாயான அதிதி; ஸ்வர்க–சுவர்க்கம்; காம: அவ்வாறு ஆசைப்படும்; அதிதே- ஸுதான்- அதிதியின் மகன்கள்; விஸ்வான்-விஸ்வதேவன்; தேவான்-தேவர்கள் ; ராஜ்ய காம:-ராஜ்யங்களுக்காக ஆசைப்படுபவன்; ஸாத்யான்-சாத்யர்கள் எனப்படும் தேவர்கள்; ஸம்ஸாதக-விருப்பங்களை ராஜயங்க எனப்படும் தேவர்கள்; ஸம்ஸாதக-விருப்பிங்க கூடியது; விசாம்—வர்த்தகர்களின்; காம:-நீண்ட ஆயுளை விரும்பும்; அஸ்விநௌ-அஸ்வினி குமாரர்கள் எனப்படும் இரு தேவர்கள்; தேவௌ-இரு தேவர்கள்; புஷ்தி காம: புகழுக்காகவோ அல்லது பதவிக்காகவோ ஆசைப்படுகிறவன்; புருஷ:—அத்தகைய மனிதர்கள்; ரோதஸீ-தொடுவானம்; லோக-மாதரௌ—அதோடு பூமியும்; ரூப-அழகு; அபிகாம:-சாதகமான முறையில் அதற்கு ஆசைப்படும்; கந்தர்வான்—அழகு மிக்கவர்களும், பாடும் கலையில் கைதேர்ந்தவர்களுமான கந்தர்வலோகத்தின் வாசிகள்; ஸ்த்ரீ—காம்: மனைவியை விரும்புபவன்; அப்ஸ்ர உர்வசீம்—சுவர்க்க லோகத்து சமூகப் பெண்கள்; ஆதிபத்ய-காம:-பிறரை ஆள ஆசைப்படுபவன்; ஸர்வேஷாம்- ஒவ்வொருவரும்; பரமேஷ்தினம்—பிரபஞ்சத்தின் தலைவரான, பிரம்மன்; யக்ஞம்-முழுமுதற் கடவுள்; யஜேத்—வழிபட வேண்டும்; யச: காம:-புகழ்பெற ஆசைப்படுபவன்; கோச-காம: வங்கியில் அதிகமான பண இருப்புக்கு ஆசைப்படுபவன்; ப்ரசேதஸம்— வருணன் எனப்படும் சுவர்க்கத்தில் பொருளாளன்; வித்யா-காம: து-ஆனால் கல்வியை விரும்புகிறவன்; கிரிசம்-இமயமலைக்கு ஆனால் கலவியை விரும்பு எஜமானரான சிவபெருமான்; தாம்பத்ய அர்த:-மேலும் தாம்பத்ய அன்புக்காக; உமாம் ஸதீம்-உமா என்றறியப்படும், சிவபெருமானின் கற்புடைய மனைவி.

அருவமான பிரம்மஜோதிப் பேரொளியில் ஆழ்ந்துவிட ஆசைப்படுபவன் வேதங்களின் ஆசானை (பிரம்ம தேவர் அல்லது கற்றறிந்த பிருஹஸ்பதி) வழிபட வேண்டும். சக்திமிக்க காம சுகத்தை விரும்புபவன் தேவராஜனான இந்திரனையும், நன்மக்கட்பேறை விரும்புபவன் பிரஜாபதிகள் என்று அழைக்கப்படும் முன்னோர்களையும் வழிபட வேண்டும். நல்லதிர்ஷ்டத்தை விரும்புபவன் ஜட உலகின் மேலதிகாரியாகிய துர்கா தேவியை வழிபட வேண்டும். மிகவும் சக்தியுடையவர்களாக ஆக விரும்புபவன் அக்னியையும், பணத்திற்காக மட்டுமே ஆசைப்படுபவன் வசுக்களையும் வழிபட வேண்டும். புகழ் படைத்த வீரனாக விரும்புபவன் சிவபெருமானின் ருத்திர அவதாரங்களை வழிபட வேண்டும். தானியங்களின் சேமிப்பை வேண்டுபவன் அதிதியையும், சுவர்க்க லோகங்களை அடைய விரும்புபவன் அதிதியின் மகன்களையும் வழிபட வேண்டும். இராஜ்யத்தை விரும்புபவன் விஸ்வதேவரையும், பொது மக்களிடையே நன்மதிப்பைப் பெற ஆசைப்படுபவன் ஸாத்யன் என்ற தேவனையும் வழிபட, ஆயுளை விரும்புபவன் அஸ்வினி குமாரர்கள் எனப்படும் தேவர்களையும், வலிமை பொருந்தியதோர் உடற்கட்டை விரும்புகிறவன் பூமியை வழிபட வேண்டும். நிலைத்த பதவிக்கு ஆசைப்படுபவன் தொடுவானத்தையும், பூமியையும் சேர்த்து வழிபட வேண்டும். அழகுடையவனாக இருக்க ஆசைப்படுபவன் கந்தர்வலோகத்து அழகிய வாசிகளையும், நல்ல மனைவியை விரும்புபவன் சுவர்க்கலோகங்களைச் சேர்ந்த அப்ஸரஸ் மற்றும் ஊர்வசி எனப்படும் சமூகப் பெண்களையும் வழிபட வேண்டும். பிறர் மீது ஆதிக்கம் செலுத்த விரும்புபவன் பிரபஞ்சத்தின் தலைவராகிய பிரம்மதேவரையும், உண்மையான கீர்த்தியை விரும்புகிறவன் முழுமுதற் கடவுளையும் வழிபட வேண்டும். வங்கியில் அதிகமான பண இருப்புக்கு ஆசைப்படுபவன் வருணன் என்ற தேவனை வழிபட வேண்டும். பெரும் புலமை பெற்ற ஒரு மனிதனாக ஒருவன் ஆக விரும்பினால் அவன் சிவபெருமானின் மனைவியாகிய, கற்புடைய உமாதேவியையும் வழிபட வேண்டும்.

பதம் 2.3.8
தர்மார்த்த உத்தம-ஸ்லோகம் தந்து: தனவன் பித்ரூன் யஜேத்
ரக்ஷா-காம: புண்ய-ஜனான் ஓஜஸ்-காமோ மருத்-கணான்

தர்ம அர்த:-ஆன்மீக முன்னேற்றத்திற்கு; உத்தம—ஸ்லோகம்-பரமபுருஷர் அல்லது பரமபுருஷரிடம் பற்றுக் கொண்டவர்கள்; தந்து:-குழந்தைகளுக்கு; தனவன்-மேலும் அவர்களின் பாதுகாப்பிற்கு; பித்ரூன்-பித்ருலோக வாசிகள்; யஜேத்-வழிபட வேண்டும்; ரக்ஷ—காம:-பாதுகாப்பை விரும்புகிறவன்; புண்ய-ஜனான்-புண்ணியம் உடையவர்கள்; ஒஜ-காம:-பலத்தை விரும்புபவன் வழிபட வேண்டும்; மருத் கணான்—தேவர்களை.

அறிவுபூர்வமான ஆன்மீக முன்னேற்றத்திற்கு ஒருவன் பகவான் விஷ்ணுவையோ அல்லது அவரது பக்தரையோ வழிபட வேண்டும். மேலும் வம்சத்தின் பாதுகாப்பிற்கும், அதன் முன்னேற்றத்திற்கும் ஒருவன் வெவ்வேறு தேவர்களை வழிபட வேண்டும்.

பதம் 2.3.9
ராஜ்ய-காமோ மனூன் தேவான் நிர்ருதிம் த்வ் அபிசரன் யஜேத்
காம-காமோ யஜேத் ஸோமம் அகாம: புருஷம் பரம்

ராஜ்ய-காம்:- ஒரு சாம்ராஜ்யம் அல்லது ராஜ்யத்தை விரும்புபவன்; மனூன்—பகவானின் ஒரு பாதி அவதாரங்களான மனுக்கள்; தேவான்— தேவர்கள்; நிர்ருதிம்—அசுரர்கள்; து—ஆனால்; யஜேத்—வழிபட வேண்டும்; காம காம்:-புலன் இன்பத்தை விரும்புகிறவன்; யஜேத்—வழிபட வேண்டும்; ஸோமம்- சந்திரதேவன்; அகாம: நிறைவேற்றுவதற்கு பௌதிக ஆசைகளே இல்லாதவன்; புருஷம்—பரம புருஷ பகவான்; பரம்-பரமன்.

ஒரு ராஜ்யத்தையோ அல்லது சாம்ராஜ்யத்தையோ ஆள விரும்பு கிறவன் மனுக்களை வழிபட வேண்டும். எதிரியை வெல்லும் விரும்புபவன் இன்பத்தை ஆவலுள்ளவன் அசுரர்களையும், புலனின்பத்தை சந்திரனையும் வழிபட வேண்டும். ஆனால் ஜட இன்பத்தை விரும்பாதவன் பரம புருஷ பகவானை வழிபட வேண்டும்.

பதம் 2.3.10
அகாம: ஸர்வ-காமோ வா மோக்ஷ -காம உதார-தீ:
தீவ்ரேன பக்தி-யோகேன யஜேத புருஷம் பரம்

அகாம்:-எல்லா ஜட ஆசைகளையும் கடந்துவிட்டவன்; ஸர்வ தாமி:–—ஜட ஆசைகளை உடையவன்; வா—இரண்டில் ஏதேனுமொன்று ; மோக்ஷ -காம:- முத்திக்கு ஆசைப்படுபவன்; உதார— தீ:- தெளிவான புத்தியுடன்: தீவ்ரேன-பெரும் சக்தியுடன்; பக்தி-யோகேன பகவானிடம் பக்தித் தொண்டாற்றுவதன் மூலம்; யஜேத- வழிபட வேண்டும்; புருஷம்—பகவான்; பரம்-பரம பூரணமானவர்.

தெளிந்த புத்தியுள்ள ஒருவன், பௌதிக ஆசைகள் நிரம்பியவனாகவோ, பௌதிக ஆசைகளே இல்லாதவனாகவோ, அல்லது முக்தியை விரும்புபவனாகவோ இருந்தாலும், அவன் எல்லா வழிகளிலும் பரம பூரணராகிய முழுமுதற் கடவுளையே வழிபட வேண்டும்.

பதம் 2.3.11
ஏதாவான் ஏவ யஜதாம் இஹ நிஹ்ஸ்ரேயஸோதய:
பகவதி அசலோ பாவோ யத் பாகவத-ஸங்கத:

ஏதாவான்-பல்வேறு வழிபாட்டு முறைகளைக் கொண்ட இவர்களனைவரும்; ஏவ-நிச்சயமாக; யஜதாம்- வழிபாடு செய்யும் பொழுது; இஹ—இப்பிறவியில்; நிஹ்ஸ்ரேயஸ-மிகச் சிறந்த வரம்; உதிய:-வளர்ச்சி; பகவதி- பரம்புருஷ பகவானிடம்; அசலோ- உறுதியான; பாவ:-இயற்கையான கவர்ச்சி; யத்-அது; பாகவத- பகவானின் தூய பக்தன்; ஸங்கத- கூட்டுறவு.

பல்வேறு தேவர்களை வெவ்வேறு வழிபாட்டு முறைகளால் வழிபடும் இவர்களனைவரும், பரமபுருஷ பகவான் மீது உண்டாகும் இயற்கையான கவர்ச்சியெனும் மிக உயர்ந்த பக்குவத்தை, தூய பகவத் பக்தர்களின் கூட்டுறவால் மட்டுமே அடைய முடியும்.

பதம் 2.3.12
க்ஞானம் யத் ஆப்ரதிநிவ்ருத்த-குணோர்மி-சக்ரம்
ஆத்ம-ப்ரஸாத உத யத்ர குணேஷ்வ் அஸங்க
கைவல்ய-ஸம்மத-பதஸ் த்வ் அத பக்தி-யோக:
கோ நிவ்ருதோ ஹரி-கதாஸு ரதிம் ந குர்யாத்

க்ஞானம் -அறிவு: யத்—அது: ஆ-எல்லை வரை; ப்ரதிநிவ்ருத்த- பின்னுக்கிழுத்து ;குண ஊர்மி-ஜடக்குணங்களின் அலைகள்: சக்ரம்-நீர்ச்சுழல்; ஆக்ம-ப்ரஸாத-சுய திருப்தி: உத-மேலும்; யத்ர-அங்கு; குணேஷு-இயற்கையின் குணங்களில்; அஸங்க-பற்றில்லாத; கைவல்ய—உன்னதமான; ஸம்மத-அங்கீகரிக்கப்பட்ட; பத-வழி; து- ஆனால்; அத-எனவே;பக்தியோக-பக்தித் தொண்டு; க-யார்; நிவ்ருத-கிரகிக்கப்பட்டு; ஹரி-கதாஸு- பகவானின் உன்னதமான கதைகளில்; ரதிம்-கவர்ச்சி; ந-மாட்டார்; குர்யாத் -செய்ய.

பரம புருஷரான ஹரியுடன் சம்மந்தமுள்ள உன்னத அறிவு, பௌதீக குணங்களின் அலைகளையும் சுழற்சிகளையும் பூரணமாக நிறுத்தி விடுகிறது. அத்தகைய அறிவு ஜடப் பற்றிலிருந்து விடுபட்டிருப்பதால் திருப்தியை அளிப்பதாகும். மேலும் அது உன்னதமாக இருப்பதால் அதிகாரிகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அந்த அறிவால் கவரப்படாம யார் இருக்க முடியும்?

பதம் 2.3.13
சௌனக உவாச
இதி அபிவ்யாஹ்ருதம் ராஜா நிசம்ய பரதர்ஷப:
கிம் அன்யத் ப்ருஷதவான் பூயோ வையாஸகிம் ருஷிம் கவிம்

சௌனக உவாச-சௌனகர் கூறினார்; இதி- இவ்வாறாக; அபிவ்யாஹ்ருதம் -பேசப்பட்டவை அனைத்தும்; நிசம்ய-கேட்டதன் வழியாக; பரதர்ஷப-பரீட்சித்து மகாராஜன்; ராஜா-ராஜன்; கிம்-என்ன; அன்யத்—இன்னும்; ப்ருஷதவான்—அவரிடமிருந்து என்ன விசாரித்தார்; பூயோ:-மறுபடியும்; வையாஸகிம்-வியாசதேவரின் மகனிடமிருந்து; ருஷி-நன்கு கற்றறிந்த ஒருவர்; கவிம்-கவிதை முறையில்.

சௌனகர் கூறினார்: வியாச தேவரின் மகனான ஸ்ரீல சுகதேவ கோஸ்வாமி மிகவும் கற்றறிந்த ஒரு முனிவராக இருந்ததுடன், கவிதை முறையில் விஷயங்களை விவரிக்கக் கூடியவராகவும் இருந்தார். அவர் கூறியவற்றை எல்லாம் கேட்ட பின் பரீட்சித்து மகாராஜன் மறுபடியும் என்ன விசாரித்தார்?

பதம் 2.3.14
ஏதச் கஸ்ருஷதாம் வித்வன் ஸூத நோ ‘ர்ஹஸி பாஷிதும்
கதா ஹரி-கதோதர்கா: ஸதாம் ஸ்யு: ஸதஸி த்ருவம்

ஏதச்-இதை: கஸ்ருஷதாம்-கேட்பதற்கு ஆவலுள்ளவர்கள்; வித்வன்-மிக்க அறிவுபடைத்த; ஸூத-சூத கோஸ்வாமி; ந-எங்களிடம்; அர்ஹஸி-நீர் அதைச் செய்வீராக; பாஷிதும்-அதை விவரிக்க வேண்டும் என்பதற்காகவே; கதா:-விஷயங்கள்; ஹரி கதா உதர்கா-பகவான் ஹரியின் விஷயங்களில் முடிவுறும்; ஸதாம்- பக்தர்களின்; ஸ்யு:-இருக்கக்கூடும்; ஸதஸி-அவர்களின் சபையில்; த்ருவம்—நிச்சயமாக.

புலமை பெற்ற சூத கோஸ்வாமியே- நாங்கள் அனைவரும் கேட்க மிகவும் ஆவலுடன் இருப்பதால், தயவு கூர்ந்து அத்தகைய விஷயங்களைத் தொடர்ந்து விவரிப்பீராக. மேலும் பகவான் ஹரியின் விஷயங்கள் உறுதியாக பக்தர்களின் சபையில் விவாதிக்கப்பட வேண்டியதாகும்.

பதம் 2.3.15
ஸ வை பாசுவதோ ராஜா பாண்டவேயோ மஹா-ரத:
பால-க்ரீடனகை: க்ரடன் க்ருஷ்ண-க்ரீடாம் ய ஆத்தே

ஸ-அவர்: வை-நிச்சயமாக; பாகவத:-பகவானின் மிகச் சிறந்த பக்கர்: ராஜா-பரீட்சித்து மகாராஜன்; பாண்டவேய:-பாண்டவர்களின் பேரன்; மஹா-ரத-மிகச் சிறந்த போர் வீரர்; பால -குழந்தைப் பருவத்தில் இருக்கும் பொழுது; க்ரீடனகை:- விளையாட்டு. பொம்மைகளுடன்; க்ரடன்-விளையாடிக் கொண்டு; க்ருஷ்ண— பகவான் கிருஷ்ணர்; க்ரீடாம்—செயல்கள்; ய-அவர்; ஆத்தே-ஏற்றுக் கொண்டார்.

பாண்டவர்களின் பேரனான பரீட்சித்து மகாராஜன் அவரது குழந்தைப் பருவத்திலிருந்தே பகவானின் மிகச் சிறந்த பக்தராவார். பொம்மைகளுடன் விளையாடிக் கொண்டிருக்கும் பொழுதும் கூட குடும்பத்தைச் சேர்ந்த விக்கிரக வழிபாட்டைப் பின்பற்றி ஸ்ரீ கிருஷ்ணரை அவர் வழிபடுவது வழக்கம்.

பதம் 2.3.16
வையாஸகிஸ் ச பகவான் வாஸுதேவ-பராயண:
உருகாய-குணோதாரா: ஸதாம் ஸ்யுர் ஹி ஸமாகமே

வையாஸ்கி: வியாசதேவரின் மகன்; ச-மேலும்; பகவான் -முழுமையான உன்னத அறிவு; வாஸுதேவ-பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்; பராயண:—பற்றுக்கொண்டு; உருகாய-மிகச் சிறந்த தத்துவவாதிகளால் போற்றப்படும் முழுமுதற் கடவுளான ஸ்ரீ கிருஷ்ணரின்; குண உதாரா- மிகச் சிறந்த பண்புகள்; ஸதாம்—பக்தர்களின்; ஸ்யு:-இருந்திருக்க வேண்டும்; ஹி-உண்மையில்; ஸமாகமே-அவர்களின் சகவாசத்தால்.

வியாசதேவரின் மகனான சுகதேவ கோஸ்வாமியும் உன்னத அறிவில் முழுமை பெற்றவராக இருந்ததுடன், வஸுதேவரின் புதல்வரான பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் சிறந்த பக்தராகவும் இருந்தார். எனவே, சிறந்த பக்தர்களின் கூட்டத்திலும், பெரும் தத்துவ வாதிகளாலும் போற்றப்படுபவரான பகவான் ஸ்ரீ கிருஷ்ணரைப் பற்றிய உரையாடல் அங்கு நிகழ்ந்திருக்க வேண்டும்.

பதம் 2.3.17
ஆயுர் ஹரதி வை பும்ஸாம் உத்யன் அஸ்தம் ச யன் அசௌ
தஸ்யர்தே யத்-க்ஷணோ நீத உத்தம-ஸ்லோக-வார்தயா

ஆயு—ஆயுள்: ஹரதி—குறைக்கிறது: வை—நிச்சயமாக; பும்ஸாம்- மக்களின்: உத்யன்—உதிக்கும்; அஸ்தம்—அஸ்தமிக்கும்; ச-மேலும்: யன்-தகரும்; அசெள-சூரியன்: தஸ்ய-பகவானைத் துதிப்பவனின்; குதே–தவிர: யத்-எரால்; க்ஷண:-காலம்; நீத:-பயன்படுத்தி; உத்தம-ஸ்லோக-சர்வ நன்மையுள்ள முழுமுதற் கடவுள்; வார்தயா— அவ்விஷயங்களில்.

நன்மை பயக்கும் முழுமுதற் கடவுளைப் பற்றிய விஷயங்களை உரையாடுவதில் காலத்தைப் பயன்படுத்துபவனைத் தவிர, மீதமுள்ள ஒவ்வொருவரின் ஆயுளையும், சூரியனானது உதயத்தாலும், அஸ்தமிப்பாலும் குறைத்துவிடுகிறது.

பதம் 2.3.18
தரவ: கிம் த ஜீவந்தி பஸ்த்ரா: கிம் ந ஸ்வஸந்தி உத
ந காதந்தி ந மேஹந்தி கிம் க்ராமே பசவோ ’ பரே

தரவ-மரங்கள்; கிம்-என்ன: ந- இல்லை: ஜீவத்தி- வாழ; பஸ்த்ரா- துருத்தி; ந-இல்லை: ஸ்வஸந்தி- மூச்சுவிட: உத-மேலும்: ந-இல்லை: காதந்தி-உண்ண; ந- இல்லை; மேஹத்தி- விந்துவை வெளியிட: கிம்-என்ன; க்ராமே- இருப்பிடத்தில்; பசவ:-மிருகங்களைப் போன்ற ஜீவன்கள்; அபரே-மற்றவை.

மரங்கள் உயிர்வாழவில்லையா? கொல்லனின் துருத்தி சுவாசிக்கவில்லையா? நம்மைச் சுற்றியுள்ள மிருகங்கள் உண்ணவும், விந்துவை வெளியிடவும் இல்லையா?

பதம் 2.3.19
ஸ்வ-வித்-வராஹோஷ்த்ர-கரை: ஸம்ஸ்துத: புருஷ: பசு:
ந யத்-கர்ண-பதோபேதொ ஜாது நாம கதாக்ரஜ:

ஸ்வ-ஒரு நாய்; வித்வராஹ-மலம் தின்னும் பன்றி; உஷ்த்ர-ஒட்டகம்; கரை:-மற்றும் கழுதைகளால்; ஸம்ஸ்துத:-பூரணமாக போற்றப்படும்; புருஷ:- ஒரு மனிதனின்: பசு:- வழி; ந-என்றுமில்லை; யத்—அவரின்; கர்ண—செவி: பத-வழி; உபேத -அடைந்து; ஜாது—எப்பொழுதாவது; நாம-புனித நாமம்; கதாக்ரஜ-எல்லாத் தீங்குகளிலிருந்தும் விடுவிப்பவரான.

நாய்கள், பன்றிகள், ஒட்டகங்கள் மற்றும் கழுதைகளைப் போன்றவர்கள், எல்லாத் தீங்குகளிலிருந்தும் விடுவிப்பவரான பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் உன்னதமான லீலைகளுக்கு ஒருபோதும் செவி சாய்க்காதவர்களைப் போற்றுகின்றனர்.

பதம் 2.3.20
பிலே பதோருக்ரம-விக்ரமான் யே
ந ச்ருண்வத: கர்ண-புதே நரஸ்ய
ஜிஹ்வாஸதீ தார் துரிகேவ ஸூத
ந சோபகாயதி உருகாய-காதா:

பிலே-பாம்புக் குழிகள்; பத-போன்ற; உருக்ரம-அற்புதமாக செயற்படுபவரான பகவான்; விக்ரமான்-வீரியம்; யே-இவ்வெல்லா; ந-ஒருபொழுதும் இல்லை; ச்ருண்வத:-கேள்விப்பட்டு; கர்ண-புதே-செவித்துவாரங்கள்; நரஸ்ய -மனிதனின்; ஜிஹ்வா—நாவு;அஸ்ஸதீ-பயனற்றது; தார் துரிகா — தவளைகளின்; இவ—அதுபோலவே; ஸூத-ஓ ஸூத உரக்கப்பாடும்; உருகாய-பாடத் தகுதியுள்ளது; காதா;— பாடல்கள்.

முழுமுதற் கடவுளின் வீர்யம் மற்றும் அற்புதச் செயல்களைப் பற்றிய செய்திகளைக் கேள்விப்படாமலும், மேன்மையுள்ள அவரது பாடல்களை உரக்கப் பாடாமலும் இருப்பவனின் நாவு, என்றும் ஒரு தவளையினுடையதைப் போன்றது என்று கருதப்பட வேண்டும்.

பதம் 2.3.21
பார: பரம் பட்ட- கிரீட- ஜுஷ்டம்
அபி உத்தமாங்கம் ந நமேன் முகுந்தம்
சர்வௌ கரௌ நோ குருதே ஸபர்யாம்
ஹரேர் லஸத்-காஞ்சன-கங்கணௌ வா

பார- பெரும் சுமை; பரம்-கனம்; பட்ட-பட்டு; கிரீட- தலைப்பாகை; ஜுஷ்டம்- அணிவிக்கப்பட்டு; அபி-இருந்தாலும்; உத்தம-மேல்: அங்கம்—உடலின் அங்கங்கள்; ந-ஒரு பொழுதும் இல்லை; நமேன்-தலை வணங்கு; முகுந்தம்- முக்தியளிப்பவரான பசுவான் ஸ்ரீ கிருஷ்ணர்; சர்வௌ-உயிரற்ற உடல்கள்; கரௌ-கரங்கள்; நோ- இல்லை; குருதே-உண்டு; ஸபர்யாம்-வழிபடும்; ஹரே- முழுமுதற் கடவுளின்; லஸத்—பளபளக்கும்; காஞ்சன- தங்கத்தாலான; கங்கணௌ—காப்புகள்; வா—ஆயினும்.

தலையை பட்டாலான தலைப்பாகை அலங்கரித்தாலும், முக்தி அளிப்பவரான முழுமுதற் கடவுளின் முன் தலை வணங்கவில்லை எனில், அது பெரும் சுமை மட்டுமே ஆகும். கரங்கள் பளபளக்கும் காப்புகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தாலும், முழுமுதற் கடவுளான ஹரியின் தொண்டில் ஈடுபடவில்லை எனில் அவை பிணத்தின் கரங்களைப் போன்றவையாகும்.

பதம் 2.3.22
பர்ஹாயிதே தே நயனே நராணாம்
லிங்கானி விஷ்ணோர் ந நிரீக்ஷதோ யே
பாதௌ ந்ருணாம் தௌ த்ரும-ஜன்ம-பாஜௌ
க்ஷேத்ராணி நானுவ்ரஜதோ ஹரேர் யௌ

பர்ஹாயிதே-ஒரு மயிலின் இறகுகளைப் போல்; தே-அன்வ; நயனே-கண்கள்; நராணாம்-மனிதர்களின்; லிங்கானி-உருவங்கள்; விஷ்ணோ:-பரமபுருஷரின்; ந-இல்லை; நிர்க்ஷத:-மீது பார்; யே-அத்தகைய எல்லா; பாதெள-கால்கள்; ந்ருணாம்-மனிதர்களின்; தௌ—அந்த; த்ரும-ஜன்ம-மரத்திலிருந்து பிறந்திருப்பதால்; பாஜௌ-அதைப் போன்ற; சேத்ராணி-புண்ணிய ஸ்தலங்கள்; ந- எப்பொழுதும் இல்லை; அனுவ்ரஜத-பின்பற்றிச் செல்; ஹரே- பகவானின்; யௌ— எது.

பரமபுருஷரான விஷ்ணுவின் (உருவங்கள், பெயர், இயல்பு முதலான) அடையாள அம்சங்களைக் காணாத கண்கள், மயிலிறகிலுள்ள கண்களைப் போன்றவையாகும். மேலும் (பகவத் சிந்தனையைத் தூண்டும்) புண்ணிய ஸ்தலங்களுக்குச் செல்லாத கால்கள் அடிமரங்களைப் போன்றவையென கருதப்படுகின்றன.

பதம் 2.3.23
ஜீவன் சவோ பாகவதாசரி-ரேணும்
ந ஜாது மர்த்யோ ‘பிலபேத யஸ் து
ஸ்ரீ-விஷ்ணு-பத்யா மனுஜஸ் துளஸ்யா:
ஸ்வஸஞ் சவோ யஸ் து ந வேத கந்தம்

ஜீவன்-உயிர் வாழும் பொழுது; சவ: ஒரு சவம்; பாகவத அசரி ரேணும்—தூய பக்தனின் பாதத் தூசு; ந-ஒருபொழுதும் இல்லை; ஜாது:—எக்காலத்திலும்; மர்த்ய:-மனிதன்; அபிலபேத- குறிப்பாக ஏற்றுக் கொண்ட; ய:-ஒருவன்; து-ஆனால்; ஸ்ரீ- செல்வங்களுடன்; விஷ்ணு-பத்யா-விஷ்ணுவின் தாமரைப் பாதங்களின்; மனு- ஜ-மனுவின் வம்சத்தவன் (ஒரு மனிதன்); துளஸ்யா:-துளசிச் செடியின் இலைகள்: ஸ்வஸன்- சுவாசிக்கும் பொழுது; சவ- இன்னும் ஒரு சவமே; ய-யார்; து-ஆனால்; ந வேத-ஒரு பொழுதும் அனுபவித்தறியாத; கந்தம்—நறுமணம்.

தூய பகவத் பக்தரின் பாதத் தூசியை தன் தலைமீது ஒரு பொழுதும் ஏற்றுக் கொள்ளாதவன், வெறும் உயிரற்ற உடலென்பதில் சந்தேகமில்லை. மேலும் பகவானின் தாமரைப் பாதங்களிலிருந்து வரும் துளசி இலைகளின் நறுமணத்தை என்றுமே அனுபவித்தறியாதவன், சுவாசித்துக் கொண்டிருந்தாலும், அவனும் ஒரு சவமேயாவான்.

பதம் 2.3.24
தத் அஸ்ம-ஸாரம் ஹ்ருதயம் பதேதம்
யத் க்ருஹ்யமாணைர் ஹரி-நாம-தேயை:
ந விக்ரியேதாத யதா விகாரொ
நேத்ரே ஜலம் காத்ர-ருஹேஷு ஹர்ஷ:

தத்—அந்த; அஸ்ம ஸாரம்-இரும்புச் கவசம்; ஹ்ருதயம் -இதயம்; பதஇதம்—நிச்சயமாக அந்த; யத்- எது; க்ருஹ்யமாணை-பாடிக் கொண்டு இருந்தும்; ஹரி- நாம- பகவானின் புனித நாமம்; தேயை:- மன ஒருமையால்; ந-இல்லை; விக்ரியேத- மாற்றம்; அத -இவ்வாறாக; யதா—அப்பொழுது; விகார:-பிரதிபலன்; நேத்ரே- கண்களில்; ஜலம்- கண்ணீர்; காத்ர-ருஹேஷுமயிர்க் கண்களில்; ஹர்ஷ-பரவசக் கொந்தளிப்புகள்.

பகவானின் புனித நாமத்தை மன ஒருமையுடன் ஒருவன் பாடியதும், பரவச நிலை ஏற்படும் பொழுதோ, கண்களில் கண்ணீர் ததும்பும் பொழுதோ, மெய்சிலிர்க்கும் பொழுதோ, இளகாமலேயே இருக்கும் ஒருவனது இதயம் இரும்பைப் போன்றது என்பதில் சந்தேகமில்லை.

பதம் 2.3.25
அதாபிதேஹி அங்க மனோ- னுகூலம்
ப்ரபாஷஸே பாகவத-ப்ரதான:
யதி ஆஹ வையாஸகிர் ஆத்ம-வித்யா
விசாரதோ ந்ருபதிம் ஸாது ப்ருஷ்த:

அத- எனவே; அபிதேஹி- தயவு செய்து விளக்குவீராக: அங்க- ஓ சூத கோஸ்வாமி; மன-மனம்; அனுகூலம்- எங்களுடைய மனோ நிலைக்கு அனுகூலமாக உள்ள; ப்ரபாஷஸே-நீர் பேசும்; பாகவத- சிறந்த பக்தர்; ப்ரதான:—தலைவர்; யதி ஆஹ-அவர் பேசியது; வையாஸ்கி-சுகதேவ கோஸ்வாமி; ஆத்மவித்யா—உன்னத அறிவு; விசாரத:— வல்லுநர்; ந்ருபதிம்- மகாராஜனிடம்; ஸாது-மிகவும் நல்ல; பருஷ்த:- கேட்டுக் கொள்ளப்பட்ட.

ஓ சூத கோஸ்வாமி, உமது வார்த்தைகள் எங்களுடைய மனங்களுக்கு இன்பத்தை அளிக்கின்றன. எனவே, உன்னத அறிவில் சமர்த்தரும், கேட்டுக் கொள்ளப்பட்டதன் மேல் பரீட்சித்து மகாராஜனிடம் பேசிவரும், சிறந்த பக்தருமான சுகதேவ கோஸ்வாமியால் பேசப்பட்டதைப் போன்று தயவு செய்து இதை எங்களிடம் விளக்கிக் கூறுவீராக.


ஸ்ரீமத் பாகவதம், இரண்டாம் காண்டத்தின், “தூய பக்தித் தொண்டு: இதயத்தின் மாற்றம்” எனும் தலைப்பைக் கொண்ட மூன்றாம் அத்தியாயத்திற்கான பக்திவேதாந்தப் பொருளுரைகள் இவ்வாறாக நிறைவு பெறுகின்றன.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare