அத்தியாயம் – 10
எல்லாக் கேள்விகளுக்கும் பாகவதமே தகுந்த விடை
பதம் 2.10.1
ஸ்ரீ-சுக உவாச
அத்ர ஸர்கோ விஸர்கஸ் ச ஸ்தானம் போஷணம் ஊதய:
மன்வந்தரேசானுகதா நிரோதோ முக்திர் ஆஸ்ரய:
ஸ்ரீ-சுக: உவாச-ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்: அத்ர-இந்த ஸ்ரீமத் பாகவதத்தில்; ஸர்க:- சிருஷ்டி: விஸர்க:- உப சிருஷ்டி; ச -மேலும்; ஸ்தானம்—கிரக அமைப்புக்கள்; போஷணம்-பாதுகாப்பு: ஊதய: படைப்பைத் தூண்டும் சக்தி; மன்வந்தர-மனுக்களின் மாற்றங்கள்; ஈச—அனுகதா:- பகவத் விஞ்ஞானம்; நிரோத:- பரம் பதத்தைச் சென்றடைதல்; முக்தி:- முக்தி: ஆஸ்ரய:- உத்தம புருஷர்.
ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்: ஸ்ரீமத் பாகவதத்தில் பின்வரும் பத்து பிரிவுகளைக் கொண்ட விஷயங்கள் உள்ளன: பிரபஞ்ச சிருஷ்டி. உப சிருஷ்டி, கிரக அமைப்புக்கள், பகவானால் அளிக்கப்படும் பாதுகாப்பு, படைப்பைத் தூண்டும் சக்தி, மனுக்களின் மாற்றம், பகவத் விஞ்ஞானம், பரம பதத்தைச் சென்றடைதல், முக்தி, மற்றும் உத்தம புருஷர்.
பதம் 2.10.2
தசமஸ்ய விகத்தி-அர்தம் நவானாம் இஹ லக்ஷணம்
வர்ணயந்தி மஹாத்மான: ஸ்ருதேனார்தேன சாஞ்சஸா
தசமஸ்ய-உத்தம புருஷரின்; விசுத்தி -தனித்தன்மை; அர்தம்— நோக்கம்; நவானாம் -மற்ற ஒன்பதின்; இஹ-இந்த ஸ்ரீமத் பாகவத்தில்; லக்ஷணம் -அறிகுறிகள்; வர்ணயந்தி—அவை வர்ணக்கின்றன; மஹா- ஆத்மன:- சிறந்த முனிவர்கள்: ஸ்ருதேன-வேத ஆதாரங்களால்; அர்தேன- நேரடியான விளக்கத்தால்; ச-மேலும்; அஞ்சஸா—சுருக்கமாக.
உத்தம புருஷரின் (ஆஸ்ரய:) உன்னதத் தன்மையை பிரித்தறிவதற்காக, மற்றவைகளின் அறிகுறிகள் சில சமயங்களில் வேத முடிவுகளால் விவரிக்கப்படுகின்றன. சில சமயங்களில் அவை நேரடியான விளக்கத்தாலும், மற்ற சமயங்களில் பெரும் முனிவர்களின் சுருக்கமான விளக்கங்களாலும் விவரிக்கப்படுகின்றன.
பதம் 2.10.3
பூத-மாத்ரேந்ரிய-தியாம் ஜன்ம ஸர்க உத்ரஹ்ருத:
ப்ரஹ்மணோ குண-வைஷம்யாத் விஸர்க: பௌருஷ: ஸ்ம்ருத:
பூத-ஸ்தூலமான ஜம்பூதங்கள் (ஆகாயம் போன்றவை); மாத்ரா— புலன்களால் உணரப்படும் பொருட்கள்; இந்ரிய—புலன்கள்; தியாம்— மனதின்; ஜன்ம-படைப்பு: ஸர்க:- தோற்றம்; உதாஹ்ருத: -படைப்பு என்று அழைக்கப்படுகிறது; ப்ரஹ்மண:- முதல் புருஷரான பிரம்மாவின்; குண-வைஷம்யாத்—இயற்கையின் முக்குண சேர்க்கையால்; விஸர்க:- மறு சிருஷ்டி; பௌருஷ:- பலனளிக்கும் செயல்கள்; ஸ்ம்ருத:- என்று அழைக்கப்படுகிறது.
ஆரம்பப் படைப்பின் பதினாறு பொருட்களான: ஜம்பூதங்கள் (நெருப்பு, நீர், நிலம், காற்று மற்றும் ஆகாயம்), ஓசை உருவம், சுவை, வாசனை, ஸ்பரிசம், மேலும் கண்கள், காதுகள், மூக்கு, நாக்கு, தோல் மற்றும் மனம் ஆகியவை ஸர்கம் என்று அழைக்கப்படுகின்றன. ஆனால் ஜட இயற்கைக் குணங்களின் சேர்க்கையினால் பின் தொடர்ந்து நிகழ்வது விஸர்கம் என்று அழைக்கப்படுகிறது.
பதம் 2.10.4
ஸ்திதிர் வைகுண்ட-விஜய: போஷணம் தத்-அனுக்ரஹ:
மன்வந்தாரணி ஸத்-தர்ம ஊதய: கர்ம-வாஸனா:
ஸ்திதி:- சரியான சூழ்நிலை; வைகுண்ட-விஜய:- வைகுண்ட நாதனின் வெற்றி; போஷணம்-பராமரிப்பு: தத்-அனுக்ரஹ:- அவரது அகாரணமான கருணை; மன்வந்தராணி-மனுக்களின் ஆட்சி; ஸத் -தர்ம:- சிறந்த வர்ணாஸ்ரம கடமை; ஊதய:- வேலை செய்வதற்கான ஊக்கம்: கர்ம -வாஸனா: பலன் நோக்குச் செயலின் விருப்பம்.
ஜீவராசிகளுக்குரிய சரியான சூழ்நிலை, பகவானின் சட்டங்களுக்குக் கீழ்ப்படிந்து, பரமபுருஷ பகவானுடைய பாதுகாப்பின் கீழ் மன அமைதியுடன் இருப்பதாகும், மனுக்களும் அவர்களது சட்டங்களும் வாழ்வில் சரியான வழியைக் கொடுப்பதற்காகவே உள்ளனர். கர்ம வாசனையால் ஏற்படும் ஆசையே செயலாற்றுவதற்கான கோலாகும்.
பதம் 2.10.5
அவதாரானுசரிதம் ஹரேஸ் சாஸ்யானுவர்தினாம்
பும்ஸாம் ஈச-கதா: ப்ரோக்தா நானாக்யானோபப்ரும்ஹிதா:
அவதார-பகவானின் அவதாரம்; அனுசரிதம்-செயல்கள்; ஹரே: முழுமுதற் கடவுளின்; ச-மேலும்; அஸ்ய—அவரது; அனுவர்தினாம்— பின்பற்றுபவர்கள்; பும்ஸாம் -நபர்களின்; ஈச-கதா:- பகவத் விஞ்ஞானம்; ப்ரோக்தா:-கூறப்படுகிறது; நானா-அநேக; ஆக்யான- விவரணங்கள்; உபப்ரும்ஹிதா:- விவரிக்கப்பட்டு உள்ளது.
பகவத் விஞ்ஞானமானது, முழுமுதற் கடவுளின் அவதாரங்களையும், அவரது பல்வேறு செயல்களையும் மற்றும் அவரது சிறந்த பக்தர்களின் செயல்களையும் விவரிக்கிறது.
பதம் 2.10.6
நிரோதோ’ ஸ்யானுசயனம் ஆத்மன: ஸஹ சக்திபி:
முக்திர் ஹித்வான்யதா ரூபம் ஸ்வ-ரூபேண வ்யவஸ்திதி:
நிரோத:- பிரபஞ்ச தோற்றத்தின் ஒடுக்கம்; அஸ்ய—அவரது; அனுசயனம்—புருஷ அவதாரத்தில், மஹா_விஷ்ணுயோக நித்திரையில் சயனித்திருக்கும் நிலை; ஆத்மன:-ஜீவராசிகளின்; ஸஹ-உடன்; சக்திபி:-சக்திகளுடன்; முக்தி:- முக்தி; ஹித்வா—கைவிட்டு; அன்யதா—இல்லையெனில்; ரூபம் -உருவம்; ஸ்வ -ரூபேண—சுய ரூபத்தில்; வ்யவஸ்திதி:- நிரந்தரமான நிலை.
பந்தப்பட்ட நிலையில் வாழும் சுபாவம் கொண்ட ஜீவராசி, யோக நித்திரையில் சயனித்திருக்கும் மஹா-விஷ்ணுவுடன் கலந்து விடும் நிலை, பிரபஞ்ச சிருஷ்டியின் ஒடுக்கம் என்று அழைக்கப்படுகிறது. முக்தி என்பது நித்தியமான உருவத்தை ஜீவராசி பெற்றிருக்கும் நிலையாகும். மாற்றமடையக்கூடிய ஸ்தூல மற்றும் சூட்சுமமான ஜட உடல்களைக் கைவிட்ட பின் இந்நிலையை அவன் பெறுகிறான்.
பதம் 2.10.7
ஆபாஸஸ் ச நிரோதஸ் ச யதோ ‘ஸ்தி அத்யவஸீயதே
ஸ ஆஸ்ரய: பரம் ப்ரஹ்ம பரமாத்மேதி சப்த்யதே
ஆபாஸ:- பிரபஞ்ச தோற்றம்; ச-மற்றும்; நிரோத:- மற்றும் அதன் ஒடுக்கமும்;ச-மேலும்; யத: மூலத்திலிருந்து; அஸ்தி—இருக்கிறது; அத்யவஸீயதே-தோற்றுவிக்கப்படுகிறது; ஸ:-அவர்; ஆஸ்ரய: களஞ்சியம்; பரம்-பரமன்; ப்ரஹ்ம்-ஜீவன்; பரமாத்மா- பரமாத்மா; இதி-இவ்வாறாக; சப்த்யதே—அழைக்கப்படும்.
பரமாத்மா என்று போற்றப்படும் பரமபுருஷர்தான் பிரபஞ்ச தோற்றம், மற்றும் அதன் ஒடுக்கம் ஆகியவற்றின் ஆதி மூலமாவார். இவ்வாறாக அவரே பரம உற்பத்தி ஸ்தானமாகவும், பரபிரம்மமாகவும் இருக்கிறார்.
பதம் 2.10.8
யோ ‘த்யாத்மிகோ ‘யம் புருஷ: ஸோ ‘ஸாவ் ஏவாதிதைவிக:
யஸ் தத்ரோபய-விச்சேத: புருஷோ ஹி ஆதிபௌதிக:
ய: -யாரொருவர்; அத்யாத்மிக:- புலன்உறுப்புக்களைப் பெற்றுள்ள; அயம -இந்த; புருஷ:-புருஷர்; ஸ:- அவர் அஸௌ—அந்த; ஏவ -தவிரவும்; அதிதைவிக:— ஆளும் மூர்த்தி; ய:- எதுவொன்று; தத்ர -அங்கு; உபய -இரண்டின்; விச்சேத:- பிரிவு; புருஷ:- நபர்; ஹி -அதற்காக; ஆதிபௌதிக:- கண்களுக்குப் புலப்படும் உடல் அல்லது உடல் பெற்ற ஜீவராசி.
புலன் கருவிகளைப் பெற்றுள்ள தனித்தன்மை வாய்ந்த நபர் அத்யாத்மிக நபர் என்றும், புலன்களை ஆளும் தனித்தன்மையுள்ள மூர்த்தி அதிதைவிக நபர் என்றும், கண் விழிகளால் காணப்படும் உருவம் அதிபௌதிக நபர் என்றும் அழைக்கப்படுகின்றனர்.
பதம் 2.10.9
ஏகம் ஏகதராபாவே யதா நோபலபாமஹே
த்ரிதயம் தத்ர யோ வேத ஸ ஆத்மா ஸ்வாஸ்ரயாஸ்ரய:
ஏகம் ஒன்று; ஏகதர-மற்றொன்று; அபாவே-இல்லாத சமயத்தில்; யதா—ஏனெனில்; ந-இல்லை; உபலபாமஹே -அறியப்படக்கூடிய; த்ரிதயம்-மூன்று நிலைகளில்; தத்ர—அங்கு; ய:-அந்த ஒன்று ; வேத -அறிந்திருப்பவர்; ஸ:- அவர்; ஆத்மா பரமாத்மா; ஸ்வ -சொந்த; ஆஸ்ரய-புகலிடம்; ஆஸ்ரய:-புகலிடத்தின்.
ஜீவராசிகளின் மேற்குறிப்பிட்ட மூன்று நிலைகளும் ஒன்றையொன்று சார்ந்திருப்பவையாகும். ஒன்று இல்லாத வேளையில், மற்றது அறியப்படுவதில்லை. ஆனால் அவர்களில் ஒவ்வொருவரையும் புகலிடத்தின் புகலிடமாகக் காண்பவரான பரமபுருஷர் அனைவரிலும் சுதந்திரமானவராவார். இதனால் அவரே மிகச் சிறந்த புகலிடமாவார்.
பதம் 2.10.10
புருஷோ ‘ண்டம் வினிர்பித்ய யதாஸௌ ஸ வினிர்கத:
ஆத்மனோ ‘யனம் அன்விச்சன் அபோ ‘ஸ்ராக்க்ஷீ சுசி: கசுசீ:
புருஷ:- பரமபுருஷர், பரமாத்மா; அண்டம்-பிரபஞ்சங்கள்; வினிர்பித்ய—அவற்றில் ஒவ்வொன்றையும் தனித்தனியாக அமைந்திக்கச் செய்தல்; யதா—அப்பொழுது; அஸௌ-அது; ஸ்:-அவர் (பகவான்); வினிர்கத:- வெளிவந்தார்; ஆத்மன:- தம்மிடமிருந்து; அயனம்— இடத்தில் சயனித்திருக்கும்; அன்விச்சன்—விருப்பங்கொண்டு; அப: -நீர்; அஸ்ராத்க்ஷீ-படைக்கப்பட்ட; சுசி:-தூய்மையான; சுசீ: -உன்னதமான.
பிரபஞ்சங்களை தனித்தனியாக பிரித்த பின், முதல் புருஷ அவதாரத்தின் தோற்றத்திற்குரிய இடமாகிய காரண கடலிலிருந்து வெளிவந்த, பகவானின் (மஹா-விஷ்ணு) பிரம்மாண்டமான பிரபஞ்சரூபம், படைக்கப்பட்ட உன்னத நீரின் (கர்போதக) மேல் சயனித்திருக்க விருப்பங்கொண்டு, ஒவ்வொரு பிரபஞ்சத்திற்குள்ளும் புகுந்தது.
பதம் 2.10.11
தாஸ்வ் அவாத்ஸீத் ஸ்வ-ஸ்ருஷ்டாஸு ஸஹஸ்ரம் பரிவத்ஸரான்
தேன நாராயணோ நாம யத் ஆப: புருஷோத்பவா:
தாஸு -அதில்; அவாத்ஸீத்-வசித்த; ஸ்வ-சுய; ஸ்ருஷ்டாஸு -சிருஷ்டிக்கும் விவகாரத்தில்; ஸஹஸ்ரம்-ஒராயிரம்; பரிவத்ஸரான் -அவரது கணக்குப்படி உள்ள ஆண்டுகள்; தேன—அக்காரணத்தால்; நாராயண:- நாராயணர் எனும் பெயர் கொண்ட முழுமுதற் கடவுள்; நாம் -நாமம்; யத்-ஏனெனில்; ஆப:- நீர்; புருஷ-உத்பவா: பரமபுருஷரிடமிருந்து தோன்றியது.
அந்த பரமபுருஷர் அருவமானவரல்ல. அவர் விசேஷமான ஒரு நரர், அல்லது நபராவார். ஆகவே பரம நரரிலிருந்து படைக்கப்பட்ட உன்னதமான நீர் நார எனப்படுகிறது. அந்த நீரில் சயனித்திருப்பதால், அவர் நாராயணர் எனப்படுகிறார்.
பதம் 2.10.12
த்ரவ்யம் கர்ம ச காலஸ் ச ஸ்வபாவோ ஜீவ ஏவ ச
யத்-அனுக்ரஹத்: ஸந்தி ந ஸந்தி யத்-உபேக்ஷயா
த்ரவ்யம்- பௌதிக மூலப் பொருட்கள்: கர்ம-செயல்; ச -மேலும் ; கால:- காலம்; ச-மேலும்; ஸ்வ பாவ:ஜீவ:-ஜீவராசிகள்; ஏவ- நிச்சயமாக; ச -தவிரவும்; யத்-யாருடைய; அனுக்ரஹத:– கருணையால்; ஸந்தி-இருக்கின்றன; ந-இல்லை; ஸந்தி இருக்கின்றன; யத்—உபேக்ஷயா—அலட்சியத்தால்.
அனைத்து பெளதிக மூலப் பொருட்கள், செயல்கள், காலம் மற்றும் குணங்கள் ஆகியவையும், அவற்றை அனுபவிப்பதற்கென உள்ள ஜீவராசிகளும் அவரது கருணையால் மட்டுமே இருக்கின்றன. அவற்றை அவர் அலட்சியப்படுத்திய உடனேயே அனைத்தும் மறைந்துவிடுகின்றன.
பதம் 2.10.13
ஏகோ நானாத்வம் அன்விச்சன் யோக-தல்பாத் ஸமுத்தித:
வீர்யம் ஹிரண்மயம் தேவோ மாயயா வ்யஸ்ருஜத் த்ரிதா
ஏக:- அவர் மட்டுமே; நானாத்வம்- நானா விதமான; அன்விச்சன் -அவ்வாறு விருப்பங்கொண்டு; யோக -தல்பாத்—யோக நித்திரை புரியும் படுக்கையிலிருந்து; ஸமுத்தித:- உற்பத்தி செய்தார்; வீர்யம் வீரியம் (விந்து); ஹிரண்மயம்- பொன்னிறம்; தேவ:- தேவன்; மாயயா பகிரங்க சக்தியால்; வ்யஸ்ருஜத்- பூரணமாகப் படைத்தார்; த்ரிதா-மூன்று அம்சங்களில்.
யோக நித்திரையில் சயனித்திருக்கும் பொழுது, ஜீவராசிகளைத் தம்மிடமிருந்து படைக்க விரும்பிய பகவான், அவரது பகிரங்க சக்தியின் மூலமாக, பொன்னிறமுள்ள விந்தை உற்பத்தி செய்தார்.
பதம் 2.10.14
அதிதைவம் அதாத்யாத்மம் அதிபூதம் இதி ப்ரபு:
அதைகம் பௌருஷம் வீர்யம் த்ரிதாபித்யத தச் ச்ருணு
அதிதைவம்-ஆளும் ஜீவன்கள்; அத-இப்போது: அத்யாத்மம்— ஆளப்படும் ஜீவன்கள்: அதிபூதம் -ஜட உடல்கள்; இதி -இவ்வாராக; ப்ரபு:- பகவான்; அது-இவ்வாறு: ஏகம் ஒன்று மட்டுமேயான; பௌருஷம் – பகவானின்; வீர்யம்- ஆற்றல்; த்ரிதா-மூன்றாக; அபித்யத்- பிரிக்கப்பட்டது; தத்—அதை; ஸ்ருணு—என்னிடமிருந்து கேளும்.
மேலே குறிப்பிடப்பட்டுள்ளது போல், ஒன்றேயான பகவானின் ஆற்றல் எப்படி ஆளும் ஜீவன்கள், ஆளப்படும் ஜீவன்கள் மற்றும் ஜட உடல்கள் என மூன்றாகப் பிரிகின்றன என்பதை என்னிடமிருந்து கேளும்.
பதம் 2.10.15
அந்த: சரீர ஆகாசாத் புருஷஸ்ய விசேஷ்டத:
ஓஜ: ஸஹோ பலம் ஜக்ஞே தத: ப்ராணோ மஹான் அஸு
அந்த: சரீரே-உடலுக்குள்; ஆகாசாத்-ஆகாயத்திலிருந்து; புருஷ் ஸ்ய-மஹாவிஷ்ணுவின்; விசேஷ்டத:-அவ்வாறு முயற்சிக்கும் பொழுது, அல்லது விரும்பும்பொழுது; ஒஜ:-புலன்களின் சக்தி; ஸஹ:- மனோ பலம்; பலம்-உடல் பலம்; ஜக்ஞே-உண்டாக்கப் படுகிறது; தத:- அதன் பின்; ப்ராண:- உயிர்ச்சக்தி : மஹான் அஸு: -அனைவருடைய வாழ்வுக்கும் பிறப்பிடம்.
மஹா-விஷ்ணுவின் உன்னத உடலிலுள்ள ஆகாயத்திலிருந்து, புலன் சக்தி, மனோ பலம் மற்றும் உடல் பலம் ஆகிய அனைத்தும் உற்பத்தியாகின்றன. அதைப்போலவே, மொத்த உயிர்ச் சக்திக்கும் அதுவே பிறப்பிடமாக உள்ளது.
பதம் 2.10.16
அனுப்ராணன்தி யம் ப்ராணா: ப்ராணன்தம் ஸர்வ-ஜன் துஷு
அபானன்தம் அபானன்தி நர-தேவம் இவானுகா:
அனுப்ராணன்தி-உயிர் வாழும் அடையாளங்களைப் பின்பற்றுகின்றன; யம் – யாரை; ப்ராணா:-புலன்கள்: ப்ராணன்தம் -முயற்சி செய்யும்; ஸர்வ -ஜன்துஷு—அனைத்து ஜீவராசிகளிலும்; அபானன்தம் – முயற்சியை கைவிட்டு; அபானன்தி—மற்றனைவரும் கைவிடுகின்றனர்; நர-தேவம்-ஓர் அரசன்; இவ-போன்று; அனுகா: -பின்பற்றுபவர்கள்.
பிரஜைகள் தங்கள் அரசரை பின்பற்றுவதைப் போலவே, மொத்த சக்தி அசையும்பொழுது மற்றெல்லா ஜீவராசிகளும் அசைகின்றன. மொத்தசக்தி முயற்சியைக் கைவிடும்பொழுது, மற்றெல்லா ஜீவராசிகளும் புலன் இயக்கங்களைக் கைவிடுகின்றன.
பதம் 2.10.17
ப்ராணேனாக்ஷிபதா க்க்ஷீத் திருட் அந்தரா ஜாயதே விபோ:
பிபாஸதோ ஜக்ஷதஸ் ச ப்ராண் முகம் நிரபித்யத
ப்ராணேன—உயிர்ச் சக்தியால்; ஆக்ஷிபதா-கிளறப்பட்டு; க்க்ஷீத் -பசி; த்ருட் தாகம்; அந்தரா—உள்ளிருந்து; ஜாயதே-உண்டாக்குகிறது; விபோ:- பரமனின்; பிபாஸத:- தாகத்தைத் தணிக்க ஆவல் கொண்டு; ஜக்ஷத:- உண்ண ஆவல் கொண்டு; ச-மேலும்; ப்ராக் முதலில்; முகம் — வாய்; நிரபித்யத -திறக்கப்பட்டது.
விராட் புருஷரால் கிளறப்பட்ட உயிர்ச்சக்தி, பசியையும், தாகத்தையும் உண்டாக்கியது. அவர் உண்ணவும், அருந்தவும் விரும்பிய பொழுது வாய் திறந்தது.
பதம் 2.10.18
முகதஸ் தாலு நிர்பின்னம் ஜிஹ்வா தத்ரோபஜாயதே
ததோ நானா-ரஸோ ஜக்ஞே ஜிஹ்வயா யோ ‘திகம்யதே
முகத:- வாயிலிருந்து; தாலு—சுவை; நிர்பின்னம் உண்டாக்கப்பட்டு; ஜிஹ்வா—நாக்கு; தத்ர—அதன் பலனாக; உபஜாயதே படைக்கப்படுகிறது; தத:-அதன் பின்; நானா—ரஸ:- பலவிதமான சுவைகள்; ஜக்ஞே—தோற்றத்திற்கு வந்தன; ஜிஹ்வயா—நாவால்; ய: எது ; அதிகம்யதே-சுவைக்கப்படுகின்றன.
வாயிலிருந்து சுவை தோன்றியது. அதன் பலனாக நாவும் கூட உற்பத்தி செய்யப்பட்டது பின், நாவால் சுவைத்து அனுபவிக்கப்படுவதற்காக எல்லா வகையான சுவைகளும் தோற்றத்திற்கு வந்தன.
பதம் 2.10.19
விவக்ஷோர் முகதோ பூம்னோ வஹ்னிர் வாக் வ்யாஹ்ருதம் தயோ:
ஜலே சைதஸ்ய ஸுசிரம் நிரோத: ஸமஜாயத
விவக்ஷோ: பேசுவதற்கு அவசியம் ஏற்பட்டபொழுது; முகத: வாயிலிருந்து; பூமன்:-பரமனின்; வஹ்னி:-அக்னி அல்லது அக்னி தேவன்; வாக்-அதிர்வு; வ்யாஹ்ருதம் – பேச்சுகள்; தயோ: -இரண்டாலும்; ஜலே – நீரில்; ச-ஆயினும்; ஏதஸ்ய- இவை அனைத்திலும்; ஸுசிரம்-மிக மிக நீண்டதொரு காலம்; நிரோத:- நிறுத்தம் ; ஸமஜாயத -தொடர்ந்தது.
பரமன் பேச விரும்பியதும் வாயிலிருந்து பேச்சுகள் அதிர்ந்தன. பிறகு வாயிலிருந்து அக்னி தேவன் உற்பத்தி செய்யப்பட்டார். ஆனால் பகவான் நீரில் சயனித்திருக்கும்பொழுது, இச் செயல்கள் அனைத்தும் முடங்கிக் கிடந்தன.
பதம் 2.10.20
நாஸிகே நிரபித்யேதாம் தொ தூயதி நபஸ்வதி
தத்ர வாயுர் கந்த-வஹோ க்ராணோ நஸி ஜிக்ருக்ஷத:
நாஸிகே-நாசித்துவாரங்களில்; நிரபித்யேதாம்-விருத்தியடைந்து இருப்பதால்; தோதூயதி—வேகமாக வீசும்; நபஸ்வதி—காற்று சுவாசம்; தத்ர—அதன் பயனாய்; வாயு:-காற்று; கந்த-வஹ:- முகரும் வாசனை; க்ராண:- முகரும் புலன்; நஸி-மூக்கில்; ஜிக்ருக்ஷத: -வாசனைகளை முகர ஆவல் கொண்டு.
அதன்பின், பரமபுருஷர் வாசனைகளை முகர விரும்பியபொழுது, நாசித்துவாரங்களும், சுவாசமும் உண்டாயின, மூக்கும், மணங்களும் தோன்றின, வாசனையைச் சுமந்து வரும் காற்று தேவனும் தோன்றினார்.
பதம் 2.10.21
யதாத்மனி நிராலோகம் ஆத்மானம் ச தித்ருக்ஷத:
நிர்பின்னே ஹி அக்ஷிணீ தஸ்ய ஜ்யோதிஸ் சக்ஷுர் குண-க்ரஹ:
யதா—அப்பொழுது; ஆத்மனி—தம்மிடம்; நிராலோகம் -எவ்வித ஒளியும் இல்லாமல்; ஆத்மானம்—அவரது சொந்த ஆன்மீக உடல்; ச-பிற தேக வடிவங்களையும்; திக்ருக்ஷத:- காண விரும்பினார்; நிர்பின்னே-முளைக்க ஆரம்பித்ததால்; ஹி-அதற்காக; அக்ஷிணீ- கண்களின்; தஸ்ய-அவரது; ஜ்யோதி:- சூரியன்; சக்ஷு:— கண்கள்; குண-க்ரஹ:- காணும் சக்தி.
இவ்வாறாக அனைத்தும் இருளில் இருந்த பொழுது, பகவான் தம்மையும், படைக்கப்பட்டுள்ள அனைத்தையும் காண விரும்பினார். பிறகு கண்கள், ஒளிக்கடவுளான சூரியன், காணும் சக்தி மற்றும் காட்சிக்குரிய பொருள் ஆகிய அனைத்தும் தோன்றின.
பதம் 2.10.22
போத்யமானஸ்ய ருஷிபிர் ஆத்மனஸ் தஜ் ஜிக்ருக்ஷகுத:
கர்ணௌ ங் நிரபித்யேதாம் திச: ஸ்ரோத்ரம் குண-க்ரஹ:
போத்யமானஸ்ய—அறிய ஆவல் கொண்டு, ருஷிபி: அதிகாரிகளால் ஆத்மன: -பரமபுருஷரின்; தத்-அந்த; ஜிக்ருக்ஷத:- மேற்கொள்ள அவர் விரும்பியபொழுது; கர்ணௌ-செவிகளும்; ச -கூட நிரபித்யேதாம்-தோற்றத்திற்கு வந்தன; திச:-திசை அல்லது வாயு தேவன்; ஸ்ரோத்ரம்-செவியுறும் சக்தி; குண-க்ரஹ:-மற்றும் செவியுறுவதற்கான பொருட்கள்.
பெரும் முனிவர்கள் பரமபுருஷரைப் பற்றி கேட்க விரும்பியதால், செவிகள், செவியுறும் சக்தி, செவியுறுவதை ஆளும் மூர்த்தி, மற்றும் செவியுறுவதற்கான பொருட்கள் ஆகியவை தோன்றின.
பதம் 2.10.23
வஸ்துனோ ம்ருது- காடின்ய- லகு-குர்வ்- ஓஷ்ண-சுததாம்
ஜிக்ருக்ஷதஸ் த்வன் நிர்பின்னா தஸ்யாம் ரோம்-மஹீ-ருஹா :
தத்ர சாந்தர் பஹிர் வாதஸ் த்வசா லபத்-குணோ வ்ருத:
வஸ்துன:- எல்லா வஸ்துக்களிலும்; ம்ருது- மிருதுவான தன்மை; காடின்ய -கடினமான தன்மை; லகு-இலேசான தன்மை; குரு -பாரமான தன்மை; ஓஷ்ண-சூடான தன்மை; சீததாம்-குளிர்ந்த தன்மை; ஜிக்ருக்ஷத: உணர ஆவல் கொண்டு; த்வக்-ஸ்பரிச உணர்வு; நிர்பின்னா—பரப்பப்பட்ட; தஸ்யாம்-தோலில்; ரோம -உடல் உரோமங்கள்; மஹீ-ருஹா:- அதைப் போலவே ஆளும் மூர்த்திகளாகிய மரங்களும்; தத்ர—அங்கு; ச-கூட; அந்த:- உள்ளே; பஹி:- வெளியே; வாத: த்வசா-ஸ்பரிச புலன் அல்லது தோல்; லபத்— உணரப்பட்டு; குண:- புலன் உணர்வுக்குரிய பொருட்கள்; வ்ருத: உண்டாக்கப்பட்டன.
ஜடத்தின் இயற்கைக் குணங்களாகிய மிருது தன்மை, கடினத் தன்மை, சுடு, குளிர், இலேசான தன்மை மற்றும் பாரமான தன்மை, உண்ர்ச்சியின் பின்னணியான, தோல், மயிர்க் கண்கள், உடலின் மேலுள்ள ரோமங்கள் மற்றும் அவற்றின் ஆளும் மூர்த்திகள் (மரங்கள்) ஆகியவற்றை அறிய விரும்பியதும், அவை உற்பத்தி செய்யப்பட்டன. தோலின் உள்ளும், புறமும் உள்ள காற்றுத் திரையின் மூலமாக புலன் உணர்வு முக்கியத்துவம் பெற்றது.ஜடத்தின் இயற்கைக் குணங்களாகிய மிருது தன்மை, கடினத் தன்மை, சுடு, குளிர், இலேசான தன்மை மற்றும் பாரமான தன்மை, உண்ர்ச்சியின் பின்னணியான, தோல், மயிர்க் கண்கள், உடலின் மேலுள்ள ரோமங்கள் மற்றும் அவற்றின் ஆளும் மூர்த்திகள் (மரங்கள்) ஆகியவற்றை அறிய விரும்பியதும், அவை உற்பத்தி செய்யப்பட்டன. தோலின் உள்ளும், புறமும் உள்ள காற்றுத் திரையின் மூலமாக புலன் உணர்வு முக்கியத்துவம் பெற்றது.
பதம் 2.10.24
ஹஸ்தௌ ருருஹதுஸ் தஸ்ய நானா-கர்ம-சிகீர்ஷயா
தயோஸ் து பலவான் இந்ர ஆதானம் உபயாஸ்ரயம்
ஹஸ்தௌ-கரங்கள்; ருருஹது:- தோன்றின; தஸ்ய-அவரது; நானா- அநேக; கர்ம – செயல்; சிகீர்ஷயா-அவ்வாறு ஆவல் கொண்டதால்; தயோ:- அவற்றின்; து-ஆயினும்; பலவான்- பலமளிக்க; இந்ர:- சுவர்க்க தேவன்; ஆதானம்—கரகத்தின் செயல்கள்; உபய-ஆஸ்ரயம் -தேவர் மற்றும் கரம் ஆகிய இரண்டையும் சார்ந்த.
அதன் பிறகு பல வகையான செயல்களைச் செய்ய பரமபுருஷர் விரும்பிய பொழுது, இருகரங்களும், அவற்றின் ஆளும் வலிமையும் மற்றும் சுவர்க்க தேவனான இந்திரனும் தோற்றத்திற்கு வந்தனர். அவ்வாறே, கரங்கள் மற்றும் தேவர் ஆகிய இரண்டையும் சார்ந்த செயல்களும் தோன்றின.
பதம் 2.10.25
கதிம் ஜிகீஷத: பாதௌ ருருஹாதே ‘பிகாமிகாம்
பத்ப்யாம் யக்ஞ: ஸ்வ்யம் ஹவ்யம் கர்மபி: க்ரியதே ந்ருபி:
கதிம்- அசைவு; ஜிகீஷித:- அவ்வாறு ஆவல்கொண்டு; பாதெள -பாதங்கள்; ருருஹாதே-படைக்கப்பட்டு;அபிகாமிகாம் – நோக்கத்துடன்:பத்ப்யாம்- பாதங்களிலிருந்து: யக்ஞ: – பகவான் விஷ்ணு; ஸ்வயம்-அவராகவே சுயமாக ; ஹவ்யம்-கடமைகள்; கர்மபி:- ஒருவரின் வர்ணாஸ்ரம் கடமையால்; க்ரியதே-செய்யப்பட தூண்டினார்; ந்ருபி:- வெவ்வேறு மனிதர்களால்.
அதன்பிறரு, அசைவை கட்டுப்படுத்த அவர் விரும்பியதால், அவரது பாதங்கள் தோற்றத்திற்கு வந்தன. அப்பாதங்களிலிருப்பதால் ஆளும் மூர்த்தியான விஷ்ணு தோற்றுவிக்கப்பட்டார், இச்செயலின் மீதான அவரது சொந்த மேற்பார்வையினால், எல்லா வகையான மனிதர்களும் சுறுசுறுப்பாக அவரவர் வர்ணாஸ்ரம கடமைகளில் சுறுசுறுப்பாக ஈடுபட்டுள்ளனர்.
பதம் 2.10.26
நிரபித்யத சிஸ்னோ வை ப்ரஜானந்தாம்ருதார்தின:
உயஸ்த ஆஸீத் காமானாம் ப்ரியம் தத்-உபயாஸ்ரயம்
நிரபித்யத-வெளி வந்தன, சிஸ்ன- புறப்பாலுறுப்புக்கள்; வை- நிச்சயமாக; ப்ராஜா ஆனந்த-பாலுறவு சுகம்; அம்ருத -அர்தின அமிர்தத்தைச் சுவைக்க விரும்பி. உபஸ்த: -ஆணுறுப்பு அல்லது பெண்ணுறுப்பு: ஆஸீத்-தோற்றத்திற்கு வந்தன; காமானாம்- காம இச்சைகொண்டவரின்; ப்ரியம்- மிகப் பிரியமான: தத்-அது : உபய -ஆஸ்ரயம்-இரண்டிற்கும் அடைக்கலம்.
அதன் பிறகு, பாலுறவு சுகத்திற்காகவும், குழந்தை பெறுவதற்காகவும் மற்றும் சுவர்க்கம் போன்ற அமிர்தத்தை சுவைப்பதற்காகவும், பகவன் புறப் பாலுறுப்புக்களை விருத்தியடையச் செய்தார். இவ்வாறக பாலுறுப்யும், அதனை ஆளும் மூர்த்தியான பிரஜாபதியும் தோன்றின. இவை பகவானுடைய புறப்பாலுறுப்புக்களின் கட்டுப்பாட்டில் உள்ளன.
பதம் 2.10.27
உத்ஸிஸ்ருக்க்ஷோர் தாது-மலம் நிரபித்யத வை குதம்
தத: பாயுஸ் ததோ மித்ர உத்ஸர்க உபயாஸ்ரய:
உத்ஸிஸ்ருக்க்ஷோ:-மலம் கழிக்க விரும்பி; தாது-மலம் – உணவு- வகைகளின் கழிவு; நிரபித்யத-திறந்தது; வை-நிச்சயமாக; குதம்- மலத் துவாரம்; தத:-அதன்பிறகு; பாயு:- மலம் கழிக்கும் புலனுறுப்பு: தத:- அதன்பின்; மித்ர:- ஆளும் தேவன்; உத்ஸர்க:- கழிவுப் பொருள்; உபய-இரண்டும்; ஆஸ்ரய:- புகலிடம்.
அதன்பிறகு, ஆகாரத்தில் மிச்சத்தைக் (மலம்) கழிக்க அவர் விரும்பியதும் ஆளும் மூர்த்தியான மித்ரனோடு மலத்துவாரமும் அதன் புலனுறுப்பும் விருத்தியடைந்தன. புலனுறுப்பு மற்றும் கழிவுப் பொருள் ஆகிய இரண்டும் ஆளும் மூர்த்தியின் கட்டுப்பாட்டில் உள்ளன.
பதம் 2.10.28
ஆஸிஸ்ருப்ஸோ: புர: புர்யா நாபி-த்வாரம் அபானத:
தத்ராபானஸ் ததோ ம்ருத்யு: ப்ருதக்த்வம் உபயாஸ்ரயம்
ஆஸிஸ்ருப்ஸோ:— எல்லா இடங்களுக்கும் செல்ல விரும்பி; புர: -வேறுபட்ட உடல்களில்: புர்யா:-ஒருடலிலிருந்து; நாபி—த்வாரம் -நாபித் துவாரம்; அபானத:-தோற்றுவிக்கப்பட்டது; தத்ர-அதன்; பிறகு; அபான:- பிராண வாயுவை நிறுத்துதல்; தத;- அதன்பின்; ம்ருத்யு:- மரணம்; ப்ருதக்த்வம் -தனிப்பட்ட முறையில்; உபய -இரண்டும்; ஆஸ்ரயம்-அடைக்கலம்.
அதன்பிறகு, ஓருடலிலிருந்து மற்றொன்றுக்குச் செல்ல அவர் விரும்பிய பொழுது, நாபி, பிரிக்கும் காற்று மற்றும் மரணம் ஆகியவை சேர்ந்து படைக்கப்பட்டன. மரணம் மற்றும் பிரிக்கும் சக்தி ஆகிய இரண்டுக்கும் நாபியே அடைக்கலம்.
பதம் 2.10.29
ஆதித்ஸோர் அன்ன-பானானாம் ஆஸன் குக்ஷி- அந்திர நாடய
தத்யா ஸமுத்ராஸ் ங் தயோஸ் துஷ்டி புஷ்டிஸ் தத்- ஆஸ்ரயே
ஆதித்ஸோ :-பெற ஆவல் கொண்டு; அன்ன -பானானாம் உணவு மற்றும் பானத்தின்: ஆஸன்-தோன்றின: குக்க்ஷி -வயிற்றுப்பாகம்; அந்திர-குடல்கள்; நாடய -மற்றும் தமனிகளும்: நத்ய -நதிகள்: ஸமுத்ரா:- சமுத்திரங்கள்:ச -மேலும்; தயோ:- அவற்றின்; துஷ்டி – பராமரிப்பு: புஷ்டி:- ஜீவ பரிணாமம்: தத்-அவற்றின்; ஆஸ்ரயே -மூலம்.
உணவும், பானமும் அருந்த விருப்பம் ஏற்பட்டபொழுது, வயிற்றுப் பகுதியும், குடல்களும் மற்றும் தமனிகளும் தோற்றத்திற்கு வந்தன. நதிகளும், சமுத்திரங்களுமே அவற்றின் பராமரிப்புக்கும், ஜீவ பரிணாமத்திற்கும் மூலங்களாகும்.
பதம் 2.10.30
நிதித்யாஸோர் ஆத்ம-மாயாம் ஹ்ருதயம் நிரபித்யத
ததோ மனஸ் சந்ர இதி ஸங்கல்ப: காம ஏவ ச
திதித்யாஸோ:- அறிய ஆவல் கொண்டதால்: ஆத்ம-மாயாம் -சுயசக்தி; ஹ்ருதயம்-மனதின் இருப்பிடம்; நிரபித்யத-தோற்றுளிக்கப்பட்டது; தத:- அதன்பின்; மன:- மனது; சந்ர:- மனதை ஆளும் மூர்த்தியான, சந்திரன்; இதி—இவ்வாறாக; ஸங்கல்ப:- மன உறுதி காம:- ஆசை ; ஏவ-அவ்வாறே; ச-மேலும்.
தமது சுய சக்தியின் செயல்களைப் பற்றி சிந்திக்க ஆவல் ஏற்பட்ட பொழுது, இதயம் (மனதின் இருப்பிடம்), மனம், சந்திரன், மன உறுதி மற்றும் ஆசை ஆகியவை தோன்றின.
பதம் 2.10.31
த்வக்- சர்ம-மாம்ஸ – ருதிர மேதோ- மஜ்ஜாஸ்தி- தாதவ:
பூமி-அப்-தேஜோமயா ஸப்த ப்ராணோ வ்யோமரம்பு-வாயுபி:
த்வக்-தோலின் மேலுள்ள இலேசான அடுக்கு; சர்ம-தோல்; மாம்ஸ்-சதை: ருதிர-இரத்தம்; மேத.-கொழுப்பு: மஜ்ஜா-மஜ்ஜை அல்லது எலும்பிலுள்ள ஊன்: அஸ்தி-எலும்பு: தாதவ:- மூலப் பொருட்கள்; பூமி-மண்; அப்-நீர்; தேஜ – நெருப்பு: மயா -ஆதிக்கம் செலுத்தும் ; ஸப்த -எழு; ப்ராண:- பிராண வாயு வ்யோம— ஆகாயம்: அம்பு—நீர்; வாயுபி:- காற்றால்.
உடலின் ஏழு மூலப் பொருட்களாகிய, தோலின் மீதுள்ள இலேசான அடுக்கு, தோல், சதை இரத்தம், கொழுப்பு, மஜ்ஜை மற்றும் எலும்பு ஆகியவை, நிலம், நீர், நெருப்பால் ஆனவையாகும். ஆனால் உயிர் மூச்சானது. ஆகாயம். நீர், காற்று ஆகியவற்றால் உண்டாக்கப்படுகிறது.
பதம் 2.10.32
குணாத்மகானித்ரியாணி பூதாதி-ப்ரபவா குணா:
மன: ஸர்வ-விகாராத்மா புத்திர் விக்ஞான-ரூபிணீ
குண-ஆத்மகானி-குணங்களில் பற்றுக் கொண்ட; இந்ரியாணி- புலன்கள்: பூத-ஆதி-பௌதிக அகங்காரம்; ப்ரபவா:- அதனால் வசீகரிக்கப்பட்டு; குணா:- ஜட இயற்கைக் குணங்கள்; மன:— மனம்; ஸர்வ— அனைத்து; விகார-பாசம் (இன்ப, துன்பங்கள்); ஆத்மா -உருவம்: புத்தி:- அறிவு; விக்ஞான-ஆழ்ந்த யோசனை; ரூபிணீ- முக்கிய அம்சமாக இருக்கும்.
புலன் உறுப்புகள் ஜட இயற்கைக் குணங்களில் பற்று கொண்டுள்ளன. ஜட இயற்கைக் குணங்கள் பொய் அகங்காரத்திலிருந்து விளைந்தவையாகும். மனம் எல்லா வகையான பௌதிக அனுபவங்களுக்கும் (இன்ப, துன்பம்) அடிமைப்பட்டுள்ளது மேலும் புத்தி, மனமாழ்ந்த யோசனையின் முக்கிய அம்சமாகும்.
பதம் 2.10.33
ஏதத் பகவதோ ரூபம் ஸ்தூலம் தே வ்யாஹ்ருதம் மயா
மஹி-ஆதிபிஸ் சாவரணைர் அஷ்டபிர் பஹிர் ஆவ்ருதம
ஏதத்-இவ்வெல்லா; பகவத:-முழுமுதற் கடவுளின்: ரூபம் -உருவம்; ஸ்தூலம்-ஸ்தூல; தே – உமக்கு; வ்யாஹ்ருதம் -விவரிக்கப்பட்டது; மயா—என்னால்; மஹீ-கிரகங்கள்; ஆதிபீ: -முதலான; ச எல்லையற்றவாறு; அவரணை:- மறைப்புக்களால்; அஷ்டபி: -எட்டு வகையான ; பஹி:- புற; ஆவ்ருதம்- மறைக்கப்பட்டுள்ளது.
என்னால் உமக்கு விவரிக்கப்பட்டது போல், கிரகங்களைப்போல் ஸ்தூல உருவங்களைக் கொண்ட இவை அனைத்தினாலும் முழுமுதற் கடவுளின் புற உருவம் மறைக்கப்பட்டுள்ளது.
பதம் 2.10.34
அத: பரம் ஸூக்ஷ்மதமம் அவ்யக்தம் நிர்விசேஷணம்
அனாதி-மத்ய-நிதனம் நித்யம் வான்-மனஸ: பரம்
அத:-ஆகவே; பரம்—உன்னதமான; ஸூக்ஷ்மதமம்—மென்மையானதிலும் மென்மையான; அவ்யக்தம்—தோற்றுவிக்கப்படாத; நிர்வி சேஷணம்- பௌதிக அம்சங்கள் இல்லாமல்; அனாதி-துவக்கம் இல்லாமல்; மத்ய-மத்திய நிலை இல்லாமல்; நிதனம்-முடிவு இல்லாமல்; நித்யம்-நித்தியமான; வாக் வார்த்தைகள்; மனஸ: -மனதின்;பரம்—உன்னதமான.
ஆகவே இதற்கும் (ஸ்தூல தோற்றம்) அப்பால் ஓர் உன்னதமான தோற்றம் உள்ளது. அது மென்மையிலும் மென்மையான உருவம் கொண்டதாகும். அதற்கு ஆரம்பமோ, மத்திய நிலையோ அல்லது முடிவோ கிடையாது; ஆகவே அது நமது விளக்கத்திற்கும், மனக் கற்பனைக்கும் அப்பாற்பட்டதும், பௌதிக எண்ணத்திலிருந்து முற்றிலும் வேறானதுமாகும்.
பதம் 2.10.35
அமுனீ பகவத்-ரூபே மயா தே ஹி அனுவர்ணிதே
உபே அபி ந க்ருஹ்ணந்தி மாயா-ஸ்ருஷ்டே விபஸ்சித:
அமுனீ-இவ்வெல்லா; பகவத் – பரமபுருஷரை; ரூபே-ரூபங்களில்: மயா-என்னால்; தே – உமக்கு; ஹி- நிச்சயமாக; அனு வர்ணிதே-முறையே விவரிக்கப்பட்ட; உபே-இரண்டும்; அபி – அதுவும்; ந—ஒருபொழுதுமில்லை; க்ருஹ்ணந்தி – ஏற்கிறார்; மாயா- பகிரங்க; ஸ்ருஷ்டே-அவ்வாறு சிருஷ்டிக்கப்பட்டிருப்பதால்; விப: -சித:- அறிந்தவரான கல்விமான்.
உமக்கு பௌதிக கோணத்திலிருந்து இப்பொழுது நான் விளக்கியதைப் போல், மேற்குறிப்பட்ட பகவானின் ரூபங்களில் எதுவும், அவரை நன்கறிந்துள்ள பகவத் பக்தர்களால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.
பதம் 2.10.36
ஸ வாச்ய-வாசகதயா பகவான் ப்ரஹ்ம-ரூப-த்ருக்
நாம-ரூப-க்ரியா தத்தே ஸகர்மாகர்மக: பர:
ஸ:-அவர்; வாச்ய-அவரது ரூபங்களாலும், செயல்களாலும்; வாசகதயா—அவரது உன்னதமான குணங்களாலும், பரிவாரத்தாலும்; பகவான்- முழுமுதற் கடவுள்; ப்ரஹ்ம-பிரம்மம்; ரூப-த்ருக் -காணக்கூடிய ரூபங்களை ஏற்பதன் மூலமாக; நாம -நாமம்; ரூப-ரூபம்; க்ரியா-திருவிளையாடல்கள்; தத்தே -ஏற்கிறார்; ஸ-கர்ம—செயலில் ஈடுபட்டிருக்கும்; அகர்மக:— பாதிப்படையாமல்; பர:- உன்னதமான.
முழுமுதற் கடவுளாகிய அவர், தமது உன்னதமான நாமம், குணம், லீலைகள், பரிவாரம் மற்றும் உன்னதமான பலவகைப்பட்ட நிலை ஆகியவற்றின் கருப்பொருளாக இருப்பதால், தம்மை ஒர் உன்னதமான உருவில் அவர் தோற்றுவித்துக் கொள்கிறார். அத்தகைய செயல்கள் அனைத்தினாலும் அவர் பாதிப்படையாதவராக இருப்பினும், அவ்வாறு ஈடுபட்டிருப்பதைப் போன்று அவர் காணப்படுகிறார்.
பதங்கள் 2.10.37 – 2.10.40
ப்ரஜா-பதீன் மனூன் தேவான் ருஷீன் பித்ரு-கணான் ப்ருதக்
சித்த-சாரண-கந்தர்வான் வித்யாத்ராஸுர-குஹ்யகான்
கின்னராப்ஸரஸோ நாகான் ஸர்பான் கிம்புருஷான் நரான்
மாத்ரு ரக்ஷ:- பிசாசாம்ஸ் ங் ப்ரேத -பூத – வினாயகான்
கூஷ்மாண்டோன்மாத – வேதாளான் யா து தானான் க்ரஹான் அபி
சுகான் ம்ருகான் பசூன் வ்ருக்ஷான் கிரீன் ந்ருப ஸரீஸ்ருபான்
த்வி விதாஸ் சதுர்-விதா யே ‘ன்யே ஜல ஸ்தல நபௌகஸ:
குங்லாகுங்லா மிஸ்ரா: கர்மணாம் கதயஸ் து இமா:
ப்ரஜா—பதீன்-பிரம்மாவும், தட்சனைப் போன்ற அவரது மகன்களும், மற்றும் பிறரும்; மனூன்—அவ்வப்பொழுது குறிப்பிட்ட காலங்களில் வரும் தலைவர்களான வைவஸ்வத மனுவைப் போன்றவர்கள்; தேவான்-இந்திரன், சந்திரன் மற்றும் வருணனைப் போன்றோர்; ருஷீன்-பிறகு மற்றும் வசிஷ்டரைப் போன்றோர்; பித்ரு -கணான்- பித்ருலோக வாசிகள்; ப்ருதக்—தனியாக; ஸித்த-சித்தலோக வாசிகள்; சாரண சாரணலோக வாசிகள்; கந்தர்வான்-கந்தர்வலோக வாசிகள்; வித்யாதர—வித்யாதர லோக வாசிகள்; அஸுர— அசுரர்கள்; குஹ்யகான்-யக்ஷலோக வாசிகள்; கின்னர—கின்னரலோக வாசிகள்; அப்ஸரஸ:- அப்சர லோகத்தின் அழகு தேவதைகள்; நாகான்-நாகலோகத்தின் பாம்பு வடிவ வாசிகள்: ஸர்பான்-ஸர்பலோக வாசிகள் (ஸர்பங்கள்): கிம்புருஷான் -கிம்புருஷ லோகத்தின் குரங்கு வடிவிலுள்ள வாசிகள்; நரான்—பூலோக வாசிகள்; மாத்ரு-மாத்ரு லோக வாசிகள்: ரக்ஷ:- இராட்சஸ லோக வாசிகள்; பிசாசான்—பிசாசுலோக வாசிகள்; ச-மேலும்; ப்ரேத-பிரேதலோக வாசிகள்; பூத-பூதங்கள்: விநாய கான் துஷ்ட தேவதைகள்; கூஸ்மாண்ட-கூஸ்மாண்டஙக்ள்; உன்மாத- பைத்தியக்காரர்கள்; வேதாளான்– வேதாளம்; யாதுதானான் ஒரு குறிப்பிட்ட வகையான துஷ்ட தேவதை ; க்ரஹான்—நல்ல மற்றும் துஷ்ட நட்சத்திரங்கள்; அபி-மேலும்; ககான்-பறவைகள்; ம்ருகான் – காட்டு மிருகங்கள்; பசுன்-வீட்டு மிருகங்கள்; வ்ருக்ஷான்—பேய்கள்; கீரீன்— மலைகள்; ந்ருப-அரசே; ஸரீஸ் ருபான்-ஊர்வன; த்வி-விதா:- அசையும் மற்றும் நிற்கும் ஜீவராசிகள்; சது: -விதா:-கரு, முட்டை, வியர்வை மற்றும் விதை ஆகியவற்றிலிருந்து பிறக்கும் ஜீவராசிகள்; யே – மற்றவைகள்; அன்யே – அனைத்தும்; ஜல—நீர்; ஸ்தல- நிலம்; நப -ஓகஸ:- பறவைகள்; குங்ல-இன்பத்தில்; அகுங்லா: துன்பத்தில்; மிஸ்ரா:- இன்ப, துன்பத்தின் கலப்படத்தில்; கர்மணாம் -ஒருவரின் கடந்தகால கருமங்களுக்கேற்ப; கதய:- அதன் பயனாக; து-ஆனால்; இமா:- அவர்களனைவரும்.
ராஜனே அனைத்து ஜீவராசிகளும் அவர்களின் கடந்த கால கருமங்களுக்கேற்ப பரமபுருஷராலேயே படைக்கப்படுகின்றனர் என்பதை என்னிடமிருந்து அறிவீராக, இது பின்வரும் ஜீவராசிகளையும் உள்ளடக்கியதாகும்: பிரம்மா மற்றும் தட்சனைப் போன்ற அவரது மகன்கள், குறித்த காலத்தில் அவ்வப்பொழுது தோன்றும் வைவஸ்வத மனுவைப் போன்றவர்கள், இந்திரன், சந்திரன் மற்றும் வருணனைப் போன்ற தேவர்கள், பிருகு, வியாசர் மற்றும் வசிஷ்டரைப் போன்ற பெரும் முனிவர்கள், பித்ருலோக மற்றும் சித்தலோக வாசிகள், சாரணர்கள், கந்தர்வர்கள், வித்யாதரர்கள், அசுரர்கள், யக்ஷர்கள், கின்னரர்கள், மற்றும் தேவதைகள், பரம்பினங்கள், குரங்கு வடிவ கிம்புருஷர்கள், மனிதர்கள், மாத்ருலோக வாசிகள், இராட்சஸர்கள், பிசாசுகள், பேய்கள், ஆவிகள், பைத்தியக்காரர்கள்: மற்றும் துர் தேவதைகள், நல்ல மற்றும் துர் நட்சத்திரங்கள், வேதாளங்கள், காட்டு மிருகங்கள், பறவைகள், வீட்டு மிருகங்கள், ஊர்வன, மலைகள், அசையும் மற்றும் நிற்கும் ஜீவராசிகள், கருவிலிருந்தும், முட்டையிலிருந்தும், வியர்வையிலிருந்தும் மற்றும் விதையிலிருந்தும் பிறக்கும் ஜீவராசிகள், மேலும் நீரிலோ, நிலத்திலோ அல்லது ஆகாயத்திலோ, மற்றும் இன்பத்திலோ, துன்பத்திலோ, அல்லது அவற்றின் கலப்படத்திலோ வாழும் மற்றெல்லா ஜீவராசிகள், இவர்களனைவரும் அவர்களின் கடந்த கால கருமங்களுக்கேற்ப பரமபுருஷரால் படைக்கப்படுகின்றனர்.
பதம் 2.10.41
ஸத்வம் ரஜஸ் தம இதி திஸ்ர; ஸுர-ந்ரு-நாரகா:
ததிராபி ஏகைகசோ ராஜன் பித்யந்தே கதயஸ் த்ரிதா
யதைகைகத்ரோ ‘ன்யாப்யாம் ஸ்வ-பாவ உபஹன்யதே
ஸத்வம்- தற்குணம்; ரஜ -தீவிர குணம்: தம- அறியாமைக் குணம்: இதி- இவ்வாறாக, திஸ்ர- மூன்று; ஸுர-தேவர்; ந்ரு— மனிதன்: நாரகா : – நரகமான சூழ்நிலைகளை அனுபவிப்பவன்; தத்ர அபி – அங்கேயும்; ஏகைகங்: மற்றொரு; ராஜன்-ராஜனே; பித்யந்தே பிரிவாகப் பிரி. கதய:- அசைவுகள்; தீரிதா-மூன்று; யதா—அப்பொழுது, ஏகைகதர—— மற்றொன்றுடன் சம்பந்தப்பட்டுள்ள ஒன்று, அன்யாப்யாம் மற்றதிலிருந்து: ஸ்வ-பாவ: – சுபாவம்; உபஹன்யதே – விருத்தியடைகிறது.
சத்வம், ரஜஸ் மற்றும் தமஸ் எனும் ஜட இயற்கை குணங்களுக்கேற்ப வெவ்வேறு ஜீவராசிகள் உள்ளனர். இவர்கள் தேவர்களென்றும், மனிதர்களென்றும் மற்றும் நரக வாழ்விலுள்ள ஜீவராசிகள் என்றும் அறியப்படுகின்றனர். ஓ ராஜனே, இயற்கையின் ஒரு குறிப்பிட்ட குணமும் கூட. மற்ற இரண்டுடனும் கலந்திருப்பதால், அது மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறாக ஒவ்வொரு வகையான ஜீவராசியும் மற்ற குணங்களால் வசிகரிக்கப்பட்டு, அவற்றின் சுபாவங்களையும் கூட பெறுகிறான்.
பதம் 2.10.42
ஸ ஏவேதம் ஜகத்-தாதா பகவான் தர்ம-ரூப-த்ருக்
புஷ்ணாதி ஸ்தாபயன் விஸ்வம் திர்யன்-நர-ஸுராதிபி:
ஸ: -அவர்; ஏவ-நிச்சயமாக; இதம் -இந்த; ஜகத் -தாதா பிரபஞ்சம் முழுவதையும் காப்பவர்; பகவான்-முழுமுதற் கடவுள்; தர்ம- ரூப த்ருக்-சமயக் கொள்கைகளின் உருவை ஏற்று; புஷ்ணாதி -பாதுகாக்கிறார்; ஸ்தாபயன்-ஏற்படுத்திய பிறகு; விஸ்வம்- பிரபஞ்சங்களை; திர்யக்-மனிதனைவிடத் தாழ்ந்த ஜீவராசிகள்; நர- மனிதர்கள்: ஸுர-ஆதிபி: தேவர்களைப் போன்ற அவதாரங்களால்.
முழுமுதற் கடவுளாகிய அவர், படைப்பை ஏற்படுத்திய பின், பிரபஞ்சத்திலுள்ள அனைவரையும் பாதுகாப்பவர் எனும் முறையில் வெவ்வேறு அவதாரங்களில் தோன்றுகிறார். இவ்வாறாக மனிதர்கள், மனிதரற்றவர்கள் மற்றும் தேவர்கள் ஆகியோருக்கு இடையிலுள்ள எல்லா வகையான பந்தப்பட்ட ஆத்மாக்களையும் அவர் காப்பாற்றுகிறார்.
பதம் 2.10.43
தத: காலாக்னி – ருத்ராத்மா யத் ஸ்ருஷ்டம் இதம் ஆத்மன:
ஸன்னியச்சதி தத் காலே கனானீகம் இவானில:
தத:-அதன்பிறகு, முடிவில்; கால – அழிவு ; அக்னி – நெருப்பு;ருத்ர-ஆத்மா-ருத்ரனின் உருவில்; யத்-என்னவெல்லாம்; ஸ்ருஷ்டம்-படைக்கப்பட்டுள்ளதோ; இதம்-இவையனைத்தையும்; ஆத்மன:-அவரேதாமாக; ஸம் – முழுமையாக நியச் சதி- அழிக்கிறார்; தத் காலே-யுக முடிவில்; கன—அனீகம்—மேகக் கூட்டங்கள்; இவ – அதைப்போன்ற; அனில்: காற்று.
அதன்பிறகு, யுக முடிவில், அழிவை ஏற்படுத்துபவரான ருத்ரனின் உருவில் தோன்றும் பகவான், மேகங்களை காற்று கலைத்து விடுவதைப் போல், முழு படைப்பையும் அழித்து விடுவார்.
பதம் 2.10.44
இத்தம் பாவேன கதிதோ பகவான் பகவத்தம:
நேத்தம் – பாவேன ஹி பரம் த்ரஷ்டும் அர்ஹந்தி ஸூரய:
இத்தம்—இந்த அம்சங்களில்;பாவேன—படைத்தல்;அழித்தலெனும் விவகாரம்; கதித:விவரிக்கப்பட்ட; பகவான்-முழுமுதற் கடவுள்; பகவத்- தம:-சிறந்த ஆன்மீகிகளால்; ந-இல்லை; இத்தம் – இந்த; பாவேன-அம்சங்கள்; ஹி-மட்டுமே; பரம-மிகச் சிறந்த பெருமை; த்ரஷ்டும் – காண; அர்ஹந்தி-தகுதி படைத்த; ஸூரய:-சிறந்த பக்தர்கள்.
சிறந்த ஆன்மீகிகள் பரமபுருஷ பகவானின் செயல்களை இவ்வாறு விவரிக்கின்றனர். ஆனால் தூய பக்தர்கள், இந்த அம்சங்களை விட அதிக பெருமை வாய்ந்த விஷயங்களை பகவானில் காணும் தகுதியுடையவர்களாவர்.
பதம் 2.10.45
நாஸ்ய கர்மணி ஜன்மாதௌ பரஸ்யானுவிதீயதே
கர்த்ருத்வ-ப்ரதிஷேதார்தம் மாயயாரோபிதம் ஹி தத்
ந-ஒருபொழுதுமில்லை: அஸ்ய-படைப்பின்: கர்மணி-எனும் விஷயத்தில்; ஜன்ம ஆதெள-படைப்பு. அழிவும்: பரஸ்ய- பரமனின்; அனுவிதீயதே-இது அவ்வாறு விவரிக்கப்படுகிறது; கர்த்ருத்வ-மேற்பார்வை: ப்ரதிஷேத-அர்தம் மறுத்தல்; மாயயர் பகிரங்க சக்தியால்; ஆரோபிதம் – படைக்கப்படுகிறது: ஹி-அதற்காக; தத்-சிருஷ்டிக் கர்த்தா.
ஜட உலகின் படைப்பு மற்றும் அழிவு எனும் விஷயங்களில் பகவானின் நேரடியான மேற்பார்வை இல்லை. ஜட இயற்கைதான் சிருஷ்டிக் கர்த்தா எனும் கருத்தை மறுப்பதற்காகவே பகவானின் நேரடியான ஈடுபாட்டைப் பற்றி வேதங்களில் விவரிக்கப்பட்டுள்ளது.
பதம் 2.10.46
அயம் து ப்ரஹ்மண: கல்ப: ஸவிகல்ப உதாஹ்ருத:
விதி: ஸாதாரணோ யத்ர ஸர்கா: ப்ராக்ருத-வைக்ருதா:
அயம்-படைத்தல் மற்றும் அழித்தல் எனும் இம்முறை; து- ஆனால்; ப்ரஹ்மண:- பிரம்மாவின்; கல்ப:- ஒரு பகல்; ஸ -விகல்ப:- பிரபஞ்சங்களின் ஆயுளுடன்; உதாஷ்ருத:- பின்பற்றத் தக்கதான; விதி:- கட்டுப்பாட்டு விதிகள்; ஸாதாரண: சுருக்கமாக; யத்ர-எங்கு; ஸர்கா:- படைப்பு; ப்ராக்ருத ஜட இயற்கையின் விஷயத்தில்; வைக்ருதா:- கலைத்தல்.
இவ்விடத்தில் சுருக்கமாக விவரிக்கப்பட்டுள்ள படைப்பு மற்றும் அழிவைப் பற்றிய இம்முறையே பிரம்மாவின ஒரு பகலுக்குரிய கட்டுப்பாட்டு விதியாகும். எதில் பௌதிக இயற்கை கலைக்கப்டுகிறதோ. அந்த மஹத்தின் படைப்பிலும் கூட இதுவே கட்டுப்பாட்டு விதியாக உள்ளது.
பதம் 2.10.47
பரிமாணம் ங் காலஸ்ய கல்ப-லக்ஷண-விக்ரஹம்
யதா புரஸ்தாத் வ்யாக்யாஸ்யே பாத்மம் கல்பம் அதோ ஸ்ருணு
பரிமாணம்—அளவு; ச-மேலும்; காலஸ்ய-காலத்தின்; கல்ப -பிரம்மாவின் ஒரு பகல்; லக்ஷண—அறிகுறிகள்; விக்ரஹம்-உருவம்; யதா -இயன்ற அளவு; புரஸ்தாத்—இதற்குப் பிறகு; வியாக்யாஸ்யே – விளக்கப்படும்; பாத்மம்-பாத்மம் எனும் பெயர் கொண்ட; கல்பம் – ஒரு பகலின் கால அளவு; அதோ—இவ்வாறாக; ஸ்ருணு-கேளும்.
ஓ ராஜனே, காலத்தின் அளவை, அதன் ஸ்தூல மற்றும் சூட்சும அம்சங்களில், அவற்றின் குறிப்பிட்ட அறிகுறிகளுடன், போகப் போக நான் விளக்குவேன். ஆனால் இப்பொழுது பாத்ம-கல்பத்தைப் பற்றி உமக்கு நான் விளக்கப் போகிறேன்.
பதம் 2.10.48
யத் ஆஹ நோ பவான் ஸூத க்ஷத்தா பாகவதோத்தம
சதீர தீர்தானி புவஸ் தியக்வா பந்தூன் ஹுதுஸ்த்யஜான்
சௌனக உவாச—ஸ்ரீ சௌனக முனி கூறினார்; யத்—அவ்வாறு; ஆஹ-தங்கள் கூறினீர்கள்; ந;- எங்களிடம்; பவான்—தாங்கள்; ஸூத – ஓ சுதரே: க்ஷத்தா – விதுரா; பாகவத—உத்தம: பகவானின் மிகவுயர்ந்த பக்தர்களில் ஒருவர்; சசார-பயின்றார்; தீர்தானி – புண்ணிய யாத்திரை ஸ்தலங்கள்; புவ:- பூமியில்; தியக்த்வா ஒதுக்கி வைத்துவிட்டு; பந்தூன்—உறவினர்களை; ஸுதுஸ்த்யஜான் – துறப்பதற்கு மிகவும் கடினமான.
விட்டுப் பிரிவதற்கு மிகவும் கடினமானவர்களான உறவினர்களை ஒரு புறம் விட்டுவிட்டு, விதுரர் எப்படி வீட்டை விட்டு வெளியேறினார் என்பதைப் பற்றி சுத கோஸ்வாமி ஏற்கனவே சௌனக ரிஷியிடம் அறிவித்திருந்ததால், படைப்பைப் பற்றிய அனைத்தையும் கேள்விப்பட்ட பின், சௌனக ரிஷி சுத கோஸ்வாமியிடம் விதுரரைப் பற்றி விசாரித்தார்.
பதங்கள் 2.10.49 – 2.10.50
க்ஷத்து: கெளசாரவேஸ் தஸ்ய ஸம்வாதோ த்யாத்ம ஸம்ஸ்ரித:
யத் வா ஸ பகவாம்ஸ் தஸ்மை ப்ருஷ்டஸ் தத்வம் உவாச ஹ
ப்ருஹி நஸ் தத் இதம் ஸௌம்ய விதுரஸ்ய விசேஷ்டிதம்
பந்து-த்யாக-நிமித்தம் ச யதைவாகதவான் புன:
க்ஷத்து: விதூரின்; கௌசாரவே: மைத்ரேயருடையதைப் போன்ற; தஸ்ய—அவர்களுடைய; ஸம்வாத:- செய்திகள்; அத்யாத்ம- உள்ளத அறிவெனும் விஷயத்தில்; ஸம்ஸ்ரித:-நிரம்பிய; யத்—எது; வா—வேறெதுவும்; ஸ:- அவர்; பகவான்-மேன்மை தங்கிய அவர்: தன்மை–அவரிடம்; ப்ருஷ்ட:-விசாரித்தார்; தத்வம்-உண்மையை: உவாச-விடையளித்தார்; ஹ-கடந்த காலத்தில்; ப்ரூஹி:-தயவு செய்து கூறுங்கள்; ந:-எங்களிடம்; தத்—அவ்விஷயங்களை; இதம் -இங்கு; ஸௌம்ய-சாந்த சொரூபியே; விதுரஸ்ய-விதுரரின்; விசேஷ்டிதம்- செயல்கள்; பந்து—த்யாக்—நண்பர்களைத் துறந்து; நிமித்தம்—அதன் காரணமாக; ச-மேலும்; யதா—அவ்வாறு; ஏவ தவிரவும்; ஆகதவான்-திரும்பி வந்தார்; புன:- மீண்டும் (வீட்டிற்கு).
சௌனக ரிஷி கூறினார்: ஆன்மீக விஷயங்களைப் பற்றி பேசிய மைத்ரேயருக்கும், விதுரருக்கும் இடையில் என்னென்ன விஷயங்கள் பேசப்பட்டன, விதுரர் எதைப்பற்றி விசாரணை செய்தார், அதற்கு மைத்ரேயர் கூறிய பதிலென்ன என்பதையெல்லாம் தயவு செய்து எங்களுக்குக் கூறியருளுங்கள். மேலும் விதுரர் தமது குடும்ப அங்கத்தினர்களின் உறவைக் கைவிட்டதன் காரணத்தையும், அவர் ஏன் மீண்டும் திரும்பினார் என்பதையும், புண்ணிய யாத்திரை ஸ்தலங்களில் இருந்தபொழுது விதுரர் ஆற்றிய செயல்களைப் பற்றியும் தயவு செய்து எங்களுக்குக் கூற வேண்டுகிறேன்.
பதம் 2.10.51
ஸூத உவாச
ராஜ்ஞா பரீக்ஷிதா ப்ருஷ்டோ யத் அவோசன் மஹா-முனி:
தத் வோ ‘பிதாஸ்யே ஸ்ருணுத ராஜ்ஞ: ப்ரஸ்னானுஸாரத்:
ஸூத: உவாச-ஸ்ரீ சுத கோஸ்வாமி பதில் கூறினார்; ராஜ்ஞா— ராஜனால்; ப்ருஷ்தா—பரீட்சித்து மகாராஜனால்; ப்ருஷ்ட:-கேட்டுக் கொண்டவாறு; யத்-எதை; அவோசத்—பேசினார்; மஹா-முனி:- மகா முனிவர்; தத்—அதே விஷயத்தை; வ:- உங்களுக்கு; அபிதாஸ்யே -நான் விளக்கப் போகிறேன்; ஸ்ருணுத-தயவு செய்து கேளுங்கள்; ராஜ்ஞ:- ராஜனால்; ப்ரஸ்ன -கேள்வி; அனுஸாரத:- அதற்கிணங்க.
ஸ்ரீ சுத கோஸ்வாமி விளக்கினார்: பரீட்சித்து மகாராஜனின் கேள்விகளுக்கு பதில் கூறும் வகையில் மகா முனிவரால் விவரிக்கப்பட்ட அதே விஷயங்களை இப்பொழுது நான் உங்களிடம் விளக்கிக் கூறுகிறேன். தயவு செய்து அவற்றை கவனமாகக் கேளுங்கள்.
ஸ்ரீமத்பாகவதம், இரண்டாம் காண்டத்தின், “எல்லாக் கேள்விகளுக்கும் பாகவதமே தகுந்த விடை” எனும் தலைப்பைக் கொண்ட பத்தாம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றது.