அத்தியாயம் – 9
பீஷ்மதேவரின் மரணம்
பதம் 1.9.1
ஸூத உவாச
இதி பீத: ப்ரஜா-த்ரோஹாத் ஸர்வ-தர்ம-விவித்ஸயா
ததோ வினசனம் ப்ராகாத் யத்ர தேவ-வ்ரதோ ‘பதத்
ஸுத உவாச -ஸ்ரீ சூத கோஸ்வாமி கூறினார்; இதி-இவ்வாறு; பீத- அதனால் அச்சமடைந்து; ப்ரஜா-த்ரோஹாத்—பிரஜைகளைக் கொன்றதால்; ஸர்வ-எல்லா; தர்ம- மத அனுஷ்–அனுஷ்டானங்கள்; விவித்ஸயா-புரிந்துகொள்ள; தத-அதன் பிறகு; வினசனம்-போர் நிகழ்ந்த இடத்திற்கு; ப்ராகாத்—அவர் சென்றார்; யத்ர-எங்கு; தேவ–வ்ரத—பீஷ்மதேவர்; அபதத்—உயிரை விடுவதற்காக படுத்திருந்த.
சூத கோஸ்வாமி கூறினார். குருட்சேத்திரப் போர்க்களத்தில் அநேக பிரஜைகளைக் கொன்றுவிட்டதை எண்ணி அச்சமடைந்த யுதிஷ்டிர மகாராஜன் படுகொலை நிகழ்ந்த இடத்திற்குச் சென்றார். அங்கு, பீஷ்மதேவர் ஓர் அம்புப் படுக்கையில் படுத்தவாறு உயிரைவிடும் நிலையில் இருந்தார்.
பதம் 1.9.2
ததா தே ப்ராதர: ஸர்வே ஸதஸ்வை: ஸ்வர்ண-பூஷிதை:
அன்வகச்சன் ரதைர் விப்ரா வ்யாஸ-தௌம்யாதயஸ் ததா
தத:-அச்சமயம்; தே— அவர்கள் அனைவரும்; ப்ராதர;– சகோதரர்கள்; ஸ்ர்வே- அனைவரும் ஒன்றாக; ஸத்அஸ்வை—முதல்தரமான குதிரைகளால் இழுக்கப்பட்ட; ஸ்வர்ண—தங்கத்தால்; பூஷித—அலங்கரிக்கப்பட்ட; அன்வகச்சன்—ஒவ்வொருவராக பின் தொடர்ந்தனர்; ரதை-இரதங்களில்; விப்ரா-ஓ பிராமணர்கலளே; வ்யாச–வ்யாச முனிவர்; தெளம்ய-தவும்யர்; ஆதய-மற்றும் பிறர்; ததா–மேலும்.
அச்சமயத்தில் அவரது சகோதரர்கள் அனைவரும், தங்க ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டு, முதல்தரமான குதிரைகளால் இழுக்கப்பட்ட அழகிய இரதங்களில் அவரைப் பின்தொடர்ந்த சென்றனர். (பாண்டவர்களின் புரோகிதரான) தௌம்யரைப் போன்ற ரிஷிகளும், வியாசரும், மற்றவர்களும் அவர்களுடன் இருந்தனர்.
பதம் 1.9.3
பகவான் அபி விப்ரர்ஷே ரதேன ஸ-தனஞ்சய:
ஸ தைர் வ்யரோசத ந்ருப: குவேர இவ குஹ்யகை:
பகவான் – பரம புருஷ பகவான் (ஸ்ரீ கிருஷ்ணர்); அபி-மேலும்; விப்ர–ருஷே— பிராமணர்களுக்கு இடையிலான ரிஷியே; ரதேன – இரதத்தில்; ஸ-தனஞ்சய—தனஞ்சயருடன் (அர்ஜுனன்); ஸ-அவர்; தை:- அவர்களால்; வ்யரோசத-கம்பீரமான கோலாகலத்துடன் காணப்பட்டார்; ந்ருப:-மகாராஜன் (யுதிஷ்டிரர்); குவேர-தேவர்களின் பொருளாளரான குபேரன்; இவ-போல்; குஹ்யகை-குஹ்யர்கள் எனப்படும் நண்பர்கள்.
பிரம்ம ரிஷியே, பரம புருஷ பகவானாகிய ஸ்ரீ கிருஷ்ணரும் கூட அர்ஜூனனுடன் இரதத்தில் அவர்களைப் பின்தொடர்ந்தார். இவ்வாறாக நண்பர்களால் (குஹ்யர்களால்) சூழப்பட்ட குபேரனைப் போல் யுதிஷ்டிர மகாராஜனும் கம்பீரமான கோலத்துடன் காணப்பட்டார்.
பதம் 1.9.4
த்ருஷ்ட்வா நிபதிதம் பூமௌ திவஸ் ச்யுதம் இவாமரம்
ப்ரணேமு: பாண்டவா பீஷ்மம் ஸானுகா: ஸஹ சக்ரிணா
த்ருஷ்ட்வா-இவ்வாறு கண்டு: நிபதிதம்—படுத்திருப்பதை; பூமென-தரையில்; திவ-ஆகாயத்திலிருந்து; ச்யுதம்—விழுந்துவிட்ட; இவ-போல்; அமரம்—-தேவரை: ப்ரணேமு-தலை வணங்கினார்; பாண்டவா-பாண்டு புத்திரர்கள்; பீஷ்மம்-பீஷ்மருக்கு; ஸஅனுகா-இளைய சகோதரர்களுடன்; ஸஹ–அவருடனும்; சக்ரிணா— (சக்கரத்தை ஏந்தியுள்ள) பகவான்.
ஆகாயத்திலிருந்து விழுந்துவிட்ட ஒரு தேவரைப் போல் தரையில் படுத்துக்கிடந்த அவரைக் (பீஷ்மரை) கண்டு, பாண்டவ ராஜனான யுதிஷ்டிரர் அவரது இளைய சகோதரர்களுடனும், பகவான் ஸ்ரீ கிருஷ்ணருடனும் அவர் முன் தலை வணங்கினார்.
பதம் 1.9.5
தத்ர ப்ரஹ்மர்ஷய: ஸர்வே தேவர்ஷயஸ் ச ஸத்தம
ராஜர்ஷயஸ் ச தத்ராஸன் த்ரஷ்டும் பரத-புங்கவம்
தத்ர-அங்கு; ப்ரஹ்ம-ருஷய—பிராமணர்களுக்கு இடையிலான ரிஷிகள்; ஸர்வே-எல்லா; தேவ-ருஷய—தேவர்களுக்கு இடையிலான ரிஷிகள்; ச-மேலும்; ஸத்தம—நற்குணத்திலுள்ள; ராஜ-ருஷ்ய— அரசர்களுக்கு இடையிலான ரிஷிகள்; ச–மேலும்; தத்ர-அந்த இடத்தில்; ஆஸன்-இருந்தனர்; த்ரஷ்டும்-காண; பரத- பரத மகாராஜனின் வம்சத்தினரை; புங்கவம்– தலைவரான.
பரத மகாராஜனுடைய வம்சத்தினரில் தலைமையானவரை (பீஷ்மர்) காண்பதற்காகவே, நற்குணத்தில் நிலைபெற்றவர்களும். பிரபஞ்சத்திலுள்ள மகாத்மாக்களுமாகிய எல்லா தேவரிஷிகளும், பிரம்ம ரிஷிகளும் மற்றும் ராஜ ரிஷிகளும் அங்கு கூடியிருந்தனர்.
பதங்கள் 1.9.6 – 1.9.7
பர்வதோ நாரதோ தெளம்யோ பகவான் பாதராயண:
ப்ருஹதஸ்வோ பர்தவாஜ: ஸசிஷ்யோ ரேணுகா ஸூத:
வஸிஷ்ட இந்தரப்ரமதஸ் த்ரிதோ க்ருத்ஸ்மதோ’ ஸித:
கஷீவான் கௌதமோ ‘த்ரிஸ்ச கௌசிகோ ‘த ஸுதர்சன;
பர்வத:-பர்வத முனி: நாரத:-நாரத முனி; தெளம்ய-தவும்யர்; பகாவான்—பகவானின் அவதாரமான; பாதராயண:-வியாசதேவர்; ப்ருஹதஸ்வோ:–பிருகதஸ்வர்: பரத்வாஜ;-பரத்வாஜர்; ஸசிஷ்ய- சீடர்களுடன்; ரேணுகா-ஸுத—பரசுராமர்; வஸிஷ்ட-வஸிஷ்டர்; இந்ரப்ரமத- இந்ரப்ரமதர்: த்ரித- திரிதர்; க்ருத்-ஸமத:—கிருத்ஸ்மதர்; அஸித-அஸிதர்; கக்ஷீவான்—கஷீவான்; கௌதம- கெளதமர்; அத்ரி—அத்ரி; ச-மேலும்; கௌசிக: – கௌசிகர்; அத-தவிரவும்; ஸுதர்சன:—ஸுதர்சனர்.
பர்வத முனி, நாரதர், தௌம்யர், பகவானின் அவதாரமான வியாசர், பிருகதஸ்வர், பரத்வாஜர் மற்றும் பரசுராமர் அவரது சீடர்கள், வஸிஷ்டர், இந்ரப்ரமதர், திரிதர், கிருத்ஸமதர், அஸிதர், கக்ஷிவான், கௌதமர், அத்ரி, கௌசிகர் மற்றும் ஸுதர்சனர் போன்ற எல்லா முனிவர்களும் அங்கு கூடியிருந்தனர்.
பதம் 1.9.8
அன்யே ச முனயோ ப்ரஹ்மன் ப்ரஹ்மராதாதயோ ‘மலா:
சிஷ்யைர் உபேதா ஆஜக்மு: கஸ்ய பாங்கிரஸாதய:
அன்யே-மற்றும் பலர்; ச-கூட; முனய-முனிவர்கள்; பிரஹ்மன்-பிராமணர்களே; ப்ரஹ்மராத-சுகதேவ கோஸ்வாமி; ஆதய—மேலும் அவர்களைப் போன்ற பிறரும்; அமலா-முற்றிலும் தூய்மையடைந்த; சிஷ்யை-சீடர்களால்; உபேதா-சூழப்பட்டு; ஆஜக்மு-வந்தடைந்தனர்; கஸ்யப-கஸ்யபர்; ஆங்கிரஸ–ஆங்கிரஸர்; ஆதய-மற்றவர்கள்.
மேலும் சுகதேவ கோஸ்வாமியும், தூய்மையடைந்த மற்ற ஆத்மாக்களும், கஸ்யபரும், ஆங்கிரஸரும், இவர்களைப் போன்ற மற்றும் பலரும் முறையே அவரவர் சீடர்களால் சூழப்பட்டவாறு அங்கு வந்து சேர்ந்தனர்.
பதம் 1.9.9
தான் ஸமேதான் மஹா பாகான் உபலப்ய வஸுத்தம:
பூஜயாம் ஆஸ தர்ம -க்ஞோ தேச-கால-விபாகவித்
தான்—அவர்கள் அனைவரும்; ஸமேதான்—ஒன்றாகக் கூடிய; மஹா பாகான் – பெரும் சக்தி படைத்த அனைவரும்; உபலப்ய-உபசரித்து; வஸு-உத்:—தம்வஸுக்களில் மிகச்சிறந்தவர் (பீஷ்மதேவர்); பூஜயாஆஸ-வரவேற்றார்; தர்ம-க்ஞ:—தர்மத்தை அறிந்தவர்; தேச—இடம்; கால-காலம்; விபாகவித்-காலத்தையும், இடத்தையும் அனுசரித்து நடந்து கொள்வதை அறிந்தவர்.
எட்டு வஸுக்களிலும் மிகச்சிறந்தவரான பீஷ்மதேவர், காலத்திற்கும், இடத்திற்கும் ஏற்ப எல்லா மதக்கொள்கைகளையும் நன்கு அறிந்திருந்தார் என்பதால், அங்கு கூடியிருந்த புகழ்பெற்றவர்களும், சக்தி வாய்ந்தவர்களுமான ரிஷிகள் அனைவரையும் உபசரித்து வரவேற்றார்.
பதம் 1.9.10
க்ருஷ்ணம் ச தத்-ப்ரபாவ-க்ஞ ஆஸீனம் ஜகத்-ஈஸ்வரம்
ஹ்ருதி-ஸ்தம் பூஜயாம் ஆஸ மாயயோபாத்த-விக்ரஹம்
க்ருஷ்ணம்-பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை; ச-மேலும்; தத்-அவரது; ப்ரபாவ-க்ஞ:—பெருமைகளை அறிந்தவர் (பீஷ்மர்); ஆஸீனம்–அமர்திருந்தார்; ஜகத்-ஈஸ்வரம்:–பிரபஞ்சத்தின் இறைவன்; ஹ்ருதி–ஸ்தம்— இதயத்திலுள்ள; பூஜயாம் ஆஸ-வழிபட்டார்; மாயயா– அந்தரங்க சக்தியினால்; உபாத்த—தோற்றுவித்தார்; விக்ரஹம் –ஒருருவத்தை.
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் எல்லோருடைய இதயத்திலும் இருக்கிறார் என்ற போதிலும், அவரது அந்தரங்க சக்தியினால் அவருடைய தெய்வீக உருவத்தை அவர் தோற்றுவிக்கிறார். இதே பகவான் பீஷ்மதேவரின் முன் அமர்ந்திருந்தார். அவரது பெருமைகளை பீஷ்மதேவர் அறிந்திருந்தார் என்பதால், பகவானை அவர் தகுந்தபடி வழிபட்டார்.
பதம் 1.9.11
பாண்டு-புத்ரான் உபாஸீனான் ப்ரஸ்ரய ப்ரேம ஸங்கதான்
அப்யாசஷ்டானுராகா ஸ்ரைர் அந்தீபூதேன சக்ஷுஷா
பாண்டு-யுதிஷ்டிர மகாராஜன் மற்றும் அவரது சகோதரர்களின் காலஞ் சென்ற தந்தை; புத்ரான்–மகன்கள்; உபாஸீனான்-மௌனமாக அருகில் அமர்ந்திருந்த; ப்ரஸ்ரய-பீடிக்கப்பட்டு; ப்ரேம-அன்பான உணர்ச்சிகளால்; ஸங்கதான்-ஒன்றுகூடி; அப்யாசஷ்ட-பாராட்டினார்; அனுராக-உருக்கத்துடன்; அஸ்ரை-ஆனந்தக் கண்ணீரால்; அந்தீபூதேன-பூரிப்படைந்தார்; சக்ஷுஷா—அவரது கண்களில்.
பாண்டு மகாராஜனின் மகன்கள், உயிரைவிடும் நிலையிலுள்ள அவர்களது பாட்டனாரின் மீதுள்ள பாசத்தினால் பீடிக்கப்பட்டு அவருக்கருகில் மௌனமாக அமர்ந்திருந்தனர். இதைக் கண்ட பீஷ்மதேவர் உணர்ச்சி ததும்ப அவர்களைப் பாராட்டினார். அன்பாலும் பாசத்தாலும் பூரிப்படைந்த அவரது கண்களில் ஆனந்தக் கண்ணீர் ததும்பியது.
பதம் 1.9.12
அஹோ கஷ்டம் அஹோ ன்யாய்யம் யத் யூயம் தர்ம-நந்தனா:
ஜீவிதும் நார்ஹத க்லிஷ்டம் விப்ர-தர்மாச்யுதாஸ்ரயா;
அஹோ-ஓ; கஷ்டம்-எவ்வளவு பயங்கரமான துன்பங்கள்; அஹோ—ஓ; அன்பாய்யம் எவ்வளவு பயங்கரமான அநியாயம்; யத்-என்ற காரணத்தினால்; யூயம்—நல்லாத்மாக்களான நீங்கள்; தர்ம நந்தன—தர்மமே சொரூபமானவரின் மகன்கள்; ஜீவிதும்-உயிர்வாழ; ந–ஒருபோதும் இல்லை; அர்ஹத—சாத்தியம்; க்லிஷ்டம்– துன்பம்; விப்ர-பிராமணர்கள்; தர்ம-தர்மம்; அச்யுத-பகவான்; ஆஸ்ரயா- பாதுகாக்கப்பட்டு.
பீஷ்மதேவர் கூறினார்: ஓ, எவ்வளவு பயங்கரமான துன்பம் எவ்வளவு பயங்கரமான அநீதி. தர்மமே சொரூபமானவரின் மகன்களாக இருந்ததால், நல்லாத்மாக்களான நீங்கள் இவ்வளவு துன்பங்களையும் அனுபவிக்க வேண்டியிருந்தது. அப்பெருந்துன்பங்களுக்கிடையில் நீங்கள் உயிரோடிருந்தது சாத்தியமாகக் கூடியதல்ல இருப்பினும் பிராமணர்களாலும், பகவானாலும், தர்மத்தினாலும் பாதுகாக்கப்பட்டீர்கள்.
பதம் 1.9.13
ஸம்ஸ்திதே ‘திரேதே பாண்டெள ப்ருதா பால-ப்ரஜா வதூ:
யுஷ்மத்-க்ருதே பஹூன் க்லேசான் ப்ராப்தா தோகவதீ முஹு:
ஸம்ஸ்திதே-மரணத்திற்குப் பின்; அதிரதே—பெருந்தளபதியின்; பாண்டௌ—பாண்டு; ப்ருதா-குந்தி; பால-ப்ரஜா—இளம் குழந்தைகளைக் கொண்ட; வதூ:- என் மருமகள்: யுஷ்மத்-க்ருதே:—உங்களால்; பஹுன்—பல வகையான; க்லேசான்—துன்பங்களை; ப்ராப்தா—அனுபவித்தனர்; தோகவதீ- பருவமடைந்தவர்களைப் பெற்றிருந்தபோதிலும்; முஹு-இடைவிடாமல்.
எனது மருமகளான குந்தியைப் பொறுத்தவரை, பெரும் தளபதியான பாண்டுவின் மரணத்திற்குப் பின், அவள் பல குழந்தைகளைக் கொண்ட ஒரு விதவையானாள். இதனால் அவள் மிகவும் துன்பப்பட்டாள். நீங்கள் பருவமடைந்தபொழுது, உங்களுடைய செயல்களாலும் அவளுக்கு பெருந்துன்பம் விளைந்தது.
பதம் 1.9.14
ஸர்வம் கால-க்ருதம் மன்யே பவதாம் ச யத்-அப்பிரியம்
ஸபாலோ யத் வசே லோகோ வாயோர் இவ கனாவலி:
ஸர்வம்—இவை அனைத்தும்; கால-க்ருதம்:— தவிர்க்க முடியாத காலத்தின் விளைவாகும்; மன்யே-நான் நினைக்கிறேன்: பவதாம்ச- உங்களுக்கும் கூட; யத்-எந்த; அப்ரியம்—வெறுக்கத்தக்க; ஸ-பால–ஆளுநர்களுடன்; யத்வசே-அக்காலத்தினுடைய கட்டுப்பாட்டின் கீழ்; லோக-எல்லா கிரகங்களிலும் உள்ள அனைவரும்; வயோ-காற்று எடுத்துச் செல்கிறது; இவ-போல்; கன–ஆவலி:—மேகக் கூட்டம்.
இவையனைத்தும் தவிர்க்க முடியாத காலத்தினால் விளைந்தவையே என்பது என் அபிப்பிராயமாகும். மேகங்கள் காற்றினால் அடித்துச் செல்லப்படுவதைப் போலவே, எல்லா கிரகங்களிலும் உள்ள அனைவரும் காலத்தினால் ஆளப்படுகின்றனர்.
பதம் 1.9.15
யத்ர தர்ம ஸுதோ ராஜா கதா-பாணிர் வ்ருகோதர:
க்ருஷ்ணோ ‘ஸ்த்ரீ காண்டிவம் சாபம் ஸுஹ்ருத் கிருஷ்ணஸ் ததோ விபத்
யத்ர–இருக்கும் இடத்தில்; தர்மஸுத-தர்மராஜனின் மகன்; ராஜா–அரசர்; கதா-பாணி:—சக்தி வாய்ந்த கதாயுதத்தைக் கொண்ட; வ்ருகோதர:-பீமன்; க்ருஷ்ண—அர்ஜுனன்; அஸ்த்ர-அஸ்திரத்தைக் கொண்டவர்; காண்டீவம்-காண்டீபம்; சாபம்-வில்; ஸுஹ்ரூத்— நலத்தை விரும்புபவர்; க்ருஷ்ண-பரம புருஷரான பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்; தத–அதன்; விபத்-கஷ்டங்கள்.
தவிர்க்க முடியாத காலத்தின் ஆதிக்கம் எவ்வளவு அற்புதமாக உள்ளது. அது மாற்றப்பட முடியாததாகும். இல்லையெனில், தர்மதேவரின் மகனான யுதிஷ்டிர மகாராஜன்; கதாயுத வீரரான பீமன்;சக்தி வாய்ந்த காண்டீபத்தை கொண்ட, சிறந்த வில்லாளியான அர்ஜூனன்; மேலும் அனைத்திற்கும் மேலாக, பாண்டவர்களின் நலத்தில் நேரடியாக அக்கறை கொண்டுள்ள பகவான் ஆகியோரின் முன் எப்படி கஷ்டங்கள் ஏற்படக்கூடும்?
பதம் 1.9.16
ந ஹி அஸ்ய கர்ஹிசித் ராஜன் புமான் வேத விதித்ஸிதம்
யத் விஜிக்ஞாஸயா யுக்தா முஹ்யந்தி கவயோ ‘பி ஹி
ந-ஒருபோதும் இயலாது; ஹி–நிச்சயமாக; அஸ்ய–அவரது; கர்ஹிசித்- எதுவாகிலும்; ராஜன்-ராஜனே; புமான்- எவரும்; வேத–அறிவார்; விதித்ஸிதம்– திட்டத்தை; யத்–எது; விஜிக்ஞாஸயா— முழுமையான விசாரணைகளில்; யுக்தா –ஈடுபட்டு; முஹ்யந்தி- குழம்புகின்றார்; கவய-சிறந்த தத்துவவாதிகள்; அபி-என்றாலும்; ஹி-நிச்சயமாக.
ராஜனே பகவானின் (ஸ்ரீ கிருஷ்ணர்) திட்டத்தை ஒருவராலும் அறியமுடியாது. பெரும் தத்துவவாதிகள் முழுமையாக விசாரணைகளைச் செய்தபோதிலும், அவர்களும் குழப்பமடைகின்றனர்.
பதம் 1.9.17
தஸ்மாத் இதம் தைவ-தந்த்ரம் வ்யவஸ்ய பரதர்ஷப
தஸ்யானுவிஹிதோ ‘நாதா நாத பாஹி ப்ரஜா ப்ரபோ
தஸ்மாத் – ஆகவே; இதம்-இந்த; தைவ-தந்த்ரம்:—பகவானின் திட்டத்தினால்தான்; வ்யவஸ்ய – கண்டுபிடித்து; பரத–ருஷப:—பரத வம்சத்தில் சிறந்தவனே; தஸ்ய-அவரால்; அனுவிஹித- விரும்பியபடி; அனாகா-அநாதைகளாக; நாதா-தலைவரே; பாஹி—கவனித்துக் கொள்; ப்ராஜா—பிரஜைளை; ப்ரபோ-ஓ பிரபு.
ஆகவே, பரத வம்சத்தில் சிறந்தவனே (யுதிஷ்டிரர்), இவையனைத்தும் பகவானின் திட்டப்படியே நடத்துள்ளன என்று நான் நினைக்கிறேன். நினைத்தற்கரிய பகவானின் திட்டத்தை எற்று அதை நீ பின்பற்ற வேண்டும். அரசே, இப்பொழுது நிர்வாகத் தலைவனாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நீ, அநாதைகளாக கைவிடப்பட்ட பிரஜைகளை கவனித்துக் கொள்ளவேண்டும்.
பதம் 1.9.18
ஏஷ வை பகவான் ஸாக்ஷாத் ஆத்யோ நாராயண: புமான்
மோஹயன் மாயயா லோகம் கூடஸ் சரதி வ்ருஷ்ணிஷு
ஏஷ–இந்த; வை-உண்மையாகவே; பகவான்-பரம புருஷர்; ஸாக்ஷாத்- மூல; ஆத்ய:-முதல்வரான; நாராயண- பரம புருஷர் (நீர்மேல் சயனித்திருப்பவர்); புமா:- பரம அனுபவிப்பாளர்;மோஹயன்-தடுமாறச் செய்கிறார்; மாயயா—அவரது சுய சக்தியினால்; லோகம்—லோகங்கள்; கூட–கற்பனைக்கு எட்டாதவர்; சரதி-நடமாடுகிறார்; வ்ருஷ்ணிஷு-விருஷ்ணி குடும்பத்திற்கிடையில்.
இந்த ஸ்ரீ கிருஷ்ணர், கற்பனைக்கு எட்டாத மூல முழு முதற்கடவுளைத் தவிர வேறொருவரும் இல்லை. அவர் பரம அனுபவிப்பாளரான முதல் நாராயணனாவார். ஆனால் அவர் விருஷ்ணி மகாராஜனின் வம்சத்தில் நம்மில் ஒருவரைப் போலவே நடமாடிக் கொண்டு இருக்கிறார். மேலும் அவரது சுய சக்தியினால் நம்மை அவர் தடுமாறச் செய்து கொண்டும் இருக்கிறார்.
பதம் 1.9.19
அஸ்யானுபாவம் பகவான் வேத குஹ்யதமம் சிவ:
தேவர்ஷிர் நாரத: ஸாக்ஷாத் பகவான் கபிலோ ந்ருப
அஸ்ய-அவாது; அனுபவம்—பெருமைகளை; பசுவான்–மிகவும் சக்தி வாய்ந்த; வேத -அறிகிறார்; குஹ்ய-தமம்—மிகவும் இரகசியமாக; சிவ: -சிவபெருமான்; தேவ-ருஷி:—தேவர்களுக்கிடையிலான மிகச் சிறந்த ரிஷி; நாரத:-நாரதர்; ஸாக்ஷாத்–நேரடியாக; பகவான்—பரம புருஷ பகவான்; கபில:-கபிலர்; நீருப-ராஜனே.
ராஜனே, சிவபெருமான், தேவரிஷியான நாரதர் மற்றும் பகவானின் அவதாரமான கபிலர் ஆகியோர் பகவானுடன் கொண்ட நேரடியான தொடர்பின் வாயிலாக, மிகவும் இரகசியமான அவரது பெருமைகளைப் பற்றி நன்கு அறிந்துள்ளனர்.
பதம் 1.9.20
யம் மன்யஸே மாதுலேயம் ப்ரியம் மித்ரம் ஸுஹ்ருத்தமம்
அகரோ: ஸசிவம் தூதம் ஸௌஹ்ரு தாத் அத ஸாரதிம்
யம்–நபர்; மன்யஸே–நீ நினைக்கிறாய்; மாதுலேயம்==மாமன்; ப்ரியம்—மிகவும் பிரியமான; மித்ரம்-நண்பர்; ஸுஹ்ருத்தமம்–நலத்தை விரும்புபவர்; அகரோ-நிறைவேற்றிய; ஸசிவம் -ஆலோசனை; தூதம்—தூதர்; ஸௌஹ்ருதாத்—ஆதரவால்; அத– அதனால்; ஸாரதிம்—சாரதி.
ராஜனே, அறியாமையால் உனது மாமனென்றும், மிகப்பிரியமான நண்பரென்றும், உன் நலம் விரும்புபவர் என்றும், ஆலோசகரென்றும், தூதரென்றும் மற்றும் ஆதரவாளர் என்றும் நீ நினைத்திருந்த அந்நபர் அதே பரம புருஷராகிய ஸ்ரீ கிருஷ்ணரேயாவார்.
பதம் 1.9.21
ஸர்வாத்மன: ஸம-த்ருசோ ஹி அத்வயஸ்யானஹங்க்ருதே:
தத்-க்ருதம் மதி-வைஷம்யம் நிரவத்யஸ்ய ந க்வசித்
ஸர்வ ஆத்மன:-எல்லோருடைய இதயத்திலும் இருப்பவரின்; ஸம த்ருச:—அனைவரிடமும் சம அன்பு கொண்டவர்கள்; ஹி-நிச்சயமாக; அத்வயஸ்ய– பரம புருஷரின்; அனஹங்க்கருதே-பௌதிக உறவும் எனும் பொய் அகங்காரத்திலிருந்து விடுபட்டவர்; தத்-க்ருதம்—அவரால் செய்யப்படும் அனைத்தும்; மதி–உணர்வு; வைஷம்யம்–வேறுபாடு; நிரவத்யஸ்ய-எல்லா பற்றிலிருந்தும் விடுபட்டவர்; ந-ஒருபோதும் இல்லை: க்வசித்– எந்த கட்டத்திலும்.
பரம புருஷ பகவான் என்பதால் அவர் அனைவருடைய இதயத்திலும் இருக்கிறார். அனைவரிடமும் சம அன்பு கொண்டவரான அவர் வேற்றுமை எனும் பொய் அகங்காரத்திலிருந்து விடுபட்டவராவார். எனவே சமநிலை கொண்டவரான அவரது செயல்களும் பௌதிக களங்கத்திலிருந்து விடுபட்டவையாகும்.
பதம் 1.9.22
ததாபி ஏகாந்த-பக்தேஷூ பஸ்ய பூபானுகம்பிதம்
யன் மே’ ஸூம்ஸ் த்யஜத: ஸாக்ஷாத் க்ருஷ்ணோ தர்சனம் ஆகத:
ததாபி– ஆயினும்; ஏகாந்த-உறுதியான; பக்தேஷு—பக்தர்களுக்கு; பஸ்ய-இங்கு கவனி; பூ-ப:—ராஜனே: அனுகம்பிதம்—எவ்வளவு அனுதாபமுள்ளவர்; யத்- எதற்காக; மே- எனது; அஸூன்—வாழ்வின்; த்யஜத-முடிவில்; ஸாக்ஷத்– நேரடியாக; க்ருஷ்ண-பரம புருஷ; தர்சனம்—எனக்கு தரிசனம் அளிக்க; ஆகத-அன்புடன் வந்துள்ளார்.
அவர் அனைவரிடமும் சம அன்பு கொண்டவர் என்றபோதிலும் நான் அவரது, உறுதியான தொண்டன் என்பதால், வாழ்வை நான் முடித்தும் கொள்ளும் வேளையில், அவர் அன்புடன் என் முன் வந்துள்ளார்.
பதம் 1.9.23
பக்த்யா வேஸ்ய மனோ யஸ்மின் வாசா யன்- நாம கீர்தயன்
த்யஜன் கலேவரம் யோகீ முச்யதே காம-கர்மபி:
பக்த்யா–பக்தி நிறைந்த கவனத்துடன்; ஆவேஸ்ய-தியானித்து; மன-மனம்; யஸ்மின்-யாருடையதில்; வாசா—வார்த்தைகளால்; யத்-கிருஷ்ணா; நாம–புனித நாமத்தை; கீர்தயன்-பாடுவதால்; த்யஜன்–கைவிட்டு; கலேவரம்–இந்த ஜடவுடலை; யோகீ-பக்தன்; முச்யதே–விடுதலை அடைகிறான்; காம-கர்மபி-பலன் கருதும் செயல்களிலிருந்து.
பக்தி நிறைந்த கவனத்தினாலும், தியானத்தாலும் மற்றும் புனித நாம ஜெபத்தினாலும் பக்தரின் மனதில் தோன்றும் பரம புருஷ பகவான், பக்தன் ஜடவுடலைக் கைவிடும் வேளையில் அவனை கர்ம பந்தங்களிலிருந்து விடுவிக்கிறார்.
பதம் 1.9.24
ஸ தேவ-தேவோ பகவான் ப்ரதீக்ஷதாம்
கலேவரம் யாவத் இதம் ஹினோமி அஹம்
ப்ரஸன்ன-ஹாஸாருண-லோசனோல்லஸன்
முகாம்புஜோ த்யான-பதஸ் ச துர்-புஜ:
ஸ–அவர்; தேவ-தேவ–-தேவ தேவனான, பகவான்-பரம புருஷா பகவான்; ப்ரதீக்ஷதாம்—அன்புடன் காத்திருக்க வேண்டுகிறேன்; கலேவரம்-உடலை; யாவத்-அதுவரை; இதம்—இதை (ஜட உடலை); ஹினோமி–கைவிட; அஹம்—நான்; ப்ரஸன்ன-உல்லாசமான; ஹாஸ-புன்னகையுடன்; அருண—லோசன:—உதயசூரியனைப் போல் சிவந்த கண்கள்; உல்லஸத்-அழகாக அலங்கரிக்கப்பட்ட; முகஅம்புஜ-தாமரையைப் போன்ற அவரது முகம்; த்யான-பத:–என் தியான வழியில்; சதுர்-புஜ:—நான்கு கரங்களைக் கொண்ட நாராயணன் (பீஷ்மதேவரின் உபாசனா மூர்த்தி)
உதயசூரியனைப் போல் சிவந்த கண்களுடனும், அழகாக அலங்கரிக்கப்பட்டுள்ள தாமரை முகத்துடனும் புன்னகை பூத்தவாறு நின்றிருக்கும் நான்கு கரங்களையுடைய என் பெருமான், இந்த ஜடவுடலை நான் விடும்வரை தயவுகூர்ந்து இங்கேயே இருக்க வேண்டுமென்று வேண்டுகிறேன்.
பதம் 1.9.25
ஸூத உவாச
யுதிஷ்டிரஸ் தத் ஆகர்ண்ய சயானம் சர-பஞ்சரே
அப்ருச்சத் விவிதான் தர்மான் ருஷீணாம் சானுஸ்ருண்வதாம்
ஸூத உவாச–சூத கோஸ்வாமி கூறினார்; யுதிஷ்டிர- யுதிஷ்டிர மகாராஜன்; தத்—அந்த; ஆகர்ண்ய-கேட்டு; சயானம்-படுத்திருக்கும்; சர பஞ்சரே–அம்புப் படுக்கையின் மேல்; அப்ருச்சத்—கேட்டார்; விவிதான்–பல வகையான; தர்மான்-கடமைகளை; ருஷீணாம்– ரிஷிகளின்; ச-மேலும்; அனுஸ்ருண்வதாம்-கேட்டபின்.
சூத கோஸ்வாமி கூறினார்: மனதை உருக்கும் குரலில் பீஷ்மதேவர் பேசியதைக் கேட்ட யுதிஷ்டிர மகாராஜன், எல்லா சிறந்த ரிஷிகளின் முன்னிலையிலும், பல்வேறு மதக் கடமைகளின் முக்கிய கொள்கைகளைப் பற்றியெல்லாம் அவரிடம் வினவினார்.
பதம் 1.9.26
புருஷ-ஸ்வ-பாவ விஹிதான் யதா-வர்ணம் யதாஸ்ரமம்
வைராக்ய-ராகோபாதிப்யாம் ஆம்னாதோபய க்ஷணான்
புருஷ–மனிதன்; ஸ்வ-பாவ –அவனது சொந்த சுபாவத்தினால்; விஹிதான்-நியமிக்கப்பட்ட; யதா-ஏற்ப; வர்ணம்—சமூக பிரிவுகளுக்கும்; யதா—ஏற்ப; ஆஸ்ரமம்–ஆன்மீக பிரிவுகளுக்கும்; வைராக்ய-துறவு; ராக—பற்று; உபாதிப்யாம்.—அத்தகைய அந்தஸ்துகளில்; ஆம்னாத:-ஒழுங்காக; உபய–இரு; ல்க்ஷணான்– அறிகுறிகள்.
யுதிஷ்டிர மகாராஜனின் கேள்விக்கு பீஷ்மதேவர் முதலில், தனி மனிதனின் தகுதிகளுக்கேற்ப, சமூக மற்றும் ஆன்மீக பிரிவுகளின் தரங்களை விளக்கினார். பிறகு அவர் துறவினால் பௌதிக பந்தத்திலிருந்து விடுபடுவதையும், பற்றினால் பௌதிக பக்கத்தில் சிக்கிக் கொள்வதையும் பற்றி தெளிவாக விளக்கினார்.
பதம் 1.9.27
தான-தர்மான் ராஜ-தர்மான் மோக்ஷ–-தர்மான் விபாகச:
ஸ்த்ரீ-தர்மான் பகவத்-தர்மான் ஸமாஸ-வ்யாஸ யோக த:
தான-தர்மான்:—தான தருமங்கள்; ராஜ-தர்மான்:—அரசர்களின் நீதி வழுவாத செயல்கள்; மோக்ஷ-தர்மான்:—மோட்சம் அளிக்கக்கூடிய செயல்கள்; விபாகச-பிரிவுகளாக; ஸ்த்ரீ-தர்மான்:—பெண்களின் கடமைகள்; பகவத்-தர்மான்:—பக்தர்களின் செயல்கள்; ஸமாஸ– பொதுவாகவும்; வ்யாஸ–தெளிவாகவும்; யோக த—மூலமாக.
பிறகு அவர் தான தருமங்கள், அரசர்களின் நீதி வழுவாத செயல்கள் மற்றும் மோட்சத்தை அளிக்கும் செயல்கள் ஆகியவற்றை தனித்தனியாக விளக்கினார். பிறகு பெண்கள் மற்றும் பக்தர்களின் கடமைகளை சுருக்கமாகவும், விரிவாகவும் விளக்கினார்.
பதம் 1.9.28
தர்மார்த காம மோக்ஷாம்ஸ் ச ஸஹோபாயான் யதா முனே
நானாக்யானே திஹாஸேஷு வர்ணயாம் ஆஸ தத்வவித்
தர்ம — தர்மம், அல்லது கடமை; அர்த—பொருளாதார முன்னேற்றம்; காம– ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ளல்; மோக்ஷான்- முக்தி; ச–மேலும்; ஸஹ—அதனுடன்; உபாயான்-உபாயங்கள்; யரதா—உள்ளபடி; முனே–ஓ முனிவரே: நானா–பல; ஆக்யான-சரித்திர கதைகளை வர்ணிப்பதன் வாயிலாக; இதிஹாஸேஷு—இதிகாசங்களில்; வர்ணயாம்ஆஸ-விளக்கினார்; தத்வவித்-உண்மையை அறிந்தவர்.
பிறகு, உண்மையை நன்கு அறிந்திருந்த அவர், இதிகாசதிலிருந்து உதாரணங்களை எடுத்துக் கூறி, வெவ்வேறு சமூக மற்றும் ஆன்மீக பிரிவுகளின் கடமைகளை விளக்கினார்.
பதம் 1.9.29
தர்மம் ப்ரவததஸ் தஸ்ய ஸ காலா: ப்ரத்யுபஸ்தித:
யோ யோகினஸ் சந்த-ம்ருத்யோர் வான்சிதஸ் தூத்தராயண;
தர்மம்-கடமைகள்; ப்ரவதத:—விளக்கும்பொழுது; தஸ்ய- அவரது; ஸ– அந்த; கால:-காலம்; பிரத்யுபஸ்தித—அதேபோன்று காணப்பட்டது; யநு—அதாவது; யோகினநு—யோகிகளுக்கு; சந்தம்ருத் யோநு—தான் விரும்பிய நேரத்தில் உயிரை விடுபவரின்; வான்சிதநு– விரும்பப்படுகிறது: து-ஆனால்; உத்தராயணநு—வட திசையின் அடிவானத்தில் சூரியன் சஞ்சரிக்கும் காலம்.
பீஷ்மதேவர் தனி நபரின் கடமைகளைப் பற்றி விவரிக்கும்பொழுது சூரியன் வடதிசையின் அடிவானத்தில் சஞ்சரித்தது. இது, தங்கள் விருப்பப்படி உயிரைவிடும் யோகிகளால் விரும்பப்படும் நேரமாகும்.
பதம் 1.9.30
ததோ பஸ்ம்ஹ்ருத்ய கிர; ஸஹஸ்ரணீர்
விமுக்த-ஸங்கம் மன ஆதி-பூருஷே
கிருஷ்ணே லஸத்—பீத-படே சதுர்-புஜே
புர: ஸ்திதே ’மீலித -த்ருக் வ்யதாரயத்
ததா -அச்சமயத்தில்; உபஸம்ஸ்ருத்தய-பின்வாங்கி; கிர-பேச்சை; ஸஹஸ்ரணீ-(ஆயிரக்கணக்கான விஞ்ஞானங்களிலும், கலைகளிலும் வல்வரான) பீஷ்மதேவர்; விமுக்த-ஸ்ங்கம்—மற்ற அனைத்திலிருந்தும் முற்றிலும் விடுபட்டு; மன-மனதை; ஆதி புருஷே-ஆதி புருஷரிடம்; க்ருஷ்ணே-கிருஷ்ணரிடம்; லஸத்-பீத-படே:—மஞ்சள் நிற ஆடைகளால் அலங்கரிக்யப்பட்டிருந்த; சதுர்-புஜே:—நான்கு கரங்களைக் கொண்ட மூல நாராயணர் மீது; புர–எதிரிலேயே; ஸ்திதே-நிற்கும்; அமீலித-அகலமாக விரிந்த; த்ருக்– காட்சி; வ்யதாரயத்-பதித்தார்.
அதன் பிறகு, ஆயிரக்கணக்கான அர்த்தங்களைக் கொண்ட வெவ்வேறு விஷயங்களைப் பற்றி பேசியவரும், ஆயிரக்கணக்கான யுத்தங்களைக் கண்டவரும், ஆயிரக்கணக்கான மனிதர்களைக் காப்பாற்றியவருமான அந்த மனிதர் பேச்சை நிறுத்தினார். மேலும் எல்லா பந்தத்திலிருந்தும் முற்றிலும் விடுபட்டிருந்ததால், மற்ற அனைத்திலிருந்தும் மனதை உள்ளுக்கிழுத்துக் கொண்ட அவர், நான்கு கரங்களுடனும், மின்னும் மஞ்சள் நிற ஆடைகளுடனும் தனக்கெதிரே நின்றிருந்த ஆதி புருஷராகிய ஸ்ரீ கிருஷ்ணரின் மீது, அகலத் திறந்த தமது கண்களைப் பதித்தார்.
பதம் 1.9.31
விசுத்தயா தாரணயா ஹதாசுபஸ்
தத் ஈக்ஷயைவாஸுகதா யுத ஸ்ரம:
நிவ்ருத்த ஸர்வேந்ரிய-வ்ருத்தி-விப்ரமஸ்
துஷ்டாவ ஜன்யம் விஸ்ருஜன் ஜனார்தனம்:
விசுத்தயா-தூய்மையடைந்த; தாரணயா-தியானத்தால்; ஹத-அசுப:—பௌதிக வாழ்வின் அமங்களமான தன்மைகளை குறைத்துக் கொண்ட ஒருவர்; தத் -அவரை; ஈக்ஷயா ஏவ-பார்ப்பதாலேயே; ஆக–உடனடியாக; கதா-மறைந்துவிட்டதால்; யுத–அம்பு களிலிருந்து; ஸ்ரம-வலி; நிவ்ருத்த-நிறுத்தப்பட்டு; ஸ்ர்வ—எல்லா; இந்ரிய-புலன்கள்; வ்ருத்தி—செயல்கள்; விப்ரம-பரவலாக ஈடுபடுத்தப்பட்டதால்; துஷ்டாவ-அவர் வேண்டினார்; ஜன்யம்— ஆத்மாவின் தற்காலிக வசிப்பீடமான ஜடவுடலை; விஸ்ருஜன்– விட்டுச் செல்லும்பொழுது; ஜனார்தனம்–ஜீவராசிகளை ஆள்பவரிடம்.
தூய தியான நிலையில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை நோக்கிக் கொண்டிருந்த அவர், எல்லா பௌதிக அபசகுனங்களில் இருந்தும், அம்புக் காயங்களினால் விளைந்த எல்லா உடல் வேதனையிலிருந்தும் உடனே விடுதலை அடைந்தார். இவ்வாறாக அவரது புலன்களின் புறச்செயல்கள் அனைத்தும் உடனே நின்றுவிட்டன. மேலும் அவரது ஜடவுடலைவிடும் பொழுது, எல்லா ஜீவராசிகளையும் ஆள்பவரிடம் அவர் திவ்யமான பிரார்த்தனைகளைச் செய்தார்.
பதம் 1.9.32
ஸ்ரீ பீஷ்ம உவாச
இதி மதிர் உபகல்பிதா வித்ருஷ்ணா
பகவதி ஸாத்வத-புங்கவே விபூம்னி
ஸ்வ ஸுகம் உபகதே க்வசித் விஹர் தும்
ப்ரக்ருதிம் உபேயுஷி யத்-பவ-ப்ரவாஹ:
ஸ்ரீ பீஷ்ம உவாச-ஸ்ரீ பீஷ்ம தேவர் கூறினார்; இதி-இவ்வாறு; மதி– எண்ணம், உணர்வு மற்றும் விருப்பம்; உபகல்பிதா—ஈடுபடுத்தப்பட்ட; வித்ருஷ்ணா–எல்லா புலன் ஆசைகளிலிருந்தும் விடுபட்ட; பகவதி–பரம புருஷர் மீது; ஸாத்வத-புங்கவே:—பக்தர்களின் தலைவருக்கு; விபூம்னி–மிகச்சிறந்தவருக்கு; ஸ்வ-ஸுகம்—சுயதிருப்தி; உபகதே– அதை அடைத்துள்ள அவருக்கு; க்வசித்-சில சமயங்களில்; விஹர்தும்–உன்னத இன்பத்தினால்; ப்ரக்ருதிம்-ஐடவுலகில்; உபேயுஷி–-ஏற்றுக் கொள்கிறார்; யத்–பவ-:—யாரிடமிருந்து சிருஷ்டி; ப்ரவாஹ–படைக்கப்பட்டு அழிக்கப்படுகிறதோ.
பீஷ்மதேவர் கூறினார்; இதுவரை வெவ்வேறு விஷயங்களிலும், கடமைகளிலும் ஈடுபட்டிருந்த எனது சிந்தனை, உணர்வு மற்றும் விருப்பம் ஆகியவற்றை இப்பொழுது நான் சர்வசக்தி படைத்தவரான பகவான் ஸ்ரீ கிருஷ்ணரில் ஈடுபடுத்துவேனாக, அவர் எப்பொழுதும் சுய திருப்தியுடையவராவார். ஆனால் அவரிடமிருந்து தான் ஜடவுலக படைக்கப்படுகிறது என்றாலும், அவர் பக்தர்களில் தலைவராக இருப்பதால், ஐடவுவகில் அவதரித்து தெய்வீக இன்பத்தை அவர் அனுபவிக்கிறார்.
பதம் 1.9.33
த்ரி-புவன-கமனம் தமால-வர்ணம்
ரவி-கர-கௌர-வர-அம்பரம் ததானே
வபுர் அலக குலாவ்ருதானனாப்ஜம்
விஜய-ஸகே ரதிர் அஸ்து மே ‘னவத்யா
த்ரீ-புவன:—மூன்று கிரக அமைப்புக்கள்; கமனம்–மிகவும் விருப்பத்தக்க; தமால்-வர்ணம்:—தமால மரத்தைப் போன்ற நீலநிறம் கொண்ட; ரவி-கர–சூரிய கதிர்கள்; கௌர-பொன்னிறம்; வராம்பரம்-ஜொலிக்கும் உடை; ததானே–-அணிபவர்; வபு-உடல்; அலககுல-ஆவ்ருத– சந்தனக் குழம்பினால் சித்திரம்வரையப்பட்ட; அன்ன-அப்ஜம்:—தாமரைப்போன்றமுகம்; விஜய-ஸகே–-அர்ஜுனனின் நண்பருக்கு; ரதி: அஸ்து—கவர்ச்சி அவர் மீது பதிக்கப்படுமாக; மே–எனது; அனவத்யா— கருமங்களில் பற்றில்லாமல்.
ஸ்ரீ க்ருஷ்ணர், அர்ஜுனனின் நெருங்கிய நண்பராவார். அவர் தமால மரத்தின் நீல நிறத்தையொத்த திவ்யமான உடலுடன் இவ்வுலகில் தோன்றியுள்ளார். மூன்று கிரக அமைப்புக்களில் (மேல், மத்திய, கீழ்) உள்ள அனைவரையும் அவரது உடல் கவர்ந்திழுக்கிறது. பளபளக்கும் அவரது மஞ்சள் நிற ஆடையும், சந்தனக் குழம்பினால் வரையப்பட்ட சித்திரங்களைக் கொண்ட, அவரது தாமரை முகமும் என்னைக் கவர்ந்திழுக்கும் பொருட்களாக அமைய வேண்டும். மேலும் கர்ம பலன்களில். நான் பற்றில்லாமல் இருப்பேனாக.
பதம் 1.9.34
யுதி துரக–ரஜோ-விதூம்ர-விஷ்வக்
௧ச-லூலித-ஸ்ரமவாரி-அலங்க்ருதாஸ்யே
மம நிசித-சரைர் விபித்யமான-
த்வசி விலஸத் கவசே ‘ஸ்து க்ருஷ்ண ஆத்மா
யுதி-போர்க்களத்தில்; துரக-குதிரைகள்; ரஜ- தூசு; விதூம்ர– சாம்பல் நிறமாக மாறியது; விஷ்வக்–அசைந்தாடும்;கச-கேசம்; லூலித–சிதறிய: ஸ்ரமவாரி-வியர்வை; அலங்க்ருத—அலங்கரிக்கப்பட்ட: ஆஸ்யே-முகத்தில்; மம-எனது; நிசித-கூர்மையான; சரை-அம்புகளால்; விபித்யமான–தைக்கப்பட்ட: த்வசி—உடம்பில்; விலஸத்- இன்பம் அனுபவிக்கும்; கவேச–கவசம்; அஸ்து–உண்டாகட்டும்; க்ருஷ்ணே–ஸ்ரீ கிருஷ்ணரிடம்; ஆத்மா-மனம்.
(சிநேகத்தினால் அர்ஜுனனுக்கு ஸ்ரீ கிருஷ்ணர் ஏவல் புரிந்த இடமான) போர்க்களத்தில், குதிரைகளின் குளம்புகளால் எழுப்பப்பட்ட தூசுகளினால், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் அலைபாயும் கேசம் சாம்பல் நிறமாக மாறியது. மேலும் அவரது பணியினால் விளைந்த வியர்வை முத்துக்கள் அவரது முகத்தை நனைத்தன. எனது கூரிய அம்புகள் தைத்த காயங்களால் அதிகரிக்கப்பட்ட இவ்வெல்லா அலங்காரங்களையும் அவர் அனுபவித்தார். என் மனம் ஸ்ரீ கிருஷ்ணரிடமே ஆழ்ந்து விடட்டும்.
பதம் 1.9.35
ஸபதி ஸகி-வசோ நிசம்ய மத்யே
நிஜ-பரயோர் பலயோ ரதம் நிவேஸ்ய
ஸ்திதவதி பர-ஸைனிகாயுர் அக்ஷணா
ஹ்ருதவதி பார்த-ஸகே ரதி மமாஸ்து
ஸபதி-போர்க்களத்தில்; ஸகி-வசோ; ஸகி-வச:—நண்பனின் உத்தரவை; நிசம்ய-கேட்டபின்; மத்யே-நடுலில்; நிஜ–அவரது சொந்த; பரயோ-மற்றும் எதிரி குழு; பலயோ-பலம்; ரதம்- இரதம்; நிவேஸ்ய-நுழைந்து; ஸ்திதவதி—அங்கு இருந்தபொழுது; பர-ஸைனிக:—எதிர் பிரிவிலுள்ள வீரர்களின்; ஆயு:—ஆயுட்காலம்; அக்ஷ்ணா-பார்வையால்; ஹ்ருதவதி–குறைத்துவிடும் செயல்; பார்த– பிருதாவின் (குந்தி) மகனான அர்ஜுனனின்; ஸகே-நன்பனுடன்; ரதி–நெருங்கிய உறவு; மம—எனது; அஸ்து—உண்டாகட்டும்.
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அவரது நண்பனின் உத்தரவை ஏற்று, அர்ஜுனனுடைய சேனைக்கும்,துரியோதனனின் சேனைக்கும் மத்தியில் தேரை ஓட்டினார். அங்கிருந்த சமயத்தில், தமது கருணை மிகுந்த பார்வையால் எதிரிலுள்ள படைப்பிரிவினரின் ஆயுளைக் குறைத்து விட்டார். எதிரியின் மீது பார்வையைச் செலுத்தியே இதை அவர் சாதித்துவிட்டார். அந்த கிருஷ்ணரின் மீது என் மனம் நிலைக்கட்டும்.
பதம் 1.9.36
வ்யவஹித-ப்ருதனா–முகம் நிரீக்ஷ்ய
ஸ்வ-ஜன-வதாத் விமுகஸ்ய தோஷ—புத்யா
குமதிம் அஹரத் ஆத்ம-வித்யயா யஸ்
சரண-ரதி: பரமஸ்ய தஸ்ய மே ‘ஸ்து
வ்யவஹித–தூரத்தில் நிற்கும்; ப்ருதனா—வீரர்களின்; முகம்— முகங்களை; நிரீக்ஷ்ய–பார்த்ததன் மூலம்; ஸ்வ—ஜன:—உறவினர்கள்; வதாத்—கொல்வதிலிருந்து; விமுகஸ்ய–இஷ்டமில்லாதவர்; தோஷபுத்யா—களங்கமடைந்த புத்தியால்; குமதிம்-அறிவு பற்றாக்குறை; அஹாரத்-வேரறுத்தார்; ஆத்ம-வித்யயா-உன்னத அறிவினால்;
ய-யாரொருவர்; சரண –பாதங்களில்; ரதி -கவர்ச்சி: பரமஸ்ய–பரமனின்;தஸ்ய-அவருக்காக; மே-எனது; அஸ்து– உண்டாகட்டும்.
போர்க்களத்தில் தனக்கு முன் இருந்த வீரர்களையும், சேனாதிபதிகளையும் பார்வையிட்ட அர்ஜுனன், அறியாமையினால் கலக்கமடைந்ததாக காணப்பட்ட பொழுது, பகவான் அவருக்கு ஆன்மீக அறிவைப் புகட்டி அவரது அறியாமையைக் களைந்தார். அவரது தாமரைப் பாதங்கள் எப்பொழுதும் என்னைக் கவர்ந்திழுக்கும் பொருளாக அமையட்டும்.
பதம் 1.9.37
ஸ்வ-நிகமம் அபஹாய மத்-ப்தரிக்ஞாம்
ருதம் அதிகர் தும் அவப்லுதோ ரதஸ்த:
த்ருத-ரதசரணோ ‘ப்யயாச் சலத்குர்
ஹரிர் இவ ஹந்தும் இபம் கதோத்தரீய:
ஸ்ல-நிகமம்:—சொந்த உண்மை; அபஹாய–-செல்லாததாக்க; மத்–ப்ரதிக்ஞாம்:—எனது சொந்த வாக்குறுதி; ருதம்– உண்மையான; அதி—அதிக; கர்தும்–அதைச் செய்ய; அவப்லுத– கீழே இறங்கி; ரத-ஸ்த:— –இரதத்திலிருந்து; த்ருத—கையிலெடுத்து; ரத—இரதத்தின்; சரண–சக்கரத்தை; அப்யயாத்-விரைவாகச் சென்றார்; சலத்ரு– பூமியைக் காலால் மிதிக்கும் ஓசையுடன்; ஹரி-சிங்கம்; இவ-போல்; ஹந்தும்-கொல்ல; இபம்—யானையை ; கத-ஒருபுறம் விட்டுவிட்டு; உத்தரீய- மேலாடையை.
அவரது சொந்த வாக்குறுதியை மீறி என் ஆசையை நிறைவேற்றும் வகையில் தேரிலிருந்து கீழே குதித்த அவர், அதன் சக்கரத்தை கையில் எடுத்துக்கொண்டு, சிங்கம் யானையைக் கொன்றுவிட செய்வதை போல், என்னை நோக்கி விரைவாக ஓடிவந்தார். வழியில் அவ மேலாடையும் கூட சரிந்து கீழே விழுந்தது.
பதம் 1.9.38
சித-விசிக-ஹதோ விசீர்ண-தம் ச:
க்ஷதஜ-பரிப்லுத ஆததாயினோ மே
ப்ரஸபம் அபிஸஸார மத்–வதார்தம்
ஸ பவது மே பகவான் கதிர் முகுந்த:
சித-கூரிய; விசிக-அம்புகள்; ஹத-காயபடுத்தபட்ட; விசீர்ண-தம்ச:—சிதறிய கேடயம் ; க்ஷதஜ—காயங்களால்; மே—எனது; ப்ரஸபம்—கோபாவேஷத்துடன்; அபிஸஸார-செல்ல ஆரம்பித்தார்; மத்-வத-அர்தம்:—என்னைக் கொல்லும் நோக்கத்திற்காக; ஸ—அவர்; பவது-ஆகக்கூடும்; மே-எனது; பகவான்—பரம புருஷ பகவான்; கதி—இலக்கு; முகுந்த-முக்தியளிப்பவர்.
முக்தி அளிப்பவரான, அந்த பரம் புருஷ பகவான் ஸ்ரீ கிருஷ்ணரே எனது முடிவான இலக்காக இருப்பாராக எனது கூரிய அம்புகளால் ஏற்பட்ட காயங்களினால் கோபமடைந்ததைப் போல், போர்க்களத்தில் என்னை அவர் திடீரென்று தாக்க முற்பட்டார். அவரது கேடயம் சிதறிப் போயிருந்தது. மேலும் காயங்களினால் அவரது உடலில் இரத்தம் தோய்ந்திருந்தது.
பதம் 1.9.39
விஜய-ரத-குடும்ப ஆத்த-தோத்ரே
த்ருத-ஹய-ரஸ்மினி தச்—ச்ரியேக்ஷணீயே
பகவதி ரதிர் அஸ்து மே முமூர்ஷோர்
யம் இஹ நிரீஷ்ய ஹதா கதா: ஸ்வ-ரூபம்
விஜய-அர்ஜுனன்; ரத–இரதம்; குடும்ப-துணிந்து பாதுகாப்பு அளிப்பவர்; ஆத்த-தோத்ரே:—வலது கரத்தில் ஒரு சாட்டையுடன்; த்ருத-ஹய-குதிரைகளை கட்டுப்படுத்தியவாறு; ரஸ்மினி—கயிறுகள்; தத்-ச்ரியா:—அழகுடன் நிற்கும்; ஈக்ஷணீயே-காண்பதற்கு: பகவதி– பரம புருஷ பகவானுக்கு; ரதி-அஸ்து:—எனது கவர்ச்சி; முமூர்ஷோ–இறக்கும் தறுவாயிலுள்ள ஒருவன்; யம்-யார் மீது: இஹ—இவ்வுலகில்: நிரீஷ்ய-காண்பதன் மூலம்; ஹதா—இறந்தவர்கள்; கதா–அடைத்தனர்; ஸ்வ-ரூபம்—சுயரூபத்தை.
இறக்கும் சமயத்தில் எனது இறுதி கவர்ச்சி பரம புருஷராகிய ஸ்ரீகிருஷ்ணர் மீது நிலைபெறட்டும். வலது கரத்தில் ஒரு சாட்டையையும். இடது கரத்தில் கடிவாளத்தையும் பிடித்திருந்தவரும், எல்லா வகையிலும் அர்ஜுனனின் இரதத்திற்குப் பாதுகாப்பளிப்பதில் மிகவும் கவனமாக இருந்தவருமான, அர்ஜுனனுடைய சாரதியின் மீது என் மனதை நான் ஒருமுனைப்படுத்துகிறேன். குருக்ஷேத்திரப் போர்க்களத்தில் அவரைக் கண்டவர்கள், மரணத்திற்குப் பின் அவர்களது சுய உருவங்களைப் பெற்றனர்.
பதம் 1.9.40
லலித-கதி-விலாஸ-வல்குஹாஸ-
ப்ரணய–நிரீக்ஷண-கல்பிதோருமானா:
க்ருத-மனு-க்ருத-வத்ய உன்மதாந்தா:
ப்ரக்ருதிம் அகன் கில யஸ்ய கோப-வத்வ:
லலித-சுவர்ச்சியான; கதி-அசைவுகள்; விலாஸ-கவர்ச்சியான செயல்கள்; வல்குஹாஸ-இனிமையாக புன்னகை புரியும்; ப்ரணய-அன்பான; நிரீக்ஷண-பார்க்கும்; கல்பித-மனோபாவம்; உருமானா-உயர்வாக புகழப்படும்; க்ருத-மனு-க்ருத-வத்ய:—அச்செயல்களை அப்படியே செய்து காட்டுவதில்; உன்மத-அந்தா–பரவசத்தில் ஆழ்ந்த; ப்ரக்ருதிம்-சிறப்பியல்புகள்; அகன்-செய்தனர்; கில-நிச்சயமாக; யஸ்ய-யாருடைய; கோபவத்வ—இடையர் குலப் பெண்கள்.
அன்பான புன்னகையாலும், அசைவுகளாலும் விருந்தாவனத்தின் இளநங்கைகளைக் (கோபியர்கள்) கவர்ந்தவரான பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் என் மனம் நிலை பெறட்டும். (ராச நடனத்திலிருந்து பகவான் மறைந்த பிறகு) இளநங்கைகள் பகவானின் அங்க அசைவுகளை அப்படியே நடித்துக் காட்டினர்.
பதம் 1.9.41
முனி-கண-ந்ருப்-வர்ய-ஸங்குலே ‘ந்த:
ஸதஸி யுதிஷ்டிர-ராஜஸூய ஏஷாம்
அர்ஹணம் உபபேத ஈக்ஷணீயோ
மம த்ருசி-கோசர ஏஷ ஆவிர் ஆத்மா
முனி-கண:—மிகவும் கற்றறிந்த முனிவர்கள்; ந்ருப-வர்ய:— சிறந்த ஆட்சிபுரியும் அரசர்கள்; ஸங்குலே அந்த ஸதஸி-மிகச்சிறந்த ஆலோசனைக் கூட்டத்தில்; யுதிஷ்டிர-யுதிஷ்டிர மகாராஜனின்; ராஜஸூயே-ராஜரீகமான ஒரு யாகம்; ஏஷாம்-மிகச்சிறந்த பிரமுகர்கள் அனைவரின்; அர்ஹணம்-மரியாதைக்குரிய வழிபாடு; உபபேத- பெற்றார்; ஈக்ஷணீய:-கவர்ச்சிக்குரிய பொருள்; மம–எனது; த்ருசி–காட்சி ; கோசர -காட்சிக்குள்; ஏஷ ஆவி-நேரடியாக இருந்தேன்; ஆத்மா-ஆத்மா.
யுதிஷ்டிர மகாராஜனால் இயற்றப்பட்ட ராஜஸூய யாகத்தின் போது, அரச குடும்பத்தினர் மற்றும் பண்டிதர்கள் ஆகிய மிகச்சிறந்த உலகப் பிரமுகர்கள் அனைவரும் அங்கு கூடியிருந்தனர். அச்சிறந்த கூட்டத்தில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அனைவராலும் இணையற்ற பரம புருஷராக வழிபடப்பட்டார். இச்சம்பவம் நான் இருக்கும்பொழுது நடந்ததாகும். மேலும் பகவானிடம் என் மனதை பதிப்பதற்காகவே இச்சம்பவத்தை நான் நினைவு கூர்ந்தேன்.
பதம் 1.9.42
தம் இமம் அஹம் அஜம் சரீர-பாஜாம்
ஹ்ருதி ஹ்ருதி திஷ்டிதம் ஆத்ம கல்பிதானாம்
ப்ரதித்ருசம் இவ நைகதார்கம் ஏகம்
ஸமதி-கதோ ‘ஸ்மி விதூத-பேத-மோஹ:
தம்—அந்த பரம புருஷ பகவான்; இமம்—இப்பொழுது என் முன் இருக்கும்; அஹம்- நான்; அஜம்-பிறப்பற்றவர்; சரீர-பாஜாம்:— பந்தப்பட்ட ஆத்மாக்களின்; ஹ்ருதி-இதயத்தில்; ஹ்ருதி-இதயத்தில்; திஷ்டிதம்—உள்ள; ஆத்ம-பரமாத்மா; கல்பிதானாம்-மனக் கற்பனை யாளர்களின்; ப்ரதித்ருசம்–ஒவ்வொரு திசையிலும்; இவ—போல்; ந-ஏகதா:—ஒன்றல்ல; அர்கம்–சூரியன்; ஏகம்- ஒன்றேயாகும்; ஸமதி-கத: அஸ்மி-_தியானத்தில் சமாதி நிலையை நான் அனுபவித்தேன்; விதூத– விடுபட்டு இருந்தால்; பேத-மோஹ:—இருமை எனும் தப்பெண்ணம்.
பகவான் எல்லோருடைய இதயத்திலும் இருக்கிறார், மனக் கற்பனையாளர்களின் இதயத்திலும் இருக்கிறார் என்பதற்கு எதிரான எண்யத்திலிருந்து இப்பொழுது நான் விடுபட்டுவிட்டேன் என்பதால் இப்பொழுது என் முன் நிற்கும் அந்த ஒரே பகவானாகிய ஸ்ரீ கிருஷ்ணரை முழு மன ஒருமையுடன் என்னால் தியானிக்க முடிகிறது.
பதம் 1.9.43
ஸூத உவாச
க்ருஷ்ண ஏவம் பகவதி மனோ வாக் த்ருஷ்டி வ்ருத்திபி:
ஆத்மனி ஆத்மானம் ஆவேஸ்ய ஸோ ‘ன்தஹ்ஸ்வாஸ உபாரமத்
ஸூத உவாச–சூத கோஸ்வாமி கூறினார்; க்ருஷ்ணே-பரம புருஷரான ஸ்ரீ கிருஷ்ணர்; ஏவம்- மட்டுமே; பகவதி—அவருக்குள்; மன:-மனதுடன்; வாக்-பேச்சு; த்ருஷ்டி-பார்வை; வ்ருத்திபி–செயல்கள்; ஆத்மனி-பரமாத்மாவுடன்; ஆத்மானம்-ஜீவராதி; ஆவேஸ்ய-ஐக்கியமாகி விட்டதால்; ஸ-அவர்;அந்த ஸ்வாஸ-சுவாஸம்; உபாரமத்—மௌனமானார்.
சூத கோஸ்வாமி கூறினார். இவ்வாறாக பீஷ்மதேவர் அவரது மனம், பேச்சு, பார்வை மற்றும் செயல்கள் ஆகியவற்றுடன் பரமாத்மாவாகிய பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்குள் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டு மெளனமானார். அவரது மூச்சும் நின்றது.
பதம் 1.9.44
ஸம்பத்யமானம் ஆக்ஞாய பீஷ்மம் ப்ரஹ்மணி நிஷ்கலே
ஸர்வே பபூவுஸ் தே தூஷ்ணிம் வயாம்ஸீவ தினாத்யயே
ஸம்பத்யமானம்–அதற்குள் ஐக்கியமாகி விட்டதை; ஆக்ஞாய- இதை அறிந்தபின்; பீஷ்மம்-பீஷ்மதேவரைப் பற்றி; ப்ரஹ்மணி—பரம புருஷருக்குள்; நிஷ்கலே-வரம்பற்ற; ஸர்வே– கூடியிருந்த அனைவரும்; பபூவுதே–அவர்களனைவரும் ஆனார்கள்; தூஷ்ணிம்—மௌனம்; வயாம்ஸி இவ- பறவைகளைபோல்; தின அத்யயே-பகல் நேரத்தின் முடிவில்,
பீஷ்மதேவர் பரம புருஷரின் வரம்பற்ற நித்தியத் தன்மைக்குள் ஐக்கியமாகி விட்டார் என்பதை அறிந்த அங்கு கூடியிருந்த அனைவரும், பகல் நேரத்தின் முடிவில் பறவைகள் நிசப்தமாவதைப் போல் மௌனமாயினர்.
பதம் 1.9.45
தத்ர துந்துபயோ நேதுர் தேவ-மானவ-வாதிதா:
சசம் ஸு: ஸாதவோ ராஜ்னாம் காத் பே து: புஷ்ப-வருஷ்டய:
தத்ர-அதன் பிறகு; துந்துபய-பேரிகைகள்; நேது–ஒலிக்கப்பட்டன; தேவ–மற்ற கிரகங்களிலிருந்து வந்த தேவர்கள்; மானவ-எல்லா நாடுகளிலிருந்தும் வந்துள்ள மக்கள்; வாதிதா-அடிக்கப்பட்டது; சசம்ஸு– புகழ்ந்தனர்; ஸாதவ—நேர்மையான; ராக்ஞாம்—அரச வம்சத்தினரால்; காத்-ஆகாயத்திலிருந்து; பேது–கொட்டத் துவங்கியது; புஷ்ப—வருஷ்டய:—மலர்பொழிவு.
அதன்பிறகு மனிதர்களும் தேவர்களும் மரியாதைக்காக பேரிகைகளை கொட்டினர். நேர்மையுள்ள அரச மரியாதைக்காக வம்சத்தினர் மரியாதைக்கும் வணக்கத்திற்கும் சின்னமாக இராணுவ அணிவகுப்புக்களை ஆரம்பித்தனர். வானத்திலிருந்து பூமாரி பொழிந்தது.
பதம் 1.9.46
தஸ்ய நிர்ஹரணா தீனி ஸம்பரேதஸ்ய பார்கவ
யுதிஷ்டிர: காரயித்வா முஹூர்தம் துஹ்கிதோ ‘பவத்
தஸ்ய—அவரது; நிர்ஹரண ஆதீனி:—ஈமச் சடங்கு; ஸம்பரேதஸ்ய– இறந்த உடலின்; பார்கவ–பிருகு வம்சத்தவரே; யுதிஷ்டிர-யுதிஷ்டிர மகாராஜன்; காரயித்வா—அதை நிறைவேற்றியதும்; முஹுர்தம் –நொடி நேரம்; துஹ்கிது அபவத்-துக்கமடைந்தார்.
ஓ பிருகு வம்சத்தவரே (சௌனகர்) பீஷ்மதேவரின் உடலுக்கு ஈமச் சடங்குகளைச் செய்தபின், யுதிஷ்டிர மகாராஜன் நொடி நேர துக்கத்திற்கு ஆளானார்.
பதம் 1.9.47
துஷ்டுவுர் முனயோ ஹ்ருஷ்டா: க்ருஷ்ணம் தத்—குஹ்ய–நாமபி:
ததஸ் தே க்ருஷ்ண-ஹ்ருதயா: ஸ்வாஸ்ரமான் ப்ரயயு: புன:
துஷ்டுவு:-திருப்தியடைந்து; முனய:-வியாசரை தலைமையாகக் கொண்ட மாமுனிவர்கள்; ஹ்ருஷ்டா—அனைவரும் மகிழ்ச்சியோடு; க்ருஷ்ணம்—-பரம புருஷரான ஸ்ரீ கிருஷ்ணருக்கு; தத்—அவரது; குஹ்ய– இரகசியமான; நாமபி-அவரது புனித நாமம் முதலியவைகளால்; தத–அதன்பிறகு; தே–அவர்கள்; க்ருஷ்ண–ஹ்ருதயா:—தங்களுடைய இதயங்களில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை எப்பொழுதும் தாங்கிக்கொண்டு இருப்பவர்கள்; ஸ்வாஸ்ரமான்–அவரவர் ஆஷ்ரமங்களுக்கு; பிரயயு– திரும்பினர்; புன–மீண்டும்.
பிறகு மாமுனிவர்கள் அனைவரும் அங்கிருந்த பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை திவ்ய வேத மந்திரங்களால் போற்றிப் புகழ்ந்தனர். அதன் பிறகு அவர்கள் அனைவரும் பசுவான் ஸ்ரீ கிருஷ்ணரை தங்களது இதயத்தில் தாங்கியவாறு அவரவர் .ஆஷ்ரமங்களுக்குத் திரும்பினர்.
பதம் 1.9.48
ததோ யுதிஷ்டிரோ கத்வா ஸஹ–கிருஷ்ணோ கஜாஹ்வயம்
பிதரம் ஸாந்த்வயாம் ஆஸ காந்தாரீம் ச தபஸ்வினீம்
தத–அதன் பிறகு; யுதிஷ்டிர—யுதிஷ்டிர மகரரஜன்; கத்வா–அங்கு சென்று; ஸஹ–உடன்; க்ருஷ்ண-கிருஷ்ணர்; கஜாஹ்வயம்– கஜாஹ்வய ஹஸ்தினாபுரம் எனும் பெயர்கொண்ட தலைநகரில்; பிதரம்–அவரது பெரியப்பனுக்கு (திருதராஷ்டிர்), ஸாந்த்வயாம் ஆஸ:—ஆறுதல் கூறினார்; காந்தாரீம்—திருராஷ்டிரின் மனைவிக்கு; ச–மேலும்; தபஸ்வினிம்—தபஸ்வினி.
அதன் பிறகு, யுதிஷ்டிர மகாராஜன் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரால் தொடரப்பட்டவராய், தலைநகரான ஹஸ்தினாபுரத்திற்குச் சென்றார். அங்கு அவரது பெரியப்பாவுக்கும். தபஸ்வினியாக இருந்த பெரியம்மா காந்தாரிக்கும் அவர் ஆறுதல் கூறினார்.
பதம் 1.9.49
பித்ரா சானுமதோ ராஜா வாஸுதேவானுமோதித:
சகார ராஜ்யம் தர்மேண பித்ரு–-பைதாமஹம் விபு:
பித்ரா—அவரது பெரியப்பாவான திருதராஷ்டிரரால்; ச—மேலும்; அனுமத—அவரது அனுமதியுடன்; ராஜ—யுதிஷ்டிரர் மஹராஜான்; வாஸூதேவ–அனுமோதித:—பகவான் ஸ்ரீ கிருஷ்ணரால் உறுதி செய்யப்பட்ட; சகார–நிறைவேற்றினார்; ராஜ்யம்–-இராஜ்ஜியத்தை; தர்மேண—அரச நீதியின் சட்டங்களுக்கேற்ப; பித்ரு-தந்தை; பிதாமஹம்– முன்னோர்; விபு-அவ்வளவு சிறப்புள்ள.
இதன்பிறகு ராஜரிஷியான யுதிஷ்டிர மகாராஜன், அவரது பெரியப்பா திருதராஷ்டிரர் அனுமதியுடன், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரால் ஊர்ஜிதப்படுத்தப்பட்ட சட்டங்களுக்கும், அரச நீதிக்கும் ஏற்ப, உறுதியாக அரசாட்சியை நடத்தி வந்தார்.
ஸ்ரீமத் பாகவதம், முதல் காண்டத்தின் “பீஷ்மதேவரின் மரணம்” எனும் தலைப்பைக் கொண்ட, ஒன்பதாம் அத்தியாயத்திற்கான பக்திவேதாந்தப் பொருளுரைகள் இவ்வாறு நிறைவு பெறுகின்றன.