அத்தியாயம் – 6
நாரதருக்கும் வியாசருக்கும் இடையிலான உரையாடல்
பதம் 1.6.1 : சூதர் கூறினார்: பிராமணர்களே, இவ்வாறு பகவானின் அவதாரமும், சத்தியவதியின் புதல்வருமான வியாசதேவர், ஸ்ரீ நாரதரின் பிறப்பு மற்றும் செயல்களைப் பற்றிய அனைத்தையும் கேட்டபின் பின்வருமாறு வினவினார்.
பதம் 1.6.2 : ஸ்ரீல வியாசதேவர் கூறினார்; உங்களுடைய இப்பிறப்பிற்கு முன், உங்களுக்கு விஞ்ஞான பூர்வமான ஆன்மீக அறிவை உபதேசித்த மாமுனிவர்கள் புறப்பட்டுச் சென்றபின் தாங்கள் (நாரதர்) என்ன செய்தீர்கள்?
பதம் 1.6.3 : பிரம்மாவின் புதல்வரே, தீட்சைக்குப் பின் தாங்கள் எப்படி வாழ்வை நடத்தினீர்கள்? மேலும் காலப்போக்கில் உங்களுடைய பழைய உடலைக் கைவிட்டபின், எப்படி இவ்வுடலைத் தாங்கள் பெற்றீர்கள்?
பதம் 1.6.4 : மிகச்சிறந்த முனிவரே, நாளடைவில் காலம் அனைத்தையும் அழித்துவிடுகிறது. அவ்வாறிருக்க, பிரம்மாவின் முந்திய காலத்தில் நிகழ்ந்த இவ்விஷயம் எப்படி காலத்தால் கலைக்கப்படாமல், இன்னமும் பசுமையாகவே தங்களது நினைவில் நிற்கிறது?
பதம் 1.6.5 : ஸ்ரீ நாரதர் கூறினார்: விஞ்ஞான பூர்வமான தெய்வீக அறிவை எனக்குப் புகட்டிய மாமுனிவர்கள் மற்ற இடங்களுக்கு புறப்பட்டுச் சென்றதும், என்னுடைய வாழ்வை நான் இந்த முறையில் கழிக்க வேண்டியதாயிற்று.
பதம் 1.6.6 : சாதாரண ஒரு பெண்மணியாகவும், வேலைக்காரியாகவும் இருந்த எனது தாய்க்கு நான் ஒரே மகனாக இருந்தேன். அவருக்கு நான் ஒரே வாரிசாக இருந்ததால், அவளைப் பாதுகாப்பதற்கு வேறுயாரும் இருக்கவில்லை. அன்பால் அவள் என்னைக் கட்டிவிட்டாள்.
பதம் 1.6.7 : அவள் என்னை நன்றாக கவனித்துக்கொள்ள விரும்பினாள். ஆனால் அவள் சுதந்திரமாக இல்லாததால், எனக்காக அவளால் எதையுமே செய்ய முடியவில்லை. உலகம் பரம புருஷ பகவானின் முழு கட்டுப்பாட்டில் உள்ளது; ஆகவே ஒரு பொம்மலாட்டக்காரனின் கைப்பொம்மையாயே அனைவரும் உள்ளனர்.
பதம் 1.6.8 : ஐந்து வயதே நிரம்பிய சிறுவனாக இருந்தபொழுது நான் ஒரு பிராமண பள்ளியில் வசித்து வந்தேன். எனது தாயின் பாசத்தையே நான் நம்பியிருந்ததால், வெளியுலக அனுபவத்தை நான் பெற்றிருக்கவில்லை.
பதம் 1.6.9 : ஒரு சமயம் என் தாய் பசுவைக் கறப்பதற்காக இரவில் வெளியே செல்லும்பொழுது, பரமான காலத்தினால் தூண்டப்பட்டு, காலில் பாம்பினால் கடிக்கப்பட்டாள்.
பதம் 1.6.10 : அவரது பக்தர்களுக்கு எப்பொழுதும் நல்லாசிகளையே அளிக்க விரும்புபவரான பகவானின் விசேஷ கருணையாக இதை நான் ஏற்றுக்கொண்டேன். இந்த எண்ணத்துடன், நான் வடதிசையை நோக்கிப் புறப்பட்டேன்.
பதம் 1.6.11 : அங்கிருந்து, புறப்பட்ட நான், வழியில் பல செழிப்புமிக்க மாநகரங்கள், பட்டணங்கள், கிராமங்கள், மிருகப் பண்ணைகள், சுரங்கங்கள், விவசாயப் பண்ணைகள், பள்ளத்தாக்குகள், பூந்தோட்டங்கள், நாற்றங்கால்கள் மற்றும் இயற்கையான காடுகள் ஆகியவற்றை கடந்து சென்றேன்.
பதம் 1.6.12 : தங்கம், வெள்ளி, செம்பு போன்ற பல உலோகங்கள் நிறைந்த மலைச் சுரங்கங்களையும், அழகிய தாமரை மலர்கள் நிரம்பிய நீர்த்தேக்கங்களைக் கொண்ட நிலப்பரப்புகளையும் நான் கடந்து சென்றேன். அலைந்து திரியும் தேனீக்களாலும், பாடும் பறவைகளாலும் அலங்கரிக்கப்பட்டு இருந்த இந்நீர்த்தேக்கங்கள் ஸ்வர்க்க லோகவாசிகளுக்கு ஏற்றவையாக இருந்தன.
பதம் 1.6.13 : அதன் பிறகு கோரைப் புற்கள், மூங்கில், நாணல், கூர்மையான புற்கள், புல்பூண்டுகள் மற்றும் குகைகள் ஆகியவை நிறைந்த காடுகளை தனியாகவே கடந்து சென்றேன். இத்தகைய காடுகளில் தனியாகச் செல்வது மிகவும் கடினமானதாகும் பாம்புகளும், ஆந்தைகளும் நரிகளும் சுதந்திரமாக சுற்றித்திரியும், அடர்ந்த, இருண்ட, அச்ச மூட்டக்கூடிய பயங்கரமான காடுகளையும் நான் கடந்து சென்றேன்.
பதம் 1.6.14 : இவ்வாறு பயணம் செய்த எனக்கு பசியும், தாகமும் ஏற்பட்டது. இதனால் உடலும் மனமும் களைப்படைந்ததை நான் உணர்ந்தேன். எனவே ஒரு நதியின் மடுவில் நீராடி, நீரையும் பருகினேன். இதனால் நான் களைப்பிலிருந்து விடுபட்டேன்.
பதம் 1.6.15 : அதன் பிறகு, மனித நடமாட்டமில்லாத காட்டிலுள்ள ஓர் ஆலமரத்தின் நிழலில் அமர்ந்த நான், முக்திபெற்ற ஆத்மாக்களிடமிருந்து நான் கற்றறிந்ததைப் போல், எனது புத்தியை உபயோகித்து, எனக்குள்ளே இருக்கும் பரமாத்மாவை தியானிக்கத் துவங்கினேன்.
பதம் 1.6.16 : உன்னத அன்பினால் பரவசமடைந்த நான் பரம புருஷ பகவானின் தாமரைப் பாதங்களை தியானிக்கத் துவங்கிய உடனேயே, என் கண்களிலிருந்து கண்ணீர் உருண்டோடியது. பரம புருஷ பகவானாகிய ஸ்ரீகிருஷ்ணரும் தாமதமின்றி என் இதயகமலத்தில் தோன்றினார்.
பதம் 1.6.17 : வியாசதேவரே, அச்சமயத்தில், தான் அளவுக்கதிகமான ஆனந்தப் பரவசத்தில் ஆழ்ந்துவிட்டதால், என்னுடலின் ஒவ்வொரு அங்கமும் தனித்தனியாக உற்சாகமடைந்தன. நான் பேரானத்தக் கடலில் மூழ்கிவிட்டதால், என்னையும் பகவானையும் என்னால் காணமுடியாமல் போயிற்று.
பதம் 1.6.18 : உண்மையுருவிலுள்ள பகவானின் திவ்யமான வடிவம், மனதின் விருப்பங்களை நிறைவேற்றி, மனதிலுள்ள எல்லா முரண்பாடுகளையும் அழித்துவிடுகிறது. அவ்வுருவம் காணாமல் போனதால், விரும்பியதை இழந்தவன் சஞ்சலமடைவதைப் போல், நான் சஞ்சலத்துடன் திடீரென எழுந்தேன்.
பதம் 1.6.19 : பகவானின் அந்த திவ்யமான உருவத்தை நான் மீண்டும் காண விரும்பினேன். ஆனால் இதயத்தின் மீது மனதை ஒருமுகப்படுத்த நான் ஆவலுடன் முயன்றபோதிலும், அதன் பிறகு, அவரை என்னால் காணவே முடியவில்லை. இவ்வாறு மனத்திருப்தி அடையாமல் நான் மிகவும் வருந்தினேன்.
பதம் 1.6.20 : அத்தனிமையான இடத்தில் நான் மேற்கொண்ட முயற்சிகளைக் கண்ட, பௌதிக வர்ணணைகளுக்கு அப்பாற்பட்டவரான பரம புருஷ பகவான், என்னுடைய வருத்தத்தைக் குறைப்பதற்காகவே. இனிமையான சொற்களுடன் மிகவும் கம்பிரமாக என்னிடம் பேசினார்.
பதம் 1.6.21 : நாரதா (பகவான் கூறினார்). இப்பிறவியில் இனிமேல் என்னை உன்னால் காண முடியாது என்பதை நான் வருத்தத்துடன் கூறிக்கொள்கிறேன். தொண்டில் பூரணத்துவத்தை அடையாதவர்களும், பௌதிக பற்றிலிருந்து முழுமையாக விடுபடாதவர்களும் என்னைக் காண்பது கடினம்.
பதம் 1.6.22 : நற்குணவானே, ஒருமுறை மட்டுமே நீ என் உருவத்தைக் கண்டிருக்கிறாய். இது, என் மீது உனக்கேற்பட்ட ஆசையை அதிகரிப்பதற்காகவே ஆகும். ஏனெனில், என்னை அடைய நீ எவ்வளவுக்கெவ்வளவு அதிகமாக விரும்புகிறாயோ அவ்வளவுக்கவ்வளவு அதிகமாக எல்லா பௌதிக ஆசைகளிலிருந்தும் நீ விடுபடுவாய்.
பதம் 1.6.23 : ஒரு சில நாட்களுக்கு மட்டுமே பரபிரம்மத்தின் தொண்டில் ஈடுபடுவதால், பக்தனொருவன் என்னிடம் உறுதியான, நிலையான புத்தியைப் பெறுகிறான். அதன் விளைவாக, வெறுக்கத்தக்க பௌதிக உலகங்களைக் கைவிட்ட பின், பக்தன் ஆன்மீக உலகிற்குச் சென்று எனது சகாக்களில் ஒருவனாக மாறிவிடுகிறான்.
பதம் 1.6.24 : எனது பக்தியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள அறிவு எந்த நேரத்திலும் அழிக்கப்பட முடியாததாகும். சிருஷ்டி மற்றும் அழிவுக் காலங்களிலும் கூட, என் கருணையினால் உனது நினைவாற்றல் தொடர்ந்திருக்கும்.
பதம் 1.6.25 : பிறகு, ஒலி வடிவமானவரும், கண்களுக்குக் காணப்படாதவரும், ஆனால் மிகவும் அற்புதமானவருமான அப்பரம அதிகாரி பேசுவதை நிறுத்திக்கொண்டார். நான் நன்றியுணர்வுடன் சிரம் தாழ்த்தி அவருக்கு வணக்கம் செலுத்தினேன்.
பதம் 1.6.26 : இவ்வாறு நான் ஜடவுலக வழக்குகள் அனைத்தையும் கைவிட்டு. பகவானின் நாமத்தையும், புகழையும் இடைவிடாமல் பாடத் துவங்கினேன். பகவானின் உன்னத லீலைகளைப் பற்றி இவ்வாறு பாடுவதும், நினைவிற் கொள்வதும் நன்மை அளிக்கக்கூடியவையாகும். அவ்வாறு செய்துகொண்டு, பூரண திருப்தியுடனும், பணிவுடனும், பொறாமையின்றியும் நான் உலகம் முழுவதிலும் பிரயாணம் செய்தேன்.
பதம் 1.6.27 : எனவே பிராமணரான வியாசதேவரே, கிருஷ்ணரைப் பற்றிய எண்ணத்தில் முழுமையாக நான் ஆழ்ந்திருந்ததால் என்னிடம் எவ்விதமான பற்றும் இருக்கவில்லை. இவ்வாறு எல்லா பௌதிக களங்கங்களில் இருந்தும் முற்றிலும் விடுபட்டிருந்த நான், மின்னலும், வெளிச்சமும் ஒரே நேரத்தில் தோன்றுவதைப் போல், கிருஷ்ணரின் சிந்தனையில் ஆழ்ந்ததிருக்கும்போதே காலப்போக்கில் எனக்கு மரணமும் சம்பவித்தது.
பதம் 1.6.28 : பரம புருஷ பகவானுடன் சகவாசம் கொள்வதற்கு தகுதியள்ள ஓர் ஆன்மீக உடல் அளிக்கப்பட்டதால், பஞ்ச பூதங்களான உடலை நான் கைவிட்டேன். ஆகவே, அதனால் பெற்ற கர்ம பலன்களும் நின்றுவிட்டன.
பதம் 1.6.29 : யுகத்தின் முடிவில், பரம புருஷ பகவானான நாராயணர் பிரளய நீரில் சயனித்த பொழுது, பிரம்மா படைப்பிற்குரிய எல்லா மூலப்பொருட்களுடனும் பகவானுக்குள் புக ஆரம்பித்தார், நானும் அவரது சுவாசத்தின் வழியாக அவருக்குள் புகுந்தேன்.
பதம் 1.6.30 : 432 கோடி சூரிய ஆண்டுகளுக்குப் பிறகு, பகவானின் விருப்பப்படி மீண்டும் படைப்பதற்காக பிரம்மா உறங்கி எழுந்தபொழுது, மரீசி, அங்கிரா மற்றும் அத்ரி முதலான எல்லா ரிஷிகளும் பகவானின் திவ்யமான உடலிலிருந்து படைக்கபட்டனர். அவர்களுடன் நானும் தோன்றினேன்.
பதம் 1.6.31 : சர்வ வல்லமையுடைய விஷ்ணுவின் கருணையால், அன்று முதல் நான் ஆன்மீக உலகிலும், முப்பிரிவுகளைக் கொண்ட ஜடவுலகிலும் நடையின்றி பிரயாணம் செய்து வருகிறேன். பசுவானின் இடையறாத பக்தித் தொண்டில் நான் நிலையாக ஈடுபட்டிருப்பதே இதற்குக் காரணமாகும்.
பதம் 1.6.32 : இவ்வாறாக, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரால் எனக்கு அளிக்கப்பட்டதும், தெய்வீக ஓசை நிரம்பியதுமான இவ்வீணையை வாசித்துக் கொண்டு பகவானின் உன்னதமான மகிமைகளை இடைவிடாமல் பாடிக்கொண்டு நான் பிரயாணம் செய்கிறேன்.
பதம் 1.6.33 : பரம புருஷராகிய ஸ்ரீ கிருஷ்ணரின் பெருமைகளும், செயல்களும் செவிக்கு இன்பமூட்டுபவை ஆகும். அவரது புனிதமான செயல்களைப் பற்றி நான் பாடத் துவங்கிய உடனேயே, அவரைக் கூவி அழைத்ததைப் போல், உடனே என் இதயக் கமலத்தில் அவர் தோன்றுகிறார்.
பதம் 1.6.34 : இந்த்ரிய போகங்களை அனுபவிக்க வேண்டுமென்ற இடைறாத ஆசைகளில் மூழ்கியிருப்பவர்களால், பரம புருஷரின் உன்னதமான செயல்களை இடைவிடாமல் பாடுவதன் மூலம் அறியாமை எனும் கடலைக் கடந்துவிட முடியும் என்பதை எனது சொந்த அனுபவத்தினால் நான் உணர்ந்து கொண்டேன்.
பதம் 1.6.35 : யோக முறையைக் கொண்டு புலனடக்கத்தைப் பயில்வதால், ஒருவர் ஆசை மற்றும் காமம் ஆகியவற்றின் தொல்லைகளிலிருந்து விடுபடமுடியும் என்பது உண்மைதான். ஆனால் ஆத்மாவை திருப்திப்படுத்துவதற்கு இது போதுமானதல்ல. ஏனெனில் இது (திருப்தி) பரம புருவ பசுவானின் பக்தித் தொண்டினால் மட்டுமே அடையப்படுவதாகும்.
பதம் 1.6.36 : வியாசதேவரே, நீர் எல்லா பாவங்களில் இருந்தும் விடுபட்டிருக்கிறீர். நீர் கேட்டபடியே எனது பிறப்பு மற்றும் தன்னுணர்வுக்கான செயல்கள் ஆகியவற்றை நான் விளக்கினேன். இவையனைத்தும் உம்முடைய சொந்த திருப்திக்கு உதவும்.
பதம் 1.6.37 : ஸூத கோஸ்வாமி கூறினார்: இவ்வாறு வியாசதேவரிடம் கூறியபின் ஸ்ரீல நாரத முனி அவரிடமிருந்து மனம்போன போக்கில் புறப்பட்டுச் சென்றார்.
பதம் 1.6.38 : ஸ்ரீல நாரத முனிவர் பரம புருஷ பகவானின் செயல்களைப் புகழ்வதால் அவருக்கு எல்லா புகழும், வெற்றியும் உண்டாகட்டும். பகவானைத் துதிப்பதால் அவர் தாமே மகிழ்ச்சி அடைவதுடன், பிரபஞ்சத்திலுள்ள எல்லா துன்பப்படும் ஆத்மாக்களுக்கும் உற்சாகத்தையும் ஊட்டுகிறார்.