அத்தியாயம் – 5
வியாசருக்கு நாரதரின் உபதேசங்கள்
பதம் 1.5.1
ஸூத உவாச
அத தம் ஸுகம் ஆஸீன உபாஸீனம் ப்ருஹச்-ச்ரவா:
தேவர்ஷி: ப்ராஹ விப்ரர்ஷிம் வீணா-பாணி: ஸ்மயன் இவ
ஸூத—சூதர்; உவாச-கூறினார்; அத—ஆகவே; தம்—அவரை; ஸுகம் ஆஸின— வசதியாக அமர்ந்து; உபாஸீனம்—_அருகில் அமர்ந்திருப்பவரிடம்; ப்ருஹத்—ஸ்ரவா:—பெரும் மரியாதைக்குரிய; தேவர்ஷி:—தேவர்களுக்கிடையில் மிகச்சிறந்த ரிஷி; ப்ராஹ—கூறினார்; விப்ரர்ஷிம்—பிராமணர்களுக்கு இடையில் ரிஷியாக இருப்பவர்; வீணா-பாணி:—கரத்தில் ஒரு வீணையுடன் செல்பவர்; ஸ்மயன் இவ— வெளிப்படையான புன்முறுவலுடன்
சூத கோஸ்வாமி கூறினார்: இவ்வாறாக தேவரிஷி (நாரதர்) வசதியாக ஆசனத்தில் அமர்ந்ததும், பிரம்ம ரிஷியைப் (வியாசதேவர்) பார்த்து, புன்முறுவலுடன் கூறினார்.
பதம் 1.5.2
நாரத உவாச
பாராசர்ய மஹா-பாக பவத: கச்சித் ஆத்மனா
பரி துஷ்யதி சாரீர ஆத்மா மானஸ ஏவ வா
நாரத—-நாரதர்; உவாச—கூறினார்; பாராசர்ய—பராசரரின் புத்திரரே; மஹாபாக—பேரதிர்ஷ்டம் வாய்ந்த; பவத: — உமது; கச்சித்—அது இருக்குமாயின்; ஆத்மனா—சுயத்தன்னுணர்வின் வாயிலாக; பரிதுஷ்யதி—அது திருப்தியளிக்கிறதா; சாரீர—உடலை அறிதல்; ஆத்மா—ஆன்மாவை; மானஸ-மனதை அறிதல்; ஏவ—நிச்சியமாக; வா—மேலும்.
பராசரரின் புதல்வரான வியாசதேவரிடம் நாரதர் வினவினார்: உடல் அல்லது மனமே நான் என்பதிலும், அவற்றை அறிவதே தன்னுணர்வின் நோக்கம் என்பதிலும் நீங்கள் திருப்தி அடைகிறீர்களா?
பதம் 1.5.3
ஜிக்ஞாஸிதம் ஸுஸம்பன்னம் அபி தே மஹத்—அத்புதம்
க்ருதவான் பாரதம் யஸ் த்வம் ஸர்வார்த பரிப்ரும்ஹிதம்
ஜிக்ஞாஸிதம்—முழுமையாக வினவி; ஸுஸம்பன்னம்—நன்கு கற்றறிந்து: அபி—இருந்த போதிலும்; தே—உமது; மஹத்-அத்புதம்:— மிகச்சிறந்த, அற்புதமான; க்ருதவான்- தயாரித்தீர்; பாரதம்—மஹாபாரதத்தை; ய:த்வம்—நீங்கள் செய்திருப்பது; ஸர்வ-அர்த:—எல்லா சம்பவங்களையும் உள்ளடக்கி; பரிப்ரும்ஹிதம்—விரிவாக விவரிக்கப்பட்டு உள்ளது.
கல்வி கேள்விகளில் நீர் பூரணமானவர். மேலும் எல்லா வகையான வேத சம்பவங்களையும் தெளிவாக விளக்கும் மகாபாரதத்தை சிறப்பாகவும், அற்புதமாகவும் நீர் தயாரித்திருக்கிறீர் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
பதம் 1.5.4
ஜிக்ஞாஸிதம் அதீதம் ச ப்ரஹ்ம யத் தத் ஸனாதனம்
ததாபி சோசஸி ஆத்மானம் அக்ருதார்த இவ ப்ரபோ
ஜிக்ஞாஸிதம்— முழுமையாக நன்கு ஆராய்ந்திருக்கிறீர்; அதீதம்— பெற்ற அறிவு; ச—மேலும்; ப்ரஹ்ம—பிரம்மத்தை; யத்—எது; தத்—அதை; ஸனாதனம்—நித்தியமான; ததாபி—அப்படியிருந்தும்; சோசஸி—வருந்துகிறீர்; ஆத்மானம்—ஆத்மாவில்; அக்ருத –அர்த:— பாழாக்கி; இவ— போலி; ப்ரபோ—எனதன்புள்ள ஐயா.
நீர் அருவ பிரம்மத்தை மட்டுமின்றி, அதிலிருந்து பெறப்படும் அறிவையும் கூட முழுமையாக விளக்கி இருக்கிறீர். அப்படியிருந்தும், பிரபு, உமது முயற்சி பாழாகிவிட்டது என்றெண்ணி ஏன் மனச்சோர்வு அடைகிறீர்?
பதம் 1.5.5
வ்யாஸ உவாச
அஸ்தி ஏவ மே ஸர்வம் இதம் த்வயோக்தம்
ததாபி நாத்மா பர் துஷ்யதே மே
தன்-மூலம் அவ்யக்தம் அகாத—போதம்
ப்ருச்சாமஹே த்வாத்ம—பவாத்ம—பூதம்
வ்யாஸ—வியாசர்; உவாச-கூறினார்; அஸ்தி—உள்ளது; ஏவ—நிச்சயமாக; மே— என்னுடைய; ஸர்வம்—எல்லா; இதம்—இந்த; த்வயா—உம்மால்; உக்தம்—கூறினீர்: ததாபி—இருப்பினும்; ந—இல்லை; ஆத்மா—ஆத்மா; பரிதுஷ்யதே—சமாதானம் அடைகிறேன்; மே—எனக்கு; தத்—எதன்; மூலம்—வேர்; அவ்யக்தம்— கண்டுபிடிக்கப்படாத; அகாதபோதம்—எல்லையற்ற அறிவுடையவர்; ப்ருச்சாமஹே—விசாரிக்கிறேன்; த்வா—தங்களிடம்; ஆத்ம—பவ—சுயமாகப் பிறந்த; ஆத்மபூதம்—புத்திரர்.
ஸ்ரீல வியாசதேவர் கூறினார்; என்னைப்பற்றி தாங்கள் கூறியவை அனைத்தும் முற்றிலும் உண்மை. இருப்பினும் எனக்கு சமாதானம் ஏற்படவில்லை. சுயமாகப் பிறந்த (பௌதிக தாய், தந்தையர் இல்லாத) ஒருவரின் (பிரம்மா) புத்திராக தாங்கள் இருப்பதால், எல்லையற்ற அறிவு படைத்தவராகவும் இருக்கிறீர். ஆகவே எனது அதிருப்திக்குரிய மூல காரணத்தைப் பற்றி உம்மிடமிருந்து கேட்டறிய விரும்புகிறேன்.
பதம் 1.5.6
ஸ வை பவான் வேத ஸமஸ்த—குஹ்யம்
உபாஸிதோ யத் புருஷ: புராண:
பராவரேசோ மனஸைவ விஸ்வம்
ஸ்ருஜதி அவதி அத்தி குணைர் அஸங்க:
ஸ—இவ்வாறு; வை—நிச்சயமாக; பவான்—தாங்கள், வேத—அறிவீர்; ஸமஸ்த—உட்பட்ட அனைத்தும்; குஹ்யம்—இரகசியமான; உபாஸித:-பக்தராக; யத்—ஏனெனில்; புருஷ:—பரம புருஷ பகவான்; புராண:—மிகப்பழமையான; பராவரேச:—ஜட மற்றும் ஆன்மீக உலகங்களை ஆள்பவர், மனஸா—மனம்; ஏவ—மட்டுமே; விஸ்வம்—பிரபஞ்சம்; ஸ்ருஜதி—படைக்கிறார்; அவதி அத்தி—அழிக்கிறார்; குணை—பௌதிகத் தன்மையினால்; அஸங்க: —பற்றில்லாதவர்.
என் பிரபுவே, ஜடவுலகைப் படைத்து அதை அழிப்பவரும், ஆன்மீக உலகைப் பராமரிப்பவரும், ஜட இயற்கையின் முக்குணங்களைக் கடந்தவருமான மூல முழுமுதற் கடவுளை தாங்கள் வழிபடுவதால், மனித அறிவுக்கு எட்டாத அனைத்தையும் தாங்கள் அறிந்திருக்கிறீர்.
பதம் 1.5.7
த்வம் பர்யடன் அர்க இவ த்ரி-லோகீம்
அந்தஸ்ச்ரோ வாயுர் இவாத்ம-ஸாக்ஷீ
பராவரே ப்ரஹ்மணி தர்ம தோ வ்ரதை:
ஸ்னாதஸ்ய மே ன் யீனம் அலம் வீசக்ஷ்வ
த்வம்- மேன்மை தாங்கியவரான தாங்கள்; பர்யடன்—பிரயாணம் செய்யும்; அர்க—சூரியன்; இவ—போல்; த்ரிலோகம்— மூவுலகங்கள்; அந்த:சர—அனைவருடைய இதயத்திற்குள்ளும் புக முடியும்; வாயு: இவ—எங்கும் பரவியுள்ள காற்றுக்குச் சமமானவர்; ஆத்ம—தன்னுணர்வு பெற்ற; ஸாக்ஷீ—சாட்சி; பராவரே—காரண, விளைவு எனும் விஷயத்தில்; ப்ரஹ்மணி—பகவானில்; தர்மத:—ஒழுக்கக்கட்டுப்பாடுகளின் கீழ்; வ்ரதை:—விரதத்தில்; ஸ்னாதஸ்ய—ஆழ்ந்துவிட்டதால்; மே—என்னுடைய; நூனம்- குறைபாடு; அலம்— தெளிவாக; விசக்ஷ்வ —கண்டுபிடியுங்கள்.
சூரியனைப் போல், மூவுலகங்களில் சஞ்சரிக்கவும், காற்றைப் போல் அனைவரது மனதிற்குள்ளும் புகுந்து சஞ்சரிக்கவும் உம்மால் முடியும். இதனால் தாங்கள் சர்வ வியாபகமுடைய பரமாத்மாவுக்கு நிகரானவராவீர். ஆகவே ஒழுக்கக்கட்டுப்பாடுகளையும் விரதங்களையும் மேற்கொண்டு நான் தெய்வீகத்தில் ஆழ்ந்திருந்த போதிலும், என்னிடமுள்ள குறை என்னவென்பதை தயவுசெய்து காட்டியருள வேண்டும்.
பதம் 1.5.8
ஸ்ரீ நாரத உவாச
பவதானுதித—ப்ராயம் யசோ பகவதோ ‘மலம்
யேனைவாஸௌ ந துஷ்யேத மன்யே தத் தர்சனம் கிலம்
ஸ்ரீ நாரத— ஸ்ரீ நாரதர்; உவாச—கூறினார்; பவதா—உம்மால்; அனுதித – ப்ராயம்:— அநேகமாக சிறிதும் புகழவில்லை; யச:—பெருமைகளை; பகவத:—-பரம புருஷ பகவானின்; அமலம்—களங்கமற்ற; யேன— எதனால்; ஏவ—நிச்சயமாக; அஸௌ—அவர் (முழுமுதற் கடவுள்); ந—செய்யாத; துஷ்யேத—மகிழ்ந்து; மன்யே-நான் நினைக்கிறேன்; தத் — அந்த; தர்சனம்—தத்துவம்; கிலம்—தாழ்வானதாகும்.
ஸ்ரீ நாரதர் கூறினார்: நீர் உண்மையில் பரம புருஷரின் மேன்மையான, களங்கமற்ற பெருமைகளை பரப்பவில்லை. பகவானின் உன்னத புலன்களை திருப்திப்படுத்தாத அந்த தத்துவம் பயனற்றதென கருதப்படுகிறது.
பதம் 1.5.9
யதா தர்மாதயஸ் சார்தா முனி—வர்யானுகீர்திதா:
ந ததா வாஸுதேவஸ்ய மஹிமா ஹி அனுவர்ணித:
யதா—வேண்டிய அளவு; தர்ம-ஆதய:—சமய ஒழுக்கத்தின் நான்கு கொள்கைகளும், ச—மேலும்; ஆர்தா—நோக்கங்கள்; முனி-வர்ய:—பெரும் முனிவராகிய உங்களால்; அனுகீர்திதா: — திரும்பத் திரும்ப விளக்கப்பட்டுள்ளது; ந—இல்லை; ததா—அவ்விதத்தில்; வாஸு தேவஸ்ய—முழுமுதற் கடவுளாகிய ஸ்ரீ கிருஷ்ணரின், மஹிமா—மகிமைகளை; ஹி—நிச்சயமாக; அனுவர்ணித—இடைவிடாமல் விவரிக்கப்பட்டு உள்ளது.
பெரும் முனிவராகிய நீர், மதச் சடங்குகளுடன் ஆரம்பமாகும் நான்கு கொள்கைகளை மிகவும் விரிவாக விளக்கியபோதிலும், பரம புருஷராகிய வாசுதேவனின் மகிமைகளை விளக்கவில்லை.
பதம் 1.5.10
ந யத் வசஸ் சித்ர—பதம் ஹரேர் யசோ
ஜகத்-பவித்ரம் ப்ரக்ருணீத கர்ஹிசித்
தத் வாயஸம் தீர்தம் உசந்தி மானஸா
ந யத்ர ஹம்ஸா நிரமந்தி உசிக்—க்ஷயா:
ந—இல்லை; யத்—அந்த; வச—வார்த்தைகள்; சித்ர-பதம்—அலங்காரமான; ஹரே—பகவானின்; யச:-பெருமைகள்; ஜகத்—பிரபஞ்சம்; பவித்ரம்—தூய்மையடைந்த; ப்ரக்ருணீத—விளக்கிய; கர்ஹிசித்—அரிதாக; தத்—-அந்த; வாயஸம்—காகங்கள்; தீர்தம்—புண்ணிய தீர்த்தம்; உசந்தி-நினைக்கின்றனர்; மானஸா—புண்ணிய புருஷர்கள்; ந—இல்லை; யத்ர—எங்கு; ஹம்ஸா-பக்குவமடைந்த ஜீவன்கள் அனைவரும்; நிரமந்தி—இன்பம் பெறுகின்றனர்; உசிக் – க்ஷயா:—தெய்வ லோகத்தில் வாழ்பவர்கள்.
பிரபஞ்சத்தின் முழு சூழ்நிலையையும் தூய்மைப்படுத்தக்கூடியவர் பகவான் ஒருவரேயாவார். அவரது பெருமைகளை விவரிக்காத அந்த சொற்கள் காக்கைகளைப் போன்ற கர்மிகளின் தீர்த்தம் என்று புண்ணிய புருஷர்களால் கருதப்படுகின்றன. பூரணத்துவம் பெற்றவர்கள் பரலோகவாசிகளாக இருப்பதால், காக்கைகளுக்குரிய இடத்தில் அவர்கள் எவ்வித இன்பத்தையும் பெறுவதில்லை.
பதம் 1.5.11
தத்—வாக்—விஸர்கோ ஜனதாக—விப்ளவோ
யஸ்மின் ப்ரதி-ஸ்லோகம் அபத்தவதி அபி
நாமானி அனந்தஸ்ய யசோ ‘ங்கிதானி யத்
ஸ்ருண்வந்தி காயந்தி க்ருணந்தி ஸாதவ:
தத்—அந்த; வாக்—இலக்கியம்; விஸர்க:-படைப்பாகும்; ஜனதா— பொதுமக்கள்; அக-பாவங்கள்; விப்ளவ:—புரட்சிகரமான; யஸ்மின்—எதில்; ப்ரதி-ஸ்லோகம்:—ஒவ்வொரு சுலோகமும்; அபத்தவதி— ஒழுங்காக தொகுக்கப்படவில்லை; அபி—என்றபோதிலும்; நாமானி—உன்னத நாமங்கள் முதலியவற்றை; அனந்தஸ்ய—எல்லையற்ற பகவானின்; யச:—பெருமைகள்; அங்கிதானி—விவரமாக விளக்கப்பட்டுள்ள; யத்—எது; ஸ்ருண்வந்தி— கேட்கின்றனர்; காயந்தி– பாடுகின்றனர்; க்ருணந்தி—ஏற்றுக் கொள்கின்றனர்; ஸாதவ:—தூய்மையடைந்த நேர்மையான மனிதர்கள்.
அதே சமயம், எல்லையற்றவரான பரம புருஷரின் பெயர், புகழ், லீலைகள் இவை பற்றிய உன்னதமான வர்ணணைகள் அடங்கிய இலக்கியம், வழி தவறி முறையற்றவர்களாக வாழும் மனிதர்களுடைய நோக்கத்தில் ஒரு புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக உண்டானதாகும். இத்தகைய நூல்கள், தவறுகள் நிறைந்தவையாக இருப்பினும், நேர்மையான தூய மனிதர்களால் கேட்கவும், படிக்கவும் மற்றும் ஏற்கவும் படுகின்றன.
பதம் 1.5.12
நைஷ்கர்ம்யம் அபி அச்யுத—பாவ-வர்ஜிதம்
ந சோபதே ஞானம் அலம் நிரஞ்சனம்
குத:புன:சஸ்வத் அபத்ரம் ஈஸ்வரே
ந சார்பிதம் கர்ம யத் அபி அகாரணம்
நைஷ்கர்ம்யம்—பலன் கருதும் செயல்களின் விளைவுகளில் இருந்து விடுபட்டதால் உண்டான தன்னுணர்வு; அபி—இருப்பினும்; அச்யுத— இழிவற்றவரான பகவான்; பாவ— எண்ணம்; வர்ஜிதம்—இல்லாத; ந—இருப்பதில்லை; சோபதே—நல்லதாகக் காணப்படுகிறது; ஞானம்— தெய்வீக அறிவு; அலம்—அதனால்; நிரஞ்சனம்— ஜட நோக்கங்களில் இருந்து விடுபட்டு; குத:—எங்கு இருக்கிறது; புன:-மீண்டும்; சஸ்வத்— எப்பொழுதும்; அபத்ரம்-இணக்கமற்ற; ஈஸ்வரே—பகவானுக்கு; ந—இல்லை; ச—மேலும்; அர்பிதம் — அளிக்கப்பட; கர்ம-பலனை எதிர்பார்க்கும் செயல்; யத் அபி—என்ன இருக்கிறது; அகாரணம்—பலன் கருதாதது.
தன்னுணர்வைப் பற்றிய அறிவு எல்லா பௌதிகக் கவர்ச்சிகளில் இருந்தும் விடுபட்டிருந்தபோதிலும், அழிவற்றவரைப் (பகவான்) பற்றிய சிந்தனை இல்லாததாக இருக்குமானால் அது நலம் தராது. இதனால், துன்பம் தரும் நிலையற்ற கருமங்களை பகவானின் பக்தித் தொண்டிற்காக பயன்படுத்தவில்லை என்றால் அவற்றால் என்ன நன்மை விளையப் போகிறது?
பதம் 1.5.13
அதோ மஹா-பாக பவான் அமோக-த்ருக்
சுசி-ஸ்ரவா: ஸத்ய-ரதோ த்ருத-வ்ரத:
உருக்ரமஸ்யாகில-பந்த-முக்தயே
ஸமாதினானுஸ்மர தத் விசேஷ்டிதம்
அதோ—ஆகவே; மஹா-பாக—மகா பாக்கியசாலியான; பவான்—நீங்களே; அமோக-த்ருக்—பக்குவமான ஞானியாவீர்; சுசி—குறையற்றவரும்; ஸ்ரவா:—புகழ்பெற்றவரும்; ஸத்யரத:— சத்திய விரதத்தை ஏற்றதால்; த்ருத-வ்ரத:—தெய்வீக குணங்களில் நிலை பெற்றவர்; உருக்ரமஸ்ய-அசாதாரணமான செயல்களைச் செய்பவரின் (இறைவன்); அகில—எல்லா; பந்த—பந்தம்; முக்தயே—அதிலிருந்து முக்தியடைவதற்காக; ஸமாதினா—தியானத்தால்; அனுஸ்மர—திரும்பத் திரும்ப யோசித்தபின் அவற்றை விளக்க வேண்டும்; தத்-விசேஷ்டிதம்— பகவானின் பல்வேறு திருவிளையாடல்களை.
வியாசதேவரே, உமது பார்வை பூரணமானதும், நற்புகழ் களங்கமற்றதுமாகும். நீர் விரதத்தில் உறுதியாகவும், சத்தியத்தில் நிலையாகவும் இருக்கிறீர். எனவே, பொதுமக்கள் எல்லா ஜட பந்தத்திலிருந்தும் முக்தி அடைவதற்கு உதவும் பகவானின் லீலைகளை தியானம் செய்து அவற்றைத் தெளிவாக விளக்கவும்.
பதம் 1.5.14
ததோ ‘ன்யதா இஞ்சன யத் விவக்ஷத:
ப்ருதக் த்ருசஸ் தத்—க்ருத—ரூப—நாமபி:
ந கர்ஹிசித் க்வாபி ச துஹ்ஸ்திதா மதிர்
லபதே வாதாஹத-நௌர் இவாஸ்பதம்
தத்—அதிலிருந்து; அன்யதா-பிரிந்த; கிஞ்சன—ஏதோ ஒன்று; யத்— எதுவாக இருப்பினும்; விவக்ஷத:-விளக்க விரும்பி; ப்ருதக்—தனியாக; த்ருச—பார்வை; தத்—க்ருத :—அதன் விளைவாக; ரூப—உருவம்; நாமபி:-பெயர்களால்; நகர்ஹிசித்-ஒருபோதும் இல்லை; க்வாபி—ஏதேனும்; ச—மேலும்; துஹ்ஸ்திதா மதி—நிலையற்ற மனம்; லபேத—பெறுகின்ற; வாத-ஆஹத:— காற்றால் அலைக்கழிக்கப்பட்ட; நௌ— படகை: இவ—போன்ற; ஆஸ்பதம்-இடம்.
பகவானுடன் சம்பந்தப்படாத எதையெல்லாம் நீர் விளக்க முயன்றாலும், அது பல்வேறு உருவங்களுடனும், பெயர்களுடனும், பலன்களுடனும் செயற்பட்டு, அணைவதற்கு இடமில்லாத படகு ஒன்று காற்றால் அலைக்கழிக்கப்படுவதைப் போல், மனதை அலைக்கழிக்கிறது.
பதம் 1.5.15
ஜுகுப்ஸிதம் தர்ம-க்ருதே ‘நுசாஸத:
ஸ்வபாவ—ரக்தஸ்ய மஹான் வ்யதிக்ரம:
யத்—வாக்யதோ தர்ம இதீதர:ஸ்திதோ
ந மன்யதே தஸ்ய நிவாரணம் ஜன:
ஜுகுப்ஸிதம்—நிச்சயமாக நிந்திக்கப்படுகிறது; தர்ம—க்ருதே—மதமெனும் விஷயத்திற்காக; அனுசாஸத:—உபதேசம்; ஸ்வபாவ—ரக்தஸ்ய:—இயல்பான மனப்பாங்கு கொண்டுள்ளனர்; மஹான்— உயர்ந்த; வ்யதிக்ரம:—தகாத; யத்வாக்யத:-யாருடைய உபதேசத்தின் கீழ்; தர்ம—மதம்; இதி—இது இவ்வாறு; இதர:—பொதுமக்கள்; ஸ்தித:-மாறாத; ந—மாட்டார்கள்; மன்யதே—சிந்திக்க; தஸ்ய— அதனைப் பற்றி; நிவாரணம்—தடையை; ஜன:—அவர்கள்.
பொதுமக்கள் இயல்பாகவே சுகம் அனுபவிக்கும் சுபாவத்தைக் கொண்டுள்ளனர். மேலும் மதம் எனும் பெயரில் நீர் அதற்குத் தூண்டு கோலாகவும் இருந்திருக்கிறீர். இது நிச்சயமாக நிந்தனைக்குரியதும் தகாது செயலுமாகும். அவர்கள் உமது உபதேசங்களின்படி வழிகாட்டப்படுவதால், மதத்தின் பெயரில் அத்தகைய செயல்களை ஏற்றுக்கொள்வார்கள். தடைகளைப் பற்றி அவர்கள் கவலைப்படமாட்டார்கள்.
பதம் 1.5.16
விசக்ஷணோ ‘ஸ்யார்ஹதி வேதி தும் விபோர்
அனந்த-பாரஸ்ய நிவ்ருத்தித: ஸுகம்
ப்ரவர்தமானஸ்ய குணைர் அனாத்மனஸ்
ததோ பவான் தர்சய சேஷ்டிதம் விபோ:
விசக்ஷண:—மிகுந்த திறமை வாய்ந்த; அஸ்ய-அவரின்; அர்ஹதி—தகுதி பெற்றுள்ளார்; வேதிதும்—அறிவதற்கு; விபோ:—பகவானை; அனந்த-பாரஸ்ய:—எல்லையற்றவரின்; நிவ்ருத்தித:— ஓய்வுபெற்ற; ஸுகம்—பௌதிக சுகம்; ப்ரவர்தமானஸ்ய—அதில் பற்று கொண்டிருப்பவர்கள்; குணை:— பௌதிக குணங்களால்; அனாத்மன:—ஆன்மீக அறிவற்ற; தத:—ஆகவே; பவான்—மேன்மைமிக்கவரான நீங்கள்; தர்சய—வழிகளைக் காட்ட; சேஷ்டிதம்- செயல்கள்; விபோ:— பகவானின்.
பரம புருஷர் எல்லையற்றவராவார்; பௌதிக சுகங்களைத் துறந்தவர்தான் ஆன்மீக அறிவைப் புரிந்துகொள்ளும் தகுதி படைத்தவராவார். எனவே ஜடப்பற்றின் காரணத்தால் தகுதியற்ற நிலையில் உள்ளவர்களுக்கு, பரம புருஷரின் உன்னதமான செயல்களைப் பற்றிய வர்ணணைகளின் மூலமாக, ஆன்மீக தன்னுணர்வுக்கான வழிகளை நீர் காட்ட வேண்டும்.
பதம் 1.5.17
த்யக்த்வா ஸ்வ—தர்மம் சரணாம்புஜம் ஹரேர்
பஜன் அபக்வோ ‘த பதேத் ததோ யதி
யத்ர க்வ வாபத்ரம் அபூத் அமுஷ்ய கிம்
கோ வார்த ஆப்தோ ‘பஜதாம் ஸ்வ—தர்மத:
த்யக்த்வா—கைவிட்ட; ஸ்வ-தர்மம்—ஒருவரது சொந்த உத்தியோக ஈடுபாடு; சரண-அம்புஜம்:—தாமரைப் பாதங்கள்; ஹரே:—ஹரியின் (பகவானின்); பஜன்—பக்தித் தொண்டு நடைபெற்றுக் கொண்டு இருக்கும்பொழுது; அபக்வ:—பக்குவமடையாத; அத—என்பதனால்; பதேத்—இழிவடைகிறான்; தத:—அந்த இடத்திலிருந்து; யதி—என்றால்; யத்ர—அதன் பிறகு; க்வ—எவ்வகையான; வா—அல்லது (கேலியாக உபயோகிக்கப்பட்டு உள்ளது); அபத்ரம்—பிரதிகூலமான; அபூத்—நிகழும்; அமுஷ்ய—அவரின்; கிம்—ஒன்றுமில்லை; க:வாஅர்த: —என்ன ஆர்வம்; ஆப்த:—அடைந்த; அபஜதாம்—பக்தர் அல்லாதவர்களின்; ஸ்வ-தர்மத:-உத்தியோகக் கடமையில் ஈடுபட்டுள்ள.
பகவானின் பக்தித் தொண்டில் ஈடுபடுவதற்காக தனது பௌதிக உத்தியோகங்களைக் கைவிட்ட ஒருவர், பக்குவமடையாத நிலையில் இருக்கும்போது சில சமயங்களில் இழிவடையக்கூடும். இருப்பினும், அவரது தோல்வியால் அவருக்கு ஆபத்தில்லை. மாறாக, பக்தனல்லாத ஒருவன் உத்தியோகக் கடமைகளில் முழுமையாக ஈடுபட்டிருந்தபோதிலும், அதனால் எந்த இலாபத்தையும் அடைவதில்லை.
பதம் 1.5.18
தஸ்யைவ ஹேதோ: ப்ரயதேத கோவிதோ
நலப்பயதே யத் ப்ரமதாம் உபரி அத:
தல் லப்யதே துஹ்கவத் அன்யத:ஸுகம்
காலேன ஸர்வத்ர கபீர-ரம்ஹஸா
தஸ்ய—அந்நோக்கத்திற்காக; ஏவ—மட்டுமே; ஹேதோ:—காரணம்; ப்ரயதேத—முயல வேண்டும்; கோவித:—தத்துவங்களில் ஆர்வமுள்ளவர்; ந—இல்லை; லப்யதே—அடையப்படவில்லை; யத்-என்ன; ப்ரமதாம்— சுற்றித் திரியும்; உபரி—அத:—மேலிருந்து கீழ்வரை; தத்—அந்த; லப்யதே-அடையப்பட முடியும்; துஹ்கவத்—துன்பங்களைப் போல்; அன்யத—முந்தைய செயலின் பலனாக; ஸுகம்—புலன் இன்பம்; காலேன—காலப்போக்கில்; ஸர்வத்ர—எல்லா இடங்களிலும்; கபீர—சூட்சுமமான; ரம்ஹஸா—முன்னேற்றம்.
உண்மையில் புத்திசாலிகளாகவும், தத்துவப் பிரியர்களாகவும் இருப்பவர்கள், பிரம்மலோகத்திலிருந்து பாதாள லோகம் வரை சுற்றித் திரிந்தாலும் அடைய முடியாத அவ்வுயர்ந்த முடிவிற்காக மட்டுமே முயல வேண்டும். துன்பங்களை நாம் விரும்பாத போதிலும் காலப்போக்கில் அவற்றை நாம் அடைவதைப் போலவே, புலன்நுகர்வால் பெறப்படும் மகிழ்ச்சியையும் காலப்போக்கில் தானாகவே நம்மால் அடைய முடியும்.
பதம் 1.5.19
ந வை ஜனோ ஜாது கதஞ்சனாவ்ரஜேன்
முகுந்த-ஸேவீ அன்யவத் அங்க ஸம்ஸ்ருதிம்
ஸ்மரன் முகுந்தாங்க்ரி- உபகூஹனம் புனர்
விஹா தும் இச்சேன ந ரஸ—க்ரஹோ ஜன:
ந—ஒருபோதும் இல்லை: வை—நிச்சயமாக; ஜன:—ஒருவர்; ஜாது—எச்சமயத்திலும்; கதஞ்சன—ஏதோ ஒரு விதத்தில்; ஆவ்ரஜேத்-அனுபவிப்பதில்லை; முகுந்த—ஸேவீ—பகவத் பக்தன்; அன்யவத்—பிறரைப் போல்; அங்க—எனது அன்பிற்குரியவரே; ஸம்ஸ்ருதிம்—ஜட வாழ்வு; ஸ்மரன்—நினைவிற்கொண்டு; முகுந்த அங்ரி—பகவானின் தாமரைப் பாதங்களை; உபகூஹனம்-தழுவி; புன:—மீண்டும்; விஹாதும்—கைவிட விரும்பும்; இச்சேத்—ஆசையை; ந—ஒருபோதும் இல்லை; ரஸ—க்ரஹ:—இன்பத்தை அனுபவித்தவர்; ஜன:—ஒருவர்.
என் அன்புள்ள வியாசரே, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பக்தனொருவர் ஏதோ ஒரு காரணத்தினால் சில சமயங்களில் நிலை தவற நேர்ந்தாலும், அவர் பிறரைப் போல் (பலன்நோக்குக் கருமிகள், முதலான) ஜடவாழ்வை நிச்சயமாக அனுபவிக்கமாட்டார். ஏனெனில், பகவானின் தாமரைப் பாதங்களை ஒருமுறை அனுபவித்து மகிழ்ந்தவரால், அப்பரவச நிலையை திரும்பத் திரும்ப நினைவிற் கொள்வதைத் தவிர, அவரால் வேறெதையும் செய்யமுடியாது.
பதம் 1.5.20
இதம் ஹி விஸ்வம் பகவான் இவேதரோ
யதோ ஜகத்-ஸ்தான—நிரோத ஸம்பவா:
தத் தி ஸ்வயம் வேத பவாம்ஸ் ததாபி தே
ப்ராதேச—மாத்ரம் பவத: ப்ரதர்சிதம்
இதம் — இந்த; ஹி — எல்லா; விஸ்வம்— பிரபஞ்சம்; பகவான்—பரமபுருஷ பகவான்; இவ— ஏறக்குறைய சமமான; இதர:-அதிலிருந்து வேறுபட்டவராக; யத:— யாரிடமிருந்து; ஜகத்— உலகங்கள்; ஸ்தான—இருக்கிறார்; நிரோத—அழிவு; ஸம்பவா:—படைப்பு; தத்-ஹி:— பற்றிய அனைத்தும்; ஸ்வயம்— சுயமாகவே; வேத—அறிந்திருக்கிறீர்; பவான்—தாங்கள்; ததா அபி—இருந்தாலும்; தே—உமக்கு; ப்ராதேச-மாத்ரம்:—ஒரு சுருக்கத்தை மட்டுமே; பவத:—உமக்கு; ப்ரதர்சிதம்—விளக்கினேன்.
பரம புருஷரான முழுமுதற் கடவுள் தாமாகவே இப்பிரபஞ்சமாக விரிவடைந்திருக்கிறார் என்றாலும் அதிலிருந்து அவர் பிரிந்தே இருக்கிறார். அவரிடமிருந்து தான் இப்பிரபஞ்சம் தோன்றியுள்ளது. அவரையே அது சார்ந்துள்ளது. மேலும் அழிவுக்குப்பின் அவருக்குள்ளேயே அது புகுந்தும் விடுகின்றது. இவற்றையெல்லாம் நீர் அறிவீர். நான் ஒரு சுருக்கத்தை மட்டுமே கொடுத்திருக்கிறேன்.
பதம் 1.5.21
த்வம் ஆத்மனாத்மானம் அவேஹி அமோஹ—த்ருக்
பரஸ்ய பும்ஸ: பரமாத்மன: கலாம்
அஜம் ப்ரஜாதம் ஜகத: சிவாய தன்
மஹானுபாவாப்யுதயோ ‘திகண்யதாம்
த்வம்—நீங்கள்தான்; ஆத்மனா—உங்களால்தான்; ஆத்மானம்—பரமாத்மா; அவேஹி—கண்டுபிடிக்க; அமோக—த்ருக்—பூரணநோக்குக் கொண்டவர்; பரஸ்ய—தெய்வீகத்தின்; பும்ஸ:—முழுமுதற் கடவுளான; பரமாத்மன:-பரம புருஷரின்; கலாம்—விரிவங்கம்; அஜம்— பிறப்பற்றவர்; ப்ரஜாதம்—பிறப்பை ஏற்று; ஜகத:—உலகின்; சிவாய—நன்மைக்காக; தத்—அந்த; மஹா-அனுபாவ—முழுமுதற் கடவுளான ஸ்ரீகிருஷ்ணரின்; அப்யுதய:—திருவிளையாடல்களை; அதிகண்யதாம் — மிகவும் தெளிவாக விளக்குவீராக.
மேன்மை தாங்கிய நீர் திவ்யமான பார்வையைப் பெற்றிருக்கிறீர். நீர் பகவானின் ஒரு விரிவங்கமாக இருப்பதால், உம்மால்தான் பரமாத்மாவான முழுமுதற் கடவுளை அறிய முடியும். பிறப்பற்றவராக இருந்தும், அனைத்து மக்களின் நன்மைக்காக இந்த பூமியில் தோன்றியிருக்கிறீர். ஆகவே தயவுசெய்து, முழுமுதற் கடவுளான ஸ்ரீ கிருஷ்ணரின் உன்னத லீலைகளை இன்னும் தெளிவாக விளக்குவீராக.
பதம் 1.5.22
இதம் ஹி பும்ஸஸ் தபஸ: ஸ்ருதஸ்ய வா
ஸ்விஷ்டஸ்ய ஸூக்தஸ்ய ச புத்தி-தத்தயோ:
அவிச்யுதோ ‘ர்த: கவிபிர் நிரூபிதோ
யத்-உத்தமஸ்லோக-குணானுவர்ணனம்
இதம்—இந்த; ஹி—நிச்சயமாக; பும்ஸ:—அனைவரின்; தபஸ:—தவங்களினால்; ஸ்ருதஸ்ய—வேதங்களைக் கற்பதனால்; வா—அல்லது; ஸ்விஷ்டஸ்ய—யாகம்; ஸூக்தஸ்ய—ஆன்மீக கல்வி; ச—மேலும், புத்தி—அறிவு முன்னேற்றம்; தத்தயோ:—தானம்; அவிச்யுத:—தவறாத; அர்த:—நோக்கம்; கவிபி:—அங்கீகரிக்கப்பட்ட அறிஞரால்; நிரூபித:—முடிவு செய்துள்ளார்; யத்—என்ன; உத்தமஸ்லோக— மிகச்சிறந்த கவிதைகளால் விவரிக்கப்படுபவரான பகவான்; குண — அனுவர்ணனம்—அவரது உன்னத குணங்களின் வர்ணணைகள்.
தவம், வேதக் கல்வி, யாகம், மந்திர பாராயணம் மற்றும் தானம் ஆகியவை அறிவு முதிர்ச்சிக்குரிய உயர்ந்த நோக்கத்தைக் கொண்டவையாகும். இவை மிகச்சிறந்த கவிதைகளால் வர்ணிக்கப்படுபவரான பகவானைப் பற்றிய தெய்வீகமான வர்ணணைகளில் உச்ச நிலையை அடைகின்றன என்று அறிஞர்கள் முடிவு செய்துள்ளனர்.
பதம் 1.5.23
அஹம் புராதீத—பவே’பவம் முனே
தாஸ்யாஸ் து கஸ்யாஸ்சன வேத-வாதினாம்
நிரூபிதோ பாலக ஏவ யோகினாம்
சுஸ்ரூஷணே ப்ராவ்ருஷி நிர்விவிக்ஷதாம்
அஹம்—நான்; புரா-முன்பு; அதீத-பவே—முந்திய யுகத்தில்; அபவம்—ஆனேன்; முனே—முனிவரே; தாஸ்யா:—வேலைக்காரியின்; து—ஆனால்; கஸ்யாஸ்சன—யாரோவொரு; வேத-வாதினாம்:—வேதாந்தத்தைப் பின்பற்றுபவர்களின்; நிரூபித:—ஈடுபட்டிருந்த; பாலக—தொண்டு புரியும் சிறுவன்; ஏவ—மட்டுமே; யோகினாம்— பக்தர்களின்; சுஸ்ரூஷணே—தொண்டில்; ப்ராவ்ருஷி—நான்கு மாத மழைக்காலத்தின் போது; நிர்விவிக்ஷதாம்—ஒன்றாக வாழும்.
முனிவரே, முந்திய யுகத்தில் வேதாந்த கொள்கைகளைப் பின்பற்றும் பிராமணர்களின் தொண்டில் ஈடுபட்டிருந்த, யாரோ ஒரு வேலைக்காரியின் மகனாக நான் பிறந்திருந்தேன். நான்கு மாத மழைக்காலத்தில் அவர்கள் ஒன்றாக வாழ்ந்து கொண்டிருக்கும் போது, அவர்களுடைய சொந்த சேவையில் நான் ஈடுபட்டிருந்தேன்.
பதம் 1.5.24
தே மய் அபேதாகில—சாபலே ‘ர்பகே
தாந்தே ‘த்ருத—க்ரீடனகே ‘னுவர்தினி
சக்ரு: க்ருபாம் யத்யபி துல்ய-தர்சனா:
சுஸ்ரூஷமாணே முனயோ ‘ல்ப-பாஷிணி
தே—அவர்கள்; மயி—என்னை; அபேத—கடந்து செல்லாததால்; அகில—எல்லா வகையான; சாபலே—விருப்பங்களையும்; அர்பகே—ஒரு சிறுவனுக்கு; தாந்தே—புலன்களைக் கட்டுப்படுத்தியதால்; அத்ருத-க்ரீடனகே—விளையாட்டுகளில் பழக்கப்படாமல்; அனுவர்தினி—அடக்கமாக; சக்ரு:—அளித்தனர்; க்ருபாம்—அகாரணமான கருணையை; யத்யபி—எனினும்; துல்ய—தர்சனா:—இயற்கையாகவே பாரபட்சமில்லாமல்; சுஸ்ரூஷமாணே—விசுவாசம் உள்ளவருக்கு; முனய:—வேதாந்தத்தைப் பின்பற்றும் முனிவர்கள்; அல்ப-பாஷிணி:—தேவைக்கு அதிகமாக பேசாதவர்.
அவர்கள் இயல்பாகவே பாரபட்சம் இல்லாதவர்கள் என்ற போதிலும், வேதாந்தத்தைப் பின்பற்றுபவர்களான அவர்கள் தங்களது தனிப்பெரும் கருணையால் என்னை வாழ்த்தினார். என்னைப் பொறுத்தவரை, நான் சிறுவனாக இருந்தும், விளையாட்டில் பற்றில்லாதவனாகவும், புலனடக்கம் உள்ளவனாகவும், பணிவுள்ளவனாகவும் இருந்தேன். மேலும் தேவைக்கதிகமாக நான் பேசவுமில்லை.
பதம் 1.5.25
உச்சிஷ்ட-லேபான் அனுமோதிதோ த்விஜை:
ஸக்ருத் ஸ்ம புஞ்ஜே தத்—அபாஸ்த—கில்பிஷ:
ஏவம் ப்ரவ்ருத்தஸ்ய விசுத்த-சேதஸஸ்
தத்—தர்ம ஏவாத்ம—ருசி: ப்ரஜாயதே
உச்சிஷ்ட—லேபான்—மீதப்பட்ட உணவு; அனுமோதித:—அனுமதிக்கப்பட்டு; த்விஜை:—வேதாந்த பிராமணர்களால்; ஸக்ருத்—முன்னொரு காலத்தில்; ஸ்ம—கடந்த காலத்தில்; புஞ்சே—உண்டேன்; தத்—அச்செயலால்; அபாஸ்த—அழிக்கப்பட்டன; கில்பிஷ:— எல்லா பாவங்களும்; ஏவம்— இவ்வறாக; ப்ரவ்ருத்தஸ்ய—ஈடுபட்டு; விசுத்த—சேதஸ:—தூய்மையடைந்த மனதுடைய ஒருவரின்; தத்—அந்த குறிப்பிட்ட; தர்ம—இயற்கை; ஏவ—நிச்சயமாக; ஆத்ம—ருசி:—ஆன்மீக கவர்ச்சி; ப்ரஜாயதே—வெளிப்பட்டது.
அவர்களது அனுமதியுடன், ஒரு முறைதான் அவர்கள் உண்டு மிஞ்சிய உணவை நான் உண்டேன். அதனால் என்னுடைய எல்லா பாவங்களும் உடனடியாக களையப்பட்டு என் இதயம் தூய்மை அடைந்தது. உடனே அவர்களது வாழ்வில் எனக்கு கவர்ச்சி ஏற்பட்டது.
பதம் 1.5.26
தத்ரான் வஹம் க்ருஷ்ண-கதா: ப்ரகாயதாம்
அநுக்ரஹேணா ஸ்ருணவம் மனோஹரா:
தா: ஸ்ரத்தயா மே ‘நுபதம் விஸ்ருண்வத:
ப்ரியஸ்ரவஸி அங்க மமாபவத் ருசி:
தத்ர—அதன்பிறகு; அனு—தினந்தோறும்; அஹம்—நான்; க்ருஷ்ண-கதா:—பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் செயல்களைப் பற்றிய வர்ணணை; ப்ரகாயதாம்—விவரிக்கும்; அநுக்ரஹேண—அனுக்கிரகத்தால்; அஸ்ருணவம்—செவி சாய்த்து; மன-ஹரா:-கவரக்கூடிய; தா:- அந்த; ஸ்ரத்தயா—மரியாதையுடன்; மே—எனக்கு; அனுபதம்-ஒவ்வொரு அடியிலும்; விஸ்ருண்வத:-கவனமாகக் கேட்டு; ப்ரியஸ்ரவஸி—பரம புருஷரின்; அங்க—வியாசதேவரே; மம—எனது; அபவத்-அது அப்படி ஆயிற்று; ருசி:— சுவை.
வியாசதேவரே, அச்சிறந்த வேதாந்திகளின் சகவாசத்தாலும், கருணையாலும், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் வசீகரமான லீலைகளைப் பற்றிய அவர்களது உரையாடலை என்னால் கேட்க முடிந்தது. இவ்வாறு கவனமாகக் கேட்டதனால், பரம புருஷரைப் பற்றி கேட்பதிலுள்ள எனது சுவை ஒவ்வொரு அடியிலும் அதிகரித்தது.
பதம் 1.5.27
தஸ்மிம்ஸ் ததா லப்த—ருசேர் மஹா—மதே
ப்ரியஸ்ரவஸி அஸ்கலிதா மதிர் மம
யயாஹம் ஏதத் ஸத்—அஸத் ஸ்வ—மாயயா
பஸ்யே மயி ப்ரஹ்மணி கல்பிதம் பரே
தஸ்மின்—அது அவ்வாறிருக்க; ததா—அப்போது; லப்த—பெற்றேன்; ருசே:—சுவையை; மஹாமதே—மாமுனிவரே; ப்ரியஸ்ரவஸி—பகவான் மீது; அஸ்கலிதா மதி—இடையறாத கவனம்; மம-எனது; யயா-எதனால்; அஹம்—நான்; ஏதத்— இவ்வெல்லா; ஸத்-அஸத்—ஸ்தூல மற்றும் சூட்சுமமான; ஸ்வமாயயா—ஒருவரது சொந்த அறியாமை; பஸ்யே—காண; மயி—என்னுள்; ப்ரஹ்மணி—பரம புருஷர்; கல்பிதம்— ஏற்றுக் கொள்ளப்பட்டது; பரே-திவ்ய நிலையில்.
மாமுனிவரே, பரம புருஷ பகவானிடம் உள்ள சுவையை நான் பெற்றவுடனேயே, பகவானைப் பற்றி கேட்பதில் என் கவனம் சிதறாமல் இருந்தது. மேலும் பகவானும், நானும் ஆன்மீகமானவர்கள் என்பதால், என்னுடைய சுவை வளர வளர, அறியாமையால்தான் நான் ஸ்தூல மற்றும் சூட்சுமத் திரைகளை உண்மையானவையாக ஏற்றுக் கொண்டிருந்தேன் என்பதை என்னால் உணர முடிந்தது.
பதம் 1.5.28
இத்தம் சரத்-ப்ராவ்ருஷிகாவ் ருதூ ஹரேர்
விஸ்ருண்வதோ மே ‘நுஸவம் யசோ ‘மலம்
ஸங்கீர்த்யமானம் முனிபிர் மஹாத்மபிர்
பக்தி: ப்ரவ்ருத்தாத்ம—ரஜஸ் –தமோ பஹா
இத்தம்—இவ்வாறாக; சரத்—இலையுதிர்காலம்; ப்ராவ்ருஷிகௌ—மழைக்காலம்; ருதூ—இரு காலங்கள்; ஹரே—பகவானின்; விஸ்ருண்வத:—தொடர்ச்சியாகக் கேட்ட; மே—நான்; அனுஸவம்— இடைவிடாமல்; யஸ: அமலம்—கலப்பற்ற பெருமைகளை; ஸங்கீர்த்யமானம்—பாடப்பட்ட; முனிபி:—பெரும் முனிவர்கள்; மஹா—ஆத்மபி:—மகாத்மாக்களான; பக்தி:—பக்தித் தொண்டு; ப்ரவ்ருத்தா— ஓடத் துவங்கியது; ஆத்ம—ஜீவராசி; ரஜ:—தீவிர குணம்; தம:— அறியாமைக் குணம்; உபஹா—மறைகின்றது.
இவ்வாறாக மழைக்காலத்திலும், இலையுதிர்காலத்திலும் மகாத்மாக்களான இம்முனிவர்கள் பகவான் ஹரியின் கலப்பற்ற பெருமைகளை இடைவிடாமல் பாடுவதைக் கேட்கும் வாய்ப்பை நான் பெற்றேன். இதன் விளைவாக எனது பக்தித் தொண்டு துவங்கியதும், ரஜோ மற்றும் தமோ குணங்களின் திரைகள் மறைந்தன.
பதம் 1.5.29
தஸ்யைவம் மே ‘நுரக்தஸ்ய ப்ரஸ்ரிதஸ்ய ஹதைனஸ:
ஸ்ரத்ததானஸ்ய பாலஸ்ய தாந்தஸ்யானுசரஸ்ய ச
தஸ்ய—அவருடைய; ஏவம்—இவ்வாறு; மே—எனது; அநுரக்தஸ்ய—அவர்களிடம் அன்பு கொண்டிருந்தேன்; ப்ரஸ்ரிதஸ்ய—அடக்கத்துடன்; ஹத—அதிலிருந்து விடுபட்டு; ஏனஸ:— பாவங்கள்; ஸ்ரத்ததானஸ்ய—நம்பிக்கை கொண்டவனின்; பாலஸ்ய—சிறுவனின்; தாந்தஸ்ய— அடக்கினேன்; அனுசரஸ்ய—உபதேசங்களை உறுதியாகப் பின்பற்றி; ச—மேலும்.
அந்த முனிவர்களிடம் நான் மிகவும் அன்பு கொண்டிருந்தேன். நடத்தையில் நான் சாதுவாக இருந்தேன். அவர்களது தொண்டில் எனது பாவங்கள் அனைத்தும் வேரறுக்கப்பட்டன. அவர்களிடம் நான் இதயபூர்வமான நம்பிக்கை கொண்டிருந்தேன். எனது புலன்களை நான் கட்டுப்படுத்தியதுடன், உடலாலும், மனதாலும் அவர்களை நான் உறுதியாகப் பின்பற்றினேன்.
பதம் 1.5.30
ஞானம் குஹ்யதமம் யத் தத் ஸாக்ஷாத் பகவதோதிதம்
அன்வவோசன் கமிஷ்யந்த: க்ருபயா தீன-வத்ஸலா:
ஞானம்—ஞானம்; குஹ்யதமம்—மிக இரகசியமான; யத்—என்ன இருக்கிறது; தத்—அந்த; ஸாக்ஷாத்—நேரடியாக; பகவதா-உதிதம்:— பகவானாலேயே கூறப்பட்ட; அன்வவோசன்—உபதேசம் அளித்தனர்; கமிஷ்யந்த:-அங்கிருந்து புறப்பட்டபோது; க்ருபயா—அகாரணமான கருணையால்; தீன-வத்ஸலா—ஏழை எளியவர்களிடம் மிகவும் அன்பு கொண்டவர்கள்.
நிராதரவான ஆத்மாக்களிடம் மிகவும் அன்பு கொண்டிருந்த அந்த பக்தி வேதாந்திகள் புறப்பட்டுச் செல்லும்போது, பரம புருஷராலேயே உபதேசிக்கப்பட்டதான மிகவும் இரகசியமான அந்த விஷயத்தைப் பற்றி எனக்கு உபதேசித்தனர்.
பதம் 1.5.31
யேனைவாஹம் பகவதோ வாஸுதேவஸ்ய வேதஸ:
மாயானுபாவம் அவிதம் யேன கச்சந்தி தத்—பதம்
யேன—எதனால்; ஏவ—நிச்சயமாக; அஹம்-நான்; பகவத:—பரம புருஷ பகவானின்; வாஸுதேவஸ்ய —பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின்; வேதஸ:—பரம சிருஷ்டிக் கர்த்தாவின்; மாயா—சக்தி; அனுபாவம் — ஆதிக்கத்தை; அவிதம்—சுலபமாகப் புரிந்து கொண்டேன்; யேன— எதனால்; கச்சந்தி—அவர்கள் செல்கின்றனர்; தத்-பதம்:—பகவானின் தாமரைப் பாதங்களை நோக்கி.
அந்த இரகசியமான அறிவினால், அனைத்தையும் படைத்து, காத்து, அழிப்பவரான பகவான் ஸ்ரீ கிருஷ்ணருடைய சக்தியின் ஆதிக்கத்தை என்னால் தெளிவாகப் புரிந்துகொள்ள முடிந்தது. அதை அறிவதால், அவரிடம் திரும்பிச் சென்று, அவரை நேருக்கு நேராக ஒருவரால் சந்திக்க முடியும்.
பதம் 1.5.32
ஏதத் ஸம்ஸூசிதம் ப்ரஹ்மம்ஸ் தாப—த்ரய—சிகித்ஸிதம்
யத் ஈஸ்வரே பகவதி கர்ம ப்ரஹ்மணி பாவிதம்
ஏதத்—இந்த அளவு; ஸம்ஸூசிதம்—கற்றறிந்தவர்களால் முடிவு செய்யப்பட்டுள்ளது; ப்ரஹ்மன் — பிராமணரான வியாசரே; தாப-த்ரய:—மூவகைத் துன்பங்கள்; சிகித்ஸிதம்—குணப்படுத்தும் முறைகள்; யத்—என்ன; ஈஸ்வரே—பரம ஆளுநர்; பகவதி—முழுமுதற் கடவுளுக்கு; கர்ம-ஒருவருக்கு விதிக்கப்பட்ட செயல்கள்; ப்ரஹ்மணி—மிகச்சிறந்தவரிடம்; பாவிதம்— அர்ப்பணிக்கப்பட்ட.
பிராமணரான வியாசதேவரே, ஒருவரது செயல்களை பரம புருஷரான முழுமுதற் கடவுளுக்கு (ஸ்ரீகிருஷ்ணர்) அர்ப்பணிப்பதுதான் எல்லா தொல்லைகளையும், துன்பங்களையும் அகற்றுவதற்கான மிகச்சிறந்த நோய் தீர்க்கும் முறை என்று கற்றவர்களால் முடிவு செய்யப்பட்டுள்ளது.
பதம் 1.5.33
ஆமயோ யஸ் ச பூதானாம் ஜாயதே யேன ஸுவ்ரத
தத் ஏவ ஹி ஆமயம் த்ரவ்யம் ந புனாதி சிகித்ஸிதம்
ஆமய:- நோய்களையும்; ய: ச—எத்தகைய; பூதானாம்— ஜீவராசியின்; ஜாயதே—சாத்தியம் ஆகின்றது; யேன-செயலால்; ஸுவ்ரத—நல்ல ஆத்மாவே; தத்—அந்த; ஏவ—அதே; ஹி—நிச்சயமாக; ஆமயம் – நோயை; த்ரவ்யம்—பொருள்; ந—இல்லையா; புனாதி— குணப்படுத்துவது; சிகித்ஸிதம்— சிகிச்சை செய்யப்படும்.
நல்லாத்மாவே, மருத்துவ சிகிச்சைக்கேற்ப அளிக்கப்பட்ட ஒரு பொருள், அதே பொருளால் விளைவிக்கப்பட்ட ஒரு நோய்க்கு மருந்தாக இருப்பதில்லையா?
பதம் 1.5.34
ஏவம் ந்ருணாம் க்ரியா-யோகா: ஸர்வே ஸம்ஸ்ருதி—ஹேதவ:
த ஏவாத்ம—விநாசாய கல்பந்தே கல்பிதா: பரே
ஏவம்—இவ்வாறாக; ந்ருணாம்—மனிதனின்; க்ரியா-யோகா:—எல்லாச் செயல்களும்; ஸர்வே—அனைத்தும்; ஸ்மஸ்ருதி—ஜட வாழ்வு; ஹேதவ:—செய்கின்றது; தே—அந்த; ஏவ—நிச்சயமாக; ஆத்ம—செயலெனும் மரத்தை; விநாசாய—கொன்று; கல்பந்தே—தகுதி பெறுகின்றது; கல்பிதா:—அர்ப்பணிக்கப்பட்ட; பரே- உன்னதமானவரிடம்.
இவ்வாறாக, ஒரு மனிதனின் எல்லாச் செயல்களும் பகவானின் தொண்டிற்காக அர்ப்பணிக்கப்படும் போது, நிரந்தரமான பந்தத்தை விளைவித்த அதே செயல்களே, செயல் எனும் மரத்தை அழித்துவிடக்கூடியவையாக மாறுகின்றன.
பதம் 1.5.35
யத் அத்ர க்ரியதே கர்ம பகவத்—பரிதோஷணம்
ஞானம் யத் தத் அதீனம் ஹி பக்தி—யோக-ஸமன்விதம்
யத்—எதுவாகிலும்; அத்ர—இவ்வாழ்வில் அல்லது உலகில்; க்ரியதே— செய்யப்படும்; கர்ம-செயல்; பகவத்—பரம புருஷ பகவானுக்கு; பரிதோஷணம்—திருப்திக்காக; ஞானம்—அறிவு; யத் தத்—அவ்வாறு அழைக்கப்படுவது; அதீனம்—சார்ந்துள்ள; ஹி — நிச்சயமாக; பக்தி-யோக:—பக்தி ரசமான; ஸமன்விதம்—பக்தி யோகத்துடன் பொருந்தும்படி இணைக்கப்படுகிறது.
இங்கு, இப்பிறவியில், பகவானின் திருப்திக்காக மேற்கொள்ளப்படும் எச்செயலும் பக்தி யோகம், அல்லது பகவானின் உன்னத அன்புத் தொண்டு என அழைக்கப்படுகிறது. மேலும், அறிவு என்று அழைக்கப்படுவது இந்த பக்தி யோகத்துடன் இணை பிரியாததாக ஆகிவிடுகின்றது.
பதம் 1.5.36
குர்வாணா யத்ர கர்மாணி பகவச்—சிக்ஷயாஸக்ருத்
க்ருணந்தி குண-நாமானி க்ருஷ்ணஸ்யானுஸ்மரந்தி ச
குர்வாணா—செய்யும்பொழுது; யத்ர—அதனால்; கர்மாணி—கடமைகளை; பகவத்—பரம புருஷ பகவான்; சிக்ஷயா—அவரது விருப்பப்படி; அஸக்ருத்—இடைவிடாமல்; க்ருணந்தி— எடுத்துக்கொள்கிறார்; குண—குணங்களை; நாமானி—நாமங்களை; க்ருஷ்ணஸ்ய—கிருஷ்ணரின்; அனுஸ்மரந்தி—இடைவிடாமல் நினைத்துக்கொண்டு இருக்கிறார்; ச—மேலும்.
பரம புருஷ பகவானாகிய ஸ்ரீ கிருஷ்ணரின் உத்தரவுக்கேற்ப கடமைகளைச் செய்யும் வேளையில் ஒருவர் பகவானையும், அவரது நாமங்களையும், குணங்களையும் இடைவிடாமல் நினைத்துக் கொண்டு இருக்கிறார்.
பதம் 1.5.37
ஓம் நமோ பகவதே துப்யம் வாஸுதேவாய தீமஹி
ப்ரத்யும்னாயானிருத்தாய நம: ஸங்கர்ஷணாய ச
ஓம்—பகவானின் திவ்யமான பெருமையைப் பாடுவதற்குரிய அறிகுறி; நம:- பகவானை வணங்குதல்; பகவதே—பரம புருஷ பகவானை; துப்யம்—தங்களை; வாஸுதேவாய—வாசுதேவரின் புதல்வரான பகவானை; தீமஹி—பிரதியும்னய, அநிருத்தாய மற்றும் சங்கர்ஷணாய—வாசுதேவனின் எல்லா பூரண விரிவங்கங்களையும் நாம் போற்றுவோம்; நம:—பணிவான வணக்கங்கள்; ச—மேலும்.
பகவானின் பூரண விரிவங்கங்களாகிய பிரதியும்னர், அநிருத்தர் மற்றும் சங்கர்ஷணர் ஆகியோரின் பெருமைகளுடன் வாசுதேவரின் பெருமைகளையும் நாம் பாடுவோம்.
பதம் 1.5.38
இதி மூர்தி—அபிதானேன மந்த்ர—மூர்திம் அமூர்திகம்
யஜதே யஜ்ஞ—புருஷம் ஸ ஸம்யக் தர்சன: புமான்
இதி-இவ்வாறாக; மூர்தி—பிரதிநிதித்துவம்; அபிதானேன—ஒலியில்; மந்தரமூர்திம்—திவ்யமான ஒலி வடிவிலுள்ள பிரதிநிதித்துவம்; அமூர்திகம்—பௌதிக உருவம் இல்லாதவரான பகவான்; யஜதே—வழிபடும்; யஜ்ஞ—விஷ்ணுவை; புருஷம்—பரம புருஷ பகவான்; ஸ—அவர் மட்டுமே; ஸம்யக்-பூரணமாக; தர்சன:- கண்டுள்ள ஒருவர்; புமான்—ஒருவர்.
இவ்வாறாக, பௌதிக உருவம் இல்லாத பரம புருஷ பகவானாகிய விஷ்ணுவை, திவ்யமான ஒலி வடிவில் வழிபடுபவர்தான் உண்மையான ஞானியாவார்.
பதம் 1.5.39
இமம் ஸ்வ-நிகமம் ப்ரஹ்மன் அவேத்ய மத்—அனுஷ்டிதம்
அதான் மே ஞானம் ஐஸ்வர்யம் ஸ்வஸ்மின் பாவம் ச கேசவ:
இமம்—இவ்வாறாக; ஸ்வநிகமம்—வேதங்களில் உள்ள பரம புருஷ பகவானைப் பற்றிய இரகசியமான அறிவு; ப்ரஹ்மன்—பிராமணரே (வியாசதேவர்); அவேத்ய— அதை நன்கறிந்து; மத்—என்னால்; அனுஷ்டிதம்;—நிறைவேற்றப்பட்டது; அதாத்—எனக்கு அளிக்கப்பட்டது; மே- எனக்கு; ஞானம்—உன்னத அறிவு; ஐஸ்வர்யம்-ஐஸ்வர்யம்; ஸ்வஸ்மின்—சொந்த; பாவம் — நெருக்கமான அன்பும் பற்றும்; ச-மேலும்; கேசவ:-பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்.
பிராமணரே, வேதங்களின் அந்தரங்கப் பகுதிகளில் கூறப்படுவதுபோல், முதலில் எனக்கு பகவானைப் பற்றிய உன்னத அறிவு பரம புருஷராகிய ஸ்ரீ கிருஷ்ணரால் புகட்டப்பட்டது. பிறகு ஆன்மீக ஐஸ்வர்யங்களும், அதன் பிறகு அந்தரங்கமான அன்புத் தொண்டும் அவரால் அளிக்கப்பட்டன.
பதம் 1.5.40
த்வம் அபி அதப்ர-ஸ்ருத விஸ்ருதம் விபோ:
ஸமாப்யதே யேன விதாம் புபுத்ஸிதம்
ப்ராக்யாஹி துஹ்கைர் முஹுர் அர்திதாத்மனாம்
ஸங்க்லேச-நிர்வாணம் உசந்தி நான்யதா
த்வம்—நல்லாத்மாவான நீங்கள்; அபி—மேலும்; அதப்ர—பரந்த; ஸ்ருத – வேத இலக்கியங்கள்; விஸ்ருதம்—கேட்டும் இருக்கிறீர்; விபோ:— சர்வ வல்லமையுள்ளவரின்; ஸமாப்யதே- திருப்தியடைந்த; யேன – எதனால்; விதாம்- அறிஞர்களின்; புபுத்ஸிதம்—எப்பொழுதும் உன்னத அறிவைக் கற்றறிய விரும்புபவர்கள்; ப்ராக்யாஹி—விளக்குவீராக; துஹ்கை:—துன்பங்களால்; முஹுஹ்—எப்பொழுதும்; அர்தித-ஆத்மனாம்—துன்புறும் பாமர மக்கள்; ஸங்க்லேச— துன்பங்கள்; நிர்வாணம்—குறைத்தல்; உசந்தி ந — அதிலிருந்து வெளியேற முடியாது; அன்யதா – மற்ற வழிகளால்.
ஆகவே, தயவுசெய்து, உமது பரந்த வேத அறிவினால் நீர் கற்றறிந்த, சர்வ வல்லமையுள்ள பகவானின் செயல்களைப் பற்றி விளக்குவீராக. ஏனெனில் அது பேரறிஞர்களின் விருப்பங்களை திருப்திப்படுத்தும். அதே சமயம், எப்பொழுதும் கடுமையான வேதனைகளால் துன்புறும் பாமர மக்களின் துன்பங்களையும் குறைத்துவிடும். உண்மையில், இத்தகைய துன்பங்களில் இருந்து வெளியேறுவதற்கு வேறு வழியில்லை.
ஸ்ரீமத் பாகவதம், முதல் காண்டத்தின் “வியாசருக்கு ஸ்ரீமத் பாகவதத்தின் மீதான நாரதரின் உபதேசங்கள்” எனும் தலைப்பைக் கொண்ட, ஐந்தாம் அத்தியாயத்திற்கான பக்திவேதாந்தப் பொருளுரைகள் இவ்வாறு நிறைவு பெறுகின்றன.