பதம் 1.4.1 : இவ்வாறாக, நீடித்த யாகத்தில் ஈடுபட்டிருந்த முனிவருக்கெல்லாம் வயது முதிர்ந்த தலைவராக இருந்த சௌனக முனி, சூத கோஸ்வாமி பேசியதைக் கேட்டு, அவரைப் பின்வருமாறு பாராட்டிப் பேசினார்.
பதம் 1.4.2 : சௌனகர் கூறினார்; சூத கோஸ்வாமியே, பேச்சாளர்களில் தாங்களே பேரதிர்ஷ்டம் உடையவரும், மரியாதைக்கு உரியவருமாவீர். சக்திமிக்க முனி சிரேஷ்டராகிய சுகதேவ கோஸ்வாமியால் பேசப்பட்ட ஸ்ரீமத் பாகவதத்தின் புண்ணியச் செய்தியை தயவுசெய்து கூற வேண்டுகிறோம்.
பதம் 1.4.3 : எப்போது, எங்கு இது முதலில் ஆரம்பமானது? இது ஏன் இயற்றப்பட்டது? இந்த இலக்கியத்தைத் தொகுப்பதற்கான ஊக்கம் கிருஷ்ண த்வைபாயன வியாசருக்கு எங்கிருந்து கிடைத்தது?
பதம் 1.4.4 : மிகச்சிறந்த பக்தரான அவரது (வியாசதேவரின்) புத்திரர், சமநிலையுடைய ஓர் அத்வைதியாவார். அவரது மனம் எப்பொழுதும் அத்வைதத்திலேயே நிலைத்திருந்தது. அவர் பௌதிக செயல்களுக்கு மேற்பட்டவராக இருந்தார். ஆனால் புற அறிமுகம் இல்லாததால், அவர் அறியாமையில் உள்ளவரைப் போல் காணப்பட்டார்.
பதம் 1.4.5 : வியாசதேவர் தமது புதல்வரை பின்தொடரும்போது அவர் ஆடை அணிந்திருந்தபோதிலும், ஆடையின்றி நீராடிக் கொண்டிருந்த அழகிய இள மங்கைகள் துணியால் தங்கள் உடல்களை மறைத்துக் கொண்டனர். ஆனால் அவரது புதல்வர் கடந்து செல்லும் போது அவர்கள் அப்படிச் செய்யவில்லை. முனிவர் இதைப் பற்றி விசாரித்தார். அதற்கு அந்த இளம் பெண்கள், அவரது புத்திரன் தூய்மையடைந்த நிலையில் இருந்ததால், தங்களைக் காணும் போது ஆண், பெண் வேறுபாட்டை அவர் உணரவில்லை என்றும், ஆனால் முனிவரோ அத்தகைய வேறுபாடுகளைக் கொண்டிருந்தார் என்றும் கூறினர்.
பதம் 1.4.6 : பித்தனைப் போலவும், ஊமையாகவும், வளர்ச்சி குன்றியவரைப் போலவும் தோன்றிய அவர் (வியாசரின் புதல்வராகிய ஸ்ரீல சுகதேவர்) குரு, ஜாங்கள பிரதேசங்களில் சுற்றித்திரிந்தபின், ஹஸ்தினாபுர (இப்போதுள்ள டெல்லி) நகரத்தினுள் பிரவேசித்தபோது, எந்த விதத்தில் மக்கள் அவரை அடையாளம் கண்டனர்?
பதம் 1.4.7 : வேதங்களின் சாரமான உன்னதமான இந்த (பாகவத) சம்வாதம், மாமுனிவரான சுகதேவருக்கும், பரீட்சித்து மகாராஜனுக்கும் இடையில் எப்படி ஏற்பட்டது?
பதம் 1.4.8 : அவர் (சுகதேவ கோஸ்வாமி), பசு கறக்கப்படும் கால அளவுக்கு இல்லறவாசி ஒருவரின் வீட்டு வாயிலில் காத்திருக்கும் பழக்கம் உள்ளவராவார். இவ்வாறு அவர் செய்தது கூட அந்த வீட்டை புனிதப்படுத்துவதற்குத்தான்.
பதம் 1.4.9 : பரீட்சித்து மகாராஜன் பகவானின் முதல்தரமான பக்தன் என்றும், அவரது பிறப்பும், செயலும் அற்புதமானவை என்றும், சொல்லப்படுகிறது. தயவுசெய்து அவரைப் பற்றி எங்களுக்குச் சொல்லுங்கள்.
பதம் 1.4.10 : அவர் பெரும் சக்கரவர்த்தியாக இருந்ததுடன், அவரது இராஜ்ஜியத்தின் எல்லாச் செல்வங்களையும் தன்னுடையதாகவும் பெற்றிருந்தார். பாண்டு வம்சத்தின் கௌரவத்தை அதிகரிக்கும் அளவுக்கு அவர் மிக உயர்ந்தவராகவும் இருந்தார். அவர் ஏன் அனைத்தையும் துறந்து கங்கைக் கரையில் இறக்கும்வரை உபவாசம் இருந்தார்?
பதம் 1.4.11 : அவர் மிகச்சிறந்த சக்கரவர்த்தி என்பதால் அவரது எதிரிகளும் கூட முன்வந்து, அவரது பாதங்களில் வணங்கி, தங்களது சொந்த நன்மைக்காக தங்களது செல்வங்களை எல்லாம் அவரிடம் ஒப்படைத்தனர். அவர் இளமையும், பலமும் மிக்கவராகவும், அளவற்ற ஐஸ்வர்யங்களைப் பெற்றிருப்பவராகவும் இருந்தார். அவர் ஏன் உயிரையும் மற்றவைகளையும் துறக்க விரும்பினார்?
பதம் 1.4.12 : முழுமுதற் கடவுளிடம் தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்கள், மற்றவர்களின் நலம், முன்னேற்றம் மற்றும் மகிழ்ச்சி ஆகியவற்றுக்காகவே வாழ்கின்றனர். வேறெந்த சுய நலத்திற்காகவும் அவர்கள் வாழ்வதில்லை. எனவே சக்கரவர்த்தி (பரீட்சித்து) பெளதிக உடமையின் மீதுள்ள எல்லா பற்றிலிருந்தும் விடுபட்டவராக இருந்தபோதிலும், பிறருக்கு அடைக்கலமாக விளங்கிய அவரது உடலை அவர் எப்படி துறக்கக்கூடும்?
பதம் 1.4.13 : வேதங்களில் உள்ள சில விஷயங்களைத் தவிர மற்றெல்லா விஷயங்களின் பொருளையும் அறிவதில் தாங்கள் நிபுணர் என்பதை நாங்கள் அறிவோம். ஆகவே உங்களிடம் இப்போது நாங்கள் கேட்ட எல்லா கேள்விகளுக்கும் உரிய விடைகளை உங்களால் தெளிவாக விளக்கிக் கூற முடியும்.
பதம் 1.4.14 : சூத கோஸ்வாமி கூறினார்: இரண்டாவது யுகமும், மூன்றாவது யுகமும் முன்னும் பின்னுமாகத் தோன்றிய வேளையில், வஸுவின் புதல்வியாகிய சத்தியவதியின் கருவில், பராசரரின் புதல்வராக மாமுனிவர் (வியாசதேவர்) அவதரித்தார்.
பதம் 1.4.15 : ஒரு முறை அவர் (வியாசதேவர்) சூரிய உதயத்தின் போது, சரஸ்வதி நதியில் தமது சந்தியா வந்தனத்தை முடித்து விட்டு, மனதை ஒருமுகப்படுத்துவதற்காக தனிமையாக அமர்ந்தார்.
பதம் 1.4.16 : மாமுனிவரான வியாசதேவர் யுகக் கடமைகளில் முரண்பாடுகளைக் கண்டார். வெவ்வேறு யுகங்களில் நிகழும் இது, காலப்போக்கில் கண்ணுக்குப் புலப்படாத சக்திகளால் பூமியில் நிகழ்கின்றது.
பதங்கள் 1.4.17 – 1.4.18 :யுகத்தின் தூண்டுதலால் பௌதிகமான அனைத்தும் சீரழியப் போவதைப் பூரண ஞானம் கொண்ட அந்த மாமுனிவரால், அவரது ஞானக் கண்களைக் கொண்டு காண முடிந்தது. பொதுவாக மக்களுடைய ஆயுள் குறைந்துவிடுவதுடன், நற்குணத்தின் பற்றாக்குறையால் அவர்கள் பொறுமை இழந்தவர்களாகவும் இருப்பார்கள் என்பதையும் கூட அவரால் காணமுடிந்தது. இவ்வாறாக எல்லா வர்ணங்களிலும் ஆஷ்ரமங்களிலும் உள்ள எல்லோருடைய நன்மைக்காகவும் அவர் ஆழ்ந்த சிந்தனையில் ஈடுபட்டார்.
பதம் 1.4.19 : வேதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள யாகங்கள்தான் மக்களின் அலுவல்களை தூய்மைப்படுத்துவதற்கு ஏற்ற வழி என்பதை அவர் கண்டார். மேலும் இம்முறையை எளியதாக்குவதற்கும், மக்களிடையே அதைப் பரப்புவதற்கும், வேதத்தை அவர் நான்காகப் பிரித்தார்.
பதம் 1.4.20 : வேதங்களின் நான்கு பிரிவுகள் தனித்தனியாக பிரிக்கப்பட்டன. ஆனால் புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள சரித்திர நிகழ்ச்சிகளும், உண்மையான கதைகளும் ஐந்தாவது வேதம் என்று அழைக்கப்படுகின்றன.
பதம் 1.4.21 : வேதங்கள் நான்கு பகுதிகளாக பிரிக்கப்பட்டபின், பைல ரிஷி ரிக் வேதத்தின் பேராசிரியரானார். ஜைமினி சாம வேதத்திற்கு பேராசிரியரானார். வைசம்பாயனர் மட்டும் யஜுர் வேதத்தினால் புகழப்படுவரானார்.
பதம் 1.4.22 : சுமந்து முனி எனப்படும் அங்கிரா முனிவர் ஆழ்ந்த பக்தியில் ஈடுபட்டிருந்தார். அவரிடம் அதர்வ வேதம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் எனது தந்தையான ரோமஹர்ஷணரிடம் புராணங்களும், சரித்திரக் குறிப்புகளும் ஒப்படைக்கப்பட்டன.
பதம் 1.4.23 : வேத வல்லுநர்களான இவர்கள் அனைவரும், வேதங்களை அவர்களது பல சீடர்களிடமும், சீடர்களின் சீடர்களிடமும், கொள்ளு சீடர்களிடமும் ஒப்படைத்தனர். இவ்வாறாக வேதங்களைப் பின்பற்றுபவர்களின் தனிப்பட்ட கிளைகள் உபயோகத்திற்கு வந்தன.
பதம் 1.4.24 : இவ்வாறாக, அறியாமையிலுள்ள பாமர மக்களிடம் பெரும் அனுதாபம் கொண்டவரும், சிறந்த முனிவருமான வியாசதேவர், குறைந்த அறிவு படைத்தவர்களால் புரிந்துகொள்ளும் வகையில் வேதங்களை தொகுத்தளித்தார்.
பதம் 1.4.25 : இரக்கமுள்ள மாமுனிவர், வாழ்வின் முடிவான இலட்சியத்தை அடைய இது மனிதனுக்கு உதவும் என்று எண்ணினார். இவ்வாறாக பெண்கள், தொழிலாளிகள் மற்றும் இருபிறப்பு எய்தியவர்களின் நண்பர்கள் ஆகியோருக்காக, மகாபாரதம் எனப்படும் மிகச்சிறந்த சரித்திர வரலாற்றை அவர் தொகுத்தார்.
பதம் 1.4.26 : இருபிறப்பை எய்திய பிராமணர்களே, அனைவருடைய நன்மைக்காகவும் உழைப்பதில் தம்மை அவர் ஈடுபடுத்திக் கொண்டபோதிலும், அவரது மனம் திருப்தி அடையவில்லை.
பதம் 1.4.27 : இவ்வாறாக, மனத்திருப்தி அடையாத முனிவர் உடனே சிந்திக்கத் துவங்கினார். மதத்தின் சாராம்சத்தை அவர் அறிந்திருந்ததால், தமக்குள் பின்வருமாறு சொல்லிக் கொண்டார்.
பதங்கள் 1.4.28 – 1.429 :வஞ்சனையின்றி என்னால் விரதங்கள் அனுஷ்டிக்கப்பட்டு, வேதங்களும், அக்னிகளும், குருமார்களும் பூஜிக்கப்பட்டு, அவர்களுடைய கட்டளைகளும் நிறைவேற்றப்பட்டன. மகாபாரதத்தை விளக்கியதன் மூலமாக சீடப்பரம்பரையின் கருத்தையும் நான் தெளிவுப்படுத்தியுள்ளேன். இதனால் பெண்களாலும் சூத்திரர்களாலும் மற்றவர்களாலும் (இருபிறப்பு எய்தியவர்களின் நண்பர்கள்) கூட மதத்திற்கான வழியைக் கண்டு கொள்ள முடியும்.
பதம் 1.4.30 : என்னிடம் வேதங்களுக்குத் தேவையான அனைத்தும் முழுமையாக இருந்தாலும் எனக்கு மனநிறைவு ஏற்படவில்லை.
பதம் 1.4.31 : பக்குவமடைந்த ஜீவன்களுக்கும், களங்கமற்றவரான பகவானுக்கும் பிரியமான பகவானின் பக்தித் தொண்டை நான் வலியுறுத்தாததே இதற்குக் காரணமாக இருக்கக்கூடும்.
பதம் 1.4.32 : ஏற்கனவே குறிப்பிட்டதுபோல், கிருஷ்ண த்வைபாயன வியாசர் தமது குறைகளை எண்ணி வருந்திக்கொண்டு இருக்கும்போது, சரஸ்வதி நதிக் கரையிலுள்ள அவரது குடிலுக்கு நாரதர் வந்து சேர்ந்தார்.
பதம் 1.4.33 : ஸ்ரீ நாரதரின் மங்களமான வருகையின் போது, ஸ்ரீல வியாசதேவர் மரியாதையுடன் எழுந்து நின்று, சிருஷ்டிகர்த்தாவான பிரம்ம தேவருக்கு அளிக்கப்படுவதற்கு இணையான பய பக்தியுடன் அவரை வழிபட்டார்.