அத்தியாயம் – 2
தெய்வீகமும் தெய்வீகத் தொண்டும்
பதம் 1.2.1
வ்யாஸ உவாச
இதி ஸம்ப்ரச்ன-ஸம்ஹருஷ்தோ விப்ராணாம் ரௌமஹர்ஷணி:
ப்ரதிபூஜ்ய வசஸ் தேஷாம் ப்ரவக்தும் உபசக்ரமே
வ்யாஸ உவாச-வியாசர் கூறினார்; இதி—இவ்வாறாக: ஸம்ப்ரச்ன — பக்குவமான விசாரணைகள்; ஸம்ஹ்ருஷ்த:—பூரண திருப்தியடைந்து; விப்ராணாம்—அங்குள்ள முனிவர்களின்; ரௌமஹர்ஷணி:- உக்ரஸ்ரவா எனும் பெயர் கொண்ட, ரோமஹர்ஷணரின் புதல்வர்; ப்ரதிபூஜ்ய—அவர்களுக்கு நன்றி கூறியபின்; வச:-வார்த்தைகள்; தேஷாம் — அவர்களுடைய; ப்ரவக்தும் — அவர்களிடம் பதில் கூற; உபசக்ரமே—முயன்றார்.
வியாசர் கூறினார் :ரோமஹர்ஷணரின் புதல்வரான உக்ரஸ்ரவர் (சூத கோஸ்வாமி), பிராமணர்களின் பக்குவமான கேள்விகளினால் முற்றிலும் திருப்தியடைந்து, அவர்களுக்கு நன்றி கூறி, பதிலளிக்க முற்பட்டார்.
பதம் 1.2.2
ஸூத உவாச
யம் ப்ரவ்ரஜந்தம் அனுபேதம் அபேத-க்ருத்யம்
த்வைபாயனோ விரஹ-காதர ஆஜுஹாவ
புத்ரேதி தன்-மயதயா தரவோ ‘பினே துஸ்
தம் ஸர்வ-பூத-ஹ்ருதயம் முனிம் ஆனதோ ‘ஸ்மி
ஸூத–சூதகோஸ்வாமி; உவாச—கூறினார்; யம்—யாரை; ப்ரவ்ரஜந்தம்—துறவு வாழ்வை ஏற்கச் செல்லும்பொழுது; அனுபேதம்—பூணூலால் புனிதப்படுத்தப்படாமல்; அபேத — சடங்குகளைப் பின் பற்றாமல்; க்ருத்யம்—விதிக்கப்பட்ட கடமைகள்; த்வைப்பாயன:—வியாசதேவர்; விரஹ—பிரிவு; காதர:—அதற்கு அஞ்சி: ஆஜுஹாவ—கதறினார்; புத்ர இதி—ஓ, என் மகனே; தத்-மயதயா—அதைப் போலவே லயித்துப்போன; தரவ:— மரங்களெல்லாம்; அபினேது:— எதிரொலித்தன; தம்—அவரிடம்; ஸர்வ—எல்லா; பூத—ஜீவராசிகளும்; ஹ்ருதயம்—இதயம்; முனிம்—முனிவருக்கு; ஆனத: அஸ்மி—வணக்கங்களை சமர்ப்பிக்கிறேன்.
ஸ்ரீல சூத கோஸ்வாமி கூறினார்: எல்லோருடைய இதயத்திற்குள்ளும் புகக்கூடியவரான அந்த மாமுனிவரிடம் (சுகதேவ கோஸ்வாமி) எனது பணிவான வணக்கங்களை நான் சமர்ப்பிக்கிறேன். உயர்ந்த வகுப்பினரால் அனுஷ்டிக்கப்படுவதான பூணூல் அணியும் சீர்திருத்தச் சடங்கை மேற்கொள்ளாமல், துறவு வாழ்வை (சந்நியாசம்) ஏற்பதற்காக வீட்டை விட்டு அவர் வெளியேறிய போது, அவரது தந்தையான வியாசதேவர், அவருடைய பிரிவுக்கு அஞ்சி, “மகனே!” என்று கதறினார். உண்மையில், அதேபோன்ற பிரிவுணர்ச்சிகளில் லயித்துப்போன மரங்கள் மட்டுமே துயரத்தில் ஆழ்ந்த தந்தைக்கு மறுமொழியாக எதிரொலித்தன.
பதம் 1.2.3
ய: ஸ்வானுபாவம் அகில-ச்ருதி-ஸாரம் ஏகம்
அத்யாத்ம-தீபம் அதிதிதீர்ஷதாம் தமோ ‘ந்தம்
ஸம்ஸாரிணாம் கருணயாஹ புராண-குஹ்யம்
தம் வ்யாஸ-ஸுனும் உபயாமிகுரும் முனீனாம்
ய:-யாரொருவர்; ஸ்வ-அனுபாவம்—சுயமாக கிரகித்துக் கொண்ட (அனுபவம் வாய்ந்த); அகில- எல்லா; ச்ருதி—வேதங்கள்; ஸாரம்— சாராம்சம்; ஏகம்—ஒரே ஒரு; அத்யாத்ம தெய்வீகமான; தீபம்—தீபம்; அதிதிதீர்ஷதாம்—வெற்றிகொள்ள விருப்பம் கொண்டு; தம:- அந்தம்- இருள் சூழ்ந்த பெளதிக வாழ்வு; ஸம்ஸாரிணாம்—பௌதிகவாதிகளின்; கருணயா— அகாரணமான கருணையால்; ஆஹ–கூறினார்; புராண — புராணங்கள்; குஹ்யம்—மிக இரகசியமான; தம்—அவருக்கு; வ்யாஸ–ஸுனும்— வியாசதேவரின் புதல்வருக்கு; உபயாமி—எனது வணக்கங்களை அளிக்கிறேன்; குரும்—ஆன்மீக குரு; முனீனாம்—சிறந்த முனிவர்களின்.
முனிவர்களுக்கெல்லாம் ஆன்மீக குருவும், வியாசதேவரின் புதல்வருமான அவர் (சுகர்) பௌதிக வாழ்வின் இருள் சூழ்ந்த பிரதேசங்களை கடக்கப் போராடும் ஆழ்ந்த பௌதிகவாதிகளின் மீதுள்ள பெருங்கருணையினால் வேத அறிவின் சாரமாகிய இந்த மிக இரகசியமான புராணத்தை சுயமாக கிரகித்து அனுபவித்த பின் பேசினார். அவரை நான் வணங்குகிறேன்.
பதம் 1.2.4
நாராயணம் நமஸ்க்ருத்ய நரம் சைவ நரோத்தமம்
தேவீம் ஸரஸ்வதீம் வ்யாஸம் ததோ ஜயம் உதீரயேத்
நாராயணம்—பரம புருஷர்; நம:-க்ருத்ய—பணிவான வணக்கங்களை சமர்ப்பித்தபின்; நரம் ச ஏவ—மற்றும் நாராயண ரிஷி; நர-உத்தமம்—தெய்வீகத்தன்மை கொண்ட மனிதர்; தேவீம்—தேவி; ஸரஸ்வதீம்— கல்விக்கு அதிபதியான சரஸ்வதி; வ்யாஸம்—வியாசதேவர்; தத:—அதன்பிறகு; ஜயம்—வெற்றிகொள்ள வேண்டிய அனைத்தும்; உதீரயேத்—அறிந்திருப்பீராக.
வெற்றி பெறுவதற்கு மிகச் சிறந்த வழியாகிய இந்த ஸ்ரீமத் பாகவதத்தைப் படிக்கும் முன்பாக, பரம புருஷராகிய நாராயணருக்கும் தெய்வீகத் தன்மை பெற்ற மனிதரான நர-நாராயண முனிவருக்கும், கல்விக்கு அதிபதியாகிய சரஸ்வதி தேவிக்கும் மற்றும் ஆசிரியராகிய ஸ்ரீல வியாசதேவருக்கும் தனது பணிவான வணக்கங்களை ஒருவர் அளிக்கவேண்டும்.
பதம் 1.2.5
முனய: ஸாது ப்ருஷ்தோ ‘ஹம் பவத்பிர் லோக-மங்களம்
யத் க்ருத: க்ருஷ்ண-ஸம்ப்ரச்னோ யேனாத்மா ஸுப்ரஸீததி
முனய:—ஒ முனிவர்களே; ஸாது—இது பொருத்தமாக உள்ளது. ப்ருஷ்த:- கேள்வி கேட்கப்பட்டுள்ளது; அஹம்—நான்; பவத்பி—உங்கள் அனைவராலும்; லோக —உலகம்; மங்களம்—நன்மை; யத்—ஏனெனில்; க்ருத:-கேட்ட; க்ருஷ்ண—பரமபுருஷ பகவான்; ஸம்ப்ரஸ்ன: -பொருத்தமான கேள்வி: யேன—எதனால்; ஆத்மா—ஆத்மா; ஸுப்ரஸீததி — பூரணமாக திருப்தியடையும்.
முனிவர்களே, உங்களுடைய கேள்விகள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரைப் பற்றியவையாக இருப்பதால், அவை உலக நன்மையுடன் தொடர்பு கொண்டவையாகி, மிகச்சிறந்த கேள்விகளாக விளங்குகின்றன. இத்தகைய கேள்விகளால் மட்டுமே முழு ஆத்ம திருப்தியைத் தர முடியும்.
பதம் 1.2.6
ஸ வை பும்ஸாம் பரோ தர்மோ யதோ பக்திர் அதோக்ஷஜே
அஹை துகி அப்ரதிஹதா யயாத்மா ஸுப்ரஸீததி
ஸ – அந்த; வை-நிச்சயமாக; பும்ஸாம்-மனித வர்க்கத்திற்காக; பர:— உயர்ந்த; தர்ம:-தொழில்; யத: எதனால்; பக்தி:-பக்தித் தொண்டு; அதோக்ஷஜே-பரமபுருஷருக்கு; அஹைதுகி— அகாரணமான; அப்ரதிஹதா—இடைவிடாத; யயா—எதனால்; ஆத்மா—ஆத்மா; ஸுப்ரஸீததி—பூரண திருப்தியடைந்து.
எதனால் மனிதன் பரம புருஷரின் உன்னதமான பக்தித் தொண்டைப் பெற முடியுமோ, அதுவே மனித வர்க்கம் முழுமைக்கும் தர்மமாகும். ஆத்மாவை பூரண திருப்திப்படுத்துவதற்கு, இத்தகைய பக்தித் தொண்டு உள்நோக்கம் இல்லாததாகவும், இடையறாததாகவும் இருக்க வேண்டும்.
பதம் 1.2.7
வாஸுதேவே பகவதி பக்தி-யோக: ப்ரயோஜித:
ஜனயதி ஆசு வைராக்யம் ஞானம் ச யத் அஹைதுகம்
வாஸுதேவே-கிருஷ்ணருக்கு; பகவதி-பரமபுருஷருக்கு; பக்தி-யோக:- பக்தித் தொண்டின் தொடர்பு; ப்ரயோஜித:-பிரயோகிப்பதால்; ஜனயதி-உண்டாக்குகிறது; ஆக-மிக விரைவில்; வைராக்யம்-பற்றின்மையை; ஞானம்–அறிவு; ச—மேலும்; யத்—எதுவொன்று; அஹைதுகம்-காரணமற்ற.
பரம புருஷ பகவானாகிய ஸ்ரீ கிருஷ்ணருக்கு பக்தித் தொண்டாற்றுவதால், ஒருவருக்கு உடனடியாக உன்னத அறிவும், உலக பற்றிலிருந்து விடுதலையும் கிடைக்கிறது.
பதம் 1.2.8
தர்ம: ஸ்வனுஷ்தித: பும்ஸாம் விஷ்வக்ஸேன-கதாஸுய:
நோத்பாதயேத் யதி ரதிம் ச்ரம ஏவ ஹி கேவலம்
தர்ம:- உத்தியோகம்; ஸ்வனுஷ்தித:-ஒருவரது சுய நிலைக்கேற்ப நிறைவேற்றப்பட்ட; பும்ஸாம்-மனிதனின்; விஷ்வக்ஸேன—பரமபுருஷ பகவான்; கதாஸு-செய்தியில்; ய:- என்ன இருக்கிறது; ந–இல்லை; உத்பாதயேத்-உண்டாக்கும்; யதி-எனில்; ரதிம்— கவர்ச்சியை; ச்ரம-பயனற்ற உழைப்பு; ஏவ-மட்டுமே: ஹி-நிச்சயமாக; கேவலம்- முழுமையாக.
ஒருவரின் சொந்த நிலைக்கேற்றவாறு செய்யும் தொழிற் கடமைகள், பரம புருஷ பகவானைப் பற்றிய செய்திகளிடம் கவர்ச்சியைத் தூண்டவில்லை என்றால் அவை அனைத்தும் பயனற்ற உழைப்பேயாகும்
பதம் 1.2.9
தர்மஸ்ய ஹி ஆபவர் க்யஸ்ய நார்தோ’ர் தாயோபகல்பதே
நார் தஸ்ய தர் மைகாந்தஸ்ய காமோ லாபாய ஹி ஸ்மிருத:
தர்மஸ்ய-உத்தியோக ஈடுபாடு; ஹி-நிச்சயமாக; ஆபவர்க்யஸ்ய- முடிவான முக்தி; ந-இல்லை; அர்த:-முடிவு; அர்தாயா-ஜட இலாபத்துக்காக; உபகல்பதே – அதற்காகவே உள்ளது; ந – அதுவுமல்ல; அர்தஸ்ய-ஜட இலாபத்தின்; தர்ம-ஏக-அந்தஸ்ய—முடிவான உத்தியோகத் தொண்டில் ஈடுபட்டுள்ள ஒருவருக்கு; காம:-புலனின்பம்; லாபாய-அடைவது; ஹி- அதேபோன்று; ஸ்மிருத:-பெரும் முனிவர்களால் விவரிக்கப்படுகிறது.
எல்லாவித உத்தியோக ஈடுபாடுகளும் நிச்சயமாக முடிவான முக்திக்காகவே உள்ளன. அவை ஜட இலாபத்துக்காக செய்யப்படவே கூடாது. மேலும், முனிவர்களின் கருத்துப்படி, முடிவான உத்தியோகத் தொண்டில் ஈடுபட்டிருப்பவர் புலனின்பத்தை வளர்ப்பதற்காக ஐட இலாபத்தை பயன்படுத்தவே கூடாது.
பதம் 1.2.10
காமஸ்ய நேந்த்ரிய-ப்ரீதிர் லாபோ ஜீவேத யாவதா
ஜீவஸ்ய தத்வ-ஜிக்ஞாஸா நார்தொ யச் சேஹ கர்மபி:
காமஸ்ய-ஆசைகைளின்; ந-இல்லை; இந்ரிய-புலன்கள்; ப்ரீதி-திருப்தி; லாப:-இலாபம்; ஜீவேத-தன்னை பாதுகாத்துக் கொள்ள; யாவதா—அதற்காக; ஜீவஸ்ய-ஜீவ ராசியின்; தத்வ- பரபிரம்மம்; ஜிக்ஞாஸா-கேள்விகள்; ந-இல்லை; அர்த:-முடிவு; ய: ச இஹ-வேறு எதுவானாலும்; கர்மபி:-உத்தியோகச் செயல்களால்.
வாழ்வின் விருப்பங்கள் புலனின்பத்தை நோக்கி செலுத்தப்படவே கூடாது. ஒரு மனிதன் பரபிரம்மத்தைப் பற்றிய விசாரணையில் ஈடுபட வேண்டியவனாகையால், ஒருவர் ஆரோக்கியமான வாழ்வுக்கு அல்லது சுய பராமரிப்புக்கு மட்டுமே ஆசைப்பட வேண்டும். வேறெதுவும் தொழிலின் நோக்கமாக இருக்கக் கூடாது.
பதம் 1.2.11
வதந்தி தத் தத்வ-விதஸ் தத்வம் யக் ஞானம் அத்வயம்
ப்ரஹ்மேதி பரமாத்மேதி பகவான் இதி சப்த்யதே
வதந்தி—அவர்கள் கூறுகின்றனர்; தத்-அது; தத்வ-வித—கற்றறிந்த ஆத்மாக்கள்; தத்வம்-பரபிரம்மம்; யத்- எது; ஞானம் -அறிவு; அத்வயம்- இரண்டற்ற; ப்ரஹ்ம இதி-பிரம்மம் எனப்படுவது பரமாத்மா இதி-பரமாத்மா எனப்படுவது; பகவான் இதி-பகவான் எனப்படுவது; சப்த்யதே-இது அவ்வாறு ஒலித்தது.
பரபிரம்மத்தை அறிந்தவர்களான கற்றறிந்த ஆன்மீகிகள் இந்த இரண்டற்ற மெய்ப்பொருளை பிரம்மம், பரமாத்மா அல்லது பகவான் என்று அழைக்கின்றனர்.
பதம் 1.2.12
தச் ச்ரத்ததான முனயோ ஞான-வைராக்ய-யுக்தயா
பஸ்யந்தி ஆத்மனி சாத்மானம் பக்த்யா ஸ்ருத-க்ரிஹீதயா
தத்- அந்த; ச்ரத்ததான –தீவிரமாக அறிய ஆவல் கொண்டுள்ள; முனய-முனிவர்கள்; ஞான-அறிவு; வைராக்ய—துறவு; யுக்தயா- நன்றாக அறித்துள்ள; பஸ்யந்தி-அறிகின்றார்; ஆத்மனி-தமக்குள்; ச—மேலும்; ஆத்மானம்—பரமாத்மா; பக்த்யா-பக்தித் தொண்டில்; ஸ்ருத-வேதங்கள்; க்ரிஹீதயா-நன்கு அறிகின்றனர்.
அறிவும், துறவும் நன்கு கைவரப் பெற்று, பகவானை அறிவதில் தீவிர ஆர்வம் கொண்டுள்ள மாணவர் அல்லது முனிவர், வேதாந்த சுருதியிலிருந்து தாம் கேள்விப்பட்டதற்கேற்ப பக்தித் தொண்டாற்றுவதன் மூலம் பரபிரம்மத்தை அறிகிறார்.
பதம் 1.2.13
அத: பும்பிர் த்விஜ-ஸ்ரேஷ்டா வர்ணாஸ்ரம-விபாகச:
ஸ்வனுஷ்திதஸ்ய தர்மஸ்ய ஸம்ஸித்திர் ஹரி-தோஷணம்
அத:-எனவே: பும்பி-மனிதனால்; த்விஜ-ஸ்ரேஷ்டா—இருமுறை பிறந்துள்ளவர்களில் சிறந்தவரே; வர்ண ஆஸ்ரம—வாழ்வின் நான்கு சமூகப் பிரிவுகளையும் (வர்ணம்), வகுப்புகளையும் (ஆஸ்ரமம்) கொண்ட ஸ்தாபனம்: விபாகச:- அப்பிரிவுகளால்: ஸ்வனுஷ்திதஸ்ய -ஒருவரது சொந்த நியமிக்கப்பட்ட கடமைகளின்; தர்மஸ்ய—உத்தியோக; ஸம்ஸித்தி:—மிகவுயர்ந்த பக்குவம்; ஹரி-பரமபுருஷ பகவான்; தோஷணம்—திருப்திப்படுத்தும்.
இரு பிறப்பு எய்தியவர்களில் சிறந்தவரே, வாழ்வின் சமூகப் பிரிவுகளுக்கும், வகுப்புகளுக்கும் ஏற்றவாறு நியமிக்கப்பட்டுள்ள ஒருவரது சொந்த கடமைகளை நிறைவேற்றுவதன் மூலம் பரமபுருஷரை திருப்திப்படுத்துவதே அவரால் அடையப்படக்கூடிய மிகவுயர்ந்த பக்குவம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
பதம் 1.2.14
தஸ்மாத் ஏகேன மனஸா பகவான் சாத்வதாம் பதி:
ஸ்ரோதவ்ய: கீர்திதவ்யஸ் ச த்யேய: பூஜ்யஸ் ச நித்யதா
தஸ்மாத்- எனவே; ஏகேன-ஒரே; மனஸா-எண்ணத்துடன்; பகவான்-பரமபுருஷ் பகவான்; ஸாத்வதாம்-பக்தர்களின்; பதி: -காப்பவர்; ஸ்ரோதவ்ய:-கேட்கப்பட வேண்டும்; கீர்திதவ்ய:— போற்றப்பட வேண்டிய; ச-மேலும்; த்யேய:-ஞாபகத்தில் வைக்கப்பட வேண்டும்; பூஜ்ய:—வழிபடப்பட வேண்டிய; ச-மேலும்; நித்யதா- எப்பொழுதும்.
எனவே, ஒரே எண்ணத்துடன் பக்தர்களைக் காப்பவரான பரம புருஷ பகவானைப் பற்றி எப்போதும் ஒருவர் கேட்டுக்கொண்டும், அவரைப் போற்றிக்கொண்டும், ஞாபகத்தில் நிறுத்தியும் மற்றும் அவரை வழிபாடு செய்துகொண்டும் இருக்க வேண்டும்.
பதம் 1.2.15
யத்-அனுத்யாஸினா யுக்தா: கர்ம-க்ரந்தி-நிபந்தனம்
சிந்தந்தி கோவிதாஸ் தஸ்ய கோ ந குர்யாத் கதா-ரதிம்
யத் – எது; அனுத்யா – ஞாபகம்; அஸினா—வாள்; யுக்தா:- கொண்ட; கர்ம—பிரதிபலன் விளைவிக்கும் செயல்; க்ரந்தி – முடிச்சை; நிபந்தனம்- பின்னிப் பிணைந்துள்ள; சிந்தந்தி-வெட்டிவிடுகின்றனர்; கோவிதா: – புத்திசாலிகள்; தஸ்ய-அவருடைய; க-யார் தான்; ந-மாட்டார்; குர்யாத்—செய்ய; கதா—செய்திகளுக்கு; ரதிம்—கவனம்.
புத்திசாலிகள் பகவானை நினைவிற் கொள்வதன் மூலமாக, பந்தப்படுத்தும் முடிச்சுகள் எனப்படும் கர்ம வினைகளை வெட்டி வீழ்த்துகின்றனர். ஆகையால் அவரைப் பற்றிய செய்திகளில் யார்தான் கவனம் செலுத்தாமல் இருப்பார்?.
பதம் 1.2.16
சுஸ்ரூஷோ: ஸ்ரத்ததானஸ்ய வாஸுதேவ-கதா-ருசி:
ஸ்யான் மஹத்-சேவயா விப்ரா: புண்ய-தீர்த-நிஷேவணாத்
சுஸ்ரூஷோ-கேட்பதில் ஈடுபட்டுள்ள ஒருவர்; ஸ்ரத்ததானஸ்ய- பொறுப்புடனும், கவனத்துடனும்; வாஸுதேவ -வாசுதேவனைப் பற்றிய; கதா-செய்தியை; ருசி:-சுவை; ஸ்யாத்.- சாத்தியமாக்கப்படுகிறது: மஹத்-சேவயா—தூய பக்தர்களுக்கு; விப்ரா:-ஓ பிராமணர்களே; புண்ய-தீர்த—எல்லா மாசுகளிலிருந்தும் தூய்மையடைந்தோர்; நிஷேவணாத்—தொண்டினால்.
பிராமண சிரேஷ்டர்களே, எல்லா மாசுகளிலிருந்தும் முற்றிலும் விடுபட்டுள்ள பக்தர்களுக்குத் தொண்டாற்றுவதன் மூலம், மிகப்பெரிய சேவை செய்யப்படுகிறது. அத்தகைய தொண்டினால், வாசுதேவனைப் பற்றிய செய்திகளை கேட்பதற்குரிய சுவையை ஒருவர் பெறுகின்றார்.
பதம் 1.2.17
ஸ்ருண்வதாம் ஸ்வ-கதா: க்ருஷ்ண:
புண்ய-ஸ்ரவண-கீர்த்தன:
ஹ்ருதி அந்த: ஸ்தோ ஹி அபத்ராணி
விதுநோதி ஸுஹ்ருத் ஸதாம்
ஸ்ருண்வதாம் – அச்செய்திகளைக் கேட்கும் ஆவலை விருத்தி செய்து கொண்டவர்கள்; ஸ்வ-கதா:—அவரது சொந்த வார்த்தைகள்; க்ருஷ்ண:— பரமபுருஷ பகவான்; புண்ய -புண்ணியமானவை; ஸ்ரவண-கேட்பதும்; கீர்த்தன- பாடுவதும்; ஹ்ருதி அந்த: ஸ்த:-ஒருவரின் இதயத்திற்குள்; ஹி—நிச்சயமாக; அபத்ராணி-ஐடத்தை அனுபவிக்க வேண்டும் என்ற ஆசையை; விதுநோதி-தூய்மைப்படுத்துகிறார்; ஸுஹ்ருத் –ஆதரிப்பவர்; ஸதாம்—உண்மையானவர்களின்.
எல்லோருடைய இதயத்திலும் பரமாத்மாவாக இருப்பவரும், உண்மையான பக்தர்களை ஆதரிப்பவரும், பரமபுருஷ பகவானுமாகிய ஸ்ரீ கிருஷ்ணர், முறையாகக் கேட்பதாலும், பாடுவதாலுமே புண்ணியம் தரக்கூடியவையான அவரது செய்திகளை கேட்பதிலும், பாடுவதிலும் உள்ள ஆவலை வளர்த்துக் கொண்டுள்ள பக்தனின் இதயத்திலிருந்து ஜட இன்பங்களுக்கான ஆசைகளை அகற்றிவிடுகிறார்.
பதம் 1.2.18
நஷ்ட-ப்ராயேஷு அபத்ரேஷு நித்யம் பாகவத சேவயா
பகவதி உத்தம ஸ்லோகே பக்திர் பவதி நைஷ்டிகீ
நஷ்ட -அழிக்கப்படுகிறது; ப்ராயேஷு-முழுமையான; அபத்ரேஷு—-அமங்களமானவை எல்லாம்; நித்யம்- ஒழுங்காக: பாகவத-ஸ்ரீமத் பாகவதம் அல்லது தூயபக்தர்; சேவயா—தொண்டாற்றுவதால்; பகவதி- பரமபுருஷ பகவானுக்கு; உத்தம—உன்னதமான; ஸ்லோகே -பிரார்த்தனைகள்; பக்தி:-அன்புத் தொண்டு; பவதி—ஏற்படுகிறது; நைஷ்டிகீ–மறுக்க முடியாத உண்மையாகும்.
பாகவத வகுப்புக்களில் ஒழுங்காக பங்கேற்பதாலும், தூய பக்தருக்கு தொண்டு புரிவதாலும், இதயத்திற்கு தொந்தரவாக இருப்பவை எல்லாம் முற்றிலும் அழிக்கப்பட்டு, உன்னத பாடல்களால் போற்றப்படுபவரான பரமபுருஷ பகவானுக்குச் செய்யும் அன்புத் தொண்டு நிலைநிறுத்தப்படுகிறது என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.
பதம் 1.2.19
ததா ரஜஸ்-தமோ-பாவா: காம-லோபாதயஸ் ச யே
சேத ஏதைர் அனாவித்தம் ஸ்திதம் ஸத்வே ப்ரஸீததி
ததா-அப்போது; ரஜ:–தீவிர (ரஜோ) குணத்தில்; தம:-அறியாமை (தமோ) குணம் பாவா: -சந்தர்ப்பம்: காம-காமமும், ஆசையும்; லோப-பேராசை; ஆதய:-மற்றவை; ச-மேலும்; யே-அவை என்னவாக இருப்பினும்; சேத:-மனம்; ஏதை:—இவைகளால்; அனாவித்தம்- பாதிப்படையாமல்; ஸ்திதம்-நிலைபெற்று; ஸத்வே-நற்(சத்வ)குணத்தில்; ப்ரஸீததி-இவ்வாறாக முழு திருப்தியடைகிறான்.
அசைக்க முடியாத பக்தித் தொண்டு இதயத்தில் நிலைநிறுத்தப்பட்ட உடனேயே, இயற்கையின் தீவிர மற்றும் அறியாமை குணங்களால் விளையும் காமம், விருப்பம் மற்றும் பேராசை போன்றவை இதயத்திலிருந்து மறைந்து விடுகின்றன. அதன்பின் பக்தன் நற்குணத்தில் நிலைபெற்று, பூரண மகிழ்ச்சியடைகின்றான்.
பதம் 1.2.20
ஏவம் ப்ரஸன்ன-மனஸோ பகவத்-பக்தி-யோகத:
பகவத்- தத்வ-விஞ்ஞானம் முக்த-ஸங்கஸ்ய ஜாயதே
ஏவம் — இவ்வாறாக; ப்ரஸன்ன-உற்சாகப்படுத்தப்பட்டு; மனஸ:-மனத்தின்; பகவத்-பக்தி—பகவானின் பக்தித் தொண்டு: யோகத:-சேர்க்கையினால்; பகவத்-பரமபுருஷ பகவானைப் பற்றிய; தத்வ-அறிவு: விஞ்ஞானம்-விஞ்ஞானபூர்வமான; முக்த-முக்தியடைந்த; ஸங்கஸ்ய-சகவாசத்தின்: ஜாயதே-பயனளிக்கக்கூடியதாகிறது.
இவ்வாறாக, பகவானின் பக்தித் தொண்டுடன் கொண்ட தொடர்பினால் மனம் தெளிவடைந்து, கலப்படமற்ற நற்குணத்தில் நிலைபெற்று எல்லா பௌதிகத் தொடர்பிலிருந்தும் விடுபட்ட நிலையிலுள்ள மனிதன், பரமபுருஷ பகவானைப் பற்றிய உண்மையான அறிவைப் பெறுகிறான்.
பதம் 1.2.21
பித்யதே ஹ்ருதய-க்ரந்திஸ் சித்யந்தே ஸர்வ-ஸம்சயா:
க்ஷீயந்தே சாஸ்ய கர்மாணி த்ருஷ்ட ஏவாத்மனீ ஸ்வரே
பித்யதே-துளைக்கப்பட்டு; ஹ்ருதய—இதயம்; க்ரந்தி:-முடிச்சுகள்; சித்யந்தே-துண்டு துண்டாக வெட்டப்படுகிறது; ஸர்வ—எல்லா; ஸம்சயா:-சந்தேகங்களுக்கும்: க்ஷுயந்தே—முடிவு கட்டப்படுகிறது; ச-மேலும்; அஸ்ய—அவரது; கர்மாணி-பலன்நோக்குச் செயல்களின் தொடர்; த்ருஷ்டே—பார்த்த பின்; ஏவ—நிச்சயமாக; ஆத்மனி—ஆத்மாவுக்கு; ஈஸ்வரே-ஆதிக்கம் செலுத்துகின்ற.
இவ்வாறாக இதயத்திலுள்ள முடிச்சு அவிழ்க்கப்பட்டு, எல்லா சந்தேகங்களும் அறுத்தெறியப்படுகின்றன. ஒருவர் ஆத்மாவை எஜமானராகக் காணும்போது, பலன்நோக்குச் செயல்களின் தொடருக்கு ஒரு முடிவு கட்டப்படுகிறது.
பதம் 1.2.22
அதோ வை கவயோ நித்யம் பக்திம் பரமயா முதா
வாஸுதேவே பகவதி குர்வந்தி ஆத்ம-ப்ரஸாதனீம்
அத:-எனவே; வை- நிச்சயமாக; கவய:-எல்லா ஆன்மீகிகளும்; நித்யம்—கற்பனைக் கெட்டாத காலத்திலிருந்து; பக்திம்—பகவானுக்குச் செய்யும் தொண்டு; பரமயா-பகவான்; முதா-பேரானந்தத்துடன்; வாஸுதேவே-ஸ்ரீகிருஷ்ணர்; பகவதி-பரமபுருஷ பகவான்; குர்வந்தி ஆற்றினர்: ஆத்ம-ஆத்மா; ப்ரஸாதனீம்—உற்சாகம் ஊட்டுவது.
எனவே கற்பனைக் கெட்டாத காலத்திலிருந்து எல்லா ஆன்மீகிகளும் பரமபுருஷ பகவானாகிய ஸ்ரீ கிருஷ்ணருக்கு பக்தித் தொண்டு ஆற்றி வந்துள்ளனர் என்பதில் சந்தேகமில்லை. ஏனெனில், அத்தகைய பக்தித் தொண்டு ஆத்மாவை உற்சாகப்படுத்தும்.
பதம் 1.2.23
ஸத்வம் ரஜஸ் தம இதி ப்ரக்ருதேர் குணாஸ் தைர்
யுக்த: பர: புருஷ ஏக இஹாஸ்ய தத்தே
ஸ்திதி-ஆதயே ஹரி-விரின்சி-ஹரேதி ஸம்ஞா:
ஸ்ரேயாம்ஸி தத்ர கலு சத்வ-தனோர் நிர்ணாம் ஸ்யு:
ஸத்வம்—நற்குணம்; ரஜ:-தீவிர குணம்; தம:-அறியாமை இருள்; இதி—இவ்வாறாக; ப்ரக்ருதே:—ஜடஇயற்கையின்; குணா:-குணங்கள்; தை:—அவற்றால்; யுக்த:-தொடர்பு கொண்டு: பர:-உன்னதமான; புருஷ:-புருஷர்; ஏக:-ஒன்று; இஹாஸ்ய—இந்த ஜடவுலகின்; தத்தே- ஏற்கிறார்; ஸ்திதி-ஆதயே— படைத்தல், காத்தல் மற்றும் அழித்தல் முதலான செயல்களுக்காக; ஹரி-பரமபுருஷ பகவானாகிய விஷ்ணு; விரின்சி-பிரம்மா: ஹர-சிவபெருமான்; இதி—இவ்வாறாக, ஸம்ஞா:-வேறுபட்ட அம்சங்களை; ஸ்ரேயாம்ஸி-முடிவான தன்மையை: தத்ர-இதனால்; கலு-இவற்றில் ஸத்வ-நற்குணம்; தனோ:-உருவம்; நிரணாம்—மனிதனின்; ஸ்யு: —அடைய முடியும்.
தெய்வீக புருஷராகிய பகவான், ரஜோ குணம், சத்வ குணம் மற்றும் தமோ குணம் ஆகிய ஜட இயற்கையின் முக்குணங்களுடன் மறைமுகமாக தொடர்பு கொண்டிருக்கிறார். மேலும் ஜடவுலகின் படைத்தல், காத்தல் மற்றும் அழித்தல் எனும் முத்தொழில்களுக்காக அவர் பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவன் ஆகிய மூன்று குண அவதாரங்களை ஏற்றுக்கொள்கிறார். இம்மூவருள், நற்குண (சத்வ) ரூபமான விஷ்ணுவிடமிருந்தே மக்களனைவரும் முடிவான நன்மைகளைப் பெற முடியும்.
பதம் 1.2.24
பார்திவாத் தாருணோ தூமஸ் தஸ்மாத் அக்னிஸ் த்ரயீமய:
தமஸஸ் து ரஜஸ் தஸ்மாத் ஸத்வம் யத் ப்ரஹ்ம-தர்ஷனம்
பார்திவாத்- பூமியிலிருந்து; தாருண:- விறகு; தூம:-புகை; தஸ்மாத்- அதிலிருந்து: அக்னி:-நெருப்பு; த்ரய்-வேத யாகங்கள்; மய: – அதனாலான; தமஸ:- தமோ குணத்தில்; து-ஆனால்; ரஜ:- ரஜோ குணம்; தஸ்மாத்-அதிலிருந்து; ஸத்வம்-சத்வகுணம்; யத் —எது; ப்ரஹ்ம–பர பிரம்மம்; தர்ஷனம்-உணர்வு.
விறகு மண்ணின் உருமாற்றமாகும். ஆனால் புகை பச்சையான விறகைவிட சிறந்தது. மேலும் நெருப்பு அதைவிடச் சிறந்ததாகும். ஏனெனில், நெருப்பால் தெய்வீக அறிவின் நன்மைகளை நாம் பெற முடியும் (வேத யாகங்களின் மூலம்). அதைப் போலவே, தீவிர உணர்ச்சி (ரஜஸ்) அறியாமையை (தமஸ்) விட சிறந்ததாகும். ஆனால் நற்குணம் (ஸத்வம்) அனைத்திலும் சிறந்ததாகும். ஏனெனில், நற்குணத்தினால் பரபிரம்மத்தை உணரும் நிலைக்கு ஒருவரால் உயர முடியும்.
பதம் 1.2.25
பேஜிரே முனயோ’தாக்ரே பகவந்தம் அதோக்ஷ்ஜம்
ஸத்வம் விசுத்தம் க்ஷேமாய கல்பந்தே யே’னு தான் இஹ
பேஜிரே-அவனுக்குத் தொண்டாற்றினார்; முனய:—முனிவர்கள்; அத-இவ்வாறாக; அக்ரே-முன்பு; பகவந்தம்-பரம்புருஷருக்கு; அதோக்ஷ்ஜம்—திவ்யமானவர்; ஸத்வம்—வாழ்வு; விசுத்தம்-இயற்கையின் முக்குணங்களுக்கும் மேல்; க்ஷேமாய-முடிவான நன்மையை அடைய; கல்பந்தே-தகுதியுடைய; யே—அந்த; அனு—பின்பற்று; தான்—அவர்கள்; இஹ-இந்த ஜடவுலகில்.
பரமபுருஷர், ஜட இயற்கையின் முக்குணங்களுக்கு மேலானவராக இருப்பதால் மாமுனிவர்கள் அனைவரும் முன்பு அவருக்குத் தொண்டாற்றினர். ஜடச் சூழ்நிலையிலிருந்து விடுபடுவதற்காக அவர்கள் அவரை வழிபட்டதனால், உயர்ந்த நன்மையை அடையப் பெற்றனர். அத்தகைய சிறந்த அதிகாரிகளைப் பின்பற்றுபவர் யாராக இருந்தாலும், அவரும் ஐடவுலகிலிருந்து முக்தி பெற தகுதியுள்ளவராகின்றார்.
பதம் 1.2.26
முமுக்ஷ்வோ கோர-ரூபான் ஹித்வா பூத-பதீன் அத
நாராயண-கலா: சாந்தா பஜந்தி ஹி அனஸுயவ:
முமுக்ஷ்வ:- முக்தியை விரும்புபவர்கள்; கோர-பயங்கரமான, கோரமான; ரூபான்-அதைப் போன்ற உருவங்கள்; ஹித்வா—விலக்கி; பூத-பதீன்— தேவர்கள்; அத-இக்காரணத்திற்காக; நாராயண-பரம புருஷர்; கலா:-விரிவங்கங்கள்; சாந்தா:- ஆனந்தமயமான: பஜந்தி-வழிபடுகின்றனர்; ஹி-நிச்சயமாக; அனஸுயவ:-பொறாமையின்றி.
முக்தி பெறுவதில் உறுதியாக இருப்பவர்கள் நிச்சயமாக பொறாமையின்றி அனைவரையும் மதிப்பவர்களாக இருப்பார்கள். இருப்பினும் தேவர்களின் பயங்கரமான கோர உருவங்களை அவர்கள் விலக்கி, பகவான் விஷ்ணுவையும் அவரது விரிவங்கங்களின் ஆனந்தமயமான சொரூபங்களையும் மட்டுமே வழிபடுகின்றனர்.
பதம் 1.2.27
ரஜஸ்-தம:-ப்ரக்ருதய: ஸம-சீலா பஐந்தி வை
பித்ரு-பூத-ப்ரஜேசாதீன் ஸ்ரியைஸ்வர்ய-ப்ரஜேப்ஸவ:
ரஜ:-தீவிர குணம்; தம:-அறியாமைக் குணம்; ப்ரக்ருதய:- அத்தகைய மனோபாவத்தின்; ஸம—சீலா:-அதே பிரிவுகளின்; பஜந்தி- வழிபடுகின்றனர்; வை – உண்மையில்; பித்ரு-முன்னோர்கள்; பூத—மற்ற ஜீவராசிகள்; ப்ரஜேச—ஆதீன் -பிரபஞ்ச ஆட்சியை நடத்துபவர்கள்; ஸ்ரியா-வளம்; ஐஸ்வர்ய-செல்வம் மற்றும் அதிகாரம்; ப்ரஜா- குழந்தைப் பேறு; ஈப்ஸவ:—அவ்வாறு விரும்பும்.
ரஜோ மற்றும் தமோ குணங்களில் உள்ளவர்கள், பெண்கள், செல்வம், அதிகாரம் மற்றும் குழந்தைப்பேறு ஆகிய ஆசைகளால் உந்தப்படுவதால், அவர்கள் முன்னோர்களையும், பிற ஜீவராசிகளையும் மற்றும் பிரபஞ்ச இயக்கங்களின் பொறுப்பாளர்களான தேவர்களையும் வழிபடுகின்றனர்.
பதங்கள் 1.2.28 – 1.2.29
வாஸுதேவ – பரா வேதா வாஸுதேவ – பரா மகா:
வாஸுதேவ-பரா யோகா வாஸுதேவ-பரா: க்ரியா:
வாஸுதேவ-பரம் ஞானம் வாஸுதேவ-பரம் தப:
வாஸுதேவ-பரோ தர்மோ வாஸுதேவ-பரா கதி:
வாஸுதேவ – பரமபுருஷர்; பரா:-முடிவான இலக்கு; வேதா:-வேத நூல்களின்; வாஸுதேவ- பரம புருஷர்; பரா-வழிபடுவதற்கு; மகா:—யக்ஞங்கள்; வாஸுதேவ- பரமபுருஷர்; பரா-அடைவதற்குரிய வழி; யோகா:- லோக சித்திகள்; வாஸுதேவ — பரமபுருஷர்; பரா:-அவரது கட்டுப்பாட்டின் கீழ்; க்ரியா:- பலன்நோக்குச் செயல்கள்; வாஸுதேவ— பரமபுருஷர்; பரம்- தெய்வீக; ஞானம்—அறிவு; வாஸுதேவ-பரமபுருஷர்; பரம் – மிகச்சிறந்த; தப:-தவம்; வாஸுதேவ-பரமபுருஷர்; பரா:- மேலான தரம்; தர்ம:-மதம்; வாஸுதேவ-பரமபுருஷர்: பரா:— முடிவான; கதி:-வாழ்வின் இலக்கு.
வேத நூல்களின்படி, அறிவின் இறுதி நோக்கமாக இருப்பவர் முழுமுதற் கடவுளான, ஸ்ரீ கிருஷ்ணரேயாவார். அவரைத் திருப்திப்படுத்துவதே யாகங்கள் செய்வதன் நோக்கமாகும். அவரை உணர்வதற்காகவே வேதம் உள்ளது. எல்லா கிரியைகளும் கிருஷ்ணருக்கே அர்பணம். அவரே பரம ஞானமாவார். அவரை அறிவதற்காகவே எல்லா கடுந்தவங்களும் இயற்றப்படுகின்றன. மதம் (தர்மம்) அவருக்கு அன்புத் தொண்டாற்றுகிறது. வாழ்வின் மிகவுயர்ந்த இலக்கும் அவரே.
பதம் 1.2.30
ஸ ஏவேதம் ஸஸர் ஜாக்ரே பகவான் ஆத்ம-மாயயா
ஸத்-அஸத்-ரூபயா சாஸௌ குணமயாகுணோ விபு:
ஸ:- அந்த; ஏவ-நிச்சயமாக; இதம்-இந்த; ஸஸர்ஜ—படைத்தார்; அக்ரே-முன்பு; பகவான்-முழுமுதற் கடவுள்; ஆத்ம-மாயயா—அவரது (பகவான்) சுய சக்தியினால்; ஸத்-காரணம்; அஸத்—விளைவு; ரூபயா-உருவங்களால்; ச-மேலும்; அஸௌ-அதே பகவான்; குண-மய —ஜட இயற்கைக் குணங்களில்; அகுண:-உன்னதமான; விபு:-பரிபூரணம்.
பௌதிக படைப்பின் ஆரம்பத்தில், தெய்வீக நிலையில் உள்ளவரான பூரண முழுமுதற் கடவுள் (வாசுதேவன்), தமது சுய அந்தரங்க சக்தியால், காரணம், மற்றும் விளைவு எனப்படும் சக்திகளைப் படைத்தார்.
பதம் 1.2.31
தயா விலஸிதேஷ்வேஷு குணேஷு குணவான் இவ
அந்த:-ப்ரவிஷ்ட ஆபாதி விஞ்ஞானேன விஜ்ரும்பித:
தயா—அவற்றினால்; விலஸிதேஷு—இயக்கத்தில் இருப்பினும்; ஏஷு—இந்த; குணேஷு—ஜட இயற்கைக் குணங்கள்; குணவான்—குணங்களால் பாதிக்கபட்டு; இவ –அதைப் போன்று; அந்த:-அதனுள்: ப்ரவிஷ்ட:-உள்ளே பிரவேசித்தார்; ஆபாதி–காணப்படுகிறது; விஞ்ஞானேன-தெய்வீகமான உணர்வினால்; விஜ்ரும்பித:-பூரண ஞானம் பெற்றவராகவே இருக்கிறார்.
ஜடப் பொருளை படைத்த பின், பகவான் (வாசுதேவன்) விரிவடைந்து அதற்குள் பிரவேசிக்கிறார். அவர் ஜட இயற்கைக் குணங்களுக்குள் இருந்தபோதிலும், படைக்கப்பட்ட ஜீவன்களுள் ஒருவராகத் தோன்றியபோதிலும், அவர் எப்பொழுதும் பரிபூரண ஞானத்தைப் பெற்ற உன்னத நிலையிலேயே இருக்கிறார்.
பதம் 1.2.32
யதா ஹி அவஹிதோ வஹ்னிர் தாருஷ்வேக: ஸ்வ-யோனிஷு
நானேவ பாதி விஸ்வாத்மா பூதேஷு ச ததா புமான்
யதா-அந்த அளவுக்கு; ஹி-அதைப் போலவே; அவஹித: -நிரப்பப்பட்டுள்ள; வஹ்னி:– நெருப்பினால்; தாருஷு—விறகில்; ஏக:- ஒன்று; ஸ்வ—யோனிஷு-தோற்றங்களின் மூலம்; நானா இவ-வெவ்வேறு ஜீவன்களைப் போல்; பாதி—பிரகாசமாக்குகிறது; விஸ்வ-ஆத்மா—பரமாத்மாவாக உள்ள பகவான்; பூதேஷு—ஜீவராசிகளில்; ச-மேலும்; ததா—அதைப் போலவே: புமான்–பூரண புருஷர்.
விறகில் நெருப்பு பரவியிருக்கிறது. அதைப் போலவே, பகவான் பரமாத்மாவின் உருவில் எல்லா பொருட்களிலும் பரவியிருக்கின்றார். எனவே இரண்டற்ற ஒரே பரம்பொருளாக அவர் இருந்தபோதிலும் பல வகைப்பட்டவராக காட்சியளிக்கிறார்.
பதம் 1.2.33
அசௌ குணமயைர் பாவைர் பூத-ஸூக்ஷ்மேந்த்ரியாத்மபி:
ஸ்வ-நிர்மிதேஷு நிர்விஷ்டோ புங்க்தே பூதேஷு தத்-குணான்
அசௌ-அந்த பரமாத்மா; குண மயை:—இயற்கைக் குணங்களால் தூண்டப்பட்டு; பாவை:-இயற்கையாகவே; பூத-படைக்கப்பட்ட; ஸூக்ஷ்ம-சூட்சுமமான; இந்த்ரிய—புலன்கள்; ஆத்மபி:-ஜீவராசிகளால்; ஸ்வ—நிர்மிதேஷு-அவருக்குச் சொந்தமான படைப்பில்; நிர்விஷ்த:–புகுதல்; புங்க்தே- அனுபவிக்கச் செய்கிறார்; பூதேஷு- ஜீவராசிகளுக்குள்; தத்-குணான்—அந்த இயற்கைக் குணங்கள்.
ஐட இயற்கைக் குணங்களினால் வசீகரிக்கப்படும் ஜீவன்களின் உடல்களுக்குள் பரமாத்மா பிரவேசித்து, ஜீவன்கள் தங்களது சூட்சும மனதினால், இந்த ஐட இயற்கைக் குணங்களின் பலன்களை அனுபவிக்கும்படி செய்கிறார்.
பதம் 1.2.34
பாவயதி ஏஷ ஸத்வேன லோகான் வை லோக-பாவன:
லீலாவதாரானுரதோ தேவ-திர்யன்-நராதிஷு
பாவயதி- காப்பாற்றுகிறார்; ஏஷ:–இவ்வெல்லா; ஸத்வேன—நற்குணத்தில்; லோகான்- பிரபஞ்சமெங்கும்; வை—பொதுவாக; லோக-பாவன: – எல்லா பிரபஞ்சங்களுக்கும் எஜமானர்; லீலா-லீலைகள்; அவதார—அவதாரம்; அனுரத;-பாகத்தை ஏற்று; தேவ-தேவர்கள்; திர்யக்-தாழ்ந்த மிருகங்கள்; நர—ஆதிஷு-மனிதர்களுக்கு இடையில்.
இவ்வாறு தேவர்கள், மனிதர்கள் மற்றும் மிருகங்கள் வசிக்கும் எல்லா கிரகங்களையும் பிரபஞ்சங்களின் எஜமானரான பகவான் பராமரிக்கிறார். அவர் அவதாரங்களை ஏற்று, தூய சத்வகுணத்தில் இருப்போரை மீட்பதற்காக லீலைகளைப் புரிகிறார்.
ஸ்ரீமத் பாகவதம், முதல் காண்டத்தின் “தெய்வீகமும் தெய்வீகத் தொண்டும்” எனும் தலைப்பைக் கொண்ட, இரண்டாம் அத்தியாயத்திற்கான பக்தி வேதாந்தப் பொருளுரைகள் இவ்வாறு நிறைவு பெறுகின்றன.