அத்தியாயம் – 16
பரீட்சித்து கலியுகத்தை வரவேற்ற விதம்
பதம் 1.16.1
ஸூத உவாச
தத: பரீக்ஷித் த்விஜ-வர்ய-சிக்ஷயா
மஹீம் மஹா-பாகவத: சசாஸ ஹ
யதா ஹி ஸூத்யாம் அபிஜாத கோவிதா:
ஸமாதிசன் விப்ர மஹத்-குணஸ்: ததா
ஸூத உவாச-சூத கோஸ்வாமி கூறினார்; தத:-அதன் பிறகு; பரீசுக்ஷித்-பரீட்சித்து மகாராஜன்;த்விஜ-வர்ய-சிறந்த இருபிறப்பெய்திய பிராமணர்கள்; சிக்ஷயா—அவர்களது உபதேசங்களால்; மஹீம்- பூமி; மஹா-பாகவத:- உத்தம பக்தர்; சசாஸ்-ஆண்டு வந்தார்; ஹ—கடந்த காலத்தில்; யதா- அவர்கள் கூறியதைப் போல்; ஹி-நிச்சயமாக; ஸூத்யாம்—அவர் பிறந்த சமயத்தில்; அபிஜாத-கோவிதா:- பிறந்த சமயத்தில் கைதேர்ந்த ஜோதிடர்கள்; ஸமாதிசன்-அவர்களது அபிப்பிராயங்களைக் கூறினர்; விப்ர-பிராமணர்களே; மஹத்-குணஸ்: மிகச்சிறந்த குணங்கள்; ததா—அதன்படியே.
சூத கோஸ்வாமி கூறினார்: கற்றறிந்த பிராமணர்களே, பரீட்சித்து மகாராஜன் பிறகு பகவானின் மிகச்சிறந்த பக்தராக இருந்து, சிறந்த பிராமணர்களின் உபதேசங்களின்படி உலகை ஆளத் துவங்கினார். அவர் பிறந்த சமயத்தில் கைதேர்ந்த ஜோதிடர்கள் கூறிய அச்சிறந்த குணங்களுக்கேற்ப அவர் ஆட்சிபுரிந்தார்.
பதம் 1.16.2
ஸ உத்தரஸ்ய தனயாம் உபயேம இராவதீம்
ஜனமேஜயாதீம்ஸ் சதுரஸ் தஸ்யாம் உத்பாதயத் ஸுதான்
ஸ- அவர்; உத்தரஸ்ய-உத்தர ராஜனின்; தனயாம்-மகள்; உபயேம்- திருமணம் செய்து கொண்டார்; இராவதீம்-ஐராவதி; ஜனமேஜய ஆதீன்-ஜனமேஜய மகாராஜனை தலைமையாகக் கொண்ட; சதுர:- நான்கு; தஸ்யாம்-அவள் மூலமாக; உத்பாதயத்—பெற்றார்; ஸுதான்—மகன்களை.
பரீட்சித்து மகாராஜன் உத்தர மகாராஜனின் மகளைத் திருமணம் புரிந்து, ஜனமேஜய மகாராஜனை தலைமையாகக் கொண்ட நான்கு மகன்களைப் பெற்றார்.
பதம் 1.16.3
ஆஜஹாராஸ்வமேதாம்ஸ் த்ரீன் கங்காயாம் பூரிதக்ஷிணான்
சாரத்வதம் குரும் க்ருத்வா தேவா யத்ராக்ஷி கோசரா:
ஆஜஹார-இயற்றினார்; அஸ்வமேதான்-அஸ்வமேத யாகங்கள்; த்ரீன் – மூன்று; கங்காயாம்-கங்கைக் கரையில்; பூரி-போதுமான அளவு; தக்ஷிணான் — வெகுமானம்; சாரத்வதம்-கிருபாச்சாரியரை ; குரும்- ஆன்மீக குருவாக; க்ருத்வா- தேர்ந்தெடுத்து; தேவா- தேவர்கள்; யத்ர —எங்கு; அக்ஷி—கண்கள்; கோசரா:-வரம்புக்கெட்டிய பார்வைக்குள்.
பரீட்சித்து மகாராஜன், தமக்கு வழிகாட்டுவதற்காக கிருபாச்சாரியரை ஆன்மீக குருவாகத் தேர்ந்தெடுத்தபின், கங்கைக் கரையில் மூன்று அஸ்வமேத யாகங்களை இயற்றினார். ஏவலாட்களுக்குத் தகுந்த சன்மானங்களுடன் இவை நிறைவேற்றப்பட்டன. மேலும் இந்த யாகங்களின் போது சாதாரண மனிதனால் கூட தேவர்களைக் காண முடிந்தது.
பதம் 1.16.4
நிஜக்ராஹௌஜஸா வீர: கலிம் திக்விஜயே க்வசித்
ந்ருப-லிங்க-தரம் சூத்ரம் க்னந்தம் கோ-மிதுனம் பதா
நிஜக்ராஹ-நன்கு தண்டித்தார்; ஓஜஸா – தைரியமாக ; வீர: துணிவுள்ள வீரர்; கலிம்-கலியை ; தீக்விஜயே-உலகை வென்று வரச் செல்லும் வழியில்; க்வசித்- ஒருமுறை; ந்ருபலிங்கதரம்—ஓர் அரசரைப் போல் மாறுவேடம் அணிந்திருந்தவன்; சூத்ரம் -சூத்திரன்; க்னந்தம்- காயப்படுத்துவதை; கோ-மிதுனம்- ஒரு பசுவையும், எருதையும்; பாத-காலில்.
ஒருமுறை, உலகை வென்று வருவதற்காக புறப்பட்டுச் சென்ற பரீட்சித்து மகாராஜன், வழியில் ஓரரசரைப் போல் மாறுவேடத்தில் இருந்தவரும், ஒரு சூத்திரனை விடத் தாழ்ந்தவனுமான கலிபுருஷன், ஒரு பசு மற்றும் எருதின் கால்களை காயப்படுத்துவதைக் கண்டார். அவனை தண்டிப்பதற்காக உடனே அவனைக் கைப்பற்றினார்.
பதம் 1.16.5
சௌனக உவாச
கஸ்ய ஹேதோர் நிஜக்ராஹ கலிம் திக்விஜயே ந்ருப:
ந்ருதேவ-சின்ன-த்ருக் சூத்ர-கோ ‘ஸௌ காம் ய: பதாஹனத்
தத் கத்யதாம் மஹா-பாக யதி க்ருஷ்ண-கதாஸ்ரயம்
சௌனக உவாச- சௌனக ரிஷி கூறினார்; கஸ்ய ஹேதோ:- என்ன காரணத்திற்காக; நிஜக்ராஹ- கடுமையாகத் தண்டித்தார்; கலிம்- கலி புருஷனை; திக்விஜயே-அவரது உலகச் சுற்றுலாவின்போது ; ந்ருப: அரசர்; ந்ரு-தேவ—அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்; சின்னத்ருக்—போல் அலங்கரிக்கப்பட்டிருந்த; சூத்ரக:- சூத்திரர்களிலேயே தாழ்ந்தவன்; அஸௌ – அவன்; காம்-பசு; ய-யாரொருவன்; பதா அஹனத்— அவனது காலால் தாக்கினான்; தத்—அதையெல்லாம்; கத்யதாம்— தயவுகூர்ந்து விளக்குங்கள்; மஹா-பாக-பேரதிர்ஷ்டம் பெற்றவரே; யதி—இருந்தால்; க்ருஷ்ண-கிருஷ்ணரைப் பற்றி; கதாஆஸ்ரயம்— அவருடன் சம்பந்தப்பட்ட விஷயமாக.
சௌகன ரிஷி கேட்டார். ஓர் அரசரைப் போல் உடையணிந்து, ஒரு பசுவைத் தன் காலால் உதைத்த அவன் சூத்திரர்களிலேயே இழிவானவன் என்பதால், அவனை ஏன் பரீட்சித்து மகாராஜன் தண்டித்ததோடு விட்டுவிட்டார். இவ்விஷயங்களெல்லாம் பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்குச் சம்பந்தம் உள்ளவையாக இருக்குமானால் அவற்றை தயவுகூர்ந்து விவரிக்க வேண்டுகிறேன்.
பதம் 1.16.6
அதவாஸ்ய பதாம்போஜமகரந்தலிஹாம் ஸதாம்
கிம் அன்யைர் அஸத்-ஆலாபைர் ஆயுஷோ யத் அஸத்-வ்யய:
அதவா-இல்லையெனில்; அஸ்ய-அவரின் (பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின்); பத-அம்போஜ தாமரைப் பாதங்கள்; மகரந்த லிஹாம்- இத்தகைய ஒரு தாமரை மலரிலிருந்து வரும் தேனைச் சுவைப்பவர்களின்; ஸதாம்- நித்தியமாக வசிக்கப் போகிறவர்களின்; கிம் அன்யை:-மற்றவைகளால் என்ன பயன்; அஸத்-மாயையான; ஆலாபை:- விஷயங்கள்; ஆயுஷ:-ஆயுளின்; யத்-எது ஒன்று; அஸத் வ்யய: பயனற்ற வாழ்வு.
பகவத் பக்தர்கள் பகவானின் தாமரைப் பாதங்களிலிருந்து கிடைக்கும் தேனைச் சுவைப்பதில் பழக்கப்பட்டவர்களாவர். மதிப்பு மிக்க ஒருவரது வாழ்வையே வீணாக்கக்கூடிய விஷயங்களால் என்ன பயன்?
பதம் 1.16.7
க்ஷுத்ராயுஷாம் ந்ருணாம் அங்க மர்த்யானாம் ருதம் இச்சதாம்
இஹோபஹுதோ பகவான் ம்ருத்யு: சாமித்ர-கர்மணி
க்ஷுத்ர:-மிகக்குறுகிய; ஆயுஷாம்—ஆயுட்காலத்தின்; ந்ருணாம்— மனிதர்களின்; அங்க- ஓ சூத கோஸ்வாமி; மர்த்யானாம்- நிச்சயமாக இறக்கப் போகிறவர்களின்; ருதம்- நித்திய வாழ்வு; இச்சதாம்- அதை விரும்புபவர்களின்; இஹ-இங்கு; உபஹூத-வரவழைக்க வேண்டும்; பகவான்-பகவானைப் பிரதிநிதிக்கும்; ம்ருத்யு:-மரண தேவரான யமராஜனை; சாமித்ர—அடக்கும்; கர்மணி-கர்மங்கள்.
ஓ சூத கோஸ்வாமி, மரணத்திலிருந்து விடுபட்டு நித்திய வாழ்வைப் பெற விரும்புபவர்களும் மக்களுக்கிடையில் உள்ளனர். மரண தேவரான யமராஜனை அழைப்பதன் மூலமாக அவர்கள் மரணத்தின் பிடியிலிருந்து தப்புகின்றனர்.
பதம் 1.16.8
ந கஸ்சின் மரியதே தாவத் யாவத் ஆஸ்த இஹாந்தக:
ஏதத்அர்தம் ஹி பகவான் ஆஹூத: பரமர்ஷிபி
அஹோ ந்ரு-லோகே பீயேத ஹரி-லீலாம்ருதம் வச:
ந-மாட்டார்; கஸ்சித்-ஒருவரும்; ம்ரியதே- மரணமடைவார்; தாவத்-அதுவரை; யாவத்-அதுவரையில்; ஆஸ்தே- இருக்கும்வரை; இஹ-இங்கு; அந்தக:- அந்திம காலத்தை விளைவிப்பவர்; ஏதத்- இந்த; அர்தம் -காரணம் ; ஹி-நிச்சயமாக; பகவான்- பகவானின் பிரதிநிதி; ஆஹூத:—அழைத்தனர்; பரமருஷிபி-மாமுனிவர்களால்; அஹோ- அந்தோ; ந்ருலோகே-மனித சமூகத்தில்; பீயேத-அவர்கள் பருகட்டும்; ஹரி-லீலா-பகவானின் திவ்யமான லீலைகள்; அம்ருதம் நித்திய வாழ்விற்குரிய அமிர்தம்; வச:-கதைகளின்.
அனைவருக்கும் மரணத்தை விளைவிப்பவரான யமராஜன் இங்கிருக்கும்வரை, ஒருவருக்கும் மரணம் ஏற்படாது. பகவானின் பிரதிநிதியும், மரணத்திற்கு அதிபதியுமான யமராஜனை மாமுனிவர்கள் அழைத்துள்ளனர். அவரது கட்டுப்பாட்டிலுள்ள ஜீவராசிகள், பகவானுடைய திவ்ய லீலைகளைக் கொண்ட இக்கதையின் வடிவிலுள்ள இந்த அமிர்தத்தை கேட்டுப் பயன்பெற வேண்டும்.
பதம் 1.16.9
மந்தஸ்ய மந்த-ப்ரக்ஞஸ்ய வயோ மந்தாயுஷஸ் ச வை
நித்ரயா ஹ்ரியதே நக்தம் திவா ச வ்யர்த கர்மபி:
மந்தஸ்ய- சோம்பேறிகளின்; மந்த—அற்ப; ப்ரக்ஞஸ்ய-புத்தியின்; வய:- வயது; மந்த-குறுகிய; ஆயுஷ-ஆயுளின்; சமேலும்; வை அப்படித்தான்; நித்ரயா-உறக்கத்தில்; ஹ்ருயதே-கழித்துவிடுகிறான்; நக்தம் – இரவு; திவா- பகற்பொழுதை; ச-அதையும்; வ்யர்த— பயனின்றி ; கர்மபி:-செயல்களால்.
அற்ப அறிவும், குறுகிய ஆயுளும் கொண்ட சோம்பேறி மனிதர்கள் இரவை உறக்கத்திலும், பகலை பயனற்ற செயல்களிலும் கழித்துவிடுகின்றனர்.
பதம் 1.16.10
ஸூத உவாச
யதா பரீக்ஷித் குரு-ஜாங்கலே ‘வஸத்
கலிம் ப்ரவிஷ்டம் நிஜ-சக்ரவர்திதே
நிசம்ய வார்தாம் அனதிப்ரியாம் தத:
சராஸனம் ஸம்யுக-சௌண்டிர் ஆததே
ஸூத உவாச-சூத கோஸ்வாமி கூறினார்; யதா—அப்போது; பரீக்ஷித்—பரீட்சித்து மகாராஜன்; குரு-ஜாங்கலே-குருக்களுடைய சாம்ராஜ்ஜியத்தின் தலைநகரில்; அவஸத்-வாழ்ந்து வந்தார்; கலிம்-கலி யுகத்தின் அறிகுறிகள்; ப்ரவிஷ்டம்-புகுந்தது; நிஜசக்ரவர்திதே- அவரது அதிகார வரம்புக்குள்; நிசம்ய-இவ்வாறு கேள்விப்பட்டதும்; வார்தாம்- செய்திகளை; அனதிப்ரியாம்- அவ்வளவு மகிழ்ச்சியாக இல்லை ; தத:- அதன் பிறகு; சராஸனம்- அம்புகளையும், வில்லையும்; ஸம்யுக— அதற்கு வாய்ப்பைப் பெற்று; சௌண்டி:-யுத்தச் ஒரு செயல்கள்; ஆததே-கையிலெடுத்தார்.
சூத கோஸ்வாமி கூறினார்: குரு சாம்ராஜ்ஜியத்தின் தலைநகரில் பரீட்சித்து மகாராஜன் வாழ்ந்து வந்தபொழுது, கலி யுகத்தின் அறிகுறிகள் அவரது இராஜ்ஜியத்திற்குள் ஊடுருவத் துவங்கின. இதைப் பற்றி கேள்விப்பட்ட அவருக்கு இவ்விஷயம் அவ்வளவு மகிழ்ச்சி தருவதாக இல்லை. ஆயினும் இது அவருக்கு போரிடுவதற்குரிய ஒரு வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தது. வில்லையும், அம்புகளையும் கைகளில் ஏந்திய அவர் யுத்தச் செயல்களுக்கு தம்மைத் தயார் செய்து கொண்டார்.
பதம் 1.16.11
ஸ்வலங்க்ருதம் ஸ்யாம-துரங்க-யோஜிதம்
ரதம் ம்ருகேந்ர த்வஜம் ஆஸ்ரித: புராத்
வ்ருதோ ரதாஸ்வ-த்விபபத்தி-யுக்தயா
ஸ்வ-ஸேனயா திக்விஜயாய நிர்கத:
ஸு அலங்க்ருதம்- நன்கு அலங்கரிக்கப்பட்ட; ஸ்யாம-கருநிற; துரங்க- குதிரைகள்; யோஜிதம் கடிவாளம் பூட்டப்பட்ட; ரதம் இரதம்; ம்ருக- இந்ர – சிங்கம் ; த்வஜம் கொடியைக் கொண்ட; ஆஸ்ரித:- பாதுகாப்பின்கீழ்; புராத்- தலைநகரிலிருந்து; வ்ருத: சூழப்பட்டவாறு; ரத-தேரோட்டிகளால்; அஸ்வ-குதிரைப்படை; த்விப்பத்தி-யானைகள்; யுக்தயா—இவ்வாறு ஆயத்தமாகி; ஸ்வ-ஸேனயா – காலாட்படைகளுடன்; திக்விஜயாய—வெற்றிகொள்ளும் நோக்கத்திற்காக; நிர்கத:- வெளியேறிச் சென்றார்.
பரீட்சித்து மகாராஜன் கருநிற குதிரைகள் பூட்டப்பட்ட இரதத்தில் அமர்ந்தார். அவரது கொடி சிங்கத்தின் அடையாளம் பொறிக்கப் பட்டதாக இருந்தது. இவ்வாறு அலங்கரிக்கப்பட்டு, தேரோட்டிகள், குதிரைப்படை, யானைகள் மற்றும் காலாட்படை ஆகியவற்றால் சூழப்பட்டவாறு, எல்லா திசைகளையும் வெற்றி கொள்வதற்காக அவர் தலைநகரிலிருந்து புறப்பட்டார்.
பதம் 1.16.12
பத்ராஸ்வம் கேதுமாலம் ச பாரதம் சோத்தரான் குரூன்
கிம்புருஷாதீனி வர்ஷானி விஜித்ய ஜக்ருஹே பலிம்
பத்ராஸ்வம் – பத்ராஸ்வம்; கேதுமாலம்- கேதுமாலம்; ச-மேலும்; பாரதம்- பாரதம்; ச-மேலும்; உத்தரான்-வடநாடுகள்; குரூன்- குருக்களின் இராஜ்ஜியம்; கிம்புருஷ-ஆதீனி-இமாலயத்தின் வடக்குப் புறத்திற்கு அப்பாலுள்ள ஒரு நாடு ; வர்ஷாணி-மண்ணுலகின் பகுதிகள்; விஜித்ய-வென்று ; ஜக்ரே-வசூலித்தார்; பலிம்—பலம்.
பரீட்சித்து மகாராஜன் பிறகு பத்ராஸ்வம், கேதுமாலம், பாரதம், உத்தர குருவர்ஷம், கிம்புருஷம் முதலான மண்ணுலகின் எல்லா பகுதிகளையும் வென்று அவற்றின் அரசர்களிடமிருந்து கப்பம் வசூலித்தார்.
பதங்கள் 1.16.13 – 1.16.15
தத்ர தத்ரோபஸ்ருண்வான: ஸ்வபூர்வேஷாம் மஹாத்மனாம்
ப்ரகீயமாணம் ச யச: க்ருஷ்ண-மஹாத்மிய ஸூசகம்
ஆத்மானம் ச பரித்ராதம் அஸ்வத்தாம்னோ ‘ஸ்த்ர தேஜஸ:
ஸ்நேஹம் ச வ்ருஷ்ணி-பார்தானாம் தேஷாம் பக்திம் ச கேசவே
தேப்ய: பரம-ஸந்துஷ்ட: ப்ரீதி-உஜ்ரும்பித-லோசன:
மஹா-தனானி வாஸாம்ஸி ததௌ ஹாரான் மஹா-மனா:
தத்ர தத்ர:-அரசர் சென்ற இடமெல்லாம்; உபஸ்ருண்வான- தொடர்ச்சியாக அவர் கேள்விப்பட்டார்; ஸ்வபூர்வேஷாம்-அவரது முன்னோர்களைப் பற்றி; மஹாஆத்மனாம்—பகவானின் சிறந்த பக்தர்களான அவர்கள் அனைவரும்; ப்ரகீயமாணம்-இவ்வாறு கூறியவர்களுக்கு; ச-மேலும்; யச:- பெருமைகள்; க்ருஷ்ண பகவான்- ஸ்ரீ கிருஷ்ணர்; மஹாத்மிய-சிறப்புடைய செயல்கள்; ஸூசகம்- சுட்டிக்காட்டும்; ஆத்மானம்—அவரையே; ச-மேலும்; ப்ரித்ராதம்-விடப்பட்ட; அஸ்வத்தாம்ன:-அஸ்வத்தாமனின்; அஸ்த்ர-ஆயுதம்; தேஜஸ:-சக்தி வாய்ந்த கதிர்கள்; ஸ்நேஹம்— சிநேகம் ; ச-மேலும்; வ்ருஷ்ணிபார்தானாம்- விருஷ்ணி மற்றும் பிருதா ஆகியோரின் வம்சங்களுக்கிடையில்; தேஷாம்-அவர்கள் அனைவரின்; பக்திம்- பக்தி; ச-மேலும்; கேசவே-பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம்; தேப்ய:—அவர்களிடம்; பரம-மிகவும்; ஸந்துஷ்ட: சந்தோஷம் அடைந்தார்; ப்ரீதி—கவர்ச்சி; உஜ்ரும்பித- மகிழ்ச்சியுடன் திறந்தார்; லோசன:-அத்தகைய கண்களை உடையவர்; மஹாதனானி—விலையுயர்ந்த செல்வங்கள்; வாஸாம்ஸி- துணிமணிகள்: ததெள- தானமாக அளித்தார்; ஹாரான்—ஆரம்; மஹா மனா:-பரந்த நோக்குடையவர்.
அரசர் சென்ற இடமெல்லாம், பகவானின் பக்தர்களான அவரது முன்னோர்களின் பெருமைகளைப் பற்றியும், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பெருமைக்குரிய செயல்களைப் பற்றியும் அவர் தொடர்ந்து கேள்விப்பட்டார். அஸ்வத்தாமனுடைய சக்தி வாய்ந்த ஆயுதத்தின் வெப்பத்திலிருந்து தாம் பகவானால் காப்பாற்றப்பட்டதைப் பற்றியும் அவர் கேள்விப்பட்டார். பிருதாவிற்கு பகவான் கேசவனிடமிருந்த ஆழ்ந்த சிநேகத்தின் காரணத்தால், விருஷ்ணி மற்றும் பிருதாவின் வம்சத்தினருக்கு இடையிலிருந்த ஆழ்ந்த அன்பைப் பற்றியும் மக்கள் ஞாபகப்படுத்திக் கூறினர். இத்தகைய பெருமைகளைப் புகழ்ந்து பாடியவர்களிடம் மிகவும் திருப்தியடைந்த அரசர், பெரும் மகிழ்ச்சியுடன் தமது கண்களைத் திறந்தார். பெருந்தன்மையின் காரணத்தால், விலையுயர்ந்த ஆபரணங்களையும், துணிமணிகளையும் அவர்களுக்கு பரிசாக அளித்தார்.
பதம் 1.16.16
ஸாரத்ய-பாரஷத-ஸேவன-ஸக்ய-தௌத்ய
வீராஸனானுகமான-ஸ்தவன-ப்ரணாமான்
ஸ்னிக்தேஷு பாண்டுஷு ஜகத்-ப்ரணதிம் ச விஷ்ணோர்
பக்திம் கரோதி ந்ரு-பதிஸ் சரணாரவிந்தே
ஸாரத்ய- ஒரு தேரோட்டியின் பதவியை ஏற்றது ; பாரஷத-ராஜஸூய யாக சபையில் தலைமைப் பதவியை ஏற்றது; ஸேவன-மனதை இடைவிடாமல் பகவத் சேவையில் ஈடுபடுத்தி; ஸக்ய-பகவானை ஒரு நண்பராக நினைக்க; தௌத்ய-ஒரு தூதரின் பதவியை ஏற்றது; வீரஆஸன-வாளேந்திய கரத்துடன் இரவில் காவல் காக்கும் பணியை ஏற்றது; அன-அடிச்சுவடுகளைப் பின்பற்றியது; ஸ்தவன— போற்றிப் புகழ்ந்தது; ப்ராணாமான்— வந்தனம் செய்தது; ஸ்நிக்தேஷு— பகவானின் விருப்பத்திற்கு வளைந்து கொடுப்பவர்களான அவர்களுக்கு; பாண்டுஷு- பாண்டு புத்திரர்களுக்கு; ஜகத்-பிரபஞ்ச முழுவதும்; ப்ரணதிம்—வந்தனம் செய்யப்படுபவர்; ச-மேலும்; விஷ்ணோ: விஷ்ணுவின்; பக்திம்- பக்தி; கரோதி—செய்கிறார்; ந்ரு-பதி:-அரசர்; சரணஅரவிந்தே—அவரது கமல பாதங்களில்.
பிரபஞ்சம் முழுவதிலும் வணங்கப்படுபவரான பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் (விஷ்ணு), அவரது காரணமற்ற கருணையினால், ஒரு சேவகனைப் போல் பாண்டவர்களின் சொற்படி நடந்து, வயதில் இளையவரைப் போல் வந்தனங்கள் செய்து, அவர்களது விருப்பப்படி, ஒரு தேரோட்டி, தலைவர், தூதர், நண்பர் மற்றும் இரவு காவற்காரர் முதலான எல்லா வகையான சேவைகளையும் அவர்களுக்குச் செய்தார். இதையெல்லாம் கேட்ட பரீட்சித்து மகாராஜனுக்கு, பகவானின் கமல பாதங்களில் பக்தி பெருக்கெடுத்தது.
பதம் 1.16.17
தஸ்யைவம் வர்தமானஸ்ய பூர்வேஷாம் வ்ருத்திம் அன்வஹம்
நாதி தூரே கிலாஸ்சர்யம் யத் அஸீத் தன் நிபோத மே
தஸ்ய-பரீட்சித்து மகாராஜனின் ; ஏவம்- இவ்வாறாக; வர்தமானஸ்ய -அத்தகைய சிந்தனையில் ஆழ்ந்திருக்கும்பொழுது; பூர்வேஷாம்- அவரது முன்னோர்களின்; விருத்திம்- நல்ல ஈடுபாடு; அன்வஹம்- ஒவ்வொரு நாளையும்; ந-இல்லை ; அதிதூரே-வெகுதூரத்தில்; கில- மிகவும்; ஆஸ்சர்யம்- ஆச்சரியமான; தத்-அதை; ஆஸீத்-இருந்தது; தத்- எது; நிபோத-தெரிந்துகொள்ளுங்கள்; மே-என்னிடமிருந்து.
பரீட்சித்து மகாராஜன் தமது முன்னோர்களின் நற்செயல்களைப் பற்றி கேட்கும், அவற்றைப் பற்றிய சிந்தனையில் மனதை ஆழ்த்தியும் தமது நாட்களைக் கழித்து வந்த சமயத்தில் நடந்த அதிசயத்தைக் கூறுகிறேன் கேளுங்கள்.
பதம் 1.16.18
தர்ம: பதைகேன சரன் விச்சாயாம் உபலப்ய காம்
ப்ருச்சதி ஸ்மாஸ்ரூ-வதனாம் விவத்ஸாம் இவ மாதரம்
தர்ம: தர்மம்; பதா-கால்; ஏகேன- ஒன்றில் மட்டும்; சரன்- சுற்றித் திரியும்; விச்சாயாம்- துன்ப நிழலால் பீடிக்கப்பட்டு; உபலப்ய- சந்தித்து; காம் -பசுவை; ப்ருச்சதிஸ்ம-கேட்டது ; அஸ்ரு-வதனாம்— முகத்தில் கண்ணீருடன்; விவத்ஸாம் -கன்றைப் பறிகொடுத்த; இவ-போல்; மாதரம்-தாய்.
மதக் கொள்கைகளின் சொரூபமான தர்மம், ஓர் எருதின் வடிவில் திரிந்து கொண்டிருந்தது. தன் குழந்தையை இழந்து துன்புறும் ஒரு தாய் போல் காணப்பட்ட, பசுவின் வடிவிலிருந்த பூமித் தாயை அது சந்தித்தது. பொலிவிழந்து காணப்பட்ட பசுவின் கண்களில் கண்ணீர் ததும்பியது. இவ்வாறாக தர்மம் பூமியைப் பார்த்து பின்வருமாறு விசாரித்தது.
பதம் 1.16.19
தர்ம உவாச
கச்சித் பத்ரே ‘நாமயம் ஆத்மனஸ் தே
விச்சாயாஸி ம்லாயதேஷன் முகேன
ஆலக்ஷயே பவதீம் அந்தராதிம்
தூரே பந்தும் சோசஸி கஞ்சனாம்ப
தர்ம உவாச- தரும தேவதை வினவியது; கச்சித்-எதுவாகிலும்; பத்ரே-தாயே; அனாமயம்-ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும்; ஆத்மன:-நீயே; தே-உனக்கு; விச்சாயா-அஸி-துன்ப நிழலால் மூடப்பட்டதுபோல் காணப்படுகிறாய்; ம்லாயதா-கருப்பாக்கும்; ஈஷத் – இலேசாக; முகேன முகத்தை; ஆலக்ஷயே-நீ காணப் படுகிறாய்; பவதீம்—நீயே; அந்தராதிம்- ஏதோ உள்நோய்; தூரே-நீண்ட தூரத்தில்; பந்தும்-நண்பரை; சோசஸி-நினைக்கிறாய்;கஞ்சன- யாரோ ஒருவர்; அம்ப-தாயே.
தரும தேவதை (ஓர் எருதின் வடிவில் இருந்து கொண்டு) வினவியது: நீ ஆரோக்கியத்தையும் மகிழ்ச்சியையும் இழந்துவிட்டாயா? நீ ஏன் துன்ப நிழலால் மூடப்பட்டிருக்கிறாய்? நீ கருப்பாகி விட்டாய் என்று உன் முகமே காட்டுகிறது. ஏதேனும் உள்நோயினால் நீ துன்புறுகிறாயா அல்லது வெகுதூரத்திலுள்ள யாரோ ஒரு உறவினரைப் பற்றி நீ நினைத்துக்கொண்டு இருக்கிறாயா?
பதம் 1.16.20
பாதைர் யூனம் சோசஸி மைக-பாதம்
ஆத்மானம் வா வ்ருஷலைர் போக்ஷ்யமாணம்
ஆஹோ ஸுராதீன் ஹ்ருத-யக்ஞ-பாகான்
ப்ரஜா உத ஸ்வின் மகவதி அவர்ஷதி
பாதை:-மூன்று கால்களால்; யூனம்-குறைந்துவிட்ட; சோசஸி இதற்காக நீ வருத்தப்பட்டால்; மா-எனது; ஏக-பாதம்-ஒரு கால் மட்டும்; ஆத்மானம்-சொந்த உடல்; வா-அல்லது; வ்ருஷலை: சட்டவிரோதமாக மாமிசம் உண்பவர்களால்; போஷ்யமாணம்- சுயநலத்திற்காக உபயோகிக்கப்படுவதை; ஆஹோ யாகத்தில் பங்கில்லாமல்; ப்ரஜா-ஜீவராசிகள்; உத-அதிகரிக்கும்; ஸ்வித்— அல்லது; மகவதி—பஞ்சத்திலும், பட்டினியிலும்; அவர்ஷதி மழை இல்லாததால்.
நான் எனது மூன்று கால்களை இழந்து இப்பொழுது ஒரே காலில் நின்று கொண்டிருக்கிறேன். என் நிலைமையைக் கண்டு நீ வருந்துகிறாயா? அல்லது இனிமேல் சட்டவிரோதமாக மாமிசம் உண்பவர்கள் உன்னை துஷ்பிரயோகம் செய்யப்போகிறார்கள் என்பதற்காக நீ பெருங்கவலையில் ஆழ்ந்திருக்கிறாயா? அல்லது தற்போது யாகங்கள் செய்யப்படாததால், தேவர்கள் இப்பொழுது தங்களுக்குரிய யாகப் பங்கை இழந்திருப்பதைக் குறித்து நீ வருந்துகிறாயா? அல்லது பசியாலும், பஞ்சத்தாலும் ஜீவராசிகளுக்கு ஏற்பட்டுள்ள துன்பங்களைக் குறித்து நீ விசனப்படுகிறாயா?
பதம் 1.16.21
அரக்ஷ்யமாணா: ஸ்த்ரிய உர்வி பாலான்
சோசஸி அதோ புருஷாதைர் இவார்தான்
வாசம் தேவீம் ப்ரஹ்ம-குலே குகர்மணி
அப்ரஹ்மண்யே ராஜ-குலே குலாக்ரியான்
அரக்ஷ்யமாணா:-பாதுகாக்கப்படாத; ஸ்த்ரிய-பெண்கள்; உர்வி பூமியில்; பாலான்-குழந்தைகள்; சோசஸி-நீ இரக்கப்படுகிறாய்; அதோ-அப்படியிருக்க; புருஷ ஆதை:-ஆண்களால்; இவ அதுபோல்; ஆர்தான் மகிழ்ச்சியற்றவர்கள்; வாசம்-கல்வி; தேவீம் – தேவதை; ப்ரஹ்ம-குலே-பிராமணரின் குடும்பத்தில்; குகர்மணி-மதக் கொள்கைகளுக்கு எதிரான செயல்கள்; அப்ரஹ்மண்யே-பிராமணப் பண்பாட்டை எதிர்ப்பவர்கள்; ராஜ-குலே -அரசாளும் குடும்பத்தில்; குல-அக்ரியான்-குடும்பங்களில் (பிராமணர்கள்). உள்ள பெரும்பான்மையினர்
அயோக்கியர்களால் கேவலமான நிலையில் விட்டுச் செல்லப்பட்ட மகிழ்ச்சியற்ற பெண்களுக்காகவும், குழந்தைகளுக்காகவும் நீ விசனப்படுகிறாயா? அல்லது மதக் கொள்கைகளுக்கு எதிராக செயற்படுவதில் பற்றுக் கொண்ட பிராமணர்களால் கல்வித் தெய்வம் கையாளப்படுவதைக் குறித்து நீ கவலைப்படுகிறாயா? அல்லது பிராமணப் பண்பாட்டை மதிக்காத ஆட்சிபுரியும் குடும்பங்களில் பிராமணர்கள் புகலிடம் கொண்டிருப்பதைக் கண்டு நீ வருந்துகிறாயா?
பதம் 1.16.22
கிம் க்ஷத்ர-பந்தூன் கலினோபஸ்ருஷ்டான்
ராஷ்ட்ராணி வா தைர் அவரோபிதானி
இதஸ் ததோ வாசன-பான வாஸ:
ஸ்நான—வ்யவாயோன்முக-ஜீவ-லோகம்
கிம்- அல்லது; க்ஷத்ர-பந்தூன்—யோக்கியமற்ற நிர்வாகிகள்; கலினா- கலி யுகத்தின் செல்வாக்கினால்; உபஸ்ருஷ்டான்— குழப்பமடைந்துள்ள; ராஷ்ட்ராணி-அரசாங்க விவகாரங்களை; வா—அல்லது; தை:—அவர்களால்; அவரோபிதானி—ஒழுங்கை குலைத்துவிடுபவர்கள்; இத:-இங்கும்; தத:-அங்கும்; வா—அல்லது; அசன—உணவு உட்கொள்ளல்; பான-பருகுதல்; வாஸ: வசிப்பிடம்; ஸ்நான— ஸ்நானம்; வ்யவாய:-உடலுறவு; உன்முக—சுபாவம்; ஜீவ லோகம்-மனித சமூகம்.
கலி யுகத்தின் ஆதிக்கத்தால், பெயரளவேயான நிர்வாகிகள் இப்பொழுது குழப்பமடைந்துள்ளனர். இதன் விளைவாக அவர்கள் அரசாங்க விவகாரங்களை எல்லாம் ஒழுங்கற்ற நிலைக்கு உள்ளாக்கியுள்ளனர். இந்த ஒழுங்கின்மையைக் குறித்தா இப்பொழுது நீ வருந்துகிறாய்? உண்ணுதல், உறங்குதல், பருகுதல், உடலுறவு கொள்ளுதல் போன்றவைகளின் சட்டதிட்டங்களை இப்பொழுது பொதுமக்கள் பின்பற்றுவதில்லை. மேலும் இத்தகைய செயல்களை எந்த இடத்திலும் செய்யக்கூடிய சுபாவத்தையும் அவர்கள் கொண்டுள்ளனர். உன்னுடைய வருத்தத்திற்கு இதுவா காரணம்?
பதம் 1.16.23
யத்வாம்ப தே பூரி-பராவதார
க்ருதாவதாரஸ்ய ஹரேர் தரித்ரி
அந்தர்ஹிதஸ்ய ஸ்மரதீ விஸ்ருஷ்டா
கர்மாணி நிர்வாண-விலம்பிதானி
யத்வா—அதுவாக இருக்கக்கூடும்; அம்ப-தாயே; தே-உனது; பூரி-கனமான; பர-பாரம்; அவதார-அவதாரம்; க்ருத-செய்தார்; அவதாரஸ்ய—அவதரித்தவர்; ஹரே:-பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின்; தரித்ரி- பூமியே ; அந்தர்ஹிதஸ்ய-பார்வையிலிருந்து இப்பொழுது மறைந்துவிட்டவரின்; ஸ்மரதீ-அதைப் பற்றி நினைக்கும்பொழுது; விஸ்ருஷ்டா-செய்யப்பட்டவை அனைத்தும்; கர்மாணி—செயல்கள்; நிர்வாண-முக்தி; விலம்பிதானி—விளைவை ஏற்படுத்துவது.
பூமித்தாயே, பரம புருஷ பகவான் ஹரி, கனமான உனது பாரத்தைக் குறைப்பதற்காகவே பகவான் ஸ்ரீ கிருஷ்ணராக அவதரித்தார். இங்கு அவர் நிகழ்த்திய செயல்கள் அனைத்தும் திவ்யமானவையும், முக்திக்கான வழியை அமைப்பனவும் ஆகும். அவரை இப்பொழுது நீ இழந்துவிட்டால் அனேகமாக அச்செயல்களைப் பற்றி சிந்தித்து, அவற்றின் மறைவுக்காக இப்பொழுது நீ வருந்துகிறாய் என்று நினைக்கிறேன்.
பதம் 1.16.24
இதம் மமாசக்ஷ்வ தவாதி-மூலம்
வஸுந்தரே யேன விகர்சிதாஸி
காலேன வா தே பலினாம் பலீயஸா
ஸுரார்சிதம் கிம் ஹ்ருதம் அம்ப ஸௌபகம்
இதம் – இந்த ; மம- என்னிடம்; ஆசவ- அன்புடன் அளிப் பவையாக; தவ-உனது; ஆதிமூலம்-உன் துன்பத்தின் மூல காரணம் : வஸுந்தரே – எல்லா செல்வங்களுக்கும் பிறப்பிடமே; யேன-எதனால்; விகர்சிதா அளி-மிகவும் மெலிந்து காணப்படுகிறாய்; காலேன- காலத்தின் செல்வாக்கினால்; வா-அல்லது; தே-உனது; பலினாம்- மிகவும் சக்தி வாய்ந்த; பலீயஸா—மேலும் சக்தி வாய்ந்த; ஸுரஅர்சிதம்- தேவர்களாலும் பூஜிக்கப்பட்டாய்; கிம்-அல்லது; ஹ்ருதம்-பறித்துக் கொண்டது; அம்ப- தாயே; ஸெளபகம்- செல்வம்.
தாயே, நீ எல்லா செல்வங்களுக்கும் பிறப்பிடமாவாய். எதனால் இத்தகைய பலவீனமான ஒரு நிலையை நீ அடைந்தாயோ, அப்பெருந்துன்பத்திற்கான மூல காரணத்தை தயவுசெய்து எனக்கு அறிவிப்பாயாக. மிகவும் சக்தி வாய்ந்தவரையும் தோல்வியடையச் செய்யும், சக்தி வாய்ந்த காலத்தின் ஆதிக்கம்தான், தேவர்களாலும் பூஜிக்கப்பட்ட உனது செல்வங்களை எல்லாம் பலவந்தமாக பறித்துக் கொண்டிருக்கும் என நான் நினைக்கிறேன்.
பதம் 1.16.25
தரணி உவாச
பவான் ஹி வேத தத் ஸர்வம் யன் மாம் தர்மானுப்ருச்சஸி
சதுர்பிர் வர்தஸே யேன பாதைர் லோக-ஸுகாவஹை:
தரணி உவாச-பூமித்தாய் பதிலளித்தது; பவான்- நீ; ஹி- நிச்சயமாக; வேத-அறியலாம்; தத் ஸர்வம்-என்னிடம் நீ கேட்டதை எல்லாம் ; யத் —அதை; மாம் என்னிடமிருந்து ; தர்ம—தர்ம சொரூபமே; அனுப்ருச்சஸி—நீ ஒவ்வொன்றாக கேள்விகளைக் கேட்டிருக்கிறாய்; சதுர்பி-நான்கால்; வர்தஸே- உயிர் வாழ்கிறாய்; யேன—எதனால்; பாதை:-கால்களால்; லோக-ஒவ்வொரு கிரகத்திலும்; ஆவஹை:-மகிழ்ச்சியை அதிகரிக்கிறாய்.
(ஒரு பசுவின் உருவிலுள்ள) பூமி தேவதை (ஓர் எருதின் உருவிலுள்ள) தர்ம தேவதைக்கு பதிலளித்தது: ஓ தர்மமே, என்னிடம் விசாரித்ததை எல்லாம் நீ அறிவாயாக. அக்கேள்விகளுக்கெல்லாம் நான் பதிலளிக்க முயற்சிக்கிறேன். முன்பு நீயும் நான்கு கால்களுடன்தான் இருந்தாய். அப்போது பகவானின் கருணையால் பிரபஞ்சம் முழுவதிலும் நீ மகிழ்ச்சியைப் பெருக்கினாய்.
பதங்கள் 1.16.26 – 1.16.30
ஸத்யம் சௌசம் தயா க்ஷாந்திஸ் த்யாக: ஸந்தோஷ ஆர்ஜவம்
சமோ தமஸ் தப: ஸாம்யம் திதிக்ஷோபரதி: ஸ்ருதம்
ஞானம் விரக்திர் ஐஸ்வர்யம் சௌர்யம் தேஜோ பலம் ஸ்ம்ருதி:
ஸ்வாதந்த்ரியம் கெளசலம் காந்திர் தைர்யம் மார்தவம் ஏவ ச
ப்ராகல்ப்யம் ப்ரஸ்ரய: சீலம் ஸஹ ஒஜோ பலம் பக:
காம்பீர்யம் ஸ்தைர்யம் ஆஸ்திக்யம் கீர்திர் மானோ ‘நஹங்க்ருதி:
ஏதே சான்யே ச பகவன் நித்யா யத்ர மஹாகுணா:
ப்ரார்த்யா மஹத்வம் இச்சத்பிர் ந வியந்தி ஸ்ம கர்ஹிசித்
தேனாஹம் குண-பாத்ரேண ஸ்ரீ-நிவாஸேன ஸாம்ப்ரதம்
சோசாமி ரஹிதம் லோகம் பாப்மனா கலினேக்ஷிதம்
ஸத்யம் -உண்மை; செளசம்- தூய்மை; தயா- இரக்கம் ; க்ஷாந்தி:- சாந்தி அல்லது கோபப்படுவதற்குக் காரணம் இருந்தாலும் புலனடக்கத்துடன் இருத்தல்; த்யாக:-சுயதிருப்தி; ஸந்தோஷ- சந்தோஷம்; ஆர்ஜவம்- நேர்மை; சம:- சமத்துவம்; தம்: புலனுறுப்புக்களின் அடக்கம்; தப:-கடமையில் உண்மை; ஸாம்யம்- நண்பன், எதிரி என்ற வேறுபாடின்மை; திதிக்ஷ—பிறரின் குற்றம் பொறுத்தல்; உபரதி-இலாப நஷ்டத்தில் நடுநிலை பாராட்டுதல்; ஸ்ருதம்- சாஸ்திர விதிகளைப் பின்பற்றுதல்; ஞானம் -ஞானம் (தன்னுணர்வு); விரக்தி:-புலனின்பத் துறவு; ஐஸ்வர்யம்- தலைமை வகிக்கும் திறமை; சௌர்யம்-வீரம்; தேஜ:-ஆதிக்கம்; பலம் – சாத்தியமற்றதை சாத்தியமாக்கும் சக்தி; ஸ்ம்ருதி-ஒருவரது முறையான கடமையைக் கண்டுபிடித்தல்; ஸ்வாதந்த்ரியம்- பிறரை நம்பியிராமை; கௌசலம் – எல்லா செயல்களிலும் சாமர்த்தியம்; காந்தி:- அழகு: தைர்யம் — தொல்லையிலிருந்து விடுதலை; மார்தவம்-இளகிய மனம்; ஏவ-இவ்வாறாக; ச-மேலும்; ப்ராகல்ப்யம்—புத்தி சாதுர்யம்; ப்ரஸ்ரய:-மரியாதை; சீலம் – நல்லொழுக்கம்; ஸஹ-உறுதி; ஓஜ:- பூரண அறிவு; பலம்-நன்கு நிறைவேற்றுதல்; பக:-இன்பம் அனுபவிப்பதற்குரிய பொருள்; காம்பீர்யம்- சந்தோஷம்; ஸ்தைர்யம்- அசைக்க முடியாத தன்மை; ஆஸ்திக்யம்-நம்பிக்கை; கீர்தி:-புகழ்: மான:- வழிபடத் தகுதியுள்ளவர்; அனஹன்க்ருதி:—அகங்காரம் இல்லா நிலை; ஏதே – இவைகளும்; ச அன்யே-மற்றவைகளும் கூட; ச- மேலும்; பகவன்-பரம புருஷ பகவான்; நித்யா-நித்தியமான; யத்ர- எங்கு; மஹாகுணா:-சிறப்புடைய குணங்கள்; ப்ரார்த்யா—பெறத் தகுந்த; மஹத்வம்—உயர்வு; இச்சத்பி:—அவ்வாறு விரும்புபவர்கள்; ந -ஒருபோதும் இல்லை; வியந்தி – அழிகிறது; ஸ்ம- என்றும்; கர்ஹிசித்- எச்சமயத்திலும்; தேன—அவரால்; அஹம்—நான்; குண பாத்ரேண-எல்லா குணங்களுக்கும் பிறப்பிடம்; ஸ்ரீ-லட்சுமி தேவி; நிவாஸேன-ஓய்வெடுக்கும் இடத்தில்; ஸாம்ப்ரதம் – மிகவும் அன்மையில்; சோசாமி—பற்றி நான் நினைத்துக்கொண்டு இருக்கிறேன்; ரஹிதம்—இல்லாது; லோகம்—கிரகங்கள்; பாப்மனா—அனைத்தும் பாவங்களால்; கலினா—கலியால்; ஈக்ஷிதம்- காணப்படுகிறது.
அவருக்குள் பின்வரும் இயல்புகள் குடிகொண்டுள்ளன: 1. உண்மை, 2. தூய்மை, 3. இரக்கம், 4. கோபத்தைக் கட்டுப் படுத்தும் சக்தி, 5. சுயதிருப்தி, 6. நேர்மை, 7. மனக் கட்டுப்பாடு, 8. புலனுறுப்புக்களின் கட்டுப்பாடு, 9. கடமையுணர்ச்சி, 10.சமத்துவம், 11. பொறுமை, 12. ஒரேசீரான மனநிலை, 13. நம்பிக்கை, 14.ஞானம், 15. புலனின்பத் துறவு, 16. தலைமை வகிக்கும் திறமை, 17. வீரம், 18. வசியம், 19. அனைத்தையும் சாத்தியமாக்கும் சக்தி, 20. சரியான கடமையை நிறைவேற்றல், 21. பூரண சுதந்திரம் 22. திறமை, 23. எல்லா அழகுகளிலும் முழுமை, 24. அமைதி 25. இளகிய மனம், 26. புத்திசாதுர்யம், 27. மரியாதை, 28. பெருந்தன்மை, 29.உறுதி, 30.எல்லா அறிவிலும் பூரணத்துவம், 31. நன்கு நிறைவேற்றும் திறமை, 32. எல்லா புலனின்பப் பொருட்களையும் பெற்றிருத்தல், 33. மகிழ்ச்சி, 34. அசைக்க முடியாத தன்மை, 35. விசுவாசம் 36. புகழ், 37. வழிபடும் தன்மை, 38. அகம்பாவம் இல்லா நிலை 39. இருத்தல் (பரம புருஷராக), 40. நித்தியத் தன்மை மற்றும் பல்வேறு உன்னத குணங்கள், இவையனைத்தும் அவரிடமிருந்து ஒருபோதும் பிரிக்க முடியாதபடி அவரிடம் நித்தியமாக உள்ளவையாகும். அப்பரம புருஷர், எல்லா நற்குணங்களுக்கும், அழகுக்கும் பிறப்பிடமான பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், பூமியில் அவர் நிகழ்த்திய உன்னதமான லீலைகளை இப்பொழுது முடித்துக் கொண்டு விட்டார். அவர் இல்லாத இந்நேரத்தில், கலி அதன் ஆதிக்கத்தை எல்லா இடங்களிலும் பரவச் செய்துள்ளது. எனவே இந்நிலையைக் கண்டு நான் வருத்தப்படுகிறேன்.
பதம் 1.16.31
ஆத்மானம் சானுசோசாமி பவந்தம் சாம்ரோத்தமம்
தேவான் பித்ரூன் ருஷீன் ஸா தூன் ஸர்வான் வர்ணாம்ஸ் ததாஸ்ரமான்
ஆத்மானம்- என்னை; ச-மேலும்; அனுசோசாமி—கவலைப் படுகிறேன்; பவந்தம்—உன்னை; ச-தவிரவும்; அமரஉத்தமம்- தேவர்களிலேயே சிறந்த; தேவான்—தேவர்களைப் பற்றியும்; பித்ரூன்- பித்ருலோக வாசிகளைப் பற்றியும்; ரூஷீன் – ரிஷிகளைப் பற்றியும்; ஸாதூன்- பக்தர்களைப் பற்றியும்; ஸர்வான்—அவர்கள் அனைவரும்; வர்ணான்-சமூக பிரிவுகள்; ததா-அவ்வாறே; ஆஸ்ரமான்-மனித சமூகத்தின் ஆன்மீக பிரிவுகள்.
நான் என்னைப் பற்றியும், தேவர்களில் சிறந்தவரான உம்மைப் பற்றியும், தேவர்கள், ரிஷிகள், பித்ருலோக வாசிகள், பகவத் பக்தர்கள் மற்றும் மனித சமூகத்தில் வர்ணாஸ்ரம முறையைப் பின்பற்றுபவர்கள் ஆகிய அனைவரைப் பற்றியும் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்.
பதங்கள் 1.16.32 – 1.16.33
ப்ரஹ்மாதயோ பஹு-திதம் யத் அபாங்க-மோக்ஷ
காமாஸ் தப: ஸமசரன் பகவத்-ப்ரபன்னா:
ஸா ஸ்ரீ: ஸ்வ-வாஸம் அரவிந்த-வனம் விஹாய
யத்-பாத-ஸெளபகம் அலம் பஜதே ‘நுரக்தா
தஸ்யாஹம் அப்ஜ-குலிசாங்குச-கேது-கேதை:
ஸ்ரீ-மத்பதைர் பகவத: ஸமலங்க்ருதாங்கீ
த்ரீன் அத்யரோச உபலப்ய ததோ விபூதிம்
லோகான் ஸ மாம் வ்யஸ்ருஜத் உத்ஸ்மயதீம் தத்-அந்தே
ப்ரஹ்ம-ஆதய -பிரம்மாவைப் போன்ற தேவர்கள்; பஹுதிதம்- பல நாட்களாக; யத்—அதிர்ஷ்ட தேவதையான லக்ஷ்மியின்; அபாங்க மோ- அருட்பார்வை; காமா:-அதில் விருப்பங்கொண்டு; தப: தவங்கள்; ஸமசரன்:- நிறைவேற்றும்; பகவத்-பரம புருஷரிடம்; ப்ரபன்னா:சரணடைந்தனர்; ஸா- அவள் (லக்ஷ்மி தேவி); ஸ்ரீ: ஸ்ரீதேவி: ஸ்வவாஸம்—அவளது சொந்த வசிப்பிடம்; அரவிந்த-வனம்-தாமரைவனம்; விஹாய—துறந்து: யத்-யாருடைய; பாத- பாதங்கள்; ஸௌபகம்- ஆனந்தமயமான; அலம்- தயக்கமின்றி; பஜதே- வழிபடுகிறாள்; அநுரக்தா-பற்றுக் கொண்டு; தஸ்ய அவரது; அஹம்-நான்; அப்ஜ- தாமரை மலர்; குலிச-மின்னல்; அங்குச-அங்குசம்; கேது— கொடி; கேதை:- அடையாளங்கள்; ஸ்ரீமத்—அனைத்து செல்வங்களுக்கும் உரிமையாளர்; பதை- உள்ளங்கால்களால்; பகவத:-பரம புருஷரின்; ஸமலங்க்குதஅங்கீ- அவ்வாறு அலங்கரிக்கப்பட்ட உடலை உடையவர்; த்ரீன்-மூன்று; அதி- விலக்கி; அரோசே-அழகாக அலங்கரிக்கப்பட்ட; உபலப்ய- அடைந்து; தத:-அதன் பிறகு; விபூதிம் – விசேஷ சக்திகள்; லோகான்— உலகங்கள்; ஸ—அவர்; மாம்—என்னை; வ்யஸ்ருஜத்- கைவிட்டார்; உத்ஸ்மயதீம்-பெருமைப்படும்பொழுது ; தத்-அந்தே- இறுதியில்.
யாருடைய அருட்பார்வையை எதிர்பார்த்து, பிரம்மாவைப் போன்ற தேவர்களும் பல நாட்களாக பரம புருஷரிடம் சரணாகதி அடைந்திருந்தனரோ, அந்த அதிர்ஷ்ட தேவதையான லக்ஷ்மி தேவி, தாமரை வனத்திலுள்ள தமது சொந்த வசிப்பிடத்தையும் துறந்து, பகவானுடைய தாமரைப் பாதங்களுக்குத் தொண்டு செய்வதில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டாள். பகவானின் தாமரைப் பாதங்களைக் குறிக்கும் அடையாளங்களான கொடி, மின்னல், அங்குசம் மற்றும் தாமரைப் பூ ஆகிய சின்னங்களால் நான் அலங்கரிக்கப்பட்டிருந்தேன். இதனால் மூவுலக செல்வங்களையும் மிஞ்சிவிடக்கூடிய விசேஷ சக்திகளை நான் பெற்றிருந்தேன். ஆனால் இறுதியில், நான் பெரும் அதிர்ஷ்டசாலி என்று நினைத்தபொழுது, பகவான் என்னைப் பிரிந்து சென்றுவிட்டார்.
பதம் 1.16.34
யோ வை மமாதிபரம் ஆஸூர-வம்ச-ராஜ்னாம்
அக்ஷௌஹிணீ -சதம் அபானுதத் ஆத்ம-தந்த்ர:
த்வாம் துஹ்ஸ்தம் ஊன-பதம் ஆத்மனி பௌருஷேண
ஸம்பாதயம் யதுஷு ரம்யம் அபிப்ரத் அங்கம்
ய-யாரொருவர்; வை—நிச்சயமாக; மம- எனது; அதிபரம் அதிக பாரம்; ஆஸூரவம்ச-நாஸ்திகர்கள்; ராஜ்னாம்—அரசர்களின்; அக்ஷௌ—ஒருஅட்சௌணி (ஒரு அட்சௌணி எனும் படைப்பிரிவு 21,870 தேவர்களையும், 21,870 யானைகளையும், 109,350 காலட்படை வீரர்களையும் மற்றும் 65,610 குதிரைகளையும் கொண்டதாகும்); சதம்—நூற்றுக்கணக்கான இத்தகைய பிரிவுகள்; அபானுதத்—அழிக்கப் பட்டனர்; ஆத்ம-தந்த்ர:-எல்லா தேவைகளையும் கொண்ட; த்வாம்- உமக்கு; துஹ்ஸ்தம்-கஷ்டத்தில் ஆழ்த்தப்பட்டீர்; ஊன-பதம்- கால் ஊனமாகி; ஆத்மனி—அந்தரங்க; பௌருஷேண – சக்தியினால்; ஸம்பாதயன்- நிறைவேற்றுவதற்காக; யதுஷுயது- வம்சத்தில்; ரம்யம்—உன்னத அழகுடைய; அபிப்ரத்—ஏற்றார்; அங்கம் – உடலை.
தர்ம சொரூபியே, நாஸ்திகர்களான அரசர்களால் அணிவகுக்கப்பட்ட அதிகமான படைப் பிரிவுகளினால் நான் அதிக சுமை ஏற்றப்பட்டவளானேன். பரம புருஷரின் கருணையினால் எனது சுமை குறைக்கப்பட்டது. இதைப் போன்றுதான் நீரும் கால்கள் ஊனப்படுத்தப்பட்டு, நிற்க வலுவில்லாமல் துன்புறுத்தப்பட்டீர். எனவே உமக்கும் உதவுவதற்காகவே பகவான் அவரது அந்தரங்க சக்தியின் வாயிலாக யது வம்சத்தில் அவதரித்தார்.
பதம் 1.16.35
கா வா ஸ்ஹேத விரஹம் புருஷோத்தமஸ்ய
ப்ரேமாவலோக-ருசிர-ஸ்மித-வல்கு-ஜல்பை:
ஸ்தைர்யம் ஸமானம் அஹரன் மது-மானினீனாம்
ரோமோத்ஸவோ மம-யத் அங்ரி-விடங்கிதாயா:
கா-யார்தான்;வா-அல்லது; ஸஹேத- தாங்கிக்கொள்ள முடியும்; விரஹம்- பிரிவை; புருஷ- உத்தமஸ்ய- பரம புருஷ பகவானின்; ப்ரேம – அன்பான; அவலோக-பார்வை; ருசிரஸ்மித-இன்பமூட்டும் புன்னகை; வல்கு-ஜல்பை:-அன்பார்ந்த வேண்டுகோள்கள்; ஸ்தைர்யம்—கடுமை; ஸமானம்-கடுங்கோபம்; அஹரத்-வென்றார்; மது— மனதுக்கினியவர்களான; மானினீனாம் – சத்தியபாமாவைப் போன்ற பெண்கள்; ரோமஉத்ஸவ:-இன்பத்தால் மெய்சிலிர்க்கும்; மம- எனது; யத்-யாருடைய; அங்ரி-பாதங்கள்; விடங்கிதாயா: அச்சிடப்பட்டது.
எனவே அப்பரம புருஷ பகவானின் பிரிவுத் துயரை யாரால்தான் தாங்கிக்கொள்ள இயலும்? அவரது அன்பான இனிய புன்னகையாலும், இன்பமூட்டும் பார்வையாலும் மற்றும் அன்பார்ந்த வேண்டுகோள்களாலும் சத்தியபாமாவைப் போன்ற அவரது மனதுக்கினியவர்களின் கடுமையையும், கடுங்கோபத்தையும் கூட அவரால் வெல்ல முடிந்தது. எனது (பூமியின்) மேற்பரப்பில் அவர் நடந்து சென்றபோது, அவரது திருவடித் தூசிகளினால் நான் மூழ்கடிக்கப்பட்டேன். எனவே இன்பத்தினால் மெய்சிலிர்த்ததுபோல், அதிகமான புற்களினால் நான் மூடப்பட்டேன்.
பதம் 1.16.36
தயோர் ஏவம் கதயதோ: ப்ருதிவீ-தர்மயோஸ் ததா
பரீக்ஷின் நாம ராஜர்ஷி: ப்ராப்த: ப்ராசீம் ஸரஸ்வதீம்
தயோ:- அவர்களுக்கிடையில்; ஏவம்- இவ்வாறாக; கதயதோ- உரையாடலில் ஈடுபட்டிருந்தனர்; ப்ருதிவீ-பூமியும்; தர்மயோ:-தர்ம தேவதையும்; ததா—அப்போது; பரீக்ஷித்-பரீட்சித்து மகாராஜன்; நாம- எனும் பெயர் கொண்ட; ராஜர்ஷி:-அரசர்களுக்கு இடையில் ஒரு ரிஷி போன்ற; ப்ராப்த:-அடைந்தார்; ப்ராசீம்-கிழக்கு நோக்கி ஓடும்; ஸரஸ்வதீம் – சரஸ்வதி நதியை.
இவ்வாறாக பூமியும், தர்ம தேவதையும் உரையாடலில் ஈடுபட்டிருந்தபொழுது, ராஜரிஷியான பரீட்சித்து மகாராஜன், கிழக்கு நோக்கி ஓடிய சரஸ்வதி நதிக் கரையை அடைந்தார்.
ஸ்ரீமத் பாகவதம், முதல் காண்டத்தின் “பரீட்சித் கலியுகத்தை வரவேற்ற விதம்” எனும் தலைப்பைக் கொண்ட, பதினாறாம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றது.