அத்தியாயம் – 16
பரீட்சித்து கலியுகத்தை வரவேற்ற விதம்
பதம் 1.16.1 : சூத கோஸ்வாமி கூறினார்: கற்றறிந்த பிராமணர்களே, பரீட்சித்து மகாராஜன் பிறகு பகவானின் மிகச்சிறந்த பக்தராக இருந்து, சிறந்த பிராமணர்களின் உபதேசங்களின்படி உலகை ஆளத் துவங்கினார். அவர் பிறந்த சமயத்தில் கைதேர்ந்த ஜோதிடர்கள் கூறிய அச்சிறந்த குணங்களுக்கேற்ப அவர் ஆட்சிபுரிந்தார்.
பதம் 1.16.2 : பரீட்சித்து மகாராஜன் உத்தர மகாராஜனின் மகளைத் திருமணம் புரிந்து, ஜனமேஜய மகாராஜனை தலைமையாகக் கொண்ட நான்கு மகன்களைப் பெற்றார்.
பதம் 1.16.3 : பரீட்சித்து மகாராஜன், தமக்கு வழிகாட்டுவதற்காக கிருபாச்சாரியரை ஆன்மீக குருவாகத் தேர்ந்தெடுத்தபின், கங்கைக் கரையில் மூன்று அஸ்வமேத யாகங்களை இயற்றினார். ஏவலாட்களுக்குத் தகுந்த சன்மானங்களுடன் இவை நிறைவேற்றப்பட்டன. மேலும் இந்த யாகங்களின் போது சாதாரண மனிதனால் கூட தேவர்களைக் காண முடிந்தது.
பதம் 1.16.4 : ஒருமுறை, உலகை வென்று வருவதற்காக புறப்பட்டுச் சென்ற பரீட்சித்து மகாராஜன், வழியில் ஓரரசரைப் போல் மாறுவேடத்தில் இருந்தவரும், ஒரு சூத்திரனை விடத் தாழ்ந்தவனுமான கலிபுருஷன், ஒரு பசு மற்றும் எருதின் கால்களை காயப்படுத்துவதைக் கண்டார். அவனை தண்டிப்பதற்காக உடனே அவனைக் கைப்பற்றினார்.
பதம் 1.16.5 : சௌகன ரிஷி கேட்டார். ஓர் அரசரைப் போல் உடையணிந்து, ஒரு பசுவைத் தன் காலால் உதைத்த அவன் சூத்திரர்களிலேயே இழிவானவன் என்பதால், அவனை ஏன் பரீட்சித்து மகாராஜன் தண்டித்ததோடு விட்டுவிட்டார். இவ்விஷயங்களெல்லாம் பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்குச் சம்பந்தம் உள்ளவையாக இருக்குமானால் அவற்றை தயவுகூர்ந்து விவரிக்க வேண்டுகிறேன்.
பதம் 1.16.6 : பகவத் பக்தர்கள் பகவானின் தாமரைப் பாதங்களிலிருந்து கிடைக்கும் தேனைச் சுவைப்பதில் பழக்கப்பட்டவர்களாவர். மதிப்பு மிக்க ஒருவரது வாழ்வையே வீணாக்கக்கூடிய விஷயங்களால் என்ன பயன்?
பதம் 1.16.7 : ஓ சூத கோஸ்வாமி, மரணத்திலிருந்து விடுபட்டு நித்திய வாழ்வைப் பெற விரும்புபவர்களும் மக்களுக்கிடையில் உள்ளனர். மரண தேவரான யமராஜனை அழைப்பதன் மூலமாக அவர்கள் மரணத்தின் பிடியிலிருந்து தப்புகின்றனர்.
பதம் 1.16.8 : அனைவருக்கும் மரணத்தை விளைவிப்பவரான யமராஜன் இங்கிருக்கும்வரை, ஒருவருக்கும் மரணம் ஏற்படாது. பகவானின் பிரதிநிதியும், மரணத்திற்கு அதிபதியுமான யமராஜனை மாமுனிவர்கள் அழைத்துள்ளனர். அவரது கட்டுப்பாட்டிலுள்ள ஜீவராசிகள், பகவானுடைய திவ்ய லீலைகளைக் கொண்ட இக்கதையின் வடிவிலுள்ள இந்த அமிர்தத்தை கேட்டுப் பயன்பெற வேண்டும்.
பதம் 1.16.9 : அற்ப அறிவும், குறுகிய ஆயுளும் கொண்ட சோம்பேறி மனிதர்கள் இரவை உறக்கத்திலும், பகலை பயனற்ற செயல்களிலும் கழித்துவிடுகின்றனர்.
பதம் 1.16.10 : சூத கோஸ்வாமி கூறினார்: குரு சாம்ராஜ்ஜியத்தின் தலைநகரில் பரீட்சித்து மகாராஜன் வாழ்ந்து வந்தபொழுது, கலி யுகத்தின் அறிகுறிகள் அவரது இராஜ்ஜியத்திற்குள் ஊடுருவத் துவங்கின. இதைப் பற்றி கேள்விப்பட்ட அவருக்கு இவ்விஷயம் அவ்வளவு மகிழ்ச்சி தருவதாக இல்லை. ஆயினும் இது அவருக்கு போரிடுவதற்குரிய ஒரு வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தது. வில்லையும், அம்புகளையும் கைகளில் ஏந்திய அவர் யுத்தச் செயல்களுக்கு தம்மைத் தயார் செய்து கொண்டார்.
பதம் 1.16.11 : பரீட்சித்து மகாராஜன் கருநிற குதிரைகள் பூட்டப்பட்ட இரதத்தில் அமர்ந்தார். அவரது கொடி சிங்கத்தின் அடையாளம் பொறிக்கப் பட்டதாக இருந்தது. இவ்வாறு அலங்கரிக்கப்பட்டு, தேரோட்டிகள், குதிரைப்படை, யானைகள் மற்றும் காலாட்படை ஆகியவற்றால் சூழப்பட்டவாறு, எல்லா திசைகளையும் வெற்றி கொள்வதற்காக அவர் தலைநகரிலிருந்து புறப்பட்டார்.
பதம் 1.16.12 : பரீட்சித்து மகாராஜன் பிறகு பத்ராஸ்வம், கேதுமாலம், பாரதம், உத்தர குருவர்ஷம், கிம்புருஷம் முதலான மண்ணுலகின் எல்லா பகுதிகளையும் வென்று அவற்றின் அரசர்களிடமிருந்து கப்பம் வசூலித்தார்.
பதங்கள் 1.16.13 – 1.16.15 : அரசர் சென்ற இடமெல்லாம், பகவானின் பக்தர்களான அவரது முன்னோர்களின் பெருமைகளைப் பற்றியும், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பெருமைக்குரிய செயல்களைப் பற்றியும் அவர் தொடர்ந்து கேள்விப்பட்டார். அஸ்வத்தாமனுடைய சக்தி வாய்ந்த ஆயுதத்தின் வெப்பத்திலிருந்து தாம் பகவானால் காப்பாற்றப்பட்டதைப் பற்றியும் அவர் கேள்விப்பட்டார். பிருதாவிற்கு பகவான் கேசவனிடமிருந்த ஆழ்ந்த சிநேகத்தின் காரணத்தால், விருஷ்ணி மற்றும் பிருதாவின் வம்சத்தினருக்கு இடையிலிருந்த ஆழ்ந்த அன்பைப் பற்றியும் மக்கள் ஞாபகப்படுத்திக் கூறினர். இத்தகைய பெருமைகளைப் புகழ்ந்து பாடியவர்களிடம் மிகவும் திருப்தியடைந்த அரசர், பெரும் மகிழ்ச்சியுடன் தமது கண்களைத் திறந்தார். பெருந்தன்மையின் காரணத்தால், விலையுயர்ந்த ஆபரணங்களையும், துணிமணிகளையும் அவர்களுக்கு பரிசாக அளித்தார்.
பதம் 1.16.16 : பிரபஞ்சம் முழுவதிலும் வணங்கப்படுபவரான பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் (விஷ்ணு), அவரது காரணமற்ற கருணையினால், ஒரு சேவகனைப் போல் பாண்டவர்களின் சொற்படி நடந்து, வயதில் இளையவரைப் போல் வந்தனங்கள் செய்து, அவர்களது விருப்பப்படி, ஒரு தேரோட்டி, தலைவர், தூதர், நண்பர் மற்றும் இரவு காவற்காரர் முதலான எல்லா வகையான சேவைகளையும் அவர்களுக்குச் செய்தார். இதையெல்லாம் கேட்ட பரீட்சித்து மகாராஜனுக்கு, பகவானின் கமல பாதங்களில் பக்தி பெருக்கெடுத்தது.
பதம் 1.16.17 : பரீட்சித்து மகாராஜன் தமது முன்னோர்களின் நற்செயல்களைப் பற்றி கேட்கும், அவற்றைப் பற்றிய சிந்தனையில் மனதை ஆழ்த்தியும் தமது நாட்களைக் கழித்து வந்த சமயத்தில் நடந்த அதிசயத்தைக் கூறுகிறேன் கேளுங்கள்.
பதம் 1.16.18 : மதக் கொள்கைகளின் சொரூபமான தர்மம், ஓர் எருதின் வடிவில் திரிந்து கொண்டிருந்தது. தன் குழந்தையை இழந்து துன்புறும் ஒரு தாய் போல் காணப்பட்ட, பசுவின் வடிவிலிருந்த பூமித் தாயை அது சந்தித்தது. பொலிவிழந்து காணப்பட்ட பசுவின் கண்களில் கண்ணீர் ததும்பியது. இவ்வாறாக தர்மம் பூமியைப் பார்த்து பின்வருமாறு விசாரித்தது.
பதம் 1.16.19 : தரும தேவதை (ஓர் எருதின் வடிவில் இருந்து கொண்டு) வினவியது: நீ ஆரோக்கியத்தையும் மகிழ்ச்சியையும் இழந்துவிட்டாயா? நீ ஏன் துன்ப நிழலால் மூடப்பட்டிருக்கிறாய்? நீ கருப்பாகி விட்டாய் என்று உன் முகமே காட்டுகிறது. ஏதேனும் உள்நோயினால் நீ துன்புறுகிறாயா அல்லது வெகுதூரத்திலுள்ள யாரோ ஒரு உறவினரைப் பற்றி நீ நினைத்துக்கொண்டு இருக்கிறாயா?
பதம் 1.16.20 : நான் எனது மூன்று கால்களை இழந்து இப்பொழுது ஒரே காலில் நின்று கொண்டிருக்கிறேன். என் நிலைமையைக் கண்டு நீ வருந்துகிறாயா? அல்லது இனிமேல் சட்டவிரோதமாக மாமிசம் உண்பவர்கள் உன்னை துஷ்பிரயோகம் செய்யப்போகிறார்கள் என்பதற்காக நீ பெருங்கவலையில் ஆழ்ந்திருக்கிறாயா? அல்லது தற்போது யாகங்கள் செய்யப்படாததால், தேவர்கள் இப்பொழுது தங்களுக்குரிய யாகப் பங்கை இழந்திருப்பதைக் குறித்து நீ வருந்துகிறாயா? அல்லது பசியாலும், பஞ்சத்தாலும் ஜீவராசிகளுக்கு ஏற்பட்டுள்ள துன்பங்களைக் குறித்து நீ விசனப்படுகிறாயா?
பதம் 1.16.21 : அயோக்கியர்களால் கேவலமான நிலையில் விட்டுச் செல்லப்பட்ட மகிழ்ச்சியற்ற பெண்களுக்காகவும், குழந்தைகளுக்காகவும் நீ விசனப்படுகிறாயா? அல்லது மதக் கொள்கைகளுக்கு எதிராக செயற்படுவதில் பற்றுக் கொண்ட பிராமணர்களால் கல்வித் தெய்வம் கையாளப்படுவதைக் குறித்து நீ கவலைப்படுகிறாயா? அல்லது பிராமணப் பண்பாட்டை மதிக்காத ஆட்சிபுரியும் குடும்பங்களில் பிராமணர்கள் புகலிடம் கொண்டிருப்பதைக் கண்டு நீ வருந்துகிறாயா?
பதம் 1.16.22 : கலி யுகத்தின் ஆதிக்கத்தால், பெயரளவேயான நிர்வாகிகள் இப்பொழுது குழப்பமடைந்துள்ளனர். இதன் விளைவாக அவர்கள் அரசாங்க விவகாரங்களை எல்லாம் ஒழுங்கற்ற நிலைக்கு உள்ளாக்கியுள்ளனர். இந்த ஒழுங்கின்மையைக் குறித்தா இப்பொழுது நீ வருந்துகிறாய்? உண்ணுதல், உறங்குதல், பருகுதல், உடலுறவு கொள்ளுதல் போன்றவைகளின் சட்டதிட்டங்களை இப்பொழுது பொதுமக்கள் பின்பற்றுவதில்லை. மேலும் இத்தகைய செயல்களை எந்த இடத்திலும் செய்யக்கூடிய சுபாவத்தையும் அவர்கள் கொண்டுள்ளனர். உன்னுடைய வருத்தத்திற்கு இதுவா காரணம்?
பதம் 1.16.23 : பூமித்தாயே, பரம புருஷ பகவான் ஹரி, கனமான உனது பாரத்தைக் குறைப்பதற்காகவே பகவான் ஸ்ரீ கிருஷ்ணராக அவதரித்தார். இங்கு அவர் நிகழ்த்திய செயல்கள் அனைத்தும் திவ்யமானவையும், முக்திக்கான வழியை அமைப்பனவும் ஆகும். அவரை இப்பொழுது நீ இழந்துவிட்டால் அனேகமாக அச்செயல்களைப் பற்றி சிந்தித்து, அவற்றின் மறைவுக்காக இப்பொழுது நீ வருந்துகிறாய் என்று நினைக்கிறேன்.
பதம் 1.16.24 : தாயே, நீ எல்லா செல்வங்களுக்கும் பிறப்பிடமாவாய். எதனால் இத்தகைய பலவீனமான ஒரு நிலையை நீ அடைந்தாயோ, அப்பெருந்துன்பத்திற்கான மூல காரணத்தை தயவுசெய்து எனக்கு அறிவிப்பாயாக. மிகவும் சக்தி வாய்ந்தவரையும் தோல்வியடையச் செய்யும், சக்தி வாய்ந்த காலத்தின் ஆதிக்கம்தான், தேவர்களாலும் பூஜிக்கப்பட்ட உனது செல்வங்களை எல்லாம் பலவந்தமாக பறித்துக் கொண்டிருக்கும் என நான் நினைக்கிறேன்.
பதம் 1.16.25 : (ஒரு பசுவின் உருவிலுள்ள) பூமி தேவதை (ஓர் எருதின் உருவிலுள்ள) தர்ம தேவதைக்கு பதிலளித்தது: ஓ தர்மமே, என்னிடம் விசாரித்ததை எல்லாம் நீ அறிவாயாக. அக்கேள்விகளுக்கெல்லாம் நான் பதிலளிக்க முயற்சிக்கிறேன். முன்பு நீயும் நான்கு கால்களுடன்தான் இருந்தாய். அப்போது பகவானின் கருணையால் பிரபஞ்சம் முழுவதிலும் நீ மகிழ்ச்சியைப் பெருக்கினாய்.
பதங்கள் 1.16.26 – 1.16.30 : அவருக்குள் பின்வரும் இயல்புகள் குடிகொண்டுள்ளன: 1. உண்மை, 2. தூய்மை, 3. இரக்கம், 4. கோபத்தைக் கட்டுப் படுத்தும் சக்தி, 5. சுயதிருப்தி, 6. நேர்மை, 7. மனக் கட்டுப்பாடு, 8. புலனுறுப்புக்களின் கட்டுப்பாடு, 9. கடமையுணர்ச்சி, 10.சமத்துவம், 11. பொறுமை, 12. ஒரேசீரான மனநிலை, 13. நம்பிக்கை, 14.ஞானம், 15. புலனின்பத் துறவு, 16. தலைமை வகிக்கும் திறமை, 17. வீரம், 18. வசியம், 19. அனைத்தையும் சாத்தியமாக்கும் சக்தி, 20. சரியான கடமையை நிறைவேற்றல், 21. பூரண சுதந்திரம் 22. திறமை, 23. எல்லா அழகுகளிலும் முழுமை, 24. அமைதி 25. இளகிய மனம், 26. புத்திசாதுர்யம், 27. மரியாதை, 28. பெருந்தன்மை, 29.உறுதி, 30.எல்லா அறிவிலும் பூரணத்துவம், 31. நன்கு நிறைவேற்றும் திறமை, 32. எல்லா புலனின்பப் பொருட்களையும் பெற்றிருத்தல், 33. மகிழ்ச்சி, 34. அசைக்க முடியாத தன்மை, 35. விசுவாசம் 36. புகழ், 37. வழிபடும் தன்மை, 38. அகம்பாவம் இல்லா நிலை 39. இருத்தல் (பரம புருஷராக), 40. நித்தியத் தன்மை மற்றும் பல்வேறு உன்னத குணங்கள், இவையனைத்தும் அவரிடமிருந்து ஒருபோதும் பிரிக்க முடியாதபடி அவரிடம் நித்தியமாக உள்ளவையாகும். அப்பரம புருஷர், எல்லா நற்குணங்களுக்கும், அழகுக்கும் பிறப்பிடமான பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், பூமியில் அவர் நிகழ்த்திய உன்னதமான லீலைகளை இப்பொழுது முடித்துக் கொண்டு விட்டார். அவர் இல்லாத இந்நேரத்தில், கலி அதன் ஆதிக்கத்தை எல்லா இடங்களிலும் பரவச் செய்துள்ளது. எனவே இந்நிலையைக் கண்டு நான் வருத்தப்படுகிறேன்.
பதம் 1.16.31 : நான் என்னைப் பற்றியும், தேவர்களில் சிறந்தவரான உம்மைப் பற்றியும், தேவர்கள், ரிஷிகள், பித்ருலோக வாசிகள், பகவத் பக்தர்கள் மற்றும் மனித சமூகத்தில் வர்ணாஸ்ரம முறையைப் பின்பற்றுபவர்கள் ஆகிய அனைவரைப் பற்றியும் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்.
பதங்கள் 1.16.32 – 1.16.33 : யாருடைய அருட்பார்வையை எதிர்பார்த்து, பிரம்மாவைப் போன்ற தேவர்களும் பல நாட்களாக பரம புருஷரிடம் சரணாகதி அடைந்திருந்தனரோ, அந்த அதிர்ஷ்ட தேவதையான லக்ஷ்மி தேவி, தாமரை வனத்திலுள்ள தமது சொந்த வசிப்பிடத்தையும் துறந்து, பகவானுடைய தாமரைப் பாதங்களுக்குத் தொண்டு செய்வதில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டாள். பகவானின் தாமரைப் பாதங்களைக் குறிக்கும் அடையாளங்களான கொடி, மின்னல், அங்குசம் மற்றும் தாமரைப் பூ ஆகிய சின்னங்களால் நான் அலங்கரிக்கப்பட்டிருந்தேன். இதனால் மூவுலக செல்வங்களையும் மிஞ்சிவிடக்கூடிய விசேஷ சக்திகளை நான் பெற்றிருந்தேன். ஆனால் இறுதியில், நான் பெரும் அதிர்ஷ்டசாலி என்று நினைத்தபொழுது, பகவான் என்னைப் பிரிந்து சென்றுவிட்டார்.
பதம் 1.16.34 : தர்ம சொரூபியே, நாஸ்திகர்களான அரசர்களால் அணிவகுக்கப்பட்ட அதிகமான படைப் பிரிவுகளினால் நான் அதிக சுமை ஏற்றப்பட்டவளானேன். பரம புருஷரின் கருணையினால் எனது சுமை குறைக்கப்பட்டது. இதைப் போன்றுதான் நீரும் கால்கள் ஊனப்படுத்தப்பட்டு, நிற்க வலுவில்லாமல் துன்புறுத்தப்பட்டீர். எனவே உமக்கும் உதவுவதற்காகவே பகவான் அவரது அந்தரங்க சக்தியின் வாயிலாக யது வம்சத்தில் அவதரித்தார்.
பதம் 1.16.35 : எனவே அப்பரம புருஷ பகவானின் பிரிவுத் துயரை யாரால்தான் தாங்கிக்கொள்ள இயலும்? அவரது அன்பான இனிய புன்னகையாலும், இன்பமூட்டும் பார்வையாலும் மற்றும் அன்பார்ந்த வேண்டுகோள்களாலும் சத்தியபாமாவைப் போன்ற அவரது மனதுக்கினியவர்களின் கடுமையையும், கடுங்கோபத்தையும் கூட அவரால் வெல்ல முடிந்தது. எனது (பூமியின்) மேற்பரப்பில் அவர் நடந்து சென்றபோது, அவரது திருவடித் தூசிகளினால் நான் மூழ்கடிக்கப்பட்டேன். எனவே இன்பத்தினால் மெய்சிலிர்த்ததுபோல், அதிகமான புற்களினால் நான் மூடப்பட்டேன்.
பதம் 1.16.36 : இவ்வாறாக பூமியும், தர்ம தேவதையும் உரையாடலில் ஈடுபட்டிருந்தபொழுது, ராஜரிஷியான பரீட்சித்து மகாராஜன், கிழக்கு நோக்கி ஓடிய சரஸ்வதி நதிக் கரையை அடைந்தார்.