பதம் 1.13.1. : ஸ்ரீ சூத கோஸ்வாமி கூறினார்: தீர்த்த யாத்திரையை மேற்கொண்டிருந்த பொழுது விதுரர், மாமுனிவரான மைத்ரேயரிடமிருந்து ஆத்ம கதியைப் பற்றிய அறிவைப் பெற்றுக் கொண்டதும் ஹஸ்தினாபுரத்திற்குத் திரும்பிச் சென்றார். அவர் விரும்பியதைப் போலவே அவ்விஷயத்தில் அவர் நன்கு தேர்ச்சி பெற்றவரானார்.
பதம் 1.13.2 : பற்பல கேள்விகளைக் கேட்டு பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் உன்னத அன்புத் தொண்டில் நிலைபெற்றபின், மைத்ரேய முனிவரிடம் மேற்கொண்டு கேள்விகளைக் கேட்பதை நிறுத்திக் கொண்டார்.
பதங்கள் 1.13.3 – 1.13.4 : விதூரர் அரண்மனைக்கு திரும்பி வந்ததைக் கண்டதும், யுதிஷ்டிர மகாராஜன், அவரது இளைய சகோதரர்கள், திருதராஷ்டிரர், ஸாத்யகி, சஞ்சயன், கிருபாச்சாரியர், குந்தி, காந்தாரி, திரௌபதி, சுபத்ரா, உத்திரா, கிருபீ, கௌரவர்களின் மற்ற பல மனைவிகள் மற்றும் குழந்தைகளுடன் கூடிய மற்ற பெண்கள் ஆகிய அனைவரும் பெரும் மகிழ்ச்சியுடன் அவரை நோக்கி விரைந்தனர். நீண்ட காலத்திற்கும் பிறகு உணர்வை திரும்பப் பெற்றவர்களைப் போல் அவர்கள் காணப்பட்டவர்.
பதம் 1.13.5 : உயிர் திரும்பி வந்ததைப் போல் பெரும் மகிழ்ச்சியுடன் அவர்கள் அனைவரும் அவரை நோக்கிச் சென்றனர். அவர்கள் வணக்கங்களை பரிமாறிக் கொண்டபின் ஆலிங்கனத்தால் ஒருவரையொருவர் வரவேற்றுக் கொண்டனர்.
பதம் 1.13.6 : நீண்ட பிரிவு மற்றும் பெரும் ஆவல் ஆகியவற்றினால் அவர்கள் அனைவரும் பாசத்துடன் ஆனந்தக் கண்ணீர் வடித்தனர், யுதிஷ்டிர மகாராஜன் பிறகு ஆசனங்களுக்கும் ஒரு உபசரணைக்கும் ஏற்பாடு செய்தார்.
பதம் 1.13.7 : விதுரர் விருதுண்டு, போதுமான ஓய்வு எடுத்துக் கொண்டபின், சுகமாக ஆசனத்தில் அமர்ந்திருந்தார். பிறகு அரசர் அவரிடம் பேசத் துவங்கினார். அங்கு கூடியிருந்தவர்களும் அவர் பேசுவதைக் கேட்டனர்.
பதம் 1.13.8 : யுதிஷ்டிர மகாராஜன் கூறினார்: சிற்றப்பா, நீங்கள் எப்படி எங்களையும் எங்கள் தாயாரையும் எல்லா வகையான பேராபத்துக்களில் இருந்து பாதுகாத்து வந்தீர்கள் என்பது உங்களுக்கு நினைவிருக்கிறதா? உங்களுடைய பாராபட்சம், ஒரு பறவையின் இறகுகளைப் போல், கொடிய விஷத்திலிருந்தும், அநியாயமான தீ விபத்திலிருந்தும் எங்களைக் காப்பாற்றியது.
பதம் 1.13.9 : பூமி மீது பிரயாணம் செய்யும்பொழுது, உங்களுடைய வாழ்க்கைத் தேவைகளை எப்படி நீங்கள் கவனித்துக் கொண்டீர்கள்? எந்தெந்த புண்ணிய ஸ்தலங்களிலும், புனித இடங்களிலும் நீங்கள் சேவை செய்தீர்கள்?
பதம் 1.13.10 : என் பெருமானே, தங்களைப் போன்ற மேன்மையுள்ள பக்தர்கள் புண்ணிய ஸ்தலங்களே சொரூபமாக விளங்குகின்றனர். பரம புருஷரை உங்களது இதயத்தில் ஏந்திச் செல்வதால் எல்லா இடங்களையும் தாங்கள், புண்ணிய தீர்த்தங்களாக மாற்றிவிடுகிறீர்கள்.
பதம் 1.13.11 : சிற்றப்பா, துவாரகைக்கு நீங்கள் நிச்சயமாக சென்றிருப்பிர் புனிதமான அந்த இடத்தில், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் சேவையில் மெய்மறந்துள்ள நமது நண்பர்களும், நம் நலத்தில் அக்கறையுள்ளவர்களான யது வம்சத்தினரும் உள்ளனர். நீங்கள் அவர்களை கண்டிருக்கக்கூடும் அல்லது அவர்களைப் பற்றி கேள்விப் பட்டிருக்கக்கூடும். அவர்களனைவரும் மகிழ்ச்சியுடன் வாழ்கிறார்களா?
பதம் 1.13.12 : யுதிஷ்டிர மகாராஜனால் இவ்வாறு கேள்விகள் கேட்கப்பட்ட விதுரர், தாம் அனுபவித்த அனைத்தையும் படிப்படியாக விளக்கினார். யது வம்சத்தின் அழிவைப் பற்றிய செய்தியை மட்டும் அவர் விளக்கவில்லை.
பதம் 1.13.13 : கருணையுள்ளவரான மகாத்மா விதுரரால் எந்த சமயத்திலும் பாண்டவர்களின் துக்கத்தைக் கண்டு அதை சகித்துக்கொள்ள முடியவில்லை. எனவே துன்பங்கள் தானாகவே வருகின்றன என்பதால், விரும்பத்தகாததும், சகிக்க இயலாததுமான இச்சம்பவத்தை அவர் வெளிப்படுத்தவில்லை.
பதம் 1.13.14 : இவ்வாறாக உறவினர்களால் ஒரு தெய்வீக புருஷரை போலவே உபசரிக்கப்பட்ட மகாத்மா விதுரர், அவரது தமையனின் மனோபாவத்தை சீர்படுத்தி மற்றனைவரையும் மகிழ்விப்பதற்காகவே குறிப்பிட்ட காலம்வரை அங்கேயே தங்கினார்.
பதம் 1.13.15 : மந்தவ்ய முனிவரால் சபிக்கப்பட்ட யமராஜன் ஒரு சூத்திரரின் பாகத்தை ஏற்றிருந்த காலம்வரை, பாவிகளைத் தண்டிக்கும் யமராஜனின் பதவியை அர்யமா ஏற்று நடத்தினார்.
பதம் 1.13.16 : இராஜ்ஜியத்தைக் கைப்பற்றியபின், அவரது உயர்ந்த பரம்பரை வழக்கத்தைத் தொடரக்கூடிய தகுதியுள்ள ஒரு பேரனைக் கண்ட யுதிஷ்டிர மகாராஜன் அமைதியாக ஆட்சி புரிந்தார். மேலும் பொதுமக்களை நன்கு நிர்வகிக்கக் கூடியவர்களான அவரது இளைய சகோதரர்களின் ஒத்துழைப்புடன் அவர் அசாதாரணமான ஐஸ்வர்யத்தை அனுபவித்து வந்தார்.
பதம் 1.13.17 : குடும்ப விவகாரங்களில் தீவிர பற்றுக் கொண்டு, அச்சிந்தனையிலேயே எப்பொழுதும் ஆழ்ந்திருப்பவர்களை, வெல்ல முடியாததான நித்திய காலம் அவர்களுக்குத் தெரியாமலேயே அவர்களை வென்றுவிடுகிறது.
பதம் 1.13.18 : மகாத்மா விதுரர் இதையெல்லாம் அறிந்திருந்தார். எனவே அவர் திருதராஷ்டிரரைப் பார்த்து கூறினார்: அன்புள்ள அரசே இங்கிருந்து சீக்கிரமாக வெளியேறுங்கள். தாமதிக்க வேண்டாம். பயம் எப்படி உங்களைப் பற்றிக் கொண்டது என்பதை நீங்களே சற்று கவனித்துப் பாருங்கள்.
பதம் 1.13.19 : அச்சமூட்டும் இச்சூழ்நிலையை இந்த ஜடவுலகிலுள்ள ஒருவராலும் சரிப்படுத்த முடியாது. ஓ பிரபு, நம் அனைவரையும் நெருங்கியிருப்பவர் காலனாகிய பரம புருஷ பகவானேயாவார்.
பதம் 1.13.20 : பரம காலனின் ஆதிக்கத்தில் இருப்பவர்கள் தங்களுக்கும் பிரியமான உயிரையே தியாகம் செய்ய வேண்டியுள்ளது. செல்வம், மரியாதை, குழந்தைகள், நிலம் மற்றும் இல்லம் போன்ற மற்ற பொருட்களைப் பற்றி என்னவென்று கூறுவது.
பதம் 1.13.21 : உங்களுடைய தந்தை, சகோதரர், நண்பர்கள் மற்றும் மகன்கள் ஆகிய அனைவரும் இறந்து விட்டனர். நீங்களும் வாழ்வின் பெரும் பகுதியைக் கழித்து விட்டீர்கள். உங்களுடைய உடலும் முதுமை அடைந்துவிட்டது. மேலும் வேறொருவரின் வீட்டில் நீங்கள் வாழ்ந்து வருகிறீர்கள்.
பதம் 1.13.22 : பிறப்பிலிருந்தே நீங்கள் குருடர், சமீப காலத்திலிருந்து உங்களுக்கு காதும் சரியாகக் கேட்கவில்லை. உங்களுடைய ஞாபக சக்தி குறைந்து விட்டதுடன் புத்தியும் தடுமாறுகிறது. உங்களுடைய பற்கள் தளர்ந்துவிட்டன. உங்களுடைய கல்லீரல் பாதிப்படைந்துள்ளது, மேலும் உங்களுக்கு இருமல், சளித்தொல்லையும் இருக்கிறது.
பதம் 1.13.23 : ஐயோ, ஒரு ஜீவராசிக்கு உயிர் வாழும் ஆசை எவ்வளவு சக்தி வாய்ந்ததாக உள்ளது. அதனாலல்லவா நீர் ஒரு வீடு காக்கும் நாய் போல் வாழ்ந்து, பீமன் உண்ட மிச்ச உணவை ஏற்றுக் கொள்கிறீர்.
பதம் 1.13.24 : யாரை தீ வைத்தும், விஷம் கொடுத்தும் நீர் கொல்ல முயன்றீரோ,யாருடைய மனைவியை நீர் அவமானப்படுத்தினீரோ, யாருடைய செல்வத்தையும், இராஜ்ஜியத்தையும் நீர் ஆக்கிரமித்துக் கொண்டீரோ, அவர்களுடைய தயவில் வாழவேண்டிய இழிவான வாழ்வு இனி தேவையில்லை.
பதம் 1.13.25 : இறக்க மனமில்லாமல், மதிப்பையும், கௌரவத்தையும் தியாகம் செய்து வாழவும் நீர் தயாராக இருந்தபோதிலும், உம்முடைய இந்த உடல் பழைய உடையைப் போல் அழிந்தே தீரும்.
பதம் 1.13.26 : எல்லா கடமைகளிலிருந்தும் விடுபட்டு, யாருமறியாத ஓரிடத்திற்குச் சென்று, அங்கு ஜடவுடல் பயனற்றுப் போகும்போது அதைக் கைவிடுபவன் தீரன் எனப்படுகிறான்.
பதம் 1.13.27 : எவன் தானாகவோ பிறர் உபதேசத்தாலோ இந்த ஜடவுலக இன்பத்தையும், நிலையற்ற தன்மையையும் அறிந்து, இதயத்தில் வாழும் பாம புருஷரிடம் முழு நம்பிக்கைக் கொண்டு, வீட்டை விட்டு வெளியேறுகிறானோ அவன் முதல் தரமான மனிதனாவான்.
பதம் 1.13.28 : எனவே, மக்களின் நற்குணங்களை குறைத்துவிடப் போகும் அக்காலம் விரைவில் வரப் போகிறது என்பதால், உறவினர்களுக்கு அறிவிக்காமல், தயவுசெய்து உடனே வடக்கு நோக்கிப் புறப்படுங்கள்.
பதம் 1.13.29 : இவ்வாறாக அஜமீட குலத்தில் பிறந்த திருதராஷ்டிர மகாராஜன், தற்சோதனை அறிவின் (ப்ரக்ஞா) மூலமாக உறுதியான நம்பிக்கை வரப் பெற்றவராய், தனது பின்வாங்காத மன உறுதியால், திடமான குடும்பப்பற்றை உடனே களைந்தெறிந்தார். இவ்வாறாக தம்பி விதுரரின் உத்தரவுப்படி முக்திப் பாதையை ஏற்பதற்காக அவர் உடனே வீட்டை விட்டு வெளியேறினார்.
பதம் 1.13.30 : கந்தஹர் (அல்லது காந்தார்) தேசத்து சுபல ராஜனின் மகளும், சிறந்த குணவதியும், பதிவிரதையுமான காந்தாரி, தம் கணவர் இமயமலையை நோக்கிச் செல்வதைக் கண்டு அவரைப் பின்தொடர்ந்தாள். வீரர்களுக்கு சூரர்களான எதிரிகளின் சாட்டையடி எப்படி மகிழ்ச்சியளிக்குமோ, அப்படி துறவு வாழ்வை ஏற்றவர்களுக்கு இமாலயம் மகிழ்ச்சியை அளிக்கும்.
பதம் 1.13.31 : எதிரியே இல்லாத யுதிஷ்டிர மகாராஜன், சூரிய தேவனை வணங்கி, பிராமணர்களுக்கு தானியங்கள், பசுக்கள், நிலம் மற்றும் தங்கம் ஆகியவற்றை அளித்து அவர்களை வணங்கி, சந்தியாவந்தனத்தையும், கொண்டபின், அக்னி ஹோத்திரத்தையும் முடித்துக் வயது முதிர்ந்தவர்களை வணங்குவதற்காக அரண்மனைக்குள் பிரவேசித்தார். ஆனால் அவரது மூத்த, இளைய தந்தையர்களையும், சுபல ராஜனின் மகளான அவரது பெரியம்மாவையும் அங்கு காணவில்லை.
பதம் 1.13.32 : யுதிஷ்டிர மகாராஜன், அங்கு அமர்ந்திருந்த சஞ்சயனை நோக்கித் திரும்பி, கவலையுடன் வினவினார்: ஓ சஞ்சயா, வயது முதிர்ந்தவரும், குருடருமான நம் பெரியப்பா எங்கே?
பதம் 1.13.33 : என் நலனில் அக்கறை கொண்டிருந்த சிற்றப்பா விதுரரும், மகன்களின் மரணத்தால் பெருந்துன்பத்திற்கு உள்ளாகியிருந்த பெரியம்மா காந்தாரியும் எங்கே? என் பெரியப்பாவான திருதராஷ்டிரர், அவரது எல்லா மகன்களும், பேரன்களும் மரணமடைந்ததால் அதிக வருத்தத்திற்கு உள்ளாகி இருந்தார். நான் மனதிற்குப் பிடிக்காதவன் ஆகிவிட்டேன் என்பதில் சந்தேகமில்லை. எனவே என் குற்றங்களைப் பெரிதாக எடுத்துக் கொண்டு, மனைவியுடன் அவரும் கங்கையில் மூழ்கினாரா?
பதம் 1.13.34 : தந்தை பாண்டு இறந்தபொழுது, நாங்கள் அனைவரும் சிறு குழந்தைகளாக இருந்தோம். இவ்விரு தந்தையரும் எல்லா துன்பங்களிலிருந்தும் எங்களைப் பாதுகாத்தனர். அவர்கள் எப்பொழுதும் எங்கள் நலனில் அக்கறை கொண்டிருந்தனர். ஐயோ, அவர்கள் எங்கே சென்று விட்டனர்!
பதம் 1.13.35 : சூத கோஸ்வாமி கூறினார்; தன் தலைவராகிய திருதராஷ்டிரரைக் காணாததால் இரக்கமும், மனக் குழப்பமும் அடைந்த சஞ்சயன் துன்பத்திற்குள்ளானார். மேலும் யுதிஷ்டிர மகாராஜனுக்கு அவரால் தகுந்த பதிலையும் கூற இயலவில்லை.
பதம் 1.13.36 : தம் முதலில் மெதுவாக புத்தியல் சமதானப்படுத்தினார். பிறகு கண்ணீரை துடைத்துக் கொண்டு, தலைவரான இருதாாஷ்டிரின் பாதங்களை சிந்தித்தவாறு, மகாரஜனுக்கு பதிலளிக்கத் துவங்கினார்.
பதம் 1.13.37 : சஞ்சயன் கூறினார்: எனதன்புள்ள குரு வம்சத்தவரே, உங்களுடைய இரு தந்தையர் மற்றும் காந்தாரி ஆகியோரின் நோக்கத்தைப் பற்றி எனக்கொன்றும் தெரியாது. அரசே, அச்சிறந்த ஆத்மாக்களால் நான் ஏமாற்றப்பட்டு விட்டேன்.
பதம் 1.13.38 : சஞ்சயன் இவ்வாறு பேசிக் கொண்டு இருக்கும்பொழுது, பகவானின் தூய பக்தரான ஸ்ரீ நாரதர், அவரது தம்புராவுடன் அங்கு எழுந்தருளினார். யுதிஷ்டிர மகாராஜனும் அவரது சகோதரர்களும் ஆசனங்களிலிருந்து எழுந்து, வணங்கி, அவரை முறையாக வரவேற்றனர்.
பதம் 1.13.39 : யுதிஷ்டிர மகாராஜன் கூறினார்: தெய்வீக புருஷரே, எனது இரு தந்தையரும் எங்கு சென்றனரோ தெரியவில்லை. எல்லா மகன்களையும் இழந்து தவிக்கும், தபஸ்வினியான என் பெரியன்னையையும் காண முடியவில்லை.
பதம் 1.13.40 : தாங்கள் கரை காணாத சமுத்திரத்தைக் கடக்கும் கப்பலோட்டிபோல் விளங்குகிறீர்கள். உங்களால் எங்களைக் கரைசேர்க்க முடியும். இவ்வாறு வரவேற்கப்பட்ட, தெய்வீக புருஷரும், பக்திவேதாந்திகளில் மிகச்சிறந்தவருமான தேவரிஷி நாரதர், பேசத் துவங்கினார்.
பதம் 1.13.41 : ஸ்ரீ நாரதர் கூறினார்: பக்தியுள்ள ராஜனே, அனைவரும் பரம புருஷரின் கட்டுப்பாட்டில் இருப்பதால், யாருக்காகவும் வருந்த வேண்டாம். ஆகவே எல்லா ஜீவராசிகளும், அவர்களது தலைவர்களும் நன்கு காப்பாற்றப்படுவதற்கு பகவானைத் தொடர்ந்து வழிபட வேண்டும். அவர்களை இணைப்பவரும், பிரிப்பவரும் அவரே.
பதம் 1.13.42 : ஒரு பசு கடிவாளத்தால் கட்டுப்படுத்தப்படுவதைப் போலவே, மனிதனும் வேதக் கட்டளைகளால் பிணைக்கப்பட்டு, பகவானின் உத்தரவுகளை மதித்து நடக்கும்படி கட்டுப்படுத்தப்படுகிறான்.
பதம் 1.13.43 : விளையாடுபவன், தன் சொந்த விருப்பப்படி விளையாட்டுப் பொருட்களை அடுக்கி அடுக்கி பிறகு கலைத்துவிடுகிறான். அவ்வாறே பகவானின் உன்னதமான விருப்பமும் மக்களை இணைத்து பிறகு பிரித்துவிடுகிறது.
பதம் 1.13.44 : ராஜனே, ஆத்மா நித்தியமானதென்றோ, அல்லது ஜடவுடல் அழியக்கூடியதென்றோ அல்லது அனைத்தும் அருவ பிரம்மத்தில் உள்ளன என்றோ, அல்லது அனைத்தும் ஜடம் மற்றும் ஆன்மீகம் ஆகியவற்றின் புரியாத சேர்க்கை என்றோ நீர் கருதினாலும் எல்லாச் சூழ்நிலைகளிலும், உமது பிரிவுணர்ச்சிக்குக் காரணம் பொய்யான பாசமேயன்றி வேறில்லை.
பதம் 1.13.45 : எனவே ஆத்மாவை அறியாததால் ஏற்பட்ட மனக் கவலையைவிடும் தீனமான அனாதைகளாகிவிட்ட அவர்கள் இப்பொழுது உமது துணையின்றி எப்படி வாழப்போகிறார்கள் என்று நீர் நினைக்கிறீர்.
பதம் 1.13.46 : பஞ்ச பூதங்களாலான ஸ்தூலமான இந்த ஜடவுடல், காலம், கர்மா மற்றும் ஜட இயற்கைக் குணங்கள் ஆகியவற்றின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. எனவே ஏற்கனவே பாம்பின் வாய்க்குள் அகப்பட்டுக் கொண்டுள்ள இதனால் எப்படி பிறரைக் காப்பாற்ற இயலும்?
பதம் 1.13.47 : கைகள் இல்லாதவை கைகள் உள்ளவைகளுக்கு இரையாகின்றன; கால்கள் இல்லாதவை நாலு கால் மிருகங்களுக்கு இரையாகின்றன. வலிமையற்றவை வலிமை உள்ளவைகளுக்கு இரையாகின்றன. எனவே ஒரு ஜீவன் மற்றொரு ஜீவனுக்கு உணவு என்பதே பொதுவான விதியாகும்.
பதம் 1.13.48 : எனவே, அரசே இரண்டற்ற ஒருவரும், வெவ்வேறு சக்திகளின் வாயிலாக உள்ளும், புறமும் விளங்குபவருமான பரம புருஷரை மட்டுமே நோக்க வேண்டும்.
பதம் 1.13.49 : பரமபுருஷ பகவானாகிய ஸ்ரீகிருஷ்ணர், பொறாமை கொண்டவர்களை துடைத்தொழிப்பதற்காக, அனைத்தையும் விழுங்கிவிடும் கால ரூபமாக இப்பொழுது பூமியில் அவதரித்துள்ளார்.
பதம் 1.13.50 : தேவர்களுக்கு உதவ வேண்டிய தம் கடமைகளை பகவான் ஏற்கனவே செய்து முடித்துவிட்டார். மிச்சத்துக்காக அவர் காத்திருக்கிறார். பகவான் இந்த பூமியில் உள்ளவரை பாண்டவர்களான நீங்களும் காத்திருங்கள்.
பதம் 1.13.51 : ராஜனே, திருதராஷ்டிரர் அவரது தம்பி விதுரருடனும், மனைவி காந்தாரியுடனும், இமயமலையின் தென்பகுதியிலுள்ள பெரும் ரிஷிகளின் ஆஷ்ரமங்களை அடைந்துவிட்டார்.
பதம் 1.13.52 : அந்த இடம் ஸப்தஸ்ரோத (“ஏழு பிரிவுகளைக் கொண்டது”) என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில் அங்குள்ள கங்கை நதி ஏழு கிளைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஏழு பெரும் ரிஷிகளின் திருப்திக்காகவே இவ்வாறு செய்யப்பட்டது.
பதம் 1.13.53 : இப்பொழுது திருதராஷ்டிரர், ஸப்தஸ்ரோத கரைகளில், தினமும் காலை, நடுப்பகல், மாலை ஆகிய மூன்று வேளைகள் குளிப்பதன் மூலமாகவும் அக்னிஹோதிர யாகத்தைச் செய்வதன் மூலமாகவும் மற்றும் நீரை மட்டுமே பருகுவதன் மூலமாகவும், அஷ்டாங்க யோகத்தைத் துவங்குவதில் ஈடுபட்டுள்ளார். இது மனதையும், புலன்களையும் அடக்க உதவி செய்வதுடன், குடும்பப் பாசத்தைப் பற்றிய எண்ணத்திலிருந்தும் ஒருவரை முழுமையாக விடுவிக்கிறது.
பதம் 1.13.54 : ஆசனங்களையும் (யோக ஆசனங்கள்), சுவாச முறைகளையும் கட்டுப்படுத்தியவனால், புலன்களை பரம புருஷ பகவானை நோக்கித் திருப்பி, பௌதிகமான சத்வம், ரஜஸ், தமஸ் எனும் ஜட இயற்கைக் குணங்களின் களங்கங்களால் பாதிக்கப்படாமல் இருக்க முடியும்.
பதம் 1.13.55 : அறிவின் உதவியால், ஒரு ஜீவராசியான தான் பரபிரம்மத்துடன் தன்மையில் ஒன்றானவர் என்ற அறிவுடன், அப்பரபிரம்மத்தில் திருதராஷ்டிரர் தமது தூய சொரூபத்தை ஐக்கியப்படுத்திக் கொள்ள வேண்டும். மறைக்கப்பட்டுள்ள ஆகாயத்திலிருந்து விடுபட்டு, ஆன்மீக வானிற்கு அவர் உயர வேண்டும்.
பதம் 1.13.56 : அவர் புலன்களின் எல்லா புறச்செயல்களையும் கூட நிறுத்தி, ஜட இயற்கைக் குணங்களின் ஆதிக்கத்தால் பாதிக்கப்படாதவராகவும் இருக்க வேண்டியிருக்கும். எல்லா பௌதிக கடமைகளையும் துறந்தபின், இவ்வழியிலுள்ள தடைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவராக அவர் அசையாமல் நிலைபெற்றிருக்க வேண்டும்.
பதம் 1.13.57 : ராஜனே, அவர் இன்றிலிருந்து ஐந்தாம் நாளில் உடலை விட்டுவிடுவார். அது சாம்பலாகிப் போய்விடும்.
பதம் 1.13.58 : யோக சக்தியினால் உண்டாகும் தீயில், பர்ண சாலையுடன் தன் கணவரின் தேகம் எரிக்கப்படும் போது, வெளியிலிருந்து அதைக் கவனித்துக் கொண்டிருக்கும் பதிவிரதையான அவரது மனைவியும் ஆழ்ந்த கவனத்துடன் அத்தீயில் பிரவேசிக்கப் போகிறாள்.
பதம் 1.13.59 : விதுரர், அந்த ஆச்சரியத்தைக் கண்டு மகிழ்ச்சியும், துன்பமும் மேலிட, அப்புண்ணிய தீர்த்தத்திலிருந்து கிளம்பிச் சென்றுவிடுவார்.
பதம் 1.13.60 : இப்படி கூறிவிட்டு, மாமுனிவரான நாரதர் தமது வீணையுடன் ஆகாயத்தில் கிளம்பினார். யுதிஷ்டிரர் அவரது உபதேசத்தை உள்ளத்தில் நிறுத்தியதால், எல்லா கவலைகளையும் அவரால் போக்கிக்கொள்ள முடிந்தது.