அத்தியாயம் – 10
ஸ்ரீ கிருஷ்ணரின் துவாரகை பயணம்
பதம் 1.10.1
சௌனக உவாச
ஹத்வா ஸ்வரிக்த-ஸ்ப்ருத ஆததாயினோ
யுதிஷ்டிரோ தர்ம-ப்ருதாம் வரிஷ்ட;
ஸஹானுஜை: ப்ரத்யவருத்த-போஜன;
கதம் ப்ரவ்ருத்த: கிம் அகாரஷீத் தத:

சௌனக உவாச—-சௌனகர் வினவினார்; ஹத்வா—கொன்றபின்; ஸ்வரிக்த-சட்டபூர்வமான பரம்பரைச் சொத்தை; ஸ்ப்ருத–ஆக்கிரமித்துக் கொள்ள விரும்பி; ஆததாயின- வலுத்தாக்குதல் செய்தவர்கள்; யுதிஷ்டிர:–யுதிஷ்டிர மஹாராஜன்; தர்ம-ப்ருதாம்— மத கொள்கைகளை உறுதியாகப் பின்பற்றுபவர்களில்; வரிஷ்ட-மிகசிறந்தவரான; ஸஹ – அனுஜை:— அவரது இளைய சகோதரர்களிடம்; ப்ரத்யவருத்த- கட்டுப்பாடுள்ள; போஜன–தேவைகளை ஏற்பதில்; கதம்–எப்படி; ப்ரவ்ருத்த:—ஈடுபட்டுள்ள; கிம்—என்ன; அகாரஷீத் –நிறைவேற்றினார்; தது:—அதன் பிறகு.

சௌனக முனி வினவினார் அவரது உரிமையுள்ள பரம்பரைச் சொத்தை அபகரிக்க விரும்பிய எதிரிகளைக் கொன்றபின், சமயவாதிகளிலேயே மிகச்சிறந்தவரான யுதிஷ்டிர மகாராஜன், அவரது சகோதரர்களின் உதவியுடன் பிரஜைகளை எப்படி ஆண்டார்?. நிச்சயமாக கட்டுப்பாடற்ற உணர்வுடன் இராஜ்ஜியத்தை அவரால் சுதந்திரமாக அனுபவித்திருக்க முடியாது.

பதம் 1.10.2
ஸூத உவாச
வம்சம் குரோர் வம்ச-தவாக்னி-நிர்ஹ்ருதம்
ஸம்ரோஹயித்வா பவ-பாவனோ ஹரி:
நிவேசயித்வா நிஜ-ராஜ்ய ஈஸ்வரோ
யுதிஷ்டிரம் ப்ரீத-மனா பபூவ ஹ

ஸூத உவாச- சூத கோஸ்வாமி பதிலளித்தார்; வம்சம்-வம்சம்; குரோ-குரு மகாராஜனின்; வம்ச-தவ–அக்னி:— மூங்கில்களால் உண்டான காட்டுத்தீ; நிர்ஹ்ருதம்- அழிக்கப்பட்ட; ஸம் ரோஹயித்வா –வம்சத்தின் முளை; பவ-பாவன:— சிருஷ்டியை காப்பவர்; ஹரி்- பரம புருஷ பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்; நிவேசயித்வா-மீண்டும் நிலைநாட்டியதும்; நிஜ-ராஜ்யே:—அவரது சொந்த இராஜ்ஜியத்தில்; ஈஸ்வர-பரம புருஷர்; யுதிஷ்டிரம்–யுதிஷ்டிர மகாராஜனுக்கு; ப்ரீத-மனா:—மனத்திருப்தி அடைந்தார்; பபூவ ஹ-ஆனார்.

சூத கோஸ்வாமி கூறினார். உலகைப் பராமரிப்பவரான பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், காட்டுத் தீயைப் போன்ற கோபக்கனலால் அழிக்கப்பட்ட குரு வம்சத்தை பழைய நிலைக்குக் கொண்டுவந்து, யுதிஷ்டிர மகாராஜனை அவரது சொந்த இராஜ்ஜியத்தில் திரும்பவும் ஸ்தாபித்த பிறகு மனத் திருப்தி அடைந்தார்.

பதம் 1.10.3
நிசம்ய பீஷ்மோக்தம் அதாச்யுதோக்தம்
ப்ரவ்ருத்த-விக்ஞான-விதூத:-விப்ரம:
சசாஸ காம் இந்ர இவாஜி தாஸ்ரய:
பரித்யுபாந்தாம் அனுஜானுவர்தித:

நிசம்ய-கேட்டபின்; பீஷ்ம-உக்தம்—பீஷ்மதேவரால் பேசபட்டது; அத-அவ்வாறே; .அச்யுத-உக்தம்:—குறைவற்றவரான பகவான் ஸ்ரீகிருஷ்ணரால் பேசப்பட்டது; ப்ரவ்ருத்த—ஈடுபட்டதால்; விக்ஞான- பக்குவமான அறிவு; விதூத-முற்றிலும் கழுவப்பட்டு; விப்ரம்- எல்லா சந்தேகங்களும்; சசாஸ-ஆண்டு வந்தார்; காம்-பூமியை; இந்ர-ஸ்வர்கத்தின் அரசனை; இவ-போல்; அஜித – ஆஸ்ரய:—வெல்ல முடியாதவரான பகவானால் பாதுகாக்கப்பட்டு; பரிதி-உபாந்தாம்:—கடல்கள் உட்பட; அனுஜ-இளைய சகோதரர்கள்; அனுவர்தித- அவர்களால் பின்பற்றப்பட்டு,

பிஷ்மதேவரும், வெல்ல முடியாதவரான பகவான் ஸ்ரீ கிருஷ்ணரும் பேசியதைக் கேட்டு ஞானோதயம் பெற்ற யுதிஷ்டிர மகாராஜனின் எல்லா சந்தேகங்களும் தீர்ந்துவிட்டதால், அவர் அறிவுபூர்வமான விவகாரங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். இவ்வாறாக அவரது இளைய சகோதரர்கள் அவரைப் பின்தொடர, பூமியையும், கடல்களையும் அவர் ஆட்சிபுரிந்தார்.

பதம் 1.10.4
காமம் வவர்ஷ பர்ஜன்ய: ஸர்வ-காம-துகா மஹீ
ஸிஷிசு:ஸ்ம வ்ரஜான் காவ: பயஸோதஸ்வதீர் முதா

காமம்-தேவையான அனைத்தும்; வவர்ஷ:— பொழியப்பட்டது; பர்ஜன்ய-மழை; ஸர்வ –அனைத்தும்; காம-தேவைகள்; துகா- விளைவிப்பது; மஹீ–நிலம்; ஸிஷிசு: ஸ்ம: — நனைத்தது; வ்ரஜான்– மேய்ச்சல் நிலங்களை; காவ:-பசு; பயஸா உதஸ்வதீ:—பருத்த பால் சுரபிகளின் காரணத்தால்; முதா-சந்தோஷமான ஒரு மனநிலையால்.

யுதிஷ்டிர மகாராஜனின் ஆட்சிக் காலத்தில், மேகங்கள் மக்களுக்குப் போதுமான மழையைப் பொழிந்தன, பூமியோ மனிதனின் எல்ல தேவைகளையும் மிகுதியாக உற்பத்தி செய்தது. பசு, அதன் பருத்த பால் சுரபிகளாலும், மகிழ்ச்சியான மனோநிலையினாலும் மேய்ப்பு நிலங்களை ஈரமாக்குவது வழக்கம்.

பதம் 1.10.5
நத்ய: ஸமுத்ரா கிரய: ஸவனஸ்பதி-வீருத:
ஃபலந்தி ஓஷதய: ஸர்வா: காமம் அன்வ்ருது தஸ்ய வை:

நத்யா-நதிகள்; ஸமுத்ரா-சமுத்திரங்கள்; கிரய:-குன்றுகளும் மலைகளும் ; ஸவனஸ்பதி-காய்கறிகள்; வீருத:- கொடிகள்; ஃபலந்தி– சக்தி வாய்ந்த; ஓஷதய:–மருந்து சாமான்கள்; ஸர்வா: எல்லா; காமம்—தேவைகள்; அன்வ்ருது–பருவ காலம்; தஸ்ய-அரசருக்கு; வை:- நிச்சயமாக.

நதிகள், சமுத்திரங்கள், குன்றுகள், மலைகள், காடுகள், கொடிகள் மற்றும் சக்தி வாய்ந்த மருந்து சாமான்கள் ஆகியவை, ஒவ்வொரு பருவ காலத்திலும், தாங்கள் செலுத்தும் வரியாக, அவற்றின் உற்பத்தில் பொருட்களை அரசருக்கு மிகுதியாக அளிக்கின்றன.

பதம் 1.10.6
நாதயோ வ்யாதய: க்லேசா தைவ-பூதாத்ம-ஹேதவ:
அஜாத-சத்ராவ் அபவன் ஜந்தூனாம் ராஜ்னி கர்ஹிசித்

ந-ஒருபோதும் இல்லை; ஆதய—கவலைகள்; வ்யாதய – வியாதிகள்; க்லேசா–அதிகமான உஷ்ணத்தாலும், குளிராலும் ஏற்படும் தொல்லை; தைவ-பூத-ஆத்ம—அனைத்திற்கும் உடல், தெய்வ சக்தி மற்றும் பிற ஜீவராசிகள் ஆகியவையே காரணம்; ஹேதவ;-அதன் காரணத்தால்; அஜாத சத்ரௌ–எதிரி இல்லாத ஒருவரின்; அபவன்- நிகழ்ந்தது; ஐந்நூனாம்:-ஜீவராசிகளின்; ராஜ்னி-அரசருக்கு; கர்ஹிசித்—எச்சமயத்திலும்.

அரசருக்கு எதிரிகளே இல்லை என்பதால், எந்த சமயத்திலும் ஜீவராசிகள் மனவேதனைகளாலோ, வியாதிகளாலோ, அதிகமான உஷ்ணத்தாலோ, குளிராலோ பாதிப்படையவில்லை.

பதம் 1.10.7
உஷித்வா ஹாஸ்தினபுரே மாஸான் கதிபயான் ஹரி:
ஸுஹ்ருதாம் ச விசோகாய ஸ்வஸுஸ்ச ப்ரிய-காம்யயா

உஷித்வா-தங்கியிருந்து; ஹாஸ்தினபுரே-ஹஸ்தினாபுர நகரத்தில்; மாஸான்- மாதங்கள்; கதிபயான்-ஒரு சில; ஹரி:-பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்: ஸுஹ்ருதாம்—உறவினர்களை: ச-மேலும் விசோகாய–அவர்களை சமாதானப்படுத்த; ஸ்வஸு–தங்கையை; ச- மேலும்; ப்ரிய காம்யயா- திருப்திப்படுத்த.

ஸ்ரீ ஹரி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், அவரது உறவினர்களை சமாதானப்படுத்தவும், அவரது சொந்த தங்ககையை (சுபத்ரா) திருப்திப்படுத்தவும். ஒரு சில மாதங்கள் ஹஸ்தினாபுரத்தில் வசித்தார்.

பதம் 1.10.8
ஆமந்த்ரிய சாப்யனக்நாத: பரிஷ்வஜ்யா பிவாத்ய தம்
ஆருரோஹ ரதம் கைஸ்சித் பரிஷ்வக்தோ ‘பிவாதித:

ஆமந்த்ரிய -அனுமதியைப் பெற்று; ச-மேலும்; அப்யனுக்ஞாத-அனுமதி அளிக்கப்பட்டு; பரிஷ்வஜ்ய:-தழுவி; அபிவாத்ய–பாதங்களில் சிரம்தாழ்த்தி வணங்கி; தம்-யுதிஷ்டிர மகரராஜனின்; ஆருரோஹ-ஏறினார்; ரதம்-இரதத்தில்; கைஸ்சித்-யாரோ ஒருவரால்; பரிஷ்வக்த–தழுவப்பட்டு; அபிவாதித:-நமஸ்காரம் செய்யப்பட்டு.

அதன் பிறகு, புறப்படுவதற்கு அனுமதி கேட்ட பகவானுக்கு மன்னர் சம்மதித்ததும், பகவான் யுதிஷ்டிர மகாராஜனின் பாதங்களில் சிரம் தாழ்த்தி அவரை வணங்கினார். அரசரும் அவரை தழுவிக் கொண்டார். இதன்பிறகு மற்றவர்களால் தழுவிக் கொள்ளப்பட்ட பகவான் அவர்களது வணக்கங்களை ஏற்றுக் கொண்டதும் தமது இரதத்தில் ஏறினார்.

பதங்கள் 1.10.9 – 1.10.10
ஸுபத்ரா த்ரௌபதீ குந்தீ விராட-தனயா ததா
காந்தாரீ த்ருதராஷ்ட்ரஸ் ச யுயுத்ஸுர்கௌதமோ யமௌ
வ்ருகோதரஸ் ச தௌம்யஸ் ச ஸ்த்ரியோ மத்ஸ்ய ஸுதாதய:
நஸேஹிரே விமுஹ்யந்தோ விரஹம் சார்ங்க-தன்வன:

ஸுபத்ரா-கிருஷ்ணரின் தங்கை; த்ரௌபதி-பாண்டவர்களின் மனைவி, குந்தீ-பாண்டவர்களின் தாய்; விராட-தனயா–-விராடனின் மகள் (உத்தரா); ததா- மேலும்; காந்தாரீ–துரியோதனனின் தாய்; த்ருதராஷ்ட்ர:-துரியோதனனின் தந்தை; ச-மேலும், யுயுத்ஸு:– திருதராஷ்டிரின் வைசிய மனைவிக்குப் பிறந்த மகன்; கௌதம– கிருபாச்சாரியர்; யமௌ-இரட்டைச் சகோதரர்களான நகுலனும் சகாதேவனும்; வ்ருகோதர-பீமன்; ச-மேலும்;தெளம்ய-தௌம்ய; ச-மேலும்; ஸ்தரிய-மற்ற அரண்மனைப் பெண்களும்; மத்ஸ்ய-ஸுதா-ஆதய:–மீனவனின் மகள் (பீஷ்மரின் மாற்றாந்தாயான சத்தியவதி); ந – இயலவில்லை: ஸேஹிரே-சகித்துக் கொள்ள; விமுஹ்யந்த – மூர்ச்சையடையும் நிலைக்கு; விரஹம்—பிரிவு; சார்ங்க-தன்வன: –கரத்தில் சங்கை ஏந்தியிருப்பவரான ஸ்ரீ கிருஷ்ணரின்.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை விட்டுப் பிரிவது சாத்தியமில்லை என்பதால், அச்சமயத்தில் சுபத்ரா, திரௌபதி, குந்தி, உத்தரா, காந்தாரி, திருதராஷ்டிரர், யுயுத்ஸு, கிருபாச்சாரியர், நகுலன், சகாதேவன், பீமசேனன், தெளம்ய மற்றும் சத்தியவதி ஆகிய அனைவரும் கிட்டத்தட்ட மூர்ச்சையடையும் நிலைக்கு வந்துவிட்டனர்.

பதங்கள் 1.10.11 – 1.10.12
ஸத்-ஸங்கான் முக்த-துஹ்ஸங்கோ ஹாதும் நோத்ஸஹதே புத:
கீர்த்யமானம் யசோ யஸ்ய ஸக்ருத் ஆகர்ண்ய ரோசனம்:
தஸ்மின் ஞஸ்த–திய:பார்தா: ஸஹேரன் விரஹம் கதம்
தர்சன-ஸ்பர்ச-ஸம்லாப சயனாஸன-போஜனை:

ஸத்-ஸங்காத்:—தூய பக்தர்களின் தொடர்பால்; முக்த-துஹ்ஸங்க:—தீய பௌதிக சகவாசத்திலிருந்து விடுபட்டு; ஹாதும்-கைவிட; நஉத்ஸஹதே–ஒருபோதும் முயற்சிக்கமாட்டார்; புத-பகவானை புரிந்துகொண்டவர்; கீர்தியமானம்-போற்றுவதை; யச:-புகழை; யஸ்ய-யாருடைய; ஸக்குத்–ஒருமுறை மட்டுமே; ஆகர்ண்ய– கேட்பது மட்டும்; ரோசனம்–இன்பமூட்டும்; தஸ்மின்–அவருக்கு; ஞஸ்த-திய:– மனதை அவருக்குக் கொடுத்துவிட்டவர்; பார்தா-பிருதாவின் புத்திரர்கள்; ஸஹேரன்-சகித்துக் கொள்ள இயலும்; விரஹம்- பிரிவை; கதம்—எப்படி: தர்சன-நேருக்குநேராகக் கண்டும்: ஸ்பர்ச-தொட்டும்; ஸம்லாப – பேசியும்; சயன–உறங்கியும்; ஆஸன–அமர்ந்தும்; போஜனை:–ஒன்றாக உணவருந்தியும்.

தீய உறவை ஒழித்து தூய பக்தர்களின் சகவாசத்தினால் பரம புருஷரை அறிந்துகொண்ட புத்திசாலிகள் பகவானின் பெருமைகளை ஒரே ஒருமுறை மட்டுமே கேட்டிருந்தாலும், அவற்றை திரும்பத்திரும்ப கேட்பதிலிருந்து அவர்களால் ஒருபோதும் விலகி நிற்க முடியாது. அப்படியானால், பகவானுடன் நெருக்கமான சகவாசம் கொண்டும், நேருக்குநேராக அவரை பார்த்துக் கொண்டும், அவரை தொட்டுக் கொண்டும், அவருடன் பேசிக் கொண்டும், உறங்கிக் கொண்டும், அமர்ந்து கொண்டும் மற்றும் அவருடன் உணவருந்திக் கொண்டும் இருந்த பாண்டவர்களால் அவரது பிரிவை எப்படி சகித்துக்கொள்ள இயலும்?

பதம் 1.10.13
ஸர்வே தே ‘நிமிஷைர் அக்க்ஷைஸ் தம் அனு த்ருத-சேதஸ;
வீக்ஷந்த: ஸ்னேஹ-ஸம்பத்தா விசேலுஸ் தத்ர தத்ர ஹ

ஸர்வே – அனைத்தும்; தே–அவர்கள்; அனிமிஷை.– கண்களைச் சிமிட்டாமல்; அக்க்ஷை:-கண்ணால் ; தம் அனு—அவர் பின்னே; த்ருத-சேதஸ:– இளகிவிட்ட இதயம்; வீக்ஷந்த:-அவரை ஏறிட்டுப் பார்த்து; ஸ்னேஹ-ஸம்பத்தா:– தூய பாசத்தால் கட்டப்பட்டு; விசேலு-அசையத் துவங்கினர்; தத்ர தத்ர—இங்குமங்கும்; ஹ—அப்படிச் செய்தனர்.

கவர்ச்சியெனும் பாத்திரத்திற்குள் அவர்களுடைய இதயங்கள் அனைத்தும் அவருக்காக கரைந்தன. அவர்கள் மனக் கலவரத்துடன் இங்குமங்கும் நடந்தவாறு, கண்களைச் சிமிட்டாமல் அவரையே பார்த்துக்கொண்டு இருந்தனர்.

பதம் 1.10.14
நயருந்தன் உத்கலத் பாஷ்பம் ஔத்கண்ட்யாத் தேவகீ – ஸுதே
நிர்யாதி அகாரான் நோ’பத்ரம் இதி ஸ்யாத் பாந்தவ-ஸ்த்ரிய:

நயருந்தன்- மிகவும் கஷ்டத்துடன் தடுத்து; உத்கலத்— பெருக்கெடுத்தோடும்; பாஷ்பம் கண்ணீரை; ஒளதிகண்ட்யாத்–பெருங்கவலையால்; தேவகீ-ஸுதே:– தேவகியின் புத்திரருக்கும்; நிர்யாதி- வெளியில் வந்து; அகாராத்— அரண்மனையிலிருந்து; ந-இல்லை; அபத்ரம்: –அமங்களம்; இதி–இவ்வாறாக; ஸ்யாத்– நிகழக்கூடும்; பார்த்தவ-உறவு: ஸ்த்ரிய – பெண்கள்.

கிருஷ்ணரைப் பற்றிய கவலையால், பெண் உறவினர்கள், கண்களில் கண்ணீர் மல்க அரண்மனையிலிருந்து வெளியே வந்தனர், அவர்களால் பெருங்கஷ்டத்துடன்தான் அவர்களது கண்ணீரைக் கட்டுப்படுத்த முடிந்தது. புறப்படும் வேளையில் கண்ணீர் விடுவது துரதிர்ஷ்டத்தை விளைவிக்கும் என்று அவர்கள் அஞ்சினர்.

பதம் 1.10.15
ம்ருதங்க–சங்க-பேர்யஸ் ச வீணா-பணவ-கோமுகா:
துந்துரி-ஆனக-கண்டாத்யா நேதுர் துந்துபயஸ் ததா

ம்ருதங்க—மிருதங்கம்; சங்க–சங்கு; பேர்ய;–பித்தளை வாத்தியக் கருவி; ச—மேலும்; வீணா–வீணை; பணவ–ஒரு வகையான புல்லாங்குழல்; கோமுகா–மற்றொரு புல்லாங்குழல்; துந்துரி–மற்றாரு வகை மிருதங்கம்; ஆனக—பேரிகை; கண்டா– மணி; ஆத்யா—மற்றவைகள்; நேது;– முழங்கின; துந்துபய- வேறு வகையான மிருதங்கங்கள்; ததா-அப்போது.

பகவான் ஹஸ்தினாபுர அரண்மனையிலிருந்து புறப்படும்பொழுது. மிருதங்கம், தோல, நக்ர, துந்துரீ மற்றும் துந்துபி போன்ற வெவ்வேறு வகையான மத்தளங்கள் வெவ்வேறு வகையான புல்லாங்குழல்கள், வீணை, கோமுகா மற்றும் பேரீ-ஆகிய அனைத்தும், அவருக்கு மரியாதை காட்டுவதற்காக ஒன்றாக ஒலித்தன.

பதம் 1.10.16
ப்ரஸாத-சிகராரூடா: குரு-நார்யோ தித்ருக்ஷயா
வவ்ருஷு: குஸுமை: க்ருஷ்ணம் ப்ரேம-வ்ரீடா-ஸ்மிதேக்ஷணா:

ப்ரஸாத-அரண்மனை; சிகர -உச்சிக்கு; ஆருடா-ஏறி; குரு-நார்ய:- குரு வம்சத்தின் அரச குடும்பத்துப் பெண்கள்; தித்ருக்ஷயா–கண்டு; வவ்ருஷு:– பொழிந்தனர்; குஸுமை:– மலர்களால்; க்ருஷ்ணம்-பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் மீது; ப்ரேம-அன்பாலும், பாசத்தாலும்; வ்ரீடா-ஸ்மித-ஈக்ஷணா—வெட்கப் புன்னகையுடன் பார்த்து.

பகவானைக் காண வேண்டும் என்ற அன்பான ஆவலால், குருக்களின் அரச குடும்பத்துப் பெண்கள் அரண்மனை உச்சிக்கு எறிச்சென்று. வெட்கமும், பாசமும் கலந்த புன்னகையுடன் பகவான் மீது மலர்களைப் பொழிந்தனர்.

பதம் 1.10.17
ஸிதாதபத்ரம் ஜக்ராஹ முக்தாதாம-விபூஷிதம்
ரத்ன-தண்டம் குடாகேச: ப்ரிய: ப்ரியதமஸ்ய ஹ

ஸித–ஆதபத்ரம்—அழகியகுடை; ஜக்ராஹ—கையிலெடுத்தார்; முக்தா-தாம :— ஜரிகைகளாலும், முத்துக்களாலும் அலங்கரிக்கப்பட்ட; விபூஷிதம்-சித்திர வேலைப்பாடுகள் கொண்ட; ரத்ன:—தண்டம் இரத்தினங்களுடன் கூடிய கைப்பிடி; குடாகேச:-கை தேர்ந்த வீரரான, அல்லது உறக்கத்தை வென்றவரான அர்ஜுனன்; ப்ரிய:-மிகப் பிரியமானவரான; ப்ரியதமஸ்ய–மிகப் பிரியமானவரின்; ஹ-எனவே அவர் அதைச் செய்தார்.

அப்பொழுது மாவீரரும், உறக்கத்தை வென்றவரும், பேரன்பிற்கு உரியவரும் பரம புருஷரின் நெருங்கிய நண்பருமான அர்ஜுனன், இரத்தினங்களாலான கைப்பிடியையும், ஜரிகை முத்துக்களாலான சித்திர வேலைப்பாடுகளையும் கொண்ட ஒரு குடையைக் கையிலெடுத்தார்.

பதம் 1.10.18
உத்தவ ஸாத்யகிஸ் சைவ வ்யஜனே பரமாத்புதே
விகீர்யமான: குஸுமை ரேஜே மது-பதி: பதி

உத்தவ:-கிருஷ்ணருடைய மாமன் மகன்; வாத்யகி:–அவரது சாரதி; ச-மேலும்; ஏவ-நிச்சயமாக; வ்யஜனே—காற்று விசிரிறினர்; பரம அதிபுத —அலங்காரமான, விகீர்யமாண: குஸுமை:—தூவப்பட்ட மலர்களின் மேல் அமர்ந்து; ரேஜே-உத்தரவிட்டார்; மது-பதி:-மதுபதி (கிருஷ்ணர்): பதி–சாலையில்.

உத்தவரும், ஸாத்யகியும் அலங்கார விசிறிகளால் பகவானுக்கு காற்று விசிறத் துவங்கினர். மதுவின் தலைவரான பகவான், மலர் தூவிய ஆசனத்தில் அமர்ந்து, வழிநெடுக அவர்களுக்கு உத்தரவுகளை பிறப்பித்துக் கொண்டிருந்தார்.

பதம் 1.10.19
அஸ்ரூயந்தாசிஷ: ஸத்யாஸ் தத்ர தத்ர த்விஜேரிதா:
நானுரூபானுரூபாஸ் ச நிர்குணஸ்ய குணாத்மன:

அஸ்ரூயந்த- கேள்விப்படும்; ஆசிஷ:- ஆசி ; ஸத்யா:- எல்லா உண்மைகளும்; தத்ர—இங்கும்; தத்ர—அங்கும்; த்விஜ ஈரிதா:– கற்றறிந்த பிராமணர்களால் ஒலிக்கப்பட்ட: ந —இல்லை; அனுரூப- பொருத்தமான; அனுரூபா:- ஏற்ற; ச-மேலும்; நிர்குணஸ்ய- பரம்பொருளின்; குண-ஆத்மன:—ஒரு மனிதனின் பாகத்தை ஏற்றுள்ள.

கிருஷ்ணருக்கு வழங்கப்பட்ட உபசாரங்கள் ஒரு மனிதனின் வேடத்தை இப்பொழுது ஏற்றுள்ள பரம்பொருளுக்கு உரியவை என்பதால், அவை பொருத்தமானவையும் அல்ல, பொருத்தமற்றவையும் அல்ல இங்குமங்கும் பேசப்படுவது, கேட்டது.

பதம் 1.10.20
அன்யோன்யம் ஆஸீத் ஸஞ்சல்ப உத்தம-ஸ்லோக-சேதஸாம்
கௌரவேந்ர-புர-ஸ்த்ரீணாம் ஸர்வ-ஸ்ருதி-மனோ – ஹர:

அன்யோன்யம்—அவரவர்களுக்கு இடையில்; ஆஸித்-இருந்தது; ஸஞ்சல்ப-பேச்சு; உத்தம-ஸ்லோக– உத்தமமான ஸ்லோகங்களால் போற்றப்படும் பகவான்; சேதாஸம்– அவ்வாறு ஆழ்ந்துவிட்ட இதயங்களைக் கொண்டவர்களின்; கௌரவ-இந்ர:—குருக்களின் அரசர்; புர-தலைநகரம்; ஸ்த்ரீணாம்—எல்லா பெண்களும்; ஸர்வ-எல்லா; ஸ்ருதி—வேதங்கள்; மன: ஹர:—மனதைக் கவரும்.

ஹஸ்தினாபுரத்திலுள்ள எல்லா வீடுகளின் கூரைகளிலும் நின்றிருந்த பெண்கள், உத்தமமான சுலோகங்களினால் பாடப்படுபவரான, பகவானின் திவ்யமான குணங்களைப் பற்றிய சிந்தனையில் ஆழ்ந்து அவரைப் பற்றி பேச ஆரம்பித்தனர். இப்பேச்சு வேத மந்திரங்களை விட கவர்ச்சிமிக்கதாக இருந்தது.

பதம் 1.10.21
ஸ வை கிலாயம் புருஷ: புராதனோ
ய ஏக ஆஸீத் அவிசேஷ ஆத்மனி
அக்ரே குணேப்யோ ஜகத்-ஆத்மனீஸ்வரே
நிமீலிதாத்மன் நிசி ஸுப்த-சக்திஷு

ஸ-அவர் (கிருஷ்ணர்); வை-நான் ஞாபகம் வைத்திருப்பதைப் போல்; கில-உறுதியாக; அயம்—இந்த; புருஷ-பரம புருஷர்; புராதன-ஆதியான; ய-யார்; ஏக- ஒருவர் மட்டுமே; ஆஸித்– இருந்தார்; அவிசேஷ—பௌதிக தோற்றமில்லாத; ஆத்மனி—அவர்; அக்ரே-சிருஷ்டிக்குமுன்; குணேப்ய-இயற்கைக் குணங்களின்; ஜகத்- ஆத்மனி:—பரமாத்மாவில்; ஈஸ்வரே-பரம புருஷரில்; நிமீலித– ஐக்கியமாகி விட்ட; ஆத்மன்-ஜீவராசி; நிசிஸூப்த:—இரவில் இயக்கமற்ற; சத்திஷ—சக்திகளின்.

அவர்கள் கூறினர்: நம் சிந்தனையில் தெளிவாக உள்ள அந்த மூல முழுமுதற் கடவுள் இதோ இருக்கிறார். ஜட இயற்கைக் குணங்கள் தோன்றுவதற்கு முன் அவர் மட்டுமே இருந்தார். மேலும் அவர் பரம புருஷர் என்பதால், எல்லா ஜீவராசிகளும், சக்தி முடக்கப்பட்டு, இரவில் உறங்குவதைப் போல் அவருக்குள் ஐக்கியமாகிவிடுகின்றன.

பதம் 1.10.22
ஸ ஏவ பூயோ நிஜ-வீர்ய-சோதிதாம்
ஸ்வ-ஜீவ-மாயாம் ப்ரக்ருதிம் ஸிஸ்ருக்ஷதீம்
அனாம-ரூபாத்மனி ரூப-நாமனீ
விதித்ஸமானோ ‘னுஸஸார சாஸ்த்ர-க்ருத்

ஸ-அவர்; ஏவ-இவ்வாறு; பூய-மீண்டும்; நிஜ–சுயமான சொந்த; வீர்ய-ஆற்றல்; சோதிதாம்-செயல்; ஸ்வ-சொந்த; ஜீவ-ஜீவராசி; மாயாம்-புறச்சக்தி; ப்ரக்ருதிம்—ஜட இயற்கைக்கு; ஸிஸ்ருக்ஷதீம்–மறுபடியும் சிருஷ்டியைச் செய்யும் பொழுது; அனாம– பௌதிக பெயர் இல்லாமல்; ரூப-ஆத்மனி—ஆத்மாவின் ரூபங்கள்; ரூப-நாமானீ—உருவங்களும், பெயர்களும்; விதித்ஸமான;-அளிக்க விரும்பி; அனுஸஸார— ஒப்படைக்கப்பட்டது; சாஸ்த்ர-க்ருத்—வேத சாஸ்திரத்தை தொடுத்தவர்.

பரம புருஷர் அவரது அங்க உறுப்புக்களான ஜீவராசிகளுக்கு மீண்டும் பெயர்களையும் உருவங்களையும் அளிக்க விரும்பி, அவற்றை ஜட இயற்கையின் வழிகாட்டலின் கீழ் வைத்தார். அவரது சுய ஆற்றலால், மறுபடியும் சிருஷ்டியைச் செய்ய ஜட இயற்கைக்கு சக்தியளிக்கப்படுகிறது.

பதம் 1.10.23
ஸ வா அயம் யத் பதம் அத்ர ஸுரயோ
ஜிதேந்ரியா நிர்ஜித-மாதரிஸ்வன:
பஸ்யந்தி பக்தி-உத்கலிதாமலாத்மனா
நன் ஏஷ ஸத்வம் பரிமார்ஷ்டும் அர்ஹதி

ஸ- அவர்; வை—இறையருளால்; அயம்–இந்த; யத்- எது; பதம் அத்ர – அதே பரம புருஷரான ஸ்ரீ கிருஷ்ணர் இதோ இருக்கிறார்; ஸுரய:–சிறந்த பக்தர்கள்; ஜித இந்ரியா—புலன்களின் ஆதிக்கத்தை வென்றவர்கள்; நிர்ஜித-முழுமையாக கட்டுப்படுத்தப்பட்ட; மாதரிஸ்வன:-உயிர்; பஸ்யந்தி-காண முடியும்; பக்தி- பக்தித் தொண்டின் பயனாய்; உத்கலித-விருத்தியடைந்த; அமல-ஆத்மனா:— மனம் முழுமையாக தூய்மை அடையப் பெற்றவர்கள்; நனு ஏஷ– நிச்சயமாக இதனால் மட்டுமே; ஸத்வம்-வாழ்வு; பரிமார்ஷ்டும்- மனதை முழுமையாக தூய்மைப்படுத்த; அர்ஹதி-தகுதி பெற்றுள்ள.

அசையாத பக்தித் தொண்டாலும், உயிர் மற்றும் புலன்கள் ஆகியவற்றை முழுமையாகக் கட்டுப்படுத்தியதாலும், பெளதிக உணர்விலிருந்து முற்றிலும் தூய்மை அடைந்துள்ள சிறந்த பக்தர்கள் பகவானின் திவ்யமான உருவத்தை அனுபவிக்கின்றனர். அதே பரம புருஷ பகவான் இதோ இருக்கிறார். இந்த பக்திதான் வாழ்வை தூய்மைப்படுத்துவதற்கான ஒரே வழியாகும்.

பதம் 1.10.24
ஸ வா அயம் ஸகி அனுகீத–ஸத்-கதோ
வேதேஷு குஹ்யேஷு ச குஹ்ய-வாதிபி:
ய ஏக ஈசோ ஜகத்-ஆத்ம- லீலயா
ஸ்ருஜதி அவதி அத்தி ந தத்ர ஸஜ்ஜதே

ஸ–அவர்; வை—தவிரவும்; அயம்-இந்த; ஸகி-தோழியே; அனுகீத–விவரிக்கப்பட்டு உள்ளன; ஸத்-கத:-மிகச்சிறந்த லீலைகள்; வேதேஷு—வேத நூல்களில்; குஹ்யேஷு— அந்தரங்கமாக; ச-மேலும்; குஹ்ய-வாதிபி:-அந்தரங்கமான பக்தர்களால்; ய–யாரொருவர்; ஏக-ஒருவர் மட்டுமே; ஈச–பரம ஆளுநர்; ஜகத்-முழு சிருஷ்டியின்; ஆத்ம–பரமாத்மா: லீலயா-லீலைகளின் தோற்றத்தால்; ஸ்ருஜதி–படைக்கிறார்; அவதிஅத்தி –மேலும் காத்து, அழிக்கிறார்; ந– ஒருபோதும் இல்லை; தத்ர—அங்கு; ஸஜ்ஜதே:-அதில் பற்றுக் கொள்கிறார்.

அன்புத் தோழிகளே, வேத நூல்களின் அந்தரங்கமான பகுதிகளில், பகவானின் கவர்ச்சியானதும், அந்தரங்கமானதுமான லீலைகள் அவரது சிறந்த பக்தர்களால் விவரிக்கப்பட்டுள்ளன. அதே பரம புருஷ பகவான் இதோ இருக்கிறார். இவர் ஜடவுலகைப் படைத்து, காத்து, அழிப்பதுடன், அதனால் பாதிப்படையாமலும் இருக்கிறார்.

பதம் 1.10.25
யதா ஹி அதர்மேண தமோ-தியோ ந்ருபா
ஜீவந்தி தத்ரைஷ ஹி ஸத்வத: கில
தத்தே பகம் ஸத்யம் ருதம் தயாம் யசோ
பவாய ரூபாணி ததத் யுகே யுகே

யதா-எப்போதெல்லாம்; ஹி-உறுதியாக; அதர்மேண–பகவானின் விருப்பத்திற்கு எதிராக; தம:திய-மிகத்தாழ்ந்த பௌதிக குணங்களில் உள்ளவர்கள்; ந்ருபா-அரசர்களும் நிர்வாகிகளும்; ஜீவந்தி–மிருகங்களைப் போல் வாழும்; தத்ர–அதனால்; ஏஷ—அவர்; ஹி–-மட்டுமே;ஸத்வத—உன்னதமான; கில–நிச்சயமாக; தத்தே– தோற்றுவிக்கப்படுகிறது: பகம்-பரமசக்தி: ஸத்யம் –சத்தியம்: ருதம்–உறுதி: தயாம்—கருணை; யச–அற்புதச் செயல்கள்; பவாய– பராமரிப்புக்காக; ரூபாணி—அநேக ரூபங்களில்; ததத்- தோன்றிய; யுகே-வெவ்வேறு காலங்களில்; யுகே–மற்றும் யுகங்களில்.

எப்போதெல்லாம் அரசர்களும், நிர்வாகிகளும் மிருகங்களைப் போல் மிகத்தாழ்ந்த குணங்களில் வாழ்கிறார்களோ, அப்போது உன்னத உருவிலுள்ள பகவான் அவரது பரம சக்தியை, வெளிப்படுத்துகிறார். மேலும் பக்தியுள்ளவர்களுக்கு விசேஷ கருணையைக்காட்டும் அவர், அற்புதச் செயல்களை நிகழ்த்துவதுடன், வேறுபட்ட காலங்களுக்கும், யுகங்களுக்கும் தேவையான அதே திவ்ய ரூபங்களையும் தோற்றுவிக்கிறார்.

பதம் 1.10.26
அஹோ அலம் ஸ்லாக்யதமம் யதோ: குலம்
அஹோ அலம் புண்யதமம் மதோர் வனம்
யத் ஏஷ பும்ஸாம் ருஷப: ஸ்ரீய: பதி:
ஸ்வ-ஜன்மனா சங்க்ரமணேன சாஞ்சதி

அஹோ-ஓ; அலம் – உண்மையாக; ஸ்லாக்யதமம்—உயர்வாக புகழப்படும்; யதோ:–யது மகாராஜனின்; குலம்—வம்சம்; அஹோ— ஓ; அலம் – உண்மையாக: புண்யதமம்–மிகவும் புண்ணியமான; மதோ-வனம்—மதுராபுரி; யத்—ஏனெனில்; ஏஷ—இந்த; பும்ஸாம்:— அனைத்து ஜீவராசிகளின்; ருஷப-உயர்ந்த தலைவர்; ஸ்ரீய-:-லக்ஷ்மி தேவியின்; பதி –கணவர்; ஸ்வஜன்மனா—அவரது தோற்றத்தால்: சங்க்ரமணேன-தவழ்ந்ததன் மூலம்; ச-அஞ்சதி:— பெருமைகள்.

ஓ! யது மகாராஜனின் வம்சம் எவ்வளவு உயர்வாக புகழப்படுகிறது. அனைத்து ஜீவராசிகளின் உன்னத தலைவரான லக்ஷ்மி தேவியின் கணவன் அவரது பிறப்பை ஏற்று, அவரது பிள்ளைப் பிராயத்தில் சுற்றிச் திரிந்த இடமான மதுராபுரி எவ்வளவு புண்ணியம் வாய்ந்தது!

பதம் 1.10.27
அஹோ பத ஸ்வர்-யசஸஸ் திரஸ்கரீ
குசஸ்தலீ புண்ய-யசஸ்கரீ புவ:
பஸ்யந்தி நித்யம் யத் அனுக்ரஹேஷிதம்
ஸ்மிதாவலோகம் ஸ்வ-பதிம் ஸ்ம யத்–-ப்ரஜா:

அஹோ பத–எவ்வளவு அற்புதம் இது; ஸ்வர:யசஸ-ஸ்வர்க லோகங்களின் பெருமைகள்; திரஸ்கரீ—வெல்லக்கூடியது: குசஸ்தலீ–துவாரகை; புண்ய—புண்ணியம்; யசஸ்கரீ—புகழ் பெற்றது; புவ- பூமி;பஸ்யந்தி—காண்கின்றனர்; நித்யம்—நித்தியமாக; யத்–அது; அனுக்ரஹ இஷிதம்-அனுக்கிரகம் அளிக்க; ஸ்மித-அவலோகம்:—இனிய புன்னகை தவழும் பார்வை; ஸ்வபதிம் -ஜீவராசிகளின் ஆத்மாவை (கிருஷ்ணர்); ஸ்ம—வழக்கம்; யத்-ப்ரஜா:—இடத்தின் வாசிகள்.

துவாரகை ஸ்வர்க லோகங்களின் பெருமைகளையும் வென்று, பூமியின் புகழை உயர்த்தியிருப்பது அற்புதம்தான் என்பதில் சந்தேகவில்லை. துவாரகா வாசிகள், அனைத்து ஜீவராசிகளுக்கும் ஆத்மாவாக இருப்பவரை (கிருஷ்ணர்) அவரது அன்பான உருவில் எப்பொழுதும் கண்டு கொண்டே இருக்கின்றனர். அவரும் இனிய புன்னகையுடன் அவர்களைக் காண்கிறார்.

பதம் 1.10.28
நூனம் வ்ரத–ஸ்நான-ஹுதாதினேஸ்வர:
ஸமர்சிதோ ஹி அஸ்ய க்ருஹீத-பாணிபி:
பிபந்தி யா: ஸகி அதராம்ருதம் முஹுர்
வ்ரஜ-ஸ்த்ரிய: ஸம்முமுஹுர் யத்-ஆசயா:

நூனம்—நிச்சயமாக முற்பிறப்பில்; வ்ரத–விரதம்; ஸ்நான-ஸ்நானம்; ஹுத–-வேத யாகம்; ஆதினா–இவை அனைத்தினாலும்; ஈஸ்வர்–பரம புருஷ பகவான்; ஸமர்சித-பூரணமாக வழிபட்டுள்ள;ஹி-நிச்சயமாக; யா–அவர்கள்; ஸகி-தோழியே; அதர–அம்ருதம்:— உதடுகளின் அமிர்தம்; முஹு- மீண்டும் மீண்டும்; வ்ரஜ-ஸ்த்ரிய– விருந்தாவனத்து கோபியர்கள்; ஸம்முமுஹு—அடிக்கடி மூர்ச்சை அடைத்தனர்; யத்-ஆசயா:—அத்தகைய அன்பை எதிர்பார்த்து.

தோழிகளே, அவர் கைப்பிடித்த அவரது மனைவிகளை பற்றி சிந்தித்துப் பாருங்கள். அகில லோகநாயகனினுடைய அதர அமிர்தத்தை (முத்தமிடுவதால்) இப்பொழுது இடைவிடாமல் சுவைத்து அனுபவிப்பதற்கு, அவர்கள் எப்படியெல்லாம் விரதங்களையும் புனித ஸ்நானங்களையும், கேள்விகளையும் மற்றும் பூரணமான வழிபாடுகளையும் நிறைவேற்றி இருக்க வேண்டும்! விருந்தாவனத்து கோபிர்கள் அத்தகைய அன்பை எதிர்பார்த்துத்தான் அடிக்கடி மூர்ச்சை அடைத்தனர்.

பதம் 1.10.29
யா வீர்ய-கல்கேன– ஹ்ருதா ஸ்வயம்வரே
ப்ரமத்ய சைத்ய-ப்ரமுகான் ஹி சூஷ்மிண:
ப்ரத்யும்ன- ஸாம்பாம்ப–ஸு-தாதயோ ‘பரா
யாஸ் சாஹ்ருதா: பௌம வதே ஸஹஸ்ரச:

யா-பெண்; வீர்ய-வீரம்; கல்கேன- விலையைச் செலுத்தியதன் மூலம்; ஹ்ருதா:.பலாத்காரமாக தூக்கிச் செல்லப்பட்டனர்; ஸ்வயம்வரே–சுயம்வரச் சடங்கில்; ப்ரமத்ய—தாக்கி; சைத்ய- மன்னன் சிசுபாலனை; ப்ரமுகான்– தலைமையாகக் கொண்ட; ஹி- வெற்றிகரமாக; சூஷ்மிண–சத்திவாய்ந்த அனைவரையும்; ப்ரத்யும்ன:–கிருஷ்ணரின் புதல்வன்; ஸாம்ப:-ஸாம்பன்; அம்ப-அம்பன்; ஸுத –ஆதய–குழந்தைகள்; அபரா– மற்ற பெண்கள்; யா:– அந்த ; ச—மேலும்; ஆஹ்ருதா–-அவ்வாறே தூக்கிச் செல்லப்பட்டனர்; பௌம-வதே:— அரசர்களைக் கொன்றபின்; ஸஹஸ்ரச-ஆயிரக்கணக்கான.

பிரதியும்னன், ஸாம்பன் மற்றும் அம்பன் போன்றவர்கள் இப்பெண்களின் குழந்தைகளாவர். சிசுபாலனை தலைமையாக கொண்ட சக்தி வாய்ந்த அரசர்களைத் தோற்கடித்தபின், ருக்மிணி, சத்தியபாமா மற்றும் ஜாம்பவதியைப் போன்ற பெண்கள், அவர்களது சுயம்வரச் சடங்குகளில் இருந்து பலாத்காரமாக பகவானால் தூக்கிச் செல்லப்பட்டனர். மேலும் பௌமாசுரனையும், அவனது ஆயிரக்கணக்கான உதவியாளர்களையும் அவர் கொன்றபின், மற்ற பெண்களும் அவரால் பலாத்காரமாக தூக்கிச் செல்லப்பட்டனர்.

பதம் 1.10.30
ஏதா: பரம் ஸ்த்ரீத்வம் அபாஸ்தபேசலம்
நிரஸ்த-சௌசம் பத ஸாது குர்வதே
யாஸாம் க்ருஹாத் புஷ்கர-லோசன: பதிர்
ந ஜாத்வ அபைதி ஆஹ்ருதிபிர் ஹ்ருதி ஸ்ப்ருசன்

ஏத:-இப்பெண்கள் அனைவரும்; பரம்-மிகவுயர்ந்த; ஸ்த்ரீத்வம்–பெண்களுக்குரிய குணம்; அபாஸ்தபோலம்-தனித்தன்மை இல்லாமல்; நிரஸ்த—இல்லாமல்; செளசம்—தூய்மை; பத–ஸாது — மங்களகரமாக புகழப்பட்டனர்; குர்வதே–அவர்கள் செய்தனர்; யாஸாம் க்ருஹாத்–யாருடைய வீடுகளில் இருந்து: புஷ்கர-லோசன:–தாமரைக் கண்களையுடைய; பதி-கணவர்; ந ஜாது—எந்த நேரத்திலும் இருந்ததில்லை; அபைதி-சென்றுவிடுவார்; ஆஹ்ருபி: –அன்பளிப்புகளால்; ஹ்ருதி–-_இதயத்தில்; ஸ்ப்ருசன்–-பிரியமாகச் செய்து கொண்டார்.

இப்பெண்கள் அனைவரும் தனிப்பட்ட குணத்தையோ தூய்மையையோ பெற்றிருக்கவில்லை என்றபோதிலும் அவர்கள் தங்களது வாழ்வுகளை பெருமைக்குரியதாகவும், மங்களகரமானதாகவும் மாற்றிக் கொண்டனர். தாமரைக் கண்களை உடைய பரம புருஷராண அவர்களுடைய கணவர் அவர்களை வீட்டில் தனியாக விட்டு சென்றதே இல்லை. அவர்களுக்கு அவர் மதிப்புயர்ந்த அன்பளிப்புகளை அளித்து அவர்களது இதயங்களை எப்பொழுதும் திருப்திப்படுத்தினார்.

பதம் 1.10.31
ஏவம்விதா கதந்தீனாம் ஸ கிர: புர-யோஷிதாம்
நிரீக்ஷணேனாபினந்தன் ஸஸ்மிதேன யயௌ ஹரி:

ஏவம்விதா- இவ்வாறு: சுதந்தீனாம்– இவ்வாறு அவரைப் பற்றி பேசிக் கொண்டும், அவரிடம் வேண்டிக் கொண்டும்;ஸ-அவர் (பகவான்); கிர:-வார்த்தைகளின்; புர–யோஷிதாம்:– தலைநகரப் பெண்களின்; நிரீக்ஷணேன—அவர்களை நோக்கிய பார்வை எனும் அவரது கருணையால்; அபிநந்தன்-மேலும் அவர்களை வாழ்த்தி; ஸ–ஸ்மிதேன:—சிரித்த முகத்துடன்; யயௌ-புறப்பட்டுச் சென்றார்; ஹரி:–-பரம புருஷர்.

தலைநகரான ஹஸ்தினாபுரத்துப் பெண்கள் அவரை வணங்கி, இவ்வாறு பேசிக்கொண்டு இருக்கும் வேளையில், அவர்களது வணக்கங்களை சிரித்த முகத்துடன் ஏற்றுக்கொண்ட பகவான், அவரது கருணையை பார்வையாலேயே அவர்கள் மீது செலுத்தியவாறு நகரிலிருந்து புறப்பட்டுச் சென்றார்.

பதம் 1.10.32
அஜாத-சத்ரு: ப்ருதனாம் கோபீதாய மது—த்விஷ:
பரேப்ய: சங்கித: ஸ்னேஹாத் ப்ராயுங்க்த சதுர்- அங்கிணீம்

அஜாதசத்ரு- ஒருவருக்கும் எதிரியற்றவரான யுதிஷ்டிர மகாராஜன்; ப்ருதாணம்– தற்காப்பு படைகளை; கோபீதாய-பாதுகாப்பு அளிக்க; மதுத்விஷ;– மது அரக்கனுடைய எதிரியின் ( ஸ்ரீ கிருஷ்ணரின்); பரேப்ய-மற்றவர்களிடம் இருந்து (எதிரிகள்): சங்கித–அச்சம் கொண்டு; ஸ்னேஹாத்–சிநேகத்தினால்; ப்ராயுங்க்த- ஈடுபடுத்தினார்; சது:அங்கிணீம்:— நான்கு தற்காப்புப் பிரிவுகளை.

யுதிஷ்டிர மகாராஜன் ஒருவருக்கும் விரோதியல்ல என்றாலும் அசுரர்களின் எதிரியான பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கு துணையாகச் செல்ல அவர் நான்கு தற்காப்புப் பிரிவுகளை (குதிரை, யானை, தேர் மற்றும் காலாட்படை) அமர்த்தினார். எதிரியின் காரணத்தாலும் பகவானிடமுள்ள சிநேகத்தாலுமே மகாராஜன் இதைச் செய்தார்.

பதம் 1.10.33
அத தூராகதான் சௌரி: கௌரவான் விரஹா துரான்
ஸன்னிவர்த்ய த்ருடம் ஸ்னிக்தான் ப்ராயாத் ஸ்வ-நகரீம் ப்ரியை:

அத—இவ்வாறு; தூராகதான்–நீண்ட தூரம் அவரைப் பின்தொடர்ந்து சென்றபின்; சௌரி:-பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்; கௌரவான்–- பாண்டவர்கள்: விரஹாதுரான்-பிரிவைப் பற்றிய எண்ணத்தால் மனம் கலங்கினர்; ஸன்னிவர்த்ய–அன்போடு இசையச் செய்தார்; த்ருடம் பிடிவாதமான; ஸ்னிக்தான்–முழு பாசம்; ப்ராபாத்-பிரயாணமானார்; ஸ்வ-நகரீம்—அவரது சொந்த நகரை (துவாரகை) தோக்கி : ப்ரியை- பிரியமான சகாக்களுடன்.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் இருந்த ஆழ்ந்த பாசத்தினால், குரு வம்சத்தைச் சேர்ந்த பாண்டவர்கள் அவரை வழியனுப்புவதற்காக நீண்ட தூரம் அவரைப் பின்தொடர்ந்து சென்றனர். இனி வரப்போகும் பிரிவை எண்ணி அவர்கள் கலக்கமடைந்தனர். ஆனால் அவர்களை திரும்பிச் செல்லும்படி பகவான் கேட்டுக் கொண்டார். பிறகு அவர் தமது பிரியமான சகாக்களுடன் துவாரகையை நோக்கிப் புறப்பட்டார்.

பதங்கள் 1.10.34 – 1.10.35
குரு-ஜாங்கள-பாஞ்சாலான் சூரசேனான் ஸயாமுனான்
ப்ரஹ்மாவர்தம் குருக்ஷேத்ரம் மத்ஸ்யான் ஸாரஸ்வதான் அத
மரு-தன்வம் அதிக்ரம்ய ஸௌவீராபீரயோ: பரான்
ஆனர்தான் பார்கவோபாகாச் ச்ரான்தவாஹோ மனாக் விபு:

குரு-ஜாங்கள:— டெல்லி மாகாணம்; பாஞ்சாலான்-பஞ்சாப் மாநிலத்தின் ஒரு பகுதி; சூரேஸனான்–-உத்தரபிரதச மாகாணத்தின் ஒரு பகுதி; ஸ-உடன்; யமுனான்- யமுனைக் கரையிலுள்ள ஜில்லா; ப்ரஹ்மாவர்தம்—வடக்கு உத்தரபிரதேசத்தின் ஒரு பகுதி: குருக்ஷேத்ரம்-போர் நிகழ்ந்த இடம்; மத்ஸ்யான்—மத்ஸ்யான் மாகாணம்; ஸாரஸ்வதான்–பஞ்சாப்பின் ஒரு பகுதி; அத-என்பன போன்ற; மரு-பாலைவனங்களைக் கொண்ட நிலமான ராஜஸ்தான்; தன்வம்–தண்ணீர் பற்றாக்குறையாக உள்ள மத்திய பிரதேம்; அதி க்ரம்ய – கடந்து சென்றபின்; ஸௌவீர-ஸௌரஸ்ட்ர; ஆபீரயோ – குஜராத்தின் ஒரு பகுதி; பரான்-மேற்குப் புறம்: ஆனர்தான்–துவாரக மாகாணம்; பார்கவ–-ஓ சௌனகரே; உபாகாத்-கைப்பற்றப்பட்ட,; ஸ்ராந்த-களைப்படைந்தன; வாஹ:-குதிரைகள்; மனாக் விபு– நீண்ட பயணத்தினால் இலேசாக.

சௌனகரே, பகவான் பிறகு குருஜாங்களம், பாஞ்சாலம், சூரசஸனா, யமுனா நதிக் கரையிலுள்ள நிலப்பரப்பு, பிரம்மாவர்தம், குருட்சேத்திரம், மத்ஸ்யம், ஸாரஸ்வதம், பாலைவனங்களைக் கொண்ட மாகாணம் மற்றும் நீர்ப்பஞ்சமுள்ள நிலப்பகுதி ஆகிய இடங்களை நோக்கி முன்னேறிச் சென்றார். இம் மாகாணங்களைக் கடந்து சென்றபின், படிப்படியாக அவர் ஸௌவீர மற்றும் ஆபீர மாகாணங்களை அடைந்தார். பிறகு மேற்கே சென்று, இறுதியாக துவாரகையை அடைந்தார்.

பதம் 1.10.36
தத்ர தத்ர ஹ தத்ரத்யைர் ஹரி: ப்ரத்யுத்யதார்ஹண:
ஸாயம் பேஜே திசம் பஸ்சாத் கவிஷ்டோ காம் கதஸ் ததா

தத்ர தத்ர– வெவ்வேறு இடங்களில்; ஹ—நேரிட்டது; தத்ரத்யை– உள்ளூர் வாசிகளால்; ஹரி:– பரம புருஷர்; ப்ரத்யுத்யத—அர்ஹண:— அன்பளிப்புகளையும், மரியாதைக்குரிய வழிபாட்டையும்; ஸாயம்- சாயங்கால நேரத்தில்; பேஜே- மேற்கொண்ட; திசம்- திசை; பஸ்சாத்–மேற்கு; கவிஷ்த –ஆகாயத்திலுள்ள சூரியன்; காம்:— கடலை நோக்கி; கத:— சென்று விட்டதால்; ததா –அப்போது.

இம்மாகரணங்களைக் கடந்து செல்லும்பொழுது அவர் வரவேற்று, வழிபடப்பட்டு பல வகையான அன்பளிப்புகள் அளிக்கப்பட்டார். இல்வெல்லா இடங்களிலும், மாலையில் சந்தியா வந்தனத்தைச் செய்வதற்காக பகவான் பிரயாணத்தை நிறுத்தினார். இது சூரியாஸ்தமனத்திற்குப் பிறகு முறையாக அனுஷ்டிக்கப்பட்டது.


ஸ்ரீமத் பாகவதம் முதல் காண்டத்தின் “ஸ்ரீ கிருஷ்ணரின் துவாரகை பயணம்” எனும் தலைப்பைக் கொண்ட பத்தாம் அத்தியாயத்திற்கான பக்தி வேதாந்தப் பொருளுரைகள் இவ்வாறு நிறைவு பெறுகின்றன.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare