அத்தியாயம் – 6
பூதனை அரக்கி வதம்
பதம் 10.6.1
ஸ்ரீ-சுக உவாச
நந்த: பதி வச: சௌரேர் ந ம்ருஷேதி விசிந்தயன்
ஹரிம் ஜகாம சரணம் உத்பாதாகம-சங்கித:
ஸ்ரீ-சுக: உவாச—ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்; நந்த:—நந்த மகாராஜன்; பதி—வீடு திரும்பும் பொழுது; வச:—வார்த்தைகள்; சௌரே—வசுதேவரின்; ந—இல்லை; ம்ருசா—காரணமில்லாமல்; இதி—இவ்வாறாக; விசிந்தயன்—தன் குழந்தைக்கு ஆபத்து ஏற்படுமோ என்று நினைத்துக் கொண்டு இருக்கும்பொழுது; ஹரிம்—அனைத்தையும் ஆள்பவரான பரமபுருஷரை; ஜகாம—ஏற்றார்; சரணம்—புகலிடம்; உத்பாத—தொல்லைகளின்; ஆகம—எதிர்பார்ப்புடன்; சங்கீத:—இவ்வாறு அஞ்சியதால்.
சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்தார்: அரசே, நந்த மகாராஜன் வீடு திரும்பும்பொழுது வசுதேவர் கூறியது பொய்யாக இருக்க முடியாது என்று கருதினார். கோகுலத்தில் ஏதேனும் தொல்லைகள் ஏற்படக்கூடும் என்றெண்ணியதும் அழகுப் புதல்வரான கிருஷ்ணருக்கு ஆபத்து ஏற்படுமோ என்றஞ்சிய நந்த மகாராஜன் பரமபுருஷரின் தாமரைப் பாதங்களில் சரணடைந்தார்.
பதம் 10.6.2
கம்ஸேன ப்ரஹிதா கோரா பூதனா பால-காதினீ
சிசூம்ஸ் சசார நிக்னந்தீ புர-க்ராம-வ்ரஜாதிஷு
கம்ஸேன—கம்ச மன்னனால்; ப்ரஹிதா—முன்பு செய்த; கோரா—மிகவும் கொடூரமான; பூதனா—பூதனை என்ற; பால-காதினீ—கொன்ற ஒரு இராட்சஸி; சிசூன்—சிறு குழந்தைகளை; சசார—சுற்றித்திரிந்த; நிக்னந்தீ—கொன்றபடி; புர-க்ராம-வ்ரஜ-ஆதிஷு—நகரங்களிலும், கிராமங்களிலும் இங்குமங்குமாக.
நந்தமகாராஜன் கோகுலத்திற்குத் திரும்பும்பொழுது, குழந்தைகளைக் கொல்லும்படி கம்சனால் முன்பு ஏவப்பட்ட அதே கொடிய அரக்கியான பூதனை, பாவமான தன் கடமையைச் செய்யும்படி நகரங்களிலும் கிராமங்களிலும் இடைச் சேரிகளிலும் சஞ்சரித்து வந்தாள்.
பதம் 10.6.3
ந யத்ர ஸ்ரவணாதீனி ரக்ஷோ-க்னானி ஸ்வ-கர்மஸு
குர்வந்தி ஸாத்வதாம் பர்துர் யாதுதான்யஸ் ச தத்ர ஹி
ந—இல்லை; யத்ர—எங்கெல்லாம்; ஸ்ரவண-ஆதீனி—கேட்பதிலும் பாடுவதிலும் துவங்கும் பக்தியோகச் செயல்கள்; ரக்ஷ:-க்னானி—எல்லா ஆபத்துக்களையும், தீய சக்திகளையும் கொல்லக்கூடிய ஒலி அதிர்வு; ஸ்வ-கர்மஷு—தன் சொந்த வர்ணாஸ்ரம கடமையில் ஒருவன் ஈடுபட்டிருப்பானாயின்; குர்வந்தி—இவை செய்யப்படுகின்றன; ஸாத்வதாம்பர்து—பக்தர்களைக் காப்பவரின்; யாதுதான்ய:—தொல்லை தரும் தீய சக்திகள்; ச—கூட; தத்ர ஹி—இருக்க வேண்டும்.
அரசே, எங்கெல்லாம் மக்கள் பாடுவதாலும், கேட்பதாலும் (ஸ்வரணம், கீர்த்தனம் விஷ்ணோ:) தங்களது வர்ணாஸ்ரமக் கடமையான பக்தித்தொண்டைச் செய்கிறார்களோ, அங்கெல்லாம் தீய சக்திகளின் ஆபத்து இருக்க முடியாது. எனவே கோகுலத்தில் பரமபுருஷரே நேரடியாக எழுந்தருளியிருப்பதால், கவலைப்பட வேண்டிய அவசியமில்லை.
பதம் 10.6.4
ஸா கே-சரி ஏகதோத்பத்ய பூதனா நந்த-கோகுலம்
யோஷித்வா மாயயாத்மானம் ப்ராவிசத் காம-சாரிணீ
ஸா—அந்த (பூதனை); கே-சரீ—வானவெளியில் பிரயாணம் செய்த; ஏகதா—ஒருசமயம்; உத்பத்ய:—பறந்து சென்றாள்; பூதனா—பூதனை அரக்கி; நந்த-கோகுலம்—நந்த மகாராஜனின் இடமான கோகுலத்தில்; யோஷித்வா—அழகிய மங்கையாக உருமாறி; மாயயா—மாயா ஜாலத்தினால்; ஆத்மானம்—அவளாகவே; ப்ராவிசத்—புகுந்தாள்; காம–சாரிணீ—தன் விருப்பம் போல் சஞ்சரிக்கக் கூடியவள்.
ஒருசமயம், தன் விருப்பம்போல் சஞ்சரிக்கக்கூடிய பூதனை என்ற அரக்கி ஆகாயத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்தாள். இவ்வாறு தன் மாயாஜாலத்தினால் ஓர் அழகிய மங்கையாக தன்னை மாற்றிக் கொண்ட அவள், நந்த மகாராஜனின் வசிப்பிடமான கோகுலத்திற்குள் புகுந்தாள்.
பதங்கள் 10.6.5 – 10.6.6
தாம் கேச-பந்த-வ்யதிஷக்த-மல்லிகாம்
ப்ருஹன்-நிதம்ப-ஸ்தன-க்ருச்ர-மத்யமாம்
ஸுவாஸஸம் கல்பித-கர்ண-பூஷண-
த்விஷோல்லஸத்-குந்தல-மண்டிதானனாம்
வல்கு-ஸ்மிதாபாங்க்-விஸர்க-வீக்ஷிதைர்
மனோ ஹரந்தீம் வனிதாம் வ்ரஜெனகஸாம்
அமம்ஸதாம்போஜ-கரேண ரூபிணீம்
கோப்ய: ஸ்ரியம் த்ரஷ்டும் இவாகதாம் பதிம்
தாம்—அவளது; கேச-பந்த-வ்யதிஷக்த-மல்லிகாம்—யாருடைய சிகை மல்லிகை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்ததோ; ப்ருஹத்—மிக மிகப்பெரிய; நிதம்ப-ஸ்தன—அவளது இடைகளாலும், உறுதியான ஸ்தனங்களாலும்; க்ருச்ர-மத்யாமாம்—யாருடைய மெல்லிய இடைக்கு சுமை அதிகமாயிற்றோ; ஸுவாஸஸம்—அழகாக வர்ணம் தீட்டப்பட்ட அல்லது மிகக் கவர்ச்சியாக உடையணிந்த; கல்பித-கர்ண-பூஷண—அவளது காதுகளை அலங்கரித்த காதணிகளின்; த்விஷா—பிரகாசத்தால்; உல்லஸத்—மிகக் கவர்ச்சியான; குந்தல-மண்டித-ஆனனாம்—யாருடைய அழகிய முகம் கருங் கூந்தலால் சூழப்பட்டிருந்ததோ; வல்கு-ஸ்மித-அபாங்க-விஸர்க-வீக்ஷிதை:—அனைவர் மீதும் அவள் செலுத்திய புன்னகை தவழும் அவளது பார்வையால்; மன: ஹரந்தீம்—(அவளால்) எல்லோருடைய கவனமும் ஈர்க்கப்பட்டது; வனிதாம்—மிகக் கவர்ச்சியான ஒரு பெண்; வ்ரஜ-ஓகஸாம்—கோகுல வாசிகளின்; அமம்ஸத—எண்ணினர்; அம்போஜ—ஒரு தாமரை மலரைப் பிடித்திருக்கும்; கரேண—அவளது கரத்தில்; ரூபிணீம்—மிகவும் அழகான; கோப்யா:—கோகுல வாசிகளான கோபியர்கள்; ஸ்ரியம்—லக்ஷ்மி தேவி; த்ரஷ்டும்—காண; இவ—என்பது போல்; ஆகதாம்—வந்திருக்கிறாள்; பதிம்—அவளது கணவரை.
அவளது இடுப்பு முழுமையாக இருந்தது. பெரிதாகவும், உறுதியாகவும் இருந்த அவளது மார்பகங்கள், அவளது மெல்லிய இடைக்கு அதிகச் சுமைபோல் காணப்பட்டன. அவள் மிகவும் அழகாக உடையணிந்திருந்தாள். மல்லிகை மலர் மாலையால் அலங்கரிக்கப்பட்டிருந்த கூந்தல் அவளது அழகு முகத்தைச் சுற்றிச் சிதறிக்கிடந்தது. அவளது காதணிகள் பிரகாசித்தன. அவள் மிகவும் கவர்ச்சியாக புன்னகை செய்து அனைவர்மீதும் தன் பார்வையைச் செலுத்தினாள். அவளது அழகு விரஜவாசிகள் அனைவருடைய கவனத்தையும் ஈர்த்தது. குறிப்பாக ஆண்களின் கவனத்தை அது ஈர்த்தது. அவளைக் கண்ட கோபியர்கள், தன் கணவரான கிருஷ்ணரைக் காண கையில் தாமரை மலரை ஏந்தியபடி அழகிய லக்ஷ்மி தேவியே வந்துவிட்டாளோ என்று எண்ணினர்.
பதம் 10.6.7
பால-க்ரஹஸ் தத்ர விசின்வதீ சிசூன்
யத்ருச்சயா நந்த-க்ருஹே ‘ஸத்-அந்தகம்
பாலம் ப்ரதிச்சன்ன-நிஜோரு-தேஜஸம்
ததர்ச தல்பே ‘க்னிம் இவாஹிதம் பஸி
பால-க்ரஹ:—சிசுக்களைக் கொல்வதையே தொழிலாகக் கொண்ட சூனியக்காரி; தத்ர—அங்கு நின்றுகொண்டு; விசின்வதீ—எண்ணிக் கொண்டு, தேடியபடி; சிசூன்—சிசுக்களை; யத்ருச்சயா—சுதந்திரமாக; நந்த-க்ருஹே—நந்த மகாராஜனின் வீட்டில்; அஸத்-அந்தகம்—எல்லா அசுரர்களையும் கொல்லக்ககூடியவர்; பாலம்—குழந்தை; ப்ரதிச்சன்ன—மூடிய; நிஜ—உரு-தேஜஸம்—யாருடைய எல்லையற்ற் சக்தி; ததர்ச—அவள் கண்டாள்; தல்பே—படுக்கையில் (படுத்திருந்த); அக்னிம்—நெருப்பு; இவ—போல்; ஆஹிதம்—மூடப்பட்ட; பஸி—சாம்பலால்.
சிறு குழந்தைகளைக் கொல்வதையே தொழிலாகக் கொண்டிருந்த பூதனை அவர்களைத் தேடியலையும் வேளையில், பகவானின் உயர்ந்த சக்தியின் தூண்டுதலால், தடையின்றி நந்த மகாராஜனின் வீட்டினுள் புகுந்தாள். யாருடைய அனுமதியும் இல்லாமல் நந்த மகாராஜனின் அறைக்குள் புகுந்த அவள், சாம்பலுக்குள் மறைந்துள்ள நெருப்புபோல், தமது எல்லையற்ற சக்தியை மறைத்துக் கொண்டிருந்த குழந்தை படுக்கையில் உறங்குவதைக் கண்டாள். இது சாதாரணக் குழந்தையல்ல, எல்லா அசுரர்களையும் கொல்வதற்காகவே வந்துள்ளது என்பதை அவளால் புரிந்துகொள்ள முடிந்தது.
பதம் 10.6.8
விபுத்ய தாம் பாலக-மாரிகா-க்ரஹம்
சராசராத்மா ஸ நிமீலிதேக்ஷண:
அனந்தம் ஆரோபயத் அங்கம் அந்தகம்
யதோரகம் ஸுப்தம் அபுத்தி-ரஜ்ஜு-தீ:
விபுத்ய—அறிந்து; தாம்—அவளை (பூதனையை); பாலக-மாரிகா-க்ரஹம்—இளம் குழந்தைகளைச் கொல்வதில் மிகவும் திறமை பெற்ற ஒரு சூனியக்காரி; சர-அசர-ஆத்மா—சர்வ வியாபகமுடைய பரமாத்மாவான, கிருஷ்ணர்; ஸ:—அவர்; நிமீலித-ஈக்ஷண:—அவரது கண்களை மூடிக்கொண்டார்; அனந்தம்—எல்லையற்றவரான; ஆரோபயத்—அவள் வைத்தாள்; அங்கம்—அவளது மடியில்; அன்தகம்—அவளது சுய அழிவுக்காக; யதா—போல; உரகம்—ஒரு பாம்பு; ஸுப்தம்—உறங்கும் பொழுது; அபுத்தி—புத்தியற்ற ஒருவன்; ரஜ்ஜுதீ:—ஒரு கயிற்றைப் பாம்பென்று நினைப்பவன்.
இளம் குழந்தைகளைக் கொல்வதில் மிகவும் திறமைபெற்ற சூனியக்காரியான பூதனை, தம்மைக் கொல்வதற்காகவே வந்திருக்கிறாள் என்பதைப் படுக்கையில் படுத்திருந்த, சர்வ வியாபகமுடைய பரமாத்வாவான பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் புரிந்து கொண்டார். எனவே அவளுக்கு அஞ்சியவர் போல் கிருஷ்ணர் தமது கண்களை மூடிக்கொண்டார். இவ்வாறாக உறங்கும் பாம்பை ஒரு கயிறென்றெண்ணி, அதைத் தன் மடியில் வைத்துக்கொள்ளும் ஒருவனைப் போலவே. பூதனை தன் சொந்த அழிவுக்குக் காரணமாக இருக்கப் போகும். பகவானைத் தன் மடியில் வைத்துக் கொண்டாள்.
பதம் 10.6.9
தாம் தீக்ஷ்ண-சித்தாம் அதிவாம-சேஷ்டிதாம்
வீஷ்யாந்தரா கோஷ-பரிச்சதாஸிவத்
வர-ஸ்த்ரியம் தத்-ப்ரபயா ச தர்ஷிதே
நிரீக்ஷ்யமானே ஜனனீ ஹி அதிர்ஷ்டதாம்
தாம்—அந்த (பூதனை அரக்கி); தீஷ்ண-சித்தாம்—குழந்தையைக் கொல்லும் கொடூரமான இதயம் கொண்ட; அதி-வாம-சேஷ்டிதாம்—ஒரு தாயைவிட நன்றாக அக்குழந்தையை அவள் உபசரிக்க முயன்ற போதிலும்; வீக்ஷ்ய அந்தரா—அறைக்குள் அவளைக் கண்டு; கோஷ-பரிச்சத-அஸி-வத்—மென்மையான உறையிலுள்ள கூரிய வாள் போல்; வர-ஸ்த்ரியம்—அழகிய அப்பெண்; தத்-ப்ரபயா—அவளது செல்வாக்கினால்; ச—கூட; தர்ஷிதே—மயங்கியதால்; நீரிஷ்யமாணே—பார்த்துக் கொண்டிருந்தனர்; ஜனனீ—இரு தாய்களும்; ஹி—உண்மையாகவே; அதிஷ்டதாம்—தடை செய்யாமல் மௌனமாக இருந்தனர்.
பூதனை அரக்கியின் இதயம் கொடூரமாகவும், இரக்கமற்றதாகவும் இருந்தது என்றாலும், பாசமுள்ள ஒரு தாய்போல் அவள் காணப்பட்டாள். இவ்வாறு மென்மையான உறையிலிருந்த ஒரு கூரிய வாளை அவள் ஒத்திருந்தாள். அவளை அறைக்குள் கண்ட யசோதையும் ரோகிணியும், அவளது அழகில் மயங்கிவிட்டனர். அவள் ஒரு தாயைப் போல் குழந்தையை கவனித்ததால், அவளைத் தடுக்காமல் இருவரும் மௌனமாக இருந்தனர்.
பதம் 10.6.10
தஸ்மின் ஸ்தனம் துர்ஜர-வீர்யம் உல்பணம்
கோராங்கம் ஆதாய சிசோர் ததாவ் அத
காடம் கராப்யாம் பகவான் ப்ரபீட்ய தத்-
ப்ராணை: ஸமம் ரோஷ-ஸமன் விதோ ‘பிபத்
தஸ்மின்—அதே இடத்தில்; ஸ்தனம்—ஸ்தனம்; துர்ஜர-வீர்யம்—மிகவும் சக்திவாய்ந்த விஷம் கலந்த ஒராயுதம்; உல்பணம்—கொடூரமான; கோரா—கோரமான பூதனை; அங்கம்—அவளது மடிமீது; ஆதாய—வைத்து; சிசோ:—குழந்தையின் வாயில்; ததௌ—திணித்தாள்; அத—அதன்பிறகு; காடம்—மிகவும் கடுமையாக; கராப்யாம்—இரு கைகளாலும்; பகவான்—பரமபுருஷர்; ப்ரபீட்ய—அவளை மிகவும் துன்புறுத்தி; தத்-ப்ராணை:—அவளது உயிரை; ஸமம்—அதனுடன்; ரோஷ-ஸமன் வித:—அவளிடம் மிகவும் கோபங் கொண்டு; அபிபத்—முலையை உறிஞ்சிக் குடித்தார்.
மிகக் கொடூரமான அந்த இராட்சஸி அந்த இடத்திலேயே கிருஷ்ணரை எடுத்துத் தன் மடியில் வைத்துக் கொண்டு, அவளது முலையை அவரது வாய்க்குள் தினித்தாள். அவளது முலைக்காம்பில், உடனே செயற்படக்கூடிய ஆபத்தான விஷம் தடவப்பட்டிருந்தது. ஆனால் கடும்கோபங் கொண்ட பரமபுருஷராகிய கிருஷ்ணர், அவளது முலையை இரு கைகளாலும் பற்றி மிகவும் கடுமையாகப் பிழிந்து, விஷத்துடன் அவளது உயிரையும் உறிஞ்சிக் குடித்து விட்டார். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தன் பொருட்டு பூதனையிடம் கோபம் கொள்ளவில்லை. பிருந்தாவனத்திலுள்ள பல இளம் குழந்தைகளைக் கொன்றதற்காகவே அவளிடம் அவர் கோபம் கொண்டார். எனவே அவளது உயிரைப் பறித்து அவளுக்குத் தண்டைன அளிக்க முடிவு செய்தார்.
பதம் 10.6.11
ஸா முஞ்ச முஞ்சாலம் இதி ப்ரபாஷிணீ
நிஷ்பீட்யமானாகில-ஜீவ-மர்மணி
விவ்ருத்ய நேத்ரே சரணௌ புஜென முஹு:
ப்ரஸ்வின்ன-காத்ரா க்ஷிபதீ ருரோத ஹ
ஸா—அவள் (பூதனை); முஞ்ச—விட்டுவிடு; முஞ்ச—விட்டுவிடு; அலம்—இனியும் என் முலைப் பாலைக் குடிக்க வேண்டாம்; இதி—இவ்வாறு; ப்ரபாஷிணீ—கதறியபடி; நிஷபீட்யமானா—கடுமையாக நசுக்கப்பட்டதால்; அகில-ஜீவ-மர்மணி—அவளது ஒவ்வொரு முக்கிய உயிர் நிலைகளிலும்; விவ்ருத்ய—அகலத் திறந்து; நேத்ரே—அவளது இரு கண்களையும்; சரணௌ—இரு கால்கள்; புஜென—இரு கைகள்; முஹு—மீண்டும் மீண்டும்; ப்ரஸ்வின்ன-காத்ரா—அவளது உடல் வியர்க்க; க்ஷிபதீ—வீசியபடி; ருரோத—கடுமையாகக் கதறினாள்; ஹ—உண்மையில்.
ஒவ்வொரு முக்கிய உயிர்நிலையும் பொறுக்க முடியாதபடி நசுக்கப்பட்டதால், இராட்சஸியான பூதனை, “தயவு செய்து என்னை விட்டு விடு, என்னை விட்டு விடு! இனியும் என் முலைப்பாலைக் குடிக்க வேண்டாம்” என்று கதறத் தொடங்கினாள். அவளது உடல் வியர்த்துக் கொட்ட, கண்கள் அகல விரிந்தபடி, கை கால்களை உதறிக் கொண்டு. மீண்டும் மீண்டும் உரக்கக் கதறினாள்.
பதம் 10.6.12
தஸ்யா: ஸ்வனேனாதிகபீர-ரம்ஹஸா
ஸாத்ரிர் மஹீ த்யௌஸ் ச சசால ஸ-க்ரஹா
ரஸா திசஸ் ப்ரதினேதிரே ஜனா:
பேது: க்ஷிதௌ வஜ்ர-நிபாத-சங்கயா
தஸ்யா:—பெரிய இராட்சஸியான பூதனையின்; ஸ்வனேன—ஓசையின் அதிர்வால்; அதி—மிகவும்; கபீர—ஆழ்ந்த; ரம்ஹஸா—சக்தி மிகுந்து; ஸ-அத்ரி:—மலைகளுடன்; மஹீ—உலகமே; த்யௌ: ச—மற்றும் விண்வெளியும்; சசால—நடுங்கின; ஸ-க்ரஹா—நட்சத்திரங்களுடன்; ரஸா—மண்ணுலகின் கீழே; திச: ச—மற்றும் எல்லாத் திசைகளும்; ப்ரதினேதிரே—அதிர்ந்தன; ஜனா:—பொது ஜனங்கள்; பேது:—கீழே விழுந்தனர்; க்ஷிதௌ—பூமியின் மேல்; வஜ்ர-நிபாத-சங்கயா—இடி விழுகிறதோ என்று சந்தேகித்து.
பூதனை பெரும் சக்தியுடன் உரக்கக் கதறிய பொழுது, மலைகளுடன் கூடிய பூமியும், கிரகங்களுடன் கூடிய விண்வெளியும் அதிர்ந்தன. அத்துடன் கீழுலகங்களும், அனைத்துக் திசைகளும்கூட அதிர்ந்தன. தங்கள் மீது இடி விழுகிறதோ என்றஞ்சி மக்கள் கீழே விழுந்தனர்.
பதம் 10.6.13
நிசா-சரீத்தம் வ்யதித-ஸ்தனா வ்யாஸுர்
வ்யாதாய கேசாம்ஸ் சரணௌ புஜாவ் அபி
ப்ரஸார்ய கோஷ்டே நிஜ-ரூபம் ஆஸ்திதா
வஜ்ராஹதோ வ்ருதர இவாபதன் ந்ருப
நிசா-சரீ—அந்த இராட்சஸி; இத்தம்—இவ்வாறாக; வ்யதித-ஸ்தனா—தன் ஸ்தனம் அழுத்தப்பட்டு கடும் வேதனைக்குள்ளானதால்; வ்யஸு:—அவளது உயிரைத் துறந்தாள்; வ்யாதாய—வாயை அகலமாகத்திறந்து; கேசான்—கேசம்; சரணௌ—அவளது இரு கால்கள்; புஜௌ—அவளது இரு கரங்கள்; அபி—கூட; ப்ரஸார்ய—விரிவடைந்த; கோஷ்டே—புல்வெளியில்; நிஜ-ரூபம்-ஆஸ்திதா—அவளது சுயமான இராட்சஸ ரூபத்தை ஏற்றாள்; வஜ்ர-ஆஹத:—இந்திரனின் வஜ்ராயுதத்தால் கொல்லப்பட்ட; வ்ருத்ர:—விருத்ராசுரன்; இவ—போல்; அபதத்—விழுந்தாள்; ந்ருப—அரசே.
இவ்வாறு கிருஷ்ணரால் தன் மார்பகம் தாக்கப்பட்டுக் கடும் வேதனைக்குள்ளான பூதனை அரக்கி தன் உயிரை இழந்தாள். பரீட்சித்து மகாராஜனே, இந்திரனின் வஜ்ராயுதத்தால் கொல்லப்பட்டு கீழேவிழுந்த விருத்ராசுரனைப்போல், அவள் தனது சுயமான இராட்சஸ ரூபத்துடன் வாயை அகலத் திறந்தபடி, கை கால்களை பரப்பிக் கொண்டு தலைவிரி கோலமாக புல்வெளியில் விழுந்தாள்.
பதம் 10.6.14
பதமானோ ‘பி தத்-தேஹஸ் த்ரி-கவ்யூதி-அந்தர-த்ருமான்
சூர்ணயாம் ஆஸ ராஜேந்ர மஹத் ஆஸித் தத் அத்புதம்
பதமான: அபி—கீழே விழும்பொழுதுகூட; தத்-தேஹ:—அவளது பிரம்மாண்டமான உடல்; த்ரி-கவ்யூதி-அந்தர—பன்னிரண்டு மைல்கள் கொண்ட எல்லைக்குள்; த்ருமான்—எல்லா வகையான மரங்களையும்; சூர்ணயாம் ஆஸ—நொறுக்கிகொண்டு; ராஜேந்ர—பரீட்சித்து மகாராஜனே; மஹத் ஆஸீத்—பிரம்மாண்டமாக இருந்த; தத்—அவ்வுடல்; அத்புதம்—மேலும் மிக மிக அற்புதமான.
பரீட்சித்து மகாராஜனே. பூதனையின் பிரம்மாண்டமான உடல் தரையில் விழுந்தபொழுது, அது பன்னிரண்டு மைல்களுக்குட்பட்ட எல்லா மரங்களையும் நொறுங்கித் தள்ளியது. பிரம்மாண்டமான உடலில் தோன்றிய அவள் அசாதாரணமானவள் என்பதில் சந்தேகமில்லை.
பதங்கள் 10.6.15 – 10.6.17
ஈஷா-மாத்ரோக்ர-தம்ஷ்ட்ராஸ்யம் கிரி-கந்தர-நாஸிகம்
கண்ட-சைல-ஸ்தனம் ரௌத்ரம் ப்ரகீர்ணாருண-மூர்தஜம்
அந்த-கூப-கபீராக்ஷம் புலினாரோஹ-பீஷணம்
பத்த-ஸேது-புஜோர்வ்-ஆங்ரி சூன்ய-தோய-ஹ்ரதோதாம்
ஸந்தத்ரஸு: ஸ்ம தத் வீக்ஷ்ய கோபா கோப்ய: கலேவரம்
பூர்வம் து தன்-நிஹ்ஸ்வனித-பின்ன-ஹ்ருத்-கர்ண-மஸ்தகா:
ஈஷா-மாத்ர—கலப்பையின் நுனிபோல்; உக்ர—கொடூரமான; தம்ஷ்ட்ரா—பற்கள்; ஆஸ்யம்—கொண்ட ஒர் வாயையுடைய; கிரி-கந்தர—மலைக் குகைகள் போல்; நாஸிகம்—யாருடைய நாசித்துவாரம்; கண்ட-சைல—பெரிய பாறைகளைப் போல்; ஸ்தனம்—யாருடைய ஸ்தனங்கள்; ரௌத்ரம்—மிகக் கொடூரமாக; ப்ரகீர்ண—சிதறிக் கிடந்தது; அருண-மூர்த-ஜம்—செம்புநிற கேசத்தைக் கொண்ட; அந்த-கூப—இருண்ட கிணறுகள் போல்; கபீர—ஆழமான; அக்ஷம்—நேத்திரக் குழிகள்; புலின-ஆரோஹ-பீஷணம்—அவளது தொடைகள் ஒரு நதியின் கரைகளைப் போல் அச்சமூட்டுபவையாக இருந்தன; பத்த-ஸேது-புஜ-உரு-அங்ரி—அவளது கைகளும், தொடைகளும் பாதங்களும் உறுதியான பாலங்களைப் போல் இருந்தன; சூன்ய-தோய-ஹ்ரத-உதரம்—அவளது வயிற்றுப்பகுதி வரண்ட ஏரிபோல் இருந்தது; ஸந்தத்ரஸு: ஸ்ம—அச்சமடைந்தனர்; தத்—அந்த; வீக்ஷ்ய—கண்டு; கோபா:—இடையர் குல ஆட்களும்; கோப்ய:—இடையர் குலப் பெண்களும்; கலேவரம்—இத்தகைய ஒரு பிரம்மாண்டமான உடலை; பூர்வம் து—அதற்கு முன்; தத்-நிஷ்ஸ்வனித—அவளது உரத்த ஓசையின் காரணத்தால்; பின்ன—அதிர்ச்சி அடைந்திருந்தனவோ; ஹ்ருத்—யாருடைய இதயங்கள்; கர்ண—காதுகள்; மஸ்தகா:—மற்றும் தலைகள்.
இராட்சஸியின் வாய் பற்களால் நிறைந்திருந்தது. அப்பற்கள் ஒவ்வொன்றும் ஒரு கலப்பையின் முன்புறத்தை ஒத்திருந்தது. அவளது நாசித் துவாரங்கள் ஆமுமான மலைக் குகைகள் போலிருந்தன. அவளது மார்பகங்கள் மலையிலிருந்து சரிந்து விழுந்த பாறைகளை ஒத்திருந்தன. சிதறிக்கிடந்த அவளது கேசம் செம்பு நிறமாக இருந்தது. அவளது நேத்திறக் குழிகள் பாழடைந்த கிணறுகளைப் போலிருந்தன. அவளது கைகளும், கால்களும், பாதங்களும் பெரும் பாலங்களைப் போல் காணப்பட்டன. அவளது வயிற்றுப்பகுதி உலர்ந்த ஏரிபோல் காணப்பட்டது. இடையர்குல ஆண் பெண்களின் இதயங்களும், காதுகளும், தலைகளும் இராட்சஸியின் அலறலால் முன்பே அதிர்ச்சிக்கு உள்ளாகியிருந்தன. மேலும் அற்புதமான அவளது கோர ரூபத்தை கண்டதும் அவர்கள் இன்னும் அதிக அச்சத்திற்குள்ளாயினர்.
பதம் 10.6.18
பாலம் ச தஸ்யா உரஸி க்ரீடந்தம் அகுதோபயம்
கோப்யஸ் தூர்ணம் ஸமப்யேத்ய ஜக்ருஹுர் ஜாத-ஸ்ம்ப்ரமா:
பாலம் ச—குழந்தையும் கூட; தஸ்யா—அவளது (பூதனையின்); உரஸி—ஸ்தனத்தின் மேற்பகுதியில்; க்ரீடந்தம்—விளையாடுவதில் ஈடுபட்டிருந்தது; அகுதோபயம்—அச்சமின்றி; கோப்ய:—இடையர் குலப் பெண்கள் அனைவரும்; தூர்ணம்—உடனே; ஸமப்யேத்ய—அருகில் வந்து; ஜக்ருஹு:—கையிலெடுத்தனர்; ஜாத-ஸம்ப்ரமா:—எப்பொழுதும் அவர்கள் காப்பாற்றி வந்த அதே பாசத்துடனும், மரியாதையுடனும்.
குழந்தை கிருஷ்ணர் இராட்சஸியான பூதனையின் மார்பின்மேல் அச்சமின்றி விளையாடிக் கொண்டிருந்தார். குழந்தையின் அற்புதச் செயல்களைக் கண்ட கோபியர்கள், பெருமகிழ்ச்சியுடன் முன்வந்து அவரை உடனே கையிலெடுத்தனர்.
பதம் 10.6.19
யசோதா-ரோஹிணிப்யாம் தா ஸமம் பாலஸ்ய ஸர்வத:
ரக்ஷாம் விததிரே ஸம்யக் கோ-புச்ச ப்ரமணாதிபி:
யசோதா-ரோஹிணிப்யாம்—முக்கியமாக குழந்தையின் பொறுப்பை ஏற்றிருந்த தாய் யசோதை மற்றும் ரோகிணி ஆகியோருடன்; தா:—மற்ற கோபியர்கள்; ஸமம்—யசோதயையும், ரோகிணியையும் போலச் சம முக்கியமான; பாலஸ்ய—குழந்தையின்; ஸர்வத:—எல்லா ஆபத்துக்களிலிருந்தும்; ரக்ஷாம்—பாதுகாப்பு; விததிரே—செய்தனர்; ஸம்யக்—முற்றிலும்; கோ-புச்ச-ப்ரமண-ஆதிபி:—ஒரு பசுவின் வாலைச் சுழற்றிச் சைகை செய்வதன் மூலமாக.
அதன் பிறகு, குழந்தையான ஸ்ரீ கிருஷ்ணருக்கு முழு பாதுகாப்பை அளிக்க, தாய் யசோதையும், ரோகிணியும் மற்ற வயதான கோபியர்களுடன் ஒரு பசுவின் வாலைச் சுழற்றி சைகை செய்தனர்.
பதம் 10.6.20
கோ-மூத்ரேண ஸ்னாபயித்வா புனர் கோ-ரஜஸார்பகம்
ரக்ஷம் சக்ருஸ் ச சக்ருதா த்வாதசங்கேஷு நாமபி:
கோ-மூத்ரேண—பசுவின் மூத்திரத்தினால்; ஸ்னாபயித்வா—நன்றாகக் கழுவியபின்; புன:—மீண்டும்; கோ-ரஜஸா—பசுக்களின் நடமாட்டத்தால் உண்டாகும் புழுதியால்; அர்பகம்—குழந்தைக்கு; ரக்ஷாம்—பாதுகாப்பு; சக்ரூ:—நிறைவேற்றினர்; ச—மேலும்; சக்ருதா—பசுவின் சாணத்தினால்; த்வாதச-அங்கேஷு—பன்னிரண்டு இடங்களில் (த்வாதச-திலக); நாமபி:—பகவானின் புனித நாமத்தை எழுதுவதால்.
குழந்தை கோ ஜலத்தால் நன்கு கழுவப்பட்டபிறகு, பசுக்களின் நடமாட்டத்தால் எழுந்த புழுதி குழந்தையின்மேல் பூசப்பட்டது. பிறகு பகவானின் வெவ்வேறு நாமங்களை உச்சரித்து, அவரது உடலின் பன்னிரண்டு பகுதிகளில் பசுவின் சாணம் தடவப்பட்டது. திலகமிடுவதில் செய்யப்படுவதுபோலவே இதுவும் நெற்றியிலிருந்து ஆரம்பிக்கப்பட்டது. இவ்விதமாக குழந்தைக்குப் பாதுகாப்பு அளிக்கப்பட்டது.
பதம் 10.6.21
கோப்ய: ஸம்ஸ்ப்ருஷ்ட-ஸலிலா அங்கேஷு கரயோ: ப்ருதக்
ன்யஸ்யாத்மனி அத பாலஸ்ய பீஜு-ன்யாஸம் அகுர்வத
கோப்ய:—கோபியர்கள்; ஸம்ஸ்ப்ருஷ்ட-ஸலிலா:—ஒரு பாத்திர நீரைத் தொட்டு, அதைக் குடித்து; அங்கேஷு—அவர்களது உடல்களின் மேல்; கரயோ:—அவர்களது இருகரங்களின் மேல்; ப்ருதக்—தனியாக; ன்யஸ்ய—மந்திரத்தின் அட்சரங்களைப் பொறித்த பின்; ஆத்மனி—அவர்களாகவே; அத—பிறகு; பாலஸ்ய—குழந்தையின்; பீஜ-ன்யாஸம்—மந்த்ர-ன்யாஸ முறை; அகுர்வத—நிறைவேற்றினர்.
கோபியர்கள் முதலில் வலது கையிலிருந்து சிறிது நீரைக் குடித்து ஆச்சமன முறையை நிறைவேற்றினர். ன்யாஸு-மந்திரத்தால் தங்களது உடல்களையும், கரங்களையும் அவர்கள் தூய்மைப்படுத்தினர். பிறகு அதே மந்திரத்தைக் குழந்தையின் உடல்மீது பொறித்தனர்.
பதங்கள் 10.6.22 – 10.6.23
அவ்யாத் அஜோ ‘ங்ரி மணிமாம்ஸ் தவ ஜான்வ் அதோரூ
யக்ஞோ ‘ச்யுத: கடி-தடம் ஜடரம் ஹயாஸ்ய:
ஹ்ருத் கேசவஸ் த்வத்-உர ஈச இனஸ் து கண்டம்
விஷ்ணுர் புஜம் முகம் உருக்ரம ஈஸ்வர: கம்
சக்ரி அக்ரத: ஸஹ-கதோ ஹரிர் அஸ்து பஸ்சாத்
த்வத்-பார்ஸ்வயோர் தனுர்-அஸீ மது-ஹாஜனஸ் ச
கோணேஷு சங்க உருகாய உபரி உபேந்ரஸ்
தார்க்ஷ்ய: க்ஷிதௌ ஹலதர: புருஷ: ஸ்மந்தாத்
அவ்யாத்—பாதுகாக்கப் பட்ட; அஜ:—பகவான் அஜா; அங்ரி—கால்களை; மணிமான்—பகவான் மணிமான்; தவ—உன்னுடைய; ஜானு—முழங்கால்களை; அத—அதன்பிறகு; உரூ—தொடைகளை; யக்ஞ:—பகவான் யக்ஞர்; அச்யுத:—பகவான் அச்யுதர்; கடி-தடம்—இடையின் மேற்பகுதியை; ஜடரம்—வயிற்றுப் பகுதியை; ஹயாஸ்ய—பகவான் ஹயகிரீவர்; ஹ்ருத்—இதயத்தை; கேசவ:—பகவான் கேசவர்; த்வத்—உனது; உர:—மார்பை; ஈச:—பரம ஆளுனரான பகவான் ஈசா; இன:—சூரிய தேவன்; து—ஆனால்; கண்டம்—கழுத்தை; விஷ்ணு:—பகவான் விஷ்ணு; புஜம்—கரங்களை; முகம்—வாயை; உருக்ரம:—பகவான் உருக்ரமர்; ஈஸ்வர:—பகவான் ஈஸ்வரர்; கம்—தலையை; சக்ரீ—சக்கரத்தை வைத்திருப்பவர்; அக்ரத:—முன் புறத்தை; ஸஹ-கத:—கதையை வைத்திருப்பவர்; ஹரி:—பகவான் ஹரி; அஸ்து—அவர் இருப்பாராக; பஸ்சாத்—பின் புறத்தில்; த்வத்-பார்ஸ்வயோ:—இரு புறங்களிலும்; தனு:-அஸீ—வில்லும், வாளும் வைத்திருப்பவர்; மது-ஹா—மது எனும் அரக்கனைக் கொன்றவர்; அஜன:—பகவான் விஷ்ணு; ச—மேலும்; கோனேஷு—ஓரங்களில்; சங்க:—சங்கை வைத்திருப்பவர்; உருகாய:—நன்கு வழிபடப்படுபவர்; உபரி—மேலே; உபேந்ர—பகவான் உபேந்தரர்; தார்க்ஷ்ய:—கருடன்; க்ஷிதௌ—தரையில்; ஹலதர:—பகவான் ஹலதரர்; புருஷ:—பரமபுருஷர்: ஸமந்தாத்—எல்லாப் புறங்களிலும்.
(தங்களது குழந்தையான கிருஷ்ணரின் பாதுகாப்பிற்குச் சரியான வழிமுறையைப் பின்பற்றிய கோபியர்கள், பின்வரும் மந்திரத்தைச் சொல்லி அவரைப் பாதுகாத்தனர் என்று சுகதேவ கோஸ்வாமி பரீட்சித்து மகாராஜனிடம் கூறினார்:) அஜர் உனது கால்களைப் பாதுகாக்கட்டும், மணிமான் உனது முழங்கால்களையும், யக்ஞர் உனது தொடைகளையும், அச்யுதர் உனது இடையின் மேற் பகுதியையும், ஹயகிரீவர் உனது வயிற்றுப் பகுதியையும் பாதுகாக்கட்டும். கேசவர் உனது இதயத்தையும், ஈசர் உனது மார்பையும், சூரிய தேவன் உனது கழுத்தையும். விஷ்ணு உனது கரங்களையும், உருக்ரமர் உன் முகத்தையும், ஈஸ்வரர் உன் தலையையும் பாதுகாக்கட்டும். சக்ரீ உன்னை முன் புறத்திலிருந்து பாதுகாக்கட்டும்; கதையை வைத்திருப்பதால் கதாதரீ எனப்படும் ஸ்ரீ ஹரி உன்னைப் பின்னாலிருந்து பாதுகாக்கட்டும்; வில்லை வைத்திருப்பவரும், வாளை ஏந்திய பகவான் அஜனரும் உனது இரு புறங்களைப் பாதுகாக்கட்டும். சங்கை ஏந்திய பகவான் உருகாயர் எல்லா மூலைகளிலிருந்தும் உன்னைப் பாதுகாக்கட்டும்; உபேந்திரா உன்னை மேலிருந்து பாதுகாக்கட்டும்; கருடன் உன்னைத் தரையில் பாதுகாக்கட்டும்; மேலும் பரமபுருஷராகிய பகவான் ஹலதரர் உன்னை எல்லாப் புறங்களிலிருந்தும் பாதுகாக்கட்டும்.
பதம் 10.6.24
இந்ரியாணி ஹ்ரிஷீகேச: ப்ராணான் நாராயணோ ‘வது
ஸ்வேதத்வீப-பதிஸ் சித்தம் மனோ யோகேஸ்வரோ ‘வது
இந்ரியாணி—எல்லாப் புலன்களையும்; ஹ்ரிஷீகேச:—புலன்களுக் கெல்லாம் உரிமையாளாரான பகவான் ரிஷீகேசர்; ப்ராணான்—எல்லா வகையான உயிர்க் காற்றுகளையும்; நாராயண:—பகவான் நாராயணா; அவது—அவர் பாதுகாப்பாராக; ஸ்வேதத்வீப-பதி:—ஸ்வேதத்வீபத்தின் நாதரான—விஷ்ணு; சித்தம்—இதய மத்தியை; மன:—மனதை; யோககேஸ்வர:—பகவான் யோகேஸ்வரர்; அவது—அவர் பாதுகாப்பாராக.
ரிஷிகேசர் உன் புலன்களையும், நாராயணர் உன் உயிர்க் காற்றையும் பாதுகாக்கட்டும். ஸ்வேதத்வீபத்தின் நாதர் உன் இதய மத்தியையும், பகவான் யோகேஸ்வரர் உன் மனதையும் பாதுகாக்கட்டும்.
பதங்கள் 10.6.25 – 10.6.26
ப்ருஸ்னிகர்பஸ் து தே புத்திம் ஆத்மானம் பகவான் பர:
க்ரீடந்தம் பாது கோவிந்த: சயானம் பாது மாதவ:
வ்ரஜந்தம் அவ்யாத் வைகுண்ட ஆஸீனம் த்வாம் ஸ்ரிய: பதி:
புஞ்ஜானம் யக்ஞபுக் பாது ஸர்வ-க்ரஹ-பயங்கர:
ப்ருஸ்னிகர்ப:—பகவான் பிருஸ்னிகர்பர்; து—உண்மையாக; தே—உனது; புத்திம்—புத்தியை; ஆத்மானம்—உன் ஆத்மாவை; பகவான்—பரமபுருஷர்; பர:—உன்னத; க்ரீடந்தம்—விளையாடும் பொழுது; பாது—பாதுகாக்கட்டும்; கோவிந்த—பகவான் கோவிந்தன்; சயானம்—உறங்கும்பொழுது; பாது—பாதுகாக்கட்டும்; மாதவ:—பகவான் மாதவர்; வ்ரஜந்தம்—நடக்கும்பொழுது; அவ்யாத்—பாதுகாக்கட்டும்; வைகுண்ட:—பகவான் வைகுண்டர்; ஆஸீனம்—அமர்ந்திருக்கும்பொழுது; த்வாம்—உனக்கு; ஸ்ரிய-பதி:—ஸ்ரீ தேவியின் கணவரான நாராயணர் (காத்தருளட்டும்); புஞ்ஞானம்—வாழ்வை அனுபவிக்கும்பொழுது; யக்ஞபுக்—யுக்ஞபுக்; பாது—பாதுகாக்கட்டும்; ஸர்வ-க்ரஹ-பயம்-கர:—துஷ்ட கிரகங்களுக்கு அச்சம் விளைவிப்பவரான.
பகவான் பிரிஸ்னிகர்பர் உன் புத்தியையும், பரமபுருஷர் உன் ஆத்மாவையும் பாதுகாக்கட்டும். நீ விளையாடும் பொழுது கோவிந்தனும், உறங்கும் பொழுது மாதவனும் உன்னைப் பாதுகாக்கட்டும். நீ நடக்கும் பொழுது பகவான் வைகுண்டரும், அமரும்பொழுது ஸ்ரீ தேவியின் கணவரான பகவான் நாராயணரும் உன்னைப் பாதுகாக்கட்டும். அவ்வாறே, நீ வாழ்வை அனுபவிக்கும் பொழுது, துஷ்ட கிரகங்களில் பயங்கர எதிரியான பகவான் யக்ஞபுக் எப்பொழுதும் உன்னைப் பாதுகாக்கட்டும்.
பதங்கள் 10.6.27 – 10.6.29
டாகின்யோ யாதுதான்யஸ் ச குஷ்மாண்டா யே ‘ர்பக-க்ரஹா:
பூத-ப்ரேத-பிசரசாஸ் ச யக்ஷ-ரக்ஷோ-வினாயகா:
கோடரா ரேவதி ஜ்யேஷ்டா பூதனா மாத்ருகாதய:
உன்மாதா யே ஹி அபஸ்மாரா தேஹ-ப்ராணேந்திரிய-த்ருஹ:
ஸ்வப்ன-த்ருஷ்டா மஹோத்பாதா வ்ருத்தா பால-க்ரஹாஸ் ச யே
ஸர்வே நஸ்யந்து தே விஷ்ணோர் நாம-க்ரஹண-பீரவ:
டாகின்யா: யாதுதான்ய: ச குஷ்மாண்டா:—குழந்தைகளின் எதிரிகளான சூனியக்காரிகளும், பேய்களும்; யே—அவர்கள்; அர்பக-க்ரஹா:—குழந்தைகளுக்கான துர் நட்சத்திரங்களைப் போன்ற; பூத—துர்தேவதைகளூம்; ப்ரேத—பிரதேசங்கள்; பிசாசா:—பிசாசுகள்; ச—கூட; யக்ஷ—யக்ஷர்கள்; ரக்ஷ:—இராட்சஸர்கள்; வினாயகா:—வினாயகா என்ற பெயருடையவை; கொடரா—கொடரா என்ற; ரேவதி—ரேவதி என்ற; ஜ்யேஷ்டா—ஜ்யேஷ்டா என்ற; பூதனா—பூதனை என்ற; மாத்ருகா-ஆதய:—மேலும் மாத்ருகா போன்ற மந்திரக்காரிகள்; உன்மாதா:—பித்துப் பிடிக்கச் செய்பவர்கள்; யே—குழந்தைகள்; ஹி—உண்மையில்; அபஸ்மாரா:—ஞாபகத்தை இழக்கச் செய்யும்; தேஹ-ப்ராண-இந்ரிய—உடல், உயிர்க் காற்று மற்றும் புலன்களுக்கு; த்ருஹ:—தொல்லை கொடுக்கின்றன; ஸ்வப்ன-திருஷ்ட:—கெட்ட கனவுகளை விளைவிக்கும் துர்தேவதைகள்; மஹா-உத்பாத்:—பெருந் தொல்லைகளை விளைவிப்பவை; வ்ருத்தா:—மிகவும் அனுபவமுள்ள; பால-க்ரஹ: ச—மேலும் குழந்தைகளைத் தாக்குபவை; யே—யார்; ஸர்வே—அவையனைத்தும்; நஸ்யந்து—அழியட்டும்; தே—அவை; விஷ்ணோ:—பகவான் விஷ்ணுவின்; நாம-க்ரஹண—நாமங்களை உச்சரிப்பதன் மூலம்; பீரவ:—அச்சமடைந்து.
சூனியக்காரிகளான தாகினிகள், யாதுதானிகள், மற்றும் குஷ்மாண்டங்கள் ஆகியவை குழந்தைகளின் பெரும் எதிரிகளாகும். பூதங்கள், பிரேதங்கள், பிசாசுகள், யக்ஷர்கள், இராட்சஸர்கள் மற்றும் வினாயகங்கள் போன்ற துர்தேவதைகளும், கொடரா, ரேவதி, ஜ்யேஷ்டா, பூதனை மற்றும் மாத்ருகா போன்ற மாயக்காரிகளும், நினைவை இழக்கச் செய்தும், பித்துப் பிடிக்கச் செய்தும், கெட்ட கனவுகளை ஏற்படுத்தியும், எப்பொழுதும் உடலுக்கும், உயிர்க் காற்றுக்கும், புலன்களுக்கும் தொல்லை கொடுக்கத் தயாராக இருக்கின்றன. மிகவும் அனுபவமுள்ள துர் நட்சத்திரங்களைப் போல், அவை குறிப்பாகக் குழந்தைகளுக்குப் பெருந்துன்பங்களை விளைவிக்கின்றன. ஆனால் பகவான் விஷ்ணுவின் நாமம் ஒலிக்கும் பொழுது அவை அச்சமடைந்து ஓடிமறைவதால், பகவானின் நாமத்தைக் கொண்டே அவற்றை அழித்துவிட முடியும்.
பதம் 10.6.30
ஸ்ரீ-சுக உவாச
இதி ப்ரணய-பத்தாபிர் கோபீபி: க்ருத-ரக்ஷணம்
பாயயித்வா ஸ்தனம் மாதா ஸன்யவேசயத் ஆத்மஜம்
ஸ்ரீ-சுக:உவாச—ஸ்ரீசுகதேவ கோஸ்வாமி கூறினார்; இதி—இவ்வாறு; ப்ரணய-பத்தாபி:—தாய்ப்பாசத்தால் கட்டப்பட்டிருந்த அவர்கள்; கோபீபி:—தாய் யசோதை முதலான வயதான கோபியர்களால்; க்ருத-ரக்ஷணம்—குழந்தையின் பாதுகாப்பிற்குரிய எல்லா நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன; பாயயித்வா—அதன்பிறகு, குழந்தைக்குப் பாலூட்டி; ஸ்தனம்—முலை; மாதா—தாய் யசோதை; ஸன்யவேசயத்—படுக்கையில் படுக்கச் செய்தாள்; ஆத்மஜம்—அவளது மகனை.
ஸ்ரீல சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார். தாய் யசோதையின் தலைமையிலான எல்லாக் கோபியர்களும், தாய்ப்பாசத்தால் கட்டப்பட்டிருந்தனர். இவ்வாறு குழந்தையின் பாதுகாப்பிற்குரிய மந்திரங்களை ஓதியபின், தாய் யசோதை குழந்தைக்குத் தம் முலைக் காம்பால் பாலூட்டி, அவரை அவரது படுக்கையில் படுக்கவைத்தாள்.
பதம் 10.6.31
தாவன் நந்தாதயோ கோபா மதுராயா வ்ரஜம் கதா:
விலோக்ய பூதனா-தேஹம் பபூவுர் அதிவிஸ்மிதா:
தாவத்—இதற்கிடையில்; நந்த-ஆதய:—நந்த மகாராஜன் முதலான; கோபா:—கோபர்கள் (இடையர்கள்) அனைவரும்; மதுராயா:—மதுராவிலிருந்து; வ்ரஜம்—பிருந்தாவனத்திற்கு; கதா:—திரும்பி வந்தனர்; விலோக்ய—அவர்கள் கண்டபொழுது; பூதனா-தேஹம்—பூதனையின் பிரம்மாண்டமான உடல் உயிரற்றுக் கிடப்பதை; பபூவு:—ஆயினர்; அதி—மிகவும்; விஸ்மிதா:—ஆச்சரியமடைந்தவர்கள்.
இதற்கிடையில், நந்த மகாராஜன் முதலான எல்லா கோபியர்களும் (இடையர்களும்) மதுராவிலிருந்து திரும்பிவந்தனர். வழியில், பூதனையின் பிரம்மாண்டமான உயிரற்ற உடல் கிடப்பதைக் கண்டு, பெரும் ஆச்சரியமடைந்தனர்.
பதம் 10.6.32
நூனம் பதர்ஷி: ஸஞ்ஜாதோ யோகேசோ வா ஸமாஸ ஸ:
ஸ ஏவ த்ருஷ்டோ ஹி உத்பாதோ யத் ஆஹானகதுந்துபி:
நூனம்—நிச்சயமாக; பதி—என் நண்பர்களே; ரிஷி:—சிறந்த முனிவராக; ஸஞ்ஜாத்:—ஆகியிருக்கிறார்; யோக-ஈச:—யோகசக்தியை அடையப் பெற்றவராக; வா—அல்லது; ஸமாஸ—ஆகியிருக்கிறார்; ஸ:—அவர் (வசுதேவர்); ஸ:—அது; ஏவ—உண்மையில்; த்ருஷ்ட:—(எங்களால்) பார்க்கப்பட்டது; ஹி—ஏனெனில்; உத்பாத:—ஏதோ தொல்லை; யத்—அதை; ஆஹ—முன்னறிந்து கூறினார்; ஆனகதுந்துபி:—ஆனகதுந்துபி (வசுதேவரின் மற்றொரு பெயர்).
நந்த மகாராஜனும் மற்ற கோபியர்களும் கூறினார்: அன்புள்ள நண்பர்களே, ஆனகதுந்துபி (வசுதேவர்) ஒரு சிறந்த முனிவராக அல்லது சிறந்த யோகியாக மாறியிருக்கிறார் என்பதை நீங்கள் அறிய வேண்டும். இல்லையெனில் வரப்போகும் இத்துன்பத்தைப் பற்றி அவரால் எப்படி முன்னதாகவே நமக்குக் கூற முடிந்தது?
பதம் 10.6.33
கலேவரம் பரசுபிஸ் சித்வா தத் தே வ்ரஜௌகஸ:
தூரே க்ஷிப்த்வாவயவசோ ன்யதஹஸ் காஷ்ட-வேஷ்டிதம்
கலேவரம்—பூதனையின் பிரம்மாண்டமான உடல்; பரசுபி:—கோடரிகளின் உதவியால்; சித்வா—துண்டு துண்டாக வெட்டியபிறகு; தத்—அந்த (உடல்); தே—அவற்றை; வ்ரஜ-ஒகஸ:—பிருந்தாவன வாசிகள்; தூரே—வெகு தூரத்தில்; க்ஷிப்த்வா—எறிந்த பின்; அவயவச—உடலின் வெவ்வேறு பகுதிகளை, துண்டு துண்டாக; ன்யதஹஸ்—எரித்துச் சாம்பலாக்கினர்; காஷ்ட-வேஷ்டிதம்—விறகால் மூடி.
பிருந்தாவன வாசிகள் கோடரிகளின் உதவியால் பூதனையின் பிரம்மாண்டமான உடலைத் துண்டு துண்டாக வெட்டினர். பிறகு அவற்றைத் தூரத்தில் எறிந்து, விறகுகளால் மூடி எரித்துச் சாம்பலாக்கினர்.
பதம் 10.6.34
தஹ்யமானஸ்ய தேஹஸ்ய தூமஸ் சாகுரு-ஸௌரப:
உத்தித: க்ருஷ்ண-நிர்புத்த-ஸபதி ஆஹத-பாப்மன:
தஹ்யமானஸ்ய—சாம்பலாக எரிக்கப்படும் பொழுது; தேஹஸ்ய—பூதனையின் உடலின்; தூம:—புகை; ச—மேலும்; அகுரு-ஸௌரப:—நறுமணமுள்ள அகுரு-தூபமாக மாறியது; உத்தித:—அவளது உடலிலிருந்து வெளியாகி; க்ருஷ்ண-நிர்புக்த—கிருஷ்ணர் அவளது முலைப் பாலைக் குடித்ததால்; ஸபதி—உடனடியாக; ஆஹத-பாப்மன:— அவளது ஜட உடல் ஆன்மீகமாக மாற்றப்பட்டது அல்லது பௌதிக சூழ்நிலையிலிருந்து விடுவிக்கப்பட்டது.
கிருஷ்ணர் பூதனை அரக்கியின் முலைப்பாலைக் குடித்து அவளைக் கொன்றதால், அவள் எல்லா பௌதிக களங்கங்களிலிருந்தும் விடுபட்டதுடன், அவளது பாவ விளைவுகளும் உடனே அழிந்தன. எனவே அவனது பிரம்மாண்டமான உடல் எரிக்கப்பட்ட பொழுது, அவளது உடலிலிருந்து எழுந்த புகை அகுரு தூபம் போல் நறுமணம் வீசியது.
பதங்கள் 10.6.35 – 10.6.36
பூதணா லோக-பால-க்னீ ராக்ஷஸீ ருதிராசனா
‘ஜிகாம்ஸயாபி ஹரயே ஸ்தனம் தத்வாப ஸத்-கதிம்
கிம் புன: ஸ்ரத்தயா பக்த்யா க்ருஷ்ணாய பரமாத்மனே
யச்சன் ப்ரியதமம் கிம் நு ரக்தாஸ் தன்-மாதரோ யதா
பூதனா—பூதனை இராட்சஸி; லோக-பால-க்னீ—மனிதக் குழந்தைகளைக் கொல்லும் வழக்கமுடைய; ராக்ஷஸீ—இராட்சஸி; ருதிர-அசனா—இரத்தத்திற்கு ஆசைப்பட்டு; ஜிகாம்ஸயா—(கம்சனின் துர்போதனையால்) கிருஷ்ணரைக் கொல்லும் விருப்பத்துடன்; அபி—எனினும்; ஹரயே—பரமபுருஷருக்கு; ஸ்தனம்—தன் முலையை; தத்வா—கொடுத்த பின்; ஆப—அடைந்தாள்; ஸத்-கதிம்—ஆன்மீக வாழ்வெனும் மிகவுயர்ந்த நிலையை; கிம்—பற்றி என்னவென்று சொல்வது; புன:—மீண்டும்; ஸ்ரத்தயா—நம்பிக்கையுடன்; பக்த்யா—பக்தியால்; க்ருஷணாய—பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கு; பரமாத்மனே—பரமபுருஷரான; யச்சன்—அளிக்கும்; ப்ரிய-தமம்—மிகப் பிரியமான; கிம்—எதையேனும்; நு—உண்மையில்; ரக்தா:—உறவு கொண்டிருப்பவர்கள்; தத்-மாதர:—(அன்பிற்குரிய தங்கள் குழந்தைக்கு முலைப் பாலைக் கொடுக்கும்) கிருஷ்ணரின் பாசமுள்ள தாய்கள்; யதா—அதைப் போலவே.
பூதனை எப்பொழுதும் மனிதக் குழந்தைகளின் இரத்தத்தைக் குடிக்க விரும்பினாள். இதே விருப்பத்துடனேயே அவள் கிருஷ்ணரையும் கொல்ல வந்தாள்; ஆனால் பகவானுக்குத் தன் முலைப்பாலைக் கொடுத்ததால், மிகவுயர்ந்த கதியை அவள் அடைந்தாள். அப்படியானால். இயற்கையான பக்தியும் பாசமும் கொண்டிருந்தவர்களுக்கு அவருக்குத் தங்களது முலைப்பாலை ஊட்டியவர்களும், குழந்தைகளுக்கு ஒரு தாய் எதையேனும் கொடுப்பதுபோல், மிகப்பிரியமான ஒன்றைக் கொடுத்தவர்களுமான அவரது தாய்களின் நிலையைப் பற்றி என்ன வென்று சொல்வது ?
பதங்கள் 10.6.37 – 10.6.38
பத்ப்யாம் பக்த-ஹ்ருதி-ஸ்தாப்யாம் வந்யாப்யாம் லோக-வந்திதை:
அங்கம் யஸ்யா: ஸமாக்ரம்ய பகவான் அபி தத்-ஸ்தனம்
யாதுதானி அபி ஸா ஸ்வர்கம் அவாப ஜனனீ-கதிம்
க்ருஷ்ண-புக்த-ஸ்தன-க்ஷீரா: கிம் உ காவோ ‘நுமாதர:
பத்ப்யாம்—இரு தாமரைப் பாதங்களால்; பக்த-ஹ்ருதி-ஸ்தாப்யாம்—எனவே யாருடைய இதயத்தில் எப்பொழுதும் பகவான் இருக்கிறாரோ, அந்த தூய பக்தர்களால் எப்பொழுதும் நினைக்கப்படும்; வந்யாப்யாம்—எப்பொழுதும் துதிக்கப்பட வேண்டியவை; லோக-வந்திதை:—மூவுலக வாசிகளாலும் போற்றப்படும் பிரம்மதேவர் மற்றும் சிவபெருமானால்; அங்கம்—உடல்; யஸ்யா:—யாருடைய (பூதனையின்); ஸமாக்ரம்ய—அரவணைப்பு; பகவான்—பரமபுருஷர்; அபி—மேலும்; தத்-ஸ்தனம்—அந்த முலை; யாதுதானீ அபி—(சிறு குழந்தைகளைக் கொல்வதைத் தொழிலாகக் கொண்டவளும், கிருஷ்ணரைக்கூட கொல்ல முயன்றவளுமான) அவள் ஓர் அரக்கி என்ற போதிலும்; ஸா—அவள்; ஸ்வர்கம்—உன்னத உலகை; அவப—அடைந்தாள்; ஜனனீ-கதிம்—ஒரு தாயின் அந்தஸ்தை; க்ருஷ்ண-புக்த-ஸ்தன-க்ஷீரா:—எனவே அவர்களுடைய உடல்களிலிருந்து சுரந்த அவர்களுடைய முலைப்பால் கிருஷ்ணரால் குடிக்கப்பட்டதால்; கிம் உ—பற்றி என்ன சொல்வது; காவ:—பசுக்கள்; அனுமாதர:—(கிருஷ்ணர் தங்களது முலைப்பாலைக் குடிப்பதற்கு அனுமதித்த) தாய்களைப் போலவே.
பரமபுருஷராகிய ஸ்ரீ கிருஷ்ணர் எப்பொழுதும் அவரது தூய பக்தர்களின் இதயத்தில் அமர்ந்திருக்கிறார். பிரம்மதேவர் மற்றும் சிவபெருமான் போன்ற வழிபாட்டுக்குரிய மூர்த்திகளால் அவர் எப்பொழுதும் துதிக்கப்படுகிறார். பூதனை ஒரு பெரிய அரக்கி என்றாலும், கிருஷ்ணர் அவளது உடலைத் தழுவி ஆனந்தத்துடன் அவளது முலைப்பாலைக் குடித்ததால், அவள் உன்னத உலகில் ஒரு தாயின் அந்தஸ்தை அடைந்து, மிக உயர்ந்த பூர்ணத்துவத்தை அடைந்தாள், அப்படியானால் ஒரு தாயைப் போலவே பாசத்துடனும், பெருமகிழ்ச்சியுடனும் கிருஷ்ணருக்குப் பாலூட்டிய பசுக்களைப் பற்றிச் சொல்ல என்ன இருக்கிறது?
பதங்கள் 10.6.39 – 10.6.40
பயாம்ஸி யாஸாம் அபிபத் புத்ர-ஸ்னேஹ-ஸ்னுதானி அலம்
பகவான் தேவகீ-புத்ர: கைவல்யாதி-அகில-ப்ரத:
தாஸாம் அவிரதம் க்ருஷ்ணே குர்வதீனாம் ஸுதேக்ஷணம்
ந புன: கல்பதே ராஜன் ஸம்ஸாரோ ‘ஜ்ஞான-ஸம்பவ:
பயாம்ஸி—(உடலிலிருந்து வரும்) பாலை; யாஸாம்—யாருடைய; அபிபத்—பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் குடித்தார்; புத்ர-ஸ்னேஹ-ஸ்நுதானி—செயற்கையாக அல்லாமல், தாய்ப்பாசத்தால், கோபியர்களின் உடல்களிலிருந்து வரும் அந்த பால்; அலம்—போதுமான அளவு; பகவான்—பரமபுருஷர்; தேவகீ-புத்ர:—தேவகி புத்திரராகத் தோன்றிய; கைவல்ய ஆதி—முக்தி அல்லது பிரம்மஜோதியில் இரண்டறக் கலப்பது போன்ற; அகில-ப்ரத:—இத்தகைய ஆசிகளையெல்லாம் அளிப்பவர்; தாஸாம்—அவர்கள் அனைவரின் (அனைத்து கோபியர்களின்); அவிரதம்—இடைவிடாமல்; க்ருஷ்ணே—பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கு; குர்வதீனாம்—செய்து; ஸுத-ஈணம்—ஒரு தாய் தன் குழந்தையைப் பார்ப்பதுபோல்; ந—இல்லை; புன:—மீண்டும்; கல்பதே—கற்பனை செய்து பார்க்க முடியும்; ராஜன்—பரீட்சித்து மகாராஜனே; ஸம்ஸார:—பிறப்பு, இறப்பெனும் பௌதிக பந்தம்; அஜ்ஞான-ஸம்பவ:—அறியாமையால் மகிழ்ச்சியடைய முயலும் மூடர்களால் ஏற்றுக்கொள்ளப்படுவது.
பரமபுருஷராகிய ஸ்ரீ கிருஷணர், பிரம்மஜோதியில் இரண்டரக்கலந்து விடுதல் எனும் முக்தி (கைவல்யம்) உட்பட எல்லா வரங்களையும் அளிப்பவராவார். அப்பரமபுருஷரிடம் கோபியர்கள் எப்பொழுதும் தங்களின் தாய்ப் பாசத்தைக் காட்டினார். கிருஷ்ணரும் அவர்களது முலைப்பாலை முழு திருப்தியுடன் பருகினார். எனவே கோபியர்கள் பல்வேறு குடும்பச் செயல்களில் ஈடுபட்டிருந்த போதிலும், பகவானிடம் அவர்களுக்குத் தாய் மகன் என்ற உறவு முறை இருந்தது. இதனால் தங்களது உடல்களை விட்டபின் இந்த ஜட உலகிற்கு அவர்கள் திரும்பி வந்தனர் என்று ஒருபோதும் நினைக்கக் கூடாது.
பதம் 10.6.41
கட-தூமஸ்ய ஸெளராப்யம் அவக்ராய வ்ரஜௌகஸ:
கிம் இதம் குத ஏவேதி வதந்தோ வ்ரஜம் ஆயயு:
கட-தூமஸ்ய:—பூதனையின் வெவ்வேறு அங்கங்களை எரிக்கும் தீயிலிருந்து வெளியாகும் புகையின்; ஸெளராப்யம்—நறுமணத்தை; அவ-க்ராய—அவர்களது நாசித் துவாரங்களின் வழியாக அவர்கள் முகர்ந்த பொழுது; வ்ரஜ-ஓகஸ:—தொலைவிலிருந்த பிருந்தாவன வாசிகள்; கிம் இதம்—இதென்ன நறுமணம்; குத:—இது எங்கிருந்து வருகிறது; ஏவ—உண்மையில்; இதி—இவ்வாறு; வதந்த:—உரையாடிக் கொண்டு; வ்ரஜம்—நந்த மகாராஜாவின் இடமான விரஜபூமியை; ஆயயு:—அடைத்தனர்.
எரிந்து கொண்டிருந்த பூதனையின் உடலிலிருந்து வெளிப்பட்ட புகையின் நறுமணத்தை, தூரத்து இடங்களிலிருந்து பல விரஜபூமி வாசிகள் முகர்ந்து ஆச்சரியமடைந்தனர். “இந்த நறுமணம் எங்கிருந்து வருகிறது?” என்று வினவினர். இவ்விதமாக பூதனையின் உடல் எரிக்கப்பட்ட இடத்திற்கு அவர்கள் சென்றனர்.
பதம் 10.6.42
தே தத்ர வர்ணிதம் கோபை: பூதனாகமனாதிகம்
ஸ்ருத்வா தன்-நிதனம் ஸ்வஸ்தி சிசோஸ் சாஸன் ஸுவிஸ்மிதா:
தே—வந்திருந்த அனைவரும்; தத்ர—அங்கு (நந்த மகாராஜாவின் பண்ணைப் பிரதேசத்திற்கு); வர்ணிதம்—விவரிக்கப்பட்டதை; கோபை:—கோபர்களால்; பூதனா-ஆகமன-ஆதிகம்—பூதனை எப்படி அங்கு வந்து தீங்கிழைத்தாள் என்பதைப் பற்றிய அனைத்தையும்; ஸ்ருத்வா—கேட்ட பின்; தத்-நிதனம்—மேலும் பூதனை எப்படி இறந்தாள் என்பதையும்; ஸ்வஸ்தி—சர்வ மங்களம்; சிசோ:—குழந்தைக்கு; ச—மேலும்; ஆஸன்—அளித்தார்; ஸு-விஸ்மிதா:—நடந்ததைக் கண்டு ஆச்சரியமடைந்தனர்.
பூதனை அங்கு வந்ததையும், கிருஷ்ணரால் கொல்லப்பட்டதையும் தூரத்து இடங்களிலிருந்து வந்திருந்த விரஜ வாசிகள் கேள்விப்பட்டு பெரும் ஆச்சரியமடைந்தனர். பூதனையைக் கொன்ற அற்புதச் செயலுக்காக குழந்தையை அவர்கள் ஆசிர்வதித்தனர். இச்சம்பவத்தை முன்னறிந்து கூறிய வசுதேவருக்கு நந்த மகாராஜன் நன்றிக்கடன்பட்டவரானார். வசுதேவர் எவ்வளவு அற்புதமானவர் என்றெண்ணி அவருக்கு நன்றி கூறினார்.
பதம் 10.6.43
நந்த: ஸ்வ-புத்ரம் ஆதாய ப்ரேத்யாகதம் உதார-தீ:
மூர்த்னி உபாக்ராய பரமாம் முதம் லேபே குரூத்வஹ
நந்த:—நந்த மகாராஜன்; ஸ்வ-புத்ரம் ஆதாய—தன் மகனான கிருஷ்ணரை மடியில் வைத்துக்கொண்டு; ப்ரேத்ய-ஆகதம்—கிருஷ்ணர் மரணத்திலிருந்து திரும்பியது போல் (இத்தகைய ஆபத்திலிருந்து ஒரு குழந்தை காப்பாற்றப்படக்கூடும் என்று யாராலும் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை); உதார-தீ:—அவர் எப்பொழுதும் எளிமையாகவும், உதார குணமுள்ளவராகவும் இருந்ததால்; மூர்த்னி—கிருஷ்ணரின் தலைமேல்; உபாக்ராய—முகர்ந்து; பரமாம்—மிகவுயர்ந்து; முதம்—அமைதியை; லேபே—அடைந்தார்; குரு-உத்வஹ—பரீட்சித்து மகாராஜனே.
குருக்களில் சிறந்த பரீட்சித்து மகாராஜனே, நந்த மகாராஜன் மிகவும் எளிமையானவராகவும், உதார குணமுள்ளவராகவும் இருந்தார். தன் மகனான கிருஷ்ணர் மரணத்திலிருந்து திரும்பியதுபோல், உடனே அவரை எடுத்துத் தன் மடியில் வைத்துக்கொண்டு உச்சி முகர்ந்த நந்த மகாராஜன், உன்னத ஆனந்தத்தை அனுபவித்தார் என்பதில் ஐய்யமில்லை.
பதம் 10.6.44
ய ஏதத் பூதனா-மோக்ஷம் க்ருஷ்ணஸ்யார்பகம் அத்புதம்
ஸ்ருணுயாச் ச்ரத்தயா மர்த்யோ கோவிந்தே லபதே ரதிம்
ய:—யாரொருவர்; ஏதத்—இந்த; பூதனா-மோக்ஷம்—பூதனை மோட்சத்தை; க்ருஷ்ணஸ்ய—கிருஷ்ணரின்; ஆர்பகம்—பிள்ளைப் பிராயத்து லீலைகளை; அத்புதம்—அற்புதமான; ஸ்ருணுயாத்—கேட்க வேண்டும்; ஸ்ரத்தயா—நம்பிக்கையுடனும், பக்தியுடனும்; மர்த்ய:—இந்த ஜட உலகிலுள்ள எவரும்; கோவின்தே—மூல முழுமுதற் கடவுளான கோவிந்தனிடம்; லபதே—பெறுவார்; ரதிம்—பற்றுதலை.
யாரொருவர், பரமபுருஷரான கிருஷ்ணர் எப்படி பூதனையைக் கொன்றார் என்பதைப்பற்றி நம்பிக்கையுடனும், பக்தியுடனும் கேட்டு, கிருஷ்ணரின் பிள்ளைப் பிராயத்து லீலைகளைக் கேட்பதில் தன் கவனத்தைச் செலுத்துகிறாரோ, அவர் மூல முழுமுதற் கடவுளான கோவிந்தனிடம் பற்றுக் கொள்வது நிச்சயம்.
ஸ்ரீமத் பாகவதம், பத்தாம் காண்டத்தின் “பூதனை அரக்கி வதம்” எனும் தலைப்பை கொண்ட ஆறாம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றது.