அத்தியாயம் – 4
கம்ச மன்னனின் அக்கிரமங்கள்
பதம் 10.4.1 : ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்: அன்பிற்குரிய பரீட்சித்து மகாராஜனே, வீட்டின் உள்ளும் புறமும் இருந்த கதவுகள் முன்போல் மூடிக்கொண்டன. அதன்பிறகு, வீட்டு வாசிகள், குறிப்பாக காவற்காரர்கள் பிறந்த குழந்தையின் அழுகுரல் கேட்டு படுக்கையிலிருந்து விழித்தெழுந்தனர்.
பதம் 10.4.2 : அதன்பிறகு, எல்லா காவற்காரர்களும் போஜராஜனான கம்சனை விரைவில் அணுகி, தேவகிக்குக் குழந்தை பிறந்த செய்தியை அறிவித்தனர். இச்செய்திக்காக மிகவும் கவலையுடன் காத்திருந்த கம்சன், உடனே காரியத்தில் இறங்கினான்.
பதம் 10.4.3 : “என்னைக் கொல்லப் பிறக்கவிருந்த பரம கால-தத்துவமான காலன் இதோ பிறந்துவிட்டது” என்றெண்ணியபடி, கம்சன் படுக்கையிலிருந்து உடனே எழுந்தான். இவ்வாறு கவலைக்குள்ளான கம்சன், தலைவிரி கோலமாக, குழந்தை பிறந்துள்ள இடத்தை நோக்கி உடனே சென்றான்.
பதம் 10.4.4 : நிராதரவான தேவகி பரிதாபகரமாக கம்சனிடம் முறையிட்டாள்: அன்பிற்குரிய சகோதரரே, உங்களுக்கு எல்லா நன்மையும் உண்டாகட்டும். இப்பெண்னை உங்கள் மருமகளாக ஏற்றுக் கொண்டு, இவளை விட்டுவிடுங்கள். உண்மையில் ஒரு பெண்னைக் கொல்வது உங்களுக்கு அழகல்ல.
பதம் 10.4.5 : அன்புள்ள சகோதரரே, விதிவசத்தால், தீப்போல் பிரகாசமாகவும், அழகாகவும் விளங்கிய பல குழந்தைகளை நீங்கள் முன்பே கொன்று விட்டீர்கள், தயவுசெய்து இந்த மகளையும் கொன்றுவிடாமல், இவளை உங்களது பரிசாக எனக்குக் கொடுங்கள்.
பதம் 10.4.6 : என் சகோதரரே, பிரபு, நான் என் குழந்தைகளையெல்லாம் இழந்து பரிதாபத்திற்குரிய நிலையில் இருக்கிறேன். ஆனால் நான் உங்களுடைய தங்கை என்பதால், இந்த கடைசி குழந்தையை ஒரு பரிசாக எனக்கு நீங்கள் அளிப்பது உங்களுக்கு மேன்மையைத் தரும்.
பதம் 10.4.7 : சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்: தன் மகளை அணைத்தபடி பரிதாபகரமாக அழுது கொண்டிருந்த தேவகி, குழந்தையைக் கொடுத்துவிடும்படி மன்றாடினாள். ஆனால் அவன் இரக்கமற்றவனாக இருந்ததால், அவளைத் தண்டித்தது மட்டுமல்லாமல், அவளது கைகளிலிருந்த குழந்தையைப் பலவந்தமாகப் பிடுங்கியும் கொண்டான்.
பதம் 10.4.8 : தீவிர சுயநலத்தின் காரணத்தால், தன் தங்கையுடனிருந்த எல்லா உறவுமுறைகளையும் துண்டித்துக் கொண்டவனும், முழங்காலிட்டு அமர்ந்திருந்தவனுமான கம்சன், புத்திளம் குழந்தையை அதன் கால்களால் பற்றித் தூக்கி ஒரு பாறைமேல் அடிக்க முயன்றான்.
பதம் 10.4.9 : பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் தங்கையும், யோக-மாயா தேவியுமான அக்குழந்தை, கம்சனின் கைகளிலிருந்து நழுவிச் சென்று, ஆயுதங்களை ஏந்திய எட்டு கரங்களுடன், துர்கா தேவியாக ஆகாயத்தில் தோன்றினாள்.
பதங்கள் 10.4.10 – 10.4.11 : துர்கா தேவி மலர் மாலைகளாலும், சந்தனக் குழம்பாலும், விலையுயர்ந்த ஆடை, அணிகலன்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தாள். அவள் தன் கரங்களில் வில், சூலம், அம்புகள், கேடயம், வாள், சங்கு, சக்கரம் மற்றும் கதை ஆகியவற்றை ஏந்தியிருந்தாள். மேலும் அப்ஸரஸ்கள், கின்னரர்கள், உரகர்கள், சித்தர்கள், சாரணர்கள் மற்றும் கந்தர்வர்கள் முதலானவர்களால் எல்லா வகையான காணிக்கைகளாலும் வழிபடப்பட்ட அவள் பின்வருமாறு பேசினாள்.
பதம் 10.4.12 : மூட்டாள் கம்சனே, என்னைக் கொல்வதால் என்ன பயன்? உன்னுடைய பூர்வ எதிரியும், நிச்சயமாக உன்னைக் கொல்லப்போகிறவருமான பரமபுருஷர், முன்பே வேறொரு இடத்தில் பிறந்துவிட்டார். எனவே தேவையின்றி மற்ற குழந்தைகளைக் கொல்ல வேண்டாம்.
பதம் 10.4.13 : கம்சனிடம் இவ்வாறு பேசியபின், யோகமாயையான துர்காதேவி, வாரணாஸி போன்ற பல்வேறு இடங்களில் தோன்றி, அன்னபூரணி, துர்கை, காளி மற்றும் பத்ரை முதலான வெவ்வேறு நாமங்களால் போற்றப்பட்டாள்.
பதம் 10.4.14 : துர்கா தேவியின் வார்த்தைகளைக் கேட்டு கம்சன் பெரும் ஆச்சரியமடைந்தான். இவ்வாறாக தங்கை தேவகியையும், மைத்துனர் வசுதேவரையும் அணுகி, அவர்களைத் தளைகளிலிருந்து உடனே விடுவித்த கம்சன், பின்வருமாறு மிகவும் பணிவுடன் பேசினான்.
பதம் 10.4.15 : ஐயோ தங்கையே! ஐயோ மைத்துனரே! உண்மையில் நான் பெரும் பாவியாவேன். தன்னுடைய சொந்தக் குழந்தையையே தின்னும் இராட்சஸனைப் போல், உங்களுக்குப் பிறந்த பல குழத்தைகளை நான் கொன்றுவிட்டேன்.
பதம் 10.4.16 : இரக்கமற்றவனாகவும் கொடூரமானவனாகவும் இருந்த காரணத்தால், என்னுடைய எல்லா உறவினர்களையும் நண்பர்களையும் நான் கைவிட்டேன். எனவே, பிராமணனைக் கொன்ற ஒருவனைப்போல், மரணத்திற்குப் பின் அல்லது சுவாசிக்கும் பொழுதே எந்த லோகத்திற்கு நான் செல்லப் போகிறேன் என்று எனக்குத் தெரியவில்லை.
பதம் 10.4.17 : ஐயோ! மனிதர்கள் மட்டுமல்ல, தெய்வம்கூட சிலசமயங்களில் பொய் சொல்லுகிறதே! பெரும் பாவியான நான் தெய்வ வாக்கை நம்பி என் தங்கையின் பல குழந்தைகளைக் கொன்றுவிட்டேனே.
பதம் 10.4.18 : சிறந்த ஆத்மாக்களே, உங்கள் குழந்தைகள் தங்களுடைய சொந்த துரதிர்ஷ்டத்தையே அனுபவித்திருக்கிறார்கள், எனவே தயவுகூர்ந்து அவர்களுக்காக வருத்தப்பட வேண்டாம். எல்லா ஜீவராசிகளும் பரமனின் கட்டுப்பாட்டில் இருப்பதால், அவர்கள் எப்பொழுதுமே இணைந்து வாழ்வது சாத்தியமல்ல.
பதம் 10.4.19 : இவ்வுலகில் பாத்திரங்களும், பொம்மைகளும், மற்ற பொருட்களும் தோன்றி, உடைந்து, பிறகு மண்ணுடன் கலந்து மறைந்து போவதை நாம் காண்கிறோம். அதுபோலவே, பந்தப்பட்ட எல்லா ஜீவராசிகளின் உடல்களும்கூட அழிக்கப்பட்டுவிடுகின்றன. ஆனால் மண் எப்படி மாறாமலும், அழியாமலும் இருக்கிறதோ, அது போலவே ஜீவராசிகளும் மாறாமலும், அழியாமலும் இருக்கின்றன (ந ஹன்யதே ஹன்யமானே சரீரே).
பதம் 10.4.20 : உடல் மற்றும் ஆத்மாவின் உண்மையான ஆதார நிலையை அறியாதவன், தேகாபிமானத்தில் அதிக பற்றுக் கொள்கிறான். இதன் விளைவாக உடலிலும், அதன் உற்பத்திப் பொருட்களிலும் ஏற்படும் பற்றின் காரணத்தால், குடும்பம், சமூகம் மற்றும் தேசம் ஆகியவற்றுடனான சேர்க்கையாலும், பிரிவாலும் பாதிக்கப்படுவதை அவன் உணர்கிறான். இது தொடரும்வரை, ஒருவனது பௌதிக வாழ்வும் தொடர்கிறது (இல்லையெனில் அவன் முக்தியடைந்தவனாக இருப்பான்).
பதம் 10.4.21 : எனதன்புள்ள தங்கையே, உனக்கு மங்களம் உண்டாகட்டும். கடவுளின் கட்டுப்பாட்டின் கீழ் அனைவரும் தங்களது சொந்த செயல்களின் நல்ல, தீய பலன்கள் அனுபவிக்கின்றனர். எனவே, துரதிர்ஷ்டவசமாக உன்னுடைய மகன்கள் எங்களால் கொல்லப்பட்டனர் என்றாலும், தயவுசெய்து அவர்களுக்காக நீ வருந்த வேண்டாம்.
பதம் 10.4.22 : தன்னுணர்வு பெறாத காரணத்தால் தேகாபிமானத்திலுள்ள ஒருவன், “நான் கொல்லப்படுகிறேன்” அல்லது “என் எதிரிகளை நான் கொன்றுவிட்டேன்” என்ற எண்ணத்தில், இருளில் அழுந்திக் கிடக்கிறான். மூடனொருவன், தன்னைக் கொல்பவனென்றோ, கொல்லப்படுபவனென்றோ கருதும்வரை, பௌதிகக் கட்டுப்பாடுகளுக்கு அவன் தொடர்ந்து பொறுப்பாளியாக இருக்கிறான். இதன் விளைவாக இன்பத்தையும் துன்பத்தையும் அவன் அனுபவிக்கிறான்.
பதம் 10.4.23 : “எனதன்புள்ள தங்கையே, மைத்துனரே, நீங்களிருவரும் சிறந்த சாதுக்கள் என்பதால், இத்தகைய ஏழை மனம் படைத்த என்னிடம் தயவுசெய்து கருணை காட்டுங்கள், என்னுடைய அக்கிரமங்களை மன்னித்தருளுங்கள்” என்று மன்றாடிய கம்சன், வருத்தத்துடன் கண்களில் கண்ணீர் ததும்ப தேவகி, வசுதேவரின் பாதங்களில் விழுந்தான்.
பதம் 10.4.24 : துர்காதேவியின் வார்த்தைகளில் முழு நம்பிக்கை கொண்ட கம்சன், தேவகியையும், வசுதேவரையும் உடனடியாக விலங்குகளிலிருந்து விடுவிப்பதன் மூலமாக, தன் குடும்ப பாசத்தை வெளிப்படுத்தினான்.
பதம் 10.4.25 : விதியின் செயல்களை விளக்கிய தன் சகோதரன் உண்மையாகவே வருத்தப்பட்டதைக் கண்ட தேவகி, கோபம் தணிந்தவளானாள். அவ்வாறே, வசுதேவரும் தம் கோபத்தை விட்டார். புன்னகையுடன் அவர் கம்சனிடம் பின்வருமாறு கூறினார்.
பதம் 10.4.26 : சிறந்த பராக்கிரமசாலியான கம்சா, அறியாமையின் ஆதிக்கத்தினால்தான் ஒருவன் ஜட உடலையும், தேகாபிமானமெனும் அகங்காரத்தையும் ஏற்றுக்கொள்கிறான். இந்த தத்துவத்தைப் பற்றி நீ கூறியது சரிதான், தன்னுணர்வு பெறாத தேகாபிமானத்திலுள்ள மனிதர்கள் “இது வேறொருவருடையது” என்றும் வேற்றுமை பாராட்டுகின்றனர்.
பதம் 10.4.27 : வேறுபடுத்திக் காணும் பார்வையை உடையவர்கள் வருத்தம், மகிழ்ச்சி, பயம், பொறாமை, பேராசை, மோகம் மற்றும் மதம் ஆகிய பௌதிகக் குணங்களில் ஊறிக் கிடக்கின்றனர். பழமையானவரும், பரம காரணமுமான பரமபுருஷரைப் பற்றிய அறிவு அவர்களுக்கில்லை என்பதால், உடனடியான காரணத்தினால் இயக்கப்படும் அவர்கள், அதை வெல்வதில் சுறுசுறுப்பாக உள்ளனர்.
பதம் 10.4.28 : சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்: மிகவும் சமாதானமடைந்த தேவகி மற்றும் வசுதேவரால் மனப்பூர்வமாக இவ்வாறு கூறப்பட்டதும், அதனால் திருப்தியடைந்த கம்சன் அவர்களது அனுமதியுடன் தன் அரண்மனைக்குள் புகுந்தான்.
பதம் 10.4.29 : அன்றிரவு கழிந்ததும், கம்சன் தன் மந்திரிகளை அழைத்து (தன்னைக் கொல்லப் போகிறவர் வேறொரு இடத்தில் பிறந்துவிட்டார் என்று) யோகமாயையால் கூறப்பட்ட அனைத்தையும் அவர்களுக்கு அறிவித்தான்.
பதம் 10.4.30 : தேவர்களின் பகைவர்களும், தங்களது நடவடிக்கைகளில் அவ்வளவு திறமையற்றவர்களுமான பொறாமை கொண்ட அசுரர்கள், தங்களது தலைவனின் கூற்றைக் கேட்டபின், பின்வருமாறு கம்சனுக்கு அறிவுரை கூறினர்.
பதம் 10.4.31 : அது அப்படியானால், போஜ ராஜனே, எல்லாக் கிராமங்களிலும், நகரங்களிலும், ஆயர்பாடிகளிலும் பிறந்துள்ள பத்து நாட்களுக்குட்பட்ட மற்றும் பத்து நாட்களுக்கு மேற்பட்ட எல்லாக் குழந்தைகளையும் இன்று முதல் நாம் கொன்றுவிட வேண்டும்.
பதம் 10.4.32 : தேவர்கள் எப்பொழுதும் உமது வில்லின் நாணோசையைக் கேட்டு அச்சத்திற்கு உள்ளாகின்றனர். அவர்கள் போரிட அஞ்சி எப்பொழுதும் கவலையில் ஆழ்ந்துள்ளனர். எனவே, உமக்குத் தீங்கிழைக்கும். முயற்சிகளைக் கொண்டு அவர்களால் என்னதான் செய்துவிட முடியும்?
பதம் 10.4.33 : எல்லாப் பக்கங்களிலும் உம்மால் செலுத்தப்பட்ட அம்புக் கூட்டங்களினால் துளைக்கப்பட்ட அவர்களில் சிலர் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள விரும்பி, போர்களத்திலிருந்து தப்பியோடினர்.
பதம் 10.4.34 : தோற்கடிக்கப்பட்டு, ஆயுதங்களையெல்லாம் இழந்த தேவர்களில் சிலர், போரைத் துறந்து கூப்பிய கரங்களுடன் உம்மைப் போற்றினர். மற்றும் சிலர் அவிந்த ஆடைகளுடனும், கேசத்துடனும். உமது முன்வந்து, “பிரபு, உம்மிடம் நாங்கள் மிகவும் அச்சம் கொண்டுள்ளோம்” என்று கூறினர்.
பதம் 10.4.35 : தேவர்கள் தங்கள் இரதங்களை இழக்கும்பொழுதும், ஆயுதப் பிரயோகத்தை மறக்கும்பொழுதும், அச்சத்திற்குள்ளாகும் பொழுதும் அல்லது போரில்லாமல் வேறொன்றில் பற்றுக்கொள்ளும் பொழுதும், அல்லது அவர்களது விற்கள் முறிந்து போரிடும் திறமையை இழக்கும் பொழுதும் மாட்சிமையுடைய நீர் அவர்களைக் கொன்றதில்லை.
பதம் 10.4.36 : தேவர்கள் போர்க்களத்திற்கு வெளியில் வீணான தற்பெருமை பேசுகின்றனர். போரில்லாத இடத்தில்தான் அவர்களால் தங்களுடைய வீரத்தைக் காட்ட முடியும். எனவே இத்தகைய தேவர்களிடம் நாம் அஞ்சுவதற்கு எதுவுமில்லை. பகவான் விஷ்ணுவைப் பொறுத்தவரை அவர் யோகிகளின் இதயங்களுக்குள் ஏகாந்த வாசம் செய்கிறார். சிவபெருமானைப் பொறுத்தவரை, அவர் காட்டிற்குச் சென்றுவிட்டார். மேலும் பிரம்மதேவரோ, எப்பொழுதும் தவங்களிலும் தியானத்திலும் ஈடுபட்டிருக்கிறார். இந்திரன் முதலான மற்ற தேவர்களோ சக்தியற்றவர்களாக உள்ளனர். எனவே நீர் அச்சப்படுவதற்கு எதுவுமில்லை.
பதம் 10.4.37 : எனினும், தேவர்களின் பகையின் காரணத்தால், அவர்களை அலட்சியப்படுத்தக்கூடாது என்பது எங்களது அபிப்பிராயம். எனவே, உமது சொற்படி நடக்க நாங்கள் சித்தமாக இருப்பதால், அவர்களை வேருடன் அழிக்க, எங்களை அவர்களுடனான போரில் ஈடுபடுத்துங்கள்.
பதம் 10.4.38 : துவக்கத்தில் அலட்சியப்படுத்தப்படும் ஒரு நோய் எப்படி கடுமையாகி, அதைக் குணப்படுத்துவது சாத்தியமற்றதாகிறதோ, அல்லது ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்தாத புலன்களை எப்படி பிறகு அடக்க முடியாதோ, அதுபோலவே, துவக்கத்தில் அலட்சியம் செய்யப்படும் ஒரு பகைவன் பிறகு வெல்ல முடியாதவன் ஆகிவிடுவான்.
பதம் 10.4.39 : எங்கெல்லாம் சமயக் கொள்கைகளும், வேதப் பண்பாடும், வேதங்களும், பசுப் பராமரிப்பும், பிராமணர்களும், தவங்களும் மற்றும் சரியான தட்சிணையுடன் கூடிய யாகங்களும் உள்ளனவோ, அங்கெல்லாம் வாழ்பவரும், வழிபடப்படுபவருமான விஷ்ணுவே தேவர்களுக்கெல்லாம் ஆதாரமாவார்.
பதம் 10.4.40 : எனவே, எல்லா வகையிலும் உமது சொற்படி நடக்கும் நாங்கள், வேள்விகளில் ஈடுபட்டுள்ள வேத பிராமணர்களையும், எதிலிருந்து யாகப் பொருளான நெய் பெறப்படுகிறதோ, அந்த பாலைக் கொடுக்கும் பசுக்களையும் கொன்று விடுகிறோம்.
பதம் 10.4.41 : பிராமணர்கள், பசுக்கள், வேத அறிவு, தவம், உண்மை, மனம் மற்றும் புலன்களைக் கட்டுப்படுத்துதல், நம்பிக்கை, கருணை, பொறுமை மற்றும் யாகங்கள் ஆகியவை பகவான் விஷ்ணுவின் உடலின் வெவ்வேறு அங்கங்களாகும்
பதம் 10.4.42 : அனைவரது இதய மத்தியிலும் பரமாத்மாவாக உள்ள பகவான் விஷ்ணுவே அசுரர்களின் முடிவான எதிரியாவார். எனவே அவர் அஸுர்-த்விட் எனப்படுகிறார். அவரே அனைத்து தேவர்களுக்கும் தலைவர். ஏனெனில், சிவபெருமான் மற்றும் பிரம்மதேவர் உள்பட எல்லாத் தேவர்களும் அவரது பாதுகாப்பில்தான் உள்ளனர். சிறந்த புண்ணிய புருஷர்களும், முனிவர்களும், வைஷ்ணவர்களும் கூட அவரையே நம்பியுள்ளனர். எனவே வைஷ்ணவர்களைத் துன்புறுத்துவதே விஷ்ணுவைக் கொல்வதற்குரிய ஒரே வழியாகும்.
பதம் 10.4.43 : சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்: இவ்வாறாக, யமராஜனின் சட்டங்களுக்குக் கட்டுப்பட்டவனும், நற்புத்தி இல்லாதவனுமான கம்சன், ஓர் அசுரன் என்பதால், தன்னுடைய கெட்ட மந்திரிகளின் உபதேசங்களைக் கருத்திற்கொண்டு, தனது சொந்த நல்லதிர்ஷ்டத்தை அடைவதற்கு பிராமணர்களையும். சாதுக்களையும் துன்புறுத்துவதுதான் ஒரே வழி என்று முடிவு செய்தான்.
பதம் 10.4.44 : கம்சனின் ஆட்களான இந்த அசுரர்கள். பிறரைத் துன்புறுத்துவதில் குறிப்பாக வைஷ்ணவர்களைத் துன்புறுத்துவதில் வல்லவர்களும், விரும்பிய ரூபத்தை ஏற்கக் கூடியவர்களுமாவர். எல்லா இடங்களுக்கும் சென்று சாதுக்களைத் துன்புறுத்தும்படி, இந்த அசுரர்களுக்கு அனுமதியளித்த பின், கம்சன் தன் அரண்மனைக்குள் புகுந்தான்.
பதம் 10.4.45 : யார் தீவிர மற்றும் அறியாமைக் குணங்கள் நிரம்பியவர்களாக உள்ளனரோ, யாருக்காக மரணம் நெருங்கிக் காத்திருக்கிறதோ, அந்த அசுரர்கள், தங்களுக்கு நல்லது எது கெட்டது எது என்பதை அறியாமல், சாதுக்களைத் துன்புறுத்தத் துவங்கினர்.
பதம் 10.4.46 : அன்புள்ள அரசே, ஒருவன் சிறந்த ஆத்மாக்களைத் துன்புறுத்தும் பொழுது, நீண்ட ஆயுள், அழகு, புகழ், மதம், ஆசீர்வாதங்கள் மற்றும் உயர் கிரகங்களுக்கு ஏற்றம் பெறுதல், ஆகிய அவனது எல்லா வரங்களும் அழிந்துவிடும்.