அத்தியாயம் – 16
கிருஷ்ணர் காளிங்கனைத் தண்டித்தல்
பதம் 10.16.1
ஸ்ரீ-ஸூக உவாச
விலோக்ய தூஷிதாம் க்ருஷ்ணாம் க்ருஷ்ண: க்ருஷ்ணாஹினா விபு:
தஸ்யா விஸூத்திம் அன்விச்சன் ஸர்ப்பம் தம் உதவாஸயத்

ஸ்ரீ-ஸூக: உவாச—ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்; விலோக்ய—கண்டு; தூஷிதாம்—கெட்டுப் போயிருந்தது; க்ருஷ்ணம்—யமுனை நதி; க்ருஷ்ண:—பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்; க்ருஷ்ண-அஹினா—கருநாகத்தினால்; விபு:—எல்லாம் வல்ல பகவான்; தஸ்யா:—நதியின்; விஸூத்திம்—தூய்மை; அன்விச்சன்—விரும்பினார்; ஸர்ப்பம்—சர்ப்பத்தினை; தம்—அது; உதவாஸயத்—விரட்ட வேண்டுமென்று.

சுகதேவ கோஸ்வாமி கூறினார்: முழுமுதற் கடவுளான பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் யமுனை நதி காளிங்கன் என்னும் கருநாகத்தின் விஷத்தினால் கெட்டுப் போயிருப்பதைக் கண்டார். அதனைத் தூய்மை செய்ய விரும்பிய பகவான் அச்சர்ப்பத்தினை அங்கிருந்து விரட்டியடித்தார்.

பதம் 10.16.2
ஸ்ரீ-ராஜோவாச
கதம் அந்தர்-ஜலே ‘காதே ந்யக்ருஹ்ணாத் பகவான் அஹிம்
ஸ வை பஹு-யுகாவாஸம் யதாஸீத் விப்ர கத்யதாம்

ஸ்ரீ-ராஜா உவாச—பரீக்ஷித்து மன்னர் கூறினார்; கதம்—எவ்வாறு; அந்த:-ஜலே—நீரினுள்; அகாதே—ஆழங்காண முடியாத; நயக்ருஹ்ணாத்—அடக்கினார்; பகவான்—முழுமுதற்கடவுள்; அஹிம்—நாகம்; ஸ:—அவன்; காளிய—காளிங்கன்; வை—உண்மையில்; பஹு-யுக—பலயுகங்கள்; அவாஸம்—வசித்து வந்தான்; யதா—எவ்வாறு; ஆஸீத்—நடந்தது; விப்ர—ஓ, கற்றறிந்த அந்தணரே; கத்யதாம்—விளக்குவீராக.

பரீக்ஷித்து மன்னர் கேட்டார்: “ஓ, கற்றறிந்த அந்தணரே, முழுமுதற் கடவுள் எவ்வாறு ஆழங்காண முடியாத யமுனை நதியின் அடியில் இருந்த காளிங்கன் என்னும் நாகத்தினை அடக்கினார் என்பதையும், அக்காளிங்கன் எவ்வாறு பற்பல யுகங்கள் யமுனையில் வசித்து வந்தான் என்பதையும் அருள் கூர்ந்து விளக்குவீராக.”

பதம் 10.16.3
ப்ரஹ்மன் பகவதஸ் தஸ்ய பூம்ன: ஸ்வச்சந்த-வர்தின:
கோபாலோதார-சரிதம் கஸ் த்ருப்யேதாம்ருதம் ஜுஷன்

ப்ரஹ்மன்—ஓ, அந்தணரே; பகவத:—பரமபுருஷ பகவானின்; தஸ்ய—அவரது; பூம்ன:—அளவிலாத; ஸ்வ-சந்த-வர்தின:—அவரது விருப்பம் போல் செயல்படுபவர்; கோபால—ஆயர்குலச் சிறுவனாக; உதார—பெருந்தகைமை; சரிதம்—லீலைகள்; க:—யார்; த்ருப்யேத—திருப்தியடையக் கூடும்; அம்ருதம்—அமிர்தம்; ஜூஷன்—சிறிது அருந்தியவன்.

ஓ, அந்தணரே, எல்லையற்றவரான முழுமுதற் கடவுள் அவரது சுய விருப்பத்திற்கேற்ப சுதந்திரமாகச் செயல்படுகின்றார். விருந்தாவனத்தில் ஓர் ஆயர்குலச் சிறுவனாக அவர் நடத்திய பெருந்தகைமையுடைய லீலாம்ருதத்தினை அருந்திய எவனொருவன் திருப்தியடையக் கூடும்?

பதம் 10.16.4
ஸ்ரீ-ஸூக உவாச
காளிந்த்யாம் காளியஸ்யாஸீத் ஹ்ரத: கஸ்சித் விஷாக்னினா
ஸ்ரப்யமாண-பாய யஸ்மின் பதந்தி உபரி-கா: ககா:

ஸ்ரீ-ஸுக: உவாச—ஸ்ரீசுகதேவ கோஸ்வாமி கூறினார்; காளிந்த்யாம்—யமுனை நதியின் அடியில்; காளியஸ்ய—காளிங்கன் என்னும் நாகம்; அஸீத்—இருந்தான்; ஹ்ரத:—குளம்; கஸ்சித்—ஒரு குறிப்பிட்ட; விஷ—விஷம்; அக்னினா—நெருப்பினால்; ஸ்ரப்யமான—சூடேறிக் கொதித்தது; பயா:—அதன் நீர்; யஸ்மின்—அதனுள்; பதந்தி—கீழே விழும்; உபரி-கா:—மேலே பறந்து செல்லும்; ககா:—பறவைகள்.

ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்: காளிந்தி நதியின் (யமுனை) அருகில் இருந்த குளத்தில் காளிங்கன் என்னும் நாகம் வசித்து வந்தது. அதன் கொடிய விஷம் தொடர்ந்து நீரை உஷ்ணப்படுத்திக் கொதிக்கச் செய்து கொண்டிருந்தது. அக்குளத்திற்கு மேலே பறந்து செல்லும் பறவைகள் எல்லாம் நீரிலிருந்து மேலே பறந்த நச்சு ஆவியில் சிக்குண்டு இறந்து வீழ்ந்தன.

பதம் 10.16.5
விப்ருஷ்மதா விஷதோர்மி-மாருதேனாபிமர்ஸிதா:
ம்ரித்யந்தே தீர-கா யஸ்ய ப்ராணின: ஸ்திர-ஜங்கமா:

விப்ருஷ்-மதா—நீர்த்துளிகளைக் கொண்ட; விஷ-த—விஷமுடைய; ஊரிமி—அலைகள் (தொடுவதால்); மாருதேன—காற்றினால்; அபிமர்ஸிதா:—படுவதினால்; ம்ரியந்தே—மாண்டுபோகும்; தீர-கா:—கரையில் இருந்த; யஸ்ய—அதன்; ப்ராணின:—உயிர்கள் எல்லாம்; ஸ்திர-ஜங்கமா:—அசையும் அசையா உயிர்கள் எல்லாம்.

நச்சு நீர்ப் பொய்கையின் நீர்த்துளிகளைச் சுமந்து கொண்டு காற்று கரைக்கு வரும். அக்காற்று பட்டமாத்திரத்திலேயே கரையிலுள்ள தாவரங்களும், பிற உயிர்களும் உடனே மாண்டுவிடும்.

பதம் 10.16.6
தம் சண்ட-வேக- விஷ-வீர்யம்-அவேக்ஷ்ய தேன
துஷ்டாம் நதீம் ச கல-ஸம்யமனாவதார:
க்ருஷ்ண: கதம்பம் அதிருஹ்ய ததோ ‘தி-துங்கம்
ஆஸ்போட்ய காட-ரஸனோ ந்யபதத் விஷோதே

தம்—அவனை, காளிங்கனை; சண்ட-வேக—அஞ்சத்தக்க சக்தியின்; விஷ—விஷம்; வீர்யம்—அதன் சக்தி; அவேக்ஷ்ய—கண்டு; தேன—அவனால்; துஷ்டாம்—கெட்டுப்போன; நதீம்—ஆறு; ச—மற்றும்; கல—கொடிய அசுரர்கள்; ஸம்யமன—அடக்குவதற்காக; அவதார:—ஆன்மீக உலகத்திலிருந்து இறங்கி வந்த; க்ருஷ்ண:—பகவான் கிருஷ்ணர்; கதம்பம்—ஒரு கதம்ப மரத்தின்மீது; அதிருஹ்ய—ஏறி; தத:—அதிலிருந்து; அதி-துங்கம்—மிக உயரத்தில்; அஸ்போட்ய—அவரது கைகளைத் தட்டிக்கொண்டு; காட-ரஸன:—அரைக் கச்சையினை இறக்கிக் கட்டிக் கொண்டு; ந்யபதத்—அவர் குதித்தார்; விஷ-உதே—நச்சு நீரினுள்.

பகவான் கிருஷ்ணர், காளிங்கன் எவ்வாறு தனது வீரியமிக்க விஷத்தினால் யமுனை நதியினைக் கெடச் செய்திருந்தான் என்பதைக் கண்டார். மேலும் ஸ்ரீ கிருஷ்ணர் கொடிய அசுரர்களை அடக்க வேண்டுமென்பதற்காகவே ஆன்மீக உலகிலிருந்து பூமிக்கு இறங்கி வந்தவராவார். அதனால் பகவான் ஓங்கி வளர்ந்திருந்த ஒரு கதம்ப மரத்தின் உச்சியில் தாவி ஏறி அவனோடு சண்டை செய்வதற்குத் தயாரானார். அவர் தனது அரைக் கச்சையினை இறுக்கிக் கட்டினார். பின்னர் தன் கைகளைத் தட்டிக்கொண்டு நச்சு நீரினுள் குதித்தார்.

பதம் 10.16.7
ஸர்ப-ஹ்ரத: புருஷ-ஸார-நிபாத-வேக-
ஸங்ஷோபிதோரக-விஷோச்ச்வஸிதாம்பு-ராஸி:
பர்யக் ப்லுதோ விஷ-கஷாய-பிபீஷணோர்மிர்
தாவன் தனு:-ஸதம் அனந்த-பலஸ்ய கிம் தத்

ஸர்ப்ப-ஹ்ரத:—சர்ப்பத்தினுடைய குளம்; புருஷ-ஸார—மேன்மை மிக்க முழுமுதற் கடவுளின்; நிபாத-வேக—வீழ்ந்த வேகத்தில்; ஸங்ஷோபித—முழுதும் கொந்தளித்தது; உரக—பாம்புகளின்; விஷ-உச்ச்வஸித—விஷமுடைய சுவாசக் காற்று; அம்பு-ராஸி:—அதன் நீர் முழுதும்; பர்யக்—எல்லாப் பக்கங்களிலும்; ப்லுத:—பெருகுகிறது; விஷ-கஷாய—விஷக்கலப்பினால்; பிபீஷண—அஞ்சத்தக்க; ஊரிமி:—அதன் அலைகள்; தாவன்—பெருகி ஓடியது; தனு:-ஸதம்—நூறு வில்லின் தூரத்திற்கு; அனந்த-பலஸ்ய—அவருக்கு அவரது சக்தி அளவற்றதாகும்; கிம்—என்ன; தத்—அது.

காளிங்கன் இருக்கும் குளத்தினுள் முழுமுதற் கடவுள் இறங்கிய பொழுது, அங்கிருந்த பாம்புகள் பயங்கரமாகச் சீறி, மேலும் மேலும் விஷத்தைக் கக்கின. பகவான் குளத்தில் குதித்த வேகத்தின் காரணமாக அக்குளம் எல்லாப் பக்கங்களிலும் பொங்கிப் பெருக்கு எடுத்தது. மேலும் நஞ்சு கலந்த, அஞ்சத்தக்க அலைகள் நாலா பக்கங்களிலும் நூறு பாக தூரத்திற்குப் பெருக்கெடுத்து ஓடின. எனினும் பரமபுருஷ பகவான் அளவற்ற ஆற்றலுடையவர் ஆதலினால் அவரது செயல் ஒன்றும் வியப்பிற்குரியதல்ல.

பதம் 10.16.8
தஸ்ய ஹ்ரதே விஹரதோ புஜ-தண்ட-கூர்ண-
வார்-கோஷம் அங்க வர-வாரண-விக்ரமஸ்ய
அஸ்ருத்ய தத் ஸ்வ-ஸதனாபிபவம் நிரீக்ஷ்ய
சக்ஷு:-ஸ்ரவா: ஸமஸரத் தத் அம்ருக்ஷ்யமாண:

தஸ்ய—அவரது; ஹ்ரதே—அவனது குளத்தில்; விஹரத:—விளையாடிக் கொண்டிருந்தார்; புஜ-தண்ட—அவரது வலிமைமிக்கக் கரங்களினால்; கூர்ண—சுழன்றார்; வா:—நீரின்; கோஷம்—எதிரொலி; அங்க—அன்பிற்குரிய மன்னனே; வர-வாரண—ஒரு பெரிய யானை போன்று; விக்ரமஸ்ய—அவரது சக்தி; ஆஸ்ருத்ய—கேட்டு; தத்—அது; ஸ்வ-ஸதன—அவனது வசிப்பிடத்தின்; அபிபவம்—அத்துமீறி நுழைந்த; நிரீக்ஷ்ய—கண்டு; சக்ஷு:-ஸ்வரா:—காளிங்கன்; ஸமஸரத்—முன்னால் வந்தான்; தத்—அது; அம்ருஷ்யமாண:—பொறுத்துக்கொள்ள முடியாதவனாக.

காளிங்கனது குளத்தில் பகவான் கிருஷ்ணர் வலிமை மிக்க பெரிய காட்டு யானையைப் போல் தனது கரங்களைச் சுழற்றியபடி நீரில் பல்வேறு ஒலிகள் எழும் வண்ணம் விளையாடினார். இவ்வொலிகளைக் கேட்ட காளிங்கன் தனது குளத்தினுள் யாரோ அத்துமீறி நுழைந்திருப்பதை அறிந்து கொண்டான். இதனைப் பொறுத்துக் கொள்ளாத அவன் உடனே எழுந்து வந்தான்.

பதம் 10.16.9
தம் ப்ரேக்ஷணீய-ஸுகுமார-கனாவதாதம்
ஸ்ரீ வத்ஸ-பீத-வஸனம் ஸ்மித-ஸுந்தராஸ்யம்
க்ரீடந்தம் அப்ரதிபயம் கமலோதராங்க்ரிம்
ஸந்தஸ்ய மர்மஸு ருஷா புஜயா சசாத

தம்—அவரை; ப்ரேக்ஷணீய—பார்ப்பதற்குக் கவர்ச்சிமிக்க; ஸு-குமார—மிகவும் அழகிய; கன—மேகத்தைப் போன்ற; அவதாதம்—மின்னுகின்ற வெண்மை நிறமான; ஸ்ரீ வத்ஸ—ஸ்ரீ வத்ஸ அடையாளம்; பீத—மஞ்சள் வண்ண; வஸனம்—ஆடைகள்; ஸ்மித—புன்னகையுடன்; ஸுந்தரா—அழகிய; அஸ்யம்—அவரது எழில் முகம்; க்ரீடந்தம்—விளையாடினார்; அப்ரதி பயம்—எவருக்கும் அஞ்சாது; கமல—தாமரை மலரின்; உதர—உட்பகுதியைப் போன்ற; அங்க்ரிம்—அவரது பாதங்கள்; ஸ்ந்தஸ்ய—கடித்தான்; மர்மஸு—மார்பில்; ருஷா—சினத்துடன்; புஜயா—அவனது பாம்பு உடலினால்; சசாத—சுற்றிக் கொண்டான்.

ஸ்ரீ கிருஷ்ணரின் கண்ணைக் கவரும் மஞ்சள் பட்டாடையினையும், வெண்மேகத்தினைப் போன்று மின்னும் அவர் எழில் மேனியினையும், அவரது மார்பிலுள்ள ஸ்ரீ வத்ஸ சின்னத்தையும், அவரது திருமுகத்தில் அழகிய புன்னகை மலர்ந்திருப்பதையும், உள்ளிட்ட அவரது விந்தைமிகு தோற்றத்தைக் கண்ட பின்பும் காளிங்கன் பெரும் சீற்றத்துடன் அவரது மார்பில் கடித்துத் தனது பாம்பு உடலினால் பகவானது உடலினை முழுவதும் சுற்றினான்.

பதம் 10.16.10
தம் நாக-போக-பரிவீதம் அத்ருஷ்ட-சேஷ்டம்
ஆலோக்ய தத்-ப்ரிய-ஸகா: பஸுபா ப்ருஸார்தா:
க்ருஷ்ணே ‘ர்பிதாத்ம-ஸுஹ்ருத்-அர்த-களத்ர-காமா
து: கானுஸோக-பய-மூட-தியோ நிபேது:

தம்—அவரை; நாக—நாகத்தின்; போக—உடல் சுருளினுள்; பரிவீதம்—சுற்றியதில்; அத்ருஷ்ட-சேஷ்டம்—எந்தவிதமான அசைவும் இல்லாதது; அலோக்ய—கண்டு; தத்-ப்ரிய-ஸகா:—அவரது பிரிய சகாக்கள்; பஸு-பா:—ஆயர்குலச் சிறுவர்கள்; ப்ருஸ-ஆர்தா:—மிகுந்த துயருற்றனர்; க்ருஷ்ணே—பகவான் கிருஷ்ணருக்கு; அர்பித—அர்ப்பணித்தனர்; ஆத்ம—தம்மையும்; ஸுஹ்ருத்—அவர்களது உறவினர்களையும்; அர்த—செல்வத்தையும்; களத்ர—மனைவியரையும்; காமா:—விரும்பிய பொருட்கள் அனைத்தையும்; து: க—துக்கத்தினால்; அனுஸோக—தாங்க முடியாத சோகம்; பய—மற்றும் பயம்; மூட—குழப்பமுற்று; திய:—தமது புத்தி; நிபேது:—அவர்கள் மூர்ச்சித்து வீழ்ந்தனர்.

கிருஷ்ணரைத் தமது உயிர்நண்பனாக ஏற்றுக்கொண்ட ஆயர்குலத்தைச் சேர்ந்தோர், பாம்பின் பிடியில் சிக்கி அவர் அசைவற்று இருப்பதைக் கண்டு மிகுந்த துயரமடைந்தனர். அவர்கள் கிருஷ்ணருக்கு-தம்மையும், தமது குடும்பத்தையும், தமது செல்வத்தையும், தமது மனைவியரையும், தமது அனைத்து இன்பங்களையும் அர்ப்பணித்திருந்தனர். காளிங்கனின் பிடியில் பகவான் சிக்கிக் கொண்டிருப்பதைக் கண்டவுடன் சோகத்தினாலும், துயரத்தினாலும், அச்சத்தினாலும் அவர்களது புத்தி பேதலித்தது. இதன் காரணமாக அவர்கள் மூர்ச்சையடைந்து நிலத்தில் வீழ்ந்தனர்.

பதம் 10.16.11
காவோ வ்ருஷா வத்ஸதர்ய: க்ரந்தமானா: ஸு-து: கிதா:
க்ருஷ்ணே ந்யஸ்தேக்ஷணா பீதா ருதந்த்ய இவ தஸ்திரே

காவ:—பசுக்கள்; வ்ருஷா:—காளைகள்; வத்ஸதர்ய:—பெண் கன்றுக்குட்டிகள்; க்ரந்தமானா:—பெருங்குரல் எழுப்பின; ஸு-து: கிதா—மிகுந்த துயரத்துடன்; க்ருஷ்ணே—பகவான் கிருஷ்ணர் மீது; ந்யஸ்த—நிலைநிறுத்தி; ஈக்ஷணா:—தமது பார்வையினை; பீதா:—அச்சங்கொண்டு; ருதந்த்ய:—கதறின; இவ—போன்று; தஸ்திரே—இவை அசைவற்று நின்றன.

பசுக்களும், காளைகளும், பெட்டைக் கன்றுகளும் கிருஷ்ணரைக் கண்டு மிகுந்த துயரமுடன் ஓலமிட்டழுதன. அவர் மீது தமது பார்வையை நிலைநிறுத்தி அச்சமுடன் அசைவற்று நின்றன. அவை பெருங்குரலெடுத்து அழுவதற்குத் தயாரான போதிலும், அதிர்ச்சியினால் கண்களிலிருந்து கண்ணீர் வழிய நின்றன.

பதம் 10.16.12
அத வ்ரஜே மஹோத்பாதாஸ் த்ரி-விதா ஹி அதி-தாருணா:
உத்பேதுர் புவி திவி ஆத்மனி ஆஸன்ன-பய-ஸம்ஸின:

அத—பிறகு; வ்ரஜே—விருந்தாவனத்தில்; மஹா-உத்பாதா:—மகா உத்பாதங்கள்; த்ரி-விதா:—மூன்று வகையான; ஹி—உண்மையில்; அதிதாருணா:—மிகவும் அச்சத்திற்குரிய; உத்பேது:—தோன்றின; புவி—பூமியில்; திவி—வானத்தில்; ஆத்மனி—உயிர்களின் உடல்களில்; ஆஸன்ன—உடனடியாக நிகழப்போகின்ற; பய—பயம்; ஸம்ஸின:—அறிவித்தன.

விருந்தாவனத்தில் அச்சத்திற்குரிய மூன்று வகையான தீ நிமித்தங்கள் தோன்றின. இம்மூன்று தீ நிமித்தங்களும், மண்ணிலும், விண்ணிலும், வாழும் உயிரினங்களின் உடல்களிலும் தோன்றின. இவை உடனே நிகழப்போகும் அபாயத்தினை அறிவித்தன.

பதங்கள் 10.16.13 – 10.16.15
தான் ஆலக்ஷ்ய பயோத்விக்னா கோபா நந்த-புரோகமா:
விநா ராமேண கா: க்ருஷ்ணம் ஜ்ஞாத்வா சாரயிதும் கதம்

தைர் துர்நிமித்தைர் நிதனம் மத்வா ப்ராப்தம் அதத்-வித:
தத்-ப்ராணாஸ் தன் மனஸ்காஸ் தே து: க-ஸோக-பயா துரா:

ஆ பால வ்ருத்த-வனிதா: ஸர்வே ‘ங்க பஸு-வ்ருத்தய:
நிர்ஜக்முர் கோகுலாத் தீனா: க்ருஷ்ண-தர்ஸன-லாலஸா:

தான்—இந்த அறிகுறிகள்; ஆலக்ஷ்ய—கண்டு; பய-உத்விக்னா:—அச்சத்தினால் கிளர்ச்சியுற்று; கோபா:—கோபாலர்கள்; நந்த-புர:-கமா:—நந்த மகாராஜாவின் தலைமையின் கீழுள்ளவர்கள்; விநா—இன்றி; ராமேண—பலராமர்; கா:—பசுக்கள்; க்ருஷ்ணம்—கிருஷ்ணர்; ஜ்ஞாத்வா—அறிந்து கொண்டனர்; சாரயிதும்—மேய்ப்பதற்கு; கதம்—சென்றது; தை:—அந்த; துர்நிமித்தை:—துர்நிமித்தங்களிலிருந்து; நிதனம்—அழிவு; மத்வா—கருதி; ப்ராப்தம்—எய்தினர்; அதத்-வித:—அவரது வளங்கள் அறியாது; தத்-ப்ராணா:—அவரைத் தமது வாழ்வின் ஆதாரமாகக் கொண்டு; தத்-மனஸ்கா:—அவரிடத்தில் அவர்களது மனம் ஆழ்ந்திருந்தது; தே—அவர்கள்; து: க—துக்கத்தினால்; ஸோக—சேகம்; பய—பயம்; ஆதுரா:—மூழ்கினர்; ஆ-பால—குழந்தைகள் உள்ளிட்ட; வ்ருத்த—முதியோர்கள்; வனிதா:—பெண்கள்; ஸர்வே—அனைவரும்; அங்க—அன்பிற்குரிய பரீக்ஷித்து மன்னனே; பஸு-வ்ருத்தய:—தனது கன்றின் மீது பாசங்கொண்ட பசுவினைப் போல்; நிர்ஜக்மு:—அவர்கள் சென்றனர்; கோகுலாத்—கோகுலத்திலிருந்து; தீனா:—துயருற்றவர்களாக; க்ருஷ்ணதர்ஸன—கிருஷ்ணரைக் காண வேண்டுமென்னும்; லாலஸா:—ஆவலில்.

தீ நிமித்தங்களைக் கண்ட நந்த மகாராஜாவும் ஆயர்குலத்தில் உள்ளவர்களும், கிருஷ்ணர் தனது அண்ணன் பலராமரின் துணையின்றி பசுக்களை மேய்ச்சல் நிலத்திற்கு இட்டுச் சென்றிருப்பதை அறிந்து மிகுந்த அச்சங் கொண்டனர். கிருஷ்ணரையே தமது உயிராகக் கருதி, அவரிடத்துத் தமது மனங்களை அர்ப்பணித்திருந்த காரணத்தினால், அவரது சக்தியும், வளமும் எப்படிப்பட்டது என்பதை அவர்கள் அறியாதிருந்தனர். தோன்றிய தீ நிமித்தங்களிலிருந்து கிருஷ்ணர் மரணமடைந்திருக்க வேண்டுமென்று அவர்கள் முடிவு செய்தனர். இதன் காரணமாக அவர்கள் துயரமும், சோகமும், அச்சமும் அடைந்தனர். விருந்தாவனத்தில் உள்ள குழந்தைகள் உள்ளிட்ட பெண்கள், பெரியவர்கள் அனைவரும், ஒரு பசு தன் கன்றின் மீது எத்துணைப் பாசம் வைத்திருக்குமோ, அத்துணைப் பாசம் வைத்திருந்தனர். அதனால் அந்த ஏழை எளிய மக்கள் அனைவரும் கிருஷ்ணரைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும் என்னும் ஆவலில் கிராமத்தை விட்டு விரைவாக வெளியேறினர்.

பதம் 10.16.16
தாம்ஸ் ததா காதரான் வீக்ஷ்ய பகவான் மாதவோ பல:
ப்ரஹஸ்ய கிஞ்சின் நோவாச ப்ரபாவ-ஜ்ஞோ ‘னுஜஸ்ய ஸ:

தான்—அவர்கள்; ததா—அதுபோன்ற நிலையில்; காதரான்—துயருற்று; வீக்ஷ்ய—கண்டு; பகவான்—முழுமுதற் கடவுள்; மா-தவ:—யோகஸித்திகள் அனைத்திற்கும் தலைவரான; பல:—பகவான் பலராமர்; ப்ரஹஸ்ய—புன்னகை புரிந்து; கிஞ்சித்—ஏதேனும்; ந—இல்லை; உவாச—கூறினார்; ப்ரபாவ-ஜ்ஞ:—சக்தியை அறிந்தவர்; அனு-ஜஸ்ய—தனது தம்பியின்; ஸ:—அவர்.

யோக ஸித்திகள் அனைத்திற்கும் தலைவரான பரமபுருஷ பகவான் பலராமர், தனது தம்பியின் அசாதாரணமான சக்தியினை நன்கு அறிந்தவர் ஆதலினால், விருந்தாவனத்திலுள்ளோர் துன்பமிக்கவர்களாக ஓடி வருவதைக் கண்டு, புன்னகை புரிந்து, அவர்களிடம், ஒன்றும் நடக்கவில்லை அஞ்ச வேண்டாம் என்று கூறினார்.

பதம் 10.16.17
தே ‘ன்வேஷமாணா தயிதம் க்ருஷ்ணம் ஸுசிதயா பதை:
பகவல்-லக்ஷணைர் ஜக்மு: பதவ்யா யமுனா-தடம்

தே—அவர்கள்; அன்வேஷமாணா:—தேடிக்கொண்டு; தயிதம்—தமது மிகுந்த அன்பிற்குரிய; க்ருஷ்ணம்—கிருஷ்ணர்; ஸுசிதயா—அடையாளமுடைய (பாதையில்); பாதை:—அவரது காலடித் தடங்கள்; பகவத்-லக்ஷணை:—முழுமுதற் கடவுளின் அடையாளங்கள்; ஜக்மு:—அவர்கள் சென்றனர்; பதவ்யா—பாதையில்; யமுனா-தடம்—யமுனை நதிக்கரைக்கு .

முழுமுதற் கடவுளுக்கு உரிய அடையாளங்களுடன் கூடிய காலடித் தடங்களைப் பின்பற்றி அவர்கள் தங்கள் உயிரினும் இனிய கிருஷ்ணரைத் தேடிக்கொண்டு யமுனை நதியின் கரையினை நோக்கி விரைந்தனர்.

பதம் 10.16.18
தே தத்ர தத்ராப்ஜ-யவாங்குஸாஸனி-
த்வஜோபபன்னானி பதானி விஸ்-பதே:
மார்கே கவாம் அன்ய-பதாந்தராந்தரே
நிரீக்ஷமாணா யயுர் அங்க ஸத்வரா:

தே—அவர்கள்; தத்ர தத்ர—அங்குமிங்கும்; அப்ஜ—தாமரை மலர்; யவ—வாற்கோதுமை மணி; அங்குஸ—அங்குசம்; அஸனி—வஜ்ராயுதம்; த்வஜ—கொடி; உபபன்னானி—உடையது; பதானி—காலடித் தடங்கள்: வித்-பதே:—ஆயர்குலத் தலைவரான பகவான் கிருஷ்ணரின்; மார்கே—பாதையில்; கவாம்—பசுக்களின்; அன்ய-பத—காலடித் தடங்களுடன்; அந்தர-அந்தரே—பரவலாக இருந்த; நிரீக்ஷமானா:—கண்டு; யுயு:—அவர்கள் சென்றனர்; அங்க—அன்பிற்குரிய மன்னனே; ஸத்வரா:—விரைந்து.

ஆயர்குலம் முழுவதற்கும் தலைவரான பகவான் கிருஷ்ணரின் காலடித் தடத்தில் தாமரை மலர், வாற்கோதுமை மணி, அங்குசம், வஸ்ராயுதம், கொடி போன்ற, குறிகள் காணப்பட்டன. அன்பிற்குரிய பரீக்ஷித்து மன்னனே, பசுக்களின் காலடித் தடங்களோடு, அவரது காலடித் தடமும் இருப்பதைக் கண்ட விருந்தாவன வாசிகள் அவசர அவசரமாக விரைந்து சென்றனர்.

பதம் 10.16.19
அந்தர் ஹ்ரதே புஜக-போக-பரீதம் ஆராத்
க்ருஷ்ணம் நிரீஹம் உபலப்ய ஜலாஸயாந்தே
கோபம்ஸ் ச மூட-திஷணான் பரித: பஸும்ஸ் ச
ஸங்க்ரந்தத: பரம-கஸ்மலம் ஆபுர் ஆர்தா:

அந்தர்—உள்ளே; ஹ்ரதே—குளம்; புஜக—நாகத்தின்; போக—உடலில்; பரீதம்—சுற்றப்பட்டு, ஆராத்—தூரத்திலிருந்து; க்ருஷ்ணம்—பகவான் கிருஷ்ணர், நிரீஹம்—அசையாது; உபலப்ய—கண்டு; ஜல-ஆஸய—நீர் நிறைந்த இடத்தின்; அந்தே—உள்ளே; கோபான்—கோபாலர்கள்; ச—மற்றும்; மூட-திஷணான்—உணர்வின்றி; பரித:—சுற்றிலும்; பஸுன்—விலங்குகள்; ச—மற்றும்; ஸங்க்ரந்தத:—கதறி அழுதுகொண்டு; பரம-கஸ்மலம்—பெருங் குழப்பத்தில்; ஆபு:—அவர்கள் உணர்ந்தனர்; ஆர்தா:—துன்புற்றனர்.

அவர்கள் அனைவரும் யமுனை நதிக்கரையினை விரைந்து அடைந்தவுடன், அங்குள்ள குளத்தில் கிருஷ்ணர் ஆடாது அசையாது ஒரு கருநாகத்தின் உடலில் சிக்கிக் கொண்டிருப்பதைக் கண்டனர். அவர்கள் மேலும், ஆயர்குலச் சிறுவர்கள் மயங்கிக் கிடப்பதையும், பசுக்களெல்லாம் கிருஷ்ணரின் நிலைகண்டு கதறி கொண்டிருப்பதையும் பார்த்தனர். அழுது இவற்றையெல்லாம் பார்த்த விருந்தாவனத்தைச் சேர்ந்தோர் கவலையில் மூழ்கித் துன்பத்தில் ஆழ்ந்தனர்.

பதம் 10.16.20
கோப்யோ ‘னுரக்த-மனஸோ பகவதி அனந்தே
தத்-ஸௌஹ்ருத-ஸ்மித-விலோக-கிர: ஸ்மரந்த்ய:
க்ரஸ்தே ‘ஹினா ப்ரியதமே ப்ருஸ-து: க-தப்தா:
ஸுன்யம் ப்ரிய-வியதிஹ்ருதம் தத்ருஸுஸ் த்ரி-லோகம்

கோப்ய:—ஆயர்குல இளம் பெண்கள்; அனுரக்த-மனஸ:—அவர்களது மனம் அவர்மீது மிகுந்த பற்றுடையது; பகவதி—முழுமுதற் கடவுள்; அனந்தே—அளவிற்சிறந்தவர்; தத்—அவரது; ஸௌஹ்ருத—அழகிய; ஸ்மித—புன்னகை; விலோக—பார்வை; கிர:—வார்த்தைகள்; ஸ்மரந்த்ய:—நினைத்து; க்ரஸ்தே—நிறுத்தப்பட்டது; அஹினா—நாகத்தினால்; ப்ரிய-தமே—அவர்களது அன்பிற்குரிய; ப்ருஸ—அளவிட முடியாத; து: க—துக்கத்தினால்; தப்தா:—துன்புற்றனர்; ஸுன்யம்—சூனியமானது; ப்ரிய-வ்யதிஹ்ருதம்—தமது உயிரினும் மேலான; தத்ருஸு:—அவர்கள் கண்டனர்; த்ரி-லோகம்—மூவுலகங்களும் (பிரபஞ்சம் முழுவதும்).

தமது மனங்களை பரமபுருஷ பகவானான கிருஷ்ணரிடம் பறிகொடுத்த இளங்கோபியர்கள், இப்போது அவர் ஒரு நாகத்தின் பிடியில் சிக்கிக் கொண்டிருப்பதைக் கண்டனர். அவரது இனிய உறவினையும், அழகிய புன்னகையினையும் அவரது மயக்கும் வார்த்தைகளையும் அவர்கள் எண்ணிப் பார்த்துத் தம் மனதில் மருகினர். துன்பத் தீயினால் சுட்டெரிக்கப்பட்ட அவர்கள் இப்பிரபஞ்சம் முழுவதுமே சூனியமாகி விட்டதைக் கண்டனர்.

பதம் 10.16.21
தா: க்ருஷ்ண-மாதரம் அபத்யம் அனுப்ரவிஷ்டாம்
துவ்ய-வ்யதா: ஸமனுக்ருஹ்ய ஸுச: ஸ்ரவந்த்ய:
தாஸ் தா வ்ரஜ-ப்ரிய-கதா: கதயந்த்ய ஆஸன்
க்ருஷ்ணானனே ‘ர்பித-த்ருஸோ ம்ருதக-ப்ராதீகா:

தா:—அப்பெண்கள்; க்ருஷ்ண-மாதரம்—கிருஷ்ணரின் அன்னை (யசோதை); அபத்யம்—அவளது தனயன் மீது; அனுப்ர-விஷ்டாம்—பார்வையை வைத்து; துவ்ய—சமமாக; வ்யதா:—துன்புற்று, ஸமனுக்ருஹ்ய—உறுதியாகத் தாங்கிப் பிடித்துக் கொண்டனர்; ஸுச:—துன்பவெள்ளம்; ஸ்ரவந்த்ய:—சிந்தியது; தா: தா:—அவர்கள் ஒவ்வொருவரின்; வ்ரஜ-ப்ரிய—விரஜத்தின் பிரியமான; கதா:—சரிதங்கள்; கதயந்த்ய:—பேசிக்கொண்டு; ஆஸன்—அவர்கள் நின்றனர்; க்ருஷ்ண-ஆனனே—பகவான் கிருஷ்ணரின் திருமுகத்திற்கு; அர்பித—அர்ப்பணித்த; த்ருஸ:—அவர்களது விழிகள்; ம்ருதக—உயிரற்ற உடல்களாக; ப்ரதீகா:—போன்று.

முதிய கோபியர்களும், கிருஷ்ணரின் அன்னையைப் போன்று பெருந்துன்பத்தில் ஆழ்ந்து தமது விழிகளிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்து ஓட நின்றபோதிலும் அவர்கள் யசோதையினைத் தமது கரங்களால் நன்கு தாங்கிப் பிடித்துக் கொண்டனர். அவளது உணர்ச்சியெல்லாம் ஒட்டுமொத்தமாக அவளது மைந்தன் மீதே நிலை பெற்றிருந்தது. தமது விழிகளை கிருஷ்ணர் மீது பதித்த வண்ணம் உயிரற்ற உடல்களைப் போல் நின்று கொண்டிருந்த அப்பெண்கள் விரஜத்தின் உயிராக விளங்கிய பகவானின் லீலைகளை மனதில் நினைத்துப் பார்த்துக் கொண்டனர்.

பதம் 10.16.22
க்ருஷ்ண-ப்ராணான் நிர்விஸதோ நந்தாதீன் வீக்ஷ்ய தம் ஹ்ரதம்
ப்ரத்யஷே தத் ஸ பகவான் ராம: க்ருஷ்ணானுபாவ-வித்

க்ருஷ்ண-ப்ராணான்—தமது உயிரும், ஆத்மாவும் கிருஷ்ணர் ஒருவரே என்றிருந்த மனிதர்கள்; நிர்விஸத:—இறங்கினர்; நந்த-ஆதீன்—நந்த மகாராஜாவுடன் சேர்ந்து; வீக்ஷ்ய—கண்டு; தம்—அது; ஹ்ரதம்—குளம்; ப்ரத்ய-ஷேதத்—தடுத்தார்; ஸ:—அவர்; பகவான்—எல்லாம் வல்ல பகவான்; ராம:—பலராமர்; க்ருஷ்ண—பகவான் கிருஷ்ணரின்; அனுபாவ—சக்தி; வித்—நன்கறிந்தவர்.

தமது உயிரையே கிருஷ்ணரிடத்து அர்ப்பணித்துவிட்ட நந்த மகாராஜாவும், ஆயர்குலப் பெரியவர்களும், நாகம் இருக்கும் குளத்தில் இறங்குவதைப் பகவான் பலராமர் கண்டார். முழுமுதற் கடவுளான பகவான் பலராமருக்கு பகவான் கிருஷ்ணரின் சக்தி எத்தகையது என்பது நன்கு தெரியுமாதலால் அவர் அவர்களை இறங்கவிடாது தடுத்து நிறுத்தினார்.

பதம் 10.16.23
இத்தம் ஸ்வ-கோகுலம் அனன்ய-கதிம் நிரீக்ஷ்ய
ஸ-ஸ்த்ரீ-குமாரம் அதி-து: கிதம் ஆத்ம-ஹேதோ:
ஆஜ்ஞாய மர்த்ய-பதவீம் அனுவர்தமான:
ஸ்தித்வா முஹூர்தம் உததிஷ்டத் உரங்க-பந்தாத்

இத்தம்—இந்நிலையில்; ஸ்வ-கோகுலம்—தனது கோகுல வாசிகள்; அனன்ய-கதிம்—(தன்னை விட்டால்) வேறு இலட்சியமோ, புகலிடமோ இல்லாதவர்கள்; நிரீக்ஷ்ய—கண்டு; ஸ-ஸ்த்ரீ—பெண்கள் உள்ளிட்ட; குமாரம்—குழந்தைகள்; அதி-து: கிதம்—மிகவும் துன்புற்று; ஆத்ம-ஹேதோ:—தனக்காக; ஆஜ்ஞாய—அறிந்து; மர்த்ய-பதவீம்—அழியக்கூடிய; அனுவர்தமான:—பாவனை செய்து; ஸ்தித்வா—இருந்தவர்; முஹூர்தம்—சில நேரம்; உததிஷ்டத்—அவர் எழுந்தார்; உரங்க—நாகத்தின்; பந்தாத்—பிடியிலிருந்து.

சாதாரண அழியக்கூடிய மனிதனைப் போல் பாவனை செய்து பகவான் சிறிது நேரம் நாகத்தின் பிடியில் சிக்கிக் கொண்டிருந்தார். ஆனால், தன்மீது கொண்ட அன்பினாலும், அவர்களது வாழ்வின் ஒரே லட்சியமாகவும், புகலிடமாகவும் அவர்கள் தன்னையே நம்பி இருப்பதினாலும், தனது நிலை கண்டு கோகுலத்தின் பெண்களும், குழந்தைகளும், பெரியவர்களும் வருந்துவதைக் கண்ட பகவான் உடனே காளிங்கனின் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு எழுந்து நின்றார்.

பதம் 10.16.24
தத்-ப்ரத்யமான-வபுஷா வ்யதிதாத்ம-போகஸ்
த்யக்த்வோன்னமய்ய குபித: ஸ்வ-பணான் புஜங்க:
தஸ்தௌ ஸ்வஸன் ச்வஸன-ரந்த்ர-விஷாம்பரீஷ-
ஸ்தப்தேக்ஷணோல்முக-முகோ ஹரிம் ஈக்ஷமாண:

தத்—அவரது (பகவான் கிருஷ்ணர்); ப்ரத்யமான—விரிவடைந்த; வபுஸா—உன்னத உடலினால்; வ்யதித—வேதனையுற்ற; ஆத்ம—தனது; போக:—நாகத்தின் உடல்; த்யக்த்வா—அவரை விட்டுவிட்டது; உன்னமய்ய—உயர்ந்து எழுந்து; குபித:—சினத்துடன்; ஸ்வ-பணான்—அதன் படங்கள்; புஜங்க—நாகம்; தஸ்தெள—அசையாது நின்றது; ஸ்வஸன்—பெருமூச்சு விட்டது; ஸ்வஸன-ரந்த்ர—அதன் நாசித் துவாரங்கள்; விஷ அம்பரீஷ—விஷத்தினை உண்டுபண்ணும் இரண்டு பாத்திரங்களைப் போன்று; ஸ்தப்த—நிலை நின்றது; ஈக்ஷண—அதன் விழிகள்; உல்முக—தீப்பந்தங்கள் போன்று; முக:—அதன் முகம்; ஹரிம்—முழுமுதற் கடவுள்; ஈக்ஷமாண:—கண்டு.

பகவான் கிருஷ்ணரின் உடல் விரிவடைந்த காரணத்தினால் காளிங்கன் உடல் மிகுந்த வேதனையுற்றது. அதனால் அது பகவானைத் தனது பிடியிலிருந்து விடுவித்தது. மிகுந்த சீற்றத்துடன் பெருமூச்சு விட்டபடி அது தனது படங்களை விரித்து நின்றது. அதன் நாசித்துவாரங்கள் விஷத்தினை உற்பத்தி செய்யும் பாத்திரங்கள் போல் தோன்றின. அதன் விழிகள் தீப்பந்தங்களைப் போல் கொழுந்து விட்டு எரிந்தது. இவ்வாறு அது பகவானை சினங் கொண்டு பார்த்தது.

பதம் 10.16.25
தம் ஜிஹ்வயா தீவி-ஸிகயா பரிவேலிஹானம்
த்வே ஸ்ருக்வணீ ஹி அதி-கராவ-விஷாக்னி-த்ருஷ்டிம்
க்ரீடன்ன் அமும் பரிஸஸார யதா ககேந்த்ரோ
பப்ராம ஸோ ‘பி அவஸரம் ப்ரஸமீக்ஷமாண:

தம்—அவரை; காளிங்கனை; ஜிஹ்வாய—அதன் நாக்குகளால்; த்வி-ஸிகயா—இரு பிறைகளுடைய; பரிவேலிஹானம்—தொடர்ந்து நக்கிக்கொண்டு; த்வே—அதன் இரண்டு; ஸ்ருக்வணி—உதடுகள்; ஹி—உண்மையில்; அதி-கராவ—அதிபயங்கரமாக; விஷ-அக்னி—விஷ அக்கினியுடன்; த்ருஷ்டிம்—அதன் பார்வை; க்ரீடன்—விளையாடிக் கொண்டு; அமும்—அவனை; பரிஸஸார—சுற்றிக்கொண்டு; யதா—போன்று; கக-இந்த்ர:—பறவைகளின் அரசனான கருடன்; பப்ராம்—சுற்றி வருதல்; ஸ:—காளிங்கனை; அபி—கூட; அவஸரம்—சந்தர்ப்பம் (கொத்துவதற்கு); ப்ரஸமீக்ஷமாண:—எச்சரிக்கையுடன் பார்த்தது.

மீண்டும் மீண்டும் காளிங்கன் தனது பிளவுண்ட நாக்குகளால் தனது உதடுகளை நக்கிக் கொண்டு, கிருஷ்ணரை விஷாக்னி நிறைந்த பார்வையுடன் சினத்துடன் பார்த்தது. ஆனால் கருடன், பாம்புடன் விளையாடுவது போல் கிருஷ்ணர் காளிங்கனைச் சுற்றிவந்து விளையாடிக் கொண்டிருந்தார். காளிங்கனும் பகவானைக் கொத்துவதற்குரிய சந்தர்ப்பத்தினை எதிர்பார்த்து அசைந்து கொண்டிருந்தது.

பதம் 10.16.26
ஏவம் பரிப்ரம-ஹதௌஜஸம் உன்னதாம்ஸம்
ஆனம்ய தத்-ப்ருது-ஸிர: ஸ்வ் அதீரூட ஆத்ய:
தன்-மூர்த-ரத்ன-நிகர-ஸ்பர்ஸாதி-தாம்ர
பாதாம்புஜோ ‘கில-கலாதி-குருர் நனர்த

ஏவம்—இவ்வாறு; பரிப்ரம—பகவான் அதனைச் சுற்றி வந்ததால்; ஹத—அழைந்தது; ஓஜஸம்—அதன் வலிமை; உன்னத—உயர்ந்து எழுந்து; அம்ஸம்—அதன் தோள்களின் மீது; ஆனம்ய—அதனைக் கீழே குனியச்செய்து; தத்—அதன்; ப்ருது-ஸிர: ஸு—அகன்ற தலைகளின் மீது; அதிரூட:—ஏறி நின்றார்; ஆத்ய:—எல்லாவற்றிற்கும் ஆதிமூலமானவர்; தத்—அதன்; மூர்த—தலைகளின்மீது; ரத்ன-நிகர—மதிப்புமிகு இரத்தினங்கள்; ஸ்பர்ஷ—ஸ்பரிசத்தினால்; அதி-தாம்ர—மிகவும் சிவந்தன; பாத-அம்புஜ:—அவரது தாமரைத் திருவடிகள்; அகில-கலா—அனைத்துக் கலைகளின்; ஆதி-குரு:—ஆதிகுருவானவர்; நனர்த—நடனமாடத் தொடங்கினார்.

எல்லாவற்றிற்கும் ஆதிமூலமான பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் காளிங்கனைச் சுற்றிச் சுற்றி வந்து முதலில் அதனை பலமிழக்கச் செய்தார். பின்னர் அவர், அதன் தோள்களைக் கைகளினால் பற்றிக் குனியச் செய்து அதன் அகன்ற தலைகளின் மீது ஏறிக் கொண்டார். இவ்வாறு அனைத்துக் கலைகளுக்கும் ஆதிகுருவாக விளங்கும் பகவான் கிருஷ்ணர் அதன் தலைகளின் மீது நடனமாடத் தொடங்கினார். அதன் தலைகளிலிருந்த மதிப்புமிக்க நாகரத்தினக் கற்களின் மீது பட்டதினால் அவரது தாமரைத் திருவடிகள் மேலும் அதிகமாகச் சிவந்தன.

பதம் 10.16.27
தம் நர்தும் உத்யதம் அவேக்ஷ்ய ததா ததீய-
கந்தர்வ-ஸித்த-முனி-சாரண-தேவ-வத்வ:
ப்ரீத்யா ம்ருதங்க-பணவானக-வாத்ய-கீத-
புஷ்போபஹார-நுதிபி: ஸஹஸோபஸேது:

தம்—அவரது; நர்தும்—நாட்டியம்; உத்யதம்—ஈடுபட்டார்; அவேக்ஷ்ய—கண்டு; ததா—பின்னர்; ததீய—அவரது தொண்டர்கள்; கந்தர்வ-ஸித்த—கந்தர்வர்களும், சித்தர்களும்; முனி-சாரண—முனிவர்களும், சாரணர்களும்; தேவ-வத்வ:—தேவர்களின் துணைவியர்; ப்ரீத்யா—மிக்க மகிழ்ச்சியுடன்; ம்ருதங்க-பாணவ-ஆனக—பல்வேறு இசை கருவிகளின்; வாத்ய—வாத்தியங்களுடன்; கீத—பாடல்; புஷ்ப—மலர்கள்; உபஹார—உபகாரங்களும்; நுதிபி:—பிரார்த்தனைகள்; ஸஹஸா—உடனே; உபஸேது:— அடைந்தனர்.

பகவான் நாட்டியமாடுவதைக் கண்டவுடன் தேவலோகத்தைச் சேர்ந்த கந்தர்வர்களும், சித்தர்களும், முனிவர்களும், சாரணர்களும், தேவர்களின் துணைவியரும் உடனடியாக அங்கு விரைந்து வந்தனர். மிக்க மகிழ்ச்சியுடன் அவர்களும், தமது மிருதங்கம், பாணவம், ஆனகம் போன்ற இசைக் கருவிகளிலிருந்து பகவானது நாட்டியத்திற்கேற்ப இசை எழுப்பினர். அவர்கள் தமது கீதங்களையும், மலர்களையும், பிரார்த்தனைகளையும் அர்ப்பணித்தனர்.

பதம் 10.16.28
யத் யச் சிரோ ந நமதே ‘ங்க ஸதைக-ஸீர்ஷ்ணஸ்
தத் தன் மமர்த கர-தண்ட-தரோ ‘ங்க்ரி-பாதை:
க்ஷுணாயுஷோ ப்ரமத உல்பணம் ஆஸ்யதோ ‘ஸ்ருண்
நஸ்தோ வமன் பரம-கஸ்மலம் ஆப நாக:

யத் யத்—எதுவாயினும்; ஸிர:—தலைகள்; ந நமதே—வணங்கவில்லையோ; அங்க—அன்பிற்குரிய பரீக்ஷித்து மன்னனே; ஸத-ஏக-ஸீர்ஷ்ண:—அதன் 101 தலைகளில்; தத் தத்—அவற்றினை; மமர்த—குனியச் செய்தார்; கர—கொடியவர்களின்; தண்ட—தண்டனை; தர:—முனைந்த பகவான்; அங்க்ரி-பாதை:—தனது பாதங்களினால் மிதித்து; க்ஷுண-ஆயுஷ:—குறைந்து கொண்டே வந்த உயிரையுடைய காளிங்கனின்; ப்ரமத:—அப்போதும் அசைந்துகொண்டிருந்த; உல்பணம்—பயங்கரமாக; ஆஸ்யத:—வாய்களிலிருந்தும்; அஸ்ருக்—இரத்தம்; நஸ்த:—நாசிகளிலிருந்தும்; வமன்—கக்கியது; பரம—உச்சபட்ச; கஸ்மலம்—துன்பம்; ஆப—அனுபவித்து; நாக:—நாகம்.

அன்பிற்குரிய பரீக்ஷித்து மன்னனே, காளிங்க நாகத்தில் 101 தலைகள் இருந்தன. அவற்றில் ஒன்று தலை வணங்காவிட்டாலும் கூட, தவறு செய்யும் கொடியவர்களைத் தண்டிக்கும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், வணங்காத அத்தலையினைத் தனது கால்களினால் மிதித்து ஒடித்தார். மரணவேதனை அனுபவித்த காளிங்கன் தனது வாய்களிலிருந்தும், நாசிகளிலிருந்தும் பயங்கரமாக இரத்தம் கக்கியது. இவ்வாறு அந்நாகம் தாங்க முடியாத துன்பமும், துயரமும் அடைந்தது.

பதம் 10.16.29
தஸ்யாக்ஷிபர் கரலம் உத்வமத: ஸிர: ஸு
யத் யத் ஸமுன்னமதி நி: ஸ்வஸதோ ருஷோச்சை:
ந்ருத்யன் பதானுனமயன் தமயாம் பபூவ
புஷ்பை: ப்ரபூஜித இவேஹ புமான் புராண:

தஸ்ய—அவரது; அக்ஷிபி:—கண்களிலிருந்து; கரலம்—விஷக் கழிவு; உத்வமத:—அது கக்கியது; ஸிர: ஸு—தலைகளின் மத்தியில்; யத் யத்—எதுவாயினும்; ஸமுன்னமதி—தூக்கினாலும்; நி:-ஸ்வஸத:—பெருமூச்சு விட்டது; ருஷா—சினத்தினால்; உச்சை:—பயங்கரமாக; ந்ருத்யன்—ஆடும்பொழுது; பதா—அவரது பாதங்களுடன்; அனுனமயன்—வணங்கும்படிச் செய்தார்; தமயாம் பபூவ—அவர் அடக்கினார்; புஷ்பை:—மலர்களுடன்; ப்ரபூஜித:—வணங்கினர்; இவ—உண்மையில்; இஹ—இந்நிகழ்ச்சியில்; புமான்—முழுமுதற் கடவுள்; புராண:—ஆதிபகவன்.

தனது கண்களிலிருந்து விஷக் கழிவினைச் சிந்திய காளிங்க நாகம் எப்போதாவது தனது தலையினைத் தூக்கி மிகுந்த சினத்துடன் பெருமூச்சு விடும். பின்னர் பகவான் அத்தலையின் மீது நடனமாடி தனது பாதங்களினால் மிதித்து அத்தலையினைப் பணியச் செய்வார். ஆதி முதல் கடவுளின் மீது மலர்மாரி பெய்து தேவர்கள் அவர் செய்யும் ஒவ்வொரு செயலும் தமக்குக் கிடைத்த அரிய வாய்ப்பு என்று கருதி வணங்கினர்.

பதம் 10.16.30
தச்-சித்ர-தாண்டவ-விருக்ன-பணா-ஸஹஸ்ரோ
ரக்தம் முகைர் உரு வமன் ந்ருப பக்ன-காத்ர:
ஸம்ருத்வா சராசர-குரும் புருஷம் புராணம்
நாராயணம் தம் அரணம் மனஸா ஜகாம

தத்—அவரது; சித்ர—வியப்புமிகு; தாண்டவ—தாண்டவக் கூத்தினால்; விருக்ன—உடைந்தன; பணா-ஸஹஸ்ர:—அதன் ஆயிரம் படங்களும்; ரக்தம்—இரத்தம்; முகை:—வாய்களிலிருந்து; உரு—ஏராளமாக; வமன்—கக்கியது; ந்ருப—ஓ, பரீக்ஷித்து மன்னனே; பக்ன-காத்ர:—அதன் எலும்புகள் நொறுங்கின; ஸ்ம்ருத்வா—நினைத்தது; சர-அசர—அசையும் அசையா உயிர்கள் அனைத்தின்; குரும்—ஆன்மீகக் குரு; புருஷம்—முழு முதற் கடவுள்; புராணம்—ஆதி; நாராயணம்—பகவான் நாராயணர்; தம்—அவருக்கு; அரணம்—தஞ்சம்; மனஸா—மனதினுள்; ஜகாம—அது அணுகியது.

அன்பார்ந்த பரீக்ஷித்து மன்னனே, பகவான் கிருஷ்ணரின் விந்தைமிகு, ஆற்றல்மிகு தாண்டவக் கூத்தினால் மிதியுண்ட காளிங்கனின் ஆயிரம் தலைகளும் உடைந்தன. அதன் பின்னர் அதன் வாய்களிலிருந்து ஏராளமான இரத்தம் வெளிப்பட்டது. இறுதியில் அது, ஸ்ரீ கிருஷ்ணரே ஆதி முழுமுதற் கடவுளும், அசையும், அசையா உயிர்கள் அனைத்தின் ஆன்மீக குருவான ஸ்ரீ நாராயணர் என்பதை அறிந்து கொண்டது. இவ்வாறு காளிங்கன் பகவானைத் தனது மனதினுள் எண்ணித் தஞ்சமடைந்தது.

பதம் 10.16.31
க்ருஷ்ணஸ்ய கர்ப-ஜகதோ ‘தி-பராவஸன்னம்
பார்ஷ்ணி-ப்ரஹார-பரிருக்ன-பணாதபத்ரம்
த்ருஷ்ட்வாஹிம் ஆத்யம் உபஸேதுர் அமுஷ்ய பத்ன்ய
ஆர்தா: ஸ்வதத்-வஸன-பூஷண-கேஸ-பந்தா:

க்ருஷ்ணஸ்ய—பகவான் கிருஷ்ணரின்; கர்ப—வயிற்றினுள்; ஜகத:—பிரபஞ்சம் முழுவதும் உள்ளது; அதி-பர—அதன் பாரத்தினால்; அவஸன்னம்—களைப்புற்று; பார்ஷ்ணி—அவரது குதிங்கால்கள்; ப்ரஹார—மிதியினால்; பரிருக்ன—நொறுங்கின; பணா—படங்கள்; ஆதபத்ரம்—அவை குடைகளைப் போலிருந்தன; த்ருஷ்ட்வா—கண்டு; அஹிம்—நாகம்; ஆத்யம்—ஆதிபகவன்; உபஸேது:—நெருங்கியது; அமுஷ்ய—காளிங்கனின்; பத்ன்ய:—பத்தினிகள்; ஆர்தா:—துயருற்று; ஸ்வதத்—அலங்கோலமாக; வஸன—அவர்களது ஆடைகள்; பூஷண—ஆபரணங்கள்; கேஸ-பந்தா:—தலைவிரி கோலமாக.

காளிங்கனின் பத்தினியர், இப்பிரபஞ்சத்தையே தன் வயிற்றினுள் சுமந்துகொண்டிருக்கும் பகவான் கிருஷ்ணரின் பாரம் தாங்காது காளிங்கன் சோர்வடைந்ததையும், கிருஷ்ணரின் குதிங்கால்களின் மிதியினால் எவ்வாறு காளிங்கனின் குடை போன்ற படங்கள் நொறுங்கின என்பதையும் கண்டனர். இதனால் அவர்கள் பெருந் துயருற்றனர். ஆடை குலைய, அணிகலன்கள் சிதற, தலைவிரி கோலமாக அவர்கள் முழுமுதற் கடவுளை அணுகினர்.

பதம் 10.16.32
தாஸ் தம் ஸு-விக்ந-மனஸோ ‘த புரஸ்க்ருதார்பா:
காயம் நிதாய புவி பூத-பதிம் ப்ரணேமு:
ஸாத்வ்ய: க்ருதாஞ்ஜலி-புடா: ஸமலஸ்ய பர் துர்
மோக்ஷேப்ஸவ: ஸரண-தம் ஸரணம் ப்ரபன்னா

த:—அவர்கள்; காளிங்கனி—மனைவியர்; தம்—அவருக்கு; ஸு-விக்ந—மிகவும் கிளர்ச்சியுற்ற; மனஸ:—தமது மனங்கள்; அத—பிறகு; புர:-க்ருத—முன்பு இட்டனர்; அர்பா:—தமது குழந்தைகளை; காயம்—அவர்கள் உடல்கள்; நிதாய:—வைத்தனர்; புவி—நிலத்தில்; பூத-பதிம்—உயிர்க்குலத்தின் கடவுள்; ப்ரணேமு:—அவர்கள் வணங்கினர்; ஸாத்வ்ய:—சாதுக்களான அப்பெண்கள்; க்ருத-அஞ்ஜலி-புடா:—தமது கைகளைக் கூப்பியபடி; ஸமலஸ்ய—பாவியான; பர்து:—தமது கணவனின்; மோக்ஷ—விடுதலை; ஈப்ஸவ:—விரும்பி; ஸரண—தம் தஞ்சமளிக்கும் அவரை; ஸரணம்—தஞ்சமடைவதற்காக; ப்ரபன்னா:—அவர்கள் அணுகினர்.

மிகவும் மனம் வருந்திய அச்சாதுப் பெண்கள், உயிர்க்குலத்தின் தலைவரான பகவான் முன்பு தமது குழந்தைகளை வைத்து அவரை வீழ்ந்து வணங்கினர். அவர்கள் இறுதி விடுதலையளிப்பவரான பகவான் தமது கணவருக்கு விடுதலையும் அடைக்கலமும் அளிக்க வேண்டுமென்று விரும்பினர். அதனால் அவர்கள் கூப்பிய கரங்களுடன் பகவானை அணுகி அவரது தாள் பணிந்தனர்.

பதம் 10.16.33
நாக-பத்ன்ய ஊசு:
ந்யாய்யோ ஹி தண்ட: க்ருத-கில்பிஷே ‘ஸ்மிம்ஸ்
தவாவதார: கல-நிக்ரஹாய
ரிபோ: ஸுதானாம் அபி துல்ய-த்ருஷ்டிர்
தத்ஸே தமம் பலம் ஏவானுஸம்ஸன்

நாக-பத்ன்ய: ஊசு:—நாக பத்தினியர் கூறினர்; ந்யாய்ய:—நியாயமானது; ஹி—உண்மையில்; தண்ட:—தண்டனை; க்ருத-கில்பிஷே—குற்றமிழைத்த அவனுக்கு; அஸ்மின்—இவன்; தவ—உமது; அவதார:—இவ்வுலகில் அவதரித்தது; கல—துண்டர்களை; நிக்ரஹாய—அழிப்பதற்கு; ரிபோ:—பகைவனிடத்தும்; ஸுதானாம்—உமது புத்திரர்களிடத்தும்; அபி—கூட; துல்ய-த்ருஷ்டி:—சமபார்வை உடையவர்; தத்ஸே—நீர் அருள்கின்றீர்; தமம்—தண்டனை; பலம்—இறுதி பலனை; ஏவ—உண்மையில்; அனுஸம்ஸன்—கருதுகின்றீர்.

காளிங்கனின் மனைவியர் கூறினர்: இக்குற்றவாளிக்குத் தாங்கள் அளித்த தண்டனை நியாயமானதே. துஷ்டர்களையும், கொடியவர்களையும் அழிப்பதற்கே நீர் இப்பூலகில் அவதரித்திருக்கின்றீர். உமது பகைவர்களிடத்தும், உமது சொந்தப் புதல்வர்களிடத்தும் நீர் சமபார்வை உடையவர். வாழ்கின்ற ஓர் உயிருக்கு நீர் தண்டனை அளிக்கின்றீர் என்றால் அது அவனது நன்மைக்கே என்பதை நீர் நன்கறிவீர்.

பதம் 10.16.34
அனுக்ரஹோ ‘யம் பவத: க்ருதோ ஹி நோ
தண்டோ ‘ஸதாம் தே கலு கல்மஷாபஹ:
யத் தந்தஸூகத்வம் அமுஷ்ய தேஹின:
க்ரதோ ‘பி தே ‘னுக்ரஹ ஏவ ஸம்மத:

அனுக்ரஹ:—அனுக்கிரஹம்; அயம்—இந்த; பவத:—உம்மால்; க்ருத:—அளிக்கப்பட்டது; ஹி—உண்மையில்; ந:—எமக்கு; தண்ட:—தண்டனை; அஸதாம்—கொடியவனுக்கு; தே—உம்மால்; கலு—உண்மையில்; கல்மஷ-அபஹ:—அவர்களது மாசினை நீக்குதல்; யத்—ஏனென்றால்; தந்தஸூகத்வம்—நாகமாகத் தோன்றிய பந்தம்; அமுஷ்ய—இக் காளிங்கனின்; தேஹின:—கட்டுண்ட ஆத்மா; க்ரோத—சினம்; அபி—கூட; தே—உமது; அனுக்ரஹ:—அனுக்கிரஹமாக; ஏவ—உண்மையில்; ஸம்மத:—ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

நீர் துஷ்டர்களுக்கு அளிக்கும் தண்டனையின் மூலம் அவர்களது மாசினை அகற்றுகின்றீர், அதனால் இப்போது நீர் செய்திருப்பது எங்களுக்கு உண்மையில் அனுக்கிரஹமேயாகும். உண்மையில் பந்தப்பட்ட ஆத்மாவாக இருக்கின்ற காரணத்தினால், எங்கள் கணவன் ஒரு பாம்பின் உடலைப் பெற்றுக் கொடிய பாவியாக விளங்குகின்றான். அவனிடத்து நீர் கொண்ட சினமானது உண்மையில் உமது கருணையாகவே கருதப்படுகிறது.

பதம் 10.16.35
தப: ஸுதப்தம் கிம் அனேன பூர்வம்
நிரஸ்த-மானேன ச மான-தேன
தர்மோ ‘தவா ஸர்வ-ஜனானுகம்பயா
யதோ பவாம்ஸ் துஷ்யதி ஸர்வ-ஜீவ:

தப:—தவம்; ஸு-தப்தம்—முறையாக நிறைவேற்றுதல்; கிம்—என்ன; அனேன—இக்காளிங்கனால்; பூர்வம்—முந்தைய பிறவிகளில்; நிரஸ்த-மானேன—வீண் கர்வத்திலிருந்து விடுதலை பெறல்; ச—மற்றும்; மான-தேன—பிறருக்கு மரியாதை அளித்தல்; தர்ம:—சமயதர்மம்; அதவா—அல்லது; ஸர்வ-ஜன—எல்லோருக்கும்; அனுகம்பயா—கருணையுடன்; யத:—அதன் மூலம்; பவான்—தாங்கள்; துஷ்யதி—திருப்தியடைதல்; ஸர்வ-ஜீவ:—உயிர்கள் அனைத்திற்கும் ஆதாரமானவர்.

தனது மனதில் கர்வமின்றி, பிறரிடத்து மரியாதையுடன் எமது கணவன் அவனது முந்தைய பிறவிகளில் முறையாகவும், எச்சரிக்கையுடனும் தவங்கள் செய்திருந்தானா? அதனால் அவன் மீது நீர் மகிழ்ச்சியடைந்தீரா? அல்லது அவன் தனது முந்தையப் பிறவிகளில் எல்லா உயிர்களிடத்தும் கருணை கொண்டு தனது சமய தர்மங்களை எச்சரிக்கையுடன் நிறைவேற்றினானா, அதனால் உயிர்கட்கெல்லாம் உயிராக விளங்கும் நீர், இப்போது அவன் மீது நீர் திருப்தியடைந்திருக்கின்றீரா?

பதம் 10.16.36
கஸ்யானுபாவோ ‘ஸ்ய நதேவ வித்மஹே
தவாங்க்ரி-ரேணு-ஸ்பரஸாதிகார:
யத்-வாஞ்சயா ஸ்ரீர் லலனாசரத் தபோ
விஹாய காமான் ஸு-சிரம் த்ருத-வ்ரத

கஸ்ய—எதன்; அனுபாவ:—விளைவு; அஸ்ய—நாகத்தின் (காளிங்கனின்); ந—இல்லை; தேவ—எமது பகவானே; வித்மஹே—நாங்கள் அறிவது; தவ—உமது; அங்க்ரி—தாமரைத் திருவடிகளின்; ரேணு—தூசியின்; ஸ்பரஸ—ஸ்பரிசத்திற்கு; அதிகார:—தகுதி; யத்—அதற்காக; வாஞ்சயா—வாஞ்சையுடன்; ஸ்ரீ:—இலட்சுமிதேவி; லலனா—(மிகவுயர்ந்த) பெண்; ஆசரத்—செய்தாள்; தப:—தவம்; விஹாய—துறந்து; காமான்—அனைத்து ஆசைகளையும்; ஸு-சிரம்—நீண்ட காலம்; த்ருத—மேற் கொண்டாள்; வ்ரதா—விரதங்கள்.

ஓ, பகவானே, உமது தாமரைத் திருவடிகளின் தூசி தனது தலையில் படுதற்கு நாகமாகிய இக்காளிங்கன் என்ன தவம் செய்தானென்று நாங்கள் அறியோம். இதற்காகத்தானே அதிர்ஷ்ட தேவதையாகிய இலட்சுமிதேவி தனது இச்சைகள் அனைத்தையும் துறந்து காலாகாலங்களுக்கும் தவங்கள் மற்றும் விரதங்களைப் பின்பற்றுகின்றாள்.

பதம் 10.16.37
ந நாக-ப்ருஷ்டம் ந ச ஸார்வ-பெளமம்
ந பாரமேஷ்ட்யம் ந ரஸாதிபத்யம்
ந யோக-ஸித்தீர் அபுனர்-பவம் வா
வாஞ்சந்தி யத்-பாத ரஜ-ப்ரபன்னா:

ந—இல்லை; நாக-ப்ருஷ்டம்—சொர்க்கம்; ந ச—இல்லை; ஸார்வ-பெளமம்—விண்ணுலக ஆட்சி; ந—இல்லை; பாரமேஷ்ட்யம்—பிரம்மதேவனின் உயர்ந்த நிலை; ந—இல்லை; ரஸ-அதிபத்யம்—மண்ணுலக ஆட்சி; ந—இல்லை; யோக-ஸித்தீ:—யோக ஸித்தியின் நிறைவு நிலை; அபுன:-பவம்—மீண்டும் பிறவாமை; வா—அல்லது; வாஞ்சந்தி—வாஞ்சை; யத்—அவரது; பாத—தாமரைத் திருவடிகளின்; ரஜ:—தூசு; ப்ரபன்னா:—அடையப் பெற்றவர்கள்.

உமது தாமரைத் திருவடிகளின் தூசியினை அடையப் பெற்றோர் சொர்க்கத்தின் ஆட்சியோ, வானளவு அதிகாரமோ, பிரம்மதேவனின் பதவியோ, மண்ணுலக ஆட்சியோ விரும்புவதில்லை. அவர்கள் யோக சாதனைகளின் நிறைவினையோ அல்லது விடுதலையினையோ கூட விரும்புவதில்லை.

பதம் 10.16.38
தத் ஏஷ நாதாப துராபம் அன்னயஸ்
தமோ-ஜனி: க்ரோத-வஸோ ‘பி அஹீஸ:
ஸம்ஸார-சக்ரே ப்ரம்மத: ஸரீரிணோ
யத்-இச்சத: ஸ்யாத் விபவ: ஸமக்ஷ:

தத்—அது; ஏஷா:—இக்காளிங்கன்; நாத—ஓ, பகவானே; ஆப—எய்தியிருக்கின்றான்; துராபம்—எய்துவதற்கு அரிய; அன்னய:—பிறரால்; தம:-ஜனி—அறியாமைக் குணத்தில் பிறந்தவன்; க்ரோத-வஸ:—குரோதவசப்பட்டவனாக; அபி—கூட; அஹி-ஈஸ:—நாகங்களின் அரசன்; ஸம்ஸார-சக்ரே—பௌதிக வாழ்க்கைச் சுழற்சியினுள்; ப்ரம்மத:—அலைந்து கொண்டு; ஸரீரிண:—உடலினைப் பெற்ற உயிர்வாழி; யத்—அதன் மூலம் (உமது தாமரைத் திருவடிகளின் தூசியினால்); இச்சத:—பெளதிக இச்சைகள் கொண்டு; ஸ்யாத்—வெளிப்படுத்துகிறான்; விபவ:—எல்லா வளங்களும்; ஸமக்ஷ:—அவனது கண் முன்பு.

ஓ, பகவானே, நாகங்களின் அரசனான இக்காளிங்கன் அறியாமைக் குணத்தில் பிறந்து, விரோத உணர்வோடு இருந்த போதிலும் கூட, பிறரால் எய்துவதற்கு அரிய ஒன்றினை அவன் எய்தியிருக்கின்றான். ஆசைகள் நிறைந்தவர்களாக, ஜனன மரணப் பிறப்புக்களில் மீண்டும் மீண்டும் சுழலும் உடல் பெற்ற ஆத்மாக்கள், உமது தாமரைத் திருவடிகளின் தூசியினை அடைவதின் மூலம் தமது கண் முன்னே அனைத்து வளங்களும் வெளிப்படக் காண்பர்.

பதம் 10.16.39
நமஸ் துப்யம் பகவதே புருஷாய மஹாத்மனே
பூதாவாஸாய பூதாய பராய பரமாத்மனே

நம:—வந்தனம்; துப்யம்—உமக்கு; பகவதே—முழுமுதற் கடவுள்; புருஷாய—பரமாத்மாவாக விளங்குபவர்; மஹா-ஆத்மனே—எங்கும் நிறைந்தவர்; பூத-ஆவாஸாய—பௌதிகப் பொருட்களுக்கு அடைக்கலமாக இருப்பவர் (வானத்திலிருந்து தொடங்கி); பூதாய—படைப்பிற்கு முன்பே இருப்பவர்; பராய—பரம காரணர்; பரம-ஆத்மனே—பெளதிக காரணங்கள் அனைத்திற்கும் மேலானவர்.

முழுமுதற் கடவுளாகிய உமக்கு எமது வந்தனங்கள் உரியதாகும். உயிர்களின் இதயங்களில் பரமாத்மாவாக வீற்றிருந்த போதிலும் நீர் எங்கும் நிறைந்தவராவீர். படைக்கப்பட்ட உலகியல் பொருட்களின் ஆதி அடைக்கலமாக நீர் இருந்தபோதிலும், அவற்றைப் படைப்பதற்கு முன்பே நீர் இருக்கின்றீர். எல்லாவற்றிற்கும் காரணமாக நீர் இருந்த போதிலும், பரமாத்மாவான நீர், உலகியற் காரணம் மற்றும் காரியம் இரண்டிற்கும் மேலானவராக இருக்கின்றீர்.

பதம் 10.16.40
ஜ்ஞான-விஜ்ஞான-நிதயே ப்ரஹ்மணே ‘னந்த-ஸக்தயே
அகுணாயாவிகாராய நமஸ் தே ப்ராக்ருதாய ச

ஜ்ஞான—உணர்வின்; விஜ்ஞான—ஆன்மீகச் சக்தியின்; நிதயே—சாகரத்திற்கு; ப்ரஹ்மணே—முழுமெய்ப்பொருளுக்கு; அனந்த-ஸக்தயே—அவரது சக்திகள் அளவற்றன; அகுணாய—பௌதிகக் குணங்களினால் பாதிக்கப்படாதவர்; அவிகாராய—அவர் எந்த விதமான உலகியல் மாற்றங்களுக்கும் ஆளாவதில்லை; நம:—வந்தனம்; தே—உமக்கு; ப்ராக்ருதாய—ஜட இயற்கையின் பரம நடத்துனருக்கு; ச—மற்றும்

அனைத்து உன்னத உணர்வுகள் மற்றும் ஆற்றலுக்கு உறைவிடமாக விளங்குபவரும், அளவற்ற சக்திகளை உடையவருமான முழுமெய்ப்பொருளே! உமக்கு எங்கள் வந்தனங்கள் உரியதாகுக. பெளதிகக் குணங்கள் மற்றும் மாற்றங்களிலிருந்து முற்றிலும் விடுதலை பெற்றவராக நீர் இருந்தபோதிலும் ஜட இயற்கையின் பரம நடத்துனராக நீரே இருக்கின்றீர்.

பதம் 10.16.41
காலாய கால-நாபாய காலாவயவ-ஸாக்ஷிணே
விஸ்வாய தத்-உபத்ரஷ்ட்ரே தத்-கர்த்ரே விஸ்வ-ஹேதவே

காலாய—காலனுக்கும்; கால-நாபாய—காலத்தின் அடைக்கலமாக இருப்பவருக்கும்; காலா-அவயவ—காலத்தின் பல்வேறு கட்டங்களின்; ஸாக்ஷிணே—சாட்சியாக இருப்பவருக்கு; விஸ்வாய—பிரபஞ்ச வடிவத்திற்கு; தத்-உபத்ரஷ்ட்ரே—அதனைக் காண்பவருக்கு; தத்-கத்ரே—அதைப் படைப்பவருக்கு; விஸ்வ—பிரபஞ்சத்தின்; ஹேதவே—முழுக் காரணத்திற்கு.

காலனாகவும், காலத்தின் அடைக்கலமாகவும், காலத்தின் அனைத்துப் படிநிலைகளுக்கும் சாட்சியாகவும் இருப்பவரான உமக்கு வந்தனங்கள். நீரே பிரபஞ்சமாகவும், அதிலிருந்து தனித்து அதனைக் காண்பவராகவும் இருக்கின்றீர். நீரே அதனைப் படைப்பவராகவும், அதன் காரணங்கள் அனைத்தின் முழுமையாகவும் இருக்கின்றீர்.

பதங்கள் 10.16.42 – 10.16.43
பூத-மாத்ரேந்த்ரிய-ப்ராண-மனோ-புத்தி-ஆஸயாத்மனே
த்ரி-ருணேனாபிமானேன கூட-ஸ்வாத்மானுபூதயே

நமோ ‘னந்தாய ஸுக்ஷ்மாய கூட-ஸ்தாய விபஸ்சிதே
நானா-வாதானுரோதாய வாச்ய-வாசக-ஸக்தயே

பூத—பெளதிகப் பூதங்கள்; மாத்ர—உணர்வின் சூட்சும அடிப்படை; இந்த்ரிய—புலன்கள்; ப்ராண—உயிர்க்காற்று; மன:—மனம்; புத்தி—புத்தி; ஆஸய—மற்றும் பௌதிக உணர்வின்; ஆத்மனே—இறுதி ஆத்மாவாக இருப்பவருக்கு; த்ரி-குணேன—ஜட இயற்கையின் முக்குணங்களினால்; அபிமானேன—தவறான அடையாளத்தினால்; கூட—மறைக்கப்படுவதற்குக் காரணமாக இருப்பவர்; ஸ்வ—ஒருவனுக்குரிய; ஆத்ம—தனது; அனுபூதயே—உணர்வு; நம—வந்தனங்கள்; அனந்தாய—எல்லையற்ற பகவானுக்கு; ஸுக்ஷ்மாய—பரம சூட்சுமமானவருக்கு; கூட-ஸ்தாய—மையத்தில் நிலைத்திருப்பவர்; விபஸ்சிதே—எல்லாம் அறிந்தவருக்கு; நானா—பல்வேறு; வாத—தத்துவங்கள்; அனுரோதாயா—அவர் அனுமதிக்கிறார்; வாச்ய—உரைத்த கருத்துக்களின்; வாசக—உரைத்த வார்த்தைகளின்; ஸக்தயே—சக்தியுடையவர்.

பரு உலகப் பூதங்களின் இறுதி ஆத்மாவாகவும், உணர்வின் சூக்கும அடிப்படையாகவும், புலன்களாகவும், உயிர்க் காற்றாகவும், மனம், புத்தி மற்றும் உணர்வாகவும் இருக்கும் உமக்கு எமது வந்தனங்கள் உரியதாகுக. உமது ஏற்பாட்டினால், மிகவும் நுண்ணியதான ஜீவாத்மாக்கள், ஜட இயற்கையின் முக்குணங்களுடன் தம்மைத் தவறாக அடையாளங்கண்டு, அதனால் அவர்களது சுயத்தைப் பற்றிய உண்மை உணர்வு மறைக்கப்பட்டிருக்கின்றனர். எல்லையற்ற பரமபுருஷ பகவானாகவும், பரம சூக்குமமாகவும், மாறாத உன்னதத்தில் எப்போதும் நிலைபெற்றிருப்பவராகவும், எதிர்மறைக் கருத்துடைய பல்வேறு சித்தாந்தங்களுக்கு அனுமதியளிப்பவராகவும், பல்வேறு கருத்துக்கள் மற்றும் அவற்றை வெளிப்படும் வார்த்தைகளைத் தாங்கும் சக்தியாகவும் இருக்கும் முழுமுதற் கடவுளாகிய உமக்கு எமது வந்தனங்களை சமர்ப்பிக்கின்றோம்.

பதம் 10.16.44
நம: ப்ரமாண-மூலாய கவயே ஸாஸ்த்ர-யோனயே
ப்ரவ்ருத்தாய நிவ்ருத்தாய நிகமாய நமோ நம:

நம:—வந்தனங்கள்; ப்ரமாண—அதிகாரப்பூர்வமான சான்று; மூலாய—மூலமாகவும்; கவயே—கர்த்தாவிற்கு; ஸாஸ்த்ர—வெளிப்படுத்தப்பட்ட வேதத்தின்; யோனயே—மூலத்திற்கு; ப்ரவ்ருத்தாய—புலனுகர்ச்சியைத் தூண்டும்; நிவ்ருத்தாய—பற்றின்மையினைத் தூண்டும்; நிகமாய—இரு வகையான சாத்திரங்களின் ஆதாரமாக இருப்பவருக்கு; நம: நம:— மீண்டும் மீண்டும் வந்தனங்கள்.

அதிகாரப்பூர்வமான சான்றுகள் அனைத்தின் அடிப்படையாகவும், வெளிப்படுத்தப்பட்ட வேதங்களின் கர்த்தாவாகவும் இறுதி ஆதாரணமாகவும் இருப்பவரும், புலனுகர்ச்சியைத் தூண்டுவதாகவும், உலகின்மேல் பற்றின்மையினை உண்டு பண்ணுவதுமாகிய இவ்வேத இலக்கியங்களில் உம்மை வெளிப்படுத்துபவராகவும் இருக்கும் உமக்கு எமது வந்தனங்களை மீண்டும் மீண்டும் அர்ப்பணிக்கின்றோம்.

பதம் 10.16.45
நம: க்ருஷ்ணாய ராமாய வஸுதேவ-ஸுதாய ச ப்ரத்யும்நாயானிருத்தாய ஸாத்வதாம் பதயே நம:

நம:—வந்தனங்கள்; க்ருஷ்ணாய—பகவான் கிருஷ்ணருக்கு; ராமாய—பகவான் இராமச்சந்திர மூர்த்திக்கு; வஸுதேவ-ஸுதாய—வசுதேவரின் மைந்தர்களுக்கு; ச—மற்றும்; ப்ரத்யும்நாய—பகவான் பிரத்யும்னருக்கு; அநிருத்தாய—பகவான் அநிருத்தருக்கு; ஸாத்வதாம்—பக்தர்களின்; பதயே—பகவானுக்கு; நம:—வந்தனங்கள்.

நாங்கள், எமது வந்தனங்களை பகவான் கிருஷ்ணருக்கும், பகவான் இராமச்சந்திர மூர்த்திக்கும், வசுதேவரின் மைந்தர்களுக்கும், பகவான் பிரத்யும்னருக்கும், பகவான் அநிருத்தருக்கும் சமர்ப்பிக்கின்றோம். நாங்கள் எமது மரியாதைக்குரிய வந்தனங்களை பகவான் விஷ்ணுவின் தெய்வீக பக்தர்கள் அனைவரின் நாயகராக இருப்பவருக்கு அர்ப்பணிக்கின்றோம்.

பதம் 10.16.46
நமோ குண-ப்ரதீபாய குணாத்மச்-சாதனாய ச
குண-வ்ருத்தி-உபலக்ஷ்யாய குண-த்ரஷ்ட்ரே ஸ்வ-ஸம்விதே

நம:—வந்தனங்கள்; குண-ப்ரதீபாய—பல்வேறு குணங்களை வெளிப்படுத்துபவருக்கு; குண—பௌதிகக் குணங்களால்; ஆத்ம—தன்னை; சாதனாய—மறைத்துக் கொள்கிறார்; ச—மற்றும்; குண—குணங்களின்; வ்ருத்தி—செயலினால்; உபலக்ஷ்யாய—அவர் காணப்படுகிறார்; குண-த்ரஷ்ட்ரே—பெளதிகக் குணங்களின் சாட்சியமாகத் தனித்திருப்பவருக்கு; ஸ்வ—அவரது பக்தர்களுக்கு; ஸம்விதே—அறியப்படுகிறார்.

பல்வேறு வகையான பௌதிக மற்றும் ஆன்மீகக் குணங்களை வெளிப்படுத்தும், ஓ, பகவானே, உமக்கு எமது வந்தனங்கள். நீர் உம்மைப் பெளதிகக் குணங்களினுள் மறைத்துக் கொள்கின்றீர். இருந்தும் அதே குணங்களின் செயல்பாடானது இறுதியில் உமது இருப்பினை அறிவிக்கின்றது. அத்தகு குணங்களுக்கு அப்பால் ஒரு சாட்சியாக நீர் நிற்கின்றீர். மேலும் நீர் உமது பக்தர்களால் மட்டுமே முற்றிலும் அறியக்கூடியவராக இருக்கின்றீர்.

பதம் 10.16.47
அவ்யாக்ருத-விஹாராய ஸர்வ-வ்யாக்ருத-ஸித்தயே
ஹ்ருஷீகேஸ நமஸ்தே ‘ஸ்து முனயே மௌன-ஸீவினே

அவ்யக்ருத-விஹாராய—ஆழங்காண முடியாத பெருமைகள் உடையவருக்கு; ஸர்வ-வ்யாக்ருத—அனைத்துப் பொருட்களின் படைப்பு மற்றும் தோற்றம்; ஸித்தயே—எல்லாப் பொருட்களின் மூலமாக அறிந்து கொள்ளப்படுபவருக்கு; ஹ்ருஷீக-ஈஸ—ஓ, புலன்களின் நாயகரே; நம:—வந்தனங்கள்; தே—உமக்கு; அஸ்து—ஆகட்டும்; முனயே—அமைதிக்கு; மௌன ஸீவினே—அமைதியுடன் செயல்படுபவருக்கு.

ஓ, புலன்களின் நாயகரான பகவான் ரிஷிகேஸரே, கற்பனைக்கெட்டாத பெருமைகளையுடைய லீலைகள் செய்யும் நீர், எமது வந்தனங்களை உமக்கு அர்ப்பணிக்க விடுவீராக. உமது இருப்பானது பெளதிகப் பொருட்கள் அனைத்தையும் படைத்து, வெளிப்படுத்துவற்கு ஒருவர் தேவை என்பதிலிருந்து உணரப்படுகிறது. உமது பக்தர்கள் உம்மை இவ்வழியே அறிந்துகொண்ட போதிலும் பக்தி அற்றோரிடம் நீர் மெளனமாகவும், சுயதிருப்தியில் ஆழ்ந்தவராகவும் இருக்கின்றீர்.

பதம் 10.16.48
பராவர-கதி-ஜ்ஞாய ஸர்வாத்யக்ஷாய தே நம:
அவிஸ்வாய ச விஸ்வாய தத்-த்ரஷ்ட்தே ‘ஸ்ய ச ஹேதவே

பர-அவர—உயர்வு, தாழ்வுடைய பொருட்கள் அனைத்தின்; கதி—இலக்குகள்; ஜ்ஞாய—அறிபவருக்கு; ஸர்வ—எல்லாவற்றின்; அத்யக்ஷாய—நெறிப்படுத்துபவருக்கு; தே—உமக்கு; நம—நமது வந்தனங்கள்; அவிஸ்வாய—பிரபஞ்சத்திலிருந்து வேறுபட்டவனிடம்; ச—மற்றும்; விஸ்வாய—அவரிடத்திலேயே பெளதிகத் தோற்றத்தின் மாயை வெளிப்படுகின்றது; தத்-த்ரஷ்ட்ரே—இம்மாயையினைக் காண்பவருக்கு; அஸ்ய—இவ்வுலகின்; ச—மற்றும்; ஹேதவே—மூலகாரணருக்கு.

உயர்ந்த தாழ்ந்த பொருட்கள் அனைத்தின் இலக்குகளையும் நன்கறிபவரும், எல்லாவற்றையும் நெறிப்படுத்துபவருமான உமக்கு எமது வந்தனங்கள் உரித்தாகுக. பிரபஞ்சப் படைப்பிலிருந்து நீர் வேறானவர் ஆவீர் இருந்தும் நீரே, பெளதிகப் படைப்பின் மாயை எதில் வளர்ச்சி பெறுகிறதோ அதன் அடிப்படையாகவும், அம்மாயையினைப் பார்ப்பவராகவும் இருக்கின்றீர். உண்மையில் இவ்வுலகின் மூல காரணர் நீரே ஆவீர்.

பதம் 10.16.49
த்வம் ஹி அஸ்ய ஜன்ம-ஸ்திதி-ஸம்யமான் விபோ
குணைர் அனீஹோ ‘க்ருத-கால-ஸக்தி-த்ருக்
தத்-தத்-ஸ்வபாவான் ப்ரதிபோதயன் ஸத:
ஸமீக்ஷயாமோக-விஹார ஈஹஸே

த்வம்—நீர்; ஹி—உண்மையில்; அஸ்ய—இப்பிரபஞ்சத்தின்; ஜன்ம-ஸ்திதி-ஸம்யமான்—படைத்தல், காத்தல், அழித்தல்; விபோ—ஓ, எல்லாம்வல்ல பகவானே; குணை:—ஜட இயற்கைக் குணங்களினால்; அனீஹ:—பௌதிகச் செயல் எதிலும் ஈடுபடாதிருந்தும்; அக்ருத—ஆதியில்லாத; கால-சக்தி—கால சக்தி; த்ருக்—வைத்திருப்பவர்; தத்-தத்—குணங்கள் ஒவ்வொன்றின்; ஸ்வ-பாவான்—வேறுபட்ட தன்மைகள்; ப்ரதி-போதயன்—விழிக்கச் செய்தல்; ஸத:—அவை ஏற்கெனவே தமது உறக்க நிலையில் இருக்கின்றன; ஸமீக்ஷயா—உமது பார்வையினால்; அமோக-விஹார:—அவரது திருவிளையாடல்கள் குற்றமற்றன; ஈஹஸே—நீர் செயல்படுகின்றீர்.

எல்லாம் வல்ல பகவானே, பௌதிகச் செயலில் நீர் ஈடுபடுவதற்கு எந்தவிதமானக் காரணமும் இல்லை என்றபோதிலும், இப்பிரபஞ்சத்தின் படைத்தல், காத்தல், அழித்தலைச் செய்தற்காக நீர் உமது நித்தியகால சக்தியின்மூலம் செயல்படுகின்றீர். இதனை நீர், படைப்பிற்கு முன்பு துயில்கொண்டிருந்த இயற்கைக் குணங்களின் வேறுபாடுடைய செயல்களை விழித்தெழச் செய்வதின் மூலம் செய்கின்றீர். உமது பார்வையினால் நீர் மிகவும் சரியாக இப்பிரபஞ்சத்தின் அனைத்துச் செயல்களையும் விளையாட்டாக நிறைவேற்றுகின்றீர்

பதம் 10.16.50
தஸ்யைவ தே ‘மூஸ் தனவஸ் த்ரி-லோக்யாம்
ஸாந்தா அஸாந்தா உத மூட-யோனய:
ஸாந்தா: ப்ரியாஸ் தே ஹி அதுனாவிதும் ஸ்தாம்
ஸ்தாதுஸ் ச தே சர்ம-பரீப்ஸயே ஹத:

தஸ்ய—அவரது; ஏவ—உண்மையில்; தே—உமது; அமூ:—இலை; தனவ:—பௌதிக உடல்கள்; த்ரி-லோக்யாம்—மூவுலகங்கள் முழுவதிலும்; ஸந்தா:—அமைதி நிலவும் (சத்துவ குணத்தில்); அஸாந்தா:—அமைதி நிலவாது (ரஜோ குணத்தில்); உத—மற்றும்; மூட-யோனய:—அறிவில்லாத ஜந்துக்களில் பிறப்பவர்; ஸாந்தா:—சத்துவ குணத்தில் அமைதியுடையவர்கள்; ப்ரியா:—பிரியமானவர்கள்; தே—உமக்கு; ஹி—நிச்சயமாக; அதுனா—இப்பொழுது; அவிதும்—காப்பதற்கு; ஸதாம்—தெய்வீகப் பக்தர்களின்; ஸ்தாது:—இருக்கின்றவர்கள்; ச—மற்றும்; தே—உமது; தர்ம—அவர்களது சமய தர்மங்கள்; பரீப்ஸயா—காக்கும் விருப்பத்தில்; ஈஹத:—அவர் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றார்.

ஆகையினால் இம்மூவுலகங்களிலும் உள்ள பௌதிக உடல்கள் அனைத்தும் சத்துவ குணத்தில் சாந்தமாக இருப்பவை, ரஜோ குணத்தில் கிளர்ச்சியுடனிருப்பவை, தமோ குணத்தில் அறிவின்றிருப்பவை உமது படைப்புக்களேயாகும். இருந்த போதிலும், சத்துவ குணத்தில் சாந்தமுடைய உடல்களைப் பெற்றிருக்கும் ஆத்மாக்கள், குறிப்பாக உமக்கு மிகவும் பிரியமானவர்கள் ஆவர். அவர்களைக் காப்பதற்கும் அவர்களது சமயதர்மங்களைக் காப்பதற்குமாகவே நீர் இப்போது இப்பூமியில் அவதரித்திருக்கின்றீர்.

பதம் 10.16.51
அபராத: ஸக்ருத் பர்த்ரா ஸோடவ்ய: ஸ்வ-ப்ரஜ க்ருத:
க்ஷந்தும் அர்ஹஸி ஸந்தாத்மன் மூடஸ்ய த்வாம் அஜானத:

அபாரத:—அபராதம் (குற்றம்); ஸக்ருத்—ஒரு தடவை; பர்த்ரா—ஆசிரியனால்; ஸோடவ்ய:—பொறுத்துக்கொள்ள வேண்டும்; ஸ்வ-ப்ரஜா—உமது குடிமகனால்; க்ருத:—செய்யப்பட்ட; க்ஷந்தும்—பொறுப்பதற்கு; அர்ஹஸி—உமக்குப் பொருத்தமுடையதாகும்; ஸாந்த-ஆத்மன்—ஓ, எப்போதும் சாந்தமூர்த்தியாக இருப்பவரே; மூடஸ்ய—மூடன் ஒருவனின்; த்வாம்—நீர்; அஜானத:—அறிந்து கொள்ளாதவனை.

குறைந்தபட்சம் ஒரு தடவை, ஓர் ஆசிரியன் தனது குழந்தை அல்லாத மாணவனின் குற்றத்தைப் பொறுத்துக் கொள்ளல் வேண்டும். ஆதலினால் ஓ, பரம சாந்த ஆத்மாவே, நீர் யார் என்பதை அறிந்து கொள்ளாத எமது மூடக் கணவனை நீர் மன்னித்தருள வேண்டும்.

பதம் 10.16.52
அனுக்ருஹ்ணீஷ்வ பகவான் ப்ராணாம்ஸ் த்யஜதி பன்னக:
ஸ்த்ரீணாம் ந: ஸாது ஸோச்யானாம் பதி: ப்ராண: ப்ரதீயதாம்

அனுக்ருஹ்ணீஷ்வ—அனுக்கிரஹம் புரிவீராக; பகவான்—ஓ, பரம புருஷ பகவானே; ப்ராணாம்—அவனது உயிர்; த்யஜதி—விட்டுவிடுதல்; பன்னக:—நாகம்; ஸ்த்ரீணாம்—பெண்களுக்கு; ந:—எமது; ஸாது-ஸோச்யானாம்—தெய்வீக மகான்களின் இரக்கத்திற்குரியோர்; பதி:—கணவன்; ப்ராண:—உயிர்; ப்ரதீயதாம்—திரும்ப அளித்தருள்க.

ஒ, பரமபுருஷ பகவானே, அருள் புரிவீராக; எம்மைப் போன்ற பெண்களிடம் இரக்கம் காட்டுவது மகான்களுக்கே உரியதாகும். நாகமான இக்காளிங்கன் தனது உயிரை இழப்பதற்கு இருந்தான். எமது உயிர் மற்றும் ஆத்மாவாக விளங்கும் எமது கணவனை எம்மிடம் திருப்பி அளிப்பீராக.

பதம் 10.16.53
விதேஹி தே கிங்கரீணாம் அனுஷ்டேயம் தவாஜ்ஞயா
யச் ச்ரத்தயானுதிஷ்டன் வை முச்யதே ஸர்வதோ பயாத்

விதேஹி—கட்டளையிடுவீராக; தே—உமது; கிங்கரீணாம்—பணிப் பெண்களால்; அனுஷ்டேயம்—என்ன செய்யவேண்டும்; தவ—உமது; அஜ்ஞயா—ஆக்ஞையால் (கட்டளையால்); யத்—இது; ஸ்ரத்தயா—நம்பிக்கையுடன்; அனுதிஷ்டன்—செய்தல்; வை—நிச்சயமாக; முச்யதே—ஒருவன் விடுதலையடைகிறான்; ஸர்வத:—அனைத்து; பயாத்—பயங்களிலிருந்தும்.

உமது பணிப்பெண்களாகிய நாங்கள் என்ன செய்தல் வேண்டும் என்பதை எமக்கு உரைப்பீராக. உமது ஆணையை எவன் நம்பிக்கையுடன் நிறைவேற்றுகின்றானோ, அவன் தனது அனைத்து அச்சங்களிலிருந்தும் தானே விடுதலை பெறுகின்றான்.

பதம் 10.16.54
ஸ்ரீ-ஸுக உவாச
இத்தம் ஸ நாக-பத்னீபிர் பகவான் ஸமபிஷ்டுத:
மூர்ச்சிதம் பக்ன-ஸிரஸம் விஸஸர்ஜாங்க்ரி-குட்டனை:

ஸ்ரீ-ஸுக: உவாச—ஸ்ரீ சுகதேவகோஸ்வாமி கூறினார்; இத்தம்—இவ்வாறு; ஸ:—இவர், பகவான் கிருஷ்ணர்; நாக-பத்னீபி:—காளிங்கனின் மனைவியரால்; பகவான்—முழுமுதற்கடவுள்; ஸமபிஷ்டுதே:—முழுவதும் போற்றப்பட்டு; மூர்ச்சிதம்—மூர்ச்சையுற்றிருந்த; பக்ன-ஸிரஸம்—அவனது தலைகள் நொறுங்கியிருந்தன; விஸஸர்ஜ—அவர் விடுவித்தார்; அங்க்ரி-குட்டனை:—அவரது கால்களின் மிதியினால்.

சுகதேவகோஸ்வாமி கூறினார்: இவ்வாறு நாகபத்தினியரால் போற்றப்பட்டவுடன் முழுமுதற்கடவுள், தமது திருவடித் தாமரைகளால் மிதித்ததினால் நொறுங்கிப் போன தலைகளுடன் உணர்வின்றி வீழ்ந்திருந்த காளிங்கனை விடுவித்தார்.

பதம் 10.16.55
ப்ரதிலப்தேந்த்ரிய-ப்ராண: காளிய: ஸங்கைர் ஹரிம்
க்ருச்ச்ராத் ஸமுச்ச்வஸன் தீன: க்ருஷ்ணம் ப்ராஹ க்ருதாஞ்ஜலி:

ப்ரதிலப்த—மீண்டும் பெற்று; இந்த்ரிய—அவனது புலன்களின் செயல்களை; ப்ராண:—மற்றும் அவனது உயிர்சக்தியை; காளிய:—காளிங்கன்; ஸங்கை:—படிப்படியாக; ஹரிம்—முழுமுதற்கடவுளுக்கு; க்ருச்ச்ராத்—சிரத்துடன்; ஸமுச்ச்வஸன்—பெருமூச்சுவிட்டபடி; தீன:—தீனன்; க்ருஷ்ணம்—பகவான் கிருஷ்ணருக்கு; ப்ராஹ—கூறினான்; க்ருத-அஞ்ஜலி:—மிகவும் பணிவுடன்.

காளிங்கன் மெதுவாகத் தனது உயிர்ச்சக்தியையும் புலன்களின் செயல்களையும் திரும்பப் பெற்றான். பிறகு மிக்க சிரமத்துடனும், வேதனையுடனும் பெருமூச்சுவிட்டபடியே இரங்கத்தக்க அக்காளிங்கன் முழுமுதற்கடவுளிடம், மிகுந்த பணிவுடன் கூறினான்.

பதம் 10.16.56
காளிய உவாச
வயம் கலா: ஸஹோத்பத்த்யா தாமஸா தீர்க-மன்யவ:
ஸ்வபாவோ துஸ்த்யஜோ நாத லோகானாம் யத் அஸத்-க்ரஹ:

காளிய உவாச—காளிங்கன் கூறினான்; வயம்—நாங்கள்; கலா:—துவேஷம்; ஸஹ-உத்பத்த்யா—எமது பிறப்பினால்; தாமஸா:—தமோ-குணத்தின்; தீர்க-மன்யவ—எப்போதும் சினமுடையவர்களாக இருக்கின்றோம்; ஸ்வபாவ—ஒருவனது மனோ இயற்கை; துஸ்த்யஜ:—விடுவதற்கு மிகவும் கடினமானதாகும்; நாத—ஓ, நாதனே; லோகானாம்—சாதாரணமானவர்களுக்கு; யத்—இதன் காரணமாக; அஸத்—தூய்மையற்ற பொய்ப் பொருளின்; க்ரஹ:—ஏற்றுக் கொள்கிறேன்.

காளிங்கன் கூறினான்: பாம்பாகப் பிறந்த காரணத்தினால் நாங்கள் துவேஷமும், அறியாமையும், உடையவர்களாகி எப்போதும் சீற்றம் மிக்கவர்களாக இருக்கின்றோம். போற்றுதற்குரிய பகவானே, மக்களுக்குத் தமது இயல்பினை விட்டுவிடுதல் என்பது மிகவும் கடினமான ஒன்றாகும். இந்த இயல்பினாலேயே அவர்கள் பொய்ப் பொருளுடன் தம்மை அடையாளம் காண்கின்றனர்.

பதம் 10.16.57
த்வயா ஸ்ருஷ்டம் இதம் விஸ்வம் தாதர் குண-விஸர்ஜனம்
நானா-ஸ்வபாவ-வீர்யௌஜோ யோனி-பீஜா ஸயாக்ருதி

த்வயா—உம்மால்; ஸ்ருஷ்டம்—படைக்கப்பட்டது; இதம்—இந்த; விஸ்வம்—பிரபஞ்சம்; தாத:—ஓ, பரம படைப்பாளரே; குண—பௌதிகக் குணங்களின்; விஸர்ஜனம்—பல்வகைப் படைப்பு; நானா—பல்வேறு; ஸ்வ-பாவ—தனித்த இயற்கை; வீர்ய—புலன் சக்தியின் வகை; ஓஜ:—உடல்வலிமை; யோனி—கருப்பை; பீஜ—வித்துக்கள்; ஆஸய—மன இயல்புகள்; ஆக்ருதி—வடிவங்கள்.

ஓ, பரம கர்த்தாவே, ஜட இயற்கையின் பல்வகை வேறுபட்ட ஏற்பாடுகளின் மூலம் செய்யப்பட்ட இப்பிரபஞ்சத்தினை நீரே படைக்கின்றீர். இப்படைப்பின் போது நீர் பல்வேறு மனிதர்களையும், உயிர்களையும், புலன் உணர்வுகளையும், உடல் வலிமையினையும், பல்வேறு மனித இயல்புகள் மற்றும் வடிவங்களையுமுடைய தாய், தந்தையரையும் தோற்றுவிக்கின்றீர்.

பதம் 10.16.58
வயம் ச தத்ர பகவன் ஸர்பா ஜாதி-உரு-மன்யவ:
கதம் த்யஜாமஸ் த்வன்-மாயாம் துஸ்த்யஜாம் மோஹிதா: ஸ்வயம்

வயம்—நாங்கள்; ச—மற்றும்; தத்ர—பெளதிகப் படைப்பில்; பகவன்—ஓ, முழுமுதற்கடவுளே; ஸர்பா:—சர்ப்பங்கள்; ஜாதி—உயிரினங்களால்; உரு-மன்யவ:—சினம் அதிகமாகக் கொள்கிறோம்; கதம்—எவ்வாறு; த்யஜாம:—துறத்தல்; த்வத்-மாயாம்—உமது மாயாசக்தி; துஸ்த்யஜாம்—துறப்பதற்கரியது; மோஹிதா:—குழப்படைகிறோம்; ஸ்வயம்—சுயமாக.

ஓ, முழுமுதற்கடவுளே, உமது பெளதிகப் படைப்பிலுள்ள அனைத்து உயிர்களிலும் சர்ப்பங்களாகிய நாங்கள் இயற்கையிலேயே எப்போதும் சினமும் சீற்றமும் மிக்கவர்களாக இருக்கின்றோம். இவ்வாறு துறப்பதற்கரிய உமது மாயாசக்தியால் குழப்பப்படுவதால் எவ்வாறு எங்களால் எமது சுயத்தினை விட்டுவிட இயலும்?

பதம் 10.16.59
பவான் ஹி காரணம் தத்ர ஸர்வ-ஜ்ஞோ ஜகத்-ஈஸ்வர
அனுக்ரஹம் நிக்ரஹம் வா மன்யஸே தத் விதேஹி ந:

பவான்—தாங்கள்; ஹி—நிச்சயமாக; காரணம்—காரணம்; தத்ர—இவ்விஷயத்தில் (மாயையினைத் துறப்பதில்); ஸர்வ-ஜ்ஞ:—எல்லாம் அறிபவர்; ஜகத்-ஈஸ்வர:—பிரபஞ்சத்தின் உச்ச கட்டுப்பாட்டாளர்; அனுக்ரஹம்—அனுக்கிரஹம்; நிக்ரஹம்—தண்டனை; வா—அல்லது; மன்யஸே—நீர் கருதுவது (எதுவாயினும்); தத்—அது; விதேஹி—கொடுத்தாலும்; ந:—எமக்கு.

போற்றுதற்குரிய பகவானே! நீர் இப்பிரபஞ்சத்தின் தலைவர் ஆவீர்; நீரே மாயையிலிருந்து விடுதலை பெறுவதற்கு உண்மையான காரணர் ஆவீர். கருணையாயினும் அல்லது தண்டனையாயினும் நீர் எதனை எமக்கு அளிக்க வேண்டுமென்று விரும்புகின்றீரோ, அதனை அளிப்பீராக.

பதம் 10.16.60
ஸ்ரீ-ஸுக உவாச
இதி ஆகர்ண்ய வச: ப்ரஹ பகவான் கார்ய-மானுஷ:
நாத்ர ஸ்தேயம் த்வயா ஸர்ப ஸமுத்ரம் யாஹி மா சிரம்
ஸ்வ-ஜ்ஞாதி-அபத்ய-தாராட்யோ கோ-ந்ருபிர் புஜ்யதே நாதீ

ஸ்ரீ-ஸுக: உவாச—ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்; இதி—இவ்வாறு; ஆகர்ண்ய—கேட்டு; வச:—இவ்வார்த்தைகளை; ப்ராஹா—பிறகு கூறினார்; பகவான்—முழுமுதற்கடவுள்; கார்ய-மானுஷ:—ஒரு மனிதனைப் போல் நடிக்கும்; ந—இல்லை; அத்ர—இங்கே; ஸ்தேயம்—இருத்தல்; த்வயா—நீ; ஸர்ப்ப—சர்ப்பமாகிய நீ; ஸமுத்ரம்—கடலுக்கு; யாஹி—செல்வாயாக; மா சிரம்—தாமதமின்றி; ஸ்வ—உனக்குரிய; ஜ்ஞாதி—துணைவர்களால்; அபத்ய—குழந்தைகள்; தார—மனைவி; ஆட்ய:—போதுமான துணையுடன்; கோ—பசுக்களால்; நருபி:—மற்றும் மனிதர்கள்; புஜ்யதே—அனுபவிக்கப்பட்டும்; நதி—யமுனை நதி.

சுகதேவ கோஸ்வாமி கூறினார்: காளிங்கனின் வார்த்தைகளைக் கேட்டு மனிதனைப் போல் நடிக்கும் முழுமுதற்கடவுள் கூறினார்: ‘ஓ, நாகமே, இனிமேல் நீ இங்கே இருக்கக் கூடாது. நீ உனது பத்தினியர், குழந்தைகள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கூட்டத்துடன் உடனே சமுத்திரத்திற்குச் செல்வாயாக. இந்த யமுனை நதி பசுக்கள் மற்றும் மனிதர்களுக்குப் பயன்படட்டும்.

பதம் 10.16.61
ய ஏதத் ஸம்ஸ்மரேன் மர்த்யஸ் துப்யம் மத்-அனுஸாஸனம்
கீர்தயனன் உபயோ: ஸந்த்யோர் ந யுஷ்மத் பயம் ஆப்னுயாத்

ய:—யார்; ஏதத்—இந்த; ஸம்ஸ்மரேத்—நினைவுகூர்தல்; மர்த்ய—ஒரு மனிதன்; துப்யம்—உனக்கு; மத்—எனது; அனுஸாஸனம்—கட்டளை; கீர்தயன்—ஜெபித்தல்; உபயோ:—இரண்டையும்; ஸந்த்யோ:—இன்றைய நிகழ்ச்சிகளை; ந—இல்லை; யுஷ்மத்—உன்னிடமிருந்து; பயம்—அச்சம்; ஆப்னுயாத்—அடைகிறான்.

விருந்தாவனத்திலிருந்து சமுத்திரத்திற்கு உன்னைப் போகச் சொன்ன எனது கட்டளையினை நினைவுகூர்ந்தாலும், இன்று நடந்த இந்நிகழ்ச்சியை சூரிய உதயத்திலும், அஸ்தமனத்திலும் பிறருக்கு எடுத்துரைத்தாலும் அம்மனிதன் உனது பயம் நீங்கப்பெறுவான்.

பதம் 10.16.62
யோ ‘ஸ்மின் ஸ்நாத்வாமத்-ஆக்ரீடே
தேவாதீம்ஸ் தர்பயேஜ் ஜலை:
உபோஷ்ய மாம் ஸ்மரன்ன் அர்சேத்
ஸர்வ-பாபை: ப்ரமுச்யதே

ய:—எவனொருவன்; அஸ்மின்—இதில் (யமுனை நதியிலுள்ள காளிங்கனின் குளத்தில்); ஸ்நாத்வா—ஸ்நானம் செய்தல்; மத்-ஆக்ரீடே—எனது லீலை நடைபெற்ற இடம்; தேவ-ஆதீன்—தேவர்கள் மற்றும் வழிபடும் தெய்வங்கள்; தர்பயேத்—சமர்ப்பித்தல்; ஜலை:—நீரினால்; உபோஷ்ய—உபவாசம் இருத்தல்; மாம்—என்னை; ஸ்மரன்—நினைத்து; அர்சேத்—அர்ச்சித்தால்; ஸர்வ-பாபை:—எல்லாப் பாவங்களிலிருந்தும்; ப்ரமுச்யதே—அவன் விடுதலை பெறுகிறான்.

எனது லீலை நடைபெற்ற இந்த இடத்தில் ஒருவன் நீராடி இந்நீரை தேவர்களுக்கும், பிற தெய்வங்களுக்கும் அர்ப்பணித்தாலும் அல்லது அவன் இங்கு உபவாசம் இருந்து, என்னை நினைத்து வழிபட்டாலும் அவன் நிச்சயமாகத் தனது அனைத்துப் பாவங்களிலிருந்தும் விடுதலை பெறுவான்.

பதம் 10.16.63
த்வீபம் ரமணகம் ஹித்வா ஹ்ரதம் ஏதம் உபாஸ்ரித:
யத்-பயாத் ஸ ஸுபர்ணஸ் த்வாம் நாத்யான் மத்-பாத-தாஞ்சிதம்

த்வீபம்—பெரிய தீவு; ரமணகம்—ரமணகம் என்றும் பெயருடையது; ஹித்வா—விட்டு; ஹ்ரதம்—சிறிய குளத்திற்கு; ஏதம்—இந்த; உபாஸ்ரித:—தஞ்சம் புகுதல்; யத்—அவரது; பயாத்—அச்சத்தின் காரணமாக; ஸ:—அது; ஸுபர்ண:—கருடன்; த்வாம்—நீ; ந அத்யாத்—தின்னாது; மத்-பாத—எனது பாதங்களின்; தாஞ்சிதம்—அடையாளம்.

கருடன் மீது கொண்ட அச்சத்தின் காரணமாக, நீ ரமணகத் தீவை விட்டு இக்குளத்தினில் தஞ்சம் புகுந்தாய். இப்போது எனது பாத அடையாளங்கள் உன் தலைகளின் மீது காணப்படுவதினால் கருடன் உன்னைத் தின்பதற்கு முயற்சிக்கமாட்டான்.

பதம் 10.16.64
ஸ்ரீ-ருஷிர் உவாச
முக்தோ பகவதா ராஜன் க்ருஷ்ணேனாத்புத-கர்மணா
தம் பூஜயாம் ஆஸ முதா நாக-பத்ன்யஸ் ச ஸாதரம்

ஸ்ரீ-ருஷி:-உவாச—முனிவர்(சுகதேவர்) கூறினார்; முக்த:—விடுவித்தல்; பகவதா—முழுமுதற்கடவுளினால்; ராஜன்—ஓ, பரீக்ஷித்து-மன்னனே; க்ருஷ்ணேன—பகவான் கிருஷ்ணரால்; அத்புத-கர்மணா—அவரது செயல்கள் அற்புதமானவை; தம்—அவரை; பூஜயாம் ஆஸ—வழிபட்டனர்; முதா—மகிழ்ச்சியுடன்; நாக—நாகத்தின்; பத்ன்ய:—பத்தினியர்; ச—மற்றும்; ஸ-ஆதரம்—பயபக்தியுடன்.

சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்: அன்பிற்குரிய அரசனே, அற்புதச் செயல்கள் செய்யும் முழுமுதற் கடவுளான பகவான் கிருஷ்ணரால் விடுதலை செய்யப்பட்டவுடன் காளிங்கன் தனது பத்தினியருடன் சேர்ந்து அவரை மகிழ்ச்சியுடனும் பயபக்தியுடனும் வழிபட்டான்.

பதங்கள் 10.16.65 – 10.16.67
திவ்யாம்பர-ஸ்ரன்-மணிபி: பரார்த்யைர் அபி பூஷணை:
திவ்ய-கந்தானுலேபைஸ் ச மஹத்யோத்பல-மாலயா

பூஜயித்வா ஜகன்-நாதம் ப்ரஸாத்ய கருட-த்வஜம்
தத: ப்ரீதோ ‘ப்யனுஜ்ஞாத: பரிக்ரம்யாபிவந்தய தம்

ஸ-களத்ர-ஸுஹ்ருத்-புத்ரோ த்வீபம் அப்தேர் ஜகாம ஹ
ததைவ ஸாம்ருத-ஜலா யமுனா நிர்விஷாபவத்
அனுக்ரஹாத் பகவத: க்ரீடா-மானுஷா-ரூபிண:

திவ்ய—திவ்யமான; அம்பர—ஆடையுடன்; ஸ்ரக்—மாலைகள்; மணிபி:—மற்றும் இரத்தினங்கள்; பர-அர்த்யை:—மதிப்புமிகுந்த; அபி—கூட; பூஷணை:—அணிகலன்கள்; திவ்ய—திவ்யமான; கந்த—நறுமண திரவியங்கள்; அனுலேபை:—தைலங்கள்; ச—மற்றும்; மஹத்யா—மகத்துவமான; உத்பல—தாமரை மலர்களின்; மாலயா—மாலையுடன்; பூஜயித்வா—பூஜித்து; ஜகத்-நாதம்—பிரபஞ்ச நாயகர்; ப்ரஜாத்ய—திருப்தியுடன்; கருட-த்வஜம்—கருடக் கொடியுடையவர்; தத:—பிறகு; ப்ரீத:—மகிழ்ச்சியடைந்து; அப்யனுஜ்ஞாத:—அங்கிருந்து செல்வதற்கு விடை கொடுத்தார்; பரிக்ரம்ய—வலம்வந்து: அபிவந்த்ய—வந்தனங்கள் செய்து; தம்—அவருக்கு; ஸ—உடன்; களத்ர—அவனது மனைவியருடன்; ஸுஹ்ருத்—நண்பர்களுடன்; புத்ர:—குழந்தைகளுடன்; த்வீபம்—தீவுக்கு; அப்தே:—கடலில் உள்ள; ஜகாம—அவன் சென்றான்; ஹ—உண்மையில்; ததா-ஏவ—அக்கணமே; ஸ-அம்ருத—அமிர்தம்; ஜலா—அதன் நீர்; யமுனா—யமுனைநதி; நிர்விஷா—விஷத்தன்மை நீங்கியது; அபவத்—அது ஆனது; அனுக்ரஹாத்—அனுக்கிரஹத்தினால்; பகவத:—முழுமுதற் கடவுளின்; க்ரீடா—ஆனந்தமயமான லீலைகளுக்கு; மானுஷ—மனித; ரூபிண:—வடிவத்தில்.

பிரபஞ்ச நாயகரான பகவானுக்கு, நேர்த்தியான ஆடைகள், அணிகலன்கள், இரத்தினங்கள், மதிப்புமிகு ஆபரணங்கள், நறுமணத் திரவியங்கள் மற்றும் தைலங்கள் தாமரை மலர்களினாலான பெரிய மாலை போன்றவற்றை அளித்துக் காளிங்கன் அவரை வழிபட்டான். கருடன் கொடியினையுடைய பகவானை இவ்வாறு மகிழச் செய்த காளிங்கன் மிகுந்த திருப்தியடைந்தான். தான் செல்வதற்குப் பகவானிடம் அனுமதி பெற்றுக் காளிங்கன் அவரை வலம் வந்து வணங்கினான். பிறகு தனது மனைவியர், மக்கள், சுற்றத்தினருடன் அவன் கடலில் உள்ள தனது தீவிற்குத் திரும்பச் சென்றான். காளிங்கன் அங்கிருந்து சென்றவுடனேயே யமுனை நதியின் நீரில் கலந்திருந்த நஞ்சு நீங்கப் பெற்று அது அமிர்தமாக மாறியது. இந்த அதிசயம், மனித வடிவில் லீலைகள் புரிவதற்காகத் தோன்றிய முழுமுதற்கடவுளின் கருணையினால் நிகழ்ந்ததாகும்.


ஸ்ரீமத் பாகவதம், பத்தாம் காண்டத்தின் “கிருஷ்ணர் காளிங்கனைத் தண்டித்தல்” எனும் தலைப்பை கொண்ட பதினாறாம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றது.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare