அத்தியாயம் – 16
கிருஷ்ணர் காளிங்கனைத் தண்டித்தல்
பதம் 10.16.1 : சுகதேவ கோஸ்வாமி கூறினார்: முழுமுதற் கடவுளான பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் யமுனை நதி காளிங்கன் என்னும் கருநாகத்தின் விஷத்தினால் கெட்டுப் போயிருப்பதைக் கண்டார். அதனைத் தூய்மை செய்ய விரும்பிய பகவான் அச்சர்ப்பத்தினை அங்கிருந்து விரட்டியடித்தார்.
பதம் 10.16.2 : பரீக்ஷித்து மன்னர் கேட்டார்: “ஓ, கற்றறிந்த அந்தணரே, முழுமுதற் கடவுள் எவ்வாறு ஆழங்காண முடியாத யமுனை நதியின் அடியில் இருந்த காளிங்கன் என்னும் நாகத்தினை அடக்கினார் என்பதையும், அக்காளிங்கன் எவ்வாறு பற்பல யுகங்கள் யமுனையில் வசித்து வந்தான் என்பதையும் அருள் கூர்ந்து விளக்குவீராக.”
பதம் 10.16.3 : ஓ, அந்தணரே, எல்லையற்றவரான முழுமுதற் கடவுள் அவரது சுய விருப்பத்திற்கேற்ப சுதந்திரமாகச் செயல்படுகின்றார். விருந்தாவனத்தில் ஓர் ஆயர்குலச் சிறுவனாக அவர் நடத்திய பெருந்தகைமையுடைய லீலாம்ருதத்தினை அருந்திய எவனொருவன் திருப்தியடையக் கூடும்?
பதம் 10.16.4 : ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்: காளிந்தி நதியின் (யமுனை) அருகில் இருந்த குளத்தில் காளிங்கன் என்னும் நாகம் வசித்து வந்தது. அதன் கொடிய விஷம் தொடர்ந்து நீரை உஷ்ணப்படுத்திக் கொதிக்கச் செய்து கொண்டிருந்தது. அக்குளத்திற்கு மேலே பறந்து செல்லும் பறவைகள் எல்லாம் நீரிலிருந்து மேலே பறந்த நச்சு ஆவியில் சிக்குண்டு இறந்து வீழ்ந்தன.
பதம் 10.16.5 : நச்சு நீர்ப் பொய்கையின் நீர்த்துளிகளைச் சுமந்து கொண்டு காற்று கரைக்கு வரும். அக்காற்று பட்டமாத்திரத்திலேயே கரையிலுள்ள தாவரங்களும், பிற உயிர்களும் உடனே மாண்டுவிடும்.
பதம் 10.16.6 : பகவான் கிருஷ்ணர், காளிங்கன் எவ்வாறு தனது வீரியமிக்க விஷத்தினால் யமுனை நதியினைக் கெடச் செய்திருந்தான் என்பதைக் கண்டார். மேலும் ஸ்ரீ கிருஷ்ணர் கொடிய அசுரர்களை அடக்க வேண்டுமென்பதற்காகவே ஆன்மீக உலகிலிருந்து பூமிக்கு இறங்கி வந்தவராவார். அதனால் பகவான் ஓங்கி வளர்ந்திருந்த ஒரு கதம்ப மரத்தின் உச்சியில் தாவி ஏறி அவனோடு சண்டை செய்வதற்குத் தயாரானார். அவர் தனது அரைக் கச்சையினை இறுக்கிக் கட்டினார். பின்னர் தன் கைகளைத் தட்டிக்கொண்டு நச்சு நீரினுள் குதித்தார்.
பதம் 10.16.7 : காளிங்கன் இருக்கும் குளத்தினுள் முழுமுதற் கடவுள் இறங்கிய பொழுது, அங்கிருந்த பாம்புகள் பயங்கரமாகச் சீறி, மேலும் மேலும் விஷத்தைக் கக்கின. பகவான் குளத்தில் குதித்த வேகத்தின் காரணமாக அக்குளம் எல்லாப் பக்கங்களிலும் பொங்கிப் பெருக்கு எடுத்தது. மேலும் நஞ்சு கலந்த, அஞ்சத்தக்க அலைகள் நாலா பக்கங்களிலும் நூறு பாக தூரத்திற்குப் பெருக்கெடுத்து ஓடின. எனினும் பரமபுருஷ பகவான் அளவற்ற ஆற்றலுடையவர் ஆதலினால் அவரது செயல் ஒன்றும் வியப்பிற்குரியதல்ல.
பதம் 10.16.8 : காளிங்கனது குளத்தில் பகவான் கிருஷ்ணர் வலிமை மிக்க பெரிய காட்டு யானையைப் போல் தனது கரங்களைச் சுழற்றியபடி நீரில் பல்வேறு ஒலிகள் எழும் வண்ணம் விளையாடினார். இவ்வொலிகளைக் கேட்ட காளிங்கன் தனது குளத்தினுள் யாரோ அத்துமீறி நுழைந்திருப்பதை அறிந்து கொண்டான். இதனைப் பொறுத்துக் கொள்ளாத அவன் உடனே எழுந்து வந்தான்.
பதம் 10.16.9 : ஸ்ரீ கிருஷ்ணரின் கண்ணைக் கவரும் மஞ்சள் பட்டாடையினையும், வெண்மேகத்தினைப் போன்று மின்னும் அவர் எழில் மேனியினையும், அவரது மார்பிலுள்ள ஸ்ரீ வத்ஸ சின்னத்தையும், அவரது திருமுகத்தில் அழகிய புன்னகை மலர்ந்திருப்பதையும், உள்ளிட்ட அவரது விந்தைமிகு தோற்றத்தைக் கண்ட பின்பும் காளிங்கன் பெரும் சீற்றத்துடன் அவரது மார்பில் கடித்துத் தனது பாம்பு உடலினால் பகவானது உடலினை முழுவதும் சுற்றினான்.
பதம் 10.16.10 : கிருஷ்ணரைத் தமது உயிர்நண்பனாக ஏற்றுக்கொண்ட ஆயர்குலத்தைச் சேர்ந்தோர், பாம்பின் பிடியில் சிக்கி அவர் அசைவற்று இருப்பதைக் கண்டு மிகுந்த துயரமடைந்தனர். அவர்கள் கிருஷ்ணருக்கு-தம்மையும், தமது குடும்பத்தையும், தமது செல்வத்தையும், தமது மனைவியரையும், தமது அனைத்து இன்பங்களையும் அர்ப்பணித்திருந்தனர். காளிங்கனின் பிடியில் பகவான் சிக்கிக் கொண்டிருப்பதைக் கண்டவுடன் சோகத்தினாலும், துயரத்தினாலும், அச்சத்தினாலும் அவர்களது புத்தி பேதலித்தது. இதன் காரணமாக அவர்கள் மூர்ச்சையடைந்து நிலத்தில் வீழ்ந்தனர்.
பதம் 10.16.11 : பசுக்களும், காளைகளும், பெட்டைக் கன்றுகளும் கிருஷ்ணரைக் கண்டு மிகுந்த துயரமுடன் ஓலமிட்டழுதன. அவர் மீது தமது பார்வையை நிலைநிறுத்தி அச்சமுடன் அசைவற்று நின்றன. அவை பெருங்குரலெடுத்து அழுவதற்குத் தயாரான போதிலும், அதிர்ச்சியினால் கண்களிலிருந்து கண்ணீர் வழிய நின்றன.
பதம் 10.16.12 : விருந்தாவனத்தில் அச்சத்திற்குரிய மூன்று வகையான தீ நிமித்தங்கள் தோன்றின. இம்மூன்று தீ நிமித்தங்களும், மண்ணிலும், விண்ணிலும், வாழும் உயிரினங்களின் உடல்களிலும் தோன்றின. இவை உடனே நிகழப்போகும் அபாயத்தினை அறிவித்தன.
பதங்கள் 10.16.13 – 10.16.15 : தீ நிமித்தங்களைக் கண்ட நந்த மகாராஜாவும் ஆயர்குலத்தில் உள்ளவர்களும், கிருஷ்ணர் தனது அண்ணன் பலராமரின் துணையின்றி பசுக்களை மேய்ச்சல் நிலத்திற்கு இட்டுச் சென்றிருப்பதை அறிந்து மிகுந்த அச்சங் கொண்டனர். கிருஷ்ணரையே தமது உயிராகக் கருதி, அவரிடத்துத் தமது மனங்களை அர்ப்பணித்திருந்த காரணத்தினால், அவரது சக்தியும், வளமும் எப்படிப்பட்டது என்பதை அவர்கள் அறியாதிருந்தனர். தோன்றிய தீ நிமித்தங்களிலிருந்து கிருஷ்ணர் மரணமடைந்திருக்க வேண்டுமென்று அவர்கள் முடிவு செய்தனர். இதன் காரணமாக அவர்கள் துயரமும், சோகமும், அச்சமும் அடைந்தனர். விருந்தாவனத்தில் உள்ள குழந்தைகள் உள்ளிட்ட பெண்கள், பெரியவர்கள் அனைவரும், ஒரு பசு தன் கன்றின் மீது எத்துணைப் பாசம் வைத்திருக்குமோ, அத்துணைப் பாசம் வைத்திருந்தனர். அதனால் அந்த ஏழை எளிய மக்கள் அனைவரும் கிருஷ்ணரைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும் என்னும் ஆவலில் கிராமத்தை விட்டு விரைவாக வெளியேறினர்.
பதம் 10.16.16 : யோக ஸித்திகள் அனைத்திற்கும் தலைவரான பரமபுருஷ பகவான் பலராமர், தனது தம்பியின் அசாதாரணமான சக்தியினை நன்கு அறிந்தவர் ஆதலினால், விருந்தாவனத்திலுள்ளோர் துன்பமிக்கவர்களாக ஓடி வருவதைக் கண்டு, புன்னகை புரிந்து, அவர்களிடம், ஒன்றும் நடக்கவில்லை அஞ்ச வேண்டாம் என்று கூறினார்.
பதம் 10.16.17 : முழுமுதற் கடவுளுக்கு உரிய அடையாளங்களுடன் கூடிய காலடித் தடங்களைப் பின்பற்றி அவர்கள் தங்கள் உயிரினும் இனிய கிருஷ்ணரைத் தேடிக்கொண்டு யமுனை நதியின் கரையினை நோக்கி விரைந்தனர்.
பதம் 10.16.18 : ஆயர்குலம் முழுவதற்கும் தலைவரான பகவான் கிருஷ்ணரின் காலடித் தடத்தில் தாமரை மலர், வாற்கோதுமை மணி, அங்குசம், வஸ்ராயுதம், கொடி போன்ற, குறிகள் காணப்பட்டன. அன்பிற்குரிய பரீக்ஷித்து மன்னனே, பசுக்களின் காலடித் தடங்களோடு, அவரது காலடித் தடமும் இருப்பதைக் கண்ட விருந்தாவன வாசிகள் அவசர அவசரமாக விரைந்து சென்றனர்.
பதம் 10.16.19 : அவர்கள் அனைவரும் யமுனை நதிக்கரையினை விரைந்து அடைந்தவுடன், அங்குள்ள குளத்தில் கிருஷ்ணர் ஆடாது அசையாது ஒரு கருநாகத்தின் உடலில் சிக்கிக் கொண்டிருப்பதைக் கண்டனர். அவர்கள் மேலும், ஆயர்குலச் சிறுவர்கள் மயங்கிக் கிடப்பதையும், பசுக்களெல்லாம் கிருஷ்ணரின் நிலைகண்டு கதறி கொண்டிருப்பதையும் பார்த்தனர். அழுது இவற்றையெல்லாம் பார்த்த விருந்தாவனத்தைச் சேர்ந்தோர் கவலையில் மூழ்கித் துன்பத்தில் ஆழ்ந்தனர்.
பதம் 10.16.20 : தமது மனங்களை பரமபுருஷ பகவானான கிருஷ்ணரிடம் பறிகொடுத்த இளங்கோபியர்கள், இப்போது அவர் ஒரு நாகத்தின் பிடியில் சிக்கிக் கொண்டிருப்பதைக் கண்டனர். அவரது இனிய உறவினையும், அழகிய புன்னகையினையும் அவரது மயக்கும் வார்த்தைகளையும் அவர்கள் எண்ணிப் பார்த்துத் தம் மனதில் மருகினர். துன்பத் தீயினால் சுட்டெரிக்கப்பட்ட அவர்கள் இப்பிரபஞ்சம் முழுவதுமே சூனியமாகி விட்டதைக் கண்டனர்.
பதம் 10.16.21 : முதிய கோபியர்களும், கிருஷ்ணரின் அன்னையைப் போன்று பெருந்துன்பத்தில் ஆழ்ந்து தமது விழிகளிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்து ஓட நின்றபோதிலும் அவர்கள் யசோதையினைத் தமது கரங்களால் நன்கு தாங்கிப் பிடித்துக் கொண்டனர். அவளது உணர்ச்சியெல்லாம் ஒட்டுமொத்தமாக அவளது மைந்தன் மீதே நிலை பெற்றிருந்தது. தமது விழிகளை கிருஷ்ணர் மீது பதித்த வண்ணம் உயிரற்ற உடல்களைப் போல் நின்று கொண்டிருந்த அப்பெண்கள் விரஜத்தின் உயிராக விளங்கிய பகவானின் லீலைகளை மனதில் நினைத்துப் பார்த்துக் கொண்டனர்.
பதம் 10.16.22 : தமது உயிரையே கிருஷ்ணரிடத்து அர்ப்பணித்துவிட்ட நந்த மகாராஜாவும், ஆயர்குலப் பெரியவர்களும், நாகம் இருக்கும் குளத்தில் இறங்குவதைப் பகவான் பலராமர் கண்டார். முழுமுதற் கடவுளான பகவான் பலராமருக்கு பகவான் கிருஷ்ணரின் சக்தி எத்தகையது என்பது நன்கு தெரியுமாதலால் அவர் அவர்களை இறங்கவிடாது தடுத்து நிறுத்தினார்.
பதம் 10.16.23 : சாதாரண அழியக்கூடிய மனிதனைப் போல் பாவனை செய்து பகவான் சிறிது நேரம் நாகத்தின் பிடியில் சிக்கிக் கொண்டிருந்தார். ஆனால், தன்மீது கொண்ட அன்பினாலும், அவர்களது வாழ்வின் ஒரே லட்சியமாகவும், புகலிடமாகவும் அவர்கள் தன்னையே நம்பி இருப்பதினாலும், தனது நிலை கண்டு கோகுலத்தின் பெண்களும், குழந்தைகளும், பெரியவர்களும் வருந்துவதைக் கண்ட பகவான் உடனே காளிங்கனின் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு எழுந்து நின்றார்.
பதம் 10.16.24 : பகவான் கிருஷ்ணரின் உடல் விரிவடைந்த காரணத்தினால் காளிங்கன் உடல் மிகுந்த வேதனையுற்றது. அதனால் அது பகவானைத் தனது பிடியிலிருந்து விடுவித்தது. மிகுந்த சீற்றத்துடன் பெருமூச்சு விட்டபடி அது தனது படங்களை விரித்து நின்றது. அதன் நாசித்துவாரங்கள் விஷத்தினை உற்பத்தி செய்யும் பாத்திரங்கள் போல் தோன்றின. அதன் விழிகள் தீப்பந்தங்களைப் போல் கொழுந்து விட்டு எரிந்தது. இவ்வாறு அது பகவானை சினங் கொண்டு பார்த்தது.
பதம் 10.16.25 : மீண்டும் மீண்டும் காளிங்கன் தனது பிளவுண்ட நாக்குகளால் தனது உதடுகளை நக்கிக் கொண்டு, கிருஷ்ணரை விஷாக்னி நிறைந்த பார்வையுடன் சினத்துடன் பார்த்தது. ஆனால் கருடன், பாம்புடன் விளையாடுவது போல் கிருஷ்ணர் காளிங்கனைச் சுற்றிவந்து விளையாடிக் கொண்டிருந்தார். காளிங்கனும் பகவானைக் கொத்துவதற்குரிய சந்தர்ப்பத்தினை எதிர்பார்த்து அசைந்து கொண்டிருந்தது.
பதம் 10.16.26 : எல்லாவற்றிற்கும் ஆதிமூலமான பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் காளிங்கனைச் சுற்றிச் சுற்றி வந்து முதலில் அதனை பலமிழக்கச் செய்தார். பின்னர் அவர், அதன் தோள்களைக் கைகளினால் பற்றிக் குனியச் செய்து அதன் அகன்ற தலைகளின் மீது ஏறிக் கொண்டார். இவ்வாறு அனைத்துக் கலைகளுக்கும் ஆதிகுருவாக விளங்கும் பகவான் கிருஷ்ணர் அதன் தலைகளின் மீது நடனமாடத் தொடங்கினார். அதன் தலைகளிலிருந்த மதிப்புமிக்க நாகரத்தினக் கற்களின் மீது பட்டதினால் அவரது தாமரைத் திருவடிகள் மேலும் அதிகமாகச் சிவந்தன.
பதம் 10.16.27 : பகவான் நாட்டியமாடுவதைக் கண்டவுடன் தேவலோகத்தைச் சேர்ந்த கந்தர்வர்களும், சித்தர்களும், முனிவர்களும், சாரணர்களும், தேவர்களின் துணைவியரும் உடனடியாக அங்கு விரைந்து வந்தனர். மிக்க மகிழ்ச்சியுடன் அவர்களும், தமது மிருதங்கம், பாணவம், ஆனகம் போன்ற இசைக் கருவிகளிலிருந்து பகவானது நாட்டியத்திற்கேற்ப இசை எழுப்பினர். அவர்கள் தமது கீதங்களையும், மலர்களையும், பிரார்த்தனைகளையும் அர்ப்பணித்தனர்.
பதம் 10.16.28 : அன்பிற்குரிய பரீக்ஷித்து மன்னனே, காளிங்க நாகத்தில் 101 தலைகள் இருந்தன. அவற்றில் ஒன்று தலை வணங்காவிட்டாலும் கூட, தவறு செய்யும் கொடியவர்களைத் தண்டிக்கும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், வணங்காத அத்தலையினைத் தனது கால்களினால் மிதித்து ஒடித்தார். மரணவேதனை அனுபவித்த காளிங்கன் தனது வாய்களிலிருந்தும், நாசிகளிலிருந்தும் பயங்கரமாக இரத்தம் கக்கியது. இவ்வாறு அந்நாகம் தாங்க முடியாத துன்பமும், துயரமும் அடைந்தது.
பதம் 10.16.29 : தனது கண்களிலிருந்து விஷக் கழிவினைச் சிந்திய காளிங்க நாகம் எப்போதாவது தனது தலையினைத் தூக்கி மிகுந்த சினத்துடன் பெருமூச்சு விடும். பின்னர் பகவான் அத்தலையின் மீது நடனமாடி தனது பாதங்களினால் மிதித்து அத்தலையினைப் பணியச் செய்வார். ஆதி முதல் கடவுளின் மீது மலர்மாரி பெய்து தேவர்கள் அவர் செய்யும் ஒவ்வொரு செயலும் தமக்குக் கிடைத்த அரிய வாய்ப்பு என்று கருதி வணங்கினர்.
பதம் 10.16.30 : அன்பார்ந்த பரீக்ஷித்து மன்னனே, பகவான் கிருஷ்ணரின் விந்தைமிகு, ஆற்றல்மிகு தாண்டவக் கூத்தினால் மிதியுண்ட காளிங்கனின் ஆயிரம் தலைகளும் உடைந்தன. அதன் பின்னர் அதன் வாய்களிலிருந்து ஏராளமான இரத்தம் வெளிப்பட்டது. இறுதியில் அது, ஸ்ரீ கிருஷ்ணரே ஆதி முழுமுதற் கடவுளும், அசையும், அசையா உயிர்கள் அனைத்தின் ஆன்மீக குருவான ஸ்ரீ நாராயணர் என்பதை அறிந்து கொண்டது. இவ்வாறு காளிங்கன் பகவானைத் தனது மனதினுள் எண்ணித் தஞ்சமடைந்தது.
பதம் 10.16.31 : காளிங்கனின் பத்தினியர், இப்பிரபஞ்சத்தையே தன் வயிற்றினுள் சுமந்துகொண்டிருக்கும் பகவான் கிருஷ்ணரின் பாரம் தாங்காது காளிங்கன் சோர்வடைந்ததையும், கிருஷ்ணரின் குதிங்கால்களின் மிதியினால் எவ்வாறு காளிங்கனின் குடை போன்ற படங்கள் நொறுங்கின என்பதையும் கண்டனர். இதனால் அவர்கள் பெருந் துயருற்றனர். ஆடை குலைய, அணிகலன்கள் சிதற, தலைவிரி கோலமாக அவர்கள் முழுமுதற் கடவுளை அணுகினர்.
பதம் 10.16.32 : மிகவும் மனம் வருந்திய அச்சாதுப் பெண்கள், உயிர்க்குலத்தின் தலைவரான பகவான் முன்பு தமது குழந்தைகளை வைத்து அவரை வீழ்ந்து வணங்கினர். அவர்கள் இறுதி விடுதலையளிப்பவரான பகவான் தமது கணவருக்கு விடுதலையும் அடைக்கலமும் அளிக்க வேண்டுமென்று விரும்பினர். அதனால் அவர்கள் கூப்பிய கரங்களுடன் பகவானை அணுகி அவரது தாள் பணிந்தனர்.
பதம் 10.16.33 : காளிங்கனின் மனைவியர் கூறினர்: இக்குற்றவாளிக்குத் தாங்கள் அளித்த தண்டனை நியாயமானதே. துஷ்டர்களையும், கொடியவர்களையும் அழிப்பதற்கே நீர் இப்பூலகில் அவதரித்திருக்கின்றீர். உமது பகைவர்களிடத்தும், உமது சொந்தப் புதல்வர்களிடத்தும் நீர் சமபார்வை உடையவர். வாழ்கின்ற ஓர் உயிருக்கு நீர் தண்டனை அளிக்கின்றீர் என்றால் அது அவனது நன்மைக்கே என்பதை நீர் நன்கறிவீர்.
பதம் 10.16.34 : நீர் துஷ்டர்களுக்கு அளிக்கும் தண்டனையின் மூலம் அவர்களது மாசினை அகற்றுகின்றீர், அதனால் இப்போது நீர் செய்திருப்பது எங்களுக்கு உண்மையில் அனுக்கிரஹமேயாகும். உண்மையில் பந்தப்பட்ட ஆத்மாவாக இருக்கின்ற காரணத்தினால், எங்கள் கணவன் ஒரு பாம்பின் உடலைப் பெற்றுக் கொடிய பாவியாக விளங்குகின்றான். அவனிடத்து நீர் கொண்ட சினமானது உண்மையில் உமது கருணையாகவே கருதப்படுகிறது.
பதம் 10.16.35 : தனது மனதில் கர்வமின்றி, பிறரிடத்து மரியாதையுடன் எமது கணவன் அவனது முந்தைய பிறவிகளில் முறையாகவும், எச்சரிக்கையுடனும் தவங்கள் செய்திருந்தானா? அதனால் அவன் மீது நீர் மகிழ்ச்சியடைந்தீரா? அல்லது அவன் தனது முந்தையப் பிறவிகளில் எல்லா உயிர்களிடத்தும் கருணை கொண்டு தனது சமய தர்மங்களை எச்சரிக்கையுடன் நிறைவேற்றினானா, அதனால் உயிர்கட்கெல்லாம் உயிராக விளங்கும் நீர், இப்போது அவன் மீது நீர் திருப்தியடைந்திருக்கின்றீரா?
பதம் 10.16.36 : ஓ, பகவானே, உமது தாமரைத் திருவடிகளின் தூசி தனது தலையில் படுதற்கு நாகமாகிய இக்காளிங்கன் என்ன தவம் செய்தானென்று நாங்கள் அறியோம். இதற்காகத்தானே அதிர்ஷ்ட தேவதையாகிய இலட்சுமிதேவி தனது இச்சைகள் அனைத்தையும் துறந்து காலாகாலங்களுக்கும் தவங்கள் மற்றும் விரதங்களைப் பின்பற்றுகின்றாள்.
பதம் 10.16.37 : உமது தாமரைத் திருவடிகளின் தூசியினை அடையப் பெற்றோர் சொர்க்கத்தின் ஆட்சியோ, வானளவு அதிகாரமோ, பிரம்மதேவனின் பதவியோ, மண்ணுலக ஆட்சியோ விரும்புவதில்லை. அவர்கள் யோக சாதனைகளின் நிறைவினையோ அல்லது விடுதலையினையோ கூட விரும்புவதில்லை.
பதம் 10.16.38 : ஓ, பகவானே, நாகங்களின் அரசனான இக்காளிங்கன் அறியாமைக் குணத்தில் பிறந்து, விரோத உணர்வோடு இருந்த போதிலும் கூட, பிறரால் எய்துவதற்கு அரிய ஒன்றினை அவன் எய்தியிருக்கின்றான். ஆசைகள் நிறைந்தவர்களாக, ஜனன மரணப் பிறப்புக்களில் மீண்டும் மீண்டும் சுழலும் உடல் பெற்ற ஆத்மாக்கள், உமது தாமரைத் திருவடிகளின் தூசியினை அடைவதின் மூலம் தமது கண் முன்னே அனைத்து வளங்களும் வெளிப்படக் காண்பர்.
பதம் 10.16.39 : முழுமுதற் கடவுளாகிய உமக்கு எமது வந்தனங்கள் உரியதாகும். உயிர்களின் இதயங்களில் பரமாத்மாவாக வீற்றிருந்த போதிலும் நீர் எங்கும் நிறைந்தவராவீர். படைக்கப்பட்ட உலகியல் பொருட்களின் ஆதி அடைக்கலமாக நீர் இருந்தபோதிலும், அவற்றைப் படைப்பதற்கு முன்பே நீர் இருக்கின்றீர். எல்லாவற்றிற்கும் காரணமாக நீர் இருந்த போதிலும், பரமாத்மாவான நீர், உலகியற் காரணம் மற்றும் காரியம் இரண்டிற்கும் மேலானவராக இருக்கின்றீர்.
பதம் 10.16.40 : அனைத்து உன்னத உணர்வுகள் மற்றும் ஆற்றலுக்கு உறைவிடமாக விளங்குபவரும், அளவற்ற சக்திகளை உடையவருமான முழுமெய்ப்பொருளே! உமக்கு எங்கள் வந்தனங்கள் உரியதாகுக. பெளதிகக் குணங்கள் மற்றும் மாற்றங்களிலிருந்து முற்றிலும் விடுதலை பெற்றவராக நீர் இருந்தபோதிலும் ஜட இயற்கையின் பரம நடத்துனராக நீரே இருக்கின்றீர்.
பதம் 10.16.41 : காலனாகவும், காலத்தின் அடைக்கலமாகவும், காலத்தின் அனைத்துப் படிநிலைகளுக்கும் சாட்சியாகவும் இருப்பவரான உமக்கு வந்தனங்கள். நீரே பிரபஞ்சமாகவும், அதிலிருந்து தனித்து அதனைக் காண்பவராகவும் இருக்கின்றீர். நீரே அதனைப் படைப்பவராகவும், அதன் காரணங்கள் அனைத்தின் முழுமையாகவும் இருக்கின்றீர்.
பதங்கள் 10.16.42 – 10.16.43 : பரு உலகப் பூதங்களின் இறுதி ஆத்மாவாகவும், உணர்வின் சூக்கும அடிப்படையாகவும், புலன்களாகவும், உயிர்க் காற்றாகவும், மனம், புத்தி மற்றும் உணர்வாகவும் இருக்கும் உமக்கு எமது வந்தனங்கள் உரியதாகுக. உமது ஏற்பாட்டினால், மிகவும் நுண்ணியதான ஜீவாத்மாக்கள், ஜட இயற்கையின் முக்குணங்களுடன் தம்மைத் தவறாக அடையாளங்கண்டு, அதனால் அவர்களது சுயத்தைப் பற்றிய உண்மை உணர்வு மறைக்கப்பட்டிருக்கின்றனர். எல்லையற்ற பரமபுருஷ பகவானாகவும், பரம சூக்குமமாகவும், மாறாத உன்னதத்தில் எப்போதும் நிலைபெற்றிருப்பவராகவும், எதிர்மறைக் கருத்துடைய பல்வேறு சித்தாந்தங்களுக்கு அனுமதியளிப்பவராகவும், பல்வேறு கருத்துக்கள் மற்றும் அவற்றை வெளிப்படும் வார்த்தைகளைத் தாங்கும் சக்தியாகவும் இருக்கும் முழுமுதற் கடவுளாகிய உமக்கு எமது வந்தனங்களை சமர்ப்பிக்கின்றோம்.
பதம் 10.16.44 : அதிகாரப்பூர்வமான சான்றுகள் அனைத்தின் அடிப்படையாகவும், வெளிப்படுத்தப்பட்ட வேதங்களின் கர்த்தாவாகவும் இறுதி ஆதாரணமாகவும் இருப்பவரும், புலனுகர்ச்சியைத் தூண்டுவதாகவும், உலகின்மேல் பற்றின்மையினை உண்டு பண்ணுவதுமாகிய இவ்வேத இலக்கியங்களில் உம்மை வெளிப்படுத்துபவராகவும் இருக்கும் உமக்கு எமது வந்தனங்களை மீண்டும் மீண்டும் அர்ப்பணிக்கின்றோம்.
பதம் 10.16.45 : நாங்கள், எமது வந்தனங்களை பகவான் கிருஷ்ணருக்கும், பகவான் இராமச்சந்திர மூர்த்திக்கும், வசுதேவரின் மைந்தர்களுக்கும், பகவான் பிரத்யும்னருக்கும், பகவான் அநிருத்தருக்கும் சமர்ப்பிக்கின்றோம். நாங்கள் எமது மரியாதைக்குரிய வந்தனங்களை பகவான் விஷ்ணுவின் தெய்வீக பக்தர்கள் அனைவரின் நாயகராக இருப்பவருக்கு அர்ப்பணிக்கின்றோம்.
பதம் 10.16.46 : பல்வேறு வகையான பௌதிக மற்றும் ஆன்மீகக் குணங்களை வெளிப்படுத்தும், ஓ, பகவானே, உமக்கு எமது வந்தனங்கள். நீர் உம்மைப் பெளதிகக் குணங்களினுள் மறைத்துக் கொள்கின்றீர். இருந்தும் அதே குணங்களின் செயல்பாடானது இறுதியில் உமது இருப்பினை அறிவிக்கின்றது. அத்தகு குணங்களுக்கு அப்பால் ஒரு சாட்சியாக நீர் நிற்கின்றீர். மேலும் நீர் உமது பக்தர்களால் மட்டுமே முற்றிலும் அறியக்கூடியவராக இருக்கின்றீர்.
பதம் 10.16.47 : ஓ, புலன்களின் நாயகரான பகவான் ரிஷிகேஸரே, கற்பனைக்கெட்டாத பெருமைகளையுடைய லீலைகள் செய்யும் நீர், எமது வந்தனங்களை உமக்கு அர்ப்பணிக்க விடுவீராக. உமது இருப்பானது பெளதிகப் பொருட்கள் அனைத்தையும் படைத்து, வெளிப்படுத்துவற்கு ஒருவர் தேவை என்பதிலிருந்து உணரப்படுகிறது. உமது பக்தர்கள் உம்மை இவ்வழியே அறிந்துகொண்ட போதிலும் பக்தி அற்றோரிடம் நீர் மெளனமாகவும், சுயதிருப்தியில் ஆழ்ந்தவராகவும் இருக்கின்றீர்.
பதம் 10.16.48 : உயர்ந்த தாழ்ந்த பொருட்கள் அனைத்தின் இலக்குகளையும் நன்கறிபவரும், எல்லாவற்றையும் நெறிப்படுத்துபவருமான உமக்கு எமது வந்தனங்கள் உரித்தாகுக. பிரபஞ்சப் படைப்பிலிருந்து நீர் வேறானவர் ஆவீர் இருந்தும் நீரே, பெளதிகப் படைப்பின் மாயை எதில் வளர்ச்சி பெறுகிறதோ அதன் அடிப்படையாகவும், அம்மாயையினைப் பார்ப்பவராகவும் இருக்கின்றீர். உண்மையில் இவ்வுலகின் மூல காரணர் நீரே ஆவீர்.
பதம் 10.16.49 : எல்லாம் வல்ல பகவானே, பௌதிகச் செயலில் நீர் ஈடுபடுவதற்கு எந்தவிதமானக் காரணமும் இல்லை என்றபோதிலும், இப்பிரபஞ்சத்தின் படைத்தல், காத்தல், அழித்தலைச் செய்தற்காக நீர் உமது நித்தியகால சக்தியின்மூலம் செயல்படுகின்றீர். இதனை நீர், படைப்பிற்கு முன்பு துயில்கொண்டிருந்த இயற்கைக் குணங்களின் வேறுபாடுடைய செயல்களை விழித்தெழச் செய்வதின் மூலம் செய்கின்றீர். உமது பார்வையினால் நீர் மிகவும் சரியாக இப்பிரபஞ்சத்தின் அனைத்துச் செயல்களையும் விளையாட்டாக நிறைவேற்றுகின்றீர்
பதம் 10.16.50 : ஆகையினால் இம்மூவுலகங்களிலும் உள்ள பௌதிக உடல்கள் அனைத்தும் சத்துவ குணத்தில் சாந்தமாக இருப்பவை, ரஜோ குணத்தில் கிளர்ச்சியுடனிருப்பவை, தமோ குணத்தில் அறிவின்றிருப்பவை உமது படைப்புக்களேயாகும். இருந்த போதிலும், சத்துவ குணத்தில் சாந்தமுடைய உடல்களைப் பெற்றிருக்கும் ஆத்மாக்கள், குறிப்பாக உமக்கு மிகவும் பிரியமானவர்கள் ஆவர். அவர்களைக் காப்பதற்கும் அவர்களது சமயதர்மங்களைக் காப்பதற்குமாகவே நீர் இப்போது இப்பூமியில் அவதரித்திருக்கின்றீர்.
பதம் 10.16.51 : குறைந்தபட்சம் ஒரு தடவை, ஓர் ஆசிரியன் தனது குழந்தை அல்லாத மாணவனின் குற்றத்தைப் பொறுத்துக் கொள்ளல் வேண்டும். ஆதலினால் ஓ, பரம சாந்த ஆத்மாவே, நீர் யார் என்பதை அறிந்து கொள்ளாத எமது மூடக் கணவனை நீர் மன்னித்தருள வேண்டும்.
பதம் 10.16.52 : ஒ, பரமபுருஷ பகவானே, அருள் புரிவீராக; எம்மைப் போன்ற பெண்களிடம் இரக்கம் காட்டுவது மகான்களுக்கே உரியதாகும். நாகமான இக்காளிங்கன் தனது உயிரை இழப்பதற்கு இருந்தான். எமது உயிர் மற்றும் ஆத்மாவாக விளங்கும் எமது கணவனை எம்மிடம் திருப்பி அளிப்பீராக.
பதம் 10.16.53 : உமது பணிப்பெண்களாகிய நாங்கள் என்ன செய்தல் வேண்டும் என்பதை எமக்கு உரைப்பீராக. உமது ஆணையை எவன் நம்பிக்கையுடன் நிறைவேற்றுகின்றானோ, அவன் தனது அனைத்து அச்சங்களிலிருந்தும் தானே விடுதலை பெறுகின்றான்.
பதம் 10.16.54 : சுகதேவகோஸ்வாமி கூறினார்: இவ்வாறு நாகபத்தினியரால் போற்றப்பட்டவுடன் முழுமுதற்கடவுள், தமது திருவடித் தாமரைகளால் மிதித்ததினால் நொறுங்கிப் போன தலைகளுடன் உணர்வின்றி வீழ்ந்திருந்த காளிங்கனை விடுவித்தார்.
பதம் 10.16.55 : காளிங்கன் மெதுவாகத் தனது உயிர்ச்சக்தியையும் புலன்களின் செயல்களையும் திரும்பப் பெற்றான். பிறகு மிக்க சிரமத்துடனும், வேதனையுடனும் பெருமூச்சுவிட்டபடியே இரங்கத்தக்க அக்காளிங்கன் முழுமுதற்கடவுளிடம், மிகுந்த பணிவுடன் கூறினான்.
பதம் 10.16.56 : காளிங்கன் கூறினான்: பாம்பாகப் பிறந்த காரணத்தினால் நாங்கள் துவேஷமும், அறியாமையும், உடையவர்களாகி எப்போதும் சீற்றம் மிக்கவர்களாக இருக்கின்றோம். போற்றுதற்குரிய பகவானே, மக்களுக்குத் தமது இயல்பினை விட்டுவிடுதல் என்பது மிகவும் கடினமான ஒன்றாகும். இந்த இயல்பினாலேயே அவர்கள் பொய்ப் பொருளுடன் தம்மை அடையாளம் காண்கின்றனர்.
பதம் 10.16.57 : ஓ, பரம கர்த்தாவே, ஜட இயற்கையின் பல்வகை வேறுபட்ட ஏற்பாடுகளின் மூலம் செய்யப்பட்ட இப்பிரபஞ்சத்தினை நீரே படைக்கின்றீர். இப்படைப்பின் போது நீர் பல்வேறு மனிதர்களையும், உயிர்களையும், புலன் உணர்வுகளையும், உடல் வலிமையினையும், பல்வேறு மனித இயல்புகள் மற்றும் வடிவங்களையுமுடைய தாய், தந்தையரையும் தோற்றுவிக்கின்றீர்.
பதம் 10.16.58 : ஓ, முழுமுதற்கடவுளே, உமது பெளதிகப் படைப்பிலுள்ள அனைத்து உயிர்களிலும் சர்ப்பங்களாகிய நாங்கள் இயற்கையிலேயே எப்போதும் சினமும் சீற்றமும் மிக்கவர்களாக இருக்கின்றோம். இவ்வாறு துறப்பதற்கரிய உமது மாயாசக்தியால் குழப்பப்படுவதால் எவ்வாறு எங்களால் எமது சுயத்தினை விட்டுவிட இயலும்?
பதம் 10.16.59 : போற்றுதற்குரிய பகவானே! நீர் இப்பிரபஞ்சத்தின் தலைவர் ஆவீர்; நீரே மாயையிலிருந்து விடுதலை பெறுவதற்கு உண்மையான காரணர் ஆவீர். கருணையாயினும் அல்லது தண்டனையாயினும் நீர் எதனை எமக்கு அளிக்க வேண்டுமென்று விரும்புகின்றீரோ, அதனை அளிப்பீராக.
பதம் 10.16.60 : சுகதேவ கோஸ்வாமி கூறினார்: காளிங்கனின் வார்த்தைகளைக் கேட்டு மனிதனைப் போல் நடிக்கும் முழுமுதற்கடவுள் கூறினார்: ‘ஓ, நாகமே, இனிமேல் நீ இங்கே இருக்கக் கூடாது. நீ உனது பத்தினியர், குழந்தைகள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கூட்டத்துடன் உடனே சமுத்திரத்திற்குச் செல்வாயாக. இந்த யமுனை நதி பசுக்கள் மற்றும் மனிதர்களுக்குப் பயன்படட்டும்.
பதம் 10.16.61 : விருந்தாவனத்திலிருந்து சமுத்திரத்திற்கு உன்னைப் போகச் சொன்ன எனது கட்டளையினை நினைவுகூர்ந்தாலும், இன்று நடந்த இந்நிகழ்ச்சியை சூரிய உதயத்திலும், அஸ்தமனத்திலும் பிறருக்கு எடுத்துரைத்தாலும் அம்மனிதன் உனது பயம் நீங்கப்பெறுவான்.
பதம் 10.16.62 : எனது லீலை நடைபெற்ற இந்த இடத்தில் ஒருவன் நீராடி இந்நீரை தேவர்களுக்கும், பிற தெய்வங்களுக்கும் அர்ப்பணித்தாலும் அல்லது அவன் இங்கு உபவாசம் இருந்து, என்னை நினைத்து வழிபட்டாலும் அவன் நிச்சயமாகத் தனது அனைத்துப் பாவங்களிலிருந்தும் விடுதலை பெறுவான்.
பதம் 10.16.63 : கருடன் மீது கொண்ட அச்சத்தின் காரணமாக, நீ ரமணகத் தீவை விட்டு இக்குளத்தினில் தஞ்சம் புகுந்தாய். இப்போது எனது பாத அடையாளங்கள் உன் தலைகளின் மீது காணப்படுவதினால் கருடன் உன்னைத் தின்பதற்கு முயற்சிக்கமாட்டான்.
பதம் 10.16.64 : சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்: அன்பிற்குரிய அரசனே, அற்புதச் செயல்கள் செய்யும் முழுமுதற் கடவுளான பகவான் கிருஷ்ணரால் விடுதலை செய்யப்பட்டவுடன் காளிங்கன் தனது பத்தினியருடன் சேர்ந்து அவரை மகிழ்ச்சியுடனும் பயபக்தியுடனும் வழிபட்டான்.
பதங்கள் 10.16.65 – 10.16.67 : பிரபஞ்ச நாயகரான பகவானுக்கு, நேர்த்தியான ஆடைகள், அணிகலன்கள், இரத்தினங்கள், மதிப்புமிகு ஆபரணங்கள், நறுமணத் திரவியங்கள் மற்றும் தைலங்கள் தாமரை மலர்களினாலான பெரிய மாலை போன்றவற்றை அளித்துக் காளிங்கன் அவரை வழிபட்டான். கருடன் கொடியினையுடைய பகவானை இவ்வாறு மகிழச் செய்த காளிங்கன் மிகுந்த திருப்தியடைந்தான். தான் செல்வதற்குப் பகவானிடம் அனுமதி பெற்றுக் காளிங்கன் அவரை வலம் வந்து வணங்கினான். பிறகு தனது மனைவியர், மக்கள், சுற்றத்தினருடன் அவன் கடலில் உள்ள தனது தீவிற்குத் திரும்பச் சென்றான். காளிங்கன் அங்கிருந்து சென்றவுடனேயே யமுனை நதியின் நீரில் கலந்திருந்த நஞ்சு நீங்கப் பெற்று அது அமிர்தமாக மாறியது. இந்த அதிசயம், மனித வடிவில் லீலைகள் புரிவதற்காகத் தோன்றிய முழுமுதற்கடவுளின் கருணையினால் நிகழ்ந்ததாகும்.