அத்தியாயம் – 14
பகவான் கிருஷ்ணரை பிரம்மதேவன் வழிபடுதல்
பதம் 10.14.1
ஸ்ரீ-ப்ரஹ்மோவாச
நெளமிட்ய தே ‘ப்ர-வபுஷே தடித்-அம்பராய
குஞ்ஜாவதம்ஸ-பரிபிச்ச-லஸன்-முகாய
வன்ய-ஸ்ரஜே கவல-வேத்ர-விஷண-வேணு-
லக்ஷ்ம-ஸ்ரீயே ம்ருது-பதே பஸுபாங்கஜாய
ஸ்ரீ-ப்ரஹ்மா உவாச—பிரம்மதேவன் கூறினார்; நெளமி—நான் போற்றுகிறேன்; ஊட்ய—ஓ, வணங்குதற்குரியவரே; தே—உமக்கு; அப்ர—கார்மேகத்தினைப் போன்று; வபுஷே—அவரது உடல்; தடித்—மின்னலைப் போன்று; அம்பராய—அவரது வஸ்திரம்; குஞ்ஜா—குன்று மணியிலான; அவதம்ஸ—செவிக்குண்டலங்கள்; பரிபிச்ச—மற்றும் மயிலிறகுகள்; லஸத்—ஒளிவீசும்; முகாய—அவரது முகம்; வன்ய-ஸ்ரஜே—வனத்திலுள்ள மலர்களினாலான மாலையினை அணிந்துகொண்டு; கவல—ஒரு கவள உணவு; வேத்ர—ஒரு கம்பு; விஷாண—மாட்டுக் கொம்பினாலான ஊதுகுழல்; வேணு—மற்றும் புல்லாங்குழல்; லக்ஷ்ம—அடையாளங்களினால்; ஸ்ரீயே—அவரது எழில்; ம்ருது—மென்மையான; பதே—அவரது திருவடிகள்; பஸு-ப—ஆயர்குலத் தலைவனின் (நந்த மகாராஜாவின்); அங்கஜாய—மைந்தனுக்கு.
பிரம்மதேவன் கூறினார்: போற்றுதற்குரிய பகவானே! நீரே முழுமுதற் கடவுளும், வணங்குதற்குரிய தெய்வமும் ஆவீர். அதனால் உம்மை மகிழ்விப்பதற்காக எனது பணிவான வந்தனங்களையும், பிரார்த்தனைகளையும் உனக்கு நான் அர்ப்பணிக்கின்றேன். ஓ ஆயர் குலத்தலைவனின் மைந்தனே, வானில் தவழும் மேகத்தினைப் போல் உமது உன்னத உடல் கருநீல வண்ணமுடையதாக இருக்கின்றது. நீர் அணிந்திருக்கும் ஆடையோ மின்னலைப் போன்று ஒளி வீசுகின்றது. உமது முகத்தின் எழில், உமது செவிகளில் தொங்கும் குன்றிமணிக் குண்டலங்களினாலும், தலையில் சூடியிருக்கும் மயிலிறகினாலும் மேலும் அதிகரிக்கின்றது. வனத்திலுள்ள மலர்களினாலான மாலையினை அணிந்துகொண்டு, நிலை மேய்க்கும் கோலினையும், ஊதும் கொம்பு மற்றும் புல்லாங்குழலினையும், ஒரு கவளம் உணவினையும் நீர் உமது கரங்களில் ஏந்திக்கொண்டு மிக்க அழகுடன் காட்சி தருகின்றீர்.
பதம் 10.14.2
அஸ்யாபி தேவ வபுஷோ மத்-அனுக்ரஹஸ்ய
ஸ்வேச்சா-மயஸ்ய ந து பூத-மயஸ்ய கோ ‘பி
நேஸே மஹி த்வ அவஸிதும் மனஸாந்தரேண
ஸாக்ஷாத் தவைவ கிம் உதாத்ம-ஸுகானுபூதே:
அஸ்ய—இதன்; அபி—கூட; தேவ—ஓ, பகவானே; வபுஷ:—உடல்; மத்-அனுக்ரஹஸ்ய—எனக்கு கருணை காட்டும்; ஸ்வ-இச்சா-மயஸ்ய—உமது தூய பக்தர்களின் விருப்பத்திற்காக அது தோன்றுகிறது; ந—இல்லை; து—மாறாக; பூத-மயஸ்ய—ஒரு பெளதிகப் பொருள்; க:—பிரம்மதேவன்; அபி—கூட; ந ஈஸே—எனக்கு இயலாது; மஹி—சக்தி; து—உண்மையில்; அவஸிதும்—அளவிடற்கு; மனஸா—எனது மனதினால்; அந்தரேண—அது கட்டுப்படுத்தப்பட்டு விலக்கப்படுகிறது; ஸாக்ஷாத்—நேரடியாக; தவ—உமது; ஏவ—உண்மையில்; கிம் உத—என்ன சொல்வது; ஆத்ம—உமக்குள்ளே; ஸுக—இன்பத்தின்; அனுபூதே:—உமது அனுபவத்தின்.
போற்றுதற்குரிய பகவானே, உமது பக்தர்களின் இச்சைகளை நிறைவேற்றுவதற்காகத் தோன்றி, எனக்குக் கருணை காட்டியிருக்கும் உமது உன்னத உடலின் சக்தியினை அளவிடுவதற்கு என்னாலோ அல்லது பிறராலோ நிச்சயம் முடியாது. எனது மனம் உலகியலிலிருந்து முற்றிலும் விலகியிருந்த போதிலும்கூட, என்னால் உமது சுயவடிவத்தினை அறிந்து கொள்ள முடியவில்லை. பிறகு என்னால் எவ்வாறு நீர் உமக்குள் அனுபவித்துக் கொண்டிருக்கும் ஆனந்தத்தினை அறிய முடியும்?
பதம் 10.14.3
ஜ்ஞானே ப்ரயாஸம் உதபாஸ்ய நமந்த ஏவ
ஜீவந்தி ஸன்-முகரிதாம் பவதீய-வார்தாம்
ஸ்தானே ஸ்திதா: ஸ்ருதி-கதாம் தனு-வாங்-மனோபிர்
யே ப்ராயஸோ’ஜித ஜிதோ’பி அஸி தைஸ் த்ரி லோக்யாம்
ஜ்ஞானே—ஞானத்திற்கு; ப்ரயாஸம்—முயற்சி; உதபாஸ்ய—முற்றிலும் துறந்து; நமந்த:—வந்தனங்களை அர்ப்பணித்து; ஏவ—மட்டும்; ஜீவந்தி—வாழ்தல்; ஸத்-முகரிதாம்—தூய பக்தர்களால் ஓதப்பட்ட; பவதீய-வார்தாம்—உமக்குத் தொடர்புடைய செய்திகள்; ஸ்தானே—அவர்களது பௌதிக நிலைகளில்; ஸ்திதா:—இருந்து கொண்டு; ஸ்ருதி-கதாம்—கேட்பதின் மூலம் பெறப்படுவது; தனு—அவர்களது உடலுடன்; வாக்—வார்த்தைகள்; மனோபி:—மற்றும் மனம்; யே—யார்; ப்ராயஸ:—பெரும்பகுதி; அஜித—ஓ, வெற்றி கொள்வதற்கு அரியவரே; ஜித:—வெல்லப்பட்டது; அபி—இருந்தபோதிலும்; அஸி—நீர் ஆகின்றீர்; தை:—அவர்களால்; த்ரி-லோக்யாம்—மூவுலகங்களிலும்.
யாவர் தமது நிலைநிறுத்தப்பட்டச் சமுதாய நிலைகளில் இருக்கும் பொழுதே யூக அறிவு முறைகளைத் தூக்கி எறிந்துவிட்டு, தமது உடல், உள்ளம், சொல்லுடன் அனைத்து மரியாதைகளையும் உமக்கும், உமது செயல்களுக்கும் அர்ப்பணித்து, உம்மாலும், உமது தூய பக்தர்களாலும் அருளிச் செய்யப்பட்ட சரிதங்களிடத்துத் தமது வாழ்வினை ஒப்படைக்கின்றனரோ, அவர்கள், மூவுலகங்களிலும் அவராலும் வெல்ல முடியாதவராக நீர் இருந்தபோதிலும், உமது மேலாண்மையினை நிச்சயம் வெல்வர்.
பதம் 10.14.4
ஸ்ரேய:-ஸ்ருதிம் பக்திம் உதஸ்ய தே விபோ
க்லிஸ்யந்தி யே கேவல-போத-லப்தயே
தேஷாம் அஸௌ க்லேஸல ஏவ ஸிஷ்யதே
நான்யத் யதா ஸ்தூல-துஷாலகாதினாம்
ஸ்ரேய:—உயர் நன்மை; ஸ்ருதிம்—பாதை; பக்திம்—பக்தித்தொண்டு; உதஸ்ய—புறக்கணித்து; தே—அவர்கள்; விபோ—ஓ, எல்லாம் வல்ல பகவானே; க்லிஸ்யந்தி—போராடுதல்; யே—யாவர்; கேவல—முழுவதுமாக; போத—ஞானம்; லப்தயே—அடைவதற்காக; தேஷாம்—அவர்களுக்கு; அஸௌ—அது; க்லேஸல:—தொல்லை; ஏவ—மட்டும்; ஸிஷ்யதே—இருக்கிறது; ந—இல்லை; அன்யத்—பிற; யாத—போன்று; ஸ்தூல-துஷ—வெறும் உமி; அலகாதினாம்—குத்துபவர்கள்.
போற்றுதற்குரிய பகவானே! உமக்குச் செய்யும் பக்தித் தொண்டே ஆத்ம உணர்வு பெறுவதற்கான சிறந்த வழியாகும். யாரேனும் ஒருவன் இப்பாதையினைப் புறக்கணித்து யூக ஞானத்தினை வளர்ப்பதில் ஈடுபடுவானென்றால், அவன் மிகுந்த தொல்லைக்கு ஆளாவதோடு தான் விரும்பிய பலனையும் அடைவதில்லை. வெறும் உமியைக் குத்துபவனுக்கு அரிசி கிடைக்காதது போல் கற்பனா யூகம் செய்பவனால் ஆத்ம உணர்வு பெறமுடியாது. அவன் அடையக் கூடியது துன்பம் ஒன்றேயாகும்.
பதம் 10.14.5
புரேஹ பூமன் பஹவோ’பி யோகினஸ்
த்வத்-அர்பிதேஹா நிஜ-கர்ம-லப்தயா
விபுத்ய பக்த்யைவ கதோபநீதயா
ப்ரபேதிரே ‘ஞ்ஜோ’ச்யுத தே கதிம் பராம்
புரா—முற்காலத்தில்; இஹ—இவ்வுலகில்; பூமன்—ஓ, எல்லாம் வல்ல பகவானே; பஹவ:—பலர்; அபி—உண்மையில்; யோகின:—யோகப்பாதையினைப் பின்பற்றுவோர்; த்வத்—உமக்கு; அர்பித—அர்ப்பணித்து; ஈஹா:—அவர்களது முயற்சிகளையெல்லாம்; நிஜ-கர்ம—அவர்களது குறிப்பிட்டக் கடமைகளால்; லப்தயா—எய்தப் பெற்றனர்; விபுத்ய—உணர்ந்தனர்; பக்த்யா—பக்தித் தொண்டால்; ஏவ—உண்மையில்; கதா-உபநீதயா—உம்மைப் பற்றியச் செய்திகளைக் கேட்டல் மற்றும் ஒதுவதின் மூலம் வளர்த்து; ப்ரபேதிரே—சரணாகதியின் மூலம் அவர்கள் அடைந்தனர்; அஞ்ஜ:—எளிதாக; அச்யுத—ஓ, குற்றமற்றவரே; தே—உமது; கதிம்—இலக்கு; பராம்—உயர்ந்த.
எல்லாம் வல்ல பகவானே! இவ்வுலகில் பல யோகிகள் தமது முயற்சிகள் அனைத்தையும் உமக்கு ஈடுபடுத்துவதோடு தங்களது அறச்செயல்களை நம்பிக்கையுடன் நிறைவேற்றியும் பக்தித் தொண்டு எனும் நிலையினை அடைந்தனர். உம்மைப் பற்றிக் கேட்டல், ஜெபித்தல் என்னும் முறைகளினால் நிறைவு செய்யப்பட்ட பக்தித் தொண்டின் மூலம் அவர்கள் உம்மை உணர்ந்தனர் என்பதோடு, குற்றமற்றவரே, அவர்களால் உம்மை எளிதில் சரணடைந்து உமது உயர்ந்த இருப்பிடத்தை அடையவும் முடிந்தது.
பதம் 10.14.6
ததாபி பூமன் மஹிமாகுணஸ்ய தே
விபோதும் அர்ஹதி அமலாந்தர்-ஆத்மபி:
அவிக்ரியாத் ஸ்வானுபவாத் அபேதோ
ஹி அனன்ய-போத்யாத்மதயா ந சான்யதா
ததா அபி—இருந்தபோதிலும்; பூமன்—ஓ அளவில்லாதவரே; மஹிமா—சக்தி; அகுணஸ்ய—பௌதிக குணங்களற்ற அவரை; தே—உம்மை; விபோதும்—அறிந்துகொள்வதற்கு; அர்ஹதி—இயலும் ஒருவன்; அமல—குற்றமற்ற; அந்த:-ஆத்மபி:—மனம் மற்றும் புலன்களுடன்; அவிக்ரியாத்—பௌதிக வேறுபாடுகளின் அடிப்படையில் அல்ல; ஸ்வ-அனுபவாத்—பரமாத்மாவின் உணர்வினால்; அபேத:—பௌதிக வடிவங்களில் பற்றின்றி; ஹி—உண்மையில்; அனன்ய-போதத்ய-ஆத்மதயா—வேறு எவரிடமிருந்தும் ஒளி பெறாது சுய ஒளியுடன் தோன்றும்; ந—இல்லை; ச—மற்றும்; அன்யதா—இல்லையேல்.
எனினும் பக்தி இல்லாதவரால் உமது முழு வடிவத்தினை ஒருக்காலும் உணர முடியாது. இருந்தபோதிலும் அவர்கள் தமது இதயத்தில் இருக்கும் பரமாத்மாவுடன் நேரடி உணர்வினை வளர்த்துக் கொள்வதின் மூலம், உமது விரிவான அருவ பிரம்மத்தினை உணர்வது அவர்களுக்குச் சாத்தியமாகும். இதனைக்கூட அவர்கள், பெளதிக வேறுபாட்டுக் கருத்துக்கள் அனைத்திலுமிருந்து தமது மனம் மற்றும் புலன்களைத் தூய்மை செய்தும், புலன்மீதான பற்றினை ஒழித்த பிறகுமே அடைகின்றனர். இதன் பின்னரே உமது அருவத் தன்மையானது அவர்களுக்கு வெளிப்படுத்தப்படுகிறது.
பதம் 10.14.7
குணாத்மனஸ் தே’பி குணான் விமாதும்
ஹிதாவதீர்ணஸ்ய க ஈஸிரே’ஸ்ய
காலேன யைர் வா விமிதா: ஸு-கல்பைர்
பூ-பாம்ஸவ: கே மிஹிகா த்ய-பாஸ:
குண-ஆத்மன:—உயர்குணங்கள் அனைத்தும் உடையவர்; தே—நீர்; அபி—நிச்சயமாக; குணான்—குணங்கள்; விமாதும்—எண்ணுவதற்கு; ஹித-அவதீர்ணஸ்ய—அனைத்து உயிர்களின் நன்மைக்காகவும் அவர் கீழிறங்கி வந்திருக்கின்றார்; கே—யார்; ஈஸிரே—முடியும்; அஸ்ய—பிரபஞ்சத்தின்; காலேன—உரிய காலத்தில்; யை:—அவரால்; வா—அல்லது; விமிதா:—எண்ணப்பட்ட; ஸு-கல்பை:—பெரிய விஞ்ஞானிகளால்; பூ-பாம்ஸவ:—புவிக்கோளத்தின் ஓர் அணு; கே—வானத்தில்; மிஹிகா:—பனித்துளியின் சிறு கூறு; த்யு-பாஸ:—கோளங்கள் மற்றும் நட்சத்திரங்களின் ஒளி.
ஒரு காலத்தில் கற்றறிந்த அறிஞர்களோ அல்லது விஞ்ஞானிகளோ பூமியிலுள்ள அணுக்கள் எல்லாவற்றையும் பனித்துளியின் கூறுகளையும், சூரியனிலிருந்தும், நட்சத்திரங்களிலிருந்தும் வீசும் ஒளிக்கதிர்களிலுள்ள அணுத்திரள்களையும் கூட எண்ணுகின்ற திறன் பெறுவர். அவர்களில் யாரால், அனைத்து உயிர்களின் நன்மைக்காகவும் இப்பூமிக்கு இறங்கி வந்திருக்கும் முழுமுதற் கடவுளை உம்மிடமிருக்கும் அளவற்ற உன்னத குணங்களை எண்ண முடியும்?
பதம் 10.14.8
தத் தே‘னுகம்பாம் ஸு-ஸமீக்ஷமாணோ
புஞ்ஜான ஏவாத்ம-க்ருதம் விபாகம்
ஹிருத்-வாக்-வபுர்பிர் விததன் நமஸ் தே
ஜீவேத யோ முக்தி-பதே ஸ தாய பாக்
தத்—ஆகையினால்; தே—உமது; அனுகம்பாம்—கருணை; ஸு-ஸமீக்ஷமாணோ:—மிகுந்த நம்பிக்கையுடன்; பூஞ்ஜான:—முயற்சிக்கின்றவன்; ஏவ—உறுதியாக; ஆத்ம-க்ருதம்—அவனால் செய்யப்பட்ட; விபாகம்—வினைப்பயன்கள்; ஹ்ருத்—அவனது மனம்; வாக்—வாக்கு; வபுர்பி:—மற்றும் உடல்; விததன்—அர்ப்பணித்து; நம:—வணக்கங்கள்; தே—உங்களுக்கு; ஜீவேத—உயிர்கள்; யா:—எவரும்; முக்தி-பதே—விடுதலை நிலை; ஸ:—அவன்; தாய-பாக்—மரபு உரிமையாகும்.
போற்றுதற்குரிய பகவானே! உமது அளவற்ற கருணை வேண்டி நம்பிக்கையுடன் காத்திருப்பவன், அக்காலக் கட்டத்தில் தான் செய்த முன்னைய பாவங்களின் பலன்களைப் பொறுமையுடன் அனுபவித்துக் கொண்டும், தனது மனம், வாக்கு, காயத்தினால் உமக்கு மரியாதையுடன், தனது வணக்கங்களையும் அர்ப்பணித்துக் கொண்டிருந்தானென்றால் அவன் நிச்சயம் விடுதலை பெறுவதற்குத் தகுதியுடையனாவான். ஏனெனில் அவ்விடுதலையானது அவனுக்கு மரபுவழியாக வரும் உரிமையாகி விடுகிறது.
பதம் 10.14.9
பஸ்யேஸ மே நார்யம் அனந்த ஆத்யே
பராத்மணி த்வய்ய் அபி மாயி-மாயினி
மாயாம் விதத்யேக்ஷிதும் ஆத்ம-வைபவம்
ஹி அஹம் கியான் ஐச்சம் இவார்சிர் அக்நௌ
பஸ்ய—பாருங்கள்; ஈஸ—ஓ, பகவானே; மே—எனது; அநார்யம்—அருவருக்கத்தக்க நடத்தை; அனந்தே—அளவற்றவருக்கு எதிரான; ஆத்யே—ஆதிமூலம்; பர-ஆத்மனி—பரமாத்மா; த்வயி—உம்மிடத்து; அபி—கூட; மாயி-மாயினி—மாயையின் தலைவர்களுக்கு; மாயாம்—(எனது) மாயாசக்தி; விதத்ய—பரவுதல்; ஈக்ஷிதம்—காண்பதற்கு; ஆத்ம—உமது; வைபவம்—சக்தி; ஹி—உண்மையில்; அஹம்—நான்; கியான்—எவ்வளவு; ஐச்சம்—நான் விரும்பினேன்; இவ—போன்று; அர்சி:—ஒரு சிறு தீப்பொறி; அக்நௌ—பெரிய அக்கினியோடு ஒப்பிடுவதற்கு.
போற்றுதற்குரிய பகவானே! எனது அநாகரிகமான அருவருக்கத்தக்க நடத்தையினைப் பாரும். அளவற்றவராகவும், ஆதிபரமாத்மாவாகவும் இருக்கும் நீர், மாயாசக்திகளின் தலைவர்களைக் கூட மயங்கச் செய்யும் சக்தியுடையவராளீர், இருந்தும் உமது பலத்தைச் சோதிப்பதற்காக உம்மை மறைப்பதற்கு எனது மாயா சக்தியை நான் பயன்படுத்த முயன்றேன். உம்மோடு ஒப்பிடுவதற்கு நான் யார்? பெரு நெருப்பிற்கு முன்னே சிறு நெருப்புப் பொறி போன்றவன் நான்.
பதம் 10.14.10
அத: க்ஷமஸ்வாச்யுத மே ரஜோ-புவோ
ஹி அஜாநதஸ் த்வத்-ப்ருதக்-ஈஸ-மானின:
அஜாவலேபாந்த-தமோ-‘ந்த-ச க்ஷீஷ
ஏக்ஷா ‘னுகம்ப்யோ மயி நாதவான் இதி
அத:—ஆகையினால்; க்ஷமஸ்வ—அருள்கூர்ந்து மன்னிக்கவும்; அச்யுத—ஓ, குற்றமற்ற பகவானே; மே—என்னை; ரஜ:-புவ:—இரஜோ குணத்தில் பிறந்தவர்; ஹி—உண்மையில்; அஜாநத:—அறியாமையினால்; த்வத்—உம்மிடமிருந்து; ப்ருதக்—தனியாக; ஈஸ—கட்டுப்படுத்துபவர்; மானின:—என்னைக் கருதிக்கொண்டு; அஜ—பிறப்பில்லாத கட்டுப்படுத்துபவர்; அவலேப—மறைத்தல்; அந்த-தம்:—அறியாமை இருளினால்; அந்த—குருடாகி; ச க்ஷுஷ:—எனது விழிகள்; ஏஷ:—இவனுக்கு; அனுகம்ப்ய:—கருணை காட்ட வேண்டும்; மயி—என்னை; நாத-வான்—தனது தலைவராகக் கொண்டு; இதி—இவ்வாறு நினைத்து.
ஆகையினால், ஓ குற்றமற்றவரே! எனது குற்றங்களை மன்னித்தருள்வீராக. நான் ரஜோ குணத்தில் பிறந்த மூடனாவேன். அதனால்தான் உமது மேலாண்மையிலிருந்து சுதந்திரம் உடைய நெறியாளனாக என்னை நான் கருதிக் கொண்டேன். எனது கண்கள் அறியாமை இருளில் குருடாகிப் போனதினால் இப்பிரபஞ்சத்தின் பிறப்பற்ற படைப்பாளனாக என்னை நான் நினைத்துவிட்டேன். நான் உமது தொண்டன் ஆதலினால் உமது கருணைக்கு உரியவன் என்பதை நீர் அருள்கூர்ந்து ஏற்றுக்கொள்ள வேண்டும்.
பதம் 10.14.11
க்வாஹம் தமோ-மஹத்-அஹம்-க-சராக்னி-வார்-பூ-
ஸம்வேஷ்டிதாண்ட-கட-ஸப்த-விதஸ்தி-காய:
க்வேத்ருக்-விதாவிகணிதாண்ட-பராணு-சர்யா
வாதாத்வ-ரோம-விவரஸ்ய ச தே மஹித்வம்
க்வ—எங்கே; அஹம்—நான்; தம:—ஜட இயற்கை; மஹத்—மொத்தப் பெளதிக சக்தி; அஹம்—ஆணவம்; க—ஆகாயம்; சர—காற்று; அக்னி—நெருப்பு; வா:—நீர்; பூ—நிலம்; ஸம்வேஷ்டித—சூழப்பட்டதனால்; அண்ட-கட—சிறுபானையைப் போன்ற பிரபஞ்சம்; ஸப்த-விதஸ்தி—ஏழு அடிகள்; காய:—உடல்; க்வ—எங்கே; ஈத்ருக்—அது; விதா—போன்ற; அவிகணித—அளவற்ற; அண்ட—அண்டம்; பரணு—அணுவின் சிறு கூறு போன்ற; சர்ய—செல்கின்றன; வாத-அத்வ—காற்றுத் துளைகள்; ரோம—உடலிலுள்ள ரோமம்; விவரஸ்ய—துளைகளின்; ச—மற்றும்; தே—உமது; மஹித்வம்—மகிமை.
எனது கையினால் அளந்தால் ஏழடி உயரமிருக்கும் சிறிய பொருளாகிய நான் யார்? ஜட இயற்கை, பௌதிகச் சக்தி. ஆணவம், ஆகாயம், காற்று, நீர், நிலம் போன்றவற்றினால் ஒரு பானை போன்றிருக்கும் பிரபஞ்சத்துடன் நான் இணைக்கப்பட்டிருக்கிறேன். ஆனால் உமது மகிமை என்ன? சாளரங்களின் வழியே பறந்துவரும் தூசிகள் போன்று எண்ணற்ற பிரபஞ்சங்கள் உமது உடலிலுள்ள ரோமக் கால்களின் வழியே மிதந்து செல்கின்றன.
பதம் 10.14.12
உத்க்ஷேபணம் கர்ப-கதஸ்ய பாதயோ:
கிம் கல்பதே மாதுர் அதோக்ஷஜாகஸே
கிம் அஸ்தி-நாஸ்தி-வ்யபதேஸ-பூஷிதம்
தவாஸ்தி குக்ஷேஷ: கியத் பி அனந்த:
உத்க்ஷேபணம்—உதைத்தல்; கர்ப-கதஸ்ய—கர்பத்தில் இருக்கும் குழந்தை; பாதயோ:—பாதங்களினால்; கிம்—என்ன; கல்பதே—என்னவாகும்; மாது:—அன்னைக்கு; அதோக்ஷஜ—ஓ, உன்னதமான பகவானே; ஆகஸே—ஒருகுற்றம்; கிம்—என்ன; அஸ்தி—அது இருத்தல்; ந அஸ்தி—அது இல்லாதிருத்தல்; வ்யபதேஸ—தீர்மானங்களினால்; பூஷிதம்—அலங்கரிக்கப்பட்ட; தவ—உமது; அஸ்தி—இருக்கிறது; குக்ஷேஷ:—உதரத்தின் (வயிறு); கியத்—எவ்வளவு; அபி—கூட; அன்-அந்த:—புறத்தே.
ஒ, பகவான் அதோக்ஷஜரே! தனது கருப்பையினுள் இருக்கும் குழந்தை தன்னைக் கால்களினால் உதைப்பதை ஓர் அன்னை குற்றமாகக் கருதுவாளா? பல்வேறு தத்துவ ஞானிகளால் உண்மையென்றும், பொய்யென்றும் தீர்மானிக்கப்படும் எதுவும் உமது உதரத்திற்கு வெளியே இருக்கின்றதா?
பதம் 10.14.13
ஜகத்-த்ரயாந்தோததி-ஸம்ப்லவோதே
நாராயணஸ்யோதர-நாபி-நாளாத்
விநிர்கதோ’ஜஸ் த்வ இதி வாங் ந வை ம்ருஷா
கிந்த்வ ஈஸ்வர த்வன் ந விநிர்கதோ ‘ஸ்மி
ஜகத்-த்ரய—மூவுலகங்களின்; அந்த—இறுதியில்; உததி—எல்லாக் கடல்களின்; ஸம்ப்லவ—ஊழி வெள்ளம்; உதே—வெள்ளத்தில்; நாராயணஸ்ய—முழுமுதற் கடவுள் நாராயணரின்; உதர—உதரத்திலிருந்து வளர்ந்து; நாபி—நாபியிலிருந்து; நாளாத்—தாமரை நாளத்தின்; விநிர்கத:—வெளியே வந்த; அஜ:—பிரம்மதேவன்; து—உண்மையில்; இதி—இவ்வாறு கூறப்பட்ட; வாக்—வார்த்தைகள்; ந—இல்லை; வை—உண்மையில்; ம்ருஷா—பொய்; கிந்து—இவ்வாறு; ஈஸ்வர—ஓ, பகவானே; ந—இல்லை; விநிர்கத:—சிறப்புடன் தோன்றிய; அஸ்மி—நான்.
போற்றுதற்குரிய பகவானே, மூவுலகங்களும் இறுதியில் ஊழி வெள்ளத்தில் மூழ்கும்பொழுது, உமது அம்சாவதாரமான நாராயணர் அவ்வெள்ளத்தின் மேல் பள்ளி கொண்டிருப்பாரென்றும், அப்போது அவரது நாபியிலிருந்து தோன்றும் தாமரை மலரிலிருந்து பிரம்மதேவன் பிறப்பார் என்றும் கூறப்படுகிறது. உண்மையில் இவ்வார்த்தைகள் பொய்மையன்று. நான் உம்மிடமிருந்து பிறக்கவில்லையா என்ன?
பதம் 10.14.14
நாராயணஸ் த்வம் ந ஹி ஸர்வ-தேஹினாம்
ஆத்மாஸி அதீஸாகில-லோக-ஸாக்ஷி
நாராயணோ ‘ங்கம் நர-பூ-ஜலாயனாத்
தச் சாபி ஸத்யம் ந தவைவ மாயா
நாராயண:—முழுமுதற் கடவுள் நாராயணர்; த்வம்—நீர்; ந—இல்லை; ஹி—உண்மையில்; ஸர்வ—அனைத்தும்; தேஹினாம்—உடல் பெற்ற உயிர்கள்; ஆத்மா—பரமாத்மா; அஸி—நீரே; அதீஸ—ஓ, பரம நெறியாளரே; அகில—அகிலத்தின்; லோக—உலகங்கள்; ஸாக்ஷு—சாட்சி; நாராயண:—பகவான் ஸ்ரீ நாராயணர்; அங்கம்—விரிவடைந்த அம்சாவதாரம்; நர—முழுமுதற் கடவுளிடமிருந்து; பூ—தோன்றுதல்; ஜல—ஜலத்தின்; அயனாத்—தோன்றும் ஆதாரமாக இருக்கின்ற காரணத்தினால்; தத்—அது (விரிவு); ச—மற்றும்; அபி—உண்மையில்; ஸத்யம்—உண்மை; ந—இல்லை; தவ—உமது; ஏவ—இவ்வாறு; மாயா—மாயா சக்தி.
ஓ, பரமநெறியாளரே, உடல் பெற்ற உயிர்கள் அனைத்திலும் நீரே பரமாத்மாவாகவும், படைக்கப்பட்ட அதிகார எல்லைக்குள் நீரே நித்திய சாட்சியாகவும் இருப்பதினால் நீர் ஆதி நாராயணர் இல்லையா? உண்மையில் பகவான் நாராயணர் உமது விரிவாவார். அவர் நாராயணர் என்றழைக்கப்படுவதன் காரணம் அவரே பிரபஞ்சத்தின் ஆதி வெள்ளத்திற்கு ஆதாரமாக இருக்கின்றார். அவர் சத்தியமானவர் ஆவார். ஏனெனில் அவர் உமது மாயா சக்தியின் படைப்பல்லர்.
பதம் 10.14.15
தச் சேஜ் ஜல-ஸ்தம் தவ ஸஜ் ஜகத்-வபு:
கிம் மே ந த்ருஷ்டம் பகவம்ஸ் ததைவ
கிம் வா ஸு-த்ருஷ்டம் ஹ்ருதிமே தததைவ
கிம் நோ ஸபதி ஏவ புனர் வ்யதர்ஸி
தத்—அது; சேத்—அவ்வாறு இருந்தால்; ஜல-ஸ்தம்—நீரின் மேல் இருந்து; தவ—உமது; ஸத்—உண்மையான; ஜகத்—பிரபஞ்சம் முழுவதற்கும் அடைக்கலம் தரும்; வபு:—உன்னத உடல்; கிம்—ஏன்; மே—என்னால்; ந த்ருஷ்டம்—காணப்படவில்லை; பகவான்—ஓ, பரமபுருஷ பகவானே; ததாஏவ—அச்சமயம்; கிம்—ஏன்; வா—அல்லது; ஸு-த்ருஷ்டம்—நன்கு காணப்படுதல்; ஹ்ருதி—இதயத்தினுள்; மே—என்னால்; ததா ஏவ—அதன் பிறகு; கிம்—ஏன்; ந—இல்லை; உ—மாறாக; ஸபதி—உடனே; ஏவ—உண்மையில்; புன:—மீண்டும். வ்யதர்ஸி—காணப்படுதல்.
போற்றுதற்குரிய பகவானே, இப்பிரபஞ்சம் முழுவதற்கும் அடைக்கலமாக விளங்கும் உமது உன்னத உடல், வெள்ளத்தின் மீது உண்மையில் இருக்க, நான் தேடியபோது நீர் ஏன் எனது கண்களுக்குக் காணப்படவில்லை? மேலும் எனது இதயத்தினுள்ளும் உம்மை நான் நன்கு காண முடியாதவனாக இருந்த போதிலும், நீர் ஏன் உம்மை திடீரென்று வெளிப்படுத்தினீர்?
பதம் 10.14.16
அத்ரேவ மாயா-தமனாவதாரே
ஹி அஸ்ய ப்ரபஞ்சஸ்ய பஹி: ஸ்புடஸ்ய
க்ருத்ஸ்னஸ்ய சாந்தர் ஜடரே ஜனன்யா
மாயாத்வம் ஏவ ப்ரகடீ-க்ருதம் தே
அத்ர—இதில்; ஏவ—உண்மையில்; மாயா-தமன—ஓ, மாயையினை அடிமை கொண்டவரே; அவதாரே—அவதாரத்தில்; ஹி—உறுதியாக; அஸ்ய—இதன்; ப்ரபஞ்சஸ்ய—படைக்கப்பட்ட பெளதிகத் தோற்றத்தின்; பஹி:—புறத்தே; ஸ்புடஸ்ய—அது தெரிகிறது; க்ருத்னஸ்ய—முழுவதும்; ச—மற்றும்; அந்த:—உள்ளே; ஜடரே—உமது வயிறு; ஜனன்யா—உமது தாய்க்கு; மாயாத்வம்—உமது மாயா சக்தி; ஏவ—உண்மையில்; ப்ரகடீ-க்ருதம்—வெளிப்படுத்தப்பட்டது; தே—உம்மால்.
போற்றுதற்குரிய பகவானே! இந்த அவதாரத்தில், மாயையினைக் கட்டுப்படுத்தும் உயர்நெறியாளர் நீர் ஒருவரே என்பதை நீர் நிரூபித்திருக்கின்றீர். இப்போது நீர் இப்பிரபஞ்சத்தில் இருந்த போதிலும், இப்பிரபஞ்சப் படைப்பு முழுவதும் உமது உன்னத உடலினுள்ளேயே இருக்கின்றது-இவ்வுண்மையினை, உமது அன்னை யசோதைக்கு, உமது வயிற்றினுள் இருக்கும் பிரபஞ்சத்தினை நீர் காட்சிப்படுத்தியதின் மூலம் வெளிப்படுத்தியிருக்கின்றீர்!
பதம் 10.14.17
யஸ்ய குக்ஷெளல் இதம் ஸர்வம் ஸாத்மம் பாதி யதா ததா
தத் த்வய்ய் அபீஹ தத் ஸர்வம் கிம் இதம் மாயயா விநா
யஸ்ய—அவரது; குக்ஷௌல்—வயிற்றினுள்; இதம்—இப்பௌதிகத் தோற்றம்; ஸர்வம்—அனைத்தும்; ஸ-ஆத்மம்—நீர் உள்ளிட்ட; பாதி—வெளிப்படுத்தப்படுகிறது; யதா—அதுபோல்; ததா—ஆகையினால்; தத்—அது; த்வயி—உமக்குள்; அபி—இருந்தபோதிலும்; இஹ—புறத்தே (இங்கே); தத்—அப்பெளதிகத் தோற்றம்; ஸர்வம்—அனைத்தும்; கிம்—என்ன; இதம்—இது; மாயயா—கற்பனைக்கெட்டாத உமது சக்தியின் பாதிப்பு; விநா—இன்றி.
நீர் உள்ளிட்ட இப்பிரபஞ்சம் உமது வயிற்றினுள் எப்படி வெளிப்பட்டதோ, அதே பிரபஞ்சம், அதே வடிவத்தில்தான் இப்போது புறத்தேயும் வெளிப்பட்டிருக்கிறது. உமது கற்பனைக்கெட்டாத சக்தியினாலன்றி மேலே கூறியது எவ்வாறு நடை பெறக்கூடும்?
பதம் 10.14.18
அத்யைவ த்வத் ருதே’ஸ்ய கிம் மம ந தே மாயாத்வம் ஆதர்ஷிதம்
ஏகோ’ஸி ப்ரதமம் ததோ வ்ரஜ-ஸுஹ்ருத்-வத்ஸா: ஸமஸ்தா அபி
தாவந்தோ’ஸி சதுர்-புஜாஸ் தத் அகிலை: ஸாகம்மயோபா-ஸிதாஸ்
தாவந்தி ஏவ ஜகந்தி அபூஸ் தத் அமிதம் ப்ரஹ்மாத்வயம் ஸிஷ்யதே
அத்ய—இன்று; ஏவ—போன்று; த்வத் ருதே—உம்மிடமிருந்து பிரிந்து; அஸ்ய—இப்பிரபஞ்சத்தின்; கிம்—என்ன; மம—எனக்கு; ந—இல்லை; தே—உம்மால்; மாயாத்வம்—உமது கற்பனைக்கெட்டாத சக்தியின் அடிப்படை; ஆதர்-ஷிதம்—காண்பிக்கப்பட்ட; ஏக:—மட்டும்; அஸி—நீர் இருக்கின்றீர்; ப்ரதமம்—முதலாவதாக; தத:—பிறகு; வ்ரஜ-ஸுஹ்ருத்—பிருந்தாவனத்திலுள்ள உமது ஆயர்குல நண்பர்கள்; வத்ஸா:—கன்றுகள்; ஸமஸ்தா:—அனைவரும்; அபி—கூட; தாவந்த:—அதே எண்ணிக்கையில்; அஸி—நீர் தோன்றினீர்; சது:-புஜா:—சதுர்புஜங்களுடன் கூடிய பகவான் விஷ்ணுவின் வடிவத்தில்; தத்—பிறகு; அகிலை:—அனைத்திலும்; ஸாகம்—ஒருங்கிணைந்து; மயா—என்னை; உபாஸிதா:—வழிபடுதல்; தாவந்தி—அதே எண்ணிக்கையில்; ஏவ—கூட; ஜகந்தி:—பிரபஞ்சங்கள்; அபூ:—நீர் தோன்றினீர்; தத்—பிறகு; அமிதம்—அளவற்ற; ப்ரஹ்ம—முழுமெய்ப்பொருள்; அத்வயம்—இரண்டற்ற ஒருவர்; ஸிஷ்யதே—இப்போது இருக்கின்றீர்.
நீர் இன்று உம்மையும், உமது கற்பனைக்கெட்டாத சக்தியினால் படைக்கப்பட்ட இத்தோற்றங்களையும் இன்று எனக்குக் காண்பிக்கவில்லையா? முதலில் நீர் தனியாகத் தோன்றினீர். பிறகு நீர் உம்மை பிருந்தாவனத்தில் உள்ள கன்றுகளாகவும், உமது நண்பர்களான ஆயர்குலச் சிறுவர்களாகவும் தோன்றச் செய்தீர். அடுத்து நீர் சம எண்ணிக்கையுடைய சதுர்ப்புஜ விஷ்ணு வடிவங்களாகத் தோன்றினீர். இவ்வடிவங்கள் அனைத்தும் நான் உள்ளிட்ட உயிர்கள் அனைவராலும் வணங்கப்பட்டுக் கொண்டிருந்தன. அதன் பிறகு நீர் சம எண்ணிக்கையுடைய முழுப் பிரபஞ்சங்களாகத் தோன்றினீர். இப்போது நீர் இறுதியில், இரண்டற்ற ஒன்றும், அளவற்றதுமான உமது பரம முழுமெய்ப்பொருள் வடிவத்திற்குப் திரும்பியுள்ளீர்.
பதம் 10.14.19
அஜாநதாம் த்வத்-பதவீம் அநாத்மனி
ஆத்மாத்மனா பாஸி விதத்ய மாயாம்
ஸ்ருஷ்டௌ இவாஹம் ஜகதோ விதான
இவ த்வம் ஏஷோந்த இவ த்ரிநேத்ர:
அஜாநதாம்—அறியாமையிலிருக்கும் மனிதர்களுக்கு; த்வத்-பதவிம்—உமது உன்னத நிலை; அநாத்மனி—பௌதிக சக்தியில்; ஆத்மா—உமது; ஆத்மனா—உம்மால்; பாஸி—தோன்றுதல்; விதத்ய—விரிகின்ற; மாயாம்—உமது கருதற்கரிய சக்தி; ஸ்ருஷ்டௌ—படைப்பு விஷயத்தில்; இவ—போன்று; அஹம்—நான், பிரம்மதேவன்; ஜகத:—பிரபஞ்சத்தின்; விதானே—காப்பதில்; இவ—போன்று; த்வம் ஏஷ:—நீர்; அந்தே—அழிப்பதில்; இவ—போன்று; த்ரி-நேத்ர:—முக்கண்ணன் (சிவபெருமான்).
உமது உண்மையான உன்னத நிலையினை அறியாதவர்களுக்கு நீர், உமது கற்பனைக்கெட்டாத சக்தியின் விரிவினால் உம்மால் தோற்றுவிக்கப்பட்ட பெளதிக உலகின் ஒரு பாகமாக காட்சியளிக்கின்றீர். இவ்வாறு பிரபஞ்சப் படைப்பில் நீர் என்னைப் போல் (பிரம்மதேவனாக) தோன்றுகின்றீர், அதனைக் காப்பதில் உம்மைப்போல் (விஷ்ணுவாக) தோன்றுகின்றீர், அதனை அழிப்பதில் நீர், முக்கண்ணனாகத் (சிவபெருமானாக) தோன்றுகின்றீர்.
பதம் 10.14.20
ஸுரேஷ்வ ருஷிஷ்வ ஈஸ ததைவ ந்ருஷ்வ பி
திர்யக்ஷு யாத: ஸ்வ அபி தே ‘ஜனஸ்ய
ஜன்மாஸதாம் துர்மத-நிக்ரஹாய
ப்ரபோ விதாத: ஸத்-அனுக்ரஹாய ச
ஸுரேஷு—தேவர்கள் மத்தியிலும்; ருஷிஷ்வ—மகா முனிவர்கள் மத்தியிலும்; ஈஸ—ஓ, பகவானே; ததா—அது போல்; ஏவ—உண்மையில்; ந்ருஷு—மனிதர்கள் மத்தியிலும்; அபி—மற்றும்; த்ரியக்ஷு—விலங்குகள் மத்தியிலும்; யாத: ஸ்வ—நீர்வாழ் உயிர்களிடையிலும்; அபி—கூட; தே—உமது; அஜனஸ்ய—பௌதிகப் பிறப்பு எடுக்காதவர்; ஜன்ம—பிறப்பு; அஷதாம்—அபக்தர்களின்; துர்மத—வீண் பெருமை; நிக்ரஹாய—அடக்குவதற்காக; ப்ரபோ—பிரபுவே; விதாத:—ஓ படைப்பவரே; ஸத்—நம்பிக்கையுடன் பக்தர்களுக்கு; அனுக்ரஹாய—கருணை காட்டுவதற்காக; ச—மற்றும்.
ஓ பகவானே, ஓ பரம படைப்பாளரே, எஜமானரே, நீர் பெளதிகப் பிறப்பு எடுத்ததில்லை. இருந்தும் நம்பிக்கையற்ற அசுரர்களின் வீண் பெருமையினை அழித்து, உமது பக்தர்களுக்குக் கருணை காட்ட வேண்டும் என்பதற்காக நீர், தேவர்களிடத்தும், முனிவர்களிடத்தும், மனிதர்களிடத்தும், விலங்குகளிடத்தும், ஏன் நீர்வாழ் உயிர்களிடத்தும் கூடப் பிறப்பெடுக்கின்றீர்.
பதம் 10.14.21
கோ வேத்தி பூமன் பகவன் பராத்மன்
யோகேஸ்வரோதீர் பவதஸ் த்ரி-லோக்யாம்
க்வ வா கதம் வா கதி வா கதேதி
விஸ்தாரயன் க்ரீடஸி யோக-மாயாம்
கோ:—யார்; வேத்தி—அறிவார்; பூமன்—ஓ, உயர் பரம்பொருளே; பகவன்—ஓ, முழுமுதற் கடவுளே; பர-ஆத்மன்—ஓ, பரமாத்மாவே; யோக-ஈஸ்வர—ஓ, யோகேஸ்வரரே; ஊதீ:—லீலைகள்; பவத:—உமது மேலாண்மையின்; த்ரி-லோக்யாம்—மூவுலகங்களில்; க்வ—எங்கே; வா—அல்லது; கதம்—எவ்வாறு; வா—அல்லது; கதி—எத்தனை; வா—அல்லது; கதா—எப்பொழுது; இதி—இவ்வாறு; விஷ்தாரயன்—விரிவடைதல்; க்ரீடஸி—நீர் திருவிளையாடல் புரிகின்றீர்; யோக-மாயாம்—உமது ஆன்மீகச் சக்தி.
ஓ பரம்பொருளே! ஓ முழுமுதற் கடவுளே! ஓ பரமாத்மாவே! ஓ யோகேஸ்வரரே! உமது லீலைகள் இம்மூவுலகங்களிலும் தொடர்ந்து நடைபெறுகிறது. ஆயினும் உமது ஆன்மீகச் சக்தியை நீர் எங்கே, எவ்வாறு, எப்பொழுது பயன்படுத்தி இவ்வெண்ணற்ற லீலைகளை நிகழ்த்துகின்றீர் என்பதை யாரால் அறியக் கூடும்? உமது ஆன்மீகச் சக்தி எவ்வாறு செயல்படுகிறது என்பது ஒருவராலும் அறிந்து கொள்ள முடியாது.
பதம் 10.14.22
தஸ்மாத் இதம் ஜகத் அஸேஷம் அஸத்-ஸ்வரூபம்
ஜ்வப்நாபம் அஸ்த-திஷணம் புரு-து: க-து: கம்
த்வய்ய் ஏவ நித்ய-ஸுக-போத-தனாவ் அனந்தே
மாயாத உத்யத் அபி யத் ஸத் இவாவபாதி
தஸ்மாத்—ஆகையினால்; இதம்—இந்த; ஜகத்—பிரபஞ்சம்; அஸேஷம்—முழுவதும்; அஸத்-ஸ்வரூபம்—தற்காலிகமானது என்பதினால் அதன் இருப்புப் பொய்யாகும்; ஸ்வப்ந-ஆபம்—ஒரு கனவைப் போன்று; அஸ்த-திஷணம்—அங்கே விழிப்புணர்வு மூடப்படுகிறது; புரு-து: க-து: கம்—மீண்டும் மீண்டும் துன்பங்களே நிறைந்த; த்வயி—உமக்குள்; ஏவ—உண்மையில்; நித்ய—நித்தியமான; ஸுக—சுகம்; போத—உணர்வு; தனௌ—அவரது தனிப்பட்டத் தோற்றங்கள்; அனந்தே—அளவற்றன; மாயாத:—மாயா சக்தியால்; உத்யத்—வருகின்றதாக; அபி—இருந்தபோதிலும்; யத்—அவை; ஸத்—உண்மையானவை; இவ—போன்று; அவபாதி—தோன்றுகிறது.
ஆகையினால் ஒரு கனவைப் போன்ற இப்பிரபஞ்சமானது இயற்கையில் பொய்ம்மையேயாகும், இருந்தபோதிலும் அது மெய்யாகத் தோன்றுகிறது. இவ்வாறு அது ஒருவனது உணர்வினை மறைத்து மீண்டும் மீண்டும் ஒருவனைத் துன்பத்திற்காளாக்குகிறது; இப்பிரபஞ்சம் உண்மைபோல் தோன்றுகிறது. ஏனென்றால் இது உமது மாயா சக்தியினின்று தோன்றுகிறது. உமது அளவற்ற உன்னத வடிவங்களோ முற்றிலும் நித்திய ஆனந்தமும், ஞானமும் நிறைந்தவையாக இருக்கின்றன.
பதம் 10.14.23
ஏகஸ் த்வம் ஆத்மா புருஷ: புராண:
ஸத்ய: ஸ்வயம்-ஜ்யோதிர் அனந்த ஆத்ய:
நித்யோ ‘க்ஷரோ ‘ஜஸ்ர-ஸுகோ நிரஞ்ஜன:
பூர்ணாத்வயோ முக்த உபாதிதோ’ம்ருத:
ஏக:—ஒரே; த்வம்—நீர்; ஆத்மா—பரமாத்மா; புருஷ:—பரமபுருஷர்; புராண:—ஆதியானவர்; ஸத்ய:—முழு மெய்ப்பொருள்; ஸ்வயம்-ஜ்யோதி:—சுயமாகத் தோன்றியவர்; அனந்த:—முடிவற்றவர்; ஆத்ய:—ஆரம்பம் அற்றவர்; நித்ய:—நித்தியமானவர்; அக்ஷர:—அழிவற்றவர்; அஜஸ்ர-ஸுக:—அவரது ஆனந்தத்தினை தடை செய்ய முடியாது; நிரஞ்ஜன:—மாசற்றவர்; பூர்ண—பரிபூரணர்; அத்வய:—இரண்டற்றவர்; முக்த:—விடுதலை பெற்றவர்; உபாதித:—பௌதிக விஷயங்கள் அனைத்திலுமிருந்தும்; அம்ருத:—அமிர்தமானவர்.
நீர் ஒருவரே பரமாத்மா, ஆதி முழுமுதற் கடவுள், முழு மெய்ப்பொருள்-சுயமாகத் தோன்றியவர், ஆரம்பமும், முடிவும் அற்றவர் ஆவீர். நீர் நித்தியர், குற்றமற்றவர், பரிபூரணர், பகையற்றவர், பெளதிக விஷயங்களிலிருந்து விடுதலை பெற்றவரும் ஆவீர். உமது ஆனந்தத்திற்கு எந்த விதமானத் தடையுமில்லை. அதுபோல் பெளதிக மாசுக்களுடன் உமக்கு எந்தவிதமான தொடர்புமில்லை. உண்மையில் நீர் அழிவற்ற அமரத்துவ அமிர்தம் ஆவீர்.
பதம் 10.14.24
ஏவம்-விதம் த்வாம் ஸகலாத்மனாம் அபி
ஸ்வாத்மானம் ஆத்மாத்மதயா விசக்ஷதே
குர்வ்-அர்க-லப்தோபநிஷத்-ஸுசக்ஷுஷா
யே தே தரந்தீவ பவான்ருதாம்புதிம்
ஏவம்-விதம்—இவ்வாறு விளக்கப்பட்டிருக்கின்றபடி; த்வாம்—நீர்; ஸகல—அனைத்து; ஆத்மனாம்—ஆத்மாக்கள்; அபி—உண்மையில்; ஸ்வ-ஆத்மானம்—அதே ஆத்மா; ஆத்ம-ஆத்மதயா—பரமாத்மாவாக; விசக்ஷதே—அவர்கள் காண்கின்றனர்; குரு—ஆன்மீக குருவிடமிருந்து; அர்க—சூரியனைப் போன்றவர்; லப்த—பெறப்பட்ட; உபநிஷத்—இரகசிய ஞானம்; ஸு-சக்ஷுஷா—முழுமையான கண்களினால்; யே—யார்; தே—அவர்கள்; தரந்தி—கடப்பது; இவ—எளிதாக; பவ—பெளதிக வாழ்வின்; அன்ருத—உண்மையற்ற; அம்புதிம்—கடல்.
சூரியனைப் போன்ற ஆன்மீக குருவிடமிருந்து, ஞானத்தின் தெளிந்த பார்வை பெற்றிருப்பவனால் உம்மை, ‘இவ்வாறு அனைத்து ஆத்மாக்களினுள்ளும் ஆத்மாவாக விளங்கும் பரமாத்மாவாகப் பார்க்க முடியும். மேலும் உமது ஆதி வடிவத்தினை அறிந்து கொண்டவர்கள் மாயா மலிந்த வாழ்க்கைக் கடலினைக் கடக்கும் திறனுடையோராகின்றனர்.
பதம் 10.14.25
ஆத்மானம் ஏவாத்மதயாவிஜாநதாம்
தேனைவ ஜாதம் நிகிலம் ப்ரபஞ்சிதம்
ஜ்ஞானேன பூயோ’பி ச தத் ப்ரவீயதே
ரஜ்ஜ்வாம் அஹேர் போக-பவாபவௌ யதா
ஆத்மானம்—உம்மை; ஏவ—உண்மையில்; ஆத்மதயா—பரமாத்மாவாக; அவிஜாநதாம்—அறிந்து கொள்ளாதவர்கள்; தேன—அதனால்; ஏவ—மட்டும்; ஜாதம்—உண்டாகிறது; நிகிலம்—முழு; ப்ரபஞ்சிதம்—பௌதிக வாழ்க்கை; ஜ்ஞானேன—ஞானத்தினால்; பூய: அபி—மீண்டும் ஒரு முறை; ச—மற்றும்; தத்—அப்பெளதிக வாழ்க்கை; ப்ரவீயதே—மறைகிறது; ரஜ்ஜ்வாம்—ஒரு கயிற்றில்; அஹே:—ஒரு பாம்பினை; போக—உடலின்; பவ-அபவௌ—தெளிவாகத் தெரிதலும், மறைதலும்; யதா—போன்று.
ஒரு கயிற்றினைத் தவறாகப் பாம்பென்று கருதுவோன் அச்சமடைகிறான். எனினும் அது கயிறுதான் பாம்பல்ல என்று உணர்ந்து கொண்டபின் அச்சந்தவிர்க்கிறான். அதுபோல் உம்மை எல்லா ஆத்மாக்களிலும் இருக்கும் பரமாத்மாவாக அறிந்துகொள்ளாதவனுக்கு பரந்து பட்ட மாயா பௌதிக வாழ்க்கை உண்டாகிறது. ஆனால் உம்மைப் பற்றிய ஞானமோ அவ்வாழ்க்கை நீங்குவதற்குக் காரணமாகிறது.
பதம் 10.14.26
அஜ்ஞான-ஸம்ஞௌ பவ-பந்த-மோக்ஷெள
த்வௌ நாம நான்யௌ ஸ்த தே-ஜ்ஞ-பாவாத்
அஜஸ்ர சிதி ஆத்மனி கேவலே பரே
விசார்யமாணே தரணாவ் இவாஹனீ
அஞ்ஞான—அஞ்ஞானத்தினின்று தோன்றுவது; ஸம்ஞௌ—விஷயங்கள்; பவ-பந்த—பொளதிக வாழ்வின் பந்தம்; மோக்ஷெள—விடுதலை; த்வௌ—இரண்டு; நாம—உண்மையில்; ந—இல்லை; அன்யௌ—பிரிந்த; ஸ்த:—இருக்கின்றன; தே—உண்மை; ஜ்ஞ-பாவாத்—ஞானத்திலிருந்து; அஜஸ்ர-சிதி—அவர்களது ஞானம் தடையற்றது; ஆத்மனி—ஆத்மா; கேவலே—விஷயத்திலிருந்து நீங்கிய; பரே—தூய்மையுடைய; விசார்யமாணே—அவன் முறையாக வேறுபடுத்தப்படும்பொழுது; தரணெள—சூரியனுள்; இவ—போன்று; அஹனீ—இரவும் பகலும்.
பெளதிகத்தளை மற்றும் பௌதிக விடுதலை என்னும் இரு கருத்துக்களும் அறியாமையின் வெளிப்பாடுகளாகும். ஒருவன் தூய ஆத்மாவானது, ஜடத்திலிருந்து வேறானது மட்டுமல்ல; முழு உணர்வுடையதுமாகும் என்று சரியாகப் புரிந்துகொள்ளும்பொழுது, உண்மை ஞானத்தின் இலக்கிற்கு வெளியே இருந்த மேற்கூறிய கருத்துக்கள் உடனே மறைகின்றன. அச்சமயம், சூரியனது நோக்கில் இரவு மற்றும் பகலுக்கு எவ்வாறு முக்கியத்துவம் இல்லையோ அது போல் பந்தம், மற்றும் விடுதலைக்கு எந்தவிதமான முக்கியத்துவமும் இருப்பதில்லை.
பதம் 10.14.27
த்வாம் ஆத்மானம் பரம் மத்வா பரம் ஆத்மானம் ஏவ ச
ஆத்மா புனர் பஹிர் ம்ருக்ய அஹோ ‘ஜ்ஞ-ஜனதாஜ்ஞதா
த்வாம்—நீர்; ஆத்மானம்—உண்மையான ஆத்மா; பரம்—ஏதோ ஒன்று: மத்வா—கருதுகின்றனர்; பரம்—ஏதோ ஒன்றாக; ஆத்மானம்—உம்மை; ஏவ—உண்மையில்; ச—மற்றும்; ஆத்ம—பரமாத்மா; புன:—மீண்டும்; பஹி:—வெளியே; ம்ருக்ய:—தேடப்படக்கூடிய ஒன்று; அஹோ—ஓ; அஜ்ஞ—அறியாமை; ஜனதா—மனிதர்களின்; அஜ்ஞதா—அறியாமை.
நீர் மாயையிலிருந்து வெளிப்படும் ஏதோ ஓர் தோற்றமென்றும், உண்மையிலேயே ஆத்மாவாக இருக்கும் உம்மைப் பெளதிக உடலென்றும் கருதும் அறியாமை மிக்க மனிதர்கள் மூடத்தனத்தைச் சற்றுக் காண்பீராக. இம்மூடர்கள் பரமாத்மாவானது உமக்கு வெளியே தேடிக் கண்டுபிடிக்க வேண்டிய ஒன்று என்று முடிவு செய்கின்றனர்.
பதம் 10.14.28
அந்தர் பவே ‘னந்த பவந்தம் ஏவ
ஹி அதத் த்யஜந்தோ ம்ருகயந்தி ஸந்த:
அஸந்தம் அபி அந்தி அஹிம் அந்தரேண
ஸந்தம் குணம் தம் கிம் உயந்திஸந்த:
அந்த:-பவே—உடலிலுள்; அனந்த—ஓ, எல்லையற்ற பகவானே; பவந்தம்—உம்மை; ஏவ—உண்மையில்; ஹி—உறுதியாக; அதத்—எல்லாம் உம்மிடமிருந்து வேறானவை; த்யஜந்த:—புறக்கணித்து; ம்ருகயந்தி—தேடுகின்றனர்; ஸந்த:—தெய்வீகப் பக்தர்கள்; அஸந்தம்—உண்மையற்ற; அபி—கூட; அந்தி—அருகிலிருக்கும்; அஹிம்—(மாயையின் காரணமாக) ஒரு பாம்பு; அந்தரேண—இல்லாமல் (மறுத்தல்); ஸந்தம்—உண்மையான; குணம்—கயிறு; தம்—அது; கிம் உ—என்ன; யந்தி—போற்றுதல்; ஸந்த:—ஆன்மீகமாக இருப்பவர்கள்.
ஒ, எல்லையில்லாத பகவானே! தெய்வீக பக்தர்கள் உம்மிடமிருந்து எல்லாம் வேறாக இருக்கின்றன என்னும் எண்ணத்தைப் புறக்கணித்து தமது உடல்களினுள்ளேயே உம்மைத் தேடுகின்றனர். வேறுபாடு காணும் மனிதர்கள் தம் முன்னே கிடப்பது பாம்பு என்னும் மாயையிலிருந்து விடுபடும்வரை கயிற்றின் உண்மைத் தன்மையினை எங்ஙனம் போற்றுவர்?
பதம் 10.14.29
அதாபி தே தேவ பதாம்புஜ-த்வய-
ப்ரஸாத-வேஸானுக்ருஹீத ஏவ ஹி
ஜானாதி தத்த்வம் பகவன்-மஹிம்னோ
ந சான்ய ஏகோ ‘பி சிரம் விசின்லன்
அத—ஆகையினால்; அபி—உண்மையில்; தே—உமது; தேவ—பகவானே; பத-அம்புஜ-த்வய—இரு தாமரைத் திருவடிகளின்; ப்ரஸாத—கருணையின்; வேஸ—சிறுபகுதியினால்; அனுக்ருஹீத:—அனுக்கிரஹிக்கப்பட்டால்; ஏவ—நிச்சயமாக; ஹி—உண்மையில்; ஜானாதி—ஒருவன் அறிகிறான்; தத்த்வம்—உண்மை; பகவத்—முழுமுதற் கடவுளின்; மஹிம்ன:—மகிமையின்; ந—இல்லை; ச—மற்றும்; அன்ய:—பிறிதொன்று; ஏக:—ஒன்று; அபி—இருந்த போதிலும்; சிரம்—நீண்ட காலத்திற்கு; விசின்லன்—கற்பனையாக ஊகித்தல்.
போற்றுதற்குரிய பகவானே! உமது தாமரைத் திருவடிகளின் அணுவளவு கருணையினை ஒருவன் பெற்றால்கூட அவனால் உமது மகிமையினைப் புரிந்துகொள்ள முடியும். இதற்கு மாறாக வேதத்தினை நீண்ட நெடுங்காலமாகக் கற்றவர்களாக இருப்பினும், அவர்கள் உம்மை யூக அறிவினால் அறிய முயற்சிப்பார்களேயானால் அவர்களால் நிச்சயம் உம்மை அறிய முடியாது.
பதம் 10.14.30
தத் அஸ்து மே நாத ஸ பூரி-பாகோ
பவே ‘த்ர வான்யத்ர து வா திரஸ்சாம்
யேனாஹம் ஏகோ ‘பி பவஜ்-ஜனானாம்
பூத்வா நிஷேவே தவ பாத-பல்லவம்
தத்—ஆகையினால்; அஸ்து—ஆகட்டும்; மே—எனது; நாத—ஓ, நாதனே; ஸ:—அது; பூரி-பாக:—சிறந்த பாக்கியம்; பவே—பிறப்பில்; அத்ர—இந்த; வா—அல்லது; அன்யத்ர—வேறு எதுவாகப் பிறந்தாலும்; து—உண்மையில்; வா—அல்லது; திரஸ்சம்—விலங்குகளுக்கிடையே; யேன—அதனால்; அஹம்—நான்; ஏக:—ஒன்று; அபி—கூட; பவத்—அல்லது உமது; ஜனானாம்—பக்தர்கள்; பூத்வா—ஆகின்றனர்; நிஷேவே—நான் முற்றிலும் தொண்டில் ஈடுபடுவேன்; தவ—உமது; பாத-பல்லவம்—தாமரைத் திருவடி.
ஆகையினால் போற்றுதற்குரிய பகவானே! இப்பிறப்பில் நான் பிரம்மாவாக இருப்பினும் அல்லது மறுபிறப்பில் நான் எதுவாக பிறப்பினும் உமது பக்தர்களில் ஒருவனாக நான் எண்ணப்படும் பாக்கியம் பெறவேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன். நான் எப்பிறப்புப் பெற்றாலும், ஏன், விலங்காகப் பிறப்பினும் கூட உமது பக்தித்தொண்டில் மட்டுமே நான் ஈடுபட வேண்டும் என்றும் பிரார்த்திக்கின்றேன்.
பதம் 10.14.31
அஹொ ‘தி-தன்யா வ்ரஜ-கோ-ரமண்ய:
ஸ்தன்யாம்ருதம் பீதம் அதீவ தே முதா
யாஸாம் விபோ வத்ஸதராத்மஜாத்மனா
யத்-த்ருப்தயே ‘த்யாபி ந சாவம் அத்வரா:
அஹோ—ஓ; அதி-தன்ய:—மிகவும் பாக்கியமுடைய; வ்ரஜ—பிருந்தாவனத்தின்; கோ—பசுக்கள்; ரமண்ய:—மற்றும் கோபியர்கள்; ஸ்தன்ய—முலைப்பால்; அம்ருதம்—அது அமிர்தம் போன்றது; பீதம்—பருகினீர்; அதீவ—முற்றிலும்; தே—உம்மால்; முதா—திருப்தியுடன்; யாஸாம்—அவற்றின்; விபோ—ஓ, வல்லமைமிக்க பகவானே; வத்ஸதர-ஆத்மஜ-ஆத்மனா—கன்றுகள் மற்றும் ஆயர்குலப் பெண்களின் மைந்தர்கள் வடிவில்; யத்—அவர்களது; த்ருப்தயே—திருப்திக்காக; அத்ய அபி—இப்போது வரை; ந—இல்லை; ச—மற்றும்; அவம்—போதுமான; அத்வரா:—வேத வேள்விகள்.
ஓ, எல்லாம் வல்ல இறைவனே! பிருந்தாவனத்திலுள்ள பசுக்களும், கோபிகா ஸ்திரீகளும் எத்துணை பாக்கியசாலிகள். நீர் கன்றுகளைப் போன்றும், அவர்களது குழந்தைகளைப் போன்றும் உருமாறி, உமக்கு முழு திருப்தி ஏற்படும் வரையில் அவர்களின் முலைப்பால் என்னும் அமிர்தம் உண்டீர். ஆதிகாலந்தொட்டு, இன்று வரையிலும் செய்யப்படும் வேத வேள்விகள் கூட அத்துணை திருப்தியளித்ததில்லை.
பதம் 10.14.32
அஹோ பாக்யம் அஹோ பாக்யம் நந்த-கோப-வ்ரஜெளகஸாம்
யன்-மித்ரம் பரமானந்தம் பூர்ணம் ப்ரஹ்ம ஸநாதனம்
அஹோ—ஓ, என்ன பெரிய; பாக்யம்—பாக்கியம்; அஹோ—என்ன பெரிய; பாக்யம்—பாக்கியம்; நந்த—மகாராஜா நந்தன்; கோப—ஆயர்குலத்தோர்; வ்ரஜ-ஓகஸாம்—விரஜ பூமியில் வசிப்போர்; யத்—அவர்களின்; மித்ரம்—நண்பன்; பரம ஆனந்தம்—பரமானந்தம்; பூர்ணம்—முழுமையான; ப்ரஹ்ம—முழு மெய்ப்பொருள்; ஸநாதனம்—நித்தியமான.
ஓ, நந்த மகாராஜனும், விரஜ பூமியில் வசிப்போரும் எத்துணை பாக்கியசாலிகள்! அவர்களது அதிர்ஷ்டத்திற்கு அளவே இல்லை. ஏனென்றால் முழு மெய்ப்பொருளாகவும் பரமானந்தத்திற்கு ஆதாரமான பரப்பிரம்மமாக இருப்பவரும் அல்லவா அவர்களது நண்பனாக இருக்கின்றனர்.
பதம் 10.14.33
ஏஷாம் து பாக்ய-மஹிமாச்யுத தாவத் ஆஸ்தாம்
ஏகாதஸைவ ஹி வயம் பத பூரி-பாக:
ஏதத்-த்ருஷீக-சஷகைர் அஸக்ருத் பிபமா:
ஸர்வாதயோ ‘ங்க்ரி-உதஜ-மத்வ்-அம்ருதாஸவம் தே
ஏஷாம்—இவர்களின் (பிருந்தாவனத்திலுள்ளோர்); து—எவ்வாறேனும்; பாக்ய—பாக்கியம்; மஹிமா—மகிமை; அச்யுத—ஒ, குற்றமற்ற பரமபுருஷ பகவானே; தாவத்—அவ்வளவு; ஆஸ்தாம்—ஆகட்டும்; ஏகாதஸ—பதினோரு; ஏவ ஹி—உண்மையில்; வயம்—நாங்கள்; பத—ஓ; பூரி-பாகா:—மிகுந்த பாக்கியசாலிகள்; ஏதத்—இப்பக்தர்களின்; ஹ்ருஸீக—புலன்களினால்; சஷகை:—(அவை) பருகும் குவளைகள்; அஸக்ருத்—தொடர்ந்து; பிபமா:—நாங்கள் பருகிக்கொண்டிருக்கின்றோம்; ஸர்வ-ஆதய:—சிவபெருமானும் பிற தேவர்களும்; அங்க்ரி-உதஜ—தாமரைத் திருவடிகளின்; மது—மதுவினை; அம்ருதாஸவம்—ஆணவம் அமிர்தமானது; தே—உமது.
பிருந்தாவனத்திலுள்ளோரின் பாக்கியமானது கற்பனைக்கும் எட்டாததாக இருந்தபோதிலும், சிவபெருமானின் தலைமையின் கீழ் பல்வேறு புலன்களுக்கும் ஆதிபத்தியத் தேவர்களாக விளங்கும் நாங்கள் பதினோரு தேவர்களும் மிகுந்த பாக்கியசாலிகளே ஆவோம், ஏனென்றால் பிருந்தாவனத்தைச் சேர்ந்த இப்பக்தர்களின் புலன்கள் என்னும் குவளைகளின் மூலமே நாங்கள் உமது தாமரைத் திருவடிகளிலிருந்து வரும் அமிர்தத்தினைத் தொடர்ந்து பருகிக் கொண்டிருக்கின்றோம்.
பதம் 10.14.34
தத் பூரி-பாக்யம் இஹ ஜன்ம கிம் அபி அடவ்யாம்
யத் கோகுலே ‘பி கதமாங்க்ரி-ரஜோ-‘பிஷேகம்
யஜ்-ஜீவிதம் து நிகிலம் பகவான் முகுந்தன்
த்வ அத்யாபி யத்-பத-ரஜ: ஸ்ருதி-ம்ருக்யம் ஏவ
தத்—அது; பூரி-பாக்யம்—மிகச் சிறந்த பாக்கியம்; இஹ—இங்கே; ஜன்ம—பிறப்பு; கிம் அபி—எதுவாயினும்; அடவ்யாம்—வனத்தில் (பிருந்தாவனம்); யத்—அது; கோகுலே—கோகுலத்தில்; அபி—கூட; கதம—யாரேனும் (பக்தர்களின்); அங்க்ரி—பாதங்களின்; ரஜ:—தூசியினால்; அபிஷேகம்—நீராடுதல்; யத்—அவர்களது; ஜீவிதம்—வாழ்க்கை; து—உண்மையில்; நிகிலம்—முழுவதும்; பகவான்—முழுமுதற் கடவுள்; முகுந்த:—பகவான் முகுந்தன்; து—ஆனால்; அத்ய அபி—இன்று வரை; யத்—அவரது; பத-ரஜ:—பாத தூசியின்; ஸ்ருதி—வேதங்களினால்; ம்ருக்யம்—தேடப்படுகிறது; ஏவ—உறுதியாக.
கோகுலத்தில் ஏதேனும் ஒன்றாக நான் பிறந்து அங்கு வசிப்போரின் தாமரைத் திருவடிகளிலுள்ள தூசி என் தலைமீது விழுமானால் அதுவே எனக்குப் பெரும் பாக்கியமாகும். அவர்களது உயிரும், ஆத்மாவாகவும் இருப்பவர் முழுமுதற் கடவுளான முகுந்தனே ஆவார். அவரது தாமரைத் திருவடிகளின் தூசியினை வேத மந்திரங்கள் இன்னும் தேடிக்கொண்டேயிருக்கின்றன.
பதம் 10.14.35
ஏஷாம் கோஷ-நிவாஸினாம் உதபவான் கிம்தேவ ராதேதி நஸ்
சேதோவிஸ்வ-பவாத் பலம் த்வத்-அபாரம் குத்ராபி அயன் முஹ்யந்தி
ஸத்-வேஷாத் இவ பூதனாபி ஸ-குலா த்வாம் ஏவ தேவாபிதா
யத்-தாமார்த-ஸுஹ்ருத்-ப்ரியாத்ம-தனய-ப்ரா-ணாஸயஸ்த்வத்-க்ருதே
ஏஷாம்—இவை; கோஷ-நிவாஸினாம்— ஆயர்குலத்தைச் சேர்ந்தோர்; உத—உண்மையில்; பவான்—உமது மேலாண்மை; கிம்—என்ன; தேவ—ஒ, முழுமுதற் கடவுளே; ராதா—அளிக்கும்; இதி—இவ்வாறு நினைந்து; ந:—எமது; சேத:—மனம்; விஸ்வ-பவாத்—ஆசிகள் அனைத்திற்கும் ஆதாரமானவர்; பலம்—ஒரு பலன்; த்வத்—உம்மைவிட; அபரம்—பிற; குத்ர அபி—வேறெங்கும்; அயத்—கருதுதல்; முஹ்யதி—குழப்பமுறுதல்; ஸத்வேஷாத்—ஒரு பக்தையைப் போல் நடித்துக்கொண்டு; இவ—உண்மையில்; பூதனா—பூதனா என்னும் அரக்கி; அபி—கூட; ஸ-குலா—அவளது உறவினர்களான பகாசுரன் மற்றும் அகாசுரனுடன்; த்வாம்—நீர்; ஏவ—உறுதியாக; தேவ—ஓ, பகவானே; ஆபிதா—அடைவதற்காக மேற்கொள்ளப்பட்ட; யத்—அவர்களது; தாம—இல்லங்கள்; அர்த—செல்வம்; ஸுஹ்ருத்—நண்பர்கள்; ப்ரிய—பிரியமான உறவினர்கள்; ஆத்ம—உடல்கள்; தனய—குழந்தைகள்; ப்ராண—உயிர்க்காற்று; ஆஸயா:—மற்றும் மனங்கள்; த்வத்-க்ருதே—உமக்கு அர்ப்பணிக்கப்பட்ட.
எங்கும் உம்மைக் காண முடியும் என்பதைக் காட்டிலும், வேறு என்ன நன்மை பெறலாம் என்று சிந்திக்க முயன்றதின் விளைவினால் எனது மனம் குழப்பமுற்றது. எல்லா ஆசிகளின் உருவமாக நீரே விளங்குகின்றீர். அவ்வாசிகளை நீர் பிருந்தாவனத்திலுள்ள ஆயர்குலத்தினர்க்கே அருள்கின்றீர். பக்தையைப் போல் வேடமிட்டு வந்த பூதனாவிற்கும் அவளது உறவினர்க்கும் நீர் ஏற்கெனவே உம்மை அளித்துவிட ஏற்பாடு செய்திருந்தீர். ஆகையினால் தமது இல்லங்கள், செல்வம், நண்பர்கள், பாசமிக்க உறவினர்கள், உடல்கள், குழந்தைகள், மற்றும் தமது உயிர், மனம் எல்லாவற்றையும் உமக்கே அர்ப்பணித்திருக்கும் இப்பிருந்தாவனத்திலுள்ள பக்தர்களுக்கு அளிப்பதற்கு உம்மிடம் வேறு என்ன இருக்கிறது?
பதம் 10.14.36
தாவத் ராகாதய: ஸ்தேனாஸ் தாவத் காரா-க்ருஹம் க்ருஹம்
தாவன் மோஹோ ‘ங்க்ரி-நிகடோ யாவத் க்ருஷ்ண ந தே ஜனா:
தாவத்—அதுவரை; ராக-ஆதய:—பெளதிகப் பற்று போன்றவை; ஸ்தேனா:—திருடர்கள்; தாவத்—இதுவரை; காரா-க்ருஹம்—ஒரு சிறைக்கொட்டடி; க்ருஹம்—ஒருவனது இல்லம்; தாவத்—அதுவரை; மோஹ:—உறவினர் மீதான மோகம்; அங்க்ரி—அவர்களது கால்களில்; நிகட:—விலங்குகள்; யாவத்—அதுவரை; க்ருஷ்ண—ஓ, பகவான் கிருஷ்ணரே; ந—இல்லை; தே—உமது (பக்தர்கள்); ஜனா:—எவரும்.
போற்றுதற்குரிய பகவான் கிருஷ்ணரே! மக்கள் உமது பக்தர்களாகாத வரையில் அவர்களது உலகியல் பற்றுக்களும், விருப்பங்களும் திருடர்களாகவும், அவர்களது இல்லங்கள் சிறைக் கொட்டடிகளாகவும், அவர்களது உறவினர்கள்மீது அவர்கள் கொண்ட பாசம் கால்நடை விலங்குகளாகவும் இருக்கும்.
பதம் 10.14.37
ப்ரபஞ்சம் நிஷ்பிரபஞ்சோ ‘பி விடம்பயஸி பூ-தலே
ப்ரபன்ன-ஜனதானந்த-ஸந்தோஹம் ப்ரதிதும் ப்ரபோ
ப்ரபஞ்சம்—பௌதிகமான அது; நிஷ்ப்ரபஞ்ச:—பௌதிக வாழ்க்கைக்கு முற்றிலும் அப்பாற்பட்டது; அபி—இருந்தபோதிலும்; விடம் பயஸி—நீர் பாவனை செய்கிறீர்; பூ-தலே—பூதலத்தில்; ப்ரபன்ன—சரணடைந்திருக்கும்; ஜனதா—மக்களின்; ஆனந்த-ஸந்தோஹம்—பல்வேறு வகையான உயர்ந்த ஆனந்தங்கள்; ப்ரதிதும்—பரப்புவதற்காக; ப்ரபோ—பிரபுவே.
ஓ, பிரபுவே, உலக வாழ்க்கையோடு உமக்கு எந்தவிதமான தொடர்பும் இல்லையென்ற போதிலும், உம்மைச் சரணடைந்திருக்கும் பல்வகை உயர்ந்த ஆனந்தங்களுக்காக நீர் இப்பூமிக்கு வந்து உலக வாழ்க்கையினைப் பாவனை செய்கின்றீர்.
பதம் 10.14.38
ஜானந்த ஏவ ஜானந்து கிம் பஹூக்த்யா ந மே ப்ரபோ
மனஸோ வபுஷோ வாசோ வைபவம் தவ கோசர:
ஜானந்த:—உமது அளவற்ற சக்தியை அறிந்துள்ளோம் என்று நினைப்பவர்கள்; ஏவ—உறுதியாக; ஜானந்து—அவ்வாறே நினைக்கட்டும்; கிம்—என்ன பயன்; பஹு-உக்த்யா—பல வார்த்தைகளுடன்; ந—இல்லை; மே—எனது; ப்ரபோ—ஓ, பிரபுவே; மனஸ:—மனதின்; வபுஷோ:—உடலின்; வாச:—வார்த்தைகள்; வைபவம்—வைபவங்கள்; தவ—உமது; கோ-சர:—வரம்பிற்குள்.
சிலர் கூறுகின்றனர்: “கிருஷ்ணரைப் பற்றி எங்களுக்கு எல்லாம் தெரியும்” என்று அவர்கள் அவ்வாறே நினைக்கட்டும், என்னைப் பொருத்தவரையில் இவ்விஷயத்தைப் பற்றி நான் அதிகம் பேச விரும்பவில்லை. ஆயினும் பகவானே, என்னால் ஒன்று மட்டும் கூறமுடியும். உமது வைபவங்கள் அனைத்தும் எனது மனம், வாக்கு, காயத்திற்கு அப்பாற்பட்டவை என்று.
பதம் 10.14.39
அனுஜானீஹி மாம் க்ருஷ்ண ஸர்வம் த்வம் வேத்ஸி ஸர்வ-த்ருக்
த்வம் ஏவ ஜகதாம் நாதோ ஜகத் ஏதத் தவார்பிதம்
அனுஜானீஹி—விடை கொடுப்பீராக; மாம்—எனக்கு; க்ருஷ்ண—ஓ, பகவானே கிருஷ்ணரே; ஸர்வம்—எல்லாம்; த்வம்—நீர்; வேத்ஸி—அறிவீர்; ஸர்வ-த்ருக்—எல்லாவற்றையும் பார்க்கின்றவராகவும்; த்வம்—நீர்; ஏவ—மட்டும்; ஜகதாம்—அனைத்துப் பிரபஞ்சங்களும்; நாத:—நாதனே; ஜகத்—பிரபஞ்சம்; ஏதத்—இந்த; தவ—உமக்கு; அர்பிதம்—அர்ப்பணிக்கப்படுகிறது.
பதம் 10.14.40
ஸ்ரீ-க்ருஷ்ண வ்ருஷ்ணி-குல-புஷ்கர-ஜோஷ-தாயின்
க்ஷ்மா-நிர்ஜர-த்விஜ-பஸூததி-வ்ருத்தி-காரின்
உத்தர்ம-ஸார்வர-ஹர க்ஷிதி-ராக்ஷஸ-த்ருக்
ஆ-கல்பம் ஆர்கம் அர்ஹன் பகவன் நமஸ் தே
ஸ்ரீ-க்ருஷ்ண—ஓ, பகவான் கிருஷ்ணரே; வ்ருஷ்ணி-குல—யது குலத்தின்; புஷ்கர—தாமரை மலர்; ஜோஷ—இன்பம்; தாயின்—ஓ, நீரே அருள்கின்றீர்; க்ஷ்மா—பூமியின்; நிர்ஜர—தேவர்கள்; த்விஜ—அந்தணர்கள்; பஸூ—விலங்குகள்; உததி—மகாசமுத்திரங்கள்; வ்ருத்தி—அதிகரித்தல்; காரின்—ஓ, நீரே காரணம் ஆவீர்; உத்தர்ம—நாத்திகக் கொள்கைகள்; ஸார்வர—இருளின்; ஹர—ஓ, நீக்குபவரே; க்ஷிதி—பூமியில்; ராக்ஷஸ—அசுரர்களின்; த்ருக்—பகைவரே; ஆகல்பம்—இப்பிரபஞ்சத்தின் இறுதி வரையிலும்; ஆ-அர்கம்—சூரியன் ஒளிரும் வரையிலும்; அர்ஹன்—ஓ, வணங்குதற்குரிய பரம தெய்வமே; பகவன்—ஓ, முழுமுதற் கடவுளே; நம:—நான் எனது மரியாதைக்குரிய வந்தனங்களை அர்ப்பணிக்கிறேன்; தே—உமக்கு.
போற்றுதற்குரிய பகவானே, நீர் தாமரை மலர் போன்றிருக்கும் விருஷ்ணி குலத்திற்கு இன்பம் அருளி, பூமியினை உடைய மகா சமுத்திரங்களாகவும், தேவர்களாகவும், அந்தணர்களாகவும், பசுக்களாகவும் விரிவடைந்திருக்கின்றீர். அதர்மத்தின் இருட்டினை அறவே நீக்கி இப்பூமியில் தோன்றிய அசுரர்களை எதிர்க்கின்றீர். ஓ, முழுமுதற் கடவுளே! இப்பிரபஞ்சம் இருக்கும் வரையிலும், சூரியன், ஒளி வீசும் வரையிலும் நான் எனது வந்தனங்களை உமக்கு அர்ப்பணிப்பேன்.
பதம் 10.14.41
ஸ்ரீ-ஸுக உவாச
இதி அபிஷ்டூய பூமானம் த்ரி: பரிக்ரம்ய பாதயோ:
நத்வாபிஷ்டம் ஜகத்-தாதா ஸ்வ-தாம ப்ரத்யபத்யத
ஸ்ரீ-ஸுக: உவாச—ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்; இதி—இவ்வாறு; அபிஷ்டூய—போற்றிப் புகழ்ந்து; பூமானம்—எல்லையற்ற பரமபுருஷ பகவானுக்கு; த்ரி:—மூன்று முறை; பரிக்ரம்ய—வலம் வந்து; பாதயோ:—அவரது பாதங்களில்; நத்வா—வீழ்ந்து; அபீஷ்டம்—விரும்பினார்; ஜகத்—பிரபஞ்சத்தின்; தாதா—படைப்பவர்; ஸ்வ-தாம—தனது இருப்பிடத்திற்கு; ப்ரத்யபத்யத—திரும்பிச் சென்றார்.
சுகதேவ கோஸ்வாமி கூறினார்: இவ்வாறு வழிபாடு செய்து, பிரம்மதேவன் தனது போற்றுதற்குரிய பகவானான முழுமுதற் கடவுளை மும்முறை வலம் வந்து அவரது தாமரைத் திருவடிகளில் வீழ்ந்து வணங்கினார். பின்னர், இப்பிரபஞ்சத்தைப் படைப்பதற்காக நியமிக்கப்பட்டிருக்கும் பிரம்மதேவன் தனது இருப்பிடத்திற்குத் திரும்பிச் சென்றார்.
பதம் 10.14.42
ததோ ‘னுஜ்ஞாப்ய பகவான் ஸ்வ-புவம் ப்ராக் அவஸ்திதான்
வத்ஸான் புளினம் ஆனின்யே யதா-பூர்வ-ஸகம் ஸ்வகம்
ததோ:—பிறகு; அனுஜ்ஞாப்ய—அனுமதியளித்து; பகவான்—முழுமுதற் கடவுள்; ஸ்வ-புவம்—அவரது புதல்வருக்கு (பிரம்மா); ப்ராக்—முன்பிருந்த; அவஸ்திதான்—இருத்தல்; வத்ஸான்—கன்றுகள்; புளினம்—நதிக்கரை; ஆனின்யே—அவர் கொணர்ந்தார்; யதா-பூர்வ—முன்பிருந்தது போல்; ஸகம்—அவரது நண்பர்கள் இருந்த இடத்திற்கு; ஸ்வகம்—அவருக்குரிய.
தனது புதல்வரான பிரம்மதேவன் செல்வதற்கு விடையளித்துவிட்டு முழுமுதற் கடவுள், ஒரு வருடத்திற்கு முன்பு எந்த இடத்தில் இருந்தனவோ, அதே இடத்தில் இருந்த கன்றுகளைத் தானும் தனது ஆயர்குல நண்பர்களும் முன்பு உணவருந்திய இடமான நதிக்கரைக்கு அவற்றை அழைத்து வந்தார்.
பதம் 10.14.43
ஏகஸ்மின்ன் அபி யாதே ‘ப்தே ப்ராணேஸம் சாந்தராத்மன: க்ருஷ்ண-மாயாஹதா ராஜன் க்ஷணார்தம் மேநிரே ‘ர்பகா:
ஏகஸ்மின்—ஒன்று; அபி—இருந்தபோதிலும்; யாகுத—கழிந்தது; அப்தே—வருடம்; ப்ராண-ஈஸம்—அவர்களது வாழ்வின் பகவான்; ச—மற்றும்; அந்தரா—இன்றி; ஆத்மன:—அவர்களின்; க்ருஷ்ண—பகவான் கிருஷ்ணரின்; மாயா—மாயாசக்தியினால்; ஆஹதா:—மறைக்கப்பட்டு; ராஜன்—ஓ, மன்னனே; க்ஷண-அர்தம்—அரைக் கணப்பொழுது; மேநிரே—அவர்கள் எண்ணினர்; அர்பகா:—சிறுவர்கள்.
ஓ, மன்னனே, அவர்களது வாழ்வின் தெய்வமான பகவானைப் பிரிந்து ஒரு வருட காலம் ஆனபோதிலும், அவர்கள் பகவான் கிருஷ்ணரின் மாயா சக்தியினால் மறைக்கப்பட்டிருந்த காரணத்தினால், ஒரு வருட காலத்தினை அவர்கள் அரைக் கணமாகவே கருதினர்.
பதம் 10.14.44
கிம் கிம் ந விஸ்மரந்தீஹ மாயா-மோஹித-சேதஸ:
யன்-மோஹிதம் ஜகத் ஸர்வம் அபீக்ஷ்ணம் விஸ்ம்ருதாத்மகம்
கிம் கிம்—உண்மையில் என்ன; ந விஸ்மரந்தி—மனிதர்கள் மறப்பதில்லை; இஹ—இவ்வுலகில்; மாயா-மோஹித—மாயா மோகத்தினால்; சேதஸ:—அவர்களது மனம்; யத்—அதன்மூலம்; மோஹிதம்—குழப்பமுற்று; ஜகத்—உலகம்; ஸர்வம்—முழுவதும்; அபீக்ஷ்ணம்—தொடர்ந்து; விஸ்ம்ருத-ஆத்மகம்—ஒருவன் தன்னையே மறக்கும்படிச் செய்யும்.
பகவானது மாயா சக்தியினால் குழப்பமுற்றிருப்போரின் மனம் உண்மையில் எதனைத்தான் மறப்பதில்லை? அம்மாயாசக்தியால் இப்பிரபஞ்சம் முழுவதும் நித்திய குழப்பத்தில் ஆழ்கிறது, இச்சூழ்நிலையின் மறதியினால் ஒருவன் தன்னையே அறிந்துகொள்ள முடியாதவனாகிறான்.
பதம் 10.14.45
ஊசுஸ் ச ஸுஹ்ருத: க்ருஷ்ணம் ஸ்வ்-ஆகதம் தே ‘தி-ரம்ஹஸா
நைகோ ‘பி அபோஜி கவள ஏஹித: ஸாது புஜ்யதாம்
ஊசு:—அவர்கள் கூறினர்; ச—மேலும்; ஸுஹ்ருத:—நண்பர்கள்; க்ருஷ்ணம்—பகவான் கிருஷ்ணரிடம்; ஸு-ஆகதம்—திரும்பி வந்து விட்டாய்; தே—நீங்கள்; அதி-ரம்ஹஸா—வெகுவிரைவில்; ந—இல்லை; ஏக:—ஒன்று; அபி—கூட; அபோஜி—உண்ணவில்லை; கவள:—உருண்டை; ஏஹி—அருள்கூர்ந்து வா; இத:—இங்கே; ஸாது—முறையாக; புஜ்யதாம்—உனது உணவினைக் கொள்வாயாக.
ஆயர்குலச் சிறுவர்கள் பகவான் கிருஷ்ணரிடம் கூறினர்: நீ மிக விரைவில் திரும்பி வந்துவிட்டாய். நீயின்றி ஓர் உருண்டை உணவு கூட நாங்கள் உண்ணவில்லை. இங்கே வந்து அமர்ந்து, வேறு சிந்தனை எதுவுமின்றி உனது உணவினை உண்பாயாக.
பதம் 10.14.46
ததோ ஹஸன் ஹ்ருஷீகேஸோ ‘ப்யவஹ்ருத்ய ஸஹார்பகை:
தர்ஸயம்ஸ் சர்மாஜகரம் ந்யவர்தத வனாத் வ்ரஜம்
தத:—பிறகு; ஹஸன்—புன்னகையுடன்; ஹ்ருஷீகேஸ:—அனைவரின் புலன்களுக்கும் தலைவரான பகவான் கிருஷ்ணர்; அப்யவஹ்ருத்ய—உணவு உண்டு; ஸஹ—உடன்; அர்பகை:—ஆயர்குலச் சிறுவர்கள்; தர்ஸயன்—காண்பித்தார்; சர்ம—தோல்; அஜகரம்—அகாசுரன் என்னும் மலைப்பாம்பின்; ந்யவர்தத—அவர் திரும்பினார்; வனாத்—வனத்திலிருந்து; வ்ரஜம்—விரஜ கிராமத்திற்கு.
பிறகு பகவான் ஹிருஸீகேஸர் புன்னகையுடன், தனது ஆயர்குல நண்பர்களுடன் சேர்ந்து உணவு அருந்தினார். அவர்கள் காட்டிலிருந்து விரஜத்திற்குத் திரும்பி வந்துகொண்டிருந்தபொழுது பகவான் கிருஷ்ணர் ஆயர்குலச் சிறுவர்களிடம் மடிந்துபோன அகாசுரன் என்னும் மலைப்பாம்பின் தோலினைக் காட்டினார்.
பதம் 10.14.47
பர்ஹ-ப்ரஸுன-வன-தாது-விசித்ரிதாங்க:
ப்ரோத்தாம-வேணு-தல-ஸ்ருங்க-ரவோத்ஸவாட்ய:
வத்ஸான் க்ருணன்ன் அனுக-கீத-பவித்ர-கீர்திர்
கோபீ-த்ருக்-உத்ஸவ-த்ருஸி: ப்ரவிவேஸ கோஷ்டம்
பர்ஹ—மயிலிறகுகளுடன்; ப்ரஸுன—மலர்கள்; வன-தாது—வனதாதுக்கள்; விசித்ரித—அலங்கரிக்கப்பட்டு; அங்க:—அவரது உன்னதமேனி; ப்ரோத்தாம—சிறந்த; வேணு தல—மூங்கில் மரத்திலிருந்து செய்யப்பட்ட; ஸ்ருங்க—புல்லாங்குழலின்; ரவ—ஒலியினால்; உத்ஸவ—இனிமையுடன்; ஆட்ய:—ஒளியுடைய; வத்ஸான்—கன்றுகள்; க்ருணன்—அழைத்தல்; அனுக—அவரது துணைவர்களால்; கீத—பாடிய; பவித்ர—புனிதப்படுத்தும்; கீர்திர்—அவரது கீர்த்திகள்; கோபீ—ஆயர்குலப் பெண்டிர்; த்ருக்—கண்களுக்கு; உத்ஸவ—ஒரு விழா; த்ருஸி:—அவரது காட்சி; ப்ரவிவேஸ—அவர் புகுந்தார்; கோஷ்டம்—ஆயர்பாடியுள்.
பகவான் கிருஷ்ணரின் உன்னத உடலானது மயிலிறகினாலும், மலர்களினாலும், காட்டிலுள்ள பிற அழகிய பொருட்களினாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அவரது புல்லாங்குழலிலிருந்து எழுந்த நாதம் மிக இனிமையாக ஒலித்தது. அவர் தனது கன்றுகளைப் பெயர் சொல்லி அழைத்தார். அவரது பெருமைகளை ஓதுவதின்மூலம் அவரது நண்பர்களான ஆயர்குலச் சிறுவர்கள் உலகம் முழுவதையும் புனிதப்படுத்தினர். இவ்வாறு பகவான் கிருஷ்ணர் நந்த மகாராஜாவின் ஆயர்பாடியினுள் வந்தாரென்றால் அவரது வரவு ஆயர்குலப் பெண்களின் கண்களுக்குப் பெருவிருந்தாகும்.
பதம் 10.14.48
அத்யானேன மஹா-வ்யாவோ யஸோதா-நந்த-ஸுனுனா
ஹதோ ‘விதா வயம் சாஸ்மாத் இதி பாலா வ்ரஜே ஜகு:
அத்ய—இன்று; அனேன—அவரால்; மஹா-வ்யாவ:—ஒரு பெரிய பாம்பு; யஸோதா—யசோதையின்; நந்த—நந்த மகாராஜா; ஸுனுனா—மைந்தனால்; ஹத:—கொல்லப்பட்ட; அவிதா:—காப்பாற்றப்பட்ட; வயம்—நாம்; ச—மற்றும்; அஸ்மாத்—அசுரனிடமிருந்து; இதி—இவ்வாறு; பாலா:—சிறுவர்கள்; வ்ரஜே—பிருந்தாவனத்தில்; ஜகு:—பாடினர்.
ஆயர்குலச் சிறுவர்கள் விரஜத்தை அடைந்தவுடன் அவர்கள் “கொடிய பாம்பினைக் கொன்று, இன்று கிருஷ்ணன் எங்களைக் காத்தான்” என்று பாடினர். அச்சிறுவர்களில் சிலர் கிருஷ்ணரை யசோதையின் மைந்தனென்றும், சிலர் நந்த மகாராஜாவின் மைந்தனென்றும் கூறினர்.
பதம் 10.14.49
ஸ்ரீ-ராஜோவாச
ப்ரஹ்மன் பரோத்பவே க்ருஷ்ணே இயான் ப்ரேமா கதம் பவேத்
யோ ‘பூத-பூர்வஸ் தோகேஷு ஸ்வோத்பவேஷ்வ் அபி கத்யதாம்
ஸ்ரீ-ராஜா உவாச—அரசர் கூறினார்; ப்ரஹ்மன்—ஓ, அந்தணராகிய சுகதேவரே; பர-உத்பவே—அடுத்தவருக்குப் பிறந்த; க்ருஷ்ணே—பகவான் கிருஷ்ணரை; இயான்—இவ்வளவு; ப்ரேமா—பாசம்; கதம்—எவ்வாறு; பவேத்—முடியும்; ய:—இது; அபூத பூர்வ—முன்னெப்போதும் இல்லாதது; தோகேஷு—குழந்தைகளுக்கு; ஸ்வ-உத்பவேஷு—அவர்களது சொந்தக் குழந்தைகள்; அபி—கூட; கத்யதாம்—அருள்கூர்ந்து விளக்குவீராக.
பரீக்ஷித்து மன்னர் கேட்டார் “ஓ, அந்தணரே, தங்களுக்குப் பிறந்த குழந்தைகளின்மீதும் காட்டாத பாசத்தை, அடுத்தவருக்குப் பிறந்த கிருஷ்ணரின் மீது ஆயர்குலப் பெண்களால் எவ்வாறு காட்ட முடிந்தது? இதனை அருள் கூர்ந்து விளக்குவீராக.”
பதம் 10.14.50
ஸ்ரீ-ஸுக உவாச
ஸர்வேஷாம் அபி பூதானாம் ந்ருப ஸ்வாத்மைவ வல்லப:
இதரே ‘பத்ய-வித்தாத்யஸ் தத்-வல்லபதயைவ ஹி
ஸ்ரீ-ஸூக: உவாச—ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்; ஸர்வேஷாம்—அனைவருக்கும்; அபி—உண்மையில்; பூதானாம்—படைக்கப்பட்ட உயிர்கள்; ந்ருப—ஓ, மன்னனே; ஸ்வ ஆத்மா—தன்னையே; ஏவ—உறுதியாக; வல்லப:—அதீத பாசம்; இதரே—பிறர்; அபத்யா—குழந்தைகள்; வித்த—செல்வம்; ஆத்யா:—போன்றவை; தத்—தனது; வல்லபதயா—பாசத்தின் அடிப்படையில்; ஏவஹி—உண்மையில்.
ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்: ஓ, மன்னனே, படைக்கப்பட்ட உயிர் ஒவ்வொன்றும் தம்மீதே அதிக பாசமுடையவையாக இருக்கின்றன. குழந்தைச் செல்வம் போன்று பிறவற்றின்மீது வைக்கும் பாசமானது தன்மீது வைக்கும் பாசத்தின் விளைவேயாகும்.
பதம் 10.14.51
தத் ராஜேந்த்ர யதா ஸ்நேஹ: ஸ்வ-ஸ்வகாத்மனி தேஹினாம்
ந ததா மமதாலம்பி-புத்ர-வித்த-க்ருஹாதிஷு
தத்—ஆகையினால்; ராஜ-இந்த்ர—ஓ, அரசர்களிற் சிறந்தவனே; யதா—இருப்பதுபோன்று; ஸ்நேஹ:—பாசம்; ஸ்வ-ஸ்வக—தனிப்பட்ட ஒவ்வொருவரின்; ஆத்மனி—ஆத்மாவிற்கு; தேஹினாம்—உடல் பெற்ற உயிர்களின்; ந—இல்லை; ததா—இவ்வாறு; மமதா-ஆலம்பி—தனது உடைமைகளாக ஒருவன் அடையாளம் காணும்; புத்ர—புத்திரர்கள்; வித்த—செல்வம்; க்ருஹ—வீடு; ஆதிஷு—போன்றவை.
இக்காரணத்தினாலேயே, ஓ, அரசர்களிற் சிறந்தவனே, உடல் பெற்ற ஆத்மாவானது சுயநலமுடையதாக இருக்கின்றது. ஒருவன் தனது சொந்தமாகக் கருதும் மக்கள், செல்வம், வீடு போன்றவற்றைக் காட்டிலும் தனது உடல் மற்றும் ஆத்மாவின் மீதே அதிகப் பற்றுடையவனாக இருக்கின்றான்.
பதம் 10.14.52
தேஹாத்ம-வாதினாம் பும்ஸாம் அபி ராஜன்ய-ஸத்தம
யதா தேஹ: ப்ரியதமஸ் ததா ந ஹி அனு யே சதம்
தேஹ-ஆத்ம-வாதினாம்—உடலையே தான் என்று கருதும்; பும்ஸாம்—மனிதர்களுக்கு; அபி—உண்மையில்; ராஜன்ய-ஸத்-தம—ஓ, ராஜராஜனே; யதா—இருப்பது போன்று; தேஹ:—உடல்; ப்ரிய-தம:—மிகவும் பிரியமானது; ததா—இவ்வாறு; ந—இல்லை; ஹி—உறுதியாக; அனு—சொந்தம்; யே—இவை; ச—மற்றும்; தம்—அதற்கு.
ராஜராஜனே! உண்மையில், தனது உடலையே தானாகக் கருதும் மனிதர்களுக்கு தனது உடல்மீது இருக்கும் பாசத்தைவிடத் தனது உடலுக்குச் சொந்தமான பொருட்களின் மீது அதிக பாசம் இருப்பதில்லை.
பதம் 10.14.53
தேஹோ ‘பி மமதா-பாக் சேத் தர்ஹி அஸௌ நாத்ம-வத் ப்ரிய:
யஜ் ஜீர்யதி அபி தேஹே ‘ஸ்மின் ஜீவிதாஸா பலீயஸீ
தேஹ:—உடல்; அபி—கூட; மமதா—எனது; பாக்—எண்ணங்களின் வெளிப்பாடு; சேத்—அவ்வாறிருந்தால்; தர்ஹி—பிறகு; அஸௌ—இந்த உடல்; ந—இல்லை; ஆத்ம-வத்—ஆத்மாவாக; ப்ரிய:—பிரியமான; யத்—ஏனென்றால்; ஜீர்யதி—அது முதுமையடையும் பொழுது; அபி—கூட; தேஹே—உடல்; அஸ்மின்—இந்த; ஜீவித-அஸா—வாழவேண்டும் என்னும் ஆசை; பலீயஸீ—மிக்க வலிமையடைகிறது.
ஒருவன் தனது உடலை “நான்” என்று கருதுவதற்குப் பதிலாக “எனது” என்று கருதும் நிலையினை அடைந்தானென்றால்; அவன் தன்னைவிடத் தனது உடலின்மீது அதீத பாசம் வைக்கமாட்டான். உடலானது முதுமைக்கு ஆளாகிப் பயனற்றுப் போகும் எனினும், தொடர்ந்து வாழவேண்டும் என்னும் ஒருவனது ஆசை மட்டும் மிகவும் வலிமையுடையதாக இருக்கினறது.
பதம் 10.14.54
தஸ்மாத் ப்ரியதம: ஸ்வாத்மா ஸர்வேஷாம் அபி தேஹினாம்
தத்-அர்தம் ஏவ ஸகலம் ஜகத் ஏதச் சராசரம்
தஸ்மாத்—ஆகையினால்; ப்ரிய-தம:—பிரியமிகு; ஸ்வ-ஆத்மா—ஒருவனது சுயாத்மா; ஸர்வேஷாம்—அனைவருக்கும்; அபி—உண்மையில்; தேஹினாம்—உடல் பெற்ற உயிர்கள்; தத்-அர்தம்—அதன் காரணமாக; ஏவ—நிச்சயம்; ஸகலம்—அனைத்தும்; ஜகத்—படைக்கப்பட்ட பிரபஞ்சம்; ஏதத்—இந்த; சர-அசரம்—அதன் அசையும் அசையா உயிர்கள்.
ஆகையினால் உடல் பெற்ற உயிருக்கு தனது ஆத்மாவே மிகவும் பிரியத்திற்கு உரியதாக இருக்கின்றது. மேலும் இந்த ஆத்மாவின் திருப்திக்காகவே பெளதிகப் படைப்பின் அசையும் அசையா உயிர்கள் அனைத்தும் இருக்கின்றன.
பதம் 10.14.55
க்ருஷ்ணம் ஏனம் அவேஹித்வம் ஆத்மானம் அகிலாத்மனாம்
ஜகத்-திதாய ஸோ ‘பி அத்ர தேஹீவாபாதி மாயயா
க்ருஷ்ணம்—முழுமுதற் கடவுளான பகவான் கிருஷ்ணர்; ஏனம்—அது; அவேஹி—புரிந்துகொள்ள முயல்வாயாக; த்வம்—நீ; ஆத்மானம்—ஆத்மா; அகில-ஆத்மானம்—அனைத்து உயிர்களின்; ஜக-ஹிதாய—பிரபஞ்சம் முழுவதின் நன்மைக்காக; ஸ:—அவர்; அபி—நிச்சயமாக; அத்ர—இங்கே; தேஹீ—ஒரு மனிதனாக; இவ—போன்று; ஆபாதி—தோன்றுகிறார்; மாயயா—அவரது அகச்சக்தியால்.
அனைத்து உயிர்களிலும் கிருஷ்ணரே உண்மையான ஆத்மாவாக இருக்கின்றார் என்பதை நீ முதலில் புரிந்துகொள்ள வேண்டும். பிரபஞ்சத்தின் நன்மைக்காக அவர் தனது தனிப்பெருங் கருணையினால் ஒரு சாதாரண மனிதனாக இங்கே தோன்றினார். அவர் இதனை அவர் தனது அகச்சக்தியின் ஆற்றலினாலேயே செய்தார்.
பதம் 10.14.56
வஸ்துதோ ஜானதாம் அத்ர க்ருஷ்ணம் ஸ்தாஸ்னு சரிஷ்ணு ச
பகவத்-ரூபம் அகிலம் நான்யத் வஸ்த்வ் இஹ கிஞ்சன
வஸ்துத:—உண்மையில்; ஜானதாம்—அறிந்துகொண்டோர்; அத்ர—இவ்வுலகில்; க்ருஷ்ணம்—பகவான் கிருஷ்ணர்; ஸ்தாஸ்னு—அசையாதவை; சரிஷ்ணு—அசைபவை; ச—மற்றும்; பகவத்-ரூபம்—முழுமுதற் கடவுளின் வெளிப்பட்ட வடிவங்கள்; அகிலம்—எல்லாம்; ந—இல்லை; அன்யத்—பிற; வஸ்து—பொருள்; இஹ—இங்கே; கிஞ்சன—சிறிதும்.
அசையும், அசையாத உயிர்கள் அனைத்திலும் காணப்படுபவர் ஸ்ரீ கிருஷ்ணரே என்று அறிந்து கொண்டவர்கள் முழுமுதற் கடவுளின் வெளிப்பட்ட வடிவங்களாவர். இவ்வாறு ஞானம் பெற்ற மனிதர்கள், பரமபுருஷ பகவான் கிருஷ்ணருக்கு அப்பால் உண்மை எதனையும் காண்பதில்லை.
பதம் 10.14.57
ஸர்வேஷாம் அபி வஸ்தூனாம் பாவார்தோ பவதி ஸ்தித:
தஸ்யாபி பகவான் க்ருஷ்ண: கிம் அதத் வஸ்து ரூப்யதாம்
ஸ்ர்வேஷாம்—அனைத்தும்; அபி—உண்மையில்; வஸ்தூனாம்—உயிர்கள்; பாவ-அர்த:—ஆதியும் வெளிப்படாததும் காரணமுமான ஜட இயற்கை; பவதி—இருக்கிறது; ஸ்தித:—நிறுவப்பட்டது; தஸ்ய—வெளிப்படாத அந்த இயற்கையின்; அபி—கூட; பகவான்—முழுமுதற் கடவுள்; க்ருஷ்ண:—பகவான் கிருஷ்ணர்; கிம்—என்ன; அதத்—அவரிடமிருந்து பிரிந்து வேறான; வஸ்து—பொருள்; ரூப்யதாம்—இருக்க முடியும்.
பெளதிகப் பொருட்கள் அனைத்திற்கும் ஆதாரமாக இருப்பது ஆதியும், புலனாகா வடிவமுடையதுமான ஜட இயற்கையேயாகும். சூக்குமமான அந்த ஜட இயற்கைக்கு ஆதாரமாக முழுமுதற் கடவுளான ஸ்ரீ கிருஷ்ணரே இருக்கின்றார். அதனால் அவரிடமிருந்து வேறானது என்று எது இருக்க முடியும்?
பதம் 10.14.58
ஸ்மாஸ்ரிதா யே பத-பல்லவ-ப்லவம்
மஹத்-பதம் புண்ய-யஸோ முராரே:
பவாம்புதிர் வத்ஸ-பதம் பரம் பதம்
பதம் பதம் யத் விபதாம் ந தேஷாம்
ஸமாஸ்ரிதா:—அடைக்கலம் கொண்டு; யே—இருப்போர்; பத—பதத்தின்; பல்லவ—மலர் மொட்டுகளைப் போன்று; ப்லவம்—படகு; மஹத்—மொத்தப் பெளதிகப் படைப்பு அல்லாத மகாத்மாக்கள்; பதம்—அடைக்கலம்; புண்ய—பரம புண்ணியமான; யஸ:—அவர்களது புகழ்; முர-அரே:—முர அசுரனின் பகைவன்; பவ—பௌதிக வாழ்க்கையின்; அம்புதி:—கடல்; வத்ஸ-பதம்—ஒரு கன்றுக்குட்டியின் குளம்படித் தடம்; பரம் பதம்—பரமபதமான வைகுண்டம்; பதம் பதம்—ஒவ்வோர் அடியிலும்; யத்—எங்கே; விபதாம்—பெளதிகத் துன்பங்களின்; ந—இல்லை; தேஷாம்—அவர்களுக்கு.
இப்பிரபஞ்சத்திற்கு ஆதாரமாகவும், முர என்னும் அசுரனைக் கொன்றதால் ‘முராரி’ என்று புகழப்படுபவருமான பகவானின் தாமரைத் திருவடிகளைப் படகாக ஏற்றுக் கொண்டோருக்கு உலகம் என்னும் கடலானது ஒரு கன்றுக்குட்டியின் குளம்படித் தடத்திலுள்ள நீருக்குச் சமமானதாகும். அவர்கள் அடைய விரும்பும் இலக்காக இருப்பது பௌதிகத் துன்பங்களற்ற “பரமபதம்” என்னும் வைகுண்டமேயன்றி, ஒவ்வொரு நிலையிலும் தோன்றும் ஆபத்துக்கள் அல்ல.
பதம் 10.14.59
ஏதத் தே ஸர்வம் ஆக்யாதம் யத் ப்ருஷ்டோ ‘ஹம் இஹத்வயா
தத் கௌமாரே ஹரி-க்ருதம் பௌகண்டே பரிகீர்திதம்
ஏதத்—இந்த; தே—உனக்கு; ஸர்வம்—அனைத்தும்; ஆக்யாதம்—விளக்கப்பட்ட; யத்—இது; ப்ருஷ்ட:—வேண்டப்பட்ட; அஹம்—நான்; இஹ—இது தொடர்பாக; த்வயா—உன்னால்; தத்—அது; கௌமாரே—அவரது பாலபருவத்தில் (அவரது ஐந்து வயதின் இறுதியில்); ஹரி-க்ருதம்—பகவான் ஹரியால் நிகழ்த்தப்பட்டது; பௌகண்டே—பாலபருவத்தின் பிற்பகுதியில் (ஆறாவது வயது ஆரம்பத்தில்); பரிகீர்திதம்—புகழப்பட்டது.
நீ வேண்டிக் கொண்டதற்கிணங்க, பகவான் ஹரியின் ஐந்தாவது வயதில் நிகழ்த்தப்பட்டு, அவரது ஆறாவது வயது வரை போற்றப் படாத அவரது செயல்களை முழுவதும் நான் உனக்கு விளக்கியுள்ளேன்.
பதம் 10.14.60
ஏதத் ஸுஹ்ருத்பிஸ் சரிதம் முராரேர்
அகார்தனம் ஸாத்வல-ஜேமனம் ச
வ்யக்தேதரத் ரூபம் அஜோர்வ்-அபிஷ்டவம்
ஸ்ருண்வன் க்ருணன்ன் ஏதி நரோ ‘கிலார்தான்
ஏதத்—இவற்றை; ஸுஹ்ருத்பி:—ஆயர்குலச் சிறுவர்களுடன் சேர்ந்து; சரிதம்—லீலைகள்; முராரே:—பகவான் முராரி; அக-அர்தனம்—அகாசுரனை அழித்தல்; ஸாத்வல—காட்டிலுள்ள புல்லின் மீது; ஜேமனம்—அமர்ந்து உண்டது; ச—மற்றும்; வ்யக்த இதரத்—உலகியலுக்கு அப்பாற்பட்ட; ரூபம்—பகவானின் உன்னத வடிவம்; அஜ—பிரம்மதேவனால்; உரு—விரிவாக; அபிஷ்டவம்—அர்ப்பணிக்கப்பட்ட பிரார்த்தனைகள்; ஸ்ருண்வன்—செவிமடுத்தல்; க்ருணன்—ஓதுதல்; ஏதி—அடைகிறான்; நர:—எவனொருவன்; அகில-அர்தான்—எல்லாச் செல்வங்களையும்.
அகாசுரனைக் கொன்றது, காட்டில் புல்தரையில் அமர்ந்து உணவு உண்டது, பகவானது உன்னதத் தோற்றங்களின் வடிவங்கள், பிரம்மதேவன் பகவானுக்குச் செய்த பிரார்த்தனைகள் போன்ற, பகவான் முராரி தனது நண்பர்களான ஆயர்குலச் சிறுவர்களுடன் சேர்ந்து நிகழ்த்திய லீலைகளைக் காதினால் கேட்போரும், ஒதுவோரும் தமது ஆன்மீக விருப்பங்கள் அனைத்தையும் எய்தப் பெறுவர்.
பதம் 10.14.61
ஏவம் விஹாரை: கௌமாரை: கௌமாரம் ஜஹதுர் வ்ரஜே:
நிலாயனை: ஸேது-பந்தைர் மர்கடோத்ப்லவனாதிபி:
ஏவம்—இவ்வாறு; விஹாரை:—லீலைகளுடன்; கௌமாரை:—பாலபருவத்தின்; கெளமாரம்—ஐந்து வயது வரையுள்ள குழந்தைப் பருவம்; ஜஹது:—அவர்கள் கழித்தனர்; வ்ரஜே—பிருந்தாவனத்தில்; நிலாயனை:—ஓடிப்பிடித்து விளையாடுதல்; ஸேது-பந்தை:—பாலங்கள் கட்டுதல்; மர்கட-உத்ப்லவன—மந்திகளைப் போல் தாவித் திரிதல்; ஆதிபி:—போன்றவை.
இவ்வாறு பிருந்தாவனத்திலுள்ள சிறுவர்கள் கண்ணாமூச்சி ஆடுதல், பாலங்கள் கட்டுதல், மந்திகளைப் போல் தாவித் திரிதல் போன்ற விளையாட்டுக்களில் ஈடுபட்டுத் தமது குழந்தைப் பருவத்தைக் கழித்தனர்.
ஸ்ரீமத் பாகவதம், பத்தாம் காண்டத்தின் “பகவான் கிருஷ்ணரை பிரம்மதேவன் வழிபடுதல்” எனும் தலைப்பை கொண்ட பதினான்காம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றது.