அத்தியாயம் – 13
சிறுவர்களையும் கன்றுகளையும் பிரம்மா
கவர்ந்து செல்லல்
பதம் 10.13.1 : ஸ்ரீல சுகதேவ கோஸ்வாமி கூறினார்: பக்தர்களில் சிறந்தவரும், பேரதிர்ஷ்டசாலியுமான பரீட்சித்து மகாராஜனே, நீர் மிகவும் நன்றாக விசாரணை செய்துள்ளீர். ஏனெனில் பகவானின் லீலைகளை நான் இடையறாது கேட்டுக்கொண்டிருந்த போதிலும் அவரது செயல்களை நீர் புதுமை, புதுமையாகக் காண்கிறீர்.
பதம் 10.13.2 : வாழ்வின் சாராம்சத்தை ஏற்றுக்கொண்டுள்ள பரமஹம்ச பக்தர்கள் கிருஷ்ணரிடம் இதயபூர்வமான அன்பு கொண்டுள்ளனர். அவர்களுடைய வாழ்வின் இலட்சியமும் அவரே. கிருஷ்ணரின் லீலைகள் என்றும் புதியவையாக இருப்பதால், இயல்பாகவே அவரைப் பற்றி மட்டுமே அவர்கள் பேசுகின்றனர், பெண்கள் மற்றும் சிற்றின்பம் போன்ற விஷயங்களில் உலகாயதவாதிகள் பற்றுக் கொண்டிருப்பது போலவே, அவர்கள் கிருஷ்ண கதைகளில் பற்றுக் கொண்டுள்ளனர்.
பதம் 10.13.3 : அரசே, தயவுசெய்து மிகவும் கவனமாகக்கேளும். பரமபுருஷரின் செயல்கள் மிகவும் அந்தரங்கமானவை என்பதால் அவற்றை எந்த சாதாரண மனிதனாலும் புரிந்துகொள்ள முடியாது. என்றாலும் அவற்றைப் பற்றி உமக்கு நான் கூறுகிறேன். ஏனெனில், மிகவும் இரகசியமானவையும், புரிந்து கொள்வதற்கு மிகக் கடினமானவையுமான விஷயங்களைக்கூட அடக்கமுள்ள ஒரு சீடனுக்கு ஆன்மீக குரு விவரிக்கிறார்.
பதம் 10.13.4 : பிறகு, மரணசொரூபமான அகாசுரனின் வாயிலிருந்து சிறுவர்களையும், கன்றுகளையும் காப்பாற்றியதும், பரமபுருஷராகிய பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அவர்களனைவரையும் நதிக்கரைக்கு அழைத்து வந்து பின்வரும் வார்த்தைகளைப் பேசினார்.
பதம் 10.13.5 : எனது பிரிய நண்பர்களே! இந்த நதிக்கரையின் ரம்மியமான சூழ்நிலையின் காரணத்தால், இது மிகவும் அழகுபெற்று விளங்குவதைக் கவனியுங்கள், மலரும் தாமரைகள் எப்படி தங்கள் நறுமணத்தால் தேனீக்களையும், பறவைகளையும் கவர்கின்றன என்பதையும் கவனியுங்கள். தேனீக்களின் ரீங்காரமும், பறவைகளின் கீச்சிடும் ஓசைகளும், காட்டிலுள்ள மரங்கள் முழுவதிலும் எதிரொலிக்கின்றன. மேலும், இங்குள்ள மணல் சுத்தமாகவும், மிருதுவாகவும் உள்ளன. எனவே, நம்முடைய விளையாட்டுக்கும், லீலைகளுக்கும் ஏற்ற மிகச்சிறந்த இடமாக இதை நாம் கருத வேண்டும்.
பதம் 10.13.6 : இப்பொழுது மிகவும் தாமதமாகி நமக்குப் பசியும் வந்துவிட்டது. இங்கேயே நம்முடைய சிற்றுண்டியை நாம் உட்கொள்ள வேண்டும் என்று நான் நினைக்கிறேன், கன்றுகளும் இங்கு நீரைக் குடித்துவிட்டு மெதுவாக இங்குமங்கும் புல்லை மேய்ந்துகொண்டு திரியட்டும்.
பதம் 10.13.7 : பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் விருப்பத்தை ஏற்றுக்கொண்ட இடைச்சிறுவர்கள், கன்றுகளுக்கு ஆற்று நீரைக் காட்டியபின், பசுமையான, இளம் புற்கள் உள்ள இடத்தில் அவைகளை மரங்களுடன் கட்டிப் போட்டனர். பிறகு அச்சிறுவர்கள் தங்கள் உணவுப் பைகளைத் திறந்து கிருஷ்ணருடன் மிகவும் ஆனந்தமாக உணவருந்தத் துவங்கினர்.
பதம் 10.13.8 : ஒரு தாமரையின் கர்ணிகை அதன் இதழ்களால் சூழப்பட்டிருப்பது போலவே, கிருஷ்ணர் மத்தியில் அமர்ந்திருக்க, மிகவும் அழகாகக் காணப்பட்ட அவரது நண்பர்கள் அனைவரும் அவரைச் சுற்றி வரிசை வரிசையாக அமர்ந்திருந்தனர். அவர்களுள் ஒவ்வொருவரும் கிருஷ்ணர் தன்னைப் பார்ப்பாரா என்ற எதிர்பார்ப்புடன் அவரைப் பார்க்க முயன்றனர். இவ்வாறாக அவர்களனைவரும் தங்கள் வன போஜனத்தை அனுபவித்தனர்.
பதம் 10.13.9 : இடைச்சிறுவர்களுள் சிலர், தங்கள் சிற்றுண்டியை மலர்களின் மேலும், சிலர் இலைகள், பழங்கள் அல்லது இலைக் கொத்துக்களின் மேலும் வைத்தனர் மற்றும் சிலர் உண்மையில் தங்கள் பைகளிலும், சிலர் மரப்பட்டைகளின் மேலும், சிலர் பாறைகளின் மேலும் வைத்தனர். சிறுவர்கள் இவற்றையே தங்களது உணவுத் தட்டுகளாகக் கருதி தங்கள் சிற்றுண்டியை உண்டனர்.
பதம் 10.13.10 : எல்லா இடைச்சிறுவர்களும், போஜனம் செய்யும்போது அவரவர் உண்டிகளின் ருசியை ஒருவருக்கொருவர் தனித்தனியே தெரிவித்துக் கொண்டும். சிரித்துக் கொண்டும், மற்றவர்களை சிரிக்கச் செய்து கொண்டும் கிருஷ்ணருடன் உணவை உண்டு மகிழ்ந்தனர்.
பதம் 10.13.11 : கிருஷ்ணர் யஜ்ஞ-புக் எனப்படுகிறார். அதாவது வேள்வியில் நிவேதனம் செய்யப்பட்ட உணவை மட்டுமே அவர் உண்கிறார். ஆனால் தமது பிள்ளைப் பிராயத்து லீலைகளை வெளிப்படுத்தும் பொருட்டு அவர் இப்பொழுது தமது வலப்புற இடைக்கச்சையில் அவரது புல்லாங்குழலையும், இடப்புற இடைக்கச்சையில் அவரது கொம்பூதியையும், பசுக்களை மேய்க்கும் பிரம்பையும் செருகியபடி அமர்ந்திருந்தார். இடது கையில் தயிர் சாதத்தையும், விரல்களுக்கிடையில் பழத்துண்டுகளையும் அவர் பிடித்திருந்தார். தாமரையின் வட்டமான அடுக்குக்களைப் போலிருந்த சிறுவர்களுக்கு மத்தியில் அமர்ந்திருந்த அவர், தம் நண்பர்களை எல்லாம் பார்த்தபடி, அவர்களைக் கேலி செய்து, அவர்களுக்கிடையில் மகிழ்ச்சி பொங்கும் சிரிப்பை மூட்டியபடி அவர்களுடன் உணவருந்தினர். அப்பொழுது, இச்சம்பவத்தைப் பார்த்துக் கொண்டிருந்த சுவர்க்கலோக வாசிகள், யக்ஞ நிவேதனங்களை மட்டுமே உண்பவரான பரமபுருஷர், இப்பொழுது வனத்தில் தம் நண்பர்களுடன் உணவருந்துவதைக் கண்டு வியப்படைந்தனர்.
பதம் 10.13.12 : பரீட்சித்து மகாராஜனே. தங்கள் இதய அந்தரங்கத்தில் கிருஷ்ணரைத் தவிர வேறெதையும் அறிந்திராத இடைச்சிறுவர்கள் வனத்தில் கிருஷ்ணருடன் போஜனம் செய்துகொண்டிருக்கையில் பசுமையான புல்லினால் வசீகரிக்கப்பட்ட கன்றுகள், வனத்தினுள் வெகுதூரம் சென்றுவிட்டன.
பதம் 10.13.13 : பயத்திற்கே பயமாகிய கிருஷ்ணர் பயத்தால் பீடிக்கப்பட்ட இடைச் சிறுவர்களின் பயத்தைப் போக்க எண்ணி, “பிரிய நண்பர்களே! போஜனம் செய்வதை நிறுத்த வேண்டாம். நானே நேரில் சென்று உங்களுடைய கன்றுகளை இங்கு கொண்டு வருகிறேன்” என்று கூறினார்.
பதம் 10.13.14 : “உங்கள் மகிழ்ச்சிக்கு இடையூறு ஏற்பட வேண்டாம், நான் சென்று கன்றுகளைத் தேடி வருகிறேன்” என்று கிருஷ்ணர் கூறினார். பிறகு, தயிரையும், சாதத்தையும் கையில் எடுத்துக்கொண்டு உடனே தம் நண்பர்களின் கன்றுகளைத் தேடிக்கொண்டு புறப்பட்டுச் சென்றார். தம் நண்பர்களைத் திருப்திப்படுத்துவதற்காக, எல்லா மலைகளிலும், மலைக்குகைகளிலும், புதர்களிலும், சந்துகளிலும் கன்றுகளை அவர் தேடத்துவங்கினார்.
பதம் 10.13.15 : பரீட்சித்து மகாராஜனே, ஆகாயத்திலுள்ள உயர் கிரக அமைப்பில் வாழும் பிரம்மா, முன்பு அகாசுரனைக் கொன்று அவனுக்கு மோட்சமளித்த சர்வசக்தி படைத்த ஸ்ரீ கிருஷ்ணரின் செயல்களைக் கண்டு ஆச்சரியப்பட்டுள்ளார். இப்பொழுது அதே பிரம்மா தன் சொந்த சக்தியின் ஒரு பகுதியைக் காட்ட விரும்பியதுடன், சாதாரண இடைச் சிறுவர்களுடன் விளையாடுவது போல் தமது பாலிய லீலைகளில் ஈடுபட்டிருந்த கிருஷ்ணரின் சக்தியையும் காண விரும்பினார். எனவே, கிருஷ்ணர் இல்லாத சமயம் பார்த்து, பிரம்மா எல்லாச் சிறுவர்களையும், கன்றுகளையும் வேறொரு இடத்திற்கு எடுத்துச் சென்றார். இவ்விதமாக அவர் சிக்குண்டவரானார். ஏனெனில், கிருஷ்ணர் எவ்வளவு சக்தி வாய்ந்தவர் என்பதை விரைவில் அவர் காணப்போகிறார்.
பதம் 10.13.16 : அதன்பிறகு, கன்றுகளைக் காணாது நதிக்கரைக்குத் திரும்பிய கிருஷ்ணர், அங்கு இடைச் சிறுவர்களும் காணாமற் போய்விட்டதைக் கண்டார். இவ்விதமாக என்ன நடந்தது என்பதை அறியாதவர்போல், கன்றுகளையும், சிறுவர்களையும் அவர் தேடத் துவங்கினார்.
பதம் 10.13.17 : கன்றுகளையும், இடைச் சிறுவர்களையும் வனத்தில் எங்கு தேடியும் கண்டுபிடிக்க இயலாத கிருஷ்ணரால், இது பிரம்மதேவரின் வேலைதான் என்பதை உடனே புரிந்துகொள்ள முடிந்தது.
பதம் 10.13.18 : அதன்பிறகு பிரம்மாவிற்கும் கன்றுகளின் தாய்களுக்கும் இடைச்சிறுவர்களின் தாய்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்துவதற்காக, முழு பிரபஞ்ச சிருஷ்டிக்கும் கர்த்தாவான கிருஷ்ணர் தம்மையே கன்றுகளாகவும், சிறுவர்களாகவும் விரிவடையச் செய்தார்.
பதம் 10.13.19 : கிருஷ்ணர் தமது வாசுதேவ அம்சத்தினால், எத்தனை இடைச் சிறுவர்களும், கன்றுகளும் காணாமற் போயினரோ அத்தனை பேர்களாக தம்மை விரிவடைச் செய்தார். அந்த விரிவங்கங்கள், குறிப்பிட்ட வகையான கைகால்களுடனும், மற்ற அவயங்களுடனும், அவர்களுடைய கோல்களுடனும், ஊதுகொம்புகளுடனும், புல்லாங்குழல்களுடனும், உணவுப் பைகளுடனும், பலவிதமாக அணிவிக்கப்பட்ட குறிப்பிட்ட வகையான ஆடை, ஆபரணங்களுடனும், வெவ்வேறு பெயர்கள், வயதுகள் மற்றும் உருவங்கள் ஆகியவற்றுடனும், மேலும் அவர்களுடைய குறிப்பிட்ட செயல்கள் மற்றும் இயல்புகள் ஆகியவற்றுடனும் விளங்கினர். இவ்வாறு தம்மை விரிவடையச் செய்ததன் மூலமாக, “உலகெல்லாம் விஷ்ணுமயம்” (ஸமக்ர-ஜகத் விஷ்ணுமயம்) என்ற கூற்றை அழகிய கிருஷ்ணர் மெய்ப்பித்தார்.
பதம் 10.13.20 : எல்லாக் கன்றுகளும், இடைச் சிறுவர்களும் எப்படி இருந்தனரோ, அதேபோன்று காட்சியளிக்கும் வகையில் இப்பொழுது கிருஷ்ணர் தம்மை விரிவடையச் செய்தார். அதேசமயத்தில் அவர்களது தலைவராகவும் தோன்றிய கிருஷ்ணர், முன்பு அவர்களுடைய சகவாசத்தின் போது வழக்கமாக அவர் எப்படிச் செயற்பட்டாரோ, அதேபோன்று நந்த கோகுலத்தில் அவர் பிரவேசித்தார்.
பதம் 10.13.21 : பரீட்சித்து மகாராஜனே, தம்மை வெவ்வேறு கன்றுகளாகவும், வெவ்வேறு இடைச் சிறுவர்களாகவும் விரிவடையச் செய்துகொண்ட கிருஷ்ணர், வெவ்வேறு மாட்டுத் தொழுவங்களில் கன்றுகளாகவும், வெவ்வேறு வீடுகளில் வெவ்வேறு சிறுவர்களாகவும் புகுந்தார்.
பதம் 10.13.22 : தங்கள் மகன்களால் வாசிக்கப்பட்ட புல்லாங்குழல்கள் மற்றும் ஊதுகொம்புகளின் ஓசைகளைக் கேட்ட அவர்களுடைய தாய்கள், உடனே தங்களின் வீட்டு வேலைகளை விட்டுவிட்டு, தங்கள் பிள்ளைகளைத் தூக்கி மடியில் வைத்துக்கொண்டு, இரு கைகளாலும் அவர்களைத் தழுவிக் கொண்டனர். பிறகு குறிப்பாக கிருஷ்ணரிடமுள்ள பேரன்பின் காரணத்தால் பெருகியோடிய தங்கள் முலைப்பாலை அவர்களுக்கு ஊட்டத் துவங்கினார். உண்மையில் கிருஷ்ணரே அனைத்துமாவார். ஆனால் அப்பொழுது பேரன்பையும், பாசத்தையும் வெளிப்படுத்திய அவர்கள் பரப்பிரம்மனாகிய கிருஷ்ணருக்குப் பாலூட்டுவதில் விசேஷ ஆனந்தம் அடைந்தனர். கிருஷ்ணரும் தம் தாய்களிடமிருந்து அமுத பானமோவென பாலைப் பருகினார்.
பதம் 10.13.23 : பரீட்சித்து மகாராஜனே, அதன்பிறகு, ஸ்ரீ கிருஷ்ணர் மாலையில் திரும்பிவந்து ஒவ்வொரு இடைச் சிறுவனின் வீட்டிலும் புகுந்து, முந்திய சிறுவர்களைப் போலவே கடமைகளில் ஈடுபட்டார். இவ்வாறாக அவர்களுடைய தாய்களை அவர் உன்னத ஆனந்தத்தால் உற்சாகப்படுத்தினார். தாய்கள் சிறுவர்களுக்கு எண்ணெய் தேய்த்தும், அவர்களைக் குளிப்பாட்டியும், அவர்களது உடல்களில் சந்தனம் பூசியும், ஆபரணங்களால் அவர்களை அலங்கரித்தும், பாதுகாப்பு மந்திரங்களை உச்சரித்தும், அவர்களது உடல்களைத் திலகங்களால் அலங்கரித்தும் மற்றும் அவர்களுக்கு உணவளித்தும் அவர்களைக் கவனித்துக் கொண்டனர். இவ்விதமாக அந்தத் தாய்கள் சுயமாக கிருஷ்ணருக்குச் சேவைசெய்தனர்.
பதம் 10.13.24 : அதன்பிறகு, எல்லாப் பசுக்களும் அவற்றின் வெவ்வேறு தொழுவங்களில் புகுந்து உரக்கக் கதறி தங்கள் தங்கள் கன்றுகளை அழைத்தன, கன்றுகள் வந்ததும் தாய்கள் கன்றுகளின் உடல்களை நக்கியபடி, தங்கள் மடிகளிலிருந்து சுரக்கும் அதிகமான பாலை அவைகளுக்கு ஊட்டின.
பதம் 10.13.25 : முதல் துவக்கத்திலிருந்தே கோபியர்களுக்கு கிருஷ்ணரிடம் தாய்ப்பாசம் இருந்து வந்தது. உண்மையில், கிருஷ்ணரிடம் அவர்களுக்கிருந்த பாசம், சொந்த மகன்களிடம் இருந்ததைவிட அதிகமாகும். இவ்வாறாக பாசத்தைக் காட்டுவதில் அவர்கள் கிருஷ்ணருக்கும், சொந்த மகன்களுக்கும் இடையில் வேறுபாட்டைக் கண்டனர். ஆனால் இப்பொழுது அந்த வேறுபாடு மறைந்தது.
பதம் 10.13.26 : விரஜ வாசிகளான இடையர்குலப் பெண்களும், ஆண்களும் முன்பு, தங்கள் சொந்த குழந்தைகளைவிட கிருஷ்ணரிடம் அதிக பாசம் கொண்டிருந்தனர். எனினும் இப்பொழுது ஒரு வருஷமாக, கிருஷ்ணர் அவர்களது சொந்த மகன்களாக ஆகியிருந்ததால், தங்கள் மகன்களிடம் அவர்களுக்கிருந்த பாசம் படிப்படியாக அதிகரித்துக்கொண்டே போனது. கிருஷ்ணரேயாகிய தங்கள் மகன்களிடம் அவர்களுக்கு ஏற்பட்ட பாசப் பெருக்கிற்கு ஓரளவேயில்லை. அவர்கள் கிருஷ்ணரை எப்படி நேசித்தார்களோ, அப்படியே தங்கள் குழந்தைகளை நேசிப்பதிலும், தினந்தோறும் புதுப்புது உற்சாகத்தை அவர்கள் கண்டனர்.
பதம் 10.13.27 : இடைச் சிறுவர்களாகவும், கன்றுக் கூட்டங்களாகவும் மாறியிருந்த பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அவர்களைத் தாமே பராமரித்து வந்தார். இவ்வாறாக, பகவான் தமது லீலைகளை பிருந்தாவனத்திலும், வனங்களிலும் ஒரு வருஷத்திற்குத் தொடர்ந்து நிகழ்த்தினார்.
பதம் 10.13.28 : ஒரு நாள், ஒரு வருஷம் பூர்த்தியாவதற்கு ஐந்தாறு இரவுகளுக்கு முன், கிருஷ்ணர் பலராமருடன் கன்றுகளை மேய்த்துக்கொண்டு வனம்சென்றார்.
பதம் 10.13.29 : அதன்பிறகு, கோவர்தன மலையுச்சியில் மேய்ந்துகொண்டிருந்த பசுக்கள் பசும்புல் இருக்கிறதா என்று கீழே பார்த்தன. அப்பொழுது அருகாமையில், கோகுலத்தினருகில் தங்கள் கன்றுகள் புல் மேய்ந்து கொண்டிருந்ததைக் கண்டன.
பதம் 10.13.30 : கோவர்தன மலையின் உச்சியிலிருந்து தங்கள் சொந்தக் கன்றுகளைக் கண்ட பசுக்கள், அவற்றிடம் ஏற்பட்ட அன்புப் பெருக்கால் தங்களையும், மேய்ப்பவர்களையும் மறந்து, வழி மிகவும் கரடுமுரடாக இருந்தபோதிலும், தங்கள் கன்றுகளை நோக்கி இரண்டுகால் பாய்ச்சலில் ஓடின. அவை தங்கள் நிறைந்த மடிகளிலிருந்து பால் பெருகியோட தலைகளையும் வால்களையும் தூக்கிக்கொண்டு, கழுத்துக்களுடன் அவற்றின் திமில்களும் அசைந்தாட, தங்கள் கன்றுகளுக்குப் பாலுட்ட அவற்றை அடையும்வரை மிகவும் வேகமாக ஒடின.
பதம் 10.13.31 : பசுக்கள் புதிய கன்றுகளை ஈன்றிருந்தன ஆனால் கோவர்தன மலையிலிருந்து கீழே வந்த அப்பசுக்கள், வளர்த்த கன்றுகளிடம் ஏற்பட்ட பாசப் பெருகினால், அவற்றிற்குத் தங்கள் மடிப்பாலை ஊட்டின. மேலும் அக்கன்றுகளை விழுங்கிவிட விரும்புவது போல் அவற்றை நக்கவும் துவங்கின.
பதம் 10.13.32 : பசுக்கள் அவற்றின் கன்றுகளை நோக்கிச் செல்வதைத் தடுக்கும் முயற்சி வீணானதால், இடையர்கள் வெட்கமும், கோபமும் அடைந்தனர். கரடுமுரடான வழியைப் பெரும் சிரமத்துடன் கடந்துவந்த போதிலும், கீழே வந்து தங்கள் சொந்த மகன்களைக் கண்ட அவர்கள் பாசப் பெருக்கில் மூழ்கடிக்கப்பட்டனர்.
பதம் 10.13.33 : அப்பொழுது, தங்கள் மகன்களைக் கண்ணுற்றதால் கோபம் நீங்கி, மனதில் பெருக்கெடுத்த அன்பு வெள்ளத்தில் மூழ்கியவர்களாய், பிள்ளைகளைக் கைகளால் தூக்கி இறுகத் தழுவி, உச்சி மோந்து பரம சந்தோஷமடைந்தனர்.
பதம் 10.13.34 : அதன்பிறகு, வயதான இடைர்கள், தங்கள் மகன்களைத் தழுவியதன் மூலம் பெருமகிழ்ச்சியடைந்தனர், படிப்படியாகவும் மிகுந்த சிரமத்துடனும் தயக்கத்துடனும் அவர்களைத் தழுவுவதை நிறுத்திவிட்டு வனத்திற்குத் திரும்பினர். ஆனால் அந்த இடையர்கள் தங்கள் மகன்களை நினைத்துக் கொண்டவுடன், அவர்களின் கண்களிலிருந்து கண்ணீர் பெருகியோடத் தொடங்கியது.
பதம் 10.13.35 : பாசப் பெருக்கின் காரணத்தால், வளர்ந்து ஊட்ட மறந்த கன்றுகளிடம் கூட பசுக்கள் இடையறாத பற்றுக் கொண்டிருந்தன. இப்பற்றைக் கண்ட பலதேவர், இதற்குக் காரணம் தெரியாமல் பின்வருமாறு யோசிக்கலானார்.
பதம் 10.13.36 : என்ன ஆச்சரியம்! எல்லா ஜீவராசிகளுக்கும் பரமாத்மாவான பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் எனக்கும், விரஜவாசிகளுக்கும் இருக்கும் அதே பாசம், இச்சிறுவர்களிடமும், கன்றுகளிடமும் இதுவரை இல்லாதபடி பெருகிக்கொண்டே போகிறதே!
பதம் 10.13.37 : இந்த மாயச் சக்தி யார்? இவள் எங்கிருந்து வந்தாள்? இவள் ஒரு தேவதையா அல்லது துர்த்தேவதையா? இவள், என் பிரபுவான பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் மாயச் சக்தியாகத்தான் இருக்க வேண்டும். ஏனெனில் வேறு யாரால் என்னை இப்படிக் குழப்ப இயலும்?
பதம் 10.13.38 : இவ்விதம் ஆலோசித்த பலதேவர், ஞானக்கண்ணால் எல்லாக் கன்றுகளையும், கிருஷ்ணரின் நண்பர்களையும், ஸ்ரீ கிருஷ்ணரின் விரிவங்கங்களாகவே கண்டார்.
பதம் 10.13.39 : பகவான் பலதேவர்கூறினார்: “பரம ஈசுவரரே! நான் முன்நினைத்தபடி, இச்சிறுவர்கள் சிறந்த தேவர்களுமல்ல, இக்கன்றுகள் நாரதரைப் போன்ற மாமுனிவர்களுமல்ல. எல்லாவித வேறுபாடுகளுடனும் நீரே இப்படித் தோன்றியிருப்பதை இப்பொழுது நான் காண்கிறேன். நீர் ஒருவரே என்றபோதிலும், கன்றுகள் மற்றும் சிறுவர்களின் வெவ்வேறு ரூபங்களில் காட்சியளிக்கிறீர். இதைச் சுருக்கமாக எனக்கு விளக்கியருள வேண்டுகிறேன்.” பகவான் பலதேவரால் இப்படி கேட்டுக் கொள்ளப்பட்டதும், கிருஷ்ணர் நிலைமையை விளக்கினார். பல தேவரும் அதைப் புரிந்து கொண்டார்.
பதம் 10.13.40 : பிரம்மதேவர், (தமது சொந்தக் கணக்குப்படி ஒரு நொடிப் பொழுதிற்குப் பிறகு திரும்பி வந்தபோது, மனிதக் கணக்குப்படி ஓராண்டுகாலம் கடந்துவிட்ட போதிலும், பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தமது விரிவங்கங்களான சிறுவர்களுடனும், கன்றுகளுடனும் முன் போலவே விளையாடிக் கொண்டிருப்பதைக் கண்டார்.
பதம் 10.13.41 : பிரம்மதேவர் எண்ணினார்: கோகுலத்திலிருந்த அத்தனை சிறுவர்களையும், கன்றுகளையும் நான் என் மாயப் படுக்கையில் உறங்க வைத்திருக்கிறேன். இன்றுவரை அவர்கள் இன்னும் எழவில்லை.
பதம் 10.13.42 : அதே எண்ணிக்கையுள்ள சிறுவர்களும், கன்றுகளும் ஓராண்டு காலமாக கிருஷ்ணருடன் விளையாடிக்கொண்டு இருக்கின்றனர். என்றாலும் எனது மாயச் சக்தியால் மயக்கப்பட்டவர்களிலிருந்து வேறுபட்டவர்களாகிய இவர்கள் யார்? எங்கிருந்து வந்தனர்?
பதம் 10.13.43 : இவ்வாறு நீண்ட நேரம் யோசித்துக் கொண்டிருந்த பிரம்மதேவர், தனித் தனியாகப் பிரிந்திருந்த இரு பிரிவுகளைச் சேர்ந்த இச்சிறுவர்களில் உண்மையானவர்கள் யார்; அல்லாதவர்கள் யார் என்பதை அறிய முயன்றும் முடியவில்லை.
பதம் 10.13.44 : இவ்வாறு சர்வ வியாபகமுள்ளவரும் உலகனைத்தையும் மயக்குபவருமான பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை பிரம்மதேவர் மயக்க விரும்பியதால் தன்னுடைய சொந்த மாயச் சக்திக்குத் தானே மயங்கிப்போனார்.
பதம் 10.13.45 : இருண்டு கிடக்கும் இரவிலுள்ள உறைபனிக்கும், பகல்நேர ஒளியிலுள்ள ஒரு மின்மினிப்பூச்சியின் ஒளிக்கும் எந்த மதிப்பும் இல்லை. அதுபோலவே, பெரும் சக்தி படைத்த ஒருவருக்கெதிராகத் தன் மாயச் சக்தியை உபயோகிக்க முயலும் கீழான ஒருவரால் எதையும் சாதிக்க முடியாது; மாறாக, கீழான அந்த நபரின் சக்தி குறைந்து விடுகிறது.
பதம் 10.13.46 : பிறகு, பிரம்மதேவர் பார்த்துக்கொண்டிருக்கும்போதே, கன்றுகளும் அவற்றை மேய்க்கும் சிறுவர்களும், உடனே நீல மழைமேகங்களின் நிறத்தை உடையவர்களாகவும் மஞ்சள் பட்டாடைகள் அணிந்தவர்களாகவும் காணப்பட்டனர்
பதங்கள் 10.13.47 – 10.13.48 : அப்புருஷர்கள் அனைவருக்கும் சங்கு, சக்கரம், கதை, தாமரை ஆகியவற்றை ஏந்திய நான்கு கரங்கள் இருந்தன. அவர்கள் தங்களுடைய தலைகளில் கிரீடங்களையும், காதுகளில் குண்டலங்களையும், கழுத்துக்களில் வன மாலைகளையும் அணிந்திருந்தனர். அவர்களது வலது மார்பின் மேற்புறத்தில் ஸ்ரீ தேவியின் அடையாளம் இருந்தது. அவர்கள் தங்கள் கைகளில் கடகங்களையும், சங்குக் கழுத்துகளில் கௌஸ்துப மாலைகளையும், முன்கைகளில் கைவளைகளையும் அணிந்திருந்தனர். மேலும் கணுக்கால்களில் காப்புகளுடனும், பாதங்களில் ஆபரணங்களுடனும், இடைகளில் புனிதக் கச்சைகளுடனும் காணப்பட்ட அவர்கள் மிகவும் அழகாக இருந்தனர்.
பதம் 10.13.49 : அவர்களுடைய பாதங்களிலிருந்து தலையுச்சிவரையுள்ள உடலின் ஒவ்வொரு அங்கமும் பச்சையான இளம் துளசி மாலைகளால் நன்கு அலங்களிக்கப்பட்டு இருந்தது. அத்துளசி மாலைகள், கேட்டல், பாடுதல் என்று மிகச்சிறந்த புண்ணியச் செயல்களால் பகவானை வழிபடுவதில் ஈடுபட்டுள்ள பக்தர்களால் அர்ப்பணிக்கப்பட்டவையாகும்.
பதம் 10.13.50 : அந்த விஷ்ணு மூர்த்திகள், பெருகும் நிலவொளியை ஒத்த அவர்களுடைய தூய புன்னகையாலும், அவர்களுடைய சிவந்த கடைக்கண் பார்வைகளாலும், தங்கள் சொந்த பக்தர்களின் விருப்பங்களைப் படைத்துக் காத்தனர். ரஜோ மற்றும் சத்வ குணங்களால் செய்தது போல் இதை அவர்கள் செய்தனர்.
பதம் 10.13.51 : நான்கு தலைகளுடைய பிரம்மதேவர் முதல், அற்ப ஜீவராசி வரையுள்ள அசையும், அசையாத ஜீவன்களனைத்தும் உருவங்களை ஏற்றுக் கொண்டுள்ளன. அவை, தங்கள் தகுதிக்கேற்ப, ஆடுதல், பாடுதல் முதலான பல்வேறு வழிபாட்டு முறைகளால் அந்த விஷ்ணு மூர்த்திகளை வெவ்வேறாக வழிபடுகின்றன.
பதம் 10.13.52 : விஷ்ணு மூர்த்திகள் அனைவரும், அணிமா-சித்தி முதலான ஐசுவரியங்களாலும், அஜா முதலான மாயச் சக்திகளாலும், மற்றும் ஜட உலகபடைப்பிற்கான மஹத்-தத்வம் முதலான இருபத்துநான்கு மூலப்பொருட்களாலும் சூழப்பட்டிருந்தனர்.
பதம் 10.13.53 : பிறகு, எவற்றின் சுதந்திரம் பகவானின் சக்திக்கு முழுமையாகக் கீழ்ப்படிந்துள்ளனவோ, அந்த காலத் தத்துவமும் (கால), சகவாசத்தினால் ஏற்படும் ஒருவனது சொந்த சுபாவமும் (ஸ்வாபவ), புனிதச் சடங்கும் (ஸம்ஸ்கார), இச்சையும் (காம), பலன் கருதும் செயலும் (கர்ம), மற்றும் ஜட இயற்கையின் முக்குணங்களும் (குண) வெவ்வேறு வடிவங்களை ஏற்று விஷ்ணு-மூர்த்திகளை வழிபடுவதையும் பிரம்ம தேவர் கண்டார்.
பதம் 10.13.54 : விஷ்ணு-மூர்த்திகள் அனைவருக்கும், அறிவும் ஆனந்தமும் நிறைந்த காலத்தின் ஆதிக்கத்திற்கு அப்பாற்பட்ட நித்தியமான, எண்ணற்ற ரூபங்கள் இருந்தன. அவர்களுடைய பெரும் மகிமையானது, உபநிஷதங்களைக் கற்பதில் ஈடுபட்டுள்ள ஞானிகளால் தொடவும் முடியாததாக இருந்தது.
பதம் 10.13.55 : இவ்வாறாக, யாருடைய சக்தியால் அசையும், அசையாத ஜீவராசிகளுடன் கூடிய இந்த முழு பிரபஞ்சமும் தோற்றுவிக்கப்படுகிறதோ, அந்த பரப்பிரம்மனை பிரம்மதேவர் கண்டார். அதே சமயத்தில், எல்லாக் கன்றுகளையும். சிறுவர்களையும்கூட பகவானின் விரிவங்கங்களாகவே அவர் கண்டார்.
பதம் 10.13.56 : பிறகு, அந்த விஷ்ணு மூர்த்திகளுடைய பிரகாசத்தினால், யாருடைய பதினொரு புலன்களும் பேராச்சரியத்தில் திளைத்து, உன்னத ஆனந்தத்தினால் பிரமித்தனவோ, அந்த பிரம்மதேவர் கிராம தேவதையின் முன்னிலையில் உள்ள ஒரு குழந்தையின் மண் பொம்மைபோல் மௌனமானார்.
பதம் 10.13.57 : பரப்பிரம்மமானவர் மனக்கற்பனைக்கு அப்பாற்பட்டவரும், சுயமாகத் தோன்றுபவரும், சுய ஆனந்தத்துடன் வாழ்பவரும், பெளதிக சக்திக்கு அப்பாற்பட்டவருமாவார். பொருந்தாத அறிவைத் தவறென நிரூபிக்கும் மணிமுடி போன்ற வேத வாக்கியங்களால் அவர் அறியப்படுகிறார். இவ்வாறாக, எந்த பரமபுருஷருடைய மகிமை நான்கு கரங்களுடைய விஷ்ணு-மூர்த்திகளால் வெளிப்படுத்தப்பட்டதோ, அந்த பரப்பிரம்மனால், சரஸ்வதியின் பதியான பிரம்மதேவர் குழப்பத்தில் ஆழ்த்தப்பட்டார். “என்ன இது?” என்று பிரம்மா சிந்தித்தார். பிறகு அவரால் பார்க்கக்கூட முடியவில்லை. பிறகு பிரம்மாவின் நிலையைப் புரிந்துகொண்ட பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் உடனே தமது யோகமாயையின் திரையை அகற்றினார்.
பதம் 10.13.58 : பிறகு, புற உணர்வு திரும்பப்பெற்ற பிரம்மதேவர், உயிரிழந்தவன் உயிர்பெற்று எழுவதுபோல் எழுந்தார். மிகவும் சிரமத்துடன் தன் கண்களைத் திறந்த அவர் தன்னையும், பிரபஞ்சத்தையும் கண்டார்.
பதம் 10.13.59 : பிறகு சுற்றியும் நோக்கிய பிரம்மதேவர், உடனே, மரங்களடர்ந்ததும், மக்களுக்கு ஜீவாதாராமாக உள்ளதும், எல்லாப் பருவங்களிலும் சமமாக இன்பமளிப்பதுவுமான பிருந்தாவனம் தன்னெதிரில் இருப்பதைக் கண்டார்.
பதம் 10.13.60 : பிருந்தாவனம் பகவானின் உன்னத வசிப்பிடமாகும். அங்கு பசியோ, கோபமோ அல்லது தாகமோ இல்லை. மனிதர்களும், கொடிய மிருகங்களும் இயல்பாகவே விரோதமுள்ளவர்கள் என்றாலும், அவர்கள் உன்னத நட்புறவில் இணைந்து வாழ்கின்றனர்.
பதம் 10.13.61 : பிறகு, இரண்டற்ற ஒருவரும், பூரண அறிவுடையவரும், எல்லையற்றவருமான பரப்பிரம்மன், ஆயர்குலத்துக் குழந்தையின் வேடத்தை ஏற்று, கையில் ஒரு பிடி உணவுடன், கன்றுகளையும், அவரது நண்பர்களான இடைச் சிறுவர்களையும், முன்போலவே தனியாக எல்லா இடங்களிலும் தேடிக் கொண்டிருப்பதை பிரம்மதேவர் கண்டார்.
பதம் 10.13.62 : இதைக்கண்ட பிரம்மதேவர் உடனே தன் அன்ன வாகனத்திலிருந்து இறங்கி, தங்கத்தடி போல் கீழே விழுந்து, தன் தலைகளிலுள்ள நான்கு கிரீடங்களின் நுனிகளால் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் தாமரைப் பாதங்களைத் தொட்டு வணங்கி, ஆனந்தக் கண்ணீரால் அவற்றை அபிஷேகம் செய்தார்.
பதம் 10.13.63 : பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் தாமரைப் பாதங்களில் நீண்ட நேரமாக மீண்டும் மீண்டும் விழுந்தும், எழுந்து கொண்டும் இருந்த பிரம்மதேவர், சற்றுமுன் தான் கண்ட பகவானின் மகத்துவத்தைத் திரும்பத்திரும்ப நினைவு கூர்ந்தார்.
பதம் 10.13.64 : பிறகு மெதுவாக எழுந்து, கண்களைத் துடைத்துக் கொண்ட பிரம்மதேவர், முகுந்தனைப் பார்த்துத் தலைகுனிந்தவராக, உடல் நடுங்க, ஆழ்ந்த சிந்தனையுடன், மிகவும் அடக்கமாக, தழுதழுத்த வார்த்தைகளால் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரைத் துதிக்கலானார்.