அத்தியாயம் – 11
ஸ்ரீ கிருஷ்ணரின் குழந்தைப் பருவ லீலைகள்
பதம் 10.11.1
ஸ்ரீ-சுக உவாச
கோபா நந்தாதய: ஸ்ருத்வா த்ருமயோ: பததோ ரவம்
தத்ராஜக்மு: குரு-ஸ்ரேஷ்ட நிர்காத-பய-சங்கிதா:
ஸ்ரீ-சுக: உவாச—ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்; கோபா:—இடையர்கள் அனைவரும்; நந்த-ஆதாய:—நந்த மகாராஜனைத் தலைமையாகக் கொண்ட; ஸ்ருத்வா—கேட்டு; த்ருமயோ:—இரு மரங்களின்; பததோ:—கீழே சாய்ந்த; ரவம்—இடி முழக்கம் போன்ற பேரொலியை; தத்ர—அங்கு, அந்த இடத்தில்; ஆஜக்மு:—சென்றனர்; குரு-ஸ்ரேஷ்ட—பரீட்சித்து மகாராஜனே; நிர்காத-பய-சங்கிதா:—இடி விழுகிறதோ என்றஞ்சிய அவர்கள்.
சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்: பரீட்சித்து மகாராஜனே, மருத மரங்கள் கீழே விழுந்தபொழுது, இடி விழுந்ததைப் போன்ற பயங்கர ஓசையைக் கேட்ட சுற்றுப்புறத்து இடையர்கள் அனைவரும் அந்த இடத்திற்கு வந்தார்கள்.
பதம் 10.11.2
பூம்யாம் நிபதிதௌ தத்ர தத்ருகர் யமலார்ஜுனௌ
பப்ரமுஸ் தத் அவிக்ஞாய லக்ஷ்யம் பதன-காரணம்
பூம்யாம்—தரையில்; நிபதிதெள—விழுந்துள்ள; தத்ர—அங்கு; தத்ருக:—அவர்கள் அனைவரும் கண்டனர்; யமல-அர்ஜுனௌ—இரட்டை மருத மரங்கள்; பப்ரமு:—அவர்கள் குழப்பமடைந்தனர்; தத்—அந்த; அவிக்ஞாய—ஆனால் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை; லக்ஷ்யம்—மரங்கள் விழுந்து கிடந்ததை அவர்களால் நேரடியாகக் காணமுடிந்தது என்றாலும்; பதன-காரணம்—அவை விழுந்ததற்கான காரணத்தை (திடீரென்று இது எப்படி நிகழ்ந்திருக்கக் கூடும்?).
அங்கு, மருத மரங்கள் தரைமேல் விழுந்து கிடப்பதைக் கண்ட அவர்களுக்கு குழப்பம் ஏற்பட்டது. ஏனெனில், மரங்கள் விழுந்து கிடப்பதை நேரடியாக அவர்களால் காண முடிந்தது என்றாலும், அதன் காரணத்தை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.
பதம் 10.11.3
உலூகலம் விகர்ஷந்தம் தாம்னா பத்தம் ச பாலகம்
கஸ்யேதம் குத ஆஸ்சர்யம் உத்பாத இதி காதரா:
உலூகலம்—மர உரலை; விகர்ஷந்தம்—இழுத்துக்கொண்டு; தாம்னா—கயிற்றுடன்; பத்தம் ச—மேலும் வயிற்றில் கட்டப்பட்டு; பாலகம்—கிருஷ்ணர்; கஸ்ய—யாருடைய; இதம்—இது; குத:—எங்கிருந்த; ஆஸ்சர்யம்—இந்த அற்புதச் சம்பவங்கள்; உத்பாத:—தொல்லை; இதி—இவ்வாறாக; காதார:—அவர்கள் மிகவும் குழப்பமடைந்தனர்.
உரலுடன் கயிற்றால் கட்டப்பட்டிருந்த கிருஷ்ணர், அதை இழுத்துச் சென்றார். ஆனால் அவரால் எப்படி மரங்களை இழுத்துத் தள்ளியிருக்க முடியும்? உண்மையில் அதைச் செய்தது யார்? இச்சம்பவத்திற்குக் காரணம் என்ன? ஆச்சரியத்திற்குரிய இவ்விஷயங்களை எல்லாம் கருத்திற்கொண்ட இடையர்கள் சந்தேகத்திற்கும், குழப்பத்திற்கும் உள்ளாயினர்.
பதம் 10.11.4
பாலா ஊகர் அனேனேதி திர்யக்-கதம் உலூகலம்
விகர்ஷதா மத்ய-கேன புருஷாவ் அபி அசக்ஷ்மஹி
பாலா:—மற்றெல்லாச் சிறுவர்களும்; ஊக:—கூறினார்; அனேன—அவனால் (கிருஷ்ணனால்); இதி—இவ்வாறாக; திர்யக்—குறுக்காக; கதம்—அது ஆனது; உலூகலம்—மர உரல்; விகர்ஷதா—இழுத்துச் சென்ற கிருஷ்ணனால்; மத்ய-கேன—இரு மரங்களுக்கு இடையில் சென்று; புருஷௌ—இரு அழகிய நபர்கள்; அபி—கூட; அசக்ஷ்மஹி—எங்களுடைய சொந்தக் கண்களால் நாங்கள் கண்டோம்.
பிறகு இடைச் சிறுவர்கள் எல்லோரும் கூறினர்: கிருஷ்ணன்தான் இதைச் செய்தான். அவன் இரு மரங்களுக்கு நடுவில் சென்றபொழுது உரல் குறுக்கே விழுந்தது. கிருஷ்ணன் உரலை இழுக்க, இரு மரங்களும் கீழே விழுந்தன. அதன்பிறகு, இரு அழகிய நபர்கள் இம்மரங்களிலிருந்து வெளியே வந்தனர். இதை எங்கள் சொந்தக் கண்களால் நாங்கள் கண்டோம்.
பதம் 10.11.5
ந தே தத்-உக்தம் ஜக்ருஹுர் ந கடேதேதி தஸ்ய தத்
பாலஸ்யோத்பாடனம் தர்வோ: கேசித் ஸந்திக்த-சேதஸ:
ந—இல்லை; தே—எல்லா கோபர்களும்; தத்-உக்தம்—சிறுவர்களால் பேசப்பட்டதை; ஜக்ருஹு:—ஏற்றுக் கொள்வார்கள்; ந கடேத—அப்படி இருக்க முடியாது; இதி—இவ்வாறு; தஸ்ய—கிருஷ்ணரின்; தத்—நடவடிக்கை; பாலஸ்ய—கிருஷ்ணரைப் போன்ற ஒரு சிறுவனின்; உத்பாடனம்—வேருடன் பிடுங்கியதை; தர்வோ:—இரு மரங்களையும்; கேசித்—அவர்களில் சிலர்; ஸந்திக்த-சேதஸ:—செய்யக் கூடியவை பற்றி சந்தேகத்திற்குள்ளாயினர் (ஏனெனில், இக்குழந்தை நாராயணருக்குச் சமமானவராக இருப்பார் என்று கர்கமுனி முன்னறிவித்துள்ளார்).
ஆழ்ந்த பெற்றோர் பாசத்தின் காரணத்தால், நந்தரை தலைமையாகக் கொண்ட இடையர்களால், இவ்வளவு அற்புதமாக கிருஷ்ணரால் இம்மரங்களை வேருடன் பிடுங்கியிருக்கக் கூடுமா என்பதை நம்பமுடியவில்லை. எனவே சிறுவர்களின் பேச்சில் அவர்களால் நம்பிக்கை வைக்க முடியவில்லை. எனினும், அவர்களில் சிலர் சந்தேகப்பட்டனர். “கிருஷ்ணர் நாராயணருக்குச் சமமானவர் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டிருப்பதால், இதை இவன் செய்திருக்கக் கூடும்” என்று அவர்கள் எண்ணினர்.
பதம் 10.11.6
உலூகலம் விகர்ஷந்தம் தாம்னா பத்தம் ஸ்வம் ஆத்மஜம்
விலோக்ய நந்த: ப்ரஹஸத்-வதனேர் விமுமோச ஹ
உலூகலம்—மர உரலை; விகர்ஷந்தம்—இழுத்துச் செல்வதை; தாம்னா—கயிற்றால்; பத்தம்—கட்டப்பட்டு; ஸ்வம் ஆத்மஜம்—தன் சொந்த மகனான கிருஷ்ணர்; விலோக்ய—கண்டதன் மூலம்; நந்த:—நந்த மகாராஜன்; ப்ரஹஸத்-வதன:—அற்புதக் குழந்தையைக் கண்ட பொழுது அவரது முகத்தில் புன்னகை அரும்பியது; விமுமோச ஹ—அவரைக் கட்டிலிருந்து விடுவித்தார்.
தன் சொந்த மகன் கயிறுகளால் உரலுடன் கட்டப்பட்டு, அதை இழுத்துச் செல்வதைக் கண்ட நந்த மகாராஜன் புன்னகை செய்து, கிருஷ்ணரைக் கட்டிலிருந்து விடுவித்தார்.
பதம் 10.11.7
கோபீபி: ஸ்தோபிதோ ‘ன்ருத்யத் பாலவத் க்வசித்
உத்காயதி க்வசின் முக்தாஸ் தத்-வசோ தாரு-யந்த்ரவத்
கோபீபி:—கோபியர்களால் (முகத்துதியாலும், பரிசுகளாலும்); ஸ்தோபித:—உற்சாகப் படுத்தப்பட்டு, துண்டப்பட்டு; அன்ருத்யத்—சிறிய கிருஷ்ணர் ஆடினார்; பகவான்—அவர் பரமபுருஷர் என்ற போதிலும்; பால-வத்—ஒரு மனிதக் குழந்தையைப் போல்; க்வசித்—சில சமயம்; உத்காயதி—அவர் உரக்கப் பாடுவார்; க்வசித்—சிலசமயம்; முக்த:—திகைப்படைந்து; தத்-வச:—அவர்களது கட்டுப்பாட்டின் கீழ்; தாகு-யந்த்ர-வத்—ஒரு மரப் பொம்மை போல்.
“எனதன்பு கிருஷ்ணா, நீ ஆடினால் ஒரு மிட்டாயில் பாதியைக் கொடுப்பேன்” என்று கோபியர்கள் கூறுவார்கள். இப்படிக் கூறியும், கரங்களைத் தட்டியும், கோபியர்கள் அனைவரும் கிருஷ்ணரை வெவ்வேறு வழிகளில் உற்சாகப்படுத்தினர். அவர் பரம சக்தி படைத்த முழு கோபியர்களின் கைகளிலுள்ள ஒரு மரப் பொம்மைபோல், அவர்களது விருப்பத்திற்கேற்ப புன்னகை செய்து, நடனமாடுவார். சிலசமயம் அவர்களது உத்தரவுப்படி அவர் உரக்கப் பாடுவார். இவ்வாறாக கிருஷ்ணர் முழுமையாக கோபியர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தார்.
பதம் 10.11.8
பிப்ரிதி க்வசித் ஆக்ஞாப்த: பீடகோன்மான-பாதுகம்
பாஷு-க்ஷேபம் ச குருதே ஸ்வானாம் ச ப்ரீதிம் ஆவஹன்
பிப்ரிதி—பொருட்களைத் தம்மால் தூக்க இயலாதது போல் கிருஷ்ணர் பொருட்களைத் தொட்டுக்கொண்டு நிற்பார்; க்வசித்—சில சமயம்; ஆக்ஞப்த:—உத்தரவிடப்பட்டு; பீடக-உன்மான—மர ஆசனத்தையும், மர அளவையையும்; பாதுகம்—மரச் செருப்புகளை எடுத்துவந்து; பாஹு-க்ஷேபம் ச—உடலைக் கைகளால் அடித்து; குருதே—செய்வார்; ஸ்வானாம் ச—அவரது சொந்த உறவினர்கள், கோபியர்கள் மற்றும் பிற நெருங்கிய நண்பர்கள் ஆகியோரின்; ப்ரீதிம்—ஆனந்தத்தை; ஆவஹன்—எழுப்பி.
சில சமயங்களில் தாய் யசோதையும், அவளது தோழிகளான கோபியர்களும் கிருஷ்ணரிடம். “இந்த பொருளைக் கொண்டுவா” அல்லது “அந்தப் பொருளைக் கொண்டு வா” என்று கூறுவார்கள். சிலசமயங்களில் ஒரு மரப் பலகையையோ, மரச் செருப்புகளையோ அல்லது ஒரு மரப் படியையோ எடுத்து வரும்படி அவருக்கு அவர்கள் உத்தரவிடுவார்கள். இவ்வாறு தாய்களால் உத்தரவிடப்பட்டதும் கிருஷ்ணர் அவற்றை எடுத்துவர முயல்வார். ஆனால் சிலசமயங்களில், தமக்குப் போதுமான பலம் இருப்பதாகக் காட்டி, தம் உறவினர்களை மகிழ்விப்பதற்காக, தமது உடலைத் தம் கரங்களால் அடிப்பார்.
பதம் 10.11.9
தர்சயம்ஸ் தத்-விதாம் லோக ஆத்மனோ ப்ருத்ய-வஸ்யதாம்
வ்ரஜஸ்யோவாஹ வை ஹர்ஷம் பகவான் பால-சேஷ்டிதை:
தர்சயம்—காட்டி; தத்-விதாம்—கிருஷ்ணரின் செயல்களைப் புரிந்துகொள்ள முடிந்தவர்களுக்கு; லோகே—உலகம் முழுவதிலும்; ஆத்மன:—அவரைப் பற்றி; ப்ருத்ய-வஸ்யதாம்—தமது தொண்டர்களான பக்தர்களின் உத்தரவுகளை நிறைவேற்றுவதற்கு எப்படி அவர் உடன்படுகிறார்; வ்ரஜஸ்ய—விரஜபூமியின்; உவாஹ—செய்தார்; வை—உண்மையில்; ஹர்ஷம்—ஆனந்தம்; பகவான்—பரமபுருஷர்; பால-சேஷ்டிதை:—பல வேலைகளைச் செய்ய முயலும் ஒரு குழந்தையினுடையதைப் போன்ற அவரது செயல்களால்.
பகவானின் செயல்களைப் புரிந்துகொள்ளக் கூடிய உலக முழுவதிலுமுள்ள தூய பக்தர்களுக்கு, பக்தர்களால் தம்மை எந்த அளவிற்குக் கட்டுப்படுத்த முடியும் என்பதை பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் வெளிப்படுத்தினார். இவ்வாறு தமது குழந்தைப் பருவத்துச் செயல்களால் அவர் விரஜவாசிகளின் ஆனந்தத்தை அதிகரித்தார்.
பதம் 10.11.10
க்ரீணீஹி போ: ஃபலானீதி ஸ்ருத்வா ஸத்வரம் அச்யுத:
ஃபலார்தீ தான்யம் ஆதாய யயௌ ஸர்வ-ஃபல-ப்ரத:
க்ரீணீஹி—தயவுசெய்து வந்து வாங்கிக் கொள்ளுங்கள்; போ—சுற்றுப்புற வாசிகளே; ஃபலானி—பழுத்த பழங்கள்; இதி—இவ்வாறு; ஸ்ருத்வா—கேட்டு; ஸத்வரம்—மிக விரைவில்; அச்யுத:—கிருஷ்ணர்; ஃபல-அர்தீ—அவருக்குச் சில பழங்கள் தேவைப்பட்டது போல்; தான்யம் ஆதாய—கொஞ்சம் அரிசியை அள்ளி எடுத்துச் கொண்டு; யயௌ—பழ வியாபாரியிடம் சென்றார்; ஸர்வ-ஃபல-ப்ரத:—அனைவருக்கும் எல்லா வகையான பழங்களையும் அளிக்கக் கூடியவரான பரமபுருஷருக்கு இப்பொழுது பழங்கள் தேவைப்பட்டன.
ஒரு சமயம் பழ வியாபாரி ஒருத்தி, “விரஜவாசிகளே! நீங்கள் பழங்கள் வாங்க விரும்பினால் இங்கு வாருங்கள்!” என்று கூவியழைத்தாள். இதைக் கேட்ட கிருஷ்ணர், தமக்குச் சில பழங்கள் தேவைப்பட்டது போல், உடனே கொஞ்சம் தானியங்களை எடுத்துக் கொண்டு பண்டமாற்று செய்து கொள்ளச் சென்றார்.
பதம் 10.11.11
ஃபல-விக்ரயிணீ தஸ்ய ச்யுத-தான்ய-கர-த்வயம்
ஃபலைர் ஆபூரயத் ரத்னை: ஃபல-பாண்டம் அபூரி ச
ஃபல-விக்ரயிணீ—வயதான ஆதிகுடிமகளான பழவியாபாரி; தஸ்ய—கிருஷ்ணரின்; ச்யுத-தான்ய—பண்டமாற்றுக்காக அவர் அள்ளிக் கொண்டு வந்த தானியத்தில் பெரும் பகுதி கீழே கொட்டி விட்டது; கர-த்வயம்—உள்ளங்கைகள்; ஃபலை: அபூரயத்—பழ வியாபாரி அவரது உள்ளங்கைகளைப் பழங்களால் நிரப்பினாள்; ரத்ணை:—ஆபரணங்களுக்கும், தங்கத்திற்கும் பதிலாக; ஃபல-பாண்டம்—பழக் கூடை; அபூரிச—நிரம்பியது.
கிருஷ்ணர் பழக்காரியை நோக்கி விரைந்து செல்லும் பொழுது, அவர் பிடித்திருந்த தானியங்களில் பெரும் பகுதி கொட்டிவிட்டது. இருப்பினும், பழக்காரி கிருஷ்ணரின் கரங்களைப் பழங்களால் நிரப்பினாள். உடனே அவளது பழக்கூடை ஆபரணங்களாலும், தங்கத்தாலும் நிரம்பியது.
பதம் 10.11.12
ஸரித்-தீர-கதம் க்ருஷ்ணம் பக்னரர்ஜுனம் அதாஹ்வயத்
ராமம் ச ரோஹிணீ தேவீ க்ரீடந்தம் பாலகைர் ப்ருசம்
ஸரித்-தீர—ஆற்றங்கரைக்கு; கதம்—சென்றிருந்தனர்; க்ருஷ்ணம்—கிருஷ்ணரை; பக்ன-அர்ஜுனம்—மருத மரங்களை வீழ்த்திய லீலைக்குப் பின்; அத—பிறகு; ஆஹ்வயத்—அழைத்தாள்; ராமம் ச—அதோடு பல ராமரையும்; ரோஹினீ—பலராமரின் தாய்; தேவீ—லக்ஷ்மிதேவி; க்ரீடந்தம்—விளையாட்டில் ஈடுபட்டிருந்த; பாலகை:—வேறு பல சிறுவர்களுடன்; ப்ருசம்—ஆழ்ந்த கவனத்துடன்.
ஒருசமயம், மருத மரங்களை வீழ்த்திய சம்பவத்திற்குப் பிறகு, ஆற்றங்கரைக்குச் சென்று, மற்ற சிறுவர்களுடன் ஆழ்ந்த கவனத்துடன் விளையாடிக் கொணடிருந்த பலராமரையும், கிருஷ்ணரையும் அழைத்து வருவதற்காக ரோகிணி தேவி அங்கு சென்றாள்.
பதம் 10.11.13
நோபேயாதாம் யதாஹூதௌ க்ரீடா-ஸங்கேன புத்ரகௌ
யசோதாம் ப்ரேஷயாம் ஆஸ ரோஹிணீ புத்ர-வத்ஸலாம்
ந உபேயாதாம்—வீடு திரும்ப மறுத்தனர்; யதா—அப்பொழுது; ஆஹூதௌ—அவர்கள் விளையாட்டிலிருந்து திரும்ப அழைக்கப்பட்டனர்; கீரீடா-ஸங்கேன—மற்ற சிறுவர்களுடன் விளையாடுவதில் மிகவும் நாட்டம் கொண்டிருந்ததால்; புத்ரகெள—இரு மகன்களும் (கிருஷ்ணரும், பலராமரும்); யசோதாம் ப்ரேஷயாம் ஆஸ—அவர்களை அழைத்துவர தாய் யசோதையை அனுப்பினாள்; ரோஹிணீ—தாய் ரோகிணி; புத்ர-வத்ஸலாம்—தாய் யசோதை கிருஷ்ண, பலராமரிடத்தில் அதிக பாசமுள்ள தாயாக இருந்ததால்.
மற்ற சிறுவர்களுடன் விளையாடுவதில் அதிக நாட்டம் கொண்டிருந்ததால், ரோகிணி அழைத்தபொழுது கிருஷ்ணரும், பலராமரும் திரும்பிச் செல்லவில்லை, எனவே, அவர்களிடம் தாய் யசோதை அதிக பாசம் கொண்டிருந்ததால், அவர்களை அழைத்துவர ரோகிணி தாய் யசோதையையே அனுப்பினாள்.
பதம் 10.11.14
க்ரீடந்தம் ஸா ஸுதம் பாலைர் அதிவேலம் ஸஹாக்ரஜம்
யசோதாஜோஹவீத் க்ருஷ்ணம் புத்ர-ஸ்னேஹ-ஸ்னுத-ஸ்தானி
க்ரீடந்தம்—விளையாட்டில் ஈடுபட்டிருந்தனர்; ஸா—தாய் யசோதை; ஸுதம்—தன் மகன்; பாலை:—மற்ற சிறுவர்களுடன்; அதி-வேலம்—மிகவும் தாமதமாகிவிட்ட போதிலும்; ஸஹ-அக்ரஜம்—தமது அண்ணன் பலராமருடன் விளையாடிக் கொண்டிருந்த அவரை; யசோதா—தாய் யசோதை; அஜோஹவீத்—(கிருஷ்ணா, பலராம் இங்கு வாருங்கள் என்று) அழைத்தாள்; க்ருஷ்ணம்—கிருஷ்ணரை; புத்ர-ஸ்தேஹ-ஸ்னுத-ஸ்தனீ—அவர்களை அவள் அழைக்கும் பொழுது, அவளது பரவச அன்பினாலும், பாசத்தாலும், அவளது முலைகளிலிருந்து பால் சுரந்தது.
கிருஷ்ணரும், பலராமரும் விளையாட்டில் ஈடுபாடு கொண்டிருந்ததால், அதிக நேரமாகியும் மற்ற சிறுவர்களுடன் அவர்கள் விளையாடிக் கொண்டே இருந்தனர். எனவே தாய் யசோதை அவர்களை நண்பகல் உணவுக்கு வரும்படி அழைத்தாள். கிருஷ்ண, பலராமரிடமிருந்த அவளது ஆழ்ந்த அன்பினாலும், பாசத்தாலும் அவளது முலைகளிலிருந்து பால் சுரந்தது.
பதம் 10.11.15
க்ருஷ்ண க்ருஷ்ணாரவிந்தாக்ஷ
தாத ஏஹி ஸ்தானம் பிப
அலம் விஹாரை: க்ஷுத்-க்ஷாந்த:
க்ரீடா-ஸ்ராந்தோ ‘ஸி புத்ரக
க்ருஷ்ண க்ருஷ்ண அரவிந்த-அக்ஷ—கிருஷ்ணா, என் மகனே, தாமரைக் கண்ணா; தாத—என் செல்வமே; ஏஹி—இங்கு வா; ஸ்தனம்—என் முலைப்பாலை; பிப—பருகு; அலம் விஹாரை:—இனிமேல் விளையாட அவசியமில்லை; க்ஷுத் க்ஷாந்த:—பசியினால் களைத்தும்; க்ரீடா-ஸ்ராந்த:—விளையாட்டினால் சோர்வும்; அஸி—அடைந்திருப்பாய்; புத்ரக—என் மகனே.
என் மகனே, தாமரைக் கண்ணா, கிருஷ்ணா, இங்கு வந்து என் முலைப்பாலைப் பருகு. என் அன்புச் செல்வமே, நீண்ட நேரம் நீ விளையாடியதால், தாகத்தாலும், சோர்வாலும் நீ மிகவும் களைப்படைந்திருப்பாய், தொடர்ந்து விளையாடுவதற்கு அவசியமில்லை.
பதம் 10.11.16
ஹே ராமாகச்ச தாதாக ஸானுஜ: குல-நந்தன
ப்ராதர் ஏவ க்ருதாஹாரஸ் தத் பவான் போக்தும் அர்ஹதி
ஹே ராம—பிரிய மகனே பலராமா; ஆகச்ச—தயவுசெய்து இங்கு வா; தாத—எனதன்புச் செல்வனே; ஆக—உடனே; ஸ-அனுஜ:—உன் தம்பியுடன்; குல-நந்தன—நம் குடும்பத்திற்குப் பெருமை அளிப்பவனே; ப்ராத: ஏவ—காலையில்தான் என்பதில் சந்தேகமில்லை; க்ருத-ஆஹார:—காலைச் சிற்றுண்டியை உண்டீர்கள்; தத்—எனவே; பவான்—நீங்கள்; போக்தும்—மேலும் எதையேனும் சாப்பிட; அர்ஹதி—வேண்டும்.
எனதன்பு பலதேவா, நம் குலப் பெருமையே, தயவு செய்து உன் தம்பி கிருஷ்ணனுடன் உடனே வா. காலையில் நீங்களிருவரும் சாப்பிட்டீர்கள். இப்பொழுது மேலும் எதையேனும் நீங்கள் சாப்பிட வேண்டும்.
பதம் 10.11.17
ப்ரதீக்ஷதே த்வாம் தசார்ஹ போக்ஷ்யமாணோ வ்ரஜாதிப:
ஏஹி ஆவயோ: ப்ரியம் தேஹி ஸ்வ-க்ருஹான் யாத பாலகா:
ப்ரதிக்ஷதே—காத்துக் கொண்டிருக்கிறாள்; த்வாம்—உங்களிருவருக்காக (கிருஷ்ணர் மற்றும் பலராமர்); தாசார்ஹ—பலராமா; போக்ஷ்யமாண:—உண்ண ஆவல் கொண்டு; வ்ரஜ-ஆதிப:—விரஜையின் அரசரான நந்த மகாராஜன்; ஏஹி—இங்கு வாருங்கள்; ஆவயோ:—எங்களுடைய; ப்ரியம்—மகிழ்ச்சியை; தேஹி—சற்று யோசித்துப்பார்; ஸ்வ-க்ருஹான்—அவரவர் வீடுகளுக்கு; யாத—செல்ல விடுங்கள்; பாலகா:—மற்ற சிறுவர்களை.
விரஜ மன்னரான நந்த மகாராஜன் இப்பொழுது உணவருந்தக் காத்துக் கொண்டிருக்கிறார். எனதன்பு மகனே பலராமா, உங்களுக்காக அவர் காத்திருக்கிறார். ஆகவே, எங்களை மகிழ்விக்க வாருங்கள். உன்னுடனும் கிருஷ்ணனுடனும் விளையாடிக் கொண்டிருக்கும் எல்லாச் சிறுவர்களும் இப்பொழுது அவரவர் வீடுகளுக்குச் செல்ல வேண்டும்.
பதம் 10.11.18
தூலி-தூஸரிதாங்கஸ் த்வம் புத்ர மஜ்ஜனம் ஆவஹ
ஜன்மர்க்ஷம் தே ‘த்ய பவதி விப்ரேப்யோ தேஹி கா: கசி:
தூலி-தூஸரித-அங்க: த்வம்—உன் உடல் முழுவதிலும் தூசியும் மண்ணும் படிந்துள்ளன; புத்ர—எனதன்பு மகனே; மஜ்ஜனம் ஆவஹ—இப்பொழுது இங்கு வந்து, குளித்து, உன்னைச் சுத்தம் செய்து கொள்; ஜனம-ருக்ஷம்—மங்களகரமான உனது ஜன்ம நட்சத்திரம்; தே—உன்னுடைய; அத்ய—இன்று; பவதி—ஆகும்; விப்ரேப்ய:—தூய பிராமணர்களுக்கு; தேஹி—தானம் கொடு; கா:—பசுக்களை; கசி:—சுத்தம் செய்து கொண்டு.
தாய் யசோதை மேலும் கிருஷ்ணரிடம் கூறினாள்: எனதன்புப் புதல்வனே, நாள் முழுவதும் விளையாடியதால், உன்னுடைய உடல் மண்ணாலும், புழுதியாலும் மூடப்பட்டுள்ளது. ஆகவே திரும்பி வந்து, குளித்து, உன்னைச் சுத்தம் செய்துகொள். இன்று உன்னுடைய மங்களகரமான ஜன்ம நட்சத்திர நாளாகும். எனவே, தூய்மை செய்து கொண்டு, பிராமணர்களுக்குப் பசுக்களைத் தானம் கொடு.
பதம் 10.11.19
பஸ்ய பஸ்ய வயஸ்யாம்ஸ் தே மாத்ரு-ம்ருஷ்டான் ஸ்வலங்க்ருதான்
த்வம் ச ஸ்னாத: க்ருதாஹாரோ விஹரஸ்வ ஸ்வலங்க்ருத:
பஸ்ய பஸ்ய—சற்று கவனி, சற்று கவனி; வயஸ்யான்—தன் வயதுடைய பையன்கள்; தே—உனது; மாத்ரு-ம்ருஷ்டான்—அவர்களது தாய்களால் சுத்தம் செய்யப்பட்டு; ஸு-அலங்க்ருதான்—நல்ல ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டு; த்வம் ச—நீயும்; ஸ்னாத—நீராடியபின்; க்ருத-ஆஹார:—மேலும் நண்பகல் உணவருந்தி; விஹரஸ்வ—அவர்களுடன் இன்புற்றிரு; ஸு-அலங்க்ருத:—அவர்களைப் போல் நன்கு அலங்கரித்துக் கொண்டு.
உன் வயதுள்ள உன் நண்பர்கள் எல்லோரும் எப்படி அவர்களுடைய தாய்களால் குளிப்பாட்டி, அழகிய ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளனர் என்பதைப் பார். நீயும் குளித்துவிட்டு, உன் நண்பகல் உணவை முடித்துக்கொண்டு, ஆபரணங்களால் உன்னை அலங்கரித்துக் கொண்டபின், உன் நண்பர்களுடன் மீண்டும் விளையாடலாம்.
பதம் 10.11.20
இத்தம் யசோதா தம் அசேஷ-சேகரம்
மத்வா ஸுதம் ஸ்நேஹ-நிபத்ததீர் ந்ருப
ஹஸ்தே க்ருஹீத்வா ஸஹ-ராமம் அச்யுதம்
நீத்வா ஸ்வ-வாடம் க்ருதவதி அதோதயம்
இத்தம்—இவ்வாறாக; யசோதா—தாய் யசோதை; தம் அசேஷ சேகரம்—அழுக்கு அல்லது அசுத்தம் என்ற கேள்விக்கே இடமின்றி மங்களகரமான அனைத்திற்கும் சிகரம் போல் விளங்கிய கிருஷ்ணரை; மத்வா—கருதி; ஸுதம்—தன் மகனாக; ஸ்நேஹ-நிபத்த-தீ:—ஆழ்ந்த அன்புணர்ச்சியின் காரணத்தால்; ந்ருப—அரசே (பரீட்சித்து மகராஜனே); ஹஸ்தே—கையில்; க்ருஹீத்வா—எடுத்துக் கொண்டு; ஸஹ-ராமம்—பலராமருடன்; அச்யுதம்—என்றும் தவறாதவரான கிருஷ்ணரை; நீத்வா—கொண்டுவந்து; ஸ்வ-வாடம்—வீட்டில்; க்ருதவதி—செய்தாள்; அத—இப்பொழுது; உதயம்—அவரைக் குளிப்பாட்டி, ஆடை அணிவித்து, ஆபரணங்களால் அலங்கரித்த பொலிவுடன் விளங்கச் செய்தாள்.
அன்பிற்குரிய பரீட்சித்து மகாராஜனே! ஆழ்ந்த அன்பினாலும், பாசத்தாலும் கிருஷ்ணரின் தாயான யசோதை, சகல ஐசுவரியங்களுக்கும் சிகரமாக விளங்கிய கிருஷ்ணரைத் தன் சொந்த மகனாகக் கருதினாள். இவ்வாறு கிருஷ்ண, பலராமரின் கைகளைப் பற்றியபடி அவர்களை அவள் வீட்டிற்கு அழைத்து வந்தாள். அங்கு அவர்களை நன்கு குளிப்பாட்டி, ஆடை அணிவித்து, பின் போஜனம் செய்வித்துத் தன் கடமைகளை நிறைவேற்றினாள்.
பதம் 10.11.21
ஸ்ரீ-சுக உவாச
கோப-வ்ருத்தா மஹோத்பாதான் அனுபூய ப்ருஹத்வனே
நந்தாதய: ஸமாகம்ய வ்ரஜ-கார்யம் அமந்த்ரயன்
ஸ்ரீ சுக: உவாச—ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்; கோப-வ்ருத்தா:—வயது முதிர்ந்த இடையர்கள்; மஹா-உத்பாதான்—மிகப் பெரிய தொல்லைகளை; அனுபூய—அனுபவித்தபின்; ப்ருஹத்வனே—பிருஹத்வனம் என்ற இடத்தில்; நந்த-ஆதய:—நந்தரின் தலைமையிலான இடையர்கள்; ஸமாகம்ய—கூடினர்; வ்ரஜ-கார்யம்—விரஜபூமியின் காரியமாக; அமந்த்ரயன்—மஹாவனத்தில் தொடர்ந்து நிகழ்ந்த தொல்லைகளை எப்படித் தடுப்பது என்று நிதானமாக யோசித்தனர்.
ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்: பிறகு ஒரு சமயம், பிருஹத்வனத்தில் பெருந் தொல்லைகளைக் கண்ட நந்தரின் தலைமையிலான வயது முதிர்ந்த இடையர்கள் அனைவரும் ஒன்றுகூடி, விரஜையில் தொடர்ந்து நிகழும் தொல்லைகளைத் தடுக்க என்ன செய்வதென்று ஆலோசிக்கத் துவங்கினார்.
பதம் 10.11.22
தத்ரோபானந்த-நாமாஹ கோபோ ஞான-வயோ-‘திக:
தேச-காலார்த-தத்வ-க்ஞ: ப்ரிய-க்ருத் ராம-க்ருஷ்ணயோ:
தத்ர—கூட்டத்தில்; உபானந்த-நாமா—உபானந்தர் எனும் பெயர்கொண்ட (நந்த மகாராஜனின் மூத்த சகோதரர்); ஆஹ—கூறினார்; கோப:—இடையர்கள்; ஞான-வய:-அதிக:—அறிவிலும், வயதிலும் எல்லோரையும் விட மூத்தவரான; தேச-கால-அர்த்த-தத்வ-க்ஞ:—காலம், இடம் மற்றும் சூழ்நிலைகளுக்கேற்ப மிகவும் அனுபவமுள்ள; ப்ரிய-க்ருத்—நன்மைக்காக; ராம-க்ருஷ்ணயோ:—பரம புருஷர்களான பலராம் மற்றும் கிருஷ்ணரின்.
கோகுல வாசிகளின் இக்கூட்டத்தில், வயதிலும், அறிவிலும் மிகவும் முதிர்ந்தவரும், காலம் இடம் மற்றும் சூழ்நிலைகளுக்கேற்ப மிகவும் அனுபவமுள்ளவருமான உபானந்தர் என்ற ஓரிடையர், கிருஷ்ண பலராமரின் நன்மைக்காக பின்வரும் யோசனையைக் கூறினார்.
பதம் 10.11.23
உத்தாதவ்யம் இதோ ‘ஸ்மாபிர் கோகுலஸ்ய ஹிதைஷிபி:
ஆயர்ந்தி அத்ர மஹோத்பாதா பாலானாம் நாச-ஹேதவ:
உத்தாதவ்யம்—இப்பொழுது இந்த இடத்தை விட்டுச் செல்ல வேண்டும்; இத:—இங்கிருந்து, கோகுலத்திலிருந்து; அஸ்மாபி:—நம்மனைவராலும்; கோகுலஸ்ய—இந்த கோகுலத்தின்; ஹித-ஏஷிபி:—இந்த இடத்தின் நன்மையை விரும்புபவர்களால்; ஆயாந்தி—நிகழ்ந்து கொண்டிருக்கின்றன; அத்ர—இங்கு; மஹா-உத்பாதா:—பல பெருந்தொல்லைகள்; பாலானாம்—கிருஷ்ண, பலராமரைப் போன்ற சிறுவர்களுக்கு; நாச-ஹேதவ:—அவர்களைக் கொல்லும் உறுதியான நோக்கத்திற்காக.
அவர் கூறினார்: என்தன்புத் தோழர்களான இடையர்களே, இந்த கோகுலத்தின் நன்மைக்காக நாம் இந்த இடத்தை விட்டுச் சென்றுவிட வேண்டும். ஏனெனில், கிருஷ்ண பலராமரைக் கொல்லும் நோக்கத்திற்காக, எப்பொழுதும் இங்கு பல தொல்லைகள் நிகழ்ந்து வருகின்றன.
பதம் 10.11.24
முக்த: கதாஞ்சித் ராக்ஷஸ்யா பால-க்ன்யா பாலகோ ஹி அஸௌ
ஹரேர் அனுக்ரஹான் நூனம் அனஸ் சோபரி நாபதத்
முக்த:—காப்பாற்றப்பட்டான்; கதஞ்சித்—எப்படியோ; ராக்ஷஸ்யா:—பூதனை அரக்கியின் கைகளிலிருந்து; பால-க்ன்யா:—சிறு குழந்தைகளைக் கொன்றுவிடுவதென்று உறுதி கொண்ட; பாலக:—குறிப்பாக குழந்தை கிருஷ்ணரை; ஹி—ஏனெனில்; அஸௌ—அவர்; ஹரே: அனுக்ரஹாத்—பரமபுருஷரின் கருணையால்; நூனம்—உண்மையில்; அன: ச—மற்றும் தள்ளுவண்டி; உபரி—குழந்தையின் மேல்; ந—இல்லை; அபதத்—விழுந்தது.
பூதனை அரக்கி குழந்தை கிருஷ்ணனைக் கொன்றுவிட உறுதி கொண்டிருந்தாள். ஆனால் பரமபுருஷரின் கருணையால், அவளது பிடியிலிருந்து குழந்தை எப்படியோ காப்பாற்றப்பட்டான். பிறகு மீண்டும் பகவானின் கருணையால், குழந்தையின் மேல் விழ இருந்த தள்ளுவண்டி, சிறிது தள்ளி விழுந்தது.
பதம் 10.11.25
சக்ர-வாதேன நீதோ ‘யம் தைத்யேன விபதம் வியத்
சிலாயாம் பதிதஸ் தத்ர பரித்ராத: ஸுரேஸ்வரை:
சக்ர-வாதேன—ஒரு சுழற்காற்றின் வடிவிலிருந்த அசுரனால் (திருணாவர்தனால்); நீத: அயம்—கிருஷ்ணன் தூக்கிச் செல்லப்பட்டான்; தைத்யேன—அசுரனால்; விபதம்—ஆபத்தான; வியத்—ஆகாயத்தில்; சிலாயாம்—ஒரு பாறை மேல்; பதித:—விழுந்தான்; தத்ர—அங்கு; பரித்ராத:—காப்பாற்றப்பட்டான்; ஸுர-ஈஸ்வரை:—பகவான் விஷ்ணு அல்லது அவரது சகாக்களின் கருணையால்.
பிறகு மீண்டும் ஒரு சுழற்காற்று வடிவில் வந்த திருணாவர்த அரக்கன், கிருஷ்ணனைக் கொல்ல எண்ணி, அவனை ஆகாயத்தில் தூக்கிச் சென்றான். ஆனால் அந்த அரக்கன் ஒரு பாறையின் மேல் விழுந்தான். அச்சம்பவத்தில்கூட, பகவான் விஷ்ணு அல்லது அவரது சகாக்களின் கருணையால் குழந்தை காப்பாற்றப்பட்டான்.
பதம் 10.11.26
யன் ந ம்ரியதே த்ருமயோர் அந்தரம் ப்ரப்ய பாலக:
அஸாவ் அன்யதமோ வாபி தத் அபி அச்யுத-ரக்ஷணம்
யத்—பிறகு மீண்டும்; ந ம்ரியேத—இறக்கவில்லை; த்ருமயோ: அந்தரம்—இரு மரங்களுக்கு நடுவில்; ப்ராப்ய—அவன் நடுவில் இருந்த போதிலும்; பாலக: அஸௌ—அக்குழந்தை, கிருஷ்ணன்; அன்யதம:—மற்றொரு குழந்தை; வா அபி—அல்லது; தத் அபி அச்யுத-ரக்ஷணம்—அந்த விஷயத்திலும், அவன் பரமபுருஷரால் காப்பாற்றப்பட்டான்.
மற்றொரு நாள்கூட, இரு மரங்கள் விழுந்ததில் கிருஷ்ணனோ, அவனது நண்பர்களோ மரணமடையவில்லை. இக்குழந்தைகள் அம் மரங்களுக்கு நடுவிலும், அருகிலும் இருந்த போதும் காப்பாற்றப்பட்டனர். இதையும் பரமபுருஷரின் கருணையாகவே கருத வேண்டும்.
பதம் 10.11.27
யாவத் ஒளத்பாதிகோ ‘ரிஷ்டோ வ்ரஜம் நாபிபவேத் இத:
தாவத் பாலான் உபாதாய யாஸ்யாமோ ‘ன்யத்ர ஸானுகா:
யாவத்—எதுவரை; ஒளத்பாதிக:—தொல்லைதரும்; அரிஷ்ட:—அரக்கன்; வ்ரஜம்—இந்த கோகுல விரஜபூமி; ந—இல்லை; அபிபவேத் இத:—இங்கிருந்து சென்றுவிடுவோம்; தாவத்—அதுவரை; பாலான் உபாதாய—பையன்களின் நன்மைக்காக; யாஸ்யாம—நாம் சென்றுவிடுவோம்; அன்யத்ர—வேறு எங்காவது; ஸ-அணுகா:—நம் ஆட்களுடன்.
இச்சம்பவங்கள் அனைத்தும் நமக்குத் தெரியாத யாரோ ஓரசுரனால் தான் செய்யப்படுகின்றன. அவன் இங்கு வந்து மற்றொரு தொல்லையை விளைவிக்கும் முன்பாக, நாம் இங்கிருந்து சென்று விடுவோம். இத் தொல்லைகள் ஓயும்வரை, சிறுவர்களுடன் வேறெங்காவது சென்றுவிடுவது நம் கடமையாகும்.
பதம் 10.11.28
வனம் வ்ருந்தாவனம் நாம பசவ்யம் நவ-கானனம்
கோப-கோபீ-கவாம் ஸேவ்யம் புண்யாத்ரி-த்ருண-வீருதம்
வனம்—மற்றொரு வனம்; வ்ருந்தாவனம் நாம—பிருந்தாவனம் என்ற பெயருடைய; பசவ்யம்—பசுக்களையும், மற்ற மிருகங்களையும் பராமரிப்பதற்கு மிகவும் ஏற்றதொரு இடமான; நவ-கானனம்—புதிய தோட்டங்களைப் போன்ற பல இடங்கள் உள்ளன; கோப-கோபீ-கவாம்—எல்லா இடையர்களுக்கும், அவர்களுடைய குடும்ப அங்கத்தினர்களுக்கும், மற்றும் பசுக்களுக்கும்; ஸேவ்யம்—மிகவும் பொருத்தமான, மகிழ்ச்சியான ஓரிடம்; புண்ய-அத்ரி—அங்கு அழகிய மலைகள் உள்ளன; த்ருண—தாவரங்களும்; வீருதம்—மற்றும் கொடிகளும்.
நந்தேசுவரத்திற்கும், மஹாவனத்திற்கும் இடையில் பிருந்தாவனம் என்ற பெயருடைய ஓரிடம் உள்ளது. அந்த இடம் பசுக்களுக்கும், மற்ற மிருகங்களுக்கும் தேவையான வளம்மிக்க புல், தாவரங்கள் மற்றும் செடி கொடிகள் ஆகியவற்றுடன் செழிப்புற்று விளங்குவதால், அது மிகவும் பொருத்தமான ஓரிடமாகும். அதில் நல்ல தோட்டங்களும், உயர்ந்த மலைகளும் உள்ளன. மேலும் அது கோபர்களுக்கும், கோபியர்களுக்கும். நம் மிருகங்களுக்கும் மகிழ்ச்சி அளிப்பதற்குரிய எல்லா வசதிகளையும் கொண்டுள்ளது.
பதம் 10.11.29
தத் தத்ராத்யைவ யாஸ்யாம: சகடான் யுங்க்த மா சிரம்
கோதனானி அக்ரதோ யாந்து பவதாம் யதி ரோசதே
தத்—எனவே; தத்ர—அங்கு; அத்ய ஏவ—இன்றே; யாஸ்யாம:—நாம் செல்வோம்; சகடான்—எல்லா வண்டிகளையும்; யுங்க்த—ஆயத்தப்படுத்துங்கள்; மா சிரம்—தாமதமின்றி; கோ-தனானி—எல்லாப் பசுக்களும்; அக்ரத:—முன்புறத்தில்; யாந்து—செல்லட்டும்; பவதாம்—உங்களனைவரின்; யதி—என்றால்; ரோசதே—இதை ஏற்றுக்கொள்ள மகிழ்ச்சியாக உள்ளது.
எனவே, உடனடியாக இன்றே நாம் செல்வோம் இனிமேலும் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. என் திட்டத்தை நீங்கள் ஏற்றுக்கொண்டால், மாட்டு வண்டிகளை எல்லாம் தயார்செய்து, பசுக்கள் நம்முன் செல்ல, நாம் அங்கு செல்வோம்.
பதம் 10.11.30
தச் ச்ருத்வைக-தியோ கோபா: ஸாது ஸாது இதி வாதின:
வ்ரஜான் ஸ்வான் ஸ்வான் ஸமாயுஜ்ய யயூ ரூட-பரிச்சதா:
தத் ஸ்ருத்வா—உபானந்தரின் இந்த அறிவுரையைக் கேட்டு; ஏக-திய:—ஏகமனதாக ஏற்று; கோபா:—இடையர்கள் அனைவரும்; ஸாதுஸாது—மிக்க நன்று, மிக்க நன்று; இதி—என்று; வாதின:—பேசி, அறிவித்து; வ்ரஜான்—பசுக்களை; ஸ்வான் ஸ்வான்—அவரவர் சொந்த; ஸமாயுஜ்ய—கூட்டி; யயு:—புறப்பட்டனர்; ரூட-பரிச்சதா:—எல்லாத் துணிமணிகளையும், பொருட்களையும் வண்டிகளில் ஏற்றிக்கொண்டு.
உபானந்தரின் இந்த அறிவுரையைக் கேட்ட இடையர்கள் அனைவரும் “மிக்க நன்று, மிக்க நன்று ” என்று கூறி ஏகமனதுடன் சம்மதித்தனர். இவ்விதமாக வீட்டுச் சாமான்களை ஒழுங்குபடுத்திய அவர்கள் தங்கள் துணிமணிகளையும், மற்ற பொருட்களையும் வண்டிகளில் ஏற்றிக்கொண்டு, உடனே பிருந்தாவனத்தை நோக்கிப் புறப்பட்டனர்.
பதங்கள் 10.11.31 – 10.11.32
வ்ருத்தான் பாலான் ஸ்த்ரியோ ராஜன் ஸர்வோபகரணானி ச
அனஹ்ஸ்வ் ஆரோப்ய கோபாலா யத்தா ஆத்த-சராஸனா:
கோதனானி புரஸ்க்ருத்ய ஸ்ருங்காணி ஆபூர்ய ஸர்வத:
தூர்ய-கோஷேண மஹதா யயு: ஸஹ:-புரோஹிதா:
வ்ருத்தான்—முதலில் எல்லா முதியவர்களையும்; பாலான்—குழந்தைகளையும்; ஸ்த்ரிய:—பெண்களையும்; ராஜன்—பரீட்சித்து மகாராஜனே; ஸர்வ-உபகரணானி ச—பிறகு அவர்களிடமிருந்து எல்லா உடைமைகளையும், எல்லா வகையான தேவைகளையும்; அனஹ்ஸவ்—மாட்டு வண்டிகளில்; அரோப்ய—ஏற்றி; கோபாலா:—எல்லா இடையர்களும்; யத்தா:—மிகவும் ஜாக்கிரதையாக; அத்த-சர-அஸனா:—வில்லம்புகளுடன் முழு ஆயுதபாணிகளால்; கோ-தனானி—எல்லாப் பசுக்களும்; புரஸ்க்ருத்ய—முன் செல்ல; ஸ்ருங்காணி—கொம்புகளை; ஆபூர்ய—ஊதிக்கொண்டு; ஸர்வத:—சுற்றிலும்; தூர்ய-கோஷேண—கொம்புகளின் முழக்கத்துடன்; மஹதா—உரத்த; யயு:—புறப்பட்டனர்; ஸஹ-புரோஹிதா:—புரோகிதர்களுடன்.
முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் மற்றும் பிற பொருட்கள் ஆகிய அனைத்தையும் மாட்டு வண்டிகளில் ஏற்றிக் கொண்டபின், எல்லாப் பசுக்களையும் வண்டிகளுக்கு முன் நிறுத்திய இடையர்கள், தங்கள் வில்லம்புகளை மிகவும் கவனமாகக் கையிலெடுத்துக்கொண்டு ஊது கொம்புகளை முழங்கினர். பரீட்சித்து மகாராஜனே, இவ்விதமாக சுற்றிலும் கொம்புகள் முழங்க, தங்கள் புரோகிதர்கள் புடைசூழ இடையர்கள் தங்கள் பயணத்தைத் துவங்கினர்.
பதம் 10.11.33
கோப்யோ ரூட-ரதா நூத்ன-குச-குங்கும-காந்தய:
க்ருஷ்ண-லீலா ஜகு: ப்ரீத்யா நிஷ்க-கண்ட்ய: ஸுவாஸஸ:
கோப்ய:—இடையர்குலப் பெண்கள் எல்லோரும்; ரூட-ரதா:—மாட்டு வண்டிகளில் செல்லும்பொழுது; நூத்ன-குச-குங்கும-காந்தய:—அவர்களது உடல்கள் குறிப்பாக அவர்களது மார்பகங்கள் குங்குமத்தால் அலங்கரிக்கப்பட்டு இருந்தன; க்ருஷ்ண-லீலா:—கிருஷ்ணரின் லீலைகளை; ஜகு:—பாடினர்; ப்ரீத்யா—பெரு மகிழ்ச்சியுடன்; நிஷ்க-கண்ட்ய:—அவர்களது கழுத்தகளை பதக்கங்கள் அலங்கரித்தன; ஸு-வாஸஸ:—நன்கு உடுத்தியிருந்தனர்.
மாட்டு வண்டிகளில் ஏறிச்சென்ற இடைப் பெண்கள் மிகச்சிறந்த ஆடை அணிகலன்களால் மிகவும் நன்றாக உடுத்திக் கொணடிருந்தனர். அவர்களது உடல்கள். குறிப்பாக அவர்களது மார்பகங்கள் புத்தம் புதிய குங்குமத்தால் அலங்கரிக்கப்பட்டு இருந்தன. பிராயணம் துவங்கிய போது அவர்கள் கிருஷ்ணரின் லீலைகளை மிகவும் ஆனந்தத்துடன் பாடத் துவங்கினர்.
பதம் 10.11.34
ததா யசோதா-ரோஹிண்யாவ் ஏகம் சகடம் ஆஸ்திதே
ரேஜது: க்ருஷ்ண-ராமாப்யாம் தத்-கதா-ஸ்ரவணோத்ஸுகே
ததா—மேலும்; யசோதா-ரோஹிண்யௌ—தாய் யசோதையும், தாய் ரோகிணியும்; ஏகம் சகடம்—ஒரு மாட்டு வண்டியில்; ஆஸ்திதே—அமர்ந்தனர்; ரேஜது:—மிகவும் அழகான; க்ருஷ்ண ராமாப்யாம்—கிருஷ்ணரும், பலராமரும் தங்கள் தாய்களுடன்; தத்-கதா—கிருஷ்ண, பலராமருடைய லீலைகளை; ஸ்ரவண-உத்ஸுகே—உன்னத பேரானந்தத்துடன் கேட்பதில் ஈடுட்டிருந்தனர்.
இவ்வாறு கிருஷ்ண, பலராமரின் லீலைகளைப் பற்றிப் பெரு மகிழ்ச்சியுடன் கேட்டுக் கொண்டிருந்த தாய் யசோதையும், ரோகிணி தேவியும், அவர்களிடமிருந்து ஒரு கணமும் பிரிந்திருக்க விரும்பாமல் அவர்களுடன் ஒரே மாட்டு வண்டியில் ஏறிக் கொண்டனர். இச் சூழ்நிலையில் அவர்களனைவரும் மிகவும் அழகாகச் காணப்பட்டனர்.
பதம் 10.11.35
வ்ருந்தாவனம் ஸம்ப்ரவிஸ்ய ஸர்வ-கால-ஸுகாவஹம்
தத்ர சக்ருர் வ்ரஜாவாஸம் சகடைர் அர்த-சந்ரவத்
வ்ருந்தாவனம்—பிருந்தாவனம் என்ற புனிதமான இடத்திற்குள்: ஸம்ப்ரவிஸ்ய—புகுந்தபின்; ஸர்வ-கால-ஸுக-ஆவஹம்—எல்லாப் பருவகாலங்களிலும் அங்கு மகிழ்ச்சியுடன் வாழலாம்; தத்ர—அங்கு; சக்ரு:—அவர்கள் செய்தனர்; வ்ரஜ-ஆவாஸம்—விரஜ வாழ்வு; சகடை:—மாட்டு வண்டிகளால்; அர்த-சந்ரவத்—அர்த்த சந்திரனைப் போல் அரை வட்டமாகச் செய்து.
இவ்விதமாக எப்பொழுதும், எல்லாப் பருவ காலங்களிலும் மகிழ்ச்சியுடன் வாழக்கடிய பிருந்தாவனத்தினுள் அவர்கள் பிரவேசித்தனர். அவர்கள் அரைச் சந்திரனின் வடிவில் தங்கள் மாட்டு வண்டிகளை நிறுத்தி, தற்காலிகமான ஒரு வசிப்பிடத்தை ஏற்படுத்திக் கொண்டனர்.
பதம் 10.11.36
வ்ருந்தாவனம் கோவர்தனம் யமுனா-புலினானி ச
வீக்ஷ்யா ஸீத் உத்தமா ப்ரீதி ராம-மாதவயோர் ந்ருப
வ்ருந்தாவனம்—பிருந்தாவனம் என்ற இடம்; கோவர்தனம்—கோவர்தன மலையுடன்; யமுனா-புலினானி ச—மற்றும் யமுனை நதிக் கரைகளையும்; வீக்ஷ்ய—இச்சூழ்நிலையைக் கண்டு; ஆஸீத்—அனுபவிக்கப்பட்டது; உத்தமா ப்ரீதீ—முதல்தர ஆனந்தம்; ராம-மாதவயோ:—கிருஷ்ண, பலராமரின்; ந்ருப—பரீட்சித்து மகாராஜனே.
பரீட்சித்து மகாராஜனே, பிருந்தாவனம், கோவர்தனம் மற்றும் யமுனை நதிக்கரைகள் ஆகியவற்றைக் கண்டு கிருஷ்ணரும், பலராமரும். பேரானந்தம் அடைந்தனர்.
பதம் 10.11.37
ஏவம் வ்ரஜெளகஸாம் ப்ரீதிம் யச்சந்தௌ பால-சேஷ்டிதை:
கல-வாக்யை: ஸ்வ-காலேன வத்ஸ-பாலௌ பபூவது:
ஏவம்—இவ்விதமாக; விரஜ-ஓகஸாம்—விரஜவாசிகள் அனைவருக்கும்; ப்ரீதிம்—இன்பம்; யச்சந்தெள—அளித்து; பால-சேஷ்டிதை:—குழந்தைப் பருவத்து செயல்களாலும், லீலைகளாலும்; கல-வாக்யை:—மேலும் இனிமையான மழலைப் பேச்சுகளாலும்; ஸ்வ-காலேன—காலப்போக்கில்; வத்ஸ-பாலௌ—கன்றுகளைக் கவனித்துப் பேண; பபூவது:—வயது வந்தவர்களாயினர்.
இவ்விதமாக, சிறுவர்கள்போல் செயற்பட்டு, மழலை மொழியில் பேசிய கிருஷ்ணரும், பலராமரும், விரஜவாசிகள் அனைவருக்கும் உன்னத ஆனந்தத்தை அளித்தனர். காலப்போக்கில், கன்றுகளைப் பேணிக்காக்கும் வயதை அவர்கள் அடைந்தனர்.
பதம் 10.11.38
அவிதூரே வ்ரஜ-புவ: ஸஹ கோபால-தாரகை:
சாரயாம் ஆஸதுர் வத்ஸான் நானா-க்ரீடா-பரிச்சதெள
அவிதூரே—விரஜவாசிகளின் வசிப்பிடங்களிலிருந்து அவ்வளவு தூரமில்லாத; வ்ரஜ-புவ:—விரஜை எனப்படும் நிலத்திலிருந்து; ஸஹ கோபால-தாரகை:—ஒரே தொழிலைக் கொண்ட மற்ற சிறுவர்களுடன் (இடையர்களுடன்); சாரயாம் ஆஸது:—மேய்த்தனர்; வத்ஸான்—சிறு கன்றுகளை; நானா—பற்பல; க்ரீடா—விளையாட்டுகளில் ஈடுபட்டுள்ள; பரிச்சதெள—பலவிதமாக மிகவும் நன்றாக ஆடை அணிந்தும், கருவிகளை வைத்துக் கொண்டும்.
கிருஷ்ணரும், பலராமரும் தங்கள் வசிப்பிடத்திற்கு அருகாமையில் மற்ற இடைச் சிறுவர்களுடன் பலவித விளையாட்டுப் பொருட்களை வைத்து. விளையாடிக்கொண்டே இளம்கன்றுகளை மேய்க்கத்துவங்கினர்
பதங்கள் 10.11.39 – 10.11.40
க்வசித் வாதயதோ வேணும் க்ஷேபணை: க்ஷிபத: க்வசித்
க்வசித் பாதை: கிங்கிணீபி: க்வசித் க்ருத்ரிம-கோ-வ்ருஷை:
வ்ருஷாயமாணெய நர்தந்தௌ யுயுதாதே பரஸ்பரம்
அனுக்ருத்ய ருதைர் ஜந்தூம்ஸ் சேரது: ப்ராக்ருதௌ யதா
க்வசித்—சிலசமயம்; வாதயத: வேணும்—குழலூதி; க்ஷேபணை:—கயிற்றை வீசும் ஒரு கருவியுடன்; க்ஷிபத:—பழத்தைப் பெற கற்களை வீசி; க்வசித்—சிலசமயம்; க்வசித் பாதை:—சிலசமயம் கால்களால்; கிங்கிணீபி:—சலங்கையொலியுடன்; க்வசித்—சிலசமயம்; க்ருத்ரிம-கோ-வ்ருஷை:—செயற்கையான பசுக்களாகவும், எருதுகளாகவும் ஆகி; வ்ருஷாயமாணெள—மிருகங்களைப் போன்று நடித்து; நர்தந்தெள—உரக்க கர்ஜித்து; யுயுதாதே—அவ்விருவரும் சண்டையிடுவது வழக்கம்; பரஸ்பரம்—ஒருவரோடொருவர்; அனுக்ருத்ய—போன்று நடித்து; ருதை:—ஓசை எழுப்பி; ஜந்தூம்—எல்லா மிருகங்களையும்; சேரது:—அவர்கள் சஞ்சரிப்பது வழக்கம்; ப்ராக்ருதெள—சாதாரண இரு மனிதக் குழந்தைகள்; யதா—போல.
சிலசமயங்களில் கிருஷ்ணரும், பலராமரும் தங்கள் புல்லாங்குழல்களை வாசிப்பார்கள். சிலசமயங்களில் மரங்களிலிருந்து பழங்களைப் பறிப்பதற்காக அவர்கள் கயிற்றுடன் கற்களைக் கட்டி எறிவார்கள். சில சமயங்களில் கற்களை மட்டும் அவர்கள் எறிவார்கள். சிலசமயங்களில் தங்கள் சலங்கைகள் ஒலிக்க, வில்வம், நெல்லி போன்ற பழங்களுடன் அவர்கள் காற்பந்து விளையாடுவார்கள். சிலசமயங்களில் அவர்கள் தங்கள் மேல்போர்வைகளைப் போர்த்திக்கொண்டு, பசுக்களையும், எருதுகளையும் போல் பாவனை செய்தும், உரக்க கர்ஜித்தும், ஒருவரோடொருவர் சண்டையிடுவார்கள். வேறு சிலசமயங்களில் அவர்கள் மிருகங்களைப் போல் ஓசைகளை எழுப்புவார்கள். இவ்விதமாக சாதாரண இரு மனிதக் குழந்தைகள் போல் அவர்கள் விளையாடி மகிழ்வார்கள்.
பதம் 10.11.41
கதாசித் யமுனா-தீரே வத்ஸாம்ஸ் சாரயதோ: ஸ்வகை:
வயஸ்யை: க்ருஷ்ண-பலயோர் ஜிகாம்ஸுர் தைத்ய ஆகமத்
கதாசித்—சிலசமயம்; யமுனா-தீரே—யமுனை நதிக்கரையில்; வத்ஸான்—கன்றுகளை; சாரயதோ:—அவர்கள் மேய்த்துக் கொண்டிருக்கும் பொழுது; ஸ்வகை:—அவர்கள் சொந்தமாக; வயஸ்யை:—மற்ற விளையாட்டு நண்பர்களுடன்; க்ருஷ்ண-பலயோ:—கிருஷ்ணரும், பலராமரும்; ஜிகாம்ஸு:—அவர்களைக் கொல்லும் விருப்பத்துடன்; தைத்ய:—மற்றொரு அசுரன்; ஆகமத்—அங்கு வந்து சேர்ந்தான்.
ஒருநாள் பலராமரும், கிருஷ்ணரும் யமுனை நதிக்கரையில், தங்கள் விளையாட்டு நண்பர்களுடன் கன்றுகளை மேய்த்துக்கொண்டு இருக்கும் பொழுது அவ்விருவரையும் கொல்லும் விருப்பத்துடன் மற்றொரு அசுரன் அங்கு வந்து சேர்ந்தான்.
பதம் 10.11.42
தம் வத்ஸ-ரூபிணம் வீக்ஷய வத்ஸ-யூத-கதம் ஹரி:
தர்சயன் பலதேவாய சனைர் முக்த இவாஸதத்
தம்—அசுரனை; வத்ஸ-ரூபிணம்—ஒரு கன்றின் உருவை ஏற்று; வீக்ஷ்ய—கண்டு; வத்ஸ-யூத-கதம்—மற்ற கன்றுகளின் கூட்டத்துடன் அந்த அசுரன் நுழைந்த பொழுது; ஹரி:—பரமபுருஷரான கிருஷ்ணர்; தர்சயன்—சுட்டிக்காட்டி; பலதேவாய—பலதேவரிடம்; சனை:—மிகவும் மெதுவாக; முக்த: இவ—அவர் ஏதும் அறியாதது போல்; ஆஸதத்—அசுரனின் அருகில் வந்தார்.
அந்த அசுரன் ஒரு கன்றின் வடிவை ஏற்று, மற்ற கன்றுகளின் கூட்டத்தில் புகுந்தான். அதைக் கண்ட பரமபுருஷர், “இதோ மற்றொரு அசுரன்” என்று பலதேவரிடம் அவனைச் சுட்டிக் காட்டினார். பிறகு அவர் அசுரனின் நோக்கங்களை அறியாதவர்போல், மிகவும் மெதுவாக அவனை நெருங்கினார்.
பதம் 10.11.43
க்ருஹீத்வாபர-பாதாப்யாம் ஸஹ-லாங்கூலம் அச்யுத:
ப்ராமயித்வா கபித்தாக்ரே ப்ராஹிணோத் கத-ஜீவிதம்
ஸ கபித்தைர் மஹா-காய: பாத்யமானை: பபாத ஹ
க்ருஷீத்வா—கைப்பற்றி; அபர-பாதாப்யாம்—பின் கால்களையும்; ஸஹ—அவற்றுடன்; லாங்கூலம்—வாலையும்; அச்யுத:—பரமபுருஷரான ஸ்ரீ கிருஷ்ணர்; ப்ராமயித்வா—மிகவம் வேகமாகச் சுழற்றி; கபித்த-அக்ரே—ஒரு விளா மரத்தின் மேல்; ப்ராஹிணோத்—அவனை வீசி எறிந்தார்; கத-ஜீவிதம்—உயிரற்ற உடலை; ஸ:—அந்த அசுரன்; கபித்தை:—கபித்த மரங்களுடன்; மஹா-காய:—பிரும்மாண்டமான ஒருடலை ஏற்றான்; பாத்யமானை:—மேலும் அம்மரம் விழுந்த பொழுது; ப்பாத ஹ—அவன் உயிரிழந்து தரையில் விழுந்தான்.
அதன்பிறகு, ஸ்ரீ கிருஷ்ணர் அசுரனின் பின்னங்கால்களையும் வாலையும் பற்றி, அவன் உயிரை விடும்வரை அவனது முழு உடலையும் மிகவும் வேகமாகச் சுழற்றி, ஒரு விளா மரத்தின் மேல் எறிந்தார். பிறகு அந்த மரத்துடன் கீழே விழுந்த அசுரனின் உடல் பிரும்மாண்டமான ஒரு ரூபத்தை ஏற்றது.
பதம் 10.11.44
தம் வீக்ஷ்ய விஸ்மிதா பாலா: சசம்ஸு: ஸாது ஸான் இதி
தேவாஸ் ச பரிஸந்துஷ்டா பபூவு: புஷ்ப-வர்ஷிண:
தம்—இச்சம்பவத்தை; வீக்ஷ்ய—கண்டு; விஸ்மிதா:—மிகவும் ஆச்சரியமடைந்து; பாலா:—மற்றெல்லா சிறுவர்களும்; சசம்ஸு:—மிகவும் பாராட்டினர்; ஸாது ஸாது இதி—”மிக நன்று, மிக நன்று” என்று கூவி; தேவா: ச—மேலும் சுவர்க்க லோகங்களிலுள்ள தேவர்கள் எல்லோரும்; பரிஸந்துஷ்டா:—மிகவும் திருப்தியடைந்தவர்களால்; பபூவு:—ஆகி; புஷ்ப-வர்ஷிண:—கிருஷ்ணரின் மேல் மலர்களைப் பொழிந்தனர்.
அசுரனின் உயிரற்ற உடலைக் கண்ட இடைச்சிறுவர்கள் அனைவரும், “மிக நன்று, மிக நன்று! சபாஷ் கிருஷ்ண! மிக்க நன்றி” என்று கிருஷ்ணரைக் கொண்டாடினார்கள், விண்ணுலக தேவர்கள் அனைவரும் மிகவும் மகிழ்ந்து, பரமபுருஷரின் மேல் மலர்மாரி பொழிந்தனர்.
பதம் 10.11.45
தௌ வத்ஸ-பாலகெள பூத்வா ஸர்வ-லோகைக-பாலகௌ
ஸப்ராதர்-ஆசௌ கோ-வத்ஸாம்ஸ் சாரயந்தெள விசேரது:
தெள—கிருஷ்ணரும், பலராமரும்; வத்ஸ-பாலகௌ—கன்றுகளைப் பராமரிப்பவர்கள் போல்; பூத்வா—அவ்வாறு ஆகி; ஸர்வ-லோக-ஏக-பாலகெள—அவர்கள் பிரபஞ்சம் முழுவதிலுமுள்ள எல்லா ஜீவராசிகளையும் பராமரிப்பவர்கள் என்ற போதிலும்; ஸ-ப்ராத:-ஆசௌ—காலையில் சிற்றுண்டியை முடித்துக் கொண்டு; கோ-வத்ஸான்—கன்றுகளையெல்லாம்; சாரயந்தெள—மேய்த்தனர்; விசேரது:—இங்குமங்கும் சஞ்சரித்தனர்.
அந்த அசுரன் கொல்லப்பட்டபின், கிருஷ்ணரும், பலராமரும் காலையில் தங்கள் சிற்றுண்டியை முடித்துக் கொண்டனர். பிறகு கன்றுகளைத் தொடர்ந்து கவனித்தபடி, அவர்கள் இங்குமங்கும் சஞ்சரித்தனர். முழு சிருஷ்டியையும் காக்கும் பரம புருஷர்களான கிருஷ்ணரும், பலராமரும் இடைச் சிறுவர்கள்போல், இப்பொழுது கன்றுகளை மேய்க்கும் பொறுப்பை ஏற்றனர்.
பதம் 10.11.46
ஸ்வம் ஸ்வம் வத்ஸ-குலம் ஸர்வே பாயயிஷ்யந்த ஏகதா
கத்வா ஜலாசயாப்யாசம் பாயயித்வா பபுர் ஜலம்
ஸ்வம் ஸ்வம்—அவரவருக்குச் சொந்தமான; வத்ஸ-குலம்—கன்றுகளின் கூட்டத்தை; ஸர்வே—கிருஷ்ணரும், பலராமரும், மற்றெல்லாச் சிறுவர்களும்; பாயயிஷ்யந்த:—அவற்றிற்குத் தண்ணீர் காட்ட விரும்பி; ஏகதா—ஒருநாள்; கத்வா—சென்று; ஜல-ஆசய-ப்யாசம்—ஏரிக்கருகில்; பாயயித்வா—மிருகங்கள் நீரைப் பருகச் செய்தபின்; பபு: ஜலம்—அவர்களும் நீரைப் பருகினர்.
ஒருநாள், கிருஷ்ணரும் பலராமரும் உட்பட எல்லாச் சிறுவர்களும் அவரவர் கன்றுக் கூட்டங்களை அழைத்துக் கொண்டு ஒரு நீர் நிலைக்குச் சென்று தங்கள் கன்றுகளை நீர் பருகச் செய்து தாங்களும் அதே நீரைப் பருகினர்.
பதம் 10.11.47
தே தத்ர தத்ருகா பாலா மஹா-ஸத்வம் அவஸ்திதம்
தத்ரஸுர் வஜ்ர-நிர்பின்னம் கிரே: ஸ்ருங்கம் இவ ச்யுதம்
தே—அவர்கள்; தத்ர—அங்கு; தத்ருக:—கண்டனர்; பாலா:—சிறுவர்கள் எல்லோரும்; மஹா-ஸத்வம்—ஒரு பிரம்மாண்டமான உடல்; அவஸ்திதம்—இருப்பதை; தத்ரஸு:—அச்சத்திற்குள்ளாயினர்; வஜ்ர-நிர்பின்னம்—ஒரு மின்னலால் தகர்க்கப்பட்ட; கிரே: ஸ்ருங்கம்—ஒரு மலைச்சிகரம்; இவ—போல்; ச்யுதம்—அங்கு விழுந்து கிடந்தது.
அந்த நீர்த் தேக்கத்திற்கு அருகில், மின்னலால் தகர்க்கப்பட்ட ஒரு மலைச் சிகரத்தை ஒத்த பிரம்மாண்டமான ஒருடல் இருப்பதைச் சிறுவர்கள் கண்டனர். இவ்வளவு பெரிய ஜீவராசியைக் காணவே அவர்களுக்குப் பயமாக இருந்தது.
பதம் 10.11.48
ஸ வை பகோ நாம மஹான் அஸுரோ பக-ரூப-த்ருக்
ஆகத்ய ஸஹஸா க்ருஷ்ணம் தீக்ஷ்ண-துண்டோ ‘க்ரஸத் பலீ
ஸ:—அந்த ஜந்து; வை—உண்மையில்; பக: நாம—பகாசுரன் என்ற பெயருடைய; மஹான் அஸுர:—மிகப்பெரிய ஓர் அசுரனாவான்; பக-ரூப-த்ருக்—ஒரு பெரிய கொக்கின் உருவத்தை ஏற்றிருந்தான்; ஆகத்ய—அங்கு வந்து; ஸஹஸா—திடீரென்று; க்ருஷ்ணம்—கிருஷ்ணரை; தீக்ஷண-துண்ட:—கூரிய அலகினால்; அக்ரஸத்—விழுங்கி விட்டான்; பலீ—மிகவும் சக்திவாய்ந்த.
மிகப்பெரிய உடலையுடைய அந்த அசுரன் பகாசுரனாவான். அவன் மிகவும் கூரிய அலகுடைய ஒரு கொக்கின் உருவத்தை ஏற்றிருந்தான். அங்கு வந்த அவன் உடனே கிருஷ்ணரை விழுங்கிவிட்டான்.
பதம் 10.11.49
க்ருஷ்ணம் மஹா-பக-க்ரஸ்தம் த்ருஷ்ட்வா ராமாதயோ ‘ர்பகா:
பபூவுர் இந்ரியாணீவ வினா ப்ராணம் விசேதஸ:
க்ருஷ்ணம்—கிருஷ்ணரை; மஹா-பக-க்ரஸ்தம்—பெரிய கொக்கினால் விழுங்கப்பட்ட; த்ருஷ்ட்வா—இச்சம்பவத்தைக் கண்டு; ராம-ஆதய: அர்பகா:—பலராமர் முதலான மற்றெல்லாச் சிறுவர்களும்; பபூவு:—உணர்ச்சியில் ஆழ்ந்து; இந்ரியாணி—புலன்கள்; இவ—போல்; வினா—இல்லாத; ப்ராணம்—உயிர்; விசேதஸ:—மிகவும் மனக்கலக்கம் அடைந்தனர். கிட்டத்தட்ட உணர்வையே இழந்துவிட்டனர்.
கிருஷ்ணர் அப்பெரிய கொக்கினால் விழுங்கப்பட்டதைக் கண்ட பலராமரும், மற்ற சிறுவர்களும் கிட்டத்தட்ட உயிரற்ற புலன்களைப் போல், உணர்விழந்தவர்கள் ஆயினர்.
பதம் 10.11.50
தம் தாலு-மூலம் ப்ரதஹந்தம் அக்னிவத்
கோபால-ஸூனம் பிதரம் ஜகத்-குரோ:
சச்சர்த ஸத்யோ ‘திருஷாக்ஷதம் பகஸ்
துண்டேன ஹந்தும் புனர் அப்யபத்யத
தம்—கிருஷ்ணர்; தாலு-மூலம்—தொண்டைக்கடியில்; ப்ரதஹந்தம்—எரிவதை; அக்னி-வத்—நெருப்பு போல்; கோபால-ஸூனம்—ஓர் இடையரின் மகனான கிருஷ்ணர்; பிதரம்—தந்தையான; ஜகத்-குரோ:—பிரம்ம தேவரின்; சச்சர்த—தன் வாயிலிருந்து வெளியேற்றினான்; ஸத்ய:—உடனே; அதி-ருஷா—கடுங்கோபத்துடன்; அக்ஷதம்—பாதிப்படையாமல்; பக:—பகாசுரன்; துண்டேன—தன் கூரிய அலகால்; ஹந்தும்—கொல்ல; புன—மீண்டும்; அப்யபத்யத—முயன்றான்.
பிரம்மதேவரின் தந்தையாக இருந்தும், ஓர் இடைச் சிறுவன் போல் செயற்பட்ட கிருஷ்ணர், அசுரனின் தொண்டைக் குழியில் நெருப்பு போல் எரிந்ததால், பகாசுரன் உடனே அவரைத் தன் தொண்டையிலிருந்து கக்கி விட்டான். விழுங்கப்பட்ட கிருஷ்ணர் தீங்கின்றி வெளிவந்ததைக் கண்ட அசுரன், உடனே கிருஷ்ணரைத் தன் கூரிய அலகால் மீண்டும் தாக்கினான்.
பதம் 10.11.51
தம் ஆபதந்தம் ஸ நிக்ருஹ்ய துண்டயோர்
தோர்ப்யாம் பகம் கம்ஸ-ஸகம் ஸதாம் பதி:
பஸ்யத்ஸு பாலேஷு ததார லீலயா
முதாவஹோ வீரணவத் திவௌகஸாம்
தம்—பகாசுரனை; ஆபதந்தம்—மீண்டும் அவரைத் தாக்க முயன்ற; ஸ:—பகவான் ஸ்ரீகிருஷ்ணர்; நிக்ருஹ்ய—பற்றி; துண்டயோ:—அலகை; தோர்ப்யாம்—அவரது கரங்களால்; பகம்—பகாசுரன்; கம்ஸ-ஸகம்—கம்சனின், நண்பனும், சகாவுமான; ஸதாம் பதி:—வைஷ்ணவர்களின் பிரபுவான பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்; பஸ்யத்ஸு—பார்த்துக் கொண்டு இருக்கும்பொழுதே; பாலேஷு—இடைச் சிறுவர்கள் அனைவரும்; ததார—இரு கூறாகக் கிழித்தார்; லீலயா—மிகச் சுலபமாக; முதா-ஆவஹ:—இச்செயல் மிகவும் மகிழ்ச்சியளிப்பதாகும்; வீரண-வத்—வீரணம் என்ற புல் (இரண்டாகக் கிழிக்கப்படுவது) போன்று; திவெளகஸாம்—சுவர்க்க வாசிகள் எல்லோருக்கும்.
கம்சனின் நண்பனான பகாசுரன் கிருஷ்ணரைத் தாக்க முயன்றான். அதைக் கண்ட வைஷ்ணவர்களின் பிரபுவான கிருஷ்ணர். அந்த அசுரனுடைய அலகின் இரு பாதிகளையும் தம் கைகளால் பற்றினார். பிறகு இடைச்சிறுவர்கள் முன்பாக, ஒரு குழந்தை ஒரு வீரண புல்லை இரண்டாகக் கிழிப்பதுபோல், அசுரனின் அலகை இரு கூறாக அவர் மிகச்சுலபமாகக் கிழித்தார். அசுரனை இவ்வாறு கொன்று, கிருஷ்ணர் சுவர்க்க வாசிகளை மிகவும் மகிழ்ச்சிப்படுத்தினார்.
பதம் 10.11.52
ததா பகாரிம் ஸுர-லோக-வாஸின:
ஸமாகிரன் நந்தன-மல்லிகா திபி:
ஸமீடிரே சானக-சங்க-ஸம்ஸ்தவைஸ்
தத் வீக்ஷ்ய கோபால-ஸுதா விஸிஸ்மிரே
ததா—அச்சமயத்தில்; பக-அரிம்—பகாசுரனின் பகைவருக்கு; ஸுர-லோக-வாஸின:—உயர்கிரகங்களைச் சேர்ந்த சுவர்க்க வாசிகள்; ஸமாகிரன்—மலர்களைப் பொழிந்தனர்; நந்தன-மல்லிகா-ஆதிபி: நந்தன-கானகத்தில் பயிர் செய்யப்படும் மல்லிகை போன்ற மலர்களால்; ஸமீடிரே—அத்துடன் அவரைப் பாராட்டவும் செய்தனர்; ச—மேலும்; ஆனக-சங்க-ஸம்ஸ்தவை:—பிரார்த்தனைகளுடன், சுவர்க்க லோக முரசுகளாலும், சங்குகளாலும்; தத் வீக்ஷ்ய—இதைக் கண்டு; கோபால-ஸுதா:—இடைச் சிறுவர்கள்; விஸிஸ்மிரே—ஆச்சரியமடைந்தனர்.
அச்சமயம் உயர் கிரக அமைப்பைச் சேர்ந்த சுவர்க்க வாசிகள், நந்தன-கானகத்தில் பயிராகும் மல்லிகை மலர்களை, பகாசுரனின் பகைவரான கிருஷ்ணரின் மேல் பொழிந்தனர். மேலும் சுவர்க்கலோக முரசுகளைக் கொட்டியும், சங்குகளை ஊதியும், பிரார்த்தனைகளைச் செய்து கிருஷ்ணரை வாழ்த்தினர். இதைக் கண்ட இடைச்சிறுவர்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர்.
பதம் 10.11.53
முக்தம் பகாஸ்யாத் உபலப்ய பாலகா
ராமாதய: ப்ராணம் இவேந்ரியோ கண:
ஸ்தானாகதம் தம் பரிரப்ய நிர்வ்ருதா:
ப்ரணீய வத்ஸான் வ்ரஜம் ஏத்ய தஜ் ஜகு:
முக்தம்—இவ்வாறு விடுவிக்கப்பட்டதும்; பக-ஆஸ்யாத்—பகாசுரனின் வாயிலிருந்து; உபலப்ய—திரும்பப் பெற்ற; பாலகா:—சிறுவர்கள், விளையாட்டு நண்பர்கள் அனைவரும்; ராம-ஆதாய:—பலராமர் முதலான; ப்ராணம்—உயிர்; இவ—போல்; இந்ரிய:—புலன்கள்; கண:—அவர்களனைவரும்; ஸ்தான்-ஆகதம்—அவர்களுடைய சொந்த இடத்திற்குச் சென்று; தம்—கிருஷ்ணரை; பரிரப்ய—தழுவிக்கொண்டு; நிர்வ்ருதா:—ஆபத்திலிருந்து விடுபட்டதால்; ப்ரணீய—ஒன்று சேர்த்த பின்; வத்ஸான்—எல்லாக் கன்றுகளையும்; வ்ரஜம் ஏத்ய—விரஜ பூமிக்கு திரும்பிச் சென்று; தத் ஜகு:—அச்சம்பவத்தைப் பற்றி உரக்க அறிவித்தனர்.
உணர்வும், உயிரும் திரும்பும்பொழுது புலன்கள் அமைதியடைகின்றன. அதுபோலவே, கிருஷ்ணர் இந்த அபாயத்திலிருந்து விடுபட்டபொழுது, பலராமர் உட்பட எல்லாச் சிறுவர்களும், தங்கள் உயிரைக் திரும்பப் பெற்றது போல் உணர்ந்தனர். நல்ல உணர்வுடன் கிருஷ்ணரைத் தழுவிக்கொண்ட அவர்கள், தங்களது சொந்தக் கன்றுகளைத்திரட்டி, விரஜபூமிக்குத் திரும்பியதும், நடந்த சம்பவத்தைப் பற்றி உரக்க அறிவித்தனர்.
பதம் 10.11.54
ஸ்ருத்வா தத் விஸ்மிதா கோபா கோப்யஸ் சாதிப்ரியாத்ருதா:
ப்ரேத்யாகதம் இவோத்ஸுக்யாத் ஜக்ஷந்த த்ருஷிதேக்ஷணா:
ஸ்ருத்வா—கேள்விப்பட்டதும்; தத்—இச்சம்பவங்களை; விஸ்மிதா:—ஆச்சரியமடைந்து; கோபா:—இடையர்கள்; கோப்யா: ச—மற்றும் அவர்களது மனைவியரும்; அதி-ப்ரிய-ஆத்ருதா:—உன்னத பேரானந்தத்துடன் செய்திகளைப் பெற்றனர்; ப்ரேத்ய ஆகதம் இவ—சிறுவர்கள் மரணத்திலிருந்து திரும்பியதுபோல் எண்ணினர்; உத்ஸுக்யாத்—பேராவலுடன்; ஜக்ஷந்த—சிறுவர்களை நோக்கத் துவங்கினர்; த்ருஷித-சக்ஷணா:—பூரண திருப்தியுடன் கிருஷ்ணரிடமிருந்தும், சிறுவர்களிடமிருந்தும் தங்கள் கண்களைத் திருப்ப அவர்கள் விரும்பவில்லை.
காட்டில் பகாசுரன் கொல்லப்பட்டதைக் கேள்விப்பட்டு இடையர்களும் இடைப்பெண்களும், மிகவும் ஆச்சரியமடைந்தனர். கிருஷ்ணரையும் பார்த்து, கதையையும் கேட்ட அவர்கள், கிருஷ்ணரும் மற்ற சிறுவர்களும் மரணத்தின் வாயிலிருந்து திரும்பி வந்திருப்பதாக எண்ணி, கிருஷ்ணரை மிகவும் ஆவலுடன் வரவேற்றனர். இவ்வாறு கிருஷ்ணரும், மற்ற சிறுவர்களும் இப்பொழுது பாதுகாப்பாக இருப்பதைக் கண்டதும் அவர்கள் மேலுள்ள தங்கள் கண்களைத் திருப்பவிரும்பாமல், மௌனக்கண்களுடன் அச்சிறுவர்களையே அவர்கள் பார்த்துக் கொண்டு இருந்தனர்
பதம் 10.11.55
அஹோ பதாஸ்ய பாலஸ்ய பஹவோ ம்ருத்யவோ ‘பவன்
அபி ஆஸீத் விப்ரியம் தேஷாம் க்ருதம் பூர்வம் யதோ பயம்
அஹோ பத—இது மிகவும் ஆச்சரியம்தான்; அஸ்ய பாலஸ்ய—இந்த கிருஷ்ணனின்; பஹவ:—பற்பல; ம்ருத்யவ:—மரணத்திற்கு காரணங்கள்; அபவன்—காணப்பட்டன; அபி—இருப்பினும்; ஆஸீத்—இருந்தது; விப்ரியம்—மரணத்திற்கான காரணம்; தேஷாம்—அவற்றின்; க்ருதம்—செய்யப்பட்டது; பூர்வம்—முன்பு; யத:—எதிலிருந்து; பயம்—மரண பயம் இருந்தது.
நந்த மகாராஜன் முதலான இடையர்கள் பின்வருமாறு யோசிக்கத் துவங்கினர்: இச்சிறுவன் கிருஷ்ணன் மரணமடைவதற்குப் பல சமயங்களில் பல்வேறு காரணங்கள் இருந்தன. இருப்பினும், அவன் கொல்லப்படுவதற்குப் பதிலாக, பரமபுருஷரின் கருணையால், அச்சத்திற்குக் காரணமான தீய சக்திகள் கொல்லப்பட்டது மிகவும் ஆச்சரியம்தான்.
பதம் 10.11.56
அதாபி அபிபவந்தி ஏனம் நைவ தே கோர-தர்சனா:
ஜிகாம்ஸயைனம் ஆஸாத்ய நஸ்யந்தி அக்னௌ பதங்கவத்
அத அபி—அவர்கள் தாக்கவந்த போதிலும்; அபிபவந்தி—அவர்களால் கொல்ல முடிந்தது; ஏனம்—இச்சிறுவனை; ந—இல்லை; ஏவ—சந்தேகத்திற்கு இடமின்றி; தே—அவர்களனைவரும்; கோர-தர்சனா:—கோரமான ரூபங்களுடைய; ஜிகாம்ஸயா—பொறாமையின் காரணத்தால்; ஏனம்—கிருஷ்ணரை; ஆஸாத்ய—அணுகி; நஸ்யந்தி—அழிக்கப்படுகின்றனர் (ஆக்கிரமிப்பவனுக்கு மரணம் உண்டாகிறது); அக்நௌ—தீயினுள்; பதங்க-வத்—பூச்சிகள் போல்.
மரணத்திற்குக் காரணங்களாக இருந்த அசுரர்கள் மிகவும் கொடூரமானவர்கள் என்றபோதிலும், அவர்களால் இச்சிறுவனான கிருஷ்ணனைக் கொல்ல முடியவில்லை. மாறாக, குற்றமற்ற சிறுவர்களை அவர்கள் கொல்ல வந்ததால், நெருப்பைத் தாக்கவரும் விட்டில் பூச்சிகளைப் போல் சிறுவர்களை நெருங்கியதும் தானாகவே அவர்கள் கொல்லப்பட்டனர்.
பதம் 10.11.57
அஹோ ப்ரஹ்ம-விதாம் வாசோ நாஸத்யா: ஸந்தி கர்ஹிசித்
கர்கோ யத் ஆஹ பகவான் அன்வபாவி ததைவ தத்
அஹோ—என்ன அற்புதம்; ப்ரஹ்ம-விதாம்—பூரண பிரம்ம ஞானம் பெற்றவர்களின்; வாச:—வார்த்தைகள்; ந—ஒருபோதும் இல்லை; அஸத்யா:—பொய்; ஸந்தி—ஆகிறது; கர்ஹிசித்—எந்த சமயத்திலும்; கர்க:—கர்கமுனி; யத்—என்னவெல்லாம்; ஆஹ—கூறினார்; பகவான்—சக்தி வாய்ந்த கர்கமுனி; அன்வபாவி—அப்படியே நிகழ்கிறது; ததா-ஏவ—போன்று; தத்—அது.
பிரம்மத்தைப் பூரணமாக அறிந்துள்ளவர்களின் வார்த்தைகள் பொய்ப்பதே இல்லை. கர்கமுனி கூறியதையெல்லாம் இப்பொழுது நாம் அனுபவத்தில் காண்பது உண்மையில் மிகவும் ஆச்சரியம்தான்.
பதம் 10.11.58
இதி நந்தாதயோ கோபா: க்ருஷ்ண-ராம-கதாம் முதா
குர்வந்தோ ரமமாணாஸ் ச நாவிந்தன் பவ-வேதனாம்
இதி—இவ்வாறாக; நந்த-ஆதய:—நந்த மகாராஜன் முதலாக எல்லா இடையர்களும்; கோபா:—இடையர்கள்; க்ருஷ்ண-ராம-கதாம்—கிருஷ்ண, பலராமரின் தொடர்பாக நிகழ்ந்த சம்பவங்களைப் பற்றிய கதைகளை; முதா—உன்னத பேரானந்தத்தில்; குர்வந்த:—அதைச் செய்து; ரமமாணா: ச—சுகவாழ்வை அனுபவித்ததுடன், கிருஷ்ணரிடமுள்ள அன்பையும் அதிகரித்துக் கொண்டனர்; ந—இல்லை; அவிந்தன்—கண்டனர்; பவ-வேதனாம்—பௌதிக வாழ்வின் துன்பங்களை.
இவ்வாறு, நந்த மகாராஜன் முதலான இடையர்கள் அனைவரும் கிருஷ்ண, பலராமரின் லீலைகளைப் பற்றிய வர்ணனைகளை உன்னத ஆனந்தத்தை அனுபவித்ததுடன், பெளதிகத் துன்பங்களை அவர்களால் காணவும் இயலாதிருந்தது.
பதம் 10.11.59
ஏவம் விஹாரை: கௌமாரை: கௌமாரம் ஜஹதுர் வ்ரஜே
நிலாயனை: ஸேது-பந்தைர் மர்கடோத்ப்லவனாதிபி:
ஏவம்—இவ்வாறாக; விஹாரை:—வெவ்வேறு லீலைகளால்; கௌமாரை:—குழந்தைத்தனமான; கௌமாரம்—குழந்தைப்பருவத்தை; ஜஹது:—(கிருஷ்ணரும், பலராமரும்) கழித்தனர்; வ்ரஜே—விரஜ பூமியில்; நிலாயனை:—ஓடி ஒளியும் விளையாட்டு விளையாடுவதாலும்; ஸேது-பந்தை:—சமுத்திரத்தில் செயற்கையான ஒரு பாலத்தைக் கட்டியும்; மர்கட—குரங்குகளைப் போல்; உத்ப்லவன-ஆதிபி:—இங்குமங்கும் குதித்தல் போன்ற செயல்களைச் செய்தும்.
இவ்வாறு கிருஷ்ணரும், பலராமரும், ஓடி ஒளிந்து விளையாடுதல் போன்ற குழந்தைத்தனமான செயல்களில் ஈடுபட்டும், சமுத்திரத்தில் கரை கட்டியும், குரங்குகளைப் போல் இங்குமங்கும் தாவியும், தங்களது குழந்தைப் பருவத்தை விரஜபூமியில் கழித்தனர்.
ஸ்ரீமத் பாகவதம், பத்தாம் காண்டத்தின் “ஸ்ரீ கிருஷ்ணரின் குழந்தைப் பருவ லீலைகள்” எனும் தலைப்பை கொண்ட பதினொன்றாம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றது.