அத்தியாயம் – 10
மருத மரங்களின் சாப விமோசனம்
பதம் 10.10.1
ஸ்ரீ-ராஜோவாச
கத்யதாம் பகவன் ஏகத் தயோ: சாபஸ்ய காரணம்
யத் தத் விகர்ஹிதம் கர்ம யேன வா தேவர்ஷேஸ் தம:
ஸ்ரீ-ராஜா உவாச—அரசர் தொடர்ந்து வினவினார்; கத்யதாம்—தயவுகூர்ந்து விளக்கிக் கூறுங்கள்; பகவன்—பெரும் சக்தி படைத்தவரே; ஏதத்—இந்த; தயோ:—இவ்விருவரையும்; சாபஸ்ய—சபித்ததற்கு; காரணம்—காரணம்; யத்—எது; தத்—அந்த; விகர்ஹிதம்—வெறுக்கத்தக்க; கர்ம—செயல்; யேன—எதனால்; வா—எது; தேவர்ஷே: தம:—மகாமுனிவரான நாரதர் கடுங்கோபமடைந்தார்.
பரீட்சித்து மகாராஜன் சுகதேவ கோஸ்வாமியிடம் வினவினார்: சக்திவாய்ந்த மாமுனிவரே! நளகூவேரனும், மணிகிரீவனும் நாரத முனிவரால் சபிக்கப்பட்டதன் காரணமென்ன? மாமுனிவரான நாரதரே கோப்படும் வகையில் அவர்கள் செய்த வெறுக்கத்தக்க செயல் என்ன? தயவுகூர்ந்து இதை எனக்கு விளக்கியருளுங்கள்.
பதங்கள் 10.10.2 – 10.10.3
ஸ்ரீ-சுக உவாச
ருத்ரஸ்யானுசரௌ பூத்வா ஸுத்ருப்தௌ தனதாத்மஜௌ
கைலாசோபவனே ரம்யே மந்தாகின்யாம் மதோத்கடௌ
வாருணீம் மதிராம் பீத்வா மதாகூர்ணித-லோசனௌ ஸ்த்ரீ-ஜனைச் அனுகாயத்பிஸ் சேரது: புஷ்பிதே வனே
ஸ்ரீசுக:உவாச—ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி பதிலளித்தார்; ருத்ரஸ்ய—சிவபெருமானின்; அனுசரெள—இரு சிறந்த பக்தர்கள் அல்லது சகாக்கள்; பூத்வா—அப்பதவிக்கு உயர்த்தப்பட்டு; ஸூ-த்ருப்தௌ—அப்பதவியிலும், தங்களது அழகிய தேக அம்சங்களிலும் கர்வம் கொண்டு; தனத-ஆத்மஜௌ—தேவர்களின் பொருளாளரான குபேரனின் இரு மகன்கள்; கைலாஸ-உபவனே—சிவபெருமானின் வசிப்பிடமான கைலாச பர்வத்துடன் சேர்ந்ததொரு சிறு தோட்டத்தில்; ரமயே—மிகவும் அழகான ஓரிடத்தில்; மந்தரகின்யாம்—மந்தாகினி நதியின் மேல்; மத-உத்கடெள—பெருங் கர்வமும், அகங்காரமும் கொண்டு; வாருணீம்—என்ற ஒருவகை மதுபானத்தை; மதிராம்—மதிமயக்கும்; பீத்வா—அருந்தி; மத-ஆகூர்ணித-லோசனௌ—கண்கள் மது மயக்கத்தினால் சுழல; ஸ்த்ரீ-ஜனை:—பெண்களுடன்; அனுகாயத்பி:—அவர்களால் பாடப்பட்ட பாடல்களைப் பாடியபடி; சேரது:—சஞ்சரித்தனர்; புஷ்பிதே-வனே—அழகிய ஒரு பூந்தோட்டத்தில்.
சுகதேவ கோஸ்வாமி கூறினார்: குபேரனின் இரு மகன்கள் சிவபெருமானின் சகவாசத்திற்கு உயர்த்தப்பட்டு. மந்தரகினி நதிக்கரையிலுள்ள கைலாச மலையுடன் சேர்ந்த ஒரு தோட்டத்தில் சஞ்சரிக்க அனுமதிக்கப்பட்டதால் அவர்கள் மிகவும் கர்வம் அடைந்தனர். இந்நிலையைப் பயன்படுத்திக் கொண்ட அவர்கள், வாருணி என்ற ஒருவகை மதுபானத்தை அருந்துவது வழக்கம். அவர்களைப் பின் தொடர்ந்து பாடிய பெண்களுடன் கண்கள் எப்பொழுதும் போதையில் சுழன்றபடி, அப்பூந்தோட்டத்தில் அவர்கள் சஞ்சரித்து வருந்தினர்.
பதம் 10.10.4
அந்த: ப்ரவிஸ்ய கங்காயாம் அம்போஜ-வன-ராஜினி
சிக்ரீடதுர் யுவதிபிர் கஜாவ் இவ கரேனுபி:
அந்த:—உள்ளே; ப்ரவிஸ்ய—புகுந்து; கங்காயாம்—மந்தரகினி என்ற கங்கை; அம்போஜ—தாமரை மலர்கள்; வன-ராஜினி—ஓரடர்ந்தவனம் இருந்த இடம்; சிக்ரீடது:—அவ்விருவரும் இன்பம் அனுபவிப்பது வழக்கம்; யுவதிபி:—இளமங்கையருடன்; கஜௌ—இரு யானைகள்; இவ—போலவே; கரேணுபி:—பெண் யானைகளுடன்.
இரு ஆண் யானைகள், பெண் யானைகளுடன் நீரில் இன்பம் அனுபவிப்பதுபோல், குபேரரின் இரு மகன்களும் தாமரை மலர்கள் அடர்ந்த மந்தரகினி நதிக்குள், இளம் மங்கைகளுடன் இன்பம் அனுபவித்து வந்தனர்.
பதம் 10.10.5
யத்ருச்சழயா ச தேவர்ஷிர் பகவாம்ஸ் தத்ர கௌரவ
அபஸ்யன் நாரதோ தேவௌ க்ஷீபாணௌ ஸம்புத்யத
யத்ருச்சயா—பிரபஞ்சம் முழுவதிலும் சஞ்சரித்து வரும்பொழுது, தற்செயலாக; ச—மேலும்; தேவ-ரிஷி:—தேவர்களுக்கிடையில் மிகச் சிறந்த முனிவர்; பகவான்—மிகவும் சக்திவாய்ந்தவர்; தத்ர—(குபேரனின் இரு மகன்கள் இன்பம் அனுபவித்துக் கொண்டிருந்த) அங்கு; கௌரவ—பரீட்சித்து மகாராஜனே; அபஸ்யத்—அவர் கண்ட பொழுது: நாரத:—மாமுனிவர்; தேவௌ—இரு தேவ குமாரர்கள்; க்ஷீபாணௌ—போதையால் மயங்கிய கண்களுடன்; ஸம்புத்யத—(அவர்களின் நிலையை) அவரால் புரிந்து கொள்ள முடிந்தது.
பரீட்சித்து மகாராஜனே, இவ்விரு தேவ குமாரன்களின் ஏதோ ஒரு நல்ல அதிர்ஷ்டத்தினால், மாமுனிவரான தேவரிஷி நாரதர் தற்செயலாக ஒருமுறை அங்கு தோன்றினார். அவர்கள் கண்கள் சுழல, மது மயக்கத்தில் இருந்ததைக் கண்டு அவர்களுடைய நிலையை அவர் புரிந்து கொண்டார்.
பதம் 10.10.6
தம் த்ருஷ்டவா வ்ரீடிதா தேவ்யோ விவஸ்த்ரா: சாப-சங்கிதா:
வாஸாம்ஸி பர்யது: சீக்ரம் விவஸ்த்ரௌ நைவ குஹ்யகௌ
தம்—நாராத முனிவரை; த்ருஷட்வா—கண்டு; வ்ரீடிதா:—வெட்கமடைந்து; தேவ்ய:—இள தேவ மங்கைகள்; விவஸ்த்ரா:—இருந்த போதிலும்; சாப-சங்கிதா:—சாபத்திற்கஞ்சி; வாஸாம்ஸி—ஆடைகளால்; பர்யது:—உடலை மூடிக்கொண்டனர்; சீக்ரம்—சீக்கிரமாக; விவஸ்த்ரௌ—நிர்வாணமாக இருந்த அவர்கள்; ந—இல்லை; ஏவ—உண்மையில்; குஹ்யகௌ—குபேரரின் இரு மகன்கள்.
நிர்வாணமாக இருந்த தேவ மங்கைகள் நாரதரைக் கண்டதும் மிகவும் வெட்கப்பட்டு, தங்களை அவர் சபித்து விடுவாரோ என்றஞ்சி, உடைகளால் தங்கள் தேகங்களை அவர்கள் மறைத்துக் கொண்டனர். ஆனால் குபேரனின் இரு மகன்களும் நாரதரைப் பற்றிக் கவலைப் படாமல் நிர்வாணமாகவே இருந்தனர்.
பதம் 10.10.7
தௌ த்ருஷ்ட்வா மதிரா மத்தௌ ஸ்ரீ-மதாந்தௌ ஸுராத்ம ஜௌ
தயோர் அனுக்ரஹார்தாய சாபம் தாஸ்யன் இதம் ஜகௌ
தௌ—இரு தேவ குமாரர்களும்; த்ருஷ்ட்வா—கண்டு; மதிர-மத்தௌ—மதுபோதையில் இருந்ததை; ஸ்ரீ-மத-அந்தௌ—பொய்க் கௌரவத்தாலும், செல்வச் செருக்கினாலும் குருடர்களாகி; ஸுர-ஆத்மஜௌ—இரு தேவ குமாரர்களான; தயோ:—அவர்களுக்கு; அனுக்ரஹ-அர்தாய—விசேஷ கருணையைக் காட்ட; சாபம்—ஒரு சாபத்தை; தாஸ்யன்—கொடுக்க விரும்பி; இதம்—இதை; ஐகௌ—கூறினார்.
இரு தேவ குமாரர்களும் நிர்வாணமாக இருப்பதையும், செல்வத்தாலும், பொய்க் கெளரவத்தாலும் போதை தலைக்கேறி இருப்பதையும் கண்ட தேவரிஷி நாரதர், அவர்களுக்கு விசேஷ கருணையைக் காட்டுவதற்காக ஒரு விசேஷ சாபத்தைக் கொடுக்க விரும்பி, பின்வருமாறு பேசலானார்.
பதம் 10.10.8
ஸ்ரீ-நாரத உவாச
ந ஹி அன்யோ ஜுஷதோ ஜோஷ்யான் புத்தி-ப்ரம்சோ ரஜோ-குண:
ஸ்ரீ-மாதாத் ஆபிஜாத்யாதிர் யத்ர ஸ்த்ரீ த்யூதம் ஆஸவ:
ஸ்ரீ—நாரத: உவாச—நாரத முனிவர் கூறினார்; ந—இருக்கவில்லை; ஹி—உண்மையில்; அன்ய:—மற்றொரு பௌதிக இன்பம்; ஜுஷத:—சுகம் அனுபவிப்பவனின்; ஜோஷ்யான்—ஜட உலகில் மிகவும் கவர்ச்சிகரமாக உள்ளவை (வெவ்வேறு வகையான உண்ணுதல், உறங்குதல், புணர்தல் மற்றும் தற்காத்துக் கொள்ளுதல்); புத்தி-ப்ரம்ச:—இத்தகைய சுகபோகங்கள் புத்தியைக் கவர்கின்றன; ரஜ:-குண:—ரஜோ குணத்தால் ஆளப்பட்டு; ஸ்ரீ-மதாத்—செல்வச் சிறப்பைவிட; ஆபிஜாத்ய-ஆதி:—நான்கு பௌதிகக் கோட்பாடுகளுக்கிடையில் (கவர்ச்சியான தேக அம்சங்கள், செல்வந்தர் குடும்பத்தில் பிறத்தல், கல்வியறிவு உடையவராய் இருத்தல், பணக்காரனாக இருத்தல்); யத்ர—எதில்; ஸ்த்ரீ—பெண்கள்; த்யூதம்—சூதாட்டம்; ஆஸவ:—மது (மது, மாது மற்றும் சூதாட்டம் ஆகியவை மிகவும் முக்கியமானவை).
நாரத முனி கூறினார்: அழகிய தேக அம்சங்களைப் பெற்றிருத்தல், செல்வந்தர் குடும்பத்தில் பிறத்தல், மற்றும் கல்வி கற்றவராக இருத்தல் முதலான எல்லா பௌதிக சுகபோகங்களையும்விட செல்வ வளத்தின் கவர்ச்சியானது ஒருவனது புத்தியை மிகவும் பேதலிக்கச் செய்யக் கூடியதாகும். கல்வியறிவு இல்லாதவன் செல்வத்தினால் பொய்யாகப் பெருமிதம் கொள்ளும் பொழுது, அவன் தன் செல்வத்தை மது, மாது மற்றும் சூதாட்டம் ஆகியவற்றை அனுபவிப்பதில் ஈடுபடுத்துகிறான்.
பதம் 10.10.9
ஹன்யந்தே பசவோ யத்ர நிர்தயைர் அஜிதாத்மபி:
மன்யமானைர் இமம் தேஹம் அஜராம்ருத்யு நஸ்வரம்
ஹன்யதே—பல வழிகளில் கொல்லப்படுகின்றன (குறிப்பாக கசாப்புக் கடைகளால்); பசவ:—நான்கு கால் மிருகங்கள் (குதிரைகள், செம்மறியாடு, பசுக்கள், பன்றிகள், போன்றவை); யத்ர—எங்கு; நிர்தயை:—ரஜோ குணத்தால் ஆளப்படும் கருணையற்ற அவர்களால்; அஜித-ஆத்மபி—புலன்களை அடக்க இயலாத அயோக்கியர்கள்; மன்யமானை:—நினைக்கின்றனர்; இமம்—இந்த; தேஹம்—உடல்; அஜர—ஒரு போதும் முதுமையடையாது அல்லது மரணமடையாது; அம்ருத்ய—மரணம் ஒரு போதும் வராது; நஸ்வரம்—உடல் அழிவுக்கு உட்பட்டது என்ற போதிலும்.
தங்கள் புலன்களைக் கட்டுப்படுத்த முடியாத அயோக்கியர்கள், தங்களுடைய செல்வத்தில், அதாவது செல்வந்தர் குடும்பங்களில் தாங்கள் பெற்றுள்ள பிறப்பில் பொய்யாக பெருமை கொண்டுள்ளனர், மிகக் கொடூரமானவர்களான இவர்கள், எவற்றை ஒரு போதும் முதுமையடையாதென்றும், மரணமடையாதென்றும் நினைக்கிறார்களோ, அந்த அழியக்கூடிய உடல்களைப் பராமரிப்பதற்காக, நிராதரவான மிருகங்களை இரக்கமின்றிக் கொலை செய்கின்றனர். சிலசமயங்களில் வெறும் பொழுது போக்கிற்காக மிருகங்களை அவர்கள் கொல்கின்றனர்.
பதம் 10.10.10
தேவ-ஸம்ஜ்ஞிதம் அபி அந்தே க்ருமி-விட்-பஸ்ம்-ஸ்ம்ஜ்ஞிதம்
பூத-த்ருக் தத்-க்ருதே ஸ்வார்தம் கிம் வேத நிரயோ யத:
தேவ-ஸம்க்ஞிதம்—ஜனாதிபதி, மந்திரி அல்லது தேவர் போன்ற மிக உயர்ந்த நபர் என்று இப்பொழுது அறியப்படும் உடல்; அபி—உடல் உயர்ந்ததாக இருப்பினும்; அந்தே—மரணத்திற்குப்பின்; க்ருமி—புழுக்களாக மாறுகின்றது; விட்—அல்லது மலமாக; பஸ்ம-ஸம்க்ஞிதம்—அல்லது சாம்பலாக; பூத-த்ருக்—சாஸ்திர விதிகளை ஏற்கலாம், தேவையின்றி பிற ஜீவராசிகளிடம் பொறாமை கொள்பவன்; தத்-க்ருதே—இவ்வாறு செயற்படுவதன் மூலம்; ஸ்வ-அர்தம்—தன்னலம்; கிம்—அங்கிருப்பவன்; வேத—அறிபவன்; நிரய: யத:—இப்பாவச் செயல்களிலிருந்து ஒருவன் நரகம் போன்ற வாழ்வை அனுபவிக்க வேண்டும் என்பதால்.
வாழ்ந்துகொண்டிருக்கும் ஒருவன் தன்னை ஒரு பெரிய மனிதன் என்றோ, மந்திரி என்றோ, ஜனாதிபதி என்றோ அல்லது தேவனென்றோ எண்ணி, தன்னுடலில் செருக்குக் கொண்டவனாக இருக்கக் கூடும். ஆனால் ஒருவன் என்னவாக இருந்தாலும், மரணத்திற்குப் பின் இவ்வுடல் புழுக்களாகவோ, மலமாகவோ அல்லது சாம்பலாகவோ மாறிவிடும். இவ்வுடலின் தற்காலிகமான விருப்பங்களைத் திருப்திப்படுத்துவதற்காக நிராதரவான மிருகங்களைக் கொல்பவன், தன்னுடைய அடுத்த பிறவியில் துன்பத்தை அனுபவிக்க வேண்டியிருக்கும் என்பதை அறியவில்லை. இத்தகைய ஒரு பாவி நரகத்திற்குச் சென்று தன் வினைப்பயன்களை அனுபவிப்பான்.
பதம் 10.10.11
தேஹ: கிம் அன்ன-தாது: ஸ்வம் நிஷேக்துர் மாதுர் ஏவ ச
மாது: பிதுர் வா பலின: க்ரேதுர் அக்னே: கனோ ‘பி வா
தேஹ:—இவ்வுடல்; கிம்-அன்ன-தாது:—இதைப் பராமரிப்பதற்குப் பணம் கொடுக்கும் எஜமானனுக்கு இது சொந்தமா; ஸ்வம்—அல்லது இது எனக்கே சொந்தமா; நிஷேக்து:—அல்லது விந்துவை வெளிப்படுத்தியவனுக்கு (இது சொந்தமா); மாது: ஏவ—அல்லது இவ்வுடலைத் தன் கர்ப்பத்தில் பராமரிக்கும் தாய்க்கு (இது சொந்தமா); ச—மேலும்; மாது: பிது: வா—அல்லது தாயின் தந்தைக்கு இது சொந்தமா (ஏனெனில் சில சமயங்களின் தாயின் தந்தை ஒரு பேரனைத் தன் மகனாக வரித்துக் கொள்கிறார்); பலின:—அல்லது பலாத்காரமாக இவ்வுடலை எடுத்துச் செல்பவனுக்கு (இது சொந்தமா); க்ரேது—அல்லது இவ்வுடலை ஓரடிமையாக விலைக்கு வாங்குபவனுக்கு; அக்னே:—(இறுதியில் இவ்வுடல் தகனம் செய்யப்படுகிறது என்பதால்) தீக்கு இது சொந்தமா; கன:—அல்லது முடிவில் அதைத் தின்னும் நாய்களுக்கும் கழுகுகளுக்கும்; அபி—கூட; வா—அல்லது.
உயிருடனிருக்கும் பொழுது, இவ்வுடல் அதன் எஜமானுக்குச் சொந்தமா, தனக்கே சொந்தமா, தந்தைக்குச் சொந்தமா, தாய்க்குச் சொந்தமா, அல்லது தாயின் தந்தைக்குச் சொந்தமா? பலாத்காரமாக இவ்வுடலை எடுத்துச் செல்பவனுக்கு இது சொந்தமா? அல்லது இதை அடிமையாக விலைக்கு வாங்குபவனுக்குச் சொந்தமா? அல்லது இதைத் தீயில் தகனம் செய்யும் மகன்களுக்குச் சொந்தமா? அல்லது தகனம் செய்யப்படாவிட்டால், இதைத் தின்னும் நாய்களுக்கு இது சொந்தமா? இவ்வாறு பலவிதமாக உரிமை பாராட்டுபவர்களுக்கு இடையில், நியாயமான உரிமையாளன் யார்? இதை ஆராய்ந்து அறிவதற்குப் பதிலாக, பாவச் செயல்களால் உடலைப் பராமரிப்பது நல்லதல்ல.
பதம் 10.10.12
ஏவம் ஸாதாரணம் தேஹம் அவ்யக்த-ப்ரமவாப்யயம்
கோ வித்வான் ஆத்மாஸாத் க்ருத்வா ஹந்தி ஜந்தூன் ருதே ‘ஸத:
ஏவம்—இவ்வாறாக; ஸாதாரணம்—பொதுச் சொத்து; தேஹம்—உடல்; அவ்யக்த—தோன்றாத இயற்கையிலிருந்து; ப்ரபவ—இவ்வாறு தோன்றும்; அப்யயம்—பிறகு மீண்டும் தோன்றாததுடன் கலந்து விடுகிறது (“புழுதியாக நீ இருப்பதால், புழுதியிடமே நீ திரும்பிச் செல்வாய்”); க:—யாரவன்; வித்வான—உண்மையறிவைப் பெற்றுள்ளவன்; ஆத்மஸாத்-க்ருத்வா—தன்னுடையதென்று உரிமை பாராட்டுபவன்; ஹந்தி:—கொல்லும்; ஜந்தூன்—நிராதரவான மிருகங்கள்; ருதே—தவிர; அஸத:—அறிவும், தெளிவான புரிந்துணர்வும் இல்லாத அயோக்கியர்கள்.
இவ்வுடல் தோன்றாத இயற்கையால் உற்பத்தி செய்யப்பட்டு, பிறகு மீண்டும் அழிக்கப்பட்டு, கடைசியில் இயற்கையின் மூலப் பொருட்களுடன் கலந்துவிடுகிறது. எனவே, இது அனைவருக்கும் உரிய பொதுச் சொத்தாகும். இந்நிலையில் இவ்வுடலைத் தன்னுடையதென்று உரிமை பாராட்டி, அதைப் பராமரிக்கும் வேளையில், தன் விருப்பங்களைத் திருப்திப்படுத்துவதற்காக மிருகவதை போன்ற இத்தகைய பாவச் செயல்களைச் செய்பவன் ஒரு கயவனைத் தவிர வேறு யாராக இருக்க முடியும்? ஒருவன் ஒரு கயவனாக இருந்தாலொழிய, அவனால் இத்தகைய பாவங்களைச் செய்ய முடியாது.
பதம் 10.10.13
அஸத: ஸ்ரீ-மதாந்தஸ்ய தாரித்ரியம் பரம் அஞ்ஜனம்
ஆத்மௌபம்யேன பூதானி தரித்ர: பரம் ஈக்ஷதே
அஸத—இத்தகைய ஒரு மூட அயோக்கியனின்; ஸ்ரீ-மத-அந்தஸ்ய—நிலையற்ற ஆஸ்திகளாலும், ஐசுவரியங்களாலும் குருடானவன்; தரித்ரியம்—வறுமை; பரம் அஞ்ஜனம்—எதைக் கொண்டு விஷயங்களை உள்ளபடி காணமுடியுமோ, அச்சிறந்த தன்மை; ஆத்ம-அனுபம்யேன—தன்னுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்பொழுது; பூதானி—ஜீவராசிகளை; த்ரித்ர:—வறுமையிலுள்ள ஒருவன்; பரம்—பக்குவமாக; ஈக்ஷதே—விஷயங்களை உள்ளபடி காணமுடியும்.
செல்வச் செருக்குடைய நாஸ்திக மூடர்களும், அயோக்கியர்களும், விஷயங்களை உள்ளபடி காணத் தவறிவிடுகின்றனர். எனவே, அவர்களை வறுமை நிலைக்குத் திருப்பி அனுப்புவதே, விஷயங்களை உள்ளபடி காண்பதற்கு, அவர்களது கண்களுக்கு அளிக்கப்படும் தகுந்த மருந்தாகும். ஏழ்மையில் உழலும் ஒருவனால் தான் ஏழ்மை எவ்வளவு துன்பகரமானது என்பதை உணர முடியும். எனவே தன்னைப்போல் மற்றவர்களும் துன்பப்படுவதை அவன் விரும்பமாட்டான்.
பதம் 10.10.14
யதா கண்டக-வித்தாங்கோ ஜந்தோர் நேச்சதி தாம் வ்யதாம்
ஜீவ ஸாம்யம் கதோ லிங்கைர் ந ததாவித்த-கண்டக:
யதா—அதுபோலவே; கண்டக-வித்த—அங்க:—தன் உடலில் ஊசியால் குத்தப்பட்டவன்; ஐந்தோ:—இத்தகைய ஒரு மிருகத்தின்; ந—இல்லை; இச்சதி—விரும்புகிறான்; தாம்—ஒரு குறிப்பிட்ட; வ்யதாம்—வலியை; ஜீவஸாம்யக் கத:—இந்நிலை அனைவருக்கும் ஒன்று தான் என்பதை அவன் புரிந்து கொள்ளும் பொழுது; லிங்கை:—ஒரு குறிப்பிட்ட வகையான உடலைப் பெற்றிருப்பதால்; ந—இல்லை; ததா—அவ்வாறு; அவித்த-கண்டக:—இதுவரை ஊசியால் குத்தப்படாதவன்.
யாருடைய உடல் ஊசியால் குத்தப்பட்டதோ, அவனால் ஊசிகளால் குத்தப்படும் மற்றவர்களுடைய முகங்களைப் பார்த்தே அவர்களது வலியைப் புரிந்துகொள்ள முடியும். இந்த வலி அனைவருக்கும் ஒன்றுதான் என்பதை உணர்ந்துள்ள அவன், மற்றவர்கள் இப்படித் துன்புறுவதைக் காண விரும்புவதில்லை. ஆனால் இதுவரை ஊசிகளால் குத்தப்படாத ஒருவனால் இந்த வலியைப் புரிந்துகொள்ள முடியாது.
பதம் 10.10.15
தரித்ரோ நிரஹம்-ஸ்தம்போ முக்த: ஸர்வ-மதைர் இஹ
க்ருச்ரம் யத்ருச்சயாப்னோதி தத் ஹி தஸ்ய பரம் தப:
தரித்ர:—ஏழ்மையில் உள்ளவன்; நிர்-அஹம்-ஸ்தம்ப:—பொய் கௌரவத்திலிருந்து தானாகவே விடுபடுகிறான்; முக்த:—முக்தியடைந்த; ஸர்வ—எல்லாம்; மதை:—பொய் அகங்காரத்திலிருந்து; இஹ—இவ்வுலகில்; க்ருச்ரம்—மிகவும் கஷ்டத்துடன்; யத்ருச்சயா-ஆப்னோதி—விதியிடமிருந்து தற்செயலாக அவன் அடைவது; தத்—அந்த; ஹி—உண்மையில்; தஸ்ய—அவனது; பரம்—பூரணமான; தப:—தவம்.
ஏழ்மையில் உள்ள ஒருவன், எதையேனும் அடைவதற்குத் தேவையான செல்வத்தைப் பெற்றிராத காரணத்தால், தானாகவே தவ, விரதங்களை அவன் மேற்கொள்ள வேண்டியுள்ளது. இவ்வாறாக அவனது பொய்க் கௌரவம் நசுக்கப்படுகிறது. உணவு, வசிப்பிடம், உடை ஆகியவை எப்பொழுதும் தேவையாக இருப்பதால், இறையருளால் அடையப்படுவதைக் கொண்டு அவன் திருப்தியடைய வேண்டும். இத்தகைய கட்டாயமான தவங்களை மேற்கொள்வது அவனுக்கு நல்லதுதான். ஏனெனில், இது அவனைத் தூய்மைப்படுத்தி, பொய் அகங்காரத்திலிருந்து முழுமையாக அவனை விடுவிக்கிறது.
பதம் 10.10.16
நித்யம் க்ஷுத்-க்ஷாம-தேஹஸ்ய தர்த்ரஸ்யான்ன-காங்க்ஷிண:
இந்ரியாணி அனுகஷ்யந்தி ஹிம்ஸாபி வினிவர்ததே
நித்யம்—எப்பொழுதும்; க்ஷுத்—பசியுடன்; க்ஷாம—தேவையான சக்தியில்லாததால் பலவீனமடைந்து; தேஹஸ்ய—ஒரு ஏழையின் உடலை; தரித்ரஸ்ய—வறுமைக்குட்பட்ட; அன்ன-காங்க்ஷிண:—எப்பொழுதும் போதுமான உணவைப் பெறவிரும்பும்; இந்ரியாணி—பாம்புகளுக்கு ஒப்பிடப்படும் புலன்கள்; அனுகஷ்யந்தி—குறைந்துவிட்ட சக்தியினால் படிப்படியாக பலவீனமடைகிறான்; ஹிம்ஸா அபி—பிறரிடம் பொறாமை கொள்ளும் சுபாவம்; வினிவர்ததே—குறைக்கின்றது.
போதுமான உணவைப் பெற பேரவா கொள்ளும் தரித்திரன் ஒருவன், எப்பொழுதும் பசியுடன் இருப்பதால், படிப்படியாக பலவீனமடைகிறான். உடலில் அதிகப்படியான பலம் இல்லாததால் அவனது புலன்கள் தானாகவே சாந்தமடைகின்றன. எனவே ஏழ்மையில் வாடுபவனால் தீங்கிழைக்கும் பொறாமைச் செயல்களைச் செய்ய முடியாது. அதாவது, இத்தகைய ஒரு மனிதன், சாதுக்களால் தன்னிச்சையாக ஏற்றுக் கொள்ளப்படும் தவ, விரதங்களின் பலன்களைத் தானாகவே அடைகிறான்.
பதம் 10.10.17
தரித்ரஸ்யைவ யுஜ்யந்தே ஸாதவ: ஸம-தர்சின:
ஸத்பி: க்ஷிணோதி தம் தர்ஷம் தத ஆராத் விசுத்யதி
தரித்ரஸ்ய—ஏழ்மையில் உள்ள ஒருவனின்; ஏவ—உண்மையில்; யுஜ்யந்தே—சுலபமாக சகவாசம் கொள்ளக்கூடும்; ஸாதவ:—சாதுக்கள்; ஸம-தர்சின:—சாதுக்கள் ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடின்றி சமமாக நடந்து கொள்கின்றனர் என்ற போதிலும், அவர்களின் சகவாசத்தை ஏழைகள் நன்கு பயன்படுத்திக் கொள்ள முடியும்; ஸத்பி:—இத்தகைய சாதுக்களின் சகவாசத்தினால்; க்ஷிணோதி—குறைக்கின்றது; தம்—பௌதிகத் துன்பத்திற்குரிய மூல காரணத்தை; தர்ஷம்—பௌதிக இன்பத்திற்கான ஆசையை; தத:—அதன்பிறகு; ஆராத்—மிக விரைவில்; விசுத்யதி—அவனது பௌதிக மாசு சுத்தப்படுத்தப்படுகிறது.
சாதுக்கள், ஏழைகளுடன் தடையின்றி உறவாடலாம். ஆனால் பணக்காரர்களுடன் அப்படிச் செய்யக்கூடாது. ஏழ்மையானவன், சாதுக்களுடன் சகவாசம் கொள்வதன் மூலம், மிக விரைவில் பௌதிக ஆசைகளில் விருப்பற்றவனாகிறான். அவனது இதயத்திலுள்ள அழுக்குகளும் சுத்தப்படுத்தப்படுகின்றன.
பதம் 10.10.18
ஸா தூனாம் ஸம-சித்தானாம் முகுந்த-சரனைஷிணாம்
உபக்ஷ்யை: கிம் தன-ஸ்தம்பைர் அஸத்பிர் அஸத்-ஆஸ்ரயை:
ஸாதூனாம்—சாதுக்களின்; ஸம-சித்தானாம்—சமமாக உள்ளவர்களின்; முகுந்த-சரண-ஏஷிணாம்—பரம புருஷரான முகுந்தனுக்குத் தொண்டு செய்வதை மட்டுமே தொழிலாகக் கொண்டவர், மேலும் அத்தொண்டிற்காக எப்பொழுதும் அனைவரிடமும் ஆசைப்படுபவர்; உபேக்ஷ்யை:—சகவாசத்தை அலட்சியப்படுத்தி; கிம்—என்னை; தன-ஸ்தம்பை:—பணமும், திமிரும்; அஸத்பி:—விரும்பத்தகாதவர்களின் சகவாசத்துடன்; அஸத்-ஆஸ்ரயை:— பக்தரல்லாதவர்களின் (அஸத்) புகலிடத்தை ஏற்று.
சாதுக்கள் இருபத்துநான்கு மணி நேரமும் கிருஷ்ணரை நினைக்கின்றனர். அவர்களுக்கு வேறெந்த விருப்பமும் இல்லை. மக்கள் ஏன் இத்தகைய உயர்ந்த ஆன்மீகிகளை அலட்சியப்படுத்தி, செல்வச் செருக்குடைய பக்தரல்லாதவர்களின் புகலிடத்தை ஏற்று, பௌதிகவாதிகளுடன் சகவாசம் கொள்ள முயல்கின்றனர்?
பதம் 10.10.19
தத் அஹம் மத்தயோர் மாத்வ்யா வாருண்யா ஸ்ரீ-மதாந்தயோ
தமோ-மதம் ஹரிஷ்யாமி ஸ்த்ரைணயோர் அஜிதாத்மனோ:
தத்—எனவே; அஹம்—நான்; மத்தயோ:—குடிமயக்கத்திலுள்ள இவ்விருவரின்; மாத்வ்யா—மது அருந்தியதால்; வாருண்யா—வாருணி என்ற; ஸ்ரீ-மத-அந்தயோ:—சுவர்க்கலோக ஐசுவரியத்தால் குருடானவர்கள்; தம:-மதம்—அறியாமைக் குணத்தால் எழுந்த இப்பொய்க் கௌரவத்தை; ஹரிஷ்யாமி—நான் பறித்துவிடப் போகிறேன்; ஸ்த்ரைணயோ:—அவர்கள் பெண்களிடம் மிகவும் பற்றுக் கொண்டிருப்பதால்; அஜித-ஆத்மனோ:—புலன்களை அடக்க முடியாமல்.
எனவே, வாருணீ, அல்லது மாத்வீ எனப்படும் மதுவை அருந்தியதால், தங்கள் புலன்களைக் கட்டுப்படுத்த இயலாத இவ்விருவரும், சுவர்க்கலோக செல்வச் செருக்கினால் குருடாக்கப்பட்டு, பெண்களிடம் பற்றுக் கொண்டவர்களானதால், பொய்க் கெளரவத்திலிருந்து அவர்களை நான் விடுவிக்கப் போகிறேன்.
பதங்கள் 10.10.20 – 10.10.22
யத் இமௌ லோக-பாலஸ்ய புத்ரௌ பூத்வா தம:-ப்லுதௌ
ந விவாஸஸம் ஆதமானம் விஜானீத: ஸுதுர்மதெள
அதோ ‘ர்ஹத: ஸ்தாவரதாம் ஸ்யாதாம் நைவம் யதா புன:
ஸ்ம்ருதி: ஸ்யான் மத்-ப்ரஸாதேன தத்ராபி மத்-அனுக்ஹாத்
வாஸுதேவஸ்ய ஸான்னித்யம் லப்த்லா திவ்ய-சரச்-சதே
வ்ருதே ஸ்வர்லோகதாம் பூயோ லப்த-பக்தீ பவிஷ்யத:
யத்—என்ற காரணத்தால்; இமௌ—இவ்விரு இளம் தேவர்களும்; லோக-பாலஸ்ய—சிறந்த தேவரான குபேரனுக்கு; புத்ரௌ—மகன்களாகப் பிறந்த; பூத்வா—என்பதால் (அவர்கள் அப்படி ஆகியிருக்கக் கூடாது); தம:-ப்லுதௌ—அறியாமைக் குணத்தில் மிகவும் ஆழ்ந்து; ந—இல்லை; விவாஸஸம்—உடை எதுவும் இல்லாமல், முற்றிலும் நிர்வாணமாக; ஆத்மானம்—தங்கள் சொந்த உடல்கள்; விஜானீத:—தாங்கள் நிர்வாணமாக இருப்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது; ஸுதுர்ம-தௌ—பொய்ப் பெருமையினால் அவர்கள் மிகவும் இழிவடைந்து விட்டதால்; அத:—எனவே; அர்ஹத:—தகுந்தவர்கள்; ஸ்தாவரதாம்—ஒரு மரத்தைப் போல் அசைவற்ற நிலைக்கு; ஸ்யாதாம்—அவர்கள் மாறக்கூடும்; ந—இல்லை; ஏவம்—இவ்வாறாக; யதா—போல்; புன:—மீண்டும்; ஸ்ம்ருதி:—ஞாபகம்; ஸ்யாத்—தொடரக்கூடும்; மத்-ப்ரஸாதேன—என் கருணையால்; தத்ர அபி—அதற்கும் மேலாக; மத்-அனுக்ரஹாத்—என்னுடைய விசேஷ அனுக்கிரகத்தினால்; வாஸுதேவஸ்ய—பரமபுருஷரின்; ஸன்னித்யம்—நேருக்கு நேரான சகவாசத்தை; லப்தவா—பெற்று; திவ்ய-சரத்-சதேவ்ருத்தே—தேவர்களின் கணக்குப்படி நூறு ஆண்டுகள் கழிந்த பின்; ஸ்வர்லோகதாம்—சுவர்க்க லோகத்தில் வாழும் ஆசை; பூய—மீண்டும்; லப்த-பக்தி—அவர்களுடைய இயல்பான நிலையான பக்தித் தொண்டை புதுப்பித்துக் கொண்டு; பவிஷ்யத்:—ஆவார்கள்.
நளகூவரன் மற்றும் மணிகிரீவன் ஆகிய இவ்விரு வாலிபர்களும், அதிர்ஷ்டவசத்தால் சிறந்த தேவரான குபேரனின் மகன்களாக இருந்தனர். ஆனால் மது அருந்தியதால் உண்டான பொய்க் கௌரவம் மற்றும் மதி மயக்கம் ஆகியவற்றின் காரணத்தால், மிகவும் இழிவடைந்த நிலையிலிருந்த அவர்கள் நிர்வாணமாக இருந்தும், அதை அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. எனவே, (உணர்வின்றி நிர்வாணமாக நிற்கும்) மரங்களைப் போல் அவர்கள் வாழ்ந்ததால், இவ்வாலிபர்கள் மரங்களின் உடல்களைப் பெறவேண்டும், இதுதான் சரியான தண்டனை. எனினும், அவர்கள் மரங்களாகி விடுதலை பெறும் காலம்வரை, என் கருணையால், தங்களது கடந்தகால பாவச் செயல்களின் நினைவு அவர்களுக்கு இருக்கும். மேலும், தேவர்களின் கணக்குப்படி நூறு ஆண்டுகள் கழிந்ததும், என்னுடைய விசேஷ அனுக்கிரகத்தினால், பரமபுருஷரான வாசுதேவரை அவர்களால் நேருக்கு நேராகக் காண முடியும். இவ்வாறாக பக்தர்களெனும் தங்களது உண்மையான நிலையை அவர்கள் மீண்டும் பெறுவார்கள்.
பதம் 10.10.23
ஸ்ரீ-சுக உவாச
ஏவம் உக்த்வா ஸ் தேவர்ஷிர் கதோ நாராயணாஸ்ரமம் நளகூவர-மணிக்ரீவாவ் ஆஸதுர் யமலார்ஜுனௌ
ஸ்ரீ-சுக: உவாச—சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து பேசினார்; ஏவம் உக்தவர்—இவ்வாறு கூறிய; ஸ:—அவர்; தேவரிஷி:—மாமுனிவரான நாரதர்; கத:—அங்கிருந்து சென்றார்; நாராயண-ஆஸ்ரமம்—நாராயண ஆசிரமம் எனப்படும் தம் சொந்த ஆசிரமத்திற்கு; நளகூவர—நளகூவரன்; மணிக்ரீவௌ—மற்றும் மணிகிரீவன்; ஆஸ்து:—ஆகும் பொருட்டு அங்கேயே; யமல-அர்ஜூனெள—இரட்டை மருத மரங்களாக இருந்தனர்.
சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்; இவ்வாறு பேசிய மாமுனிவரான தேவரிஷி நாரதர், நாராயண—ஆசிரமம் என்ற தமது ஆசிரமத்திற்குச் திரும்பினார். உடனே நளகூவரனும், மணிகிரீவனும் இரட்டை மருத மரங்களாயினர்.
பதம் 10.10.24
ரிஷேர் பாகவத-முக்யஸ்ய ஸத்யம் கர்தும் வசோ ஹரி:
ஜகாம சனகைஸ் தத்ர யத்ராஸ்தாம் யமலார்ஜுனௌ
ரிஷே:—மாமுனிவரும், புண்ணிய புருஷருமான நாரதரின்; பாகவத-முக்யஸ்ய—பக்தர்களிலேயே மிக உயர்ந்தவரின்; ஸத்யம்—உண்மை; கர்தும்—நிரூபிக்க; வச:—அவரது வார்த்தைகள்; ஹரி:—பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்; ஜகாம—அங்கு சென்றார்; சனகை:—மிகவும் மெதுவாக; தத்ர—அங்கு; யத்ர—எந்த இடத்தில்; ஆஸ்தாம்—இருந்தனவோ; யமல-அர்ஜுனௌ—இரட்தை மருத மரங்கள்.
பரமபுருஷரான ஸ்ரீ கிருஷ்ணர், பரம பக்தரான நாரதரின் வார்த்தைகளிலுள்ள உண்மையை நிறைவேற்றுவதற்காக, இரட்டை மருத மரங்கள் நின்றுகொண்டிருந்த அந்த இடத்திற்கு மெதுவாகச் சென்றார்.
பதம் 10.10.25
தேவர்ஷர் மே ப்ரியதமோ யத் இமௌ தனதாத்மஜென
தத் ததா ஸாதயிஷ்யாமி யத் கீதம் தன் மஹாத்மனா
தேவர்ஷி:—மாமுனிவரான தேவரிஷி நாரதர்; மே—எனது; ப்ரிய-தம:—மிகப் பிரியமான பக்தர்; யத்—என்ற போதிலும்; இமௌ—இவ்விருவரும் (நளகூவரன் மற்றும் மணிகிரீவன்); தனத-ஆத்மஜென—செல்வம் மிகுந்த ஒரு தந்தைக்குப் பிறந்த, பக்தர்களல்லாத; தத்—தேவரிஷியின் வார்த்தைகளை; ததா—அப்படியே; ஸாதயிஷ்யாமி—நான் நிறைவேற்றப் போகிறேன் (மருத மரங்களுடன் நேருக்கு நேராக நான் வரவேண்டுமென்று அவர் விரும்பியதால், அதை நான் செய்யப் போகிறேன்); யத் கீதம்—முன்பே குறிப்பிட்டபடி; தத்—அந்த; மஹாத்மனா—நாரத முனிவரால்.
“இவ்விரு இளைஞர்களும் பெரும் செல்வந்தரான குபேரனின் மகன்களாவர். இவர்களுடன் எனக்கு எவ்வித தொடர்பும் இல்லை. என்றாலும், தேவரிஷி நாரதர் எனது மிகப்பிரியமான, பாசமுள்ள பக்தராவார். நான் இந்த இளைஞர்கள் முன் நேருக்குநேராக வர வேண்டும் என்று அவர் விரும்புவதால், இவர்களுடைய முக்திக்காக நான் அவ்வாறு செய்யத்தான் வேண்டும்.”
பதம் 10.10.26
இதி அந்தரேணார்ஜுனயோ: க்ருஷ்ணஸ் து யமயோர் யயௌ
ஆத்ம-நிர்வேச-மாத்ரேண நிர்யக்-கதம் உலூகலம்
இதி—இவ்வாறு முடிவுசெய்து; அந்தரேண—இடையில்; அர்ஜுனயோ:—இரு மருத மரங்களுக்கு; க்ருஷ்ண: து—பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்; யமயோ: யயௌ—இரு மரங்களுக்கிடையில் புகுந்தார்; ஆத்ம-நிர்வேச-மாத்ரேண—(இரு மரங்களுக்கிடையில்) அவர் புகுந்த உடனேயே; நிர்யக்—குறுக்குப் பாதைகள்; கதம்—அப்படி ஆனது; உலூகலம்—பெரிய உரல்.
இவ்வாறு பேசிய பிறகு, கிருஷ்ணர் உடனே அவ்விரு மருத மரங்களுக்கிடையில் புகுந்தார். இவ்வாறாக எதனுடன் அவர் கட்டப்பட்டிருந்தவரோ, அப்பெரிய உரல் குறுக்காகத் திரும்பி, அம்மரங்களுக்கிடையில் சிக்கிக் கொண்டது.
பதம் 10.10.27
பாலேன நிஷ்கர்ஷயதான்வக் உலூகலம் தத்
தாமோதரேண தரஸோத்கலிதாங்ரி-பந்தௌ
நிஷ்பேதது: பரம-விக்ரமிதாதிவேப-
ஸ்கந்த-ப்ரவால-விடபெள க்ருத-சண்ட-சப்தௌ
பாலேன—சிறுவனான கிருஷ்ணரால்; நிஷ்கர்ஷயதா—இழுத்துச் சென்ற; அன்வக்—கிருஷ்ணரால் இழுக்கப்பட்டதைத் தொடர்ந்து; உலூகலம்—மர உரல்; தத்—அந்த; தாம-உதரேண—வயிற்றுடன் கட்டப்பட்டிருந்த கிருஷ்ணரால்; தரஸா—பெரும் வலிமையுடன்; உத்கலித—பிடுங்கினார்; அங்ரி-பந்தௌ—அவ்விரு மரங்களின் வேர்களை; நிஷ்பேதது:—கீழே சாய்ந்தன; பரம-விக்ரமித—பரம சக்தியினால்; அதி-வேப—கடுமையாக நடுங்கியபடி; ஸ்கந்த—அடிமரம்; ப்ரவால—இலைக்கொத்துகள்; விடபெள—அவ்விரு மரங்களும், அவற்றின் கிளைகளுடன்; க்ருத—எழுப்பின; சண்ட-சப்தெள—ஒரு பயங்கர ஓசையை.
சிறுவனான கிருஷ்ணர் தம் வயிற்றுடன் கட்டப்பட்டிருந்த மர உரலைத் தம் பின்னால் இழுத்துச் சென்று, இரு மரங்களையும் வேருடன் பிடுங்கித் தள்ளினார். பரமபுருஷரின் பராக்கிரமத்தினால், அவ்விரு மரங்களும் அவற்றின் அடிமரங்கள், இலைகள் மற்றும் கிளைகள் ஆகியவற்றுடன், பெரும் சலசலப்புடன் தரையில் விழுந்து நொறுங்கின.
பதம் 10.10.28
தத்ர ஸ்ரியா பரமயா ககுப: ஸ்ஃபுரந்தௌ
ஸித்தாவ் உபேத்ய குஜயோர் இவ ஜாத-வேதா:
க்ருஷ்ணம் ப்ரணம்ய சிரஸாகில-லோக-நாதம்
பத்தாஞ்சலீ விரஜஸாவ் இதம் ஊசது: ஸ்ம
தத்ர—அங்கு, இரு மருத மரங்கள் விழுந்த அதே இடத்தில்; ஸ்ரியா—அழகுடன்; பரமயா—மிகச்சிறந்த; ககுப:—எல்லாத் திசைகளையும்; ஸ்ஃபுரந்தௌ—பிரகாசத்தால் ஒளிமயமாக்கி; ஸித்தௌ—பக்குவமடைந்த இருவர்; உபேத்ய—பிறகு வெளியில் வந்து; குஜயோ:—இரு மரங்களுக்கும் இடையிலிருந்து; இவ—போல; ஜாத-வேதா:—தீச் சொரூபமான; க்ருஷ்ணம்—பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை; ப்ரணம்ய—வணங்கி; சிரஸா—தலையால்; அகில-லோக-நாதம்—அனைத்தையும் ஆள்பவரான பரமபுருஷரை; பத்த-அஞ்ஜலீ—கூப்பிய கரங்களுடன்; விரஜஸௌ—அறியாமைக் குணத்திலிருந்து முற்றிலும் தூய்மையடைந்து; இதம்—பின்வரும் வார்த்தைகளை; ஊசது: ஸ்ம—உச்சரித்தனர்.
அதன்பிறகு, இரு மருத மரங்களும் விழுந்த அதே இடத்தில், அக்கினிதேவன் போல் காணப்பட்ட இரு சித்த புருஷர்கள், அவ்விரு மரங்களிலிருந்து வெளியே வந்தனர். அவர்களுடைய அழகின் தேஜஸ் எல்லாத் திசைகளையும் ஒளிமயமாக, சிரம் தாழ்த்தி கிருஷ்ணரை வணங்கிய அவர்கள், கூப்பிய கரங்களுடன் பின்வரும் வார்த்தைகளைப் பேசலாயினர்.
பதம் 10.10.29
க்ருஷ்ண க்ருஷ்ண மஹா-யோகிம்ஸ த்வம் ஆத்ய: புருஷ: பர:
வ்யக்தாவ்யக்தம் இதம் விஸ்வம் ரூபம் தே ப்ராஹ்மணா விது:
க்ருஷ்ண க்ருஷ்ண—ஓ கிருஷ்ண, ஓ கிருஷ்ண; மஹா- யோகின்—மகாயோகியே; த்வம்—மகாபுருஷரான தாங்கள்; ஆத்ய:—அனைத்திற்கும் மூல காரணமாவீர்; புருஷ—பரமபுருஷர்; பர:—இந்த பௌதிகப் படைப்பிற்கு மேலான; வ்யக்த-அவ்யக்தம்—காரண விளைவுகளை, அல்லது ஸ்தூல மற்றும் சூட்சும ரூபங்களைக் கொண்டுள்ள இந்த ஜடப் பிரபஞ்சத் தோற்றம்; இதம்—இந்த; விஸ்வம்—முழு உலகும்; ரூபம்—ரூபம்; தே—உமது; ப்ராஹ்மணா:—கற்றறிந்த பிராமணர்கள்; விது:—அறிவர்.
ஓ கிருஷ்ண, ஓ கிருஷ்ண, உமது யோக ஐசுவரியம் நினைத்தற்கரியதாகும். தாங்கள் பரமபுருஷரும், மூல முதல்வரும், உடனடியானதும் பழமையானதுமான எல்லாக் காரணங்களுக்கும் மூலகாரணமும் ஆவீர். மேலும் தாங்கள் இந்த பௌதிக சிருஷ்டிக்கு மேற்பட்டவராவீர். தாங்களே அனைத்தும் என்பதையும், ஸ்தூல மற்றும் சூட்சும அம்சங்களுடன் கூடிய இப்பிரபஞ்ச தோற்றமானது உமது உருவம் என்பதையும் (ஸர்வம் கல்வ இதம் ப்ரஹம என்ற வேத வாக்கியத்தை அடிப்படையாகக் கொண்டு), கற்றறிந்த பிராமணர்கள் அறிந்துள்ளனர்.
பதங்கள் 10.10.30 – 10.10.31
த்வம் ஏக: ஸர்வ-பூதானாம் தேஹாஸ்வ்-ஆத்மேந்ரியேஸ்வர:
த்வம் ஏவ காலோ பகவான் விஷ்ணுர் அவ்யய ஈஸ்வர:
த்வம் மஹான் ப்ரக்ருதி: ஸூக்ஷ்மா ரஜ:-ஸத்வ-தமோமயீ
த்வம் ஏவ புருஷோ ‘த்யக்ஷ: ஸர்வ க்ஷேத்ர-விகார-வித்
த்வம்—பகவானாகிய தாங்கள்; ஏக:—ஒருவர்; ஸர்வ-பூதானாம்—அனைத்து ஜீவராசிகளின்; தேஹ—உடலின்; அஸு—உயிர்ச்சக்தியின்; ஆத்ம—ஆத்மாவின்; இந்ரிய—புலன்களின்; ஈஸ்வர:—ஈசுவரரான பரமாத்மா; த்வம்—பகவானாகிய தாங்கள்; ஏவ—உண்மையில்; கால:—காலம்; பகவான்—பரமபுருஷ பகவான்; விஷ்ணு:—சர்வ வியாபகமுடைய; அவ்யய:—அழியாத; ஈஸ்வர:—ஈசுவரர்; த்வம்—தாங்கள்; மஹான்—மிக உயர்ந்தவர்; ப்ரக்ருதி:—பிரபஞ்ச தோற்றம்; ஸூக்ஷ்மா—சூட்சுமமான; ரஜ:-ஸ்தவ-தம:-மயீ—சத்வம், ரஜஸ், தமஸ் எனும் இயற்கையின் முக்குணங்களைக் கொண்டுள்ள; த்வம்-ஏவ—பகவானாகிய தாங்கள் உண்மையில்; புருஷ:—பரமபுருஷராவீர்; அத்யக்ஷ:—உரிமையாளர்; ஸர்வ-க்ஷேத்ர—எல்லா ஜீவராசிகளிலும்; விகார-வித்—அமைதியற்ற மனதை அறிந்து.
நீங்கள் அனைத்தையும் ஆளும் பரமபுருஷராவீர். நீங்களே அனைத்து ஜீவராசிகளின் உடலாகவும், உயிராகவும், அகங்காரமாகவும் மற்றும் புலன்களாகவும் இருக்கிறீர்கள். நீங்கள் பரமபுருஷரும், அழிவற்ற ஈசுவரருமாகிய விஷ்ணுவாவீர். நீங்களே காலமும், உடனடியான காரணமும், சத்வம், ரஜஸ், தமஸ் ஆகிய முக்குணங்களைக் கொண்ட ஜட இயற்கையுமாவீர். இந்த ஜடத் தோற்றத்தின் மூல காரணமும் நீங்களே. நீங்கள் பரமாத்மா என்பதால், ஒவ்வொரு ஜீவராசியின் இதயத்திலுமுள்ள அனைத்தையும் நீங்கள் அறிவீர்கள்.
பதம் 10.10.32
க்ருஹ்யமாணைஸ் த்வம் அக்ராஹ்யோ
விகாரை: ப்ராக்ருதைர் குணை:
கோ நு இஹார்ஹதி விக்ஞாதும்
ப்ராக் ஸித்தம் குண-ஸம்வ்ருத:
க்ருஹ்யமாணை:—கண்ணுக்குப் புலப்படுவதன் காரணத்தால், தற்பொழுது இருப்பது போன்ற, ஜட இயற்கையாலான உடலை ஏற்று; த்வம்—தாங்கள்; அக்ராஹ்ய:—ஜட இயற்கையாலான ஓர் உடலில் அடைபடாமல்; விகாரை:—மனதால் கலக்கமடைந்து; ப்ராக்ருதை: குணை:—ஜட இயற்கைக் குணங்களால் (ஸத்வ-குணம், ரஜோ-குணம் மற்றும் தமோ-குணம்); க:—அங்குள்ளவன்; நு—அதன் பின்; இஹ—இந்த ஜட உலகில்; அர்ஹதி—தகுதியுடையவன்; விக்ஞாதும்—அறிய; ப்ராக் ஸித்தம்—சிருஷ்டிக்கு முன் இருந்த அது; குண-ஸம்வ்ருத:—பௌதிகக் குணங்களால் மூடப்பட்டுள்ள காரணத்தால்.
பகவானே, தாங்கள் சிருஷ்டிக்கு முன்பே இருக்கிறீர்கள். எனவே, இந்த ஜட உலகில், பௌதிகக் குணங்களைக் கொண்ட ஒருடலில் சிறைப்பட்டுள்ள யாரால் உம்மைப் புரிந்து கொள்ள முடியும்?
பதம் 10.10.33
தஸ்மை துப்யம் பகவதே வாஸுதேவாய வேதஸே
ஆத்ம-த்யோத-குணைஸ் சன்ன-மஹிம்னே ப்ரஹ்மணே நம:
தஸ்மை—(பௌதிக படித்தரத்தில் இருந்துகொண்டு உங்களை அறியமுடியாது என்பதால்) அவருக்கு (எங்களது வணக்கங்கள்); துப்யம்—உங்களுக்கு; பகவதே—பரமபுருஷருக்கு; வாஸுதேவாய—சங்கர்ஷணர், பிரதியும்னர் மற்றும் அநிருத்தர் ஆகியோருக்கு மூலமான வாசுதேவனுக்கு; வேதஸே—சிருஷ்டியின் மூலத்திற்கு; ஆத்ம-த்யோத-குணை: சன்ன-மஹிம்னே—யாருடைய மகிமைகளை உமது சொந்த சக்தியே மூடியுள்ளதோ, அத்தகைய உமக்கு; ப்ரஹ்மணே—பரபிரம்மனுக்கு; நம:—எங்களுடைய பணிவான வணக்கங்கள்.
பகவானே, உமது மகிமைகளை உமது சொந்த சக்தியாலேயே மறைத்துக் கொண்டுள்ள நீங்கள் பரமபுருஷராவீர். படைப்பின் மூலமான சங்கர்ஷணரும் நீரே, சதுர்—வ்யூஹத்தின் மூலமாகிய வாசுதேவரும் நீரே, அனைத்துமாக இருப்பதால் தாங்கள் பரப்பிரம்மனாவீர். எனவே உமக்கு எங்களது பணிவான வணக்கங்கள்.
பதங்கள் 10.10.34 – 10.10.35
யஸ்யாவதாரா க்ஞாயந்தே சரீரேஷ்வ் அசரீரிணை:
தைஸ் தைர் அதுல்யாதிசயைர் வீர்யைர் தேஹிஷ்வ அஸங்கதை:
ஸ பவான் ஸர்வ-லோகஸ்ய பவாய் விபவாய ச
அவதீர்னோ ‘ம்ச-பாகேன ஸாம்ப்ரதம் பதிர் ஆசிஷாம்
யஸ்ய—எவரின்; அவதாரா:—மச்சம், கூர்மம், வராஹம் போன்ற வெவ்வேறு அவதாரங்கள்; க்ஞாயந்தே—ஊகிக்கப்படுகின்றன; சரீரேஷு—வெவ்வேறாகக் காணப்படும் வெவ்வேறு உலகங்களில்; அசரீரிண—அவை சாதாரண பௌதிக உடல்களல்ல, ஆன்மீக உடல்களாகும்; தை: தை:—இத்தகைய தேகாந்திரச் செயல்களினால்; அதுல்ய—இணையற்ற; அதி-சயை:—எல்லையற்ற; வீர்யை:—பலத்தாலும், சக்தியாலும்; தேஹிஷு—உண்மையில் பௌதிக உடல்களை உடையவர்களால்; அஸங்கதை:—வெவ்வேறு அவதாரங்களில் நிகழ்த்தப்படும் அச்செயல்கள், நிகழ்த்தப்படுவதற்குச் சாத்தியமற்றவையாகும்; ஸ:—அதே பரமபுருஷர்; பவான்—பகவானாகிய தாங்கள்; ஸர்வ-லோகஸ்ய—அனைவரின்; பவாய—உயர்வுக்காக; விபவாய—முக்திக்காக; ச—மேலும்; அவதீர்ண:—இப்பொழுது தோன்றியிருக்கிறீர்கள்; அம்ச-பாகேன—வெவ்வேறு அம்சங்களுடன், முழு சக்தியோடு; ஸாம்ப்ரதம்—தற்பொழுது; பதி: ஆசிஷாம்—தாங்கள் சர்வ மங்களமும் பொருந்திய பரமபுருஷராவீர்.
சாதாரண ஒரு மீன், ஆமை, பன்றி போன்ற உடல்களில் தோன்றும் நீங்கள், இத்தகைய ஜீவன்களால் செய்ய முடியாத அசாதாரணமான, ஒப்பற்ற, உன்னத செயல்களை வெளிப்படுத்துகிறீர்கள். இச்செயல்கள் எல்லையற்ற பலமும், சக்தியும் உடையவையாகும். எனவே உங்களுடைய இவ்வுடல்கள் பௌதிக மூலப் பொருட்களால் ஆனவையல்ல. இவை பரமபுருஷராகிய உமது அவதாரங்களாகும். நீங்கள் இந்த ஜட உலகிலுள்ள அனைத்து ஜீவராசிகளின் நன்மைக்காக, முழு சக்தியுடன் இப்பொழுது தோன்றியுள்ள அதே பரமபுருஷராவீர்.
பதம் 10.10.36
நம: பரம-கல்யாண நம: பரம-மங்கள
வாஸுதேவாய சாந்தாய யதூனாம் பதயே நம:
நம:—எனவே உங்களுக்கு எங்களுடைய பணிவான வணக்கங்கள்; பரம-கல்யாண—நீங்கள் பரம் கல்யாண மூர்த்தியாவீர்; நம:—உங்களுக்கு எங்களது வணக்கங்கள்; பரம-மங்கள—நீங்கள் செய்வதெல்லாம் நன்மையளிப்பவையே; வாஸுதேவாய—மூல முழுமுதற் கடவுளான வாசுதேவருக்கு; சாந்தாய—சாந்த சொரூபியே; யதூனாம்—யது வம்சத்தின்; பதயே—தலைவருக்கு; நம:—உங்களுக்கு எங்களது பணிவான வணக்கங்கள்.
பரம கல்யாணமூர்த்தியே, பரம மங்கள வடிவினராகிய உங்களுக்கு எங்களது பணிவான வணக்கங்கள், பெரும் புகழுக்குரிய யது குலத்தோன்றலே, யது குலத் தலைவரே, வசுதேவரின் புதல்வரே சாந்த சொரூபியே, உமது தாமரைப் பாதங்களில் எங்களது பணிவான வணக்கங்களைச் சமர்ப்பிக்கிறோம்.
பதம் 10.10.37
அனுஜானீஹி நெள பூமம்ஸ தவனுசர-கிங்கரௌ
தர்சனம் நௌ பகவத ரிஷேர் ஆஸீத் அனுக்ரஹாத்
அனுஜானீஹி—அனுமதி பெறுவோமாக; நௌ—நாங்கள்; பூமன்—பெரும் விஸ்வரூபியே; தவ அனுசர-கிங்கரௌ—உமது சிறந்த அந்தரங்க பக்தரான நாரத முனிவரின் தொண்டர்கள் என்பதால்; தர்சனம்—நேரடியாகத் தரிசிக்க; நௌ—எங்களை; பகவத:—பரம புருஷரான உங்களின்; ரிஷே:—மாமுனிவரான நாரதரின்; ஆஸீத்—(ஒரு சர்பத்தின் வடிவில்) இருந்தது; அனுக்ரஹாத்—கருணையிலிருந்து.
பரம சொரூபியே, நாங்கள் எப்பொழுதும் உமது தொண்டர்களுக்குத் தொண்டர்களாவோம், குறிப்பாக நாரத முனிவரின் தொண்டர்களாவோம். இப்பொழுது வீடு திரும்ப எங்களுக்கு அனுமதி தாருங்கள். நாரத முனிவரின் கருணையாலும், அருளாலும்தான் உங்களை எங்களால் நேருக்கு நேராகத் தரிசிக்க முடிந்தது.
பதம் 10.10.38
வாணீ குணானுகதனே ஸ்ரவணெள கதாயாம்
ஹஸ்தௌ ச கர்மஸு மனஸ் தவ பாதயோர் ந:
ஸ்ம்ருத்யாம் சிரஸ் தவ நிவாஸ-ஜகத்-ப்ரணாமே
த்ருஷ்டி: ஸதாம் தர்சனே ‘ஸ்து பவத்-தனூனாம்
வாணீ—வார்த்தைகள், பேச்சுத்திறன்; குண-அனுகதனே—எப்பொழுதும் உமது லீலைகளைப் பற்றி பேசுவதில் ஈடுபட்டு; ஸ்ரவணௌ—செவி, அல்லது செவி சாய்த்தல்; கதாயாம்—உம்மையும், உமது லீலைகளையும் பற்றிய பேச்சுக்களில்; ஹஸ்தௌ—கைகால்களும், மற்ற புலன்களும்; ச—கூட; கர்மஸு—உமது நோக்கத்தை நிறைவேற்றுவதில் ஈடுபடுத்தி; மன:—மனதை; தவ—உமது; பாதயோ:—உமது தாமரைப் பாதங்களை; ந:——எங்கள்; ஸ்ம்ருத்யாம்—எப்பொழுதும் தியானத்தில் ஈடுபடும் சிந்தனையில்; சிர:—தலையை; தவ—உமது; நிவாஸ-ஜகத்-ப்ரணமே—நீங்கள் சர்வ-வியாபி என்பதால் அனைத்துமாவீர், எங்களுடைய தலைகள் சுகபோகங்களைத் தேடாமல், உங்களை வணங்க வேண்டும்; த்ருஷ்டி:—காணும் சக்தி; ஸதாம்—வைஷ்ணவர்களை; தர்சனே—காண்பதில்; அஸ்து—இவையனைத்தும் இவ்வாறு ஈடுபடட்டும்; பவத்-தனூனாம்—உங்களிலிருந்து வேறுபடாதவர்களான.
இனிமேல், எங்களுடைய வார்த்தைகள் உமது லீலைகளை மட்டுமே விவரிக்கட்டும். எங்கள் காதுகள் உமது பெருமைகளைக் கேட்பதில் ஈடுபடட்டும். எங்கள் கைகால்களும், மற்ற புலன்களும் உங்களை மகிழ்விக்கும் செயல்களில் ஈடுபடட்டும். எங்கள் மனங்கள் உமது தாமரைப் பாதங்களையே எப்பொழுதும் நினைக்கட்டும். இவ்வுலகிலுள்ள அனைத்தும் உமது வெவ்வேறு வடிவங்கள் என்பதால், எங்கள் தலைகள் உம்மை வணங்கட்டும். மேலும் எங்களுடைய கண்கள், உங்களிலிருந்து வேறுபடாத வைஷ்ணவர்களைக் காணட்டும்.
பதம் 10.10.39
ஸ்ரீ-சுக உவாச
இத்தம் ஸங்கீர்திதஸ் தாப்யாம் பகவான் கோகுலேஸ்வர:
தாம்னா சோலூகலே பத்த: ப்ரஹஸன் ஆஹ குஹ்யகௌ
ஸ்ரீசுக: உவாச—ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து பேசினார்; இத்தம்—இவ்வாறாக, முன்பு கூறியதுபோல்; ஸங்கீர்தித:—போற்றிப் புகழப்பட்டு; தாப்யாம்—இரு இளம் தேவர்களால்; பகவான்—பரமபுருஷர்; கோகுல-ஈஸ்வர:—கோகுலத்தின் ஈசுவரர் (அவர் ஸர்வ-லோக-மஹேஸ்வரர் என்பதால்); தாம்னா—கயிற்றால்; ச—மேலும்; உலூகலே—மரஉரலுடன்; பத்த:—கட்டப்பட்டு; ப்ரஹஸனன—புன்னகையுடன்; ஆஹ—கூறினார்; குஹ்யகௌ—இரு இளம் தேவர்களிடம்.
சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்: இரு இளம் தேவர்களும் பரமபுருஷரிடம் இவ்வாறு பிரார்த்தனை செய்தனர். பரமபுருஷரான ஸ்ரீ கிருஷ்ணர் நிச்சயமாக அனைவருக்கும் ஈசுவராகவும், கோகுலத்தின் தலைவரான கோகுலேஸ்வராகவும் இருந்தபோதிலும். அவர் கோபியர்களின் கயிறுகளால் மர உரலுடன் கட்டப்பட்டார். எனவே அவர் புன்னகையுடன் குபேரனின் மகன்களிடம் பின்வரும் வார்த்தைகளைக் கூறினார்.
பதம் 10.10.40
ஸ்ரீ-பகவான் உவாச
ஞாதம் மம புரைவைதத் ரிஷிணா கருணாத்மனா
யச் ஸ்ரீ-மதாந்தயோர் வாக்பிர் விப்ரம்சோ ‘னுக்ரஹ: க்ருத:
ஸ்ரீ-பகவான் உவாச—பரமபுருஷர் கூறினார்; ஞாதம்—அனைத்தும் தெரியும்; மம—எனக்கு; புரா—கடந்த காலத்தில்; ஏவ—உண்மையில்; ஏதத்—இச்சம்பவம்; ரிஷிணா—நாரத மாமுனிவரால்; கருணா-ஆத்மனா—அவர் உங்களிடம் மிகவும் அன்பு கொண்டிருந்ததால்; யத்—எது; ஸ்ரீ-மத-அந்தயோ:—பௌதிக ஐசுவரியத்தில் தீவிர பற்றுக் கொண்டு, குருடர்கள் ஆகிவிட்ட; வாக்பி:—வார்த்தைகளால் அல்லது சாபத்தால்; விப்ரம்ச:—இங்கு மருத மரங்களாகப் பிறக்கும் பொருட்டு, சுவர்க்க லோகத்திலிருந்து விழுந்து; அனுக்ரஹ: க்ருத:—இது அவரால் உங்களுக்குச் செய்யப்பட்ட சிறந்த அனுக்கிரகமாகும்.
பரமபுருஷர் கூறினார்: மாமுனிவரான நாரதர் கருணை மிக்கவர். அவரது சாபத்தின் மூலமாக, பௌதிக ஐசுவாரியத்தில் தீவிர பற்றுக் கொண்டு குருடர்களாகிவிட்ட உங்களிருவருக்கும் அவர் மிகச்சிறந்த உபகாரம் செய்துள்ளார். நீங்கள் உயர்கிரகமான சுவர்க்க லோகத்திலிருந்து விழுந்து மரங்களாகப் பிறந்தீர்கள் என்றாலும், அவரது பேரருளுக்குப் பாத்திரமானீர்கள். துவக்கத்திலிருந்தே இச்சம்பவங்களைப் பற்றிய அனைத்தையும் நானறிவேன்.
பதம் 10.10.41
ஸாதூனாம் ஸம-சித்தானம் ஸுதராம் மத்-க்ருதாத்மனாம்
தர்சனான் நோ பவேத் பந்த: பும்ஸோ ‘க்ஷ்ணோ: ஸவிதுர் யதா
ஸாதூனாம்—பக்தர்களின்; ஸம-சித்தானாம்—அனைவரிடமும் சமமாக நடந்து கொள்பவர்; ஸுதராம்—மிகையாக, முற்றிலுமாக; மத்-க்ருத-ஆத்மானாம்—எனக்குத் தொண்டு செய்ய உறுதி கொண்டு, முழுமையாகச் சரணடைந்தவர்களின்; தர்சனாத்—தரிசனத்தாலேயே; நோபவேத் பந்த:—எல்லா பௌதிக பந்தத்திலிருந்தும் விடுதலை; பும்ஸ:—ஒருவரின்; அக்ஷ்ணோ:—கண்களின்; ஸவிது: யதா—சூரியனுடன் நேருக்கு நேராக இருப்பதால்.
ஒருவன் சூரியனுடைய முன்னிலையில் இருக்கும்பொழுது, அவனுடைய கண்களுக்கு இருள் என்பதில்லை, அதுபோலவே, முழு உறுதியுடன் பகவானிடம் பூரணமாகச் சரணடைந்துள்ள ஒரு பக்தருடன் நேருக்கு நேராக ஒருவன் வரும்பொழுது, அவன் இனி பௌதிக பந்தத்திற்கு உட்பட்டிருக்க மாட்டான்.
பதம் 10.10.42
தத் கச்சதம் மத்-பரமெள நளகூவர ஸாதனம்
ஸஞ்ஜாதோ மயி பாவோ வாம் ஈப்ஸித: பரமோ ‘பவ:
தத் கச்சதம்—இப்பொழுது நீங்களிருவரும் திருப்பிச் செல்லலாம்; மத்-பரமௌ—என்னை வாழ்வின் இறுதி இலக்காக ஏற்றுக்கொண்ட; நளகூவர—நளகூவரனே, மணிகிரீவனே; ஸாதனம்—உங்கள் இல்லத்திற்கு; ஸஞ்ஜாத:—ஆழ்ந்திருப்பதால்; மயி—என்னில்; பாவ:—பக்தித் தொண்டு; வாம்—உங்களால்; ஈப்ஸித:—விரும்பப்பட்ட; பரம:—பரமான, மிகவுயர்ந்த, எல்லாப் புலன்களாலும் எப்பொழுதும் ஈடுபட்டுள்ள; அபவ:—அதிலிருந்து பெளதிக வாழ்விற்கு இழிவு ஏற்படாது.
நளகூவரனே, மணிகிரீவனே, நீங்களிருவரும் இப்பொழுது வீடு திரும்பலாம். எப்பொழுதும் என் பக்தித் தொண்டில் ஆழ்ந்திருக்க நீங்கள் விரும்புவதால், என்னிடம் அன்பையும், பாசத்தையும் வளர்த்துக் கொள்ள வேண்டுமென்று உங்களுடைய விருப்பம் நிறைவேற்றப்படும். இப்பொழுது அந்நிலையிலிருந்து நீங்கள் ஒருபோதும் விழமாட்டீர்கள்.
பதம் 10.10.43
ஸ்ரீ-சுக உவாச
இதி உக்தௌ தௌ பரிக்ரம்ய ப்ரணம்ய ச புன: புன: பத்தோலூகலம் ஆமந்த்ரிய ஜக்மதுர் திசம் உத்தராம்
ஸ்ரீ-சுக:உவாச—ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்; இதி உக்தௌ-பரமபுருஷரால் இவ்வாறு உத்தரவிடப்பட்டதும்; தௌ—நளகூவரனும், மணிகிரீவனும்; பரிக்ரம்ய—வலம் வந்து; ப்ரணம்ய—வணங்கி; ச—மேலும்; புன: புன:—மீண்டும்; பத்த-உலூகலம் ஆமந்த்ரிய—மர உரலுடன் கட்டப்பட்டிருந்த பரமபுருஷரிடம் அனுமதி பெற்று; ஜக்மது:—திரும்பிச் சென்றனர்; திசம் உத்தராம்—தங்கள் இலக்குகளை நோக்கி.
சுகதேவ கோஸ்வாமி கூறினார் பரமபுருஷர் இரு தேவர்களிடமும் இவ்வாறு பேசியபின், அவர்கள் மர உடலுடன் கட்டப்பட்டிருந்த பகவானை வலம் வந்து வணங்கினர். பிறகு பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் அனுமதி பெற்றபின் அவர்கள் தங்கள் இல்லங்களுக்குத் திரும்பினார்.
ஸ்ரீமத் பாகவதம், பத்தாம் காண்டத்தின் “மருத மரங்களின் சாப விமோசனம்” எனும் தலைப்பை கொண்ட பத்தாம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றது.