ஸாம முதல் வேதங்களை சங்கிலியாய் கட்டி
(ஊத்துக்காடு வேங்கடசுப்பையர்-ஊஞ்சல் பாடல்)
(1)
ஸாம முதல் வேதங்களை சங்கிலியாய் கட்டி
சரம் முத்து மாலைகளை சரம்சரமாய் கட்டி (2)
ஓம் என்னும் பிரணவத்தினை ஊஞ்சலாக வைத்து
உத்தமனுக்கு உத்தமனாய் ஆடி ஊஞ்சல் (2)
லாலி..லாலி..லாலி..
(2)
அண்ணாந்து கண்ணன் முகம் அழகினையும் காண
ஆனாலும் ஆசை எல்லாம் அந்தரங்கம் நாண(2)
தன்நார்ந்த வலை நிழலில் தலைவன் முகம் காண (2)
தந்திரங்கள் ராதை செய்தால் ஆடி ஊஞ்சல்..
லாலி..லாலி..லாலி..
(3)
ஒரு பிடி அவலுக்கென்று உள்ளம் தனை கொடுத்தான்
ஓயாமல் தூற்றும் சிசு பாலன் உயிர் கெடுத்தான் (2)
அரவம் முடி மேலிருந்து அபிநயங்கள் பிடித்தான்-இப்போ
அரங்கமா நகரில் வந்து காலை நீட்டி படுத்தான்..(2)
லாலி..லாலி..லாலி….
** ஹரே கிருஷ்ணா **

