13. சாமை இட்லி (முறை – 2)

தேவையான பொருட்கள்
- சாமை – 1 கப்
- ஜவ்வரிசி (சாகோ) – 1/4 கப்
- சோடா (பேக்கிங் சோடா) – அரை ஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
- தயிர் – தேவையான அளவு
செய்முறை
- ஜவ்வரிசி மற்றும் சாமையை தனித்தனியாக கொரகொரப்பாக பொடியாக்கிக் கொள்ளவும்.
- தயிர் மற்றும் உப்பு சேர்த்து இட்லி மாவு பதத்தில் கரைக்கவும்.
- 30 நிமிடம் ஊற வைத்து கொள்ளவும்.
- பின்னர் சோடா சேர்த்து நன்றாக கலக்கவும்.
- இட்லி தட்டுகளில் ஊற்றி, 10–12 நிமிடம் வேகவைத்து இட்லி செய்யவும்.

