பிரணாம் மந்திரம்
ஸ்ரீ குரு பிரணாம்
ஓம்’ அஜ்ஞான – திமிராந்த4ஸ்ய
ஜ்ஞானாஞ்ஜன – ஷ2லாகயா
சக்ஷுர் உன்-மீலிதம்’ யேன
தஸ்மை ஸ்ரீ – கு3ரவே நம:
நான் அறியாமையின் இருளில் பிறந்தவன், எனது கண்களை ஞான ஒளியால் திறந்த எனது ஆன்மீக குருவிற்கு எனது வணக்கங்களை சமர்ப்பிக்கின்றேன்.
ஸ்ரீல பிரபுபாத ப்ரணதி
நம ஓம்’ விஷ்ணு-பாதா3ய க்ரு’ஷ்ண-ப்ரேஷ்டா2ய பூ4தலே
ஸ்ரீமதே ப4க்திவேதா3ந்த-ஸ்வாமின் இதி நாமினே
நமஸ்தே ஸரஸ்வதி தேவே கௌர-வாணி-பிரசாரிணே
நிர்விசேஷ-ஷுன்யவாதி-பாஸ்சாத்ய-தேஷ-தாரிணே
பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கு மிகவும் பிரியமானவரும், அவரது தாமரைப் பாதங்களில் தஞ்சமடைந்தவருமான தெய்வத்திரு அ. ச. பக்திவேதாந்த ஸ்வாமி பிரபுபாதருக்கு எனது மரியாதை கலந்த வணக்கங்களை செலுத்துகின்றேன். மாயாவாதமும், சூன்யவாதமும் நிறைந்த மேற்கத்திய நாடுகளில் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் போதனைகளை கருணையோடு பிரச்சாரம் செய்கிறீர்கள். சரஸ்வதி கோஸ்வாமியின் சேவகரே, ஆன்மீக குருவே எங்களது மரியாதை கலந்த வணக்கங்களை உங்களுக்கு செலுத்துகின்றோம்.
பஞ்ச தத்துவ மந்திரம்
ஜய ஸ்ரீ-க்ருஷ்ண-சைதன்ய பிரபு4-நித்யானந்த3
ஸ்ரீ-அத்3வைத கதா3த4ர ஸ்ரீவாஸாதி3 -கௌ3ர-ப4க்த-வ்ருந்த3
ஸ்ரீ கிருஷ்ண சைதன்யர், பிரபு நித்யானந்தர், ஸ்ரீ அத்வைதர், கதாதரர், ஸ்ரீவாஸர் மற்றும் பக்தி நெறியிலுள்ளோர் அனைவருக்கும் எனது வணக்கங்கள்.
ஸ்ரீ கௌராங்க ப்ரணாம்
நமோ மஹா-வதா3ன்யாய
க்ருஷ்ண-ப்ரேம-ப்ரதா3ய தே
க்ருஷ்ணாய க்ருஷ்ண-சைதன்ய
நாம்னே கௌ3ர-த்விஷே நம:
ஓ கருணையின் அவதாரமே! க்ருஷ்ணராகிய நீங்கள் ஸ்ரீ கிருஷ்ண சைதன்ய மஹாப்பிரபுவாக தோன்றியுள்ளீர்கள். ஸ்ரீமதி ராதா ராணியின் தங்க நிறத்தை ஏற்றுள்ளீர்கள், கிருஷ்ணரின் தூய அன்பை கடல் அளவு விநியோகிக்கிறீர்கள், எங்களது மரியாதை கலந்த வணக்கங்களை உங்களுக்குச் செலுத்துகிறோம்.
ஸ்ரீ கிருஷ்ண பலராம பிரணாம்
நமோ பிரம்மன் ய தேவாய
கோ பிராமண ஹிதாய ச
ஜகத் தி தாய கிருஷ்ணாய
கோவிந்தாய நமோ நமஹ
உயர்ந்த இயல்புடைய இறைவனுக்கும், பசுக்கள் மற்றும் பிராமணர்களின் நண்பரும் பயனாளியும், முழு உலகத்தின் நண்பரும், இறைவனுமான ஸ்ரீ கிருஷ்ணருக்கும், ஸ்ரீ கோவிந்தருக்கும் மீண்டும் மீண்டும் வணக்கங்கள்.
ஸ்ரீ கிருஷ்ண பிரணாம்
ஹே க்ருஷ்ண கருணா-ஸிந்தோ4
தீ3ன-ப3ந்தோ4 ஜக3த் பதே
கோ3பேஷ2கோ3பிகா-காந்த
ராதா4-காந்த நமோ (அ)ஸ்து தே
ஓ என்னருமை கிருஷ்ணா, கருணைக் கடலே, பரிதவிப்பவரின் நண்பரும், படைப்பின் மூலமும் நீரே. கோபால சிறுவர்கள், கோபியர்களின் நாயகரும் ராதாராணியின் காதலரும் நீரே. உமக்கு எனது மரியாதைக்குரிய வணக்கங்கள்.
ஸ்ரீ ராதா பிரணாம்
தப்த-காஞ்சன-கௌ3ராங்கி3
ராதே4 வ்ருந்தா3வனேஷ2வரி
வ்ருஷபா4னு-ஸுதே தே3வி
ப்ரணமாமி ஹரி-ப்ரியே
விருந்தாவனத்தின் ராணியும், உருக்கிய பொன்னிற மேனியைக் கொண்டவருமான ராதாராணிக்கு வணக்கம். மன்னர் விருஷபானுவின் மகளான தாங்கள், பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கு மிகவும் பிரியமானவர். உங்களுக்கு எனது மரியாதைக்குரிய வணக்கங்கள்.
ஸ்ரீ வைஷ்ண பிரணாம்
வாஞ்சா-கல்பதருப்4யஷ்2 ச
க்ருபா-ஸிந்து4ப்4ய ஏவ ச
பதிதானாம் பாவனேப்4யோ
வைஷ்ணவேப்4யோ நமோ நம:
நிலையிழந்த ஆத்மாக்களிடம் கருணை மிக்கவர்களும், கற்பக விருட்சங்களைப் போன்று எல்லாரின் விருப்பங்களையும் பூர்த்தி செய்பவர்களுமான, பகவானின் வைஷ்ணவ பக்தர்கள் அனைவருக்கும் எனது மரியாதைக்குரிய வணக்கங்கள்.
ஹரே கிருஷ்ண மஹாமந்திரம்
ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண
க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம ஹரே ராம
ராம ராம ஹரே ஹரே

