d. உருளைக்கிழங்கு கத்திரிக்காய் சப்ஜி

தேவையான பொருட்கள்
- சின்ன கத்திரிக்காய் ஐந்து
- உருளைக்கிழங்கு – 4
- எண்ணெய்
- மிளகாய்த்தூள் இரண்டு டீஸ்பூன்
- உப்பு தேவையான அளவு
- மஞ்சள் ஒரு டீஸ்பூன்
- மேங்கோ பவுடர் இரண்டு டீஸ்பூன்
- எலுமிச்சைச்சாறு ஒரு டீஸ்பூன்
செய்முறை:
- உருளைக்கிழங்கை தோல் உரித்து, சிறிது பெரிய துண்டுகளாக கட் செய்து முக்கால்வாசி வேகவைத்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
- கத்திரிக்காவை நான்கு பாகமாக நீளவாக்கில் கட் செய்யவும்.
- கடாயில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு தாளித்து உருளைக்கிழங்கை சேர்த்துக் கிளரவும்.
- பின் அதில் வெட்டி வைத்த கத்தரிக்காயைச் சேர்த்து சிறிதுநேரம் மூடி வைத்து வேகவைக்கவும்.
- பின்னர் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து திரும்பவும் வதக்கி மூடி வைக்கவும்.
- அடிக்கடி அடிபிடிக்காதவாறு கிளறிவிடவும்.
- வெந்த பின் கரம் மசாலா, ஆம்சூர் பவுடர், மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து லேசாக பிரட்டி இறக்கவும்.

