பஞ்ச தத்துவ மந்திரம்
(ஜய) ஸ்ரீ-கிருஷ்ண-சைதன்ய பிரபு நித்யானந்த
ஸ்ரீ -அத்வைத க.தாதர ஸ்ரீவாஸாதி -கௌர-பக்த-வ்ருந்த
ஸ்ரீ கிருஷ்ண சைதன்யர், பிரபு நித்யானந்தர், ஸ்ரீ அத்வைதர், கதாதரர், ஸ்ரீவாஸர் மற்றும் பக்தி நெறியில் உள்ளோர் அனைவருக்கும் எனது வணக்கத்தை அர்ப்பணிக்கின்றேன்.
பொருளுரை
வழங்கியவர்: தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர்
ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு எப்பொழுதும் தமது சுய விரிவாகிய ஸ்ரீ நித்யானந்த பிரபு, தமது அவதாரமான ஸ்ரீ அத்வைத பிரபு, தமது அந்தரங்க சக்தியான ஸ்ரீ கதாதர பிரபு, மற்றும் தமது நடுத்தர சக்தியான ஸ்ரீவாஸ பிரபுவினால் சூழப்பட்டுள்ளார். அவர்களுக்கு மத்தியில் அவர் பரம புருஷ பகவானாகத் திகழ்கிறார். ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு எப்பொழுதும் இந்த இதர தத்துவங்களுடன் உள்ளார் என்பதை அறிய வேண்டும். எனவே, ஸ்ரீ-கிருஷ்ண-சைதன்ய பிரபு-நித்யானந்த ஸ்ரீ-அத்வைத கதாதர ஸ்ரீவாஸாதி – கௌர-பக்த-வ்ருந்த என்று நாம் உச்சரிக்கும்போது, ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவிற்கான நமது வணக்கம் முழுமை பெறுகின்றது.
கிருஷ்ண பக்தி இயக்கத்தின் பிரச்சாரகர்களாகிய நாம் இந்த பஞ்ச-தத்துவ மந்திரத்தை முதலில் உச்சரித்து நமது வணக்கத்தை ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவிற்குத் தெரிவிக்கின்றோம்: அதன் பிறகு, ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே என்று உச்சரிக்கின்றோம்.
ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை உச்சரிப்பதில் பத்து குற்றங்கள் நிகழலாம். ஆயினும், ஸ்ரீ-கிருஷ்ண-சைதன்ய பிரபு நித்யானந்த/ ஸ்ரீ-அத்வைத கதாதர ஸ்ரீவாஸாதி
கௌர-பக்த-வ்ருந்த, என்னும் பஞ்ச-தத்துவ மந்திர உச்சரிப்பில் அக்குற்றங்கள் ஏதும் கருத்தில் கொள்ளப்படுவதில்லை. ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு மஹா-வதா ன்யாவதார, மிகவும் வள்ளல் தன்மை வாய்ந்த அவதாரம் என்று அறியப்படுகிறார்; ஏனெனில், அவர் வீழ்ச்சியுற்ற ஆத்மாக்களின் அபராதங்களை (குற்றங்களை) பொருட்படுத்துவது இல்லை.
எனவே, மஹா மந்திரத்தின் (ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே / ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே) முழுப் பலனையும் அடைய வேண்டுமெனில், முதலில் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவிடம் தஞ்சமடைய வேண்டும்.
பஞ்ச-தத்துவ மந்திரத்தை உச்சரித்து அதன் பின்னர் ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். அது மிகவும் பயனுள்ளதாக அமையும்.
** ஹரே கிருஷ்ணா **

