நின்றந்த மயில் ஒன்று தாளங்கள் போட
(ஊத்துக்காடு வேங்கடசுப்பையர்)
(1)
நின்றந்த மயில் ஒன்று தாளங்கள் போட
கண்டந்த வண்டொன்று ஹ்ரீங்காரம் பாட
கன்றொன்று வாலினால் சாமரம் போட
கண்ணன் குழலூதி கானங்கள் பாட
கானங்கள் பாட கானங்கள் பாட
கோவிந்த கோவிந்த ராதா முகுந்தா
கோவிந்த கோவிந்த ராதா முகுந்தா
பக்த கோலாகலாசந்த பிருந்தாவனானந்த
கோபி ஜனாம் போதி சந்த்ரா
(2)
நீல ஒளி மேனியில் நின்றாடும் மாலை
பேர் உயர வானுறவுமான பசும் சோலை
கோலமொடு கோவிந்தன் குழலூதும் காலை
இல்லாது போகுமோ இங்கென்ன வேலை
இங்கென்ன வேலை இங்கென்ன வேலை
கோவிந்த கோவிந்த ராதா முகுந்தா
கோவிந்த கோவிந்த ராதா முகுந்தா
பக்த கோலாகலாசந்த பிருந்தாவனானந்த
கோபி ஜனா போதி சந்த்ரா
(3)
ஆங்கே இங்கே என்று அலையாதே மனமே
ஆழ்ந்து பார் உன்னுள்ளே பிருந்தா வனமே
ஆங்கே இங்கே என்று அலையாதே மனமே
ஆழ்ந்து பார் உன்னுள்ளே பிருந்தா வனமே
தங்களது கண்ணனின் பேர்பாடும் குணமே
தானாக தோன்றுமே சங்கையே இனிமேல்
கோவிந்த கோவிந்த ராதா முகுந்தா
கோவிந்த கோவிந்த ராதா முகுந்தா
பக்த கோலாகலாசந்த பிருந்தாவனானந்த
கோபி ஜனா போதி சந்த்ரா
கோபி ஜனா போதி சந்த்ரா
கோபி ஜனா போதி சந்த்ரா
கோவிந்த கோவிந்த ராதா முகுந்தா
கோவிந்த கோவிந்த ராதா முகுந்தா
ராதா முகுந்தா ராதா முகுந்தா ராதா முகுந்தா ராதா முகுந்தா
** ஹரே கிருஷ்ணா **

