முகுந்த மாலா ஸ்தோத்திரம்

ஸ்ரீ குலசேகரப் பெருமாள் வணக்கம்

கு4ஷ்யதே யஸ்ய நக3ரே ரங்க3யாத்ரா தி3நே தி3நே |
தமஹம் ஶிரஸா வந்தே3 ராஜாநம் குலஶேக3ரம் ||

எவருடைய பட்டணத்தில் தினந்தோறும் ஸ்ரீரங்க யாத்திரையானது பறைசாற்றப்படுகிறதோ அந்த குலசேகரர் என்னும் அரசரை நான் தலையால் வணங்குகிறேன்.


முகுந்த மாலா 1

ஶ்ரீவல்லபே4தி வரதே3தி த3யாபரேதி
4க்தப்ரியேதி ப4வலுண்டனகோவிதே3தி |
நாதே2தி நாக3ஶயனேதி ஜக3ன்னிவாஸேதி
ஆலாபிநம் ப்ரதிபத3ம் குரு மே முகுந்த3 || 1 ||

என் பிரபு முகுந்தரே! தங்களை ஸ்ரீ வல்லபர் (லக்ஷ்மிக்குப் பிரியமானவர்), வரதர் (வரங்களைத் தருபவர்), தயாபரர் (அபாரகருணைகொண்டவர்), பக்தப்பிரியர் (தன்னுடைய பக்தர்களிடம் பிரியமானவர்); பவலுண்டன கோவிதர் (பிறப்பு இறப்பு தொடரை மாயப்பவர்), நாதர் (முழுமுதற் கடவுள்), ஜகந்நிவாஸர் (பிரபஞ்சம் உறையும் நாதர்), நாகசயனர் (பாம்புப் படுக்கையில் படுத்திருப்பவர்) என்று தங்கள் நாமங்களை நான் எப்பொழுதும் ஒதுபவனாகட்டும்.


முகுந்த மாலா 2

ஜயது ஜயது தே3வோ தே3வகீநந்த3னோ(s)யம்
ஜயது ஜயது க்ருஷ்ணோ வ்ருஷ்ணிவம்ஶ-ப்ரதீ3ப: |
ஜயது ஜயது மேக4ஶ்யாமல꞉ கோமளாங்க3:
ஜயது ஜயது ப்ருத்2வீ-பா4ரநாஶோ முகுந்த3: || 2 ||

திருமதி தேவகிதேவியின் மைந்தன் என்றறியப்படும் முழுமுதற் கடவுளே போற்றி போற்றி! வ்ருஷ்ணி குலத்தின் பிரகாசமான வம்ஸ விளக்கே போற்றி! புது மேகம் போன்ற கருப்பு நிறம் யாருடைய மென்மையான உடலில் தெரிகிறதோ அந்த முழுமுதற் கடவுளே போற்றி! பூமியின் பாரங்களை அகற்றும் பிரபு முகுந்தரே போற்றி!


முகுந்த மாலா 3

முகுந்த3! மூர்த்4நா ப்ரணிபத்ய யாசே
4வந்த-மேகாந்த-மியந்த-மர்த்த2ம் |
அவிஸ்ம்ருதிஸ்-த்வச்-சரணாரவிந்தே3
4வே ப4வே மே(அ)ஸ்து ப4வத்-ப்ரஸாதா3த் || 3 ||

ஒ பிரபோ முகுந்தா! தங்கள் மாட்சிமைக்கு நான் தலை வணங்குகிறேன். இந்த என்னுடைய ஒரு ஆசையை நிறைவேற்றும்படி நான் தங்களை தாழ்மையுடன் வேண்டுகிறேன்; அதாவது மறுபிறவிகளில் தங்கள் கருணையினால் தங்கள் தாமரைத் திருவடியை எப்போதும் மறக்காமல் நினைத்தவாறே இருப்பேன்.


முகுந்த மாலா 4

நாஹம் வந்தே3 தவ சரணயோர் த்3வந்த்வ-மத்3வந்த்3வ-ஹேதோ꞉
கும்பீ4பாகம் கு3ருமபி ஹரே! நாரகம் நாபநேதும் |
ரம்யா ராமா ம்ருது3தநுலதா நந்த3நே நாபி ரந்தும்
பா4வே பா4வே ஹ்ருத3ய-ப4வநே பா4வயேயம் ப4வந்தம் || 4 ||

ஓ பிரபு ஹரியே, ஜட வாழ்க்கையின் இருமைகளினின்றோ அல்லது கும்பீபாக நரகத்தின் கடுமையான சோதனைகளின்றோ விடுதலையடைவதற்காக நான் தங்கள் தாமரைத் திருவடியை பிரார்த்திக்கவில்லை. சொர்க்க வனங்களில் வசிக்கும் மென்தோல் அழகு மங்கையரை அனுபவிக்கவோ எனக்கு நோக்கமில்லை. என் உள் இதயத்தில் பிறவிதோறும் தங்களயே நினைத்திருக்கும் பொருட்டு நான் தங்கள் தாமரைத் திருவடியை பிரார்த்திக்கிறேன்.


முகுந்த மாலா 5

நாஸ்தா24ர்மே ந வஸுநிசயே நைவ காமோப-போ4கே3
யத்3யத்34வ்யம் ப4வது ப4கவந்! பூர்வகர்மாநுரூபம் |
ஏதத் ப்ரார்த்2யம் மம ப3ஹுமதம் ஜந்மஜந்மாந்தரே(அ)பி
த்வத்-பாதா3ம்போ4ருஹ-யுக33தா நிஶ்சலா ப4க்திரஸ்து || 5 ||

ஓ என் பிரபோ! நான் சமயப்பற்றுடையவன் அல்லன், செல்வம் கொழிக்கவோ புலன் இன்பம் அனுபவிக்கவோ என்னிடம் பற்றில்லை. என் முன் வினைகளுக்கு ஏற்ப இவை நிச்சயம் வரத்தான் செய்யும், அப்படியே வரட்டும். ஆனால் இந்த மிக மிக உன்னத வரத்தை மட்டும் கோருகின்றேன்; பிறவி தோறும் நான் தங்கள் தாமரைத் திருவடிகளுக்கு குறையாத பக்தி சேவை செய்யவேண்டும்.


முகுந்த மாலா 6

தி3வி வா பு4வி வா மமாஸ்து வாஸ:
நரகே வா நரகாந்தக! ப்ரகாமம் |
அவதீ4ரித-ஶாரதா3ரவிந்தௌ3
சரணௌ தே மரணே(அ)பி சிந்தயாமி || 6 ||

நரகாசூரனை கொன்ற பிரபுவே! தங்கள் விருப்பப்படி நான் தேவர்கள் உலகிலோ, மனிதர்கள் வாழும் மண்ணுலகிலோ, அல்லது நரகத்திலோ இருக்கக்கடவது. நான் பிரார்த்திப்பது மரணம் சம்பவிக்கும் நேரத்தில் தங்களுடைய இரண்டு தாமரை பாதங்களை நினைக்க வேண்டும் என்பது. இப்பாதங்களின் அழகு சரத் பருவத்தில் பூக்கின்ற தாமரை மலரின் அழகையும் மிஞ்சுவது.


முகுந்த மாலா 7

க்ருஷ்ண! த்வதீ3ய-பத3பங்கஜ-பஞ்ஜராந்தம்
அத்3யைவ மே விஶது மாநஸ-ராஜஹம்ஸ꞉ |
ப்ராண-ப்ரயாண-ஸமயே கப2வாத-பித்தை꞉
கண்டா2-வரோத4ந-விதௌ4 ஸ்மரணம் குதஸ் தே || 7 ||

ஓ பிரபு கிருஷ்ணா, இந்த சமயத்தில் என்னுடைய மனம் என்ற அன்னப் பறவை தங்களுடைய தாமரை பாதத் தண்டுகளில் புக இடம் கொடுங்கள். மரண வேளையின் பொழுது எப்படித் தங்களை நினைப்பது என்னால் முடியும்? அந்த சமயத்தில் என்னுடைய தொண்டையை கபம், பித்தம், மூச்சு அடைக்காதா?


முகுந்த மாலா 8

சிந்தயாமி ஹரிமேவ ஸந்ததம்
மந்த3மந்த3-ஹஸிதாநநாம்பு3ஜம்
நந்த3கோ3ப-தநயம் பராத்பரம்
நாரதா3தி3-முனிப்ருந்த3-வந்தி3தம் || 8 ||

தன்னுடைய தாமரை முகத்தில் தோன்றும் மென் புன்சிரிப்பையுடைய பிரபு ஹரியை நான் எப்பொழுதும் நினைக்கிறேன். இடைக்குல நந்தரின் குமாரனான போதிலும் நாரதர் போன்ற பெரிய ரிஷிகள் வணங்கும் உயர்ந்த பரம்பொருள் அவர்.


முகுந்த மாலா 9

கரசரண-ஸரோஜே காந்திமந்நேத்ரமீநே
ஶ்ரமமுஷி பு4ஜவீசி-வ்யாகுலே(அ)கா34மார்கே3 |
ஹரிஸரஸி விகா3ஹ்யாபீய தேஜோஜலௌக4ம்
4வமரு-பரிகி2ந்ந꞉ கே23மத்3ய த்யஜாமி || 9 ||

ஜட வாழ்க்கை என்ற பாலைவனம் எனக்கு அலுத்துவிட்டது. ஆனால் நான் இன்று என்னுடைய துயரங்கள் அனைத்தையும் ஒதுக்கிதள்ளி பகவான் ஹரி என்ற குளத்தில் குதித்து அவருடைய மேனி எழில் என்ற தண்ணீரை தாராளமாகப் பருகுவேன். அந்த குளத்தில் உள்ள தாமரைகள் அவருடைய பாதங்கள்; அங்கேயுள்ள மீன்கள் அவருடைய ஒளிவீசும் கண்கள். அந்த குளத்தின் நீர் எல்லாவித சோர்வையும் போக்குகிறது. பகவானுடைய கரங்களின் இயக்கத்தால் அங்கே சிற்றலைகள் ஏற்படுகின்றன.


முகுந்த மாலா 10

ஸரஸிஜ-நயநே ஸஶங்க2-சக்ரே
முரபி4தி3 மா விரமஸ்வ சித்த! ரந்தும் |
ஸுக2தரமபரம் ந ஜாது ஜாநே
ஹரிசரண-ஸ்மரணாம்ருதேந துல்யம் || 10 ||

ஓ மனமே, அரக்கன் முரனை வதைத்தவரைப் பற்றிய நினைப்பினால் எழுகின்ற மகிழ்ச்சியை எப்போதும் தடுத்து நிறுத்தாதே. அவர் தாமரை கண்களும், சங்கும் சக்கரமும் தரித்தவர். உண்மையில் பிரபு ஹரியின திவ்ய பாதத்தை தியானிக்கும் போது ஏற்படுகின்ற அபார சந்தோஷத்தை தவிர நான் அறிந்தது வேறு எதுவும் இல்லை.


முகுந்த மாலா 11

மாபீ4ர்-மந்த3மநோ விசிந்த்ய ப3ஹுதா4 யாமீஶ்சிரம் யாதநா꞉
நாமீ ந꞉ ப்ரப4வந்தி பாபரிபவ꞉ ஸ்வாமீ நநு ஶ்ரீத4ர꞉ |
ஆலஸ்யம் வ்யபநீய ப4க்தி-ஸுலப4ம் த்4யாயஸ்வ நாராயணம்
லோகஸ்ய வ்யஸநாபநோத3நகரோ தா3ஸஸ்ய கிம் ந க்ஷம꞉ || 11 ||

ஓ மூட மனமே, யமராஜன் அளிக்கின்ற தண்டனைகளைப்பற்றி நினைத்து அஞ்சாதே. நீ புரிந்துள்ள பாவச் செயல்களான எதிரிகள் உன்னைத் தொட முடியுமா? உன்னுடைய தலைவர் பரம்பொருளான ஸ்ரீ லக்ஷ்மியின் கணவர் இல்லையா? எல்லா தயக்கத்தையும் ஒதுக்கிவிட்டு உன் நினைவுகளை பகவான் நாராயணர் மீது செலுத்துவாயாக. அவரை ஒருவர் பக்தி சேவையின் மூலம் எளிதில் அடைகிறார். எல்லா உலகத்தின் தொல்லைகளையும் போக்குகிற அவரால் தன்னுடைய தொண்டனுக்கு என்ன தான் செய்ய முடியாது!.


முகுந்த மாலா 12

4வஜலதி4-க3தாநாம் த்3வந்த்3வ-வாதாஹதாநாம்
ஸுதது3ஹித்ரு-களத்ர-த்ராண-பா4ரார்தி3தாநாம் |
விஷம-விஷய-தோயே மஜ்ஜதா-மப்லவாநாம்
4வது ஶரணமேகோ விஷ்ணுபோதோ நராணாம் || 12 ||

இந்த பிறப்பு இறப்பு என்ற பெருங்கடலில் உள்ள மக்கள் ஜட இருமைகள் என்ற காற்று வீசி திணறச்செய்யப்படுகிறார்கள். அவர்கள் புலனின்பம் என்ற ஆபத்தான தண்ணீரில் கரை சேர்வதற்கு படகொன்றும் இல்லாமல் தத்தளிக்க அவர்களுக்கு தங்கள் பிள்ளைகள், பெண்கள், மனைவிமார் ஆகியவர்களை பாதுகாக்க வேண்டிய தேவை அவர்களை வாட்டுகிறது. பிரபு விஷ்ணு என்ற படகு மட்டுமே அவர்களைக் காப்பாற்ற முடியும்.


முகுந்த மாலா 13

4வஜலதி4-மகா34ம் து3ஸ்தரம் நிஸ்தரேயம்
கத2மஹமிதி சேதோ மா ஸ்ம கா3꞉ காதரத்வம் |
ஸரஸிஜத்3ருஶி தே3வே தாவகீ ப4க்திரேகா
நரகபி4தி3 நிஷண்ணா தாரயிஷ்யத்வஶ்யம் || 13 ||

ஓ மனமே, நான் எப்படி இந்த ஆழமில்லாத மற்றும் கடக்க முடியாத சம்சார கடலைக் கடப்பேன் என்று கவலைப்பட்டு நினைத்து குழம்ப வேண்டாம். உங்களை காப்பாற்றுபவர் ஒருவர் உண்டு; அவரே பக்தி. அந்த பக்தி என்ற மங்கையை நரகாசூரனை வதைத்தவரும் கமலக்கண்ணனுமான பகவானுக்கு அர்ப்பணித்தால் அவர் உங்களை தவறாமல் சம்சாரக் கடலை கடந்து அழைத்துச் செல்வாள்.


முகுந்த மாலா 14

த்ருஷ்ணாதோயே மத3ந-பவநோத்3தூ4த-மோஹோர்மி-மாலே
தா3ராவர்தே தநய-ஸஹஜ-க்33ராஹ-ஸங்கா4குலே ச |
ஸம்ஸாராக்2யே மஹதி ஜலதௌ4 மஜ்ஜதாம் நஸ்த்ரிதா4மந்
பாதா3ம்போ4ஜே வரத34வதோ ப4க்திநாவம் ப்ரயச்ச2 || 14 ||

மூவுலக பகவானே, சம்சாரம் என்ற பிரம்மாண்டக் கடலில் நாங்கள் மூழ்கிக்கொண்டிருக்கிறோம். இந்த சம்சாரக் கடல் லௌகித வேட்கை என்ற தண்ணீரால் நிரம்பியது. இக்கடலில் மாயை என்ற அலைகள் காமம் என்ற காற்றினால் வீசி கலக்கப்படுகின்றன. இக்கடலில் மனைவியர் என்ற நீர் சுழற்சியும், மைந்தர்கள் மற்றும் சகோதரர்கள் என்று அழைக்கப்படும் சுறாமீன் கூட்டங்களும் பிற கடற்பிராணிகளும் நிறைந்துள்ளன. வரங்களை அள்ளித் தருபவரே, தயவு செய்து எனக்கு தங்களுடைய தாமரைத் திருவடி என்ற பக்திப் படகில் ஓர் இடம் கொடுங்கள்.


முகுந்த மாலா 15

மாத்3ராக்ஷம் க்ஷீணபுண்யாந் க்ஷணமபி ப4வதோ ப4க்திஹீநாந் பதா3ப்3ஜே
மாஶ்ரௌஷம் ஶ்ராவ்யப3ந்த4ம் தவ சரிதமபாஸ்யாந்ய தா3க்2யாநஜாதம் |
மாஸ்மார்ஷம் மாத4வ த்வாமபி பு4வனபதே! சேதஸாபஹ்நுவாநாந்
மாபூ4வம் த்வத்ஸபர்யா-வ்யதிகர-ரஹிதோ ஜந்மஜந்மாந்தரே(அ)பி || 15 ||

ஓ மாதவா, யாருடைய புண்ணியங்கள் தீர்ந்து போய் தங்களுடைய தாமரைப் பாதங்களுக்கு பக்தி செய்வதில்லையோ அவர்களை நான் கடைக்கண்ணாலும் பார்க்காமல் இருப்பேனாக. தங்களுடைய திவ்யமான லீலா வர்ணனைகளை கேட்பதிலிருந்து மனம் சிதறி பிற விஷயங்களில் ஆவல் கொள்ளாமல் என்னை இருக்கச் செய்யவும். ஜகந்நாதரே, தங்களைப் பற்றி நினைக்காமல் இருப்பவர்களிடம் நான் கவனம் செலுத்தாமல் இருப்பேனாக. பிறவிதோறும் தாழ்மையான வழியானாலும் தங்களுக்கு சேவைப் புரிந்து கிடப்பேனாக.


முகுந்த மாலா 16

ஜிஹ்வே! கீர்த்தய கேஶவம் முரரிபும் சேதோ! ப4ஜ ஶ்ரீத4ரம்
பாணித்3வந்த்3வ! ஸமர்சயாச்யுதகதா2꞉ ஶ்ரோத்ரத்3வய த்வம் ஶ்ருணு |
க்ருஷ்ணம் லோகய லோசநத்3வய! ஹரேர்-க3ச்சா2ங்க்3ரியுக்3மாலயம்
ஜிக்4ர க்4ராண! முகுந்த3பாத3-துளஸீம் மூர்த்த4ந்! நமாதோ4க்ஷஜம் || 16 ||

நாவே, பிரபு கேசவரின் பெருமையை துதிப்பாயாக. மனமே முரனின் எதிரியை வழிப்படுவாயாக. கரங்களே, ஸ்ரீநாதரை சேவை செய்து இருப்பாயாக. காதுகளே, பிரபு அச்சுயுதரைப் பற்றிய கதைகளை கேடபாயாக. மூக்கே முகுந்த பிரபுவின் திருவடி துளசி தளங்களை நுகர்வாயாக. தலையே, பிரபு அதோக்ஷஜர் முன் குனிந்து வணங்குவாயாக.


முகுந்த மாலா 17

ஹே லோகா꞉ ஶ்ருணுத ப்ரஸூதிமரணவ்யாதே4ஶ்-சிகித்ஸாமிமாம்
யோக3ஜ்ஞா꞉ ஸமுதா3ஹரந்தி முநயோ யாம் யாஜ்ஞவல்க்யாத3ய꞉ |
அந்தர் ஜ்யோதிரமேயமேக-மம்ருதம் க்ருஷ்ணாக்2யம் ஆபீயதாம்
தத்பீதம் பரமௌஷத4ம் விதநுதே நிர்வாணமாத்யந்திகம் || 17 ||

ஓ மக்களே! பிறப்பு இறப்பு என்ற நோயின் சிகிச்சைப் பற்றி தயவு செய்து கேளுங்கள். அது கிருஷ்ணருடைய நாமம். ஞானத்தில் ஊறிய யாக்ஞவல்க்யரும், பிற தேர்ந்த யோகிகளும் பரிந்துரைத்த இந்த வரம்பில்லாத நிரந்தரமான அகத்தே உள்ள விளக்கு மிகச்சிறந்த மருந்தாகும். இந்த மருந்தை உண்டதும் இறுதி முக்தி கிடைக்கிறது. சற்றே அதைப் பருகவும்!


முகுந்த மாலா 18

ஹே மர்த்யா꞉ பரமம் ஹிதம் ஶ்ருணுத வோ வக்ஷ்யாமி ஸங்க்ஷேபத꞉
ஸம்ஸாரார்ணவ-மாபதூ3ர்மி-ப3ஹுளம் ஸம்யக் ப்ரவிஶ்ய ஸ்தி2தா꞉ |
நாநா-ஜ்ஞாந-மபாஸ்ய சேதஸி நமோ நாராயணாயேத்யமும்
மந்த்ரம் ஸப்ரணவம் ப்ரணாமஸஹிதம் ப்ராவர்தயத்4வம் முஹு꞉ || 18 ||

மடியக்கூடிய மனிதர்களே, நீங்கள் பௌதிக வாழ்க்கை என்ற கடலில் முழுமையாக மூழ்கியிருக்கிறீர்கள். இந்த கடலில் துன்ப அலைகள் நிறைந்துள்ளன. அதி உன்னத நன்மையை அடைவது எப்படி என்பதை நான் சுருக்கமாக சொல்லக் கேளுங்கள். அறிவை அடையக் கூடிய உங்கள் முயற்சிகள் அனைத்தையும் சற்றே ஒதுக்குங்கள். அதற்குப் பதிலாக தொடர்ந்து ஓம் நமோ நாராயணா என்ற மந்திரத்தை ஓதி பகவானிடம் சிரம் தாழ்த்துங்கள்.


முகுந்த மாலா 19

ப்ருத்2வீ ரேணுரணு꞉ பயாம்ஸி கணிகா꞉ ப2ல்கு3-ஸ்பு2லிங்கோ3(அ)லகு4 :
தேஜோ நிஶ்ஶ்வஸநம் மருத் தநுதரம் ரந்த்4ரம் ஸுஸூக்ஷ்மம் நப4꞉ |
க்ஷுத்ரா ருத்3ர-பிதாமஹ-ப்ரப்4ருதய꞉ கீடா꞉ ஸமஸ்தாஸ்-ஸுரா꞉
த்3ருஷ்டே யத்ர ஸ தாவகோ விஜயதே பூ4மாவதூ4தாவதி4꞉ || 19 ||

நம்முடைய இரட்சகரை பார்த்ததும் இந்த பூமியே தூசிக்கு சமானமாகிறது; கடல் நீர் தண்ணீர்த் துளிகளாகிறது; ஒட்டுமொத்த தீ சிறு பொறியாகிறது; காற்று இலேசாகக் கேட்கும் மூச்சாகிறது; அண்டை வெளி சிறு துவாரமாகிறது. சிவபெருமானும், பாட்டனார் பிரம்மன் போன்ற பெருந்தேவர்களும் அற்பமாகிறார்கள். சிறு தேவர்கள் சிறு பூச்சிகளைப் போல் ஆகிறார்கள். உண்மையிலேயே பகவானுடைய உள்ளங்கால் மண்துளியும் எல்லோரையும் வெல்கிறது.


முகுந்த மாலா 20

3த்3தே4நாஞ்ஜலிநா நதேந ஶிரஸா கா3த்ரை꞉ ஸரோமோத்33மை꞉
கண்டே2ந ஸ்வரக3த்33தே3ந நயநேநோத்3கீர்ண-பா3ஷ்பாம்பு3நா |
நித்யம் த்வச்சரணாரவிந்த3-யுக3ள-த்4யாநாம்ருதாஸ்வாதி3நாம்!
அஸ்மாகம் ஸரஸீருஹாக்ஷ! ஸததம் ஸம்பத்3யதாம் ஜீவிதம் || 20 ||

தாமரைக் கண்ணா, எங்கள் ஜீவனத்தைக் காப்பாற்றுங்கள். நாங்கள் தங்கள் தாமரை திருவடியை தியானம் செய்வது என்ற அமிர்தத்தை எப்பொழுதும் பருகுகிறோம். கூப்பிய கரங்களுடன் பிரார்த்தனை செய்து, தலை குனிந்து, இன்ப மகிழ்ச்சியில் ரோமக் கால்கள் குத்திட்டு நிற்க, தொண்டை அடைக்க, கண்கள் நீர் சொரிந்து நிற்கிறோம்.


முகுந்த மாலா 21

ஹே கோ3பாலக! ஹே க்ருபாஜலநிதே4! ஹே ஸிந்து4கன்யாபதே!
ஹே கம்ஸாந்தக! ஹே க3ஜேந்த்3ரகருணாபாரீண! ஹே மாத4வ! |
ஹே ராமாநுஜ! ஹே ஜக3த்த்ரயகு3ரோ! ஹே புண்ட3ரீகாக்ஷ! மாம்
ஹே கோ3பீஜநநாத2 பாலய பரம் ஜாநாமி ந த்வாம் விநா || 21 ||

இடையர்க்குல சிறுவனே! கருணைக்கடலே! அலைமகள் லட்சுமியின் நாதரே! கம்சனை அழித்தவரே! கஜேந்திரனுக்கு கருணை செய்தவரே! மாதவா! ராமனின் தம்பியே! மூவுலகங்களுக்கும் குருவே! தாமரை கண்களையுடையவரே! கோபிகைகளின் நாதரே! தங்களைத் தவிர வேறு ஒருவரையும் நான் அறியேன். தயவுசெய்து என்னைக் காப்பாற்றுங்கள்.


முகுந்த மாலா 22

4க்தாபாய-பு4ஜங்க3-காருட3மணிஸ்-த்ரைலோக்ய-ரக்ஷாமணி꞉
கோ3பீலோசந-சாதகாம்பு33மணி꞉ ஸௌந்த3ர்யமுத்3ராமணி꞉ |
ய꞉ காந்தாமணி-ருக்மிணீ-க4நகுச-த்3வந்த்3வைக-பூ4ஷாமணி꞉
ஶ்ரேயோ தே3வஶிகா2மணிர்-தி3ஶது நோ கோ3பால-சூடா3மணி꞉ || 22 ||

கருட வாகனத்தில் பயணிக்கும் மணி அவர். கருடன் பகவானுடைய பக்தர்களை ஏற்றிச் செல்பவர். அவர் மூன்று உலகங்களையும் பாதுகாக்கின்ற மந்திர மணி, கோபியரின் சாதகப் பறவை போன்ற கண்களை வசீகரிக்கின்ற மணி போன்ற மேகம். கண்ணியமாக நடையுடை பாவனை கொண்டவர்களில் அவர் மணி. இராணி ருக்மிணியின் அகன்ற மார்பகங்களில் தவழ்கின்ற ஒரே மணி அவர், ருக்மிணியே பகவானின் பத்தினியருள் மணி போன்றவள். தெய்வங்களுள் சிகாமணியான அவரும், ஆயர்குலத்தில் மிக மிகச் சிறந்தவருமான அவர் மிக உயர்ந்த வரத்தைத் தரட்டும்.


முகுந்த மாலா 23

ஶத்ருச்சே2தை3கமந்த்ரம் ஸகலமுபநிஷத்3-வாக்ய-ஸம்பூஜ்ய-மந்த்ரம்
ஸம்ஸாரோத்தார-மந்த்ரம் ஸமுபசிததமஸ்꞉ ஸங்க4-நிர்யாண-மந்த்ரம் |
ஸர்வைஶ்வர்யைக-மந்த்ரம் வ்யஸந-பு4ஜக3-ஸந்த3ஷ்ட-ஸந்த்ராண-மந்த்ரம்
ஜிஹ்வே! ஶ்ரீக்ருஷ்ண-மந்த்ரம் ஜபஜப ஸததம் ஜன்ம-ஸாப2ல்ய-மந்த்ரம் || 23 ||

நாக்கே, ஸ்ரீ கிருஷ்ணருடைய நாமங்கள் அடங்கிய மந்திரத்தை எப்பொழுதும் தயவு செய்து ஜபிப்பாயாக, விரோதிகளை வீழ்த்துவதற்கான ஒரே மந்திரம் இதுவே. உபநிஷதங்களின் ஒவ்வொரு வார்த்தையும் வணங்கிய மந்திரம்; சம்சாரத்தை வேரோடு சாய்க்கின்ற மந்திரம்; அறியாமை என்ற அந்தகாரத்தை அகற்றுகின்ற மந்திரம்; அழியாச் செல்வத்தை அடைவதற்கான மந்திரம்; உலகத்தொல்லை என்ற நச்சரவத்தால் தீண்டப்பட்டவர்களை சொஸ்தப்படுத்தும் மந்திரம்; பெற்ற பிறவியை வெற்றிகரமாக்கிக் கொள்ளும் மந்திரம்.


முகுந்த மாலா 24

வ்யாமோஹ ப்ரஶமௌஷத3ம் முநிமநோவ்ருத்தி ப்ரவ்ருத்யௌஷத4ம்
தை3த்யேந்த்3ரார்த்திகரௌஷத4ம் த்ரி-பு4வனே ஸஞ்ஜீவநை கௌஷத4ம் |
4க்தாத்யந்தஹிதௌஷதம் ப4வப4யப்ரத்4வம்ஸநை கௌஷத4ம்
ஶ்ரேய꞉ப்ராப்திகரௌஷத4ம் பிப3 மந꞉ ஶ்ரீக்ருஷ்ண தி3வ்யௌஷத4ம் || 24 ||

மனமே, ஸ்ரீ கிருஷ்ணருடைய புகழ்ந்துரைகள் என்ற திவ்ய மருந்தை சற்றே பருகுவாயாக. மனக்குழப்பம் என்ற வியாதியை குணப்படுத்தக்கூடிய பூர்ணமருந்து அது. முனிவர்களை ஊக்கப்படுத்தி தியானத்தில் மனதைச் செலுத்தச் செய்யும் மருந்து அது. தைத்ய அரக்கர்களை வாட்டுகின்ற மருந்து அது. மூன்று உலகங்களையும் பிழைக்க வைக்கக்கூடிய ஒரே மருந்து அது. பரமபுருஷ பகவானின் பக்தர்களுக்கு அருளை அள்ளித்தரும் அருமருந்து அது. இன்னும் சொல்லப்போனால் மனித வாழ்க்கை என்ற ஒருவரின் அச்சத்தைப் போக்கி அவரை பரம நன்மை பெறச் செய்யக் கூடிய மருந்து அது.


முகுந்த மாலா 25

ஆம்நாயாப்4யஸநாந்யரண்யருதி3தம் வேத3வ்ரதாந்யந்வஹம்
மேத3ஶ்சே232லாநி பூர்தவித4ய꞉ ஸர்வே ஹுதம் ப4ஸ்மநி |
தீர்தா2நாமவகா3ஹநாநி ச க3ஜஸ்நாநம் விநா யத் பத3
த்3வந்த்3வாம்போ4ருஹ-ஸம்ஸ்ம்ருதீம் விஜயதே தே3வ꞉ ஸ நாராயண꞉ || 25 ||

பிரபு நாராயணருக்கு எல்லாப் புகழும்! அவருடைய தாமரைத் திருவடியை நினைத்துப் பார்க்காமல் வேதங்களை உச்சரிப்பது கானகத்தில் கத்துவது போலாகும். வேதங்களில் கூறப்பட்டுள்ள கடுமையான விரதங்களை அனுஷ்டிப்பது உடல் எடையை குறைப்பதைத் தவிர வேறொன்றுமில்லை. சாம்பலில் நெய் ஊற்றுவது போன்றது உரிய பக்திச் செயல்களை புரிவது. புண்ணியத்தலங்களில் நீராடுவது யானையின் குளியலையும்விட கீழானது.


முகுந்த மாலா 26

ஶ்ரீமந் நாம ப்ரோச்ய நாராயணாக்2யம்
கே ந ப்ராபுர் வாஞ்சி2தம் பாபிநோ (அ)பி |
ஹா ந꞉ பூர்வம் வாக் ப்ரவ்ருத்தா ந தஸ்மிந்
தேந ப்ராப்தம் க3ர்ப்ப4வாஸாதி3 து3க்க2ம் || 26 ||

நாராயணன் என்ற திருநாமத்தை உரக்க ஓதிய யார்தான் தன்னுடைய ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ளாமல் போனார்? அந்தோ நாம் மட்டும் நம்முடைய பேச்சுத்தன்மையை இந்த வழியில் பயன்படுத்தவில்லை. ஆதலினால் கருவில் வாசம் செய்கின்ற துயரங்களை அனுபவிக்க நேர்ந்தது.


முகுந்த மாலா 27

மஜ்ஜந்மந꞉ ப2லமித3ம் மது4கைடபா4ரே
மத்ப்ரார்த்த2நீய மத3நுக்3ரஹ ஏஷ ஏவ |
த்வத்3 ப்4ருத்ய-ப்4ருத்ய-பரிசாரக ப்4ருத்ய-ப்4ருத்ய-
ப்4ருத்யஸ்ய ப்4ருத்ய இதி மாம் ஸ்மர லோகநாத2! || 27 ||

மது மற்றும் கைடபரை வீழத்தியவரே, பிரபஞ்ச நாதரே என்னைத் தங்கள் ஊழியனின் ஊழியனின் ஊழியனின் ஊழியனின் ஊழியனின் ஊழியனின் ஊழியனாகக் கருதுவீராக, இதுவே தாங்கள் என்பால் கொண்ட மிக மிக உயர்ந்த கருணையும், என்னுடைய வாழ்க்கையின் பூர்ணமும் ஆகும்.


முகுந்த மாலா 28

நாதே2 ந꞉ புருஷோத்தமே த்ரிஜக3தாமேகாதி4பே சேதஸா
ஸேவ்யே ஸ்வஸ்ய பத3ஸ்ய தா3தரி ஸுரே நாராயணே திஷ்ட2தி |
யம் கஞ்சித் புருஷாத4மம் கதிபயக்3ராமேஶமல்பார்த்த23ம்
ஸேவாயை ம்ருக3யாமஹே நரமஹோ மூடா வராகா வயம் || 28 ||

மூவுலகங்களையும் ஆளுபவரும், தியானத்தின் மூலம் சேவை செய்யப்படக் கூடியவரும், தன்னுடைய சொந்த இருப்பிடத்தை மகிழ்ச்சியுடன் பங்குப்போட்டுக் கொள்பவருமான நமது எஜமானரான முழுமுதற் கடவுள் நாராயணர் நம் முன்னே தோன்றியிருக்கிறார். ஆயினும் நாம் சில கிராமங்களுக்கு அதிபதியான சின்ன எஜமானரையும், சில தாழ்ந்த மனிதனையும் சேவை செய்யக் கெஞ்சுகிறோம். இவர்கள் அற்ப அளவில் மட்டுமே நமக்கு நன்மை செய்யக் கூடியவர்கள் அந்தோ, என்னே நமது மடமை!


முகுந்த மாலா 29

மத3ன பரிஹர ஸ்தி2திம் மதீ3யே
மநஸி முகுந்த3-பதா3ரவிந்த3-தா4ம்நி |
ஹர-நயந-க்ருஶாநுநா க்ருஶோ(அ)ஸி
ஸ்மரஸி ந சக்ரபராக்ரமம் முராரே꞉ || 29 ||

மன்மதா, என் மனதில் உள்ள வீட்டைவிட்டு வெளியேறு. இந்த வீடு பிரபு முகுந்தரின் தாமரைத் திருவடி வீடாகும். நீ ஏற்கனவே சிவபெருமானின் பயங்கரப் பார்வையால் எரிந்து சாம்பலானாய். அப்படியிருக்கையில் பகவான் முராரியின் சக்கரத்தின் மகிமையை ஏன் மறந்தாய்?.


முகுந்த மாலா 30

தத்த்வம் ப்3ருவாணாநி பரம் பரஸ்மாத்
மது4 க்ஷரந்தீவ ஸதாம் ப2லாநி |
ப்ராவர்தய ப்ராஞ்ஜலிரஸ்மி ஜிஹ்வே
நாமாநி நாராயண கோ3சராணி || 30 ||

என் பிரிய நாக்கே, நான் உன் முன நின்று, கைக்கூப்பி, ஸ்ரீநாராயணரின் நாமங்களை உச்சரிக்குமாறு கெஞ்சுகிறேன். உயர்ந்த மெய்ப்பொருளை விளக்குகின்ற இந்த நாமங்கள் ஏதோ தேன் சொட்டுவது போல மகிழ்ச்சியைத் தருகின்றன.


முகுந்த மாலா 31

இத3ம் ஶரீரம் பரிணாம-பேஶலம்
பதத்யவஶ்யம் ஶ்லத2-ஸந்தி4-ஜர்ஜரம் |
கிமௌஷதை4꞉ க்லிஶ்யஸி மூட4 து3ர்மதே
நிராமயம் க்ருஷ்ண-ரஸாயநம் பிப3 || 31 ||

இந்த உடலில் அழகு நிலையில்லாதது. நூற்றுக்கணக்கான மூட்டுக்கள் முதுமையால் செயலிழந்த நிலையில் இந்த உடல் மரணத்திற்கு வயப்பட வேண்டும். எனவே மதிகெட்ட மூடரே எதற்காக மருந்து கேட்கிறீர்கள்? கிருஷ்ணர் என்ற அருமருந்தைப் பருகுங்கள்.


முகுந்த மாலா 32

தா3ரா வாராகர-வரஸுதா தே தநூஜோ விரிஞ்சி꞉
ஸ்தோதா வேத3ஸ்தவ ஸுரக3ணோ ப்4ருத்யவர்க3꞉ ப்ரஸாத3꞉ |
முக்திர் மாயா ஜக33விகலம் தாவகீ தே3வகீ தே
மாதா மித்ரம் ப3லரிபுஸுதஸ்-த்வய்யதோ(அ)ன்யன்ன ஜாநே || 32 ||

தங்களுடைய பத்தினி சமுத்திர இராஜனின் மகள்; தங்களுடைய மைந்தன் பிரம்ம தேவர்; வேதங்கள் தங்களைப் புகழும் துதிப்பாடல்; தேவர்கள் தங்களுடைய தொண்டர்களின் சமூகத்தில் அடங்குவர், முக்தி என்பது தாங்கள் தரும் வரம், இந்த முழு உலகமே தங்களுடைய மாயசக்தியின் தோற்றம். திருமதி தேவகி தங்களுடைய அன்னை; இந்திரனின் மைந்தன் அர்ஜுனன் தங்களுடைய நண்பன். இந்தக் காரணங்களால் எனக்கு தங்களைத் தவிர வேறு யாரிடமும் பற்றில்லை.


முகுந்த மாலா 33

க்ருஷ்ணோ ரக்ஷது நோ ஜக3த்த்ரயகு3ரு꞉ க்ருஷ்ணம் நமஸ்யாம்யஹம்
க்ருஷ்ணே நாமரஶத்ரவோ விநிஹதா꞉ க்ருஷ்ணாய துப்4யம் நம꞉ |
க்ருஷ்ணாதே3வ ஸமுத்தி2தம் ஜக3தி33ம் க்ருஷ்ணஸ்ய தா3ஸோ(அ)ஸ்ம்யஹம்
க்ருஷ்ணே திஷ்ட2தி ஸர்வமேதத3கி2லம் ஹே க்ருஷ்ண! ரக்ஷஸ்வ மாம் || 33 ||

மூன்று உலகங்களுக்கும் திவ்ய நாயகனான ஸ்ரீ கிருஷ்ணர் நம்மை இரட்சிக்கட்டும். தொடர்ந்து கிருஷ்ணருக்கு தலை வணங்குங்கள். கிருஷ்ணர் நம்முடைய விரோதிகளை அழித்தவர். கிருஷ்ணருக்கு வந்தனங்கள். கிருஷ்ணரிடமிருந்தே இந்த உலகம் தோன்றியிருக்கிறது. நான் கிருஷ்ணரின் தொண்டன். இந்த முழு பிரபஞ்சமும் கிருஷ்ணரில் அடங்கியிருக்கிறது. கிருஷ்ணா, தயவுசெய்து எங்களைக் காப்பாற்றுங்கள்!.


முகுந்த மாலா 34

தத்த்வம் ப்ரஸீத343வந் குரு மய்யநாதே2
விஷ்ணோ! க்ருபாம் பரமகாருணிக꞉ கி2ல த்வம் |
ஸம்ஸார-ஸாக3ர-நிமக்3ந-மநந்த தீ3நம்
உத்34ர்த்துமர்ஹஸி ஹரே! புருஷோத்தமோ(அ)ஸி || 34 ||

ஆதி பகவானான விஷணுவே, தாங்கள் மிக மிக தயை கொண்டவர். இப்போது எனக்கு தங்கள் கருணையைக் காட்டுங்கள். இந்த ஏதுமறியா ஆத்மாவிற்கு அருள் புரியுங்கள். முடிவில்லாதவரே, சம்சாரம் என்ற கடலில் மூழ்குகின்ற இந்தக் கேடுகெட்ட ஆத்மாவை கைகொடுத்துத் தூக்குங்கள். ஹரியே, தாங்களே முழுமுதற் கடவுள்.


முகுந்த மாலா 35

நமாமி நாராயண-பாத3பங்கஜம்
கரோமி நாராயண-பூஜநம் ஸதா3 |
வதா3மி நாராயண-நாம நிர்மலம்
ஸ்மராமி நாராயண-தத்த்வமவ்யயம் || 35 ||

நான் எப்பொழுதும் ஸ்ரீமந்நாராயணன் திருவடிகளையே வணங்குகிறேன்; அவன் பூஜையையே செய்கிறேன். அவன் திருநாமத்தையே ஜெபிக்கிறேன். நாராயணன் என்னும் தத்துவப் பொருளையே நினைக்கிறேன்.


முகுந்த மாலா 36 – 37

ஶ்ரீநாத2 நாராயண வாஸு3தேவ
ஶ்ரீ க்ருஷ்ண ப4க்தப்ரிய சக்ரபாணே |
ஶ்ரீ பத்மநாபா4ச்யுத கைடபா4ரே
ஶ்ரீராம பத்மாக்ஷ ஹரே முராரே || 36 ||

அநந்த வைகுண்ட2 முகுந்த3 க்ருஷ்ண
கோ3விந்த3 தா3மோத3ர மாத4வேதி |
வக்தும் ஸமர்தோ2(அ)பி ந வக்தி கஶ்சித்
அஹோ ஜநாநாம் வ்யஸநாபி4முக்2யம் || 37 ||

ஸ்ரீநாதா, நாராயணா, வாஸுதேவா, தெய்வீக கிருஷ்ணா, தங்கள் பக்தர்களின் தோழரே! சக்ரபாணியே, பத்மநாபா, அச்யுதா, கைடபாரியே, இராமா, பத்மாக்ஷா, ஹரி, முராரி! ஓ அனந்தா, வைகுண்டா, முகுந்தா, கிருஷ்ணா, கோவிந்தா, தாமோதரா, மாதவா! எல்லா மக்களும் தங்களை கூவி அழைக்கமுடியும் என்றாலும் அவர்கள் மௌனமாய் இருக்கிறார்கள். தங்கள் ஆபத்தை தாங்களாகவே தேடிக் கொள்கிறார்கள் என்பதை சற்றே பாருங்கள்!


முகுந்த மாலா 38

த்4யாயந்தி யே விஷ்ணுமநந்தமவ்யயம்
ஹ்ருத்பத்3ம-மத்4யே ஸததம் வ்யவஸ்தி2தம் |
ஸமாஹிதாநாம் ஸததாப4யப்ரத3ம்
தே யாந்தி ஸித்3தி4ம் பரமாஞ்ச வைஷ்ணவீம் || 38 ||

வரையறையற்றவரும், குற்றமில்லாதவருமான விஷ்ணு எப்போதும் இதயத் தாமரையில் வீற்றிருப்பவர்; தங்கள் அறிவை அவர் மீது செலுத்தியவர்களுக்கு அபயம் அளிப்பவர். அவரை தியானிக்கும் பக்தர்கள் வைஷ்ணவர்களுடைய உன்னத பூர்ணத்தை அடைவார்கள்.


முகுந்த மாலா 39

க்ஷீரஸாக3ர-தரங்க3-ஶீகரா
ஸாரதாரகித-சாரு-மூர்தயே |
போ4கி3போ43-ஶயநீய-ஶாயிநே
மாத4வாய மது4வித்3விஷே நம꞉ || 39 ||

மது அரக்கனை வென்ற ஓ மாதவா, தங்களுக்கு வணக்கங்கள். அவருடைய திவ்ய ரூபம் அனந்தநாக மஞ்சத்தில் படுத்த நிலையில் பாற்கடல் வீசும் அலைகள் அவர் மீது பன்னீர் தெளிப்பதுப் போல் தெளிக்கின்றன.


முகுந்த மாலா 52

யஸ்ய ப்ரியௌ ஶ்ருதிதரௌ கவிலோகவீரௌ
மித்ரே த்வி ஜந்ம வர-பாரஸவா-வபூதாம் |
தேநாம்புஜாக்ஷ-சரணாம்புஜ-ஷட்பதேந
ராஜ்ஞா க்ருதா க்ருதிரியம் குலஶேகரேண || 52 ||

இந்தப் பாமாலையை தீட்டியவர் இராஜா குலசேகரர் என்ற தாமரைக் கண்ணனின் தாமரைத் திருவடியில் ரீங்காரம் செய்யும் வண்டு. இராஜாவின் இரண்டு பிரியமான நண்பர்கள் பிராமண சமுதாயம் என்ற நேர்த்தியான தாமரையின் இரட்டைத் தண்டுகள். இந்த சமுதாயத்தவர்கள் கவிஞர்கள் சமூகத்தின் தலைவர்கள் என்று புகழ்பெற்ற வேத விற்பன்னர்கள்.

** ஹரே கிருஷ்ணா ** 

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare