மன்னு புகழ்க் கௌசலைதன்
(இராகவனுக்குத் தாலாட்டு)
(1)
மன்னு புகழ்க் கௌசலை தன் மணிவயிறு வாய்த்தவனே!

தென் இலங்கைக் கோன் முடிகள் சிந்துவித்தாய்! செம்பொன் சேர்

கன்னி நன் மா மதிள் புடைசூழ் கணபுரத்து என் கருமணியே!

என்னுடைய இன்னமுதே ! இராகவனே ! தாலேலோ !
என்னுடைய இன்னமுதே ! இராகவனே ! தாலேலோ !
(2)
கொங்கு மலி கருங்குழலாள் கௌசலைதன் குல மதலாய்!

தங்கு பெரும் புகழ்ச் சனகன் திருமருகா! தாசரதீ!

கங்கையிலும் தீர்த்தமலி கணபுரத்து என் கருமணியே !

எங்கள் குலத்து இன்னமுதே ! இராகவனே ! தாலேலோ !

(3)
தாமரை மேல் அயனவனைப் படைத்தவனை ! தயரதன் தன்

மா மதலாய்! மைதிலி தன் மணவாளா! வண்டினங்கள்

காமரங்கள் இசைபாடும் கணபுரத்து என் கருமணியே !

ஏமருவும் சிலைவலவா ! இராகவனே ! தாலேலோ !
ஏமருவும் சிலைவலவா ! இராகவனே ! தாலேலோ !
(4)
மலையதனால் அணைகட்டி, மதில்-இலங்கை அழித்தவனே !

அலைகடலைக் கடைந்து அமரர்க்கு அமுது அருளிச் செய்தவனே

கலை வல்லவர்தாம் வாழும் கணபுரத்து என் கருமணியே !

சிலை வலவா ! சேவகனே ! ஸ்ரீராமா ! தாலேலோ !

(5)
தேவரையும், அசுரரையும், திசைகளையும் படைத்தவனே !

யாவரும் வந்து அடி வணங்க, அரங்க நகர்த் துயின்றவனே !

காவிரி நல் நதி பாயும் கணபுரத்து என் கருமணியே !

ஏ வரி வெஞ்சிலை வலவா ! இராகவனே ! தாலேலோ!
ஏ வரி வெஞ்சிலை வலவா ! இராகவனே ! தாலேலோ!
** ஹரே கிருஷ்ணா **