மண்ணில் அரசர்போல்

॥1॥
மண்ணில் அரசர்போல் காணுகிறாயே
ஆசிர்வாதம் ரகுராமா
மண்ணில் அரசர்போல் காணுகிறாயே
ஆசிர்வாதம் ரகுராமா
கண்ணில் வேதியர் போல் தோணுகிறாயே
நமஸ்காரம் பரசுராமா
கண்ணில் வேதியர் போல் தோணுகிறாயே
நமஸ்காரம் பரசுராமா

॥2॥
தாடகை என்னும் பெண் மேல் சண்டை கொள்ள
ராசர்க்கு – தான்விதியோ ரகு ராமா
தாடகை என்னும் பெண் மேல் சண்டை கொள்ள
ராசர்க்கு – தான்விதியோ ரகு ராமா
வேடர்கள் தொடுக்கும் வில்லை
ப்ராமணர் தொட தலைவிதியோ பரசுராமா
வேடர்கள் தொடுக்கும் வில்லை
ப்ராமணர் தொட தலைவிதியோ பரசுராமா

॥3॥
ஆன் ஆர் பெண் கொலை செய்யலாமோ
உனக்கிது – அடைவோ ரகுராமா
ஆன் ஆர் பெண் கொலை செய்யலாமோ
உனக்கிது – அடைவோ ரகுராமா
தானாகப் பெற்றெடுத்த தாயைக் கொலை
செய்தாயே – தகுமோ பரசுராமா
தானாகப் பெற்றெடுத்த தாயைக் கொலை
செய்தாயே – தகுமோ பரசுராமா

॥4॥
தர்மமா எனைப் பெற்ற – தகப்பன் சொற்படி
செய்தேன் – தாய் கொலையோ ரகுராமா
தர்மமா எனைப் பெற்ற – தகப்பன் சொற்படி
செய்தேன் – தாய் கொலையோ ரகுராமா
குரு வார்த்தை தடுக்காமல் – நானும்
செய்தேன் பெண் கொலையோ பரசுராமா
குரு வார்த்தை தடுக்காமல் – நானும்
செய்தேன் பெண் கொலையோ பரசுராமா

॥5॥
சொத்தை வில் ஒடித்ததை – மெத்த மெத்தவே
எண்ணி துள்ளாதே – ரகுராமா
சொத்தை வில் ஒடித்ததை – மெத்த மெத்தவே
எண்ணித் துள்ளாதே – ரகுராமா
கற்ற வேதியன் என்று – பொறுத்தேன்
பொறுத்தேன் – குதிக்காதே பரசுராமா
கற்ற வேதியன் என்று – பொறுத்தேன்
பொறுத்தேன் – குதிக்காதே பரசுராமா

॥6॥
அந்தவில் வளைத்தாயே – இந்த வில்
வளை இந்தா – அடடா ரகுராமா
அந்தவில் வளைத்தாயே – இந்த வில்
வளை இந்தா – அடடா ரகுராமா
இந்தா வளைத்தே இதில் – வைத்த
அம்புக்கு – வழி எங்கே பரசுராமா
இந்தா வளைத்தே இதில் – வைத்த
அம்புக்கு – வழி எங்கே பரசுராமா

॥7॥
அம்புக்கு வழி இல்லை – நான் ப்ராமணன்
இனி அனுக்ரஹம் செய் ரகுராமா
அம்புக்கு வழி இல்லை – நான் ப்ராமணன்
இனி அனுக்ரஹம் செய் ரகுராமா
பின் புத்திகாரன் இரு பிறப்பன் உன்னோடு
என்ன பேச்சு பரசுராமா
பின் புத்திகாரன் இரு பிறப்பன் உன்னோடு
என்ன பேச்சு பரசுராமா

॥8॥
சக்தி சபதங்கள் எல்லாம் உன் சரத்துக்கே
தந்தேன் ரகுராமா
சக்தி சபதங்கள் எல்லாம் உன் சரத்துக்கே
தந்தேன் ரகுராமா
வந்த வழி பார்த்துக் கொண்டு ஓடிப்
போவதே – நல்ல மார்கம் பரசுராமா
வந்த வழி பார்த்துக் கொண்டு ஓடிப்
போவதே – நல்ல மார்கம் பரசுராமா


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராமா ஹரே ராமா ராம ராம ஹரே ஹரே

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare