கண்ணே என் கண்மணியே

(பாபநாசம் சிவன்)

கண்ணே என் கண்மணியே
கண்ணனே கண்வளராய்
கண்ணே என் கண்மணியே
கண்ணனே கண்வளராய்
மண்ணுலகில் என் வாழ்வு
வளம் பெற வந்துதித்தாய்
மண்ணுலகில் என் வாழ்வு
வளம் பெற வந்துதித்தாய் ||

கண்ணே என் கண்மணியே
கண்ணனே கண்வளராய்
கண்ணே என் கண்மணியே
கண்ணனே கண்வளராய்

குயிலிசை குழலோசை உன்
கொஞ்சு மொழிக்கிணையாமோ
குயிலிசை குழலோசை உன்
கொஞ்சு மொழிக்கிணையாமோ
கொண்ட மனசஞ்சலங்கள்
பஞ்சாய் பறந்திடுமே ||

குயிலிசை குழலோசை உன்
கொஞ்சு மொழிக்கிணையாமோ
கொண்ட மனசஞ்சலங்கள்
பஞ்சாய் பறந்திடுமே ||

தாலேலோ தாலேலோ
தாலேலோ தாலேலோ.

தேடாத என் நிதியே
திகட்டா தெள்அமுதே
தேடாத என் நிதியே
திகட்டா தெள்அமுதே
வாடாத மென்மலரே
வாடாத மென்மலரே

மனத்துள் இனிக்கும் தனித்தேனே
வாடாத மென்மலரே
மனத்துள் இனிக்கும் தனித்தேனே

தாலேலோ தாலேலோ
தாலேலோ தாலேலோ.

கண்ணே என் கண்மணியே
கண்ணனே கண்வளராய்
கண்ணே என் கண்மணியே
கண்ணனே கண்வளராய்
மண்ணுலகில் என் வாழ்வு
வளம் பெற வந்துதித்தாய்

கண்ணே என் கண்மணியே
கண்ணனே கண்வளராய்
கண்ணே என் கண்மணியே
கண்ணனே கண்வளராய்

** ஹரே கிருஷ்ணா **

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare