5. ராதா மாதவ கோவில்
(ஜெயதேவ் கோஸ்வாமி)
நோக்கங்கள்:
நோக்கம் 1: ராதா மாதவ் என்ற பெயரின் அர்த்தத்தை அறிதல்.
நோக்கம் 3: ஸ்ரீல ஜெயதேவ் கோஸ்வாமியின் திருமணத்திற்கான காரணத்தைப் புரிந்துகொள்ளல்.
நோக்கம் 4: ஜெயதேவ் தனது “தசா-அவதார-ஸ்தோத்திரம்” என்ற கவிதையை எங்கே, எப்போது எழுதினார் என்பதை அறிதல்.
நோக்கம் 8: ஜெயதேவரின் மறைவு நாள் எப்போது என்பதை அறிதல்.
நோக்கம் 12: ஜெய்ப்பூரில் உள்ள ஸ்ரீ ராதா மாதவ் மந்திரில் உள்ள மற்ற விக்ரஹங்களை அறிதல்.
நோக்கம் 1: ராதா மாதவ் என்ற பெயரின் அர்த்தத்தை அறிதல்.
“மாதவ் ” என்ற பெயர் “விஷ்ணு” மற்றும் “கிருஷ்ணர்” இருவருக்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பெயர். ஸ்ரீல பிரபுபாதர் தனது பக்தி ரஸாம்ருத சிந்து (Nectar of Devotion) என்ற நூலில் எழுதுகிறார்: “ஸ்ரீ ஜீவ கோஸ்வாமியின் கூற்றுப்படி, ராதா மற்றும் கிருஷ்ணர் இருவரின் பெயர்களும் ரிக்வேதத்தில் “ராதா மாதவ்” என்று குறிப்பிடப்பட்டுள்ளன.
ஸ்ரீல பிரபுபாதர் தனது பகவத் கீதை மற்றும் ஸ்ரீமத் பாகவத விளக்கங்களில் மாதவ்— “அதிர்ஷ்ட தேவியின் கணவர்” மற்றும் “அனைத்து சக்திகளின் எஜமானர்” என்று மொழிபெயர்த்துள்ளார்.
“மா” என்பது லட்சுமியைக் குறிக்கிறது, “தவ” என்பது கணவர் அல்லது துணைவியைக் குறிக்கிறது. கிருஷ்ணரைப் பொறுத்தவரை, மாதவ் பொதுவாக “மது” என்ற மூலத்திலிருந்து வருவதாக விளக்கப்படுகிறது.
நோக்கம் 2 : ஸ்ரீல ஜெயதேவ் கோஸ்வாமியைப் பற்றியும், அவர் ராதா மாதவ் விக்ரஹத்தை எங்கிருந்து முதலில் பெற்றார் என்பதையும் அறிதல்.
Srila Jayadev Goswami
ஸ்ரீல பிரபுபாதர் தனதுபுத்தங்கங்களில், “ஸ்ரீல ஜெயதேவ் கோஸ்வாமி 11 அல்லது 12 ஆம் நூற்றாண்டில் மேற்கு வங்காளத்தின் பிர்பம் மாவட்டத்தில் உள்ள கேந்துபில்வா கிராமத்தில் தோன்றினார். இருப்பினும், மற்ற சிலரின் கருத்துப்படி, அவர் ஒரிசாவில் பிறந்தார், இன்னும் சிலர் அவர் தென்னிந்தியாவில் பிறந்தார் என்று கூறுகிறார்கள்”. என எழுதி உள்ளார்.
அந்த நேரத்தில் மன்னர் லட்சுமண சென்னின் ராஜ்ஜியம் நவத்வீபத்தில் இருந்தது. கேந்துபில்வா கிராமம் அஜய் நதிக்கு அருகில் அமைந்துள்ளது.ஜெயதேவரின் பக்தியால் ஸ்ரீ ஸ்ரீ ராதா மாதவ் விக்ரஹம் நதியிலிருந்து கிடைக்க பெற்று அதை வழிபட்டு வந்தார். இந்த விக்கிரஹங்கள் இப்போது ஜெய்ப்பூரின் கனக் விருந்தாவன் பகுதியில்அருள்பாலிக்கின்றனர். ஸ்ரீல ஜெயதேவ் கோஸ்வாமியின் தந்தை போஜ் தேவ் மற்றும் அவரது தாயார் வாமா தேவி ஆவார்கள்.
நோக்கம் 3: ஸ்ரீல ஜெயதேவ் கோஸ்வாமியின் திருமணத்திற்கான காரணத்தைப் புரிந்துகொள்ளல்.
ஜகன்னாத புரியில் ஒரு பிராமணர் இருந்தார்,வெகுநாட்களாக அந்த பிராமணருக்கு குழந்தை இல்லை. எனவே, நீண்ட காலமாக, அவர் ஒரு குழந்தைக்காக ஜெகன்னாதரிடம் பிரார்த்தனை செய்தார்.ஜெகன்னாதர் அவருக்கு குழந்தைப்பேற்றை ஆசீர்வதித்தார்.அவர்களுக்கு பத்மாவதி என்ற மகள் பிறந்தாள். அந்த மகள் வளர்ந்தாள், அவள் திருமணத்திற்கு தகுதி பெற்றபோது, பிராமணர் தனது மகளை ஜெகன்னாதரிடம் அழைத்து வந்து, “ஜெகன்னாதஜி, நான் இந்த மகளை உங்கள் பாதங்களுக்கு அர்ப்பணித்துள்ளேன், நான் அவளுக்கு திருமணம் செய்து வைக்க விரும்புகிறேன்” என்றார். ஜெகன்னாதஜி அவரது கனவில் வந்து, “நவத்வீபத்திற்குச் செல்லுங்கள். என் பக்தர் ஜெயதேவ் கோஸ்வாமி அங்கே இருக்கிறார், அவர் எப்போதும் ஹரியின் நாமங்களை உச்சரிப்பார், அவர் மிகவும் பற்றற்ற வைஷ்ணவர். நீங்கள் , உங்கள் மகளை அவருக்கு திருமணம் செய்து வையுங்கள்” என்று கூறினார்.
பின்னர் பிராமணர் தனது மகளுடன் ஸ்ரீ ஜெயதேவ் கோஸ்வாமியிடம் வந்தார், ஸ்ரீ ஜெயதேவ் கோஸ்வாமி அவர் ஏன் வந்தார் என்பதைப் புரிந்துகொண்டார். ஜெயதேவ் கோஸ்வாமி தனக்கு திருமணத்தில் விருப்பமில்லை என்று கூறி மறுத்துவிட்டார். இதைக் கேட்ட பிராமணர் மிகவும் சோகமடைந்தார். பின்னர் அந்த பிராமணர், “சரி, அவளை உமக்கு மணமுடிக்க முடிக்காவிட்டால், என் மகளை என்னுடன் அழைத்துச் செல்ல மாட்டேன்” என்றார். எனவே பிராமணர் தனது மகளை அங்கேயே விட்டுச் சென்றார், அதன் பிறகு அவரது மகள், “ஓ வைஷ்ணவ தாக்கூர், நீங்கள் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், நான் இங்கேயே என் உயிரைக் விட்டு விடுவேன். நீங்களே என் இறைவன், என் எஜமானர். நான் உங்களை என் இதயத்தில் ஏற்றுக்கொண்டேன். வேறு எந்த ஆணையும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது” என்று கூறினார். எனவே ஜெயதேவ் கோஸ்வாமி மிகவும் கவலைப்பட்டு பத்மாவதியை மணக்க முடிவு செய்தார்.
நோக்கம் 4: ஜெயதேவ் தனது “தசா-அவதார-ஸ்தோத்திரம்” என்ற கவிதையை எங்கே, எப்போது எழுதினார் என்பதை அறிதல்.
ஸ்ரீ ஜெயதேவ் கோஸ்வாமி அவரது திருமணத்திற்குப் பின், சிறிது காலத்திற்குப் பிறகு, ஜெயதேவரும் அவரது மனைவி பத்மாவதியும் நவத்வீபத்திற்கு வந்தனர், அங்கு பல்லால் திகி கரையில் (இன்றைய இஸ்கான் மாயாபூர்-சந்திரோதய-மந்திரத்திலிருந்து வெகு தொலைவில் இல்லை) ஒரு சிறிய குடிசையைக் கட்டினர். ஜெயதேவர் தனது “தசா-அவதார-ஸ்தோத்திரம்” என்ற பாடலை இங்கே எழுதினார். ஒவ்வொரு நாளும் காலையில் நரசிம்மரை துதிக்கும்போது அந்த பாடல்களில் ஒன்றைப் பாடுகிறோம்.
தவ கர-கமலா-வரே நகம அத்புத ஸ்ருங்கம்
தலிதா-ஹிரண்யகாஷிபு-தனு-பிருங்ஹம்
கேசவ திருத-நரஹரி-ரூப ஜெய ஜகதீஷ ஹரே
நோக்கம் 5: ஸ்ரீல ஜெயதேவ் கோஸ்வாமி மன்னர் லட்சுமண சேனை எவ்வாறு சந்தித்தார், எந்த சூழ்நிலை அவரை சம்பாஹட்டி(Champahati) தங்க வைத்தது என்பதைப் பற்றி அறிதல்.
கோவர்தன ஆச்சார்யா, என்பவர் லட்சுமண் சேன் ராஜ்ஜியத்தில் அமைச்சராக இருந்தார். கோவர்தன ஆச்சார்யா இந்த தசாவதார ஸ்தோத்திரத்தைப் படித்தபோது, அவர் மிகவும் ஈர்க்கப்பட்டார். அவர், “நான் இந்த தசாவதார ஸ்தோத்திரத்தை ராஜாவுக்குக் காட்ட வேண்டும். இதைப் படித்த பிறகு ராஜா மிகவும் மகிழ்ச்சியடைவார்” என எண்ணினார். எனவே கோவர்தன ஆச்சார்யா இந்த ஸ்தோத்திரத்தை ராஜாவிடம் எடுத்துச் சென்று அவருக்குக் காட்டினார். ராஜா மிகவும் மகிழ்ச்சியடைந்தார். அவர் ஈர்க்கப்பட்டு, “இதை எழுதியவர் யார். நான் அந்தவைஷ்ணவரைப் பார்க்க விரும்புகிறேன்” என்று கேட்டார். பின்னர் கோவர்தன ஆச்சார்யா, “ஜெயதேவ் கோஸ்வாமி தான், இந்த தசாவதார ஸ்தோத்திரத்தை எழுதியுள்ளார். அவர் யாரையும், எந்த ராஜாவையும், சிறப்பு அந்தஸ்து கொண்ட எந்த நபரையும் சந்திப்பதில்லை” என்று பதிலளித்தார்.
பின்னர் ராஜா, “சரி, நான் மாறுவேடத்தில் செல்வேன். ஆனால் நான் நிச்சயமாக அவரைச் சந்திப்பேன்” என்றார். அவர் ஒரு முறை மாறுவேடத்தில் வந்து ஸ்ரீ ஜெயதேவ கோஸ்வாமியைப் பார்த்த பிறகு அவரால் மிகவும் ஈர்க்கப்பட்டார். அவர் பணிவுடன்வைஷ்ணவரைப் போல அவர் முன் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார். ஜெயதேவ் கோஸ்வாமி அவரை மிகுந்த மரியாதையுடன் வரவேற்று மரியாதை செய்தார். அவரது வார்த்தைகளிலிருந்து இது ராஜா லட்சுமணன் சேன் என்பது தெளிவாகியது.
மன்னர் அவரை அழைத்து, “நீ வந்து நம் ராஜ்ஜியத்தின் கவிஞராகுங்கள், அரசவைக் கவிஞராகுங்கள்” என்றார். பின்னர் ஜெயதேவ கோஸ்வாமி, “நீங்கள் என்னை உங்கள் அரசவைக் கவிஞராக வற்புறுத்தினால்,நான் இங்கே நவத்வீபத்தில் தங்க மாட்டேன். நான் ஜெகந்நாத பூரிக்குச் செல்வேன், ஆனால் நான் உங்களிடம் வர முடியாது” என்றார். ஜெயதேவ கோஸ்வாமி மிகவும் பற்றற்ற வைஷ்ணவர் என்று மன்னர் நினைத்தார். பின்னர் அவர், சம்பாஹட்டி” மிக அழகான இடம் இருக்கிறது, சுற்றிலும் சம்பக் மரங்கள் உள்ளன, நீங்கள் அதை மிகவும் விரும்புவீர்கள். நீங்கள் அங்கு உங்கள் பஜனையை மிகவும் சிறப்பாகச் செய்ய முடியும்” என்றார். எனவே இந்த வழியில், ராஜா மிகவும் வற்புறுத்தியதால், பின்னர் ஜெயதேவ கோஸ்வாமி, ராஜாவின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு நவத்வீபத்தில் உள்ள சம்பஹதியில் வசிக்கத் தொடங்கினார்.
குறிப்பு: சம்பகஹட்டி – “சம்பாக பூக்களின் சந்தை.”
நோக்கம் 6 : மிகவும் பிரபலமான ” கீத கோவிந்தம்” என்ற புத்தகத்தை எழுதியவர் யார், ” கீத கோவிந்தம்” என்ற புத்தகத்தை எழுதும் போது கிருஷ்ணர் நிகழ்த்திய லீலை என்ன என்பதை அறிதல்.
ஜெயதேவ கோஸ்வாமி சம்பஹட்டியில் கீத கோவிந்தத்தை எழுதத் தொடங்கினார். எனவே அவர் கீத கோவிந்தத்தை எழுதும் போது,ஒரு இடத்தில் ராதா ராணி கிருஷ்ணருக்காகக் காத்திருக்கிறார். கிருஷ்ணர் வர தாமதமாகிறது அந்த லீலையை அவர் நினைவு கூர்ந்தார். ராதாராணி மிகவும் கோபமடைந்து தனது வருத்தத்தை வெளிப்படுத்தத் தொடங்கினார். அவரைச் சந்திக்கவோ அல்லது அவருடன் பேசவோ மறுத்துவிட்டார். எனவே ராதாராணி தனது வருத்தத்தை வெளிப்படுத்தும்போது, கிருஷ்ணர் முழு முதற் கடவுளாக இருந்தாலும், அந்த வருதத்ததை தீர்ப்பது கிருஷ்ணருக்கு மிகவும் கடினமாயிற்று. எனவே, வருதத்ததை (வருத்ததுடன் கூடிய கோபம்) உடைக்க கிருஷ்ணர் என்ன செய்தார்? அவர் ராதாராணியின் கால்களைப் பிடித்துத் தனது தலையில் வைத்துக்கொண்டார். ஸ்ரீ ஜெயதேவ கோஸ்வாமி ‘ஸ்மர கரல கண்டனம்’ என்ற முதல் வரியை எழுதிய பிறகு நிறுத்தினார். அவர் இவ்வளவு மட்டுமே எழுதினார். அதன் பிறகு அவர் நிறுத்தினார். அவரது கைகள் நடுங்கத் தொடங்கின, அவரால் மேலும் எழுத முடியவில்லை.
ஸ்ரீ ஜெயதேவ கோஸ்வாமி நினைத்தார், “நான் என்ன எழுதுகிறேன்? எல்லா சக்திகளும், ஸர்வ வல்லமை கொண்ட பகவான் ஸ்ரீ கிருஷ்ணரில் இருந்து வெளிப்படுகின்றன, ராதாராணி அவருடைய அந்தரங்க சக்தி; அவள் அவருடைய நித்திய வேலைக்காரி. ராதா ராணியின் பாதங்களை முழு மனதுடன் ஸ்ரீ கிருஷ்ணர் எப்படித் தலையில் அணிவார்? இது சாத்தியமா? அவர் எழுதுகோலை கீழே வைத்துவிட்டு குளிக்கச் சென்றார். பின்னர் ஶ்ரீகிருஷ்ணரே ஶ்ரீஜெயதேவ கோஸ்வாமியின் வேடத்தை ஏற்று அவரது வீட்டிற்கு வந்து அறைக்குள் சென்று ‘ஸ்மர கரல கண்டனம் மம சிரசி மந்தனம் தேஹி பாத பல்லவம் உதரம்’ என்ற வரியை முடித்தார்.
ஸ்ரீ ஜெயதேவ் கோஸ்வாமி வேடத்தில் இருந்த கிருஷ்ணருக்கு பிரசாதம் பரிமாறும் வாய்ப்பு பத்மாவதிக்கு கிடைத்தது. அவர் பிரசாதத்தை ஏற்றுக் கொண்டு வெளியேறினார். சிறிது நேரம் கழித்து, அசல் ஸ்ரீ ஜெயதேவ் கோஸ்வாமி குளித்து முடித்து திரும்பி வந்தார். பத்மாவதி சாப்பிடுவதைப் பார்த்து, “நீ என்ன செய்கிறாய்? இன்று தான் நான் முதல்முதலில் பார்க்கிறேன், பத்மாவதி எனக்கு முன்பாக பிரசாதம் எடுத்துக்கொள்கிறாய். காரணம் என்ன? உன் உடல்நிலை நன்றாக இருக்கிறதா?” என்றார்.
பத்மாவதி, “தாங்கள் குளிக்கச் சென்று சீக்கிரம் திரும்பி வந்தீர்கள், தங்களுக்கு மதிய உணவு பரிமாறச் சொல்லி சாப்பிட்டு விட்டு மீண்டும் வெளியே சென்றீர்கள். என்ன நடக்கிறது என்று எனக்குப் புரியவில்லை” என்றார். எனவே ஜெயதேவ் கோஸ்வாமி உள்ளே சென்று “ கீத கோவிந்தை” பார்த்தார். அதில் பாடலின் முழு வரியும் எழுதப்பட்டு இருந்ததை அவரால் பார்க்க முடிந்தது. மாதவ, கிருஷ்ணரே இங்கு வந்து இந்த வரியை முடித்திருப்பதை ஜெயதேவ் கோஸ்வாமி உடனடியாகப் புரிந்துகொண்டார். அவர் பத்மாவதியை அழைத்து, “என்ன ஒரு அதிசயம் நடந்திருக்கிறது பார். மாதவரே வந்து ‘தேஹி பாத பல்லவம் உதரம்’ என்று சேர்த்து அந்த வரியை முடித்தார் என்பது உனக்குதெரியுமா? நான் எழுதியது சரி என்றும், நீ மிகவும் அதிர்ஷ்டசாலி என்றும் அவர் சான்றளித்து இருக்கிறார் . மாதவனுக்கு உன் கைகளால் பிரசாதத்தை அளித்திருக்கிறாய். எனக்கு இந்த அதிர்ஷ்டம் கிடைக்கவில்லை” என்று கூறினார்.
இந்த வழியில் ஜெயதேவ் கோஸ்வாமி “கீத கோவிந்தம்” என்ற புத்தகத்தை எழுதினார், இது மிகவும் பிரபலமானது. இன்றும் கூட ஜெகந்நாத் புரியில், ஜெகந்நாத்ஜி கீத கோவிந்தத்தை பக்தர்கள் பாட தினமும் கேட்கிறார். அதை மிகவும் விரும்புகிறார். ஜெயதேவ் கோஸ்வாமி சந்திரலோகா (Candraloka) என்ற புத்தகத்தையும் இயற்றினார்.
நோக்கம் 7: ஜெயதேவருக்கும் அவரது மனைவிக்கும் கிருஷ்ணர் தனது கௌரங்க வடிவத்தை எவ்வாறு வெளிப்படுத்தினார் என்பதைப் புரிந்துகொள்ளல்.
ஜெயதேவருக்கும் அவரது மனைவிக்கும், கிருஷ்ணர் அந்தப் பகுதியில் வளர்ந்த தங்கச் சம்பா மரத்தின் நிறத்திற்கு மாறி, தனது கௌரங்க வடிவத்தை வெளிப்படுத்தினார். விரைவில் நவத்வீபத்தில் தோன்றி, சந்நியாசம் எடுத்து பூரிக்குச் செல்வதற்கு முன்பு, ஜெயதேவரின் கீதை —கீத கோவிந்தத்தை ருசிப்பேன் என்று அவர்களிடம் கூறினார். பகவான் சைதன்யர் அவர்களை பூரிக்குச் செல்லச் சொன்னார்.
ஸ்ரீ கௌரங்க மஹா பிரபு அந்த காலத்தில் தனது லீலைகளை வெளிப்படுத்தவில்லை என்றாலும், ஸ்ரீ ஜெயதேவர், பில்வமங்களா, சண்டிதாஸ் மற்றும் வித்யாபதி போன்ற பரம பக்தர்களின் உள்ளத்தில், மகாபிரபுவின் அந்தரங்க ஆசை அவர் அவதரிக்குமுன் ஏற்கனவே உணர்த்தப்பட்டிருந்ததாக ஸ்ரீ பக்திவினோத தாகுர் கூறுகிறார்.
நோக்கம் 8: ஶ்ரீஜெயதேவரின் மறைவு நாள் எப்போது என்பதை அறிதல்.
பௌச சங்கராந்தி (ஜனவரி 15) அன்று, ஶ்ரீ ஜெய தேவர் மறைந்தார்.
அவரது வழிபாட்டுக்குரிய விக்ரஹங்களான ஸ்ரீ ஸ்ரீ ராதா-மாதவ், தற்போதைய ஜெய்ப்பூர் நகரத்திற்கு வெளியே உள்ள பழைய ராதா-கோவிந்தா கோவிலில் வழிபடப்படுகிறார்கள்
நோக்கம் 9: கனக் விருந்தாவனத்தில் உள்ள ராதா மாதவ் கோயில் ஏன் பழைய கோவிந்த தேவ்ஜி கோயில் என்றும் அழைக்கப்படுகிறது என்பதை அறிதல்.
பிரபலமான கருத்துப்படி, கோவிந்த் தேவ் ஜியின் விக்ரஹம் கி.பி 1714 இல் ராதா மாதவ் கோவிலில் மறைத்து வைக்கப்பட்டு, பின்னர் தற்போதுள்ள கோவிந்த் தேவ்ஜி கோவிலுக்கு மாற்றப்பட்டது. எனவே, கனக் விருந்தாவனத்தில் உள்ள ராதா மாதவ் கோயில் ஜெய்ப்பூரில் உள்ள பழைய கோவிந்த் தேவ்ஜி கோயில் என்றும் அழைக்கப்படுகிறது.
பழைய கோவிந்த் தேவ்ஜி கோவில்,
ராதா மாதவ் ஜி, கனக் கட்டி, ஜெய்ப்பூர்
நோக்கம் 10: ஜெய்ப்பூரில் உள்ள ராதா மாதவ் கோயில், அதன் அம்சங்கள் மற்றும் அதன் இருப்பிடம் பற்றிப் புரிந்துகொள்ளல்.
ஜெய்ப்பூரில், கனக் விருந்தாவன் கார்டன் வளாகத்தில் உள்ள ராதா மாதவ் கோயில் மிகப்பெரிய கோயிலாகும்.
ஜெய்ப்பூர் கனக் கட்டியில் உள்ள கனக் விருந்தாவன் கார்டன்
வளாகத்தில் உள்ள ராதா மாதவ் கோயில்
ராதா மாதவ் கோயிலின்
அசல் நுழைவு வாயில்

ராதா மாதவ் கோயில்/ பழைய கோவிந்த் தேவ்ஜி கோயில், கனக் காட்டி, ஜெய்ப்பூர் அரய்ஷ் (Araish) வேலைப்பாடுகளுடன் கூடிய வசீகரிக்கும் உட்புறங்கள்.
இந்தக் கோயில் எளிமையான ராஜபுத்திர ஹவேலி கட்டிடக்கலை பாணியைக் கொண்டுள்ளது; இது அழகாக இருக்கிறது. இந்தியக் கோயில்களில் காணப்படும் ஒரு அம்சமான கோபுரம் இல்லை. தரையானது, வெள்ளை பளிங்குக் கற்களின் கண்ணாடி பூச்சு போன்ற, அரய்ஷ் எனப்படும் பழங்கால பிளாஸ்டர் நுட்பத்தால் ஆனது.
ராதா மாதவ் கோயில், கனக் விருந்தாவனம்,
ஜெய்ப்பூர்
சுற்றியுள்ள பகுதி ஒரு பள்ளத்தாக்கு மற்றும் கனக் காட்டி என்று அழைக்கப்படுகிறது.
கோவிந்த் தேவ்ஜி கோயில் அறக்கட்டளை கனக் விருந்தாவன் தோட்ட வளாகத்தில் உள்ள இரண்டு கோயில்களையும் நிர்வகிக்கிறது – நட்வர்ஜி கோயில் மற்றும் ராதா மாதவ் கோயில்.
நோக்கம் 11: கனக் கட்டியில் (Kanak Ghati) உள்ள கனக் விருந்தாவன் கோயில் திறந்திருக்கும் நேரத்தைப் பற்றி அறிதல்.
கோவிந்த் தேவ்ஜி கோயில் அறக்கட்டளை ராதா மாதவ் ஜி மற்றும் நட்வர் ஜி கோயில் இரண்டையும் நிர்வகிப்பதால், இந்த கோயில்கள் கோவிந்த் தேவ்ஜி கோயில் தரிசனம் மற்றும் ஆரத்தி நேர அட்டவணையைப் பின்பற்றுகின்றன. கோவிந்த் தேவ்ஜி கோயில் தரிசன நேரத்தை ஆன்லைனில் சரிபார்க்கவும். கோயில் நாள் முழுவதும் திறந்திருக்கும். ஒரு நாளில் பரிந்துரைக்கப்பட்ட 7 நேர இடைவெளிகளில் ஏதேனும் ஒன்றில் நீங்கள் தரிசனம் செய்யலாம்.

நோக்கம் 12: ஜெய்ப்பூரில் உள்ள ஸ்ரீ ராதா மாதவ் மந்திரில் உள்ள மற்ற விக்கிரஹங்களை அறிதல்.
இக்கோயில் பல விக்கிரஹங்களை கொண்டுள்ளது, முதன்மையானவை ஸ்ரீ கிருஷ்ணர் மற்றும் ஸ்ரீ ராதா ராணி. இந்தக் கோயிலில் மூன்று துணைக் கோயில்கள் உள்ளன, பிரதானமான ஒன்றில் கிருஷ்ணரின் விக்கிரஹமும், ராதா ராணியின் வெண்கல விக்கிரஹமும் உள்ளன. கூடுதலாக, ஹான்ஸ் கோபால், சனக் மற்றும் பிற முனிவர்களின் சிலைகளும், கிரிராஜ் மலையை வைத்திருக்கும் கிருஷ்ணரின் வெள்ளைக் கல் சிலையுமே உள்ளன. ராதா மாதவ்ஜியின் மினியேச்சர் வடிவமான ஆனந்த் பிஹாரியின் உற்சவ விக்கிரஹமும் இந்தக் கோயிலில் உள்ளன.


நோக்கம் 13: பகவான் சைதன்யரின் சங்கீர்த்தன நடவடிக்கைகளில் உண்மையில் பங்கேற்கும்போது ஒருவர் என்ன அடைகிறார் என்பதைப் புரிந்துகொள்ளல்.

கௌர-பிரேம-ராசர்ணவே, சே தரங்கே ஜெபா டுபே,
சே ராதா-மாதவ-அந்தரங்க
க்ருஹே பா வனேதே தாகே, ஹா கௌராங்கா போலே தாகே,
நரோத்தமா மாகே தாரா சங்கா
பகவான் சைதன்யரின் பக்தி ப்ரேமையைப் பரப்பும் பெருங்கடலின் அலைகளுக்குள் விளையாடி மகிழ்ச்சி அடையும் எவரும் உடனடியாக ஸ்ரீ ஸ்ரீ ராதா-மாதவரின் ரகசிய பக்தராக மாறுகிறார். அத்தகைய பக்தர் துறவு வாழ்க்கை முறையில் இருக்கிறாரா அல்லது அவர் ஒரு இல்லறத்தாரா என்பது முக்கியமல்ல. அவர் உண்மையில் பகவான் சைதன்யரின் சங்கீர்த்தன நடவடிக்கைகளில் பங்கேற்று அது என்ன என்பதைப் புரிந்துகொண்டால், அத்தகைய நபர் பிறப்பு இறப்பு சுழற்ச்சியில் இருந்து விடுதலை பெறுகிறார். நரோத்தம தாசர் அத்தகைய சத்சங்கத்தை விரும்புகிறார்.
(ஸ்ரீ நரோத்தம தாச தாகுரரின் கௌரங்கேர துதி பாதத்தின் 4வது பாடல்).

