1. ஶ்ரீல பிரபுபாதரும் ஜெய்ப்பூரும்

நோக்கங்கள் :
நோக்கம் 1: இஸ்கான் நியூயார்க்கில் உள்ள ராதா-கோவிந்தரின் வரலாற்றை அறிதல் மற்றும் 1972 ஆம் ஆண்டு ஸ்ரீல பிரபுபாதர் ஜெய்ப்பூருக்கு சென்றது மற்றும் இஸ்கான் பக்தர்களுக்கும் ஜெய்ப்பூர் மக்களுக்கும் இடையிலான பக்தி பிணைப்பு குறித்து விளக்குதல்.
நியூயார்க் நகரத்தில் உள்ள இஸ்கான் கோவிலின் ராதா-கோவிந்த விக்கிரகங்கள், 1972ஆம் ஆண்டில் ஜெய்ப்பூரின் மகாராணி ஸ்ரீல பிரபுபாதருக்கு அன்பளிப்பாக வழங்கினார்கள்.
1972ஆம் ஆண்டு, ஸ்ரீல பிரபுபாதர் அவர்கள், மேற்கத்திய சீடர்களுடன் ஜெய்ப்பூருக்குச் சென்றபோது, கோவிந்தஜி கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பகவான் கோவிந்தரை ஆராதித்து வந்ததைப் பார்த்து, பிரபுபாதரும் அவரது சீடர்களும் மகிழ்ந்தனர்.
இது, ஜெய்ப்பூர் மக்களுக்கும் இஸ்கான் பக்தர்களுக்கும் இடையே ஆன்மீக பாசத்தை ஏற்படுத்தியது. ஏனெனில் இருவரும் பகவான் கோவிந்தர் அல்லது கிருஷ்ணரை, உயர்ந்த பரமாத்மாவாக பக்தியுடன் வழிபட்டனர்.
ஶ்ரீலபிரபுபாதரின் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சீடர்கள் ஜெய்ப்பூரில் கிருஷ்ண உணர்வின் பாரம்பரியம் உயிர்ப்புடன் இருப்பதைப் பார்த்து மிகவும் கவரப்பட்டார்கள். அதேபோல ஜெய்ப்பூரின் மகாராணி காயத்ரி தேவி, ஶ்ரீலபிரபுபாதரும் அவரது பக்தர்களும் காட்டிய கிருஷ்ண பக்தியைக் கண்டு பரவசமடைந்தார்.
தன்னுடைய பாராட்டுக்களை வெளிப்படுத்தும் வகையில், அவர் ஸ்ரீல பிரபுபாதருக்கு, பளிங்கு கற்களால் செதுக்கப்பட்ட பெரிய ராதா, கிருஷ்ண விக்ரகங்களை அன்பளிப்பாக அளித்தார். அவை ஜெய்ப்பூரின் அசல் ராதா-கோவிந்தஜி விக்ரகங்களை ஒத்தவையாக இருந்தன.
ஸ்ரீல பிரபுபாதர் அந்த விக்ரகங்களை ஏற்று, உடனே அவற்றை நியூயார்க் நகரில் உள்ள இஸ்கான் மையத்துக்கு அனுப்பினார். அந்த பகவான் விக்ரகங்கள் ராதா-கோவிந்தா என்றே அழைக்கப்பட வேண்டும் என கூறினார்.
நோக்கம் 2: ஸ்ரீல பிரபுபாதரின் 1972 ஜெய்ப்பூர் பயணத்தைப் பற்றி தெரிந்து கொண்டு, அவர் மற்றும் அவரது சீடர்கள் ஜெய்ப்பூர் மக்களிடம் பெற்ற அன்பான வரவேற்பைப் பற்றிய விளக்கம்.
ஸ்ரீல பிரபுபாத – லீலாம்மிர்தத்திலிருந்து ஒரு குறிப்பு :
ஜனவரி 12, 1972
ஜெய்ப்பூரில் உள்ள முக்கிய பிரமுகர்கள் சிலர், ஒரு விழாவை ஏற்பாடு செய்யும் பொறுப்பையும் செலவையும் பகிர்ந்து கொள்வதற்கான ஒரு திட்டத்தை உருவாக்கினார்கள். ஸ்ரீல பிரபுபாதரின் வேண்டுகோளின் பேரில், டெல்லி மற்றும் இந்தியாவின் பிற இஸ்கான் மையங்களில் இருந்து பக்தர்கள் ஜெய்ப்பூருக்கு வந்து அவருடன் சேர்ந்தனர்.
ஸ்ரீல பிரபுபாதர், கோவிந்தஜி கோவில் வளாகத்தில் உள்ள ஒரு சிறிய அறையில் தங்கினார். அவரது சீடர்கள் அருகிலுள்ள ஒரு வீட்டில் தங்கினர்.
ஒரு வாரம் நீண்ட இந்த திருவிழாவின் போது, ஸ்ரீல பிரபுபாதரின் காலை மற்றும் மாலை சொற்பொழிவுகளுக்காக பெரிய கூட்டங்கள் தொடர்ந்து வந்து சேர்ந்தன. ஸ்ரீல பிரபுபாதா, பிரம்ம-ஸம்ஹிதையில் இருந்து ஸ்லோகங்களை பாராயணம் செய்து, பின் ஹிந்தியில் உபதேசம் செய்தார்.
ஜெய்ப்பூர் மக்கள் ஶ்ரீல பிரபுபாதரை மட்டுமின்றி, அவரது சீடர்களையும் மிகுந்த மரியாதையுடன் எதிர்கொண்டார்கள். இந்தியாவின் பிற நகரங்களை விட இங்கு பக்தர்களை வெளிநாட்டவர்கள் என்றும் சாதுக்கள் என்றும் மதித்தார்கள்.
“இந்த முழு நகரமும் ராதா-கோவிந்தஜி பக்தர்களால் நிரம்பியுள்ளது,” என்று ஶ்ரீல பிரபுபாதர் குறிப்பிட்டார்.
ஜெய்ப்பூரின் காவல் துறை தலைவர், அடிக்கடி வந்து ஶ்ரீலப்ரபுபாதாவிடம் மரியாதையுடன் நடந்துகொண்டார். பகலில் ஶ்ரீல பிரபுபாதர் மற்றும் அவரது சீடர்கள் ஜெய்ப்பூரில் பல்வேறு இடங்களுக்குச் சென்றபோது, காவலரே சாலை போக்குவரத்தை நிறுத்தி, அவர்களை மரியாதையுடன் வழியனுப்பினர்.
மக்கள் ஶ்ரீல பிரபுபாதரைத் தங்கள் வீடுகளுக்கு அழைத்துச் சென்று, ஒரு மன்னரைப் போல மரியாதை செய்தனர்.

