2. ராதா கோபிநாத் கோவில்
நோக்கங்கள்:  நோக்கம் 1: வஜ்ரநாபாவால் நிறுவப்பட்டதிலிருந்து ஜெய்ப்பூரில் தற்போதைய வழிபாடு வரை கோபிநாத விக்ரஹத்தின் வரலாற்றுப் பயணத்தை அறிதல். நோக்கம் 2: ஸ்ரீமதி ஜானவா தேவி, ராதா கோபிநாத் கோயிலில் மறைந்த நிகழ்வு, அவரது நித்திய ஸ்வரூபம் அனங்க மஞ்சரி எனும் உண்மையையும் அறிதல். நோக்கம் 3: ஔரங்கசீப்பின் ஆட்சியில் முகலாயர்களின் ஆக்கிரமிப்புகள் கோபிநாத் கோயிலின் மீது ஏற்படுத்திய பாதிப்புகளையும், பின்னர் நடைபெற்ற மறுஅமைப்பையும் புரிந்து கொள்ளல். நோக்கம் 4: கோபிநாத் கோயிலில் கொண்டாடப்படும் முக்கிய திருவிழாக்களைப் பற்றிய அறிவைப் பெறுதல். நோக்கம் 5: ஔரங்கசீப்பின் ஆட்சிக் காலத்தில், விருந்தாவனத்தில் இருந்து ஜெய்ப்பூருக்குக் கொண்டு செல்லப்பட்ட ராதா-கோபிநாத விக்ரஹம் பற்றிய வரலாற்றுப் பயணத்தை அறிதல். நோக்கம் 6: ஸ்ரீ கோவிந்த் தேவ்ஜி மகாராஜ் கோவிலில் தினசரி வழிபாட்டு முறைகளில் அஷ்ட-யம் சேவை முறை மற்றும் அதன் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ளல். நோக்கம் 7: மதுப் பண்டிட்டின் வாழ்க்கையும், பக்தியும்; அவருக்கு, கதாதர பண்டிட்டுடனான தொடர்பும், ராதா கோபிநாத்தைக் கண்டுபிடித்த நிகழ்வும், அவர் வாழ்நாள் முழுவதும் செய்த சேவையும் அறிதல். நோக்கம் 8: ஜெய்ப்பூர் கோயிலில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்ரீ கோபிநாத் கைக்கடிகாரம் அணிந்து வரும் தனித்துவமான மரபை அறிதல். நோக்கம் 9: வேத முறைப்படி ஆன்மீக முன்னேற்றத்தின் மூன்று நிலைகள் — சம்பந்தம் (உறவு), அபிதேய (பயிற்சி), ப்ரயோஜனம் (இறுதி இலக்கு) — ஆகியவற்றைப் பற்றி அறிதல். நோக்கம் 10: தூய கிருஷ்ண ப்ரேமத்தை அடைய, வழி காட்டும் ப்ரயோஜன ஆசாரியராக விளங்கும் ஸ்ரீல ரகுநாத தாஸ் கோஸ்வாமியின் பங்களிப்பை விவரித்தல்.                                                                                         Sri Sri Radha Gopinath, Ananga Manjari (to the leftof Gopinath) with Lalita and Visakha நோக்கம் 1: வஜ்ரநாபாவால் நிறுவப்பட்டதிலிருந்து ஜெய்ப்பூரில் தற்போதைய வழிபாடு வரை கோபிநாத விக்ரஹத்தின் வரலாற்றுப் பயணத்தை அறிதல். வஜ்ரநாபர், பகவான் கிருஷ்ணரின் கொள்ளுப் பேரன். ஸ்ரீ கோபிநாதரின் விக்ரஹத்தை, முதலில் விருந்தாவனத்தில் பிரதிஷ்டை செய்தார். ஆனால், 1670-ஆம் ஆண்டு, முகலாயப் பேரரசர் ஔரங்கசீப் விருந்தாவனத்தைத் தாக்கியபோது, மூல கோபிநாதர் விக்ரஹம் பாதுகாப்பாக வைக்கப்படுவதற்காக ஜெய்ப்பூருக்குக் கொண்டு செல்லப்பட்டது. இன்று ஜெய்ப்பூரில் பூஜிக்கப்படும் கோபிநாதர் விக்ரஹம், பகவான் கிருஷ்ணரின் தோள்களிலிருந்து இடுப்பு வரை உள்ள தோற்றத்துடன் மிகவும் ஒத்திருக்கிறார் என்று கூறப்படுகிறது. இந்த கோபிநாதர் விக்ரஹம் வம்ஸீ தோட்டத்தில் பரமானந்த பட்டாச்சாரியாரால் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர், அவர் இந்த விக்ரஹத்தை மதுப் பண்டிட்டிடம் பூஜை முதலிய வழிபாடுகளைச் செய்வதற்காக ஒப்படைத்தார். இந்த கோயிலின் பீடத்தில் ஸ்ரீ கோபிநாதருடன் ஸ்ரீமதி ராதாராணியும், அவருடைய இளைய சகோதரி அனங்க மஞ்சரியும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளனர். நோக்கம் 2: ஸ்ரீமதி ஜானவா தேவி, ராதா கோபிநாத் கோயிலில் மறைந்த நிகழ்வு, அவரது நித்திய ஸ்வரூபம் அனங்க மஞ்சரி எனும் உண்மையையும் அறிதல். இந்த கோயிலைக் குறித்த, ஒரு தெய்வீக வரலாறு உள்ளது. பகவான் நித்யானந்தரின் மனைவியான ஸ்ரீமதி ஜானவா தேவி விருந்தாவனத்திற்கு வந்தார். அங்கு ராதா கோபிநாத கோயிலின் மாலை ஆரத்திகளில் கலந்து கொண்டார். ஒரு முறை, ஆரத்தி நேரத்தில் கோபிநாதர் திடீரென்று பீடத்தில் இருந்து குதித்து, ஜானவா தேவியை தம்முடன் எடுத்துக் கொண்டு திரைக்குப் பின் மறைந்து விட்டர்ர். திரையை நீக்கிய போது, ஜானவா தேவி அங்கில்லை. ஆனால் கோபிநாதர் பீடத்தில் நின்று கொண்டிருந்தார்! பின்னர், ராதாராணியின் இளைய சகோதரி ஆன அனங்க மஞ்சரியின் விக்ரஹம் இங்கு பிரதிஷ்டைக்கப்பட்டது. ஜானவா தேவி என்பவர், பகவானின் நித்ய லீலைகளில் அனங்க மஞ்சரியின் அம்சமாக ஜானவா தேவி தோன்றினார். வழக்கமாக, ராதாராணி கிருஷ்ணரின் இடப்புறம் நிறுத்தப்படுவார். ஆனால் இந்த கோயிலில், ஸ்ரீமதி ராதாராணி வலப்புறத்தில் நிற்கிறார். மற்றும் அனங்க மஞ்சரி இடப்புறத்தில் இருக்கிறார். இதில், லலிதா, விஷாகா மற்றும் ஸ்ரீ சைதன்ய மகாபிரபுவின் விக்ரஹங்களும் இந்த பீடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபடப்படுகின்றனர்.                                                                                                         Gouranga with Radha Krishna on the Altar of the Old Temple நோக்கம் 3: ஔரங்கசீப்பின் ஆட்சியில் முகலாயர்களின் ஆக்கிரமிப்புகள் கோபிநாத் கோயிலின் மீது ஏற்படுத்திய பாதிப்புகளையும், பின்னர் நடைபெற்ற மறுஅமைப்பையும் புரிந்து கொள்க. ஆப்கானியர்களை தோற்கடித்ததற்காக அக்பரால் பெருமளவு நிலம் வழங்கப்பட்ட ஸ்ரீ ராயசிலா ஷெகாவத், கோபிநாதர் கோயிலைக் கட்டினார். கோவிந்தஜி மற்றும் மதன-மோகன் கோயில்களுக்கு முன்பே இந்தக் கோயில் கட்டப்பட்டது. இந்தக் கோயில் ஔரங்கசீப்பின் வீரர்களால் உடைக்கப்பட்டு மாசுப்படுத்தப்பட்டது. வங்காளத்தைச் சேர்ந்த ஸ்ரீநந்த குமார் போஸ், கோபிநாதருக்கு ஒரு புதிய கோயிலைக் கட்டினார். நோக்கம் 4: கோபிநாத் கோயிலில் கொண்டாடப்படும் முக்கிய திருவிழாக்களைப் பற்றி அறிதல். இந்த கோயிலில் சில சிறப்புப் விழாக்கள் உள்ளன. அதில் முக்கியமானது ஜானவா உற்சவம். இது ஜானவா தேவியின் தெய்வீக தோற்றத்தை கொண்டாடுகிறது. மற்றொன்று பண் பீஹார் வேஷம், இது ஜூலான் உற்சவத்தின் அடுத்த நாளில் கொண்டாடப்படுகிறது. ஜூலான் உற்சவம் சிரவண மாதத்தின் (ஜூலை-ஆகஸ்ட்) வளர்பிறை மூன்றாம் நாளிலிருந்து, பௌர்ணமி (முழு நிலா) வரை தொடர்ந்து நடக்கிறது. நோக்கம் 5: ஔரங்கசீப்பின் ஆட்சிக் காலத்தில், விருந்தாவனத்தில் இருந்து ஜெய்ப்பூருக்குக் கொண்டு செல்லப்பட்ட ராதா-கோபிநாத விக்ரஹம் பற்றிய வரலாற்றுப் பயணத்தை அறிதல். கி.பி 1669 ஆம் ஆண்டு, ஔரங்கசீப்பின் ஆட்சிக் காலத்தில், ராதா-கோபிநாத்ஜியின் தெய்வீக புனித விக்கிரகங்கள் முதன்முதலில் காமாவிலிருந்து ஜெய்ப்பூரின் மாதோவிலாஸுக்கு 1775 ஆம் ஆண்டு மாற்றப்பட்டன. 1792 ஆம் ஆண்டு, அவர் இறப்பதற்கு முன், தீவான் ஸ்ரீ குஷாலி ராம் போஹ்ரா இந்த உருவங்களை ஜெய்ப்பூரின் புராணி பஸ்தியில் உள்ள தனது ஹவேலியில் பிரதிஷ்டை செய்து, அதை ஸ்ரீ கோபிநாத்ஜி மகாராஜின் கோயிலாக அர்ப்பணித்தார். இந்த ஹவேலி தெய்வீக நம்பிக்கையின் மையமாக மாறியது. அதன் பின்னர், பகவான் கோபிநாத்ஜி ஜெய்ப்பூரில் இருந்து, அதனை ஆசீர்வதித்து வருகிறார். கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு காலமாக, பகவான் கோபிநாத்ஜி ராஜஸ்தானின் பரத்பூரில் உள்ள காமாவில் (காம்-வான்) வசித்து வந்தார், அங்கு அவர் காம்-வான் இறைவனாக மதிக்கப்படுகிறார். வரலாற்று காலவரிசை மற்றும் முக்கிய நிகழ்வுகள்: த்வாபர யுகம் ● அரசன் கம்சன் தேவகியின் ஆறு மகன்களைக் கொன்று, யசோதா மகளான யோகமாயையையும் கொல்ல முயன்றார். ● பகவான் கிருஷ்ணர் அவதரித்து, வைகுண்டம் திரும்பினார். ● வஜ்ரநாபர், கிருஷ்ணரின் கொள்ளு பேரன், கோபிநாதரின் விக்ரஹத்தை உருவாக்கினார். யுக முடிவு ஏற்பட்டது. 1500-ஆம் ஆண்டுகளின் தொடக்கம் – கலியுகம் – கி.பி. 1502-க்கு பிறகு ● சைதன்ய மகாபிரபு விரிந்தாவன் தாமை கண்டறிந்தார் ● அதன் பின் மகாபிரபுவின் வேண்டுகோளின் பேரில் மதுப் பண்டிதர் (மற்றும் பிறரும்) விரிந்தாவனுக்கு வந்தனர். சுமார் 1503 அல்லது அதற்குப் பிறகு ● வம்சீவட்டத்தில் பரமாநந்த பட்டாசாரியார் ராதா-கோபிநாதர் வெளிப்பாட்டைப் பெற்றார்; ● பின்னர் ஸ்ரீ ராதா கோபிநாதர் ஆராதனையை மதுப் பண்டிதரிடம் ஒப்படைத்தார். சுமார் 1573 அல்லது அதற்குப் பிறகு ● ஷேகவாத் குலத்தவரான ராஜா ராயசில் தார்பாரி, நிதிவனுக்கு அருகில் சிவப்பு கல்லால் கோயிலை கட்டினார். 1669 வரை ● விருந்தாவனத்தில் பகவான் ராதா-கோபிநாதரின் தங்குதல் 1669 முதல் 1775 வரை ● ராதா குண்ட் மற்றும் காமாவில் (கம்வான்) தாக்கூர் தங்கியிருத்தல் 1775 ஆம் ஆண்டு, சாவன் புடி 13 (சனிக்கிழமை) ● ஜெய்ப்பூருக்கு வருகை 1792 வரை ● ஜெய்ப்பூர் மதோவிலாஸில் தங்கல் 1792 ஆம் ஆண்டு கார்த்திக ஶுக்லா 6 (வியாழக்கிழமை) ● தற்போதைய கோயில் வளாகத்திற்கு வருகை மற்றும் அதன் பிறகு தங்குதல் ஸ்ரீ மதுப் பண்டிட் அணிந்துகொண்ட புகழ்பெற்ற துளசி மாங்காஸ் ஆடை (சம்வத் 1602 ஆம் ஆண்டு), தற்போது ஜெய்ப்பூரின் கோயில் வளாகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. நோக்கம் 6: ஸ்ரீ கோவிந்த் தேவ்ஜி மகாராஜ் கோவிலில் தினசரி வழிபாட்டு முறைகளில் அஷ்ட-யம் சேவை முறை மற்றும் அதன் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ளல். கோவிந்த தேவ் ஜி மகராஜ் கோயில் என்பது மாதவியா கவுடிய சம்பிரதாய கோயில் ஆகும். மாதவியா கவுடிய சம்பிரதாயம் பெங்கால் நாட்டில் தோன்றி, அதனை ஸ்ரீ சைதன்ய மகாபிரபு நிறுவினார். இந்த சம்பிரதாயத்தின் அனைத்து கோயில்களும் மற்றும் பக்தி மையங்களும், கீழ்க்காணும் புராணங்கள் மற்றும் நூல்களில் விளக்கப்பட்ட வழிமுறைகள், நெறிமுறைகள் மற்றும் சிஸ்டங்களை கடைபிடிக்கின்றன: 1. ஹரி பக்தி விளாசா – இது ஸ்ரீமத் ஸனாதனா கோஸ்வாமி எழுதியது. 2. புரோஹித் தர்பணா – பண்டிட் சுரேந்திர மோஹன் பாட்டாச்சாரியார் தொகுத்தது. இங்கு நடைமுறைப்படுத்தப்பட்ட சேவை முறை, அஷ்டயாம் சேவை என அழைக்கப்படுகிறது. இதில் தினமும் பவுனர்களுக்காக ஒன்பது ஜான்கிகள்( அழகான தேர் போன்ற அமைப்பு)திறக்கப்படுகின்றன. ஒவ்வொரு ஜான்கிக்கும் அதனுடன் தொடர்புடைய கர்த்தா மற்றும் உணர்வுகளை பிரதிபலிக்கும் நிர்ணயிக்கப்பட்ட ஹைம்ஸ் (பாடல்கள்) (ஹிந்து மற்றும் த்ரூவு) பாடப்படுகின்றன. இவை ஹிந்தி அல்லது பெங்காலி மொழிகளில் இருக்கும். நோக்கம் 7: மதுப் பண்டிட்டின் வாழ்க்கையும், பக்தியும்; அவருக்கு, கதாதர பண்டிட்டுடனான தொடர்பும், ராதா கோபிநாத்தைக் கண்டுபிடித்த நிகழ்வும், அவர் வாழ்நாள் முழுவதும் செய்த சேவையும் அறிதல். 500 ஆண்டுகளுக்கு முன்பு விருந்தாவனத்தில் உள்ள வம்சி வட்டில் முதன் முதலில் வழிபடப்பட்ட ஸ்ரீ கோபிநாத் கடவுள் மீண்டும் தோன்றியது குறித்து இரண்டு வெவ்வேறு கதைகள் உள்ளன. அவற்றில் ஒன்றின் படி, கிருஷ்ணர் ஒரு தரிசனத்தில் பரமானந்த பட்டாச்சார்யா முன் தோன்றி, வம்சி வட்டில் உள்ள ஒரு மணற் குன்றிலிருந்து தமது விக்ரஹத்தை வெளியே எடுக்குமாறு அறிவுறுத்தினார். மற்றொரு பதிப்பு, இறந்து விடும் நிலையிலிருந்த வம்சி வட கிளையை, அம்மரம் முற்றிலும் அழிவதற்கு முன்பாக நடுவதற்கு பூமியைத் தோண்டிய போது, விக்ரஹத்தை கண்டுபிடித்தவர் மது பண்டிட் என்று கூறுகிறது. ராதா கோபிநாத் விக்ரஹத்தை மீண்டும் கண்டுபிடித்து நிறுவிய பெருமை மது பண்டிட்டுக்கு உண்டு. மது பண்டிட் நவத்வீபத்தில் உள்ள கதாதர் பண்டிதரின் சீடராக இருந்தார். மேலும் “கிருஷ்ணரைக் கண்டுபிடிக்க” அல்லது இறக்ககும் வரை முயற்சி செய்ய விருந்தாவனத்திற்குச் சென்றார். மது பண்டிட் தனது எளிமையான குடிசையில் 40 ஆண்டுகள் விக்ரஹத்தை வழிபட்டார். பல ஆண்டுகளுக்குப் பிறகு, ஜெய்ப்பூரைச் சேர்ந்த ராஜா ரைசால் ஷெகாவத் (ரே ஷில்ஜி) தற்போதைய சிவப்பு கல் கோயிலைக் கட்ட ஏற்பாடு செய்தார். கி.பி 1573 இல் பேரரசர் அக்பர் விரஜ் விருந்தாவனத்திற்கு வருகை தந்த சிறிது காலத்திற்குப் பிறகு மது பண்டிட் இந்தக் கோயிலைக் கட்ட ஏற்பாடு செய்தார். பரமானந்த பட்டாச்சார்யாவும் மது பண்டிதரும் பகவான் சைதன்யரின் மிக நெருங்கிய பக்தர்களில் ஒருவரான கதாதர பண்டிதரின் சீடர்கள் ஆவார்கள். மதுப் பண்டிட் தினமும் ஸ்ரீமத் பகவதம் வாசித்தார். அவர் ஸ்ரீ கோபிநாதரின் மலர் மாலையை ஸ்ரீநிவாஸ ஆச்சாரியருக்கு அருளியிருந்தார். அதற்குப்பின் ஸ்ரீநிவாஸ, நரோத்தம மற்றும் சாயமானந்த ஆகியோர் விருந்தாவனத்திலிருந்து வங்காளத்துக்கு போகும் போது, மாட்டு வண்டியில், அனைத்து கோஸ்வாமிகளின் கிரந்தங்களையும் எடுத்துச் சென்றனர். மதுப் பண்டிட் கோஸ்வாமி, கோலோக தாமத்தில் நித்திய லீலையில் சம்பாக லதா சகி குழுவில் சகியாக செயல்படுகிறார். நோக்கம் 8: ஜெய்ப்பூர் கோயிலில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்ரீ கோபிநாத் கைக்கடிகாரம் அணிந்து வரும் தனித்துவமான மரபை அறிதல். கடிகாரம் அணிந்துள்ள ஒரே விக்கிரகம் ஸ்ரீ கோபிநாதரின் ஒரு தனித்துவமான அம்சம், அவர் கடந்த 40 ஆண்டுகளாக கைக்கடிகாரத்தை அணிந்து வருகிறார். உள்ளூர் கதையின் படி, ஒருநாள் ஒரு ஆங்கிலேயர் ஜெய்ப்பூரில் அந்த கோயிலுக்கு வந்தார். அவரிடம் இந்த விக்ரஹம் உயிருள்ளவர் வெப்பம், குளிர், பசி மற்றும் தாகம் ஆகியவற்றை உணர்கிறார் எனக் கூறப்பட்டது. அதனைச் செவி மடுத்த அந்த ஆங்கிலேயர் கேலியாக சிரித்து, ஒரு கைகடிகாரத்தை அளித்தார். அக்கடிகாரம் நாடித்துடிப்பில் மட்டும் செயல்படக் கூடியது என்றார். விக்கிரகம் உயிரும் உணர்வும் உள்ளவர் என்பது உண்மையானால், அக்கடிகரத்தை பகவானுக்கு அணிவிக்கவும் என்றார். கடிகாரம் பகவானின் இடது கை மணிக்கட்டில் அணிவிக்கப்பட்டது. ஆனந்த அதிர்ச்சியாக, கடிகாரம் செயல்படத் தொடங்கியதை அங்கிருந்தோர் கண்டனர்! ஸ்ரீ கோபிநாத் அந்த கடிகாரத்தைத் திரும்பக் கொடுக்கவில்லை. இன்று வரை, 50 ஆண்டுகளுக்கும் மேலாக அந்தக் கடிகாரம் சரியாக இயங்கிக் கொண்டிருக்கிறது. அது தான் பகவானுக்கு மாற்று உடை அணிவிக்கும் பொழுது மட்டும் கடிகாரம் அகற்றப்படுகிறது. அது சமயம் கடிகாரம் செயல்படுவதில்லை. பிறகு மீண்டும் ஸ்ரீ கோபிநாதரின் கையில் கட்டப்பட்டவுடன், கடிகாரம் மீண்டும் துடிக்கத் தொடங்குகிறது. நோக்கம் 9: வேத முறைப்படி ஆன்மீக முன்னேற்றத்தின் மூன்று நிலைகள் — சம்பந்தம் (உறவு), அபிதேய (பயிற்சி), ப்ரயோஜனம் (இறுதி இலக்கு) — ஆகியவற்றைப் பற்றி அறிதல். வேதக் கொள்கைகளின் படி, ஸம்மந்த-ஜ்ஞான, அபிதேய, ப்ரயோஜன என்று கூறப்படும் மூன்று ஆன்மீக நிலைகள் உள்ளன. ● ஸம்பந்தம் (உறவு) ● அபிதேயம் (செயல் / நடைமுறை) ● ப்ரயோஜனம் (இறுதி இலக்கு) ஸம்மந்த-ஜ்ஞான என்பது புருஷோத்தமரான முழுமுதற் கடவுளுடனான ஒருவரது உண்மையான உறவினை நிலைநிறுத்துவதைக் குறிகின்றது. அபிதேய: என்பது அந்த ஸ்வரூப உறவில் செயல் படுவதைக் குறிக்கின்றது. ப்ரயோஜன என்பது பிரேமையை வளர்த்தல் என்னும் வாழ்வின் இறுதி குறிக்கோளைக் குறிக்கின்றது. (ப்ரேமா பும்-அர்தோ மஹான்) ஆன்மீக குருவின் கட்டளையின் கீழ் சட்ட திட்டங்களை ஒருவர் ஸ்திரமாக பின்பற்றுவாரேயானால், அவர் மிக எளிதில் வாழ்வின் இறுதிக் குறிக்கோளை அடைகிறார். ஹரே கிருஷ்ண மந்திரத்தை உச்சரிப்பதில் மயங்கியிருப்பவர் புருஷோத்தமரான முழுமுதற் கடவுளுக்கு நேரிடியாக சேவை செய்யும் வாய்ப்பினை மிக எளிதில் அடைகிறார். (சைதன்ய சரிதாம்ருதம்: ஆதி லீலை 7.73 பொருளுரை) “அர்ஜுனனுக்கு பகவத் கீதையைக் கற்றுக் கொடுப்பதன் மூலமாக ஸ்ரீ கோவிந்தர் சிக்ஷா-குருவைப் போல செயல்படுகிறார். தமக்குத் தொண்டு புரிவதற்கான வாய்ப்பையும் உபதேசங்களையும் அவரே நமக்கு வழங்குவதால், அவரே ஆதி குரு. சிக்ஷா குருவோ ஸ்ரீ கோவிந்த தேவ விக்கிரகத்தின் அந்தரங்க பிரதிநிதியாவார். ஸ்ரீ கோபிநாதரோ, ஆன்மீக வசீகரத்தின் இறுதி நிலையாக உள்ளார்”. (சைதன்ய சரிதாம்ருதம்: ஆதி லீலை 1.47 பொருளுரை) நோக்கம் 10: தூய கிருஷ்ண ப்ரேமத்தை அடைய, வழி காட்டும் ப்ரயோஜன ஆச்சாரியராக விளங்கும் ஸ்ரீல ரகுநாத தாஸ் கோஸ்வாமியின் பங்களிப்பை விவரித்தல். ஸ்ரீ ரகுநாத தாச கோஸ்வாமி நமது பிரயோஜன ஆச்சாரியர். கோபிநாத கிருஷ்ணர், முற்றிலும் சரணடைந்த பக்தர்களான கோபியர்களின் எஜமானர் மற்றும் உரிமையாளர். ஸ்ரீ கோபிநாத் பிரயோஜன-தத்துவத்தை (வாழ்க்கையின் இறுதி இலக்கு பற்றிய உண்மை – கிருஷ்ண பிரேம பக்தி) பிரதிநிதித்துவப்படுத்துகிறது. ஸ்ரீல ரகுநாத தாச கோஸ்வாமி ஸ்ரீல ரூப கோஸ்வாமியின் தாமரை பாதங்களைத் தனது உயர்ந்த லட்சியமாக ஏற்றுக்கொள்கிறார். இவ்வாறு ஸ்ரீ கிருஷ்ணருடனான ஒருவரின் அன்பான உறவின் பரிபூரணத்தை அடைவதற்கான வழியை அவர் வெளிப்படுத்துகிறார். ராதா-கோபிநாத விக்ரஹத்திற்கு பணிவான பிரார்த்தனைகள் மற்றும் சேவை மூலம், ஸ்ரீல ரகுநாத தாச கோஸ்வாமியின் போதனைகள் மற்றும் கருணையை புரிந்து கொள்வதன் மூலம், ஒரு பக்தர் பக்தி சேவையில் விரைவாக முன்னேறி இறுதியில், வாழ்வின் இலக்காகிய பிரேம-பக்தியை அடைய முடியும். “ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் வழியைத் தீவிரமான ஈடுபாட்டுடன் பின்பற்றும் கௌடிய வைஷ்ணவர்கள், திவ்ய நாம மஹா மந்திரத்தைத் குற்றங்களின்றி ஜெபித்து, தங்கள் பக்தி பாதையில் முன்னேறுகிறார்கள். அதன் மூலம், பரம புருஷருடனான உன்னத உறவின் உணர்வை (சம்பந்தம்) வளர்த்துக் கொள்ளவும், ஒருவருக்கொருவர் செலுத்தும் பாசத்தின் மென்மையான பிரதிபலனை (அபிதேயம்) பெறவும், இறுதியில், அன்பான சேவையில் (பிரயோஜனம்) விரும்பிய வெற்றியை அடையும் வாய்ப்பு பெறுகிறார்கள். இந்த மூன்று விக்கிரகங்களும் (மதன-மோஹன, கோவிந்தஜி, கோபிநாதர்) ஒருவரது முன்னேற்றத்தின் மூன்று நிலைகளில் வழிபடப்படுகின்றனர். ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவைப் பின்பற்றுபவர்கள் இந்த அணுகுமுறையை மிகுந்த கவனத்துடன் பின்பற்றுகிறார்கள்.” (சைதன்ய சரிதாம்ருதம்: ஆதி லீலை 1.19 பொருளுரை) பிரயோஜனம் குறித்து: “பிரேம-தன வினா வ்யர்த தரித்ர ஜீவன ‘தாஸ’ கரி’ வேதன மோரே தேஹ பிரேம-தன” “பிரேமையின்றி எனது வாழ்வு பயனற்றதாக உள்ளது. எனவே, நீங்கள் என்னை உங்களது சேவகனாக ஏற்று, பிரேமையின் பரவசத்தினை எனக்கு ஊதியமாகத் தரும்படி பிரார்த்தனை செய்கின்றேன்.” (சைதன்ய சரிதாம்ருதம்: அந்த்ய லீலை- 20.37) A unique embroidered tulasi-bead jacket and tulasi japa beads, both of which belonged to Madhu Pandit, are displayed in the courtyard. There are beautiful paintings on the walls. On the ceiling there are paintings of the rasa-lila.The temple is located in the Topkhanadesh area of Jaipur by Chandpol Bazaar.  Temple Courtyad and Entrance to Gopinath Mandir from the street   New temple entrance Samadhi of Madhu Pandit Goswami  The Samadhi of Madhu Pandit
Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare