7. நஹர்கர் கோட்டை

நோக்கங்கள்:

நோக்கம் 1: ஜெய்ப்பூரின் பாதுகாப்பு கட்டிடக்கலை மூலம் நஹர்கர் கோட்டையின் வரலாற்று முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்வது.

நோக்கம்2: மாதவேந்திர பவன் மற்றும் அதன் அரச தங்குமிடங்களின் கட்டிடக்கலை அம்சங்களைப் பற்றி அறிதல்.

நோக்கம்1: ஜெய்ப்பூரின் பாதுகாப்பு கட்டிடக்கலை மூலம் நஹர்கர் கோட்டையின் வரலாற்று முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்வது.

நஹர்கர் கோட்டை ஆரவல்லி மலைகளின் விளிம்பில், இந்திய மாநிலமான ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூர் நகரத்தை நோக்கி அமைந்துள்ளது. அமர் கோட்டை மற்றும் ஜெய்கர் கோட்டையுடன் இணைந்து, இக்கோட்டை ஒருகாலத்தில் ஜெய்ப்பூருக்கான ஒரு வலுவான பாதுகாப்பு வளையத்தை உருவாக்கியது. இந்த கோட்டைக்கு ஆரம்பத்தில் சுதர்ஷன்கர் என்ற பெயர் இருந்தது, பின்னர் இது நஹர்கர் என்று, அதாவது ‘புலிகளின் உறைவிடம்’ என பொருள்படும் படியாக அழைக்கப்பட்டது.

நஹர் என்பது இங்கு நஹர் சிங் போமியாவை குறிக்கும், இவர் ஒரு ஆவி வடிவில் இருப்பதை மக்கள் நம்பினர், மற்றும் அந்த ஆவி கோட்டையின் கட்டுமானத்திற்கு தடையாக இருந்ததாக கூறப்படுகிறது. அந்த ஆவியை அமைதிப்படுத்த, கோட்டையின் உள்ளே அவருக்காக ஒரு கோவில் கட்டப்பட்டது. அதன் பிறகு அந்த இடம் அவரின் பெயரால் அழைக்கப்பட்டது.

முக்கியமாக 1734 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இந்தக் கோட்டை, ஜெய்ப்பூர் மன்னர் மகாராஜா சவாய் ஜெய் சிங்கால், நகரத்திற்கு மேலே உள்ள மலைத்தொடரின் உச்சியில் ஒரு பாதுகாப்பிற்காக தங்கும் இடமாகக் கட்டப்பட்டது. சுற்றியுள்ள மலைகளின் மீது சுவர்கள் நீண்டு, இந்தக் கோட்டையை பழைய தலைநகரான அம்பருக்கு மேலே உள்ள கோட்டையான ஜெய்கருடன் இணைக்கும் கோட்டைகளை உருவாக்கின. கோட்டைக்கு இதுவரை எந்த நேரடித் தாக்குதலும் நடந்ததில்லை. இருப்பினும், இது சில முக்கிய வரலாற்று நிகழ்வுகளைக் கண்டுள்ளது, குறிப்பாக 18ஆம் நூற்றாண்டில் மராத்தா படைகளுடன் செய்யப்பட்ட உடன்படிக்கைகள். 1857ஆம் ஆண்டு இந்தியக் கிளர்ச்சியின் போது, ஜெய்ப்பூரின் மன்னர் சவாய் ராம் சிங், அந்த பகுதியிலுள்ள ஐரோப்பியர்கள் மற்றும் பிரிட்டிஷ் தூதரின் மனைவியையும் நஹர்கர் கோட்டைக்கு பாதுகாப்புக்காக அழைத்துச் சென்றார்.

நோக்கம்2: மாதவேந்திர பவன் மற்றும் அதன் அரச தங்குமிடங்களின் கட்டிடக்கலை அம்சங்களைப் பற்றி அறிதல்.

1868ஆம் ஆண்டு சவாய் ராம் சிங்கின் ஆட்சி காலத்தில் இந்த கோட்டை விரிவாக்கப்பட்டது.

1883-92 காலத்தில் டிர்க் படேல் என்பவரால் சுமார் மூன்றரை லட்சம் ரூபாய் செலவில் பல அரண்மனைகள் கட்டப்பட்டன. சவாய் மதோ சிங் கட்டிய மாதவேந்திர பவனில் ஜெய்ப்பூர் அரச குடும்பத்தைச் சேர்ந்த ராணிகளுக்கு வசதியான அறைகள் இருந்தன. மேலும், மன்னருக்காக தனி வசதியுடன் கூடிய அறையும் இருந்தது. அந்த அறைகள் எல்லாம் ஒரு அழகான நடைபாதையில் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டு நுட்பமான சுவரோவியங்களுடன் காணப்படுகிறது. நஹர்கர் மஹாராஜாக்களின் வேட்டைக்கான குடியிருப்பாகவும் இருந்து வந்தது.

1944 ஏப்ரல் மாதம் வரை, ஜெய்ப்பூர் அரசு அதன் அதிகாரப்பூர்வ நடவடிக்கைகளுக்கு ஜந்தர் மந்தரில் அமைந்துள்ள கண்காணிப்பகத்திலுள்ள சாம்ராட் எந்திரத்தின் சூரிய கடிகார நேரத்தை பயன்படுத்தியது. அந்த சாம்ராட் கருவியில் நேரத்தை பார்த்து, நேர சமிக்ஞையாக(signal) நஹர்கர் கோட்டையிலிருந்து துப்பாக்கி சுடப்படும். இவ்வாறாகவும் நஹர்கர் கோட்டை பயன்படுத்தப்பட்டது.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare