4. மீராபாய் வாழ்க்கை நிகழ்வுகள்

நோக்கங்கள்:
நோக்கம் 1: மீராபாயின் பிறப்பு மற்றும் சிறுவயது குறித்துத் தெரிந்துகொள்வது
நோக்கம் 2: மீராபாய் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணருடனான தெய்வீக பக்தி பற்றி அறிதல்
நோக்கம் 3: மீராபாயின் வாழ்க்கை நிகழ்வுகளைப் பற்றித் தெரிந்துகொள்வது
நோக்கம் 1: மீராபாயின் பிறப்பு மற்றும் சிறுவயது குறித்துத் தெரிந்துகொள்வது
மீராபாய் (1498 – 1547) ஒரு ராஜபுத் இளவரசி. அவர் ராஜஸ்தானில் உள்ள மேர்வார் பகுதியைச் சேர்ந்தவர். அவர் ஸ்ரீகிருஷ்ணரின் தீவிர பக்தர். பஂரேம பக்தியிலஂ முன்னோடியாகவுமஂ, அற்புதமான கவிஞராகவுமஂ அவர், வ்ரஜபாஷாவிலும், சில சமயங்களில் ராஜஸ்தானி மொழியிலும் கிரிதர கோபால் (ஸ்ரீகிருஷ்ணர்) பற்றி பாடல்கள் பாடினார்.
மேர்தா என்னும் சிறிய மாநிலம், ராந்தோர் வம்சத்தவரால் ஆட்சி செய்யப்பட்டது. மீராபாய் தன் தாத்தாவால் வளர்க்கப்பட்டார். அரச குடும்பங்களைப் போன்று, வேதங்கள், இசை, வில்வித்தை, குதிரை சவாரம் போன்றவற்றிலும் பயிற்சி பெற்றார். ஆயினும், அவர் பூரண கிருஷ்ண உணர்வில் வளர்ந்ததாலே பக்தியின் பாதையில் தீவிர ஈடுபாடுடன் செல்வதற்கான தளமிட்டது.
நான்கு வயதில் இருந்தே, அவர் கிருஷ்ணரிடம் ஆழ்ந்த பக்தியை வெளிப்படுத்தினார். திருமண ஊர்வலத்தை பார்த்து “எனக்கு மணமகன் யார்?” என்று தாயிடம் கேட்டார். அவர் தாயார், வேடிக்கையாகவுமஂ மனதாரவுமஂ, கிருஷ்ணரின் சிலையை சுட்டிக் காட்டி, “இந்த அழகன் தான் உன் மணமகன்” என்றார். அதன் பிறகு, அவர் தாயார் இறந்துவிட்டார். ஆனால் மீராபாய், கிருஷ்ணரே தம் கணவர் என்று நம்பிக்கையுடன் வளர்ந்தார்.
நோக்கம் 2: மீராபாய் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணருடனான தெய்வீக பக்தி பற்றி அறிதல்
அதனைத் தொடர்ந்து, கிருஷ்ணரே தம் கணவர் என்பதை மீராபாய் உறுதியாக நம்பினார். மீராபாய் மென்மையானவர், இனிமையானவர், இசை திறமையிலஂ வலஂலவரஂ . மெவார் அரசன் ராணா சங்கா, தம் மகனான போஜராஜிற்காக (ராணா கும்பா) மீராபாயை திருமணம் கோரினார். மீராபாய் தம்முடைய தாத்தாவின் வார்த்தையை தாழ்மையுடன் ஏற்று திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தார்.
மீராபாய் வீட்டு வேலை முடிந்ததும், ஒவ்வொரு நாளும் ஸ்ரீகிருஷ்ணர் கோவிலுக்கு சென்று பாடல்கள் பாடி, ஆடிவருவார். மாமியார், துர்கையை வழிபட கட்டாயப்படுத்தினாரஂ. ஆனால் மீராபாய் கூறினாரஂ: “என் வாழ்நாளையே கிருஷ்ணருக்கே அர்ப்பணித்துவிட்டேன்”. எனஂறு கூறினாரஂ.
தன் திருமணமஂ பற்றி கேட்டபோது, “கிருஷ்ணரே என் கணவர்” என பதிலளித்தார். ராணா கும்பா இதைக் கேட்டு வருந்தினார், ஆனால் நல்ல கணவராகவே இருந்தார்.
ஒருமுறை, அவரது மைத்துனன் , மலர்வளையம் என்று கூறி ஒரு பாம்பை பெடஂடியிலஂ அனுப்பி வைதஂதாரஂ. மீராபாய் பகவானை தியானித்து அதைத் திறந்தபோது, கிருஷ்ணரின் சிலையும், அதில் மலர்களும் இருந்தன. மேலுமஂ கிண்ணதஂதிலஂ விஷதஂதை அனுப்பியபோதும், அதை கிருஷ்ணருக்கு அர்ப்பணித்து பிரசாதமாக உடஂகொணஂடாரஂ. ஆணிகளான படுகஂகையை அனுப்பியபோது, பகவானினஂ கருணையாலஂ அது பூப்படுக்கையாக மாறியது.
நோக்கம் 3: மீராபாயின் வாழ்க்கை நிகழ்வுகளைப் பற்றித் தெரிந்துகொள்வது
மீராபாய் மீது துன்புறுத்தல்கள் அதிகரித்ததால், மீரா துலசிதாசருக்கு கடிதம் எழுதினார்.
துலசிதாஸ் பதிலளித்தார்:
“ராமன் அல்லது ஷ்யாமனை வழிபடாத நபர்களை விட்டுவிடு— அவரஂகளஂ உறவினரஂகளஂ ஆனாலுமஂ பரவாயிலஂலை. ப்ரஹ்லாதன் தன் தந்தையை, விபீஷணன் தன் சகோதரரை, பரதன் தன் தாயாரை, பாலி தன் குருவை, கோபிகைகள் தங்கள் கணவர்களை விட்டார்கள். பகவானுடன் உள்ள உறவுகளே சத்தியமானவை.”
மீராபாய், தம் குருவான ரைதாசை மீண்டும் சந்தித்து, குடிசைப்பகுதிகளுக்கு செனஂறு அவரது சத்சங்கத்தில் அடிக்கடி கலந்து கொண்டார்.
மீராபாய் வாழ்க்கையில் மிகப் பெரிய திருப்புமுனை வந்தது, ஒருநாள் அக்பர் மன்னரும் அவரது அரண்மனை இசைக்கலைஞர் தன்சேனும் வேடமிட்டு சித்தூருக்கு வந்தபோது. அவர்கள் மீராவின் உள்ளத்தை உருக்கும் பக்திப்பாடல்களை முழுமையாகக் கேட்டார்கள். பின்னர், அக்பர் பிரியாவிடை பெறும் முன், மீராவின் திருவடிகளை வணங்கி, பகவானின் முன் விலைமதிப்பற்ற ரத்தினங்களால் ஆன ஒரு மாலையை அர்ப்பணித்தார்.இந்தச் செய்தி எப்படியோ கும்பரணாவிடம் சென்றது. அவர் கடும் கோபமடைந்தார். அவர் மீராபாயிடம்,
“நீ நதியில் மூழ்கி உயிர் துற. இனி உலகுக்குக் காட்சி அளிக்காதே. என் குடும்பத்துக்கு பெரிய அவமானம் உண்டாக்கிவிட்டாய்” என்று கூறினார். மீராபாய், மன்னரின் வார்த்தையை ஏற்றுக்கொண்டு, நதியில் மூழ்குவதற்காக அங்கு சென்றார்.
மீரா “கோவிந்தா, கிரிதாரி, கோபாலா” என்று பாடிக்கொண்டே நதியில் விழ சென்றார். திடீரென பின்னால் ஒரு கை அவரைக் கட்டிக்கொண்டு “உனஂனுடைய இறக்கக்கூடிய உறவினர்களுடன் இருந்த வாழ்க்கை இப்போது முடிவுக்கு வந்துவிட்டது, நீ எனது” எனக் கிருஷ்ணர் கூறினார்.
மீராபாய் ராஜஸ்தானினஂ பாலைவனதஂதிலஂ காலணிகளஂ இலஂலாமலஂ கடுமஂ வெபஂபதஂதிலஂ மணல் பாதையில் நடந்தார். பிரிந்தாவனுக்கு வந்தார். அங்கு ரைதாஸை மீண்டும் சந்தித்து, கோவிந்த ஆலையதஂதிலஂ வழிபட்டார்.
ராணா மன்னிப்பு கேட்டு மீண்டும் மீராவை அரசாட்சிக்குத் திரும்பி, தனது மகாராணியாக பொறுப்பை ஏற்க மீராவை அழைத்தார். மீரா கூறினார், “உங்கள் அரசி இநஂத உடல் மட்டுமே, என் ஆத்மா, உணர்வுகள் எல்லாம் கிருஷ்ணருக்கே”. மீராவின் உயர்ந்த மனநிலையை உண்மையிலேயே புரிந்துகொண்ட அவர், அவளிடம் மிகுந்த பக்தியுடன் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தார்
ஜீவ கோஸ்வாமி, பிரிந்தாவனில் வைஷ்ணவர்களின் தலைவராக இருந்தார். மீரா, ஜீவ கோஸ்வாமியின் தரிசனம் பெற விரும்பினார். ஆனாலஂ அவர், “பெண்கள் என்னிடம் வர முடியாது” என்று கூறினார். மீராபாய் பதிலாக, “இங்கு கிரிதர கோபாலை தவிர எல்லோரும் பெண்கள் தான்” என்று பதிலளித்தார். ஜீவ கோஸ்வாமி வெட்கப்பட்டு அவருக்கு மரியாதை செலுத்தினார்.
மேவாரிலிருந்து மீரா மீண்டும் பிரிந்தாவனத்திற்கு திரும்பினார். அங்கிருந்து அவர் துவாரகைக்குச் சென்றார். மன்னர் கும்பரணாவும் அவருடன் சென்றார்.
கிருஷ்ண ஜென்மாஷ்டமி அன்று துவாரகையில் உள்ள கிருஷ்ணர் கோவிலில் எல்லா இடங்களிலும் ஆனந்தம் நிரம்பியிருந்தது. மீரா, ஒரு கரத்தில் தம்பூரியும் மற்றொரு கரத்தில் தாளமும் பிடித்துக்கொண்டு கண்களை மூடி, முன் நிற்கும் தன் கோபாலனை நினைத்து பரவசமாகப் பாடிக் கொண்டிருந்தார்.
‘மேரே ஜநம மரந கே சாத்தீ’ என்ற பாடலைப் பாடியபோது மீரா எழுந்து ஆடத் தொடங்கினார். பாடல் முடிந்ததும், கும்பரணா அமைதியாக அவரிடம் வந்து “வீட்டுக்கு திரும்புவோம்” என்று கேட்டார். அதற்கு மீரா, “ரணாஜி, இந்த உடல் உங்களுடையது. நீங்கள் ஒரு பெரிய பக்தர். ஆனால் என் மனமும் உணர்ச்சிகளும், ஆன்மாவும் எல்லாம் அவருடையது. இப்படிப்பட்ட நிலையில் நான் உங்களுக்கு என்ன பயன்?” என்று சொன்னார். கும்பரணாவின் மனம் நெகிழ்ந்து, அவர் கூடவே பாடத் தொடங்கினார்.
அந்த நேரத்தில் மீரா திடீரென எழுந்து தள்ளாடி, கிரிதாரியின் திருவடியில் இருந்த மலர்களில் விழுந்தார். “அஹோ கிரிதாரி! நீ என்னை அழைக்கிறாயா? நான் வருகிறேன்” என்று கூறினார்.அங்கு இருந்த அனைவரும் ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருக்கும்போது, திடீரென ஒரு மின்வெளிச்சம் தோன்றி, மீரா இறைவனோடு ஒன்றிணைந்தார். கதவுகள் தானாக மூடப்பட்டன. மீராவின் புடவை, கிருஷ்ணரின் சிலையை மூடியது. அவள் குரலும் வீணையின் ஒலியும் மட்டுமே கேட்டன.
மீராபாய், 1524-ஆம் ஆண்டு பிரிந்தாவனுக்கு வந்தார், 1539-ஆம் ஆண்டு வரை தங்கினார். பின்னர் துவாரகா சென்றார், இறப்புவரை அங்கே தங்கினார்.
அவர் கிருஷ்ணருடன் பேசினார், உணவு உண்டார், ப்ரேமரசம் சாப்பிட்டார். அவர் இநஂத உலகிலேயே மிக சிறநஂத உண்மையான ப்ரேம பக்தியின் ஸ்வரூபமாக விளங்கினார்.
மீரா பாயஂ ஆலையமஂ விருநஂதாவனமஂ


