2. ஜெய்சிங், பாலதேவ வித்யாபூஷணன் மற்றும் ராதா-கிருஷ்ணர்
வழிபாட்டின் அதிகாரத்தை நிறுவுதல்

நோக்கங்கள்:
நோக்கம் 1: தில்லி சுல்தானராட்சி முதல் மொகலாயராட்சி காலத்திற்கு இடையிலான மாற்றத்தின்போது கிருஷ்ணர் கோயில்களின் வரலாற்றுப் பின்னணியைப் புரிந்துகொள்வது.
வட இந்தியாவின் அரசியல் சூழ்நிலை பல நூற்றாண்டுகளாகப் பெரும் மாற்றங்களைச் சந்தித்தது, இது மத வழிபாடுகள் மற்றும் அரசுகளின் இயல்பையும் பாதித்தது.
தில்லி சுல்தானராட்சி (சுமார் 1192-1526 AD):
மம்லூக், கில்ஜி, துக்லக், சயித், பதானி/லோடி ஆகிய ஐந்து முக்கிய வம்சங்களால் சுமார் மூன்று நூற்றாண்டுகள் நாட்டை ஆட்சி செய்த இந்த காலக்கட்டம், வட இந்தியாவில் உள்ள பிராந்திய இந்து அரசுகளின் ஆட்சியின் முடிவை குறிப்பது.
மொகலாயப் பேரரசு (1526-ஆம் ஆண்டு தொடக்கம்):
1526-ஆம் ஆண்டு பானிபத் போரில் இப்ராஹீம் லோடியை பாபர் தோற்கடித்ததன் மூலம் மொகலாயப் பேரரசு எழுச்சியடைந்தது. பின் இந்தியாவின் பெரும்பாலான பகுதிகள் மொகலாய அதிகாரத்தின் கீழ் வந்தன.
மொகலாய மதக் கொள்கைகள்:
மொகலாய ஆட்சி பொதுவாக இந்துக்களுக்கு எதிரானத் துன்புறுத்தலாக இருந்தாலும், சில முக்கிய சலுகைகளும் இந்துக்களுக்கு இருந்தன.
அக்பரின் மத சகிப்புத்தன்மை:
அக்பர் (ஆட்சி: 1556–1605) மத சகிப்புத் தன்மையைக் காட்டினார் மற்றும் இந்து நிறுவனங்களுக்கு ஆதரவு அளித்தார். அவர் மதுராவில் உள்ள பல கோயில்களுக்கு நிலங்களை தானமாக அளிதஂதாரஂ, 1562-இல் இந்துக்களுக்கு விதிக்கப்பட்ட புனித யாத்திரை வரியை நீக்கினார், மேலும் 1564-இல் முஸ்லிமல்லாதவர்களுக்கு விதிக்கப்பட்ட ஜீஜியா வரியை ரத்து செய்தார்.
ஜஹாங்கீர் ஆட்சி:
ஜஹாங்கீர் தனது ஆட்சியில் கோயில்களுக்கு நில வழங்கும் கொள்கையைத் தொடர்ந்தார். 1632-இல் தோடர் மால் வழங்கிய நில உரிமையை “நிரந்தர பேரரசு நில வழங்கலாக” மாற்றினார்.
அவுரங்கசீப்பின் துன்புறுத்தல்:
இதற்குப் பின்னாக, அவுரங்கசீப் (ஆட்சி: 1658–1707) 1669-இல் இந்து கோயில்கள் மற்றும் விக்ரங்கள் அழிக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டார். இதனால் கோவில் விக்ரங்கள், பூசாரிகள் மற்றும் பக்தர்களுக்கு பெரிய ஆபத்து ஏற்பட்டது.
நோக்கம் 2: வ்ருந்தாவனில் கிருஷ்ண பக்தியை மீண்டும் உயிர்ப்பிக்கவும், கோயில் கட்டிடங்களுக்கும், விக்ரக வழிபாட்டிற்கும் அரச ஆதரவைக் கிடைக்கச் செய்வதிலும், கௌடிய வைஷ்ணவர்கள் வகித்த பங்கையும் அவர்களின் தாக்கத்தையும் புரிந்துகொள்வது
வ்ருந்தாவனில் உள்ள கௌடிய வைஷ்ணவர்கள் மற்றும் அவர்களுக்குக் கிடைத்த ஆதரவு கௌடிய வைஷ்ணவ இயக்கம், வ்ருந்தாவனை ஒரு ஆன்மீக மையமாக மீண்டும் உயிர்த்தெழச் செய்ததில் முக்கிய பங்கு வகித்தது.
மகான் சைதன்யரின் பணி (1512 முதல்):
மகான் சைதன்யர் 1512-ஆம் ஆண்டு மதுராவுக்கு வந்தார். அங்கு கிருஷ்ணர் தனது லீலைகள் புரிந்த புனித இடங்களை அடையாளம் காண அவர் முனைந்தார். அவர் ரூப கோஸ்வாமி மற்றும் சனாதன கோஸ்வாமிக்கு வ்ருந்தாவனை வ்ருந்தாவனை புனர் நிர்மாணித்து, அதனை கிருஷ்ணருக்கே அர்ப்பணிக்க உத்தரவிட்டார்.
ரூப மற்றும் சனாதன கோஸ்வாமிகளின் பங்களிப்பு:
அவர்கள் கிருஷ்ணரின் வாழ்க்கையின் புனித இடங்களை மட்டுமல்லாமல், மகான் சைதன்யரின் தத்துவத்தைக் கொண்ட நூல்களையும் எழுதினர்.
ஜீவ கோஸ்வாமியின் முக்கிய பங்கு:
அவர்களின் மருமகனான ஜீவ கோஸ்வாமி, அவர்களின் பணிகளைத் தொடர்ந்து வழிநடத்தினார். கிருஷ்ணருக்கான வழிபாட்டிற்காக மகத்தான கோயில்களை கட்டும் பணிகளை மேற்பார்வை செய்தார். விரிவான தத்துவ நூல்களை எழுதியதோடு, மதநூல்களையும் பரப்பினார்.
தத்துவத்திற்கும் அதிகமாக, கோயில்களுக்கான நிலங்களைப் பெற்றுக் கொள்வதிலும், பொறுப்பாளர்களை நியமிப்பதிலும், மந்திரிகளை நாடி அரச ஆதரவைக் கோருவதிலும் அவர் முக்கிய பங்காற்றினார். அவர் கோவிந்ததேவ் மற்றும் மதனமோகன் போன்ற முக்கிய கோயில்களுக்கு அரச அங்கீகாரமும் நில ஒதுக்கீட்டயும் பெற்றுத் தந்தார். வ்ருந்தாவனை வட இந்தியாவில் வைஷ்ணவத்திற்கான முக்கியத் தலமாக நிறுவுவதில் அவரது பணி முக்கியமானது.
மொகலாய அரச ஆதரவு:
தோடர் மால்:
ஒரு மொகலாய அமைச்சர் மற்றும் கௌடிய வைஷ்ணவ சமயப் பாதையின் ஆதரவாளராக இருந்த அவர், முக்கிய கோயில்களின் பொறுப்பாளர்களுக்கான அதிகாரப்பூர்வ அங்கீகாரத்திற்காக அக்பரிடம் கோரிக்கை வைத்தார். மேலும், இந்த கோயில்களுக்கு நில ஒதுக்கீட்டுகளுக்கும் ஏற்பாடு செய்தார். 1584-ஆம் ஆண்டு, மதனமோகன் கோயிலுக்காக 100 பீகா நிலம் வழங்கப்பட்டது.
மான் சிங்:
முக்கியமான ஒரு ஆதரவாளராக, அவர் கோயில்கள் மீளமைப்பில் பங்கு கொண்டார் (எ.கா., புரி ஜகந்நாதர் கோயில்) மற்றும் வ்ருந்தாவனில் “மிகப் பெரிய” கோவிந்ததேவ் கோயிலைக் கட்டினார்.
நோக்கம் 3: வ்ருந்தாவனிலிருந்து கோவிந்ததேவ் விக்ரஹம் வெளியேறியதின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்வதும், அப்பெருமானைப் பாதுகாப்பதற்காக இடம்பெயரச் செய்த சூழ்நிலைகள் பற்றியும் அறிந்து கொள்வது.
வ்ருந்தாவனிலிருந்து கோவிந்ததேவின் புறப்பாடு
அவுரங்கசீப்பின் 1669 ஆம் ஆண்டுக்கான உத்தரவைத் தொடர்ந்து, விக்ரங்களைப் பாதுகாக்க அவற்றை இடமாற்றம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
விக்ரங்களுக்கு ஏற்பட்ட அபாயம்:
விக்ரங்கள், அர்ச்சகர்கள் மற்றும் யாத்திரிகர்கள் பேராபத்தில் மாட்டினர். இதனால் வைஷ்ணவ அர்ச்சகர்கள், ராஜஸ்தானின் ஹிந்து அரசவங்களை அணுகி பாதுகாப்பு கோரினர்.
கோவிந்தரின் பயணம்:
வ்ருந்தாவனின் முக்கிய விக்ரகமாக கருதப்படும் கோவிந்தர், தனது ஏழு மாடிக் கோவிலிலிருந்து ராதா-குண்டிற்கு இரகசியமாகஎடுத்துசெல்லப்பட்டர். பின்னர் காமனுக்குக் (கட்டிட மிக்க நகரம்) கொண்டு செல்லப்பட்டு, இறுதியில் அம்பர் நகரில் பாதுகாக்கப்பட்டார்.
ராஜ்புத் ஆதரவு:
ஜாட்களுக்கு எதிராக முகலாயர்களுடன் கூட்டிணைந்திருந்தாலும், அம்பர் நகரின் ராஜ்புத் அரசர்கள், முகலாயர்கள் அழிக்க விரும்பிய வ்ருந்தாவன விக்ரங்களுக்கு ஆதரவாக இருந்தனர்.
1671ஆம் ஆண்டில், அம்பர் மன்னரான ராம் சிங், கோவிந்தரை தற்காலிகமாகக் காமனுக்குத் இடமாற்றம் செய்ய உத்தரவிட்டார். ஆனால், கோவிந்தர் மீண்டும் வ்ரிந்தாவனுக்குத் திரும்பவில்லை.
நோக்கம் 4: மஹாராஜா சவாய் ஜெயசிங்க் II அவர்களின் கோவிந்த தேவ் ஜீ கோயிலின் நிறுவலிலும் அதனை ஒரு அரச மற்றும் மத அதிகாரத்தின் மையமாக்கிய பங்களிப்பையும் புரிந்துகொள்வது.
மஹாராஜா சவாய் ஜெயசிங் II மற்றும் மத அடிப்படையிலான அரசியல் வளர்ச்சிகள் .
மஹாராஜா சவாய் ஜெயசிங் II-ன் ஆட்சி (1699–1743) மதம் மற்றும் அரசியல் ஆகியவற்றில் முக்கியமான வளர்ச்சிகளை அடைந்த காலமாகும்.
பரிபாலனத்தின் மூலம் அரசியல் வளர்ச்சிகள்:
ஜெயசிங் II போன்ற அரசர்கள், குறிப்பாக ஹிந்துப் பண்பாட்டைச் சேர்ந்தவர்களாக சட்டப்பூர்வமாக தங்களை நிறுவ அவர் பல்வேறு மத நிறுவனங்களை ஆதரித்தார், சீர்திருத்தங்களை மேற்கொண்டார், மற்றும் தனது ஆட்சியை ‘தர்மத்தின்’ அடித்தளத்தில் அமைத்தார். இந்த மத ஆதரவில் மஸ்ஜித்கள் கட்டும் முயற்சிகளும் இடம்பெற்றுள்ளன, இது அவரது விரிவான அணுகுமுறையை காட்டுகிறது.
மத மற்றும் அரசியல் வளர்ச்சிகள்: 18ஆம் நூற்றாண்டில், அரசு அதிகாரம் மற்றும் சில மதக் குழுக்களுக்கிடையில் பதற்றங்கள் ஏற்பட்டன. ஜெயசிங் II, தனது ஆட்சிக்குட்பட்ட பகுதிகளில் இருந்த கௌடீய வைஷ்ணவம், நிம்பார்கா, ராமானந்தீ மற்றும் வல்லப சமயங்களிடையே ஒற்றுமையை ஊக்குவிக்க முயன்றார்.
ஜெயசிங்கின் சீர்திருத்தங்கள்:
சந்நியாசிகளை ஒழுங்குபடுத்தும் வகையில் அவர் சில கட்டளைகளை பிறப்பித்தார். அவற்றில், அவர்கள் துப்பாக்கிகள் வைத்திருக்கக்கூடாது என்றும், திருமணத்திற்குப் புறம்பான பெண்களுடன் தொடர்பு கொள்ளக்கூடாது என்றும் கூறினார். மேலும், திருமணம் செய்ய உத்தரவிடப்பட்ட சந்நியாசிகள் இருப்பதற்காக நிலமும் தங்குமிடமும் கொண்ட “வேராக்யபுரா” எனும் குடியிருப்பு பகுதியை நிறுவினார்.
நோக்கம் 5: ராமானந்தி பந்துக்களால் எழுந்த தத்துவ சவாலின் தன்மை மற்றும் அதன் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்வது.
ராமானந்தீர்களின் சவால் மற்றும் பாலதேவ வித்யாபூஷணரின் எழுச்சி
அம்பருக்கு கோவிந்ததேவரின் வருகை, ராமானந்திகளின் நிலையான மத அதிகாரத்திற்கு ஒரு சவாலாக அமைந்தது.
ராமானந்தி ஆதிக்கம்: ராமானந்திகளஂ, அமஂபரஂ அரசில் தலைமுறை தலைமுறையாக ஒரு சிறப்பு நிலையைக் கொண்டிருந்தனர். கல்தா (Galta) பகுதி, அவர்கள் வடக்குப் பரப்பின் தலைமையகமாக விளங்கியது.
கோவிந்தரின் பிரபலமாக்கம்:
கோவிந்தரின் அமஂபருக்கான வருகையும், அங்குள்ள அரச குடும்பத்தினரிடையே ஏற்பட்ட ஆன்மிக ஈர்ப்பும், ராமானந்தி ஆதிக்கத்துக்கு எதிராகச் செயல்பட்டது. ஜெயசிங் II ஒரு “ கோவிந்தரின் சிறந்தப் பக்தர்” என்பதும், அவரது ஆன்மிக பயணத்தின் முக்கிய கட்டமாக கோவிந்தரின் வருகை கருதப்பட்டது.
ராமானந்தீர்களின் எதிர்ப்புகள்:
● அங்கீகரிக்கப்படாத பரம்பரை:
கௌடிய பரம்பரையை அவர்கள் “அங்கீகரிக்கப்படாத ஐந்தாவது பரம்பரை” என்று கூறினர். “நான்கு சம்பிரதாயங்கள் மட்டுமே உள்ளன (ஸ்ரீ, பிரம்மா, ருத்ரா, குமாரா), ஐந்தாவது இல்லை” என்பதே அவர்களது வாதம்.
● ராதா-கிருஷ்ண பக்தி (பராகீயா தத்துவம்):
“இவர்கள் திருமணமானவர்கள் அல்ல” என்பதற்காக ராதா மற்றும் கிருஷ்ணரை இணைந்து வழிபடுவதை அவர்கள் நிராகரித்தனர். பரகீயா லீலை (திருமணமாகாத அல்லது பிற பெண்களுடன் கிருஷ்ணரின் உறவுகள்) ஒரு தெய்வீக நிலையாக ஏற்க முடியாது என்றும், அது ஒழுக்கநெறிக்கு எதிரானது என்றும் வாதிட்டனர். ராதா-கிருஷ்ணரை இணைந்து வழிபடுவதற்கான முன்னோடி எதுவும் இல்லையெனவும் கூறினர்.
●நாராயண பக்தியின் புறக்கணிப்பு: கௌடியர்கள் நாராயணரை முதலில் வழிபடாமல் கிருஷ்ணரையே நேரடியாக வழிபடுவதை ராமானந்திகள் கடுமையாக விமர்சித்தனர்.
ஜெயசிங்கின் நிலை:
● பராகீயா லீலைக்கான விரோதம்: ஜெயசிங் II, தனது இராஜ்ய விக்ரகமாக ஸ்ரீ ஸ்ரீ ராதா கோவிந்தரை ஆழமாகப் பக்தியுடன் வழிபட்டாலும், ராதா-கிருஷ்ணரின் பரகீயா உறவுகளுக்கான வழிபாட்டில் ஒரளவு கவலையைத் தெரிவித்தார். மன்னராக உள்ளவர் ஒழுக்கம் நிலைநிறுத்த வேண்டும் என்பதால், அவர் ஸ்வகீயா லீலையை (திருமண உறவான பக்தி) நற்பண்புக்கான மாதிரியாக விரும்பினார்.
● ஜெயசிங்கின் கட்டளை: ராமானந்தீர்களை சமாதானப்படுத்துவதற்காக, கௌடியர்களிடம்:
● ராதாராணியின் மூர்த்தியை தனி அறையில் வைக்க வேண்டும்,
● நாராயண பக்தியை ஏன் புறக்கணிக்கிறார்கள் என்பதை விளக்க வேண்டும்,
● மத்வ சம்பிரதாயத்துடன் தங்கள் தொடர்பை நிரூபிக்க வேண்டும் என்று கூறினார். மேலும், அவர் பிரம்ம சூத்ரங்களுக்கு ஒரு உரை எழுத கௌடிய வைஷ்ணவர்களை கேட்டார். அதில் அவர்கள் மத்வ சம்பிரதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை தெளிவாக நிரூபிக்க வேண்டும் எனக் கூறினார்.
விஷ்வநாத சக்ரவர்த்தியின் பங்கு:
விஷ்வநாத சக்ரவர்த்தி,புகழ்பெற்ற கௌடிய வைஷ்ணவ ஆசார்யர் ஆவார்.பராகீயா வாதம் (திருமணமில்லாத பக்தி உறவு) எனும் தத்துவத்திற்க்கு ஆதரவு அளித்தார்.
ஜெயசிங்கின் அழைப்பைப் பெற்றபோது, தாம் விருந்தாவனத்தை விட்டு வெளியே செல்ல மாட்டோம் என்று உறுதிமொழி எடுத்திருந்ததால், தனது சீடரான பலதேவ வித்யாபூஷணரை ஜெய்ப்பூருக்கு அனுப்பினார். அவர் கௌடிய சமயத்தை பிரதிநிதித்துவப்படுத்தினார்கள்.
நோக்கம் 6: பலதேவ வித்யாபூஷணரின் ஆன்மிக வளர்ச்சி மற்றும் அவரது கோவிந்த பாஷ்யம் என்ற நூலின் மூலம் கௌடிய வைஷ்ணவ தத்துவத்தைக் காத்து நிலைநாட்டிய பங்களிப்பின் முக்கியத்துவத்தையும் அறிந்து கொள்வது.
பலதேவ வித்யாபூஷணரின் பின்னணி மற்றும் கௌடிய வைஷ்ணவ சமயத்தை பாதுகாப்பதில் அவரது வெற்றி
● பலதேவ வித்யாபூஷணர் முதலில் மத்வாசார்யரின் வேதாந்த சூத்திர உரையைப் பயின்று, மத்வ சம்பிரதாயத்தில் தீட்சை பெற்றிருந்தவர்.
● பின்னர், அவர் ஜீவ கோஸ்வாமியின் ‘பகவத சந்தர்பா’ எனும் க்ரந்தத்தை படித்தார். அதன் மூலம் கௌடிய வைஷ்ணவ சித்தாந்தத்தின் மேன்மையை உணர்ந்து, ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவை பரம்பொருளாக ஏற்றார்.
● அவர் விருந்தாவனத்தில் விஷ்வநாத சக்ரவர்த்தி தாக்கூரின் சீடராக, பாகவத தத்துவத்தின் இரகசிய அர்த்தங்களைத் தெளிவாகக் கற்றார்.
● விஷ்வநாதர், மத்வ சம்பிரதாயம் தொடர்பான பாலதேவரின் பழைய பின்னணியை கௌடியர்களுக்கு சட்டப்பூர்வ மரபை நிரூபிக்கப் பயன்படுத்தினார்.
வாதப்போரும் பாலதேவரின் வெற்றியும் (Debate & Triumph):
மத்வ சம்பிரதாய தொடர்பை வலியுறுத்தல்:
ஜெய்சிங்கின் அரண்மனைக்குழுவில் ராமானந்திகளிடம், பாலதேவர் உறுதியாகச் சொன்னார்:
“நான் மத்வ சம்பிரதாயத்தைச் சேர்ந்தவன்; நான் மைசூரில் தீட்சை பெற்றவன்.”
● மேலும், கவிகர்ணபூரரின் ‘கௌர-கணோதேஷ-தீபிகா’ என்னும் நூலை காட்டி, கௌடியர்கள் மத்வ வரிசையைச் சார்ந்தவர்களென நிரூபித்தார்.
வேதாந்த சூத்திர உரை எழுதும் சவால்:
● ராமானந்திகள், கௌடியர்கள் வேதாந்த சூத்திரங்களுக்கு உரை இல்லை என்பதைக் குற்றமாக சுமத்தியதால், உரை எழுத வேண்டும் என வலியுறுத்தினர்.
● கௌடியர்கள் பொதுவாக பாகவத புராணத்தையே தங்கள் வேதாந்த விளக்கமாகக் கருதுவதால், இது ஒரு புதிய சவாலாக இருந்தது.
● பாலதேவவித்யாபூஷணர், “எனக்கு சில நாட்கள் தேவை” எனக் கூறி, ஒரு மாதம் கால அவகாசம் பெற்றார்.
‘கோவிந்த பாஷ்யம்’ – தெய்வீக உந்துதலுடன் எழுதப்பட்டது:
● அவர் ஸ்ரீ கோவிந்தரிடம் பிரார்த்தனை செய்து, தொடர்ந்து எழுதி, ‘கோவிந்த-பாஷ்யம்’ எனும் வேதாந்த சூத்திர உரையை உருவாக்கினார்.
● சில வரலாற்று குறிப்புகளின் படி, ஏழு நாட்களில் எழுதப்பட்டதெனவும், மற்ற சில வரலாற்றின் படி ஒரு மாதத்தில் எனவும் கூறப்படுகிறது.
அரங்கத்தில் முன்வைத்த முக்கிய வாதங்கள் (Key Arguments):
மரபு மற்றும் வேதாந்த சூத்திர விளக்கம்
● கோவிந்த பாஷ்யம் மத்வாசார்யரின் அடிப்படையில் எழுதப்பட்டாலும், ஸ்ரீ சைதன்யரால் போதிக்கப்பட்ட கௌடிய தத்துவங்களை பாதுகாத்ததாக இருந்தது.
● “இது ஸ்ரீ கோவிந்தரின் உந்துதலால் எழுதப்பட்டது” என்று அவர் அறிவித்தார்.
ராதா-கிருஷ்ண வழிபாட்டு தத்துவம்
● ராதா-கிருஷ்ணரின் திருமணம் குறித்து எதிர்ப்பை எதிர்கொண்ட போது, அவர் கூறினார்:
“ராதா, கிருஷ்ணரின் நிரந்தர சக்தி. பரகீயா அல்லது ஸ்வகீயா என்பது புறத்தோற்றம். அவர்கள் தெய்வீக இணைப்பு எந்த நிலையிலும் அழியாது.”
● ராதா மற்றும் கோவிந்தரை பிரிக்க வேண்டும் என்பது ஒரு அவமதிப்பு எனக் கூறினார்.
நாராயண வழிபாடு குறித்த விளக்கம்
● நாராயணர், கிருஷ்ணர் உட்பட எந்த வடிவிலும் வழிபடலாம் என, வேத சாசனங்கள் அனுமதிக்கின்றன என்பதையும் தெளிவுபடுத்தினார்.
ஜெய்சிங்கின் தீர்ப்பு (King Jaisingh’s Verdict):
● பாலதேவரின் மெய்த்திறமையான வாதங்களை எதிர்த்து ராமானந்திகள் எந்த எதிர்வாதமும் முன்வைக்க முடியவில்லை.
● மன்னர் ஜெய்சிங் கூறினார்:
“கௌடிய சமயத்தின் சட்டப்பூர்வத் தகுதி மறுக்க முடியாதது. இனிமேல், அவர்கள் ஒரு அங்கீகரிக்கப்பட்ட மதப்பிரிவாக மதிக்கப்பட வேண்டும். ராதா மற்றும் கோவிந்தர் மீண்டும் இணைக்கப்பட வேண்டும்.”
வெற்றியின் நினைவாக – ‘விஜய கோபாலர்’ கோவில்:
● கௌடிய மகான்கள், கல்தா பள்ளத்தாக்கை நோக்கிய மலைப்பகுதியில் ‘விஜய கோபாலர்’ (Victorious Gopala) எனும் கோவிலை கட்டினர். இது அவர்கள் மத வெற்றியின் அடையாளமாக அமைந்தது.
பலதேவ வித்யாபூஷணர் மற்றும் ஜெய்சிங் – மரபுப் பிணைப்பு
பாலதேவரின் பின் பணி:
● விருந்தாவனுக்குத் திரும்பி, கௌடிய சமுதாயத் தலைவராக இருந்து, உபநிஷத்துகள், கோஸ்வாமிகளின் கிரந்தங்கள், மற்றும் தனிப்பட்ட புதிய கிரந்தங்கள் எனப் பல பணி புரிந்தார்.
● அவரது இறுதி வரையில், வைஷ்ணவ தத்துவத்தின் உயர்ந்த ஆணையராக இருந்தார்.
ஸ்ரீல பிரபுபாதரின் பாராட்டு:
● ஸ்ரீல பிரபுபாதர், தனது ‘பகவத்கீதை – உண்மை உருவில்’ என்ற நூலில்: “வேதாந்த தத்துவத்தை அழகாக விளக்கும் ‘கோவிந்த பாஷ்யம்’ என்ற உரையை வழங்கிய பலதேவ வித்யாபூஷணருக்கு எனது மரியாதை” என குறிப்பிடுகிறார்.
நோக்கம் 7: ஜெயசிங்க் II அவர்களின் கோவிந்த தேவ் ஜீ மீது கொண்ட பக்தி மற்றும் ஜெய்ப்பூரின் ஆன்மிக அடையாளத்தை உருவாக்குவதில் அரச ஆதரவின் வாயிலாக அவர் ஆற்றிய பங்களிப்பு பற்றியும் புரிந்துகொள்வது.
ஜெய்சிங்கின் பக்தி மற்றும் பாரம்பரியம்
வைஷ்ணவ சமயங்களின் ஒற்றுமை மூலம் திருப்தியடைந்த மஹாராஜா சவாய் ஜெய்சிங், தன்னையே முழுமையாக ஸ்ரீ கோவிந்தருக்கு அர்ப்பணித்தார்.
● 1714-ஆம் ஆண்டு, அவர் ஸ்ரீ கோவிந்தரின் மூர்த்தியை ஜெய் நிவாஸா தோட்டத்திற்கு கொண்டு சென்றார்.
● பின்னர், 1735-ஆம் ஆண்டில், ஜெய்ப்பூர் அரண்மனை மண்டபத்திற்குள் கோவிந்தருக்காக ஒரு ஆலயத்தையும் எழுப்பினார்.
கோவிந்தரை ஜெய்ப்பூரின் அரசராக நிறுவல்
● ஜெய்சிங், கோவிந்தரை ஜெய்ப்பூரின் அரசராக நிறுவினார்.
● தானே தனது அரசபதவியை விட்டு விலக்கி, “அமைச்சராக” (minister) பணியாற்றுவதாகக் கூறினார்.
● அவரது அரச முத்திரை (Royal Seal) இதைப் பறைசாற்றுகிறது:
ஸ்ரீல”śrī govindadeva caraṇa savai jai singh śaraṇa”
– “ஸ்ரீ கோவிந்தரின் திருப்பாதங்களில் சவாய் ஜெய்சிங் சரணாகதியாக இருக்கிறேன்.”
அரசைத் தெய்வீகமாக சட்டமுறைப்படுத்தும் முயற்சி
● இது, ஜெய்சிங் தனது ஆட்சி மட்டுமல்ல, கௌடிய வைஷ்ணவ மரபையும் விக்ரக அனுமதி வாயிலாக சட்டபூர்வமாகச் செய்ய முயன்றதைக் காட்டுகிறது.
● அவரது இந்த செயல், ஒரு அரசன் தன்னை பக்தராக மாற்றிக் கொண்டு , ஶ்ரீ கிருஷ்ண விக்ரகத்தின் கீழ் ஆட்சி செய்வது என்பது அரசியலும் ஆன்மிகமும் இணைவதற்கு முன்னுதாரணமாக அமைகிறது.

