14. பிர்லா மந்திர் - லட்சுமி நாராயணன் கோவில்

நோக்கங்கள் :
நோக்கம் 2: கோவிலின் கட்டிட அம்சங்கள் மற்றும் அதன் சின்னங்களில் உள்ள அர்த்தங்களைப்
புரிந்துகொள்வது

நோக்கம் 1: பிர்லா லட்சுமி நாராயணன் கோவிலின் வரலாற்றுப் பின்னணியையும் எப்போது கட்டப்பட்டதுஎன்பதைப் பற்றி அறிதல்
இந்த கோவில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் மொட்டீ துங்கரி மலை அடிவாரத்தில் உள்ள திலக் நகர் பகுதியில் அமைந்துள்ளது . இது லட்சுமி தேவி மற்றும் விஷ்ணு பகவானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஹிந்து கோவிலாகும். பிர்லா குடும்பத்தினர் இதனை 1988 ஆம் ஆண்டு கட்டினர். இக்கோவில் ,அங்குள்ள நயமிகு சலவைக்கல்லால் செதுக்கிய நுட்பமான சிற்பங்களால் புகழ்பெற்றது. உயரமான மேடையில் அமைந்திருப்பதால், நகரத்தின் அழகான காட்சிகளைப் பார்வையிட முடிகின்றது . இது ஹிந்துக்கள் வணங்கும் முக்கிய இடமாகவும் உள்ளது.
இந்த கோவில், வெண்மையான மார்பிள் கற்களால் கட்டப்பட்டு, லட்சுமி, விஷ்ணு மற்றும் பிற விக்ரஹங்களின் சிற்பங்களுடன் ஜெய்ப்பூரின் புகழ்மிக்க கட்டிட அடையாளமாக திகழ்கிறது. இந்தக் கோவிலின் சுவர்களில், பண்டைய வேதங்கள் மற்றும் உபநிஷத்திலிருந்து மேற்கோள்களும், ஹிந்துமத சின்னங்களும் பொறிக்கப்பட்டுள்ளன. இதனுடன் சமய புரோஹிதர்கள், தத்துவஞானிகள் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நபர்களின் உருவ சிலைகள் காணப்படுகின்றன.
வரலாறு:
பாரம்பரியமாக, ஒரு மஹாராஜா, இந்த நிலத்தை பிர்லா குடும்பத்திற்கு ஒரு ரூபாய்க்கு விற்றதாக கூறப்படுகிறது. ராமானுஜ தாஸ் மற்றும் காண்ஷ்யாம் பிர்லா ஆகியோர் இந்தக் கட்டடப் பணிகளை 1977-இல் துவக்கினர்.பி.எம். பிர்லா அறக்கட்டளை 1988 இல் இந்த கோவிலை கட்டி முடித்தது. இந்த கட்டிடம் 8 ஆண்டுகளில் கட்டப்பட்டு, 1985 இல் நிறைவு பெற்றது.
கும்பாபிஷேக விழா 1985 ஆம் ஆண்டு பிப்ரவரி 22 அன்று நடைபெற்றது. அதன் பிறகு அனைத்து சாதி, மதங்களைச் சேர்ந்தவர்களும் இக்கோவிலுக்குள் வர அனுமதிக்கப்படுகின்றனர்.
நோக்கம் 2: கோவிலின் கட்டிட அம்சங்கள் மற்றும் அதன் சின்னங்களில் உள்ள அர்த்தங்களைப் புரிந்துகொள்வது
பிர்லா லட்சுமி நாராயணன் கோவிலின் கட்டிடக்கலை:
இந்தக் கோவில் வெண்மையான மார்பிள் கற்களால் கட்டப்பட்டுள்ளது. இது நான்கு பிரிவுகளை கொண்டுள்ளது: கருவறை, கோபுரம், பிரதான மண்டபம் மற்றும் நுழைவு பகுதி. இதில் மூன்று கோபுரங்கள் உள்ளன, அவை இந்தியாவின் முக்கியமான மூன்று மதங்களை குறிக்கின்றன. வண்ணமிகு கண்ணாடி சாளரங்களில் பாரம்பரிய ஹிந்து கதைகள் காட்டப்படுகின்றன. சுவர்களில் ஹிந்து ஸ்லோகங்கள் மற்றும் சிற்பங்கள் காணப்படுகின்றன.
உள்ளே லட்சுமி, நாராயணன் மற்றும் கணேஷ் ஆகிய விக்ரஹங்கள் இருப்பதோடு, வெளியே கிறிஸ்துவும், மாரியா, பீட்டர், புத்தர், கன்ஃப்யூஷியஸ், சாக்ரடீஸ் ஆகியவர்களின் உருவ சிலைகள் உள்ளன.
கோவிலின் நிறுவுநர்களான ருக்மணி தேவி பிர்லா மற்றும் ப்ரஜ் மோகன் பிர்லாவின் சிலைகள், நமஸ்கார முத்திரையில், கோவிலின் முகப்பில் உள்ள அரங்குகளில் காணப்படுகின்றன. இந்தக் கோவிலின் கட்டிடக்கலை நவீனமாகக் கருதப்படுகிறது. இது உயரமான மேடையில் கட்டப்பட்டுள்ளது. இரவுப்பொழுதுகளில் விளக்குகளால் ஒளிரும்.
மேலும், கோவில் வளாகத்தில் தோட்டங்கள் மற்றும் சிறிய பரிசுப் பொருள் கடை காணப்படுகின்றன.
பி,எம் .பிர்லா குடும்ப அருங்காட்சியகம் மற்றும் திரு /திருமதி . ஜி.பி. பிர்லா கேலரி கோவிலின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. இதில் கோவிலின் கட்டுமானப் புகைப்படங்கள், பிர்லா குடும்பத்தின் அறப்பணிகள் மற்றும் பழமையான பொருட்கள் இடம்பெற்றுள்ளன
. நோக்கம் 3: கோவிலின் முக்கிய தகவல்கள் – கட்டியவர்கள், கும்பாபிஷேக தேதி மற்றும் அதன் நவீன கட்டிடக்கலை பற்றி அறிதல்
முக்கியமான தகவல்கள்:
பிர்லா மந்திர், லட்சுமி நாராயணன் கோவில் என்றழைக்கப்படும், இது வெண்மையான மார்பிள் கற்களால் முழுவதும் கட்டப்பட்டுள்ளது.
விஷ்ணு பகவானுக்கும் லட்சுமி தேவிக்கும் அர்ப்பணிக்கப்பட்டது.
கோவிலின் சுவர்களில் ஹிந்து சின்னங்கள் மற்றும் வேத, உபநிஷத மேற்கோள்கள் காணப்படுகின்றன.
சாக்ரடீஸ், புத்தர், ஜரத்துஸ்திரர், கான்ஃப்யூஷியஸ் போன்றவர்களின் உருவ சிலைகள் காணப்படுகின்றன.
உள்ளே விஷ்ணு மற்றும் லட்சுமி ஆகியோரின் அழகான விக்ரஹங்கள்உள்ளன. பின்புற சுவரில் “ஓம்” சின்னம் உள்ளது.
இரவில் வெண் மார்பிள் கல் மேடையில் நிலவொளி படுவதால் இது ஒரு வியப்பூட்டும் தோற்றத்தை அளிக்கிறது.
கோவிலின் உள்ளும் வெளியும் பல குவிமாட மின்விளக்குகள் பளபளப்புடன் ஒளிர்கின்றன.
நவீன வடிவில் கட்டிடக் கலை அழகை பிரதிபலிக்கும் ஓர் கலைச்சிற்பமாக இந்தக் கோவில் உள்ளது.

