கௌர ஆர்த்தி

(1)
(கிப3) ஜய ஜய கோ3ராசாந்தே3ர ஆராதிகோ ஷோ2பா3
ஜாஹ்னவீ-தட-வனே ஜக3-மன-லோபா4

சைதன்ய மகா பிரபுவின் அழகிய ஆரத்தி நிகழ்ச்சிக்கு அனைத்து மங்களமும் உண்டாகட்டும், இந்த கெளர ஆரத்தி யானது கங்கை கரையில் உள்ள காட்டில் உள்ள தோப்பில் நடந்து கொண்டிருக்கிறது. இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து ஜீவன்களின் உள்ளங்களையும் இந்த ஆரத்தி யானது கவர்ந்து இழுக்கிறது.

(முதல் பல்லவி)
கெள3ராங்கே3ர ஆராதிக ஷோ3பா2,
ஜக3-ஜன-மன-லோபா4

(2)
தக்ஷிணே நிதாய் சந்த்3 பா3மே க3தா34
நிகடே அத்3வைத ஸ்ரீநிவாஸ ச3த்ர-த4

ஸ்ரீ சைதன்ய மகாபிரபுவின் வலது புறம் நித்தியானந்த பிரபுவும், இடது புறம் ஸ்ரீ கதாதரரும் இருக்கின்றனர். அருகில் அத்வைதரும், ஸ்ரீ வாச தாகூரரும் சைதன்ய மகாபிரவிற்கு குடை பிடித்தபடி நிற்கின்றனர்.

(3)
போ3ஸியாசே2 கோ3ரசந்த்3 ரத்ன-ஸிம்ஹாஸீனே
ஆரதி கோரேன் ப்3ரஹ்மா-ஆதி3 தே3வ-க3ணே

நவரத்தின சிம்மாசனத்தில் சைதன்ய மகாபிரபு உட்கார்ந்திருக்க பிரம்மா தலைமையில் தேவர்கள் ஆரத்தி செய்கிறார்கள்.

(4)
நரஹரி-ஆதி3 கோரி சாமர து4லாய
ஸஞ்ஜய-முகுந்த3-வாஸு-கோ4ஷ-ஆதி3 கா3

நரஹரி மற்றும் சைதன்ய மகாபிரபுவின் மற்ற தோழர்கள் சாமரம் வீச, சஜ்ஜய பண்டிதர், முகுந்த தத்தா, வாசு கோஷா ஆகியோர் தலைமையில் பக்தர்கள் இனிமையாக கீர்த்தனையை பாடுகிறார்கள்.

(5)
2ங்க2 பா3ஜே க4ண்டா பா3ஜே பா3ஜே கரதால
மது4ர ம்ருத3ங்க பா3ஜே பரம ரஸால

சங்கு, மணி, கரதாளம் இவைகளின் ஓசையுடன், மிருதங்கம் மிக இனிமையாக வாசிக்கப்படுகிறது, இந்த கீர்த்தனை மிக உயர்ந்த இனிமையையும், கேட்பதற்கு ஆனந்தத்தையும் உண்டு பண்ணுகிறது.

(6)
3ஹு-கோடி சந்த்3ர ஜினி’ வத3ன உஜ்ஜ்வல
3ல-தே3ஷே2 வன-மாலா கோரே ஜ2லமல

சைதன்ய மகாபிரபுவின் முக தேஜஸானது கோடிக்கணக்கான சந்திரர்களை வெல்லக் கூடியதாக இருக்கிறது. கழுத்தை சுற்றி அவர் அணிந்திருக்கும் காட்டு புஷ்பங்கள் ஜொலிக்கின்றன.

(7)
ஷி2வ-ஷு2க-நாரத3 ப்ரேமே க33-க33
4க்திவினோத3 தே3கே2 கோ3ரார ஸம்பத3

சிவபெருமான், சுகதேவ கோஸ்வாமி மற்றும் நாரத முனிவர் அனைவரும் அங்கு உள்ளனர், அவர்கள் குரல் தழுதழுக்க தெய்வீக பேரானந்தத்தில் திளைக்கிறார்கள். இவ்வாறு பக்தி வினோத தாகூரர் ஸ்ரீசைதன்ய மகாபிரபுவின் பெருமைகளை மனக்கண்ணால் காண்கிறார்.

** ஹரே கிருஷ்ணா **

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare